Showing posts with label Pengkhotbah. Show all posts
Showing posts with label Pengkhotbah. Show all posts

Wednesday, March 23, 2016

Pirasanggi 12 | பிரசங்கி 12 | Ecclesiastes 12


நீ  உன்  வாலிபப்பிராயத்திலே  உன்  சிருஷ்டிகரை  நினை;  தீங்குநாட்கள்  வராததற்குமுன்னும்,  எனக்குப்  பிரியமானவைகளல்ல  என்று  நீ  சொல்லும்  வருஷங்கள்  சேராததற்குமுன்னும்,  (பிரசங்கி  12:1)

nee  un  vaalibappiraayaththilea  un  sirushdigarai  ninai;  theenggunaadka'l  varaathatha’rkumunnum,  enakkup  piriyamaanavaiga'lalla  en'ru  nee  sollum  varushangga'l  searaathatha’rkumunnum,  (pirasanggi  12:1)

சூரியனும்,  வெளிச்சமும்,  சந்திரனும்,  நட்சத்திரங்களும்,  அந்தகாரப்படாததற்குமுன்னும்,  (பிரசங்கி  12:2)

sooriyanum,  ve'lichchamum,  santhiranum,  nadchaththirangga'lum,  anthagaarappadaathatha’rkumunnum,  (pirasanggi  12:2)

மழைக்குப்பின்  மேகங்கள்  திரும்பத்  திரும்ப  வராததற்குமுன்னும்,  வீட்டுக்காவலாளிகள்  தள்ளாடி,  பெலசாலிகள்  கூனிப்போய்,  ஏந்திரம்  அரைக்கிறவர்கள்  கொஞ்சமானதினால்  ஓய்ந்து,  பலகணிவழியாய்ப்  பார்க்கிறவர்கள்  இருண்டுபோகிறதற்குமுன்னும்,  (பிரசங்கி  12:3)

mazhaikkuppin  meagangga'l  thirumbath  thirumba  varaathatha’rkumunnum,  veettukkaavalaa'liga'l  tha'l'laadi,  belasaaliga'l  koonippoay,  eanthiram  araikki'ravarga'l  kognchamaanathinaal  oaynthu,  palaga'nivazhiyaayp  paarkki'ravarga'l  iru'ndupoagi'ratha’rkumunnum,  (pirasanggi  12:3)

ஏந்திர  சத்தம்  தாழ்ந்ததினால்  தெருவாசலின்  கதவுகள்  அடைபட்டு,  குருவியின்  சத்தத்துக்கும்  எழுந்திருக்கவேண்டியதாகி,  கீதவாத்தியக்  கன்னிகைகளெல்லாம்  அடங்கிப்போகாததற்குமுன்னும்,  (பிரசங்கி  12:4)

eanthira  saththam  thaazhnthathinaal  theruvaasalin  kathavuga'l  adaipattu,  kuruviyin  saththaththukkum  ezhunthirukkavea'ndiyathaagi,  keethavaaththiyak  kannigaiga'lellaam  adanggippoagaathatha’rkumunnum,  (pirasanggi  12:4)

மேட்டுக்காக  அச்சமுண்டாகி,  வழியிலே  பயங்கள்  தோன்றி,  வாதுமைமரம்  பூப்பூத்து,  வெட்டுக்கிளியும்  பாரமாகி,  பசித்தீபனமும்  அற்றுப்போகாததற்கு  முன்னும்,  மனுஷன்  தன்  நித்திய  வீட்டுக்குப்  போகிறதினாலே,  துக்கங்கொண்டாடுகிறவர்கள்  வீதியிலே  திரியாததற்குமுன்னும்,  (பிரசங்கி  12:5)

meattukkaaga  achchamu'ndaagi,  vazhiyilea  bayangga'l  thoan'ri,  vaathumaimaram  pooppooththu,  vettukki'liyum  baaramaagi,  pasiththeebanamum  at’ruppoagaathatha’rku  munnum,  manushan  than  niththiya  veettukkup  poagi'rathinaalea,  thukkangko'ndaadugi'ravarga'l  veethiyilea  thiriyaathatha’rkumunnum,  (pirasanggi  12:5)

வெள்ளிக்கயிறு  கட்டுவிட்டு,  பொற்கிண்ணி  நசுங்கி,  ஊற்றின்  அருகே  சால்  உடைந்து,  துரவண்டையில்  உருளை  நொறுங்கி,  (பிரசங்கி  12:6)

ve'l'likkayi'ru  kattuvittu,  po’rki'n'ni  nasunggi,  oot’rin  arugea  saal  udainthu,  thurava'ndaiyil  uru'lai  no'runggi,  (pirasanggi  12:6)

இவ்விதமாய்  மண்ணானது  தான்  முன்னிருந்த  பூமிக்குத்  திரும்பி,  ஆவி  தன்னைத்  தந்த  தேவனிடத்திற்கு  மறுபடியும்  போகாததற்குமுன்னும்,  அவரை  உன்  வாலிபப்பிராயத்திலே  நினை.  (பிரசங்கி  12:7)

ivvithamaay  ma'n'naanathu  thaan  munniruntha  boomikkuth  thirumbi,  aavi  thannaith  thantha  theavanidaththi’rku  ma'rupadiyum  poagaathatha’rkumunnum,  avarai  un  vaalibappiraayaththilea  ninai.  (pirasanggi  12:7)

மாயை  மாயை,  எல்லாம்  மாயை  என்று  பிரசங்கி  சொல்லுகிறான்.  (பிரசங்கி  12:8)

maayai  maayai,  ellaam  maayai  en'ru  pirasanggi  sollugi'raan.  (pirasanggi  12:8)

மேலும்,  பிரசங்கி  ஞானவானாயிருந்தபடியால்,  அவன்  ஜனத்துக்கு  அறிவைப்போதித்து,  கவனமாய்க்  கேட்டாராய்ந்து,  அநேகம்  நீதிமொழிகளைச்  சேர்த்து  எழுதினான்.  (பிரசங்கி  12:9)

mealum,  pirasanggi  gnaanavaanaayirunthapadiyaal,  avan  janaththukku  a'rivaippoathiththu,  kavanamaayk  keattaaraaynthu,  aneagam  neethimozhiga'laich  searththu  ezhuthinaan.  (pirasanggi  12:9)

இதமான  வார்த்தைகளைக்  கண்டுபிடிக்கப்  பிரசங்கி  வகைதேடினான்;  எழுதின  வாக்கியங்கள்  செவ்வையும்  சத்தியமுமானவைகள்.  (பிரசங்கி  12:10)

ithamaana  vaarththaiga'laik  ka'ndupidikkap  pirasanggi  vagaitheadinaan;  ezhuthina  vaakkiyangga'l  sevvaiyum  saththiyamumaanavaiga'l.  (pirasanggi  12:10)

ஞானிகளின்  வாக்கியங்கள்  தாற்றுக்கோல்கள்போலவும்  சங்கத்தலைவர்களால்  அறையப்பட்ட  ஆணிகள்போலவும்  இருக்கிறது;  அவைகள்  ஒரே  மேய்ப்பனால்  அளிக்கப்பட்டது.  (பிரசங்கி  12:11)

gnaaniga'lin  vaakkiyangga'l  thaat'rukkoalga'lpoalavum  sanggaththalaivarga'laal  a'raiyappatta  aa'niga'lpoalavum  irukki'rathu;  avaiga'l  orea  meayppanaal  a'likkappattathu.  (pirasanggi  12:11)

என்  மகனே!  இவைகளினாலே  புத்தியடைவாயாக;  அநேகம்  புஸ்தகங்களை  உண்டுபண்ணுகிறதற்கு  முடிவில்லை;  அதிக  படிப்பு  உடலுக்கு  இளைப்பு.  (பிரசங்கி  12:12)

en  maganea!  ivaiga'linaalea  buththiyadaivaayaaga;  aneagam  pusthagangga'lai  u'ndupa'n'nugi'ratha’rku  mudivillai;  athiga  padippu  udalukku  i'laippu.  (pirasanggi  12:12)

காரியத்தின்  கடைத்தொகையைக்  கேட்போமாக,  தேவனுக்குப்  பயந்து,  அவர்  கற்பனைகளைக்  கைக்கொள்;  எல்லா  மனுஷர்மேலும்  விழுந்த  கடமை  இதுவே.  (பிரசங்கி  12:13)

kaariyaththin  kadaiththogaiyaik  keadpoamaaga,  theavanukkup  bayanthu,  avar  ka’rpanaiga'laik  kaikko'l;  ellaa  manusharmealum  vizhuntha  kadamai  ithuvea.  (pirasanggi  12:13)

ஒவ்வொரு  கிரியையையும்,  அந்தரங்கமான  ஒவ்வொரு  காரியத்தையும்,  நன்மையானாலும்  தீமையானாலும்,  தேவன்  நியாயத்திலே  கொண்டுவருவார்.  (பிரசங்கி  12:14)

ovvoru  kiriyaiyaiyum,  antharanggamaana  ovvoru  kaariyaththaiyum,  nanmaiyaanaalum  theemaiyaanaalum,  theavan  niyaayaththilea  ko'nduvaruvaar.  (pirasanggi  12:14)


Pirasanggi 11 | பிரசங்கி 11 | Ecclesiastes 11

உன்  ஆகாரத்தைத்  தண்ணீர்கள்மேல்  போடு;  அநேக  நாட்களுக்குப்  பின்பு  அதின்  பலனைக்  காண்பாய்.  (பிரசங்கி  11:1)

un  aagaaraththaith  tha'n'neerga'lmeal  poadu;  aneaga  naadka'lukkup  pinbu  athin  palanaik  kaa'nbaay.  (pirasanggi  11:1)

ஏழுபேருக்கும்  எட்டுபேருக்கும்  பங்கிட்டுக்கொடு;  பூமியின்மேல்  என்ன  ஆபத்து  நேரிடுமோ  உனக்குத்  தெரியாது.  (பிரசங்கி  11:2)

eazhupearukkum  ettupearukkum  panggittukkodu;  boomiyinmeal  enna  aabaththu  nearidumoa  unakkuth  theriyaathu.  (pirasanggi  11:2)

மேகங்கள்  நிறைந்திருந்தால்  மழையைப்  பூமியின்மேல்  பொழியும்;  மரமானது  தெற்கே  விழுந்தாலும்  வடக்கே  விழுந்தாலும்,  விழுந்த  இடத்திலேயே  மரம்  கிடக்கும்.  (பிரசங்கி  11:3)

meagangga'l  ni'rainthirunthaal  mazhaiyaip  boomiyinmeal  pozhiyum;  maramaanathu  the’rkea  vizhunthaalum  vadakkea  vizhunthaalum,  vizhuntha  idaththileayea  maram  kidakkum.  (pirasanggi  11:3)

காற்றைக்  கவனிக்கிறவன்  விதைக்கமாட்டான்;  மேகங்களை  நோக்குகிறவன்  அறுக்கமாட்டான்.  (பிரசங்கி  11:4)

kaat’raik  kavanikki'ravan  vithaikkamaattaan;  meagangga'lai  noakkugi'ravan  a'rukkamaattaan.  (pirasanggi  11:4)

ஆவியின்  வழி  இன்னதென்றும்,  கர்ப்பவதியின்  வயிற்றில்  எலும்புகள்  உருவாகும்  விதம்  இன்னதென்றும்  நீ  அறியாதிருக்கிறதுபோலவே,  எல்லாவற்றையும்  செய்கிற  தேவனுடைய  செயல்களையும்  நீ  அறியாய்.  (பிரசங்கி  11:5)

aaviyin  vazhi  innathen'rum,  karppavathiyin  vayit’ril  elumbuga'l  uruvaagum  vitham  innathen'rum  nee  a'riyaathirukki'rathupoalavea,  ellaavat’raiyum  seygi'ra  theavanudaiya  seyalga'laiyum  nee  a'riyaay.  (pirasanggi  11:5)

காலையிலே  உன்  விதையை  விதை;  மாலையிலே  உன்  கையை  நெகிழவிடாதே;  அதுவோ,  இதுவோ,  எது  வாய்க்குமோ  என்றும்,  இரண்டும்  சரியாய்ப்  பயன்படுமோ  என்றும்  நீ  அறியாயே.  (பிரசங்கி  11:6)

kaalaiyilea  un  vithaiyai  vithai;  maalaiyilea  un  kaiyai  negizhavidaathea;  athuvoa,  ithuvoa,  ethu  vaaykkumoa  en'rum,  ira'ndum  sariyaayp  payanpadumoa  en'rum  nee  a'riyaayea.  (pirasanggi  11:6)

வெளிச்சம்  இன்பமும்,  சூரியனைக்  காண்பது  கண்களுக்குப்  பிரியமுமாமே.  (பிரசங்கி  11:7)

ve'lichcham  inbamum,  sooriyanaik  kaa'nbathu  ka'nga'lukkup  piriyamumaamea.  (pirasanggi  11:7)

மனுஷன்  அநேக  வருஷம்  ஜீவித்து,  அவைகளிலெல்லாம்  மகிழ்ச்சியாயிருந்தாலும்,  அவன்  இருளின்  நாட்களையும்  நினைக்கவேண்டும்;  அவைகள்  அநேகமாயிருக்கும்;  வந்து  சம்பவிப்பதெல்லாம்  மாயையே.  (பிரசங்கி  11:8)

manushan  aneaga  varusham  jeeviththu,  avaiga'lilellaam  magizhchchiyaayirunthaalum,  avan  iru'lin  naadka'laiyum  ninaikkavea'ndum;  avaiga'l  aneagamaayirukkum;  vanthu  sambavippathellaam  maayaiyea.  (pirasanggi  11:8)

வாலிபனே!  உன்  இளமையிலே  சந்தோஷப்படு,  உன்  வாலிப  நாட்களிலே  உன்  இருதயம்  உன்னைப்  பூரிப்பாக்கட்டும்;  உன்  நெஞ்சின்  வழிகளிலும்,  உன்  கண்ணின்  காட்சிகளிலும்  நட;  ஆனாலும்  இவையெல்லாவற்றினிமித்தமும்  தேவன்  உன்னை  நியாயத்திலே  கொண்டுவந்து  நிறுத்துவார்  என்று  அறி.  (பிரசங்கி  11:9)

vaalibanea!  un  i'lamaiyilea  santhoashappadu,  un  vaaliba  naadka'lilea  un  iruthayam  unnaip  poorippaakkattum;  un  negnchin  vazhiga'lilum,  un  ka'n'nin  kaadchiga'lilum  nada;  aanaalum  ivaiyellaavat'rinimiththamum  theavan  unnai  niyaayaththilea  ko'nduvanthu  ni'ruththuvaar  en'ru  a'ri.  (pirasanggi  11:9)

நீ  உன்  இருதயத்திலிருந்து  சஞ்சலத்தையும்,  உன்  மாம்சத்திலிருந்து  தீங்கையும்  நீக்கிப்போடு;  இளவயதும்  வாலிபமும்  மாயையே.  (பிரசங்கி  11:10)

nee  un  iruthayaththilirunthu  sagnchalaththaiyum,  un  maamsaththilirunthu  theenggaiyum  neekkippoadu;  i'lavayathum  vaalibamum  maayaiyea.  (pirasanggi  11:10)


Pirasanggi 10 | பிரசங்கி 10 | Ecclesiastes 10


செத்த  ஈக்கள்  தைலக்காரனுடைய  பரிமளதைலத்தை  நாறிக்  கெட்டுப்போகப்பண்ணும்;  ஞானத்திலும்  கனத்திலும்  பேர்பெற்றவனைச்  சொற்ப  மதியீனமும்  அப்படியே  செய்யும்.  (பிரசங்கி  10:1)

seththa  eekka'l  thailakkaaranudaiya  parima'lathailaththai  naa'rik  kettuppoagappa'n'num;  gnaanaththilum  kanaththilum  pearpet'ravanaich  so’rpa  mathiyeenamum  appadiyea  seyyum.  (pirasanggi  10:1)

ஞானியின்  இருதயம்  வலதுகையிலும்,  மூடனின்  இருதயமோ  இடதுகையிலும்  இருக்கும்.  (பிரசங்கி  10:2)

gnaaniyin  iruthayam  valathukaiyilum,  moodanin  iruthayamoa  idathukaiyilum  irukkum.  (pirasanggi  10:2)

மூடன்  வழியிலே  நடக்கிறபோதும்  மதிகெட்டவனாயிருக்கிறான்;  தான்  மூடனென்று  அவன்  எல்லாருக்கும்  சொல்லுகிறான்.  (பிரசங்கி  10:3)

moodan  vazhiyilea  nadakki'rapoathum  mathikettavanaayirukki'raan;  thaan  moodanen'ru  avan  ellaarukkum  sollugi'raan.  (pirasanggi  10:3)

அதிபதியின்  கோபம்  உன்மேல்  எழும்பினால்  உன்  ஸ்தானத்தை  விட்டு  விலகாதே;  இணங்குதல்  பெரிய  குற்றங்களையும்  அமர்த்திப்போடும்.  (பிரசங்கி  10:4)

athibathiyin  koabam  unmeal  ezhumbinaal  un  sthaanaththai  vittu  vilagaathea;  i'nangguthal  periya  kut'rangga'laiyum  amarththippoadum.  (pirasanggi  10:4)

நான்  சூரியனுக்குக்கீழே  கண்ட  ஒரு  தீங்குண்டு,  அது  அதிபதியினிடத்தில்  தோன்றும்  தப்பிதமே.  (பிரசங்கி  10:5)

naan  sooriyanukkukkeezhea  ka'nda  oru  theenggu'ndu,  athu  athibathiyinidaththil  thoan'rum  thappithamea.  (pirasanggi  10:5)

மூடர்  மகா  உயர்ந்த  நிலையில்  வைக்கப்படுகிறார்கள்;  சீமான்களோ  தாழ்ந்த  நிலையில்  உட்கார்ந்திருக்கிறார்கள்.  (பிரசங்கி  10:6)

moodar  mahaa  uyarntha  nilaiyil  vaikkappadugi'raarga'l;  seemaanga'loa  thaazhntha  nilaiyil  udkaarnthirukki'raarga'l.  (pirasanggi  10:6)

வேலைக்காரர்  குதிரைகள்மேல்  ஏறிப்போகிறதையும்,  பிரபுக்கள்  வேலைக்காரர்போல்  தரையிலே  நடக்கிறதையும்  கண்டேன்.  (பிரசங்கி  10:7)

vealaikkaarar  kuthiraiga'lmeal  ea'rippoagi'rathaiyum,  pirabukka'l  vealaikkaararpoal  tharaiyilea  nadakki'rathaiyum  ka'ndean.  (pirasanggi  10:7)

படுகுழியை  வெட்டுகிறவன்  அதிலே  விழுவான்;  அடைப்பைப்  பிடுங்குகிறவனைப்  பாம்பு  கடிக்கும்.  (பிரசங்கி  10:8)

padukuzhiyai  vettugi'ravan  athilea  vizhuvaan;  adaippaip  pidunggugi'ravanaip  paambu  kadikkum.  (pirasanggi  10:8)

கல்லுகளைப்  பேர்க்கிறவன்  அவைகளால்  காயப்படுவான்;  மரத்தைப்  பிளக்கிறவன்  அதினால்  மோசப்படுவான்.  (பிரசங்கி  10:9)

kalluga'laip  pearkki'ravan  avaiga'laal  kaayappaduvaan;  maraththaip  pi'lakki'ravan  athinaal  moasappaduvaan.  (pirasanggi  10:9)

இருப்பு  ஆயுதம்  மழுங்கலாயிருக்க,  அதை  ஒருவன்  தீட்டாமற்போனால்,  அதிகபலத்தைப்  பிரயோகம்பண்ணவேண்டியதாகும்;  ஆகையால்  ஒரு  காரியத்தைச்  செவ்வையாய்ச்  செய்வதற்கு  ஞானமே  பிரதானம்.  (பிரசங்கி  10:10)

iruppu  aayutham  mazhunggalaayirukka,  athai  oruvan  theettaama’rpoanaal,  athigabalaththaip  pirayoagampa'n'navea'ndiyathaagum;  aagaiyaal  oru  kaariyaththaich  sevvaiyaaych  seyvatha’rku  gnaanamea  pirathaanam.  (pirasanggi  10:10)

தடைகட்டப்படாத  பாம்பு  கடிக்குமே,  அலப்புவாயனும்  அதற்கு  ஒப்பானவன்.  (பிரசங்கி  10:11)

thadaikattappadaatha  paambu  kadikkumea,  alappuvaayanum  atha’rku  oppaanavan.  (pirasanggi  10:11)

ஞானியினுடைய  வாய்மொழிகள்  தயையுள்ளவைகள்;  மூடனுடைய  உதடுகளோ  அவனையே  விழுங்கும்.  (பிரசங்கி  10:12)

gnaaniyinudaiya  vaaymozhiga'l  thayaiyu'l'lavaiga'l;  moodanudaiya  uthaduga'loa  avanaiyea  vizhunggum.  (pirasanggi  10:12)

அவன்  வாய்மொழிகளின்  துவக்கம்  மதியீனமும்,  அவன்  வாக்கின்  முடிவு  கொடிய  பைத்தியமுமாம்.  (பிரசங்கி  10:13)

avan  vaaymozhiga'lin  thuvakkam  mathiyeenamum,  avan  vaakkin  mudivu  kodiya  paiththiyamumaam.  (pirasanggi  10:13)

மூடன்  மிகுதியாய்ப்  பேசுகிறான்,  நடக்கப்போகிறது  இன்னதென்று  மனுஷன்  அறியான்;  தனக்குப்பிற்பாடு  சம்பவிக்கப்போகிறதை  அவனுக்கு  அறிவிப்பவன்  யார்?  (பிரசங்கி  10:14)

moodan  miguthiyaayp  peasugi'raan,  nadakkappoagi'rathu  innathen'ru  manushan  a'riyaan;  thanakkuppi’rpaadu  sambavikkappoagi'rathai  avanukku  a'rivippavan  yaar?  (pirasanggi  10:14)

ஊருக்குப்  போகும்  வழியை  மூடன்  அறியாததினால்,  அவன்  தொல்லை  ஒவ்வொருவரையும்  இளைக்கப்பண்ணும்.  (பிரசங்கி  10:15)

oorukkup  poagum  vazhiyai  moodan  a'riyaathathinaal,  avan  thollai  ovvoruvaraiyum  i'laikkappa'n'num.  (pirasanggi  10:15)

ராஜா  சிறுபிள்ளையுமாய்,  பிரபுக்கள்  அதிகாலமே  உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட  தேசமே,  உனக்கு  ஐயோ!  (பிரசங்கி  10:16)

raajaa  si'rupi'l'laiyumaay,  pirabukka'l  athikaalamea  u'ngi'ravarga'lumaayirukkappatta  theasamea,  unakku  aiyoa!  (pirasanggi  10:16)

ராஜா  குலமகனுமாய்,  பிரபுக்கள்  வெறிக்க  உண்ணாமல்  பெலன்கொள்ள  ஏற்றவேளையில்  உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட  தேசமே,  நீ  பாக்கியமுள்ளது.  (பிரசங்கி  10:17)

raajaa  kulamaganumaay,  pirabukka'l  ve'rikka  u'n'naamal  belanko'l'la  eat'ravea'laiyil  u'ngi'ravarga'lumaayirukkappatta  theasamea,  nee  baakkiyamu'l'lathu.  (pirasanggi  10:17)

மிகுந்த  சோம்பலினால்  மேல்மச்சுப்  பழுதாகும்;  கைகளின்  நெகிழ்வினாலே  வீடு  ஒழுக்காகும்.  (பிரசங்கி  10:18)

miguntha  soambalinaal  mealmachchup  pazhuthaagum;  kaiga'lin  negizhvinaalea  veedu  ozhukkaagum.  (pirasanggi  10:18)

விருந்து  சந்தோஷத்துக்கென்று  செய்யப்படும்;  திராட்சரசம்  ஜீவனுள்ளோரைக்  களிப்பாக்கும்;  பணமோ  எல்லாவற்றிற்கும்  உதவும்.  (பிரசங்கி  10:19)

virunthu  santhoashaththukken'ru  seyyappadum;  thiraadcharasam  jeevanu'l'loaraik  ka'lippaakkum;  pa'namoa  ellaavat’ri’rkum  uthavum.  (pirasanggi  10:19)

ராஜாவை  உன்  மனதிலும்  நிந்தியாதே,  ஐசுவரியவானை  உன்  படுக்கையிலும்  நிந்தியாதே;  ஆகாயத்துப்  பறவை  அந்தச்  சத்தத்தைக்  கொண்டுபோகும்,  செட்டைகளுள்ளது  அந்தச்  செய்தியை  அறிவிக்கும்.  (பிரசங்கி  10:20)

raajaavai  un  manathilum  ninthiyaathea,  aisuvariyavaanai  un  padukkaiyilum  ninthiyaathea;  aagaayaththup  pa'ravai  anthach  saththaththaik  ko'ndupoagum,  settaiga'lu'l'lathu  anthach  seythiyai  a'rivikkum.  (pirasanggi  10:20)