Showing posts with label Filipi. Show all posts
Showing posts with label Filipi. Show all posts

Wednesday, June 01, 2016

Pilippiyar 4 | பிலிப்பியர் 4 | Philippians 4

ஆதலால்,  எனக்குப்  பிரியமும்  வாஞ்சையுமான  சகோதரரே,  எனக்குச்  சந்தோஷமும்  கிரீடமுமானவர்களே,  பிரியமானவர்களே,  இந்தப்படியே  கர்த்தருக்குள்  நிலைத்திருங்கள்.  (பிலிப்பியர்  4:1)

aathalaal,  enakkup  piriyamum  vaagnchaiyumaana  sagoathararea,  enakkuch  santhoashamum  kireedamumaanavarga'lea,  piriyamaanavarga'lea,  inthappadiyea  karththarukku'l  nilaiththirungga'l.  (pilippiyar  4:1)

கர்த்தருக்குள்  ஒரே  சிந்தையாயிருக்க  எயோதியாளுக்கும்  சிந்திகேயாளுக்கும்  புத்திசொல்லுகிறேன்.  (பிலிப்பியர்  4:2)

karththarukku'l  orea  sinthaiyaayirukka  eyoathiyaa'lukkum  sinthikeayaa'lukkum  buththisollugi’rean.  (pilippiyar  4:2)

அன்றியும்,  என்  உத்தம  கூட்டாளியே,  அவர்களுக்கு  உதவியாயிருக்கும்படி  உன்னையும்  வேண்டிக்கொள்ளுகிறேன்;  அவர்கள்  கிலேமெந்தோடும்  மற்ற  என்  உடன்வேலையாட்களோடுங்கூடச்  சுவிசேஷ  விஷயத்தில்  என்னோடேகூட  மிகவும்  பிரயாசப்பட்டார்கள்,  அவர்களுடைய  நாமங்கள்  ஜீவபுஸ்தகத்தில்  இருக்கிறது.  (பிலிப்பியர்  4:3)

an’riyum,  en  uththama  koottaa'liyea,  avarga'lukku  uthaviyaayirukkumpadi  unnaiyum  vea'ndikko'l'lugi’rean;  avarga'l  kileamenthoadum  mat’ra  en  udanvealaiyaadka'loadungkoodach  suviseasha  vishayaththil  ennoadeakooda  migavum  pirayaasappattaarga'l,  avarga'ludaiya  naamangga'l  jeevapusthagaththil  irukki’rathu.  (pilippiyar  4:3)

கர்த்தருக்குள்  எப்பொழுதும்  சந்தோஷமாயிருங்கள்;  சந்தோஷமாயிருங்கள்  என்று  மறுபடியும்  சொல்லுகிறேன்.  (பிலிப்பியர்  4:4)

karththarukku'l  eppozhuthum  santhoashamaayirungga'l;  santhoashamaayirungga'l  en’ru  ma’rupadiyum  sollugi’rean.  (pilippiyar  4:4)

உங்கள்  சாந்தகுணம்  எல்லா  மனுஷருக்கும்  தெரிந்திருப்பதாக.  கர்த்தர்  சமீபமாயிருக்கிறார்.  (பிலிப்பியர்  4:5)

ungga'l  saanthaku'nam  ellaa  manusharukkum  therinthiruppathaaga.  karththar  sameebamaayirukki’raar.  (pilippiyar  4:5)

நீங்கள்  ஒன்றுக்குங்  கவலைப்படாமல்,  எல்லாவற்றையுங்குறித்து  உங்கள்  விண்ணப்பங்களை  ஸ்தோத்திரத்தோடே  கூடிய  ஜெபத்தினாலும்  வேண்டுதலினாலும்  தேவனுக்குத்  தெரியப்படுத்துங்கள்.  (பிலிப்பியர்  4:6)

neengga'l  on’rukkung  kavalaippadaamal,  ellaavat’raiyungku’riththu  ungga'l  vi'n'nappangga'lai  sthoaththiraththoadea  koodiya  jebaththinaalum  vea'nduthalinaalum  theavanukkuth  theriyappaduththungga'l.  (pilippiyar  4:6)

அப்பொழுது,  எல்லாப்  புத்திக்கும்  மேலான  தேவசமாதானம்  உங்கள்  இருதயங்களையும்  உங்கள்  சிந்தைகளையும்  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளாகக்  காத்துக்கொள்ளும்.  (பிலிப்பியர்  4:7)

appozhuthu,  ellaap  buththikkum  mealaana  theavasamaathaanam  ungga'l  iruthayangga'laiyum  ungga'l  sinthaiga'laiyum  ki’risthu  iyeasuvukku'l'laagak  kaaththukko'l'lum.  (pilippiyar  4:7)

கடைசியாக,  சகோதரரே,  உண்மையுள்ளவைகளெவைகளோ,  ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ,  நீதியுள்ளவைகளெவைகளோ,  கற்புள்ளவைகளெவைகளோ,  அன்புள்ளவைகளெவைகளோ,  நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ,  புண்ணியம்  எதுவோ,  புகழ்  எதுவோ  அவைகளையே  சிந்தித்துக்கொண்டிருங்கள்.  (பிலிப்பியர்  4:8)

kadaisiyaaga,  sagoathararea,  u'nmaiyu'l'lavaiga'levaiga'loa,  ozhukkamu'l'lavaiga'levaiga'loa,  neethiyu'l'lavaiga'levaiga'loa,  ka’rpu'l'lavaiga'levaiga'loa,  anbu'l'lavaiga'levaiga'loa,  na’rkeerththiyu'l'lavaiga'levaiga'loa,  pu'n'niyam  ethuvoa,  pugazh  ethuvoa  avaiga'laiyea  sinthiththukko'ndirungga'l.  (pilippiyar  4:8)

நீங்கள்  என்னிடத்தில்  கற்றும்  அடைந்தும்  கேட்டும்  கண்டும்  இருக்கிறவைகளெவைகளோ,  அவைகளையே  செய்யுங்கள்;  அப்பொழுது  சமாதானத்தின்  தேவன்  உங்களோடிருப்பார்.  (பிலிப்பியர்  4:9)

neengga'l  ennidaththil  kat’rum  adainthum  keattum  ka'ndum  irukki’ravaiga'levaiga'loa,  avaiga'laiyea  seyyungga'l;  appozhuthu  samaathaanaththin  theavan  ungga'loadiruppaar.  (pilippiyar  4:9)

என்னை  விசாரிப்பதற்கு  நீங்கள்  இப்பொழுது  மறுபடியும்  மனமலர்ந்தபடியினாலே  கர்த்தருக்குள்  மிகவும்  சந்தோஷப்பட்டேன்;  இப்படிச்  செய்ய  எண்ணங்கொண்டிருந்தீர்கள்,  சமயம்மாத்திரம்  உங்களுக்கு  நேரிடவில்லை.  (பிலிப்பியர்  4:10)

ennai  visaarippatha’rku  neengga'l  ippozhuthu  ma’rupadiyum  manamalarnthapadiyinaalea  karththarukku'l  migavum  santhoashappattean;  ippadich  seyya  e'n'nangko'ndiruntheerga'l,  samayammaaththiram  ungga'lukku  nearidavillai.  (pilippiyar  4:10)

என்  குறைச்சலினால்  நான்  இப்படிச்  சொல்லுகிறதில்லை;  ஏனெனில்  நான்  எந்த  நிலைமையிலிருந்தாலும்  மனரம்மியமாயிருக்கக்  கற்றுக்கொண்டேன்.  (பிலிப்பியர்  4:11)

en  ku’raichchalinaal  naan  ippadich  sollugi’rathillai;  eanenil  naan  entha  nilaimaiyilirunthaalum  manarammiyamaayirukkak  kat’rukko'ndean.  (pilippiyar  4:11)

தாழ்ந்திருக்கவும்  எனக்குத்  தெரியும்,  வாழ்ந்திருக்கவும்  எனக்குத்  தெரியும்;  எவ்விடத்திலும்  எல்லாவற்றிலும்  திருப்தியாயிருக்கவும்  பட்டினியாயிருக்கவும்,  பரிபூரணமடையவும்  குறைவுபடவும்  போதிக்கப்பட்டேன்.  (பிலிப்பியர்  4:12)

thaazhnthirukkavum  enakkuth  theriyum,  vaazhnthirukkavum  enakkuth  theriyum;  evvidaththilum  ellaavat’rilum  thirupthiyaayirukkavum  pattiniyaayirukkavum,  paripoora'namadaiyavum  ku’raivupadavum  poathikkappattean.  (pilippiyar  4:12)

என்னைப்  பெலப்படுத்துகிற  கிறிஸ்துவினாலே  எல்லாவற்றையுஞ்செய்ய  எனக்குப்  பெலனுண்டு.  (பிலிப்பியர்  4:13)

ennaip  belappaduththugi’ra  ki’risthuvinaalea  ellaavat’raiyugnseyya  enakkup  belanu'ndu.  (pilippiyar  4:13)

ஆகிலும்  நீங்கள்  என்  உபத்திரவத்தில்  என்னோடே  உடன்பட்டது  நலமாயிருக்கிறது.  (பிலிப்பியர்  4:14)

aagilum  neengga'l  en  ubaththiravaththil  ennoadea  udanpattathu  nalamaayirukki’rathu.  (pilippiyar  4:14)

மேலும்,  பிலிப்பியரே,  சுவிசேஷத்தின்  ஆரம்பத்திலே  நான்  மக்கெதோனியாவிலிருந்து  புறப்பட்டபோது,  கொடுக்கல்  வாங்கல்  காரியத்தில்  நீங்கள்மாத்திரம்  எனக்கு  உடன்பட்டதேயல்லாமல்,  வேறொரு  சபையும்  உடன்படவில்லை  என்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  (பிலிப்பியர்  4:15)

mealum,  pilippiyarea,  suviseashaththin  aarambaththilea  naan  makkethoaniyaavilirunthu  pu’rappattapoathu,  kodukkal  vaanggal  kaariyaththil  neengga'lmaaththiram  enakku  udanpattatheayallaamal,  vea’roru  sabaiyum  udanpadavillai  en’ru  neengga'l  a’rinthirukki’reerga'l.  (pilippiyar  4:15)

நான்  தெசலோனிக்கேயிலிருந்தபோதும்,  என்  குறைச்சலை  நீக்கும்படி  நீங்கள்  இரண்டொருதரம்  அனுப்பினீர்கள்.  (பிலிப்பியர்  4:16)

naan  thesaloanikkeayilirunthapoathum,  en  ku’raichchalai  neekkumpadi  neengga'l  ira'ndorutharam  anuppineerga'l.  (pilippiyar  4:16)

உபகாரத்தை  நான்  நாடாமல்,  உங்கள்  கணக்குக்குப்  பலன்  பெருகும்படியே  நாடுகிறேன்.  (பிலிப்பியர்  4:17)

ubagaaraththai  naan  naadaamal,  ungga'l  ka'nakkukkup  palan  perugumpadiyea  naadugi’rean.  (pilippiyar  4:17)

எல்லாம்  எனக்குக்  கிடைத்தது,  பரிபூரணமும்  உண்டாயிருக்கிறது;  உங்களால்  அனுப்பப்பட்டவைகளைச்  சுகந்த  வாசனையும்  தேவனுக்குப்  பிரியமான  உகந்த  பலியுமாக  எப்பாப்பிரோதீத்துவின்  கையில்  வரப்பற்றிக்கொண்டபடியால்  நான்  திருப்தியடைந்திருக்கிறேன்.  (பிலிப்பியர்  4:18)

ellaam  enakkuk  kidaiththathu,  paripoora'namum  u'ndaayirukki’rathu;  ungga'laal  anuppappattavaiga'laich  sugantha  vaasanaiyum  theavanukkup  piriyamaana  ugantha  baliyumaaga  eppaappiroatheeththuvin  kaiyil  varappat’rikko'ndapadiyaal  naan  thirupthiyadainthirukki’rean.  (pilippiyar  4:18)

என்  தேவன்  தம்முடைய  ஐசுவரியத்தின்படி  உங்கள்  குறைவையெல்லாம்  கிறிஸ்து  இயேசுவுக்குள்  மகிமையிலே  நிறைவாக்குவார்.  (பிலிப்பியர்  4:19)

en  theavan  thammudaiya  aisuvariyaththinpadi  ungga'l  ku’raivaiyellaam  ki’risthu  iyeasuvukku'l  magimaiyilea  ni’raivaakkuvaar.  (pilippiyar  4:19)

நம்முடைய  பிதாவாகிய  தேவனானவருக்கு  என்றென்றைக்கும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  (பிலிப்பியர்  4:20)

nammudaiya  pithaavaagiya  theavanaanavarukku  en’ren’raikkum  magimai  u'ndaavathaaga.  aamen.  (pilippiyar  4:20)

கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான  பரிசுத்தவான்கள்  யாவருக்கும்  வாழ்த்துதல்  சொல்லுங்கள்.  என்னோடிருக்கிற  சகோதரர்கள்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (பிலிப்பியர்  4:21)

ki’risthu  iyeasuvukku'l'laana  parisuththavaanga'l  yaavarukkum  vaazhththuthal  sollungga'l.  ennoadirukki’ra  sagoathararga'l  ungga'lukku  vaazhththuthal  sollugi’raarga'l.  (pilippiyar  4:21)

பரிசுத்தவான்கள்  அனைவரும்,  விசேஷமாக  இராயனுடைய  அரமனையிலுள்ளவர்களும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (பிலிப்பியர்  4:22)

parisuththavaanga'l  anaivarum,  viseashamaaga  iraayanudaiya  aramanaiyilu'l'lavarga'lum  ungga'lukku  vaazhththuthal  sollugi’raarga'l.  (pilippiyar  4:22)

நமது  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய  கிருபை  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  (பிலிப்பியர்  4:23)

namathu  karththaraagiya  iyeasuki’risthuvinudaiya  kirubai  ungga'lanaivaroadungkooda  iruppathaaga.  aamen.  (pilippiyar  4:23)


Pilippiyar 3 | பிலிப்பியர் 3 | Philippians 3

மேலும்,  என்  சகோதரரே,  கர்த்தருக்குள்  சந்தோஷப்படுங்கள்.  எழுதினவைகளையே  எழுதுவது  எனக்கு  வருத்தமல்ல,  அது  உங்களுக்கு  நலமாயிருக்கும்.  (பிலிப்பியர்  3:1)

mealum,  en  sagoathararea,  karththarukku'l  santhoashappadungga'l.  ezhuthinavaiga'laiyea  ezhuthuvathu  enakku  varuththamalla,  athu  ungga'lukku  nalamaayirukkum.  (pilippiyar  3:1)

நாய்களுக்கு  எச்சரிக்கையாயிருங்கள்,  பொல்லாத  வேலையாட்களுக்கு  எச்சரிக்கையாயிருங்கள்,  சுன்னத்துக்காரருக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  (பிலிப்பியர்  3:2)

naayga'lukku  echcharikkaiyaayirungga'l,  pollaatha  vealaiyaadka'lukku  echcharikkaiyaayirungga'l,  sunnaththukkaararukku  echcharikkaiyaayirungga'l.  (pilippiyar  3:2)

ஏனெனில்,  மாம்சத்தின்மேல்  நம்பிக்கையாயிராமல்,  ஆவியினாலே  தேவனுக்கு  ஆராதனைசெய்து,  கிறிஸ்து  இயேசுவுக்குள்  மேன்மைபாராட்டுகிற  நாமே  விருத்தசேதனமுள்ளவர்கள்.  (பிலிப்பியர்  3:3)

eanenil,  maamsaththinmeal  nambikkaiyaayiraamal,  aaviyinaalea  theavanukku  aaraathanaiseythu,  ki’risthu  iyeasuvukku'l  meanmaipaaraattugi’ra  naamea  viruththaseathanamu'l'lavarga'l.  (pilippiyar  3:3)

மாம்சத்தின்மேல்  நம்பிக்கை  வைக்கவேண்டுமானால்  நானும்  வைக்கலாம்;  வேறொருவன்  மாம்சத்தின்மேல்  நம்பிக்கையாயிருக்க  நினைத்தால்  நான்  அதிகமாய்  அப்படிச்  செய்யலாம்.  (பிலிப்பியர்  3:4)

maamsaththinmeal  nambikkai  vaikkavea'ndumaanaal  naanum  vaikkalaam;  vea’roruvan  maamsaththinmeal  nambikkaiyaayirukka  ninaiththaal  naan  athigamaay  appadich  seyyalaam.  (pilippiyar  3:4)

நான்  எட்டாம்  நாளில்  விருத்தசேதனமடைந்தவன்,  இஸ்ரவேல்  வம்சத்தான்,  பென்யமீன்  கோத்திரத்தான்,  எபிரெயரில்  பிறந்த  எபிரெயன்,  நியாயப்பிரமாணத்தின்படி  பரிசேயன்;  (பிலிப்பியர்  3:5)

naan  ettaam  naa'lil  viruththaseathanamadainthavan,  israveal  vamsaththaan,  benyameen  koaththiraththaan,  ebireyaril  pi’rantha  ebireyan,  niyaayappiramaa'naththinpadi  pariseayan;  (pilippiyar  3:5)

பக்திவைராக்கியத்தின்படி  சபையைத்  துன்பப்படுத்தினவன்,  நியாயப்பிரமாணத்திற்குரிய  நீதியின்படி  குற்றஞ்சாட்டப்படாதவன்.  (பிலிப்பியர்  3:6)

bakthivairaakkiyaththinpadi  sabaiyaith  thunbappaduththinavan,  niyaayappiramaa'naththi’rkuriya  neethiyinpadi  kut’ragnsaattappadaathavan.  (pilippiyar  3:6)

ஆகிலும்,  எனக்கு  லாபமாயிருந்தவைகளெவைகளோ  அவைகளைக்  கிறிஸ்துவுக்காக  நஷ்டமென்று  எண்ணினேன்.  (பிலிப்பியர்  3:7)

aagilum,  enakku  laabamaayirunthavaiga'levaiga'loa  avaiga'laik  ki’risthuvukkaaga  nashdamen’ru  e'n'ninean.  (pilippiyar  3:7)

அதுமாத்திரமல்ல,  என்  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவை  அறிகிற  அறிவின்  மேன்மைக்காக  எல்லாவற்றையும்  நஷ்டமென்று  எண்ணிக்கொண்டிருக்கிறேன்.  (பிலிப்பியர்  3:8)

athumaaththiramalla,  en  karththaraagiya  ki’risthu  iyeasuvai  a’rigi’ra  a’rivin  meanmaikkaaga  ellaavat’raiyum  nashdamen’ru  e'n'nikko'ndirukki’rean.  (pilippiyar  3:8)

நான்  கிறிஸ்துவை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும்,  நியாயப்பிரமாணத்தினால்  வருகிற  சுயநீதியை  உடையவனாயிராமல்,  கிறிஸ்துவைப்  பற்றும்  விசுவாசத்தினால்  வருகிறதும்  விசுவாசமூலமாய்த்  தேவனால்  உண்டாயிருக்கிறதுமான  நீதியை  உடையவனாயிருந்து,  கிறிஸ்துவுக்குள்  இருக்கிறவனென்று  காணப்படும்படிக்கும்,  (பிலிப்பியர்  3:9)

naan  ki’risthuvai  aathaayappaduththikko'l'lumpadikkum,  niyaayappiramaa'naththinaal  varugi’ra  suyaneethiyai  udaiyavanaayiraamal,  ki’risthuvaip  pat’rum  visuvaasaththinaal  varugi’rathum  visuvaasamoolamaayth  theavanaal  u'ndaayirukki’rathumaana  neethiyai  udaiyavanaayirunthu,  ki’risthuvukku'l  irukki’ravanen’ru  kaa'nappadumpadikkum,  (pilippiyar  3:9)

இப்படி  நான்  அவரையும்  அவருடைய  உயிர்த்தெழுதலின்  வல்லமையையும்,  அவருடைய  பாடுகளின்  ஐக்கியத்தையும்  அறிகிறதற்கும்,  அவருடைய  மரணத்திற்கொப்பான  மரணத்திற்குள்ளாகி,  எப்படியாயினும்  நான்  மரித்தோரிலிருந்து  உயிரோடெழுந்திருப்பதற்குத்  தகுதியாகும்படிக்கும்,  (பிலிப்பியர்  3:10)

ippadi  naan  avaraiyum  avarudaiya  uyirththezhuthalin  vallamaiyaiyum,  avarudaiya  paaduga'lin  aikkiyaththaiyum  a’rigi’ratha’rkum,  avarudaiya  mara'naththi’rkoppaana  mara'naththi’rku'l'laagi,  eppadiyaayinum  naan  mariththoarilirunthu  uyiroadezhunthiruppatha’rkuth  thaguthiyaagumpadikkum,  (pilippiyar  3:10)

அவருக்காக  எல்லாவற்றையும்  நஷ்டமென்று  விட்டேன்;  குப்பையுமாக  எண்ணுகிறேன்.  (பிலிப்பியர்  3:11)

avarukkaaga  ellaavat’raiyum  nashdamen’ru  vittean;  kuppaiyumaaga  e'n'nugi’rean.  (pilippiyar  3:11)

நான்  அடைந்தாயிற்று,  அல்லது  முற்றும்  தேறினவனானேன்  என்று  எண்ணாமல்,  கிறிஸ்து  இயேசுவினால்  நான்  எதற்காகப்  பிடிக்கப்பட்டேனோ  அதை  நான்  பிடித்துக்கொள்ளும்படி  ஆசையாய்த்  தொடருகிறேன்.  (பிலிப்பியர்  3:12)

naan  adainthaayit’ru,  allathu  mut’rum  thea’rinavanaanean  en’ru  e'n'naamal,  ki’risthu  iyeasuvinaal  naan  etha’rkaagap  pidikkappatteanoa  athai  naan  pidiththukko'l'lumpadi  aasaiyaayth  thodarugi’rean.  (pilippiyar  3:12)

சகோதரரே,  அதைப்  பிடித்துக்கொண்டேனென்று  நான்  எண்ணுகிறதில்லை;  ஒன்று  செய்கிறேன்,  பின்னானவைகளை  மறந்து,  முன்னானவைகளை  நாடி,  (பிலிப்பியர்  3:13)

sagoathararea,  athaip  pidiththukko'ndeanen’ru  naan  e'n'nugi’rathillai;  on’ru  seygi’rean,  pinnaanavaiga'lai  ma’ranthu,  munnaanavaiga'lai  naadi,  (pilippiyar  3:13)

கிறிஸ்து  இயேசுவுக்குள்  தேவன்  அழைத்த  பரம  அழைப்பின்  பந்தயப்பொருளுக்காக  இலக்கை  நோக்கித்  தொடருகிறேன்.  (பிலிப்பியர்  3:14)

ki’risthu  iyeasuvukku'l  theavan  azhaiththa  parama  azhaippin  panthayapporu'lukkaaga  ilakkai  noakkith  thodarugi’rean.  (pilippiyar  3:14)

ஆகையால்,  நம்மில்  தேறினவர்கள்  யாவரும்  இந்தச்  சிந்தையாயிருக்கக்கடவோம்;  எந்தக்  காரியத்திலாவது  நீங்கள்  வேறே  சிந்தையாயிருந்தால்,  அதையும்  தேவன்  உங்களுக்கு  வெளிப்படுத்துவார்.  (பிலிப்பியர்  3:15)

aagaiyaal,  nammil  thea’rinavarga'l  yaavarum  inthach  sinthaiyaayirukkakkadavoam;  enthak  kaariyaththilaavathu  neengga'l  vea’rea  sinthaiyaayirunthaal,  athaiyum  theavan  ungga'lukku  ve'lippaduththuvaar.  (pilippiyar  3:15)

ஆகிலும்  நாம்  எதுவரையில்  தேறியிருக்கிறோமோ,  அதுமுதல்  ஒரே  ஒழுங்காய்  நடந்துகொண்டு,  ஒரே  சிந்தையாயிருப்போமாக.  (பிலிப்பியர்  3:16)

aagilum  naam  ethuvaraiyil  thea’riyirukki’roamoa,  athumuthal  orea  ozhunggaay  nadanthuko'ndu,  orea  sinthaiyaayiruppoamaaga.  (pilippiyar  3:16)

சகோதரரே,  நீங்கள்  என்னோடேகூடப்  பின்பற்றுகிறவர்களாகி,  நாங்கள்  உங்களுக்கு  வழிகாட்டுகிறபடி  நடக்கிறவர்களை  மாதிரியாக  நோக்குங்கள்.  (பிலிப்பியர்  3:17)

sagoathararea,  neengga'l  ennoadeakoodap  pinpat’rugi’ravarga'laagi,  naangga'l  ungga'lukku  vazhikaattugi’rapadi  nadakki’ravarga'lai  maathiriyaaga  noakkungga'l.  (pilippiyar  3:17)

ஏனெனில்,  அநேகர்  வேறுவிதமாய்  நடக்கிறார்கள்;  அவர்கள்  கிறிஸ்துவின்  சிலுவைக்குப்  பகைஞரென்று  உங்களுக்கு  அநேகந்தரம்  சொன்னேன்,  இப்பொழுது  கண்ணீரோடும்  சொல்லுகிறேன்.  (பிலிப்பியர்  3:18)

eanenil,  aneagar  vea’ruvithamaay  nadakki’raarga'l;  avarga'l  ki’risthuvin  siluvaikkup  pagaignaren’ru  ungga'lukku  aneagantharam  sonnean,  ippozhuthu  ka'n'neeroadum  sollugi’rean.  (pilippiyar  3:18)

அவர்களுடைய  முடிவு  அழிவு,  அவர்களுடைய  தேவன்  வயிறு,  அவர்களுடைய  மகிமை  அவர்களுடைய  இலச்சையே,  அவர்கள்  பூமிக்கடுத்தவைகளைச்  சிந்திக்கிறார்கள்.  (பிலிப்பியர்  3:19)

avarga'ludaiya  mudivu  azhivu,  avarga'ludaiya  theavan  vayi’ru,  avarga'ludaiya  magimai  avarga'ludaiya  ilachchaiyea,  avarga'l  boomikkaduththavaiga'laich  sinthikki’raarga'l.  (pilippiyar  3:19)

நம்முடைய  குடியிருப்போ  பரலோகத்திலிருக்கிறது,  அங்கேயிருந்து  கர்த்தராயிருக்கிற  இயேசுகிறிஸ்து  என்னும்  இரட்சகர்  வர  எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  (பிலிப்பியர்  3:20)

nammudaiya  kudiyiruppoa  paraloagaththilirukki’rathu,  anggeayirunthu  karththaraayirukki’ra  iyeasuki’risthu  ennum  iradchagar  vara  ethirpaarththukko'ndirukki’roam.  (pilippiyar  3:20)

அவர்  எல்லாவற்றையும்  தமக்குக்  கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க  தம்முடைய  வல்லமையான  செயலின்படியே,  நம்முடைய  அற்பமான  சரீரத்தைத்  தம்முடைய  மகிமையான  சரீரத்திற்கு  ஒப்பாக  மறுரூபப்படுத்துவார்.  (பிலிப்பியர்  3:21)

avar  ellaavat’raiyum  thamakkuk  keezhppaduththikko'l'laththakka  thammudaiya  vallamaiyaana  seyalinpadiyea,  nammudaiya  a’rpamaana  sareeraththaith  thammudaiya  magimaiyaana  sareeraththi’rku  oppaaga  ma’ruroobappaduththuvaar.  (pilippiyar  3:21)