Showing posts with label 1 Yohanes. Show all posts
Showing posts with label 1 Yohanes. Show all posts

Monday, May 23, 2016

1 Yoavaan 5 | 1 யோவான் 5 | 1 John 5

இயேசுவானவரே  கிறிஸ்து  என்று  விசுவாசிக்கிற  எவனும்  தேவனால்  பிறந்திருக்கிறான்;  பிறப்பித்தவரிடத்தில்  அன்புகூருகிற  எவனும்  அவரால்  பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும்  அன்புகூருகிறான்.  (1யோவான்  5:1)

iyeasuvaanavarea  ki’risthu  en’ru  visuvaasikki’ra  evanum  theavanaal  pi’ranthirukki’raan;  pi’rappiththavaridaththil  anbukoorugi’ra  evanum  avaraal  pi’rappikkappattavanidaththilum  anbukoorugi’raan.  (1yoavaan  5:1)

நாம்  தேவனிடத்தில்  அன்புகூர்ந்து  அவருடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளும்போது,  தேவனுடைய  பிள்ளைகளிடத்தில்  அன்புகூருகிறோமென்று  அறிந்துகொள்ளுகிறோம்.  (1யோவான்  5:2)

naam  theavanidaththil  anbukoornthu  avarudaiya  ka’rpanaiga'laik  kaikko'l'lumpoathu,  theavanudaiya  pi'l'laiga'lidaththil  anbukoorugi’roamen’ru  a’rinthuko'l'lugi’roam.  (1yoavaan  5:2)

நாம்  தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்வதே  அவரிடத்தில்  அன்புகூருவதாம்;  அவருடைய  கற்பனைகள்  பாரமானவைகளுமல்ல.  (1யோவான்  5:3)

naam  theavanudaiya  ka’rpanaiga'laik  kaikko'lvathea  avaridaththil  anbukooruvathaam;  avarudaiya  ka’rpanaiga'l  baaramaanavaiga'lumalla.  (1yoavaan  5:3)

தேவனால்  பிறப்பதெல்லாம்  உலகத்தை  ஜெயிக்கும்;  நம்முடைய  விசுவாசமே  உலகத்தை  ஜெயிக்கிற  ஜெயம்.  (1யோவான்  5:4)

theavanaal  pi’rappathellaam  ulagaththai  jeyikkum;  nammudaiya  visuvaasamea  ulagaththai  jeyikki’ra  jeyam.  (1yoavaan  5:4)

இயேசுவானவர்  தேவனுடைய  குமாரனென்று  விசுவாசிக்கிறவனேயன்றி  உலகத்தை  ஜெயிக்கிறவன்  யார்?  (1யோவான்  5:5)

iyeasuvaanavar  theavanudaiya  kumaaranen’ru  visuvaasikki’ravaneayan’ri  ulagaththai  jeyikki’ravan  yaar?  (1yoavaan  5:5)

இயேசுகிறிஸ்துவாகிய  இவரே  ஜலத்தினாலும்  இரத்தத்தினாலும்  வந்தவர்;  ஜலத்தினாலே  மாத்திரமல்ல,  ஜலத்தினாலும்  இரத்தத்தினாலும்  வந்தவர்.  ஆவியானவர்  சத்தியமாகையால்,  ஆவியானவரே  சாட்சிகொடுக்கிறவர்.  (1யோவான்  5:6)

iyeasuki’risthuvaagiya  ivarea  jalaththinaalum  iraththaththinaalum  vanthavar;  jalaththinaalea  maaththiramalla,  jalaththinaalum  iraththaththinaalum  vanthavar.  aaviyaanavar  saththiyamaagaiyaal,  aaviyaanavarea  saadchikodukki’ravar.  (1yoavaan  5:6)

[பரலோகத்திலே  சாட்சியிடுகிறவர்கள்  மூவர்,  பிதா,  வார்த்தை,  பரிசுத்தஆவி  என்பவர்களே,  இம்மூவரும்  ஒன்றாயிருக்கிறார்கள்;  (1யோவான்  5:7)

paraloagaththilea  saadchiyidugi’ravarga'l  moovar,  pithaa,  vaarththai,  parisuththaaavi  enbavarga'lea,  immoovarum  on’raayirukki’raarga'l;  (1yoavaan  5:7)

பூலோகத்திலே]  சாட்சியிடுகிறவைகள்  மூன்று,  ஆவி,  ஜலம்,  இரத்தம்  என்பவைகளே,  இம்மூன்றும்  ஒருமைப்பட்டிருக்கிறது.  (1யோவான்  5:8)

booloagaththilea  saadchiyidugi’ravaiga'l  moon’ru,  aavi,  jalam,  iraththam  enbavaiga'lea,  immoon’rum  orumaippattirukki’rathu.  (1yoavaan  5:8)

நாம்  மனுஷருடைய  சாட்சியை  ஏற்றுக்கொண்டால்,  அதைப்பார்க்கிலும்  தேவனுடைய  சாட்சி  அதிகமாயிருக்கிறது;  தேவன்  தமது  குமாரனைக்குறித்துக்  கொடுத்த  சாட்சி  இதுவே.  (1யோவான்  5:9)

naam  manusharudaiya  saadchiyai  eat’rukko'ndaal,  athaippaarkkilum  theavanudaiya  saadchi  athigamaayirukki’rathu;  theavan  thamathu  kumaaranaikku’riththuk  koduththa  saadchi  ithuvea.  (1yoavaan  5:9)

தேவனுடைய  குமாரனிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவன்  அந்தச்  சாட்சியைத்  தனக்குள்ளே  கொண்டிருக்கிறான்;  தேவனை  விசுவாசியாதவனோ,  தேவன்  தம்முடைய  குமாரனைக்குறித்துக்  கொடுத்த  சாட்சியை  விசுவாசியாததினால்,  அவரைப்  பொய்யராக்குகிறான்.  (1யோவான்  5:10)

theavanudaiya  kumaaranidaththil  visuvaasamaayirukki’ravan  anthach  saadchiyaith  thanakku'l'lea  ko'ndirukki’raan;  theavanai  visuvaasiyaathavanoa,  theavan  thammudaiya  kumaaranaikku’riththuk  koduththa  saadchiyai  visuvaasiyaathathinaal,  avaraip  poyyaraakkugi’raan.  (1yoavaan  5:10)

தேவன்  நமக்கு  நித்தியஜீவனைத்  தந்திருக்கிறார்,  அந்த  ஜீவன்  அவருடைய  குமாரனில்  இருக்கிறதென்பதே  அந்தச்  சாட்சியாம்.  (1யோவான்  5:11)

theavan  namakku  niththiyajeevanaith  thanthirukki’raar,  antha  jeevan  avarudaiya  kumaaranil  irukki’rathenbathea  anthach  saadchiyaam.  (1yoavaan  5:11)

குமாரனை  உடையவன்  ஜீவனை  உடையவன்,  தேவனுடைய  குமாரன்  இல்லாதவன்  ஜீவன்  இல்லாதவன்.  (1யோவான்  5:12)

kumaaranai  udaiyavan  jeevanai  udaiyavan,  theavanudaiya  kumaaran  illaathavan  jeevan  illaathavan.  (1yoavaan  5:12)

உங்களுக்கு  நித்தியஜீவன்  உண்டென்று  நீங்கள்  அறியவும்,  தேவகுமாரனுடைய  நாமத்தின்மேல்  நீங்கள்  விசுவாசமாயிருக்கவும்,  தேவகுமாரனுடைய  நாமத்தின்மேல்  விசுவாசமாயிருக்கிற  உங்களுக்கு  இவைகளை  எழுதியிருக்கிறேன்.  (1யோவான்  5:13)

ungga'lukku  niththiyajeevan  u'nden’ru  neengga'l  a’riyavum,  theavakumaaranudaiya  naamaththinmeal  neengga'l  visuvaasamaayirukkavum,  theavakumaaranudaiya  naamaththinmeal  visuvaasamaayirukki’ra  ungga'lukku  ivaiga'lai  ezhuthiyirukki’rean.  (1yoavaan  5:13)

நாம்  எதையாகிலும்  அவருடைய  சித்தத்தின்படி  கேட்டால்,  அவர்  நமக்குச்  செவிகொடுக்கிறாரென்பதே  அவரைப்  பற்றி  நாம்  கொண்டிருக்கிற  தைரியம்.  (1யோவான்  5:14)

naam  ethaiyaagilum  avarudaiya  siththaththinpadi  keattaal,  avar  namakkuch  sevikodukki’raarenbathea  avaraip  pat’ri  naam  ko'ndirukki’ra  thairiyam.  (1yoavaan  5:14)

நாம்  எதைக்  கேட்டாலும்,  அவர்  நமக்குச்  செவிகொடுக்கிறாரென்று  நாம்  அறிந்திருந்தோமானால்,  அவரிடத்தில்  நாம்  கேட்டவைகளைப்  பெற்றுக்கொண்டோமென்றும்  அறிந்திருக்கிறோம்.  (1யோவான்  5:15)

naam  ethaik  keattaalum,  avar  namakkuch  sevikodukki’raaren’ru  naam  a’rinthirunthoamaanaal,  avaridaththil  naam  keattavaiga'laip  pet’rukko'ndoamen’rum  a’rinthirukki’roam.  (1yoavaan  5:15)

மரணத்துக்கு  ஏதுவல்லாத  பாவத்தைத்  தன்  சகோதரன்  செய்ய  ஒருவன்  கண்டால்,  அவன்  வேண்டுதல்செய்யக்கடவன்,  அப்பொழுது  அவனுக்கு  ஜீவனைக்  கொடுப்பார்;  யாருக்கென்றால்,  மரணத்துக்கு  ஏதுவல்லாத  பாவத்தைச்  செய்தவர்களுக்கே;  மரணத்துக்கு  ஏதுவான  பாவமுண்டு,  அதைக்குறித்து  வேண்டுதல்செய்ய  நான்  சொல்லேன்.  (1யோவான்  5:16)

mara'naththukku  eathuvallaatha  paavaththaith  than  sagoatharan  seyya  oruvan  ka'ndaal,  avan  vea'nduthalseyyakkadavan,  appozhuthu  avanukku  jeevanaik  koduppaar;  yaarukken’raal,  mara'naththukku  eathuvallaatha  paavaththaich  seythavarga'lukkea;  mara'naththukku  eathuvaana  paavamu'ndu,  athaikku’riththu  vea'nduthalseyya  naan  sollean.  (1yoavaan  5:16)

அநீதியெல்லாம்  பாவந்தான்;  என்றாலும்  மரணத்துக்கு  ஏதுவல்லாத  பாவமுமுண்டு.  (1யோவான்  5:17)

aneethiyellaam  paavanthaan;  en’raalum  mara'naththukku  eathuvallaatha  paavamumu'ndu.  (1yoavaan  5:17)

தேவனால்  பிறந்த  எவனும்  பாவஞ்செய்யானென்று  அறிந்திருக்கிறோம்;  தேவனால்  பிறந்தவன்  தன்னைக்  காக்கிறான்,  பொல்லாங்கன்  அவனைத்  தொடான்.  (1யோவான்  5:18)

theavanaal  pi’rantha  evanum  paavagnseyyaanen’ru  a’rinthirukki’roam;  theavanaal  pi’ranthavan  thannaik  kaakki’raan,  pollaanggan  avanaith  thodaan.  (1yoavaan  5:18)

நாம்  தேவனால்  உண்டாயிருக்கிறோமென்றும்,  உலகமுழுவதும்  பொல்லாங்கனுக்குள்  கிடக்கிறதென்றும்  அறிந்திருக்கிறோம்.  (1யோவான்  5:19)

naam  theavanaal  u'ndaayirukki’roamen’rum,  ulagamuzhuvathum  pollaangganukku'l  kidakki’rathen’rum  a’rinthirukki’roam.  (1yoavaan  5:19)

அன்றியும்,  நாம்  சத்தியமுள்ளவரை  அறிந்துகொள்வதற்குத்  தேவனுடைய  குமாரன்  வந்து  நமக்குப்  புத்தியைத்  தந்திருக்கிறாரென்றும்  அறிவோம்;  அவருடைய  குமாரனாகிய  இயேசுகிறிஸ்து  என்னப்பட்ட  சத்தியமுள்ளவருக்குள்ளும்  இருக்கிறோம்;  இவரே  மெய்யான  தேவனும்  நித்தியஜீவனுமாயிருக்கிறார்.  (1யோவான்  5:20)

an’riyum,  naam  saththiyamu'l'lavarai  a’rinthuko'lvatha’rkuth  theavanudaiya  kumaaran  vanthu  namakkup  buththiyaith  thanthirukki’raaren’rum  a’rivoam;  avarudaiya  kumaaranaagiya  iyeasuki’risthu  ennappatta  saththiyamu'l'lavarukku'l'lum  irukki’roam;  ivarea  meyyaana  theavanum  niththiyajeevanumaayirukki’raar.  (1yoavaan  5:20)

பிள்ளைகளே,  நீங்கள்  விக்கிரகங்களுக்கு  விலகி,  உங்களைக்  காத்துக்கொள்வீர்களாக.  ஆமென்.  (1யோவான்  5:21)

pi'l'laiga'lea,  neengga'l  vikkiragangga'lukku  vilagi,  ungga'laik  kaaththukko'lveerga'laaga.  aamen.  (1yoavaan  5:21)


1 Yoavaan 4 | 1 யோவான் 4 | 1 John 4

பிரியமானவர்களே,  உலகத்தில்  அநேகங்  கள்ளத்தீர்க்கதரிசிகள்  தோன்றியிருப்பதினால்,  நீங்கள்  எல்லா  ஆவிகளையும்  நம்பாமல்,  அந்த  ஆவிகள்  தேவனால்  உண்டானவைகளோ  என்று  சோதித்தறியுங்கள்.  (1யோவான்  4:1)

piriyamaanavarga'lea,  ulagaththil  aneagang  ka'l'laththeerkkatharisiga'l  thoan’riyiruppathinaal,  neengga'l  ellaa  aaviga'laiyum  nambaamal,  antha  aaviga'l  theavanaal  u'ndaanavaiga'loa  en’ru  soathiththa’riyungga'l.  (1yoavaan  4:1)

தேவஆவியை  நீங்கள்  எதினாலே  அறியலாமென்றால்:  மாம்சத்தில்  வந்த  இயேசுகிறிஸ்துவை  அறிக்கைபண்ணுகிற  எந்த  ஆவியும்  தேவனால்  உண்டாயிருக்கிறது.  (1யோவான்  4:2)

theavaaaviyai  neengga'l  ethinaalea  a’riyalaamen’raal:  maamsaththil  vantha  iyeasuki’risthuvai  a’rikkaipa'n'nugi’ra  entha  aaviyum  theavanaal  u'ndaayirukki’rathu.  (1yoavaan  4:2)

மாம்சத்தில்  வந்த  இயேசுகிறிஸ்துவை  அறிக்கைபண்ணாத  எந்த  ஆவியும்  தேவனால்  உண்டானதல்ல;  வருமென்று  நீங்கள்  கேள்விப்பட்ட  அந்திக்கிறிஸ்துவினுடைய  ஆவி  அதுவே,  அது  இப்பொழுதும்  உலகத்தில்  இருக்கிறது.  (1யோவான்  4:3)

maamsaththil  vantha  iyeasuki’risthuvai  a’rikkaipa'n'naatha  entha  aaviyum  theavanaal  u'ndaanathalla;  varumen’ru  neengga'l  kea'lvippatta  anthikki’risthuvinudaiya  aavi  athuvea,  athu  ippozhuthum  ulagaththil  irukki’rathu.  (1yoavaan  4:3)

பிள்ளைகளே,  நீங்கள்  தேவனால்  உண்டாயிருந்து,  அவர்களை  ஜெயித்தீர்கள்;  ஏனெனில்  உலகத்திலிருக்கிறவனிலும்  உங்களிலிருக்கிறவர்  பெரியவர்.  (1யோவான்  4:4)

pi'l'laiga'lea,  neengga'l  theavanaal  u'ndaayirunthu,  avarga'lai  jeyiththeerga'l;  eanenil  ulagaththilirukki’ravanilum  ungga'lilirukki’ravar  periyavar.  (1yoavaan  4:4)

அவர்கள்  உலகத்துக்குரியவர்கள்,  ஆகையால்  உலகத்துக்குரியவைகளைப்  பேசுகிறார்கள்,  உலகமும்  அவர்களுக்குச்  செவிகொடுக்கும்.  (1யோவான்  4:5)

avarga'l  ulagaththukkuriyavarga'l,  aagaiyaal  ulagaththukkuriyavaiga'laip  peasugi’raarga'l,  ulagamum  avarga'lukkuch  sevikodukkum.  (1yoavaan  4:5)

நாங்கள்  தேவனால்  உண்டானவர்கள்;  தேவனை  அறிந்தவன்  எங்களுக்குச்  செவிகொடுக்கிறான்;  தேவனால்  உண்டாயிராதவன்  எங்களுக்குச்  செவிகொடுக்கிறதில்லை;  இதினாலே  சத்திய  ஆவி  இன்னதென்றும்,  வஞ்சகஆவி  இன்னதென்றும்  அறிந்திருக்கிறோம்.  (1யோவான்  4:6)

naangga'l  theavanaal  u'ndaanavarga'l;  theavanai  a’rinthavan  engga'lukkuch  sevikodukki’raan;  theavanaal  u'ndaayiraathavan  engga'lukkuch  sevikodukki’rathillai;  ithinaalea  saththiya  aavi  innathen’rum,  vagnchagaaavi  innathen’rum  a’rinthirukki’roam.  (1yoavaan  4:6)

பிரியமானவர்களே,  ஒருவரிலொருவர்  அன்பாயிருக்கக்கடவோம்;  ஏனெனில்  அன்பு  தேவனால்  உண்டாயிருக்கிறது;  அன்புள்ள  எவனும்  தேவனால்  பிறந்து,  அவரை  அறிந்திருக்கிறான்.  (1யோவான்  4:7)

piriyamaanavarga'lea,  oruvariloruvar  anbaayirukkakkadavoam;  eanenil  anbu  theavanaal  u'ndaayirukki’rathu;  anbu'l'la  evanum  theavanaal  pi’ranthu,  avarai  a’rinthirukki’raan.  (1yoavaan  4:7)

அன்பில்லாதவன்  தேவனை  அறியான்;  தேவன்  அன்பாகவே  இருக்கிறார்.  (1யோவான்  4:8)

anbillaathavan  theavanai  a’riyaan;  theavan  anbaagavea  irukki’raar.  (1yoavaan  4:8)

தம்முடைய  ஒரே  பேறான  குமாரனாலே  நாம்  பிழைக்கும்படிக்குத்  தேவன்  அவரை  இவ்வுலகத்திலே  அனுப்பினதினால்  தேவன்  நம்மேல்  வைத்த  அன்பு  வெளிப்பட்டது.  (1யோவான்  4:9)

thammudaiya  orea  pea’raana  kumaaranaalea  naam  pizhaikkumpadikkuth  theavan  avarai  ivvulagaththilea  anuppinathinaal  theavan  nammeal  vaiththa  anbu  ve'lippattathu.  (1yoavaan  4:9)

நாம்  தேவனிடத்தில்  அன்புகூர்ந்ததினால்  அல்ல,  அவர்  நம்மிடத்தில்  அன்புகூர்ந்து,  நம்முடைய  பாவங்களை  நிவிர்த்தி  செய்கிற  கிருபாதாரபலியாகத்  தம்முடைய  குமாரனை  அனுப்பினதினாலே  அன்பு  உண்டாயிருக்கிறது.  (1யோவான்  4:10)

naam  theavanidaththil  anbukoornthathinaal  alla,  avar  nammidaththil  anbukoornthu,  nammudaiya  paavangga'lai  nivirththi  seygi’ra  kirubaathaarabaliyaagath  thammudaiya  kumaaranai  anuppinathinaalea  anbu  u'ndaayirukki’rathu.  (1yoavaan  4:10)

பிரியமானவர்களே,  தேவன்  இவ்விதமாய்  நம்மிடத்தில்  அன்புகூர்ந்திருக்க,  நாமும்  ஒருவரிடத்தில்  ஒருவர்  அன்புகூரக்  கடனாளிகளாயிருக்கிறோம்.  (1யோவான்  4:11)

piriyamaanavarga'lea,  theavan  ivvithamaay  nammidaththil  anbukoornthirukka,  naamum  oruvaridaththil  oruvar  anbukoorak  kadanaa'liga'laayirukki’roam.  (1yoavaan  4:11)

தேவனை  ஒருவரும்  ஒருபோதும்  கண்டதில்லை;  நாம்  ஒருவரிடத்தில்  ஒருவர்  அன்புகூர்ந்தால்  தேவன்  நமக்குள்  நிலைத்திருக்கிறார்;  அவருடைய  அன்பும்  நமக்குள்  பூரணப்படும்.  (1யோவான்  4:12)

theavanai  oruvarum  orupoathum  ka'ndathillai;  naam  oruvaridaththil  oruvar  anbukoornthaal  theavan  namakku'l  nilaiththirukki’raar;  avarudaiya  anbum  namakku'l  poora'nappadum.  (1yoavaan  4:12)

அவர்  தம்முடைய  ஆவியில்  நமக்குத்  தந்தருளினதினாலே  நாம்  அவரிலும்  அவர்  நம்மிலும்  நிலைத்திருக்கிறதை  அறிந்திருக்கிறோம்.  (1யோவான்  4:13)

avar  thammudaiya  aaviyil  namakkuth  thantharu'linathinaalea  naam  avarilum  avar  nammilum  nilaiththirukki’rathai  a’rinthirukki’roam.  (1yoavaan  4:13)

பிதாவானவர்  குமாரனை  உலகரட்சகராக  அனுப்பினாரென்று  நாங்கள்  கண்டு  சாட்சியிடுகிறோம்.  (1யோவான்  4:14)

pithaavaanavar  kumaaranai  ulagaradchagaraaga  anuppinaaren’ru  naangga'l  ka'ndu  saadchiyidugi’roam.  (1yoavaan  4:14)

இயேசுவானவர்  தேவனுடைய  குமாரனென்று  அறிக்கைபண்ணுகிறவன்  எவனோ  அவனில்  தேவன்  நிலைத்திருக்கிறார்,  அவனும்  தேவனில்  நிலைத்திருக்கிறான்.  (1யோவான்  4:15)

iyeasuvaanavar  theavanudaiya  kumaaranen’ru  a’rikkaipa'n'nugi’ravan  evanoa  avanil  theavan  nilaiththirukki’raar,  avanum  theavanil  nilaiththirukki’raan.  (1yoavaan  4:15)

தேவன்  நம்மேல்  வைத்திருக்கிற  அன்பை  நாம்  அறிந்து  விசுவாசித்திருக்கிறோம்.  தேவன்  அன்பாகவே  இருக்கிறார்;  அன்பில்  நிலைத்திருக்கிறவன்  தேவனில்  நிலைத்திருக்கிறான்,  தேவனும்  அவனில்  நிலைத்திருக்கிறார்.  (1யோவான்  4:16)

theavan  nammeal  vaiththirukki’ra  anbai  naam  a’rinthu  visuvaasiththirukki’roam.  theavan  anbaagavea  irukki’raar;  anbil  nilaiththirukki’ravan  theavanil  nilaiththirukki’raan,  theavanum  avanil  nilaiththirukki’raar.  (1yoavaan  4:16)

நியாயத்தீர்ப்புநாளிலே  நமக்குத்  தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக  அன்பு  நம்மிடத்தில்  பூரணப்படுகிறது;  ஏனென்றால்,  அவர்  இருக்கிறபிரகாரமாக  நாமும்  இவ்வுலகத்தில்  இருக்கிறோம்.  (1யோவான்  4:17)

niyaayaththeerppunaa'lilea  namakkuth  thairiyamu'ndaayirukkaththakkathaaga  anbu  nammidaththil  poora'nappadugi’rathu;  eanen’raal,  avar  irukki’rapiragaaramaaga  naamum  ivvulagaththil  irukki’roam.  (1yoavaan  4:17)

அன்பிலே  பயமில்லை;  பூரண  அன்பு  பயத்தைப்  புறம்பே  தள்ளும்;  பயமானது  வேதனையுள்ளது,  பயப்படுகிறவன்  அன்பில்  பூரணப்பட்டவன்  அல்ல.  (1யோவான்  4:18)

anbilea  bayamillai;  poora'na  anbu  bayaththaip  pu’rambea  tha'l'lum;  bayamaanathu  veathanaiyu'l'lathu,  bayappadugi’ravan  anbil  poora'nappattavan  alla.  (1yoavaan  4:18)

அவர்  முந்தி  நம்மிடத்தில்  அன்புகூர்ந்தபடியால்  நாமும்  அவரிடத்தில்  அன்புகூருகிறோம்.  (1யோவான்  4:19)

avar  munthi  nammidaththil  anbukoornthapadiyaal  naamum  avaridaththil  anbukoorugi’roam.  (1yoavaan  4:19)

தேவனிடத்தில்  அன்புகூருகிறேனென்று  ஒருவன்  சொல்லியும்,  தன்  சகோதரனைப்  பகைத்தால்,  அவன்  பொய்யன்;  தான்  கண்ட  சகோதரனிடத்தில்  அன்புகூராமலிருக்கிறவன்,  தான்  காணாத  தேவனிடத்தில்  எப்படி  அன்புகூருவான்?  (1யோவான்  4:20)

theavanidaththil  anbukoorugi’reanen’ru  oruvan  solliyum,  than  sagoatharanaip  pagaiththaal,  avan  poyyan;  thaan  ka'nda  sagoatharanidaththil  anbukooraamalirukki’ravan,  thaan  kaa'naatha  theavanidaththil  eppadi  anbukooruvaan?  (1yoavaan  4:20)

தேவனிடத்தில்  அன்புகூருகிறவன்  தன்  சகோதரனிடத்திலும்  அன்புகூரவேண்டுமென்கிற  இந்தக்  கற்பனையை  அவராலே  பெற்றிருக்கிறோம்.  (1யோவான்  4:21)

theavanidaththil  anbukoorugi’ravan  than  sagoatharanidaththilum  anbukooravea'ndumengi’ra  inthak  ka’rpanaiyai  avaraalea  pet’rirukki’roam.  (1yoavaan  4:21)