Showing posts with label Ebesiyar. Show all posts
Showing posts with label Ebesiyar. Show all posts

Tuesday, May 31, 2016

Ebeasiyar 6 | எபேசியர் 6 | Ephesians 6

பிள்ளைகளே,  உங்கள்  பெற்றாருக்குக்  கர்த்தருக்குள்  கீழ்ப்படியுங்கள்,  இது  நியாயம்.  (எபேசியர்  6:1)

pi'l'laiga'lea,  ungga'l  pet’raarukkuk  karththarukku'l  keezhppadiyungga'l,  ithu  niyaayam.  (ebeasiyar  6:1)

உனக்கு  நன்மை  உண்டாயிருப்பதற்கும்,  பூமியிலே  உன்  வாழ்நாள்  நீடித்திருப்பதற்கும்,  (எபேசியர்  6:2)

unakku  nanmai  u'ndaayiruppatha’rkum,  boomiyilea  un  vaazhnaa'l  neediththiruppatha’rkum,  (ebeasiyar  6:2)

உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்பதே  வாக்குத்தத்தமுள்ள  முதலாங்  கற்பனையாயிருக்கிறது.  (எபேசியர்  6:3)

un  thagappanaiyum  un  thaayaiyum  kanampa'n'nuvaayaaga  enbathea  vaakkuththaththamu'l'la  muthalaang  ka’rpanaiyaayirukki’rathu.  (ebeasiyar  6:3)

பிதாக்களே,  நீங்களும்  உங்கள்  பிள்ளைகளைக்  கோபப்படுத்தாமல்,  கர்த்தருக்கேற்ற  சிட்சையிலும்  போதனையிலும்  அவர்களை  வளர்ப்பீர்களாக.  (எபேசியர்  6:4)

pithaakka'lea,  neengga'lum  ungga'l  pi'l'laiga'laik  koabappaduththaamal,  karththarukkeat’ra  sidchaiyilum  poathanaiyilum  avarga'lai  va'larppeerga'laaga.  (ebeasiyar  6:4)

வேலைக்காரரே,  நீங்கள்  கிறிஸ்துவுக்குக்  கீழ்ப்படிகிறதுபோல,  சரீரத்தின்படி  உங்கள்  எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும்  பயத்தோடும்  நடுக்கத்தோடும்  கபடற்ற  மனதோடும்  கீழ்ப்படிந்து;  (எபேசியர்  6:5)

vealaikkaararea,  neengga'l  ki’risthuvukkuk  keezhppadigi’rathupoala,  sareeraththinpadi  ungga'l  ejamaanga'laayirukki’ravarga'lukkum  bayaththoadum  nadukkaththoadum  kabadat’ra  manathoadum  keezhppadinthu;  (ebeasiyar  6:5)

மனுஷருக்குப்  பிரியமாயிருக்க  விரும்புகிறவர்களாகப்  பார்வைக்கு  ஊழியஞ்செய்யாமல்,  கிறிஸ்துவின்  ஊழியக்காரராக,  மனப்பூர்வமாய்த்  தேவனுடைய  சித்தத்தின்படி  செய்யுங்கள்.  (எபேசியர்  6:6)

manusharukkup  piriyamaayirukka  virumbugi’ravarga'laagap  paarvaikku  oozhiyagnseyyaamal,  ki’risthuvin  oozhiyakkaararaaga,  manappoorvamaayth  theavanudaiya  siththaththinpadi  seyyungga'l.  (ebeasiyar  6:6)

அடிமையானவனானாலும்,  சுயாதீனமுள்ளவனானாலும்,  அவனவன்  செய்கிற  நன்மையின்படியே  கர்த்தரிடத்தில்  பலனை  அடைவானென்று  அறிந்து,  (எபேசியர்  6:7)

adimaiyaanavanaanaalum,  suyaatheenamu'l'lavanaanaalum,  avanavan  seygi’ra  nanmaiyinpadiyea  karththaridaththil  palanai  adaivaanen’ru  a’rinthu,  (ebeasiyar  6:7)

மனுஷருக்கென்று  ஊழியஞ்செய்யாமல்,  கர்த்தருக்கென்றே  நல்மனதோடே  ஊழியஞ்செய்யுங்கள்.  (எபேசியர்  6:8)

manusharukken’ru  oozhiyagnseyyaamal,  karththarukken’rea  nalmanathoadea  oozhiyagnseyyungga'l.  (ebeasiyar  6:8)

எஜமான்களே,  அப்படியே  நீங்களும்,  வேலைக்காரருக்குச்  செய்யவேண்டியவைகளைச்  செய்து,  அவர்களுக்கும்  உங்களுக்கும்  எஜமானானவர்  பரலோகத்தில்  இருக்கிறாரென்றும்,  அவரிடத்தில்  பட்சபாதம்  இல்லையென்றும்  அறிந்து,  கடுஞ்சொல்லை  விட்டுவிடுங்கள்.  (எபேசியர்  6:9)

ejamaanga'lea,  appadiyea  neengga'lum,  vealaikkaararukkuch  seyyavea'ndiyavaiga'laich  seythu,  avarga'lukkum  ungga'lukkum  ejamaanaanavar  paraloagaththil  irukki’raaren’rum,  avaridaththil  padchapaatham  illaiyen’rum  a’rinthu,  kadugnsollai  vittuvidungga'l.  (ebeasiyar  6:9)

கடைசியாக,  என்  சகோதரரே,  கர்த்தரிலும்  அவருடைய  சத்துவத்தின்  வல்லமையிலும்  பலப்படுங்கள்.  (எபேசியர்  6:10)

kadaisiyaaga,  en  sagoathararea,  karththarilum  avarudaiya  saththuvaththin  vallamaiyilum  balappadungga'l.  (ebeasiyar  6:10)

நீங்கள்  பிசாசின்  தந்திரங்களோடு  எதிர்த்துநிற்கத்  திராணியுள்ளவர்களாகும்படி,  தேவனுடைய  சர்வாயுதவர்க்கத்தையும்  தரித்துக்கொள்ளுங்கள்.  (எபேசியர்  6:11)

neengga'l  pisaasin  thanthirangga'loadu  ethirththuni’rkath  thiraa'niyu'l'lavarga'laagumpadi,  theavanudaiya  sarvaayuthavarkkaththaiyum  thariththukko'l'lungga'l.  (ebeasiyar  6:11)

ஏனெனில்,  மாம்சத்தோடும்  இரத்தத்தோடுமல்ல,  துரைத்தனங்களோடும்,  அதிகாரங்களோடும்,  இப்பிரபஞ்சத்தின்  அந்தகார  லோகாதிபதிகளோடும்,  வானமண்டலங்களிலுள்ள  பொல்லாத  ஆவிகளின்  சேனைகளோடும்  நமக்குப்  போராட்டம்  உண்டு.  (எபேசியர்  6:12)

eanenil,  maamsaththoadum  iraththaththoadumalla,  thuraiththanangga'loadum,  athigaarangga'loadum,  ippirapagnchaththin  anthagaara  loagaathibathiga'loadum,  vaanama'ndalangga'lilu'l'la  pollaatha  aaviga'lin  seanaiga'loadum  namakkup  poaraattam  u'ndu.  (ebeasiyar  6:12)

ஆகையால்,  தீங்குநாளிலே  அவைகளை  நீங்கள்  எதிர்க்கவும்,  சகலத்தையும்  செய்துமுடித்தவர்களாய்  நிற்கவும்  திராணியுள்ளவர்களாகும்படிக்கு,  தேவனுடைய  சர்வாயுதவர்க்கத்தையும்  எடுத்துக்கொள்ளுங்கள்.  (எபேசியர்  6:13)

aagaiyaal,  theenggunaa'lilea  avaiga'lai  neengga'l  ethirkkavum,  sagalaththaiyum  seythumudiththavarga'laay  ni’rkavum  thiraa'niyu'l'lavarga'laagumpadikku,  theavanudaiya  sarvaayuthavarkkaththaiyum  eduththukko'l'lungga'l.  (ebeasiyar  6:13)

சத்தியம்  என்னும்  கச்சையை  உங்கள்  அரையில்  கட்டினவர்களாயும்,  நீதியென்னும்  மார்க்கவசத்தைத்  தரித்தவர்களாயும்;  (எபேசியர்  6:14)

saththiyam  ennum  kachchaiyai  ungga'l  araiyil  kattinavarga'laayum,  neethiyennum  maarkkavasaththaith  thariththavarga'laayum;  (ebeasiyar  6:14)

சமாதானத்தின்  சுவிசேஷத்திற்குரிய  ஆயத்தம்  என்னும்  பாதரட்சையைக்  கால்களிலே  தொடுத்தவர்களாயும்;  (எபேசியர்  6:15)

samaathaanaththin  suviseashaththi’rkuriya  aayaththam  ennum  paatharadchaiyaik  kaalga'lilea  thoduththavarga'laayum;  (ebeasiyar  6:15)

பொல்லாங்கன்  எய்யும்  அக்கினியாஸ்திரங்களையெல்லாம்  அவித்துப்போடத்தக்கதாய்,  எல்லாவற்றிற்கும்  மேலாக  விசுவாசமென்னும்  கேடகத்தைப்  பிடித்துக்கொண்டவர்களாயும்  நில்லுங்கள்.  (எபேசியர்  6:16)

pollaanggan  eyyum  akkiniyaasthirangga'laiyellaam  aviththuppoadaththakkathaay,  ellaavat’ri’rkum  mealaaga  visuvaasamennum  keadagaththaip  pidiththukko'ndavarga'laayum  nillungga'l.  (ebeasiyar  6:16)

இரட்சணியமென்னும்  தலைச்சீராவையும்,  தேவவசனமாகிய  ஆவியின்  பட்டயத்தையும்  எடுத்துக்கொள்ளுங்கள்.  (எபேசியர்  6:17)

iradcha'niyamennum  thalaichseeraavaiyum,  theavavasanamaagiya  aaviyin  pattayaththaiyum  eduththukko'l'lungga'l.  (ebeasiyar  6:17)

எந்தச்  சமயத்திலும்  சகலவிதமான  வேண்டுதலோடும்  விண்ணப்பத்தோடும்  ஆவியினாலே  ஜெபம்பண்ணி,  அதன்பொருட்டு  மிகுந்த  மனஉறுதியோடும்  சகல  பரிசுத்தவான்களுக்காகவும்  பண்ணும்  வேண்டுதலோடும்  விழித்துக்கொண்டிருங்கள்.  (எபேசியர்  6:18)

enthach  samayaththilum  sagalavithamaana  vea'nduthaloadum  vi'n'nappaththoadum  aaviyinaalea  jebampa'n'ni,  athanporuttu  miguntha  manau’ruthiyoadum  sagala  parisuththavaanga'lukkaagavum  pa'n'num  vea'nduthaloadum  vizhiththukko'ndirungga'l.  (ebeasiyar  6:18)

சுவிசேஷத்திற்காகச்  சங்கிலியால்  கட்டப்பட்டிருக்கிற  ஸ்தானாபதியாகிய  நான்  அதைப்பற்றிப்  பேசவேண்டியபடி  தைரியமாய்ப்  பேசத்தக்கதாக,  (எபேசியர்  6:19)

suviseashaththi’rkaagach  sanggiliyaal  kattappattirukki’ra  sthaanaabathiyaagiya  naan  athaippat’rip  peasavea'ndiyapadi  thairiyamaayp  peasaththakkathaaga,  (ebeasiyar  6:19)

நான்  தைரியமாய்  என்  வாயைத்  திறந்து  சுவிசேஷத்தின்  இரகசியத்தை  அறிவிக்கிறதற்கு  வாக்கு  எனக்குக்  கொடுக்கப்படும்படி  எனக்காகவும்  விண்ணப்பம்பண்ணுங்கள்.  (எபேசியர்  6:20)

naan  thairiyamaay  en  vaayaith  thi’ranthu  suviseashaththin  iragasiyaththai  a’rivikki’ratha’rku  vaakku  enakkuk  kodukkappadumpadi  enakkaagavum  vi'n'nappampa'n'nungga'l.  (ebeasiyar  6:20)

அன்றியும்,  எனக்கடுத்த  காரியங்களும்,  என்  சுகசெய்திகளும்  உங்களுக்குத்  தெரியவரும்படிக்கு,  அவைகளையெல்லாம்  நமக்குப்  பிரியமான  சகோதரனும்  கர்த்தருக்குள்  உண்மையுள்ள  ஊழியக்காரனுமாயிருக்கிற  தீகிக்கு  உங்களுக்கு  அறிவிப்பான்.  (எபேசியர்  6:21)

an’riyum,  enakkaduththa  kaariyangga'lum,  en  sugaseythiga'lum  ungga'lukkuth  theriyavarumpadikku,  avaiga'laiyellaam  namakkup  piriyamaana  sagoatharanum  karththarukku'l  u'nmaiyu'l'la  oozhiyakkaaranumaayirukki’ra  theegikku  ungga'lukku  a’rivippaan.  (ebeasiyar  6:21)

நீங்கள்  எங்கள்  செய்திகளை  அறியவும்,  அவன்  உங்கள்  இருதயங்களுக்கு  ஆறுதல்  செய்யவும்,  அவனை  உங்களிடத்தில்  அனுப்பினேன்.  (எபேசியர்  6:22)

neengga'l  engga'l  seythiga'lai  a’riyavum,  avan  ungga'l  iruthayangga'lukku  aa’ruthal  seyyavum,  avanai  ungga'lidaththil  anuppinean.  (ebeasiyar  6:22)

பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்,  சகோதரருக்குச்  சமாதானமும்  விசுவாசத்தோடு  கூடிய  அன்பும்  உண்டாவதாக.  (எபேசியர்  6:23)

pithaavaagiya  theavanaalum  karththaraagiya  iyeasuki’risthuvinaalum,  sagoathararukkuch  samaathaanamum  visuvaasaththoadu  koodiya  anbum  u'ndaavathaaga.  (ebeasiyar  6:23)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினிடத்தில்  அழியாத  அன்புடனே  அன்புகூருகிற  யாவரோடும்  கிருபை  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  (எபேசியர்  6:24)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinidaththil  azhiyaatha  anbudanea  anbukoorugi’ra  yaavaroadum  kirubai  u'ndaayiruppathaaga.  aamen.  (ebeasiyar  6:24)


Ebeasiyar 5 | எபேசியர் 5 | Ephesians 5

ஆதலால்,  நீங்கள்  பிரியமான  பிள்ளைகளைப்போலத்  தேவனைப்  பின்பற்றுகிறவர்களாகி,  (எபேசியர்  5:1)

aathalaal,  neengga'l  piriyamaana  pi'l'laiga'laippoalath  theavanaip  pinpat’rugi’ravarga'laagi,  (ebeasiyar  5:1)

கிறிஸ்து  நமக்காகத்  தம்மைத்  தேவனுக்குச்  சுகந்த  வாசனையான  காணிக்கையாகவும்  பலியாகவும்  ஒப்புக்கொடுத்து  நம்மில்  அன்புகூர்ந்ததுபோல,  நீங்களும்  அன்பிலே  நடந்துகொள்ளுங்கள்.  (எபேசியர்  5:2)

ki’risthu  namakkaagath  thammaith  theavanukkuch  sugantha  vaasanaiyaana  kaa'nikkaiyaagavum  baliyaagavum  oppukkoduththu  nammil  anbukoornthathupoala,  neengga'lum  anbilea  nadanthuko'l'lungga'l.  (ebeasiyar  5:2)

மேலும்,  பரிசுத்தவான்களுக்கு  ஏற்றபடி,  வேசித்தனமும்,  மற்றெந்த  அசுத்தமும்,  பொருளாசையும்  ஆகிய  இவைகளின்  பேர்முதலாய்  உங்களுக்குள்ளே  சொல்லப்படவுங்கூடாது.  (எபேசியர்  5:3)

mealum,  parisuththavaanga'lukku  eat’rapadi,  veasiththanamum,  mat’rentha  asuththamum,  poru'laasaiyum  aagiya  ivaiga'lin  pearmuthalaay  ungga'lukku'l'lea  sollappadavungkoodaathu.  (ebeasiyar  5:3)

அப்படியே  வம்பும்,  புத்தியீனமான  பேச்சும்,  பரியாசமும்  தகாதவைகள்;  ஸ்தோத்திரஞ்செய்தலே  தகும்.  (எபேசியர்  5:4)

appadiyea  vambum,  buththiyeenamaana  peachchum,  pariyaasamum  thagaathavaiga'l;  sthoaththiragnseythalea  thagum.  (ebeasiyar  5:4)

விபசாரக்காரனாவது,  அசுத்தனாவது,  விக்கிரகாராதனைக்காரனாகிய  பொருளாசைக்காரனாவது  தேவனுடைய  ராஜ்யமாகிய  கிறிஸ்துவின்  ராஜ்யத்திலே  சுதந்தரமடைவதில்லையென்று  அறிந்திருக்கிறீர்களே.  (எபேசியர்  5:5)

vibasaarakkaaranaavathu,  asuththanaavathu,  vikkiragaaraathanaikkaaranaagiya  poru'laasaikkaaranaavathu  theavanudaiya  raajyamaagiya  ki’risthuvin  raajyaththilea  suthantharamadaivathillaiyen’ru  a’rinthirukki’reerga'lea.  (ebeasiyar  5:5)

இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக்  கீழ்ப்படியாமையின்  பிள்ளைகள்மேல்  தேவகோபாக்கினை  வருவதால்,  ஒருவனும்  உங்களை  வீண்வார்த்தைகளினாலே  மோசம்போக்காதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  (எபேசியர்  5:6)

ippadippattavaiga'linimiththamaagak  keezhppadiyaamaiyin  pi'l'laiga'lmeal  theavakoabaakkinai  varuvathaal,  oruvanum  ungga'lai  vee'nvaarththaiga'linaalea  moasampoakkaathapadikku  echcharikkaiyaayirungga'l;  (ebeasiyar  5:6)

அவர்களுக்குப்  பங்காளிகளாகாதிருங்கள்.  (எபேசியர்  5:7)

avarga'lukkup  panggaa'liga'laagaathirungga'l.  (ebeasiyar  5:7)

முற்காலத்தில்  நீங்கள்  அந்தகாரமாயிருந்தீர்கள்,  இப்பொழுதோ  கர்த்தருக்குள்  வெளிச்சமாயிருக்கிறீர்கள்;  வெளிச்சத்தின்  பிள்ளைகளாய்  நடந்துகொள்ளுங்கள்.  (எபேசியர்  5:8)

mu’rkaalaththil  neengga'l  anthagaaramaayiruntheerga'l,  ippozhuthoa  karththarukku'l  ve'lichchamaayirukki’reerga'l;  ve'lichchaththin  pi'l'laiga'laay  nadanthuko'l'lungga'l.  (ebeasiyar  5:8)

ஆவியின்  கனி,  சகல  நற்குணத்திலும்  நீதியிலும்  உண்மையிலும்  விளங்கும்.  (எபேசியர்  5:9)

aaviyin  kani,  sagala  na’rku'naththilum  neethiyilum  u'nmaiyilum  vi'langgum.  (ebeasiyar  5:9)

கர்த்தருக்குப்  பிரியமானது  இன்னதென்று  நீங்கள்  சோதித்துப்பாருங்கள்.  (எபேசியர்  5:10)

karththarukkup  piriyamaanathu  innathen’ru  neengga'l  soathiththuppaarungga'l.  (ebeasiyar  5:10)

கனியற்ற  அந்தகாரக்  கிரியைகளுக்கு  உடன்படாமல்,  அவைகளைக்  கடிந்துகொள்ளுங்கள்.  (எபேசியர்  5:11)

kaniyat’ra  anthagaarak  kiriyaiga'lukku  udanpadaamal,  avaiga'laik  kadinthuko'l'lungga'l.  (ebeasiyar  5:11)

அவர்களால்  ஒளிப்பிடத்தில்  செய்யப்படும்  கிரியைகளைச்  சொல்லுகிறதும்  அவலட்சணமாயிருக்கிறதே.  (எபேசியர்  5:12)

avarga'laal  o'lippidaththil  seyyappadum  kiriyaiga'laich  sollugi’rathum  avaladcha'namaayirukki’rathea.  (ebeasiyar  5:12)

அவைகளெல்லாம்  கடிந்துகொள்ளப்பட்டு  வெளிச்சத்தினால்  வெளியரங்கமாகும்;  வெளியரங்கமாக்குகிறதெல்லாம்  வெளிச்சமாயிருக்கிறது.  (எபேசியர்  5:13)

avaiga'lellaam  kadinthuko'l'lappattu  ve'lichchaththinaal  ve'liyaranggamaagum;  ve'liyaranggamaakkugi’rathellaam  ve'lichchamaayirukki’rathu.  (ebeasiyar  5:13)

ஆதலால்,  தூங்குகிற  நீ  விழித்து,  மரித்தோரை  விட்டு  எழுந்திரு,  அப்பொழுது  கிறிஸ்து  உன்னைப்  பிரகாசிப்பிப்பாரென்று  சொல்லியிருக்கிறார்.  (எபேசியர்  5:14)

aathalaal,  thoonggugi’ra  nee  vizhiththu,  mariththoarai  vittu  ezhunthiru,  appozhuthu  ki’risthu  unnaip  piragaasippippaaren’ru  solliyirukki’raar.  (ebeasiyar  5:14)

ஆனபடியினாலே,  நீங்கள்  ஞானமற்றவர்களைப்போல  நடவாமல்,  ஞானமுள்ளவர்களைப்போலக்  கவனமாய்  நடந்துகொள்ளப்பார்த்து,  (எபேசியர்  5:15)

aanapadiyinaalea,  neengga'l  gnaanamat’ravarga'laippoala  nadavaamal,  gnaanamu'l'lavarga'laippoalak  kavanamaay  nadanthuko'l'lappaarththu,  (ebeasiyar  5:15)

நாட்கள்  பொல்லாதவைகளானதால்  காலத்தைப்  பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.  (எபேசியர்  5:16)

naadka'l  pollaathavaiga'laanathaal  kaalaththaip  pirayoajanappaduththikko'l'lungga'l.  (ebeasiyar  5:16)

ஆகையால்,  நீங்கள்  மதியற்றவர்களாயிராமல்,  கர்த்தருடைய  சித்தம்  இன்னதென்று  உணர்ந்துகொள்ளுங்கள்.  (எபேசியர்  5:17)

aagaiyaal,  neengga'l  mathiyat’ravarga'laayiraamal,  karththarudaiya  siththam  innathen’ru  u'narnthuko'l'lungga'l.  (ebeasiyar  5:17)

துன்மார்க்கத்திற்கு  ஏதுவான  மதுபான  வெறிகொள்ளாமல்,  ஆவியினால்  நிறைந்து;  (எபேசியர்  5:18)

thunmaarkkaththi’rku  eathuvaana  mathubaana  ve’riko'l'laamal,  aaviyinaal  ni’rainthu;  (ebeasiyar  5:18)

சங்கீதங்களினாலும்  கீர்த்தனைகளினாலும்  ஞானப்பாட்டுகளினாலும்  ஒருவருக்கொருவர்  புத்திசொல்லிக்கொண்டு,  உங்கள்  இருதயத்தில்  கர்த்தரைப்  பாடிக்  கீர்த்தனம்பண்ணி,  (எபேசியர்  5:19)

sanggeethangga'linaalum  keerththanaiga'linaalum  gnaanappaattuga'linaalum  oruvarukkoruvar  buththisollikko'ndu,  ungga'l  iruthayaththil  karththaraip  paadik  keerththanampa'n'ni,  (ebeasiyar  5:19)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  நாமத்தினாலே  எப்பொழுதும்  எல்லாவற்றிற்காகவும்  பிதாவாகிய  தேவனை  ஸ்தோத்திரித்து,  (எபேசியர்  5:20)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  naamaththinaalea  eppozhuthum  ellaavat’ri’rkaagavum  pithaavaagiya  theavanai  sthoaththiriththu,  (ebeasiyar  5:20)

தெய்வ  பயத்தோடே  ஒருவருக்கொருவர்  கீழ்ப்படிந்திருங்கள்.  (எபேசியர்  5:21)

theyva  bayaththoadea  oruvarukkoruvar  keezhppadinthirungga'l.  (ebeasiyar  5:21)

மனைவிகளே,  கர்த்தருக்குக்  கீழ்ப்படிகிறதுபோல,  உங்கள்  சொந்தப்  புருஷருக்குங்  கீழ்ப்படியுங்கள்.  (எபேசியர்  5:22)

manaiviga'lea,  karththarukkuk  keezhppadigi’rathupoala,  ungga'l  sonthap  purusharukkung  keezhppadiyungga'l.  (ebeasiyar  5:22)

கிறிஸ்து  சபைக்குத்  தலையாயிருக்கிறதுபோல,  புருஷனும்  மனைவிக்குத்  தலையாயிருக்கிறான்;  அவரே  சரீரத்திற்கும்  இரட்சகராயிருக்கிறார்.  (எபேசியர்  5:23)

ki’risthu  sabaikkuth  thalaiyaayirukki’rathupoala,  purushanum  manaivikkuth  thalaiyaayirukki’raan;  avarea  sareeraththi’rkum  iradchagaraayirukki’raar.  (ebeasiyar  5:23)

ஆகையால்,  சபையானது  கிறிஸ்துவுக்குக்  கீழ்ப்படிகிறதுபோல  மனைவிகளும்  தங்கள்  சொந்தப்  புருஷர்களுக்கு  எந்தக்  காரியத்திலேயும்  கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.  (எபேசியர்  5:24)

aagaiyaal,  sabaiyaanathu  ki’risthuvukkuk  keezhppadigi’rathupoala  manaiviga'lum  thangga'l  sonthap  purusharga'lukku  enthak  kaariyaththileayum  keezhppadinthirukkavea'ndum.  (ebeasiyar  5:24)

புருஷர்களே,  உங்கள்  மனைவிகளில்  அன்புகூருங்கள்;  அப்படியே  கிறிஸ்துவும்  சபையில்  அன்புகூர்ந்து,  (எபேசியர்  5:25)

purusharga'lea,  ungga'l  manaiviga'lil  anbukoorungga'l;  appadiyea  ki’risthuvum  sabaiyil  anbukoornthu,  (ebeasiyar  5:25)

தாம்  அதைத்  திருவசனத்தைக்கொண்டு  தண்ணீர்  முழுக்கினால்  சுத்திகரித்து,  பரிசுத்தமாக்குகிறதற்கும்,  (எபேசியர்  5:26)

thaam  athaith  thiruvasanaththaikko'ndu  tha'n'neer  muzhukkinaal  suththigariththu,  parisuththamaakkugi’ratha’rkum,  (ebeasiyar  5:26)

கறைதிரை  முதலானவைகள்  ஒன்றும்  இல்லாமல்  பரிசுத்தமும்  பிழையற்றதுமான  மகிமையுள்ள  சபையாக  அதைத்  தமக்குமுன்  நிறுத்திக்கொள்வதற்கும்  தம்மைத்தாமே  அதற்காக  ஒப்புக்கொடுத்தார்.  (எபேசியர்  5:27)

ka’raithirai  muthalaanavaiga'l  on’rum  illaamal  parisuththamum  pizhaiyat’rathumaana  magimaiyu'l'la  sabaiyaaga  athaith  thamakkumun  ni’ruththikko'lvatha’rkum  thammaiththaamea  atha’rkaaga  oppukkoduththaar.  (ebeasiyar  5:27)

அப்படியே,  புருஷர்களும்  தங்கள்  மனைவிகளைத்  தங்கள்  சொந்தச்  சரீரங்களாகப்  பாவித்து,  அவர்களில்  அன்புகூரவேண்டும்;  தன்  மனைவியில்  அன்புகூருகிறவன்  தன்னில்தான்  அன்புகூருகிறான்.  (எபேசியர்  5:28)

appadiyea,  purusharga'lum  thangga'l  manaiviga'laith  thangga'l  sonthach  sareerangga'laagap  paaviththu,  avarga'lil  anbukooravea'ndum;  than  manaiviyil  anbukoorugi’ravan  thannilthaan  anbukoorugi’raan.  (ebeasiyar  5:28)

தன்  சொந்த  மாம்சத்தைப்  பகைத்தவன்  ஒருவனுமில்லையே;  கர்த்தர்  சபையைப்  போஷித்துக்  காப்பாற்றுகிறதுபோல  ஒவ்வொருவனும்  தன்  மாம்சத்தைப்  போஷித்துக்  காப்பாற்றுகிறான்.  (எபேசியர்  5:29)

than  sontha  maamsaththaip  pagaiththavan  oruvanumillaiyea;  karththar  sabaiyaip  poashiththuk  kaappaat’rugi’rathupoala  ovvoruvanum  than  maamsaththaip  poashiththuk  kaappaat’rugi’raan.  (ebeasiyar  5:29)

நாம்  அவருடைய  சரீரத்தின்  அவயவங்களாயும்,  அவருடைய  மாம்சத்திற்கும்  அவருடைய  எலும்புகளுக்கும்  உரியவர்களாயும்  இருக்கிறோம்.  (எபேசியர்  5:30)

naam  avarudaiya  sareeraththin  avayavangga'laayum,  avarudaiya  maamsaththi’rkum  avarudaiya  elumbuga'lukkum  uriyavarga'laayum  irukki’roam.  (ebeasiyar  5:30)

இதினிமித்தம்  மனுஷன்  தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  விட்டு,  தன்  மனைவியுடன்  இசைந்து,  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்.  (எபேசியர்  5:31)

ithinimiththam  manushan  than  thagappanaiyum  than  thaayaiyum  vittu,  than  manaiviyudan  isainthu,  iruvarum  orea  maamsamaayiruppaarga'l.  (ebeasiyar  5:31)

இந்த  இரகசியம்  பெரியது;  நான்  கிறிஸ்துவைப்பற்றியும்  சபையைப்பற்றியும்  சொல்லுகிறேன்.  (எபேசியர்  5:32)

intha  iragasiyam  periyathu;  naan  ki’risthuvaippat’riyum  sabaiyaippat’riyum  sollugi’rean.  (ebeasiyar  5:32)

எப்படியும்,  உங்களிலும்  அவனவன்  தன்னிடத்தில்  அன்புகூருவதுபோல,  தன்  மனைவியினிடத்திலும்  அன்புகூரக்கடவன்;  மனைவியும்  புருஷனிடத்தில்  பயபக்தியாயிருக்கக்கடவள்.  (எபேசியர்  5:33)

eppadiyum,  ungga'lilum  avanavan  thannidaththil  anbukooruvathupoala,  than  manaiviyinidaththilum  anbukoorakkadavan;  manaiviyum  purushanidaththil  bayabakthiyaayirukkakkadava'l.  (ebeasiyar  5:33)