Showing posts with label 2 Peter. Show all posts
Showing posts with label 2 Peter. Show all posts

Saturday, June 11, 2016

2 Peathuru 3 | 2 பேதுரு 3 | 2 Peter 3


பிரியமானவர்களே,  இந்த  இரண்டாம்  நிருபத்தை  இப்பொழுது  உங்களுக்கு  எழுதுகிறேன்.  (2பேதுரு  3:1)

piriyamaanavarga'lea,  intha  ira'ndaam  nirubaththai  ippozhuthu  ungga'lukku  ezhuthugi’rean.  (2peathuru  3:1)

பரிசுத்த  தீர்க்கதரிசிகளால்  முன்சொல்லப்பட்ட  வார்த்தைகளையும்,  இரட்சகராயிருக்கிற  கர்த்தருடைய  அப்போஸ்தலராகிய  எங்களுடைய  கட்டளைகளையும்  நீங்கள்  நினைவுகூரும்படி  இந்த  நிருபங்களினால்  உங்கள்  உண்மையான  மனதை  நினைப்பூட்டி  எழுப்புகிறேன்.  (2பேதுரு  3:2)

parisuththa  theerkkatharisiga'laal  munsollappatta  vaarththaiga'laiyum,  iradchagaraayirukki’ra  karththarudaiya  appoasthalaraagiya  engga'ludaiya  katta'laiga'laiyum  neengga'l  ninaivukoorumpadi  intha  nirubangga'linaal  ungga'l  u'nmaiyaana  manathai  ninaippootti  ezhuppugi’rean.  (2peathuru  3:2)

முதலாவது  நீங்கள்  அறியவேண்டியது  என்னவெனில்:  கடைசிநாட்களில்  பரியாசக்காரர்  வந்து,  தங்கள்  சுய  இச்சைகளின்படியே  நடந்து,  (2பேதுரு  3:3)

muthalaavathu  neengga'l  a’riyavea'ndiyathu  ennavenil:  kadaisinaadka'lil  pariyaasakkaarar  vanthu,  thangga'l  suya  ichchaiga'linpadiyea  nadanthu,  (2peathuru  3:3)

அவர்  வருவார்  என்று  சொல்லுகிற  வாக்குத்தத்தம்  எங்கே?  பிதாக்கள்  நித்திரையடைந்தபின்பு  சகலமும்  சிருஷ்டிப்பின்தோற்றமுதல்  இருந்தவிதமாயிருக்கிறதே  என்று  சொல்லுவார்கள்.  (2பேதுரு  3:4)

avar  varuvaar  en’ru  sollugi’ra  vaakkuththaththam  enggea?  pithaakka'l  niththiraiyadainthapinbu  sagalamum  sirushdippinthoat’ramuthal  irunthavithamaayirukki’rathea  en’ru  solluvaarga'l.  (2peathuru  3:4)

பூர்வகாலத்தில்  தேவனுடைய  வார்த்தையினாலே  வானங்களும்,  ஜலத்தினின்று  தோன்றி  ஜலத்தினாலே  நிலைகொண்டிருக்கிற  பூமியும்  உண்டாயினவென்பதையும்,  (2பேதுரு  3:5)

poorvakaalaththil  theavanudaiya  vaarththaiyinaalea  vaanangga'lum,  jalaththinin’ru  thoan’ri  jalaththinaalea  nilaiko'ndirukki’ra  boomiyum  u'ndaayinavenbathaiyum,  (2peathuru  3:5)

அப்பொழுது  இருந்த  உலகம்  ஜலப்பிரளயத்தினாலே  அழிந்ததென்பதையும்  மனதார  அறியாமலிருக்கிறார்கள்.  (2பேதுரு  3:6)

appozhuthu  iruntha  ulagam  jalappira'layaththinaalea  azhinthathenbathaiyum  manathaara  a’riyaamalirukki’raarga'l.  (2peathuru  3:6)

இப்பொழுது  இருக்கிற  வானங்களும்  பூமியும்  அந்த  வார்த்தையினாலேயே  அக்கினிக்கு  இரையாக  வைக்கப்பட்டு,  தேவபக்தியில்லாதவர்கள்  நியாயந்தீர்க்கப்பட்டு  அழிந்துபோகும்  நாள்வரைக்கும்  காக்கப்பட்டிருக்கிறது.  (2பேதுரு  3:7)

ippozhuthu  irukki’ra  vaanangga'lum  boomiyum  antha  vaarththaiyinaaleayea  akkinikku  iraiyaaga  vaikkappattu,  theavabakthiyillaathavarga'l  niyaayantheerkkappattu  azhinthupoagum  naa'lvaraikkum  kaakkappattirukki’rathu.  (2peathuru  3:7)

பிரியமானவர்களே,  கர்த்தருக்கு  ஒருநாள்  ஆயிரம்  வருஷம்போலவும்,  ஆயிரம்  வருஷம்  ஒருநாள்போலவும்  இருக்கிறதென்கிற  இந்த  ஒரு  காரியத்தை  நீங்கள்  அறியாதிருக்கவேண்டாம்.  (2பேதுரு  3:8)

piriyamaanavarga'lea,  karththarukku  orunaa'l  aayiram  varushampoalavum,  aayiram  varusham  orunaa'lpoalavum  irukki’rathengi’ra  intha  oru  kaariyaththai  neengga'l  a’riyaathirukkavea'ndaam.  (2peathuru  3:8)

தாமதிக்கிறார்  என்று  சிலர்  எண்ணுகிறபடி,  கர்த்தர்  தமது  வாக்குத்தத்தத்தைக்குறித்துத்  தாமதமாயிராமல்;  ஒருவரும்  கெட்டுப்போகாமல்  எல்லாரும்  மனந்திரும்பவேண்டுமென்று  விரும்பி,  நம்மேல்  நீடிய  பொறுமையுள்ளவராயிருக்கிறார்.  (2பேதுரு  3:9)

thaamathikki’raar  en’ru  silar  e'n'nugi’rapadi,  karththar  thamathu  vaakkuththaththaththaikku’riththuth  thaamathamaayiraamal;  oruvarum  kettuppoagaamal  ellaarum  mananthirumbavea'ndumen’ru  virumbi,  nammeal  neediya  po’rumaiyu'l'lavaraayirukki’raar.  (2peathuru  3:9)

கர்த்தருடைய  நாள்  இரவிலே  திருடன்  வருகிறவிதமாய்  வரும்;  அப்பொழுது  வானங்கள்  மடமட  என்று  அகன்றுபோம்,  பூதங்கள்  வெந்து  உருகிப்போம்,  பூமியும்  அதிலுள்ள  கிரியைகளும்  எரிந்து  அழிந்துபோம்.  (2பேதுரு  3:10)

karththarudaiya  naa'l  iravilea  thirudan  varugi’ravithamaay  varum;  appozhuthu  vaanangga'l  madamada  en’ru  agan’rupoam,  poothangga'l  venthu  urugippoam,  boomiyum  athilu'l'la  kiriyaiga'lum  erinthu  azhinthupoam.  (2peathuru  3:10)

இப்படி  இவைகளெல்லாம்  அழிந்து  போகிறதாயிருக்கிறபடியால்  நீங்கள்  எப்படிப்பட்ட  பரிசுத்த  நடக்கையும்  தேவபக்தியும்  உள்ளவர்களாயிருக்க  வேண்டும்!  (2பேதுரு  3:11)

ippadi  ivaiga'lellaam  azhinthu  poagi’rathaayirukki’rapadiyaal  neengga'l  eppadippatta  parisuththa  nadakkaiyum  theavabakthiyum  u'l'lavarga'laayirukka  vea'ndum!  (2peathuru  3:11)

தேவனுடைய  நாள்  சீக்கிரமாய்  வரும்படிக்கு  மிகுந்த  ஆவலோடே  காத்திருங்கள்;  அந்த  நாளில்  வானங்கள்  வெந்து  அழிந்து,  பூதங்கள்  எரிந்து  உருகிப்போம்.  (2பேதுரு  3:12)

theavanudaiya  naa'l  seekkiramaay  varumpadikku  miguntha  aavaloadea  kaaththirungga'l;  antha  naa'lil  vaanangga'l  venthu  azhinthu,  poothangga'l  erinthu  urugippoam.  (2peathuru  3:12)

அவருடைய  வாக்குத்தத்தத்தின்படியே  நீதி  வாசமாயிருக்கும்  புதிய  வானங்களும்  புதிய  பூமியும்  உண்டாகுமென்று  காத்திருக்கிறோம்.  (2பேதுரு  3:13)

avarudaiya  vaakkuththaththaththinpadiyea  neethi  vaasamaayirukkum  puthiya  vaanangga'lum  puthiya  boomiyum  u'ndaagumen’ru  kaaththirukki’roam.  (2peathuru  3:13)

ஆகையால்,  பிரியமானவர்களே,  இவைகள்  வரக்  காத்திருக்கிற  நீங்கள்  கறையற்றவர்களும்  பிழையில்லாதவர்களுமாய்ச்  சமாதானத்தோடே  அவர்  சந்நிதியில்  காணப்படும்படி  ஜாக்கிரதையாயிருங்கள்.  (2பேதுரு  3:14)

aagaiyaal,  piriyamaanavarga'lea,  ivaiga'l  varak  kaaththirukki’ra  neengga'l  ka’raiyat’ravarga'lum  pizhaiyillaathavarga'lumaaych  samaathaanaththoadea  avar  sannithiyil  kaa'nappadumpadi  jaakkirathaiyaayirungga'l.  (2peathuru  3:14)

மேலும்  நம்முடைய  கர்த்தரின்  நீடிய  பொறுமையை  இரட்சிப்பென்று  எண்ணுங்கள்;  நமக்குப்  பிரியமான  சகோதரனாகிய  பவுலும்  தனக்கு  அருளப்பட்ட  ஞானத்தினாலே  இப்படியே  உங்களுக்கு  எழுதியிருக்கிறான்;  (2பேதுரு  3:15)

mealum  nammudaiya  karththarin  neediya  po’rumaiyai  iradchippen’ru  e'n'nungga'l;  namakkup  piriyamaana  sagoatharanaagiya  pavulum  thanakku  aru'lappatta  gnaanaththinaalea  ippadiyea  ungga'lukku  ezhuthiyirukki’raan;  (2peathuru  3:15)

எல்லா  நிருபங்களிலும்  இவைகளைக்குறித்துப்  பேசியிருக்கிறான்;  அவன்  சொன்னவைகளில்  சில  காரியங்கள்  அறிகிறதற்கு  அரிதாயிருக்கிறது;  கல்லாதவர்களும்  உறுதியில்லாதவர்களும்  மற்ற  வேதவாக்கியங்களைப்  புரட்டுகிறதுபோலத்  தங்களுக்குக்  கேடுவரத்தக்கதாக  இவைகளையும்  புரட்டுகிறார்கள்.  (2பேதுரு  3:16)

ellaa  nirubangga'lilum  ivaiga'laikku’riththup  peasiyirukki’raan;  avan  sonnavaiga'lil  sila  kaariyangga'l  a’rigi’ratha’rku  arithaayirukki’rathu;  kallaathavarga'lum  u’ruthiyillaathavarga'lum  mat’ra  veathavaakkiyangga'laip  purattugi’rathupoalath  thangga'lukkuk  keaduvaraththakkathaaga  ivaiga'laiyum  purattugi’raarga'l.  (2peathuru  3:16)

ஆதலால்  பிரியமானவர்களே,  இவைகளை  முன்னமே  நீங்கள்  அறிந்திருக்கிறபடியால்,  அக்கிரமக்காரருடைய  வஞ்சகத்திலே  நீங்கள்  இழுப்புண்டு  உங்கள்  உறுதியிலிருந்து  விலகி  விழுந்துபோகாதபடிக்கு  எச்சரிக்கையாயிருந்து,  (2பேதுரு  3:17)

aathalaal  piriyamaanavarga'lea,  ivaiga'lai  munnamea  neengga'l  a’rinthirukki’rapadiyaal,  akkiramakkaararudaiya  vagnchagaththilea  neengga'l  izhuppu'ndu  ungga'l  u’ruthiyilirunthu  vilagi  vizhunthupoagaathapadikku  echcharikkaiyaayirunthu,  (2peathuru  3:17)

நம்முடைய  கர்த்தரும்  இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின்  கிருபையிலும்  அவரை  அறிகிற  அறிவிலும்  வளருங்கள்.  அவருக்கு  இப்பொழுதும்  என்றென்றைக்கும்  மகிமையுண்டாவதாக.  ஆமென்.  (2பேதுரு  3:18)

nammudaiya  karththarum  iradchagarumaagiya  iyeasuki’risthuvin  kirubaiyilum  avarai  a’rigi’ra  a’rivilum  va'larungga'l.  avarukku  ippozhuthum  en’ren’raikkum  magimaiyu'ndaavathaaga.  aamen.  (2peathuru  3:18)


2 Peathuru 2 | 2 பேதுரு 2 | 2 Peter 2


கள்ளத்தீர்க்கதரிசிகளும்  ஜனங்களுக்குள்ளே  இருந்தார்கள்,  அப்படியே  உங்களுக்குள்ளும்  கள்ளப்போதகர்கள்  இருப்பார்கள்;  அவர்கள்  கேட்டுக்கேதுவான  வேதப்புரட்டுகளைத்  தந்திரமாய்  நுழையப்பண்ணி,  தங்களைக்  கிரயத்துக்குக்கொண்ட  ஆண்டவரை  மறுதலித்து,  தங்களுக்குத்  தீவிரமான  அழிவை  வருவித்துக்கொள்ளுவார்கள்.  (2பேதுரு  2:1)

ka'l'laththeerkkatharisiga'lum  janangga'lukku'l'lea  irunthaarga'l,  appadiyea  ungga'lukku'l'lum  ka'l'lappoathagarga'l  iruppaarga'l;  avarga'l  keattukkeathuvaana  veathappurattuga'laith  thanthiramaay  nuzhaiyappa'n'ni,  thangga'laik  kirayaththukkukko'nda  aa'ndavarai  ma’ruthaliththu,  thangga'lukkuth  theeviramaana  azhivai  varuviththukko'l'luvaarga'l.  (2peathuru  2:1)

அவர்களுடைய  கெட்ட  நடக்கைகளை  அநேகர்  பின்பற்றுவார்கள்;  அவர்கள்நிமித்தம்  சத்தியமார்க்கம்  தூஷிக்கப்படும்.  (2பேதுரு  2:2)

avarga'ludaiya  ketta  nadakkaiga'lai  aneagar  pinpat’ruvaarga'l;  avarga'lnimiththam  saththiyamaarkkam  thooshikkappadum.  (2peathuru  2:2)

பொருளாசையுடையவர்களாய்,  தந்திரமான  வார்த்தைகளால்  உங்களைத்  தங்களுக்கு  ஆதாயமாக  வசப்படுத்திக்கொள்ளுவார்கள்;  பூர்வகாலமுதல்  அவர்களுக்கு  விதிக்கப்பட்ட  ஆக்கினை  அயர்ந்திராது,  அவர்களுடைய  அழிவு  உறங்காது.  (2பேதுரு  2:3)

poru'laasaiyudaiyavarga'laay,  thanthiramaana  vaarththaiga'laal  ungga'laith  thangga'lukku  aathaayamaaga  vasappaduththikko'l'luvaarga'l;  poorvakaalamuthal  avarga'lukku  vithikkappatta  aakkinai  ayarnthiraathu,  avarga'ludaiya  azhivu  u’ranggaathu.  (2peathuru  2:3)

பாவஞ்செய்த  தூதர்களைத்  தேவன்  தப்பவிடாமல்,  அந்தகாரச்  சங்கிலிகளினாலே  கட்டி  நரகத்திலே  தள்ளி  நியாயத்தீர்ப்புக்கு  வைக்கப்பட்டவர்களாக  ஒப்புக்கொடுத்து;  (2பேதுரு  2:4)

paavagnseytha  thootharga'laith  theavan  thappavidaamal,  anthagaarach  sanggiliga'linaalea  katti  naragaththilea  tha'l'li  niyaayaththeerppukku  vaikkappattavarga'laaga  oppukkoduththu;  (2peathuru  2:4)

பூர்வ  உலகத்தையும்  தப்பவிடாமல்,  நீதியைப்  பிரசங்கித்தவனாகிய  நோவா  முதலான  எட்டுப்பேரைக்  காப்பாற்றி,  அவபக்தியுள்ளவர்கள்  நிறைந்த  உலகத்தின்மேல்  ஜலப்பிரளயத்தை  வரப்பண்ணி;  (2பேதுரு  2:5)

poorva  ulagaththaiyum  thappavidaamal,  neethiyaip  pirasanggiththavanaagiya  noavaa  muthalaana  ettuppearaik  kaappaat’ri,  avabakthiyu'l'lavarga'l  ni’raintha  ulagaththinmeal  jalappira'layaththai  varappa'n'ni;  (2peathuru  2:5)

சோதோம்  கொமோரா  என்னும்  பட்டணங்களையும்  சாம்பலாக்கிக்  கவிழ்த்துப்போட்டு,  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து,  பிற்காலத்திலே  அவபக்தியாய்  நடப்பவர்களுக்கு  அவைகளைத்  திருஷ்டாந்தமாக  வைத்து;  (2பேதுரு  2:6)

soathoam  komoaraa  ennum  patta'nangga'laiyum  saambalaakkik  kavizhththuppoattu,  aakkinaikku'l'laagath  theerththu,  pi’rkaalaththilea  avabakthiyaay  nadappavarga'lukku  avaiga'laith  thirushdaanthamaaga  vaiththu;  (2peathuru  2:6)

அக்கிரமக்காரருக்குள்  வாசமாயிருக்கையில்  அவர்களுடைய  காமவிகார  நடக்கையால்  வருத்தப்பட்டு;  (2பேதுரு  2:7)

akkiramakkaararukku'l  vaasamaayirukkaiyil  avarga'ludaiya  kaamavigaara  nadakkaiyaal  varuththappattu;  (2peathuru  2:7)

நாள்தோறும்  அவர்களுடைய  அக்கிரமக்கிரியைகளைக்  கண்டு  கேட்டு  நீதியுள்ள  தன்னுடைய  இருதயத்தில்  வாதிக்கப்பட்ட  நீதிமானாகிய  லோத்தை  அவர்  இரட்சித்திருக்க;  (2பேதுரு  2:8)

naa'lthoa’rum  avarga'ludaiya  akkiramakkiriyaiga'laik  ka'ndu  keattu  neethiyu'l'la  thannudaiya  iruthayaththil  vaathikkappatta  neethimaanaagiya  loaththai  avar  iradchiththirukka;  (2peathuru  2:8)

கர்த்தர்  தேவபக்தியுள்ளவர்களைச்  சோதனையினின்று  இரட்சிக்கவும்,  அக்கிரமக்காரரை  ஆக்கினைக்குள்ளானவர்களாக  நியாயத்தீர்ப்பு  நாளுக்கு  வைக்கவும்  அறிந்திருக்கிறார்.  (2பேதுரு  2:9)

karththar  theavabakthiyu'l'lavarga'laich  soathanaiyinin’ru  iradchikkavum,  akkiramakkaararai  aakkinaikku'l'laanavarga'laaga  niyaayaththeerppu  naa'lukku  vaikkavum  a’rinthirukki’raar.  (2peathuru  2:9)

விசேஷமாக  அசுத்த  இச்சையோடே  மாம்சத்திற்கேற்றபடி  நடந்து,  கர்த்தத்துவத்தை  அசட்டைபண்ணுகிறவர்களை  அப்படிச்  செய்வார்.  இவர்கள்  துணிகரக்காரர்,  அகங்காரிகள்,  மகத்துவங்களைத்  தூஷிக்க  அஞ்சாதவர்கள்.  (2பேதுரு  2:10)

viseashamaaga  asuththa  ichchaiyoadea  maamsaththi’rkeat’rapadi  nadanthu,  karththaththuvaththai  asattaipa'n'nugi’ravarga'lai  appadich  seyvaar.  ivarga'l  thu'nigarakkaarar,  aganggaariga'l,  magaththuvangga'laith  thooshikka  agnchaathavarga'l.  (2peathuru  2:10)

அதிக  பெலனையும்  வல்லமையையுமுடைய  தேவதூதர்கள்  முதலாய்க்  கர்த்தருக்கு  முன்பாக  அவர்களைத்  தூஷணமாய்க்  குற்றப்படுத்தமாட்டார்களே.  (2பேதுரு  2:11)

athiga  belanaiyum  vallamaiyaiyumudaiya  theavathootharga'l  muthalaayk  karththarukku  munbaaga  avarga'laith  thoosha'namaayk  kut’rappaduththamaattaarga'lea.  (2peathuru  2:11)

இவர்களோ  பிடிபட்டழிக்கப்படுவதற்கு  உண்டான  புத்தியற்ற  மிருகஜீவன்களைப்போலத்  தங்களுக்குத்  தெரியாதவைகளைத்  தூஷித்து,  தங்கள்  கேட்டிலே  கெட்டழிந்து,  அநீதத்தின்  பலனை  அடைவார்கள்.  (2பேதுரு  2:12)

ivarga'loa  pidipattazhikkappaduvatha’rku  u'ndaana  buththiyat’ra  mirugajeevanga'laippoalath  thangga'lukkuth  theriyaathavaiga'laith  thooshiththu,  thangga'l  keattilea  kettazhinthu,  aneethaththin  palanai  adaivaarga'l.  (2peathuru  2:12)

இவர்கள்  ஒருநாள்  வாழ்வை  இன்பமென்றெண்ணி,  கறைகளும்  இலச்சைகளுமாயிருந்து;  உங்களோடே  விருந்துண்கையில்  தங்கள்  வஞ்சனைகளில்  உல்லாசமாய்  வாழ்கிறவர்கள்;  (2பேதுரு  2:13)

ivarga'l  orunaa'l  vaazhvai  inbamen’re'n'ni,  ka’raiga'lum  ilachchaiga'lumaayirunthu;  ungga'loadea  virunthu'ngaiyil  thangga'l  vagnchanaiga'lil  ullaasamaay  vaazhgi’ravarga'l;  (2peathuru  2:13)

விபசாரமயக்கத்தால்  நிறைந்தவைகளும்,  பாவத்தை  விட்டோயாதவைகளுமாயிருக்கிற  கண்களையுடையவர்கள்;  உறுதியில்லாத  ஆத்துமாக்களைத்  தந்திரமாய்ப்  பிடித்து,  பொருளாசைகளில்  பழகின  இருதயத்தையுடைய  சாபத்தின்  பிள்ளைகள்.  (2பேதுரு  2:14)

vibasaaramayakkaththaal  ni’rainthavaiga'lum,  paavaththai  vittoayaathavaiga'lumaayirukki’ra  ka'nga'laiyudaiyavarga'l;  u’ruthiyillaatha  aaththumaakka'laith  thanthiramaayp  pidiththu,  poru'laasaiga'lil  pazhagina  iruthayaththaiyudaiya  saabaththin  pi'l'laiga'l.  (2peathuru  2:14)

செம்மையான  வழியைவிட்டுத்  தப்பிநடந்து,  பேயோரின்  குமாரனாகிய  பிலேயாமின்  வழியைப்  பின்பற்றிப்போனவர்கள்;  அவன்  அநீதத்தின்  கூலியை  விரும்பி,  (2பேதுரு  2:15)

semmaiyaana  vazhiyaivittuth  thappinadanthu,  beayoarin  kumaaranaagiya  bileayaamin  vazhiyaip  pinpat’rippoanavarga'l;  avan  aneethaththin  kooliyai  virumbi,  (2peathuru  2:15)

தன்னுடைய  அக்கிரமத்தினிமித்தம்  கடிந்துகொள்ளப்பட்டான்;  பேசாத  மிருகம்  மனுஷர்பேச்சைப்  பேசித்  தீர்க்கதரிசியினுடைய  மதிகேட்டைத்  தடுத்தது.  (2பேதுரு  2:16)

thannudaiya  akkiramaththinimiththam  kadinthuko'l'lappattaan;  peasaatha  mirugam  manusharpeachchaip  peasith  theerkkatharisiyinudaiya  mathikeattaith  thaduththathu.  (2peathuru  2:16)

இவர்கள்  தண்ணீரில்லாத  கிணறுகளும்,  சுழல்காற்றினால்  அடியுண்டோடுகிற  மேகங்களுமாயிருக்கிறார்கள்;  என்றென்றைக்குமுள்ள  காரிருளே  இவர்களுக்கு  வைக்கப்பட்டிருக்கிறது.  (2பேதுரு  2:17)

ivarga'l  tha'n'neerillaatha  ki'na’ruga'lum,  suzhalkaat’rinaal  adiyu'ndoadugi’ra  meagangga'lumaayirukki’raarga'l;  en’ren’raikkumu'l'la  kaariru'lea  ivarga'lukku  vaikkappattirukki’rathu.  (2peathuru  2:17)

வஞ்சகமாய்  நடக்கிறவர்களிடத்திலிருந்து  அரிதாய்த்  தப்பினவர்களிடத்தில்  இவர்கள்  அகந்தையான  வீண்வார்த்தைகளைப்  பேசி,  மாம்ச  இச்சைகளினாலும்  காமவிகாரங்களினாலும்  அவர்களைத்  தந்திரமாய்ப்  பிடிக்கிறார்கள்.  (2பேதுரு  2:18)

vagnchagamaay  nadakki’ravarga'lidaththilirunthu  arithaayth  thappinavarga'lidaththil  ivarga'l  aganthaiyaana  vee'nvaarththaiga'laip  peasi,  maamsa  ichchaiga'linaalum  kaamavigaarangga'linaalum  avarga'laith  thanthiramaayp  pidikki’raarga'l.  (2peathuru  2:18)

தாங்களே  கேட்டுக்கு  அடிமைகளாயிருந்தும்,  அவர்களுக்குச்  சுயாதீனத்தை  வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்;  எதினால்  ஒருவன்  ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ  அதற்கு  அவன்  அடிமைப்பட்டிருக்கிறானே.  (2பேதுரு  2:19)

thaangga'lea  keattukku  adimaiga'laayirunthum,  avarga'lukkuch  suyaatheenaththai  vaakkuththaththampa'n'nugi’raarga'l;  ethinaal  oruvan  jeyikkappattirukki’raanoa  atha’rku  avan  adimaippattirukki’raanea.  (2peathuru  2:19)

கர்த்தரும்  இரட்சகருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்துவை  அறிகிற  அறிவினாலே  உலகத்தின்  அசுத்தங்களுக்குத்  தப்பினவர்கள்  மறுபடியும்  அவைகளில்  சிக்கிக்கொண்டு  ஜெயிக்கப்பட்டால்,  அவர்களுடைய  பின்னிலைமை  முன்னிலைமையிலும்  கேடுள்ளதாயிருக்கும்.  (2பேதுரு  2:20)

karththarum  iradchagarumaayirukki’ra  iyeasuki’risthuvai  a’rigi’ra  a’rivinaalea  ulagaththin  asuththangga'lukkuth  thappinavarga'l  ma’rupadiyum  avaiga'lil  sikkikko'ndu  jeyikkappattaal,  avarga'ludaiya  pinnilaimai  munnilaimaiyilum  keadu'l'lathaayirukkum.  (2peathuru  2:20)

அவர்கள்  நீதியின்  மார்க்கத்தை  அறிந்தபின்பு  தங்களுக்கு  ஒப்புவிக்கப்பட்ட  பரிசுத்த  கற்பனையை  விட்டு  விலகுவதைப்பார்க்கிலும்  அதை  அறியாதிருந்தார்களானால்  அவர்களுக்கு  நலமாயிருக்கும்.  (2பேதுரு  2:21)

avarga'l  neethiyin  maarkkaththai  a’rinthapinbu  thangga'lukku  oppuvikkappatta  parisuththa  ka’rpanaiyai  vittu  vilaguvathaippaarkkilum  athai  a’riyaathirunthaarga'laanaal  avarga'lukku  nalamaayirukkum.  (2peathuru  2:21)

நாய்  தான்  கக்கினதைத்  தின்னவும்,  கழுவப்பட்ட  பன்றி  சேற்றிலே  புரளவும்  திரும்பினது  என்று  சொல்லப்பட்ட  மெய்யான  பழமொழியின்படியே  அவர்களுக்குச்  சம்பவித்தது.  (2பேதுரு  2:22)

naay  thaan  kakkinathaith  thinnavum,  kazhuvappatta  pan’ri  seat’rilea  pura'lavum  thirumbinathu  en’ru  sollappatta  meyyaana  pazhamozhiyinpadiyea  avarga'lukkuch  sambaviththathu.  (2peathuru  2:22)