ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்,
கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று;
அவர்: (ஆகாய் 2:1)
eazhaam maatham
irubaththoaraantheathiyilea aagaay ennum theerkkatharisiyin moolamaay, karththarudaiya vaarththai
u'ndaayit’ru; avar: (aagaay 2:1)
நீ செயல்த்தியேலின் குமாரனாகிய
செருபாபேல் என்னும் யூதாவின்
தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய
யோசுவா என்னும் பிரதான
ஆசாரியனோடும், ஜனத்தில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:
(ஆகாய் 2:2)
nee seyalththiyealin kumaaranaagiya
serubaabeal ennum yoothaavin
thalaivanoadum, yoathsathaakkin kumaaranaagiya yoasuvaa ennum pirathaana
aasaariyanoadum, janaththil
meethiyaanavarga'loadum sollavea'ndiyathu ennaven’raal: (aagaay
2:2)
இந்த ஆலயத்தின்
முந்தின மகிமையைக் கண்டவர்களில்
உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக்
காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில்
ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா? (ஆகாய்
2:3)
intha aalayaththin
munthina magimaiyaik ka'ndavarga'lil ungga'lukku'l'lea meenthirukki’ravarga'l yaar? ippozhuthu ithu ungga'lukku eppadik kaa'ngi’rathu? atha’rku ithu ungga'l paarvaiyil on’rumillaathathupoal kaa'ngi’rathallavaa? (aagaay
2:3)
ஆனாலும் செருபாபேலே,
நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா
என்னும் பிரதான ஆசாரியனே,
நீ திடன்கொள்; தேசத்தின்
எல்லா ஜனங்களே, நீங்கள்
திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்;
நான் உங்களுடனே இருக்கிறேன்
என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார். (ஆகாய் 2:4)
aanaalum serubaabealea, nee thidanko'l
en’ru
karththar sollugi’raar; yoathsathaakkin kumaaranaagiya yoasuvaa ennum pirathaana aasaariyanea, nee thidanko'l; theasaththin ellaa janangga'lea, neengga'l thidanko'l'lungga'l, vealaiyai nadaththungga'l en’ru karththar sollugi’raar; naan ungga'ludanea irukki’rean en’ru seanaiga'lin karththar sollugi’raar. (aagaay
2:4)
நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள்
நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள். (ஆகாய்
2:5)
neengga'l egipthilirunthu pu’rappadugi’rapoathu naan ungga'loadea udanpadikkaipa'n'nina vaarththaiyinpadiyea, en aaviyaanavarum ungga'l naduvil
nilaiko'ndiruppaar; bayappadaatheayungga'l. (aagaay
2:5)
சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும்
ஒருதரம் நான் வானத்தையும்
பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன். (ஆகாய்
2:6)
seanaiga'lin karththar sollugi’raar: kognchakkaalaththukku'l'lea innum orutharam naan vaanaththaiyum boomiyaiyum samuththiraththaiyum vettaantharaiyaiyum asaiyappa'n'nuvean. (aagaay
2:6)
சகல ஜாதிகளையும்
அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும்
விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால்
நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறார். (ஆகாய்
2:7)
sagala jaathiga'laiyum asaiyappa'n'nuvean, sagala
jaathiga'laalum virumbappattavar varuvaar; intha aalayaththai magimaiyinaal ni’raiyappa'n'nuvean en’ru seanaiga'lin karththar
sollugi’raar. (aagaay 2:7)
வெள்ளியும் என்னுடையது,
பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார். (ஆகாய் 2:8)
ve'l'liyum ennudaiyathu,
ponnum ennudaiyathu en’ru seanaiga'lin karththar
sollugi’raar. (aagaay 2:8)
முந்தின ஆலயத்தின்
மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின
ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக்
கட்டளையிடுவேன் என்று சேனைகளின்
கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
(ஆகாய் 2:9)
munthina aalayaththin
magimaiyaippaarkkilum, inthap
pinthina aalayaththin magimai perithaayirukkum en’ru seanaiga'lin karththar
sollugi’raar; ivvidaththilea
samaathaanaththaik katta'laiyiduvean en’ru seanaiga'lin karththar uraikki’raar en’ru sol en’raar. (aagaay
2:9)
தரியுவின் இரண்டாம்
வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க்
கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று;
அவர்: (ஆகாய் 2:10)
thariyuvin ira'ndaam
varusham onbathaam maatham irubaththunaalaantheathiyilea, aagaay ennum theerkkatharisiyin moolamaayk karththarudaiya vaarththai
u'ndaayit’ru; avar: (aagaay 2:10)
ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே
பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல்
அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த
போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
(ஆகாய் 2:11)
oruvan than vasthiraththin thonggalilea parisuththa maamsaththaik ko'ndupoagaiyil than vasthiraththin thonggal appaththaiyaagilum,
saathaththaiyaagilum, thiraadcharasaththaiyaagilum, e'n'neyaiyaagilum, mat’rentha poajanapathaarththaththaiyaagilum thottaal athu parisuththamaagumoa en’ru nee aasaariyaridaththil veatha
niyaayaththaippat’rik kea'l en’ru seanaiga'lin karththar sollugi’raar en’raar. (aagaay
2:11)
அதற்கு ஆசாரியர்கள்
பிரதியுத்தரமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
(ஆகாய் 2:12)
atha’rku aasaariyarga'l pirathiyuththaramaaga: parisuththamaagaathu en’raarga'l. (aagaay
2:12)
பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில்
எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும்
கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள்
பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.
(ஆகாய் 2:13)
pi'naththaal theettuppattavan avaiga'lil ethaiyaagilum thottaal, athu theettuppadumoa en’ru aagaay pinnum
keattaan;
atha’rku
aasaariyarga'l pirathiyuththaramaaga: theettuppadum en’raarga'l. (aagaay 2:13)
அப்பொழுது ஆகாய்:
அப்படியே இந்த ஜனங்களும்
இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
அவர்களுடைய கைகளின் எல்லாக்
கிரியைகளும் அப்படியே இருக்கிறது;
அவர்கள் அங்கே கொண்டுவந்து
படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது. (ஆகாய்
2:14)
appozhuthu aagaay: appadiyea
intha janangga'lum intha jaathiyaarum
en samugaththil irukki’raarga'l en’ru karththar sollugi’raar; avarga'ludaiya kaiga'lin ellaak
kiriyaiga'lum appadiyea
irukki’rathu; avarga'l anggea ko'nduvanthu
padaikki’rathum theettuppattirukki’rathu. (aagaay
2:14)
இப்போதும் கர்த்தருடைய
ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது
முதல் நடந்ததை உங்கள்
மனதிலே சிந்தித்துப்பாருங்கள். (ஆகாய்
2:15)
ippoathum karththarudaiya aalayaththaik
kattumpadi oru kallinmeal oru kal vaikkappattathu muthal
nadanthathai ungga'l manathilea
sinthiththuppaarungga'l. (aagaay 2:15)
அந்த நாட்கள்
முதல் ஒருவன் இருபது
மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது,
பத்து மரக்கால்மாத்திரம் இருந்தது;
ஒருவன் ஆலையின் தொட்டியில்
ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது
இருபது குடம்மாத்திரம் இருந்தது.
(ஆகாய் 2:16)
antha naadka'l
muthal oruvan irubathu marakkaalaagak ka'nda
ambaaraththinidaththil vanthapoathu,
paththu marakkaalmaaththiram irunthathu;
oruvan aalaiyin thottiyil aimbathu kudam mo'l'la aalaiyinidaththilea vanthapoathu
irubathu
kudammaaththiram irunthathu. (aagaay
2:16)
கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை
உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்;
ஆனாலும் நீங்கள் என்னிடத்தில்
மனதைத் திருப்பாமல் போனீர்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(ஆகாய் 2:17)
karukkaayinaalum vishappaniyinaalum kalmazhaiyinaalum ungga'lai ungga'l kaiga'lin vealaiyilellaam adiththean;
aanaalum neengga'l ennidaththil manathaith
thiruppaamal poaneerga'l en’ru karththar sollugi’raar. (aagaay 2:17)
இப்போதும் இதற்கு
முந்தினகாலத்தில் நடந்ததை உங்கள்
மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம்
மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல்
கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம்
போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை
உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். (ஆகாய்
2:18)
ippoathum itha’rku munthinakaalaththil nadanthathai
ungga'l
manathilea sinthiththuppaarungga'l; onbathaam maatham irubaththunaalaantheathiyaagiya innaa'lmuthal karththarudaiya aalayaththin
asthibaaram poadappatta annaa'lvaraikkum sen’rakaalaththil nadanthathai
ungga'l
manathilea sinthiththuppaarungga'l. (aagaay 2:18)
களஞ்சியத்தில் இன்னும்
விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும்
மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை
ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்
என்றான். (ஆகாய் 2:19)
ka'lagnchiyaththil innum vithaiththaaniyam u'ndoa?
thiraadchachsediyum aththimaramum
maatha'lagnsediyum olivamaramum
kanikodukkavillaiyea; naan in’rumuthal ungga'lai aaseervathippean en’ru sollugi’raar en’raan. (aagaay 2:19)
இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே
கர்த்தருடைய வார்த்தை இரண்டாம்
விசை ஆகாய் என்பவனுக்கு
உண்டாகி, அவர்: (ஆகாய்
2:20)
irubaththunaalaantheathiyaagiya annaa'lilea
karththarudaiya vaarththai ira'ndaam
visai
aagaay
enbavanukku u'ndaagi, avar: (aagaay 2:20)
நீ யூதாவின்
தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,
நான் வானத்தையும் பூமியையும்
அசையப்பண்ணி, (ஆகாய் 2:21)
nee yoothaavin
thalaivanaagiya serubaabealoadea
sollavea'ndiyathu ennaven’raal, naan vaanaththaiyum boomiyaiyum asaiyappa'n'ni, (aagaay
2:21)
ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து,
ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை
அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே
அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர்
தங்கள் தங்கள் சகோதரனின்
பட்டயத்தினாலே விழுவார்கள். (ஆகாய்
2:22)
raajyangga'lin singgaasanaththaik kavizhththu,
jaathiga'ludaiya raajyangga'lin belaththai azhiththu,
irathaththaiyum athil ea’riyirukki’ravarga'laiyum kavizhththuppoaduvean; kuthiraiga'loadea avaiga'linmeal ea’riyiruppavarga'lum avaravar thangga'l thangga'l sagoatharanin pattayaththinaalea vizhuvaarga'l. (aagaay
2:22)
சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய
செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே
சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை
மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர்
உரைக்கிறார் என்று சொல் என்றார். (ஆகாய்
2:23)
seanaiga'lin karththar sollugi’raar:
seyalththiyealin kumaaranaagiya
serubaabeal ennum en oozhiyakkaaranea, unnai naan annaa'lilea searththukko'ndu, unnai muththirai moathiramaaga vaippean
en’ru
karththar sollugi’raar; naan unnaith therinthuko'ndean en’ru seanaiga'lin karththar uraikki’raar en’ru sol en’raar. (aagaay
2:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!