Showing posts with label 1 peathuru. Show all posts
Showing posts with label 1 peathuru. Show all posts

Saturday, June 11, 2016

1 Peathuru 5 | 1 பேதுரு 5 | 1 Peter 5

உங்களிலுள்ள  மூப்பருக்கு  உடன்மூப்பனும்,  கிறிஸ்துவின்  பாடுகளுக்குச்  சாட்சியும்,  இனி  வெளிப்படும்  மகிமைக்குப்  பங்காளியுமாயிருக்கிற  நான்  புத்திசொல்லுகிறதென்னவென்றால்:  (1பேதுரு  5:1)

ungga'lilu'l'la  moopparukku  udanmooppanum,  ki’risthuvin  paaduga'lukkuch  saadchiyum,  ini  ve'lippadum  magimaikkup  panggaa'liyumaayirukki’ra  naan  buththisollugi’rathennaven’raal:  (1peathuru  5:1)

உங்களிடத்திலுள்ள  தேவனுடைய  மந்தையை  நீங்கள்  மேய்த்து,  கட்டாயமாய்  அல்ல,  மனப்பூர்வமாயும்,  அவலட்சணமான  ஆதாயத்திற்காக  அல்ல,  உற்சாக  மனதோடும்,  (1பேதுரு  5:2)

ungga'lidaththilu'l'la  theavanudaiya  manthaiyai  neengga'l  meayththu,  kattaayamaay  alla,  manappoorvamaayum,  avaladcha'namaana  aathaayaththi’rkaaga  alla,  u’rchaaga  manathoadum,  (1peathuru  5:2)

சுதந்தரத்தை  இறுமாப்பாய்  ஆளுகிறவர்களாக  அல்ல,  மந்தைக்கு  மாதிரிகளாகவும்,  கண்காணிப்புச்  செய்யுங்கள்.  (1பேதுரு  5:3)

suthantharaththai  i’rumaappaay  aa'lugi’ravarga'laaga  alla,  manthaikku  maathiriga'laagavum,  ka'nkaa'nippuch  seyyungga'l.  (1peathuru  5:3)

அப்படிச்  செய்தால்  பிரதான  மேய்ப்பர்  வெளிப்படும்போது  மகிமையுள்ள  வாடாத  கிரீடத்தைப்  பெறுவீர்கள்.  (1பேதுரு  5:4)

appadich  seythaal  pirathaana  meayppar  ve'lippadumpoathu  magimaiyu'l'la  vaadaatha  kireedaththaip  pe’ruveerga'l.  (1peathuru  5:4)

அந்தப்படி,  இளைஞரே,  மூப்பருக்குக்  கீழ்ப்படியுங்கள்.  நீங்களெல்லாரும்  ஒருவருக்கொருவர்  கீழ்ப்படிந்து,  மனத்தாழ்மையை  அணிந்துகொள்ளுங்கள்;  பெருமையுள்ளவர்களுக்குத்  தேவன்  எதிர்த்து  நிற்கிறார்,  தாழ்மையுள்ளவர்களுக்கோ  கிருபை  அளிக்கிறார்.  (1பேதுரு  5:5)

anthappadi,  i'laignarea,  moopparukkuk  keezhppadiyungga'l.  neengga'lellaarum  oruvarukkoruvar  keezhppadinthu,  manaththaazhmaiyai  a'ninthuko'l'lungga'l;  perumaiyu'l'lavarga'lukkuth  theavan  ethirththu  ni’rki’raar,  thaazhmaiyu'l'lavarga'lukkoa  kirubai  a'likki’raar.  (1peathuru  5:5)

ஆகையால்,  ஏற்றகாலத்திலே  தேவன்  உங்களை  உயர்த்தும்படிக்கு,  அவருடைய  பலத்த  கைக்குள்  அடங்கியிருங்கள்.  (1பேதுரு  5:6)

aagaiyaal,  eat’rakaalaththilea  theavan  ungga'lai  uyarththumpadikku,  avarudaiya  balaththa  kaikku'l  adanggiyirungga'l.  (1peathuru  5:6)

அவர்  உங்களை  விசாரிக்கிறவரானபடியால்,  உங்கள்  கவலைகளையெல்லாம்  அவர்மேல்  வைத்துவிடுங்கள்.  (1பேதுரு  5:7)

avar  ungga'lai  visaarikki’ravaraanapadiyaal,  ungga'l  kavalaiga'laiyellaam  avarmeal  vaiththuvidungga'l.  (1peathuru  5:7)

தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருங்கள்,  விழித்திருங்கள்;  ஏனெனில்,  உங்கள்  எதிராளியாகிய  பிசாசானவன்  கெர்ச்சிக்கிற  சிங்கம்போல்  எவனை  விழுங்கலாமோ  என்று  வகைதேடிச்  சுற்றித்திரிகிறான்.  (1பேதுரு  5:8)

the'lintha  buththiyu'l'lavarga'laayirungga'l,  vizhiththirungga'l;  eanenil,  ungga'l  ethiraa'liyaagiya  pisaasaanavan  kerchchikki’ra  singgampoal  evanai  vizhunggalaamoa  en’ru  vagaitheadich  sut’riththirigi’raan.  (1peathuru  5:8)

விசுவாசத்தில்  உறுதியாயிருந்து,  அவனுக்கு  எதிர்த்து  நில்லுங்கள்;  உலகத்திலுள்ள  உங்கள்  சகோதரரிடத்திலே  அப்படிப்பட்ட  பாடுகள்  நிறைவேறிவருகிறதென்று  அறிந்திருக்கிறீர்களே.  (1பேதுரு  5:9)

visuvaasaththil  u’ruthiyaayirunthu,  avanukku  ethirththu  nillungga'l;  ulagaththilu'l'la  ungga'l  sagoathararidaththilea  appadippatta  paaduga'l  ni’raivea’rivarugi’rathen’ru  a’rinthirukki’reerga'lea.  (1peathuru  5:9)

கிறிஸ்து  இயேசுவுக்குள்  நம்மைத்  தமது  நித்திய  மகிமைக்கு  அழைத்தவராயிருக்கிற  சகல  கிருபையும்  பொருந்திய  தேவன்தாமே  கொஞ்சக்காலம்  பாடநுபவிக்கிற  உங்களைச்  சீர்ப்படுத்தி,  ஸ்திரப்படுத்தி,  பலப்படுத்தி,  நிலைநிறுத்துவாராக;  (1பேதுரு  5:10)

ki’risthu  iyeasuvukku'l  nammaith  thamathu  niththiya  magimaikku  azhaiththavaraayirukki’ra  sagala  kirubaiyum  porunthiya  theavanthaamea  kognchakkaalam  paadanubavikki’ra  ungga'laich  seerppaduththi,  sthirappaduththi,  balappaduththi,  nilaini’ruththuvaaraaga;  (1peathuru  5:10)

அவருக்கு  மகிமையும்  வல்லமையும்  சதாகாலங்களிலும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  (1பேதுரு  5:11)

avarukku  magimaiyum  vallamaiyum  sathaakaalangga'lilum  u'ndaayiruppathaaga.  aamen.  (1peathuru  5:11)

உங்களுக்குப்  புத்திசொல்லும்படிக்கும்,  நீங்கள்  நிலைகொண்டு  நிற்கிற  கிருபை  தேவனுடைய  மெய்யான  கிருபைதானென்று  சாட்சியிடும்படிக்கும்,  நான்  சுருக்கமாய்  உங்களுக்கு  எழுதி,  எனக்குத்  தோன்றுகிறபடி  உண்மையுள்ள  சகோதரனாகிய  சில்வானுவின்  கையிலே  கொடுத்து  அனுப்பியிருக்கிறேன்.  (1பேதுரு  5:12)

ungga'lukkup  buththisollumpadikkum,  neengga'l  nilaiko'ndu  ni’rki’ra  kirubai  theavanudaiya  meyyaana  kirubaithaanen’ru  saadchiyidumpadikkum,  naan  surukkamaay  ungga'lukku  ezhuthi,  enakkuth  thoan’rugi’rapadi  u'nmaiyu'l'la  sagoatharanaagiya  silvaanuvin  kaiyilea  koduththu  anuppiyirukki’rean.  (1peathuru  5:12)

உங்களுடனேகூடத்  தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற  பாபிலோனிலுள்ள  சபையும்,  என்  குமாரனாகிய  மாற்கும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (1பேதுரு  5:13)

ungga'ludaneakoodath  therinthuko'l'lappattirukki’ra  baabiloanilu'l'la  sabaiyum,  en  kumaaranaagiya  maa’rkum  ungga'lukku  vaazhththuthal  sollugi’raarga'l.  (1peathuru  5:13)

ஒருவரையொருவர்  அன்பின்  முத்தத்தோடே  வாழ்த்துதல்  செய்யுங்கள்.  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான  உங்கள்  அனைவருக்கும்  சமாதானமுண்டாவதாக.  ஆமென்.  (1பேதுரு  5:14)

oruvaraiyoruvar  anbin  muththaththoadea  vaazhththuthal  seyyungga'l.  ki’risthu  iyeasuvukku'l'laana  ungga'l  anaivarukkum  samaathaanamu'ndaavathaaga.  aamen.  (1peathuru  5:14)


1 Peathuru 4 | 1 பேதுரு 4 | 1 Peter 4

இப்படியிருக்க,  கிறிஸ்து  நமக்காக  மாம்சத்திலே  பாடுபட்டபடியால்,  நீங்களும்  அப்படிப்பட்ட  சிந்தையை  ஆயுதமாகத்  தரித்துக்கொள்ளுங்கள்.  (1பேதுரு  4:1)

ippadiyirukka,  ki’risthu  namakkaaga  maamsaththilea  paadupattapadiyaal,  neengga'lum  appadippatta  sinthaiyai  aayuthamaagath  thariththukko'l'lungga'l.  (1peathuru  4:1)

ஏனென்றால்  மாம்சத்தில்  பாடுபடுகிறவன்  இனி  மாம்சத்திலிருக்கும்  காலம்வரைக்கும்  மனுஷருடைய  இச்சைகளின்படி  பிழைக்காமல்  தேவனுடைய  சித்தத்தின்படியே  பிழைக்கத்தக்கதாகப்  பாவங்களை  விட்டோய்ந்திருப்பான்.  (1பேதுரு  4:2)

eanen’raal  maamsaththil  paadupadugi’ravan  ini  maamsaththilirukkum  kaalamvaraikkum  manusharudaiya  ichchaiga'linpadi  pizhaikkaamal  theavanudaiya  siththaththinpadiyea  pizhaikkaththakkathaagap  paavangga'lai  vittoaynthiruppaan.  (1peathuru  4:2)

சென்ற  வாழ்நாட்  காலத்திலே  நாம்  புறஜாதிகளுடைய  இஷ்டத்தின்படி  நடந்துகொண்டது  போதும்;  அப்பொழுது  நாம்  காமவிகாரத்தையும்  துர்இச்சைகளையும்  நடப்பித்து,  மதுபானம்பண்ணி,  களியாட்டுச்செய்து,  வெறிகொண்டு,  அருவருப்பான  விக்கிரகாராதனையைச்  செய்துவந்தோம்.  (1பேதுரு  4:3)

sen’ra  vaazhnaad  kaalaththilea  naam  pu’rajaathiga'ludaiya  ishdaththinpadi  nadanthuko'ndathu  poathum;  appozhuthu  naam  kaamavigaaraththaiyum  thurichchaiga'laiyum  nadappiththu,  mathubaanampa'n'ni,  ka'liyaattuchseythu,  ve’riko'ndu,  aruvaruppaana  vikkiragaaraathanaiyaich  seythuvanthoam.  (1peathuru  4:3)

அந்தத்  துன்மார்க்க  உளையிலே  அவர்களோடேகூட  நீங்கள்  விழாமலிருக்கிறதினாலே  அவர்கள்  ஆச்சரியப்பட்டு,  உங்களைத்  தூஷிக்கிறார்கள்.  (1பேதுரு  4:4)

anthath  thunmaarkka  u'laiyilea  avarga'loadeakooda  neengga'l  vizhaamalirukki’rathinaalea  avarga'l  aachchariyappattu,  ungga'laith  thooshikki’raarga'l.  (1peathuru  4:4)

உயிரோடிருக்கிறவர்களுக்கும்  மரித்தோர்களுக்கும்  நியாயத்தீர்ப்புக்கொடுக்க  ஆயத்தமாயிருக்கிறவருக்கு  அவர்கள்  கணக்கொப்புவிப்பார்கள்.  (1பேதுரு  4:5)

uyiroadirukki’ravarga'lukkum  mariththoarga'lukkum  niyaayaththeerppukkodukka  aayaththamaayirukki’ravarukku  avarga'l  ka'nakkoppuvippaarga'l.  (1peathuru  4:5)

இதற்காக  மரித்தோரானவர்கள்,  மனுஷர்முன்பாக  மாம்சத்திலே  ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும்,  தேவன்முன்பாக  ஆவியிலே  பிழைக்கும்படியாக,  அவர்களுக்கும்  சுவிசேஷம்  அறிவிக்கப்பட்டது.  (1பேதுரு  4:6)

itha’rkaaga  mariththoaraanavarga'l,  manusharmunbaaga  maamsaththilea  aakkinaikku'l'laakkappattirunthum,  theavanmunbaaga  aaviyilea  pizhaikkumpadiyaaga,  avarga'lukkum  suviseasham  a’rivikkappattathu.  (1peathuru  4:6)

எல்லாவற்றிற்கும்  முடிவு  சமீபமாயிற்று;  ஆகையால்  தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருந்து,  ஜெபம்பண்ணுவதற்கு  ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.  (1பேதுரு  4:7)

ellaavat’ri’rkum  mudivu  sameebamaayit’ru;  aagaiyaal  the'lintha  buththiyu'l'lavarga'laayirunthu,  jebampa'n'nuvatha’rku  jaakkirathaiyu'l'lavarga'laayirungga'l.  (1peathuru  4:7)

எல்லாவற்றிற்கும்  மேலாக  ஒருவரிலொருவர்  ஊக்கமான  அன்புள்ளவர்களாயிருங்கள்;  அன்பு  திரளான  பாவங்களை  மூடும்.  (1பேதுரு  4:8)

ellaavat’ri’rkum  mealaaga  oruvariloruvar  ookkamaana  anbu'l'lavarga'laayirungga'l;  anbu  thira'laana  paavangga'lai  moodum.  (1peathuru  4:8)

முறுமுறுப்பில்லாமல்  ஒருவரையொருவர்  உபசரியுங்கள்.  (1பேதுரு  4:9)

mu’rumu’ruppillaamal  oruvaraiyoruvar  ubasariyungga'l.  (1peathuru  4:9)

அவனவன்  பெற்ற  வரத்தின்படியே  நீங்கள்  தேவனுடைய  பற்பல  கிருபையுள்ள  ஈவுகளைப்  பகிர்ந்துகொடுக்கும்  நல்ல  உக்கிராணக்காரர்போல,  ஒருவருக்கொருவர்  உதவிசெய்யுங்கள்.  (1பேதுரு  4:10)

avanavan  pet’ra  varaththinpadiyea  neengga'l  theavanudaiya  pa’rpala  kirubaiyu'l'la  eevuga'laip  pagirnthukodukkum  nalla  ukkiraa'nakkaararpoala,  oruvarukkoruvar  uthaviseyyungga'l.  (1peathuru  4:10)

ஒருவன்  போதித்தால்  தேவனுடைய  வாக்கியங்களின்படி  போதிக்கக்கடவன்;  ஒருவன்  உதவிசெய்தால்  தேவன்  தந்தருளும்  பெலத்தின்படி  செய்யக்கடவன்;  எல்லாவற்றிலேயும்  இயேசுகிறிஸ்துமூலமாய்த்  தேவன்  மகிமைப்படும்படியே  செய்வீர்களாக;  அவருக்கே  மகிமையும்  வல்லமையும்  சதாகாலங்களிலும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  (1பேதுரு  4:11)

oruvan  poathiththaal  theavanudaiya  vaakkiyangga'linpadi  poathikkakkadavan;  oruvan  uthaviseythaal  theavan  thantharu'lum  belaththinpadi  seyyakkadavan;  ellaavat’rileayum  iyeasuki’risthumoolamaayth  theavan  magimaippadumpadiyea  seyveerga'laaga;  avarukkea  magimaiyum  vallamaiyum  sathaakaalangga'lilum  u'ndaayiruppathaaga.  aamen.  (1peathuru  4:11)

பிரியமானவர்களே,  உங்களைச்  சோதிக்கும்படி  உங்கள்  நடுவில்  பற்றியெரிகிற  அக்கினியைக்குறித்து  ஏதோ  புதுமையென்று  திகையாமல்,  (1பேதுரு  4:12)

piriyamaanavarga'lea,  ungga'laich  soathikkumpadi  ungga'l  naduvil  pat’riyerigi’ra  akkiniyaikku’riththu  eathoa  puthumaiyen’ru  thigaiyaamal,  (1peathuru  4:12)

கிறிஸ்துவின்  மகிமை  வெளிப்படும்போது  நீங்கள்  களிகூர்ந்து  மகிழும்படியாக  அவருடைய  பாடுகளுக்கு  நீங்கள்  பங்காளிகளானதால்  சந்தோஷப்படுங்கள்.  (1பேதுரு  4:13)

ki’risthuvin  magimai  ve'lippadumpoathu  neengga'l  ka'likoornthu  magizhumpadiyaaga  avarudaiya  paaduga'lukku  neengga'l  panggaa'liga'laanathaal  santhoashappadungga'l.  (1peathuru  4:13)

நீங்கள்  கிறிஸ்துவின்  நாமத்தினிமித்தம்  நிந்திக்கப்பட்டால்  பாக்கியவான்கள்;  ஏனென்றால்  தேவனுடைய  ஆவியாகிய  மகிமையுள்ள  ஆவியானவர்  உங்கள்மேல்  தங்கியிருக்கிறார்;  அவர்களாலே  தூஷிக்கப்படுகிறார்;  உங்களாலே  மகிமைப்படுகிறார்.  (1பேதுரு  4:14)

neengga'l  ki’risthuvin  naamaththinimiththam  ninthikkappattaal  baakkiyavaanga'l;  eanen’raal  theavanudaiya  aaviyaagiya  magimaiyu'l'la  aaviyaanavar  ungga'lmeal  thanggiyirukki’raar;  avarga'laalea  thooshikkappadugi’raar;  ungga'laalea  magimaippadugi’raar.  (1peathuru  4:14)

ஆதலால்  உங்களில்  ஒருவனும்  கொலைபாதகனாயாவது,  திருடனாயாவது,  பொல்லாங்கு  செய்தவனாயாவது,  அந்நிய  காரியங்களில்  தலையிட்டுக்கொண்டவனாயாவது  பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.  (1பேதுரு  4:15)

aathalaal  ungga'lil  oruvanum  kolaipaathaganaayaavathu,  thirudanaayaavathu,  pollaanggu  seythavanaayaavathu,  anniya  kaariyangga'lil  thalaiyittukko'ndavanaayaavathu  paadupadugi’ravanaayirukkakkoodaathu.  (1peathuru  4:15)

ஒருவன்  கிறிஸ்தவனாயிருப்பதினால்  பாடுபட்டால்  வெட்கப்படாமலிருந்து,  அதினிமித்தம்  தேவனை  மகிமைப்படுத்தக்கடவன்.  (1பேதுரு  4:16)

oruvan  ki’risthavanaayiruppathinaal  paadupattaal  vedkappadaamalirunthu,  athinimiththam  theavanai  magimaippaduththakkadavan.  (1peathuru  4:16)

நியாயத்தீர்ப்பு  தேவனுடைய  வீட்டிலே  துவக்குங்காலமாயிருக்கிறது;  முந்தி  நம்மிடத்திலே  அது  துவக்கினால்  தேவனுடைய  சுவிசேஷத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களின்  முடிவு  என்னமாயிருக்கும்?  (1பேதுரு  4:17)

niyaayaththeerppu  theavanudaiya  veettilea  thuvakkungkaalamaayirukki’rathu;  munthi  nammidaththilea  athu  thuvakkinaal  theavanudaiya  suviseashaththi’rkuk  keezhppadiyaathavarga'lin  mudivu  ennamaayirukkum?  (1peathuru  4:17)

நீதிமானே  இரட்சிக்கப்படுவது  அரிதானால்,  பக்தியில்லாதவனும்  பாவியும்  எங்கே  நிற்பான்?  (1பேதுரு  4:18)

neethimaanea  iradchikkappaduvathu  arithaanaal,  bakthiyillaathavanum  paaviyum  enggea  ni’rpaan?  (1peathuru  4:18)

ஆகையால்  தேவனுடைய  சித்தத்தின்படி  பாடநுபவிக்கிறவர்கள்  நன்மைசெய்கிறவர்களாய்த்  தங்கள்  ஆத்துமாக்களை  உண்மையுள்ள  சிருஷ்டிகர்த்தாவாகிய  அவருக்கு  ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.  (1பேதுரு  4:19)

aagaiyaal  theavanudaiya  siththaththinpadi  paadanubavikki’ravarga'l  nanmaiseygi’ravarga'laayth  thangga'l  aaththumaakka'lai  u'nmaiyu'l'la  sirushdikarththaavaagiya  avarukku  oppukkodukkakkadavarga'l.  (1peathuru  4:19)