Showing posts with label leaviyaraagamam. Show all posts
Showing posts with label leaviyaraagamam. Show all posts

Saturday, November 05, 2016

Leaviyaraagamam 27 | லேவியராகமம் 27 | Leviticus 27

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  27:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  27:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  யாதாமொருவர்  ஒரு  விசேஷித்த  பொருத்தனை  பண்ணியிருந்தால்,  பொருத்தனை  பண்ணப்பட்டவர்கள்  உன்  மதிப்பின்படி  கர்த்தருக்கு  உரியவர்கள்.  (லேவியராகமம்  27:2)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  yaathaamoruvar  oru  viseashiththa  poruththanai  pa'n'niyirunthaal,  poruththanai  pa'n'nappattavarga'l  un  mathippinpadi  karththarukku  uriyavarga'l.  (leaviyaraagamam  27:2)

இருபது  வயதுமுதல்  அறுபது  வயதுக்கு  உட்பட்ட  ஆண்பிள்ளையை  நீ  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கலாகிய  ஐம்பது  வெள்ளிச்  சேக்கலாகவும்,  (லேவியராகமம்  27:3)

irubathu  vayathumuthal  a’rubathu  vayathukku  udpatta  aa'npi'l'laiyai  nee  parisuththa  sthalaththin  seakkalaagiya  aimbathu  ve'l'lich  seakkalaagavum,  (leaviyaraagamam  27:3)

பெண்பிள்ளையை  முப்பது  சேக்கலாகவும்  மதிப்பாயாக.  (லேவியராகமம்  27:4)

pe'npi'l'laiyai  muppathu  seakkalaagavum  mathippaayaaga.  (leaviyaraagamam  27:4)

ஐந்து  வயதுமுதல்  இருபது  வயதுக்கு  உட்பட்ட  ஆண்பிள்ளையை  இருபது  சேக்கலாகவும்,  பெண்பிள்ளையைப்  பத்துச்  சேக்கலாகவும்,  (லேவியராகமம்  27:5)

ainthu  vayathumuthal  irubathu  vayathukku  udpatta  aa'npi'l'laiyai  irubathu  seakkalaagavum,  pe'npi'l'laiyaip  paththuch  seakkalaagavum,  (leaviyaraagamam  27:5)

ஒரு  மாதம்முதல்  ஐந்து  வயதுக்கு  உட்பட்ட  ஆண்பிள்ளையை  ஐந்து  வெள்ளிச்  சேக்கலாகவும்,  பெண்பிள்ளையை  மூன்று  வெள்ளிச்  சேக்கலாகவும்,  (லேவியராகமம்  27:6)

oru  maathammuthal  ainthu  vayathukku  udpatta  aa'npi'l'laiyai  ainthu  ve'l'lich  seakkalaagavum,  pe'npi'l'laiyai  moon’ru  ve'l'lich  seakkalaagavum,  (leaviyaraagamam  27:6)

அறுபது  வயது  தொடங்கி,  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  ஆண்பிள்ளையைப்  பதினைந்து  சேக்கலாகவும்,  பெண்பிள்ளையைப்  பத்துச்  சேக்கலாகவும்  மதிக்கக்கடவாய்.  (லேவியராகமம்  27:7)

a’rubathu  vayathu  thodanggi,  atha’rku  mea’rpatta  vayathu'l'la  aa'npi'l'laiyaip  pathinainthu  seakkalaagavum,  pe'npi'l'laiyaip  paththuch  seakkalaagavum  mathikkakkadavaay.  (leaviyaraagamam  27:7)

உன்  மதிப்பின்படி  செலுத்தக்கூடாத  தரித்திரனாயிருந்தால்,  அவன்  ஆசாரியனுக்கு  முன்பாக  வந்து  நிற்கக்கடவன்;  ஆசாரியன்  அவனை  மதிப்பானாக;  பொருத்தனை  பண்ணினவனுடைய  திராணிக்கேற்றபடி  ஆசாரியன்  அவனை  மதிக்கக்கடவன்.  (லேவியராகமம்  27:8)

un  mathippinpadi  seluththakkoodaatha  thariththiranaayirunthaal,  avan  aasaariyanukku  munbaaga  vanthu  ni’rkakkadavan;  aasaariyan  avanai  mathippaanaaga;  poruththanai  pa'n'ninavanudaiya  thiraa'nikkeat’rapadi  aasaariyan  avanai  mathikkakkadavan.  (leaviyaraagamam  27:8)

ஒருவன்  பொருத்தனைபண்ணினது  கர்த்தருக்குப்  பலியிடப்படத்தக்க  மிருகஜீவனானால்  அவன்  கர்த்தருக்குக்  கொடுக்கிற  அப்படிப்பட்டதெல்லாம்  பரிசுத்தமாயிருப்பதாக.  (லேவியராகமம்  27:9)

oruvan  poruththanaipa'n'ninathu  karththarukkup  baliyidappadaththakka  mirugajeevanaanaal  avan  karththarukkuk  kodukki’ra  appadippattathellaam  parisuththamaayiruppathaaga.  (leaviyaraagamam  27:9)

அதை  மாற்றாமலும்,  வேறுபடுத்தாமலும்  இருப்பானாக;  இளப்பமானதற்குப்  பதிலாக  நலமானதையும்,  நலமானதற்குப்  பதிலாக  இளப்பமானதையும்  செலுத்தாமல்  இருப்பானாக;  அவன்  மிருகத்திற்குப்  பதிலாக  மிருகத்தை  மாற்றிக்  கொடுப்பானாகில்,  அப்பொழுது  அதுவும்  அதற்குப்  பதிலாகக்  கொடுத்ததும்  பரிசுத்தமாயிருப்பதாக.  (லேவியராகமம்  27:10)

athai  maat’raamalum,  vea’rupaduththaamalum  iruppaanaaga;  i'lappamaanatha’rkup  bathilaaga  nalamaanathaiyum,  nalamaanatha’rkup  bathilaaga  i'lappamaanathaiyum  seluththaamal  iruppaanaaga;  avan  mirugaththi’rkup  bathilaaga  mirugaththai  maat’rik  koduppaanaagil,  appozhuthu  athuvum  atha’rkup  bathilaagak  koduththathum  parisuththamaayiruppathaaga.  (leaviyaraagamam  27:10)

அது  கர்த்தருக்குப்  பலியிடப்படத்தகாத  சுத்தமல்லாத  யாதொரு  மிருகமானால்,  அதை  ஆசாரியனுக்கு  முன்பாக  நிறுத்தக்கடவன்.  (லேவியராகமம்  27:11)

athu  karththarukkup  baliyidappadaththagaatha  suththamallaatha  yaathoru  mirugamaanaal,  athai  aasaariyanukku  munbaaga  ni’ruththakkadavan.  (leaviyaraagamam  27:11)

ஆசாரியன்  அது  நல்லதானாலும்  இளப்பமானதானாலும்  அதை  மதிப்பானாக;  உன்  மதிப்பின்படியே  இருக்கக்கடவது.  (லேவியராகமம்  27:12)

aasaariyan  athu  nallathaanaalum  i'lappamaanathaanaalum  athai  mathippaanaaga;  un  mathippinpadiyea  irukkakkadavathu.  (leaviyaraagamam  27:12)

அதை  மீட்டுக்கொள்ள  மனதாயிருந்தானாகில்,  உன்  மதிப்போடே  ஐந்தில்  ஒரு  பங்கைக்  கூட்டிக்  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  27:13)

athai  meettukko'l'la  manathaayirunthaanaagil,  un  mathippoadea  ainthil  oru  panggaik  koottik  kodukkakkadavan.  (leaviyaraagamam  27:13)

ஒருவன்  தன்  வீட்டைக்  கர்த்தருக்குப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டால்,  ஆசாரியன்  அதின்  நலத்துக்கும்  இளப்பத்துக்கும்  தக்கதாக  அதை  மதிக்கக்கடவன்;  ஆசாரியன்  மதிக்கிறபடி  அது  இருக்கக்கடவது.  (லேவியராகமம்  27:14)

oruvan  than  veettaik  karththarukkup  parisuththam  en’ru  nearnthuko'ndaal,  aasaariyan  athin  nalaththukkum  i'lappaththukkum  thakkathaaga  athai  mathikkakkadavan;  aasaariyan  mathikki’rapadi  athu  irukkakkadavathu.  (leaviyaraagamam  27:14)

தன்  வீட்டைப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டவன்  அதை  மீட்டுக்கொள்ள  மனதாயிருந்தால்,  நீ  மதிக்கும்  திரவியத்தோடே  ஐந்தில்  ஒரு  பங்கைக்  கூட்டிக்  கொடுக்கக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுடையதாகும்.  (லேவியராகமம்  27:15)

than  veettaip  parisuththam  en’ru  nearnthuko'ndavan  athai  meettukko'l'la  manathaayirunthaal,  nee  mathikkum  thiraviyaththoadea  ainthil  oru  panggaik  koottik  kodukkakkadavan;  appozhuthu  athu  avanudaiyathaagum.  (leaviyaraagamam  27:15)

ஒருவன்  தன்  காணியாட்சியான  வயலில்  யாதொரு  பங்கைக்  கர்த்தருக்குப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டால்,  உன்  மதிப்பு  அதின்  விதைப்புக்குத்தக்கதாய்  இருக்கவேண்டும்;  ஒரு  கலம்  வாற்கோதுமை  விதைக்கிற  வயல்  ஐம்பது  வெள்ளிச்  சேக்கலாக  மதிக்கப்படவேண்டும்.  (லேவியராகமம்  27:16)

oruvan  than  kaa'niyaadchiyaana  vayalil  yaathoru  panggaik  karththarukkup  parisuththam  en’ru  nearnthuko'ndaal,  un  mathippu  athin  vithaippukkuththakkathaay  irukkavea'ndum;  oru  kalam  vaa’rkoathumai  vithaikki’ra  vayal  aimbathu  ve'l'lich  seakkalaaga  mathikkappadavea'ndum.  (leaviyaraagamam  27:16)

யூபிலி  வருஷமுதல்  அவன்  தன்  வயலைப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டால்,  அது  உன்  மதிப்பின்படி  இருக்கவேண்டும்.  (லேவியராகமம்  27:17)

yoobili  varushamuthal  avan  than  vayalaip  parisuththam  en’ru  nearnthuko'ndaal,  athu  un  mathippinpadi  irukkavea'ndum.  (leaviyaraagamam  27:17)

யூபிலி  வருஷத்துக்குப்பின்  தன்  வயலைப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டானானால்,  யூபிலி  வருஷம்மட்டுமுள்ள  மற்ற  வருஷங்களின்படியே  ஆசாரியன்  திரவியத்தைக்  கணக்குப்பார்த்து,  அதற்குத்தக்கது  உன்  மதிப்பிலே  தள்ளப்படவேண்டும்.  (லேவியராகமம்  27:18)

yoobili  varushaththukkuppin  than  vayalaip  parisuththam  en’ru  nearnthuko'ndaanaanaal,  yoobili  varushammattumu'l'la  mat’ra  varushangga'linpadiyea  aasaariyan  thiraviyaththaik  ka'nakkuppaarththu,  atha’rkuththakkathu  un  mathippilea  tha'l'lappadavea'ndum.  (leaviyaraagamam  27:18)

வயலைப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டவன்  அதை  மீட்டுக்கொள்ள  மனதாயிருந்தால்,  உன்  மதிப்பான  திரவியத்தோடே  ஐந்தில்  ஒரு  பங்கைக்  கூட்டிக்  கொடுக்கக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  உறுதியாகும்.  (லேவியராகமம்  27:19)

vayalaip  parisuththam  en’ru  nearnthuko'ndavan  athai  meettukko'l'la  manathaayirunthaal,  un  mathippaana  thiraviyaththoadea  ainthil  oru  panggaik  koottik  kodukkakkadavan;  appozhuthu  athu  avanukku  u’ruthiyaagum.  (leaviyaraagamam  27:19)

அவன்  வயலை  மீட்டுக்கொள்ளாமல்,  வயலை  வேறொருவனுக்கு  விற்றுப்போட்டால்,  அது  திரும்ப  மீட்கப்படாமல்,  (லேவியராகமம்  27:20)

avan  vayalai  meettukko'l'laamal,  vayalai  vea’roruvanukku  vit’ruppoattaal,  athu  thirumba  meedkappadaamal,  (leaviyaraagamam  27:20)

யூபிலி  வருஷத்தில்  மீட்கப்படும்போது,  சாபத்தீடான  வயலாகக்  கர்த்தருக்கென்று  நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது;  அது  ஆசாரியனுக்குக்  காணியாட்சியாகும்.  (லேவியராகமம்  27:21)

yoobili  varushaththil  meedkappadumpoathu,  saabaththeedaana  vayalaagak  karththarukken’ru  niyamikkappattathaayirukkakkadavathu;  athu  aasaariyanukkuk  kaa'niyaadchiyaagum.  (leaviyaraagamam  27:21)

ஒருவன்  தனக்குக்  காணியாட்சி  வயலாயிராமல்  தான்  விலைக்கு  வாங்கின  ஒரு  வயலைக்  கர்த்தருக்குப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்துகொண்டால்,  (லேவியராகமம்  27:22)

oruvan  thanakkuk  kaa'niyaadchi  vayalaayiraamal  thaan  vilaikku  vaanggina  oru  vayalaik  karththarukkup  parisuththam  en’ru  nearnthuko'ndaal,  (leaviyaraagamam  27:22)

அது  யூபிலி  வருஷம்மட்டும்,  உன்  மதிப்பின்படி  பெறும்  விலை  இன்னதென்று  ஆசாரியன்  அவனோடே  கணக்குப்பார்த்து,  அந்த  உன்  மதிப்பை,  கர்த்தருக்குப்  பரிசுத்தமாயிருக்கும்படி,  அவன்  அந்நாளிலே  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  27:23)

athu  yoobili  varushammattum,  un  mathippinpadi  pe’rum  vilai  innathen’ru  aasaariyan  avanoadea  ka'nakkuppaarththu,  antha  un  mathippai,  karththarukkup  parisuththamaayirukkumpadi,  avan  annaa'lilea  kodukkakkadavan.  (leaviyaraagamam  27:23)

யார்  கையிலே  அந்த  வயலைக்  கொண்டானோ,  அந்தக்  காணியாட்சிக்காரன்  வசமாய்  அது  யூபிலி  வருஷத்தில்  திரும்பச்சேரும்.  (லேவியராகமம்  27:24)

yaar  kaiyilea  antha  vayalaik  ko'ndaanoa,  anthak  kaa'niyaadchikkaaran  vasamaay  athu  yoobili  varushaththil  thirumbachsearum.  (leaviyaraagamam  27:24)

உன்  மதிப்பெல்லாம்  பரிசுத்த  ஸ்தலத்துச்  சேக்கல்  கணக்காயிருக்கக்கடவது;  ஒரு  சேக்கலானது  இருபது  கேரா.  (லேவியராகமம்  27:25)

un  mathippellaam  parisuththa  sthalaththuch  seakkal  ka'nakkaayirukkakkadavathu;  oru  seakkalaanathu  irubathu  kearaa.  (leaviyaraagamam  27:25)

தலையீற்றானவைகள்  கர்த்தருடையது,  ஆகையால்  ஒருவரும்  தலையீற்றாகிய  மிருகஜீவனைப்  பரிசுத்தம்  என்று  நேர்ந்து  கொள்ளலாகாது;  அது  மாடானாலும்  ஆடானாலும்  கர்த்தருடையது.  (லேவியராகமம்  27:26)

thalaiyeet’raanavaiga'l  karththarudaiyathu,  aagaiyaal  oruvarum  thalaiyeet’raagiya  mirugajeevanaip  parisuththam  en’ru  nearnthu  ko'l'lalaagaathu;  athu  maadaanaalum  aadaanaalum  karththarudaiyathu.  (leaviyaraagamam  27:26)

சுத்தமல்லாத  மிருகத்தினுடைய  தலையீற்றானால்,  அதை  அவன்  உன்  மதிப்பின்படி  மீட்டுக்கொண்டு,  அதனுடனே  ஐந்தில்  ஒரு  பங்கைக்  கூட்டிக்  கொடுக்கக்கடவன்;  மீட்கப்படாமலிருந்தால்,  உன்  மதிப்பின்படி  அது  விற்கப்படக்கடவது.  (லேவியராகமம்  27:27)

suththamallaatha  mirugaththinudaiya  thalaiyeet’raanaal,  athai  avan  un  mathippinpadi  meettukko'ndu,  athanudanea  ainthil  oru  panggaik  koottik  kodukkakkadavan;  meedkappadaamalirunthaal,  un  mathippinpadi  athu  vi’rkappadakkadavathu.  (leaviyaraagamam  27:27)

ஒருவன்  தன்  வசத்திலுள்ள  நரஜீவனிலாவது,  மிருகஜீவனிலாவது,  காணியாட்சி  நிலத்திலாவது,  எதையாகிலும்  கர்த்தருக்கென்று  சாபத்தீடாக  நேர்ந்துகொண்டால்,  அது  விற்கப்படவும்  மீட்கப்படவும்  கூடாது;  நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம்  கர்த்தருக்காகப்  பரிசுத்தமாயிருக்கும்.  (லேவியராகமம்  27:28)

oruvan  than  vasaththilu'l'la  narajeevanilaavathu,  mirugajeevanilaavathu,  kaa'niyaadchi  nilaththilaavathu,  ethaiyaagilum  karththarukken’ru  saabaththeedaaga  nearnthuko'ndaal,  athu  vi’rkappadavum  meedkappadavum  koodaathu;  nearnthuko'l'lappattavaiga'lellaam  karththarukkaagap  parisuththamaayirukkum.  (leaviyaraagamam  27:28)

நரஜீவனில்  சாபத்தீடாக  நியமிக்கப்பட்டவைகளெல்லாம்  மீட்கப்படாமல்  கொலைசெய்யப்படக்கடவது.  (லேவியராகமம்  27:29)

narajeevanil  saabaththeedaaga  niyamikkappattavaiga'lellaam  meedkappadaamal  kolaiseyyappadakkadavathu.  (leaviyaraagamam  27:29)

தேசத்திலே  நிலத்தின்  வித்திலும்,  விருட்சங்களின்  கனியிலும்,  தசமபாகம்  எல்லாம்  கர்த்தருக்கு  உரியது;  அது  கர்த்தருக்குப்  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  27:30)

theasaththilea  nilaththin  viththilum,  virudchangga'lin  kaniyilum,  thasamapaagam  ellaam  karththarukku  uriyathu;  athu  karththarukkup  parisuththamaanathu.  (leaviyaraagamam  27:30)

ஒருவன்  தன்  தசமபாகத்திலே  எவ்வளவாவது  மீட்டுக்கொள்ள  மனதாயிருந்தானானால்,  அதனுடன்  ஐந்தில்  ஒரு  பங்கைக்  கூட்டிக்  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  27:31)

oruvan  than  thasamapaagaththilea  evva'lavaavathu  meettukko'l'la  manathaayirunthaanaanaal,  athanudan  ainthil  oru  panggaik  koottik  kodukkakkadavan.  (leaviyaraagamam  27:31)

கோலின்  கீழ்ப்பட்ட  ஆடுமாடுகளிலே  பத்தில்  ஒரு  பங்காகிறதெல்லாம்  கர்த்தருக்குப்  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  27:32)

koalin  keezhppatta  aadumaaduga'lilea  paththil  oru  panggaagi’rathellaam  karththarukkup  parisuththamaanathu.  (leaviyaraagamam  27:32)

அது  நல்லதோ  இளப்பமானதோ  என்று  அவன்  பார்க்கவேண்டாம்;  அதை  மாற்றவும்  வேண்டாம்;  மாற்றினால்,  அதுவும்  அதற்குப்  பதிலாகக்  கொடுக்கப்பட்டதுமாகிய  இரண்டும்  பரிசுத்தமாகும்;  அது  மீட்கப்படக்கூடாதென்று  அவர்களோடே  சொல்  என்றார்.  (லேவியராகமம்  27:33)

athu  nallathoa  i'lappamaanathoa  en’ru  avan  paarkkavea'ndaam;  athai  maat’ravum  vea'ndaam;  maat’rinaal,  athuvum  atha’rkup  bathilaagak  kodukkappattathumaagiya  ira'ndum  parisuththamaagum;  athu  meedkappadakkoodaathen’ru  avarga'loadea  sol  en’raar.  (leaviyaraagamam  27:33)

இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொல்லும்படி  கர்த்தர்  சீனாய்மலையில்  மோசேக்கு  விதித்த  கட்டளைகள்  இவைகளே.  (லேவியராகமம்  27:34)

israveal  puththirarukkuch  sollumpadi  karththar  seenaaymalaiyil  moaseakku  vithiththa  katta'laiga'l  ivaiga'lea.  (leaviyaraagamam  27:34)


Leaviyaraagamam 25 | லேவியராகமம் 25 | Leviticus 25

கர்த்தர்  சீனாய்மலையில்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  25:1)

karththar  seenaaymalaiyil  moaseayai  noakki:  (leaviyaraagamam  25:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நான்  உங்களுக்குக்  கொடுக்கும்  தேசத்திலே  நீங்கள்  போய்ச்  சேர்ந்திருக்கும்போது,  தேசம்  கர்த்தருக்கென்று  ஓய்வு  கொண்டாடவேண்டும்.  (லேவியராகமம்  25:2)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  naan  ungga'lukkuk  kodukkum  theasaththilea  neengga'l  poaych  searnthirukkumpoathu,  theasam  karththarukken’ru  oayvu  ko'ndaadavea'ndum.  (leaviyaraagamam  25:2)

ஆறுவருஷம்  உன்  வயலை  விதைத்து,  உன்  திராட்சத்தோட்டத்தைக்  கிளைகழித்து,  அதின்  பலனைச்  சேர்ப்பாயாக.  (லேவியராகமம்  25:3)

aa’ruvarusham  un  vayalai  vithaiththu,  un  thiraadchaththoattaththaik  ki'laikazhiththu,  athin  palanaich  searppaayaaga.  (leaviyaraagamam  25:3)

ஏழாம்  வருஷத்திலோ,  கர்த்தருக்கென்று  ஓய்ந்திருக்கும்  ஓய்வு  தேசத்திற்கு  இருக்கவேண்டும்;  அதில்  உன்  வயலை  விதைக்காமலும்,  உன்  திராட்சத்தோட்டத்தைக்  கிளைகழிக்காமலும்,  (லேவியராகமம்  25:4)

eazhaam  varushaththiloa,  karththarukken’ru  oaynthirukkum  oayvu  theasaththi’rku  irukkavea'ndum;  athil  un  vayalai  vithaikkaamalum,  un  thiraadchaththoattaththaik  ki'laikazhikkaamalum,  (leaviyaraagamam  25:4)

தானாய்  விளைந்து  பயிரானதை  அறுக்காமலும்,  கிளைகழிக்காதே  விட்ட  திராட்சச்செடியின்  பழங்களைச்  சேர்க்காமலும்  இருப்பாயாக;  தேசத்துக்கு  அது  ஓய்வு  வருஷமாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  25:5)

thaanaay  vi'lainthu  payiraanathai  a’rukkaamalum,  ki'laikazhikkaathea  vitta  thiraadchachsediyin  pazhangga'laich  searkkaamalum  iruppaayaaga;  theasaththukku  athu  oayvu  varushamaayirukkakkadavathu.  (leaviyaraagamam  25:5)

தேசத்தின்  ஓய்விலே  பயிராகிறது  உங்களுக்கு  ஆகாரமாயிருப்பதாக;  உன்  வேலைக்காரனுக்கும்,  உன்  வேலைக்காரிக்கும்,  உன்  கூலிக்காரனுக்கும்,  உன்னிடத்தில்  தங்குகிற  அந்நியனுக்கும்,  (லேவியராகமம்  25:6)

theasaththin  oayvilea  payiraagi’rathu  ungga'lukku  aagaaramaayiruppathaaga;  un  vealaikkaaranukkum,  un  vealaikkaarikkum,  un  koolikkaaranukkum,  unnidaththil  thanggugi’ra  anniyanukkum,  (leaviyaraagamam  25:6)

உன்  நாட்டு  மிருகத்துக்கும்,  உன்  தேசத்தில்  இருக்கிற  காட்டு  மிருகத்துக்கும்  அதில்  விளைந்திருப்பதெல்லாம்  ஆகாரமாயிருப்பதாக.  (லேவியராகமம்  25:7)

un  naattu  mirugaththukkum,  un  theasaththil  irukki’ra  kaattu  mirugaththukkum  athil  vi'lainthiruppathellaam  aagaaramaayiruppathaaga.  (leaviyaraagamam  25:7)

அன்றியும்,  ஏழு  ஓய்வு  வருஷங்களுள்ள  ஏழு  ஏழு  வருஷங்களை  எண்ணுவாயாக;  அந்த  ஏழு  ஓய்வு  வருஷங்களும்  நாற்பத்தொன்பது  வருஷமாகும்.  (லேவியராகமம்  25:8)

an’riyum,  eazhu  oayvu  varushangga'lu'l'la  eazhu  eazhu  varushangga'lai  e'n'nuvaayaaga;  antha  eazhu  oayvu  varushangga'lum  naa’rpaththonbathu  varushamaagum.  (leaviyaraagamam  25:8)

அப்பொழுதும்  ஏழாம்  மாதம்  பத்தாந்தேதியில்  எக்காளச்சத்தம்  தொனிக்கும்படி  செய்யவேண்டும்;  பாவநிவாரணநாளில்  உங்கள்  தேசமெங்கும்  எக்காளச்சத்தம்  தொனிக்கும்படி  செய்யவேண்டும்.  (லேவியராகமம்  25:9)

appozhuthum  eazhaam  maatham  paththaantheathiyil  ekkaa'lachsaththam  thonikkumpadi  seyyavea'ndum;  paavanivaara'nanaa'lil  ungga'l  theasamenggum  ekkaa'lachsaththam  thonikkumpadi  seyyavea'ndum.  (leaviyaraagamam  25:9)

ஐம்பதாம்  வருஷத்தைப்  பரிசுத்தமாக்கி,  தேசமெங்கும்  அதின்  குடிகளுக்கெல்லாம்  விடுதலை  கூறக்கடவீர்கள்;  அது  உங்களுக்கு  யூபிலி  வருஷம்;  அதிலே  உங்களில்  ஒவ்வொருவனும்  தன்  தன்  காணியாட்சிக்கும்  தன்  தன்  குடும்பத்துக்கும்  திரும்பிப்  போகக்கடவன்.  (லேவியராகமம்  25:10)

aimbathaam  varushaththaip  parisuththamaakki,  theasamenggum  athin  kudiga'lukkellaam  viduthalai  koo’rakkadaveerga'l;  athu  ungga'lukku  yoobili  varusham;  athilea  ungga'lil  ovvoruvanum  than  than  kaa'niyaadchikkum  than  than  kudumbaththukkum  thirumbip  poagakkadavan.  (leaviyaraagamam  25:10)

அந்த  ஐம்பதாம்  வருஷம்  உங்களுக்கு  யூபிலி  வருஷமாயிருப்பதாக;  அதிலே  விதைக்காமலும்,  தானாய்  விளைந்து  பயிரானதை  அறுக்காமலும்,  கிளைகழிக்காமல்  விடப்பட்ட  திராட்சச்  செடியின்  பழங்களைச்  சேர்க்காமலும்  இருப்பீர்களாக.  (லேவியராகமம்  25:11)

antha  aimbathaam  varusham  ungga'lukku  yoobili  varushamaayiruppathaaga;  athilea  vithaikkaamalum,  thaanaay  vi'lainthu  payiraanathai  a’rukkaamalum,  ki'laikazhikkaamal  vidappatta  thiraadchach  sediyin  pazhangga'laich  searkkaamalum  iruppeerga'laaga.  (leaviyaraagamam  25:11)

அது  யூபிலி  வருஷம்;  அது  உங்களுக்குப்  பரிசுத்தமாயிருக்கவேண்டும்;  அந்த  வருஷத்தில்  வயல்வெளியில்  விளைந்தவைகளை  நீங்கள்  புசிக்கவேண்டும்.  (லேவியராகமம்  25:12)

athu  yoobili  varusham;  athu  ungga'lukkup  parisuththamaayirukkavea'ndum;  antha  varushaththil  vayalve'liyil  vi'lainthavaiga'lai  neengga'l  pusikkavea'ndum.  (leaviyaraagamam  25:12)

அந்த  யூபிலி  வருஷத்தில்  உங்களில்  அவனவன்  தன்  தன்  காணியாட்சிக்குத்  திரும்பிப்போகக்கடவன்.  (லேவியராகமம்  25:13)

antha  yoobili  varushaththil  ungga'lil  avanavan  than  than  kaa'niyaadchikkuth  thirumbippoagakkadavan.  (leaviyaraagamam  25:13)

ஆகையால்,  பிறனுக்கு  எதையாவது  விற்றாலும்,  அவனிடத்தில்  எதையாவது  கொண்டாலும்  ஒருவருக்கொருவர்  அநியாயம்  செய்யக்கூடாது.  (லேவியராகமம்  25:14)

aagaiyaal,  pi’ranukku  ethaiyaavathu  vit’raalum,  avanidaththil  ethaiyaavathu  ko'ndaalum  oruvarukkoruvar  aniyaayam  seyyakkoodaathu.  (leaviyaraagamam  25:14)

யூபிலி  வருஷத்துக்குப்  பின்வரும்  வருஷங்களின்  தொகைக்கேற்கப்  பிறனிடத்தில்  கொள்ளுவாயாக;  பலனுள்ள  வருஷங்களின்  தொகைக்கேற்க  அவன்  உனக்கு  விற்பானாக.  (லேவியராகமம்  25:15)

yoobili  varushaththukkup  pinvarum  varushangga'lin  thogaikkea’rkap  pi’ranidaththil  ko'l'luvaayaaga;  palanu'l'la  varushangga'lin  thogaikkea’rka  avan  unakku  vi’rpaanaaga.  (leaviyaraagamam  25:15)

பலனுள்ள  வருஷங்களின்  இலக்கத்தைப்  பார்த்து  அவன்  உனக்கு  விற்கிறபடியால்,  வருஷங்களின்  தொகை  ஏறினால்  விலையேறவும்,  வருஷங்களின்  தொகை  குறைந்தால்,  விலை  குறையவும்வேண்டும்.  (லேவியராகமம்  25:16)

palanu'l'la  varushangga'lin  ilakkaththaip  paarththu  avan  unakku  vi’rki’rapadiyaal,  varushangga'lin  thogai  ea’rinaal  vilaiyea’ravum,  varushangga'lin  thogai  ku’rainthaal,  vilai  ku’raiyavumvea'ndum.  (leaviyaraagamam  25:16)

உங்களில்  ஒருவனும்  பிறனுக்கு  அநியாயம்  செய்யக்கூடாது;  உன்  தேவனுக்குப்  பயப்படவேண்டும்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (லேவியராகமம்  25:17)

ungga'lil  oruvanum  pi’ranukku  aniyaayam  seyyakkoodaathu;  un  theavanukkup  bayappadavea'ndum;  naan  ungga'l  theavanaagiya  karththar.  (leaviyaraagamam  25:17)

என்  கட்டளைகளின்படி  செய்து,  என்  நியாயங்களைக்  கைக்கொண்டு  அவைகளின்படி  நடக்கக்கடவீர்கள்;  அப்பொழுது  தேசத்திலே  சுகமாய்க்  குடியிருப்பீர்கள்.  (லேவியராகமம்  25:18)

en  katta'laiga'linpadi  seythu,  en  niyaayangga'laik  kaikko'ndu  avaiga'linpadi  nadakkakkadaveerga'l;  appozhuthu  theasaththilea  sugamaayk  kudiyiruppeerga'l.  (leaviyaraagamam  25:18)

பூமி  தன்  கனியைத்  தரும்;  நீங்கள்  திருப்தியாகச்  சாப்பிட்டு,  அதில்  சுகமாய்க்  குடியிருப்பீர்கள்.  (லேவியராகமம்  25:19)

boomi  than  kaniyaith  tharum;  neengga'l  thirupthiyaagach  saappittu,  athil  sugamaayk  kudiyiruppeerga'l.  (leaviyaraagamam  25:19)

ஏழாம்  வருஷத்தில்  எதைப்  புசிப்போம்?  நாங்கள்  விதைக்காமலும்,  விளைந்ததைச்  சேர்க்காமலும்  இருக்கவேண்டுமே!  என்று  சொல்வீர்களானால்,  (லேவியராகமம்  25:20)

eazhaam  varushaththil  ethaip  pusippoam?  naangga'l  vithaikkaamalum,  vi'lainthathaich  searkkaamalum  irukkavea'ndumea!  en’ru  solveerga'laanaal,  (leaviyaraagamam  25:20)

நான்  ஆறாம்  வருஷத்தில்  உங்களுக்கு  ஆசீர்வாதத்தை  அநுக்கிரகம்பண்ணுவேன்;  அது  உங்களுக்கு  மூன்று  வருஷத்தின்  பலனைத்  தரும்.  (லேவியராகமம்  25:21)

naan  aa’raam  varushaththil  ungga'lukku  aaseervaathaththai  anukkiragampa'n'nuvean;  athu  ungga'lukku  moon’ru  varushaththin  palanaith  tharum.  (leaviyaraagamam  25:21)

நீங்கள்  எட்டாம்  வருஷத்திலே  விதைத்து,  ஒன்பதாம்  வருஷம்மட்டும்  பழைய  பலனிலே  சாப்பிடுவீர்கள்;  அதின்  பலன்  விளையும்வரைக்கும்  பழைய  பலனைச்  சாப்பிடுவீர்கள்.  (லேவியராகமம்  25:22)

neengga'l  ettaam  varushaththilea  vithaiththu,  onbathaam  varushammattum  pazhaiya  palanilea  saappiduveerga'l;  athin  palan  vi'laiyumvaraikkum  pazhaiya  palanaich  saappiduveerga'l.  (leaviyaraagamam  25:22)

தேசம்  என்னுடையதாயிருக்கிறபடியால்,  நீங்கள்  நிலங்களை  அறுதியாய்  விற்கவேண்டாம்;  நீங்கள்  பரதேசிகளும்  என்னிடத்தில்  புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.  (லேவியராகமம்  25:23)

theasam  ennudaiyathaayirukki’rapadiyaal,  neengga'l  nilangga'lai  a’ruthiyaay  vi’rkavea'ndaam;  neengga'l  paratheasiga'lum  ennidaththil  pu’rakkudiga'lumaayirukki’reerga'l.  (leaviyaraagamam  25:23)

உங்கள்  காணியாட்சியான  தேசமெங்கும்  நிலங்களை  மீட்டுக்கொள்ள  இடங்கொடுக்கக்கடவீர்கள்.  (லேவியராகமம்  25:24)

ungga'l  kaa'niyaadchiyaana  theasamenggum  nilangga'lai  meettukko'l'la  idangkodukkakkadaveerga'l.  (leaviyaraagamam  25:24)

உங்கள்  சகோதரன்  தரித்திரப்பட்டு,  தன்  காணியாட்சியிலே  சிலதை  விற்றால்,  அவன்  இனத்தான்  ஒருவன்  வந்து,  தன்  சகோதரன்  விற்றதை  மீட்கக்கடவன்.  (லேவியராகமம்  25:25)

ungga'l  sagoatharan  thariththirappattu,  than  kaa'niyaadchiyilea  silathai  vit’raal,  avan  inaththaan  oruvan  vanthu,  than  sagoatharan  vit’rathai  meedkakkadavan.  (leaviyaraagamam  25:25)

அதை  மீட்க  ஒருவனும்  இல்லாமல்,  தானே  அதை  மீட்கத்தக்கவனானால்,  (லேவியராகமம்  25:26)

athai  meedka  oruvanum  illaamal,  thaanea  athai  meedkaththakkavanaanaal,  (leaviyaraagamam  25:26)

அதை  விற்றபின்  சென்ற  வருஷங்களின்  தொகையைத்  தள்ளி,  மீந்த  தொகையை  ஏற்றி,  கொண்டவனுக்குக்  கொடுத்து,  அவன்  தன்  காணியாட்சிக்குத்  திரும்பிப்போகக்கடவன்.  (லேவியராகமம்  25:27)

athai  vit’rapin  sen’ra  varushangga'lin  thogaiyaith  tha'l'li,  meentha  thogaiyai  eat’ri,  ko'ndavanukkuk  koduththu,  avan  than  kaa'niyaadchikkuth  thirumbippoagakkadavan.  (leaviyaraagamam  25:27)

அப்படிக்  கொடுப்பதற்கான  நிர்வாகம்  அவனுக்கு  இல்லாவிட்டால்,  அவன்  விற்றது  வாங்கினவன்  கையிலே  யூபிலி  வருஷம்மட்டும்  இருந்து,  யூபிலி  வருஷத்திலே  அது  விடுதலையாகும்;  அப்பொழுது  அவன்  தன்  காணியாட்சிக்குத்  திரும்பப்போவான்.  (லேவியராகமம்  25:28)

appadik  koduppatha’rkaana  nirvaagam  avanukku  illaavittaal,  avan  vit’rathu  vaangginavan  kaiyilea  yoobili  varushammattum  irunthu,  yoobili  varushaththilea  athu  viduthalaiyaagum;  appozhuthu  avan  than  kaa'niyaadchikkuth  thirumbappoavaan.  (leaviyaraagamam  25:28)

ஒருவன்  மதில்சூழ்ந்த  பட்டணத்திலுள்ள  தன்  வாசஸ்தலமாகிய  வீட்டை  விற்றால்,  அதை  விற்ற  ஒரு  வருஷத்துக்குள்  அதை  மீட்டுக்கொள்ளலாம்;  ஒரு  வருஷத்துக்குள்ளாகவே  அதை  மீட்டுக்கொள்ளவேண்டும்.  (லேவியராகமம்  25:29)

oruvan  mathilsoozhntha  patta'naththilu'l'la  than  vaasasthalamaagiya  veettai  vit’raal,  athai  vit’ra  oru  varushaththukku'l  athai  meettukko'l'lalaam;  oru  varushaththukku'l'laagavea  athai  meettukko'l'lavea'ndum.  (leaviyaraagamam  25:29)

ஒரு  வருஷத்துக்குள்ளே  அதை  மீட்டுக்கொள்ளாதிருந்தால்,  மதில்சூழ்ந்த  பட்டணத்திலுள்ள  அந்த  வீடு  தலைமுறைதோறும்  அதை  வாங்கினவனுக்கே  உரியதாகும்;  யூபிலி  வருஷத்திலும்  அது  விடுதலையாகாது.  (லேவியராகமம்  25:30)

oru  varushaththukku'l'lea  athai  meettukko'l'laathirunthaal,  mathilsoozhntha  patta'naththilu'l'la  antha  veedu  thalaimu’raithoa’rum  athai  vaangginavanukkea  uriyathaagum;  yoobili  varushaththilum  athu  viduthalaiyaagaathu.  (leaviyaraagamam  25:30)

மதில்சூழப்படாத  கிராமங்களிலுள்ள  வீடுகளோ,  தேசத்தின்  நிலங்கள்போலவே  எண்ணப்படும்;  அவைகள்  மீட்கப்படலாம்;  யூபிலி  வருஷத்தில்  அவைகள்  விடுதலையாகும்.  (லேவியராகமம்  25:31)

mathilsoozhappadaatha  kiraamangga'lilu'l'la  veeduga'loa,  theasaththin  nilangga'lpoalavea  e'n'nappadum;  avaiga'l  meedkappadalaam;  yoobili  varushaththil  avaiga'l  viduthalaiyaagum.  (leaviyaraagamam  25:31)

லேவியரின்  காணியாட்சியாகிய  பட்டணங்களிலுள்ள  வீடுகளையோ  லேவியர்  எக்காலத்திலும்  மீட்டுக்கொள்ளலாம்.  (லேவியராகமம்  25:32)

leaviyarin  kaa'niyaadchiyaagiya  patta'nangga'lilu'l'la  veeduga'laiyoa  leaviyar  ekkaalaththilum  meettukko'l'lalaam.  (leaviyaraagamam  25:32)

இஸ்ரவேல்  புத்திரருக்குள்ளே  லேவியருடைய  பட்டணங்களிலுள்ள  வீடுகள்  அவர்களுக்குரிய  காணியாட்சியானபடியால்,  லேவியரிடத்தில்  அவனுடைய  காணியாட்சிப்  பட்டணத்திலுள்ள  வீட்டை  ஒருவன்  வாங்கினால்,  விற்கப்பட்ட  அந்த  வீடு  யூபிலி  வருஷத்தில்  விடுதலையாகும்.  (லேவியராகமம்  25:33)

israveal  puththirarukku'l'lea  leaviyarudaiya  patta'nangga'lilu'l'la  veeduga'l  avarga'lukkuriya  kaa'niyaadchiyaanapadiyaal,  leaviyaridaththil  avanudaiya  kaa'niyaadchip  patta'naththilu'l'la  veettai  oruvan  vaangginaal,  vi’rkappatta  antha  veedu  yoobili  varushaththil  viduthalaiyaagum.  (leaviyaraagamam  25:33)

அவர்கள்  பட்டணங்களைச்  சூழ்ந்த  வெளிநிலம்  விற்கப்படலாகாது;  அது  அவர்களுக்கு  நித்திய  காணியாட்சியாயிருக்கும்.  (லேவியராகமம்  25:34)

avarga'l  patta'nangga'laich  soozhntha  ve'linilam  vi’rkappadalaagaathu;  athu  avarga'lukku  niththiya  kaa'niyaadchiyaayirukkum.  (leaviyaraagamam  25:34)

உன்  சகோதரன்  தரித்திரப்பட்டு,  கையிளைத்துப்போனவனானால்,  அவனை  ஆதரிக்கவேண்டும்;  பரதேசியைப்போலும்  தங்கவந்தவனைப்போலும்  அவன்  உன்னோடே  பிழைப்பானாக.  (லேவியராகமம்  25:35)

un  sagoatharan  thariththirappattu,  kaiyi'laiththuppoanavanaanaal,  avanai  aatharikkavea'ndum;  paratheasiyaippoalum  thanggavanthavanaippoalum  avan  unnoadea  pizhaippaanaaga.  (leaviyaraagamam  25:35)

நீ  அவன்  கையில்  வட்டியாவது  பொலிசையாவது  வாங்காமல்,  உன்  தேவனுக்குப்  பயந்து,  உன்  சகோதரன்  உன்னோடே  பிழைக்கும்படி  செய்வாயாக.  (லேவியராகமம்  25:36)

nee  avan  kaiyil  vattiyaavathu  polisaiyaavathu  vaanggaamal,  un  theavanukkup  bayanthu,  un  sagoatharan  unnoadea  pizhaikkumpadi  seyvaayaaga.  (leaviyaraagamam  25:36)

அவனுக்கு  உன்  பணத்தை  வட்டிக்கும்,  உன்  தானியத்தைப்  பொலிசைக்கும்  கொடாயாக.  (லேவியராகமம்  25:37)

avanukku  un  pa'naththai  vattikkum,  un  thaaniyaththaip  polisaikkum  kodaayaaga.  (leaviyaraagamam  25:37)

உங்களுக்குக்  கானான்  தேசத்தைக்  கொடுத்து,  உங்களுக்கு  தேவனாயிருக்கும்படி,  உங்களை  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  நானே.  (லேவியராகமம்  25:38)

ungga'lukkuk  kaanaan  theasaththaik  koduththu,  ungga'lukku  theavanaayirukkumpadi,  ungga'lai  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  ungga'l  theavanaagiya  karththar  naanea.  (leaviyaraagamam  25:38)

உன்  சகோதரன்  தரித்திரனாகி,  உனக்கு  விலைப்பட்டுப்போனால்,  அவனை  அடிமையைப்போல  ஊழியஞ்செய்ய  நெருக்கவேண்டாம்.  (லேவியராகமம்  25:39)

un  sagoatharan  thariththiranaagi,  unakku  vilaippattuppoanaal,  avanai  adimaiyaippoala  oozhiyagnseyya  nerukkavea'ndaam.  (leaviyaraagamam  25:39)

அவன்  கூலிக்காரனைப்போலவும்  தங்கவந்தவனைப்போலவும்  உன்னோடே  இருந்து,  யூபிலி  வருஷம்மட்டும்  உன்னிடத்தில்  சேவிக்கக்கடவன்.  (லேவியராகமம்  25:40)

avan  koolikkaaranaippoalavum  thanggavanthavanaippoalavum  unnoadea  irunthu,  yoobili  varushammattum  unnidaththil  seavikkakkadavan.  (leaviyaraagamam  25:40)

பின்பு,  தன்  பிள்ளைகளோடுங்கூட  உன்னை  விட்டு  நீங்கலாகி,  தன்  குடும்பத்தாரிடத்துக்கும்  தன்  பிதாக்களின்  காணியாட்சிக்கும்  திரும்பிப்போகக்கடவன்.  (லேவியராகமம்  25:41)

pinbu,  than  pi'l'laiga'loadungkooda  unnai  vittu  neenggalaagi,  than  kudumbaththaaridaththukkum  than  pithaakka'lin  kaa'niyaadchikkum  thirumbippoagakkadavan.  (leaviyaraagamam  25:41)

அவர்கள்  நான்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  என்னுடைய  ஊழியக்காரர்;  ஆகையால்,  அவர்கள்  அடிமைகளாக  விற்கப்படலாகாது.  (லேவியராகமம்  25:42)

avarga'l  naan  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  ennudaiya  oozhiyakkaarar;  aagaiyaal,  avarga'l  adimaiga'laaga  vi’rkappadalaagaathu.  (leaviyaraagamam  25:42)

நீ  அவனைக்  கொடூரமாய்  ஆளாமல்,  உன்  தேவனுக்குப்  பயந்திரு.  (லேவியராகமம்  25:43)

nee  avanaik  kodooramaay  aa'laamal,  un  theavanukkup  bayanthiru.  (leaviyaraagamam  25:43)

உனக்கு  இருக்கும்  ஆண்  அடிமையும்  பெண்  அடிமையும்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகளாயிருக்கவேண்டும்;  அவர்களில்  நீ  ஆண்  அடிமையையும்  பெண்  அடிமையையும்  விலைக்கு  வாங்கலாம்.  (லேவியராகமம்  25:44)

unakku  irukkum  aa'n  adimaiyum  pe'n  adimaiyum  sut’rilum  irukki’ra  pu’rajaathiga'laayirukkavea'ndum;  avarga'lil  nee  aa'n  adimaiyaiyum  pe'n  adimaiyaiyum  vilaikku  vaanggalaam.  (leaviyaraagamam  25:44)

உங்களிடத்திலே  பரதேசிகளாய்த்  தங்குகிற  அந்நிய  புத்திரரிலும்,  உங்கள்  தேசத்தில்  உங்களிடத்திலே  பிறந்திருக்கிற  அவர்களுடைய  குடும்பத்தாரிலும்  நீங்கள்  உங்களுக்கு  அடிமைகளைக்கொண்டு,  அவர்களை  உங்களுக்குச்  சுதந்தரமாக்கலாம்.  (லேவியராகமம்  25:45)

ungga'lidaththilea  paratheasiga'laayth  thanggugi’ra  anniya  puththirarilum,  ungga'l  theasaththil  ungga'lidaththilea  pi’ranthirukki’ra  avarga'ludaiya  kudumbaththaarilum  neengga'l  ungga'lukku  adimaiga'laikko'ndu,  avarga'lai  ungga'lukkuch  suthantharamaakkalaam.  (leaviyaraagamam  25:45)

அவர்களை  உங்களுக்குப்  பின்வரும்  உங்கள்  சந்ததியாரும்  சுதந்தரிக்கும்படி  நீங்கள்  அவர்களைச்  சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்;  என்றைக்கும்  அவர்கள்  உங்களுக்கு  அடிமைகளாயிருக்கலாம்;  உங்கள்  சகோதரராகிய  இஸ்ரவேல்  புத்திரரோ  ஒருவரையொருவர்  கொடூரமாக  ஆளக்கூடாது.  (லேவியராகமம்  25:46)

avarga'lai  ungga'lukkup  pinvarum  ungga'l  santhathiyaarum  suthantharikkumpadi  neengga'l  avarga'laich  suthantharamaakkikko'l'lalaam;  en’raikkum  avarga'l  ungga'lukku  adimaiga'laayirukkalaam;  ungga'l  sagoathararaagiya  israveal  puththiraroa  oruvaraiyoruvar  kodooramaaga  aa'lakkoodaathu.  (leaviyaraagamam  25:46)

உன்னிடத்தில்  இருக்கிற  பரதேசியும்  அந்நியனும்  செல்வனாயிருக்க,  அவனிடத்தில்  இருக்கிற  உன்  சகோதரன்  தரித்திரப்பட்டு,  அந்தப்  பரதேசிக்காவது,  அந்நியனுக்காவது,  பரதேசியின்  குடும்பத்தாரில்  எவனுக்காவது  அவன்  விலைப்பட்டுப்போனால்,  (லேவியராகமம்  25:47)

unnidaththil  irukki’ra  paratheasiyum  anniyanum  selvanaayirukka,  avanidaththil  irukki’ra  un  sagoatharan  thariththirappattu,  anthap  paratheasikkaavathu,  anniyanukkaavathu,  paratheasiyin  kudumbaththaaril  evanukkaavathu  avan  vilaippattuppoanaal,  (leaviyaraagamam  25:47)

அவன்  விலைப்பட்டுப்போனபின்  திரும்ப  மீட்கப்படலாம்;  அவன்  சகோதரரில்  ஒருவன்  அவனை  மீட்கலாம்.  (லேவியராகமம்  25:48)

avan  vilaippattuppoanapin  thirumba  meedkappadalaam;  avan  sagoathararil  oruvan  avanai  meedkalaam.  (leaviyaraagamam  25:48)

அவனுடைய  பிதாவின்  சகோதரனாவது,  அந்தச்  சகோதரனுடைய  புத்திரனாவது,  அவன்  குடும்பத்திலுள்ள  அவனைச்  சேர்ந்த  இனத்தாரில்  எவனாவது  அவனை  மீட்கலாம்;  தன்னால்  கூடுமானால்,  தன்னைத்தானே  மீட்டுக்கொள்ளலாம்.  (லேவியராகமம்  25:49)

avanudaiya  pithaavin  sagoatharanaavathu,  anthach  sagoatharanudaiya  puththiranaavathu,  avan  kudumbaththilu'l'la  avanaich  searntha  inaththaaril  evanaavathu  avanai  meedkalaam;  thannaal  koodumaanaal,  thannaiththaanea  meettukko'l'lalaam.  (leaviyaraagamam  25:49)

அவன்  தான்  விலைப்பட்ட  வருஷந்தொடங்கி,  யூபிலி  வருஷம்வரைக்கும்  உண்டான  காலத்தைத்  தன்னை  விலைக்குக்  கொண்டவனுடன்  கணக்குப்பார்க்கக்கடவன்;  அவனுடைய  விலைக்கிரயம்  கூலிக்காரனுடைய  காலக்கணக்குப்போல,  வருஷத்தொகைக்கு  ஒத்துப்பார்க்கவேண்டும்.  (லேவியராகமம்  25:50)

avan  thaan  vilaippatta  varushanthodanggi,  yoobili  varushamvaraikkum  u'ndaana  kaalaththaith  thannai  vilaikkuk  ko'ndavanudan  ka'nakkuppaarkkakkadavan;  avanudaiya  vilaikkirayam  koolikkaaranudaiya  kaalakka'nakkuppoala,  varushaththogaikku  oththuppaarkkavea'ndum.  (leaviyaraagamam  25:50)

இன்னும்  அநேக  வருஷங்கள்  இருந்தால்,  அவன்  தன்  விலைக்கிரயத்திலே  அவைகளுக்குத்  தக்கதைத்  தன்னை  மீட்கும்பொருளாகத்  திரும்பக்  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  25:51)

innum  aneaga  varushangga'l  irunthaal,  avan  than  vilaikkirayaththilea  avaiga'lukkuth  thakkathaith  thannai  meedkumporu'laagath  thirumbak  kodukkakkadavan.  (leaviyaraagamam  25:51)

யூபிலி  வருஷம்மட்டும்  மீதியாயிருக்கிற  வருஷங்கள்  கொஞ்சமேயானால்,  அவனோடே  கணக்குப்பார்த்து,  தன்  வருஷங்களுக்குத்தக்கதை,  தன்னை  மீட்கும்பொருளாகத்  திரும்பக்  கொடுக்கவேண்டும்.  (லேவியராகமம்  25:52)

yoobili  varushammattum  meethiyaayirukki’ra  varushangga'l  kognchameayaanaal,  avanoadea  ka'nakkuppaarththu,  than  varushangga'lukkuththakkathai,  thannai  meedkumporu'laagath  thirumbak  kodukkavea'ndum.  (leaviyaraagamam  25:52)

இவன்  வருஷத்திற்கு  வருஷம்  கூலிபொருந்திக்கொண்ட  கூலிக்காரனைப்போல,  அவனிடத்தில்  இருக்கவேண்டும்;  அவன்  இவனை  உனக்கு  முன்பாகக்  கொடூரமாய்  ஆளக்கூடாது.  (லேவியராகமம்  25:53)

ivan  varushaththi’rku  varusham  kooliporunthikko'nda  koolikkaaranaippoala,  avanidaththil  irukkavea'ndum;  avan  ivanai  unakku  munbaagak  kodooramaay  aa'lakkoodaathu.  (leaviyaraagamam  25:53)

இப்படி  இவன்  மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால்,  இவனும்  இவனோடேகூட  இவன்  பிள்ளைகளும்  யூபிலி  வருஷத்தில்  விடுதலையாவார்கள்.  (லேவியராகமம்  25:54)

ippadi  ivan  meettukko'l'lappadaathirunthaal,  ivanum  ivanoadeakooda  ivan  pi'l'laiga'lum  yoobili  varushaththil  viduthalaiyaavaarga'l.  (leaviyaraagamam  25:54)

இஸ்ரவேல்  புத்திரர்  என்  ஊழியக்காரர்;  அவர்கள்  நான்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  என்  ஊழியக்காரரே;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (லேவியராகமம்  25:55)

israveal  puththirar  en  oozhiyakkaarar;  avarga'l  naan  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  en  oozhiyakkaararea;  naan  ungga'l  theavanaagiya  karththar.  (leaviyaraagamam  25:55)