Showing posts with label yoaveal. Show all posts
Showing posts with label yoaveal. Show all posts

Sunday, July 10, 2016

Yoaveal 3 | யோவேல் 3 | Joel 3

இதோ,  யூதாவுக்கும்  எருசலேமுக்கும்  உண்டாயிருக்கிற  சிறையிருப்பை  நான்  திருப்பும்  அந்நாட்களிலும்  அக்காலத்திலும்,  (யோவேல்  3:1)

ithoa,  yoothaavukkum  erusaleamukkum  u'ndaayirukki’ra  si’raiyiruppai  naan  thiruppum  annaadka'lilum  akkaalaththilum,  (yoaveal  3:1)

நான்  சகல  ஜாதியாரையும்  கூட்டி,  யோசபாத்தின்  பள்ளத்தாக்கிலே  அவர்களை  இறங்கிப்போகப்பண்ணி,  அவர்கள்  என்  ஜனத்தையும்  இஸ்ரவேலென்னும்  என்  சுதந்தரத்தையும்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து  என்  தேசத்தைப்  பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,  (யோவேல்  3:2)

naan  sagala  jaathiyaaraiyum  kootti,  yoasapaaththin  pa'l'laththaakkilea  avarga'lai  i’ranggippoagappa'n'ni,  avarga'l  en  janaththaiyum  isravealennum  en  suthantharaththaiyum  pu’rajaathiga'lukku'l'lea  sitha’radiththu  en  theasaththaip  panggittukko'ndathinimiththamum,  (yoaveal  3:2)

அவர்கள்  என்  ஜனத்தின்பேரில்  சீட்டுப்போட்டு,  ஆண்குழந்தைகளை  வேசிப்பணையமாகக்  கொடுத்து,  மதுபானம்  பண்ணும்படி,  பெண்  குழந்தைகளைத்  திராட்சரசத்துக்குக்  கிரயமாகக்  கொடுத்ததினிமித்தமும்,  அங்கே  அவர்களோடு  வழக்காடுவேன்.  (யோவேல்  3:3)

avarga'l  en  janaththinpearil  seettuppoattu,  aa'nkuzhanthaiga'lai  veasippa'naiyamaagak  koduththu,  mathubaanam  pa'n'numpadi,  pe'n  kuzhanthaiga'laith  thiraadcharasaththukkuk  kirayamaagak  koduththathinimiththamum,  anggea  avarga'loadu  vazhakkaaduvean.  (yoaveal  3:3)

தீருவே,  சீதோனே,  பெலிஸ்தியாவின்  சகல  எல்லைகளே,  உங்களுக்கும்  எனக்கும்  என்ன?  இப்படி  எனக்குச்  சரிக்கட்டுகிறீர்களோ?  இப்படி  எனக்குச்  சரிக்கட்டுவீர்களாகில்,  நான்  தாமதமின்றி  அதிசீக்கிரமாய்  நீங்கள்  சரிக்கட்டுகிறதை  உங்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்வேன்.  (யோவேல்  3:4)

theeruvea,  seethoanea,  pelisthiyaavin  sagala  ellaiga'lea,  ungga'lukkum  enakkum  enna?  ippadi  enakkuch  sarikkattugi’reerga'loa?  ippadi  enakkuch  sarikkattuveerga'laagil,  naan  thaamathamin’ri  athiseekkiramaay  neengga'l  sarikkattugi’rathai  ungga'l  thalaiyinmeal  thirumbumpadi  seyvean.  (yoaveal  3:4)

நீங்கள்  என்  வெள்ளியையும்  என்  பொன்னையும்  எடுத்து,  இன்பமும்  உச்சிதமுமான  என்  பொருள்களை  உங்கள்  கோவில்களிலே  கொண்டுபோய்,  (யோவேல்  3:5)

neengga'l  en  ve'l'liyaiyum  en  ponnaiyum  eduththu,  inbamum  uchchithamumaana  en  poru'lga'lai  ungga'l  koavilga'lilea  ko'ndupoay,  (yoaveal  3:5)

யூதாவின்  குமாரரையும்  எருசலேமின்  குமாரரையும்  அவர்களுடைய  எல்லைகளுக்குத்  தூரமாக்கும்படிக்கு,  கிரேக்கரிடத்தில்  விற்றுப்போட்டீர்கள்.  (யோவேல்  3:6)

yoothaavin  kumaararaiyum  erusaleamin  kumaararaiyum  avarga'ludaiya  ellaiga'lukkuth  thooramaakkumpadikku,  kireakkaridaththil  vit’ruppoatteerga'l.  (yoaveal  3:6)

இதோ,  நீங்கள்  அவர்களை  விற்றுப்போட்ட  அவ்விடத்திலிருந்து  நான்  அவர்களை  எழும்பிவரப்பண்ணி,  நீங்கள்  சரிக்கட்டினதை  உங்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்து,  (யோவேல்  3:7)

ithoa,  neengga'l  avarga'lai  vit’ruppoatta  avvidaththilirunthu  naan  avarga'lai  ezhumbivarappa'n'ni,  neengga'l  sarikkattinathai  ungga'l  thalaiyinmeal  thirumbumpadi  seythu,  (yoaveal  3:7)

உங்கள்  குமாரரையும்  உங்கள்  குமாரத்திகளையும்  யூதா  புத்திரரின்  கையிலே  விற்பேன்;  இவர்கள்  அவர்களைத்  தூரதேசத்தாராகிய  சபேயரிடத்தில்  விற்றுப்போடுவார்கள்;  கர்த்தர்  இதைச்  சொன்னார்.  (யோவேல்  3:8)

ungga'l  kumaararaiyum  ungga'l  kumaaraththiga'laiyum  yoothaa  puththirarin  kaiyilea  vi’rpean;  ivarga'l  avarga'laith  thooratheasaththaaraagiya  sabeayaridaththil  vit’ruppoaduvaarga'l;  karththar  ithaich  sonnaar.  (yoaveal  3:8)

இதைப்  புறஜாதிகளுக்குள்ளே  கூறுங்கள்;  யுத்தத்துக்கு  ஆயத்தம்பண்ணுங்கள்,  பராக்கிரமசாலிகளை  எழுப்புங்கள்;  யுத்தவீரர்  எல்லாரும்  சேர்ந்து  ஏறிவரக்கடவர்கள்.  (யோவேல்  3:9)

ithaip  pu’rajaathiga'lukku'l'lea  koo’rungga'l;  yuththaththukku  aayaththampa'n'nungga'l,  baraakkiramasaaliga'lai  ezhuppungga'l;  yuththaveerar  ellaarum  searnthu  ea’rivarakkadavarga'l.  (yoaveal  3:9)

உங்கள்  மண்வெட்டிகளைப்  பட்டயங்களாகவும்,  உங்கள்  அரிவாள்களை  ஈட்டிகளாகவும்  அடியுங்கள்;  பலவீனனும்  தன்னைப்  பலவான்  என்று  சொல்வானாக.  (யோவேல்  3:10)

ungga'l  ma'nvettiga'laip  pattayangga'laagavum,  ungga'l  arivaa'lga'lai  eettiga'laagavum  adiyungga'l;  balaveenanum  thannaip  balavaan  en’ru  solvaanaaga.  (yoaveal  3:10)

சகல  ஜாதிகளே,  நீங்கள்  சுற்றிலுமிருந்து  ஏகமாய்  வந்து  கூடுங்கள்;  கர்த்தாவே,  நீரும்  அங்கே  உம்முடைய  பராக்கிரமசாலிகளை  இறங்கப்பண்ணுவீராக.  (யோவேல்  3:11)

sagala  jaathiga'lea,  neengga'l  sut’rilumirunthu  eagamaay  vanthu  koodungga'l;  karththaavea,  neerum  anggea  ummudaiya  baraakkiramasaaliga'lai  i’ranggappa'n'nuveeraaga.  (yoaveal  3:11)

ஜாதிகள்  எழும்பி  யோசபாத்தின்  பள்ளத்தாக்குக்கு  வருவார்களாக;  சுற்றிலுமுள்ள  ஜாதிகளை  நியாயந்தீர்க்க  அங்கே  நான்  வீற்றிருப்பேன்.  (யோவேல்  3:12)

jaathiga'l  ezhumbi  yoasapaaththin  pa'l'laththaakkukku  varuvaarga'laaga;  sut’rilumu'l'la  jaathiga'lai  niyaayantheerkka  anggea  naan  veet’riruppean.  (yoaveal  3:12)

பயிர்  முதிர்ந்தது,  அரிவாளை  நீட்டி  அறுங்கள்,  வந்து  இறங்குங்கள்;  ஆலை  நிரம்பியிருக்கிறது,  ஆலையின்  தொட்டிகள்  வழிந்தோடுகிறது;  அவர்களுடைய  பாதகம்  பெரியது.  (யோவேல்  3:13)

payir  muthirnthathu,  arivaa'lai  neetti  a’rungga'l,  vanthu  i’ranggungga'l;  aalai  nirambiyirukki’rathu,  aalaiyin  thottiga'l  vazhinthoadugi’rathu;  avarga'ludaiya  paathagam  periyathu.  (yoaveal  3:13)

நியாயத்தீர்ப்பின்  பள்ளத்தாக்கிலே  ஜனங்கள்  திரள்திரளாய்  இருக்கிறார்கள்;  நியாயத்தீர்ப்பின்  பள்ளத்தாக்கிலே  கர்த்தரின்  நாள்  சமீபமாயிருக்கிறது.  (யோவேல்  3:14)

niyaayaththeerppin  pa'l'laththaakkilea  janangga'l  thira'lthira'laay  irukki’raarga'l;  niyaayaththeerppin  pa'l'laththaakkilea  karththarin  naa'l  sameebamaayirukki’rathu.  (yoaveal  3:14)

சூரியனும்  சந்திரனும்  இருண்டுபோகும்,  நட்சத்திரங்கள்  ஒளிமழுங்கும்.  (யோவேல்  3:15)

sooriyanum  santhiranum  iru'ndupoagum,  nadchaththirangga'l  o'limazhunggum.  (yoaveal  3:15)

கர்த்தர்  சீயோனிலிருந்து  கெர்ச்சித்து,  எருசலேமிலிருந்து  சத்தமிடுவார்;  வானமும்  பூமியும்  அதிரும்;  ஆனாலும்  கர்த்தர்  தமது  ஜனத்துக்கு  அடைக்கலமும்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  அரணான  கோட்டையுமாயிருப்பார்.  (யோவேல்  3:16)

karththar  seeyoanilirunthu  kerchchiththu,  erusaleamilirunthu  saththamiduvaar;  vaanamum  boomiyum  athirum;  aanaalum  karththar  thamathu  janaththukku  adaikkalamum  israveal  puththirarukku  ara'naana  koattaiyumaayiruppaar.  (yoaveal  3:16)

என்  பரிசுத்த  பர்வதமாகிய  சீயோனிலே  வாசமாயிருக்கிற  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வீர்கள்;  அப்பொழுது  எருசலேம்  பரிசுத்தமாயிருக்கும்;  அந்நியர்  இனி  அதைக்  கடந்துபோவதில்லை.  (யோவேல்  3:17)

en  parisuththa  parvathamaagiya  seeyoanilea  vaasamaayirukki’ra  naan  ungga'l  theavanaagiya  karththar  en’ru  appozhuthu  a’rinthuko'lveerga'l;  appozhuthu  erusaleam  parisuththamaayirukkum;  anniyar  ini  athaik  kadanthupoavathillai.  (yoaveal  3:17)

அக்காலத்தில்  பர்வதங்கள்  திராட்சரசத்தைப்  பொழியும்,  மலைகள்  பாலாய்  ஓடும்,  யூதாவின்  ஆறுகள்  எல்லாம்  பிரவாகித்து  ஓடும்;  ஒரு  ஊற்று  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  புறப்பட்டுச்  சித்தீம்  என்னும்  பள்ளத்தாக்கை  நீர்ப்பாய்ச்சலாக்கும்.  (யோவேல்  3:18)

akkaalaththil  parvathangga'l  thiraadcharasaththaip  pozhiyum,  malaiga'l  paalaay  oadum,  yoothaavin  aa’ruga'l  ellaam  piravaagiththu  oadum;  oru  oot’ru  karththarudaiya  aalayaththilirunthu  pu’rappattuch  siththeem  ennum  pa'l'laththaakkai  neerppaaychchalaakkum.  (yoaveal  3:18)

யூதா  புத்திரரின்  தேசத்திலே  குற்றமில்லாத  இரத்தத்தைச்  சிந்தி,  அவர்களுக்குச்  செய்த  கொடுமையினிமித்தம்  எகிப்து  பாழாய்ப்போகும்,  ஏதோம்  பாழான  வனாந்தரமாகும்.  (யோவேல்  3:19)

yoothaa  puththirarin  theasaththilea  kut’ramillaatha  iraththaththaich  sinthi,  avarga'lukkuch  seytha  kodumaiyinimiththam  egipthu  paazhaayppoagum,  eathoam  paazhaana  vanaantharamaagum.  (yoaveal  3:19)

ஆனால்  யூதாவோ  சதாகாலமாகவும்,  எருசலேம்  தலைமுறை  தலைமுறையாகவும்  குடியேற்றப்பட்டிருக்கும்.  (யோவேல்  3:20)

aanaal  yoothaavoa  sathaakaalamaagavum,  erusaleam  thalaimu’rai  thalaimu’raiyaagavum  kudiyeat’rappattirukkum.  (yoaveal  3:20)

நான்  தண்டியாமல்  விட்டிருந்த  அவர்களுடைய  இரத்தப்பழியைத்  தண்டியாமல்  விடேன்;  கர்த்தர்  சீயோனிலே  வாசமாயிருக்கிறார்.  (யோவேல்  3:21)

naan  tha'ndiyaamal  vittiruntha  avarga'ludaiya  iraththappazhiyaith  tha'ndiyaamal  videan;  karththar  seeyoanilea  vaasamaayirukki’raar.  (yoaveal  3:21)


Yoaveal 2 | யோவேல் 2 | Joel 2



சீயோனிலே  எக்காளம்  ஊதுங்கள்,  என்  பரிசுத்த  பர்வதத்திலே  எச்சரிப்பின்  சத்தமிடுங்கள்;  தேசத்தின்  குடிகள்  எல்லாம்  தத்தளிக்கக்கடவர்கள்;  ஏனெனில்  கர்த்தருடைய  நாள்  வருகிறது,  அது  சமீபமாயிருக்கிறது.  (யோவேல்  2:1)

seeyoanilea  ekkaa'lam  oothungga'l,  en  parisuththa  parvathaththilea  echcharippin  saththamidungga'l;  theasaththin  kudiga'l  ellaam  thaththa'likkakkadavarga'l;  eanenil  karththarudaiya  naa'l  varugi’rathu,  athu  sameebamaayirukki’rathu.  (yoaveal  2:1)

அது  இருளும்  அந்தகாரமுமான  நாள்;  அது  மப்பும்  மந்தாரமுமான  நாள்;  விடியற்கால  வெளுப்பு  பர்வதங்களின்மேல்  பரவுகிறதுபோல  ஏராளமான  பலத்த  ஒரு  ஜாதி  தீவிரமாக  வந்து  பரவும்;  அப்படிப்பட்டது  முன்  ஒரு  காலத்திலும்  உண்டானதுமில்லை,  இனித்  தலைமுறை  தலைமுறையாக  வரும்  வருஷங்களிலும்  உண்டாவதுமில்லை.  (யோவேல்  2:2)

athu  iru'lum  anthagaaramumaana  naa'l;  athu  mappum  manthaaramumaana  naa'l;  vidiya’rkaala  ve'luppu  parvathangga'linmeal  paravugi’rathupoala  earaa'lamaana  balaththa  oru  jaathi  theeviramaaga  vanthu  paravum;  appadippattathu  mun  oru  kaalaththilum  u'ndaanathumillai,  inith  thalaimu’rai  thalaimu’raiyaaga  varum  varushangga'lilum  u'ndaavathumillai.  (yoaveal  2:2)

அவைகளுக்கு  முன்னாக  அக்கினி  பட்சிக்கும்,  அவைகளுக்குப்  பின்னாக  ஜுவாலை  எரிக்கும்;  அவைகளுக்கு  முன்னாகத்  தேசம்  ஏதேன்  தோட்டத்தைப்போலவும்,  அவைகளுக்குப்  பின்னாகப்  பாழான  வனாந்தரத்தைப்போலவும்  இருக்கும்;  அவைகளுக்கு  ஒன்றும்  தப்பிப்போவதில்லை.  (யோவேல்  2:3)

avaiga'lukku  munnaaga  akkini  padchikkum,  avaiga'lukkup  pinnaaga  juvaalai  erikkum;  avaiga'lukku  munnaagath  theasam  eathean  thoattaththaippoalavum,  avaiga'lukkup  pinnaagap  paazhaana  vanaantharaththaippoalavum  irukkum;  avaiga'lukku  on’rum  thappippoavathillai.  (yoaveal  2:3)

அவைகளின்  சாயல்  குதிரைகளின்  சாயலை  ஒத்தது;  அவைகள்  குதிரை  வீரரைப்போல  ஓடும்.  (யோவேல்  2:4)

avaiga'lin  saayal  kuthiraiga'lin  saayalai  oththathu;  avaiga'l  kuthirai  veeraraippoala  oadum.  (yoaveal  2:4)

அவைகள்  ஓடுகிற  இரதங்களின்  இரைச்சல்போலவும்,  செத்தைகளை  எரிக்கிற  அக்கினிஜுவாலையின்  இரைச்சல்போலவும்,  யுத்தத்துக்கு  ஆயத்தப்பட்ட  பலத்த  ஜனத்தின்  இரைச்சல்போலவும்,  பர்வதங்களுடைய  சிகரங்களின்மேல்  குதிக்கும்.  (யோவேல்  2:5)

avaiga'l  oadugi’ra  irathangga'lin  iraichchalpoalavum,  seththaiga'lai  erikki’ra  akkinijuvaalaiyin  iraichchalpoalavum,  yuththaththukku  aayaththappatta  balaththa  janaththin  iraichchalpoalavum,  parvathangga'ludaiya  sigarangga'linmeal  kuthikkum.  (yoaveal  2:5)

அவைகளுக்கு  முன்பாக  ஜனங்கள்  நடுங்குவார்கள்;  எல்லா  முகங்களும்  கருகிப்போகும்.  (யோவேல்  2:6)

avaiga'lukku  munbaaga  janangga'l  nadungguvaarga'l;  ellaa  mugangga'lum  karugippoagum.  (yoaveal  2:6)

அவைகள்  பராக்கிரமசாலிகளைப்போல  ஓடும்;  யுத்தவீரரைப்போல  மதிலேறும்;  வரிசைகள்  பிசகாமல்,  ஒவ்வொன்றும்  தன்  தன்  அணியிலே  செல்லும்.  (யோவேல்  2:7)

avaiga'l  baraakkiramasaaliga'laippoala  oadum;  yuththaveeraraippoala  mathilea’rum;  varisaiga'l  pisagaamal,  ovvon’rum  than  than  a'niyilea  sellum.  (yoaveal  2:7)

ஒன்றை  ஒன்று  நெருக்காது;  ஒவ்வொன்றும்  தன்  தன்  பாதையிலே  செல்லும்;  அவைகள்  ஆயுதங்களுக்குள்  விழுந்தாலும்  காயம்படாமற்போகும்.  (யோவேல்  2:8)

on’rai  on’ru  nerukkaathu;  ovvon’rum  than  than  paathaiyilea  sellum;  avaiga'l  aayuthangga'lukku'l  vizhunthaalum  kaayampadaama’rpoagum.  (yoaveal  2:8)

அவைகள்  பட்டணம்  எங்கும்  செல்லும்;  மதிலின்மேல்  ஓடும்,  வீடுகளின்மேல்  ஏறும்;  பலகணிவழியாய்த்  திருடனைப்போல  உள்ளே  நுழையும்.  (யோவேல்  2:9)

avaiga'l  patta'nam  enggum  sellum;  mathilinmeal  oadum,  veeduga'linmeal  ea’rum;  palaga'nivazhiyaayth  thirudanaippoala  u'l'lea  nuzhaiyum.  (yoaveal  2:9)

அவைகளுக்கு  முன்பாகப்  பூமி  அதிரும்;  வானங்கள்  அசையும்;  சூரியனும்  சந்திரனும்  இருண்டுபோகும்;  நட்சத்திரங்கள்  ஒளி  மழுங்கும்.  (யோவேல்  2:10)

avaiga'lukku  munbaagap  boomi  athirum;  vaanangga'l  asaiyum;  sooriyanum  santhiranum  iru'ndupoagum;  nadchaththirangga'l  o'li  mazhunggum.  (yoaveal  2:10)

கர்த்தர்  தமது  சேனைக்குமுன்  சத்தமிடுவார்;  அவருடைய  பாளயம்  மகா  பெரிது,  அவருடைய  வார்த்தையின்படி  செய்கிறதற்கு  வல்லமையுள்ளது;  கர்த்தருடைய  நாள்  பெரிதும்  மகா  பயங்கரமுமாயிருக்கும்;  அதைச்  சகிக்கிறவன்  யார்?  (யோவேல்  2:11)

karththar  thamathu  seanaikkumun  saththamiduvaar;  avarudaiya  paa'layam  mahaa  perithu,  avarudaiya  vaarththaiyinpadi  seygi’ratha’rku  vallamaiyu'l'lathu;  karththarudaiya  naa'l  perithum  mahaa  bayanggaramumaayirukkum;  athaich  sagikki’ravan  yaar?  (yoaveal  2:11)

ஆதலால்  நீங்கள்  இப்பொழுதே  உபவாசத்தோடும்  அழுகையோடும்  புலம்பலோடும்  உங்கள்  முழு  இருதயத்தோடும்  என்னிடத்தில்  திரும்புங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (யோவேல்  2:12)

aathalaal  neengga'l  ippozhuthea  ubavaasaththoadum  azhugaiyoadum  pulambaloadum  ungga'l  muzhu  iruthayaththoadum  ennidaththil  thirumbungga'l  en’ru  karththar  sollugi’raar.  (yoaveal  2:12)

நீங்கள்  உங்கள்  வஸ்திரங்களையல்ல,  உங்கள்  இருதயங்களைக்  கிழித்து,  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  இடத்தில்  திரும்புங்கள்;  அவர்  இரக்கமும்,  மன  உருக்கமும்,  நீடிய  சாந்தமும்,  மிகுந்த  கிருபையுமுள்ளவர்;  அவர்  தீங்குக்கு  மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.  (யோவேல்  2:13)

neengga'l  ungga'l  vasthirangga'laiyalla,  ungga'l  iruthayangga'laik  kizhiththu,  ungga'l  theavanaagiya  karththar  idaththil  thirumbungga'l;  avar  irakkamum,  mana  urukkamum,  neediya  saanthamum,  miguntha  kirubaiyumu'l'lavar;  avar  theenggukku  manasthaabappadugi’ravarumaayirukki’raar.  (yoaveal  2:13)

ஒருவேளை  அவர்  திரும்பி  மனஸ்தாபப்பட்டு,  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  போஜனபலிகளையும்  பானபலிகளையும்  செலுத்துகிறதற்கான  ஆசீர்வாதத்தைத்  தந்தருளுவார்.  (யோவேல்  2:14)

oruvea'lai  avar  thirumbi  manasthaabappattu,  ungga'l  theavanaagiya  karththarukkup  poajanabaliga'laiyum  baanabaliga'laiyum  seluththugi’ratha’rkaana  aaseervaathaththaith  thantharu'luvaar.  (yoaveal  2:14)

சீயோனிலே  எக்காளம்  ஊதுங்கள்,  பரிசுத்த  உபவாசநாளை  நியமியுங்கள்,  விசேஷித்த  ஆசரிப்பைக்  கூறுங்கள்.  (யோவேல்  2:15)

seeyoanilea  ekkaa'lam  oothungga'l,  parisuththa  ubavaasanaa'lai  niyamiyungga'l,  viseashiththa  aasarippaik  koo’rungga'l.  (yoaveal  2:15)

ஜனத்தைக்  கூட்டுங்கள்,  சபையைப்  பரிசுத்தப்படுத்துங்கள்;  முதியோரைச்  சேருங்கள்,  பிள்ளைகளையும்  பாலுண்கிற  குழந்தைகளையும்  கூட்டுங்கள்;  மணவாளன்  தன்  அறையையும்,  மணவாட்டி  தன்  மறைவையும்  விட்டுப்  புறப்படுவார்களாக.  (யோவேல்  2:16)

janaththaik  koottungga'l,  sabaiyaip  parisuththappaduththungga'l;  muthiyoaraich  searungga'l,  pi'l'laiga'laiyum  paalu'ngi’ra  kuzhanthaiga'laiyum  koottungga'l;  ma'navaa'lan  than  a’raiyaiyum,  ma'navaatti  than  ma’raivaiyum  vittup  pu’rappaduvaarga'laaga.  (yoaveal  2:16)

கர்த்தரின்  பணிவிடைக்காரராகிய  ஆசாரியர்கள்  மண்டபத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  அழுது:  கர்த்தாவே,  நீர்  உமது  ஜனத்தைத்  தப்பவிட்டுப்  புறஜாதிகள்  அவர்களைப்  பழிக்கும்  நிந்தைக்கு  உமது  சுதந்தரத்தை  ஒப்புக்கொடாதிரும்;  உங்கள்  தேவன்  எங்கே  என்று  புறஜாதிகளுக்குள்ளே  சொல்லப்படுவானேன்  என்பார்களாக.  (யோவேல்  2:17)

karththarin  pa'nividaikkaararaagiya  aasaariyarga'l  ma'ndabaththukkum  balipeedaththukkum  naduvea  azhuthu:  karththaavea,  neer  umathu  janaththaith  thappavittup  pu’rajaathiga'l  avarga'laip  pazhikkum  ninthaikku  umathu  suthantharaththai  oppukkodaathirum;  ungga'l  theavan  enggea  en’ru  pu’rajaathiga'lukku'l'lea  sollappaduvaanean  enbaarga'laaga.  (yoaveal  2:17)

அப்பொழுது  கர்த்தர்  தமது  தேசத்துக்காக  வைராக்கியங்கொண்டு,  தமது  ஜனத்தைக்  கடாட்சிப்பார்.  (யோவேல்  2:18)

appozhuthu  karththar  thamathu  theasaththukkaaga  vairaakkiyangko'ndu,  thamathu  janaththaik  kadaadchippaar.  (yoaveal  2:18)

கர்த்தர்  மறுமொழி  கொடுத்து,  தமது  ஜனத்தை  நோக்கி:  இதோ,  நான்  உங்களை  இனிப்  புறஜாதிகளுக்குள்ளே  நிந்தையாக  வைக்காமல்,  உங்களுக்குத்  தானியத்தையும்  திராட்சரசத்தையும்  எண்ணெயையும்  கொடுத்தேன்,  நீங்கள்  அதினால்  திருப்தியாவீர்கள்.  (யோவேல்  2:19)

karththar  ma’rumozhi  koduththu,  thamathu  janaththai  noakki:  ithoa,  naan  ungga'lai  inip  pu’rajaathiga'lukku'l'lea  ninthaiyaaga  vaikkaamal,  ungga'lukkuth  thaaniyaththaiyum  thiraadcharasaththaiyum  e'n'neyaiyum  koduththean,  neengga'l  athinaal  thirupthiyaaveerga'l.  (yoaveal  2:19)

வடதிசைச்சேனையை  உங்களுக்குத்  தூரமாக  விலக்கி,  அதின்  முன்தண்டு  கீழ்க்கடலுக்கும்,  அதின்  பின்தண்டு  மேற்கடலுக்கும்  நேராக  அதை  வறட்சியும்  பாழுமான  தேசத்துக்குத்  துரத்திவிடுவேன்;  அங்கே  அதின்  நாற்றம்  எழும்பி,  அதின்  துர்க்கந்தம்  வீசும்;  அது  பெரிய  காரியங்களைச்  செய்தது.  (யோவேல்  2:20)

vadathisaichseanaiyai  ungga'lukkuth  thooramaaga  vilakki,  athin  muntha'ndu  keezhkkadalukkum,  athin  pintha'ndu  mea’rkadalukkum  nearaaga  athai  va’radchiyum  paazhumaana  theasaththukkuth  thuraththividuvean;  anggea  athin  naat’ram  ezhumbi,  athin  thurkkantham  veesum;  athu  periya  kaariyangga'laich  seythathu.  (yoaveal  2:20)

தேசமே,  பயப்படாதே,  மகிழ்ந்து  களிகூரு;  கர்த்தர்  பெரிய  காரியங்களைச்  செய்வார்.  (யோவேல்  2:21)

theasamea,  bayappadaathea,  magizhnthu  ka'likooru;  karththar  periya  kaariyangga'laich  seyvaar.  (yoaveal  2:21)

வெளியின்  மிருகங்களே,  பயப்படாதேயுங்கள்;  வனாந்தரத்திலே  மேய்ச்சல்கள்  உண்டாகும்;  விருட்சங்கள்  காய்களைக்  காய்க்கும்;  அத்திமரமும்  திராட்சச்செடியும்  பலனைத்  தரும்.  (யோவேல்  2:22)

ve'liyin  mirugangga'lea,  bayappadaatheayungga'l;  vanaantharaththilea  meaychchalga'l  u'ndaagum;  virudchangga'l  kaayga'laik  kaaykkum;  aththimaramum  thiraadchachsediyum  palanaith  tharum.  (yoaveal  2:22)

சீயோன்  குமாரரே,  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குள்  மகிழ்ந்து  களிகூருங்கள்;  அவர்  தக்கபடி  உங்களுக்கு  முன்மாரியைக்  கொடுத்து,  உங்களுக்கு  முன்மாரியையும்  பின்மாரியையும்  ஏற்கனவே  வருஷிக்கப்பண்ணுவார்.  (யோவேல்  2:23)

seeyoan  kumaararea,  ungga'l  theavanaagiya  karththarukku'l  magizhnthu  ka'likoorungga'l;  avar  thakkapadi  ungga'lukku  munmaariyaik  koduththu,  ungga'lukku  munmaariyaiyum  pinmaariyaiyum  ea’rkanavea  varushikkappa'n'nuvaar.  (yoaveal  2:23)

களங்கள்  தானியத்தினால்  நிரம்பும்;  ஆலைகளில்  திராட்சரசமும்  எண்ணெயும்  வழிந்தோடும்.  (யோவேல்  2:24)

ka'langga'l  thaaniyaththinaal  nirambum;  aalaiga'lil  thiraadcharasamum  e'n'neyum  vazhinthoadum.  (yoaveal  2:24)

நான்  உங்களிடத்தில்  அனுப்பின  என்  பெரிய  சேனையாகிய  வெட்டுக்கிளிகளும்,  பச்சைக்கிளிகளும்,  முசுக்கட்டைப்  பூச்சிகளும்,  பச்சைப்  புழுக்களும்  பட்சித்த  வருஷங்களின்  விளைவை  உங்களுக்குத்  திரும்ப  அளிப்பேன்.  (யோவேல்  2:25)

naan  ungga'lidaththil  anuppina  en  periya  seanaiyaagiya  vettukki'liga'lum,  pachchaikki'liga'lum,  musukkattaip  poochchiga'lum,  pachchaip  puzhukka'lum  padchiththa  varushangga'lin  vi'laivai  ungga'lukkuth  thirumba  a'lippean.  (yoaveal  2:25)

நீங்கள்  சம்பூரணமாகச்  சாப்பிட்டு,  திருப்தியடைந்து,  உங்களை  அதிசயமாய்  நடத்திவந்த  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைத்  துதிப்பீர்கள்;  என்  ஜனங்கள்  ஒருபோதும்  வெட்கப்பட்டுப்போவதில்லை.  (யோவேல்  2:26)

neengga'l  sampoora'namaagach  saappittu,  thirupthiyadainthu,  ungga'lai  athisayamaay  nadaththivantha  ungga'l  theavanaagiya  karththarudaiya  naamaththaith  thuthippeerga'l;  en  janangga'l  orupoathum  vedkappattuppoavathillai.  (yoaveal  2:26)

நான்  இஸ்ரவேலின்  நடுவில்  இருக்கிறவரென்றும்,  நானே  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்,  வேறொருவர்  இல்லையென்றும்  அறிந்துகொள்வீர்கள்;  என்  ஜனங்கள்  ஒருபோதும்  வெட்கப்பட்டுப்போவதில்லை.  (யோவேல்  2:27)

naan  isravealin  naduvil  irukki’ravaren’rum,  naanea  ungga'l  theavanaagiya  karththar,  vea’roruvar  illaiyen’rum  a’rinthuko'lveerga'l;  en  janangga'l  orupoathum  vedkappattuppoavathillai.  (yoaveal  2:27)

அதற்குப்  பின்பு  நான்  மாம்சமான  யாவர்மேலும்  என்  ஆவியை  ஊற்றுவேன்;  அப்பொழுது  உங்கள்  குமாரரும்  உங்கள்  குமாரத்திகளும்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுவார்கள்;  உங்கள்  மூப்பர்  சொப்பனங்களையும்,  உங்கள்  வாலிபர்  தரிசனங்களையும்  காண்பார்கள்.  (யோவேல்  2:28)

atha’rkup  pinbu  naan  maamsamaana  yaavarmealum  en  aaviyai  oot’ruvean;  appozhuthu  ungga'l  kumaararum  ungga'l  kumaaraththiga'lum  theerkkatharisanagn  solluvaarga'l;  ungga'l  mooppar  soppanangga'laiyum,  ungga'l  vaalibar  tharisanangga'laiyum  kaa'nbaarga'l.  (yoaveal  2:28)

ஊழியக்காரர்மேலும்  ஊழியக்காரிகள்மேலும்,  அந்நாட்களிலே  என்  ஆவியை  ஊற்றுவேன்.  (யோவேல்  2:29)

oozhiyakkaararmealum  oozhiyakkaariga'lmealum,  annaadka'lilea  en  aaviyai  oot’ruvean.  (yoaveal  2:29)

வானத்திலும்  பூமியிலும்  இரத்தம்  அக்கினி  புகைஸ்தம்பங்களாகிய  அதிசயங்களைக்  காட்டுவேன்.  (யோவேல்  2:30)

vaanaththilum  boomiyilum  iraththam  akkini  pugaisthambangga'laagiya  athisayangga'laik  kaattuvean.  (yoaveal  2:30)

கர்த்தருடைய  பெரிதும்  பயங்கரமுமான  நாள்  வருமுன்னே  சூரியன்  இருளாகவும்,  சந்திரன்  இரத்தமாகவும்  மாறும்.  (யோவேல்  2:31)

karththarudaiya  perithum  bayanggaramumaana  naa'l  varumunnea  sooriyan  iru'laagavum,  santhiran  iraththamaagavum  maa’rum.  (yoaveal  2:31)

அப்பொழுது  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிறவனெவனோ  அவன்  இரட்சிக்கப்படுவான்;  கர்த்தர்  சொன்னபடி,  சீயோன்  பர்வதத்திலும்  எருசலேமிலும்  கர்த்தர்  வரவழைக்கும்  மீதியாயிருப்பவர்களிடத்திலும்  இரட்சிப்பு  உண்டாயிருக்கும்.  (யோவேல்  2:32)

appozhuthu  karththarudaiya  naamaththaith  thozhuthuko'l'lugi’ravanevanoa  avan  iradchikkappaduvaan;  karththar  sonnapadi,  seeyoan  parvathaththilum  erusaleamilum  karththar  varavazhaikkum  meethiyaayiruppavarga'lidaththilum  iradchippu  u'ndaayirukkum.  (yoaveal  2:32)