Showing posts with label 2 Thesalonokeyar. Show all posts
Showing posts with label 2 Thesalonokeyar. Show all posts

Monday, June 06, 2016

2 Thesaloanikkeayar 3 | 2 தெசலோனிக்கேயர் 3 | 2 Thessalonians 3

கடைசியாக,  சகோதரரே,  உங்களிடத்தில்  கர்த்தருடைய  வசனம்  பரம்பி  மகிமைப்படுகிறதுபோல,  எவ்விடத்திலும்  பரம்பி  மகிமைப்படும்படிக்கும்,  (2தெசலோனிக்கேயர்  3:1)

kadaisiyaaga,  sagoathararea,  ungga'lidaththil  karththarudaiya  vasanam  parambi  magimaippadugi’rathupoala,  evvidaththilum  parambi  magimaippadumpadikkum,  (2thesaloanikkeayar  3:1)

துர்க்குணராகிய  பொல்லாத  மனுஷர்  கையினின்று  நாங்கள்  விடுவிக்கப்படும்படிக்கும்,  எங்களுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள்;  விசுவாசம்  எல்லாரிடத்திலுமில்லையே.  (2தெசலோனிக்கேயர்  3:2)

thurkku'naraagiya  pollaatha  manushar  kaiyinin’ru  naangga'l  viduvikkappadumpadikkum,  engga'lukkaaga  vea'ndikko'l'lungga'l;  visuvaasam  ellaaridaththilumillaiyea.  (2thesaloanikkeayar  3:2)

கர்த்தரோ  உண்மையுள்ளவர்,  அவர்  உங்களை  ஸ்திரப்படுத்தி,  தீமையினின்று  விலக்கிக்  காத்துக்கொள்ளுவார்.  (2தெசலோனிக்கேயர்  3:3)

karththaroa  u'nmaiyu'l'lavar,  avar  ungga'lai  sthirappaduththi,  theemaiyinin’ru  vilakkik  kaaththukko'l'luvaar.  (2thesaloanikkeayar  3:3)

மேலும்,  நாங்கள்  கட்டளையிடுகிறவைகளை  நீங்கள்  செய்துவருகிறீர்களென்றும்,  இனிமேலும்  செய்வீர்களென்றும்,  உங்களைக்குறித்துக்  கர்த்தருக்குள்  நம்பிக்கையாயிருக்கிறோம்.  (2தெசலோனிக்கேயர்  3:4)

mealum,  naangga'l  katta'laiyidugi’ravaiga'lai  neengga'l  seythuvarugi’reerga'len’rum,  inimealum  seyveerga'len’rum,  ungga'laikku’riththuk  karththarukku'l  nambikkaiyaayirukki’roam.  (2thesaloanikkeayar  3:4)

கர்த்தர்  உங்கள்  இருதயங்களைத்  தேவனைப்பற்றும்  அன்புக்கும்  கிறிஸ்துவின்  பொறுமைக்கும்  நேராய்  நடத்துவாராக.  (2தெசலோனிக்கேயர்  3:5)

karththar  ungga'l  iruthayangga'laith  theavanaippat’rum  anbukkum  ki’risthuvin  po’rumaikkum  nearaay  nadaththuvaaraaga.  (2thesaloanikkeayar  3:5)

மேலும்,  சகோதரரே,  எங்களிடத்தில்  ஏற்றுக்கொண்ட  முறைமையின்படி  நடவாமல்,  ஒழுங்கற்று  நடக்கிற  எந்தச்  சகோதரனையும்  நீங்கள்  விட்டு  விலக  வேண்டுமென்று,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  நாமத்தினாலே,  உங்களுக்குக்  கட்டளையிடுகிறோம்.  (2தெசலோனிக்கேயர்  3:6)

mealum,  sagoathararea,  engga'lidaththil  eat’rukko'nda  mu’raimaiyinpadi  nadavaamal,  ozhunggat’ru  nadakki’ra  enthach  sagoatharanaiyum  neengga'l  vittu  vilaga  vea'ndumen’ru,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  naamaththinaalea,  ungga'lukkuk  katta'laiyidugi’roam.  (2thesaloanikkeayar  3:6)

இன்னவிதமாய்  எங்களைப்  பின்பற்ற  வேண்டுமென்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்களே;  நாங்கள்  உங்களுக்குள்ளே  ஒழுங்கற்று  நடவாமலும்,  (2தெசலோனிக்கேயர்  3:7)

innavithamaay  engga'laip  pinpat’ra  vea'ndumen’ru  neengga'l  a’rinthirukki’reerga'lea;  naangga'l  ungga'lukku'l'lea  ozhunggat’ru  nadavaamalum,  (2thesaloanikkeayar  3:7)

ஒருவனிடத்திலும்  இலவசமாய்ச்  சாப்பிடாமலும்,  உங்களில்  ஒருவனுக்கும்  பாரமாயிராதபடிக்கு  இரவும்  பகலும்  பிரயாசத்தோடும்  வருத்தத்தோடும்  வேலைசெய்து  சாப்பிட்டோம்.  (2தெசலோனிக்கேயர்  3:8)

oruvanidaththilum  ilavasamaaych  saappidaamalum,  ungga'lil  oruvanukkum  baaramaayiraathapadikku  iravum  pagalum  pirayaasaththoadum  varuththaththoadum  vealaiseythu  saappittoam.  (2thesaloanikkeayar  3:8)

உங்கள்மேல்  பாரத்தை  வைப்பதற்கான  அதிகாரம்  எங்களுக்கு  இல்லையென்பதினாலே  அப்படிச்  செய்யாமல்,  நீங்கள்  எங்களைப்  பின்பற்றும்படிக்கு  நாங்கள்  உங்களுக்கு  மாதிரியாயிருக்கவேண்டுமென்றே  அப்படிச்  செய்தோம்.  (2தெசலோனிக்கேயர்  3:9)

ungga'lmeal  baaraththai  vaippatha’rkaana  athigaaram  engga'lukku  illaiyenbathinaalea  appadich  seyyaamal,  neengga'l  engga'laip  pinpat’rumpadikku  naangga'l  ungga'lukku  maathiriyaayirukkavea'ndumen’rea  appadich  seythoam.  (2thesaloanikkeayar  3:9)

ஒருவன்  வேலைசெய்ய  மனதில்லாதிருந்தால்  அவன்  சாப்பிடவும்  கூடாதென்று  நாங்கள்  உங்களிடத்தில்  இருந்தபோது  உங்களுக்குக்  கட்டளையிட்டோமே.  (2தெசலோனிக்கேயர்  3:10)

oruvan  vealaiseyya  manathillaathirunthaal  avan  saappidavum  koodaathen’ru  naangga'l  ungga'lidaththil  irunthapoathu  ungga'lukkuk  katta'laiyittoamea.  (2thesaloanikkeayar  3:10)

உங்களில்  சிலர்  யாதொரு  வேலையும்  செய்யாமல்,  வீண்  அலுவற்காரராய்,  ஒழுங்கற்றுத்  திரிகிறார்களென்று  கேள்விப்படுகிறோம்.  (2தெசலோனிக்கேயர்  3:11)

ungga'lil  silar  yaathoru  vealaiyum  seyyaamal,  vee'n  aluva’rkaararaay,  ozhunggat’ruth  thirigi’raarga'len’ru  kea'lvippadugi’roam.  (2thesaloanikkeayar  3:11)

இப்படிப்பட்டவர்கள்  அமைதலோடே  வேலைசெய்து,  தங்கள்  சொந்தச்  சாப்பாட்டைச்  சாப்பிடவேண்டுமென்று,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலே  அவர்களுக்குக்  கட்டளையிட்டுப்  புத்திசொல்லுகிறோம்.  (2தெசலோனிக்கேயர்  3:12)

ippadippattavarga'l  amaithaloadea  vealaiseythu,  thangga'l  sonthach  saappaattaich  saappidavea'ndumen’ru,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinaalea  avarga'lukkuk  katta'laiyittup  buththisollugi’roam.  (2thesaloanikkeayar  3:12)

சகோதரரே,  நீங்கள்  நன்மை  செய்வதிலே  சோர்ந்துபோகாமலிருங்கள்.  (2தெசலோனிக்கேயர்  3:13)

sagoathararea,  neengga'l  nanmai  seyvathilea  soarnthupoagaamalirungga'l.  (2thesaloanikkeayar  3:13)

மேலும்,  இந்த  நிருபத்தில்  சொல்லிய  எங்கள்  வசனத்துக்கு  ஒருவன்  கீழ்ப்படியாமற்போனால்,  அவனைக்  குறித்துக்கொண்டு,  அவன்  வெட்கப்படும்படிக்கு  அவனுடனே  கலவாதிருங்கள்.  (2தெசலோனிக்கேயர்  3:14)

mealum,  intha  nirubaththil  solliya  engga'l  vasanaththukku  oruvan  keezhppadiyaama’rpoanaal,  avanaik  ku’riththukko'ndu,  avan  vedkappadumpadikku  avanudanea  kalavaathirungga'l.  (2thesaloanikkeayar  3:14)

ஆனாலும்  அவனைச்  சத்துருவாக  எண்ணாமல்,  சகோதரனாக  எண்ணி,  அவனுக்குப்  புத்திசொல்லுங்கள்.  (2தெசலோனிக்கேயர்  3:15)

aanaalum  avanaich  saththuruvaaga  e'n'naamal,  sagoatharanaaga  e'n'ni,  avanukkup  buththisollungga'l.  (2thesaloanikkeayar  3:15)

சமாதானத்தின்  கர்த்தர்தாமே  எப்பொழுதும்  சகலவிதத்திலும்  உங்களுக்குச்  சமாதானத்தைத்  தந்தருளுவாராக.  கர்த்தர்  உங்களனைவரோடுங்கூட  இருப்பாராக.  (2தெசலோனிக்கேயர்  3:16)

samaathaanaththin  karththarthaamea  eppozhuthum  sagalavithaththilum  ungga'lukkuch  samaathaanaththaith  thantharu'luvaaraaga.  karththar  ungga'lanaivaroadungkooda  iruppaaraaga.  (2thesaloanikkeayar  3:16)

பவுலாகிய  நான்  என்  கையெழுத்தாலே  உங்களை  வாழ்த்துகிறேன்,  நிருபங்கள்தோறும்  இதுவே  அடையாளம்;  இப்படியே  எழுதுகிறேன்.  (2தெசலோனிக்கேயர்  3:17)

pavulaagiya  naan  en  kaiyezhuththaalea  ungga'lai  vaazhththugi’rean,  nirubangga'lthoa’rum  ithuvea  adaiyaa'lam;  ippadiyea  ezhuthugi’rean.  (2thesaloanikkeayar  3:17)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  கிருபை  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  (2தெசலோனிக்கேயர்  3:18)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  kirubai  ungga'lanaivaroadungkooda  iruppathaaga.  aamen.  (2thesaloanikkeayar  3:18)


2 Thesaloanikkeayar 2 | 2 தெசலோனிக்கேயர் 2 | 2 Thessalonians 2

அன்றியும்,  சகோதரரே,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  வருகையையும்,  நாம்  அவரிடத்திலே  சேர்க்கப்படுவதையுங்குறித்து,  நாங்கள்  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறது  என்னவென்றால்,  (2தெசலோனிக்கேயர்  2:1)

an’riyum,  sagoathararea,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  varugaiyaiyum,  naam  avaridaththilea  searkkappaduvathaiyungku’riththu,  naangga'l  ungga'lai  vea'ndikko'l'lugi’rathu  ennaven’raal,  (2thesaloanikkeayar  2:1)

ஒரு  ஆவியினாலாவது,  வார்த்தையினாலாவது,  எங்களிடத்திலிருந்து  வந்ததாய்த்  தோன்றுகிற  ஒரு  நிருபத்தினாலாவது,  கிறிஸ்துவினுடைய  நாள்  சமீபமாயிருக்கிறதாகச்  சொல்லப்பட்டால்,  உடனே  சஞ்சலப்படாமலும்  கலங்காமலும்  இருங்கள்.  (2தெசலோனிக்கேயர்  2:2)

oru  aaviyinaalaavathu,  vaarththaiyinaalaavathu,  engga'lidaththilirunthu  vanthathaayth  thoan’rugi’ra  oru  nirubaththinaalaavathu,  ki’risthuvinudaiya  naa'l  sameebamaayirukki’rathaagach  sollappattaal,  udanea  sagnchalappadaamalum  kalanggaamalum  irungga'l.  (2thesaloanikkeayar  2:2)

எவ்விதத்தினாலும்  ஒருவனும்  உங்களை  மோசம்போக்காதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  ஏனெனில்  விசுவாச  துரோகம்  முந்தி  நேரிட்டு,  கேட்டின்  மகனாகிய  பாவமனுஷன்  வெளிப்பட்டாலொழிய,  அந்த  நாள்  வராது.  (2தெசலோனிக்கேயர்  2:3)

evvithaththinaalum  oruvanum  ungga'lai  moasampoakkaathapadikku  echcharikkaiyaayirungga'l;  eanenil  visuvaasa  thuroagam  munthi  nearittu,  keattin  maganaagiya  paavamanushan  ve'lippattaalozhiya,  antha  naa'l  varaathu.  (2thesaloanikkeayar  2:3)

அவன்  எதிர்த்துநிற்கிறவனாயும்,  தேவனென்னப்படுவதெதுவோ,  ஆராதிக்கப்படுவதெதுவோ,  அவையெல்லாவற்றிற்கும்  மேலாகத்  தன்னை  உயர்த்துகிறவனாயும்,  தேவனுடைய  ஆலயத்தில்  தேவன்போல  உட்கார்ந்து,  தன்னைத்தான்  தேவனென்று  காண்பிக்கிறவனாயும்  இருப்பான்.  (2தெசலோனிக்கேயர்  2:4)

avan  ethirththuni’rki’ravanaayum,  theavanennappaduvathethuvoa,  aaraathikkappaduvathethuvoa,  avaiyellaavat’ri’rkum  mealaagath  thannai  uyarththugi’ravanaayum,  theavanudaiya  aalayaththil  theavanpoala  udkaarnthu,  thannaiththaan  theavanen’ru  kaa'nbikki’ravanaayum  iruppaan.  (2thesaloanikkeayar  2:4)

நான்  உங்களிடத்திலிருந்தபோது  இவைகளைச்  சொன்னது  உங்களுக்கு  ஞாபகமில்லையா?  (2தெசலோனிக்கேயர்  2:5)

naan  ungga'lidaththilirunthapoathu  ivaiga'laich  sonnathu  ungga'lukku  gnaabagamillaiyaa?  (2thesaloanikkeayar  2:5)

அவன்  தன்  காலத்திலே  வெளிப்படும்படிக்கு,  இப்பொழுது  அவனைத்  தடைசெய்கிறது  இன்னதென்றும்  அறிந்திருக்கிறீர்களே.  (2தெசலோனிக்கேயர்  2:6)

avan  than  kaalaththilea  ve'lippadumpadikku,  ippozhuthu  avanaith  thadaiseygi’rathu  innathen’rum  a’rinthirukki’reerga'lea.  (2thesaloanikkeayar  2:6)

அக்கிரமத்தின்  இரகசியம்  இப்பொழுதே  கிரியைசெய்கிறது;  ஆனாலும்  தடைசெய்கிறவன்  நடுவிலிருந்து  நீக்கப்படுமுன்னே  அது  வெளிப்படாது.  (2தெசலோனிக்கேயர்  2:7)

akkiramaththin  iragasiyam  ippozhuthea  kiriyaiseygi’rathu;  aanaalum  thadaiseygi’ravan  naduvilirunthu  neekkappadumunnea  athu  ve'lippadaathu.  (2thesaloanikkeayar  2:7)

நீக்கப்படும்போது,  அந்த  அக்கிரமக்காரன்  வெளிப்படுவான்;  அவனைக்  கர்த்தர்  தம்முடைய  வாயின்  சுவாசத்தினாலே  அழித்து,  தம்முடைய  வருகையின்  பிரசன்னத்தினாலே  நாசம்பண்ணுவார்.  (2தெசலோனிக்கேயர்  2:8)

neekkappadumpoathu,  antha  akkiramakkaaran  ve'lippaduvaan;  avanaik  karththar  thammudaiya  vaayin  suvaasaththinaalea  azhiththu,  thammudaiya  varugaiyin  pirasannaththinaalea  naasampa'n'nuvaar.  (2thesaloanikkeayar  2:8)

அந்த  அக்கிரமக்காரனுடைய  வருகை  சாத்தானுடைய  செயலின்படி  சகல  வல்லமையோடும்  அடையாளங்களோடும்  பொய்யான  அற்புதங்களோடும்,  (2தெசலோனிக்கேயர்  2:9)

antha  akkiramakkaaranudaiya  varugai  saaththaanudaiya  seyalinpadi  sagala  vallamaiyoadum  adaiyaa'langga'loadum  poyyaana  a’rputhangga'loadum,  (2thesaloanikkeayar  2:9)

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே  அநீதியினால்  உண்டாகும்  சகலவித  வஞ்சகத்தோடும்  இருக்கும்.  இரட்சிக்கப்படத்தக்கதாய்ச்  சத்தியத்தின்மேலுள்ள  அன்பை  அவர்கள்  அங்கிகரியாமற்போனபடியால்  அப்படி  நடக்கும்.  (2தெசலோனிக்கேயர்  2:10)

kettuppoagi’ravarga'lukku'l'lea  aneethiyinaal  u'ndaagum  sagalavitha  vagnchagaththoadum  irukkum.  iradchikkappadaththakkathaaych  saththiyaththinmealu'l'la  anbai  avarga'l  anggigariyaama’rpoanapadiyaal  appadi  nadakkum.  (2thesaloanikkeayar  2:10)

ஆகையால்  சத்தியத்தை  விசுவாசியாமல்  அநீதியில்  பிரியப்படுகிற  யாவரும்  ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,  (2தெசலோனிக்கேயர்  2:11)

aagaiyaal  saththiyaththai  visuvaasiyaamal  aneethiyil  piriyappadugi’ra  yaavarum  aakkinaikku'l'laakkappadumpadikku,  (2thesaloanikkeayar  2:11)

அவர்கள்  பொய்யை  விசுவாசிக்கத்தக்கதாகக்  கொடிய  வஞ்சகத்தைத்  தேவன்  அவர்களுக்கு  அனுப்புவார்.  (2தெசலோனிக்கேயர்  2:12)

avarga'l  poyyai  visuvaasikkaththakkathaagak  kodiya  vagnchagaththaith  theavan  avarga'lukku  anuppuvaar.  (2thesaloanikkeayar  2:12)

கர்த்தருக்குப்  பிரியமான  சகோதரரே,  நீங்கள்  ஆவியினாலே  பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்,  சத்தியத்தை  விசுவாசிக்கிறதினாலும்  இரட்சிப்படையும்படிக்கு,  ஆதிமுதல்  தேவன்  உங்களைத்  தெரிந்துகொண்டபடியினாலே,  நாங்கள்  உங்களைக்குறித்து  எப்பொழுதும்  தேவனை  ஸ்தோத்திரிக்கக்  கடனாளிகளாயிருக்கிறோம்.  (2தெசலோனிக்கேயர்  2:13)

karththarukkup  piriyamaana  sagoathararea,  neengga'l  aaviyinaalea  parisuththamaakkappadugi’rathinaalum,  saththiyaththai  visuvaasikki’rathinaalum  iradchippadaiyumpadikku,  aathimuthal  theavan  ungga'laith  therinthuko'ndapadiyinaalea,  naangga'l  ungga'laikku’riththu  eppozhuthum  theavanai  sthoaththirikkak  kadanaa'liga'laayirukki’roam.  (2thesaloanikkeayar  2:13)

நீங்கள்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  மகிமையை  அடையும்பொருட்டாக  எங்கள்  சுவிசேஷத்தினாலே  அந்த  இரட்சிப்புக்கு  அவர்  உங்களை  அழைத்தார்.  (2தெசலோனிக்கேயர்  2:14)

neengga'l  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  magimaiyai  adaiyumporuttaaga  engga'l  suviseashaththinaalea  antha  iradchippukku  avar  ungga'lai  azhaiththaar.  (2thesaloanikkeayar  2:14)

ஆகையால்,  சகோதரரே,  நீங்கள்  நிலைகொண்டு,  வார்த்தையினாலாவது  நிருபத்தினாலாவது  நாங்கள்  உங்களுக்கு  உபதேசித்த  முறைமைகளைக்  கைக்கொள்ளுங்கள்.  (2தெசலோனிக்கேயர்  2:15)

aagaiyaal,  sagoathararea,  neengga'l  nilaiko'ndu,  vaarththaiyinaalaavathu  nirubaththinaalaavathu  naangga'l  ungga'lukku  ubatheasiththa  mu’raimaiga'laik  kaikko'l'lungga'l.  (2thesaloanikkeayar  2:15)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்,  நம்மிடத்தில்  அன்புகூர்ந்து  நித்திய  ஆறுதலையும்  நல்நம்பிக்கையையும்  கிருபையாய்  நமக்குக்  கொடுத்திருக்கிற  நம்முடைய  பிதாவாகிய  தேவனும்,  (2தெசலோனிக்கேயர்  2:16)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvum,  nammidaththil  anbukoornthu  niththiya  aa’ruthalaiyum  nalnambikkaiyaiyum  kirubaiyaay  namakkuk  koduththirukki’ra  nammudaiya  pithaavaagiya  theavanum,  (2thesaloanikkeayar  2:16)

உங்கள்  இருதயங்களைத்  தேற்றி,  எல்லா  நல்வசனத்திலும்  நற்கிரியையிலும்  உங்களை  ஸ்திரப்படுத்துவாராக.  (2தெசலோனிக்கேயர்  2:17)

ungga'l  iruthayangga'laith  theat’ri,  ellaa  nalvasanaththilum  na’rkiriyaiyilum  ungga'lai  sthirappaduththuvaaraaga.  (2thesaloanikkeayar  2:17)