Showing posts with label 2 Naalaagamam. Show all posts
Showing posts with label 2 Naalaagamam. Show all posts

Saturday, October 01, 2016

2 Naa'laagamam 36 | 2 நாளாகமம் 36 | 2 Chronicles 36

அப்பொழுது  ஜனங்கள்  யோசியாவின்  குமாரனாகிய  யோவாகாசை  அழைத்து,  அவனை  எருசலேமிலே  அவன்  தகப்பன்  ஸ்தானத்திலே  ராஜாவாக்கினார்கள்.  (2நாளாகமம்  36:1)

appozhuthu  janangga'l  yoasiyaavin  kumaaranaagiya  yoavaagaasai  azhaiththu,  avanai  erusaleamilea  avan  thagappan  sthaanaththilea  raajaavaakkinaarga'l.  (2naa’laagamam  36:1)

யோவாகாஸ்  ராஜாவாகிறபோது  இருபத்துமூன்று  வயதாயிருந்து,  மூன்றுமாதம்  எருசலேமில்  அரசாண்டான்.  (2நாளாகமம்  36:2)

yoavaagaas  raajaavaagi’rapoathu  irubaththumoon’ru  vayathaayirunthu,  moon’rumaatham  erusaleamil  arasaa'ndaan.  (2naa’laagamam  36:2)

அவன்  எருசலேமில்  அரசாளாதபடிக்கு  எகிப்தின்  ராஜா  அவனைத்  தள்ளிவிட்டு,  தேசத்தின்மேல்  நூறு  தாலந்து  வெள்ளியும்  ஒரு  தாலந்து  பொன்னுமான  தண்டத்தைச்  சுமத்தி,  (2நாளாகமம்  36:3)

avan  erusaleamil  arasaa'laathapadikku  egipthin  raajaa  avanaith  tha'l'livittu,  theasaththinmeal  noo’ru  thaalanthu  ve'l'liyum  oru  thaalanthu  ponnumaana  tha'ndaththaich  sumaththi,  (2naa’laagamam  36:3)

அவனுடைய  அண்ணனாகிய  எலியாக்கீமை  யூதாவின்மேலும்  எருசலேமின்மேலும்  ராஜாவாக்கி,  அவன்  பேரை  யோயாக்கீம்  என்று  மாற்றினான்;  அவன்  தம்பியாகிய  யோவாகாசை  எகிப்தின்  ராஜாவாகிய  நேகோ  எகிப்திற்குக்  கொண்டுபோனான்.  (2நாளாகமம்  36:4)

avanudaiya  a'n'nanaagiya  eliyaakkeemai  yoothaavinmealum  erusaleaminmealum  raajaavaakki,  avan  pearai  yoayaakkeem  en’ru  maat’rinaan;  avan  thambiyaagiya  yoavaagaasai  egipthin  raajaavaagiya  neakoa  egipthi’rkuk  ko'ndupoanaan.  (2naa’laagamam  36:4)

யோயாக்கீம்  ராஜாவாகிறபோது  இருபத்தைந்து  வயதாயிருந்து,  பதினொரு  வருஷம்  எருசலேமில்  அரசாண்டு,  தன்  தேவனாகிய  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  36:5)

yoayaakkeem  raajaavaagi’rapoathu  irubaththainthu  vayathaayirunthu,  pathinoru  varusham  erusaleamil  arasaa'ndu,  than  theavanaagiya  karththarudaiya  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  36:5)

அவனுக்கு  விரோதமாகப்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  வந்து,  அவனைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோக  இரண்டு  வெண்கலச்  சங்கிலியால்  அவனைக்  கட்டினான்.  (2நாளாகமம்  36:6)

avanukku  viroathamaagap  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  vanthu,  avanaip  baabiloanukkuk  ko'ndupoaga  ira'ndu  ve'ngalach  sanggiliyaal  avanaik  kattinaan.  (2naa’laagamam  36:6)

கர்த்தருடைய  ஆலயத்தின்  பணிமுட்டுகளிலும்  சிலவற்றை  நேபுகாத்நேச்சார்  பாபிலோனுக்குக்  கொண்டுபோய்,  அவைகளைப்  பாபிலோனிலுள்ள  தன்னுடைய  கோவிலிலே  வைத்தான்.  (2நாளாகமம்  36:7)

karththarudaiya  aalayaththin  pa'nimuttuga'lilum  silavat’rai  neabukaathneachchaar  baabiloanukkuk  ko'ndupoay,  avaiga'laip  baabiloanilu'l'la  thannudaiya  koavililea  vaiththaan.  (2naa’laagamam  36:7)

யோயாக்கீமுடைய  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்ததும்,  அவனிடத்திலே  கண்டுபிடிக்கப்பட்டதுமான  அவனுடைய  அருவருப்புகளும்,  இஸ்ரவேல்  யூதா  ராஜாக்களின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது;  அவன்  ஸ்தானத்தில்  அவன்  குமாரனாகிய  யோயாக்கீன்  ராஜாவானான்.  (2நாளாகமம்  36:8)

yoayaakkeemudaiya  mat’ra  varththamaanangga'lum,  avan  seythathum,  avanidaththilea  ka'ndupidikkappattathumaana  avanudaiya  aruvaruppuga'lum,  israveal  yoothaa  raajaakka'lin  pusthagaththil  ezhuthiyirukki’rathu;  avan  sthaanaththil  avan  kumaaranaagiya  yoayaakkeen  raajaavaanaan.  (2naa’laagamam  36:8)

யோயாக்கீன்  ராஜாவாகிறபோது  எட்டு  வயதாயிருந்து,  மூன்று  மாதமும்  பத்து  நாளும்  எருசலேமில்  அரசாண்டு,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  36:9)

yoayaakkeen  raajaavaagi’rapoathu  ettu  vayathaayirunthu,  moon’ru  maathamum  paththu  naa'lum  erusaleamil  arasaa'ndu,  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  36:9)

மறுவருஷத்தின்  ஆரம்பத்திலே  நேபுகாத்நேச்சார்  என்னும்  ராஜா  அவனையும்,  கர்த்தருடைய  ஆலயத்தின்  திவ்வியமான  பணிமுட்டுகளையும்  பாபிலோனுக்குக்  கொண்டுவரப்பண்ணி,  அவன்  சிறிய  தகப்பனாகிய  சிதேக்கியாவை  யூதாவின்மேலும்  எருசலேமின்மேலும்  ராஜாவாக்கினான்.  (2நாளாகமம்  36:10)

ma’ruvarushaththin  aarambaththilea  neabukaathneachchaar  ennum  raajaa  avanaiyum,  karththarudaiya  aalayaththin  thivviyamaana  pa'nimuttuga'laiyum  baabiloanukkuk  ko'nduvarappa'n'ni,  avan  si’riya  thagappanaagiya  sitheakkiyaavai  yoothaavinmealum  erusaleaminmealum  raajaavaakkinaan.  (2naa’laagamam  36:10)

சிதேக்கியா  ராஜாவாகிறபோது  இருபத்தொரு  வயதாயிருந்து,  பதினொருவருஷம்  எருசலேமில்  அரசாண்டு,  (2நாளாகமம்  36:11)

sitheakkiyaa  raajaavaagi’rapoathu  irubaththoru  vayathaayirunthu,  pathinoruvarusham  erusaleamil  arasaa'ndu,  (2naa’laagamam  36:11)

தன்  தேவனாகிய  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  அவன்  கர்த்தருடைய  வாக்கை  உரைத்த  எரேமியா  என்கிற  தீர்க்கதரிசிக்குமுன்பாகத்  தன்னைத்  தாழ்த்தவில்லை.  (2நாளாகமம்  36:12)

than  theavanaagiya  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan;  avan  karththarudaiya  vaakkai  uraiththa  ereamiyaa  engi’ra  theerkkatharisikkumunbaagath  thannaith  thaazhththavillai.  (2naa’laagamam  36:12)

தேவன்மேல்  தன்னை  ஆணையிடுவித்துக்கொண்ட  நேபுகாத்நேச்சார்  என்னும்  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணி,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரிடத்துக்குத்  திரும்பாதபடிக்கு,  தன்  கழுத்தை  அழுத்தமாக்கி,  தன்  இருதயத்தைக்  கடினப்படுத்தினான்.  (2நாளாகமம்  36:13)

theavanmeal  thannai  aa'naiyiduviththukko'nda  neabukaathneachchaar  ennum  raajaavukku  viroathamaayk  kalagampa'n'ni,  isravealin  theavanaagiya  karththaridaththukkuth  thirumbaathapadikku,  than  kazhuththai  azhuththamaakki,  than  iruthayaththaik  kadinappaduththinaan.  (2naa’laagamam  36:13)

ஆசாரியரில்  பிரதானமானவர்கள்  யாவரும்  ஜனங்களும்  கூடிப்  புறஜாதிகளுடைய  சகல  அருவருப்புகளின்படியும்  மிகவும்  துரோகம்பண்ணி,  கர்த்தர்  எருசலேமிலே  பரிசுத்தம்பண்ணின  அவருடைய  ஆலயத்தைத்  தீட்டுப்படுத்தினார்கள்.  (2நாளாகமம்  36:14)

aasaariyaril  pirathaanamaanavarga'l  yaavarum  janangga'lum  koodip  pu’rajaathiga'ludaiya  sagala  aruvaruppuga'linpadiyum  migavum  thuroagampa'n'ni,  karththar  erusaleamilea  parisuththampa'n'nina  avarudaiya  aalayaththaith  theettuppaduththinaarga'l.  (2naa’laagamam  36:14)

அவர்களுடைய  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தர்  தமது  ஜனத்தையும்  தமது  வாசஸ்தலத்தையும்  காப்பதற்கான  இரக்கமுள்ளவராயிருந்தபடியால்,  அவர்களிடத்துக்குத்  தம்முடைய  ஸ்தானாபதிகளை  ஏற்கனவே  அனுப்பினார்.  (2நாளாகமம்  36:15)

avarga'ludaiya  pithaakka'lin  theavanaagiya  karththar  thamathu  janaththaiyum  thamathu  vaasasthalaththaiyum  kaappatha’rkaana  irakkamu'l'lavaraayirunthapadiyaal,  avarga'lidaththukkuth  thammudaiya  sthaanaabathiga'lai  ea’rkanavea  anuppinaar.  (2naa’laagamam  36:15)

ஆனாலும்  அவர்கள்  தேவனுடைய  ஸ்தானாபதிகளைப்  பரியாசம்பண்ணி,  அவருடைய  வார்த்தைகளை  அசட்டைசெய்து,  அவருடைய  தீர்க்கதரிசிகளை  நிந்தித்தபடியால்,  கர்த்தருடைய  உக்கிரம்  அவருடைய  ஜனத்தின்மேல்  மூண்டது;  சகாயமில்லாமல்  போயிற்று.  (2நாளாகமம்  36:16)

aanaalum  avarga'l  theavanudaiya  sthaanaabathiga'laip  pariyaasampa'n'ni,  avarudaiya  vaarththaiga'lai  asattaiseythu,  avarudaiya  theerkkatharisiga'lai  ninthiththapadiyaal,  karththarudaiya  ukkiram  avarudaiya  janaththinmeal  moo'ndathu;  sagaayamillaamal  poayit’ru.  (2naa’laagamam  36:16)

ஆதலால்  அவர்  அவர்கள்மேல்  கல்தேயரின்  ராஜாவை  வரப்பண்ணினார்;  அவன்  அவர்கள்  வாலிபரை  அவர்களுடைய  பரிசுத்தமான  ஆலயத்திலே  பட்டயத்தினால்  கொன்று,  வாலிபரையும்  கன்னியாஸ்திரீகளையும்  முதியோரையும்  விருத்தாப்பியரையும்  தப்பவிடவில்லை;  எல்லாரையும்  தேவன்  அவன்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  (2நாளாகமம்  36:17)

aathalaal  avar  avarga'lmeal  kaltheayarin  raajaavai  varappa'n'ninaar;  avan  avarga'l  vaalibarai  avarga'ludaiya  parisuththamaana  aalayaththilea  pattayaththinaal  kon’ru,  vaalibaraiyum  kanniyaasthireega'laiyum  muthiyoaraiyum  viruththaappiyaraiyum  thappavidavillai;  ellaaraiyum  theavan  avan  kaiyil  oppukkoduththaar.  (2naa’laagamam  36:17)

அவன்  தேவனுடைய  ஆலயத்தின்  பெரிதும்  சிறிதுமான  பணிமுட்டுகள்  அனைத்தையும்,  கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களும்  ராஜாவுக்கும்  அவன்  பிரபுக்களுக்கும்  இருந்த  பொக்கிஷங்களுமாகிய  அனைத்தையும்  பாபிலோனுக்குக்  கொண்டுபோனான்.  (2நாளாகமம்  36:18)

avan  theavanudaiya  aalayaththin  perithum  si’rithumaana  pa'nimuttuga'l  anaiththaiyum,  karththarudaiya  aalayaththin  pokkishangga'lum  raajaavukkum  avan  pirabukka'lukkum  iruntha  pokkishangga'lumaagiya  anaiththaiyum  baabiloanukkuk  ko'ndupoanaan.  (2naa’laagamam  36:18)

அவர்கள்  தேவனுடைய  ஆலயத்தைத்  தீக்கொளுத்தி,  எருசலேமின்  அலங்கத்தை  இடித்து,  அதின்  மாளிகைகளையெல்லாம்  அக்கினியால்  சுட்டெரித்து,  அதிலிருந்த  திவ்வியமான  பணிமுட்டுகளையெல்லாம்  அழித்தார்கள்.  (2நாளாகமம்  36:19)

avarga'l  theavanudaiya  aalayaththaith  theekko'luththi,  erusaleamin  alanggaththai  idiththu,  athin  maa'ligaiga'laiyellaam  akkiniyaal  sutteriththu,  athiliruntha  thivviyamaana  pa'nimuttuga'laiyellaam  azhiththaarga'l.  (2naa’laagamam  36:19)

பட்டயத்திற்குத்  தப்பின  மீதியானவர்களை  அவன்  பாபிலோனுக்குச்  சிறைபிடித்துப்போனான்;  பெர்சியா  ராஜ்யபாரம்  ஸ்தாபிக்கப்படுமட்டும்  அங்கே  அவர்கள்  அவனுக்கும்  அவன்  குமாரருக்கும்  அடிமைகளாயிருந்தார்கள்.  (2நாளாகமம்  36:20)

pattayaththi’rkuth  thappina  meethiyaanavarga'lai  avan  baabiloanukkuch  si’raipidiththuppoanaan;  persiyaa  raajyabaaram  sthaabikkappadumattum  anggea  avarga'l  avanukkum  avan  kumaararukkum  adimaiga'laayirunthaarga'l.  (2naa’laagamam  36:20)

கர்த்தர்  எரேமியாவின்  வாயினாலே  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்படிக்கு,  தேசம்  தன்னுடைய  ஓய்வு  வருஷங்களை  இரம்மியமாய்  அநுபவித்துத்  தீருமட்டும்,  அது  பாழாய்க்கிடந்த  நாளெல்லாம்,  அதாவது,  எழுபதுவருஷம்  முடியுமட்டும்  ஓய்ந்திருந்தது.  (2நாளாகமம்  36:21)

karththar  ereamiyaavin  vaayinaalea  sonna  vaarththai  ni’raivea’rumpadikku,  theasam  thannudaiya  oayvu  varushangga'lai  irammiyamaay  anubaviththuth  theerumattum,  athu  paazhaaykkidantha  naa'lellaam,  athaavathu,  ezhubathuvarusham  mudiyumattum  oaynthirunthathu.  (2naa’laagamam  36:21)

எரேமியாவின்  வாயினாலே  கர்த்தர்  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்படி,  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேசின்  முதலாம்  வருஷத்திலே  கர்த்தர்  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேசின்  ஆவியை  ஏவினதினாலே,  அவன்:  பரலோகத்தின்  தேவனாகிய  கர்த்தர்  பூமியின்  ராஜ்யங்களையெல்லாம்  எனக்குத்  தந்தருளி,  யூதாவிலுள்ள  எருசலேமிலே  தமக்கு  ஆலயத்தைக்  கட்டுவிக்கும்படி  எனக்குக்  கட்டளையிட்டிருக்கிறார்.  (2நாளாகமம்  36:22)

ereamiyaavin  vaayinaalea  karththar  sonna  vaarththai  ni’raivea’rumpadi,  persiyaavin  raajaavaagiya  koareasin  muthalaam  varushaththilea  karththar  persiyaavin  raajaavaagiya  koareasin  aaviyai  eavinathinaalea,  avan:  paraloagaththin  theavanaagiya  karththar  boomiyin  raajyangga'laiyellaam  enakkuth  thantharu'li,  yoothaavilu'l'la  erusaleamilea  thamakku  aalayaththaik  kattuvikkumpadi  enakkuk  katta'laiyittirukki’raar.  (2naa’laagamam  36:22)

அவருடைய  ஜனங்கள்  எல்லாரிலும்  எவன்  உங்களுக்குள்  இருக்கிறானோ  அவன்  போகட்டும்,  அவனுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவனோடிருப்பாராக  என்று  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேஸ்  அறிவிக்கிறார்  என்று,  தன்  ராஜ்யம்  எங்கும்  எழுதியனுப்பி  விளம்பரம்பண்ணினான்.  (2நாளாகமம்  36:23)

avarudaiya  janangga'l  ellaarilum  evan  ungga'lukku'l  irukki’raanoa  avan  poagattum,  avanudaiya  theavanaagiya  karththar  avanoadiruppaaraaga  en’ru  persiyaavin  raajaavaagiya  koareas  a’rivikki’raar  en’ru,  than  raajyam  enggum  ezhuthiyanuppi  vi'lambarampa'n'ninaan.  (2naa’laagamam  36:23)


2 Naa'laagamam 35 | 2 நாளாகமம் 35 | 2 Chronicles 35

அதற்குப்  பின்பு  யோசியா  எருசலேமிலே  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரித்தான்;  அவர்கள்  முதலாம்  மாதம்  பதினாலாந்தேதியிலே  பஸ்கா  ஆட்டுக்குட்டியை  அடித்தார்கள்.  (2நாளாகமம்  35:1)

atha’rkup  pinbu  yoasiyaa  erusaleamilea  karththarukkup  paskaavai  aasariththaan;  avarga'l  muthalaam  maatham  pathinaalaantheathiyilea  paskaa  aattukkuttiyai  adiththaarga'l.  (2naa’laagamam  35:1)

அவன்  ஆசாரியர்களை  அவர்கள்  முறைவரிசைகளில்  வைத்து,  அவர்களைக்  கர்த்தருடைய  ஆலயத்தில்  ஆராதனைசெய்யத்  திட்டப்படுத்தி,  (2நாளாகமம்  35:2)

avan  aasaariyarga'lai  avarga'l  mu’raivarisaiga'lil  vaiththu,  avarga'laik  karththarudaiya  aalayaththil  aaraathanaiseyyath  thittappaduththi,  (2naa’laagamam  35:2)

இஸ்ரவேலையெல்லாம்  உபதேசிக்கிறவர்களும்,  கர்த்தருக்குப்  பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய  லேவியரை  நோக்கி:  பரிசுத்தப்  பெட்டியைத்  தாவீதின்  குமாரனாகிய  சாலொமோன்  என்னும்  இஸ்ரவேலின்  ராஜா  கட்டின  ஆலயத்திலே  வையுங்கள்;  தோளின்மேல்  அதைச்  சுமக்கும்  பாரம்  உங்களுக்குரியதல்ல;  இப்போது  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கும்,  அவருடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கும்  ஊழியஞ்செய்து,  (2நாளாகமம்  35:3)

isravealaiyellaam  ubatheasikki’ravarga'lum,  karththarukkup  parisuththamaakkappattavarga'lumaagiya  leaviyarai  noakki:  parisuththap  pettiyaith  thaaveethin  kumaaranaagiya  saalomoan  ennum  isravealin  raajaa  kattina  aalayaththilea  vaiyungga'l;  thoa'linmeal  athaich  sumakkum  baaram  ungga'lukkuriyathalla;  ippoathu  neengga'l  ungga'l  theavanaagiya  karththarukkum,  avarudaiya  janamaagiya  isravealukkum  oozhiyagnseythu,  (2naa’laagamam  35:3)

இஸ்ரவேலின்  ராஜாவாகிய  தாவீது  எழுதின  கட்டளைக்கும்,  அவன்  குமாரனாகிய  சாலொமோன்  எழுதின  கட்டளைக்கும்  ஒத்தபடியே  உங்கள்  பிதாக்களின்  குடும்பத்தாருக்காகக்  குறிக்கப்பட்ட  வரிசையிலே  உங்களை  ஆயத்தப்படுத்தி,  (2நாளாகமம்  35:4)

isravealin  raajaavaagiya  thaaveethu  ezhuthina  katta'laikkum,  avan  kumaaranaagiya  saalomoan  ezhuthina  katta'laikkum  oththapadiyea  ungga'l  pithaakka'lin  kudumbaththaarukkaagak  ku’rikkappatta  varisaiyilea  ungga'lai  aayaththappaduththi,  (2naa’laagamam  35:4)

ஜனங்களாகிய  உங்கள்  சகோதரருக்காகப்  பரிசுத்த  ஸ்தலத்திலே  பிதாக்களுடைய  வம்சப்  பிரிவுகளின்படியேயும்,  லேவியருடைய  வம்சத்தார்  வகுக்கப்பட்டபடியேயும்  நின்று,  (2நாளாகமம்  35:5)

janangga'laagiya  ungga'l  sagoathararukkaagap  parisuththa  sthalaththilea  pithaakka'ludaiya  vamsap  pirivuga'linpadiyeayum,  leaviyarudaiya  vamsaththaar  vagukkappattapadiyeayum  nin’ru,  (2naa’laagamam  35:5)

பஸ்கா  ஆட்டுக்குட்டியை  அடித்து,  உங்களைப்  பரிசுத்தம்பண்ணி,  மோசேயைக்கொண்டு  கர்த்தர்  சொன்னபடியே  உங்கள்  சகோதரர்  செய்யும்படி,  அவர்களுக்கு  அவைகளை  ஆயத்தப்படுத்துங்கள்  என்றான்.  (2நாளாகமம்  35:6)

paskaa  aattukkuttiyai  adiththu,  ungga'laip  parisuththampa'n'ni,  moaseayaikko'ndu  karththar  sonnapadiyea  ungga'l  sagoatharar  seyyumpadi,  avarga'lukku  avaiga'lai  aayaththappaduththungga'l  en’raan.  (2naa’laagamam  35:6)

வந்திருந்த  ஜனங்கள்  எல்லாருக்கும்,  அவர்கள்  இலக்கத்தின்படியே,  பஸ்கா  பலிக்காக  முப்பதினாயிரம்  ஆட்டுக்குட்டிகளையும்,  வெள்ளாட்டுக்குட்டிகளையும்,  மூவாயிரம்  காளைகளையும்,  ராஜாவாகிய  யோசியா  தன்னுடைய  ஆஸ்தியிலிருந்து  கொடுத்தான்.  (2நாளாகமம்  35:7)

vanthiruntha  janangga'l  ellaarukkum,  avarga'l  ilakkaththinpadiyea,  paskaa  balikkaaga  muppathinaayiram  aattukkuttiga'laiyum,  ve'l'laattukkuttiga'laiyum,  moovaayiram  kaa'laiga'laiyum,  raajaavaagiya  yoasiyaa  thannudaiya  aasthiyilirunthu  koduththaan.  (2naa’laagamam  35:7)

அவனுடைய  பிரபுக்களும்  மனப்பூர்வமான  காணிக்கையாக  ஜனத்திற்கும்  ஆசாரியருக்கும்  லேவியருக்கும்  கொடுத்தார்கள்;  தேவனுடைய  ஆலய  விசாரணைக்கர்த்தாவாகிய  இல்க்கியாவும்  சகரியாவும்  யெகியேலும்  ஆசாரியர்களுக்குப்  பஸ்கா  பலிக்கென்று  இரண்டாயிரத்து  அறுநூறு  ஆட்டுக்குட்டிகளையும்,  முந்நூறு  காளைகளையும்  கொடுத்தார்கள்.  (2நாளாகமம்  35:8)

avanudaiya  pirabukka'lum  manappoorvamaana  kaa'nikkaiyaaga  janaththi’rkum  aasaariyarukkum  leaviyarukkum  koduththaarga'l;  theavanudaiya  aalaya  visaara'naikkarththaavaagiya  ilkkiyaavum  sagariyaavum  yegiyealum  aasaariyarga'lukkup  paskaa  balikken’ru  ira'ndaayiraththu  a’runoo’ru  aattukkuttiga'laiyum,  munnoo’ru  kaa'laiga'laiyum  koduththaarga'l.  (2naa’laagamam  35:8)

கொனானியா,  செமாயா,  நெதனெயேல்  என்னும்  அவர்கள்  சகோதரரும்,  அசபியா,  ஏயெல்,  யோசபாத்  என்னும்  லேவியரின்  பிரபுக்களும்,  லேவியருக்குப்  பஸ்கா  பலிக்கென்று  ஐயாயிரம்  ஆட்டுக்குட்டிகளையும்  ஐந்நூறு  காளைகளையும்  கொடுத்தார்கள்.  (2நாளாகமம்  35:9)

konaaniyaa,  semaayaa,  nethaneyeal  ennum  avarga'l  sagoathararum,  asabiyaa,  eayel,  yoasabaath  ennum  leaviyarin  pirabukka'lum,  leaviyarukkup  paskaa  balikken’ru  aiyaayiram  aattukkuttiga'laiyum  ainnoo’ru  kaa'laiga'laiyum  koduththaarga'l.  (2naa’laagamam  35:9)

இப்படி  ஆராதனை  திட்டம்பண்ணப்பட்டபோது,  ராஜாவினுடைய  கட்டளையின்படியே,  ஆசாரியர்  தங்கள்  ஸ்தானத்திலும்,  லேவியர்  தங்கள்  வகுப்புகளின்  வரிசையிலும்  நின்று,  (2நாளாகமம்  35:10)

ippadi  aaraathanai  thittampa'n'nappattapoathu,  raajaavinudaiya  katta'laiyinpadiyea,  aasaariyar  thangga'l  sthaanaththilum,  leaviyar  thangga'l  vaguppuga'lin  varisaiyilum  nin’ru,  (2naa’laagamam  35:10)

பஸ்கா  ஆட்டுக்குட்டியை  அடித்தார்கள்;  ஆசாரியர்  அவர்கள்  கையிலிருந்து  இரத்தத்தை  வாங்கித்  தெளித்தார்கள்;  லேவியர்  தோலுரித்தார்கள்.  (2நாளாகமம்  35:11)

paskaa  aattukkuttiyai  adiththaarga'l;  aasaariyar  avarga'l  kaiyilirunthu  iraththaththai  vaanggith  the'liththaarga'l;  leaviyar  thoaluriththaarga'l.  (2naa’laagamam  35:11)

மோசேயின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடி  ஜனங்கள்  கர்த்தருக்குப்  பலி  செலுத்தும்படி,  அவர்கள்  தகனபலி  மிருகங்களைப்  பிதாக்களுடைய  வம்சப்பிரிவுகளின்படியே,  இவர்களுக்குக்  கொடுக்கத்தக்கதாய்  அவைகளைப்  பிரித்துவைத்தார்கள்;  காளைகளையும்  அப்படியே  செய்தார்கள்.  (2நாளாகமம்  35:12)

moaseayin  pusthagaththil  ezhuthiyirukki’rapadi  janangga'l  karththarukkup  bali  seluththumpadi,  avarga'l  thaganabali  mirugangga'laip  pithaakka'ludaiya  vamsappirivuga'linpadiyea,  ivarga'lukkuk  kodukkaththakkathaay  avaiga'laip  piriththuvaiththaarga'l;  kaa'laiga'laiyum  appadiyea  seythaarga'l.  (2naa’laagamam  35:12)

அவர்கள்  பஸ்கா  ஆட்டுக்குட்டியை  நியாயமுறைமையின்படியே  அக்கினியில்  பொரித்து,  பரிசுத்தமாக்கப்பட்ட  மற்றவைகளைப்  பானைகளிலும்  கொப்பரைகளிலும்  சட்டிகளிலும்  சமைத்து,  ஜனங்களுக்கெல்லாம்  தீவிரமாய்ப்  பங்கிட்டுக்கொடுத்தார்கள்.  (2நாளாகமம்  35:13)

avarga'l  paskaa  aattukkuttiyai  niyaayamu’raimaiyinpadiyea  akkiniyil  poriththu,  parisuththamaakkappatta  mat’ravaiga'laip  paanaiga'lilum  kopparaiga'lilum  sattiga'lilum  samaiththu,  janangga'lukkellaam  theeviramaayp  panggittukkoduththaarga'l.  (2naa’laagamam  35:13)

பின்பு  தங்களுக்காகவும்  ஆசாரியருக்காகவும்  ஆயத்தப்படுத்தினார்கள்;  ஆரோனின்  புத்திரராகிய  ஆசாரியர்கள்  சர்வாங்க  தகனபலிகளையும்  நிணத்தையும்  செலுத்துகிறதில்,  இரவுமட்டும்  வேலையாயிருந்தபடியினால்,  லேவியர்  தங்களுக்காகவும்,  ஆரோனின்  புத்திரராகிய  ஆசாரியருக்காகவும்  ஆயத்தப்படுத்தினார்கள்.  (2நாளாகமம்  35:14)

pinbu  thangga'lukkaagavum  aasaariyarukkaagavum  aayaththappaduththinaarga'l;  aaroanin  puththiraraagiya  aasaariyarga'l  sarvaangga  thaganabaliga'laiyum  ni'naththaiyum  seluththugi’rathil,  iravumattum  vealaiyaayirunthapadiyinaal,  leaviyar  thangga'lukkaagavum,  aaroanin  puththiraraagiya  aasaariyarukkaagavum  aayaththappaduththinaarga'l.  (2naa’laagamam  35:14)

தாவீதும்,  ஆசாபும்,  ஏமானும்,  ராஜாவின்  ஞானதிருஷ்டிக்காரனாகிய  எதுத்தூனும்  கற்பித்தபடியே,  ஆசாபின்  புத்திரராகிய  பாடகர்  தங்கள்  ஸ்தானத்திலும்,  வாசல்காவலாளர்  ஒவ்வொரு  வாசலிலும்  நின்றார்கள்;  அவர்கள்  தங்கள்  ஊழியத்தை  விட்டு  விலகக்கூடாதிருந்தது;  லேவியரான  அவர்கள்  சகோதரர்  அவர்களுக்காக  ஆயத்தப்படுத்தினார்கள்.  (2நாளாகமம்  35:15)

thaaveethum,  aasaapum,  eamaanum,  raajaavin  gnaanathirushdikkaaranaagiya  ethuththoonum  ka’rpiththapadiyea,  aasaapin  puththiraraagiya  paadagar  thangga'l  sthaanaththilum,  vaasalkaavalaa'lar  ovvoru  vaasalilum  nin’raarga'l;  avarga'l  thangga'l  oozhiyaththai  vittu  vilagakkoodaathirunthathu;  leaviyaraana  avarga'l  sagoatharar  avarga'lukkaaga  aayaththappaduththinaarga'l.  (2naa’laagamam  35:15)

அப்படியே  ராஜாவாகிய  யோசியாவினுடைய  கட்டளைப்படி,  பஸ்காவை  ஆசரிக்கிறதற்கும்,  கர்த்தருடைய  பலிபீடத்தின்மேல்  சர்வாங்க  தகனபலிகளை  இடுகிறதற்கும்  அடுத்த  கர்த்தருடைய  ஆராதனையெல்லாம்  அன்றையதினம்  திட்டமாய்ச்  செய்யப்பட்டது.  (2நாளாகமம்  35:16)

appadiyea  raajaavaagiya  yoasiyaavinudaiya  katta'laippadi,  paskaavai  aasarikki’ratha’rkum,  karththarudaiya  balipeedaththinmeal  sarvaangga  thaganabaliga'lai  idugi’ratha’rkum  aduththa  karththarudaiya  aaraathanaiyellaam  an’raiyathinam  thittamaaych  seyyappattathu.  (2naa’laagamam  35:16)

அங்கே  வந்திருந்த  இஸ்ரவேல்  புத்திரர்  அக்காலத்தில்  பஸ்காவையும்,  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகையையும்  ஏழுநாளளவும்  ஆசரித்தார்கள்.  (2நாளாகமம்  35:17)

anggea  vanthiruntha  israveal  puththirar  akkaalaththil  paskaavaiyum,  pu'lippillaatha  appappa'ndigaiyaiyum  eazhunaa'la'lavum  aasariththaarga'l.  (2naa’laagamam  35:17)

தீர்க்கதரிசியாகிய  சாமுவேலின்  நாள்  தொடங்கி,  இஸ்ரவேலிலே  அப்படிக்கொத்த  பஸ்கா  ஆசரிக்கப்படவில்லை;  யோசியாவும்,  ஆசாரியரும்,  லேவியரும்,  யூதாவனைத்தும்,  இஸ்ரவேலில்  வந்திருந்தவர்களும்,  எருசலேமின்  குடிகளும்  ஆசரித்த  பஸ்காவைப்போல  இஸ்ரவேல்  ராஜாக்களில்  ஒருவரும்  ஆசரித்ததில்லை.  (2நாளாகமம்  35:18)

theerkkatharisiyaagiya  saamuvealin  naa'l  thodanggi,  isravealilea  appadikkoththa  paskaa  aasarikkappadavillai;  yoasiyaavum,  aasaariyarum,  leaviyarum,  yoothaavanaiththum,  isravealil  vanthirunthavarga'lum,  erusaleamin  kudiga'lum  aasariththa  paskaavaippoala  israveal  raajaakka'lil  oruvarum  aasariththathillai.  (2naa’laagamam  35:18)

யோசியாவுடைய  ராஜ்யபாரத்தின்  பதினெட்டாம்  வருஷத்திலே  இந்தப்  பஸ்கா  ஆசரிக்கப்பட்டது.  (2நாளாகமம்  35:19)

yoasiyaavudaiya  raajyabaaraththin  pathinettaam  varushaththilea  inthap  paskaa  aasarikkappattathu.  (2naa’laagamam  35:19)

யோசியா  தேவாலயத்திற்கு  அடுத்ததைத்  திட்டப்படுத்தின  இந்த  எல்லா  நடபடிகளுக்கும்பின்பு,  எகிப்தின்  ராஜாவாகிய  நேகோ  ஐபிராத்து  நதியோரமான  கர்கேமிஸ்  பட்டணத்தின்மேல்  யுத்தம்பண்ணவந்தான்;  அப்பொழுது  யோசியா  அவனுக்கு  விரோதமாய்  யுத்தஞ்செய்யப்  புறப்பட்டான்.  (2நாளாகமம்  35:20)

yoasiyaa  theavaalayaththi’rku  aduththathaith  thittappaduththina  intha  ellaa  nadapadiga'lukkumpinbu,  egipthin  raajaavaagiya  neakoa  aipiraaththu  nathiyoaramaana  karkeamis  patta'naththinmeal  yuththampa'n'navanthaan;  appozhuthu  yoasiyaa  avanukku  viroathamaay  yuththagnseyyap  pu’rappattaan.  (2naa’laagamam  35:20)

அவன்  இவனிடத்துக்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  யூதாவின்  ராஜாவே,  எனக்கும்  உமக்கும்  என்ன?  நான்  இப்போது  உமக்கு  விரோதமாய்  அல்ல,  என்னோடே  யுத்தம்பண்ணுகிற  ஒருவனுக்கு  விரோதமாய்ப்  போகிறேன்;  நான்  தீவிரிக்க  வேண்டுமென்று  தேவன்  சொன்னார்;  தேவன்  என்னோடிருக்கிறார்;  அவர்  உம்மை  அழிக்காதபடிக்கு  அவருக்கு  எதிரிடை  செய்வதை  விட்டுவிடும்  என்று  சொல்லச்சொன்னான்.  (2நாளாகமம்  35:21)

avan  ivanidaththukku  sthaanaabathiga'lai  anuppi:  yoothaavin  raajaavea,  enakkum  umakkum  enna?  naan  ippoathu  umakku  viroathamaay  alla,  ennoadea  yuththampa'n'nugi’ra  oruvanukku  viroathamaayp  poagi’rean;  naan  theevirikka  vea'ndumen’ru  theavan  sonnaar;  theavan  ennoadirukki’raar;  avar  ummai  azhikkaathapadikku  avarukku  ethiridai  seyvathai  vittuvidum  en’ru  sollachsonnaan.  (2naa’laagamam  35:21)

ஆனாலும்  யோசியா  தன்  முகத்தை  அவனை  விட்டுத்  திருப்பாமலும்,  நேகோ  சொன்ன  தேவனுடைய  வாயின்  வார்த்தைகளுக்குச்  செவிகொடாமலும்,  அவனோடே  யுத்தம்பண்ண  வேஷம்மாறி,  மெகிதோவின்  பள்ளத்தாக்கிலே  யுத்தம்பண்ணுகிறதற்கு  வந்தான்.  (2நாளாகமம்  35:22)

aanaalum  yoasiyaa  than  mugaththai  avanai  vittuth  thiruppaamalum,  neakoa  sonna  theavanudaiya  vaayin  vaarththaiga'lukkuch  sevikodaamalum,  avanoadea  yuththampa'n'na  veashammaa’ri,  megithoavin  pa'l'laththaakkilea  yuththampa'n'nugi’ratha’rku  vanthaan.  (2naa’laagamam  35:22)

வில்வீரர்  யோசியா  ராஜாவின்மேல்  அம்பெய்தார்கள்;  அப்பொழுது  ராஜா  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  என்னை  அப்புறம்  கொண்டுபோங்கள்,  எனக்குக்  கொடிய  காயம்பட்டது  என்றான்.  (2நாளாகமம்  35:23)

vilveerar  yoasiyaa  raajaavinmeal  ambeythaarga'l;  appozhuthu  raajaa  than  oozhiyakkaararai  noakki:  ennai  appu’ram  ko'ndupoangga'l,  enakkuk  kodiya  kaayampattathu  en’raan.  (2naa’laagamam  35:23)

அப்பொழுது  அவனுடைய  ஊழியக்காரர்  அந்த  இரதத்தின்மேலிருந்த  அவனை  இறக்கி,  அவனுக்கு  இருந்த  இரண்டாவது  இரதத்தின்மேல்  ஏற்றி  அவனை  எருசலேமுக்குக்  கொண்டுவந்தார்கள்;  அவன்  மரணமடைந்து  தன்  பிதாக்களின்  கல்லறையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  யூதாவிலும்  எருசலேமிலுமுள்ள  யாவரும்  யோசியாவுக்காகத்  துக்கங்கொண்டாடினார்கள்.  (2நாளாகமம்  35:24)

appozhuthu  avanudaiya  oozhiyakkaarar  antha  irathaththinmealiruntha  avanai  i’rakki,  avanukku  iruntha  ira'ndaavathu  irathaththinmeal  eat’ri  avanai  erusaleamukkuk  ko'nduvanthaarga'l;  avan  mara'namadainthu  than  pithaakka'lin  kalla’raiyil  adakkampa'n'nappattaan;  yoothaavilum  erusaleamilumu'l'la  yaavarum  yoasiyaavukkaagath  thukkangko'ndaadinaarga'l.  (2naa’laagamam  35:24)

எரேமியா  யோசியாவின்மேல்  புலம்பல்  பாடினான்;  சகல  பாடகரும்  பாடகிகளும்  இந்நாள்வரைக்கும்  தங்கள்  புலம்பல்களில்  யோசியாவின்மேல்  பாடுகிறார்கள்;  அவைகள்  இந்நாள்வரைக்கும்  இஸ்ரவேலிலே  வழங்கிவருகிறது;  அவைகள்  புலம்பலின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  35:25)

ereamiyaa  yoasiyaavinmeal  pulambal  paadinaan;  sagala  paadagarum  paadagiga'lum  innaa'lvaraikkum  thangga'l  pulambalga'lil  yoasiyaavinmeal  paadugi’raarga'l;  avaiga'l  innaa'lvaraikkum  isravealilea  vazhanggivarugi’rathu;  avaiga'l  pulambalin  pusthagaththil  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  35:25)

யோசியாவின்  மற்ற  வர்த்தமானங்களும்,  கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறதற்கொத்த  அவன்  செய்த  நன்மைகளும்,  (2நாளாகமம்  35:26)

yoasiyaavin  mat’ra  varththamaanangga'lum,  karththarudaiya  niyaayappiramaa'naththil  ezhuthiyirukki’ratha’rkoththa  avan  seytha  nanmaiga'lum,  (2naa’laagamam  35:26)

அவனுடைய  ஆதியோடந்த  நடபடிகளும்,  இஸ்ரவேல்  யூதா  ராஜாக்களின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  35:27)

avanudaiya  aathiyoadantha  nadapadiga'lum,  israveal  yoothaa  raajaakka'lin  pusthagaththil  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  35:27)