Showing posts with label yoanaa. Show all posts
Showing posts with label yoanaa. Show all posts

Friday, July 08, 2016

Yoanaa 4 | யோனா 4 | Jonah 4

யோனாவுக்கு  இது  மிகவும்  விசனமாயிருந்தது;  அவன்  கடுங்கோபங்கொண்டு,  (யோனா  4:1)

yoanaavukku  ithu  migavum  visanamaayirunthathu;  avan  kadungkoabangko'ndu,  (yoanaa  4:1)

கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:    கர்த்தாவே,  நான்  என்  தேசத்தில்  இருக்கும்போதே  நான்  இதைச்  சொல்லவில்லையா?  இதினிமித்தமே  நான்  முன்னமே  தர்ஷீசுக்கு  ஓடிப்போனேன்;  நீர்  இரக்கமும்  மன  உருக்கமும்  நீடிய  சாந்தமும்  மிகுந்த  கிருபையுமுள்ளவரும்,  தீங்குக்கு  மனஸ்தாபப்படுகிறவருமான  தேவனென்று  அறிவேன்.  (யோனா  4:2)

karththarai  noakki  vi'n'nappampa'n'ni:  aa  karththaavea,  naan  en  theasaththil  irukkumpoathea  naan  ithaich  sollavillaiyaa?  ithinimiththamea  naan  munnamea  tharsheesukku  oadippoanean;  neer  irakkamum  mana  urukkamum  neediya  saanthamum  miguntha  kirubaiyumu'l'lavarum,  theenggukku  manasthaabappadugi’ravarumaana  theavanen’ru  a’rivean.  (yoanaa  4:2)

இப்போதும்  கர்த்தாவே,  என்  பிராணனை  என்னைவிட்டு  எடுத்துக்கொள்ளும்;  நான்  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்  சாகிறது  நலமாயிருக்கும்  என்றான்.  (யோனா  4:3)

ippoathum  karththaavea,  en  piraa'nanai  ennaivittu  eduththukko'l'lum;  naan  uyiroadirukki’rathaippaarkkilum  saagi’rathu  nalamaayirukkum  en’raan.  (yoanaa  4:3)

அதற்குக்  கர்த்தர்:  நீ  எரிச்சலாயிருக்கிறது  நல்லதோ  என்றார்.  (யோனா  4:4)

atha’rkuk  karththar:  nee  erichchalaayirukki’rathu  nallathoa  en’raar.  (yoanaa  4:4)

பின்பு  யோனா  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  நகரத்துக்குக்  கிழக்கேபோய்,  அங்கே  தனக்கு  ஒரு  குடிசையைப்  போட்டு,  நகரத்துக்குச்  சம்பவிக்கப்போகிறதைத்  தான்  பார்க்குமட்டும்  அதின்  கீழ்  நிழலில்  உட்கார்ந்திருந்தான்.  (யோனா  4:5)

pinbu  yoanaa  nagaraththilirunthu  pu’rappattu,  nagaraththukkuk  kizhakkeapoay,  anggea  thanakku  oru  kudisaiyaip  poattu,  nagaraththukkuch  sambavikkappoagi’rathaith  thaan  paarkkumattum  athin  keezh  nizhalil  udkaarnthirunthaan.  (yoanaa  4:5)

யோனாவுடைய  தலையின்மேல்  நிழலுண்டாயிருக்கவும்,  அவனை  அவனுடைய  மனமடிவுக்கு  நீங்கலாக்கவும்  தேவனாகிய  கர்த்தர்  ஒரு  ஆமணக்குச்  செடியை  முளைக்கக்  கட்டளையிட்டு,  அதை  அவன்மேல்  ஓங்கி  வளரப்பண்ணினார்;  அந்த  ஆமணக்கின்மேல்  யோனா  மிகவும்  சந்தோஷப்பட்டான்.  (யோனா  4:6)

yoanaavudaiya  thalaiyinmeal  nizhalu'ndaayirukkavum,  avanai  avanudaiya  manamadivukku  neenggalaakkavum  theavanaagiya  karththar  oru  aama'nakkuch  sediyai  mu'laikkak  katta'laiyittu,  athai  avanmeal  oanggi  va'larappa'n'ninaar;  antha  aama'nakkinmeal  yoanaa  migavum  santhoashappattaan.  (yoanaa  4:6)

மறுநாளிலோ  கிழக்கு  வெளுக்கும்  நேரத்தில்  தேவன்  ஒரு  பூச்சியைக்  கட்டளையிட்டார்;  அது  ஆமணக்குச்  செடியை  அரித்துப்போட்டது;  அதினால்  அது  காய்ந்துபோயிற்று.  (யோனா  4:7)

ma’runaa'liloa  kizhakku  ve'lukkum  nearaththil  theavan  oru  poochchiyaik  katta'laiyittaar;  athu  aama'nakkuch  sediyai  ariththuppoattathu;  athinaal  athu  kaaynthupoayit’ru.  (yoanaa  4:7)

சூரியன்  உதித்தபோது  தேவன்  உஷ்ணமான  கீழ்க்காற்றைக்  கட்டளையிட்டார்;  அப்பொழுது  வெயில்  யோனாவுடைய  தலையில்  படுகிறதினால்  அவன்  சோர்ந்துபோய்,  தனக்குள்ளே  சாவை  விரும்பி:  நான்  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்  சாகிறது  நலமாயிருக்கும்  என்றான்.  (யோனா  4:8)

sooriyan  uthiththapoathu  theavan  ush'namaana  keezhkkaat’raik  katta'laiyittaar;  appozhuthu  veyil  yoanaavudaiya  thalaiyil  padugi’rathinaal  avan  soarnthupoay,  thanakku'l'lea  saavai  virumbi:  naan  uyiroadirukki’rathaippaarkkilum  saagi’rathu  nalamaayirukkum  en’raan.  (yoanaa  4:8)

அப்பொழுது  தேவன்  யோனாவை  நோக்கி:  நீ  ஆமணக்கினிமித்தம்  எரிச்சலாயிருக்கிறது  நல்லதோ  என்றார்;  அதற்கு  அவன்:  நான்  மரணபரியந்தமும்  எரிச்சலாயிருக்கிறது  நல்லதுதான்  என்றான்.  (யோனா  4:9)

appozhuthu  theavan  yoanaavai  noakki:  nee  aama'nakkinimiththam  erichchalaayirukki’rathu  nallathoa  en’raar;  atha’rku  avan:  naan  mara'napariyanthamum  erichchalaayirukki’rathu  nallathuthaan  en’raan.  (yoanaa  4:9)

அதற்குக்  கர்த்தர்:  நீ  பிரயாசப்படாததும்,  நீ  வளர்க்காததும்,  ஒரு  இராத்திரியிலே  முளைத்ததும்,  ஒரு  இராத்திரியிலே  அழிந்துபோனதுமான  ஆமணக்குக்காகப்  பரிதபிக்கிறாயே.  (யோனா  4:10)

atha’rkuk  karththar:  nee  pirayaasappadaathathum,  nee  va'larkkaathathum,  oru  iraaththiriyilea  mu'laiththathum,  oru  iraaththiriyilea  azhinthupoanathumaana  aama'nakkukkaagap  parithabikki’raayea.  (yoanaa  4:10)

வலதுகைக்கும்  இடதுகைக்கும்  வித்தியாசம்  அறியாத  இலட்சத்து  இருபதினாயிரம்பேருக்கு  அதிகமான  மனுஷரும்  அநேக  மிருகஜீவன்களும்  இருக்கிற  மகா  நகரமாகிய  நினிவேக்காக  நான்  பரிதபியாமலிருப்பேனோ  என்றார்.  (யோனா  4:11)

valathukaikkum  idathukaikkum  viththiyaasam  a’riyaatha  iladchaththu  irubathinaayirampearukku  athigamaana  manusharum  aneaga  mirugajeevanga'lum  irukki’ra  mahaa  nagaramaagiya  niniveakkaaga  naan  parithabiyaamaliruppeanoa  en’raar.  (yoanaa  4:11)


Yoanaa 3 | யோனா 3 | Jonah 3

இரண்டாந்தரம்  கர்த்தருடைய  வார்த்தை  யோனாவுக்கு  உண்டாகி,  அவர்:  (யோனா  3:1)

ira'ndaantharam  karththarudaiya  vaarththai  yoanaavukku  u'ndaagi,  avar:  (yoanaa  3:1)

நீ  எழுந்து  மகா  நகரமாகிய  நினிவேக்குப்  போய்,  நான்  உனக்குக்  கற்பிக்கும்  வார்த்தையை  அதற்கு  விரோதமாய்ப்  பிரசங்கி  என்றார்.  (யோனா  3:2)

nee  ezhunthu  mahaa  nagaramaagiya  niniveakkup  poay,  naan  unakkuk  ka’rpikkum  vaarththaiyai  atha’rku  viroathamaayp  pirasanggi  en’raar.  (yoanaa  3:2)

யோனா  எழுந்து,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  நினிவேக்குப்  போனான்;  நினிவே  மூன்றுநாள்  பிரயாண  விஸ்தாரமான  மகா  பெரிய  நகரமாயிருந்தது.  (யோனா  3:3)

yoanaa  ezhunthu,  karththarudaiya  vaarththaiyinpadiyea  niniveakkup  poanaan;  ninivea  moon’runaa'l  pirayaa'na  visthaaramaana  mahaa  periya  nagaramaayirunthathu.  (yoanaa  3:3)

யோனா  நகரத்தில்  பிரவேசித்து,  ஒருநாள்  பிரயாணம்பண்ணி:  இன்னும்  நாற்பதுநாள்  உண்டு,  அப்பொழுது  நினிவே  கவிழ்க்கப்பட்டுப்போம்  என்று  கூறினான்.  (யோனா  3:4)

yoanaa  nagaraththil  piraveasiththu,  orunaa'l  pirayaa'nampa'n'ni:  innum  naa’rpathunaa'l  u'ndu,  appozhuthu  ninivea  kavizhkkappattuppoam  en’ru  koo’rinaan.  (yoanaa  3:4)

அப்பொழுது  நினிவேயிலுள்ள  ஜனங்கள்  தேவனை  விசுவாசித்து,  உபவாசஞ்செய்யும்படிக்  கூறினார்கள்;  பெரியோர்முதல்  சிறியோர்மட்டும்  இரட்டுடுத்திக்கொண்டார்கள்.  (யோனா  3:5)

appozhuthu  niniveayilu'l'la  janangga'l  theavanai  visuvaasiththu,  ubavaasagnseyyumpadik  koo’rinaarga'l;  periyoarmuthal  si’riyoarmattum  irattuduththikko'ndaarga'l.  (yoanaa  3:5)

இந்தச்  செய்தி  நினிவேயின்  ராஜாவுக்கு  எட்டினபோது,  அவன்  தன்  சிங்காசனத்தைவிட்டு  எழுந்து,  தான்  உடுத்தியிருந்த  உடுப்பைக்  கழற்றிப்போட்டு,  இரட்டை  உடுத்திக்கொண்டு,  சாம்பலிலே  உட்கார்ந்தான்.  (யோனா  3:6)

inthach  seythi  niniveayin  raajaavukku  ettinapoathu,  avan  than  singgaasanaththaivittu  ezhunthu,  thaan  uduththiyiruntha  uduppaik  kazhat’rippoattu,  irattai  uduththikko'ndu,  saambalilea  udkaarnthaan.  (yoanaa  3:6)

மேலும்  ராஜா,  தானும்  தன்  பிரதானிகளும்  நிர்ணயம்பண்ணின  கட்டளையாக,  நினிவேயிலெங்கும்  மனுஷரும்  மிருகங்களும்,  மாடுகளும்  ஆடுகளும்  ஒன்றும்  ருசிபாராதிருக்கவும்,  மேயாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருக்கவும்,  (யோனா  3:7)

mealum  raajaa,  thaanum  than  pirathaaniga'lum  nir'nayampa'n'nina  katta'laiyaaga,  niniveayilenggum  manusharum  mirugangga'lum,  maaduga'lum  aaduga'lum  on’rum  rusipaaraathirukkavum,  meayaamalum  tha'n'neer  kudiyaamalum  irukkavum,  (yoanaa  3:7)

மனுஷரும்  மிருகங்களும்  இரட்டினால்  மூடிக்கொண்டு,  தேவனை  நோக்கி  உரத்த  சத்தமாய்க்  கூப்பிடவும்,  அவரவர்  தம்தம்  பொல்லாத  வழியையும்  தம்தம்  கைகளிலுள்ள  கொடுமையையும்  விட்டுத்  திரும்பவுங்கடவர்கள்.  (யோனா  3:8)

manusharum  mirugangga'lum  irattinaal  moodikko'ndu,  theavanai  noakki  uraththa  saththamaayk  kooppidavum,  avaravar  thamtham  pollaatha  vazhiyaiyum  thamtham  kaiga'lilu'l'la  kodumaiyaiyum  vittuth  thirumbavungkadavarga'l.  (yoanaa  3:8)

யாருக்குத்  தெரியும்;  நாம்  அழிந்து  போகாதபடிக்கு  ஒருவேளை  தேவன்  மனஸ்தாபப்பட்டு,  தம்முடைய  உக்கிர  கோபத்தைவிட்டுத்  திரும்பினாலும்  திரும்புவார்  என்று  கூறச்சொன்னான்.  (யோனா  3:9)

yaarukkuth  theriyum;  naam  azhinthu  poagaathapadikku  oruvea'lai  theavan  manasthaabappattu,  thammudaiya  ukkira  koabaththaivittuth  thirumbinaalum  thirumbuvaar  en’ru  koo’rachsonnaan.  (yoanaa  3:9)

அவர்கள்  தங்கள்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பினார்களென்று  தேவன்  அவர்களுடைய  கிரியைகளைப்  பார்த்து,  தாம்  அவர்களுக்குச்  செய்வேன்  என்று  சொல்லியிருந்த  தீங்கைக்  குறித்து  மனஸ்தாபப்பட்டு,  அதைச்  செய்யாதிருந்தார்.  (யோனா  3:10)

avarga'l  thangga'l  pollaatha  vazhiyaivittuth  thirumbinaarga'len’ru  theavan  avarga'ludaiya  kiriyaiga'laip  paarththu,  thaam  avarga'lukkuch  seyvean  en’ru  solliyiruntha  theenggaik  ku’riththu  manasthaabappattu,  athaich  seyyaathirunthaar.  (yoanaa  3:10)


Yoanaa 2 | யோனா 2 | Jonah 2

அந்த  மீனின்  வயிற்றிலிருந்து,  யோனா  தன்  தேவனாகிய  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  (யோனா  2:1)

antha  meenin  vayit’rilirunthu,  yoanaa  than  theavanaagiya  karththarai  noakki  vi'n'nappampa'n'ni:  (yoanaa  2:1)

என்  நெருக்கத்தில்  நான்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  அவர்  எனக்கு  உத்தரவு  அருளினார்;  நான்  பாதாளத்தின்  வயிற்றிலிருந்து  கூக்குரலிட்டேன்,  நீர்  என்  சத்தத்தைக்  கேட்டீர்.  (யோனா  2:2)

en  nerukkaththil  naan  karththarai  noakkik  kooppittean;  avar  enakku  uththaravu  aru'linaar;  naan  paathaa'laththin  vayit’rilirunthu  kookkuralittean,  neer  en  saththaththaik  keatteer.  (yoanaa  2:2)

சமுத்திரத்தின்  நடுமையமாகிய  ஆழத்திலே  நீர்  என்னைத்  தள்ளிவிட்டீர்;  நீரோட்டம்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  உம்முடைய  வெள்ளங்களும்  அலைகளும்  எல்லாம்  என்மேல்  புரண்டது.  (யோனா  2:3)

samuththiraththin  nadumaiyamaagiya  aazhaththilea  neer  ennaith  tha'l'livitteer;  neeroattam  ennaich  soozhnthuko'ndathu;  ummudaiya  ve'l'langga'lum  alaiga'lum  ellaam  enmeal  pura'ndathu.  (yoanaa  2:3)

நான்  உமது  கண்களுக்கு  எதிரே  இராதபடிக்குத்  தள்ளப்பட்டேன்;  ஆகிலும்  இன்னமும்  உம்முடைய  பரிசுத்த  ஆலயத்தை  நோக்குவேன்  என்றேன்.  (யோனா  2:4)

naan  umathu  ka'nga'lukku  ethirea  iraathapadikkuth  tha'l'lappattean;  aagilum  innamum  ummudaiya  parisuththa  aalayaththai  noakkuvean  en’rean.  (yoanaa  2:4)

தண்ணீர்கள்  பிராணபரியந்தம்  என்னை  நெருக்கினது;  ஆழி  என்னைச்  சூழ்ந்தது;  கடற்பாசி  என்  தலையைச்  சுற்றிக்கொண்டது.  (யோனா  2:5)

tha'n'neerga'l  piraa'napariyantham  ennai  nerukkinathu;  aazhi  ennaich  soozhnthathu;  kada’rpaasi  en  thalaiyaich  sut’rikko'ndathu.  (yoanaa  2:5)

பர்வதங்களின்  அடிவாரங்கள்  பரியந்தமும்  இறங்கினேன்;  பூமியின்  தாழ்ப்பாள்கள்  என்றென்றைக்கும்  என்னை  அடைக்கிறதாயிருந்தது;  ஆனாலும்  என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  என்  பிராணனை  அழிவுக்குத்  தப்புவித்தீர்.  (யோனா  2:6)

parvathangga'lin  adivaarangga'l  pariyanthamum  i’rangginean;  boomiyin  thaazhppaa'lga'l  en’ren’raikkum  ennai  adaikki’rathaayirunthathu;  aanaalum  en  theavanaagiya  karththaavea,  neer  en  piraa'nanai  azhivukkuth  thappuviththeer.  (yoanaa  2:6)

என்  ஆத்துமா  என்னில்  தொய்ந்துபோகையில்  கர்த்தரை  நினைத்தேன்;  அப்பொழுது  என்  விண்ணப்பம்  உமது  பரிசுத்த  ஆலயத்திலே  உம்மிடத்தில்  வந்து  சேர்ந்தது.  (யோனா  2:7)

en  aaththumaa  ennil  thoynthupoagaiyil  karththarai  ninaiththean;  appozhuthu  en  vi'n'nappam  umathu  parisuththa  aalayaththilea  ummidaththil  vanthu  searnthathu.  (yoanaa  2:7)

பொய்யான  மாயையைப்  பற்றிக்கொள்ளுகிறவர்கள்  தங்களுக்கு  வரும்  கிருபையைப்  போக்கடிக்கிறார்கள்.  (யோனா  2:8)

poyyaana  maayaiyaip  pat’rikko'l'lugi’ravarga'l  thangga'lukku  varum  kirubaiyaip  poakkadikki’raarga'l.  (yoanaa  2:8)

நானோவெனில்  துதியின்  சத்தத்தோடே  உமக்குப்  பலியிடுவேன்;  நான்  பண்ணின  பொருத்தனையைச்  செலுத்துவேன்;  இரட்சிப்பு  கர்த்தருடையது  என்றான்.  (யோனா  2:9)

naanoavenil  thuthiyin  saththaththoadea  umakkup  baliyiduvean;  naan  pa'n'nina  poruththanaiyaich  seluththuvean;  iradchippu  karththarudaiyathu  en’raan.  (yoanaa  2:9)

கர்த்தர்  மீனுக்குக்  கட்டளையிட்டார்,  அது  யோனாவைக்  கரையிலே  கக்கிவிட்டது.  (யோனா  2:10)

karththar  meenukkuk  katta'laiyittaar,  athu  yoanaavaik  karaiyilea  kakkivittathu.  (yoanaa  2:10)