Showing posts with label மீகா. Show all posts
Showing posts with label மீகா. Show all posts

Monday, July 11, 2016

Meegaa 7 | மீகா 7 | Micah 7

ஐயோ!  உஷ்ணகாலத்துக்  கனிகளைச்  சேர்த்து,  திராட்சப்பழங்களை  அறுத்தபின்பு  வருகிறவனைப்போல்  இருக்கிறேன்;  புசிக்கிறதற்கு  ஒரு  திராட்சக்குலையும்  என்  ஆத்துமா  இச்சித்த  முதல்  அறுப்பின்  கனியும்  இல்லை.  (மீகா  7:1)

aiyoa!  ush'nakaalaththuk  kaniga'laich  searththu,  thiraadchappazhangga'lai  a’ruththapinbu  varugi’ravanaippoal  irukki’rean;  pusikki’ratha’rku  oru  thiraadchakkulaiyum  en  aaththumaa  ichchiththa  muthal  a’ruppin  kaniyum  illai.  (meegaa  7:1)

தேசத்தில்  பக்தியுள்ளவன்  அற்றுப்போனான்;  மனுஷரில்  செம்மையானவன்  இல்லை;  அவர்களெல்லாரும்  இரத்தஞ்சிந்தப்  பதிவிருக்கிறார்கள்;  அவனவன்  தன்தன்  சகோதரனை  வலையிலே  பிடிக்க  வேட்டையாடுகிறான்.  (மீகா  7:2)

theasaththil  bakthiyu'l'lavan  at’ruppoanaan;  manusharil  semmaiyaanavan  illai;  avarga'lellaarum  iraththagnsinthap  pathivirukki’raarga'l;  avanavan  thanthan  sagoatharanai  valaiyilea  pidikka  veattaiyaadugi’raan.  (meegaa  7:2)

பொல்லாப்புச்  செய்ய  அவர்கள்  இரண்டு  கைகளும்  நன்றாய்க்  கூடும்;  அதிபதி  கொடு  என்கிறான்;  நியாயாதிபதி  கைக்கூலி  கேட்கிறான்;  பெரியவன்  தன்  துராசையைத்  தெரிவிக்கிறான்;  இவ்விதமாய்ப்  புரட்டுகிறார்கள்.  (மீகா  7:3)

pollaappuch  seyya  avarga'l  ira'ndu  kaiga'lum  nan’raayk  koodum;  athibathi  kodu  engi’raan;  niyaayaathibathi  kaikkooli  keadki’raan;  periyavan  than  thuraasaiyaith  therivikki’raan;  ivvithamaayp  purattugi’raarga'l.  (meegaa  7:3)

அவர்களில்  நல்லவன்  முட்செடிக்கொத்தவன்,  செம்மையானவன்  நெரிஞ்சிலைப்பார்க்கிலும்  கடுங்கூர்மையானவன்;  உன்  காவற்காரர்  அறிவித்த  உன்  தண்டனையின்  நாள்  வருகிறது;  இப்பொழுதே  அவர்களுக்குக்  கலக்கம்  உண்டு.  (மீகா  7:4)

avarga'lil  nallavan  mudchedikkoththavan,  semmaiyaanavan  nerignchilaippaarkkilum  kadungkoormaiyaanavan;  un  kaava’rkaarar  a’riviththa  un  tha'ndanaiyin  naa'l  varugi’rathu;  ippozhuthea  avarga'lukkuk  kalakkam  u'ndu.  (meegaa  7:4)

சிநேகிதனை  விசுவாசிக்கவேண்டாம்,  வழிகாட்டியை  நம்பவேண்டாம்;  உன்  மடியிலே  படுத்துக்கொள்ளுகிறவளுக்கு  முன்பாக  உன்  வாயைத்  திறவாமல்  எச்சரிக்கையாயிரு.  (மீகா  7:5)

sineagithanai  visuvaasikkavea'ndaam,  vazhikaattiyai  nambavea'ndaam;  un  madiyilea  paduththukko'l'lugi’rava'lukku  munbaaga  un  vaayaith  thi’ravaamal  echcharikkaiyaayiru.  (meegaa  7:5)

மகன்  தகப்பனைக்  கனவீனப்படுத்துகிறான்;  மகள்  தன்  தாய்க்கு  விரோதமாகவும்,  மருமகள்  தன்  மாமிக்கு  விரோதமாகவும்  எழும்புகிறார்கள்;  மனுஷனுடைய  சத்துருக்கள்  அவன்  வீட்டார்தானே.  (மீகா  7:6)

magan  thagappanaik  kanaveenappaduththugi’raan;  maga'l  than  thaaykku  viroathamaagavum,  marumaga'l  than  maamikku  viroathamaagavum  ezhumbugi’raarga'l;  manushanudaiya  saththurukka'l  avan  veettaarthaanea.  (meegaa  7:6)

நானோவென்றால்  கர்த்தரை  நோக்கிக்கொண்டு,  என்  இரட்சிப்பின்  தேவனுக்குக்  காத்திருப்பேன்;  என்  தேவன்  என்னைக்  கேட்டருளுவார்.  (மீகா  7:7)

naanoaven’raal  karththarai  noakkikko'ndu,  en  iradchippin  theavanukkuk  kaaththiruppean;  en  theavan  ennaik  keattaru'luvaar.  (meegaa  7:7)

என்  சத்துருவே,  எனக்கு  விரோதமாய்ச்  சந்தோஷப்படாதே;  நான்  விழுந்தாலும்  எழுந்திருப்பேன்;  நான்  இருளிலே  உட்கார்ந்தால்,  கர்த்தர்  எனக்கு  வெளிச்சமாயிருப்பார்.  (மீகா  7:8)

en  saththuruvea,  enakku  viroathamaaych  santhoashappadaathea;  naan  vizhunthaalum  ezhunthiruppean;  naan  iru'lilea  udkaarnthaal,  karththar  enakku  ve'lichchamaayiruppaar.  (meegaa  7:8)

நான்  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தேன்;  அவர்  எனக்காக  வழக்காடி  என்  நியாயத்தை  விசாரிக்குமட்டும்  அவருடைய  கோபத்தைச்  சுமப்பேன்;  அவர்  என்னை  வெளிச்சத்திலே  கொண்டுவருவார்,  அவருடைய  நீதியைப்  பார்ப்பேன்.  (மீகா  7:9)

naan  karththarukku  viroathamaagap  paavagnseythean;  avar  enakkaaga  vazhakkaadi  en  niyaayaththai  visaarikkumattum  avarudaiya  koabaththaich  sumappean;  avar  ennai  ve'lichchaththilea  ko'nduvaruvaar,  avarudaiya  neethiyaip  paarppean.  (meegaa  7:9)

உன்  தேவனாகிய  கர்த்தர்  எங்கே  என்று  என்னோடே  சொல்லுகிற  என்  சத்துருவானவள்  அதைப்  பார்க்கும்போது  வெட்கம்  அவளை  மூடும்;  என்  கண்கள்  அவளைக்  காணும்;  இனி  வீதிகளின்  சேற்றைப்போல  மிதிக்கப்படுவாள்.  (மீகா  7:10)

un  theavanaagiya  karththar  enggea  en’ru  ennoadea  sollugi’ra  en  saththuruvaanava'l  athaip  paarkkumpoathu  vedkam  ava'lai  moodum;  en  ka'nga'l  ava'laik  kaa'num;  ini  veethiga'lin  seat’raippoala  mithikkappaduvaa'l.  (meegaa  7:10)

உன்  மதில்களை  எடுப்பிக்கும்  நாள்  வருகிறது;  அந்நாளிலே  பிரமாணம்  வெகுதூரம்  பரவிப்போம்.  (மீகா  7:11)

un  mathilga'lai  eduppikkum  naa'l  varugi’rathu;  annaa'lilea  piramaa'nam  veguthooram  paravippoam.  (meegaa  7:11)

அந்நாளிலே  அசீரியாமுதல்  எகிப்தின்  பட்டணங்கள்வரைக்கும்,  எகிப்துமுதல்  நதிவரைக்கும்,  ஒரு  சமுத்திரமுதல்  மறு  சமுத்திரம்வரைக்கும்,  ஒரு  பர்வதமுதல்  மறு  பர்வதம்வரைக்குமுள்ள  ஜனங்கள்  உன்னிடத்திற்கு  வருவார்கள்.  (மீகா  7:12)

annaa'lilea  aseeriyaamuthal  egipthin  patta'nangga'lvaraikkum,  egipthumuthal  nathivaraikkum,  oru  samuththiramuthal  ma’ru  samuththiramvaraikkum,  oru  parvathamuthal  ma’ru  parvathamvaraikkumu'l'la  janangga'l  unnidaththi’rku  varuvaarga'l.  (meegaa  7:12)

ஆனாலும்  தன்  குடிகளினிமித்தமும்  அவர்கள்  கிரியைகளுடைய  பலன்களினிமித்தமும்  தேசம்  பாழாயிருக்கும்.  (மீகா  7:13)

aanaalum  than  kudiga'linimiththamum  avarga'l  kiriyaiga'ludaiya  palanga'linimiththamum  theasam  paazhaayirukkum.  (meegaa  7:13)

கர்மேலின்  நடுவிலே  தனித்து  வனவாசமாயிருக்கிற  உமது  சுதந்தரமான  மந்தையாகிய  உம்முடைய  ஜனத்தை  உமது  கோலினால்  மேய்த்தருளும்;  பூர்வநாட்களில்  மேய்ந்ததுபோலவே  அவர்கள்  பாசானிலும்  கீலேயாத்திலும்  மேய்வார்களாக.  (மீகா  7:14)

karmealin  naduvilea  thaniththu  vanavaasamaayirukki’ra  umathu  suthantharamaana  manthaiyaagiya  ummudaiya  janaththai  umathu  koalinaal  meayththaru'lum;  poorvanaadka'lil  meaynthathupoalavea  avarga'l  baasaanilum  keeleayaaththilum  meayvaarga'laaga.  (meegaa  7:14)

நீ  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்பட்டநாளில்  நடந்ததுபோலவே  உன்னை  அதிசயங்களைக்  காணப்பண்ணுவேன்.  (மீகா  7:15)

nee  egipthu  theasaththilirunthu  pu’rappattanaa'lil  nadanthathupoalavea  unnai  athisayangga'laik  kaa'nappa'n'nuvean.  (meegaa  7:15)

புறஜாதிகள்  கண்டு  தங்களுடைய  எல்லாப்  பராக்கிரமத்தையுங்குறித்து  வெட்கப்படுவார்கள்;  கையை  வாயின்மேல்  வைத்துக்கொள்வார்கள்;  அவர்கள்  காதுகள்  செவிடாய்ப்  போகும்.  (மீகா  7:16)

pu’rajaathiga'l  ka'ndu  thangga'ludaiya  ellaap  baraakkiramaththaiyungku’riththu  vedkappaduvaarga'l;  kaiyai  vaayinmeal  vaiththukko'lvaarga'l;  avarga'l  kaathuga'l  sevidaayp  poagum.  (meegaa  7:16)

பாம்பைப்போல  மண்ணை  நக்குவார்கள்;  பூமியின்  ஊர்வனவற்றைப்  போலத்  தங்கள்  மறைவிடங்களிலிருந்து  நடுநடுங்கிப்  புறப்படுவார்கள்;  நமது  தேவனாகிய  கர்த்தரிடத்திற்குத்  திகிலோடே  சேர்ந்து,  உனக்குப்  பயப்படுவார்கள்.  (மீகா  7:17)

paambaippoala  ma'n'nai  nakkuvaarga'l;  boomiyin  oorvanavat’raip  poalath  thangga'l  ma’raividangga'lilirunthu  nadunadunggip  pu’rappaduvaarga'l;  namathu  theavanaagiya  karththaridaththi’rkuth  thigiloadea  searnthu,  unakkup  bayappaduvaarga'l.  (meegaa  7:17)

தமது  சுதந்தரத்தில்  மீதியானவர்களுடைய  அக்கிரமத்தைப்  பொறுத்து,  மீறுதலை  மன்னிக்கிற  தேவரீருக்கு  ஒப்பான  தேவன்  யார்?  அவர்  கிருபைசெய்ய  விரும்புகிறபடியால்  அவர்  என்றென்றைக்கும்  கோபம்  வையார்.  (மீகா  7:18)

thamathu  suthantharaththil  meethiyaanavarga'ludaiya  akkiramaththaip  po’ruththu,  mee’ruthalai  mannikki’ra  theavareerukku  oppaana  theavan  yaar?  avar  kirubaiseyya  virumbugi’rapadiyaal  avar  en’ren’raikkum  koabam  vaiyaar.  (meegaa  7:18)

அவர்  திரும்ப  நம்மேல்  இரங்குவார்;  நம்முடைய  அக்கிரமங்களை  அடக்கி,  நம்முடைய  பாவங்களையெல்லாம்  சமுத்திரத்தின்  ஆழங்களில்  போட்டுவிடுவார்.  (மீகா  7:19)

avar  thirumba  nammeal  irangguvaar;  nammudaiya  akkiramangga'lai  adakki,  nammudaiya  paavangga'laiyellaam  samuththiraththin  aazhangga'lil  poattuviduvaar.  (meegaa  7:19)

தேவரீர்  பூர்வநாட்கள்முதல்  எங்கள்  பிதாக்களுக்கு  ஆணையிட்ட  சத்தியத்தை  யாக்கோபுக்கும்,  கிருபையை  ஆபிரகாமுக்கும்  கட்டளையிடுவீராக.  (மீகா  7:20)

theavareer  poorvanaadka'lmuthal  engga'l  pithaakka'lukku  aa'naiyitta  saththiyaththai  yaakkoabukkum,  kirubaiyai  aabirahaamukkum  katta'laiyiduveeraaga.  (meegaa  7:20)


Meegaa 6 | மீகா 6 | Micah 6

கர்த்தர்  சொல்லுகிறதைக்  கேளுங்கள்;  நீ  எழுந்து,  பர்வதங்களுக்குமுன்  உன்  வழக்கைச்  சொல்;  மலைகள்  உன்  சத்தத்தைக்  கேட்கக்கடவது.  (மீகா  6:1)

karththar  sollugi’rathaik  kea'lungga'l;  nee  ezhunthu,  parvathangga'lukkumun  un  vazhakkaich  sol;  malaiga'l  un  saththaththaik  keadkakkadavathu.  (meegaa  6:1)

பர்வதங்களே,  பூமியின்  உறுதியான  அஸ்திபாரங்களே,  கர்த்தருடைய  வழக்கைக்  கேளுங்கள்;  கர்த்தருக்கு  அவர்  ஜனத்தோடே  வழக்கு  இருக்கிறது;  இஸ்ரவேலோடே  அவர்  வழக்காடுவார்.  (மீகா  6:2)

parvathangga'lea,  boomiyin  u’ruthiyaana  asthibaarangga'lea,  karththarudaiya  vazhakkaik  kea'lungga'l;  karththarukku  avar  janaththoadea  vazhakku  irukki’rathu;  isravealoadea  avar  vazhakkaaduvaar.  (meegaa  6:2)

என்  ஜனமே,  நான்  உனக்கு  என்ன  செய்தேன்?  நான்  எதினால்  உன்னை  விசனப்படுத்தினேன்?  எனக்கு  எதிரே  உத்தரவு  சொல்.  (மீகா  6:3)

en  janamea,  naan  unakku  enna  seythean?  naan  ethinaal  unnai  visanappaduththinean?  enakku  ethirea  uththaravu  sol.  (meegaa  6:3)

நான்  உன்னை  எகிப்துதேசத்திலிருந்து  வரப்பண்ணி,  அடிமைத்தன  வீட்டிலிருந்த  உன்னை  மீட்டுக்கொண்டு,  மோசே  ஆரோன்  மீரியாம்  என்பவர்களை  உனக்கு  முன்பாக  அனுப்பினேன்.  (மீகா  6:4)

naan  unnai  egipthutheasaththilirunthu  varappa'n'ni,  adimaiththana  veettiliruntha  unnai  meettukko'ndu,  moasea  aaroan  meeriyaam  enbavarga'lai  unakku  munbaaga  anuppinean.  (meegaa  6:4)

என்  ஜனமே,  மோவாபின்  ராஜாவாகிய  பாலாக்  பண்ணின  யோசனை  இன்னதென்றும்,  பேயோரின்  குமாரனான  பிலேயாம்  அவனுக்குப்  பிரதியுத்தரமாகச்  சொன்னது  இன்னதென்றும்,  சித்தீம்  தொடங்கி  கில்கால்மட்டும்  நடந்தது  இன்னதென்றும்,  நீ  கர்த்தருடைய  நீதிகளை  அறிந்துகொள்ளும்படி  நினைத்துக்கொள்.  (மீகா  6:5)

en  janamea,  moavaabin  raajaavaagiya  baalaak  pa'n'nina  yoasanai  innathen’rum,  beayoarin  kumaaranaana  bileayaam  avanukkup  pirathiyuththaramaagach  sonnathu  innathen’rum,  siththeem  thodanggi  kilgaalmattum  nadanthathu  innathen’rum,  nee  karththarudaiya  neethiga'lai  a’rinthuko'l'lumpadi  ninaiththukko'l.  (meegaa  6:5)

என்னத்தைக்கொண்டு  நான்  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து,  உன்னதமான  தேவனுக்கு  முன்பாகப்  பணிந்துகொள்வேன்?  தகனபலிகளைக்கொண்டும்,  ஒரு  வயது  கன்றுக்குட்டிகளைக்கொண்டும்  அவர்  சந்நிதியில்  வரவேண்டுமோ?  (மீகா  6:6)

ennaththaikko'ndu  naan  karththarudaiya  sannithiyil  vanthu,  unnathamaana  theavanukku  munbaagap  pa'ninthuko'lvean?  thaganabaliga'laikko'ndum,  oru  vayathu  kan’rukkuttiga'laikko'ndum  avar  sannithiyil  varavea'ndumoa?  (meegaa  6:6)

ஆயிரங்களான  ஆட்டுக்கடாக்களின்பேரிலும்,  எண்ணெயாய்  ஓடுகிற  பதினாயிரங்களான  ஆறுகளின்பேரிலும்,  கர்த்தர்  பிரியமாயிருப்பாரோ?  என்  அக்கிரமத்தைப்  போக்க  என்  முதற்பேறானவனையும்,  என்  ஆத்துமாவின்  பாவத்தைப்  போக்க  என்  கர்ப்பக்கனியையும்  கொடுக்கவேண்டுமோ?  (மீகா  6:7)

aayirangga'laana  aattukkadaakka'linpearilum,  e'n'neyaay  oadugi’ra  pathinaayirangga'laana  aa’ruga'linpearilum,  karththar  piriyamaayiruppaaroa?  en  akkiramaththaip  poakka  en  mutha’rpea’raanavanaiyum,  en  aaththumaavin  paavaththaip  poakka  en  karppakkaniyaiyum  kodukkavea'ndumoa?  (meegaa  6:7)

மனுஷனே,  நன்மை  இன்னதென்று  அவர்  உனக்கு  அறிவித்திருக்கிறார்;  நியாயஞ்செய்து,  இரக்கத்தைச்  சிநேகித்து,  உன்  தேவனுக்கு  முன்பாக  மனத்தாழ்மையாய்  நடப்பதை  அல்லாமல்  வேறே  என்னத்தைக்  கர்த்தர்  உன்னிடத்தில்  கேட்கிறார்.  (மீகா  6:8)

manushanea,  nanmai  innathen’ru  avar  unakku  a’riviththirukki’raar;  niyaayagnseythu,  irakkaththaich  sineagiththu,  un  theavanukku  munbaaga  manaththaazhmaiyaay  nadappathai  allaamal  vea’rea  ennaththaik  karththar  unnidaththil  keadki’raar.  (meegaa  6:8)

கர்த்தருடைய  சத்தம்  நகரத்தை  நோக்கிக்  கூப்பிடுகிறது;  ஞானமுள்ளவன்  உம்முடைய  நாமத்தை  மதிப்பான்;  மிலாற்றிற்கும்  அதை  நேமித்தவருக்கும்  செவிகொடுங்கள்.  (மீகா  6:9)

karththarudaiya  saththam  nagaraththai  noakkik  kooppidugi’rathu;  gnaanamu'l'lavan  ummudaiya  naamaththai  mathippaan;  milaat’ri’rkum  athai  neamiththavarukkum  sevikodungga'l.  (meegaa  6:9)

துன்மார்க்கனுடைய  வீட்டிலே  துன்மார்க்கத்தினால்  சம்பாதித்த  பொக்கிஷங்களும்,  அருவருக்கப்படத்தக்க  குறைந்த  மரக்காலும்  இன்னும்  இருக்கிறதல்லவோ?  (மீகா  6:10)

thunmaarkkanudaiya  veettilea  thunmaarkkaththinaal  sambaathiththa  pokkishangga'lum,  aruvarukkappadaththakka  ku’raintha  marakkaalum  innum  irukki’rathallavoa?  (meegaa  6:10)

கள்ளத்தராசும்  கள்ளப்  படிக்கற்களுள்ள  பையும்  இருக்கும்போது,  அவர்களைச்  சுத்தமுள்ளவர்களென்று  எண்ணுவேனோ?  (மீகா  6:11)

ka'l'laththaraasum  ka'l'lap  padikka’rka'lu'l'la  paiyum  irukkumpoathu,  avarga'laich  suththamu'l'lavarga'len’ru  e'n'nuveanoa?  (meegaa  6:11)

அவர்களில்  ஐசுவரியமுள்ளவர்கள்  கொடுமையால்  நிறைந்திருக்கிறார்கள்;  அவர்களுக்குள்  வாசமாயிருக்கிறவர்கள்  பொய்பேசுகிறார்கள்;  அவர்கள்  வாயிலுள்ள  நாவு  கபடமுள்ளது.  (மீகா  6:12)

avarga'lil  aisuvariyamu'l'lavarga'l  kodumaiyaal  ni’rainthirukki’raarga'l;  avarga'lukku'l  vaasamaayirukki’ravarga'l  poypeasugi’raarga'l;  avarga'l  vaayilu'l'la  naavu  kabadamu'l'lathu.  (meegaa  6:12)

ஆகையால்  நான்  உன்  பாவங்களினிமித்தம்  உன்னை  அடித்துப்  பாழாக்குகிறதினால்  உன்னைப்  பலட்சயமாக்குவேன்.  (மீகா  6:13)

aagaiyaal  naan  un  paavangga'linimiththam  unnai  adiththup  paazhaakkugi’rathinaal  unnaip  paladchayamaakkuvean.  (meegaa  6:13)

நீ  புசித்தும்  திருப்தியடையாதிருப்பாய்;  உனக்குள்ளே  சோர்வுண்டாகும்;  நீ  பதனம்  பண்ணியும்  தப்புவிப்பதில்லை;  நீ  தப்புவிப்பதையும்  பட்டயத்துக்கு  ஒப்புக்கொடுப்பேன்.  (மீகா  6:14)

nee  pusiththum  thirupthiyadaiyaathiruppaay;  unakku'l'lea  soarvu'ndaagum;  nee  pathanam  pa'n'niyum  thappuvippathillai;  nee  thappuvippathaiyum  pattayaththukku  oppukkoduppean.  (meegaa  6:14)

நீ  விதைத்தும்  அறுக்காமற்போவாய்;  நீ  ஒலிவப்பழங்களையும்  திராட்சப்பழங்களையும்  ஆலையாடின  போதிலும்,  எண்ணெய்  பூசிக்கொள்வதுமில்லை,  இரசம்  குடிப்பதுமில்லை.  (மீகா  6:15)

nee  vithaiththum  a’rukkaama’rpoavaay;  nee  olivappazhangga'laiyum  thiraadchappazhangga'laiyum  aalaiyaadina  poathilum,  e'n'ney  poosikko'lvathumillai,  irasam  kudippathumillai.  (meegaa  6:15)

நான்  உன்னைப்  பாழாகவும்  உன்  குடிகளை  ஈசலிட்டு  நிந்திக்கிற  நிந்தையாகவும்  வைக்கும்படி,  உம்ரியினுடைய  கட்டளைகளும்  ஆகாப்  வீட்டாருடைய  எல்லாச்  செய்கைகளும்  கைக்கொள்ளப்பட்டுவருகிறது;  அவர்களுடைய  ஆலோசனைகளிலே  நடக்கிறீர்கள்;  ஆகையால்  என்  ஜனத்தின்  நிந்தையைச்  சுமப்பீர்கள்.  (மீகா  6:16)

naan  unnaip  paazhaagavum  un  kudiga'lai  eesalittu  ninthikki’ra  ninthaiyaagavum  vaikkumpadi,  umriyinudaiya  katta'laiga'lum  aagaab  veettaarudaiya  ellaach  seygaiga'lum  kaikko'l'lappattuvarugi’rathu;  avarga'ludaiya  aaloasanaiga'lilea  nadakki’reerga'l;  aagaiyaal  en  janaththin  ninthaiyaich  sumappeerga'l.  (meegaa  6:16)