Sunday, June 19, 2016

Unnathappaattu 8 | உன்னதப்பாட்டு 8 | Song of Solomon 8

ஆ,  நீர்  என்  தாயின்  பால்குடித்த  என்  சகோதரனைப்போலிருந்தீரானால்,  நான்  உம்மை  வெளியிலே  சந்தித்து  முத்தமிடுவேன்;  என்னை  நிந்திக்கவுமாட்டார்கள்.  (உன்னதப்பாட்டு  8:1)

aa,  neer  en  thaayin  paalkudiththa  en  sagoatharanaippoaliruntheeraanaal,  naan  ummai  ve'liyilea  santhiththu  muththamiduvean;  ennai  ninthikkavumaattaarga'l.  (unnathappaattu  8:1)

நான்  உம்மைக்  கூட்டிக்கொண்டு,  என்  தாயின்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டுபோவேன்;  நீர்  என்னைப்  போதிப்பீர்,  கந்தவர்க்கமிட்ட  திராட்சரசத்தையும்,  என்  மாதளம்பழரசத்தையும்  உமக்குக்  குடிக்கக்கொடுப்பேன்.  (உன்னதப்பாட்டு  8:2)

naan  ummaik  koottikko'ndu,  en  thaayin  veettukku  azhaiththukko'ndupoavean;  neer  ennaip  poathippeer,  kanthavarkkamitta  thiraadcharasaththaiyum,  en  maatha'lampazharasaththaiyum  umakkuk  kudikkakkoduppean.  (unnathappaattu  8:2)

அவர்  இடதுகை  என்  தலையின்  கீழிருக்கும்,  அவர்  வலதுகை  என்னை  அணைக்கும்.  (உன்னதப்பாட்டு  8:3)

avar  idathukai  en  thalaiyin  keezhirukkum,  avar  valathukai  ennai  a'naikkum.  (unnathappaattu  8:3)

எருசலேமின்  குமாரத்திகளே!  எனக்குப்  பிரியமானவளுக்கு  மனதாகுமட்டும்  நீங்கள்  அவளை  விழிக்கப்பண்ணாமலும்  எழுப்பாமலும்  இருக்க  உங்களை  ஆணையிடுகிறேன்.  (உன்னதப்பாட்டு  8:4)

erusaleamin  kumaaraththiga'lea!  enakkup  piriyamaanava'lukku  manathaagumattum  neengga'l  ava'lai  vizhikkappa'n'naamalum  ezhuppaamalum  irukka  ungga'lai  aa'naiyidugi’rean.  (unnathappaattu  8:4)

தன்  நேசர்மேல்  சார்ந்துகொண்டு  வனாந்தரத்திலிருந்து  வருகிற  இவள்  யார்?  கிச்சிலிமரத்தின்கீழ்  உம்மை  எழுப்பினேன்;  அங்கே  உமது  தாய்  உம்மைப்  பெற்றாள்;  அங்கே  உம்மைப்  பெற்றவள்  வேதனைப்பட்டு  உம்மைப்  பெற்றாள்.  (உன்னதப்பாட்டு  8:5)

than  neasarmeal  saarnthuko'ndu  vanaantharaththilirunthu  varugi’ra  iva'l  yaar?  kichchilimaraththinkeezh  ummai  ezhuppinean;  anggea  umathu  thaay  ummaip  pet’raa'l;  anggea  ummaip  pet’rava'l  veathanaippattu  ummaip  pet’raa'l.  (unnathappaattu  8:5)

நீர்  என்னை  உமது  இருதயத்தின்மேல்  முத்திரையைப்போலவும்,  உமது  புயத்தின்மேல்  முத்திரையைப்போலவும்  வைத்துக்கொள்ளும்;  நேசம்  மரணத்தைப்போல்  வலிது;  நேசவைராக்கியம்  பாதாளத்தைப்போல்  கொடிதாயிருக்கிறது;  அதின்  தழல்  அக்கினித்தழலும்  அதின்  ஜுவாலை  கடும்  ஜுவாலையுமாயிருக்கிறது.  (உன்னதப்பாட்டு  8:6)

neer  ennai  umathu  iruthayaththinmeal  muththiraiyaippoalavum,  umathu  puyaththinmeal  muththiraiyaippoalavum  vaiththukko'l'lum;  neasam  mara'naththaippoal  valithu;  neasavairaakkiyam  paathaa'laththaippoal  kodithaayirukki’rathu;  athin  thazhal  akkiniththazhalum  athin  juvaalai  kadum  juvaalaiyumaayirukki’rathu.  (unnathappaattu  8:6)

திரளான  தண்ணீர்கள்  நேசத்தை  அவிக்கமாட்டாது,  வெள்ளங்களும்  அதைத்  தணிக்கமாட்டாது;  ஒருவன்  தன்  வீட்டிலுள்ள  ஆஸ்திகளையெல்லாம்  நேசத்துக்காகக்  கொடுத்தாலும்,  அது  முற்றிலும்  அசட்டைபண்ணப்படும்.  (உன்னதப்பாட்டு  8:7)

thira'laana  tha'n'neerga'l  neasaththai  avikkamaattaathu,  ve'l'langga'lum  athaith  tha'nikkamaattaathu;  oruvan  than  veettilu'l'la  aasthiga'laiyellaam  neasaththukkaagak  koduththaalum,  athu  mut’rilum  asattaipa'n'nappadum.  (unnathappaattu  8:7)

நமக்கு  ஒரு  சிறிய  சகோதரியுண்டு,  அவளுக்கு  ஸ்தனங்களில்லை;  நம்முடைய  சகோதரியைக்  கேட்கும்  நாளில்  அவளுக்காக  நாம்  என்ன  செய்வோம்?  (உன்னதப்பாட்டு  8:8)

namakku  oru  si’riya  sagoathariyu'ndu,  ava'lukku  sthanangga'lillai;  nammudaiya  sagoathariyaik  keadkum  naa'lil  ava'lukkaaga  naam  enna  seyvoam?  (unnathappaattu  8:8)

அவள்  ஒரு  மதிலானால்,  அதின்மேல்  வெள்ளிக்கோட்டையைக்  கட்டுவோம்;  அவள்  கதவானால்,  கேதுருப்பலகைகளை  அதற்கு  இணைப்போம்.  (உன்னதப்பாட்டு  8:9)

ava'l  oru  mathilaanaal,  athinmeal  ve'l'likkoattaiyaik  kattuvoam;  ava'l  kathavaanaal,  keathuruppalagaiga'lai  atha’rku  i'naippoam.  (unnathappaattu  8:9)

நான்  மதில்தான்,  என்  ஸ்தனங்கள்  கோபுரங்கள்;  அவருடைய  கண்களில்  கடாட்சம்பெறலானேன்.  (உன்னதப்பாட்டு  8:10)

naan  mathilthaan,  en  sthanangga'l  koapurangga'l;  avarudaiya  ka'nga'lil  kadaadchampe’ralaanean.  (unnathappaattu  8:10)

பாகால்  ஆமோனிலே  சாலொமோனுக்கு  ஒரு  திராட்சத்தோட்டம்  உண்டாயிருந்தது,  அந்தத்  தோட்டத்தைக்  காவலாளிகள்  வசத்திலே  அதின்  பலனுக்காக,  ஒவ்வொருவன்  ஆயிரம்  வெள்ளிக்காசு  கொண்டுவரும்படி  விட்டார்.  (உன்னதப்பாட்டு  8:11)

baagaal  aamoanilea  saalomoanukku  oru  thiraadchaththoattam  u'ndaayirunthathu,  anthath  thoattaththaik  kaavalaa'liga'l  vasaththilea  athin  palanukkaaga,  ovvoruvan  aayiram  ve'l'likkaasu  ko'nduvarumpadi  vittaar.  (unnathappaattu  8:11)

என்  திராட்சத்தோட்டம்  எனக்கு  முன்பாக  இருக்கிறது;  சாலொமோனே!  உமக்கு  அந்த  ஆயிரமும்,  அதின்  கனியைக்  காக்கிறவர்களுக்கு  இருநூறும்  சேரும்.  (உன்னதப்பாட்டு  8:12)

en  thiraadchaththoattam  enakku  munbaaga  irukki’rathu;  saalomoanea!  umakku  antha  aayiramum,  athin  kaniyaik  kaakki’ravarga'lukku  irunoo’rum  searum.  (unnathappaattu  8:12)

தோட்டங்களில்  வாசம்பண்ணுகிறவளே!  தோழர்  உன்  சத்தத்தைக்  கேட்கிறார்கள்;  நானும்  அதைக்  கேட்கட்டும்.  (உன்னதப்பாட்டு  8:13)

thoattangga'lil  vaasampa'n'nugi’rava'lea!  thoazhar  un  saththaththaik  keadki’raarga'l;  naanum  athaik  keadkattum.  (unnathappaattu  8:13)

என்  நேசரே!  தீவிரியும்,  கந்தவர்க்கங்களின்  மலைகள்மேலுள்ள  வெளிமானுக்கும்  மரைகளின்  குட்டிக்கும்  சமானமாயிரும்.  (உன்னதப்பாட்டு  8:14)

en  neasarea!  theeviriyum,  kanthavarkkangga'lin  malaiga'lmealu'l'la  ve'limaanukkum  maraiga'lin  kuttikkum  samaanamaayirum.  (unnathappaattu  8:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!