Showing posts with label 2 Timothy. Show all posts
Showing posts with label 2 Timothy. Show all posts

Wednesday, June 08, 2016

2 Theemoaththeayu 4 | 2 தீமோத்தேயு 4 | 2 Timothy 4

நான்  தேவனுக்கு  முன்பாகவும்,  உயிரோடிருக்கிறவர்களையும்  மரித்தவர்களையும்  நியாயந்தீர்க்கப்போகிற  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்கு  முன்பாகவும்,  அவருடைய  பிரசன்னமாகுதலையும்  அவருடைய  ராஜ்யத்தையும்  சாட்சியாக  வைத்துக்  கட்டளையிடுகிறதாவது:  (2தீமோத்தேயு  4:1)

naan  theavanukku  munbaagavum,  uyiroadirukki’ravarga'laiyum  mariththavarga'laiyum  niyaayantheerkkappoagi’ra  karththaraagiya  iyeasuki’risthuvukku  munbaagavum,  avarudaiya  pirasannamaaguthalaiyum  avarudaiya  raajyaththaiyum  saadchiyaaga  vaiththuk  katta'laiyidugi’rathaavathu:  (2theemoaththeayu  4:1)

சமயம்  வாய்த்தாலும்  வாய்க்காவிட்டாலும்  ஜாக்கிரதையாய்த்  திருவசனத்தைப்  பிரசங்கம்பண்ணு;  எல்லா  நீடிய  சாந்தத்தோடும்  உபதேசத்தோடும்  கண்டனம்பண்ணி,  கடிந்துகொண்டு,  புத்திசொல்லு.  (2தீமோத்தேயு  4:2)

samayam  vaayththaalum  vaaykkaavittaalum  jaakkirathaiyaayth  thiruvasanaththaip  pirasanggampa'n'nu;  ellaa  neediya  saanthaththoadum  ubatheasaththoadum  ka'ndanampa'n'ni,  kadinthuko'ndu,  buththisollu.  (2theemoaththeayu  4:2)

ஏனென்றால்,  அவர்கள்  ஆரோக்கியமான  உபதேசத்தைப்  பொறுக்க  மனதில்லாமல்,  செவித்தினவுள்ளவர்களாகி,  தங்கள்  சுய  இச்சைகளுக்கேற்ற  போதகர்களைத்  தங்களுக்குத்  திரளாகச்  சேர்த்துக்கொண்டு,  (2தீமோத்தேயு  4:3)

eanen’raal,  avarga'l  aaroakkiyamaana  ubatheasaththaip  po’rukka  manathillaamal,  seviththinavu'l'lavarga'laagi,  thangga'l  suya  ichchaiga'lukkeat’ra  poathagarga'laith  thangga'lukkuth  thira'laagach  searththukko'ndu,  (2theemoaththeayu  4:3)

சத்தியத்துக்குச்  செவியை  விலக்கி,  கட்டுக்கதைகளுக்குச்  சாய்ந்துபோகுங்காலம்  வரும்.  (2தீமோத்தேயு  4:4)

saththiyaththukkuch  seviyai  vilakki,  kattukkathaiga'lukkuch  saaynthupoagungkaalam  varum.  (2theemoaththeayu  4:4)

நீயோ  எல்லாவற்றிலும்  மனத்தெளிவுள்ளவனாயிரு,  தீங்கநுபவி,  சுவிசேஷகனுடைய  வேலையைச்  செய்,  உன்  ஊழியத்தை  நிறைவேற்று.  (2தீமோத்தேயு  4:5)

neeyoa  ellaavat’rilum  manaththe'livu'l'lavanaayiru,  theengganubavi,  suviseashaganudaiya  vealaiyaich  sey,  un  oozhiyaththai  ni’raiveat’ru.  (2theemoaththeayu  4:5)

ஏனென்றால்,  நான்  இப்பொழுதே  பானபலியாக  வார்க்கப்பட்டுப்போகிறேன்;  நான்  தேகத்தை  விட்டுப்  பிரியும்  காலம்  வந்தது.  (2தீமோத்தேயு  4:6)

eanen’raal,  naan  ippozhuthea  baanabaliyaaga  vaarkkappattuppoagi’rean;  naan  theagaththai  vittup  piriyum  kaalam  vanthathu.  (2theemoaththeayu  4:6)

நல்ல  போராட்டத்தைப்  போராடினேன்,  ஓட்டத்தை  முடித்தேன்,  விசுவாசத்தைக்  காத்துக்கொண்டேன்.  (2தீமோத்தேயு  4:7)

nalla  poaraattaththaip  poaraadinean,  oattaththai  mudiththean,  visuvaasaththaik  kaaththukko'ndean.  (2theemoaththeayu  4:7)

இதுமுதல்  நீதியின்  கிரீடம்  எனக்காக  வைக்கப்பட்டிருக்கிறது,  நீதியுள்ள  நியாயாதிபதியாகிய  கர்த்தர்  அந்நாளிலே  அதை  எனக்குத்  தந்தருளுவார்;  எனக்கு  மாத்திரமல்ல,  அவர்  பிரசன்னமாகுதலை  விரும்பும்  யாவருக்கும்  அதைத்  தந்தருளுவார்.  (2தீமோத்தேயு  4:8)

ithumuthal  neethiyin  kireedam  enakkaaga  vaikkappattirukki’rathu,  neethiyu'l'la  niyaayaathibathiyaagiya  karththar  annaa'lilea  athai  enakkuth  thantharu'luvaar;  enakku  maaththiramalla,  avar  pirasannamaaguthalai  virumbum  yaavarukkum  athaith  thantharu'luvaar.  (2theemoaththeayu  4:8)

நீ  சீக்கிரமாய்  என்னிடத்தில்  வரும்படி  ஜாக்கிரதைப்படு.  (2தீமோத்தேயு  4:9)

nee  seekkiramaay  ennidaththil  varumpadi  jaakkirathaippadu.  (2theemoaththeayu  4:9)

ஏனென்றால்,  தேமா  இப்பிரபஞ்சத்தின்மேல்  ஆசைவைத்து,  என்னைவிட்டுப்  பிரிந்து,  தெசலோனிக்கே  பட்டணத்துக்குப்  போய்விட்டான்;  கிரெஸ்கே  கலாத்தியா  நாட்டிற்கும்,  தீத்து  தல்மாத்தியா  நாட்டிற்கும்  போய்விட்டார்கள்.  (2தீமோத்தேயு  4:10)

eanen’raal,  theamaa  ippirapagnchaththinmeal  aasaivaiththu,  ennaivittup  pirinthu,  thesaloanikkea  patta'naththukkup  poayvittaan;  kireskea  kalaaththiyaa  naatti’rkum,  theeththu  thalmaaththiyaa  naatti’rkum  poayvittaarga'l.  (2theemoaththeayu  4:10)

லூக்காமாத்திரம்  என்னோடே  இருக்கிறான்.  மாற்குவை  உன்னோடே  கூட்டிக்கொண்டுவா;  ஊழியத்தில்  அவன்  எனக்குப்  பிரயோஜனமுள்ளவன்.  (2தீமோத்தேயு  4:11)

lookkaamaaththiram  ennoadea  irukki’raan.  maa’rkuvai  unnoadea  koottikko'nduvaa;  oozhiyaththil  avan  enakkup  pirayoajanamu'l'lavan.  (2theemoaththeayu  4:11)

தீகிக்குவை  நான்  எபேசுவுக்கு  அனுப்பினேன்.  (2தீமோத்தேயு  4:12)

theegikkuvai  naan  ebeasuvukku  anuppinean.  (2theemoaththeayu  4:12)

துரோவா  பட்டணத்திலிருக்கிற  கார்ப்பு  என்பவன்  வசத்தில்  நான்  வைத்துவந்த  மேலங்கியையும்,  புஸ்தகங்களையும்,  விசேஷமாய்த்  தோற்சுருள்களையும்,  நீ  வருகிறபோது  எடுத்துக்கொண்டுவா.  (2தீமோத்தேயு  4:13)

thuroavaa  patta'naththilirukki’ra  kaarppu  enbavan  vasaththil  naan  vaiththuvantha  mealanggiyaiyum,  pusthagangga'laiyum,  viseashamaayth  thoa’rsuru'lga'laiyum,  nee  varugi’rapoathu  eduththukko'nduvaa.  (2theemoaththeayu  4:13)

கன்னானாகிய  அலெக்சந்தர்  எனக்கு  வெகு  தீமைசெய்தான்;  அவனுடைய  செய்கைக்குத்தக்கதாகக்  கர்த்தர்  அவனுக்குப்  பதிலளிப்பாராக.  (2தீமோத்தேயு  4:14)

kannaanaagiya  aleksanthar  enakku  vegu  theemaiseythaan;  avanudaiya  seygaikkuththakkathaagak  karththar  avanukkup  bathila'lippaaraaga.  (2theemoaththeayu  4:14)

நீயும்  அவனைக்குறித்து  எச்சரிக்கையாயிரு;  அவன்  நம்முடைய  வார்த்தைகளுக்கு  மிகவும்  எதிர்த்துநின்றவன்.  (2தீமோத்தேயு  4:15)

neeyum  avanaikku’riththu  echcharikkaiyaayiru;  avan  nammudaiya  vaarththaiga'lukku  migavum  ethirththunin’ravan.  (2theemoaththeayu  4:15)

நான்  முதல்விசை  உத்தரவுசொல்ல  நிற்கையில்  ஒருவனும்  என்னோடேகூட  இருக்கவில்லை,  எல்லாரும்  என்னைக்  கைவிட்டார்கள்;  அந்தக்  குற்றம்  அவர்கள்மேல்  சுமராதிருப்பதாக.  (2தீமோத்தேயு  4:16)

naan  muthalvisai  uththaravusolla  ni’rkaiyil  oruvanum  ennoadeakooda  irukkavillai,  ellaarum  ennaik  kaivittaarga'l;  anthak  kut’ram  avarga'lmeal  sumaraathiruppathaaga.  (2theemoaththeayu  4:16)

கர்த்தரோ  எனக்குத்  துணையாக  நின்று,  என்னாலே  பிரசங்கம்  நிறைவேறுகிறதற்காகவும்,  புறஜாதியாரெல்லாரும்  கேட்கிறதற்காகவும்,  என்னைப்  பலப்படுத்தினார்;  சிங்கத்தின்  வாயிலிருந்தும்  நான்  இரட்சிக்கப்பட்டேன்.  (2தீமோத்தேயு  4:17)

karththaroa  enakkuth  thu'naiyaaga  nin’ru,  ennaalea  pirasanggam  ni’raivea’rugi’ratha’rkaagavum,  pu’rajaathiyaarellaarum  keadki’ratha’rkaagavum,  ennaip  balappaduththinaar;  singgaththin  vaayilirunthum  naan  iradchikkappattean.  (2theemoaththeayu  4:17)

கர்த்தர்  எல்லாத்  தீமையினின்றும்  என்னை  இரட்சித்து,  தம்முடைய  பரம  ராஜ்யத்தை  அடையும்படி  காப்பாற்றுவார்;  அவருக்குச்  சதாகாலங்களிலும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  (2தீமோத்தேயு  4:18)

karththar  ellaath  theemaiyinin’rum  ennai  iradchiththu,  thammudaiya  parama  raajyaththai  adaiyumpadi  kaappaat’ruvaar;  avarukkuch  sathaakaalangga'lilum  magimai  u'ndaavathaaga.  aamen.  (2theemoaththeayu  4:18)

பிரிஸ்காளுக்கும்  ஆக்கில்லாவுக்கும்,  ஒநேசிப்போருவின்  வீட்டாருக்கும்  என்  வாழ்த்துதலைச்  சொல்லு.  (2தீமோத்தேயு  4:19)

piriskaa'lukkum  aakkillaavukkum,  oneasippoaruvin  veettaarukkum  en  vaazhththuthalaich  sollu.  (2theemoaththeayu  4:19)

எரஸ்து  கொரிந்துபட்டணத்தில்  இருந்துவிட்டான்;  துரோப்பீமுவை  மிலேத்துவில்  வியாதிப்பட்டவனாக  விட்டுவந்தேன்.  (2தீமோத்தேயு  4:20)

erasthu  korinthupatta'naththil  irunthuvittaan;  thuroappeemuvai  mileaththuvil  viyaathippattavanaaga  vittuvanthean.  (2theemoaththeayu  4:20)

மாரிகாலத்துக்குமுன்  நீ  வந்து  சேரும்படி  ஜாக்கிரதைப்படு.  ஐபூலுவும்,  புதேஞ்சும்,  லீனுவும்,  கலவுதியாளும்,  மற்றெல்லாச்  சகோதரரும்  உனக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (2தீமோத்தேயு  4:21)

maarikaalaththukkumun  nee  vanthu  searumpadi  jaakkirathaippadu.  aibooluvum,  putheagnsum,  leenuvum,  kalavuthiyaa'lum,  mat’rellaach  sagoathararum  unakku  vaazhththuthal  sollugi’raarga'l.  (2theemoaththeayu  4:21)

கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  உன்  ஆவியுடனேகூட  இருப்பாராக.  கிருபை  உங்களோடிருப்பதாக.  ஆமென்.  (2தீமோத்தேயு  4:22)

karththaraagiya  iyeasuki’risthu  un  aaviyudaneakooda  iruppaaraaga.  kirubai  ungga'loadiruppathaaga.  aamen.  (2theemoaththeayu  4:22)


2 Theemoaththeayu 3 | 2 தீமோத்தேயு 3 | 2 Timothy 3

மேலும்,  கடைசிநாட்களில்  கொடிய  காலங்கள்  வருமென்று  அறிவாயாக.  (2தீமோத்தேயு  3:1)

mealum,  kadaisinaadka'lil  kodiya  kaalangga'l  varumen’ru  a’rivaayaaga.  (2theemoaththeayu  3:1)

எப்படியெனில்,  மனுஷர்கள்  தற்பிரியராயும்,  பணப்பிரியராயும்,  வீம்புக்காரராயும்,  அகந்தையுள்ளவர்களாயும்,  தூஷிக்கிறவர்களாயும்,  தாய்தகப்பன்மாருக்குக்  கீழ்ப்படியாதவர்களாயும்,  நன்றியறியாதவர்களாயும்,  பரிசுத்தமில்லாதவர்களாயும்,  (2தீமோத்தேயு  3:2)

eppadiyenil,  manusharga'l  tha’rpiriyaraayum,  pa'nappiriyaraayum,  veembukkaararaayum,  aganthaiyu'l'lavarga'laayum,  thooshikki’ravarga'laayum,  thaaythagappanmaarukkuk  keezhppadiyaathavarga'laayum,  nan’riya’riyaathavarga'laayum,  parisuththamillaathavarga'laayum,  (2theemoaththeayu  3:2)

சுபாவ  அன்பில்லாதவர்களாயும்,  இணங்காதவர்களாயும்,  அவதூறு  செய்கிறவர்களாயும்,  இச்சையடக்கமில்லாதவர்களாயும்,  கொடுமையுள்ளவர்களாயும்,  நல்லோரைப்  பகைக்கிறவர்களாயும்,  (2தீமோத்தேயு  3:3)

subaava  anbillaathavarga'laayum,  i'nanggaathavarga'laayum,  avathoo’ru  seygi’ravarga'laayum,  ichchaiyadakkamillaathavarga'laayum,  kodumaiyu'l'lavarga'laayum,  nalloaraip  pagaikki’ravarga'laayum,  (2theemoaththeayu  3:3)

துரோகிகளாயும்,  துணிகரமுள்ளவர்களாயும்,  இறுமாப்புள்ளவர்களாயும்,  தேவப்பிரியராயிராமல்  சுகபோகப்பிரியராயும்,  (2தீமோத்தேயு  3:4)

thuroagiga'laayum,  thu'nigaramu'l'lavarga'laayum,  i’rumaappu'l'lavarga'laayum,  theavappiriyaraayiraamal  sugaboagappiriyaraayum,  (2theemoaththeayu  3:4)

தேவபக்தியின்  வேஷத்தைத்  தரித்து  அதின்  பெலனை  மறுதலிக்கிறவர்களாயும்  இருப்பார்கள்;  இப்படிப்பட்டவர்களை  நீ  விட்டு  விலகு.  (2தீமோத்தேயு  3:5)

theavabakthiyin  veashaththaith  thariththu  athin  belanai  ma’ruthalikki’ravarga'laayum  iruppaarga'l;  ippadippattavarga'lai  nee  vittu  vilagu.  (2theemoaththeayu  3:5)

பாவங்களால்  நிறைந்து,  பற்பல  இச்சைகளால்  இழுப்புண்டு,  (2தீமோத்தேயு  3:6)

paavangga'laal  ni’rainthu,  pa’rpala  ichchaiga'laal  izhuppu'ndu,  (2theemoaththeayu  3:6)

எப்போதும்  கற்றாலும்  ஒருபோதும்  சத்தியத்தை  அறிந்து  உணராதவர்களாயிருக்கிற  பெண்பிள்ளைகளுடைய  வீடுகளில்  இப்படிப்பட்டவர்கள்  நுழைந்து,  அவர்களை  வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.  (2தீமோத்தேயு  3:7)

eppoathum  kat’raalum  orupoathum  saththiyaththai  a’rinthu  u'naraathavarga'laayirukki’ra  pe'npi'l'laiga'ludaiya  veeduga'lil  ippadippattavarga'l  nuzhainthu,  avarga'lai  vasappaduththikko'l'lugi’raarga'l.  (2theemoaththeayu  3:7)

யந்நேயும்  யம்பிரேயும்  மோசேக்கு  எதிர்த்து  நின்றதுபோல  இவர்களும்  சத்தியத்துக்கு  எதிர்த்து  நிற்கிறார்கள்;  இவர்கள்  துர்ப்புத்தியுள்ள  மனுஷர்கள்,  விசுவாசவிஷயத்தில்  பரீட்சைக்கு  நில்லாதவர்கள்.  (2தீமோத்தேயு  3:8)

yanneayum  yambireayum  moaseakku  ethirththu  nin’rathupoala  ivarga'lum  saththiyaththukku  ethirththu  ni’rki’raarga'l;  ivarga'l  thurpbuththiyu'l'la  manusharga'l,  visuvaasavishayaththil  pareedchaikku  nillaathavarga'l.  (2theemoaththeayu  3:8)

ஆனாலும்,  இவர்கள்  அதிகமாய்ப்  பலப்படுவதில்லை;  அவ்விருவருடைய  மதிகேடு  எல்லாருக்கும்  வெளிப்பட்டதுபோல,  இவர்களுடைய  மதிகேடும்  வெளிப்படும்.  (2தீமோத்தேயு  3:9)

aanaalum,  ivarga'l  athigamaayp  balappaduvathillai;  avviruvarudaiya  mathikeadu  ellaarukkum  ve'lippattathupoala,  ivarga'ludaiya  mathikeadum  ve'lippadum.  (2theemoaththeayu  3:9)

நீயோ  என்  போதகத்தையும்  நடக்கையையும்  நோக்கத்தையும்  விசுவாசத்தையும்  நீடிய  சாந்தத்தையும்  அன்பையும்  பொறுமையையும்,  (2தீமோத்தேயு  3:10)

neeyoa  en  poathagaththaiyum  nadakkaiyaiyum  noakkaththaiyum  visuvaasaththaiyum  neediya  saanthaththaiyum  anbaiyum  po’rumaiyaiyum,  (2theemoaththeayu  3:10)

அந்தியோகியா,  இக்கோனியா,  லீஸ்திரா  என்னும்  பட்டணங்களில்  எனக்கு  உண்டான  துன்பங்களையும்  பாடுகளையும்  நன்றாய்  அறிந்திருக்கிறாய்;  எவ்வளவோ  துன்பங்களைச்  சகித்தேன்;  இவையெல்லாவற்றினின்றும்  கர்த்தர்  என்னை  நீங்கலாக்கிவிட்டார்.  (2தீமோத்தேயு  3:11)

anthiyoakiyaa,  ikkoaniyaa,  leesthiraa  ennum  patta'nangga'lil  enakku  u'ndaana  thunbangga'laiyum  paaduga'laiyum  nan’raay  a’rinthirukki’raay;  evva'lavoa  thunbangga'laich  sagiththean;  ivaiyellaavat’rinin’rum  karththar  ennai  neenggalaakkivittaar.  (2theemoaththeayu  3:11)

அன்றியும்  கிறிஸ்து  இயேசுவுக்குள்  தேவபக்தியாய்  நடக்க  மனதாயிருக்கிற  யாவரும்  துன்பப்படுவார்கள்.  (2தீமோத்தேயு  3:12)

an’riyum  ki’risthu  iyeasuvukku'l  theavabakthiyaay  nadakka  manathaayirukki’ra  yaavarum  thunbappaduvaarga'l.  (2theemoaththeayu  3:12)

பொல்லாதவர்களும்  எத்தர்களுமானவர்கள்  மோசம்போக்குகிறவர்களாகவும்,  மோசம்போகிறவர்களாகவுமிருந்து  மேன்மேலும்  கேடுள்ளவர்களாவார்கள்.  (2தீமோத்தேயு  3:13)

pollaathavarga'lum  eththarga'lumaanavarga'l  moasampoakkugi’ravarga'laagavum,  moasampoagi’ravarga'laagavumirunthu  meanmealum  keadu'l'lavarga'laavaarga'l.  (2theemoaththeayu  3:13)

நீ  கற்று  நிச்சயித்துக்கொண்டவைகளில்  நிலைத்திரு;  அவைகளை  இன்னாரிடத்தில்  கற்றாய்  என்று  நீ  அறிந்திருக்கிறதுமல்லாமல்,  (2தீமோத்தேயு  3:14)

nee  kat’ru  nichchayiththukko'ndavaiga'lil  nilaiththiru;  avaiga'lai  innaaridaththil  kat’raay  en’ru  nee  a’rinthirukki’rathumallaamal,  (2theemoaththeayu  3:14)

கிறிஸ்து  இயேசுவைப்பற்றும்  விசுவாசத்தினாலே  உன்னை  இரட்சிப்புக்கேற்ற  ஞானமுள்ளவனாக்கத்தக்க  பரிசுத்த  வேத  எழுத்துக்களை,  நீ  சிறுவயதுமுதல்  அறிந்தவனென்றும்  உனக்குத்  தெரியும்.  (2தீமோத்தேயு  3:15)

ki’risthu  iyeasuvaippat’rum  visuvaasaththinaalea  unnai  iradchippukkeat’ra  gnaanamu'l'lavanaakkaththakka  parisuththa  veatha  ezhuththukka'lai,  nee  si’ruvayathumuthal  a’rinthavanen’rum  unakkuth  theriyum.  (2theemoaththeayu  3:15)

வேதவாக்கியங்களெல்லாம்  தேவஆவியினால்  அருளப்பட்டிருக்கிறது;  தேவனுடைய  மனுஷன்  தேறினவனாகவும்,  எந்த  நற்கிரியையுஞ்  செய்யத்  தகுதியுள்ளவனாகவும்  இருக்கும்படியாக,  (2தீமோத்தேயு  3:16)

veathavaakkiyangga'lellaam  theavaaaviyinaal  aru'lappattirukki’rathu;  theavanudaiya  manushan  thea’rinavanaagavum,  entha  na’rkiriyaiyugn  seyyath  thaguthiyu'l'lavanaagavum  irukkumpadiyaaga,  (2theemoaththeayu  3:16)

அவைகள்  உபதேசத்துக்கும்,  கடிந்துகொள்ளுதலுக்கும்,  சீர்திருத்தலுக்கும்,  நீதியைப்  படிப்பிக்குதலுக்கும்  பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.  (2தீமோத்தேயு  3:17)

avaiga'l  ubatheasaththukkum,  kadinthuko'l'luthalukkum,  seerthiruththalukkum,  neethiyaip  padippikkuthalukkum  pirayoajanamu'l'lavaiga'laayirukki’rathu.  (2theemoaththeayu  3:17)