Thursday, May 07, 2020

நீதிமொழிகள்

தாவீதின்<David>  குமாரனும்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவுமாகிய  சாலொமோனின்<Solomon>  நீதிமொழிகள்:  {Prov  1:1}

 

இவைகளால்  ஞானத்தையும்  போதகத்தையும்  அறிந்து,  புத்திமதிகளை  உணர்ந்து,  {Prov  1:2}

 

விவேகம்,  நீதி,  நியாயம்,  நிதானம்  என்பவைகளைப்பற்றிய  உபதேசத்தை  அடையலாம்.  {Prov  1:3}

 

இவைகள்  பேதைகளுக்கு  வினாவையும்,  வாலிபருக்கு  அறிவையும்  விவேகத்தையும்  கொடுக்கும்.  {Prov  1:4}

 

புத்திமான்  இவைகளைக்  கேட்டு,  அறிவில்  தேறுவான்;  விவேகி  நல்லாலோசனைகளை  அடைந்து;  {Prov  1:5}

 

நீதிமொழியையும்,  அதின்  அர்த்தத்தையும்,  ஞானிகளின்  வாக்கியங்களையும்,  அவர்கள்  உரைத்த  புதைபொருள்களையும்  அறிந்துகொள்வான்.  {Prov  1:6}

 

கர்த்தருக்குப்  பயப்படுதலே  ஞானத்தின்  ஆரம்பம்;  மூடர்  ஞானத்தையும்  போதகத்தையும்  அசட்டைபண்ணுகிறார்கள்.  {Prov  1:7}

 

என்  மகனே,  உன்  தகப்பன்  புத்தியைக்  கேள்,  உன்  தாயின்  போதகத்தைத்  தள்ளாதே.  {Prov  1:8}

 

அவைகள்  உன்  சிரசுக்கு  அலங்காரமான  முடியும்,  உன்  கழுத்துக்குச்  சரப்பணியுமாயிருக்கும்.  {Prov  1:9}

 

என்  மகனே,  பாவிகள்  உனக்கு  நயங்காட்டினாலும்  நீ  சம்மதியாதே.  {Prov  1:10}

 

எங்களோடே  வா,  இரத்தஞ்சிந்தும்படி  நாம்  பதிவிருந்து,  குற்றமற்றிருக்கிறவர்களை  முகாந்தரமின்றிப்  பிடிக்கும்படி  ஒளித்திருப்போம்;  {Prov  1:11}

 

பாதாளம்  விழுங்குவதுபோல்  நாம்  அவர்களை  உயிரோடே  விழுங்குவோம்;  குழியில்  இறங்குகிறவர்கள்  விழுங்கப்படுவதுபோல்  அவர்களை  முழுமையும்  விழுங்குவோம்;  {Prov  1:12}

 

விலையுயர்ந்த  சகலவிதப்  பொருள்களையும்  கண்டடைவோம்;  கொள்ளைப்  பொருளினால்  நம்முடைய  வீடுகளை  நிரப்புவோம்.  {Prov  1:13}

 

எங்களோடே  பங்காளியாயிரு;  நம்மெல்லாருக்கும்  ஒரே  பை  இருக்கும்  என்று  அவர்கள்  சொல்வார்களாகில்;  {Prov  1:14}

 

என்  மகனே,  நீ  அவர்களோடே  வழிநடவாமல்,  உன்  காலை  அவர்கள்  பாதைக்கு  விலக்குவாயாக.  {Prov  1:15}

 

அவர்கள்  கால்கள்  தீங்குசெய்ய  ஓடி,  இரத்தஞ்சிந்தத்  தீவிரிக்கிறது.  {Prov  1:16}

 

எவ்வகையான  பட்சியானாலும்  சரி,  அதின்  கண்களுக்கு  முன்பாக  வலையை  விரிப்பது  விருதா.  {Prov  1:17}

 

இவர்களோ  தங்கள்  இரத்தத்திற்கே  பதிவிருக்கிறார்கள்,  தங்கள்  பிராணனுக்கே  ஒளிவைத்திருக்கிறார்கள்.  {Prov  1:18}

 

பொருளாசையுள்ள  எல்லாருடைய  வழியும்  இதுவே;  இது  தன்னையுடையவர்களின்  உயிரை  வாங்கும்.  {Prov  1:19}

 

ஞானமானது  வெளியே  நின்று  கூப்பிடுகிறது,  வீதிகளில்  சத்தமிடுகிறது.  {Prov  1:20}

 

அது  சந்தடியுள்ள  தெருக்களின்  சந்திலும்,  ஒலிமுகவாசலிலும்  நின்று  கூப்பிட்டு,  பட்டணத்தில்  தன்  வார்த்தைகளை  வசனித்துச்  சொல்லுகிறது:  {Prov  1:21}

 

பேதைகளே,  நீங்கள்  பேதைமையை  விரும்புவதும்,  நிந்தனைக்காரரே,  நீங்கள்  நிந்தனையில்  பிரியப்படுவதும்,  மதியீனரே,  நீங்கள்  ஞானத்தை  வெறுப்பதும்,  எதுவரைக்கும்  இருக்கும்.  {Prov  1:22}

 

என்  கடிந்துகொள்ளுதலுக்குத்  திரும்புங்கள்;  இதோ,  என்  ஆவியை  உங்களுக்கு  அருளுவேன்,  என்  வார்த்தைகளை  உங்களுக்குத்  தெரிவிப்பேன்.  {Prov  1:23}

 

நான்  கூப்பிட்டும்,  நீங்கள்  கேட்கமாட்டோம்  என்கிறீர்கள்;  நான்  என்  கையை  நீட்டியும்  கவனிக்கிறவன்  ஒருவனும்  இல்லை.  {Prov  1:24}

 

என்  ஆலோசனையையெல்லாம்  நீங்கள்  தள்ளி,  என்  கடிந்துகொள்ளுதலை  வெறுத்தீர்கள்.  {Prov  1:25}

 

ஆகையால்,  நானும்  உங்கள்  ஆபத்துக்காலத்தில்  நகைத்து,  நீங்கள்  பயப்படுங்காரியம்  வரும்போது  ஆகடியம்பண்ணுவேன்.  {Prov  1:26}

 

நீங்கள்  பயப்படுங்காரியம்  புசல்போல்  வரும்போதும்,  ஆபத்து  சூறாவளிபோல்  உங்களுக்கு  நேரிடும்போதும்,  நெருக்கமும்  இடுக்கணும்  உங்கள்மேல்  வரும்போதும்,  ஆகடியம்பண்ணுவேன்.  {Prov  1:27}

 

அப்பொழுது  அவர்கள்  என்னை  நோக்கிக்  கூப்பிடுவார்கள்;  நான்  மறுஉத்தரவு  கொடுக்கமாட்டேன்;  அவர்கள்  அதிகாலையிலே  என்னைத்  தேடுவார்கள்,  என்னைக்  காணமாட்டார்கள்.  {Prov  1:28}

 

அவர்கள்  அறிவை  வெறுத்தார்கள்,  கர்த்தருக்குப்  பயப்படுதலைத்  தெரிந்து  கொள்ளாமற்போனார்கள்.  {Prov  1:29}

 

என்  ஆலோசனையை  அவர்கள்  விரும்பவில்லை;  என்  கடிந்துகொள்ளுதலையெல்லாம்  அசட்டைபண்ணினார்கள்.  {Prov  1:30}

 

ஆகையால்  அவர்கள்  தங்கள்  வழியின்  பலனைப்  புசிப்பார்கள்;  தங்கள்  யோசனைகளினால்  திருப்தியடைவார்கள்.  {Prov  1:31}

 

பேதைகளின்  மாறுபாடு  அவர்களைக்  கொல்லும்,  மூடரின்  நிர்விசாரம்  அவர்களை  அழிக்கும்.  {Prov  1:32}

 

எனக்குச்  செவிகொடுக்கிறவன்  எவனோ,  அவன்  விக்கினமின்றி  வாசம்பண்ணி,  ஆபத்திற்குப்  பயப்படாமல்  அமைதியாயிருப்பான்.  {Prov  1:33}

 

என்  மகனே,  நீ  உன்  செவியை  ஞானத்திற்குச்  சாய்த்து,  உன்  இருதயத்தைப்  புத்திக்கு  அமையப்பண்ணும்பொருட்டு,  {Prov  2:1}

 

நீ  என்  வார்த்தைகளை  ஏற்றுக்கொண்டு,  என்  கட்டளைகளை  உன்னிடத்தில்  பத்திரப்படுத்தி,  {Prov  2:2}

 

ஞானத்தை  வா  என்று  கூப்பிட்டு,  புத்தியைச்  சத்தமிட்டு  அழைத்து,  {Prov  2:3}

 

அதை  வெள்ளியைப்போல்  நாடி,  புதையல்களைத்  தேடுகிறதுபோல்  தேடுவாயாகில்,  {Prov  2:4}

 

அப்பொழுது  கர்த்தருக்குப்  பயப்படுதல்  இன்னதென்று  நீ  உணர்ந்து,  தேவனை  அறியும்  அறிவைக்  கண்டடைவாய்.  {Prov  2:5}

 

கர்த்தர்  ஞானத்தைத்  தருகிறார்;  அவர்  வாயினின்று  அறிவும்  புத்தியும்  வரும்.  {Prov  2:6}

 

அவர்  நீதிமான்களுக்கென்று  மெய்ஞ்ஞானத்தை  வைத்துவைத்திருக்கிறார்;  உத்தமமாய்  நடக்கிறவர்களுக்கு  அவர்  கேடகமாயிருக்கிறார்.  {Prov  2:7}

 

அவர்  நியாயத்தின்  நெறிகளைத்  தற்காத்து,  தம்முடைய  பரிசுத்தவான்களின்  பாதையைக்  காப்பாற்றுகிறார்.  {Prov  2:8}

 

அப்பொழுது  நீதியையும்,  நியாயத்தையும்,  நிதானத்தையும்,  சகல  நல்வழிகளையும்  அறிந்துகொள்ளுவாய்.  {Prov  2:9}

 

ஞானம்  உன்  இருதயத்தில்  பிரவேசித்து,  அறிவு  உன்  ஆத்துமாவுக்கு  இன்பமாயிருக்கும்போது,  {Prov  2:10}

 

நல்யோசனை  உன்னைக்  காப்பாற்றும்,  புத்தி  உன்னைப்  பாதுகாக்கும்.  {Prov  2:11}

 

அதினால்  நீ  துன்மார்க்கனுடைய  வழிக்கும்,  மாறுபாடு  பேசுகிற  மனுஷனுக்கும்,  {Prov  2:12}

 

அந்தகார  வழிகளில்  நடக்க  நீதிநெறிகளை  விட்டு,  {Prov  2:13}

 

தீமைசெய்ய  மகிழ்ந்து,  துன்மார்க்கருடைய  மாறுபாடுகளில்  களிகூருகிறவர்களுக்கும்,  {Prov  2:14}

 

மாறுபாடான  பாதைகளிலும்  கோணலான  வழிகளிலும்  நடக்கிறவர்களுக்கும்  நீ  தப்புவிக்கப்படுவாய்.  {Prov  2:15}

 

தன்  இளவயதின்  நாயகனை  விட்டு,  தன்  தேவனுடைய  உடன்படிக்கையை  மறந்து,  {Prov  2:16}

 

இச்சகமான  வார்த்தைகளைப்பேசும்  அந்நிய  பெண்ணாகிய  பரஸ்திரீக்கும்  தப்புவிக்கப்படுவாய்.  {Prov  2:17}

 

அவளுடைய  வீடு  மரணத்துக்கும்,  அவளுடைய  பாதைகள்  மரித்தோரிடத்திற்கும்  சாய்கிறது.  {Prov  2:18}

 

அவளிடத்தில்  போகிறவர்களில்  ஒருவரும்  திரும்புகிறதில்லை,  ஜீவபாதைகளில்  வந்து  சேருகிறதுமில்லை.  {Prov  2:19}

 

ஆதலால்  நீ  நல்லவர்களின்  வழியிலே  நடந்து,  நீதிமான்களின்  பாதைகளைக்  காத்துக்கொள்வாயாக.  {Prov  2:20}

 

செவ்வையானவர்கள்  பூமியிலே  வாசம்பண்ணுவார்கள்;  உத்தமர்கள்  அதிலே  தங்கியிருப்பார்கள்.  {Prov  2:21}

 

துன்மார்க்கரோ  பூமியிலிருந்து  அறுப்புண்டுபோவார்கள்;  துரோகிகள்  அதில்  இராதபடிக்கு  நிர்மூலமாவார்கள்.  {Prov  2:22}

 

என்  மகனே,  என்  போதகத்தை  மறவாதே;  உன்  இருதயம்  என்  கட்டளைகளைக்  காக்கக்கடவது.  {Prov  3:1}

 

அவைகள்  உனக்கு  நீடித்த  நாட்களையும்,  தீர்க்காயுசையும்,  சமாதானத்தையும்  பெருகப்பண்ணும்.  {Prov  3:2}

 

கிருபையும்  சத்தியமும்  உன்னைவிட்டு  விலகாதிருப்பதாக;  நீ  அவைகளை  உன்  கழுத்திலே  பூண்டு,  அவைகளை  உன்  இருதயமாகிய  பலகையில்  எழுதிக்கொள்.  {Prov  3:3}

 

அதினால்  தேவனுடைய  பார்வையிலும்  மனுஷருடைய  பார்வையிலும்  தயையும்  நற்புத்தியும்  பெறுவாய்.  {Prov  3:4}

 

உன்  சுயபுத்தியின்மேல்  சாயாமல்,  உன்  முழு  இருதயத்தோடும்  கர்த்தரில்  நம்பிக்கையாயிருந்து,  {Prov  3:5}

 

உன்  வழிகளிலெல்லாம்  அவரை  நினைத்துக்கொள்;  அப்பொழுது  அவர்  உன்  பாதைகளைச்  செவ்வைப்படுத்துவார்.  {Prov  3:6}

 

நீ  உன்னை  ஞானியென்று  எண்ணாதே;  கர்த்தருக்குப்  பயந்து,  தீமையை  விட்டு  விலகு.  {Prov  3:7}

 

அது  உன்  நாபிக்கு  ஆரோக்கியமும்,  உன்  எலும்புகளுக்கு  ஊனுமாகும்.  {Prov  3:8}

 

உன்  பொருளாலும்,  உன்  எல்லா  விளைவின்  முதற்பலனாலும்  கர்த்தரைக்  கனம்பண்ணு.  {Prov  3:9}

 

அப்பொழுது  உன்  களஞ்சியங்கள்  பூரணமாய்  நிரம்பும்;  உன்  ஆலைகளில்  திராட்சரசம்  புரண்டோடும்.  {Prov  3:10}

 

என்  மகனே,  நீ  கர்த்தருடைய  சிட்சையை  அற்பமாக  எண்ணாதே,  அவர்  கடிந்துகொள்ளும்போது  சோர்ந்துபோகாதே.  {Prov  3:11}

 

தகப்பன்  தான்  நேசிக்கிற  புத்திரனைச்  சிட்சிக்கிறதுபோல,  கர்த்தரும்  எவனிடத்தில்  அன்புகூருகிறாரோ  அவனைச்  சிட்சிக்கிறார்.  {Prov  3:12}

 

ஞானத்தைக்  கண்டடைகிற  மனுஷனும்,  புத்தியைச்  சம்பாதிக்கிற  மனுஷனும்  பாக்கியவான்கள்.  {Prov  3:13}

 

அதின்  வர்த்தகம்  வெள்ளி  வர்த்தகத்திலும்,  அதின்  ஆதாயம்  பசும்பொன்னிலும்  உத்தமமானது.  {Prov  3:14}

 

முத்துக்களைப்பார்க்கிலும்  அது  விலையேறப்பெற்றது;  நீ  இச்சிக்கத்தக்கதொன்றும்  அதற்கு  நிகரல்ல.  {Prov  3:15}

 

அதின்  வலதுகையில்  தீர்க்காயுசும்,  அதின்  இடதுகையில்  செல்வமும்  கனமும்  இருக்கிறது.  {Prov  3:16}

 

அதின்  வழிகள்  இனிதான  வழிகள்,  அதின்  பாதைகளெல்லாம்  சமாதானம்.  {Prov  3:17}

 

அது  தன்னை  அடைந்தவர்களுக்கு  ஜீவவிருட்சம்,  அதைப்  பற்றிக்கொள்ளுகிற  எவனும்  பாக்கியவான்.  {Prov  3:18}

 

கர்த்தர்  ஞானத்தினாலே  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  புத்தியினாலே  வானங்களை  ஸ்தாபித்தார்.  {Prov  3:19}

 

அவருடைய  ஞானத்தினாலே  ஆழங்கள்  பிரிந்தது,  ஆகாயமும்  பனியைப்  பெய்கிறது.  {Prov  3:20}

 

என்  மகனே,  இவைகள்  உன்  கண்களை  விட்டுப்  பிரியாதிருப்பதாக;  மெய்ஞ்ஞானத்தையும்  நல்லாலோசனையையும்  காத்துக்கொள்.  {Prov  3:21}

 

அவைகள்  உன்  ஆத்துமாவுக்கு  ஜீவனும்,  உன்  கழுத்துக்கு  அலங்காரமுமாயிருக்கும்.  {Prov  3:22}

 

அப்பொழுது  நீ  பயமின்றி  உன்  வழியில்  நடப்பாய்,  உன்  கால்  இடறாது.  {Prov  3:23}

 

நீ  படுக்கும்போது  பயப்படாதிருப்பாய்;  நீ  படுத்துக்கொள்ளும்போது  உன்  நித்திரை  இன்பமாயிருக்கும்.  {Prov  3:24}

 

சடிதியான  திகிலும்,  துஷ்டர்களின்  பாழ்க்கடிப்பும்  வரும்போது  நீ  அஞ்சவேண்டாம்.  {Prov  3:25}

 

கர்த்தர்  உன்  நம்பிக்கையாயிருந்து,  உன்  கால்  சிக்கிக்கொள்ளாதபடி  காப்பார்.  {Prov  3:26}

 

நன்மைசெய்யும்படி  உனக்குத்  திராணியிருக்கும்போது,  அதைச்  செய்யத்தக்கவர்களுக்குச்  செய்யாமல்  இராதே.  {Prov  3:27}

 

உன்னிடத்தில்  பொருள்  இருக்கையில்  உன்  அயலானை  நோக்கி:  நீ  போய்த்  திரும்பவா,  நாளைக்குத்  தருவேன்  என்று  சொல்லாதே.  {Prov  3:28}

 

அச்சமின்றி  உன்னிடத்தில்  வாசம்பண்ணுகிற  உன்  அயலானுக்கு  விரோதமாக  தீங்கு  நினையாதே.  {Prov  3:29}

 

ஒருவன்  உனக்குத்  தீங்குசெய்யாதிருக்க,  காரணமின்றி  அவனோடே  வழக்காடாதே.  {Prov  3:30}

 

கொடுமையுள்ளவன்மேல்  பொறாமை  கொள்ளாதே;  அவனுடைய  வழிகளில்  ஒன்றையும்  தெரிந்துகொள்ளாதே.  {Prov  3:31}

 

மாறுபாடுள்ளவன்  கர்த்தருக்கு  அருவருப்பானவன்;  நீதிமான்களோடே  அவருடைய  இரகசியம்  இருக்கிறது.  {Prov  3:32}

 

துன்மார்க்கனுடைய  வீட்டில்  கர்த்தரின்  சாபம்  இருக்கிறது,  நீதிமான்களுடைய  வாசஸ்தலத்தையோ  அவர்  ஆசீர்வதிக்கிறார்.  {Prov  3:33}

 

இகழ்வோரை  அவர்  இகழுகிறார்;  தாழ்மையுள்ளவர்களுக்கோ  கிருபையளிக்கிறார்.  {Prov  3:34}

 

ஞானவான்கள்  கனத்தைச்  சுதந்தரிப்பார்கள்;  மதிகேடரோ  கனவீனத்தை  அடைவார்கள்.  {Prov  3:35}

 

பிள்ளைகளே,  நீங்கள்  தகப்பன்  போதகத்தைக்  கேட்டு,  புத்தியை  அடையும்படி  கவனியுங்கள்.  {Prov  4:1}

 

நான்  உங்களுக்கு  நற்போதகத்தைத்  தருகிறேன்;  என்  உபதேசத்தை  விடாதிருங்கள்.  {Prov  4:2}

 

நான்  என்  தகப்பனுக்குப்  பிரியமான  குமாரனும்,  என்  தாய்க்கு  மிகவும்  அருமையான  ஒரே  பிள்ளையுமானவன்.  {Prov  4:3}

 

அவர்  எனக்குப்  போதித்துச்  சொன்னது:  உன்  இருதயம்  என்  வார்த்தைகளைக்  காத்துக்கொள்ளக்கடவது;  என்  கட்டளைகளைக்  கைக்கொள்,  அப்பொழுது  பிழைப்பாய்.  {Prov  4:4}

 

ஞானத்தைச்  சம்பாதி,  புத்தியையும்  சம்பாதி;  என்  வாயின்  வார்த்தைகளை  மறவாமலும்  விட்டு  விலகாமலும்  இரு.  {Prov  4:5}

 

அதை  விடாதே,  அது  உன்னைத்  தற்காக்கும்;  அதின்மேல்  பிரியமாயிரு,  அது  உன்னைக்  காத்துக்கொள்ளும்.  {Prov  4:6}

 

ஞானமே  முக்கியம்,  ஞானத்தைச்  சம்பாதி;  என்னத்தைச்  சம்பாதித்தாலும்  புத்தியைச்  சம்பாதித்துக்கொள்.  {Prov  4:7}

 

நீ  அதை  மேன்மைப்படுத்து,  அது  உன்னை  மேன்மைப்படுத்தும்;  நீ  அதைத்  தழுவிக்கொண்டால்,  அது  உன்னைக்  கனம்பண்ணும்.  {Prov  4:8}

 

அது  உன்  தலைக்கு  அலங்காரமான  முடியைக்  கொடுக்கும்;  அது  மகிமையான  கிரீடத்தை  உனக்குச்  சூட்டும்.  {Prov  4:9}

 

என்  மகனே,  கேள்,  என்  வார்த்தைகளை  ஏற்றுக்கொள்;  அப்பொழுது  உன்  ஆயுசின்  வருஷங்கள்  அதிகமாகும்.  {Prov  4:10}

 

ஞானமார்க்கத்தை  நான்  உனக்குப்  போதித்தேன்;  செவ்வையான  பாதைகளிலே  உன்னை  நடத்தினேன்.  {Prov  4:11}

 

நீ  அவைகளில்  நடக்கும்போது  உன்  நடைகளுக்கு  இடுக்கண்  உண்டாவதில்லை;  நீ  அவைகளில்  ஓடினாலும்  இடறமாட்டாய்.  {Prov  4:12}

 

புத்திமதியை  உறுதியாய்ப்  பற்றிக்கொள்,  அதை  விட்டுவிடாதே;  அதைக்  காத்துக்கொள்,  அதுவே  உனக்கு  ஜீவன்.  {Prov  4:13}

 

துன்மார்க்கருடைய  பாதையில்  பிரவேசியாதே;  தீயோருடைய  வழியில்  நடவாதே.  {Prov  4:14}

 

அதை  வெறுத்துவிடு,  அதின்  வழியாய்ப்  போகாதே;  அதை  விட்டு  விலகிக்  கடந்துபோ.  {Prov  4:15}

 

பொல்லாப்புச்  செய்தாலொழிய  அவர்களுக்கு  நித்திரை  வராது;  அவர்கள்  யாரையாகிலும்  விழப்பண்ணாதிருந்தால்  அவர்கள்  தூக்கம்  கலைந்துபோம்.  {Prov  4:16}

 

அவர்கள்  ஆகாமியத்தின்  அப்பத்தைப்  புசித்து,  கொடுமையின்  இரசத்தைக்  குடிக்கிறார்கள்.  {Prov  4:17}

 

நீதிமான்களுடைய  பாதை  நடுப்பகல்வரைக்கும்  அதிகமதிகமாய்ப்  பிரகாசிக்கிற  சூரியப்பிரகாசம்போலிருக்கும்.  {Prov  4:18}

 

துன்மார்க்கருடைய  பாதையோ  காரிருளைப்போலிருக்கும்;  தாங்கள்  இடறுவது  இன்னதில்  என்று  அறியார்கள்.  {Prov  4:19}

 

என்  மகனே,  என்  வார்த்தைகளைக்  கவனி;  என்  வசனங்களுக்கு  உன்  செவியைச்  சாய்.  {Prov  4:20}

 

அவைகள்  உன்  கண்களை  விட்டுப்  பிரியாதிருப்பதாக;  அவைகளை  உன்  இருதயத்துக்குள்ளே  காத்துக்கொள்.  {Prov  4:21}

 

அவைகளைக்  கண்டுபிடிக்கிறவர்களுக்கு  அவைகள்  ஜீவனும்,  அவர்கள்  உடலுக்கெல்லாம்  ஆரோக்கியமுமாம்.  {Prov  4:22}

 

எல்லாக்  காவலோடும்  உன்  இருதயத்தைக்  காத்துக்கொள்,  அதினிடத்தினின்று  ஜீவஊற்று  புறப்படும்.  {Prov  4:23}

 

வாயின்  தாறுமாறுகளை  உன்னை  விட்டகற்றி,  உதடுகளின்  மாறுபாட்டை  உனக்குத்  தூரப்படுத்து.  {Prov  4:24}

 

உன்  கண்கள்  நேராய்  நோக்கக்கடவது;  உன்  கண்ணிமைகள்  உனக்கு  முன்னே  செவ்வையாய்ப்  பார்க்கக்கடவது.  {Prov  4:25}

 

உன்  கால்  நடையைச்  சீர்தூக்கிப்பார்;  உன்  வழிகளெல்லாம்  நிலைவரப்பட்டிருப்பதாக.  {Prov  4:26}

 

வலதுபுறமாவது  இடதுபுறமாவது  சாயாதே;  உன்  காலைத்  தீமைக்கு  விலக்குவாயாக.  {Prov  4:27}

 

என்  மகனே,  என்  ஞானத்தைக்  கவனித்து,  என்  புத்திக்கு  உன்  செவியைச்  சாய்;  {Prov  5:1}

 

அப்பொழுது  நீ  விவேகத்தைப்  பேணிக்கொள்வாய்,  உன்  உதடுகள்  அறிவைக்  காத்துக்கொள்ளும்.  {Prov  5:2}

 

பரஸ்திரீயின்  உதடுகள்  தேன்கூடுபோல்  ஒழுகும்;  அவள்  வாய்  எண்ணெயிலும்  மிருதுவாயிருக்கும்.  {Prov  5:3}

 

அவள்  செய்கையின்  முடிவோ  எட்டியைப்போலக்  கசப்பும்,  இருபுறமுங்  கருக்குள்ள  பட்டயம்போல்  கூர்மையுமாயிருக்கும்.  {Prov  5:4}

 

அவள்  காலடிகள்  மரணத்துக்கு  இறங்கும்;  அவள்  நடைகள்  பாதாளத்தைப்  பற்றிப்போகும்.  {Prov  5:5}

 

நீ  ஜீவமார்க்கத்தைச்  சிந்தித்துக்  கொள்ளாதபடிக்கு,  அவளுடைய  நடைகள்  மாறிமாறி  விகாரப்படும்;  அவைகளை  அறியமுடியாது.  {Prov  5:6}

 

ஆதலால்  பிள்ளைகளே,  இப்பொழுது  எனக்குச்  செவிகொடுங்கள்;  என்  வாயின்  வசனங்களை  விட்டு  நீங்காதிருங்கள்.  {Prov  5:7}

 

உன்  வழியை  அவளுக்குத்  தூரப்படுத்து;  அவளுடைய  வீட்டின்  வாசலைக்  கிட்டிச்  சேராதே.  {Prov  5:8}

 

சேர்ந்தால்  உன்  மேன்மையை  அந்நியர்களுக்கும்,  உன்  ஆயுசின்  காலத்தைக்  கொடூரருக்கும்  கொடுத்துவிடுவாய்.  {Prov  5:9}

 

அந்நியர்  உன்  செல்வத்தினால்  திருப்தியடைவார்கள்;  உன்  பிரயாசத்தின்  பலன்  புறத்தியாருடைய  வீட்டில்  சேரும்.  {Prov  5:10}

 

முடிவிலே  உன்  மாம்சமும்  உன்  சரீரமும்  உருவழியும்போது  நீ  துக்கித்து:  {Prov  5:11}

 

ஐயோ,  போதகத்தை  நான்  வெறுத்தேனே,  கடிந்துகொள்ளுதலை  என்  மனம்  அலட்சியம்பண்ணினதே!  {Prov  5:12}

 

என்  போதகரின்  சொல்லை  நான்  கேளாமலும்,  எனக்கு  உபதேசம்பண்ணினவர்களுக்கு  என்  செவியைச்  சாயாமலும்  போனேனே!  {Prov  5:13}

 

சபைக்குள்ளும்  சங்கத்துக்குள்ளும்  கொஞ்சங்குறைய  எல்லாத்  தீமைக்குமுள்ளானேனே!  என்று  முறையிடுவாய்.  {Prov  5:14}

 

உன்  கிணற்றிலுள்ள  தண்ணீரையும்,  உன்  துரவில்  ஊறுகிற  ஜலத்தையும்  பானம்பண்ணு.  {Prov  5:15}

 

உன்  ஊற்றுகள்  வெளியிலும்  உன்  வாய்க்கால்கள்  வீதிகளிலும்  பாய்வதாக.  {Prov  5:16}

 

அவைகள்  அந்நியருக்கும்  உரியவைகளாயிராமல்,  உனக்கே  உரியவைகளாயிருப்பதாக.  {Prov  5:17}

 

உன்  ஊற்றுக்கண்  ஆசீர்வதிக்கப்படுவதாக;  உன்  இளவயதின்  மனைவியோடே  மகிழ்ந்திரு.  {Prov  5:18}

 

அவளே  நேசிக்கப்படத்தக்க  பெண்மானும்,  அழகான  வரையாடும்போலிருப்பாளாக;  அவளுடைய  ஸ்தனங்களே  எப்பொழுதும்  உன்னைத்  திருப்திசெய்வதாக;  அவளுடைய  நேசத்தால்  நீ  எப்பொழுதும்  மயங்கியிருப்பாயாக.  {Prov  5:19}

 

என்  மகனே,  நீ  பரஸ்திரீயின்மேல்  மயங்கித்  திரிந்து,  அந்நிய  ஸ்திரீயின்  மார்பைத்  தழுவவேண்டியதென்ன?  {Prov  5:20}

 

மனுஷனுடைய  வழிகள்  கர்த்தரின்  கண்களுக்கு  முன்பாக  இருக்கிறது;  அவனுடைய  வழிகளெல்லாவற்றையும்  அவர்  சீர்தூக்கிப்பார்க்கிறார்.  {Prov  5:21}

 

துன்மார்க்கனை  அவனுடைய  அக்கிரமங்களே  பிடித்துக்கொள்ளும்;  தன்  பாவக்கயிறுகளால்  கட்டப்படுவான்.  {Prov  5:22}

 

அவன்  புத்தியைக்  கேளாததினால்  மடிந்து,  தன்  மதிகேட்டின்  மிகுதியினால்  மயங்கிப்போவான்.  {Prov  5:23}

 

என்  மகனே,  நீ  உன்  சிநேகிதனுக்காகப்  பிணைப்பட்டு,  அந்நியனுக்குக்  கையடித்துக்கொடுத்தாயானால்,  {Prov  6:1}

 

நீ  உன்  வாய்மொழிகளால்  சிக்குண்டாய்,  உன்  வாயின்  வார்த்தைகளால்  பிடிபட்டாய்.  {Prov  6:2}

 

இப்பொழுது  என்  மகனே,  உன்  சிநேகிதனுடைய  கையில்  நீ  அகப்பட்டுக்கொண்டபடியால்,  நீ  உன்னைத்  தப்புவித்துக்கொள்ள  ஒன்று  செய்.  {Prov  6:3}

 

உன்  கண்ணுக்கு  நித்திரையும்,  உன்  கண்ணிமைக்குத்  தூக்கமும்  வரவிடாமல்,  உன்  சிநேகிதனிடத்தில்  போய்,  உன்னைத்  தாழ்த்தி,  அவனை  வருந்திக்  கேட்டுக்கொள்.  {Prov  6:4}

 

வெளிமான்  வேட்டைக்காரன்  கைக்கும்,  குருவி  வேடன்  கைக்கும்  தப்புவதுபோல,  நீ  உன்னைத்  தப்புவித்துக்கொள்.  {Prov  6:5}

 

சோம்பேறியே,  நீ  எறும்பினிடத்தில்போய்,  அதின்  வழிகளைப்  பார்த்து,  ஞானத்தைக்  கற்றுக்கொள்.  {Prov  6:6}

 

அதற்குப்  பிரபுவும்,  தலைவனும்,  அதிகாரியும்  இல்லாதிருந்தும்,  {Prov  6:7}

 

கோடைகாலத்தில்  தனக்கு  ஆகாரத்தைச்  சம்பாதித்து,  அறுப்புக்காலத்தில்  தனக்குத்  தானியத்தைச்  சேர்த்துவைக்கும்.  {Prov  6:8}

 

சோம்பேறியே,  நீ  எவ்வளவுநேரம்  படுத்திருப்பாய்?  எப்பொழுது  உன்  தூக்கத்தைவிட்டு  எழுந்திருப்பாய்?  {Prov  6:9}

 

இன்னுங்  கொஞ்சம்  தூங்கட்டும்,  இன்னுங்  கொஞ்சம்  உறங்கட்டும்,  இன்னுங்  கொஞ்சம்  கைமுடக்கிக்கொண்டு  நித்திரை  செய்யட்டும்  என்பாயோ?  {Prov  6:10}

 

உன்  தரித்திரம்  வழிப்போக்கனைப்போலவும்,  உன்  வறுமை  ஆயுதமணிந்தவனைப்போலவும்  வரும்.  {Prov  6:11}

 

பேலியாளின்<Belial>  மனுஷனாகிய  ஒரு  துன்மார்க்கன்  ஆகடியம்  பேசித்திரிகிறான்.  {Prov  6:12}

 

அவன்  தன்  கண்களால்  சைகைகாட்டி,  தன்  கால்களால்  பேசி,  தன்  விரல்களால்  போதனைசெய்கிறான்.  {Prov  6:13}

 

அவன்  இருதயத்திலே  திரியாவரமுண்டு;  இடைவிடாமல்  பொல்லாப்பைப்  பிணைத்து,  வழக்குகளை  உண்டுபண்ணுகிறான்.  {Prov  6:14}

 

ஆகையால்  சடிதியில்  அவனுக்கு  ஆபத்து  வரும்;  சகாயமின்றிச்  சடிதியில்  நாசமடைவான்.  {Prov  6:15}

 

ஆறு  காரியங்களைக்  கர்த்தர்  வெறுக்கிறார்,  ஏழும்  அவருக்கு  அருவருப்பானவைகள்.  {Prov  6:16}

 

அவையாவன:  மேட்டிமையான  கண்,  பொய்நாவு,  குற்றமற்றவர்களுடைய  இரத்தம்  சிந்துங்  கை,  {Prov  6:17}

 

துராலோசனையைப்  பிணைக்கும்  இருதயம்,  தீங்கு  செய்வதற்கு  விரைந்தோடுங்  கால்,  {Prov  6:18}

 

அபத்தம்பேசும்  பொய்ச்சாட்சி,  சகோதரருக்குள்ளே  விரோதத்தை  உண்டுபண்ணுதல்  ஆகிய  இவைகளே.  {Prov  6:19}

 

என்  மகனே,  உன்  தகப்பன்  கற்பனையைக்  காத்துக்கொள்;  உன்  தாயின்  போதகத்தைத்  தள்ளாதே.  {Prov  6:20}

 

அவைகளை  எப்பொழுதும்  உன்  இருதயத்திலே  அணிந்து,  அவைகளை  உன்  கழுத்திலே  கட்டிக்கொள்.  {Prov  6:21}

 

நீ  நடக்கும்போது  அது  உனக்கு  வழிகாட்டும்;  நீ  படுக்கும்போது  அது  உன்னைக்  காப்பாற்றும்;  நீ  விழிக்கும்போது  அது  உன்னோடே  சம்பாஷிக்கும்.  {Prov  6:22}

 

கட்டளையே  விளக்கு,  வேதமே  வெளிச்சம்,  போதகசிட்சையே  ஜீவவழி.  {Prov  6:23}

 

அது  உன்னைத்  துன்மார்க்க  ஸ்திரீக்கும்,  இச்சகம்பேசும்  நாவையுடைய  பரஸ்திரீக்கும்  விலக்கிக்  காக்கும்.  {Prov  6:24}

 

உன்  இருதயத்திலே  அவள்  அழகை  இச்சியாதே;  அவள்  தன்  கண்ணிமைகளினால்  உன்னைப்  பிடிக்கவிடாதே.  {Prov  6:25}

 

வேசியினிமித்தம்  ஒரு  அப்பத்துணிக்கையையும்  இரக்கவேண்டியதாகும்;  விபசாரியானவள்  அருமையான  உயிரை  வேட்டையாடுகிறாள்.  {Prov  6:26}

 

தன்  வஸ்திரம்  வேகாமல்  மடியிலே  எவனாவது  நெருப்பை  வைத்துக்கொள்ளக்கூடுமோ?  {Prov  6:27}

 

தன்  கால்  சுடாமல்  எவனாவது  தழலின்மேல்  நடக்கக்கூடுமோ?  {Prov  6:28}

 

பிறனுடைய  மனைவியிடத்தில்  பிரவேசிப்பவனும்,  அப்படியே  அவளைத்  தொடுகிற  எவனும்,  ஆக்கினைக்குத்  தப்பான்.  {Prov  6:29}

 

திருடன்  தன்  பசியை  ஆற்றத்  திருடினால்  ஜனங்கள்  அவனை  இகழமாட்டார்கள்;  {Prov  6:30}

 

அவன்  கண்டுபிடிக்கப்பட்டால்  ஏழுமடங்கு  கொடுத்துத்  தீரவேண்டும்;  தன்  வீட்டிலுள்ள  பொருள்களையெல்லாம்  கொடுக்கவேண்டியதாகும்.  {Prov  6:31}

 

ஸ்திரீயுடனே  விபசாரம்பண்ணுகிறவன்  மதிகெட்டவன்;  அப்படிச்  செய்கிறவன்  தன்  ஆத்துமாவைக்  கெடுத்துப்போடுகிறான்.  {Prov  6:32}

 

வாதையையும்  இலச்சையையும்  அடைவான்;  அவன்  நிந்தை  ஒழியாது.  {Prov  6:33}

 

ஸ்திரீயைப்பற்றிய  எரிச்சல்  புருஷனுக்கு  மூர்க்கத்தை  உண்டுபண்ணும்;  அவன்  பழிவாங்கும்  நாளில்  தப்பவிடான்.  {Prov  6:34}

 

அவன்  எந்த  ஈட்டையும்  பாரான்;  அநேகம்  வெகுமதிகளைக்  கொடுத்தாலும்  அமர்ந்திருக்கமாட்டான்.  {Prov  6:35}

 

என்  மகனே,  நீ  என்  வார்த்தைகளைக்  காத்து,  என்  கட்டளைகளை  உன்னிடத்தில்  பத்திரப்படுத்து.  {Prov  7:1}

 

என்  கட்டளைகளையும்  என்  போதகத்தையும்  உன்  கண்மணியைப்போல்  காத்துக்கொள்,  அப்பொழுது  பிழைப்பாய்.  {Prov  7:2}

 

அவைகளை  உன்  விரல்களில்  கட்டி,  அவைகளை  உன்  இருதய  பலகையில்  எழுதிக்கொள்.  {Prov  7:3}

 

இச்சகவார்த்தைகளைப்  பேசும்  அந்நிய  பெண்ணாகிய  பரஸ்திரீக்கு  உன்னை  விலக்கிக்  காப்பதற்காக,  {Prov  7:4}

 

ஞானத்தை  நோக்கி,  நீ  என்  சகோதரி  என்றும்,  புத்தியைப்பார்த்து,  நீ  என்  இனத்தாள்  என்றும்  சொல்வாயாக.  {Prov  7:5}

 

நான்  என்  வீட்டின்  ஜன்னலருகே  நின்று,  பலகணி  வழியாய்ப்  பார்த்தபோது,  {Prov  7:6}

 

பேதையர்களாகிய  வாலிபருக்குள்ளே  ஒரு  புத்தியீன  வாலிபனைக்கண்டு  அவனைக்  கவனித்தேன்.  {Prov  7:7}

 

அவன்  மாலைமயங்கும்  அஸ்தமனநேரத்திலும்,  இரவின்  இருண்ட  அந்தகாரத்திலும்,  {Prov  7:8}

 

அவள்  இருக்கும்  சந்துக்கடுத்த  தெருவில்  சென்று,  அவள்  வீட்டுவழியாய்  நடந்துபோனான்.  {Prov  7:9}

 

அப்பொழுது  இதோ,  வேசியின்  ஆடையாபரணந்தரித்த  தந்திரமனமுள்ள  ஒரு  ஸ்திரீ  அவனுக்கு  எதிர்ப்பட்டாள்.  {Prov  7:10}

 

அவள்  வாயாடியும்  அடங்காதவளுமானவள்;  அவள்  கால்கள்  வீட்டிலே  தரிக்கிறதில்லை.  {Prov  7:11}

 

சிலவேளை  வெளியிலிருப்பாள்,  சிலவேளை  வீதியிலிருப்பாள்,  சந்துகள்தோறும்  பதிவிருப்பாள்.  {Prov  7:12}

 

அவள்  அவனைப்  பிடித்து  முத்தஞ்செய்து,  முகம்  நாணாமல்  அவனைப்  பார்த்து:  {Prov  7:13}

 

சமாதான  பலிகள்  என்மேல்  சுமந்திருந்தது,  இன்றைக்குத்தான்  என்  பொருத்தனைகளை  நிறைவேற்றினேன்.  {Prov  7:14}

 

ஆதலால்,  நான்  உன்னைச்  சந்திக்கப்  புறப்பட்டு,  உன்  முகத்தை  ஆவலோடு  தேடினேன்;  இப்பொழுது  உன்னைக்  கண்டுபிடித்தேன்.  {Prov  7:15}

 

என்  மஞ்சத்தை  இரத்தின  கம்பளங்களாலும்,  எகிப்துதேசத்து<Egypt>  விசித்திரமான  மெல்லிய  வஸ்திரங்களாலும்  சிங்காரித்தேன்.  {Prov  7:16}

 

என்  படுக்கையை  வெள்ளைப்போளத்தாலும்  சந்தனத்தாலும்  இலவங்கப்பட்டையாலும்  வாசனை  கட்டினேன்.  {Prov  7:17}

 

வா,  விடியற்காலம்வரைக்கும்  சம்போகமாயிருப்போம்,  இன்பங்களினால்  பூரிப்போம்.  {Prov  7:18}

 

புருஷன்  வீட்டிலே  இல்லை,  தூரப்  பிரயாணம்  போனான்.  {Prov  7:19}

 

பணப்பையைத்  தன்  கையிலே  கொண்டுபோனான்,  குறிக்கப்பட்ட  நாளிலே  வீட்டுக்கு  வருவான்  என்று  சொல்லி,  {Prov  7:20}

 

தன்  மிகுதியான  இனிய  சொற்களால்  அவனை  வசப்படுத்தி,  தன்  உதடுகளின்  மதுரவாக்கினால்  அவனை  இணங்கப்பண்ணினாள்.  {Prov  7:21}

 

உடனே  அவன்  அவள்  பின்னே  சென்றான்;  ஒரு  மாடு  அடிக்கப்படும்படி  செல்வதுபோலும்,  ஒரு  மூடன்  விலங்கிடப்பட்டுத்  தண்டனைக்குப்  போவது  போலும்,  {Prov  7:22}

 

ஒரு  குருவி  தன்  பிராணனை  வாங்கும்  கண்ணியை  அறியாமல்  அதில்  விழத்  தீவிரிக்கிறதுபோலும்,  அவளுக்குப்  பின்னே  போனான்;  அம்பு  அவன்  ஈரலைப்  பிளந்தது.  {Prov  7:23}

 

ஆதலால்  பிள்ளைகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  என்  வாயின்  வார்த்தைகளைக்  கவனியுங்கள்.  {Prov  7:24}

 

உன்  இருதயம்  அவள்  வழியிலே  சாயவேண்டாம்;  அவள்  பாதையிலே  மயங்கித்  திரியாதே.  {Prov  7:25}

 

அவள்  அநேகரைக்  காயப்படுத்தி,  விழப்பண்ணினாள்;  பலவான்கள்  அநேகரைக்  கொலைசெய்தாள்.  {Prov  7:26}

 

அவள்  வீடு  பாதாளத்துக்குப்போம்  வழி;  அது  மரண  அறைகளுக்குக்  கொண்டுபோய்விடும்.  {Prov  7:27}

 

ஞானம்  கூப்பிடுகிறதில்லையோ?  புத்தி  சத்தமிடுகிறதில்லையோ?  {Prov  8:1}

 

அது  வழியருகேயுள்ள  மேடைகளிலும்,  நாற்சந்திகளிலும்  நிற்கிறது.  {Prov  8:2}

 

அது  ஊர்வாசல்களின்  ஓரத்திலும்,  பட்டணத்தின்  முகப்பிலும்,  நடை  கூடங்களிலும்  நின்று  சத்தமிட்டு:  {Prov  8:3}

 

மனுஷரே,  உங்களை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  என்  சத்தம்  மனுபுத்திரருக்குத்  தொனிக்கும்.  {Prov  8:4}

 

பேதைகளே,  விவேகம்  அடையுங்கள்;  மூடர்களே,  புத்தியுள்ள  சிந்தையாயிருங்கள்.  {Prov  8:5}

 

கேளுங்கள்,  மேம்பாடான  காரியங்களைப்  பேசுவேன்;  என்  உதடுகள்  உத்தம  காரியங்களை  வசனிக்கும்.  {Prov  8:6}

 

என்  வாய்  சத்தியத்தை  விளம்பும்,  ஆகாமியம்  என்  உதடுகளுக்கு  அருவருப்பானது.  {Prov  8:7}

 

என்  வாயின்  வாக்குகளெல்லாம்  நீதியானவைகள்;  அவைகளில்  புரட்டும்  விபரீதமும்  இல்லை.  {Prov  8:8}

 

அவைகளெல்லாம்  புத்தியுள்ளவனுக்குத்  தெளிவும்,  ஞானத்தைப்  பெற்றவர்களுக்கு  யதார்த்தமுமாயிருக்கும்.  {Prov  8:9}

 

வெள்ளியைப்பார்க்கிலும்  என்  புத்திமதியையும்,  பசும்பொன்னைப்பார்க்கிலும்  ஞானத்தையும்  அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.  {Prov  8:10}

 

முத்துக்களைப்பார்க்கிலும்  ஞானமே  நல்லது;  இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம்  அதற்கு  நிகரல்ல.  {Prov  8:11}

 

ஞானமாகிய  நான்  விவேகத்தோடே  வாசம்பண்ணி,  நல்யுக்தியான  அறிவுகளைக்  கண்டடைகிறேன்.  {Prov  8:12}

 

தீமையை  வெறுப்பதே  கர்த்தருக்குப்  பயப்படும்  பயம்;  பெருமையையும்,  அகந்தையையும்,  தீய  வழியையும்,  புரட்டுவாயையும்  நான்  வெறுக்கிறேன்.  {Prov  8:13}

 

ஆலோசனையும்  மெய்ஞ்ஞானமும்  என்னுடையவைகள்;  நானே  புத்தி,  வல்லமை  என்னுடையது.  {Prov  8:14}

 

என்னாலே  ராஜாக்கள்  அரசாளுகிறார்கள்,  பிரபுக்கள்  நீதிசெலுத்துகிறார்கள்.  {Prov  8:15}

 

என்னாலே  அதிகாரிகளும்,  பிரபுக்களும்,  பூமியிலுள்ள  சகல  நியாயாதிபதிகளும்  ஆளுகைசெய்துவருகிறார்கள்.  {Prov  8:16}

 

என்னைச்  சிநேகிக்கிறவர்களை  நான்  சிநேகிக்கிறேன்;  அதிகாலையில்  என்னைத்  தேடுகிறவர்கள்  என்னைக்  கண்டடைவார்கள்.  {Prov  8:17}

 

ஐசுவரியமும்,  கனமும்,  நிலையான  பொருளும்,  நீதியும்  என்னிடத்தில்  உண்டு.  {Prov  8:18}

 

பொன்னையும்  தங்கத்தையும்  பார்க்கிலும்  என்  பலன்  நல்லது;  சுத்த  வெள்ளியைப்பார்க்கிலும்  என்  வருமானம்  நல்லது.  {Prov  8:19}

 

என்னைச்  சிநேகிக்கிறவர்கள்  மெய்ப்பொருளைச்  சுதந்தரிக்கும்படிக்கும்,  அவர்களுடைய  களஞ்சியங்களை  நான்  நிரப்பும்படிக்கும்,  {Prov  8:20}

 

அவர்களை  நீதியின்  வழியிலும்,  நியாயபாதைகளுக்குள்ளும்  நடத்துகிறேன்.  {Prov  8:21}

 

கர்த்தர்  தமது  கிரியைகளுக்குமுன்  பூர்வமுதல்  என்னைத்  தமது  வழியின்  ஆதியாகக்  கொண்டிருந்தார்.  {Prov  8:22}

 

பூமி  உண்டாகுமுன்னும்,  ஆதிமுதற்கொண்டும்  அநாதியாய்  நான்  அபிஷேகம்பண்ணப்பட்டேன்.  {Prov  8:23}

 

ஆழங்களும்,  ஜலம்  புரண்டுவரும்  ஊற்றுகளும்  உண்டாகுமுன்னே  நான்  ஜநிப்பிக்கப்பட்டேன்.  {Prov  8:24}

 

மலைகள்  நிலைபெறுவதற்கு  முன்னும்,  குன்றுகள்  உண்டாவதற்கு  முன்னும்,  {Prov  8:25}

 

அவர்  பூமியையும்  அதின்  வெளிகளையும்,  பூமியிலுள்ள  மண்ணின்  திரள்களையும்  உண்டாக்குமுன்னும்  நான்  ஜநிப்பிக்கப்பட்டேன்.  {Prov  8:26}

 

அவர்  வானங்களைப்  படைக்கையில்  நான்  அங்கே  இருந்தேன்;  அவர்  சமுத்திர  விலாசத்தை  வட்டணிக்கையிலும்,  {Prov  8:27}

 

உயரத்தில்  மேகங்களை  ஸ்தாபித்து,  சமுத்திரத்தின்  ஊற்றுகளை  அடைத்து  வைக்கையிலும்,  {Prov  8:28}

 

சமுத்திர  ஜலம்  தன்  கரையை  விட்டு  மீறாதபடிக்கு  அதற்கு  எல்லையைக்  கட்டளையிட்டு,  பூமியின்  அஸ்திபாரங்களை  நிலைப்படுத்துகையிலும்,  {Prov  8:29}

 

நான்  அவர்  அருகே  செல்லப்பிள்ளையாயிருந்தேன்;  நித்தம்  அவருடைய  மனமகிழ்ச்சியாயிருந்து,  எப்பொழுதும்  அவர்  சமுகத்தில்  களிகூர்ந்தேன்.  {Prov  8:30}

 

அவருடைய  பூவுலகத்தில்  சந்தோஷப்பட்டு,  மனுமக்களுடனே  மகிழ்ந்துகொண்டிருந்தேன்.  {Prov  8:31}

 

ஆதலால்  பிள்ளைகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  என்  வழிகளைக்  காத்து  நடக்கிறவர்கள்  பாக்கியவான்கள்.  {Prov  8:32}

 

நீங்கள்  புத்தியைக்  கேட்டு,  ஞானமடையுங்கள்;  அதை  விட்டு  விலகாதிருங்கள்.  {Prov  8:33}

 

என்  வாசற்படியில்  நித்தம்  விழித்திருந்து,  என்  கதவு  நிலையருகே  காத்திருந்து,  எனக்குச்  செவிகொடுக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Prov  8:34}

 

என்னைக்  கண்டடைகிறவன்  ஜீவனைக்  கண்டடைகிறான்;  கர்த்தரிடத்தில்  தயவையும்  பெறுவான்.  {Prov  8:35}

 

எனக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்கிறவனோ,  தன்  ஆத்துமாவைச்  சேதப்படுத்துகிறான்;  என்னை  வெறுக்கிறவர்கள்  யாவரும்  மரணத்தை  விரும்புகிறவர்கள்  என்று  சொல்லுகிறது.  {Prov  8:36}

 

ஞானம்  தன்  வீட்டைக்  கட்டி,  தன்  ஏழு  தூண்களையும்  சித்திரந்தீர்த்து,  {Prov  9:1}

 

தன்  கொழுத்த  ஜந்துக்களை  அடித்து,  திராட்சரசத்தை  வார்த்துவைத்து,  தன்  போஜனபந்தியை  ஆயத்தப்படுத்தி,  {Prov  9:2}

 

தன்  பணிவிடைக்காரிகளை  அனுப்பி,  பட்டணத்தின்  உயர்ந்த  மேடைகளின்மேல்  நின்று  கூப்பிட்டு,  {Prov  9:3}

 

புத்தியீனனை  நோக்கி:  எவன்  பேதையோ  அவன்  இவ்விடத்தில்  வரக்கடவன்.  {Prov  9:4}

 

நீங்கள்  வந்து  என்  அப்பத்தைப்  புசித்து,  நான்  வார்த்த  திராட்சரசத்தைப்  பானம்பண்ணுங்கள்.  {Prov  9:5}

 

பேதைமையை  விட்டு  விலகுங்கள்,  அப்பொழுது  பிழைத்திருப்பீர்கள்;  புத்தியின்  வழியிலே  நடவுங்கள்  என்று  விளம்புகிறது.  {Prov  9:6}

 

பரியாசக்காரனைக்  கண்டிக்கிறவன்  இலச்சையடைகிறான்;  துன்மார்க்கனைக்  கண்டிக்கிறவன்  தன்னைக்  கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.  {Prov  9:7}

 

பரியாசக்காரனைக்  கடிந்துகொள்ளாதே,  அவன்  உன்னைப்  பகைப்பான்;  ஞானமுள்ளவனைக்  கடிந்துகொள்,  அவன்  உன்னை  நேசிப்பான்.  {Prov  9:8}

 

ஞானமுள்ளவனுக்குப்  போதகம்பண்ணு,  அவன்  ஞானத்தில்  தேறுவான்;  நீதிமானுக்கு  உபதேசம்பண்ணு,  அவன்  அறிவில்  விருத்தியடைவான்.  {Prov  9:9}

 

கர்த்தருக்குப்  பயப்படுதலே  ஞானத்தின்  ஆரம்பம்;  பரிசுத்தரின்  அறிவே  அறிவு.  {Prov  9:10}

 

என்னாலே  உன்  நாட்கள்  பெருகும்;  உன்  ஆயுசின்  வருஷங்கள்  விருத்தியாகும்.  {Prov  9:11}

 

நீ  ஞானியானால்  உனக்கென்று  ஞானியாவாய்;  நீ  பரியாசக்காரனானால்  நீயே  அதின்  பயனை  அநுபவிப்பாய்  என்று  சொல்லுகிறது.  {Prov  9:12}

 

மதியற்ற  ஸ்திரீ  வாயாடியும்,  ஒன்றுமறியாத  நிர்மூடமுமாயிருக்கிறாள்.  {Prov  9:13}

 

அவள்  தன்  வீட்டுவாசற்படியிலும்  பட்டணத்தின்  மேடைகளிலும்  ஆசனம்  போட்டு  உட்கார்ந்து,  {Prov  9:14}

 

தங்கள்  வழிகளை  நோக்கி  நேரே  போகும்  வழிப்போக்கரைப்  பார்த்து:  {Prov  9:15}

 

எவன்  பேதையோ  அவன்  இவ்விடத்தில்  வரக்கடவன்  என்றும்,  {Prov  9:16}

 

மதியீனனை  நோக்கி:  திருட்டுத்தண்ணீர்  தித்திக்கும்,  அந்தரங்கத்தில்  புசிக்கும்  அப்பம்  இன்பமாயிருக்கும்  என்றும்  சொல்லிக்  கூப்பிடுகிறாள்.  {Prov  9:17}

 

ஆயினும்  மரித்தவர்கள்  அவ்விடத்தில்  உண்டென்றும்,  அவளுடைய  விருந்தாளிகள்  நரகபாதாளங்களில்  கிடக்கிறார்களென்றும்  அவன்  அறியான்.  {Prov  9:18}

 

சாலொமோனின்<Solomon>  நீதிமொழிகள்:  ஞானமுள்ள  மகன்  தகப்பனைச்  சந்தோஷப்படுத்துகிறான்;  மூடத்தனமுள்ளவனோ  தாய்க்குச்  சஞ்சலமாயிருக்கிறான்.  {Prov  10:1}

 

அநியாயத்தின்  திரவியங்கள்  ஒன்றுக்கும்  உதவாது;  நீதியோ  மரணத்துக்குத்  தப்புவிக்கும்.  {Prov  10:2}

 

கர்த்தர்  நீதிமான்களைப்  பசியினால்  வருந்தவிடார்;  துன்மார்க்கருடைய  பொருளையோ  அகற்றிவிடுகிறார்.  {Prov  10:3}

 

சோம்பற்கையால்  வேலைசெய்கிறவன்  ஏழையாவான்;  சுறுசுறுப்புள்ளவன்  கையோ  செல்வத்தை  உண்டாக்கும்.  {Prov  10:4}

 

கோடைகாலத்தில்  சேர்க்கிறவன்  புத்தியுள்ள  மகன்;  அறுப்புக்காலத்தில்  தூங்குகிறவனோ  இலச்சையை  உண்டாக்குகிற  மகன்.  {Prov  10:5}

 

நீதிமானுடைய  சிரசின்மேல்  ஆசீர்வாதங்கள்  தங்கும்;  கொடுமையோ  துன்மார்க்கனுடைய  வாயை  அடைக்கும்.  {Prov  10:6}

 

நீதிமானுடைய  பேர்  புகழ்பெற்று  விளங்கும்;  துன்மார்க்கனுடைய  பேரோ  அழிந்துபோகும்.  {Prov  10:7}

 

இருதயத்தில்  ஞானமுள்ளவன்  கட்டளைகளை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  அலப்புகிற  மூடனோ  விழுவான்.  {Prov  10:8}

 

உத்தமமாய்  நடக்கிறவன்  பத்திரமாய்  நடக்கிறான்;  கோணலான  வழிகளில்  நடக்கிறவனோ  கண்டுபிடிக்கப்படுவான்.  {Prov  10:9}

 

கண்சாடை  காட்டுகிறவன்  நோவு  உண்டாக்குகிறான்;  அலப்புகிற  மூடன்  விழுவான்.  {Prov  10:10}

 

நீதிமானுடைய  வாய்  ஜீவஊற்று;  கொடுமையோ  துன்மார்க்கனுடைய  வாயை  அடைக்கும்.  {Prov  10:11}

 

பகை  விரோதங்களை  எழுப்பும்;  அன்போ  சகல  பாவங்களையும்  மூடும்.  {Prov  10:12}

 

புத்திமானுடைய  உதடுகளில்  விளங்குவது  ஞானம்;  மதிகேடனுடைய  முதுகுக்கு  ஏற்றது  பிரம்பு.  {Prov  10:13}

 

ஞானவான்கள்  அறிவைச்  சேர்த்துவைக்கிறார்கள்;  மூடனுடைய  வாய்க்குக்  கேடு  சமீபித்திருக்கிறது.  {Prov  10:14}

 

ஐசுவரியவானுடைய  பொருள்  அவனுக்கு  அரணான  பட்டணம்;  ஏழைகளின்  வறுமையோ  அவர்களைக்  கலங்கப்பண்ணும்.  {Prov  10:15}

 

நீதிமானுடைய  பிரயாசம்  ஜீவனையும்,  துன்மார்க்கனுடைய  விளைவோ  பாவத்தையும்  பிறப்பிக்கும்.  {Prov  10:16}

 

புத்திமதிகளைக்  காத்துக்கொள்ளுகிறவன்  ஜீவவழியில்  இருக்கிறான்;  கண்டனையை  வெறுக்கிறவனோ  மோசம்போகிறான்.  {Prov  10:17}

 

பகையை  மறைக்கிறவன்  பொய்  உதடன்;  புறங்கூறுகிறவன்  மதிகேடன்.  {Prov  10:18}

 

சொற்களின்  மிகுதியில்  பாவமில்லாமற்போகாது;  தன்  உதடுகளை  அடக்குகிறவனோ  புத்திமான்.  {Prov  10:19}

 

நீதிமானுடைய  நாவு  சுத்தவெள்ளி;  துன்மார்க்கனுடைய  மனம்  அற்பவிலையும்  பெறாது.  {Prov  10:20}

 

நீதிமானுடைய  உதடுகள்  அநேகரைப்  போஷிக்கும்;  மூடரோ  மதியீனத்தினால்  மாளுவார்கள்.  {Prov  10:21}

 

கர்த்தரின்  ஆசீர்வாதமே  ஐசுவரியத்தைத்  தரும்;  அதனோடே  அவர்  வேதனையைக்  கூட்டார்.  {Prov  10:22}

 

தீவினைசெய்வது  மூடனுக்கு  விளையாட்டு;  புத்திமானுக்கோ  ஞானம்  உண்டு.  {Prov  10:23}

 

துன்மார்க்கன்  பயப்படும்  காரியம்  அவனுக்கு  வந்து  நேரிடும்;  நீதிமான்  விரும்புகிற  காரியம்  அவனுக்குக்  கொடுக்கப்படும்.  {Prov  10:24}

 

சுழல்காற்று  கடந்துபோவதுபோல்  துன்மார்க்கன்  கடந்துபோவான்;  நீதிமானோ  நித்திய  அஸ்திபாரமுள்ளவன்.  {Prov  10:25}

 

பற்களுக்குக்  காடியும்,  கண்களுக்குப்  புகையும்  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  சோம்பேறியும்  தன்னை  அனுப்புகிறவர்களுக்கு  இருக்கிறான்.  {Prov  10:26}

 

கர்த்தருக்குப்  பயப்படுதல்  ஆயுசுநாட்களைப்  பெருகப்பண்ணும்;  துன்மார்க்கருடைய  வருஷங்களோ  குறுகிப்போம்.  {Prov  10:27}

 

நீதிமான்களின்  நம்பிக்கை  மகிழ்ச்சியாகும்;  துன்மார்க்கருடைய  அபேட்சையோ  அழியும்.  {Prov  10:28}

 

கர்த்தரின்  வழி  உத்தமர்களுக்கு  அரண்,  அக்கிரமக்காரருக்கோ  கலக்கம்.  {Prov  10:29}

 

நீதிமான்  என்றும்  அசைக்கப்படுவதில்லை;  துன்மார்க்கர்  பூமியில்  வசிப்பதில்லை.  {Prov  10:30}

 

நீதிமானுடைய  வாய்  ஞானத்தை  வெளிப்படுத்தும்;  மாறுபாடுள்ள  நாவோ  அறுப்புண்டுபோம்.  {Prov  10:31}

 

நீதிமான்களுடைய  உதடுகள்  பிரியமானவைகளைப்  பேச  அறியும்;  துன்மார்க்கருடைய  வாயோ  மாறுபாடுள்ளது.  {Prov  10:32}

 

கள்ளத்தராசு  கர்த்தருக்கு  அருவருப்பானது;  சுமுத்திரையான  நிறைகல்லோ  அவருக்குப்  பிரியம்.  {Prov  11:1}

 

அகந்தை  வந்தால்  இலச்சையும்  வரும்;  தாழ்ந்த  சிந்தையுள்ளவர்களிடத்தில்  ஞானம்  உண்டு.  {Prov  11:2}

 

செம்மையானவர்களுடைய  உத்தமம்  அவர்களை  நடத்தும்;  துரோகிகளின்  மாறுபாடோ  அவர்களைப்  பாழாக்கும்.  {Prov  11:3}

 

கோபாக்கினைநாளில்  ஐசுவரியம்  உதவாது;  நீதியோ  மரணத்துக்குத்  தப்புவிக்கும்.  {Prov  11:4}

 

உத்தமனுடைய  நீதி  அவன்  வழியைச்  செம்மைப்படுத்தும்;  துன்மார்க்கனோ  தன்  துன்மார்க்கத்தினால்  விழுவான்.  {Prov  11:5}

 

செம்மையானவர்களுடைய  நீதி  அவர்களைத்  தப்புவிக்கும்;  துரோகிகளோ  தங்கள்  தீவினையிலே  பிடிபடுவார்கள்.  {Prov  11:6}

 

துன்மார்க்கன்  மரிக்கும்போது  அவன்  நம்பிக்கை  அழியும்;  அக்கிரமக்காரரின்  அபேட்சை  கெட்டுப்போம்.  {Prov  11:7}

 

நீதிமான்  இக்கட்டினின்று  விடுவிக்கப்படுவான்;  அவன்  இருந்த  இடத்திலே  துன்மார்க்கன்  வருவான்.  {Prov  11:8}

 

மாயக்காரன்  தனக்கு  அடுத்தவனை  வாயினால்  கெடுக்கிறான்;  நீதிமானோ  அறிவினால்  தப்புகிறான்.  {Prov  11:9}

 

நீதிமான்கள்  நன்றாயிருந்தால்  பட்டணம்  களிகூரும்;  துன்மார்க்கர்  அழிந்தால்  கெம்பீரம்  உண்டாகும்.  {Prov  11:10}

 

செம்மையானவர்களுடைய  ஆசீர்வாதத்தினால்  பட்டணம்  நிலைபெற்றோங்கும்;  துன்மார்க்கருடைய  வாயினால்  அது  இடிந்துவிழும்.  {Prov  11:11}

 

மதிகெட்டவன்  பிறனை  அவமதிக்கிறான்;  புத்திமானோ  தன்  வாயை  அடக்கிக்கொண்டிருக்கிறான்.  {Prov  11:12}

 

புறங்கூறித்  திரிகிறவன்  இரகசியத்தை  வெளிப்படுத்துகிறான்;  ஆவியில்  உண்மையுள்ளவனோ  காரியத்தை  அடக்குகிறான்.  {Prov  11:13}

 

ஆலோசனையில்லாத  இடத்தில்  ஜனங்கள்  விழுந்துபோவார்கள்;  அநேக  ஆலோசனைக்காரர்  உண்டானால்  சுகம்  உண்டாகும்.  {Prov  11:14}

 

அந்நியனுக்காகப்  பிணைப்படுகிறவன்  வெகு  பாடுபடுவான்;  பிணைப்படுவதை  வெறுப்பவன்  சுகமாயிருப்பான்.  {Prov  11:15}

 

நல்லொழுக்கமுள்ள  ஸ்திரீ  மானத்தைக்  காப்பாள்;  பராக்கிரமசாலிகள்  ஐசுவரியத்தைக்  காப்பார்கள்.  {Prov  11:16}

 

தயையுள்ள  மனுஷன்  தன்  ஆத்துமாவுக்கு  நன்மைசெய்துகொள்ளுகிறான்;  கடூரனோ  தன்  உடலை  அலைக்கழிக்கிறான்.  {Prov  11:17}

 

துன்மார்க்கன்  விருதாவேலையைச்  செய்கிறான்;  நீதியை  விதைக்கிறவனோ  மெய்ப்பலனைப்  பெறுவான்.  {Prov  11:18}

 

நீதி  ஜீவனுக்கு  ஏதுவாகிறதுபோல்,  தீமையைப்  பின்தொடருகிறவன்  மரணத்துக்கு  ஏதுவாகிறான்.  {Prov  11:19}

 

மாறுபாடுள்ள  இருதயமுடையவர்கள்  கர்த்தருக்கு  அருவருப்பானவர்கள்;  உத்தம  மார்க்கத்தாரோ  அவருக்குப்  பிரியமானவர்கள்.  {Prov  11:20}

 

கையோடே  கைகோர்த்தாலும்,  துஷ்டன்  தண்டனைக்குத்  தப்பான்;  நீதிமான்களுடைய  சந்ததியோ  விடுவிக்கப்படும்.  {Prov  11:21}

 

மதிகேடாய்  நடக்கிற  அழகுள்ள  ஸ்திரீ,  பன்றியின்  மூக்கிலுள்ள  பொன்மூக்குத்திக்குச்  சமானம்.  {Prov  11:22}

 

நீதிமான்களுடைய  ஆசை  நன்மையே;  துன்மார்க்கருடைய  நம்பிக்கையோ  கோபாக்கினையாய்  முடியும்.  {Prov  11:23}

 

வாரியிறைத்தும்  விருத்தியடைவாரும்  உண்டு;  அதிகமாய்ப்  பிசினித்தனம்பண்ணியும்  வறுமையடைவாரும்  உண்டு.  {Prov  11:24}

 

உதாரகுணமுள்ள  ஆத்துமா  செழிக்கும்;  எவன்  தண்ணீர்  பாய்ச்சுகிறானோ  அவனுக்குத்  தண்ணீர்  பாய்ச்சப்படும்.  {Prov  11:25}

 

தானியத்தைக்  கட்டிவைக்கிறவனை  ஜனங்கள்  சபிப்பார்கள்;  விற்கிறவனுடைய  தலையின்மேல்  ஆசீர்வாதம்  தங்கும்.  {Prov  11:26}

 

நன்மையை  ஜாக்கிரதையுடன்  தேடுகிறவன்  தயையைப்  பெறுவான்;  தீமையைத்  தேடுகிறவனுக்கோ  தீமையே  வரும்.  {Prov  11:27}

 

தன்  ஐசுவரியத்தை  நம்புகிறவன்  விழுவான்;  நீதிமான்களோ  துளிரைப்போலே  தழைப்பார்கள்.  {Prov  11:28}

 

தன்  வீட்டைக்  கலைக்கிறவன்  காற்றைச்  சுதந்தரிப்பான்;  மூடன்  ஞானமுள்ளவனுக்கு  அடிமையாவான்.  {Prov  11:29}

 

நீதிமானுடைய  பலன்  ஜீவவிருட்சம்;  ஆத்துமாக்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன்  ஞானமுள்ளவன்.  {Prov  11:30}

 

இதோ,  நீதிமானுக்கு  பூமியில்  சரிக்கட்டப்படுமே;  துன்மார்க்கனுக்கும்  பாவிக்கும்  எத்தனை  அதிகம்.  {Prov  11:31}

 

புத்திமதிகளை  விரும்புகிறவன்  அறிவை  விரும்புகிறான்;  கடிந்துகொள்ளுதலை  வெறுக்கிறவனோ  மிருககுணமுள்ளவன்.  {Prov  12:1}

 

நல்லவன்  கர்த்தரிடத்தில்  தயைபெறுவான்;  துர்ச்சிந்தனைகளுள்ள  மனுஷனை  அவர்  ஆக்கினைக்குட்படுத்துவார்.  {Prov  12:2}

 

துன்மார்க்கத்தினால்  மனுஷன்  நிலைவரப்படான்;  நீதிமான்களுடைய  வேரோ  அசையாது.  {Prov  12:3}

 

குணசாலியான  ஸ்திரீ  தன்  புருஷனுக்குக்  கிரீடமாயிருக்கிறாள்;  இலச்சை  உண்டுபண்ணுகிறவளோ  அவனுக்கு  எலும்புருக்கியாயிருக்கிறாள்.  {Prov  12:4}

 

நீதிமான்களுடைய  நினைவுகள்  நியாயமானவைகள்;  துன்மார்க்கருடைய  ஆலோசனைகளோ  சூதானவைகள்.  {Prov  12:5}

 

துன்மார்க்கரின்  வார்த்தைகள்  இரத்தஞ்சிந்தப்  பதிவிருப்பதைப்பற்றியது;  உத்தமர்களுடைய  வாயோ  அவர்களைத்  தப்புவிக்கும்.  {Prov  12:6}

 

துன்மார்க்கர்  கவிழ்க்கப்பட்டு  ஒழிந்துபோவார்கள்;  நீதிமான்களுடைய  வீடோ  நிலைநிற்கும்.  {Prov  12:7}

 

தன்  புத்திக்குக்தக்கதாக  மனுஷன்  புகழப்படுவான்;  மாறுபாடான  இருதயமுள்ளவனோ  இகழப்படுவான்.  {Prov  12:8}

 

ஆகாரமில்லாதவனாயிருந்தும்,  தன்னைத்தான்  கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும்,  கனமற்றவனாயிருந்தும்  பணிவிடைக்காரனுள்ளவன்  உத்தமன்.  {Prov  12:9}

 

நீதிமான்  தன்  மிருகஜீவனைக்  காப்பாற்றுகிறான்;  துன்மார்க்கருடைய  இரக்கமும்  கொடுமையே.  {Prov  12:10}

 

தன்  நிலத்தைப்  பயிரிடுகிறவன்  ஆகாரத்தினால்  திருப்தியடைவான்;  வீணரைப்  பின்பற்றுகிறவனோ  மதியற்றவன்.  {Prov  12:11}

 

துன்மார்க்கன்  துஷ்டருடைய  வலையை  விரும்புகிறான்;  நீதிமானுடைய  வேர்  கனி  கொடுக்கும்.  {Prov  12:12}

 

துன்மார்க்கனுக்கு  அவன்  உதடுகளின்  துரோகமே  கண்ணி;  நீதிமானோ  நெருக்கத்தினின்று  நீங்குவான்.  {Prov  12:13}

 

அவனவன்  தன்  தன்  வாயின்  பலனால்  திருப்தியடைவான்;  அவனவன்  கைக்கிரியையின்  பலனுக்குத்தக்கதாக  அவனவனுக்குக்  கிடைக்கும்.  {Prov  12:14}

 

மதியீனனுடைய  வழி  அவன்  பார்வைக்குச்  செம்மையாயிருக்கும்;  ஆலோசனைக்குச்  செவிகொடுக்கிறவனோ  ஞானமுள்ளவன்.  {Prov  12:15}

 

மூடனுடைய  கோபம்  சீக்கிரத்தில்  வெளிப்படும்;  இலச்சையை  மூடுகிறவனோ  விவேகி.  {Prov  12:16}

 

சத்தியவாசகன்  நீதியை  வெளிப்படுத்துவான்;  பொய்ச்சாட்சிக்காரனோ  வஞ்சகத்தை  வெளிப்படுத்துவான்.  {Prov  12:17}

 

பட்டயக்குத்துகள்போல்  பேசுகிறவர்களும்  உண்டு;  ஞானமுள்ளவர்களுடைய  நாவோ  ஔஷதம்.  {Prov  12:18}

 

சத்திய  உதடு  என்றும்  நிலைத்திருக்கும்;  பொய்நாவோ  ஒரு  நிமிஷமாத்திரம்  இருக்கும்.  {Prov  12:19}

 

தீங்கைப்  பிணைக்கிறவர்களின்  இருதயத்தில்  இருக்கிறது  கபடம்;  சமாதானம்பண்ணுகிற  ஆலோசனைக்காரருக்கு  உள்ளது  சந்தோஷம்.  {Prov  12:20}

 

நீதிமானுக்கு  ஒரு  கேடும்  வராது;  துன்மார்க்கரோ  தீமையினால்  நிறையப்படுவார்கள்.  {Prov  12:21}

 

பொய்  உதடுகள்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்;  உண்மையாய்  நடக்கிறவர்களோ  அவருக்குப்  பிரியம்.  {Prov  12:22}

 

விவேகமுள்ள  மனுஷன்  அறிவை  அடக்கிவைக்கிறான்;  மூடருடைய  இருதயமோ  மதியீனத்தைப்  பிரசித்தப்படுத்தும்.  {Prov  12:23}

 

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய  கை  ஆளுகைசெய்யும்;  சோம்பேறியோ  பகுதிகட்டுவான்.  {Prov  12:24}

 

மனுஷனுடைய  இருதயத்திலுள்ள  கவலை  அதை  ஒடுக்கும்;  நல்வார்த்தையோ  அதை  மகிழ்ச்சியாக்கும்.  {Prov  12:25}

 

நீதிமான்  தன்  அயலானைப்பார்க்கிலும்  மேன்மையுள்ளவன்;  துன்மார்க்கருடைய  வழியோ  அவர்களை  மோசப்படுத்தும்.  {Prov  12:26}

 

சோம்பேறி  தான்  வேட்டையாடிப்  பிடித்ததைச்  சமைப்பதில்லை;  ஜாக்கிரதையுள்ளவனுடைய  பொருளோ  அருமையானது.  {Prov  12:27}

 

நீதியின்  பாதையில்  ஜீவன்  உண்டு;  அந்தப்  பாதையில்  மரணம்  இல்லை.  {Prov  12:28}

 

ஞானமுள்ள  மகன்  தகப்பனுடைய  போதகத்தைக்  கேட்கிறான்;  பரியாசக்காரனோ  கடிந்துகொள்ளுதலுக்குச்  செவிகொடான்.  {Prov  13:1}

 

மனுஷன்  தன்  வாயின்  பலனால்  நன்மையைப்  புசிப்பான்;  துரோகிகளின்  ஆத்துமாவோ  கொடுமையைப்  புசிக்கும்.  {Prov  13:2}

 

தன்  வாயைக்  காக்கிறவன்  தன்  பிராணனைக்  காக்கிறான்;  தன்  உதடுகளை  விரிவாய்த்  திறக்கிறவனோ  கலக்கமடைவான்.  {Prov  13:3}

 

சோம்பேறியுடைய  ஆத்துமா  விரும்பியும்  ஒன்றும்  பெறாது;  ஜாக்கிரதையுள்ளவர்களுடைய  ஆத்துமாவோ  புஷ்டியாகும்.  {Prov  13:4}

 

நீதிமான்  பொய்ப்பேச்சை  வெறுக்கிறான்;  துன்மார்க்கனோ  வெட்கமும்  இலச்சையும்  உண்டாக்குகிறான்.  {Prov  13:5}

 

நீதி  உத்தமமார்க்கத்தானைத்  தற்காக்கும்;  துன்மார்க்கமோ  பாவியைக்  கவிழ்த்துப்போடும்.  {Prov  13:6}

 

ஒன்றுமில்லாதிருக்கத்  தன்னைச்  செல்வனாகப்  பாராட்டுகிறவனும்  உண்டு;  மிகுந்த  செல்வமிருக்கத்  தன்னைத்  தரித்திரனாகப்  பாராட்டுகிறவனும்  உண்டு.  {Prov  13:7}

 

மனுஷனுடைய  ஐசுவரியம்  அவன்  பிராணனை  மீட்கும்;  தரித்திரனோ  மிரட்டுதலைக்  கேளாதிருக்கிறான்.  {Prov  13:8}

 

நீதிமான்களின்  வெளிச்சம்  சந்தோஷிப்பிக்கும்;  துன்மார்க்கரின்  தீபமோ  அணைந்துபோம்.  {Prov  13:9}

 

அகந்தையினால்மாத்திரம்  வாது  பிறக்கும்;  ஆலோசனையைக்  கேட்கிறவர்களிடத்திலோ  ஞானம்  உண்டு.  {Prov  13:10}

 

வஞ்சனையால்  தேடின  பொருள்  குறைந்துபோம்;  கைப்பாடாய்ச்  சேர்க்கிறவனோ  விருத்தியடைவான்.  {Prov  13:11}

 

நெடுங்காலமாய்க்  காத்திருக்குதல்  இருதயத்தை  இளைக்கப்பண்ணும்;  விரும்பினது  வரும்போதோ  ஜீவவிருட்சம்போல்  இருக்கும்.  {Prov  13:12}

 

திருவசனத்தை  அவமதிக்கிறவன்  நாசமடைவான்;  கற்பனைக்குப்  பயப்படுகிறவனோ  பலனடைவான்.  {Prov  13:13}

 

ஞானவான்களுடைய  போதகம்  ஜீவஊற்று;  அதினால்  மரணக்கண்ணிகளுக்குத்  தப்பலாம்.  {Prov  13:14}

 

நற்புத்தி  தயையை  உண்டாக்கும்;  துரோகிகளுடைய  வழியோ  கரடுமுரடானது.  {Prov  13:15}

 

விவேகியானவன்  அறிவோடு  நடந்துகொள்ளுகிறான்;  மூடனோ  தன்  மூடத்தனத்தை  வெளிப்படுத்துகிறான்.  {Prov  13:16}

 

துரோகமுள்ள  தூதன்  தீதிலே  விழுவான்;  உண்மையுள்ள  ஸ்தானாபதியோ  ஔஷதம்.  {Prov  13:17}

 

புத்திமதிகளைத்  தள்ளுகிறவன்  தரித்திரத்தையும்  இலச்சையையும்  அடைவான்;  கடிந்துகொள்ளுதலைக்  கவனித்து  நடக்கிறவனோ  கனமடைவான்.  {Prov  13:18}

 

வாஞ்சை  நிறைவேறுவது  ஆத்துமாவுக்கு  இனிது;  தீமையை  விட்டு  விலகுவது  மூடருக்கு  அருவருப்பு.  {Prov  13:19}

 

ஞானிகளோடே  சஞ்சரிக்கிறவன்  ஞானமடைவான்;  மூடருக்குத்  தோழனோ  நாசமடைவான்.  {Prov  13:20}

 

பாவிகளைத்  தீவினை  தொடரும்;  நீதிமான்களுக்கோ  நன்மை  பலனாக  வரும்.  {Prov  13:21}

 

நல்லவன்  தன்  பிள்ளைகளின்  பிள்ளைகளுக்குச்  சுதந்தரம்  வைத்துப்போகிறான்;  பாவியின்  ஆஸ்தியோ  நீதிமானுக்காகச்  சேர்த்துவைக்கப்படும்.  {Prov  13:22}

 

ஏழைகளின்  வயல்  மிகுதியான  ஆகாரத்தை  விளைவிக்கும்;  நியாயம்  கிடையாமல்  கெட்டுப்போகிறவர்களும்  உண்டு.  {Prov  13:23}

 

பிரம்பைக்  கையாடாதவன்  தன்  மகனைப்  பகைக்கிறான்;  அவன்மேல்  அன்பாயிருக்கிறவனோ  அவனை  ஏற்கனவே  தண்டிக்கிறான்.  {Prov  13:24}

 

நீதிமான்  தனக்குத்  திருப்தியாகப்  புசிக்கிறான்;  துன்மார்க்கருடைய  வயிறோ  பசித்திருக்கும்.  {Prov  13:25}

 

புத்தியுள்ள  ஸ்திரீ  தன்  வீட்டைக்  கட்டுகிறாள்;  புத்தியில்லாத  ஸ்திரீயோ  தன்  கைகளினால்  அதை  இடித்துப்போடுகிறாள்.  {Prov  14:1}

 

நிதானமாய்  நடக்கிறவன்  கர்த்தருக்குப்  பயப்படுகிறான்;  தன்  வழிகளில்  தாறுமாறானவனோ  அவரை  அலட்சியம்பண்ணுகிறான்.  {Prov  14:2}

 

மூடன்  வாயிலே  அவன்  அகந்தைக்கேற்ற  மிலாறுண்டு;  ஞானவான்களின்  உதடுகளோ  அவர்களைக்  காப்பாற்றும்.  {Prov  14:3}

 

எருதுகளில்லாத  இடத்தில்  களஞ்சியம்  வெறுமையாயிருக்கும்;  காளைகளின்  பெலத்தினாலோ  மிகுந்த  வரத்துண்டு.  {Prov  14:4}

 

மெய்ச்சாட்சிக்காரன்  பொய்சொல்லான்;  பொய்ச்சாட்சிக்காரனோ  பொய்களை  ஊதுகிறான்.  {Prov  14:5}

 

பரியாசக்காரன்  ஞானத்தைத்  தேடியும்  கண்டுபிடியான்;  புத்தியுள்ளவனுக்கோ  அறிவு  லேசாய்  வரும்.  {Prov  14:6}

 

மூடனுடைய  முகத்துக்கு  விலகிப்போ;  அறிவுள்ள  உதடுகளை  அங்கே  காணாய்.  {Prov  14:7}

 

தன்  வழியைச்  சிந்தித்துக்கொள்வது  விவேகியின்  ஞானம்;  மூடர்களுடைய  வஞ்சனையோ  மூடத்தனம்.  {Prov  14:8}

 

மூடர்  பாவத்தைக்குறித்துப்  பரியாசம்பண்ணுகிறார்கள்;  நீதிமான்களுக்குள்ளே  தயை  உண்டு.  {Prov  14:9}

 

இருதயத்தின்  கசப்பு  இருதயத்திற்கே  தெரியும்;  அதின்  மகிழ்ச்சிக்கு  அந்நியன்  உடந்தையாகான்.  {Prov  14:10}

 

துன்மார்க்கனுடைய  வீடு  அழியும்;  செம்மையானவனுடைய  கூடாரமோ  செழிக்கும்.  {Prov  14:11}

 

மனுஷனுக்குச்  செம்மையாய்த்  தோன்றுகிற  வழி  உண்டு;  அதின்  முடிவோ  மரண  வழிகள்.  {Prov  14:12}

 

நகைப்பிலும்  மனதுக்குத்  துக்கமுண்டு;  அந்த  மகிழ்ச்சியின்  முடிவு  சஞ்சலம்.  {Prov  14:13}

 

பின்வாங்கும்  இருதயமுள்ளவன்  தன்  வழிகளிலேயும்,  நல்ல  மனுஷனோ  தன்னிலே  தானும்  திருப்தியடைவான்.  {Prov  14:14}

 

பேதையானவன்  எந்த  வார்த்தையையும்  நம்புவான்;  விவேகியோ  தன்  நடையின்மேல்  கவனமாயிருக்கிறான்.  {Prov  14:15}

 

ஞானமுள்ளவன்  பயந்து  தீமைக்கு  விலகுகிறான்;  மதியீனனோ  மூர்க்கங்கொண்டு  துணிகரமாயிருக்கிறான்.  {Prov  14:16}

 

முற்கோபி  மதிகேட்டைச்  செய்வான்;  துர்ச்சிந்தனைக்காரன்  வெறுக்கப்படுவான்.  {Prov  14:17}

 

பேதையர்  புத்தியீனத்தைச்  சுதந்தரிக்கிறார்கள்;  விவேகிகளோ  அறிவினால்  முடிசூட்டப்படுகிறார்கள்.  {Prov  14:18}

 

தீயோர்  நல்லோருக்கு  முன்பாகவும்,  துன்மார்க்கர்  நீதிமான்களுடைய  வாசற்படிகளிலும்  குனிவதுண்டு.  {Prov  14:19}

 

தரித்திரன்  தனக்கடுத்தவனாலும்  பகைக்கப்படுகிறான்;  ஐசுவரியவானுக்கோ  அநேக  சிநேகிதருண்டு.  {Prov  14:20}

 

பிறனை  அவமதிக்கிறவன்  பாவஞ்செய்கிறான்;  தரித்திரனுக்கு  இரங்குகிறவனோ  பாக்கியமடைவான்.  {Prov  14:21}

 

தீமையை  யோசிக்கிறவர்கள்  தவறுகிறார்களல்லவோ?  நன்மையை  யோசிக்கிறவர்களுக்கோ  கிருபையும்  சத்தியமுமுண்டு.  {Prov  14:22}

 

சகல  பிரயாசத்தினாலும்  பிரயோஜனமுண்டு;  உதடுகளின்  பேச்சோ  வறுமையை  மாத்திரம்  தரும்.  {Prov  14:23}

 

ஞானிகளுக்கு  முடி  அவர்கள்  செல்வம்;  மூடரின்  மதியீனம்  மூடத்தனமே.  {Prov  14:24}

 

மெய்ச்சாட்சி  சொல்லுகிறவன்  உயிர்களை  இரட்சிக்கிறான்;  வஞ்சனைக்காரனோ  பொய்களை  ஊதுகிறான்.  {Prov  14:25}

 

கர்த்தருக்குப்  பயப்படுகிறவனுக்குத்  திடநம்பிக்கை  உண்டு;  அவன்  பிள்ளைகளுக்கும்  அடைக்கலம்  கிடைக்கும்.  {Prov  14:26}

 

கர்த்தருக்குப்  பயப்படுதல்  ஜீவஊற்று;  அதினால்  மரணக்கண்ணிகளுக்குத்  தப்பலாம்.  {Prov  14:27}

 

ஜனத்திரட்சி  ராஜாவின்  மகிமை;  ஜனக்குறைவு  தலைவனின்  முறிவு.  {Prov  14:28}

 

நீடிய  சாந்தமுள்ளவன்  மகாபுத்திமான்;  முற்கோபியோ  புத்தியீனத்தை  விளங்கப்பண்ணுகிறான்.  {Prov  14:29}

 

சொஸ்தமனம்  உடலுக்கு  ஜீவன்;  பொறாமையோ  எலும்புருக்கி.  {Prov  14:30}

 

தரித்திரனை  ஒடுக்குகிறவன்  அவனை  உண்டாக்கினவரை  நிந்திக்கிறான்;  தரித்திரனுக்குத்  தயைசெய்கிறவனோ  அவரைக்  கனம்பண்ணுகிறான்.  {Prov  14:31}

 

துன்மார்க்கன்  தன்  தீமையிலே  வாரிக்கொள்ளப்படுவான்;  நீதிமானோ  தன்  மரணத்திலே  நம்பிக்கையுள்ளவன்.  {Prov  14:32}

 

புத்திமானுடைய  இருதயத்தில்  ஞானம்  தங்கும்;  மதியீனரிடத்தில்  உள்ளதோ  வெளிப்படும்.  {Prov  14:33}

 

நீதி  ஜனத்தை  உயர்த்தும்;  பாவமோ  எந்த  ஜனத்துக்கும்  இகழ்ச்சி.  {Prov  14:34}

 

ராஜாவின்  தயை  விவேகமுள்ள  பணிவிடைக்காரன்மேலிருக்கும்;  அவனுடைய  கோபமோ  இலச்சையுண்டாக்குகிறவன்  மேலிருக்கும்.  {Prov  14:35}

 

மெதுவான  பிரதியுத்தரம்  உக்கிரத்தை  மாற்றும்;  கடுஞ்சொற்களோ  கோபத்தை  எழுப்பும்.  {Prov  15:1}

 

ஞானிகளின்  நாவு  அறிவை  உபயோகப்படுத்தும்;  மூடரின்  வாயோ  புத்தியீனத்தைக்  கக்கும்.  {Prov  15:2}

 

கர்த்தரின்  கண்கள்  எவ்விடத்திலுமிருந்து,  நல்லோரையும்  தீயோரையும்  நோக்கிப்பார்க்கிறது.  {Prov  15:3}

 

ஆரோக்கியமுள்ள  நாவு  ஜீவவிருட்சம்;  நாவின்  மாறுபாடோ  ஆவியை  நொறுக்கும்.  {Prov  15:4}

 

மூடன்  தன்  தகப்பன்  புத்தியை  அலட்சியம்பண்ணுகிறான்;  கடிந்துகொள்ளுதலைக்  கவனித்து  நடக்கிறவனோ  விவேகி.  {Prov  15:5}

 

நீதிமானுடைய  வீட்டில்  அதிக  பொக்கிஷமுண்டு;  துன்மார்க்கனுடைய  வருமானத்திலோ  துன்பமுண்டு.  {Prov  15:6}

 

ஞானிகளின்  உதடுகள்  அறிவை  இறைக்கும்;  மூடரின்  இருதயமோ  அப்படியல்ல.  {Prov  15:7}

 

துன்மார்க்கருடைய  பலி  கர்த்தருக்கு  அருவருப்பானது;  செம்மையானவர்களின்  ஜெபமோ  அவருக்குப்  பிரியம்.  {Prov  15:8}

 

துன்மார்க்கனுடைய  வழி  கர்த்தருக்கு  அருவருப்பானது;  நீதியைப்  பின்பற்றுகிறவனையோ  அவர்  நேசிக்கிறார்.  {Prov  15:9}

 

வழியை  விட்டு  விலகுகிறவனுக்குப்  புத்திமதி  விசனமாயிருக்கும்;  கடிந்துகொள்ளுதலை  வெறுக்கிறவன்  சாவான்.  {Prov  15:10}

 

பாதாளமும்  அழிவும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பிரத்தியட்சமாயிருக்க,  மனுபுத்திரருடைய  இருதயம்  அதிக  பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?  {Prov  15:11}

 

பரியாசக்காரன்  தன்னைக்  கடிந்துகொள்ளுகிறவனை  நேசியான்;  ஞானவான்களிடத்தில்  போகவுமாட்டான்.  {Prov  15:12}

 

மனமகிழ்ச்சி  முகமலர்ச்சியைத்  தரும்;  மனோதுக்கத்தினாலே  ஆவி  முறிந்துபோம்.  {Prov  15:13}

 

புத்திமானுடைய  மனம்  அறிவைத்  தேடும்;  மூடரின்  வாயோ  மதியீனத்தை  மேயும்.  {Prov  15:14}

 

சிறுமைப்பட்டவனுடைய  நாட்களெல்லாம்  தீங்குள்ளவைகள்;  மனரம்மியமோ  நித்திய  விருந்து.  {Prov  15:15}

 

சஞ்சலத்தோடு  கூடிய  அதிகப்பொருளிலும்,  கர்த்தரைப்  பற்றும்  பயத்தோடு  கூடிய  கொஞ்சப்பொருளே  உத்தமம்.  {Prov  15:16}

 

பகையோடிருக்கும்  கொழுத்த  எருதின்  கறியைப்பார்க்கிலும்,  சிநேகத்தோடிருக்கும்  இலைக்கறியே  நல்லது.  {Prov  15:17}

 

கோபக்காரன்  சண்டையை  எழுப்புகிறான்;  நீடியசாந்தமுள்ளவனோ  சண்டையை  அமர்த்துகிறான்.  {Prov  15:18}

 

சோம்பேறியின்  வழி  முள்வேலிக்குச்  சமானம்;  நீதிமானுடைய  வழியோ  ராஜபாதை.  {Prov  15:19}

 

ஞானமுள்ள  மகன்  தகப்பனைச்  சந்தோஷப்படுத்துகிறான்;  மதியற்ற  மனுஷனோ  தன்  தாயை  அலட்சியம்பண்ணுகிறான்.  {Prov  15:20}

 

மூடத்தனம்  புத்தியீனனுக்குச்  சந்தோஷம்;  புத்திமானோ  தன்  நடக்கையைச்  செம்மைப்படுத்துகிறான்.  {Prov  15:21}

 

ஆலோசனையில்லாமையால்  எண்ணங்கள்  சித்தியாமற்போம்;  ஆலோசனைக்காரர்  அநேகர்  இருந்தால்  அவைகள்  உறுதிப்படும்.  {Prov  15:22}

 

மனுஷனுக்குத்  தன்  வாய்மொழியினால்  மகிழ்ச்சியுண்டாகும்;  ஏற்றகாலத்தில்  சொன்ன  வார்த்தை  எவ்வளவு  நல்லது!  {Prov  15:23}

 

கீழான  பாதாளத்தை  விட்டு  விலகும்படி,  விவேகிக்கு  ஜீவவழியானது  உன்னதத்தை  நோக்கும்  வழியாம்.  {Prov  15:24}

 

அகங்காரியின்  வீட்டைக்  கர்த்தர்  பிடுங்கிப்போடுவார்;  விதவையின்  எல்லையையோ  நிலைப்படுத்துவார்.  {Prov  15:25}

 

துன்மார்க்கருடைய  நினைவுகள்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்;  சுத்தவான்களுடைய  வார்த்தைகளோ  இன்பமானவைகள்.  {Prov  15:26}

 

பொருளாசைக்காரன்  தன்  வீட்டைக்  கலைக்கிறான்;  பரிதானங்களை  வெறுக்கிறவனோ  பிழைப்பான்.  {Prov  15:27}

 

நீதிமானுடைய  மனம்  பிரதியுத்தரம்  சொல்ல  யோசிக்கும்;  துன்மார்க்கனுடைய  வாயோ  தீமைகளைக்  கொப்பளிக்கும்.  {Prov  15:28}

 

துன்மார்க்கருக்குக்  கர்த்தர்  தூரமாயிருக்கிறார்;  நீதிமான்களின்  ஜெபத்தையோ  கேட்கிறார்.  {Prov  15:29}

 

கண்களின்  ஒளி  இருதயத்தைப்  பூரிப்பாக்கும்;  நற்செய்தி  எலும்புகளைப்  புஷ்டியாக்கும்.  {Prov  15:30}

 

ஜீவனுக்கேதுவான  கடிந்துகொள்ளுதலை  ஏற்றுக்கொள்ளும்  காது  ஞானிகளிடத்தே  தங்கும்.  {Prov  15:31}

 

புத்திமதியைத்  தள்ளிவிடுகிறவன்  தன்  ஆத்துமாவை  வெறுக்கிறான்;  கடிந்துகொள்ளுதலைக்  கேட்கிறவனோ  ஞானமடைவான்.  {Prov  15:32}

 

கர்த்தருக்குப்  பயப்படுதல்  ஞானத்தைப்  போதிக்கும்;  மேன்மைக்கு  முன்னானது  தாழ்மை.  {Prov  15:33}

 

மனதின்  யோசனைகள்  மனுஷனுடையது;  நாவின்  பிரதியுத்தரம்  கர்த்தரால்  வரும்.  {Prov  16:1}

 

மனுஷனுடைய  வழிகளெல்லாம்  அவன்  பார்வைக்குச்  சுத்தமானவைகள்;  கர்த்தரோ  ஆவிகளை  நிறுத்துப்பார்க்கிறார்.  {Prov  16:2}

 

உன்  செய்கைகளைக்  கர்த்தருக்கு  ஒப்புவி;  அப்பொழுது  உன்  யோசனைகள்  உறுதிப்படும்.  {Prov  16:3}

 

கர்த்தர்  சகலத்தையும்  தமக்கென்று  படைத்தார்;  தீங்குநாளுக்காகத்  துன்மார்க்கனையும்  உண்டாக்கினார்.  {Prov  16:4}

 

மனமேட்டிமையுள்ளவனெவனும்  கர்த்தருக்கு  அருவருப்பானவன்;  கையோடே  கைகோர்த்தாலும்  அவன்  தண்டனைக்குத்  தப்பான்.  {Prov  16:5}

 

கிருபையினாலும்  சத்தியத்தினாலும்  பாவம்  நிவிர்த்தியாகும்;  கர்த்தருக்குப்  பயப்படுகிறதினால்  மனுஷர்  தீமையை  விட்டு  விலகுவார்கள்.  {Prov  16:6}

 

ஒருவனுடைய  வழிகள்  கர்த்தருக்குப்  பிரியமாயிருந்தால்,  அவனுடைய  சத்துருக்களும்  அவனோடே  சமாதானமாகும்படி  செய்வார்.  {Prov  16:7}

 

அநியாயமாய்  வந்த  அதிக  வருமானத்திலும்,  நியாயமாய்  வந்த  கொஞ்ச  வருமானமே  உத்தமம்.  {Prov  16:8}

 

மனுஷனுடைய  இருதயம்  அவனுடைய  வழியை  யோசிக்கும்;  அவனுடைய  நடைகளை  உறுதிப்படுத்துகிறவரோ  கர்த்தர்.  {Prov  16:9}

 

ராஜாவின்  உதடுகளில்  திவ்விய  வாக்கு  பிறக்கும்;  நியாயத்தில்  அவன்  வாய்  தவறாது.  {Prov  16:10}

 

சுமுத்திரையான  நிறைகோலும்  தராசும்  கர்த்தருடையது;  பையிலிருக்கும்  நிறைகல்லெல்லாம்  அவருடைய  செயல்.  {Prov  16:11}

 

அநியாயஞ்செய்வது  ராஜாக்களுக்கு  அருவருப்பு;  நீதியினால்  சிங்காசனம்  உறுதிப்படும்.  {Prov  16:12}

 

நீதியுள்ள  உதடுகள்  ராஜாக்களுக்குப்  பிரியம்;  நிதானமாய்ப்  பேசுகிறவனில்  ராஜாக்கள்  பிரியப்படுவார்கள்.  {Prov  16:13}

 

ராஜாவின்  கோபம்  மரணதூதருக்குச்  சமானம்;  ஞானமுள்ளவனோ  அதை  ஆற்றுவான்.  {Prov  16:14}

 

ராஜாவின்  முகக்களையில்  ஜீவன்  உண்டு;  அவனுடைய  தயை  பின்மாரி  பெய்யும்  மேகத்தைப்போல்  இருக்கும்.  {Prov  16:15}

 

பொன்னைச்  சம்பாதிப்பதிலும்  ஞானத்தைச்  சம்பாதிப்பது  எவ்வளவு  உத்தமம்!  வெள்ளியைச்  சம்பாதிப்பதிலும்  புத்தியைச்  சம்பாதிப்பது  எவ்வளவு  மேன்மை!  {Prov  16:16}

 

தீமையை  விட்டு  விலகுவதே  செம்மையானவர்களுக்குச்  சமனான  பாதை;  தன்  நடையைக்  கவனித்திருக்கிறவன்  தன்  ஆத்துமாவைக்  காக்கிறான்.  {Prov  16:17}

 

அழிவுக்கு  முன்னானது  அகந்தை;  விழுதலுக்கு  முன்னானது  மனமேட்டிமை.  {Prov  16:18}

 

அகங்காரிகளோடே  கொள்ளைப்  பொருளைப்  பங்கிடுவதைப்பார்க்கிலும்,  சிறுமையானவர்களோடே  மனத்தாழ்மையாயிருப்பது  நலம்.  {Prov  16:19}

 

விவேகத்துடன்  காரியத்தை  நடப்பிக்கிறவன்  நன்மைபெறுவான்;  கர்த்தரை  நம்புகிறவன்  பாக்கியவான்.  {Prov  16:20}

 

இருதயத்தில்  ஞானமுள்ளவன்  விவேகியென்னப்படுவான்;  உதடுகளின்  மதுரம்  கல்வியைப்  பெருகப்பண்ணும்.  {Prov  16:21}

 

புத்தி  தன்னை  உடையவர்களுக்கு  ஜீவ  ஊற்று;  மதியீனரின்  போதனை  மதியீனமே.  {Prov  16:22}

 

ஞானியின்  இருதயம்  அவன்  வாய்க்கு  அறிவையூட்டும்;  அவன்  உதடுகளுக்கு  அது  மேன்மேலும்  கல்வியைக்  கொடுக்கும்.  {Prov  16:23}

 

இனிய  சொற்கள்  தேன்கூடுபோல்  ஆத்துமாவுக்கு  மதுரமும்,  எலும்புகளுக்கு  ஔஷதமுமாகும்.  {Prov  16:24}

 

மனுஷனுக்குச்  செம்மையாய்த்  தோன்றுகிற  வழியுண்டு;  அதின்  முடிவோ  மரண  வழிகள்.  {Prov  16:25}

 

பிரயாசப்படுகிறவன்  தனக்காகவே  பிரயாசப்படுகிறான்;  அவன்  வாய்  அதை  அவனிடத்தில்  வருந்திக்  கேட்கும்.  {Prov  16:26}

 

பேலியாளின்<Belial>  மகன்  கிண்டிவிடுகிறான்;  எரிகிற  அக்கினிபோன்றது  அவன்  உதடுகளில்  இருக்கிறது.  {Prov  16:27}

 

மாறுபாடுள்ளவன்  சண்டையைக்  கிளப்பிவிடுகிறான்;  கோள்  சொல்லுகிறவன்  பிராணசிநேகிதரையும்  பிரித்துவிடுகிறான்.  {Prov  16:28}

 

கொடுமையானவன்  தன்  அயலானுக்கு  நயங்காட்டி,  அவனை  நலமல்லாத  வழியிலே  நடக்கப்பண்ணுகிறான்.  {Prov  16:29}

 

அவன்  மாறுபாடானவைகளை  யோசிக்கும்படி  தன்  கண்களை  மூடி,  தீமையைச்  செய்யும்படி  தன்  உதடுகளைக்  கடிக்கிறான்.  {Prov  16:30}

 

நீதியின்  வழியில்  உண்டாகும்  நரைமயிரானது  மகிமையான  கிரீடம்.  {Prov  16:31}

 

பலவானைப்பார்க்கிலும்  நீடிய  சாந்தமுள்ளவன்  உத்தமன்;  பட்டணத்தைப்  பிடிக்கிறவனைப்பார்க்கிலும்  தன்  மனதை  அடக்குகிறவன்  உத்தமன்.  {Prov  16:32}

 

சீட்டு  மடியிலே  போடப்படும்;  காரியசித்தியோ  கர்த்தரால்  வரும்.  {Prov  16:33}

 

சண்டையோடு  கூடிய  வீடுநிறைந்த  கொழுமையான  பதார்த்தங்களைப்பார்க்கிலும்,  அமரிக்கையோடே  சாப்பிடும்  வெறும்  துணிக்கையே  நலம்.  {Prov  17:1}

 

புத்தியுள்ள  வேலைக்காரன்  இலச்சையுண்டாக்குகிற  புத்திரனை  ஆண்டு,  சகோதரருக்குள்ள  சுதந்தரத்தில்  பங்கடைவான்.  {Prov  17:2}

 

வெள்ளியைக்  குகையும்,  பொன்னைப்  புடமும்  சோதிக்கும்;  இருதயங்களைச்  சோதிக்கிறவரோ  கர்த்தர்.  {Prov  17:3}

 

துஷ்டன்  அக்கிரம  உதடுகள்  சொல்வதை  உற்றுக்கேட்கிறான்;  பொய்யன்  கேடுள்ள  நாவுக்குச்  செவிகொடுக்கிறான்.  {Prov  17:4}

 

ஏழையைப்  பரியாசம்பண்ணுகிறவன்  அவனை  உண்டாக்கினவரை  நிந்திக்கிறான்;  ஆபத்தைக்குறித்துக்  களிக்கிறவன்  தண்டனைக்குத்  தப்பான்.  {Prov  17:5}

 

பிள்ளைகளின்  பிள்ளைகள்  முதியோருக்குக்  கிரீடம்;  பிள்ளைகளின்  மேன்மை  அவர்கள்  பிதாக்களே.  {Prov  17:6}

 

மேன்மையானவைகளைப்  பேசும்  உதடு  மூடனுக்குத்  தகாது;  பொய்  பேசும்  உதடு  பிரபுவுக்கு  எவ்வளவேனும்  தகாது.  {Prov  17:7}

 

பரிதானம்  வாங்குகிறவர்களின்  பார்வைக்கு  அது  இரத்தினம்போலிருக்கும்;  அது  நோக்கும்  திசையெல்லாம்  காரியம்  வாய்க்கும்.  {Prov  17:8}

 

குற்றத்தை  மூடுகிறவன்  சிநேகத்தை  நாடுகிறான்;  கேட்டதைச்  சொல்லுகிறவன்  பிராணசிநேகிதரையும்  பிரித்துவிடுகிறான்.  {Prov  17:9}

 

மூடனை  நூறடி  அடிப்பதைப்பார்க்கிலும்,  புத்திமானை  வாயினால்  கண்டிப்பதே  அதிகமாய்  உறைக்கும்.  {Prov  17:10}

 

துஷ்டன்  கலகத்தையே  தேடுகிறான்;  குரூரதூதன்  அவனுக்கு  விரோதமாக  அனுப்பப்படுவான்.  {Prov  17:11}

 

தன்  மதிகேட்டில்  திரியும்  மதியீனனுக்கு  எதிர்ப்படுவதைப்பார்க்கிலும்,  குட்டிகளைப்  பறிகொடுத்த  கரடிக்கு  எதிர்ப்படுவது  வாசி.  {Prov  17:12}

 

நன்மைக்குத்  தீமைசெய்கிறவன்  எவனோ,  அவன்  வீட்டைவிட்டுத்  தீமை  நீங்காது.  {Prov  17:13}

 

சண்டையின்  ஆரம்பம்  மதகைத்  திறந்துவிடுகிறதுபோலிருக்கும்;  ஆதலால்  விவாதம்  எழும்புமுன்  அதை  விட்டுவிடு.  {Prov  17:14}

 

துன்மார்க்கனை  நீதிமானாக்குகிறவனும்,  நீதிமானைக்  குற்றவாளியாக்குகிறவனுமாகிய  இவ்விருவரும்  கர்த்தருக்கு  அருவருப்பானவர்கள்.  {Prov  17:15}

 

ஞானத்தைக்  கொள்ளும்படி  மூடன்  கையிலே  ரொக்கம்  என்னத்திற்கு?  அதின்மேல்  அவனுக்கு  மனமில்லையே.  {Prov  17:16}

 

சிநேகிதன்  எல்லாக்  காலத்திலும்  சிநேகிப்பான்;  இடுக்கணில்  உதவவே  சகோதரன்  பிறந்திருக்கிறான்.  {Prov  17:17}

 

புத்தியீனன்  தன்  சிநேகிதனுக்கு  முன்பாகக்  கையடித்துக்கொடுத்துப்  பிணைப்படுகிறான்.  {Prov  17:18}

 

வாதுப்பிரியன்  பாதகப்பிரியன்;  தன்  வாசலை  உயர்த்திக்  கட்டுகிறவன்  அழிவை  நாடுகிறான்.  {Prov  17:19}

 

மாறுபாடான  இருதயமுள்ளவன்  நன்மையைக்  கண்டடைவதில்லை;  புரட்டு  நாவுள்ளவன்  தீமையில்  விழுவான்.  {Prov  17:20}

 

மூடபுத்திரனைப்  பெறுகிறவன்  தனக்குச்  சஞ்சலமுண்டாக  அவனைப்  பெறுகிறான்;  மதியீனனுடைய  தகப்பனுக்கு  மகிழ்ச்சியில்லை.  {Prov  17:21}

 

மனமகிழ்ச்சி  நல்ல  ஔஷதம்;  முறிந்த  ஆவியோ  எலும்புகளை  உலரப்பண்ணும்.  {Prov  17:22}

 

துன்மார்க்கன்,  நீதியின்  வழியைப்  புரட்ட,  மடியிலுள்ள  பரிதானத்தை  வாங்குகிறான்.  {Prov  17:23}

 

ஞானம்  புத்திமானுக்கு  முன்பாக  இருக்கும்;  மூடனுடைய  கண்களோ  பூமியின்  கடையாந்தரங்களில்  செல்லும்.  {Prov  17:24}

 

மூடபுத்திரன்  தன்  பிதாவுக்குச்  சலிப்பும்,  தன்னைப்  பெற்றவர்களுக்குக்  கசப்புமானவன்.  {Prov  17:25}

 

நீதிமானைத்  தண்டம்பிடிக்கிறதும்,  நியாயஞ்செய்கிறவனைப்  பிரபுக்கள்  அடிக்கிறதும்  தகுதியல்ல.  {Prov  17:26}

 

அறிவாளி  தன்  வார்த்தைகளை  அடக்குகிறான்;  விவேகி  குளிர்ந்த  மனமுள்ளவன்.  {Prov  17:27}

 

பேசாதிருந்தால்  மூடனும்  ஞானவான்  என்று  எண்ணப்படுவான்;  தன்  உதடுகளை  மூடுகிறவன்  புத்திமான்  என்று  எண்ணப்படுவான்.  {Prov  17:28}

 

பிரிந்துபோகிறவன்  தன்  இச்சையின்படி  செய்யப்பார்க்கிறான்,  எல்லா  ஞானத்திலும்  தலையிட்டுக்கொள்ளுகிறான்.  {Prov  18:1}

 

மூடன்  ஞானத்தில்  பிரியங்கொள்ளாமல்,  தன்  மனதிலுள்ளவைகளை  வெளிப்படுத்தப்  பிரியப்படுகிறான்.  {Prov  18:2}

 

துன்மார்க்கன்  வர  அவமானம்  வரும்;  அவமானத்தோடே  நிந்தையும்  வரும்.  {Prov  18:3}

 

மனுஷனுடைய  வாய்மொழிகள்  ஆழமான  ஜலம்போலிருக்கும்;  ஞானத்தின்  ஊற்று  பாய்கிற  ஆற்றைப்போலிருக்கும்.  {Prov  18:4}

 

வழக்கிலே  நீதிமானைத்  தோற்கடிக்கிறதற்கு,  துன்மார்க்கனுக்கு  முகதாட்சிணியம்பண்ணுவது  நல்லதல்ல.  {Prov  18:5}

 

மூடனுடைய  உதடுகள்  விவாதத்தில்  நுழையும்,  அவன்  வாய்  அடிகளை  வரவழைக்கும்.  {Prov  18:6}

 

மூடனுடைய  வாய்  அவனுக்குக்  கேடு,  அவன்  உதடுகள்  அவன்  ஆத்துமாவுக்குக்  கண்ணி.  {Prov  18:7}

 

கோள்காரனுடைய  வார்த்தைகள்  விளையாட்டுப்போலிருக்கும்,  ஆனாலும்  அவைகள்  உள்ளத்திற்குள்  தைக்கும்.  {Prov  18:8}

 

தன்  வேலையில்  அசதியாயிருப்பவன்  அழிம்பனுக்குச்  சகோதரன்.  {Prov  18:9}

 

கர்த்தரின்  நாமம்  பலத்த  துருகம்;  நீதிமான்  அதற்குள்  ஓடிச்  சுகமாயிருப்பான்.  {Prov  18:10}

 

ஐசுவரியவானுடைய  பொருள்  அவனுக்கு  அரணான  பட்டணம்;  அது  அவன்  எண்ணத்தில்  உயர்ந்த  மதில்போலிருக்கும்.  {Prov  18:11}

 

அழிவு  வருமுன்  மனுஷனுடைய  இருதயம்  இறுமாப்பாயிருக்கும்;  மேன்மைக்கு  முன்னானது  தாழ்மை.  {Prov  18:12}

 

காரியத்தைக்  கேட்குமுன்  உத்தரம்  சொல்லுகிறவனுக்கு,  அது  புத்தியீனமும்  வெட்கமுமாயிருக்கும்.  {Prov  18:13}

 

மனுஷனுடைய  ஆவி  அவன்  பலவீனத்தைத்  தாங்கும்;  முறிந்த  ஆவி  யாரால்  தாங்கக்கூடும்?  {Prov  18:14}

 

புத்திமானுடைய  மனம்  அறிவைச்  சம்பாதிக்கும்;  ஞானியின்  செவி  அறிவை  நாடும்.  {Prov  18:15}

 

ஒருவன்  கொடுக்கும்  வெகுமதி  அவனுக்கு  வழியுண்டாக்கி,  பெரியோர்களுக்கு  முன்பாக  அவனைக்  கொண்டுபோய்விடும்.  {Prov  18:16}

 

தன்  வழக்கிலே  முதல்பேசுகிறவன்  நீதிமான்போல்  காணப்படுவான்;  அவன்  அயலானோ  வந்து  அவனைப்  பரிசோதிக்கிறான்.  {Prov  18:17}

 

சீட்டுப்போடுதல்  விரோதங்களை  ஒழித்து,  பலவான்கள்  நடுவே  சிக்கறுக்கும்.  {Prov  18:18}

 

அரணான  பட்டணத்தை  வசப்படுத்துவதைப்பார்க்கிலும்  கோபங்கொண்ட  சகோதரனை  வசப்படுத்துவது  அரிது;  அவர்களுடைய  விரோதங்கள்  கோட்டைத்  தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.  {Prov  18:19}

 

அவனவன்  வாயின்  பலனால்  அவனவன்  வயிறு  நிரம்பும்;  அவனவன்  உதடுகளின்  விளைவினால்  அவனவன்  திருப்தியாவான்.  {Prov  18:20}

 

மரணமும்  ஜீவனும்  நாவின்  அதிகாரத்திலிருக்கும்;  அதில்  பிரியப்படுகிறவர்கள்  அதின்  கனியைப்  புசிப்பார்கள்.  {Prov  18:21}

 

மனைவியைக்  கண்டடைகிறவன்  நன்மையானதைக்  கண்டடைகிறான்;  கர்த்தரால்  தயையும்  பெற்றுக்கொள்ளுகிறான்.  {Prov  18:22}

 

தரித்திரன்  கெஞ்சிக்கேட்கிறான்;  ஐசுவரியவான்  கடினமாய்  உத்தரவு  கொடுக்கிறான்.  {Prov  18:23}

 

சிநேகிதருள்ளவன்  சிநேகம்  பாராட்டவேண்டும்;  சகோதரனிலும்  அதிக  சொந்தமாய்ச்  சிநேகிப்பவனுமுண்டு.  {Prov  18:24}

 

மாறுபாடான  உதடுகளுள்ள  மூடனைப்பார்க்கிலும்,  உத்தமனாய்  நடக்கிற  தரித்திரனே  வாசி.  {Prov  19:1}

 

ஆத்துமா  அறிவில்லாமலிருப்பது  நல்லதல்ல;  கால்  துரிதமானவன்  தப்பி  நடக்கிறான்.  {Prov  19:2}

 

மனுஷனுடைய  மதியீனம்  அவன்  வழியைத்  தாறுமாறாக்கும்;  என்றாலும்  அவன்  மனம்  கர்த்தருக்கு  விரோதமாய்த்  தாங்கலடையும்.  {Prov  19:3}

 

செல்வம்  அநேக  சிநேகிதரைச்  சேர்க்கும்;  தரித்திரனோ  தன்  சிநேகிதனாலும்  நெகிழப்படுவான்.  {Prov  19:4}

 

பொய்ச்சாட்சிக்காரன்  ஆக்கினைக்குத்  தப்பான்;  பொய்களைப்  பேசுகிறவனும்  தப்புவதில்லை.  {Prov  19:5}

 

பிரபுவின்  தயையை  அநேகர்  வருந்திக்  கேட்பார்கள்;  கொடைகொடுக்கிறவனுக்கு  எவனும்  சிநேகிதன்.  {Prov  19:6}

 

தரித்திரனை  அவனுடைய  சகோதரர்  எல்லாரும்  பகைக்கிறார்களே,  எத்தனை  அதிகமாய்  அவன்  சிநேகிதர்  அவனுக்குத்  தூரமாவார்கள்;  அவர்களுடைய  வார்த்தைகளை  அவன்  நாடுகிறான்,  அவைகளோ  வெறும்  வார்த்தைகளே.  {Prov  19:7}

 

ஞானத்தைப்  பெற்றுக்கொள்ளுகிறவன்  தன்  ஆத்துமாவைச்  சிநேகிக்கிறான்;  புத்தியைக்  காக்கிறவன்  நன்மையடைவான்.  {Prov  19:8}

 

பொய்ச்சாட்சிக்காரன்  ஆக்கினைக்குத்  தப்பான்;  பொய்களைப்  பேசுகிறவன்  நாசமடைவான்.  {Prov  19:9}

 

மூடனுக்குச்  செல்வம்  தகாது;  பிரபுக்களை  ஆண்டுகொள்வது  அடிமைக்கு  எவ்வளவும்  தகாது.  {Prov  19:10}

 

மனுஷனுடைய  விவேகம்  அவன்  கோபத்தை  அடக்கும்;  குற்றத்தை  மன்னிப்பது  அவனுக்கு  மகிமை.  {Prov  19:11}

 

ராஜாவின்  கோபம்  சிங்கத்தின்  கெர்ச்சிப்புக்குச்  சமானம்;  அவனுடைய  தயை  புல்லின்மேல்  பெய்யும்  பனிபோலிருக்கும்.  {Prov  19:12}

 

மூடனாகிய  மகன்  தன்  தகப்பனுக்கு  மிகுந்த  துக்கம்;  மனைவியின்  சண்டைகள்  ஓயாத  ஒழுக்கு.  {Prov  19:13}

 

வீடும்  ஆஸ்தியும்  பிதாக்கள்  வைக்கும்  சுதந்தரம்;  புத்தியுள்ள  மனைவியோ  கர்த்தர்  அருளும்  ஈவு.  {Prov  19:14}

 

சோம்பல்  தூங்கிவிழப்பண்ணும்;  அசதியானவன்  பட்டினியாயிருப்பான்.  {Prov  19:15}

 

கட்டளையைக்  காத்துக்கொள்ளுகிறவன்  தன்  ஆத்துமாவைக்  காக்கிறான்;  தன்  வழிகளை  அவமதிக்கிறவன்  சாவான்.  {Prov  19:16}

 

ஏழைக்கு  இரங்குகிறவன்  கர்த்தருக்குக்  கடன்கொடுக்கிறான்;  அவன்  கொடுத்ததை  அவர்  திரும்பக்  கொடுப்பார்.  {Prov  19:17}

 

நம்பிக்கையிருக்குமட்டும்  உன்  மகனைச்  சிட்சைசெய்;  ஆனாலும்  அவனைக்  கொல்ல  உன்  ஆத்துமாவை  எழும்பவொட்டாதே.  {Prov  19:18}

 

கடுங்கோபி  ஆக்கினைக்குள்ளாவான்;  நீ  அவனைத்  தப்புவித்தால்  திரும்பவும்  தப்புவிக்கவேண்டியதாய்  வரும்.  {Prov  19:19}

 

உன்  அந்தியகாலத்தில்  நீ  ஞானமுள்ளவனாயிருக்கும்படி,  ஆலோசனையைக்கேட்டு,  புத்திமதியை  ஏற்றுக்கொள்.  {Prov  19:20}

 

மனுஷனுடைய  இருதயத்தின்  எண்ணங்கள்  அநேகம்;  ஆனாலும்  கர்த்தருடைய  யோசனையே  நிலைநிற்கும்.  {Prov  19:21}

 

நன்மைசெய்ய  மனுஷன்  கொண்டிருக்கும்  ஆசையே  தயை;  பொய்யனைப்பார்க்கிலும்  தரித்திரன்  வாசி.  {Prov  19:22}

 

கர்த்தருக்குப்  பயப்படுதல்  ஜீவனுக்கேதுவானது;  அதை  அடைந்தவன்  திருப்தியடைந்து  நிலைத்திருப்பான்;  தீமை  அவனை  அணுகாது.  {Prov  19:23}

 

சோம்பேறி  தன்  கையைக்  கலத்திலே  வைத்து,  அதைத்  திரும்பத்  தன்  வாயண்டைக்கு  எடுக்காமலிருக்கிறான்.  {Prov  19:24}

 

பரியாசக்காரனை  அடி,  அப்பொழுது  பேதை  எச்சரிக்கப்படுவான்;  புத்திமானைக்  கடிந்துகொள்,  அவன்  அறிவுள்ளவனாவான்.  {Prov  19:25}

 

தன்  தகப்பனைக்  கொள்ளையடித்து,  தன்  தாயைத்  துரத்திவிடுகிறவன்,  இலச்சையையும்  அவமானத்தையும்  உண்டாக்குகிற  மகன்.  {Prov  19:26}

 

என்  மகனே,  அறிவைத்  தரும்  வார்த்தைகளை  விட்டு  விலகச்செய்யும்  போதகங்களை  நீ  கேளாதே.  {Prov  19:27}

 

பேலியாளின்<Belial>  சாட்சிக்காரன்  நியாயத்தை  நிந்திக்கிறான்;  துன்மார்க்கருடைய  வாய்  அக்கிரமத்தை  விழுங்கும்.  {Prov  19:28}

 

பரியாசக்காரருக்குத்  தண்டனைகளும்,  மூடருடைய  முதுகுக்கு  அடிகளும்  ஆயத்தமாயிருக்கிறது.  {Prov  19:29}

 

திராட்சரசம்  பரியாசஞ்செய்யும்,  மதுபானம்  அமளிபண்ணும்;  அதினால்  மயங்குகிற  ஒருவனும்  ஞானவானல்ல.  {Prov  20:1}

 

ராஜாவின்  உறுக்குதல்  சிங்கத்தின்  கெர்ச்சிப்புக்குச்  சமானம்;  அவனைக்  கோபப்படுத்துகிறவன்  தன்  பிராணனுக்கே  துரோகஞ்செய்கிறான்.  {Prov  20:2}

 

வழக்குக்கு  விலகுவது  மனுஷனுக்கு  மேன்மை;  மூடனானவன்  எவனும்  அதிலே  தலையிட்டுக்கொள்வான்.  {Prov  20:3}

 

சோம்பேறி  குளிருகிறதென்று  உழமாட்டான்;  அறுப்பிலே  பிச்சைகேட்டாலும்  அவனுக்கு  ஒன்றுங்கிடையாது.  {Prov  20:4}

 

மனுஷனுடைய  இருதயத்திலுள்ள  யோசனை  ஆழமான  தண்ணீர்போலிருக்கிறது;  புத்திமானோ  அதை  மொண்டெடுப்பான்.  {Prov  20:5}

 

மனுஷர்  பெரும்பாலும்  தங்கள்  தயாளத்தைப்  பிரசித்தப்படுத்துவார்கள்;  உண்மையான  மனுஷனைக்  கண்டுபிடிப்பவன்  யார்?  {Prov  20:6}

 

நீதிமான்  தன்  உத்தமத்திலே  நடக்கிறான்;  அவனுக்குப்பிறகு  அவன்  பிள்ளைகளும்  பாக்கியவான்களாயிருப்பார்கள்.  {Prov  20:7}

 

நியாயாசனத்தில்  வீற்றிருக்கும்  ராஜா  தன்  கண்களினால்  சகல  பொல்லாப்பையும்  சிதறப்பண்ணுகிறான்.  {Prov  20:8}

 

என்  இருதயத்தைச்  சுத்தமாக்கினேன்,  என்  பாவமறத்  துப்புரவானேன்  என்று  சொல்லத்தக்கவன்  யார்?  {Prov  20:9}

 

வெவ்வேறான  நிறைகல்லும்,  வெவ்வேறான  மரக்காலும்  ஆகிய  இவ்விரண்டும்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்.  {Prov  20:10}

 

பிள்ளையானாலும்,  அதின்  செய்கை  சுத்தமோ  செம்மையோ  என்பது,  அதின்  நடக்கையினால்  விளங்கும்.  {Prov  20:11}

 

கேட்கிற  காதும்,  காண்கிற  கண்ணும்  ஆகிய  இவ்விரண்டையும்  கர்த்தர்  உண்டாக்கினார்.  {Prov  20:12}

 

தூக்கத்தை  விரும்பாதே,  விரும்பினால்  தரித்திரனாவாய்;  கண்விழித்திரு,  அப்பொழுது  ஆகாரத்தினால்  திருப்தியாவாய்.  {Prov  20:13}

 

கொள்ளுகிறவன்:  நல்லதல்ல,  நல்லதல்ல  என்பான்;  போய்விட்டபின்போ  மெச்சிக்கொள்வான்.  {Prov  20:14}

 

பொன்னும்  மிகுதியான  முத்துக்களும்  உண்டு;  அறிவுள்ள  உதடுகளோ  விலையுயர்ந்த  இரத்தினம்.  {Prov  20:15}

 

அந்நியனுக்காகப்  பிணைப்பட்டவனுடைய  வஸ்திரத்தை  எடுத்துக்கொள்;  அந்நிய  ஸ்திரீயினிமித்தம்  அவன்  கையில்  ஈடு  வாங்கிக்கொள்.  {Prov  20:16}

 

வஞ்சனையினால்  வந்த  போஜனம்  மனுஷனுக்கு  இன்பமாயிருக்கும்;  பின்போ  அவனுடைய  வாய்  பருக்கைக்கற்களால்  நிரப்பப்படும்.  {Prov  20:17}

 

ஆலோசனையினால்  எண்ணங்கள்  ஸ்திரப்படும்;  நல்யோசனை  செய்து  யுத்தம்பண்ணு.  {Prov  20:18}

 

தூற்றிக்கொண்டு  திரிகிறவன்  இரகசியங்களை  வெளிப்படுத்துவான்;  ஆதலால்  தன்  உதடுகளினால்  அலப்புகிறவனோடே  கலவாதே.  {Prov  20:19}

 

தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  தூஷிக்கிறவனுடைய  தீபம்  காரிருளில்  அணைந்துபோம்.  {Prov  20:20}

 

ஆரம்பத்திலே  துரிதமாகக்  கிடைத்த  சுதந்தரம்  முடிவிலே  ஆசீர்வாதம்  பெறாது.  {Prov  20:21}

 

தீமைக்குச்  சரிக்கட்டுவேன்  என்று  சொல்லாதே;  கர்த்தருக்குக்  காத்திரு,  அவர்  உன்னை  இரட்சிப்பார்.  {Prov  20:22}

 

வெவ்வேறான  நிறைகற்கள்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்;  கள்ளத்  தராசு  நல்லதல்ல.  {Prov  20:23}

 

கர்த்தராலே  மனுஷருடைய  நடைகள்  வாய்க்கும்;  ஆகையால்  மனுஷன்  தன்  வழியை  அறிந்துகொள்வதெப்படி?  {Prov  20:24}

 

பரிசுத்தமானதை  விழுங்குகிறதும்,  பொருத்தனை  செய்தபின்பு  யோசிக்கிறதும்,  மனுஷனுக்குக்  கண்ணியாயிருக்கும்.  {Prov  20:25}

 

ஞானமுள்ள  ராஜா  துன்மார்க்கரைச்  சிதறடித்து,  அவர்கள்மேல்  உருளையை  உருட்டுவான்.  {Prov  20:26}

 

மனுஷனுடைய  ஆவி  கர்த்தர்  தந்த  தீபமாயிருக்கிறது;  அது  உள்ளத்தில்  உள்ளவைகளையெல்லாம்  ஆராய்ந்துபார்க்கும்.  {Prov  20:27}

 

தயையும்  சத்தியமும்  ராஜாவைக்  காக்கும்;  தயையினாலே  தன்  சிங்காசனத்தை  நிற்கப்பண்ணுவான்.  {Prov  20:28}

 

வாலிபரின்  அலங்காரம்  அவர்கள்  பராக்கிரமம்;  முதிர்வயதானவர்களின்  மகிமை  அவர்கள்  நரை.  {Prov  20:29}

 

காயத்தின்  தழும்புகளும்,  உள்ளத்தில்  உறைக்கும்  அடிகளும்,  பொல்லாதவனை  அழுக்கறத்  துடைக்கும்.  {Prov  20:30}

 

ராஜாவின்  இருதயம்  கர்த்தரின்  கையில்  நீர்க்கால்களைப்போலிருக்கிறது;  அதைத்  தமது  சித்தத்தின்படி  அவர்  திருப்புகிறார்.  {Prov  21:1}

 

மனுஷனுடைய  வழியெல்லாம்  அவன்  பார்வைக்குச்  செம்மையாகத்  தோன்றும்;  கர்த்தரோ  இருதயங்களை  நிறுத்துப்பார்க்கிறார்.  {Prov  21:2}

 

பலியிடுவதைப்பார்க்கிலும்,  நீதியும்  நியாயமும்  செய்வதே  கர்த்தருக்குப்  பிரியம்.  {Prov  21:3}

 

மேட்டிமையான  பார்வையும்,  அகந்தையான  மனமுமுள்ள  துன்மார்க்கர்  போடும்  வெளிச்சம்  பாவமே.  {Prov  21:4}

 

ஜாக்கிரதையுள்ளவனுடைய  நினைவுகள்  செல்வத்துக்கும்,  பதறுகிறவனுடைய  நினைவுகள்  தரித்திரத்துக்கும்  ஏதுவாகும்.  {Prov  21:5}

 

பொய்நாவினால்  பொருளைச்  சம்பாதிப்பது  சாவைத்  தேடுகிறவர்கள்  விடுகிற  சுவாசம்போலிருக்கும்.  {Prov  21:6}

 

துன்மார்க்கர்  நியாயஞ்செய்ய  மனதில்லாதிருக்கிறபடியால்,  அவர்கள்  பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.  {Prov  21:7}

 

குற்றமுள்ளவன்  தன்  வழிகளில்  மாறுபாடுள்ளவன்;  சுத்தமுள்ளவனோ  தன்  கிரியையில்  செம்மையானவன்.  {Prov  21:8}

 

சண்டைக்காரியோடே  ஒரு  பெரிய  வீட்டில்  குடியிருப்பதைப்பார்க்கிலும்,  வீட்டின்மேல்  ஒரு  மூலையில்  தங்கியிருப்பதே  நலம்.  {Prov  21:9}

 

துன்மார்க்கனுடைய  மனம்  பொல்லாப்பைச்  செய்ய  விரும்பும்;  அவன்  கண்களில்  அவன்  அயலானுக்கு  இரக்கங்கிடையாது.  {Prov  21:10}

 

பரியாசக்காரனைத்  தண்டிக்கும்போது  பேதை  ஞானமடைவான்;  ஞானவான்  போதிக்கப்படும்போது  அறிவடைவான்.  {Prov  21:11}

 

நீதிபரர்  துன்மார்க்கருடைய  வீட்டைக்  கவனித்துப்பார்க்கிறார்;  துன்மார்க்கரைத்  தீங்கில்  கவிழ்த்துப்போடுவார்.  {Prov  21:12}

 

ஏழையின்  கூக்குரலுக்குத்  தன்  செவியை  அடைத்துக்கொள்ளுகிறவன்,  தானும்  சத்தமிட்டுக்  கூப்பிடும்போது  கேட்கப்படமாட்டான்.  {Prov  21:13}

 

அந்தரங்கமாய்க்  கொடுக்கப்பட்ட  வெகுமதி  கோபத்தைத்  தணிக்கும்;  மடியிலுள்ள  பரிதானம்  குரோதத்தை  ஆற்றும்.  {Prov  21:14}

 

நியாயந்தீர்ப்பது  நீதிமானுக்குச்  சந்தோஷமும்,  அக்கிரமக்காரருக்கோ  அழிவுமாம்.  {Prov  21:15}

 

விவேகத்தின்  வழியை  விட்டுத்  தப்பி  நடக்கிற  மனுஷன்  செத்தவர்களின்  கூட்டத்தில்  தாபரிப்பான்.  {Prov  21:16}

 

சிற்றின்பப்பிரியன்  தரித்திரனாவான்;  மதுபானத்தையும்  எண்ணெயையும்  விரும்புகிறவன்  ஐசுவரியவானாவதில்லை.  {Prov  21:17}

 

நீதிமானுக்குப்  பதிலாகத்  துன்மார்க்கனும்,  செம்மையானவனுக்குப்  பதிலாக  துரோகியும்  மீட்கும்பொருளாவார்கள்.  {Prov  21:18}

 

சண்டைக்காரியும்  கோபக்காரியுமான  ஸ்திரீயுடன்  குடியிருப்பதைப்பார்க்கிலும்  வனாந்தரத்தில்  குடியிருப்பது  நலம்.  {Prov  21:19}

 

வேண்டிய  திரவியமும்  எண்ணெயும்  ஞானவானுடைய  வாசஸ்தலத்தில்  உண்டு;  மூடனோ  அதைச்  செலவழித்துப்போடுகிறான்.  {Prov  21:20}

 

நீதியையும்  தயையையும்  பின்பற்றுகிறவன்  ஜீவனையும்  நீதியையும்  மகிமையையும்  கண்டடைவான்.  {Prov  21:21}

 

பலவான்களுடைய  பட்டணத்தின்  மதிலை  ஞானமுள்ளவன்  ஏறிப்பிடித்து,  அவர்கள்  நம்பின  அரணை  இடித்துப்போடுவான்.  {Prov  21:22}

 

தன்  வாயையும்  தன்  நாவையும்  காக்கிறவன்  தன்  ஆத்துமாவை  இடுக்கண்களுக்கு  விலக்கிக்  காக்கிறான்.  {Prov  21:23}

 

அகங்காரமும்  இடும்புமுள்ளவனுக்குப்  பரியாசக்காரனென்று  பெயர்,  அவன்  அகந்தையான  சினத்தோடே  நடக்கிறான்.  {Prov  21:24}

 

சோம்பேறியின்  கைகள்  வேலைசெய்யச்  சம்மதியாததினால்,  அவன்  ஆசை  அவனைக்  கொல்லும்.  {Prov  21:25}

 

அவன்  நாள்தோறும்  ஆவலுடன்  இச்சிக்கிறான்;  நீதிமானோ  பிசினித்தனமில்லாமல்  கொடுப்பான்.  {Prov  21:26}

 

துன்மார்க்கருடைய  பலி  அருவருப்பானது;  அதைத்  துர்ச்சிந்தையோடே  செலுத்தினாலோ  எத்தனை  அதிகமாய்  அருவருக்கப்படும்.  {Prov  21:27}

 

பொய்ச்சாட்சிக்காரன்  கெட்டுப்போவான்;  செவிகொடுக்கிறவனோ  எப்பொழுதும்  பேசத்தக்கவனாவான்.  {Prov  21:28}

 

துன்மார்க்கன்  தன்  முகத்தைக்  கடினப்படுத்துகிறான்;  செம்மையானவனோ  தன்  வழியை  நேர்ப்படுத்துகிறான்.  {Prov  21:29}

 

கர்த்தருக்கு  விரோதமான  ஞானமுமில்லை,  புத்தியுமில்லை,  ஆலோசனையுமில்லை.  {Prov  21:30}

 

குதிரை  யுத்தநாளுக்கு  ஆயத்தமாக்கப்படும்;  ஜெயமோ  கர்த்தரால்  வரும்.  {Prov  21:31}

 

திரளான  ஐசுவரியத்தைப்பார்க்கிலும்  நற்கீர்த்தியே  தெரிந்துகொள்ளப்படத்தக்கது;  பொன்  வெள்ளியைப்பார்க்கிலும்  தயையே  நலம்.  {Prov  22:1}

 

ஐசுவரியவானும்  தரித்திரனும்  ஒருவரையொருவர்  சந்திக்கிறார்கள்;  அவர்கள்  அனைவரையும்  உண்டாக்கினவர்  கர்த்தர்.  {Prov  22:2}

 

விவேகி  ஆபத்தைக்  கண்டு  மறைந்துகொள்ளுகிறான்;  பேதைகள்  நெடுகப்போய்த்  தண்டிக்கப்படுகிறார்கள்.  {Prov  22:3}

 

தாழ்மைக்கும்  கர்த்தருக்குப்  பயப்படுதலுக்கும்  வரும்  பலன்  ஐசுவரியமும்  மகிமையும்  ஜீவனுமாம்.  {Prov  22:4}

 

மாறுபாடுள்ளவனுடைய  வழியிலே  முள்ளுகளும்  கண்ணிகளுமுண்டு;  தன்  ஆத்துமாவைக்  காக்கிறவன்  அவைகளுக்குத்  தூரமாய்  விலகிப்போவான்.  {Prov  22:5}

 

பிள்ளையானவன்  நடக்கவேண்டிய  வழியிலே  அவனை  நடத்து;  அவன்  முதிர்வயதிலும்  அதை  விடாதிருப்பான்.  {Prov  22:6}

 

ஐசுவரியவான்  தரித்திரனை  ஆளுகிறான்;  கடன்வாங்கினவன்  கடன்கொடுத்தவனுக்கு  அடிமை.  {Prov  22:7}

 

அநியாயத்தை  விதைக்கிறவன்  வருத்தத்தை  அறுப்பான்;  அவன்  உக்கிரத்தின்  மிலாறு  ஒழியும்.  {Prov  22:8}

 

கருணைக்கண்ணன்  ஆசீர்வதிக்கப்படுவான்;  அவன்  தன்  ஆகாரத்தில்  தரித்திரனுக்குக்  கொடுக்கிறான்.  {Prov  22:9}

 

பரியாசக்காரனைத்  துரத்திவிடு;  அப்பொழுது  வாது  நீங்கும்,  விரோதமும்  அவமானமும்  ஒழியும்.  {Prov  22:10}

 

சுத்த  இருதயத்தை  விரும்புகிறவனுடைய  உதடுகள்  இனிமையானவைகள்;  ராஜா  அவனுக்குச்  சிநேகிதனாவான்.  {Prov  22:11}

 

கர்த்தருடைய  கண்கள்  ஞானத்தைக்  காக்கும்;  துரோகிகளின்  வார்த்தைகளையோ  அவர்  தாறுமாறாக்குகிறார்.  {Prov  22:12}

 

வெளியிலே  சிங்கம்,  வீதியிலே  கொலையுண்பேன்  என்று  சோம்பேறி  சொல்லுவான்.  {Prov  22:13}

 

பரஸ்திரீகளின்  வாய்  ஆழமான  படுகுழி;  கர்த்தருடைய  கோபத்திற்கு  ஏதுவானவன்  அதிலே  விழுவான்.  {Prov  22:14}

 

பிள்ளையின்  நெஞ்சில்  மதியீனம்  ஒட்டியிருக்கும்;  அதைத்  தண்டனையின்  பிரம்பு  அவனைவிட்டு  அகற்றும்.  {Prov  22:15}

 

தனக்கு  அதிகம்  உண்டாகத்  தரித்திரனை  ஒடுக்குகிறவன்  தனக்குக்  குறைச்சலுண்டாகவே  ஐசுவரியவானுக்குக்  கொடுப்பான்.  {Prov  22:16}

 

உன்  செவியைச்  சாய்த்து,  ஞானிகளுடைய  வார்த்தைகளைக்  கேட்டு,  என்  போதகத்தை  உன்  இருதயத்தில்  வை.  {Prov  22:17}

 

அவைகளை  உன்  உள்ளத்தில்  காத்து,  அவைகளை  உன்  உதடுகளில்  நிலைத்திருக்கப்பண்ணும்போது,  அது  இன்பமாயிருக்கும்.  {Prov  22:18}

 

உன்  நம்பிக்கை  கர்த்தர்மேல்  இருக்கும்படி,  இன்றையதினம்  அவைகளை  உனக்குத்  தெரியப்படுத்துகிறேன்.  {Prov  22:19}

 

சத்திய  வார்த்தைகளின்  யதார்த்தத்தை  நான்  உனக்குத்  தெரிவிக்கும்படிக்கும்,  நீ  உன்னை  அனுப்பினவர்களுக்குச்  சத்திய  வார்த்தைகளை  மறுமொழியாகச்  சொல்லும்படிக்கும்,  {Prov  22:20}

 

ஆலோசனையையும்  ஞானத்தையும்  பற்றி  நான்  உனக்கு  முக்கியமானவைகளை  எழுதவில்லையா?  {Prov  22:21}

 

ஏழையாயிருக்கிறான்  என்று  ஏழையைக்  கொள்ளையிடாதே;  சிறுமையானவனை  நியாயஸ்தலத்தில்  உபத்திரவப்படுத்தாதே.  {Prov  22:22}

 

கர்த்தர்  அவர்களுக்காக  வழக்காடி,  அவர்களைக்  கொள்ளையிடுகிறவர்களுடைய  பிராணனைக்  கொள்ளையிடுவார்.  {Prov  22:23}

 

கோபக்காரனுக்குத்  தோழனாகாதே;  உக்கிரமுள்ள  மனுஷனோடே  நடவாதே.  {Prov  22:24}

 

அப்படிச்  செய்தால்,  நீ  அவனுடைய  வழிகளைக்  கற்றுக்கொண்டு,  உன்  ஆத்துமாவுக்குக்  கண்ணியை  வருவிப்பாய்.  {Prov  22:25}

 

கையடித்து  உடன்பட்டு,  கடனுக்காகப்  பிணைப்படுகிறவர்களில்  ஒருவனாகாதே.  {Prov  22:26}

 

செலுத்த  உனக்கு  ஒன்றுமில்லாதிருந்தால்,  நீ  படுத்திருக்கும்  படுக்கையையும்  அவன்  எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.  {Prov  22:27}

 

உன்  பிதாக்கள்  நாட்டின  பூர்வ  எல்லைக்குறியை  மாற்றாதே.  {Prov  22:28}

 

தன்  வேலையில்  ஜாக்கிரதையாயிருக்கிறவனை  நீ  கண்டால்,  அவன்  நீசருக்கு  முன்பாக  நில்லாமல்,  ராஜாக்களுக்கு  முன்பாக  நிற்பான்.  {Prov  22:29}

 

நீ  ஒரு  அதிபதியோடே  போஜனம்பண்ண  உட்கார்ந்தால்,  உனக்கு  முன்பாக  இருக்கிறதை  நன்றாய்க்  கவனித்துப்பார்.  {Prov  23:1}

 

நீ  போஜனப்பிரியனாயிருந்தால்,  உன்  தொண்டையிலே  கத்தியை  வை.  {Prov  23:2}

 

அவனுடைய  ருசியுள்ள  பதார்த்தங்களை  இச்சியாதே;  அவைகள்  கள்ளப்போஜனமாமே.  {Prov  23:3}

 

ஐசுவரியவானாகவேண்டுமென்று  பிரயாசப்படாதே;  சுயபுத்தியைச்  சாராதே.  {Prov  23:4}

 

இல்லாமற்போகும்  பொருள்மேல்  உன்  கண்களைப்  பறக்கவிடுவானேன்?  அது  கழுகைப்போலச்  சிறகுகளைத்  தனக்கு  உண்டுபண்ணிக்கொண்டு,  ஆகாயமார்க்கமாய்ப்  பறந்துபோம்.  {Prov  23:5}

 

வன்கண்ணனுடைய  ஆகாரத்தைப்  புசியாதே;  அவனுடைய  ருசியுள்ள  பதார்த்தங்களை  இச்சியாதே.  {Prov  23:6}

 

அவன்  இருதயத்தின்  நினைவு  எப்படியோ,  அப்படியே  அவன்  இருக்கிறான்;  புசியும்,  பானம்பண்ணும்  என்று  அவன்  உன்னோடே  சொன்னாலும்,  அவன்  இருதயம்  உன்னோடே  இராது.  {Prov  23:7}

 

நீ  புசித்த  துணிக்கையை  வாந்திபண்ணி,  உன்  இனிய  சொற்களை  இழந்துபோவாய்.  {Prov  23:8}

 

மூடனுடைய  செவிகள்  கேட்கப்பேசாதே;  அவன்  உன்  வார்த்தைகளின்  ஞானத்தை  அசட்டைபண்ணுவான்.  {Prov  23:9}

 

பூர்வ  எல்லைக்குறியை  மாற்றாதே;  திக்கற்ற  பிள்ளைகளுடைய  நிலங்களை  அபகரித்துக்கொள்ளாதே.  {Prov  23:10}

 

அவர்களுடைய  மீட்பர்  வல்லவர்;  அவர்  உன்னுடனே  அவர்களுக்காக  வழக்காடுவார்.  {Prov  23:11}

 

உன்  இருதயத்தைப்  புத்திமதிக்கும்,  உன்  செவிகளை  அறிவின்  வார்த்தைகளுக்கும்  சாய்ப்பாயாக.  {Prov  23:12}

 

பிள்ளையை  தண்டியாமல்  விடாதே;  அவனைப்  பிரம்பினால்  அடித்தால்  அவன்  சாகான்.  {Prov  23:13}

 

நீ  பிரம்பினால்  அவனை  அடிக்கிறதினால்  பாதாளத்துக்கு  அவன்  ஆத்துமாவைத்  தப்புவிப்பாயே.  {Prov  23:14}

 

என்  மகனே,  உன்  இருதயம்  ஞானமுள்ளதாயிருந்தால்,  என்னிலே  என்  இருதயம்  மகிழும்.  {Prov  23:15}

 

உன்  உதடுகள்  செம்மையானவைகளைப்  பேசினால்,  என்  உள்ளிந்திரியங்கள்  மகிழும்.  {Prov  23:16}

 

உன்  மனதைப்  பாவிகள்மேல்  பொறாமைகொள்ள  விடாதே;  நீ  நாடோறும்  கர்த்தரைப்  பற்றும்  பயத்தோடிரு.  {Prov  23:17}

 

நிச்சயமாகவே  முடிவு  உண்டு;  உன்  நம்பிக்கை  வீண்போகாது.  {Prov  23:18}

 

என்  மகனே,  நீ  செவிகொடுத்து  ஞானமடைந்து,  உன்  இருதயத்தை  நல்வழியிலே  நடத்து.  {Prov  23:19}

 

மதுபானப்பிரியரையும்  மாம்சப்பெருந்தீனிக்காரரையும்  சேராதே.  {Prov  23:20}

 

குடியனும்  போஜனப்பிரியனும்  தரித்திரராவார்கள்;  தூக்கம்  கந்தைகளை  உடுத்துவிக்கும்.  {Prov  23:21}

 

உன்னைப்  பெற்ற  தகப்பனுக்குச்  செவிகொடு;  உன்  தாய்  வயதுசென்றவளாகும்போது  அவளை  அசட்டைபண்ணாதே.  {Prov  23:22}

 

சத்தியத்தை  வாங்கு,  அதை  விற்காதே;  அப்படியே  ஞானத்தையும்  உபதேசத்தையும்  புத்தியையும்  வாங்கு.  {Prov  23:23}

 

நீதிமானுடைய  தகப்பன்  மிகவும்  களிகூருவான்;  ஞானமுள்ள  பிள்ளையைப்  பெற்றவன்  அவனால்  மகிழுவான்.  {Prov  23:24}

 

உன்  தகப்பனும்  உன்  தாயும்  சந்தோஷப்படுவார்கள்;  உன்னைப்  பெற்றவள்  மகிழுவாள்.  {Prov  23:25}

 

என்  மகனே,  உன்  இருதயத்தை  எனக்குத்  தா;  உன்  கண்கள்  என்  வழிகளை  நோக்குவதாக.  {Prov  23:26}

 

வேசி  ஆழமான  படுகுழி;  பரஸ்திரீ  இடுக்கமான  கிணறு.  {Prov  23:27}

 

அவள்  கொள்ளைக்காரனைப்போல்  பதிவிருந்து,  மனுஷருக்குள்ளே  பாதகரைப்  பெருகப்பண்ணுகிறாள்.  {Prov  23:28}

 

ஐயோ!  யாருக்கு  வேதனை?  யாருக்குத்  துக்கம்?  யாருக்குச்  சண்டைகள்?  யாருக்குப்  புலம்பல்?  யாருக்குக்  காரணமில்லாத  காயங்கள்?  யாருக்கு  இரத்தங்கலங்கின  கண்கள்?  {Prov  23:29}

 

மதுபானம்  இருக்கும்  இடத்திலே  தங்கித்  தரிப்பவர்களுக்கும்,  கலப்புள்ள  சாராயத்தை  நாடுகிறவர்களுக்குந்தானே.  {Prov  23:30}

 

மதுபானம்  இரத்தவருணமாயிருந்து,  பாத்திரத்தில்  பளபளப்பாய்த்  தோன்றும்போது,  நீ  அதைப்  பாராதே;  அது  மெதுவாய்  இறங்கும்.  {Prov  23:31}

 

முடிவிலே  அது  பாம்பைப்போல்  கடிக்கும்,  விரியனைப்போல்  தீண்டும்.  {Prov  23:32}

 

உன்  கண்கள்  பரஸ்திரீகளை  நோக்கும்;  உன்  உள்ளம்  தாறுமாறானவைகளைப்  பேசும்.  {Prov  23:33}

 

நீ  நடுக்கடலிலே  சயனித்திருக்கிறவனைப்போலும்,  பாய்மரத்தட்டிலே  படுத்திருக்கிறவனைப்போலும்  இருப்பாய்.  {Prov  23:34}

 

என்னை  அடித்தார்கள்,  எனக்கு  நோகவில்லை;  என்னை  அறைந்தார்கள்,  எனக்குச்  சுரணையில்லை;  நான்  அதைப்  பின்னும்  தொடர்ந்து  தேட  எப்பொழுது  விழிப்பேன்  என்பாய்.  {Prov  23:35}

 

பொல்லாத  மனுஷர்மேல்  பொறாமை  கொள்ளாதே;  அவர்களோடே  இருக்கவும்  விரும்பாதே.  {Prov  24:1}

 

அவர்கள்  இருதயம்  கொடுமையை  யோசிக்கும்,  அவர்கள்  உதடுகள்  தீவினையைப்  பேசும்.  {Prov  24:2}

 

வீடு  ஞானத்தினாலே  கட்டப்பட்டு,  விவேகத்தினாலே  நிலைநிறுத்தப்படும்.  {Prov  24:3}

 

அறிவினாலே  அறைகளில்  அருமையும்  இனிமையுமான  சகலவிதப்  பொருள்களும்  நிறைந்திருக்கும்.  {Prov  24:4}

 

ஞானமுள்ளவன்  பெலமுள்ளவன்;  அறிவுள்ளவன்  தன்  வல்லமையை  அதிகரிக்கப்பண்ணுகிறான்.  {Prov  24:5}

 

நல்யோசனை  செய்து  யுத்தம்பண்ணு;  ஆலோசனைக்காரர்  அநேகரால்  ஜெயங்கிடைக்கும்.  {Prov  24:6}

 

மூடனுக்கு  ஞானம்  எட்டாத  உயரமாயிருக்கும்;  அவன்  நியாயஸ்தலத்தில்  தன்  வாயைத்  திறவான்.  {Prov  24:7}

 

தீவினைசெய்ய  உபாயஞ்செய்கிறவன்  துஷ்டன்  என்னப்படுவான்.  {Prov  24:8}

 

தீயநோக்கம்  பாவமாம்;  பரியாசக்காரன்  மனுஷருக்கு  அருவருப்பானவன்.  {Prov  24:9}

 

ஆபத்துக்காலத்தில்  நீ  சோர்ந்து  போவாயானால்,  உன்  பெலன்  குறுகினது.  {Prov  24:10}

 

மரணத்துக்கு  ஒப்பிக்கப்பட்டவர்களையும்,  கொலையுண்ணப்போகிறவர்களையும்  விடுவிக்கக்கூடுமானால்  விடுவி.  {Prov  24:11}

 

அதை  அறியோம்  என்பாயாகில்,  இருதயங்களைச்  சோதிக்கிறவர்  அறியாரோ?  உன்  ஆத்துமாவைக்  காக்கிறவர்  கவனியாரோ?  அவர்  மனுஷருக்கு  அவனவன்  கிரியைக்குத்தக்கதாகப்  பலனளியாரோ?  {Prov  24:12}

 

என்  மகனே,  தேனைச்  சாப்பிடு,  அது  நல்லது;  கூட்டிலிருந்து  ஒழுகும்  தேன்  உன்  வாய்க்கு  இன்பமாயிருக்கும்.  {Prov  24:13}

 

அப்படியே  ஞானத்தை  அறிந்துகொள்வது  உன்  ஆத்துமாவுக்கு  இன்பமாயிருக்கும்;  அதைப்  பெற்றுக்கொண்டால்,  அது  முடிவில்  உதவும்,  உன்  நம்பிக்கை  வீண்போகாது.  {Prov  24:14}

 

துஷ்டனே,  நீ  நீதிமானுடைய  வாசஸ்தலத்துக்கு  விரோதமாய்ப்  பதிவிராதே;  அவன்  தங்கும்  இடத்தைப்  பாழாக்கிப்போடாதே.  {Prov  24:15}

 

நீதிமான்  ஏழுதரம்  விழுந்தாலும்  திரும்பவும்  எழுந்திருப்பான்;  துன்மார்க்கரோ  தீங்கிலே  இடறுண்டு  கிடப்பார்கள்.  {Prov  24:16}

 

உன்  சத்துரு  விழும்போது  சந்தோஷப்படாதே;  அவன்  இடறும்போது  உன்  இருதயம்  களிகூராதிருப்பதாக.  {Prov  24:17}

 

கர்த்தர்  அதைக்  காண்பார்,  அது  அவர்  பார்வைக்குப்  பொல்லாப்பாயிருக்கும்;  அப்பொழுது  அவனிடத்தினின்று  அவர்  தமது  கோபத்தை  நீக்கிவிடுவார்.  {Prov  24:18}

 

பொல்லாதவர்களைக்குறித்து  எரிச்சலாகாதே;  துன்மார்க்கர்மேல்  பொறாமை  கொள்ளாதே.  {Prov  24:19}

 

துன்மார்க்கனுக்கு  நல்முடிவு  இல்லை;  துன்மார்க்கனுடைய  விளக்கு  அணைந்துபோம்.  {Prov  24:20}

 

என்  மகனே,  நீ  கர்த்தருக்கும்  ராஜாவுக்கும்  பயந்து  நட;  கலகக்காரரோடு  கலவாதே.  {Prov  24:21}

 

சடிதியில்  அவர்களுடைய  ஆபத்து  எழும்பும்;  அவர்கள்  இருவரின்  சங்காரத்தையும்  அறிந்தவன்  யார்?  {Prov  24:22}

 

பின்னும்  ஞானமுள்ளவர்களின்  புத்திமதிகள்  என்னவெனில்:  நியாயத்திலே  முகதாட்சிணியம்  நல்லதல்ல.  {Prov  24:23}

 

துன்மார்க்கனைப்  பார்த்து:  நீதிமானாயிருக்கிறாய்  என்று  சொல்லுகிறவனை  ஜனங்கள்  சபிப்பார்கள்,  பிரஜைகள்  அவனை  வெறுப்பார்கள்.  {Prov  24:24}

 

அவனைக்  கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல்  பிரியமுண்டாகும்,  அவர்களுக்கு  உத்தம  ஆசீர்வாதம்  கிடைக்கும்.  {Prov  24:25}

 

செம்மையான  மறுமொழி  சொல்லுகிறவன்  உதடுகளை  முத்தமிடுகிறவனுக்குச்  சமானம்.  {Prov  24:26}

 

வெளியில்  உன்  வேலையை  எத்தனப்படுத்தி,  வயலில்  அதை  ஒழுங்காக்கி,  பின்பு  உன்  வீட்டைக்  கட்டு.  {Prov  24:27}

 

நியாயமின்றிப்  பிறனுக்கு  விரோதமாய்ச்  சாட்சியாக  ஏற்படாதே;  உன்  உதடுகளினால்  வஞ்சகம்  பேசாதே.  {Prov  24:28}

 

அவன்  எனக்குச்  செய்தபிரகாரம்  நானும்  அவனுக்குச்  செய்வேன்,  அவன்  செய்த  செய்கைக்குத்தக்கதாக  நானும்  அவனுக்குச்  சரிக்கட்டுவேன்  என்று  நீ  சொல்லாதே.  {Prov  24:29}

 

சோம்பேறியின்  வயலையும்,  மதியீனனுடைய  திராட்சத்தோட்டத்தையும்  கடந்துபோனேன்.  {Prov  24:30}

 

இதோ,  அதெல்லாம்  முள்ளுக்காடாயிருந்தது;  நிலத்தின்  முகத்தைக்  காஞ்சொறி  மூடினது,  அதின்  கற்சுவர்  இடிந்து  கிடந்தது.  {Prov  24:31}

 

அதைக்  கண்டு  சிந்தனைபண்ணினேன்;  அதை  நோக்கிப்  புத்தியடைந்தேன்.  {Prov  24:32}

 

இன்னுங்கொஞ்சம்  உறங்கட்டும்,  இன்னுங்கொஞ்சம்  கைமுடக்கிக்கொண்டு  நித்திரை  செய்யட்டும்  என்பாயோ?  {Prov  24:33}

 

உன்  தரித்திரம்  வழிப்போக்கனைப்போலும்  உன்  வறுமை  ஆயுதமணிந்தவனைப்போலும்  வரும்.  {Prov  24:34}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியாவின்<Hezekiah>  மனுஷர்  பேர்த்தெழுதின  சாலொமோனுடைய<Solomon>  நீதிமொழிகள்:  {Prov  25:1}

 

காரியத்தை  மறைப்பது  தேவனுக்கு  மேன்மை;  காரியத்தை  ஆராய்வதோ  ராஜாக்களுக்கு  மேன்மை.  {Prov  25:2}

 

வானத்தின்  உயரமும்,  பூமியின்  ஆழமும்,  ராஜாக்களின்  இருதயங்களும்  ஆராய்ந்துமுடியாது.  {Prov  25:3}

 

வெள்ளியினின்று  களிம்பை  நீக்கிவிடு,  அப்பொழுது  தட்டானால்  நல்ல  உடைமை  பிறக்கும்.  {Prov  25:4}

 

ராஜாவின்  முன்னின்று  துஷ்டரை  நீக்கிவிடு,  அப்பொழுது  அவனுடைய  சிங்காசனம்  நீதியினால்  நிலைநிற்கும்.  {Prov  25:5}

 

ராஜாவின்  சமுகத்தில்  மேன்மைபாராட்டாதே;  பெரியோர்களுடைய  ஸ்தானத்தில்  நில்லாதே.  {Prov  25:6}

 

உன்  கண்கள்  கண்ட  பிரபுவின்  சமுகத்தில்  நீ  தாழ்த்தப்படுவது  நல்லதல்ல;  அவன்  உன்னைப்  பார்த்து:  மேலே  வா  என்று  சொல்வதே  உனக்கு  மேன்மை.  {Prov  25:7}

 

வழக்காடப்  பதற்றமாய்ப்  போகாதே;  முடிவிலே  உன்  அயலான்  உன்னை  வெட்கப்படுத்தும்போது,  நீ  என்ன  செய்யலாம்  என்று  திகைப்பாயே.  {Prov  25:8}

 

நீ  உன்  அயலானுடனேமாத்திரம்  உன்  வியாஜ்யத்தைக்குறித்து  வழக்காடு,  மற்றவனிடத்தில்  இரகசியத்தை  வெளிப்படுத்தாதே.  {Prov  25:9}

 

மற்றப்படி  அதைக்  கேட்கிறவன்  உன்னை  நிந்திப்பான்;  உன்  அவமானம்  உன்னைவிட்டு  நீங்காது.  {Prov  25:10}

 

ஏற்ற  சமயத்தில்  சொன்ன  வார்த்தை  வெள்ளித்தட்டில்  வைக்கப்பட்ட  பொற்பழங்களுக்குச்  சமானம்.  {Prov  25:11}

 

கேட்கிற  செவிக்கு,  ஞானமாய்க்  கடிந்துகொண்டு  புத்திசொல்லுகிறவன்,  பொற்கடுக்கனுக்கும்  அபரஞ்சிப்  பூஷணத்திற்கும்  சரி.  {Prov  25:12}

 

கோடைகாலத்தில்  உறைந்தமழையின்  குளிர்ச்சி  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  உண்மையான  ஸ்தானாபதியும்  தன்னை  அனுப்பினவனுக்கு  இருப்பான்;  அவன்  தன்  எஜமான்களுடைய  ஆத்துமாவைக்  குளிரப்பண்ணுவான்.  {Prov  25:13}

 

கொடுப்பேன்  என்று  சொல்லியும்  கொடாமலிருக்கிற  வஞ்சகன்  மழையில்லாத  மேகங்களுக்கும்  காற்றுக்கும்  சரி.  {Prov  25:14}

 

நீண்ட  பொறுமையினால்  பிரபுவையும்  சம்மதிக்கப்பண்ணலாம்;  இனிய  நாவு  எலும்பையும்  நொறுக்கும்.  {Prov  25:15}

 

தேனைக்  கண்டுபிடித்தாயானால்  மட்டாய்ச்  சாப்பிடு;  மிதமிஞ்சிச்  சாப்பிட்டால்  வாந்திபண்ணுவாய்.  {Prov  25:16}

 

உன்  அயலான்  சலித்து  உன்னை  வெறுக்காதபடிக்கு,  அடிக்கடி  அவன்  வீட்டில்  கால்வைக்காதே.  {Prov  25:17}

 

பிறனுக்கு  விரோதமாய்ப்  பொய்ச்சாட்சி  சொல்லுகிற  மனுஷன்  தண்டாயுதத்துக்கும்  கட்கத்துக்கும்  கூர்மையான  அம்புக்கும்  ஒப்பானவன்.  {Prov  25:18}

 

ஆபத்துக்காலத்தில்  துரோகியை  நம்புவது  உடைந்த  பல்லுக்கும்  மொழிபுரண்ட  காலுக்கும்  சமானம்.  {Prov  25:19}

 

மனதுக்கமுள்ளவனுக்குப்  பாட்டுகளைப்  பாடுகிறவன்,  குளிர்காலத்தில்  வஸ்திரத்தைக்  களைகிறவனைப்போலவும்,  வெடியுப்பின்மேல்  வார்த்த  காடியைப்போலவும்  இருப்பான்.  {Prov  25:20}

 

உன்  சத்துரு  பசியாயிருந்தால்,  அவனுக்குப்  புசிக்க  ஆகாரங்கொடு;  அவன்  தாகமாயிருந்தால்,  குடிக்கத்  தண்ணீர்கொடு.  {Prov  25:21}

 

அதினால்  நீ  அவன்  தலையின்மேல்  எரிகிற  தழல்களைக்  குவிப்பாய்;  கர்த்தர்  உனக்குப்  பலனளிப்பார்.  {Prov  25:22}

 

வடகாற்று  மழையையும்,  புறங்கூறுகிற  நாவு  கோபமுகத்தையும்  பிறப்பிக்கும்.  {Prov  25:23}

 

சண்டைக்காரியோடே  ஒரு  பெரிய  வீட்டில்  குடியிருப்பதைப்பார்க்கிலும்  வீட்டின்மேல்  ஒரு  மூலையில்  தங்குவதே  நலம்.  {Prov  25:24}

 

தூரதேசத்திலிருந்து  வரும்  நற்செய்தி  விடாய்த்த  ஆத்துமாவுக்குக்  கிடைக்கும்  குளிர்ந்த  தண்ணீருக்குச்  சமானம்.  {Prov  25:25}

 

துன்மார்க்கருக்கு  முன்பாக  நீதிமான்  தள்ளாடுவது  கலங்கின  கிணற்றுக்கும்  கெட்டுப்போன  சுனைக்கும்  ஒப்பாகும்.  {Prov  25:26}

 

தேனை  மிகுதியாய்  உண்பது  நல்லதல்ல,  தற்புகழை  நாடுவதும்  புகழல்ல.  {Prov  25:27}

 

தன்  ஆவியை  அடக்காத  மனுஷன்  மதிலிடிந்த  பாழான  பட்டணம்போலிருக்கிறான்.  {Prov  25:28}

 

உஷ்ணகாலத்திலே  உறைந்த  பனியும்,  அறுப்புக்காலத்திலே  மழையும்  தகாததுபோல,  மூடனுக்கு  மகிமை  தகாது.  {Prov  26:1}

 

அடைக்கலான்  குருவி  அலைந்துபோவதுபோலும்,  தகைவிலான்  குருவி  பறந்துபோவதுபோலும்,  காரணமில்லாமலிட்ட  சாபம்  தங்காது.  {Prov  26:2}

 

குதிரைக்குச்  சவுக்கும்,  கழுதைக்குக்  கடிவாளமும்,  மூடனுடைய  முதுகுக்குப்  பிரம்பும்  ஏற்றது.  {Prov  26:3}

 

மூடனுக்கு  அவன்  மதியீனத்தின்படி  மறுஉத்தரவு  கொடாதே;  கொடுத்தால்  நீயும்  அவனைப்  போலாவாய்.  {Prov  26:4}

 

மூடனுக்கு  அவன்  மதியீனத்தின்படி  மறுஉத்தரவு  கொடு;  கொடாவிட்டால்  அவன்  தன்  பார்வைக்கு  ஞானியாயிருப்பான்.  {Prov  26:5}

 

மூடன்  கையிலே  செய்தி  அனுப்புகிறவன்  தன்  கால்களையே  தறித்துக்கொண்டு  நஷ்டத்தை  அடைகிறான்.  {Prov  26:6}

 

நொண்டியின்  கால்கள்  குந்திக்குந்தி  நடக்கும்,  அப்படியே  மூடரின்  வாயிலுள்ள  உவமைச்சொல்லும்  குந்தும்.  {Prov  26:7}

 

மூடனுக்குக்  கனத்தைக்  கொடுக்கிறவன்  கவணிலே  கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான்.  {Prov  26:8}

 

மூடன்  வாயில்  அகப்பட்ட  பழமொழி  வெறியன்  கையில்  அகப்பட்ட  முள்ளு.  {Prov  26:9}

 

பெலத்தவன்  அனைவரையும்  நோகப்பண்ணி,  மூடனையும்  வேலைகொள்ளுகிறான்,  மீறி  நடக்கிறவர்களையும்  வேலைகொள்ளுகிறான்.  {Prov  26:10}

 

நாயானது  தான்  கக்கினதைத்  தின்னும்படி  திரும்புவதுபோல,  மூடனும்  தன்  மூடத்தனத்துக்குத்  திரும்புகிறான்.  {Prov  26:11}

 

தன்  பார்வைக்கு  ஞானியாயிருப்பவனைக்  கண்டாயானால்,  அவனைப்பார்க்கிலும்  மூடனைக்குறித்து  அதிக  நம்பிக்கையாயிருக்கலாம்.  {Prov  26:12}

 

வழியிலே  சிங்கம்  இருக்கும்,  நடுவீதியிலே  சிங்கம்  இருக்கும்  என்று  சோம்பேறி  சொல்லுவான்.  {Prov  26:13}

 

கதவு  கீல்முளையில்  ஆடுகிறதுபோல,  சோம்பேறியும்  படுக்கையில்  ஆடிக்கொண்டிருக்கிறான்.  {Prov  26:14}

 

சோம்பேறி  தன்  கையைக்  கலத்திலே  வைத்து  அதைத்  தன்  வாய்க்குத்  திரும்ப  எடுக்க  வருத்தப்படுகிறான்.  {Prov  26:15}

 

புத்தியுள்ள  மறுஉத்தரவு  சொல்லத்தகும்  ஏழுபேரைப்பார்க்கிலும்  சோம்பேறி  தன்  பார்வைக்கு  அதிக  ஞானமுள்ளவன்.  {Prov  26:16}

 

வழியே  போகையில்  தனக்கடாத  வழக்கில்  தலையிடுகிறவன்  நாயைக்  காதைப்  பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.  {Prov  26:17}

 

கொள்ளிகளையும்  அம்புகளையும்  சாவுக்கேதுவானவைகளையும்  எறிகிற  பைத்தியக்காரன்  எப்படியிருக்கிறானோ,  {Prov  26:18}

 

அப்படியே,  தனக்கடுத்தவனை  வஞ்சித்து:  நான்  விளையாட்டுக்கல்லவோ  செய்தேன்  என்று  சொல்லுகிற  மனுஷனும்  இருக்கிறான்.  {Prov  26:19}

 

விறகில்லாமல்  நெருப்பு  அவியும்;  கோள்சொல்லுகிறவனில்லாமல்  சண்டை  அடங்கும்.  {Prov  26:20}

 

கரிகள்  தழலுக்கும்,  விறகு  நெருப்புக்கும்  ஏதுவானதுபோல,  வாதுப்பிரியன்  சண்டைகளை  மூட்டுகிறதற்கு  ஏதுவானவன்.  {Prov  26:21}

 

கோள்காரனுடைய  வார்த்தைகள்  விளையாட்டுப்போலிருக்கும்;  ஆனாலும்  அவைகள்  உள்ளத்திற்குள்  தைக்கும்.  {Prov  26:22}

 

நேச  அனலைக்  காண்பிக்கிற  உதடுகளோடு  கூடிய  தீயநெஞ்சம்  வெள்ளிப்பூச்சு  பூசிய  ஓட்டைப்போலிருக்கும்.  {Prov  26:23}

 

பகைஞன்  தன்  உள்ளத்தில்  கபடத்தை  மறைத்து,  தன்  உதடுகளினால்  சூதுபேசுகிறான்.  {Prov  26:24}

 

அவன்  இதம்பேசினாலும்  அவனை  நம்பாதே;  அவன்  இருதயத்தில்  ஏழு  அருவருப்புகள்  உண்டு.  {Prov  26:25}

 

பகையை  வஞ்சகமாய்  மறைத்து  வைக்கிறவனெவனோ,  அவனுடைய  பொல்லாங்கு  மகா  சபையிலே  வெளிப்படுத்தப்படும்.  {Prov  26:26}

 

படுகுழியை  வெட்டுகிறவன்  தானே  அதில்  விழுவான்;  கல்லைப்  புரட்டுகிறவன்மேல்  அந்தக்  கல்  திரும்ப  விழும்.  {Prov  26:27}

 

கள்ளநாவு  தன்னால்  கிலேசப்பட்டவர்களைப்  பகைக்கும்;  இச்சகம்பேசும்  வாய்  அழிவை  உண்டுபண்ணும்.  {Prov  26:28}

 

நாளையத்தினத்தைக்குறித்துப்  பெருமைபாராட்டாதே;  ஒருநாள்  பிறப்பிப்பதை  அறியாயே.  {Prov  27:1}

 

உன்  வாய்  அல்ல,  புறத்தியானே  உன்னைப்  புகழட்டும்;  உன்  உதடு  அல்ல,  அந்நியனே  உன்னைப்  புகழட்டும்.  {Prov  27:2}

 

கல்  கனமும்,  மணல்  பாரமுமாயிருக்கும்;  மூடனுடைய  கோபமோ  இவ்விரண்டிலும்  பாரமாம்.  {Prov  27:3}

 

உக்கிரம்  கொடுமையுள்ளது,  கோபம்  நிஷ்டூரமுள்ளது;  பொறாமையோவென்றால்,  அதற்கு  முன்னிற்கத்தக்கவன்  யார்?  {Prov  27:4}

 

மறைவான  சிநேகத்தைப்பார்க்கிலும்  வெளிப்படையான  கடிந்துகொள்ளுதல்  நல்லது.  {Prov  27:5}

 

சிநேகிதன்  அடிக்கும்  அடிகள்  உண்மையானவைகள்;  சத்துரு  இடும்  முத்தங்களோ  வஞ்சனையுள்ளவைகள்.  {Prov  27:6}

 

திருப்தியடைந்தவன்  தேன்கூட்டையும்  மிதிப்பான்;  பசியுள்ளவனுக்கோ  கசப்பான  பதார்த்தங்களும்  தித்திப்பாயிருக்கும்.  {Prov  27:7}

 

தன்  கூட்டைவிட்டு  அலைகிற  குருவி  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  தன்  ஸ்தானத்தைவிட்டு  அலைகிற  மனுஷனும்  இருக்கிறான்.  {Prov  27:8}

 

பரிமளதைலமும்  சுகந்ததூபமும்  இருதயத்தைக்  களிப்பாக்குவதுபோல,  ஒருவனுடைய  சிநேகிதன்  உட்கருத்தான  ஆலோசனையினால்  பாராட்டும்  இன்பமானது  களிப்பாக்கும்.  {Prov  27:9}

 

உன்  சிநேகிதனையும்,  உன்  தகப்பனுடைய  சிநேகிதனையும்  விட்டுவிடாதே;  உன்  ஆபத்துக்காலத்தில்  உன்  சகோதரனுடைய  வீட்டிற்குப்  போகாதே;  தூரத்திலுள்ள  சகோதரனிலும்  சமீபத்திலுள்ள  அயலானே  வாசி.  {Prov  27:10}

 

என்  மகனே,  என்னை  நிந்திக்கிறவனுக்கு  நான்  உத்தரவுகொடுக்கத்தக்கதாக,  நீ  ஞானவானாகி,  என்  இருதயத்தைச்  சந்தோஷப்படுத்து.  {Prov  27:11}

 

விவேகி  ஆபத்தைக்  கண்டு  மறைந்துகொள்ளுகிறான்;  பேதைகளோ  நெடுகப்போய்த்  தண்டிக்கப்படுகிறார்கள்.  {Prov  27:12}

 

அந்நியனுக்காகப்  பிணைப்படுகிறவனுடைய  வஸ்திரத்தை  எடுத்துக்கொள்,  அந்நிய  ஸ்திரீக்காக  ஈடுவாங்கிக்கொள்.  {Prov  27:13}

 

ஒருவன்  அதிகாலையிலே  எழுந்து  உரத்தசத்தத்தோடே  தன்  சிநேகிதனுக்குச்  சொல்லும்  ஆசீர்வாதம்  சாபமாக  எண்ணப்படும்.  {Prov  27:14}

 

அடைமழைநாளில்  ஓயாத  ஒழுக்கும்  சண்டைக்காரியான  ஸ்திரீயும்  சரி.  {Prov  27:15}

 

அவளை  அடக்கப்பார்க்கிறவன்  காற்றை  அடக்கித்  தன்  வலதுகையினால்  எண்ணெயைப்  பிடிக்கப்பார்க்கிறான்.  {Prov  27:16}

 

இரும்பை  இரும்பு  கருக்கிடும்;  அப்படியே  மனுஷனும்  தன்  சிநேகிதனுடைய  முகத்தைக்  கருக்கிடுகிறான்.  {Prov  27:17}

 

அத்திமரத்தைக்  காக்கிறவன்  அதின்  கனியைப்  புசிப்பான்;  தன்  எஜமானைக்  காக்கிறவன்  கனமடைவான்.  {Prov  27:18}

 

தண்ணீரில்  முகத்துக்கு  முகம்  ஒத்திருக்குமாப்போல,  மனுஷரில்  இருதயத்திற்கு  இருதயம்  ஒத்திருக்கும்.  {Prov  27:19}

 

பாதாளமும்  அழிவும்  திருப்தியாகிறதில்லை;  அதுபோல  மனுஷனுடைய  கண்களும்  திருப்தியாகிறதில்லை.  {Prov  27:20}

 

வெள்ளிக்குக்  குகையும்,  பொன்னுக்குப்  புடமும்  சோதனை;  மனுஷனுக்கு  அவனுக்கு  உண்டாகும்  புகழ்ச்சியே  சோதனை.  {Prov  27:21}

 

மூடனை  உரலில்  போட்டு  உலக்கையினால்  நொய்யோடே  நொய்யாகக்  குத்தினாலும்,  அவனுடைய  மூடத்தனம்  அவனை  விட்டு  நீங்காது.  {Prov  27:22}

 

உன்  ஆடுகளின்  நிலைமையை  நன்றாய்  அறிந்துகொள்;  உன்  மந்தைகளின்மேல்  கவனமாயிரு.  {Prov  27:23}

 

செல்வம்  என்றைக்கும்  நிலையாது;  கிரீடம்  தலைமுறை  தலைமுறைதோறும்  நிலைநிற்குமோ?  {Prov  27:24}

 

புல்  முளைக்கும்,  பச்சிலைகள்  தோன்றும்,  மலைப்பூண்டுகள்  சேர்க்கப்படும்.  {Prov  27:25}

 

ஆட்டுக்குட்டிகள்  உனக்கு  வஸ்திரத்தையும்,  கடாக்கள்  வயல்  வாங்கத்தக்க  கிரயத்தையும்  கொடுக்கும்.  {Prov  27:26}

 

வெள்ளாட்டுப்பால்  உன்  ஆகாரத்துக்கும்,  உன்  வீட்டாரின்  ஆகாரத்துக்கும்,  உன்  வேலைக்காரிகளின்  பிழைப்புக்கும்  போதுமானபடியிருக்கும்.  {Prov  27:27}

 

ஒருவனும்  தொடராதிருந்தும்  துன்மார்க்கர்  ஓடிப்போகிறார்கள்;  நீதிமான்களோ  சிங்கத்தைப்போலே  தைரியமாயிருக்கிறார்கள்.  {Prov  28:1}

 

தேசத்தின்  பாவத்தினிமித்தம்  அதின்  அதிகாரிகள்  அநேகராயிருக்கிறார்கள்;  புத்தியும்  அறிவுமுள்ள  மனுஷனாலோ  அதின்  நற்சீர்  நீடித்திருக்கும்.  {Prov  28:2}

 

ஏழைகளை  ஒடுக்குகிற  தரித்திரன்  ஆகாரம்  விளையாதபடி  வெள்ளமாய்  அடித்துக்கொண்டுபோகிற  மழையைப்போலிருக்கிறான்.  {Prov  28:3}

 

வேதப்பிரமாணத்தை  விட்டு  விலகுகிறவர்கள்  துன்மார்க்கரைப்  புகழுகிறார்கள்;  வேதப்பிரமாணத்தைக்  கைக்கொள்ளுகிறவர்களோ  அவர்களோடே  போராடுகிறார்கள்.  {Prov  28:4}

 

துஷ்டர்  நியாயத்தை  அறியார்கள்;  கர்த்தரைத்  தேடுகிறவர்களோ  சகலத்தையும்  அறிவார்கள்.  {Prov  28:5}

 

இருவழிகளில்  நடக்கிற  திரியாவரக்காரன்  ஐசுவரியவானாயிருந்தாலும்,  நேர்மையாய்  நடக்கிற  தரித்திரன்  அவனிலும்  வாசி.  {Prov  28:6}

 

வேதப்பிரமாணத்தைக்  கைக்கொள்ளுகிறவன்  விவேகமுள்ள  புத்திரன்;  போஜனப்பிரியருக்குத்  தோழனாயிருக்கிறவனோ  தன்  தகப்பனை  அவமானப்படுத்துகிறான்.  {Prov  28:7}

 

அநியாய  வட்டியினாலும்  ஆதாயத்தினாலும்  தன்  ஆஸ்தியைப்  பெருகப்பண்ணுகிறவன்,  தரித்திரர்பேரில்  இரங்குகிறவனுக்காக  அதைச்  சேகரிக்கிறான்.  {Prov  28:8}

 

வேதத்தைக்  கேளாதபடி  தன்  செவியை  விலக்குகிறவனுடைய  ஜெபமும்  அருவருப்பானது.  {Prov  28:9}

 

உத்தமர்களை  மோசப்படுத்தி,  பொல்லாத  வழியிலே  நடத்துகிறவன்  தான்  வெட்டின  குழியில்  தானே  விழுவான்;  உத்தமர்களோ  நன்மையைச்  சுதந்தரிப்பார்கள்.  {Prov  28:10}

 

ஐசுவரியவான்  தன்  பார்வைக்கு  ஞானவான்;  புத்தியுள்ள  தரித்திரனோ  அவனைப்  பரிசோதிக்கிறான்.  {Prov  28:11}

 

நீதிமான்கள்  களிகூரும்போது  மகா  கொண்டாட்டம்  உண்டாகும்;  துன்மார்க்கர்  எழும்பும்போதோ  மனுஷர்  மறைந்துகொள்ளுகிறார்கள்.  {Prov  28:12}

 

தன்  பாவங்களை  மறைக்கிறவன்  வாழ்வடையமாட்டான்;  அவைகளை  அறிக்கை  செய்து  விட்டுவிடுகிறவனோ  இரக்கம்  பெறுவான்.  {Prov  28:13}

 

எப்பொழுதும்  பயந்திருக்கிறவன்  பாக்கியவான்;  தன்  இருதயத்தைக்  கடினப்படுத்துகிறவனோ  தீங்கில்  விழுவான்.  {Prov  28:14}

 

ஏழை  ஜனங்களை  ஆளும்  துஷ்ட  அதிகாரி  கெர்ச்சிக்கும்  சிங்கத்துக்கும்  அலைந்துதிரிகிற  கரடிக்கும்  ஒப்பாயிருக்கிறான்.  {Prov  28:15}

 

பிரபு  புத்தியீனனாயிருந்தால்  அவன்  செய்யும்  இடுக்கண்  மிகுதி;  பொருளாசையை  வெறுக்கிறவன்  தீர்க்காயுசைப்  பெறுவான்.  {Prov  28:16}

 

இரத்தப்பழிக்காக  ஒடுக்கப்பட்டவன்  குழியில்  ஒளிக்க  ஓடிவந்தால்,  அவனை  ஆதரிக்கவேண்டாம்.  {Prov  28:17}

 

உத்தமனாய்  நடக்கிறவன்  இரட்சிக்கப்படுவான்;  மாறுபாடான  இருவழியில்  நடக்கிறவனோ  அவற்றில்  ஒன்றிலே  விழுவான்.  {Prov  28:18}

 

தன்  நிலத்தைப்  பயிரிடுகிறவன்  ஆகாரத்தால்  திருப்தியாவான்;  வீணரைப்  பின்பற்றுகிறவனோ  வறுமையால்  நிறைந்திருப்பான்.  {Prov  28:19}

 

உண்மையுள்ள  மனுஷன்  பரிபூரண  ஆசீர்வாதங்களைப்  பெறுவான்;  ஐசுவரியவானாகிறதற்குத்  தீவிரிக்கிறவனோ  ஆக்கினைக்குத்  தப்பான்.  {Prov  28:20}

 

முகதாட்சிணியம்  நல்லதல்ல,  முகதாட்சிணியமுள்ளவன்  ஒரு  துண்டு  அப்பத்துக்காக  அநியாயஞ்செய்வான்.  {Prov  28:21}

 

வன்கண்ணன்  செல்வனாகிறதற்குப்  பதறுகிறான்,  வறுமை  தனக்கு  வருமென்று  அறியாதிருக்கிறான்.  {Prov  28:22}

 

தன்  நாவினால்  முகஸ்துதி  பேசுகிறவனைப்பார்க்கிலும்,  கடிந்துகொள்ளுகிறவன்  முடிவில்  அங்கீகாரம்  பெறுவான்.  {Prov  28:23}

 

தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  கொள்ளையிட்டு,  அது  துரோகமல்ல  என்பவன்  பாழ்க்கடிக்கிற  மனுஷனுக்குத்  தோழன்.  {Prov  28:24}

 

பெருநெஞ்சன்  வழக்கைக்  கொளுவுகிறான்;  கர்த்தரை  நம்புகிறவனோ  செழிப்பான்.  {Prov  28:25}

 

தன்  இருதயத்தை  நம்புகிறவன்  மூடன்;  ஞானமாய்  நடக்கிறவனோ  இரட்சிக்கப்படுவான்.  {Prov  28:26}

 

தரித்திரருக்குக்  கொடுப்பவன்  தாழ்ச்சியடையான்;  தன்  கண்களை  ஏழைகளுக்கு  விலக்குகிறவனுக்கோ  அநேக  சாபங்கள்  வரும்.  {Prov  28:27}

 

துன்மார்க்கர்  எழும்பும்போது  மனுஷர்  மறைந்துகொள்ளுகிறார்கள்;  அவர்கள்  அழியும்போதோ  நீதிமான்கள்  பெருகுகிறார்கள்.  {Prov  28:28}

 

அடிக்கடி  கடிந்துகொள்ளப்பட்டும்  தன்  பிடரியைக்  கடினப்படுத்துகிறவன்  சகாயமின்றிச்  சடிதியில்  நாசமடைவான்.  {Prov  29:1}

 

நீதிமான்கள்  பெருகினால்  ஜனங்கள்  மகிழுவார்கள்;  துன்மார்க்கர்  ஆளும்போதோ  ஜனங்கள்  தவிப்பார்கள்.  {Prov  29:2}

 

ஞானத்தில்  பிரியப்படுகிறவன்  தன்  தகப்பனை  மகிழப்பண்ணுகிறான்;  வேசிகளோடே  தொந்திப்பானவனோ  ஆஸ்தியை  அழிக்கிறான்.  {Prov  29:3}

 

நியாயத்தினால்  ராஜா  தேசத்தை  நிலைநிறுத்துகிறான்;  பரிதானப்பிரியனோ  அதைக்  கவிழ்க்கிறான்.  {Prov  29:4}

 

பிறனை  முகஸ்துதி  செய்கிறவன்,  அவன்  கால்களுக்கு  வலையை  விரிக்கிறான்.  {Prov  29:5}

 

துஷ்டனுடைய  துரோகத்திலே  கண்ணியிருக்கிறது;  நீதிமானோ  பாடி  மகிழுகிறான்.  {Prov  29:6}

 

நீதிமான்  ஏழைகளின்  நியாயத்தைக்  கவனித்தறிகிறான்;  துன்மார்க்கனோ  அதை  அறிய  விரும்பான்.  {Prov  29:7}

 

பரியாசக்காரர்  பட்டணத்தில்  தீக்கொளுத்திவிடுகிறார்கள்;  ஞானிகளோ  குரோதத்தை  விலக்குகிறார்கள்.  {Prov  29:8}

 

ஞானி  மூடனுடன்  வழக்காடுகையில்,  சினந்தாலும்  சிரித்தாலும்  அமைதியில்லை.  {Prov  29:9}

 

இரத்தப்பிரியர்  உத்தமனைப்  பகைக்கிறார்கள்;  செம்மையானவர்களோ  அவனுடைய  பிராணனைக்  காப்பாற்றுகிறார்கள்.  {Prov  29:10}

 

மூடன்  தன்  உள்ளத்தையெல்லாம்  வெளிப்படுத்துகிறான்;  ஞானியோ  அதைப்  பின்னுக்கு  அடக்கிவைக்கிறான்.  {Prov  29:11}

 

அதிபதியானவன்  பொய்களுக்குச்  செவிகொடுத்தால்,  அவன்  ஊழியக்காரர்  யாவரும்  துன்மார்க்கராவார்கள்.  {Prov  29:12}

 

தரித்திரனும்  கொடுமைக்காரனும்  ஒருவரையொருவர்  சந்திக்கிறார்கள்;  அவ்விருவருடைய  கண்களுக்கும்  கர்த்தர்  வெளிச்சங்  கொடுக்கிறார்.  {Prov  29:13}

 

ஏழைகளுடைய  நியாயத்தை  உண்மையாய்  விசாரிக்கிற  ராஜாவின்  சிங்காசனம்  என்றும்  நிலைபெற்றிருக்கும்.  {Prov  29:14}

 

பிரம்பும்  கடிந்துகொள்ளுதலும்  ஞானத்தைக்  கொடுக்கும்;  தன்  இஷ்டத்திற்கு  விடப்பட்ட  பிள்ளையோ  தன்  தாய்க்கு  வெட்கத்தை  உண்டுபண்ணுகிறான்.  {Prov  29:15}

 

துன்மார்க்கர்  பெருகினால்  பாவமும்  பெருகும்;  நீதிமான்களோ  அவர்கள்  விழுவதைக்  காண்பார்கள்.  {Prov  29:16}

 

உன்  மகனைச்  சிட்சைசெய்,  அவன்  உனக்கு  ஆறுதல்செய்வான்,  உன்  ஆத்துமாவுக்கு  ஆனந்தத்தையும்  உண்டாக்குவான்.  {Prov  29:17}

 

தீர்க்கதரிசனமில்லாத  இடத்தில்  ஜனங்கள்  சீர்கெட்டுப்போவார்கள்;  வேதத்தைக்  காக்கிறவனோ  பாக்கியவான்.  {Prov  29:18}

 

அடிமையானவன்  வார்த்தைகளினாலே  அடங்கான்;  அவைகளை  அவன்  அறிந்தாலும்  உத்தரவுகொடான்.  {Prov  29:19}

 

தன்  வார்த்தைகளில்  பதறுகிற  மனுஷனைக்  கண்டாயானால்,  அவனை  நம்புவதைப்பார்க்கிலும்  மூடனை  நம்பலாம்.  {Prov  29:20}

 

ஒருவன்  தன்  அடிமையைச்  சிறுபிராயமுதல்  இளக்காரமாக  வளர்த்தால்,  முடிவிலே  அவன்  தன்னைப்  புத்திரனாகப்  பாராட்டுவான்.  {Prov  29:21}

 

கோபக்காரன்  வழக்கைக்  கொளுவுகிறான்;  மூர்க்கன்  பெரும்பாதகன்.  {Prov  29:22}

 

மனுஷனுடைய  அகந்தை  அவனைத்  தாழ்த்தும்;  மனத்தாழ்மையுள்ளவனோ  கனமடைவான்.  {Prov  29:23}

 

திருடனோடே  பங்கிட்டுக்கொள்ளுகிறவன்  தன்  ஆத்துமாவைப்  பகைக்கிறான்;  சாபத்தை  அவன்  கேட்டாலும்  காரியத்தை  வெளிப்படுத்தமாட்டான்.  {Prov  29:24}

 

மனுஷனுக்குப்  பயப்படும்  பயம்  கண்ணியை  வருவிக்கும்;  கர்த்தரை  நம்புகிறவனோ  உயர்ந்த  அடைக்கலத்திலே  வைக்கப்படுவான்.  {Prov  29:25}

 

ஆளுகைசெய்கிறவனுடைய  முகதரிசனத்தைத்  தேடுகிறவர்கள்  அநேகர்;  ஆனாலும்  அவனவனுடைய  நியாயம்  கர்த்தராலே  தீரும்.  {Prov  29:26}

 

நீதிமானுக்கு  அநியாயக்காரன்  அருவருப்பானவன்;  சன்மார்க்கனும்  துன்மார்க்கனுக்கு  அருவருப்பானவன்.  {Prov  29:27}

 

யாக்கேயின்<Jakeh>  குமாரனாகிய  ஆகூர்<Agur>  என்னும்  புருஷன்  ஈத்தியேலுக்கு<Ithiel>  வசனித்து,  ஈத்தியேலுக்கும்<Ithiel>  ஊகாலுக்கும்<Ucal>  உரைத்த  உபதேச  வாக்கியங்களாவன:  {Prov  30:1}

 

மனுஷரெல்லாரிலும்  நான்  மூடன்;  மனுஷருக்கேற்ற  புத்தி  எனக்கு  இல்லை.  {Prov  30:2}

 

நான்  ஞானத்தைக்  கற்கவும்  இல்லை,  பரிசுத்தரின்  அறிவை  அறிந்துகொள்ளவும்  இல்லை.  {Prov  30:3}

 

வானத்துக்கு  ஏறியிறங்கினவர்  யார்?  காற்றைத்  தமது  கைப்பிடிகளில்  அடக்கினவர்  யார்?  தண்ணீர்களை  வஸ்திரத்திலே  கட்டினவர்  யார்?  பூமியின்  எல்லைகளையெல்லாம்  ஸ்தாபித்தவர்  யார்?  அவருடைய  நாமம்  என்ன?  அவர்  குமாரனுடைய  நாமம்  என்ன?  அதை  அறிவாயோ?  {Prov  30:4}

 

தேவனுடைய  வசனமெல்லாம்  புடமிடப்பட்டவைகள்;  தம்மை  அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு  அவர்  கேடகமானவர்.  {Prov  30:5}

 

அவருடைய  வசனங்களோடு  ஒன்றையும்  கூட்டாதே,  கூட்டினால்  அவர்  உன்னைக்  கடிந்துகொள்வார்,  நீ  பொய்யனாவாய்.  {Prov  30:6}

 

இரண்டு  மனு  உம்மிடத்தில்  கேட்கிறேன்;  நான்  மரிக்கும்பரியந்தமும்  அவைகளை  எனக்கு  மறுக்காமல்  தாரும்.  {Prov  30:7}

 

மாயையையும்  பொய்வசனிப்பையும்  எனக்குத்  தூரப்படுத்தும்;  தரித்திரத்தையும்  ஐசுவரியத்தையும்  எனக்குக்  கொடாதிருப்பீராக.  {Prov  30:8}

 

நான்  பரிபூரணம்  அடைகிறதினால்  மறுதலித்து,  கர்த்தர்  யார்  என்று  சொல்லாதபடிக்கும்;  தரித்திரப்படுகிறதினால்  திருடி,  என்  தேவனுடைய  நாமத்தை  வீணிலே  வழங்காதபடிக்கும்,  என்  படியை  எனக்கு  அளந்து  என்னைப்  போஷித்தருளும்.  {Prov  30:9}

 

எஜமானிடத்தில்  அவனுடைய  வேலைக்காரன்மேல்  குற்றஞ்சுமத்தாதே;  அவன்  உன்னைச்  சபிப்பான்,  நீ  குற்றவாளியாகக்  காணப்படுவாய்.  {Prov  30:10}

 

தங்கள்  தகப்பனைச்  சபித்தும்,  தங்கள்  தாயை  ஆசீர்வதியாமலும்  இருக்கிற  சந்ததியாருமுண்டு.  {Prov  30:11}

 

தாங்கள்  அழுக்கறக்  கழுவப்படாமலிருந்தும்,  தங்கள்  பார்வைக்குச்  சுத்தமாகத்  தோன்றுகிற  சந்ததியாருமுண்டு.  {Prov  30:12}

 

வேறொரு  சந்ததியாருமுண்டு;  அவர்கள்  கண்கள்  எத்தனை  மேட்டிமையும்  அவர்கள்  இமைகள்  எத்தனை  நெறிப்புமானவைகள்.  {Prov  30:13}

 

தேசத்தில்  சிறுமையானவர்களையும்  மனுஷரில்  எளிமையானவர்களையும்  பட்சிப்பதற்குக்  கட்கங்களையொத்த  பற்களையும்  கத்திகளையொத்த  கடைவாய்ப்பற்களையுமுடைய  சந்ததியாருமுண்டு.  {Prov  30:14}

 

தா,  தா,  என்கிற  இரண்டு  குமாரத்திகள்  அட்டைக்கு  உண்டு.  திருப்தியடையாத  மூன்றுண்டு,  போதும்  என்று  சொல்லாத  நான்குமுண்டு.  {Prov  30:15}

 

அவையாவன:  பாதாளமும்,  மலட்டுக்  கர்ப்பமும்,  தண்ணீரால்  திருப்தியடையாத  நிலமும்,  போதுமென்று  சொல்லாத  அக்கினியுமே.  {Prov  30:16}

 

தகப்பனைப்  பரியாசம்பண்ணி,  தாயின்  கட்டளையை  அசட்டைபண்ணுகிற  கண்ணை  நதியின்  காகங்கள்  பிடுங்கும்,  கழுகின்  குஞ்சுகள்  தின்னும்.  {Prov  30:17}

 

எனக்கு  மிகவும்  ஆச்சரியமானவைகள்  மூன்றுண்டு,  என்  புத்திக்கெட்டாதவைகள்  நான்குமுண்டு.  {Prov  30:18}

 

அவையாவன:  ஆகாயத்தில்  கழுகினுடைய  வழியும்,  கன்மலையின்மேல்  பாம்பினுடைய  வழியும்,  நடுக்கடலில்  கப்பலினுடைய  வழியும்,  ஒரு  கன்னிகையை  நாடிய  மனுஷனுடைய  வழியுமே.  {Prov  30:19}

 

அப்படியே  விபசாரஸ்திரீயினுடைய  வழியும்  இருக்கிறது;  அவள்  தின்று,  தன்  வாயைத்  துடைத்து:  நான்  ஒரு  பாவமும்  செய்யவில்லை  என்பாள்.  {Prov  30:20}

 

மூன்றினிமித்தம்  பூமி  சஞ்சலப்படுகிறது,  நான்கையும்  அது  தாங்கமாட்டாது.  {Prov  30:21}

 

அரசாளுகிற  அடிமையினிமித்தமும்,  போஜனத்தால்  திருப்தியான  மூடனினிமித்தமும்,  {Prov  30:22}

 

பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும்,  புருஷனுக்கு  வாழ்க்கைப்பட்ட  ஸ்திரீயினிமித்தமும்,  தன்  நாச்சியாருக்குப்  பதிலாக  இல்லாளாகும்  அடிமைப்பெண்ணினிமித்தமுமே.  {Prov  30:23}

 

பூமியில்  சிறியவைகளாயிருந்தும்,  மகா  ஞானமுள்ளவைகள்  நான்குண்டு.  {Prov  30:24}

 

அவையாவன:  அற்பமான  ஜெந்துவாயிருந்தும்,  கோடைகாலத்திலே  தங்கள்  ஆகாரத்தைச்  சம்பாதிக்கிற  எறும்பும்,  {Prov  30:25}

 

சத்துவமற்ற  ஜெந்துவாயிருந்தும்,  தங்கள்  வீட்டைக்  கன்மலையிலே  தோண்டிவைக்கும்  குழிமுசல்களும்,  {Prov  30:26}

 

ராஜா  இல்லாதிருந்தும்,  பவுஞ்சு  பவுஞ்சாய்ப்  புறப்படுகிற  வெட்டுக்கிளிகளும்,  {Prov  30:27}

 

தன்  கைகளினால்  வலையைப்  பின்னி,  அரசர்  அரமனைகளிலிருக்கிற  சிலந்திப்  பூச்சியுமே.  {Prov  30:28}

 

விநோதமாய்  அடிவைத்து  நடக்கிறவைகள்  மூன்றுண்டு;  விநோத  நடையுள்ளவைகள்  நாலுமுண்டு.  {Prov  30:29}

 

அவையாவன:  மிருகங்களில்  சவுரியமானதும்  ஒன்றுக்கும்  பின்னிடையாததுமாகிய  சிங்கமும்,  {Prov  30:30}

 

போர்க்குதிரையும்,  வெள்ளாட்டுக்கடாவும்,  ஒருவரும்  எதிர்க்கக்கூடாத  ராஜாவுமே.  {Prov  30:31}

 

நீ  மேட்டிமையானதினால்  பைத்தியமாய்  நடந்து,  துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால்,  கையினால்  வாயை  மூடு.  {Prov  30:32}

 

பாலைக்  கடைதல்  வெண்ணெயைப்  பிறப்பிக்கும்;  மூக்கைப்  பிசைதல்  இரத்தத்தைப்  பிறப்பிக்கும்;  அப்படியே  கோபத்தைக்  கிண்டிவிடுதல்  சண்டையைப்  பிறப்பிக்கும்.  {Prov  30:33}

 

ராஜாவாகிய  லேமுவேலுக்கடுத்த<Lemuel>  வசனங்கள்;  அவன்  தாய்  அவனுக்குப்  போதித்த  உபதேசமாவது:  {Prov  31:1}

 

என்  மகனே,  என்  கர்ப்பத்தின்  குமாரனே,  என்  பொருத்தனைகளின்  புத்திரனே,  {Prov  31:2}

 

ஸ்திரீகளுக்கு  உன்  பெலனையும்  ராஜாக்களைக்  கெடுக்கும்  காரியங்களுக்கு  உன்  வழிகளையும்  கொடாதே.  {Prov  31:3}

 

திராட்சரசம்  குடிப்பது  ராஜாக்களுக்குத்  தகுதியல்ல;  லேமுவேலே<Lemuel>,  அது  ராஜாக்களுக்குத்  தகுதியல்ல;  மதுபானம்  பிரபுக்களுக்குத்  தகுதியல்ல.  {Prov  31:4}

 

மதுபானம்பண்ணினால்  அவர்கள்  நியாயப்பிரமாணத்தை  மறந்து,  சிறுமைப்படுகிறவர்களுடைய  நியாயத்தையும்  புரட்டுவார்கள்.  {Prov  31:5}

 

மடிந்துபோகிறவனுக்கு  மதுபானத்தையும்,  மனங்கசந்தவர்களுக்குத்  திராட்சரசத்தையும்  கொடுங்கள்;  {Prov  31:6}

 

அவன்  குடித்துத்  தன்  குறைவை  மறந்து,  தன்  வருத்தத்தை  அப்புறம்  நினையாதிருக்கட்டும்.  {Prov  31:7}

 

ஊமையனுக்காகவும்  திக்கற்றவர்களெல்லாருடைய  நியாயத்துக்காகவும்  உன்  வாயைத்  திற.  {Prov  31:8}

 

உன்  வாயைத்  திறந்து,  நீதியாய்  நியாயந்தீர்த்து,  சிறுமையும்  எளிமையுமானவனுக்கு  நியாயஞ்செய்.  {Prov  31:9}

 

குணசாலியான  ஸ்திரீயைக்  கண்டுபிடிப்பவன்  யார்?  அவளுடைய  விலை  முத்துக்களைப்பார்க்கிலும்  உயர்ந்தது.  {Prov  31:10}

 

அவள்  புருஷனுடைய  இருதயம்  அவளை  நம்பும்;  அவன்  சம்பத்துக்  குறையாது.  {Prov  31:11}

 

அவள்  உயிரோடிருக்கிற  நாளெல்லாம்  அவனுக்குத்  தீமையையல்ல,  நன்மையையே  செய்கிறாள்.  {Prov  31:12}

 

ஆட்டுமயிரையும்  சணலையும்  தேடி,  தன்  கைகளினால்  உற்சாகத்தோடே  வேலைசெய்கிறாள்.  {Prov  31:13}

 

அவள்  வியாபாரக்  கப்பல்களைப்போலிருக்கிறாள்;  தூரத்திலிருந்து  தன்  ஆகாரத்தைக்  கொண்டுவருகிறாள்.  {Prov  31:14}

 

இருட்டோடே  எழுந்து  தன்  வீட்டாருக்கு  ஆகாரங்கொடுத்து,  தன்  வேலைக்காரிகளுக்குப்  படியளக்கிறாள்.  {Prov  31:15}

 

ஒரு  வயலை  விசாரித்து  அதை  வாங்குகிறாள்;  தன்  கைகளின்  சம்பாத்தியத்தினால்  திராட்சத்தோட்டத்தை  நாட்டுகிறாள்.  {Prov  31:16}

 

தன்னைப்  பெலத்தால்  இடைக்கட்டிக்கொண்டு,  தன்  கைகளைப்  பலப்படுத்துகிறாள்.  {Prov  31:17}

 

தன்  வியாபாரம்  பிரயோஜனமுள்ளதென்று  அறிந்திருக்கிறாள்;  இரவிலே  அவள்  விளக்கு  அணையாதிருக்கும்.  {Prov  31:18}

 

தன்  கைகளை  இராட்டினத்தில்  வைக்கிறாள்;  அவள்  விரல்கள்  கதிரைப்  பிடிக்கும்.  {Prov  31:19}

 

சிறுமையானவர்களுக்குத்  தன்  கையைத்  திறந்து,  ஏழைகளுக்குத்  தன்  கரங்களை  நீட்டுகிறாள்.  {Prov  31:20}

 

தன்  வீட்டார்  அனைவருக்கும்  இரட்டைப்புரை  உடுப்பிருக்கிறதால்,  தன்  வீட்டாரினிமித்தம்  குளிருக்குப்  பயப்படாள்.  {Prov  31:21}

 

இரத்தினக்  கம்பளங்களைத்  தனக்கு  உண்டுபண்ணுகிறாள்;  மெல்லிய  புடவையும்  இரத்தாம்பரமும்  அவள்  உடுப்பு.  {Prov  31:22}

 

அவள்  புருஷன்  தேசத்து  மூப்பர்களோடே  நியாயஸ்தலங்களில்  உட்கார்ந்திருக்கையில்  பேர்பெற்றவனாயிருக்கிறான்.  {Prov  31:23}

 

மெல்லிய  புடவைகளை  உண்டுபண்ணி  விற்கிறாள்;  கச்சைகளை  வர்த்தகரிடத்தில்  ஒப்புவிக்கிறாள்.  {Prov  31:24}

 

அவள்  உடை  பலமும்  அலங்காரமுமாயிருக்கிறது;  வருங்காலத்தைப்பற்றியும்  மகிழுகிறாள்.  {Prov  31:25}

 

தன்  வாயை  ஞானம்  விளங்கத்  திறக்கிறாள்;  தயையுள்ள  போதகம்  அவள்  நாவின்மேல்  இருக்கிறது.  {Prov  31:26}

 

அவள்  சோம்பலின்  அப்பத்தைப்  புசியாமல்,  தன்  வீட்டுக்காரியம்  எப்படி  நடக்கிறது  என்று  கண்ணோக்கமாயிருக்கிறாள்.  {Prov  31:27}

 

அவள்  பிள்ளைகள்  எழும்பி,  அவளைப்  பாக்கியவதி  என்கிறார்கள்;  அவள்  புருஷனும்  அவளைப்பார்த்து:  {Prov  31:28}

 

அநேகம்  பெண்கள்  குணசாலிகளாயிருந்ததுண்டு;  நீயோ  அவர்கள்  எல்லாருக்கும்  மேற்பட்டவள்  என்று  அவளைப்  புகழுகிறான்.  {Prov  31:29}

 

சௌந்தரியம்  வஞ்சனையுள்ளது,  அழகும்  வீண்,  கர்த்தருக்குப்  பயப்படுகிற  ஸ்திரீயே  புகழப்படுவாள்.  {Prov  31:30}

 

அவள்  கைகளின்  பலனை  அவளுக்குக்  கொடுங்கள்;  அவளுடைய  செய்கைகள்  வாசல்களில்  அவளைப்  புகழக்கடவது.  {Prov  31:31}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!