Showing posts with label 1 Thesalonokeyar. Show all posts
Showing posts with label 1 Thesalonokeyar. Show all posts

Monday, June 06, 2016

1 Thesaloanikkeayar 5 | 1 தெசலோனிக்கேயர் 5 | 1 Thessalonians 5

சகோதரரே,  இவைகள்  நடக்குங்காலங்களையும்  சமயங்களையுங்குறித்து  உங்களுக்கு  எழுதவேண்டுவதில்லை.  (1தெசலோனிக்கேயர்  5:1)

sagoathararea,  ivaiga'l  nadakkungkaalangga'laiyum  samayangga'laiyungku’riththu  ungga'lukku  ezhuthavea'nduvathillai.  (1thesaloanikkeayar  5:1)

இரவிலே  திருடன்  வருகிறவிதமாய்க்  கர்த்தருடைய  நாள்  வருமென்று  நீங்களே  நன்றாய்  அறிந்திருக்கிறீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:2)

iravilea  thirudan  varugi’ravithamaayk  karththarudaiya  naa'l  varumen’ru  neengga'lea  nan’raay  a’rinthirukki’reerga'l.  (1thesaloanikkeayar  5:2)

சமாதானமும்  சவுக்கியமும்  உண்டென்று  அவர்கள்  சொல்லும்போது,  கர்ப்பவதியானவளுக்கு  வேதனை  வருகிறதுபோல,  அழிவு  சடிதியாய்  அவர்கள்மேல்  வரும்;  அவர்கள்  தப்பிப்போவதில்லை.  (1தெசலோனிக்கேயர்  5:3)

samaathaanamum  savukkiyamum  u'nden’ru  avarga'l  sollumpoathu,  karppavathiyaanava'lukku  veathanai  varugi’rathupoala,  azhivu  sadithiyaay  avarga'lmeal  varum;  avarga'l  thappippoavathillai.  (1thesaloanikkeayar  5:3)

சகோதரரே,  அந்த  நாள்  திருடனைப்போல  உங்களைப்  பிடித்துக்கொள்ளத்தக்கதாக,  நீங்கள்  அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.  (1தெசலோனிக்கேயர்  5:4)

sagoathararea,  antha  naa'l  thirudanaippoala  ungga'laip  pidiththukko'l'laththakkathaaga,  neengga'l  anthagaaraththilirukki’ravarga'lallavea.  (1thesaloanikkeayar  5:4)

நீங்களெல்லாரும்  வெளிச்சத்தின்  பிள்ளைகளும்,  பகலின்  பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;  நாம்  இரவுக்கும்  இருளுக்கும்  உள்ளானவர்களல்லவே.  (1தெசலோனிக்கேயர்  5:5)

neengga'lellaarum  ve'lichchaththin  pi'l'laiga'lum,  pagalin  pi'l'laiga'lumaayirukki’reerga'l;  naam  iravukkum  iru'lukkum  u'l'laanavarga'lallavea.  (1thesaloanikkeayar  5:5)

ஆகையால்,  மற்றவர்கள்  தூங்குகிறதுபோல  நாம்  தூங்காமல்,  விழித்துக்கொண்டு  தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.  (1தெசலோனிக்கேயர்  5:6)

aagaiyaal,  mat’ravarga'l  thoonggugi’rathupoala  naam  thoonggaamal,  vizhiththukko'ndu  the'linthavarga'laayirukkakkadavoam.  (1thesaloanikkeayar  5:6)

தூங்குகிறவர்கள்  இராத்திரியிலே  தூங்குவார்கள்;  வெறிகொள்ளுகிறவர்கள்  இராத்திரியிலே  வெறிகொள்ளுவார்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:7)

thoonggugi’ravarga'l  iraaththiriyilea  thoongguvaarga'l;  ve’riko'l'lugi’ravarga'l  iraaththiriyilea  ve’riko'l'luvaarga'l.  (1thesaloanikkeayar  5:7)

பகலுக்குரியவர்களாகிய  நாமோ  தெளிந்தவர்களாயிருந்து,  விசுவாசம்  அன்பு  என்னும்  மார்க்கவசத்தையும்,  இரட்சிப்பின்  நம்பிக்கையென்னும்  தலைச்சீராவையும்  தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.  (1தெசலோனிக்கேயர்  5:8)

pagalukkuriyavarga'laagiya  naamoa  the'linthavarga'laayirunthu,  visuvaasam  anbu  ennum  maarkkavasaththaiyum,  iradchippin  nambikkaiyennum  thalaichseeraavaiyum  thariththukko'ndirukkakkadavoam.  (1thesaloanikkeayar  5:8)

தேவன்  நம்மைக்  கோபாக்கினைக்கென்று  நியமிக்காமல்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்  இரட்சிப்படைவதற்கென்று  நியமித்தார்.  (1தெசலோனிக்கேயர்  5:9)

theavan  nammaik  koabaakkinaikken’ru  niyamikkaamal,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthumoolamaay  iradchippadaivatha’rken’ru  niyamiththaar.  (1thesaloanikkeayar  5:9)

நாம்  விழித்திருப்பவர்களானாலும்,  நித்திரையடைந்தவர்களானாலும்,  தம்முடனேகூட  நாம்  ஏகமாய்ப்  பிழைத்திருக்கும்படி  அவர்  நமக்காக  மரித்தாரே.  (1தெசலோனிக்கேயர்  5:10)

naam  vizhiththiruppavarga'laanaalum,  niththiraiyadainthavarga'laanaalum,  thammudaneakooda  naam  eagamaayp  pizhaiththirukkumpadi  avar  namakkaaga  mariththaarea.  (1thesaloanikkeayar  5:10)

ஆகையால்  நீங்கள்  செய்துவருகிறபடியே,  ஒருவரையொருவர்  தேற்றி,  ஒருவருக்கொருவர்  பக்திவிருத்தி  உண்டாகும்படி  செய்யுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:11)

aagaiyaal  neengga'l  seythuvarugi’rapadiyea,  oruvaraiyoruvar  theat’ri,  oruvarukkoruvar  bakthiviruththi  u'ndaagumpadi  seyyungga'l.  (1thesaloanikkeayar  5:11)

அன்றியும்,  சகோதரரே,  உங்களுக்குள்ளே  பிரயாசப்பட்டு,  கர்த்தருக்குள்  உங்களை  விசாரணைசெய்கிறவர்களாயிருந்து,  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறவர்களை  நீங்கள்  மதித்து,  (1தெசலோனிக்கேயர்  5:12)

an’riyum,  sagoathararea,  ungga'lukku'l'lea  pirayaasappattu,  karththarukku'l  ungga'lai  visaara'naiseygi’ravarga'laayirunthu,  ungga'lukkup  buththisollugi’ravarga'lai  neengga'l  mathiththu,  (1thesaloanikkeayar  5:12)

அவர்களுடைய  கிரியையினிமித்தம்  அவர்களை  மிகவும்  அன்பாய்  எண்ணிக்கொள்ளும்படி  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறோம்.  உங்களுக்குள்ளே  சமாதானமாயிருங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:13)

avarga'ludaiya  kiriyaiyinimiththam  avarga'lai  migavum  anbaay  e'n'nikko'l'lumpadi  ungga'lai  vea'ndikko'l'lugi’roam.  ungga'lukku'l'lea  samaathaanamaayirungga'l.  (1thesaloanikkeayar  5:13)

மேலும்,  சகோதரரே,  நாங்கள்  உங்களுக்குப்  போதிக்கிறதென்னவென்றால்,  ஒழுங்கில்லாதவர்களுக்குப்  புத்திசொல்லுங்கள்,  திடனற்றவர்களைத்  தேற்றுங்கள்,  பலவீனரைத்  தாங்குங்கள்,  எல்லாரிடத்திலும்  நீடிய  சாந்தமாயிருங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:14)

mealum,  sagoathararea,  naangga'l  ungga'lukkup  poathikki’rathennaven’raal,  ozhunggillaathavarga'lukkup  buththisollungga'l,  thidanat’ravarga'laith  theat’rungga'l,  balaveenaraith  thaanggungga'l,  ellaaridaththilum  neediya  saanthamaayirungga'l.  (1thesaloanikkeayar  5:14)

ஒருவனும்  மற்றொருவன்  செய்யும்  தீமைக்குத்  தீமைசெய்யாதபடி  பாருங்கள்;  உங்களுக்குள்ளும்  மற்ற  யாவருக்குள்ளும்  எப்பொழுதும்  நன்மைசெய்ய  நாடுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:15)

oruvanum  mat’roruvan  seyyum  theemaikkuth  theemaiseyyaathapadi  paarungga'l;  ungga'lukku'l'lum  mat’ra  yaavarukku'l'lum  eppozhuthum  nanmaiseyya  naadungga'l.  (1thesaloanikkeayar  5:15)

எப்பொழுதும்  சந்தோஷமாயிருங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:16)

eppozhuthum  santhoashamaayirungga'l.  (1thesaloanikkeayar  5:16)

இடைவிடாமல்  ஜெபம்பண்ணுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:17)

idaividaamal  jebampa'n'nungga'l.  (1thesaloanikkeayar  5:17)

எல்லாவற்றிலேயும்  ஸ்தோத்திரஞ்  செய்யுங்கள்;  அப்படிச்  செய்வதே  கிறிஸ்து  இயேசுவுக்குள்  உங்களைக்குறித்துத்  தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.  (1தெசலோனிக்கேயர்  5:18)

ellaavat’rileayum  sthoaththiragn  seyyungga'l;  appadich  seyvathea  ki’risthu  iyeasuvukku'l  ungga'laikku’riththuth  theavanudaiya  siththamaayirukki’rathu.  (1thesaloanikkeayar  5:18)

ஆவியை  அவித்துப்போடாதிருங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:19)

aaviyai  aviththuppoadaathirungga'l.  (1thesaloanikkeayar  5:19)

தீர்க்கதரிசனங்களை  அற்பமாயெண்ணாதிருங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:20)

theerkkatharisanangga'lai  a’rpamaaye'n'naathirungga'l.  (1thesaloanikkeayar  5:20)

எல்லாவற்றையும்  சோதித்துப்  பார்த்து,  நலமானதைப்  பிடித்துக்கொள்ளுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:21)

ellaavat’raiyum  soathiththup  paarththu,  nalamaanathaip  pidiththukko'l'lungga'l.  (1thesaloanikkeayar  5:21)

பொல்லாங்காய்த்  தோன்றுகிற  எல்லாவற்றையும்  விட்டு  விலகுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:22)

pollaanggaayth  thoan’rugi’ra  ellaavat’raiyum  vittu  vilagungga'l.  (1thesaloanikkeayar  5:22)

சமாதானத்தின்  தேவன்  தாமே  உங்களை  முற்றிலும்  பரிசுத்தமாக்குவாராக.  உங்கள்  ஆவி  ஆத்துமா  சரீரம்  முழுவதும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  வரும்போது  குற்றமற்றதாயிருக்கும்படி  காக்கப்படுவதாக.  (1தெசலோனிக்கேயர்  5:23)

samaathaanaththin  theavan  thaamea  ungga'lai  mut’rilum  parisuththamaakkuvaaraaga.  ungga'l  aavi  aaththumaa  sareeram  muzhuvathum,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthu  varumpoathu  kut’ramat’rathaayirukkumpadi  kaakkappaduvathaaga.  (1thesaloanikkeayar  5:23)

உங்களை  அழைக்கிறவர்  உண்மையுள்ளவர்,  அவர்  அப்படியே  செய்வார்.  (1தெசலோனிக்கேயர்  5:24)

ungga'lai  azhaikki’ravar  u'nmaiyu'l'lavar,  avar  appadiyea  seyvaar.  (1thesaloanikkeayar  5:24)

சகோதரரே,  எங்களுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:25)

sagoathararea,  engga'lukkaaga  vea'ndikko'l'lungga'l.  (1thesaloanikkeayar  5:25)

சகோதரரெல்லாரையும்  பரிசுத்த  முத்தத்தோடே  வாழ்த்துங்கள்.  (1தெசலோனிக்கேயர்  5:26)

sagoathararellaaraiyum  parisuththa  muththaththoadea  vaazhththungga'l.  (1thesaloanikkeayar  5:26)

இந்த  நிருபம்  பரிசுத்தமான  சகோதரர்  யாவருக்கும்  வாசிக்கப்படும்படி  செய்யவேண்டுமென்று  கர்த்தர்பேரில்  ஆணையிட்டு  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (1தெசலோனிக்கேயர்  5:27)

intha  nirubam  parisuththamaana  sagoatharar  yaavarukkum  vaasikkappadumpadi  seyyavea'ndumen’ru  karththarpearil  aa'naiyittu  ungga'lukkuch  sollugi’rean.  (1thesaloanikkeayar  5:27)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய  கிருபை  உங்களுடனேகூட  இருப்பதாக.  ஆமென்.  (1தெசலோனிக்கேயர்  5:28)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinudaiya  kirubai  ungga'ludaneakooda  iruppathaaga.  aamen.  (1thesaloanikkeayar  5:28)


1 Thesaloanikkeayar 4 | 1 தெசலோனிக்கேயர் 4 | 1 Thessalonians 4

அன்றியும்,  சகோதரரே,  நீங்கள்  இன்னின்ன  பிரகாரமாய்  நடக்கவும்,  தேவனுக்குப்  பிரியமாயிருக்கவும்  வேண்டுமென்று,  நீங்கள்  எங்களால்  கேட்டு  ஏற்றுக்கொண்டபடியே,  அதிகமதிகமாய்த்  தேறும்படிக்கு,  கர்த்தராகிய  இயேசுவுக்குள்  உங்களை  வேண்டிக்கொண்டு  புத்திசொல்லுகிறோம்.  (1தெசலோனிக்கேயர்  4:1)

an’riyum,  sagoathararea,  neengga'l  inninna  piragaaramaay  nadakkavum,  theavanukkup  piriyamaayirukkavum  vea'ndumen’ru,  neengga'l  engga'laal  keattu  eat’rukko'ndapadiyea,  athigamathigamaayth  thea’rumpadikku,  karththaraagiya  iyeasuvukku'l  ungga'lai  vea'ndikko'ndu  buththisollugi’roam.  (1thesaloanikkeayar  4:1)

கர்த்தராகிய  இயேசுவினாலே  நாங்கள்  உங்களுக்குக்  கொடுத்த  கட்டளைகளை  அறிந்திருக்கிறீர்களே.  (1தெசலோனிக்கேயர்  4:2)

karththaraagiya  iyeasuvinaalea  naangga'l  ungga'lukkuk  koduththa  katta'laiga'lai  a’rinthirukki’reerga'lea.  (1thesaloanikkeayar  4:2)

நீங்கள்  பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே  தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.  அந்தப்படி,  நீங்கள்  வேசிமார்க்கத்துக்கு  விலகியிருந்து,  (1தெசலோனிக்கேயர்  4:3)

neengga'l  parisuththamu'l'lavarga'laagavea'ndumenbathea  theavanudaiya  siththamaayirukki’rathu.  anthappadi,  neengga'l  veasimaarkkaththukku  vilagiyirunthu,  (1thesaloanikkeayar  4:3)

தேவனை  அறியாத  அஞ்ஞானிகளைப்போல  மோக  இச்சைக்குட்படாமல்,  (1தெசலோனிக்கேயர்  4:4)

theavanai  a’riyaatha  agngnaaniga'laippoala  moaga  ichchaikkudpadaamal,  (1thesaloanikkeayar  4:4)

உங்களில்  அவனவன்  தன்தன்  சரீர  பாண்டத்தைப்  பரிசுத்தமாயும்  கனமாயும்  ஆண்டுகொள்ளும்படி  அறிந்து:  (1தெசலோனிக்கேயர்  4:5)

ungga'lil  avanavan  thanthan  sareera  paa'ndaththaip  parisuththamaayum  kanamaayum  aa'nduko'l'lumpadi  a’rinthu:  (1thesaloanikkeayar  4:5)

இந்த  விஷயத்தில்  ஒருவனும்  மீறாமலும்  தன்  சகோதரனை  வஞ்சியாமலும்  இருக்கவேண்டும்;  முன்னமே  நாங்கள்  உங்களுக்குச்  சொல்லி,  சாட்சியாக  எச்சரித்தபடியே  இப்படிப்பட்ட  விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக்  கர்த்தர்  நீதியைச்  சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.  (1தெசலோனிக்கேயர்  4:6)

intha  vishayaththil  oruvanum  mee’raamalum  than  sagoatharanai  vagnchiyaamalum  irukkavea'ndum;  munnamea  naangga'l  ungga'lukkuch  solli,  saadchiyaaga  echchariththapadiyea  ippadippatta  vishayangga'lellaavat’raiyungku’riththuk  karththar  neethiyaich  sarikkattugi’ravaraayirukki’raar.  (1thesaloanikkeayar  4:6)

தேவன்  நம்மை  அசுத்தத்திற்கல்ல  பரிசுத்தத்திற்கே  அழைத்திருக்கிறார்.  (1தெசலோனிக்கேயர்  4:7)

theavan  nammai  asuththaththi’rkalla  parisuththaththi’rkea  azhaiththirukki’raar.  (1thesaloanikkeayar  4:7)

ஆகையால்  அசட்டைபண்ணுகிறவன்  மனுஷரை  அல்ல,  தமது  பரிசுத்தஆவியை  நமக்குத்  தந்தருளின  தேவனையே  அசட்டைபண்ணுகிறான்.  (1தெசலோனிக்கேயர்  4:8)

aagaiyaal  asattaipa'n'nugi’ravan  manusharai  alla,  thamathu  parisuththaaaviyai  namakkuth  thantharu'lina  theavanaiyea  asattaipa'n'nugi’raan.  (1thesaloanikkeayar  4:8)

சகோதர  சிநேகத்தைக்குறித்து  நான்  உங்களுக்கு  எழுதவேண்டுவதில்லை;  நீங்கள்  ஒருவரிலொருவர்  அன்பாயிருக்கும்படிக்குத்  தேவனால்  போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.  (1தெசலோனிக்கேயர்  4:9)

sagoathara  sineagaththaikku’riththu  naan  ungga'lukku  ezhuthavea'nduvathillai;  neengga'l  oruvariloruvar  anbaayirukkumpadikkuth  theavanaal  poathikkappattavarga'laayirukki’reerga'lea.  (1thesaloanikkeayar  4:9)

அந்தப்படி  நீங்கள்  மக்கெதோனியா  நாடெங்குமுள்ள  சகோதரரெல்லாருக்கும்  செய்துவருகிறீர்கள்.  சகோதரரே,  அன்பிலே  நீங்கள்  இன்னும்  அதிகமாய்ப்  பெருகவும்;  (1தெசலோனிக்கேயர்  4:10)

anthappadi  neengga'l  makkethoaniyaa  naadenggumu'l'la  sagoathararellaarukkum  seythuvarugi’reerga'l.  sagoathararea,  anbilea  neengga'l  innum  athigamaayp  perugavum;  (1thesaloanikkeayar  4:10)

புறம்பேயிருக்கிறவர்களைப்  பற்றி  யோக்கியமாய்  நடந்து,  ஒன்றிலும்  உங்களுக்குக்  குறைவில்லாதிருக்கும்படிக்கு,  (1தெசலோனிக்கேயர்  4:11)

pu’rambeayirukki’ravarga'laip  pat’ri  yoakkiyamaay  nadanthu,  on’rilum  ungga'lukkuk  ku’raivillaathirukkumpadikku,  (1thesaloanikkeayar  4:11)

நாங்கள்  உங்களுக்குக்  கட்டளையிட்டபடியே,  அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி  நாடவும்,  உங்கள்  சொந்த  அலுவல்களைப்  பார்க்கவும்,  உங்கள்  சொந்தக்  கைகளினாலே  வேலைசெய்யவும்  வேண்டுமென்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறோம்.  (1தெசலோனிக்கேயர்  4:12)

naangga'l  ungga'lukkuk  katta'laiyittapadiyea,  amaithalu'l'lavarga'laayirukkumpadi  naadavum,  ungga'l  sontha  aluvalga'laip  paarkkavum,  ungga'l  sonthak  kaiga'linaalea  vealaiseyyavum  vea'ndumen’ru  ungga'lukkup  buththisollugi’roam.  (1thesaloanikkeayar  4:12)

அன்றியும்,  சகோதரரே,  நித்திரையடைந்தவர்களினிமித்தம்  நீங்கள்  நம்பிக்கையற்றவர்களான  மற்றவர்களைப்போலத்  துக்கித்து,  அறிவில்லாதிருக்க  எனக்கு  மனதில்லை.  (1தெசலோனிக்கேயர்  4:13)

an’riyum,  sagoathararea,  niththiraiyadainthavarga'linimiththam  neengga'l  nambikkaiyat’ravarga'laana  mat’ravarga'laippoalath  thukkiththu,  a’rivillaathirukka  enakku  manathillai.  (1thesaloanikkeayar  4:13)

இயேசுவானவர்  மரித்து  பின்பு  எழுந்திருந்தாரென்று  விசுவாசிக்கிறோமே;  அப்படியே  இயேசுவுக்குள்  நித்திரையடைந்தவர்களையும்  தேவன்  அவரோடேகூடக்  கொண்டுவருவார்.  (1தெசலோனிக்கேயர்  4:14)

iyeasuvaanavar  mariththu  pinbu  ezhunthirunthaaren’ru  visuvaasikki’roamea;  appadiyea  iyeasuvukku'l  niththiraiyadainthavarga'laiyum  theavan  avaroadeakoodak  ko'nduvaruvaar.  (1thesaloanikkeayar  4:14)

கர்த்தருடைய  வார்த்தையை  முன்னிட்டு  நாங்கள்  உங்களுக்குச்  சொல்லுகிறதாவது:  கர்த்தருடைய  வருகைமட்டும்  உயிரோடிருக்கும்  நாம்  நித்திரையடைந்தவர்களுக்கு  முந்திக்கொள்வதில்லை.  (1தெசலோனிக்கேயர்  4:15)

karththarudaiya  vaarththaiyai  munnittu  naangga'l  ungga'lukkuch  sollugi’rathaavathu:  karththarudaiya  varugaimattum  uyiroadirukkum  naam  niththiraiyadainthavarga'lukku  munthikko'lvathillai.  (1thesaloanikkeayar  4:15)

ஏனெனில்,  கர்த்தர்  தாமே  ஆரவாரத்தோடும்,  பிரதான  தூதனுடைய  சத்தத்தோடும்,  தேவ  எக்காளத்தோடும்  வானத்திலிருந்து  இறங்கிவருவார்;  அப்பொழுது  கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள்  முதலாவது  எழுந்திருப்பார்கள்.  (1தெசலோனிக்கேயர்  4:16)

eanenil,  karththar  thaamea  aaravaaraththoadum,  pirathaana  thoothanudaiya  saththaththoadum,  theava  ekkaa'laththoadum  vaanaththilirunthu  i’ranggivaruvaar;  appozhuthu  ki’risthuvukku'l  mariththavarga'l  muthalaavathu  ezhunthiruppaarga'l.  (1thesaloanikkeayar  4:16)

பின்பு  உயிரோடிருக்கும்  நாமும்  கர்த்தருக்கு  எதிர்கொண்டுபோக,  மேகங்கள்மேல்  அவர்களோடேகூட  ஆகாயத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டு,  இவ்விதமாய்  எப்பொழுதும்  கர்த்தருடனேகூட  இருப்போம்.  (1தெசலோனிக்கேயர்  4:17)

pinbu  uyiroadirukkum  naamum  karththarukku  ethirko'ndupoaga,  meagangga'lmeal  avarga'loadeakooda  aagaayaththil  eduththukko'l'lappattu,  ivvithamaay  eppozhuthum  karththarudaneakooda  iruppoam.  (1thesaloanikkeayar  4:17)

ஆகையால்,  இந்த  வார்த்தைகளினாலே  நீங்கள்  ஒருவரையொருவர்  தேற்றுங்கள்.  (1தெசலோனிக்கேயர்  4:18)

aagaiyaal,  intha  vaarththaiga'linaalea  neengga'l  oruvaraiyoruvar  theat’rungga'l.  (1thesaloanikkeayar  4:18)