Showing posts with label ஆகாய். Show all posts
Showing posts with label ஆகாய். Show all posts

Friday, July 08, 2016

Aagaay 2 | ஆகாய் 2 | Haggai 2

ஏழாம்  மாதம்  இருபத்தோராந்தேதியிலே  ஆகாய்  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்,  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று;  அவர்:  (ஆகாய்  2:1)

eazhaam  maatham  irubaththoaraantheathiyilea  aagaay  ennum  theerkkatharisiyin  moolamaay,  karththarudaiya  vaarththai  u'ndaayit’ru;  avar:  (aagaay  2:1)

நீ  செயல்த்தியேலின்  குமாரனாகிய  செருபாபேல்  என்னும்  யூதாவின்  தலைவனோடும்,  யோத்சதாக்கின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  பிரதான  ஆசாரியனோடும்,  ஜனத்தில்  மீதியானவர்களோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (ஆகாய்  2:2)

nee  seyalththiyealin  kumaaranaagiya  serubaabeal  ennum  yoothaavin  thalaivanoadum,  yoathsathaakkin  kumaaranaagiya  yoasuvaa  ennum  pirathaana  aasaariyanoadum,  janaththil  meethiyaanavarga'loadum  sollavea'ndiyathu  ennaven’raal:  (aagaay  2:2)

இந்த  ஆலயத்தின்  முந்தின  மகிமையைக்  கண்டவர்களில்  உங்களுக்குள்ளே  மீந்திருக்கிறவர்கள்  யார்?  இப்பொழுது  இது  உங்களுக்கு  எப்படிக்  காண்கிறது?  அதற்கு  இது  உங்கள்  பார்வையில்  ஒன்றுமில்லாததுபோல்  காண்கிறதல்லவா?  (ஆகாய்  2:3)

intha  aalayaththin  munthina  magimaiyaik  ka'ndavarga'lil  ungga'lukku'l'lea  meenthirukki’ravarga'l  yaar?  ippozhuthu  ithu  ungga'lukku  eppadik  kaa'ngi’rathu?  atha’rku  ithu  ungga'l  paarvaiyil  on’rumillaathathupoal  kaa'ngi’rathallavaa?  (aagaay  2:3)

ஆனாலும்  செருபாபேலே,  நீ  திடன்கொள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  யோத்சதாக்கின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  பிரதான  ஆசாரியனே,  நீ  திடன்கொள்;  தேசத்தின்  எல்லா  ஜனங்களே,  நீங்கள்  திடன்கொள்ளுங்கள்,  வேலையை  நடத்துங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உங்களுடனே  இருக்கிறேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  2:4)

aanaalum  serubaabealea,  nee  thidanko'l  en’ru  karththar  sollugi’raar;  yoathsathaakkin  kumaaranaagiya  yoasuvaa  ennum  pirathaana  aasaariyanea,  nee  thidanko'l;  theasaththin  ellaa  janangga'lea,  neengga'l  thidanko'l'lungga'l,  vealaiyai  nadaththungga'l  en’ru  karththar  sollugi’raar;  naan  ungga'ludanea  irukki’rean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (aagaay  2:4)

நீங்கள்  எகிப்திலிருந்து  புறப்படுகிறபோது  நான்  உங்களோடே  உடன்படிக்கைபண்ணின  வார்த்தையின்படியே,  என்  ஆவியானவரும்  உங்கள்  நடுவில்  நிலைகொண்டிருப்பார்;  பயப்படாதேயுங்கள்.  (ஆகாய்  2:5)

neengga'l  egipthilirunthu  pu’rappadugi’rapoathu  naan  ungga'loadea  udanpadikkaipa'n'nina  vaarththaiyinpadiyea,  en  aaviyaanavarum  ungga'l  naduvil  nilaiko'ndiruppaar;  bayappadaatheayungga'l.  (aagaay  2:5)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  கொஞ்சக்காலத்துக்குள்ளே  இன்னும்  ஒருதரம்  நான்  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  வெட்டாந்தரையையும்  அசையப்பண்ணுவேன்.  (ஆகாய்  2:6)

seanaiga'lin  karththar  sollugi’raar:  kognchakkaalaththukku'l'lea  innum  orutharam  naan  vaanaththaiyum  boomiyaiyum  samuththiraththaiyum  vettaantharaiyaiyum  asaiyappa'n'nuvean.  (aagaay  2:6)

சகல  ஜாதிகளையும்  அசையப்பண்ணுவேன்,  சகல  ஜாதிகளாலும்  விரும்பப்பட்டவர்  வருவார்;  இந்த  ஆலயத்தை  மகிமையினால்  நிறையப்பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  2:7)

sagala  jaathiga'laiyum  asaiyappa'n'nuvean,  sagala  jaathiga'laalum  virumbappattavar  varuvaar;  intha  aalayaththai  magimaiyinaal  ni’raiyappa'n'nuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (aagaay  2:7)

வெள்ளியும்  என்னுடையது,  பொன்னும்  என்னுடையது  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  2:8)

ve'l'liyum  ennudaiyathu,  ponnum  ennudaiyathu  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (aagaay  2:8)

முந்தின  ஆலயத்தின்  மகிமையைப்பார்க்கிலும்,  இந்தப்  பிந்தின  ஆலயத்தின்  மகிமை  பெரிதாயிருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  இவ்விடத்திலே  சமாதானத்தைக்  கட்டளையிடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (ஆகாய்  2:9)

munthina  aalayaththin  magimaiyaippaarkkilum,  inthap  pinthina  aalayaththin  magimai  perithaayirukkum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  ivvidaththilea  samaathaanaththaik  katta'laiyiduvean  en’ru  seanaiga'lin  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (aagaay  2:9)

தரியுவின்  இரண்டாம்  வருஷம்  ஒன்பதாம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியிலே,  ஆகாய்  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று;  அவர்:  (ஆகாய்  2:10)

thariyuvin  ira'ndaam  varusham  onbathaam  maatham  irubaththunaalaantheathiyilea,  aagaay  ennum  theerkkatharisiyin  moolamaayk  karththarudaiya  vaarththai  u'ndaayit’ru;  avar:  (aagaay  2:10)

ஒருவன்  தன்  வஸ்திரத்தின்  தொங்கலிலே  பரிசுத்த  மாம்சத்தைக்  கொண்டுபோகையில்  தன்  வஸ்திரத்தின்  தொங்கல்  அப்பத்தையாகிலும்,  சாதத்தையாகிலும்,  திராட்சரசத்தையாகிலும்,  எண்ணெயையாகிலும்,  மற்றெந்த  போஜனபதார்த்தத்தையாகிலும்  தொட்டால்  அது  பரிசுத்தமாகுமோ  என்று  நீ  ஆசாரியரிடத்தில்  வேத  நியாயத்தைப்பற்றிக்  கேள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (ஆகாய்  2:11)

oruvan  than  vasthiraththin  thonggalilea  parisuththa  maamsaththaik  ko'ndupoagaiyil  than  vasthiraththin  thonggal  appaththaiyaagilum,  saathaththaiyaagilum,  thiraadcharasaththaiyaagilum,  e'n'neyaiyaagilum,  mat’rentha  poajanapathaarththaththaiyaagilum  thottaal  athu  parisuththamaagumoa  en’ru  nee  aasaariyaridaththil  veatha  niyaayaththaippat’rik  kea'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’raar.  (aagaay  2:11)

அதற்கு  ஆசாரியர்கள்  பிரதியுத்தரமாக:  பரிசுத்தமாகாது  என்றார்கள்.  (ஆகாய்  2:12)

atha’rku  aasaariyarga'l  pirathiyuththaramaaga:  parisuththamaagaathu  en’raarga'l.  (aagaay  2:12)

பிணத்தால்  தீட்டுப்பட்டவன்  அவைகளில்  எதையாகிலும்  தொட்டால்,  அது  தீட்டுப்படுமோ  என்று  ஆகாய்  பின்னும்  கேட்டான்;  அதற்கு  ஆசாரியர்கள்  பிரதியுத்தரமாக:  தீட்டுப்படும்  என்றார்கள்.  (ஆகாய்  2:13)

pi'naththaal  theettuppattavan  avaiga'lil  ethaiyaagilum  thottaal,  athu  theettuppadumoa  en’ru  aagaay  pinnum  keattaan;  atha’rku  aasaariyarga'l  pirathiyuththaramaaga:  theettuppadum  en’raarga'l.  (aagaay  2:13)

அப்பொழுது  ஆகாய்:  அப்படியே  இந்த  ஜனங்களும்  இந்த  ஜாதியாரும்  என்  சமுகத்தில்  இருக்கிறார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவர்களுடைய  கைகளின்  எல்லாக்  கிரியைகளும்  அப்படியே  இருக்கிறது;  அவர்கள்  அங்கே  கொண்டுவந்து  படைக்கிறதும்  தீட்டுப்பட்டிருக்கிறது.  (ஆகாய்  2:14)

appozhuthu  aagaay:  appadiyea  intha  janangga'lum  intha  jaathiyaarum  en  samugaththil  irukki’raarga'l  en’ru  karththar  sollugi’raar;  avarga'ludaiya  kaiga'lin  ellaak  kiriyaiga'lum  appadiyea  irukki’rathu;  avarga'l  anggea  ko'nduvanthu  padaikki’rathum  theettuppattirukki’rathu.  (aagaay  2:14)

இப்போதும்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டும்படி  ஒரு  கல்லின்மேல்  ஒரு  கல்  வைக்கப்பட்டது  முதல்  நடந்ததை  உங்கள்  மனதிலே  சிந்தித்துப்பாருங்கள்.  (ஆகாய்  2:15)

ippoathum  karththarudaiya  aalayaththaik  kattumpadi  oru  kallinmeal  oru  kal  vaikkappattathu  muthal  nadanthathai  ungga'l  manathilea  sinthiththuppaarungga'l.  (aagaay  2:15)

அந்த  நாட்கள்  முதல்  ஒருவன்  இருபது  மரக்காலாகக்  கண்ட  அம்பாரத்தினிடத்தில்  வந்தபோது,  பத்து  மரக்கால்மாத்திரம்  இருந்தது;  ஒருவன்  ஆலையின்  தொட்டியில்  ஐம்பது  குடம்  மொள்ள  ஆலையினிடத்திலே  வந்தபோது  இருபது  குடம்மாத்திரம்  இருந்தது.  (ஆகாய்  2:16)

antha  naadka'l  muthal  oruvan  irubathu  marakkaalaagak  ka'nda  ambaaraththinidaththil  vanthapoathu,  paththu  marakkaalmaaththiram  irunthathu;  oruvan  aalaiyin  thottiyil  aimbathu  kudam  mo'l'la  aalaiyinidaththilea  vanthapoathu  irubathu  kudammaaththiram  irunthathu.  (aagaay  2:16)

கருக்காயினாலும்  விஷப்பனியினாலும்  கல்மழையினாலும்  உங்களை  உங்கள்  கைகளின்  வேலையிலெல்லாம்  அடித்தேன்;  ஆனாலும்  நீங்கள்  என்னிடத்தில்  மனதைத்  திருப்பாமல்  போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  2:17)

karukkaayinaalum  vishappaniyinaalum  kalmazhaiyinaalum  ungga'lai  ungga'l  kaiga'lin  vealaiyilellaam  adiththean;  aanaalum  neengga'l  ennidaththil  manathaith  thiruppaamal  poaneerga'l  en’ru  karththar  sollugi’raar.  (aagaay  2:17)

இப்போதும்  இதற்கு  முந்தினகாலத்தில்  நடந்ததை  உங்கள்  மனதிலே  சிந்தித்துப்பாருங்கள்;  ஒன்பதாம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியாகிய  இந்நாள்முதல்  கர்த்தருடைய  ஆலயத்தின்  அஸ்திபாரம்  போடப்பட்ட  அந்நாள்வரைக்கும்  சென்றகாலத்தில்  நடந்ததை  உங்கள்  மனதிலே  சிந்தித்துப்பாருங்கள்.  (ஆகாய்  2:18)

ippoathum  itha’rku  munthinakaalaththil  nadanthathai  ungga'l  manathilea  sinthiththuppaarungga'l;  onbathaam  maatham  irubaththunaalaantheathiyaagiya  innaa'lmuthal  karththarudaiya  aalayaththin  asthibaaram  poadappatta  annaa'lvaraikkum  sen’rakaalaththil  nadanthathai  ungga'l  manathilea  sinthiththuppaarungga'l.  (aagaay  2:18)

களஞ்சியத்தில்  இன்னும்  விதைத்தானியம்  உண்டோ?  திராட்சச்செடியும்  அத்திமரமும்  மாதளஞ்செடியும்  ஒலிவமரமும்  கனிகொடுக்கவில்லையே;  நான்  இன்றுமுதல்  உங்களை  ஆசீர்வதிப்பேன்  என்று  சொல்லுகிறார்  என்றான்.  (ஆகாய்  2:19)

ka'lagnchiyaththil  innum  vithaiththaaniyam  u'ndoa?  thiraadchachsediyum  aththimaramum  maatha'lagnsediyum  olivamaramum  kanikodukkavillaiyea;  naan  in’rumuthal  ungga'lai  aaseervathippean  en’ru  sollugi’raar  en’raan.  (aagaay  2:19)

இருபத்துநாலாந்தேதியாகிய  அந்நாளிலே  கர்த்தருடைய  வார்த்தை  இரண்டாம்  விசை  ஆகாய்  என்பவனுக்கு  உண்டாகி,  அவர்:  (ஆகாய்  2:20)

irubaththunaalaantheathiyaagiya  annaa'lilea  karththarudaiya  vaarththai  ira'ndaam  visai  aagaay  enbavanukku  u'ndaagi,  avar:  (aagaay  2:20)

நீ  யூதாவின்  தலைவனாகிய  செருபாபேலோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  நான்  வானத்தையும்  பூமியையும்  அசையப்பண்ணி,  (ஆகாய்  2:21)

nee  yoothaavin  thalaivanaagiya  serubaabealoadea  sollavea'ndiyathu  ennaven’raal,  naan  vaanaththaiyum  boomiyaiyum  asaiyappa'n'ni,  (aagaay  2:21)

ராஜ்யங்களின்  சிங்காசனத்தைக்  கவிழ்த்து,  ஜாதிகளுடைய  ராஜ்யங்களின்  பெலத்தை  அழித்து,  இரதத்தையும்  அதில்  ஏறியிருக்கிறவர்களையும்  கவிழ்த்துப்போடுவேன்;  குதிரைகளோடே  அவைகளின்மேல்  ஏறியிருப்பவர்களும்  அவரவர்  தங்கள்  தங்கள்  சகோதரனின்  பட்டயத்தினாலே  விழுவார்கள்.  (ஆகாய்  2:22)

raajyangga'lin  singgaasanaththaik  kavizhththu,  jaathiga'ludaiya  raajyangga'lin  belaththai  azhiththu,  irathaththaiyum  athil  ea’riyirukki’ravarga'laiyum  kavizhththuppoaduvean;  kuthiraiga'loadea  avaiga'linmeal  ea’riyiruppavarga'lum  avaravar  thangga'l  thangga'l  sagoatharanin  pattayaththinaalea  vizhuvaarga'l.  (aagaay  2:22)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  செயல்த்தியேலின்  குமாரனாகிய  செருபாபேல்  என்னும்  என்  ஊழியக்காரனே,  உன்னை  நான்  அந்நாளிலே  சேர்த்துக்கொண்டு,  உன்னை  முத்திரை  மோதிரமாக  வைப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உன்னைத்  தெரிந்துகொண்டேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (ஆகாய்  2:23)

seanaiga'lin  karththar  sollugi’raar:  seyalththiyealin  kumaaranaagiya  serubaabeal  ennum  en  oozhiyakkaaranea,  unnai  naan  annaa'lilea  searththukko'ndu,  unnai  muththirai  moathiramaaga  vaippean  en’ru  karththar  sollugi’raar;  naan  unnaith  therinthuko'ndean  en’ru  seanaiga'lin  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (aagaay  2:23)


Aagaay 1 | ஆகாய் 1 | Haggai 1

ராஜாவாகிய  தரியு  அரசாண்ட  இரண்டாம்  வருஷம்  ஆறாம்  மாதம்  முதலாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  ஆகாய்  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்  செயல்த்தியேலின்  குமாரனாகிய  செருபாபேல்  என்னும்  யூதாவின்  தலைவனுக்கும்,  யோத்சதாக்கின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  பிரதான  ஆசாரியனுக்கும்  உண்டாகி,  அவர்  சொன்னது  என்னவென்றால்:  (ஆகாய்  1:1)

raajaavaagiya  thariyu  arasaa'nda  ira'ndaam  varusham  aa’raam  maatham  muthalaantheathiyilea,  karththarudaiya  vaarththai  aagaay  ennum  theerkkatharisiyin  moolamaay  seyalththiyealin  kumaaranaagiya  serubaabeal  ennum  yoothaavin  thalaivanukkum,  yoathsathaakkin  kumaaranaagiya  yoasuvaa  ennum  pirathaana  aasaariyanukkum  u'ndaagi,  avar  sonnathu  ennaven’raal:  (aagaay  1:1)

இந்த  ஜனங்கள்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுகிறதற்கு  ஏற்றகாலம்  இன்னும்  வரவில்லை  என்கிறார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  1:2)

intha  janangga'l  karththarudaiya  aalayaththaik  kattugi’ratha’rku  eat’rakaalam  innum  varavillai  engi’raarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (aagaay  1:2)

ஆனாலும்  ஆகாய்  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்  சொல்லுகிறார்:  (ஆகாய்  1:3)

aanaalum  aagaay  ennum  theerkkatharisiyin  moolamaayk  karththarudaiya  vaarththai  u'ndaagi,  avar  sollugi’raar:  (aagaay  1:3)

இந்த  வீடு  பாழாய்க்  கிடக்கும்போது,  நீங்கள்  மச்சுப்பாவப்பட்ட  உங்கள்  வீடுகளில்  குடியிருக்கும்படியான  காலம்  இதுவோ?  (ஆகாய்  1:4)

intha  veedu  paazhaayk  kidakkumpoathu,  neengga'l  machchuppaavappatta  ungga'l  veeduga'lil  kudiyirukkumpadiyaana  kaalam  ithuvoa?  (aagaay  1:4)

இப்போதும்  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  உங்கள்  வழிகளைச்  சிந்தித்துப்பாருங்கள்.  (ஆகாய்  1:5)

ippoathum  seanaiga'lin  karththar  sollugi’raar:  ungga'l  vazhiga'laich  sinthiththuppaarungga'l.  (aagaay  1:5)

நீங்கள்  திரளாய்  விதைத்தும்  கொஞ்சமாய்  அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்;  நீங்கள்  புசித்தும்  திருப்தியாகவில்லை;  குடித்தும்  பரிபூரணமடையவில்லை;  நீங்கள்  வஸ்திரம்  உடுத்தியும்  ஒருவனுக்கும்  குளிர்விடவில்லை;  கூலியைச்  சம்பாதிக்கிறவன்  பொத்தலான  பையிலே  போடுகிறவனாய்  அதைச்  சம்பாதிக்கிறான்.  (ஆகாய்  1:6)

neengga'l  thira'laay  vithaiththum  kognchamaay  a’ruththukko'nduvarugi’reerga'l;  neengga'l  pusiththum  thirupthiyaagavillai;  kudiththum  paripoora'namadaiyavillai;  neengga'l  vasthiram  uduththiyum  oruvanukkum  ku'lirvidavillai;  kooliyaich  sambaathikki’ravan  poththalaana  paiyilea  poadugi’ravanaay  athaich  sambaathikki’raan.  (aagaay  1:6)

உங்கள்  வழிகளைச்  சிந்தித்துப்  பாருங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  1:7)

ungga'l  vazhiga'laich  sinthiththup  paarungga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (aagaay  1:7)

நீங்கள்  மலையின்மேல்  ஏறிப்போய்,  மரங்களை  வெட்டிக்கொண்டுவந்து,  ஆலயத்தைக்  கட்டுங்கள்;  அதின்பேரில்  நான்  பிரியமாயிருப்பேன்,  அதினால்  என்  மகிமை  விளங்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  1:8)

neengga'l  malaiyinmeal  ea’rippoay,  marangga'lai  vettikko'nduvanthu,  aalayaththaik  kattungga'l;  athinpearil  naan  piriyamaayiruppean,  athinaal  en  magimai  vi'langgum  en’ru  karththar  sollugi’raar.  (aagaay  1:8)

அதிகமாய்  வருமென்று  நீங்கள்  எதிர்பார்த்திருந்தும்,  இதோ,  கொஞ்சம்  கிடைத்தது;  நீங்கள்  அறுத்து  வீட்டுக்குக்  கொண்டுவந்தும்,  நான்  அதை  ஊதிப்போடுகிறேன்;  எதினிமித்தமென்றால்,  என்  வீடு  பாழாய்க்கிடக்கும்போது,  நீங்கள்  எல்லாரும்  அவனவன்  தன்  தன்  வீட்டிற்கு  ஓடிப்போகிறீர்களே,  இதினிமித்தமே  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆகாய்  1:9)

athigamaay  varumen’ru  neengga'l  ethirpaarththirunthum,  ithoa,  kogncham  kidaiththathu;  neengga'l  a’ruththu  veettukkuk  ko'nduvanthum,  naan  athai  oothippoadugi’rean;  ethinimiththamen’raal,  en  veedu  paazhaaykkidakkumpoathu,  neengga'l  ellaarum  avanavan  than  than  veetti’rku  oadippoagi’reerga'lea,  ithinimiththamea  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (aagaay  1:9)

ஆதலால்  உங்கள்மேல்  இருக்கிற  வானம்  பனியைப்  பெய்யாமலும்,  பூமி  பலனைக்  கொடாமலும்  போயிற்று.  (ஆகாய்  1:10)

aathalaal  ungga'lmeal  irukki’ra  vaanam  paniyaip  peyyaamalum,  boomi  palanaik  kodaamalum  poayit’ru.  (aagaay  1:10)

நான்  நிலத்தின்மேலும்,  மலைகளின்மேலும்,  தானியத்தின்மேலும்,  புது  திராட்சரசத்தின்மேலும்,  எண்ணெயின்மேலும்,  பூமியில்  விளைகிற  எல்லாவற்றின்மேலும்,  மனுஷரின்மேலும்,  மிருகங்களின்மேலும்,  கைப்பாடு  அனைத்தின்மேலும்  வறட்சியை  வருவித்தேன்  என்றார்.  (ஆகாய்  1:11)

naan  nilaththinmealum,  malaiga'linmealum,  thaaniyaththinmealum,  puthu  thiraadcharasaththinmealum,  e'n'neyinmealum,  boomiyil  vi'laigi’ra  ellaavat’rinmealum,  manusharinmealum,  mirugangga'linmealum,  kaippaadu  anaiththinmealum  va’radchiyai  varuviththean  en’raar.  (aagaay  1:11)

அப்பொழுது  செயல்த்தியேலின்  குமாரனாகிய  செருபாபேலும்,  யோத்சதாக்கின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  பிரதான  ஆசாரியனும்,  ஜனத்தில்  மீதியான  அனைவரும்  தங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்துக்கும்,  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  அனுப்பின  ஆகாய்  என்னும்  தீர்க்கதரிசியினுடைய  வார்த்தைகளுக்கும்  செவிகொடுத்தார்கள்,  ஜனங்கள்  கர்த்தருக்கு  முன்பாகப்  பயந்திருந்தார்கள்.  (ஆகாய்  1:12)

appozhuthu  seyalththiyealin  kumaaranaagiya  serubaabealum,  yoathsathaakkin  kumaaranaagiya  yoasuvaa  ennum  pirathaana  aasaariyanum,  janaththil  meethiyaana  anaivarum  thangga'l  theavanaagiya  karththarudaiya  saththaththukkum,  thangga'l  theavanaagiya  karththar  anuppina  aagaay  ennum  theerkkatharisiyinudaiya  vaarththaiga'lukkum  sevikoduththaarga'l,  janangga'l  karththarukku  munbaagap  bayanthirunthaarga'l.  (aagaay  1:12)

அப்பொழுது  கர்த்தருடைய  தூதனாகிய  ஆகாய்,  கர்த்தர்  தூதனுப்பிய  வார்த்தையின்படி  ஜனங்களை  நோக்கி:  நான்  உங்களோடே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (ஆகாய்  1:13)

appozhuthu  karththarudaiya  thoothanaagiya  aagaay,  karththar  thoothanuppiya  vaarththaiyinpadi  janangga'lai  noakki:  naan  ungga'loadea  irukki’rean  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (aagaay  1:13)

பின்பு  கர்த்தர்  செயல்த்தியேலின்  குமாரனாகிய  செருபாபேல்  என்னும்  யூதாவின்  தலைவனுடைய  ஆவியையும்,  யோத்சதாக்கின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  பிரதான  ஆசாரியனுடைய  ஆவியையும்,  ஜனத்தில்  மீதியான  எல்லாருடைய  ஆவியையும்  எழுப்பினார்;  அவர்கள்  வந்து,  தங்கள்  தேவனாகிய  சேனைகளுடைய  கர்த்தரின்  ஆலயத்திலே  வேலைசெய்தார்கள்.  (ஆகாய்  1:14)

pinbu  karththar  seyalththiyealin  kumaaranaagiya  serubaabeal  ennum  yoothaavin  thalaivanudaiya  aaviyaiyum,  yoathsathaakkin  kumaaranaagiya  yoasuvaa  ennum  pirathaana  aasaariyanudaiya  aaviyaiyum,  janaththil  meethiyaana  ellaarudaiya  aaviyaiyum  ezhuppinaar;  avarga'l  vanthu,  thangga'l  theavanaagiya  seanaiga'ludaiya  karththarin  aalayaththilea  vealaiseythaarga'l.  (aagaay  1:14)

தரியு  ராஜாவின்  இரண்டாம்  வருஷம்  ஆறாம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியிலே  இது  நடந்தது.  (ஆகாய்  1:15)

thariyu  raajaavin  ira'ndaam  varusham  aa’raam  maatham  irubaththunaalaantheathiyilea  ithu  nadanthathu.  (aagaay  1:15)