Showing posts with label Unnatha Paattu. Show all posts
Showing posts with label Unnatha Paattu. Show all posts

Sunday, June 19, 2016

Unnathappaattu 8 | உன்னதப்பாட்டு 8 | Song of Solomon 8

ஆ,  நீர்  என்  தாயின்  பால்குடித்த  என்  சகோதரனைப்போலிருந்தீரானால்,  நான்  உம்மை  வெளியிலே  சந்தித்து  முத்தமிடுவேன்;  என்னை  நிந்திக்கவுமாட்டார்கள்.  (உன்னதப்பாட்டு  8:1)

aa,  neer  en  thaayin  paalkudiththa  en  sagoatharanaippoaliruntheeraanaal,  naan  ummai  ve'liyilea  santhiththu  muththamiduvean;  ennai  ninthikkavumaattaarga'l.  (unnathappaattu  8:1)

நான்  உம்மைக்  கூட்டிக்கொண்டு,  என்  தாயின்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டுபோவேன்;  நீர்  என்னைப்  போதிப்பீர்,  கந்தவர்க்கமிட்ட  திராட்சரசத்தையும்,  என்  மாதளம்பழரசத்தையும்  உமக்குக்  குடிக்கக்கொடுப்பேன்.  (உன்னதப்பாட்டு  8:2)

naan  ummaik  koottikko'ndu,  en  thaayin  veettukku  azhaiththukko'ndupoavean;  neer  ennaip  poathippeer,  kanthavarkkamitta  thiraadcharasaththaiyum,  en  maatha'lampazharasaththaiyum  umakkuk  kudikkakkoduppean.  (unnathappaattu  8:2)

அவர்  இடதுகை  என்  தலையின்  கீழிருக்கும்,  அவர்  வலதுகை  என்னை  அணைக்கும்.  (உன்னதப்பாட்டு  8:3)

avar  idathukai  en  thalaiyin  keezhirukkum,  avar  valathukai  ennai  a'naikkum.  (unnathappaattu  8:3)

எருசலேமின்  குமாரத்திகளே!  எனக்குப்  பிரியமானவளுக்கு  மனதாகுமட்டும்  நீங்கள்  அவளை  விழிக்கப்பண்ணாமலும்  எழுப்பாமலும்  இருக்க  உங்களை  ஆணையிடுகிறேன்.  (உன்னதப்பாட்டு  8:4)

erusaleamin  kumaaraththiga'lea!  enakkup  piriyamaanava'lukku  manathaagumattum  neengga'l  ava'lai  vizhikkappa'n'naamalum  ezhuppaamalum  irukka  ungga'lai  aa'naiyidugi’rean.  (unnathappaattu  8:4)

தன்  நேசர்மேல்  சார்ந்துகொண்டு  வனாந்தரத்திலிருந்து  வருகிற  இவள்  யார்?  கிச்சிலிமரத்தின்கீழ்  உம்மை  எழுப்பினேன்;  அங்கே  உமது  தாய்  உம்மைப்  பெற்றாள்;  அங்கே  உம்மைப்  பெற்றவள்  வேதனைப்பட்டு  உம்மைப்  பெற்றாள்.  (உன்னதப்பாட்டு  8:5)

than  neasarmeal  saarnthuko'ndu  vanaantharaththilirunthu  varugi’ra  iva'l  yaar?  kichchilimaraththinkeezh  ummai  ezhuppinean;  anggea  umathu  thaay  ummaip  pet’raa'l;  anggea  ummaip  pet’rava'l  veathanaippattu  ummaip  pet’raa'l.  (unnathappaattu  8:5)

நீர்  என்னை  உமது  இருதயத்தின்மேல்  முத்திரையைப்போலவும்,  உமது  புயத்தின்மேல்  முத்திரையைப்போலவும்  வைத்துக்கொள்ளும்;  நேசம்  மரணத்தைப்போல்  வலிது;  நேசவைராக்கியம்  பாதாளத்தைப்போல்  கொடிதாயிருக்கிறது;  அதின்  தழல்  அக்கினித்தழலும்  அதின்  ஜுவாலை  கடும்  ஜுவாலையுமாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  8:6)

neer  ennai  umathu  iruthayaththinmeal  muththiraiyaippoalavum,  umathu  puyaththinmeal  muththiraiyaippoalavum  vaiththukko'l'lum;  neasam  mara'naththaippoal  valithu;  neasavairaakkiyam  paathaa'laththaippoal  kodithaayirukki’rathu;  athin  thazhal  akkiniththazhalum  athin  juvaalai  kadum  juvaalaiyumaayirukki’rathu.  (unnathappaattu  8:6)

திரளான  தண்ணீர்கள்  நேசத்தை  அவிக்கமாட்டாது,  வெள்ளங்களும்  அதைத்  தணிக்கமாட்டாது;  ஒருவன்  தன்  வீட்டிலுள்ள  ஆஸ்திகளையெல்லாம்  நேசத்துக்காகக்  கொடுத்தாலும்,  அது  முற்றிலும்  அசட்டைபண்ணப்படும்.  (உன்னதப்பாட்டு  8:7)

thira'laana  tha'n'neerga'l  neasaththai  avikkamaattaathu,  ve'l'langga'lum  athaith  tha'nikkamaattaathu;  oruvan  than  veettilu'l'la  aasthiga'laiyellaam  neasaththukkaagak  koduththaalum,  athu  mut’rilum  asattaipa'n'nappadum.  (unnathappaattu  8:7)

நமக்கு  ஒரு  சிறிய  சகோதரியுண்டு,  அவளுக்கு  ஸ்தனங்களில்லை;  நம்முடைய  சகோதரியைக்  கேட்கும்  நாளில்  அவளுக்காக  நாம்  என்ன  செய்வோம்?  (உன்னதப்பாட்டு  8:8)

namakku  oru  si’riya  sagoathariyu'ndu,  ava'lukku  sthanangga'lillai;  nammudaiya  sagoathariyaik  keadkum  naa'lil  ava'lukkaaga  naam  enna  seyvoam?  (unnathappaattu  8:8)

அவள்  ஒரு  மதிலானால்,  அதின்மேல்  வெள்ளிக்கோட்டையைக்  கட்டுவோம்;  அவள்  கதவானால்,  கேதுருப்பலகைகளை  அதற்கு  இணைப்போம்.  (உன்னதப்பாட்டு  8:9)

ava'l  oru  mathilaanaal,  athinmeal  ve'l'likkoattaiyaik  kattuvoam;  ava'l  kathavaanaal,  keathuruppalagaiga'lai  atha’rku  i'naippoam.  (unnathappaattu  8:9)

நான்  மதில்தான்,  என்  ஸ்தனங்கள்  கோபுரங்கள்;  அவருடைய  கண்களில்  கடாட்சம்பெறலானேன்.  (உன்னதப்பாட்டு  8:10)

naan  mathilthaan,  en  sthanangga'l  koapurangga'l;  avarudaiya  ka'nga'lil  kadaadchampe’ralaanean.  (unnathappaattu  8:10)

பாகால்  ஆமோனிலே  சாலொமோனுக்கு  ஒரு  திராட்சத்தோட்டம்  உண்டாயிருந்தது,  அந்தத்  தோட்டத்தைக்  காவலாளிகள்  வசத்திலே  அதின்  பலனுக்காக,  ஒவ்வொருவன்  ஆயிரம்  வெள்ளிக்காசு  கொண்டுவரும்படி  விட்டார்.  (உன்னதப்பாட்டு  8:11)

baagaal  aamoanilea  saalomoanukku  oru  thiraadchaththoattam  u'ndaayirunthathu,  anthath  thoattaththaik  kaavalaa'liga'l  vasaththilea  athin  palanukkaaga,  ovvoruvan  aayiram  ve'l'likkaasu  ko'nduvarumpadi  vittaar.  (unnathappaattu  8:11)

என்  திராட்சத்தோட்டம்  எனக்கு  முன்பாக  இருக்கிறது;  சாலொமோனே!  உமக்கு  அந்த  ஆயிரமும்,  அதின்  கனியைக்  காக்கிறவர்களுக்கு  இருநூறும்  சேரும்.  (உன்னதப்பாட்டு  8:12)

en  thiraadchaththoattam  enakku  munbaaga  irukki’rathu;  saalomoanea!  umakku  antha  aayiramum,  athin  kaniyaik  kaakki’ravarga'lukku  irunoo’rum  searum.  (unnathappaattu  8:12)

தோட்டங்களில்  வாசம்பண்ணுகிறவளே!  தோழர்  உன்  சத்தத்தைக்  கேட்கிறார்கள்;  நானும்  அதைக்  கேட்கட்டும்.  (உன்னதப்பாட்டு  8:13)

thoattangga'lil  vaasampa'n'nugi’rava'lea!  thoazhar  un  saththaththaik  keadki’raarga'l;  naanum  athaik  keadkattum.  (unnathappaattu  8:13)

என்  நேசரே!  தீவிரியும்,  கந்தவர்க்கங்களின்  மலைகள்மேலுள்ள  வெளிமானுக்கும்  மரைகளின்  குட்டிக்கும்  சமானமாயிரும்.  (உன்னதப்பாட்டு  8:14)

en  neasarea!  theeviriyum,  kanthavarkkangga'lin  malaiga'lmealu'l'la  ve'limaanukkum  maraiga'lin  kuttikkum  samaanamaayirum.  (unnathappaattu  8:14)


Unnathappaattu 7 | உன்னதப்பாட்டு 7 | Song of Solomon 7

ராஜகுமாரத்தியே!  பாதரட்சைகளிட்ட  உன்  பாதங்கள்  மிகவும்  அழகாயிருக்கிறது;  உன்  இடுப்பின்  வடிவு  விசித்திரத்  தொழிற்காரரின்  வேலையாகிய  பூஷணம்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:1)

raajakumaaraththiyea!  paatharadchaiga'litta  un  paathangga'l  migavum  azhagaayirukki’rathu;  un  iduppin  vadivu  visiththirath  thozhi’rkaararin  vealaiyaagiya  poosha'nampoalirukki’rathu.  (unnathappaattu  7:1)

உன்  நாபி  திராட்சரசம்  நிறைந்த  வட்டக்கலசம்போலிருக்கிறது;  உன்  வயிறு  லீலிபுஷ்பங்கள்  சூழ்ந்த  கோதுமை  அம்பாரம்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:2)

un  naabi  thiraadcharasam  ni’raintha  vattakkalasampoalirukki’rathu;  un  vayi’ru  leelipushpangga'l  soozhntha  koathumai  ambaarampoalirukki’rathu.  (unnathappaattu  7:2)

உன்  இரண்டு  ஸ்தனங்களும்  வெளிமானின்  இரட்டைக்குட்டிகளுக்குச்  சமானமாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:3)

un  ira'ndu  sthanangga'lum  ve'limaanin  irattaikkuttiga'lukkuch  samaanamaayirukki’rathu.  (unnathappaattu  7:3)

உன்  கழுத்து  யானைத்தந்தத்தினால்  செய்த  கோபுரத்தைப்போலவும்,  உன்  கண்கள்  எஸ்போனிலே  பத்ரபீம்  வாசலண்டையிலிருக்கும்  குளங்களைப்போலவும்,  உன்  மூக்கு  தமஸ்குவின்  திசையை  நோக்கும்  லீபனோனின்  கோபுரத்தைப்போலவும்  இருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:4)

un  kazhuththu  yaanaiththanthaththinaal  seytha  koapuraththaippoalavum,  un  ka'nga'l  esboanilea  bathrabeem  vaasala'ndaiyilirukkum  ku'langga'laippoalavum,  un  mookku  thamaskuvin  thisaiyai  noakkum  leebanoanin  koapuraththaippoalavum  irukki’rathu.  (unnathappaattu  7:4)

உன்  சிரசு  கர்மேல்  மலையைப்போலிருக்கிறது;  உன்  தலைமயிர்  இரத்தாம்பரமயமாயிருக்கிறது;  ராஜா  நடைக்காவணங்களில்  மயங்கிநிற்கிறார்.  (உன்னதப்பாட்டு  7:5)

un  sirasu  karmeal  malaiyaippoalirukki’rathu;  un  thalaimayir  iraththaambaramayamaayirukki’rathu;  raajaa  nadaikkaava'nangga'lil  mayanggini’rki’raar.  (unnathappaattu  7:5)

மனமகிழ்ச்சியை  உண்டாக்கும்  என்  பிரியமே!  நீ  எவ்வளவு  ரூபவதி,  நீ  எவ்வளவு  இன்பமுள்ளவள்.  (உன்னதப்பாட்டு  7:6)

manamagizhchchiyai  u'ndaakkum  en  piriyamea!  nee  evva'lavu  roobavathi,  nee  evva'lavu  inbamu'l'lava'l.  (unnathappaattu  7:6)

உன்  உயரம்  பனைமரத்தொழுங்குபோலவும்,  உன்  ஸ்தனங்கள்  திராட்சக்குலைகள்போலவும்  இருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:7)

un  uyaram  panaimaraththozhunggupoalavum,  un  sthanangga'l  thiraadchakkulaiga'lpoalavum  irukki’rathu.  (unnathappaattu  7:7)

நான்  பனைமரத்திலேறி,  அதின்  மடல்களைப்  பிடிப்பேன்  என்றேன்;  இப்பொழுதும்  உன்  ஸ்தனங்கள்  திராட்சக்குலைகள்போலவும்,  உன்  மூக்கின்  வாசனை  கிச்சிலிப்பழங்கள்போலவும்  இருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:8)

naan  panaimaraththilea’ri,  athin  madalga'laip  pidippean  en’rean;  ippozhuthum  un  sthanangga'l  thiraadchakkulaiga'lpoalavum,  un  mookkin  vaasanai  kichchilippazhangga'lpoalavum  irukki’rathu.  (unnathappaattu  7:8)

உன்  தொண்டை,  என்  நேசர்  குடிக்கையில்  மெதுவாயிறங்குகிறதும்,  உறங்குகிறவர்களின்  உதடுகளைப்  பேசப்பண்ணுகிறதுமான,  நல்ல  திராட்சரசத்தைப்போலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:9)

un  tho'ndai,  en  neasar  kudikkaiyil  methuvaayi’ranggugi’rathum,  u’ranggugi’ravarga'lin  uthaduga'laip  peasappa'n'nugi’rathumaana,  nalla  thiraadcharasaththaippoalirukki’rathu.  (unnathappaattu  7:9)

நான்  என்  நேசருடையவள்,  அவர்  பிரியம்  என்மேலிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  7:10)

naan  en  neasarudaiyava'l,  avar  piriyam  enmealirukki’rathu.  (unnathappaattu  7:10)

வாரும்  என்  நேசரே!  வயல்வெளியில்  போய்,  கிராமங்களில்  தங்குவோம்.  (உன்னதப்பாட்டு  7:11)

vaarum  en  neasarea!  vayalve'liyil  poay,  kiraamangga'lil  thangguvoam.  (unnathappaattu  7:11)

அதிகாலையிலே  திராட்சத்தோட்டங்களுக்குப்  போவோம்;  திராட்சக்கொடி  துளிர்த்து  அதின்  பூ  மலர்ந்ததோ  என்றும்,  மாதளஞ்செடிகள்  பூப்பூத்ததோ  என்றும்  பார்ப்போம்;  அங்கே  என்  நேசத்தின்  உச்சிதங்களை  உமக்குத்  தருவேன்.  (உன்னதப்பாட்டு  7:12)

athikaalaiyilea  thiraadchaththoattangga'lukkup  poavoam;  thiraadchakkodi  thu'lirththu  athin  poo  malarnthathoa  en’rum,  maatha'lagnsediga'l  pooppooththathoa  en’rum  paarppoam;  anggea  en  neasaththin  uchchithangga'lai  umakkuth  tharuvean.  (unnathappaattu  7:12)

தூதாயீம்  பழம்  வாசனை  வீசும்;  நமது  வாசல்களண்டையிலே  புதியவைகளும்  பழையவைகளுமான  சகலவித  அருமையான  கனிகளுமுண்டு;  என்  நேசரே!  அவைகளை  உமக்கு  வைத்திருக்கிறேன்.  (உன்னதப்பாட்டு  7:13)

thoothaayeem  pazham  vaasanai  veesum;  namathu  vaasalga'la'ndaiyilea  puthiyavaiga'lum  pazhaiyavaiga'lumaana  sagalavitha  arumaiyaana  kaniga'lumu'ndu;  en  neasarea!  avaiga'lai  umakku  vaiththirukki’rean.  (unnathappaattu  7:13)