Showing posts with label aamoas. Show all posts
Showing posts with label aamoas. Show all posts

Monday, July 25, 2016

Aamoas 9 | ஆமோஸ் 9 | Amos 9

ஆண்டவரைப்  பலிபீடத்தின்மேல்  நிற்கக்கண்டேன்;  அவர்:  நீ  வாசல்  நிலைகள்  அசையும்படி  போதிகையை  அடித்து,  அவைகளை  அவர்கள்  எல்லாருடைய  தலையின்மேலும்  விழ  உடைத்துப்போடு;  அவர்களுக்குப்  பின்னாகவரும்  மீதியானவர்களை  நான்  பட்டயத்தினால்  கொன்றுபோடுவேன்;  அவர்களில்  ஓடுகிறவன்  ஒருவனும்  தப்புவதுமில்லை,  அவர்களில்  தப்புகிறவன்  ஒருவனும்  இரட்சிக்கப்படுவதுமில்லை.  (ஆமோஸ்  9:1)

aa'ndavaraip  balipeedaththinmeal  ni’rkakka'ndean;  avar:  nee  vaasal  nilaiga'l  asaiyumpadi  poathigaiyai  adiththu,  avaiga'lai  avarga'l  ellaarudaiya  thalaiyinmealum  vizha  udaiththuppoadu;  avarga'lukkup  pinnaagavarum  meethiyaanavarga'lai  naan  pattayaththinaal  kon’rupoaduvean;  avarga'lil  oadugi’ravan  oruvanum  thappuvathumillai,  avarga'lil  thappugi’ravan  oruvanum  iradchikkappaduvathumillai.  (aamoas  9:1)

அவர்கள்  பாதாளபரியந்தம்  தோண்டிப்  பதுங்கிக்கொண்டாலும்,  என்  கை  அவ்விடத்திலிருந்து  அவர்களைப்  பிடித்துக்கொண்டுவரும்;  அவர்கள்  வானபரியந்தம்  ஏறினாலும்,  அவ்விடத்திலுமிருந்து  அவர்களை  இறங்கப்பண்ணுவேன்;  (ஆமோஸ்  9:2)

avarga'l  paathaa'lapariyantham  thoa'ndip  pathunggikko'ndaalum,  en  kai  avvidaththilirunthu  avarga'laip  pidiththukko'nduvarum;  avarga'l  vaanapariyantham  ea’rinaalum,  avvidaththilumirunthu  avarga'lai  i’ranggappa'n'nuvean;  (aamoas  9:2)

அவர்கள்  கர்மேலின்  கொடுமுடியிலே  ஒளித்துக்கொண்டாலும்,  அங்கே  அவர்களைத்  தேடிப்பிடிப்பேன்;  அவர்கள்  சமுத்திரத்தின்  ஆழத்திலே  போய்  என்  கண்களுக்கு  மறைந்துகொண்டாலும்,  அங்கே  அவர்களைக்  கடிக்கப்  பாம்புகளுக்குக்  கட்டளையிடுவேன்.  (ஆமோஸ்  9:3)

avarga'l  karmealin  kodumudiyilea  o'liththukko'ndaalum,  anggea  avarga'laith  theadippidippean;  avarga'l  samuththiraththin  aazhaththilea  poay  en  ka'nga'lukku  ma’rainthuko'ndaalum,  anggea  avarga'laik  kadikkap  paambuga'lukkuk  katta'laiyiduvean.  (aamoas  9:3)

அவர்கள்  தங்கள்  சத்துருவுக்கு  முன்பாகச்  சிறைப்பட்டுப்போனாலும்,  அங்கே  அவர்களைக்  கொன்றுபோடப்  பட்டயத்துக்கு  நான்  கட்டளையிட்டு,  என்  கண்களை  அவர்கள்மேல்  நன்மைக்கல்ல,  தீமைக்கென்றே  வைப்பேன்.  (ஆமோஸ்  9:4)

avarga'l  thangga'l  saththuruvukku  munbaagach  si’raippattuppoanaalum,  anggea  avarga'laik  kon’rupoadap  pattayaththukku  naan  katta'laiyittu,  en  ka'nga'lai  avarga'lmeal  nanmaikkalla,  theemaikken’rea  vaippean.  (aamoas  9:4)

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  தேசத்தைத்  தொட,  அது  உருகிப்போம்;  அப்பொழுது  அதின்  குடிகளெல்லாரும்  புலம்புவார்கள்;  எங்கும்  நதியாய்ப்  புரண்டோடி,  எகிப்தினுடைய  ஆற்று  வெள்ளத்தைப்போல்  வெள்ளமாகும்.  (ஆமோஸ்  9:5)

seanaiga'lin  karththaraagiya  aa'ndavar  theasaththaith  thoda,  athu  urugippoam;  appozhuthu  athin  kudiga'lellaarum  pulambuvaarga'l;  enggum  nathiyaayp  pura'ndoadi,  egipthinudaiya  aat’ru  ve'l'laththaippoal  ve'l'lamaagum.  (aamoas  9:5)

அவர்  வானத்தில்  தமது  மேலறைகளைக்  கட்டி,  பூமியில்  தமது  கீழறைகளை  அஸ்திபாரப்படுத்தி,  சமுத்திரத்தின்  தண்ணீர்களை  வரவழைத்து,  அவைகளைப்  பூமியினுடைய  விசாலத்தின்மேல்  ஊற்றுகிறவர்;  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  (ஆமோஸ்  9:6)

avar  vaanaththil  thamathu  meala’raiga'laik  katti,  boomiyil  thamathu  keezha’raiga'lai  asthibaarappaduththi,  samuththiraththin  tha'n'neerga'lai  varavazhaiththu,  avaiga'laip  boomiyinudaiya  visaalaththinmeal  oot’rugi’ravar;  karththar  enbathu  avarudaiya  naamam.  (aamoas  9:6)

இஸ்ரவேல்  புத்திரரே,  நீங்கள்  எனக்கு  எத்தியோப்பியரின்  புத்திரரைப்போல்  இருக்கிறீர்கள்  அல்லவோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  இஸ்ரவேலை  எகிப்துதேசத்திலிருந்தும்,  பெலிஸ்தரைக்  கப்தோரிலிருந்தும்,  சீரியரைக்  கீரிலிருந்தும்  கொண்டுவரவில்லையோ?  (ஆமோஸ்  9:7)

israveal  puththirarea,  neengga'l  enakku  eththiyoappiyarin  puththiraraippoal  irukki’reerga'l  allavoa  en’ru  karththar  sollugi’raar;  naan  isravealai  egipthutheasaththilirunthum,  pelistharaik  kapthoarilirunthum,  seeriyaraik  keerilirunthum  ko'nduvaravillaiyoa?  (aamoas  9:7)

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவரின்  கண்கள்  பாவமுள்ள  ராஜ்யத்துக்கு  விரோதமாக  வைக்கப்பட்டிருக்கிறது;  அதைப்  பூமியின்மேல்  இராதபடிக்கு  அழித்துப்போடுவேன்;  ஆகிலும்  யாக்கோபின்  வம்சத்தை  முழுவதும்  அழிக்கமாட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  9:8)

ithoa,  karththaraagiya  aa'ndavarin  ka'nga'l  paavamu'l'la  raajyaththukku  viroathamaaga  vaikkappattirukki’rathu;  athaip  boomiyinmeal  iraathapadikku  azhiththuppoaduvean;  aagilum  yaakkoabin  vamsaththai  muzhuvathum  azhikkamaattean  en’ru  karththar  sollugi’raar.  (aamoas  9:8)

இதோ,  ஜல்லடையினால்  சலித்தரிக்கிறதுபோல்  இஸ்ரவேல்  வம்சத்தாரை  எல்லா  ஜாதிகளுக்குள்ளும்  சலித்தரிக்கும்படிக்கு  நான்  கட்டளையிடுவேன்;  ஆனாலும்  ஒரு  கோதுமைமணியும்  தரையிலே  விழுவதில்லை.  (ஆமோஸ்  9:9)

ithoa,  jalladaiyinaal  saliththarikki’rathupoal  israveal  vamsaththaarai  ellaa  jaathiga'lukku'l'lum  saliththarikkumpadikku  naan  katta'laiyiduvean;  aanaalum  oru  koathumaima'niyum  tharaiyilea  vizhuvathillai.  (aamoas  9:9)

தீங்கு  எங்களை  அணுகுவதுமில்லை,  எங்களுக்கு  நேரிடுவதுமில்லையென்று  என்  ஜனத்தில்  சொல்லுகிற  பாவிகளெல்லாரும்  பட்டயத்தினால்  சாவார்கள்.  (ஆமோஸ்  9:10)

theenggu  engga'lai  a'nuguvathumillai,  engga'lukku  neariduvathumillaiyen’ru  en  janaththil  sollugi’ra  paaviga'lellaarum  pattayaththinaal  saavaarga'l.  (aamoas  9:10)

ஏதோமில்  மீதியானவர்களையும்,  என்  நாமம்  விளங்கிய  சகல  ஜாதிகளையும்  வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,  (ஆமோஸ்  9:11)

eathoamil  meethiyaanavarga'laiyum,  en  naamam  vi'langgiya  sagala  jaathiga'laiyum  vasamaakkikko'l'lumpadikku,  (aamoas  9:11)

அந்நாளிலே  விழுந்துபோன  தாவீதின்  கூடாரத்தை  நான்  திரும்ப  எடுப்பித்து,  அதின்  திறப்புகளை  அடைத்து,  அதில்  பழுதாய்ப்போனதைச்  சீர்ப்படுத்தி,  பூர்வநாட்களில்  இருந்ததுபோல  அதை  ஸ்தாபிப்பேன்  என்று  இதைச்  செய்கிற  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  9:12)

annaa'lilea  vizhunthupoana  thaaveethin  koodaaraththai  naan  thirumba  eduppiththu,  athin  thi’rappuga'lai  adaiththu,  athil  pazhuthaayppoanathaich  seerppaduththi,  poorvanaadka'lil  irunthathupoala  athai  sthaabippean  en’ru  ithaich  seygi’ra  karththar  sollugi’raar.  (aamoas  9:12)

இதோ,  உழுகிறவன்  அறுக்கிறவனையும்,  திராட்சப்பழங்களை  ஆலையாடுகிறவன்  விதைக்கிறவனையும்  தொடர்ந்துபிடித்து,  பர்வதங்கள்  திராட்சரசமாய்  வடிகிறதும்,  மேடுகளெல்லாம்  கரைகிறதுமான  நாட்கள்  வரும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  9:13)

ithoa,  uzhugi’ravan  a’rukki’ravanaiyum,  thiraadchappazhangga'lai  aalaiyaadugi’ravan  vithaikki’ravanaiyum  thodarnthupidiththu,  parvathangga'l  thiraadcharasamaay  vadigi’rathum,  meaduga'lellaam  karaigi’rathumaana  naadka'l  varum  en’ru  karththar  sollugi’raar.  (aamoas  9:13)

என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்  சிறையிருப்பைத்  திருப்புவேன்;  அவர்கள்  பாழான  நகரங்களைக்  கட்டி,  அவைகளில்  குடியிருந்து,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளுடைய  பழரசத்தைக்  குடித்து,  தோட்டங்களை  உண்டாக்கி,  அவைகளின்  கனிகளைப்  புசிப்பார்கள்.  (ஆமோஸ்  9:14)

en  janamaagiya  isravealin  si’raiyiruppaith  thiruppuvean;  avarga'l  paazhaana  nagarangga'laik  katti,  avaiga'lil  kudiyirunthu,  thiraadchaththoattangga'lai  naatti,  avaiga'ludaiya  pazharasaththaik  kudiththu,  thoattangga'lai  u'ndaakki,  avaiga'lin  kaniga'laip  pusippaarga'l.  (aamoas  9:14)

அவர்களை  அவர்கள்  தேசத்திலே  நாட்டுவேன்;  நான்  அவர்களுக்குக்  கொடுத்த  தேசத்திலிருந்து  அவர்கள்  இனிப்  பிடுங்கப்படுவதில்லையென்று  உன்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (ஆமோஸ்  9:15)

avarga'lai  avarga'l  theasaththilea  naattuvean;  naan  avarga'lukkuk  koduththa  theasaththilirunthu  avarga'l  inip  pidunggappaduvathillaiyen’ru  un  theavanaagiya  karththar  sollugi’raar  en’raar.  (aamoas  9:15)


Aamoas 8 | ஆமோஸ் 8 | Amos 8


பின்பு  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  பழுத்த  பழங்களுள்ள  ஒரு  கூடை  இருந்தது.  (ஆமோஸ்  8:1)

pinbu  karththaraagiya  aa'ndavar  enakkuk  kaa'nbiththathaavathu:  ithoa,  pazhuththa  pazhangga'lu'l'la  oru  koodai  irunthathu.  (aamoas  8:1)

அவர்:  ஆமோசே,  நீ  என்னத்தைக்  காண்கிறாய்  என்று  கேட்டார்?  பழுத்த  பழங்களுள்ள  ஒரு  கூடையைக்  காண்கிறேன்  என்றேன்.  அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  முடிவுகாலம்  வந்தது;  இனி  அவர்களை  மன்னிக்கமாட்டேன்.  (ஆமோஸ்  8:2)

avar:  aamoasea,  nee  ennaththaik  kaa'ngi’raay  en’ru  keattaar?  pazhuththa  pazhangga'lu'l'la  oru  koodaiyaik  kaa'ngi’rean  en’rean.  appozhuthu  karththar  ennai  noakki:  en  janamaagiya  isravealukku  mudivukaalam  vanthathu;  ini  avarga'lai  mannikkamaattean.  (aamoas  8:2)

அந்நாளிலே  தேவாலயப்பாட்டுகள்  அலறுதலாக  மாறும்;  எல்லா  இடத்திலும்  திரளான  பிரேதங்கள்  புலம்பலில்லாமல்  எறிந்துவிடப்படும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  8:3)

annaa'lilea  theavaalayappaattuga'l  ala’ruthalaaga  maa’rum;  ellaa  idaththilum  thira'laana  pireathangga'l  pulambalillaamal  e’rinthuvidappadum  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (aamoas  8:3)

தேசத்தில்  சிறுமைப்பட்டவர்களை  ஒழியப்பண்ண,  எளியவர்களை  விழுங்கி:  (ஆமோஸ்  8:4)

theasaththil  si’rumaippattavarga'lai  ozhiyappa'n'na,  e'liyavarga'lai  vizhunggi:  (aamoas  8:4)

நாங்கள்  மரக்காலைக்  குறைத்து,  சேக்கல்  நிறையை  அதிகமாக்கி,  கள்ளத்தராசினால்  வஞ்சித்து,  தரித்திரரைப்  பணத்துக்கும்,  எளியவர்களை  ஒரு  ஜோடு  பாதரட்சைக்கும்  கொள்ளும்படிக்கும்,  தானியத்தின்  பதரை  விற்கும்படிக்கும்,  (ஆமோஸ்  8:5)

naangga'l  marakkaalaik  ku’raiththu,  seakkal  ni’raiyai  athigamaakki,  ka'l'laththaraasinaal  vagnchiththu,  thariththiraraip  pa'naththukkum,  e'liyavarga'lai  oru  joadu  paatharadchaikkum  ko'l'lumpadikkum,  thaaniyaththin  patharai  vi’rkumpadikkum,  (aamoas  8:5)

நாங்கள்  தவசம்  விற்கத்தக்கதாக  மாதப்பிறப்பும்,  நாங்கள்  தானியத்தின்  பண்டசாலைகளைத்  திறக்கத்தக்கதாக  ஓய்வுநாளும்  எப்போது  முடியும்  என்று  சொல்லுகிறவர்களே,  இதைக்  கேளுங்கள்.  (ஆமோஸ்  8:6)

naangga'l  thavasam  vi’rkaththakkathaaga  maathappi’rappum,  naangga'l  thaaniyaththin  pa'ndasaalaiga'laith  thi’rakkaththakkathaaga  oayvunaa'lum  eppoathu  mudiyum  en’ru  sollugi’ravarga'lea,  ithaik  kea'lungga'l.  (aamoas  8:6)

அவர்கள்  செய்கைகளையெல்லாம்  நான்  ஒருபோதும்  மறப்பதில்லையென்று  கர்த்தர்  யாக்கோபுடைய  மகிமையின்பேரில்  ஆணையிட்டார்.  (ஆமோஸ்  8:7)

avarga'l  seygaiga'laiyellaam  naan  orupoathum  ma’rappathillaiyen’ru  karththar  yaakkoabudaiya  magimaiyinpearil  aa'naiyittaar.  (aamoas  8:7)

இதினிமித்தம்  தேசம்  அதிரவும்,  அதின்  குடிகள்  எல்லாம்  துக்கிக்கவும்,  எங்கும்  நதிகளாய்ப்  புரண்டோடவும்,  எகிப்தின்  ஆற்றுவெள்ளத்தைப்போல்  அடித்து,  பெருவெள்ளமாகவும்  வேண்டாமோ?  (ஆமோஸ்  8:8)

ithinimiththam  theasam  athiravum,  athin  kudiga'l  ellaam  thukkikkavum,  enggum  nathiga'laayp  pura'ndoadavum,  egipthin  aat’ruve'l'laththaippoal  adiththu,  peruve'l'lamaagavum  vea'ndaamoa?  (aamoas  8:8)

அந்நாளிலே  நான்  மத்தியானத்திலே  சூரியனை  அஸ்தமிக்கப்பண்ணி,  பட்டப்பகலிலே  தேசத்தை  அந்தகாரப்படுத்தி,  (ஆமோஸ்  8:9)

annaa'lilea  naan  maththiyaanaththilea  sooriyanai  asthamikkappa'n'ni,  pattappagalilea  theasaththai  anthagaarappaduththi,  (aamoas  8:9)

உங்கள்  பண்டிகைகளைத்  துக்கிப்பாகவும்,  உங்கள்  பாட்டுகளையெல்லாம்  புலம்பலாகவும்  மாறப்பண்ணி,  சகல  அரைகளிலும்  இரட்டையும்,  சகல  தலைகளிலும்  மொட்டையையும்  வருவித்து,  அவர்களுடைய  துக்கிப்பை  ஒரே  பிள்ளைக்காகத்  துக்கிக்கிற  துக்கிப்புக்குச்  சமானமாக்கி,  அவர்களுடைய  முடிவைக்  கசப்பான  நாளாக்குவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  8:10)

ungga'l  pa'ndigaiga'laith  thukkippaagavum,  ungga'l  paattuga'laiyellaam  pulambalaagavum  maa’rappa'n'ni,  sagala  araiga'lilum  irattaiyum,  sagala  thalaiga'lilum  mottaiyaiyum  varuviththu,  avarga'ludaiya  thukkippai  orea  pi'l'laikkaagath  thukkikki’ra  thukkippukkuch  samaanamaakki,  avarga'ludaiya  mudivaik  kasappaana  naa'laakkuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (aamoas  8:10)

இதோ,  நான்  தேசத்தின்மேல்  பஞ்சத்தை  அனுப்பும்  நாட்கள்  வரும்;  ஆகாரக்  குறைவினால்  உண்டாகிய  பஞ்சமல்ல,  ஜலக்குறைவினால்  உண்டாகிய  தாகமுமல்ல,  கர்த்தருடைய  வசனம்  கேட்கக்  கிடையாத  பஞ்சத்தை  அனுப்புவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  8:11)

ithoa,  naan  theasaththinmeal  pagnchaththai  anuppum  naadka'l  varum;  aagaarak  ku’raivinaal  u'ndaagiya  pagnchamalla,  jalakku’raivinaal  u'ndaagiya  thaagamumalla,  karththarudaiya  vasanam  keadkak  kidaiyaatha  pagnchaththai  anuppuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (aamoas  8:11)

அப்பொழுது  அவர்கள்  கர்த்தருடைய  வசனத்தைத்  தேட  ஒரு  சமுத்திரந்தொடங்கி  மறு  சமுத்திரமட்டும்,  வடதிசைதொடங்கிக்  கீழ்த்திசைமட்டும்  அலைந்து  திரிந்தும்  அதைக்  கண்டடையாமற்  போவார்கள்.  (ஆமோஸ்  8:12)

appozhuthu  avarga'l  karththarudaiya  vasanaththaith  theada  oru  samuththiranthodanggi  ma’ru  samuththiramattum,  vadathisaithodanggik  keezhththisaimattum  alainthu  thirinthum  athaik  ka'ndadaiyaama’r  poavaarga'l.  (aamoas  8:12)

அந்நாளிலே  சௌந்தரியமுள்ள  கன்னிகைகளும்  வாலிபரும்  தாகத்தினால்  சோர்ந்துபோவார்கள்.  (ஆமோஸ்  8:13)

annaa'lilea  saunthariyamu'l'la  kannigaiga'lum  vaalibarum  thaagaththinaal  soarnthupoavaarga'l.  (aamoas  8:13)

தாணே!  உன்  தேவனுடைய  ஜீவனைக்கொண்டும்,  பெயெர்செபா  மார்க்கத்தின்  தேவனுடைய  ஜீவனைக்கொண்டும்  என்று  சொல்லி,  சமாரியாவின்  தோஷத்தின்மேல்  ஆணையிடுகிறவர்கள்  விழுவார்கள்;  இனி  ஒருபோதும்  எழுந்திருக்கமாட்டார்கள்  என்றார்.  (ஆமோஸ்  8:14)

thaa'nea!  un  theavanudaiya  jeevanaikko'ndum,  beyersebaa  maarkkaththin  theavanudaiya  jeevanaikko'ndum  en’ru  solli,  samaariyaavin  thoashaththinmeal  aa'naiyidugi’ravarga'l  vizhuvaarga'l;  ini  orupoathum  ezhunthirukkamaattaarga'l  en’raar.  (aamoas  8:14)