Showing posts with label 2 கொரிந்தியர். Show all posts
Showing posts with label 2 கொரிந்தியர். Show all posts

Monday, May 30, 2016

2 Korinthiyar 13 | 2 கொரிந்தியர் 13 | 2 Corinthians 13

இந்த  மூன்றாந்தரம்  நான்  உங்களிடத்திற்கு  வருகிறேன்;  சகல  காரியங்களும்  இரண்டு  மூன்று  சாட்சிகளுடைய  வாக்கினால்  நிலைவரப்படும்.  (2கொரிந்தியர்  13:1)

intha  moon’raantharam  naan  ungga'lidaththi’rku  varugi’rean;  sagala  kaariyangga'lum  ira'ndu  moon’ru  saadchiga'ludaiya  vaakkinaal  nilaivarappadum.  (2korinthiyar  13:1)

நான்  இரண்டாந்தரம்  உங்களிடத்திலிருந்தபோது  சொன்னதுபோல,  இப்பொழுது  தூரமாயிருந்தும்  உங்களிடத்திலிருக்கிறவனாக,  நான்  மறுபடியும்  வந்தால்  தப்பவிடமாட்டேனென்று  முன்பு  பாவஞ்செய்தவர்களுக்கும்  மற்ற  எல்லாருக்கும்  முன்னறிவித்து  எழுதுகிறேன்.  (2கொரிந்தியர்  13:2)

naan  ira'ndaantharam  ungga'lidaththilirunthapoathu  sonnathupoala,  ippozhuthu  thooramaayirunthum  ungga'lidaththilirukki’ravanaaga,  naan  ma’rupadiyum  vanthaal  thappavidamaatteanen’ru  munbu  paavagnseythavarga'lukkum  mat’ra  ellaarukkum  munna’riviththu  ezhuthugi’rean.  (2korinthiyar  13:2)

கிறிஸ்து  எனக்குள்ளே  பேசுகிறாரென்பதற்கு  அத்தாட்சி  தேடுகிறீர்களே;  அவர்  உங்களிடமாய்ப்  பலவீனரல்ல,  உங்களிடத்தில்  வல்லவராயிருக்கிறார்.  (2கொரிந்தியர்  13:3)

ki’risthu  enakku'l'lea  peasugi’raarenbatha’rku  aththaadchi  theadugi’reerga'lea;  avar  ungga'lidamaayp  balaveenaralla,  ungga'lidaththil  vallavaraayirukki’raar.  (2korinthiyar  13:3)

ஏனெனில்  அவர்  பலவீனத்தால்  சிலுவையில்  அறையப்பட்டிருந்தும்,  தேவனுடைய  வல்லமையினால்  பிழைத்திருக்கிறார்;  அப்படி  நாங்களும்  அவருக்குள்  பலவீனராயிருந்தும்,  உங்களிடமாய்  விளங்கிய  தேவனுடைய  வல்லமையினால்  அவருடனேகூடப்  பிழைத்திருப்போம்.  (2கொரிந்தியர்  13:4)

eanenil  avar  balaveenaththaal  siluvaiyil  a’raiyappattirunthum,  theavanudaiya  vallamaiyinaal  pizhaiththirukki’raar;  appadi  naangga'lum  avarukku'l  balaveenaraayirunthum,  ungga'lidamaay  vi'langgiya  theavanudaiya  vallamaiyinaal  avarudaneakoodap  pizhaiththiruppoam.  (2korinthiyar  13:4)

நீங்கள்  விசுவாசமுள்ளவர்களோவென்று  உங்களை  நீங்களே  சோதித்து  அறியுங்கள்;  உங்களை  நீங்களே  பரீட்சித்துப்  பாருங்கள்.  இயேசுகிறிஸ்து  உங்களுக்குள்  இருக்கிறாரென்று  உங்களை  நீங்களே  அறியீர்களா?  நீங்கள்  பரீட்சைக்கு  நில்லாதவர்களாயிருந்தால்  அறியீர்கள்.  (2கொரிந்தியர்  13:5)

neengga'l  visuvaasamu'l'lavarga'loaven’ru  ungga'lai  neengga'lea  soathiththu  a’riyungga'l;  ungga'lai  neengga'lea  pareedchiththup  paarungga'l.  iyeasuki’risthu  ungga'lukku'l  irukki’raaren’ru  ungga'lai  neengga'lea  a’riyeerga'laa?  neengga'l  pareedchaikku  nillaathavarga'laayirunthaal  a’riyeerga'l.  (2korinthiyar  13:5)

நாங்களோ  பரீட்சைக்கு  நில்லாதவர்களல்லவென்பதை  அறிவீர்களென்று  நம்புகிறேன்.  (2கொரிந்தியர்  13:6)

naangga'loa  pareedchaikku  nillaathavarga'lallavenbathai  a’riveerga'len’ru  nambugi’rean.  (2korinthiyar  13:6)

மேலும்  நீங்கள்  ஒரு  பொல்லாங்கும்  செய்யாதிருக்கும்படியாக,  தேவனை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுகிறேன்.  நாங்கள்  பரீட்சைக்கு  நின்றவர்களென்று  காணப்படும்பொருட்டல்ல,  நாங்கள்  பரீட்சைக்கு  நில்லாதவர்கள்போலிருந்தாலும்,  நீங்கள்  நலமானதைச்  செய்யும்பொருட்டே  விண்ணப்பம்பண்ணுகிறேன்.  (2கொரிந்தியர்  13:7)

mealum  neengga'l  oru  pollaanggum  seyyaathirukkumpadiyaaga,  theavanai  noakki  vi'n'nappampa'n'nugi’rean.  naangga'l  pareedchaikku  nin’ravarga'len’ru  kaa'nappadumporuttalla,  naangga'l  pareedchaikku  nillaathavarga'lpoalirunthaalum,  neengga'l  nalamaanathaich  seyyumporuttea  vi'n'nappampa'n'nugi’rean.  (2korinthiyar  13:7)

சத்தியத்திற்கு  விரோதமாக  நாங்கள்  ஒன்றுஞ்செய்யக்கூடாமல்,  சத்தியத்திற்கு  அநுகூலமாகவே  செய்யக்கூடும்.  (2கொரிந்தியர்  13:8)

saththiyaththi’rku  viroathamaaga  naangga'l  on’rugnseyyakkoodaamal,  saththiyaththi’rku  anukoolamaagavea  seyyakkoodum.  (2korinthiyar  13:8)

நாங்கள்  பலவீனரும்  நீங்கள்  பலமுள்ளவர்களுமாயிருக்கையில்,  சந்தோஷப்படுகிறோம்;  நீங்கள்  நற்சீர்பொருந்தும்படிக்கும்  விண்ணப்பம்பண்ணுகிறோம்.  (2கொரிந்தியர்  13:9)

naangga'l  balaveenarum  neengga'l  balamu'l'lavarga'lumaayirukkaiyil,  santhoashappadugi’roam;  neengga'l  na’rseerporunthumpadikkum  vi'n'nappampa'n'nugi’roam.  (2korinthiyar  13:9)

ஆனதால்  இடித்துப்போடவல்ல,  ஊன்றக்  கட்டவே  கர்த்தர்  எனக்குக்  கொடுத்த  அதிகாரத்தின்படி,  நான்  உங்களிடத்தில்  வந்திருக்கும்போது,  கண்டிதம்பண்ணாதபடிக்கு,  நான்  தூரமாயிருந்து  இவைகளை  எழுதுகிறேன்.  (2கொரிந்தியர்  13:10)

aanathaal  idiththuppoadavalla,  oon’rak  kattavea  karththar  enakkuk  koduththa  athigaaraththinpadi,  naan  ungga'lidaththil  vanthirukkumpoathu,  ka'ndithampa'n'naathapadikku,  naan  thooramaayirunthu  ivaiga'lai  ezhuthugi’rean.  (2korinthiyar  13:10)

கடைசியாக,  சகோதரரே,  சந்தோஷமாயிருங்கள்,  நற்சீர்  பொருந்துங்கள்,  ஆறுதலடையுங்கள்;  ஏகசிந்தையாயிருங்கள்,  சமாதானமாயிருங்கள்,  அப்பொழுது  அன்புக்கும்  சமாதானத்துக்கும்  காரணராகிய  தேவன்  உங்களோடேகூட  இருப்பார்.  (2கொரிந்தியர்  13:11)

kadaisiyaaga,  sagoathararea,  santhoashamaayirungga'l,  na’rseer  porunthungga'l,  aa’ruthaladaiyungga'l;  eagasinthaiyaayirungga'l,  samaathaanamaayirungga'l,  appozhuthu  anbukkum  samaathaanaththukkum  kaara'naraagiya  theavan  ungga'loadeakooda  iruppaar.  (2korinthiyar  13:11)

ஒருவரையொருவர்  பரிசுத்த  முத்தத்தோடு  வாழ்த்துங்கள்.  (2கொரிந்தியர்  13:12)

oruvaraiyoruvar  parisuththa  muththaththoadu  vaazhththungga'l.  (2korinthiyar  13:12)

பரிசுத்தவான்களெல்லாரும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (2கொரிந்தியர்  13:13)

parisuththavaanga'lellaarum  ungga'lukku  vaazhththuthal  sollugi’raarga'l.  (2korinthiyar  13:13)

கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய  கிருபையும்,  தேவனுடைய  அன்பும்,  பரிசுத்த  ஆவியினுடைய  ஐக்கியமும்,  உங்கள்  அனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  (2கொரிந்தியர்  13:14)

karththaraagiya  iyeasuki’risthuvinudaiya  kirubaiyum,  theavanudaiya  anbum,  parisuththa  aaviyinudaiya  aikkiyamum,  ungga'l  anaivaroadungkooda  iruppathaaga.  aamen.  (2korinthiyar  13:14)


2 Korinthiyar 12 | 2 கொரிந்தியர் 12 | 2 Corinthians 12

மேன்மைபாராட்டுகிறது  எனக்குத்  தகுதியல்லவே;  ஆகிலும்,  கர்த்தர்  அருளிய  தரிசனங்களையும்  வெளிப்படுத்தல்களையும்  சொல்லுகிறேன்.  (2கொரிந்தியர்  12:1)

meanmaipaaraattugi’rathu  enakkuth  thaguthiyallavea;  aagilum,  karththar  aru'liya  tharisanangga'laiyum  ve'lippaduththalga'laiyum  sollugi’rean.  (2korinthiyar  12:1)

கிறிஸ்துவுக்குள்ளான  ஒரு  மனுஷனை  அறிவேன்;  அவன்  பதினாலு  வருஷத்திற்கு  முன்னே  மூன்றாம்  வானம்வரைக்கும்  எடுக்கப்பட்டான்;  அவன்  சரீரத்திலிருந்தானோ,  சரீரத்திற்குப்  புறம்பேயிருந்தானோ,  அதை  அறியேன்;  தேவன்  அறிவார்.  (2கொரிந்தியர்  12:2)

ki’risthuvukku'l'laana  oru  manushanai  a’rivean;  avan  pathinaalu  varushaththi’rku  munnea  moon’raam  vaanamvaraikkum  edukkappattaan;  avan  sareeraththilirunthaanoa,  sareeraththi’rkup  pu’rambeayirunthaanoa,  athai  a’riyean;  theavan  a’rivaar.  (2korinthiyar  12:2)

அந்த  மனுஷன்  பரதீசுக்குள்  எடுக்கப்பட்டு,  மனுஷர்  பேசப்படாததும்  வாக்குக்கெட்டாததுமாகிய  வார்த்தைகளைக்  கேட்டானென்று  அறிந்திருக்கிறேன்.  (2கொரிந்தியர்  12:3)

antha  manushan  paratheesukku'l  edukkappattu,  manushar  peasappadaathathum  vaakkukkettaathathumaagiya  vaarththaiga'laik  keattaanen’ru  a’rinthirukki’rean.  (2korinthiyar  12:3)

அவன்  சரீரத்திலிருந்தானோ,  சரீரத்திற்குப்  புறம்பேயிருந்தானோ,  அதை  அறியேன்;  தேவன்  அறிவார்.  (2கொரிந்தியர்  12:4)

avan  sareeraththilirunthaanoa,  sareeraththi’rkup  pu’rambeayirunthaanoa,  athai  a’riyean;  theavan  a’rivaar.  (2korinthiyar  12:4)

இப்படிப்பட்டவனைக்குறித்து  மேன்மைபாராட்டுவேன்;  ஆனாலும்  என்னைக்குறித்து  என்  பலவீனங்களிலேயன்றி,  வேறொன்றிலும்  மேன்மைபாராட்டமாட்டேன்.  (2கொரிந்தியர்  12:5)

ippadippattavanaikku’riththu  meanmaipaaraattuvean;  aanaalum  ennaikku’riththu  en  balaveenangga'lileayan’ri,  vea’ron’rilum  meanmaipaaraattamaattean.  (2korinthiyar  12:5)

சத்தியமானதை  நான்  பேசுகிறேன்;  நான்  மேன்மைபாராட்ட  மனதாயிருந்தாலும்,  நான்  புத்தியீனனல்ல,  ஆனாலும்  ஒருவனும்  என்னிடத்தில்  காண்கிறதற்கும்,  என்னாலே  கேட்கிறதற்கும்  மேலாக  என்னை  எண்ணாதபடிக்கு  அப்படிச்  செய்யாதிருப்பேன்.  (2கொரிந்தியர்  12:6)

saththiyamaanathai  naan  peasugi’rean;  naan  meanmaipaaraatta  manathaayirunthaalum,  naan  buththiyeenanalla,  aanaalum  oruvanum  ennidaththil  kaa'ngi’ratha’rkum,  ennaalea  keadki’ratha’rkum  mealaaga  ennai  e'n'naathapadikku  appadich  seyyaathiruppean.  (2korinthiyar  12:6)

அன்றியும்,  எனக்கு  வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய  மேன்மையினிமித்தம்  நான்  என்னை  உயர்த்தாதபடிக்கு,  என்  மாம்சத்திலே  ஒரு  முள்  கொடுக்கப்பட்டிருக்கிறது;  என்னை  நான்  உயர்த்தாதபடிக்கு,  அது  என்னைக்  குட்டும்  சாத்தானுடைய  தூதனாயிருக்கிறது.  (2கொரிந்தியர்  12:7)

an’riyum,  enakku  ve'lippaduththappattavaiga'lukkuriya  meanmaiyinimiththam  naan  ennai  uyarththaathapadikku,  en  maamsaththilea  oru  mu'l  kodukkappattirukki’rathu;  ennai  naan  uyarththaathapadikku,  athu  ennaik  kuttum  saaththaanudaiya  thoothanaayirukki’rathu.  (2korinthiyar  12:7)

அது  என்னைவிட்டு  நீங்கும்படிக்கு,  நான்  மூன்றுதரம்  கர்த்தரிடத்தில்  வேண்டிக்கொண்டேன்.  (2கொரிந்தியர்  12:8)

athu  ennaivittu  neenggumpadikku,  naan  moon’rutharam  karththaridaththil  vea'ndikko'ndean.  (2korinthiyar  12:8)

அதற்கு  அவர்:  என்  கிருபை  உனக்குப்போதும்;  பலவீனத்திலே  என்  பலம்  பூரணமாய்  விளங்கும்  என்றார்.  ஆகையால்,  கிறிஸ்துவின்  வல்லமை  என்மேல்  தங்கும்படி,  என்  பலவீனங்களைக்குறித்து  நான்  மிகவும்  சந்தோஷமாய்  மேன்மைபாராட்டுவேன்.  (2கொரிந்தியர்  12:9)

atha’rku  avar:  en  kirubai  unakkuppoathum;  balaveenaththilea  en  balam  poora'namaay  vi'langgum  en’raar.  aagaiyaal,  ki’risthuvin  vallamai  enmeal  thanggumpadi,  en  balaveenangga'laikku’riththu  naan  migavum  santhoashamaay  meanmaipaaraattuvean.  (2korinthiyar  12:9)

அந்தப்படி  நான்  பலவீனமாயிருக்கும்போதே  பலமுள்ளவனாயிருக்கிறேன்;  ஆகையால்  கிறிஸ்துவினிமித்தம்  எனக்கு  வரும்  பலவீனங்களிலும்,  நிந்தைகளிலும்,  நெருக்கங்களிலும்,  துன்பங்களிலும்,  இடுக்கண்களிலும்  நான்  பிரியப்படுகிறேன்.  (2கொரிந்தியர்  12:10)

anthappadi  naan  balaveenamaayirukkumpoathea  balamu'l'lavanaayirukki’rean;  aagaiyaal  ki’risthuvinimiththam  enakku  varum  balaveenangga'lilum,  ninthaiga'lilum,  nerukkangga'lilum,  thunbangga'lilum,  idukka'nga'lilum  naan  piriyappadugi’rean.  (2korinthiyar  12:10)

மேன்மைபாராட்டி,  புத்தியீனனாயினேன்;  நீங்களே  இதற்கு  என்னைப்  பலவந்தப்படுத்தினீர்கள்.  நான்  ஒன்றுமில்லையென்றாலும்,  மகா  பிரதான  அப்போஸ்தலருக்கும்  நான்  எவ்வளவும்  குறைந்தவனாயிராதபடியால்,  உங்களாலே  மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.  (2கொரிந்தியர்  12:11)

meanmaipaaraatti,  buththiyeenanaayinean;  neengga'lea  itha’rku  ennaip  balavanthappaduththineerga'l.  naan  on’rumillaiyen’raalum,  mahaa  pirathaana  appoasthalarukkum  naan  evva'lavum  ku’rainthavanaayiraathapadiyaal,  ungga'laalea  mechchikko'l'lappadavea'ndiyathaayirunthathea.  (2korinthiyar  12:11)

அப்போஸ்தலனுக்குரிய  அடையாளங்கள்  எல்லாவிதமான  பொறுமையோடும்,  அதிசயங்களோடும்,  அற்புதங்களோடும்,  வல்லமைகளோடும்,  உங்களுக்குள்ளே  நடப்பிக்கப்பட்டதே.  (2கொரிந்தியர்  12:12)

appoasthalanukkuriya  adaiyaa'langga'l  ellaavithamaana  po’rumaiyoadum,  athisayangga'loadum,  a’rputhangga'loadum,  vallamaiga'loadum,  ungga'lukku'l'lea  nadappikkappattathea.  (2korinthiyar  12:12)

எதிலே  மற்றச்  சபைகளுக்குக்  குறைவாயிருந்தீர்கள்?  நான்  உங்களை  வருத்தப்படுத்தாதிருந்ததே  உங்களுக்குக்  குறைவு;  இந்த  அநியாயத்தை  எனக்கு  மன்னியுங்கள்.  (2கொரிந்தியர்  12:13)

ethilea  mat’rach  sabaiga'lukkuk  ku’raivaayiruntheerga'l?  naan  ungga'lai  varuththappaduththaathirunthathea  ungga'lukkuk  ku’raivu;  intha  aniyaayaththai  enakku  manniyungga'l.  (2korinthiyar  12:13)

இதோ,  உங்களிடத்திற்கு  மூன்றாந்தரம்  வர  ஆயத்தமாயிருக்கிறேன்;  நான்  உங்களை  வருத்தப்படுத்துவதில்லை;  நான்  உங்களுடையதையல்ல,  உங்களையே  தேடுகிறேன்;  பெற்றாருக்குப்  பிள்ளைகளல்ல,  பிள்ளைகளுக்குப்  பெற்றார்களே  பொக்கிஷங்களைச்  சேர்த்துவைக்கவேண்டும்.  (2கொரிந்தியர்  12:14)

ithoa,  ungga'lidaththi’rku  moon’raantharam  vara  aayaththamaayirukki’rean;  naan  ungga'lai  varuththappaduththuvathillai;  naan  ungga'ludaiyathaiyalla,  ungga'laiyea  theadugi’rean;  pet’raarukkup  pi'l'laiga'lalla,  pi'l'laiga'lukkup  pet’raarga'lea  pokkishangga'laich  searththuvaikkavea'ndum.  (2korinthiyar  12:14)

ஆதலால்,  நான்  உங்களில்  எவ்வளவு  அதிகமாய்  அன்புகூருகிறேனோ  அவ்வளவு  குறைவாய்  உங்களால்  அன்புகூரப்பட்டிருந்தாலும்,  மிகவும்  சந்தோஷமாய்  நான்  உங்கள்  ஆத்துமாக்களுக்காகச்  செலவுபண்ணவும்  செலவுபண்ணப்படவும்  விரும்புகிறேன்.  (2கொரிந்தியர்  12:15)

aathalaal,  naan  ungga'lil  evva'lavu  athigamaay  anbukoorugi’reanoa  avva'lavu  ku’raivaay  ungga'laal  anbukoorappattirunthaalum,  migavum  santhoashamaay  naan  ungga'l  aaththumaakka'lukkaagach  selavupa'n'navum  selavupa'n'nappadavum  virumbugi’rean.  (2korinthiyar  12:15)

அப்படியாகட்டும்;  நான்  உங்களுக்குப்  பாரமாயிருக்கவில்லை;  ஆனாலும்,  உபாயமுள்ளவனாயிருந்து,  தந்திரத்தினாலே  உங்களைப்  பிடித்தேனாம்.  (2கொரிந்தியர்  12:16)

appadiyaagattum;  naan  ungga'lukkup  baaramaayirukkavillai;  aanaalum,  ubaayamu'l'lavanaayirunthu,  thanthiraththinaalea  ungga'laip  pidiththeanaam.  (2korinthiyar  12:16)

நான்  உங்களிடத்திற்கு  அனுப்பினவர்களில்  எவன்மூலமாயாவது  உங்களிடத்தில்  பொழிவைத்  தேடினதுண்டா?  (2கொரிந்தியர்  12:17)

naan  ungga'lidaththi’rku  anuppinavarga'lil  evanmoolamaayaavathu  ungga'lidaththil  pozhivaith  theadinathu'ndaa?  (2korinthiyar  12:17)

தீத்து  உங்களிடத்தில்  வரும்படி  நான்  அவனைக்  கேட்டுக்கொண்டு,  அவனுடனேகூட  ஒரு  சகோதரனை  அனுப்பினேன்;  தீத்து  உங்களிடத்தில்  ஏதாவது  பொழிவைத்  தேடினானா?  நாங்கள்  ஒரே  ஆவியையுடையவர்களாய்,  ஒரே  அடிச்சுவடுகளில்  நடந்தோமல்லவா?  (2கொரிந்தியர்  12:18)

theeththu  ungga'lidaththil  varumpadi  naan  avanaik  keattukko'ndu,  avanudaneakooda  oru  sagoatharanai  anuppinean;  theeththu  ungga'lidaththil  eathaavathu  pozhivaith  theadinaanaa?  naangga'l  orea  aaviyaiyudaiyavarga'laay,  orea  adichsuvaduga'lil  nadanthoamallavaa?  (2korinthiyar  12:18)

நாங்கள்  யோக்கியர்களென்று  விளங்கும்படி  உங்களிடத்தில்  பேசுகிறோமென்று  எண்ணுகிறீர்களோ?  தேவனுக்குமுன்பாகக்  கிறிஸ்துவுக்குள்  பேசுகிறோம்.  பிரியமானவர்களே,  சகலத்தையும்  உங்கள்  பக்திவிருத்திக்காகச்  செய்கிறோம்.  (2கொரிந்தியர்  12:19)

naangga'l  yoakkiyarga'len’ru  vi'langgumpadi  ungga'lidaththil  peasugi’roamen’ru  e'n'nugi’reerga'loa?  theavanukkumunbaagak  ki’risthuvukku'l  peasugi’roam.  piriyamaanavarga'lea,  sagalaththaiyum  ungga'l  bakthiviruththikkaagach  seygi’roam.  (2korinthiyar  12:19)

ஆகிலும்  நான்  வந்து,  உங்களை  என்  மனதின்படியிருக்கிறவர்களாகக்  காணாமலும்,  நானும்  உங்கள்  மனதின்படியிருக்கிறவனாகக்  காணப்படாமலுமிருப்பேனோவென்றும்;  விரோதங்கள்,  வைராக்கியங்கள்,  கோபங்கள்,  வாக்குவாதங்கள்,  புறங்கூறுதல்,  கோட்சொல்லுதல்,  இறுமாப்பு,  கலகங்கள்  ஆகிய  இவைகள்  உங்களுக்குள்ளே  உண்டாயிருக்குமோவென்றும்;  (2கொரிந்தியர்  12:20)

aagilum  naan  vanthu,  ungga'lai  en  manathinpadiyirukki’ravarga'laagak  kaa'naamalum,  naanum  ungga'l  manathinpadiyirukki’ravanaagak  kaa'nappadaamalumiruppeanoaven’rum;  viroathangga'l,  vairaakkiyangga'l,  koabangga'l,  vaakkuvaathangga'l,  pu’rangkoo’ruthal,  koadsolluthal,  i’rumaappu,  kalagangga'l  aagiya  ivaiga'l  ungga'lukku'l'lea  u'ndaayirukkumoaven’rum;  (2korinthiyar  12:20)

மறுபடியும்  நான்  வருகிறபோது,  என்  தேவன்  உங்களிடத்தில்  என்னைத்  தாழ்த்தும்படிக்கு  முன்  பாவஞ்செய்தவர்களாகிய  அநேகர்  தாங்கள்  நடப்பித்த  அசுத்தத்தையும்  வேசித்தனத்தையும்  காமவிகாரத்தையும்  விட்டு  மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து,  நான்  துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும்  பயந்திருக்கிறேன்.  (2கொரிந்தியர்  12:21)

ma’rupadiyum  naan  varugi’rapoathu,  en  theavan  ungga'lidaththil  ennaith  thaazhththumpadikku  mun  paavagnseythavarga'laagiya  aneagar  thaangga'l  nadappiththa  asuththaththaiyum  veasiththanaththaiyum  kaamavigaaraththaiyum  vittu  mananthirumbaamalirukki’rathaikku’riththu,  naan  thukkappadavea'ndiyathaayirukkumoaven’rum  bayanthirukki’rean.  (2korinthiyar  12:21)