Showing posts with label niyaayaathibathiga'l. Show all posts
Showing posts with label niyaayaathibathiga'l. Show all posts

Thursday, August 18, 2016

Niyaayaathibathiga'l 21 | நியாயாதிபதிகள் 21 | Judges 21

இஸ்ரவேலர்  மிஸ்பாவிலே  இருக்கும்போது:  நம்மில்  ஒருவனும்  தன்  குமாரத்தியைப்  பென்யமீனருக்கு  விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை  என்று  ஆணையிட்டிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  21:1)

isravealar  mispaavilea  irukkumpoathu:  nammil  oruvanum  than  kumaaraththiyaip  benyameenarukku  vivaagampa'n'nikkoduppathillai  en’ru  aa'naiyittirunthaarga'l.  (niyaayaathibathiga’l  21:1)

ஆகையால்  ஜனங்கள்  தேவனுடைய  வீட்டிற்குப்போய்,  அங்கே  தேவசந்நிதியில்  சாயங்காலமட்டும்  இருந்து,  சத்தமிட்டு,  மிகவும்  அழுது:  (நியாயாதிபதிகள்  21:2)

aagaiyaal  janangga'l  theavanudaiya  veetti’rkuppoay,  anggea  theavasannithiyil  saayanggaalamattum  irunthu,  saththamittu,  migavum  azhuthu:  (niyaayaathibathiga’l  21:2)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தாவே,  இன்று  இஸ்ரவேலில்  ஒரு  கோத்திரம்  குறைந்துபோகத்தக்கதாக  இஸ்ரவேலில்  இந்தக்  காரியம்  நேரிட்டது  என்ன  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  21:3)

isravealin  theavanaagiya  karththaavea,  in’ru  isravealil  oru  koaththiram  ku’rainthupoagaththakkathaaga  isravealil  inthak  kaariyam  nearittathu  enna  en’raarga'l.  (niyaayaathibathiga’l  21:3)

மறுநாளிலே,  ஜனங்கள்  காலமே  எழுந்திருந்து,  அங்கே  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதான  பலிகளையும்  செலுத்தினார்கள்.  (நியாயாதிபதிகள்  21:4)

ma’runaa'lilea,  janangga'l  kaalamea  ezhunthirunthu,  anggea  oru  balipeedaththaik  katti,  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaana  baliga'laiyum  seluththinaarga'l.  (niyaayaathibathiga’l  21:4)

கர்த்தருடைய  சந்நிதியில்  மிஸ்பாவுக்கு  வராதவன்  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படக்கடவன்  என்று  அவர்கள்  பெரிய  ஆணையிட்டிருந்தபடியால்,  இஸ்ரவேல்  புத்திரர்:  கர்த்தருடைய  சந்நிதியில்  சபைகூடினபோது,  இஸ்ரவேலுடைய  எல்லாக்  கோத்திரங்களிலுமிருந்து  வராதே  போனவர்கள்  யார்  என்று  விசாரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  21:5)

karththarudaiya  sannithiyil  mispaavukku  varaathavan  nichchayamaayk  kolaiseyyappadakkadavan  en’ru  avarga'l  periya  aa'naiyittirunthapadiyaal,  israveal  puththirar:  karththarudaiya  sannithiyil  sabaikoodinapoathu,  isravealudaiya  ellaak  koaththirangga'lilumirunthu  varaathea  poanavarga'l  yaar  en’ru  visaariththaarga'l.  (niyaayaathibathiga’l  21:5)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  சகோதரராகிய  பென்யமீனரை  நினைத்து,  மனஸ்தாபப்பட்டு:  இன்று  இஸ்ரவேலில்  ஒரு  கோத்திரம்  அறுப்புண்டுபோயிற்றே.  (நியாயாதிபதிகள்  21:6)

israveal  puththirar  thangga'l  sagoathararaagiya  benyameenarai  ninaiththu,  manasthaabappattu:  in’ru  isravealil  oru  koaththiram  a’ruppu'ndupoayit’rea.  (niyaayaathibathiga’l  21:6)

மீந்திருப்பவர்களுக்கு  மனைவிகள்  கிடைக்கும்படி  நாம்  அவர்களுக்காக  என்னசெய்யலாம்?  நம்முடைய  குமாரத்திகளில்  ஒருத்தியையும்  அவர்களுக்குக்  கொடுப்பதில்லை  என்று  நாம்  கர்த்தர்மேல்  ஆணையிட்டுக்கொண்டோமே.  (நியாயாதிபதிகள்  21:7)

meenthiruppavarga'lukku  manaiviga'l  kidaikkumpadi  naam  avarga'lukkaaga  ennaseyyalaam?  nammudaiya  kumaaraththiga'lil  oruththiyaiyum  avarga'lukkuk  koduppathillai  en’ru  naam  karththarmeal  aa'naiyittukko'ndoamea.  (niyaayaathibathiga’l  21:7)

இஸ்ரவேலின்  கோத்திரங்களில்  மிஸ்பாவிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  வராதேபோன  யாதொருவர்  உண்டோ  என்று  விசாரித்தார்கள்;  அப்பொழுது  கீலேயாத்திலுள்ள  யாபேசின்  மனுஷரில்  ஒருவரும்  பாளயத்தில்  சபைகூடினபோது  வரவில்லை.  (நியாயாதிபதிகள்  21:8)

isravealin  koaththirangga'lil  mispaavilea  karththarudaiya  sannithiyil  varaatheapoana  yaathoruvar  u'ndoa  en’ru  visaariththaarga'l;  appozhuthu  keeleayaaththilu'l'la  yaabeasin  manusharil  oruvarum  paa'layaththil  sabaikoodinapoathu  varavillai.  (niyaayaathibathiga’l  21:8)

ஜனங்கள்  இலக்கம்பார்க்கப்பட்டபோது,  கீலேயாத்திலிருக்கிற  யாபேசின்  குடிகளில்  அங்கே  ஒருவரும்  இருந்ததில்லை.  (நியாயாதிபதிகள்  21:9)

janangga'l  ilakkampaarkkappattapoathu,  keeleayaaththilirukki’ra  yaabeasin  kudiga'lil  anggea  oruvarum  irunthathillai.  (niyaayaathibathiga’l  21:9)

உடனே  சபையார்  பலவான்களில்  பன்னீராயிரம்பேரை  அங்கே  அழைத்து:  நீங்கள்  போய்,  கீலேயாத்திலுள்ள  யாபேசின்  குடிகளை  ஸ்திரீகளோடும்  பிள்ளைகளோடும்  பட்டயக்கருக்கினால்  வெட்டுங்கள்.  (நியாயாதிபதிகள்  21:10)

udanea  sabaiyaar  balavaanga'lil  panneeraayirampearai  anggea  azhaiththu:  neengga'l  poay,  keeleayaaththilu'l'la  yaabeasin  kudiga'lai  sthireega'loadum  pi'l'laiga'loadum  pattayakkarukkinaal  vettungga'l.  (niyaayaathibathiga’l  21:10)

சகல  ஆண்பிள்ளைகளையும்,  புருஷரை  அறிந்த  சகல  பெண்பிள்ளைகளையும்  சங்கரிக்கக்கடவீர்கள்  என்று  அவர்களுக்குக்  கட்டளையிட்டு  அனுப்பினார்கள்.  (நியாயாதிபதிகள்  21:11)

sagala  aa'npi'l'laiga'laiyum,  purusharai  a’rintha  sagala  pe'npi'l'laiga'laiyum  sanggarikkakkadaveerga'l  en’ru  avarga'lukkuk  katta'laiyittu  anuppinaarga'l.  (niyaayaathibathiga’l  21:11)

இவர்கள்  கீலேயாத்திலுள்ள  யாபேசின்  குடிகளிடத்திலே  புருஷரை  அறியாத  நானூறு  கன்னிப்பெண்களைக்  கண்டு  பிடித்து,  அவர்களைக்  கானான்தேசமான  சீலோவிலிருக்கிற  பாளயத்திற்குக்  கொண்டுவந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  21:12)

ivarga'l  keeleayaaththilu'l'la  yaabeasin  kudiga'lidaththilea  purusharai  a’riyaatha  naanoo’ru  kannippe'nga'laik  ka'ndu  pidiththu,  avarga'laik  kaanaantheasamaana  seeloavilirukki’ra  paa'layaththi’rkuk  ko'nduvanthaarga'l.  (niyaayaathibathiga’l  21:12)

அப்பொழுது  ரிம்மோன்  கன்மலையிலிருக்கிற  பென்யமீன்  புத்திரரோடே  பேசவும்,  அவர்களுக்குச்  சமாதானம்  கூறவும்,  சபையார்  எல்லாரும்  மனுஷரை  அனுப்பினார்கள்.  (நியாயாதிபதிகள்  21:13)

appozhuthu  rimmoan  kanmalaiyilirukki’ra  benyameen  puththiraroadea  peasavum,  avarga'lukkuch  samaathaanam  koo’ravum,  sabaiyaar  ellaarum  manusharai  anuppinaarga'l.  (niyaayaathibathiga’l  21:13)

அப்படியே  அக்காலத்தில்  பென்யமீனர்  திரும்ப  வந்தார்கள்;  கீலேயாத்திலிருக்கிற  யாபேசின்  ஸ்திரீகளில்  உயிரோடே  வைத்த  பெண்களை  அவர்களுக்குக்  கொடுத்தார்கள்;  அப்படிச்  செய்தும்  அவர்கள்  தொகைக்குக்  காணாதிருந்தது.  (நியாயாதிபதிகள்  21:14)

appadiyea  akkaalaththil  benyameenar  thirumba  vanthaarga'l;  keeleayaaththilirukki’ra  yaabeasin  sthireega'lil  uyiroadea  vaiththa  pe'nga'lai  avarga'lukkuk  koduththaarga'l;  appadich  seythum  avarga'l  thogaikkuk  kaa'naathirunthathu.  (niyaayaathibathiga’l  21:14)

இஸ்ரவேல்  கோத்திரங்களிலே  கர்த்தர்  ஒரு  பிளப்பை  உண்டாக்கினார்  என்று  ஜனங்கள்  பென்யமீனருக்காக  மனஸ்தாபப்பட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  21:15)

israveal  koaththirangga'lilea  karththar  oru  pi'lappai  u'ndaakkinaar  en’ru  janangga'l  benyameenarukkaaga  manasthaabappattaarga'l.  (niyaayaathibathiga’l  21:15)

பென்யமீன்  கோத்திர  ஸ்திரீகள்  அழிந்தபடியினாலே,  மீதியான  மற்றப்பேர்களுக்கும்  மனைவிகள்  கிடைக்கும்படி  என்னசெய்யலாம்  என்று  சபையின்  மூப்பரானவர்கள்  கேட்டு,  (நியாயாதிபதிகள்  21:16)

benyameen  koaththira  sthireega'l  azhinthapadiyinaalea,  meethiyaana  mat’rappearga'lukkum  manaiviga'l  kidaikkumpadi  ennaseyyalaam  en’ru  sabaiyin  moopparaanavarga'l  keattu,  (niyaayaathibathiga’l  21:16)

இஸ்ரவேலில்  ஒரு  கோத்திரம்  நிர்மூலமாகாதபடிக்கு,  தப்பினவர்களுடைய  சுதந்தரம்  பென்யமீனுக்கு  இருக்கவேண்டுமே,  (நியாயாதிபதிகள்  21:17)

isravealil  oru  koaththiram  nirmoolamaagaathapadikku,  thappinavarga'ludaiya  suthantharam  benyameenukku  irukkavea'ndumea,  (niyaayaathibathiga’l  21:17)

நாமோ  நம்முடைய  குமாரத்திகளில்  அவர்களுக்குப்  பெண்  கொடுக்கக்கூடாது;  பென்யமீனருக்குப்  பெண்கொடுக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்று,  இஸ்ரவேல்  புத்திரர்  ஆணையிட்டார்களே  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  21:18)

naamoa  nammudaiya  kumaaraththiga'lil  avarga'lukkup  pe'n  kodukkakkoodaathu;  benyameenarukkup  pe'nkodukki’ravan  sabikkappattavan  en’ru,  israveal  puththirar  aa'naiyittaarga'lea  en’raarga'l.  (niyaayaathibathiga’l  21:18)

பின்னும்,  இதோ,  பெத்தேலுக்கு  வடக்கே  பெத்தேலிலிருந்து  சீகேமுக்குப்  போகிற  பாதைக்குக்  கிழக்காகவும்  லிபோனாவுக்குத்  தெற்காகவும்  இருக்கிற  சீலோவிலே  வருஷந்தோறும்  கர்த்தருக்குப்  பண்டிகை  கொண்டாடப்படுகிறதே  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  21:19)

pinnum,  ithoa,  beththealukku  vadakkea  beththealilirunthu  seekeamukkup  poagi’ra  paathaikkuk  kizhakkaagavum  liboanaavukkuth  the’rkaagavum  irukki’ra  seeloavilea  varushanthoa’rum  karththarukkup  pa'ndigai  ko'ndaadappadugi’rathea  en’ru  solli,  (niyaayaathibathiga’l  21:19)

அவர்கள்  பென்யமீன்  புத்திரரை  நோக்கி:  நீங்கள்  போய்,  திராட்சத்தோட்டங்களிலே  பதிவிருந்து,  (நியாயாதிபதிகள்  21:20)

avarga'l  benyameen  puththirarai  noakki:  neengga'l  poay,  thiraadchaththoattangga'lilea  pathivirunthu,  (niyaayaathibathiga’l  21:20)

சீலோவின்  குமாரத்திகள்  கீதவாத்தியத்தோடே  நடனம்பண்ணுகிறவர்களாய்ப்  புறப்பட்டு  வருகிறதை  நீங்கள்  காணும்போது,  திராட்சத்தோட்டங்களிலிருந்து  புறப்பட்டு,  உங்களில்  அவரவர்  சீலோவின்  குமாரத்திகளில்,  ஒவ்வொரு  பெண்ணைப்  பிடித்துப்  பென்யமீன்  தேசத்திற்குக்  கொண்டுபோங்கள்.  (நியாயாதிபதிகள்  21:21)

seeloavin  kumaaraththiga'l  keethavaaththiyaththoadea  nadanampa'n'nugi’ravarga'laayp  pu’rappattu  varugi’rathai  neengga'l  kaa'numpoathu,  thiraadchaththoattangga'lilirunthu  pu’rappattu,  ungga'lil  avaravar  seeloavin  kumaaraththiga'lil,  ovvoru  pe'n'naip  pidiththup  benyameen  theasaththi’rkuk  ko'ndupoangga'l.  (niyaayaathibathiga’l  21:21)

அவர்களுடைய  தகப்பன்மாராகிலும்,  சகோதரராகிலும்  எங்களிடத்தில்  முறையிட  வரும்போது,  நாங்கள்  அவர்களை  நோக்கி:  எங்கள்  நிமித்தம்  அவர்களுக்குத்  தயவுசெய்யுங்கள்;  நாங்கள்  யுத்தம்பண்ணி,  அவனவனுக்கு  மனைவியை  வாங்கிக்கொடுக்கவில்லை;  உங்கள்மேல்  குற்றமுண்டாக  இப்போது  நீங்கள்  அவர்களுக்கு  மனைவிகளைக்  கொடுக்கவும்  இல்லை  என்போம்  என்று  சொன்னார்கள்.  (நியாயாதிபதிகள்  21:22)

avarga'ludaiya  thagappanmaaraagilum,  sagoathararaagilum  engga'lidaththil  mu’raiyida  varumpoathu,  naangga'l  avarga'lai  noakki:  engga'l  nimiththam  avarga'lukkuth  thayavuseyyungga'l;  naangga'l  yuththampa'n'ni,  avanavanukku  manaiviyai  vaanggikkodukkavillai;  ungga'lmeal  kut’ramu'ndaaga  ippoathu  neengga'l  avarga'lukku  manaiviga'laik  kodukkavum  illai  enboam  en’ru  sonnaarga'l.  (niyaayaathibathiga’l  21:22)

பென்யமீன்  புத்திரர்  அப்படியே  செய்து,  நடனம்பண்ணுகிறவர்களிலே  தங்கள்  தொகைக்குச்  சரியான  பெண்களை  மனைவிகளாகப்  பிடித்துக்கொண்டு,  தங்கள்  சுதந்தரத்திற்குத்  திரும்பிப்போய்,  பட்டணங்களைப்  புதுப்பித்துக்  கட்டி,  அவைகளில்  குடியிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  21:23)

benyameen  puththirar  appadiyea  seythu,  nadanampa'n'nugi’ravarga'lilea  thangga'l  thogaikkuch  sariyaana  pe'nga'lai  manaiviga'laagap  pidiththukko'ndu,  thangga'l  suthantharaththi’rkuth  thirumbippoay,  patta'nangga'laip  puthuppiththuk  katti,  avaiga'lil  kudiyirunthaarga'l.  (niyaayaathibathiga’l  21:23)

இஸ்ரவேல்  புத்திரரும்  அக்காலத்திலே  அவ்விடம்  விட்டு  அவரவர்  தங்கள்  கோத்திரத்துக்கும்  தங்கள்  குடும்பத்துக்கும்  போய்,  அவரவர்  தங்கள்  சுதந்தரத்தில்  சேர்ந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  21:24)

israveal  puththirarum  akkaalaththilea  avvidam  vittu  avaravar  thangga'l  koaththiraththukkum  thangga'l  kudumbaththukkum  poay,  avaravar  thangga'l  suthantharaththil  searnthaarga'l.  (niyaayaathibathiga’l  21:24)

அந்நாட்களிலே  இஸ்ரவேலில்  ராஜா  இல்லை;  அவனவன்  தன்தன்  பார்வைக்குச்  சரிப்போனபடி  செய்துவந்தான்.  (நியாயாதிபதிகள்  21:25)

annaadka'lilea  isravealil  raajaa  illai;  avanavan  thanthan  paarvaikkuch  sarippoanapadi  seythuvanthaan.  (niyaayaathibathiga’l  21:25)


Niyaayaathibathiga'l 20 | நியாயாதிபதிகள் 20 | Judges 20

அப்பொழுது  தாண்முதல்  பெயெர்செபாமட்டுமுள்ள  இஸ்ரவேல்  புத்திரர்  அனைவரும்  கீலேயாத்  தேசத்தாருடன்  மிஸ்பாவிலே  கர்த்தருக்கு  முன்பாக  ஏகோபித்து  சபையாகக்  கூடினார்கள்.  (நியாயாதிபதிகள்  20:1)

appozhuthu  thaa'nmuthal  beyersebaamattumu'l'la  israveal  puththirar  anaivarum  keeleayaath  theasaththaarudan  mispaavilea  karththarukku  munbaaga  eagoabiththu  sabaiyaagak  koodinaarga'l.  (niyaayaathibathiga’l  20:1)

சகல  ஜனங்களின்  அதிபதிகளும்,  இஸ்ரவேலின்  சகல  கோத்திரத்தாரும்  தேவனுடைய  ஜனமாகிய  சபையாகக்  கூடிநின்றார்கள்;  அவர்கள்  பட்டயம்  உருவுகிற  நாலு  லட்சம்  காலாட்கள்.  (நியாயாதிபதிகள்  20:2)

sagala  janangga'lin  athibathiga'lum,  isravealin  sagala  koaththiraththaarum  theavanudaiya  janamaagiya  sabaiyaagak  koodinin’raarga'l;  avarga'l  pattayam  uruvugi’ra  naalu  ladcham  kaalaadka'l.  (niyaayaathibathiga’l  20:2)

இஸ்ரவேல்  புத்திரர்  மிஸ்பாவுக்கு  வந்த  செய்தியைப்  பென்யமீன்  புத்திரர்  கேள்விப்பட்டார்கள்;  அந்த  அக்கிரமம்  நடந்தது  எப்படி,  சொல்லுங்கள்  என்று  இஸ்ரவேல்  புத்திரர்  கேட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  20:3)

israveal  puththirar  mispaavukku  vantha  seythiyaip  benyameen  puththirar  kea'lvippattaarga'l;  antha  akkiramam  nadanthathu  eppadi,  sollungga'l  en’ru  israveal  puththirar  keattaarga'l.  (niyaayaathibathiga’l  20:3)

அப்பொழுது  கொலைசெய்யப்பட்ட  ஸ்திரீயின்  புருஷனாகிய  லேவியன்  மாறுத்தரமாக:  நானும்  என்  மறுமனையாட்டியும்  பென்யமீன்  நாட்டிலுள்ள  கிபியாவிலே  இராத்தங்க  வந்தோம்.  (நியாயாதிபதிகள்  20:4)

appozhuthu  kolaiseyyappatta  sthireeyin  purushanaagiya  leaviyan  maa’ruththaramaaga:  naanum  en  ma’rumanaiyaattiyum  benyameen  naattilu'l'la  kibiyaavilea  iraaththangga  vanthoam.  (niyaayaathibathiga’l  20:4)

அப்பொழுது  கிபியாபட்டணத்தார்  எனக்கு  விரோதமாய்  எழும்பி,  என்னைக்  கொலைசெய்ய  நினைத்து,  நான்  இருந்த  வீட்டை  இராத்திரியிலே  வளைந்துகொண்டு,  என்  மறுமனையாட்டியை  அவமானப்படுத்தினார்கள்;  அதினாலே  அவள்  செத்துப்போனாள்.  (நியாயாதிபதிகள்  20:5)

appozhuthu  kibiyaapatta'naththaar  enakku  viroathamaay  ezhumbi,  ennaik  kolaiseyya  ninaiththu,  naan  iruntha  veettai  iraaththiriyilea  va'lainthuko'ndu,  en  ma’rumanaiyaattiyai  avamaanappaduththinaarga'l;  athinaalea  ava'l  seththuppoanaa'l.  (niyaayaathibathiga’l  20:5)

ஆகையால்  இஸ்ரவேலிலே  அவர்கள்  இப்படிப்பட்ட  முறைகேட்டையும்  மதிகேட்டையும்  செய்தபடியினால்,  நான்  என்  மறுமனையாட்டியைப்  பிடித்துத்  துண்டித்து,  இஸ்ரவேலின்  சுதந்தரமான  சகல  நாடுகளுக்கும்  அனுப்பினேன்.  (நியாயாதிபதிகள்  20:6)

aagaiyaal  isravealilea  avarga'l  ippadippatta  mu’raikeattaiyum  mathikeattaiyum  seythapadiyinaal,  naan  en  ma’rumanaiyaattiyaip  pidiththuth  thu'ndiththu,  isravealin  suthantharamaana  sagala  naaduga'lukkum  anuppinean.  (niyaayaathibathiga’l  20:6)

நீங்கள்  எல்லாரும்  இஸ்ரவேல்  புத்திரராமே,  இங்கே  ஆலோசித்துத்  தீர்மானம்பண்ணுங்கள்  என்றான்.  (நியாயாதிபதிகள்  20:7)

neengga'l  ellaarum  israveal  puththiraraamea,  inggea  aaloasiththuth  theermaanampa'n'nungga'l  en’raan.  (niyaayaathibathiga’l  20:7)

அப்பொழுது  எல்லா  ஜனங்களும்  ஏகமாய்  எழும்பி:  நம்மில்  ஒருவரும்  தன்  கூடாரத்திற்குப்  போகவும்படாது,  ஒருவனும்  தன்  வீட்டிற்குத்  திரும்பவும்படாது.  (நியாயாதிபதிகள்  20:8)

appozhuthu  ellaa  janangga'lum  eagamaay  ezhumbi:  nammil  oruvarum  than  koodaaraththi’rkup  poagavumpadaathu,  oruvanum  than  veetti’rkuth  thirumbavumpadaathu.  (niyaayaathibathiga’l  20:8)


இப்பொழுது  கிபியாவுக்குச்  செய்யவேண்டியது  என்னவென்றால்:  சீட்டுப்போட்டு  அதற்கு  விரோதமாகப்  போவோம்.  (நியாயாதிபதிகள்  20:9)

ippozhuthu  kibiyaavukkuch  seyyavea'ndiyathu  ennaven’raal:  seettuppoattu  atha’rku  viroathamaagap  poavoam.  (niyaayaathibathiga’l  20:9)

பென்யமீன்  கோத்திரமான  கிபியா  பட்டணத்தார்  இஸ்ரவேலிலே  செய்த  எல்லா  மதிகேட்டுக்கும்  தக்கதாக  ஜனங்கள்  வந்து  செய்யும்படிக்கு,  நாம்  தானியதவசங்களைச்  சம்பாதிக்கிறதற்கு,  இஸ்ரவேல்  கோத்திரங்களிலெல்லாம்  நூறுபேரில்  பத்துப்பேரையும்,  ஆயிரம்பேரில்  நூறுபேரையும்,  பதினாயிரம்பேரில்  ஆயிரம்பேரையும்,  தெரிந்தெடுப்போம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  20:10)

benyameen  koaththiramaana  kibiyaa  patta'naththaar  isravealilea  seytha  ellaa  mathikeattukkum  thakkathaaga  janangga'l  vanthu  seyyumpadikku,  naam  thaaniyathavasangga'laich  sambaathikki’ratha’rku,  israveal  koaththirangga'lilellaam  noo’rupearil  paththuppearaiyum,  aayirampearil  noo’rupearaiyum,  pathinaayirampearil  aayirampearaiyum,  therintheduppoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  20:10)

இஸ்ரவேலரெல்லாரும்  ஒன்றுபோல  ஏகோபித்துப்  பட்டணத்திற்கு  முன்பாகக்  கூட்டங்கூடி,  (நியாயாதிபதிகள்  20:11)

isravealarellaarum  on’rupoala  eagoabiththup  patta'naththi’rku  munbaagak  koottangkoodi,  (niyaayaathibathiga’l  20:11)

அங்கே  இருந்த  இஸ்ரவேலின்  கோத்திரத்தார்  பென்யமீன்  கோத்திரமெங்கும்  ஆட்களை  அனுப்பி:  உங்களுக்குள்ளே  நடந்த  இந்த  அக்கிரமம்  என்ன?  (நியாயாதிபதிகள்  20:12)

anggea  iruntha  isravealin  koaththiraththaar  benyameen  koaththiramenggum  aadka'lai  anuppi:  ungga'lukku'l'lea  nadantha  intha  akkiramam  enna?  (niyaayaathibathiga’l  20:12)

இப்பொழுது  கிபியாவில்  இருக்கிற  பேலியாளின்  மக்களாகிய  அந்த  மனுஷரை  நாங்கள்  கொன்று,  பொல்லாப்பை  இஸ்ரவேலை  விட்டு  விலக்கும்படிக்கு,  அவர்களை  ஒப்புக்கொடுங்கள்  என்று  சொல்லச்சொன்னார்கள்;  பென்யமீன்  புத்திரர்  இஸ்ரவேல்  புத்திரராகிய  தங்கள்  சகோதரரின்  சொல்லைக்  கேட்க  மனமில்லாமல்,  (நியாயாதிபதிகள்  20:13)

ippozhuthu  kibiyaavil  irukki’ra  bealiyaa'lin  makka'laagiya  antha  manusharai  naangga'l  kon’ru,  pollaappai  isravealai  vittu  vilakkumpadikku,  avarga'lai  oppukkodungga'l  en’ru  sollachsonnaarga'l;  benyameen  puththirar  israveal  puththiraraagiya  thangga'l  sagoathararin  sollaik  keadka  manamillaamal,  (niyaayaathibathiga’l  20:13)

இஸ்ரவேல்  புத்திரரோடு  யுத்தம்பண்ணப்  புறப்படும்படிக்கு,  பட்டணங்களிலிருந்து  கிபியாவுக்கு  வந்து  கூடினார்கள்.  (நியாயாதிபதிகள்  20:14)

israveal  puththiraroadu  yuththampa'n'nap  pu’rappadumpadikku,  patta'nangga'lilirunthu  kibiyaavukku  vanthu  koodinaarga'l.  (niyaayaathibathiga’l  20:14)

கிபியாவின்  குடிகளிலே  தெரிந்துகொள்ளப்பட்ட  எழுநூறுபேரையல்லாமல்  அந்நாளில்  பட்டணங்களிலிருந்து  வந்து  கூடின  பட்டயம்  உருவுகிற  மனுஷரின்  லக்கம்  இருபத்தாறாயிரம்பேர்  என்று  தொகையிடப்பட்டது.  (நியாயாதிபதிகள்  20:15)

kibiyaavin  kudiga'lilea  therinthuko'l'lappatta  ezhunoo’rupearaiyallaamal  annaa'lil  patta'nangga'lilirunthu  vanthu  koodina  pattayam  uruvugi’ra  manusharin  lakkam  irubaththaa’raayirampear  en’ru  thogaiyidappattathu.  (niyaayaathibathiga’l  20:15)

அந்த  ஜனங்களெல்லாருக்குள்ளும்  தெரிந்துகொள்ளப்பட்ட  இடதுகை  வாக்கான  எழுநூறுபேர்  இருந்தார்கள்;  அவர்கள்  அனைவரும்  ஒரு  மயிரிழையும்  தப்பாதபடிக்குக்  கவண்கல்  எறிவார்கள்.  (நியாயாதிபதிகள்  20:16)

antha  janangga'lellaarukku'l'lum  therinthuko'l'lappatta  idathukai  vaakkaana  ezhunoo’rupear  irunthaarga'l;  avarga'l  anaivarum  oru  mayirizhaiyum  thappaathapadikkuk  kava'nkal  e’rivaarga'l.  (niyaayaathibathiga’l  20:16)

பென்யமீன்  கோத்திரத்தையல்லாமல்  இஸ்ரவேலிலே  பட்டயம்  உருவுகிற  மனுஷர்  நாலு  லட்சம்பேர்  என்று  தொகையிடப்பட்டது;  இவர்களெல்லாரும்  யுத்தவீரராயிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:17)

benyameen  koaththiraththaiyallaamal  isravealilea  pattayam  uruvugi’ra  manushar  naalu  ladchampear  en’ru  thogaiyidappattathu;  ivarga'lellaarum  yuththaveeraraayirunthaarga'l.  (niyaayaathibathiga’l  20:17)

இஸ்ரவேல்  புத்திரரான  அவர்கள்  எழும்பி,  தேவனுடைய  வீட்டிற்குப்போய்:  எங்களில்  யார்  முந்திப்  போய்  பென்யமீன்  புத்திரரோடு  யுத்தம்பண்ணவேண்டும்  என்று  தேவனிடத்தில்  விசாரித்தார்கள்;  அதற்குக்  கர்த்தர்:  யூதா  முந்திப்  போகவேண்டும்  என்றார்.  (நியாயாதிபதிகள்  20:18)

israveal  puththiraraana  avarga'l  ezhumbi,  theavanudaiya  veetti’rkuppoay:  engga'lil  yaar  munthip  poay  benyameen  puththiraroadu  yuththampa'n'navea'ndum  en’ru  theavanidaththil  visaariththaarga'l;  atha’rkuk  karththar:  yoothaa  munthip  poagavea'ndum  en’raar.  (niyaayaathibathiga’l  20:18)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  காலமே  எழுந்து  புறப்பட்டு,  கிபியாவுக்கு  எதிராகப்  பாளயமிறங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  20:19)

appozhuthu  israveal  puththirar  kaalamea  ezhunthu  pu’rappattu,  kibiyaavukku  ethiraagap  paa'layami’rangginaarga'l.  (niyaayaathibathiga’l  20:19)

பின்பு  இஸ்ரவேல்  மனுஷர்  பென்யமீனோடு  யுத்தம்பண்ணப்  புறப்பட்டு,  கிபியாவிலே  அவர்களுக்கு  எதிராகப்  போர்செய்ய  அணிவகுத்து  நின்றார்கள்.  (நியாயாதிபதிகள்  20:20)

pinbu  israveal  manushar  benyameenoadu  yuththampa'n'nap  pu’rappattu,  kibiyaavilea  avarga'lukku  ethiraagap  poarseyya  a'nivaguththu  nin’raarga'l.  (niyaayaathibathiga’l  20:20)

ஆனாலும்  பென்யமீன்  புத்திரர்  கிபியாவிலிருந்து  புறப்பட்டு,  இஸ்ரவேலில்  இருபத்தீராயிரம்பேரை  அன்றையதினம்  தரையிலே  விழும்படி  சங்கரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:21)

aanaalum  benyameen  puththirar  kibiyaavilirunthu  pu’rappattu,  isravealil  irubaththeeraayirampearai  an’raiyathinam  tharaiyilea  vizhumpadi  sanggariththaarga'l.  (niyaayaathibathiga’l  20:21)

இஸ்ரவேல்  ஜனங்கள்  தங்களைத்  திடப்படுத்திக்கொண்டு,  முதல்நாளில்  அணிவகுத்து  நின்ற  ஸ்தலத்திலே,  மறுபடியும்  போர்செய்ய  அணிவகுத்து  நின்றார்கள்.  (நியாயாதிபதிகள்  20:22)

israveal  janangga'l  thangga'laith  thidappaduththikko'ndu,  muthalnaa'lil  a'nivaguththu  nin’ra  sthalaththilea,  ma’rupadiyum  poarseyya  a'nivaguththu  nin’raarga'l.  (niyaayaathibathiga’l  20:22)

அவர்கள்  போய்,  கர்த்தருடைய  சந்நிதியில்  சாயங்காலமட்டும்  அழுது:  எங்கள்  சகோதரராகிய  பென்யமீன்  புத்திரரோடே  திரும்பவும்  யுத்தம்  கலக்கப்போவோமா  என்று  கர்த்தரிடத்தில்  விசாரித்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்:  அவர்களுக்கு  விரோதமாய்ப்  போங்கள்  என்றார்.  (நியாயாதிபதிகள்  20:23)

avarga'l  poay,  karththarudaiya  sannithiyil  saayanggaalamattum  azhuthu:  engga'l  sagoathararaagiya  benyameen  puththiraroadea  thirumbavum  yuththam  kalakkappoavoamaa  en’ru  karththaridaththil  visaariththaarga'l;  appozhuthu  karththar:  avarga'lukku  viroathamaayp  poangga'l  en’raar.  (niyaayaathibathiga’l  20:23)

மறுநாளிலே  இஸ்ரவேல்  புத்திரர்  பென்யமீன்  புத்திரர்  கிட்டச்  சேருகிறபோது,  (நியாயாதிபதிகள்  20:24)

ma’runaa'lilea  israveal  puththirar  benyameen  puththirar  kittach  searugi’rapoathu,  (niyaayaathibathiga’l  20:24)

பென்யமீன்  கோத்திரத்தாரும்  அந்நாளிலே  கிபியாவிலிருந்து  அவர்களுக்கு  எதிராகப்  புறப்பட்டுவந்து,  பின்னும்  இஸ்ரவேல்  புத்திரரில்  பட்டயம்  உருவுகிற  பதினெண்ணாயிரம்பேரைத்  தரையிலே  விழும்படி  சங்கரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:25)

benyameen  koaththiraththaarum  annaa'lilea  kibiyaavilirunthu  avarga'lukku  ethiraagap  pu’rappattuvanthu,  pinnum  israveal  puththiraril  pattayam  uruvugi’ra  pathine'n'naayirampearaith  tharaiyilea  vizhumpadi  sanggariththaarga'l.  (niyaayaathibathiga’l  20:25)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரராகிய  சகல  ஜனங்களும்  புறப்பட்டு,  தேவனுடைய  வீட்டிற்குப்  போய்,  அங்கே  கர்த்தருடைய  சந்நிதியில்  அழுது,  தரித்திருந்து,  அன்று  சாயங்காலமட்டும்  உபவாசித்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  இட்டு,  (நியாயாதிபதிகள்  20:26)

appozhuthu  israveal  puththiraraagiya  sagala  janangga'lum  pu’rappattu,  theavanudaiya  veetti’rkup  poay,  anggea  karththarudaiya  sannithiyil  azhuthu,  thariththirunthu,  an’ru  saayanggaalamattum  ubavaasiththu,  karththarudaiya  sannithiyil  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  ittu,  (niyaayaathibathiga’l  20:26)

கர்த்தரிடத்தில்  விசாரித்தார்கள்;  தேவனுடைய  உடன்படிக்கையின்  பெட்டி  அந்நாட்களில்  அங்கே  இருந்தது.  (நியாயாதிபதிகள்  20:27)

karththaridaththil  visaariththaarga'l;  theavanudaiya  udanpadikkaiyin  petti  annaadka'lil  anggea  irunthathu.  (niyaayaathibathiga’l  20:27)

ஆரோனின்  குமாரனாகிய  எலெயாசாரின்  மகன்  பினெகாஸ்  அந்நாட்களில்  அவருடைய  சந்நிதியில்  நின்றான்;  எங்கள்  சகோதரராகிய  பென்யமீன்  புத்திரரோடே  பின்னும்  யுத்தம்பண்ணப்  புறப்படலாமா  புறப்படலாகாதா  என்று  அவர்கள்  விசாரித்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்:  போங்கள்;  நாளைக்கு  அவர்களை  உங்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்றார்.  (நியாயாதிபதிகள்  20:28)

aaroanin  kumaaranaagiya  eleyaasaarin  magan  pinegaas  annaadka'lil  avarudaiya  sannithiyil  nin’raan;  engga'l  sagoathararaagiya  benyameen  puththiraroadea  pinnum  yuththampa'n'nap  pu’rappadalaamaa  pu’rappadalaagaathaa  en’ru  avarga'l  visaariththaarga'l;  appozhuthu  karththar:  poangga'l;  naa'laikku  avarga'lai  ungga'l  kaiyil  oppukkoduppean  en’raar.  (niyaayaathibathiga’l  20:28)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  கிபியாவைச்சுற்றிலும்  பதிவிடையாட்களை  வைத்து,  (நியாயாதிபதிகள்  20:29)

appozhuthu  israveal  puththirar  kibiyaavaichsut’rilum  pathividaiyaadka'lai  vaiththu,  (niyaayaathibathiga’l  20:29)

மூன்றாம்  நாளிலே  பென்யமீன்  புத்திரருக்கு  விரோதமாய்ப்  போய்,  முன்  இரண்டுதரம்  செய்ததுபோல,  கிபியாவுக்குச்  சமீபமாய்ப்  போருக்கு  அணிவகுத்து  நின்றார்கள்.  (நியாயாதிபதிகள்  20:30)

moon’raam  naa'lilea  benyameen  puththirarukku  viroathamaayp  poay,  mun  ira'ndutharam  seythathupoala,  kibiyaavukkuch  sameebamaayp  poarukku  a'nivaguththu  nin’raarga'l.  (niyaayaathibathiga’l  20:30)

அப்பொழுது  பென்யமீன்  புத்திரர்  ஜனத்திற்கு  விரோதமாய்ப்  புறப்பட்டுப்  பட்டணத்தை  விட்டு,  அப்பாலே  வந்து,  வெளியிலே  பெத்தேலுக்கும்  கிபியாவுக்கும்  போகிற  இரண்டு  வழிகளில்  இஸ்ரவேல்  ஜனத்தில்  ஏறக்குறைய  முப்பதுபேரை,  முதல்  இரண்டுதரம்  செய்தது  போல,  வெட்டவும்  கொல்லவும்  தொடங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  20:31)

appozhuthu  benyameen  puththirar  janaththi’rku  viroathamaayp  pu’rappattup  patta'naththai  vittu,  appaalea  vanthu,  ve'liyilea  beththealukkum  kibiyaavukkum  poagi’ra  ira'ndu  vazhiga'lil  israveal  janaththil  ea’rakku’raiya  muppathupearai,  muthal  ira'ndutharam  seythathu  poala,  vettavum  kollavum  thodangginaarga'l.  (niyaayaathibathiga’l  20:31)

முன்போல  நமக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படுகிறார்கள்  என்று  பென்யமீன்  புத்திரர்  சொன்னார்கள்;  இஸ்ரவேல்  புத்திரரோ:  அவர்களைப்  பட்டணத்தை  விட்டு  அப்பாலேயிருக்கிற  வழிகளிலே  வரப்பண்ணும்படிக்கு,  நாம்  ஓடவேண்டும்  என்று  சொல்லியிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:32)

munpoala  namakku  munbaaga  mu’riya  adikkappadugi’raarga'l  en’ru  benyameen  puththirar  sonnaarga'l;  israveal  puththiraroa:  avarga'laip  patta'naththai  vittu  appaaleayirukki’ra  vazhiga'lilea  varappa'n'numpadikku,  naam  oadavea'ndum  en’ru  solliyirunthaarga'l.  (niyaayaathibathiga’l  20:32)

அப்பொழுது  இஸ்ரவேல்  மனுஷர்  எல்லாரும்  தங்கள்  ஸ்தானத்திலிருந்து  எழும்பி,  பாகால்தாமாரிலே  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நின்றார்கள்;  இஸ்ரவேலரில்  கிபியாவின்  பள்ளத்தாக்கிலே  பதிவிருந்தவர்கள்  தங்கள்  ஸ்தானத்திலிருந்து  புறப்பட்டு,  (நியாயாதிபதிகள்  20:33)

appozhuthu  israveal  manushar  ellaarum  thangga'l  sthaanaththilirunthu  ezhumbi,  baagaalthaamaarilea  yuththaththi’rku  a'nivaguththu  nin’raarga'l;  isravealaril  kibiyaavin  pa'l'laththaakkilea  pathivirunthavarga'l  thangga'l  sthaanaththilirunthu  pu’rappattu,  (niyaayaathibathiga’l  20:33)

அவர்களில்  எல்லா  இஸ்ரவேலிலும்  தெரிந்துகொள்ளப்பட்ட  பதினாயிரம்பேர்  கிபியாவுக்கு  எதிரே  வந்தார்கள்;  யுத்தம்  பலத்தது;  ஆனாலும்  தங்களுக்கு  விக்கினம்  நேரிட்டது  என்று  அவர்கள்  அறியாதிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:34)

avarga'lil  ellaa  isravealilum  therinthuko'l'lappatta  pathinaayirampear  kibiyaavukku  ethirea  vanthaarga'l;  yuththam  balaththathu;  aanaalum  thangga'lukku  vikkinam  nearittathu  en’ru  avarga'l  a’riyaathirunthaarga'l.  (niyaayaathibathiga’l  20:34)

கர்த்தர்  இஸ்ரவேலுக்கு  முன்பாகப்  பென்யமீனை  முறிய  அடித்தார்;  அந்நாளிலே  இஸ்ரவேல்  புத்திரர்  பென்யமீனிலே  பட்டயம்  உருவுகிற  ஆட்களாகிய  இருபத்தையாயிரத்து  நூறுபேரைச்  சங்கரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:35)

karththar  isravealukku  munbaagap  benyameenai  mu’riya  adiththaar;  annaa'lilea  israveal  puththirar  benyameenilea  pattayam  uruvugi’ra  aadka'laagiya  irubaththaiyaayiraththu  noo’rupearaich  sanggariththaarga'l.  (niyaayaathibathiga’l  20:35)

இஸ்ரவேலர்  கிபியாவுக்கு  அப்பாலே  வைத்த  பதிவிடையை  நம்பியிருந்தபடியினாலே,  பென்யமீனருக்கு  இடம்  கொடுத்தார்கள்;  அதினாலே  அவர்கள்  முறிய  அடிக்கப்படுகிறார்கள்  என்று  பென்யமீன்  புத்திரருக்குக்  காணப்பட்டது.  (நியாயாதிபதிகள்  20:36)

isravealar  kibiyaavukku  appaalea  vaiththa  pathividaiyai  nambiyirunthapadiyinaalea,  benyameenarukku  idam  koduththaarga'l;  athinaalea  avarga'l  mu’riya  adikkappadugi’raarga'l  en’ru  benyameen  puththirarukkuk  kaa'nappattathu.  (niyaayaathibathiga’l  20:36)

அப்பொழுது  பதிவிடையிருந்தவர்கள்  தீவிரமாய்க்  கிபியாவின்மேல்  பாய்ந்து  பரவி,  பட்டணத்தில்  இருக்கிறவர்களெல்லாரையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டினார்கள்.  (நியாயாதிபதிகள்  20:37)

appozhuthu  pathividaiyirunthavarga'l  theeviramaayk  kibiyaavinmeal  paaynthu  paravi,  patta'naththil  irukki’ravarga'lellaaraiyum  pattayakkarukkinaal  vettinaarga'l.  (niyaayaathibathiga’l  20:37)

பட்டணத்திலிருந்து  மகா  பெரிய  புகையை  எழும்பப்பண்ணுவதே  இஸ்ரவேலருக்கும்  பதிவிடைக்காரருக்கும்  குறிக்கப்பட்ட  அடையாளமாயிருந்தது.  (நியாயாதிபதிகள்  20:38)

patta'naththilirunthu  mahaa  periya  pugaiyai  ezhumbappa'n'nuvathea  isravealarukkum  pathividaikkaararukkum  ku’rikkappatta  adaiyaa'lamaayirunthathu.  (niyaayaathibathiga’l  20:38)

ஆகையால்  இஸ்ரவேலர்  யுத்தத்திலே  பின்வாங்கினபோது,  பென்யமீனர்:  முந்தின  யுத்தத்தில்  நடந்ததுபோல,  அவர்கள்  நமக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படுகிறார்களே  என்று  சொல்லி,  இஸ்ரவேலரில்  ஏறக்குறைய  முப்பதுபேரை  வெட்டவும்  கொல்லவும்  தொடங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  20:39)

aagaiyaal  isravealar  yuththaththilea  pinvaangginapoathu,  benyameenar:  munthina  yuththaththil  nadanthathupoala,  avarga'l  namakku  munbaaga  mu’riya  adikkappadugi’raarga'lea  en’ru  solli,  isravealaril  ea’rakku’raiya  muppathupearai  vettavum  kollavum  thodangginaarga'l.  (niyaayaathibathiga’l  20:39)

பட்டணத்திலிருந்து  புகையானது  ஸ்தம்பம்போல  உயர  எழும்பினபோது,  பென்யமீனர்  பின்னாகப்  பார்த்தார்கள்;  இதோ,  பட்டணத்தின்  அக்கினிஜுவாலை  வானபரியந்தம்  எழும்பிற்று.  (நியாயாதிபதிகள்  20:40)

patta'naththilirunthu  pugaiyaanathu  sthambampoala  uyara  ezhumbinapoathu,  benyameenar  pinnaagap  paarththaarga'l;  ithoa,  patta'naththin  akkinijuvaalai  vaanapariyantham  ezhumbit’ru.  (niyaayaathibathiga’l  20:40)

அப்பொழுது  இஸ்ரவேலர்  திரும்பிக்  கொண்டார்கள்;  பென்யமீன்  மனுஷரோ,  தங்களுக்கு  விக்கினம்  நேரிட்டதைக்  கண்டு  திகைத்து,  (நியாயாதிபதிகள்  20:41)

appozhuthu  isravealar  thirumbik  ko'ndaarga'l;  benyameen  manusharoa,  thangga'lukku  vikkinam  nearittathaik  ka'ndu  thigaiththu,  (niyaayaathibathiga’l  20:41)

இஸ்ரவேல்  புத்திரரைவிட்டு,  வனாந்தரத்திற்குப்  போகிற  வழிக்கு  நேராய்த்  திரும்பி  ஓடிப்போனார்கள்;  ஆனாலும்  யுத்தம்  அவர்களைத்  தொடர்ந்தது;  பட்டணங்களில்  இருந்தவர்களும்  தங்கள்  நடுவே  அகப்பட்டவர்களைக்  கொன்றுபோட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  20:42)

israveal  puththiraraivittu,  vanaantharaththi’rkup  poagi’ra  vazhikku  nearaayth  thirumbi  oadippoanaarga'l;  aanaalum  yuththam  avarga'laith  thodarnthathu;  patta'nangga'lil  irunthavarga'lum  thangga'l  naduvea  agappattavarga'laik  kon’rupoattaarga'l.  (niyaayaathibathiga’l  20:42)

இப்படியே  பென்யமீனரை  வளைந்துகொண்டு  துரத்தி,  கிபியாவுக்குக்  கிழக்குப்புறமாக  வருமட்டும்,  அவர்களை  லேசாய்  மிதித்துப்போட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  20:43)

ippadiyea  benyameenarai  va'lainthuko'ndu  thuraththi,  kibiyaavukkuk  kizhakkuppu’ramaaga  varumattum,  avarga'lai  leasaay  mithiththuppoattaarga'l.  (niyaayaathibathiga’l  20:43)

இதினால்  பென்யமீனரிலே  பதினெண்ணாயிரம்பேர்  விழுந்தார்கள்;  அவர்களெல்லாரும்  பலவான்களாயிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:44)

ithinaal  benyameenarilea  pathine'n'naayirampear  vizhunthaarga'l;  avarga'lellaarum  balavaanga'laayirunthaarga'l.  (niyaayaathibathiga’l  20:44)

மற்றவர்கள்  விலகி,  வனாந்தரத்தில்  இருக்கிற  ரிம்மோன்  கன்மலைக்கு  ஓடிப்போனார்கள்;  அவர்களில்  இன்னும்  ஐயாயிரம்பேரை  வழிகளிலே  கொன்று,  மற்றவர்களைக்  கீதோம்மட்டும்  பின்தொடர்ந்து,  அவர்களில்  இரண்டாயிரம்  பேரை  வெட்டிப்போட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  20:45)

mat’ravarga'l  vilagi,  vanaantharaththil  irukki’ra  rimmoan  kanmalaikku  oadippoanaarga'l;  avarga'lil  innum  aiyaayirampearai  vazhiga'lilea  kon’ru,  mat’ravarga'laik  keethoammattum  pinthodarnthu,  avarga'lil  ira'ndaayiram  pearai  vettippoattaarga'l.  (niyaayaathibathiga’l  20:45)

இவ்விதமாய்  பென்யமீனரில்  அந்நாளில்  விழுந்தவர்களெல்லாரும்  இருபத்தையாயிரம்பேர்;  அவர்களெல்லாரும்  பட்டயம்  உருவுகிற  பலவான்களாயிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:46)

ivvithamaay  benyameenaril  annaa'lil  vizhunthavarga'lellaarum  irubaththaiyaayirampear;  avarga'lellaarum  pattayam  uruvugi’ra  balavaanga'laayirunthaarga'l.  (niyaayaathibathiga’l  20:46)

அறுநூறுபேர்  திரும்பிக்கொண்டு  ஓடி,  வனாந்தரத்திலிருக்கிற  ரிம்மோன்  கன்மலைக்குப்  போய்,  ரிம்மோன்  கன்மலையிலே  நாலு  மாதம்  இருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  20:47)

a’runoo’rupear  thirumbikko'ndu  oadi,  vanaantharaththilirukki’ra  rimmoan  kanmalaikkup  poay,  rimmoan  kanmalaiyilea  naalu  maatham  irunthaarga'l.  (niyaayaathibathiga’l  20:47)

இஸ்ரவேலரோ  பென்யமீன்  புத்திரர்மேல்  திரும்பி,  பட்டணத்தில்  மனுஷர்  தொடங்கி  மிருகங்கள்மட்டும்  கண்டவைகள்  எல்லாவற்றையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  கண்ட  பட்டணங்களையெல்லாம்  அக்கினியால்  கொளுத்திப்போட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  20:48)

isravealaroa  benyameen  puththirarmeal  thirumbi,  patta'naththil  manushar  thodanggi  mirugangga'lmattum  ka'ndavaiga'l  ellaavat’raiyum  pattayakkarukkinaal  vetti,  ka'nda  patta'nangga'laiyellaam  akkiniyaal  ko'luththippoattaarga'l.  (niyaayaathibathiga’l  20:48)