Showing posts with label Yaathiraagamam. Show all posts
Showing posts with label Yaathiraagamam. Show all posts

Saturday, July 23, 2016

Yaaththiraagamam 40 | யாத்திராகமம் 40 | Exodus 40

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (யாத்திராகமம்  40:1)

karththar  moaseayai  noakki:  (yaaththiraagamam  40:1)

நீ  முதலாம்  மாதம்  முதல்  தேதியில்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  வாசஸ்தலத்தை  ஸ்தாபனம்பண்ணு.  (யாத்திராகமம்  40:2)

nee  muthalaam  maatham  muthal  theathiyil  aasarippuk  koodaaraththin  vaasasthalaththai  sthaabanampa'n'nu.  (yaaththiraagamam  40:2)

அதிலே  சாட்சிப்பெட்டியை  வைத்து,  பெட்டியைத்  திரையினால்  மறைத்து,  (யாத்திராகமம்  40:3)

athilea  saadchippettiyai  vaiththu,  pettiyaith  thiraiyinaal  ma’raiththu,  (yaaththiraagamam  40:3)

மேஜையைக்  கொண்டுவந்து,  அதில்  வைக்கவேண்டியதைக்  கிரமமாய்  வைத்து,  குத்துவிளக்கைக்  கொண்டுவந்து,  அதின்  விளக்குகளை  ஏற்றி,  (யாத்திராகமம்  40:4)

meajaiyaik  ko'nduvanthu,  athil  vaikkavea'ndiyathaik  kiramamaay  vaiththu,  kuththuvi'lakkaik  ko'nduvanthu,  athin  vi'lakkuga'lai  eat’ri,  (yaaththiraagamam  40:4)

பொன்  தூபபீடத்தைச்  சாட்சிப்பெட்டிக்கு  முன்னே  வைத்து,  வாசஸ்தலத்து  வாசலின்  தொங்குதிரையைத்  தூக்கிவைக்கக்கடவாய்.  (யாத்திராகமம்  40:5)

pon  thoobapeedaththaich  saadchippettikku  munnea  vaiththu,  vaasasthalaththu  vaasalin  thongguthiraiyaith  thookkivaikkakkadavaay.  (yaaththiraagamam  40:5)

பின்பு,  தகன  பலிபீடத்தை  ஆசரிப்புக்  கூடாரமாகிய  வாசஸ்தலத்தின்  வாசலுக்கு  முன்பாக  வைத்து,  (யாத்திராகமம்  40:6)

pinbu,  thagana  balipeedaththai  aasarippuk  koodaaramaagiya  vaasasthalaththin  vaasalukku  munbaaga  vaiththu,  (yaaththiraagamam  40:6)

தொட்டியை  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  வைத்து,  அதிலே  தண்ணீர்  வார்த்து,  (யாத்திராகமம்  40:7)

thottiyai  aasarippuk  koodaaraththukkum  balipeedaththukkum  naduvea  vaiththu,  athilea  tha'n'neer  vaarththu,  (yaaththiraagamam  40:7)

சுற்றுப்  பிராகாரத்தை  நிறுத்தி,  பிராகாரவாசல்  தொங்குதிரையைத்  தூக்கிவைத்து,  (யாத்திராகமம்  40:8)

sut’rup  piraagaaraththai  ni’ruththi,  piraagaaravaasal  thongguthiraiyaith  thookkivaiththu,  (yaaththiraagamam  40:8)

அபிஷேக  தைலத்தை  எடுத்து,  வாசஸ்தலத்தையும்  அதிலுள்ள  யாவையும்  அபிஷேகம்பண்ணி,  அதையும்  அதிலுள்ள  சகல  பணிமுட்டுகளையும்  பரிசுத்தப்படுத்துவாயாக;  அப்பொழுது  பரிசுத்தமாயிருக்கும்.  (யாத்திராகமம்  40:9)

abisheaga  thailaththai  eduththu,  vaasasthalaththaiyum  athilu'l'la  yaavaiyum  abisheagampa'n'ni,  athaiyum  athilu'l'la  sagala  pa'nimuttuga'laiyum  parisuththappaduththuvaayaaga;  appozhuthu  parisuththamaayirukkum.  (yaaththiraagamam  40:9)

தகனபலிபீடத்தையும்  அதின்  சகல  பணிமுட்டுகளையும்  அபிஷேகம்பண்ணி,  அதைப்  பரிசுத்தப்படுத்துவாயாக;  அப்பொழுது  அது  மகா  பரிசுத்தமான  பலிபீடமாயிருக்கும்.  (யாத்திராகமம்  40:10)

thaganabalipeedaththaiyum  athin  sagala  pa'nimuttuga'laiyum  abisheagampa'n'ni,  athaip  parisuththappaduththuvaayaaga;  appozhuthu  athu  mahaa  parisuththamaana  balipeedamaayirukkum.  (yaaththiraagamam  40:10)

தொட்டியையும்  அதின்  பாதத்தையும்  அபிஷேகம்பண்ணி,  பரிசுத்தப்படுத்துவாயாக.  (யாத்திராகமம்  40:11)

thottiyaiyum  athin  paathaththaiyum  abisheagampa'n'ni,  parisuththappaduththuvaayaaga.  (yaaththiraagamam  40:11)

பின்பு  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  வரச்செய்து,  அவர்களை  ஜலத்தினால்  ஸ்நானம்பண்ணுவித்து,  (யாத்திராகமம்  40:12)

pinbu  aaroanaiyum  avan  kumaararaiyum  aasarippuk  koodaaravaasalil  varachseythu,  avarga'lai  jalaththinaal  snaanampa'n'nuviththu,  (yaaththiraagamam  40:12)

ஆரோனுக்குப்  பரிசுத்த  வஸ்திரங்களை  உடுத்தி,  எனக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படிக்கு  அவனை  அபிஷேகம்பண்ணி,  அவனைப்  பரிசுத்தப்படுத்துவாயாக.  (யாத்திராகமம்  40:13)

aaroanukkup  parisuththa  vasthirangga'lai  uduththi,  enakku  aasaariya  oozhiyam  seyyumpadikku  avanai  abisheagampa'n'ni,  avanaip  parisuththappaduththuvaayaaga.  (yaaththiraagamam  40:13)

அவன்  குமாரரையும்  வரச்செய்து,  அவர்களுக்கு  அங்கிகளை  உடுத்தி,  (யாத்திராகமம்  40:14)

avan  kumaararaiyum  varachseythu,  avarga'lukku  anggiga'lai  uduththi,  (yaaththiraagamam  40:14)

அவர்கள்  எனக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படி,  அவர்களையும்,  அவர்கள்  தகப்பனை  அபிஷேகம்பண்ணினபடியே,  அபிஷேகம்பண்ணுவாயாக;  அவர்கள்  பெறும்  அந்த  அபிஷேகம்  தலைமுறைதோறும்  நித்திய  ஆசாரியத்துவத்துக்கு  ஏதுவாயிருக்கும்  என்றார்.  (யாத்திராகமம்  40:15)

avarga'l  enakku  aasaariya  oozhiyam  seyyumpadi,  avarga'laiyum,  avarga'l  thagappanai  abisheagampa'n'ninapadiyea,  abisheagampa'n'nuvaayaaga;  avarga'l  pe’rum  antha  abisheagam  thalaimu’raithoa’rum  niththiya  aasaariyaththuvaththukku  eathuvaayirukkum  en’raar.  (yaaththiraagamam  40:15)

கர்த்தர்  தனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  மோசே  செய்தான்.  (யாத்திராகமம்  40:16)

karththar  thanakkuk  ka’rpiththapadiyellaam  moasea  seythaan.  (yaaththiraagamam  40:16)

இரண்டாம்  வருஷம்  முதலாம்  மாதம்  முதல்  தேதியில்  வாசஸ்தலம்  ஸ்தாபனம்பண்ணப்பட்டது.  (யாத்திராகமம்  40:17)

ira'ndaam  varusham  muthalaam  maatham  muthal  theathiyil  vaasasthalam  sthaabanampa'n'nappattathu.  (yaaththiraagamam  40:17)

மோசே  கூடாரத்தை  எடுப்பித்தான்;  அவன்  அதின்  பாதங்களை  வைத்து,  அதின்  பலகைகளை  நிறுத்தி,  அதின்  தாழ்ப்பாள்களைப்  பாய்ச்சி,  அதின்  தூண்களை  நாட்டி,  (யாத்திராகமம்  40:18)

moasea  koodaaraththai  eduppiththaan;  avan  athin  paathangga'lai  vaiththu,  athin  palagaiga'lai  ni’ruththi,  athin  thaazhppaa'lga'laip  paaychchi,  athin  thoo'nga'lai  naatti,  (yaaththiraagamam  40:18)

வாசஸ்தலத்தின்மேல்  கூடாரத்தை  விரித்து,  அதின்மேல்  கூடாரத்தின்  மூடியை,  கர்த்தர்  தனக்குக்  கற்பித்தபடியே  போட்டான்.  (யாத்திராகமம்  40:19)

vaasasthalaththinmeal  koodaaraththai  viriththu,  athinmeal  koodaaraththin  moodiyai,  karththar  thanakkuk  ka’rpiththapadiyea  poattaan.  (yaaththiraagamam  40:19)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  சாட்சிப்பிரமாணத்தை  எடுத்து,  அதைப்  பெட்டியிலே  வைத்து,  பெட்டியில்  தண்டுகளைப்பாய்ச்சி,  பெட்டியின்மேல்  கிருபாசன  மூடியை  வைத்து,  (யாத்திராகமம்  40:20)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  saadchippiramaa'naththai  eduththu,  athaip  pettiyilea  vaiththu,  pettiyil  tha'nduga'laippaaychchi,  pettiyinmeal  kirubaasana  moodiyai  vaiththu,  (yaaththiraagamam  40:20)

பெட்டியை  வாசஸ்தலத்துக்குள்ளே  கொண்டுபோய்,  மறைவின்  திரைச்சீலையைத்  தொங்கவைத்து,  சாட்சிப்பெட்டியை  மறைத்துவைத்தான்.  (யாத்திராகமம்  40:21)

pettiyai  vaasasthalaththukku'l'lea  ko'ndupoay,  ma’raivin  thiraichseelaiyaith  thonggavaiththu,  saadchippettiyai  ma’raiththuvaiththaan.  (yaaththiraagamam  40:21)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  மேஜையை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  வாசஸ்தலத்தின்  வடபுறமாய்த்  திரைக்குப்  புறம்பாக  வைத்து,  (யாத்திராகமம்  40:22)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  meajaiyai  aasarippuk  koodaaraththil  vaasasthalaththin  vadapu’ramaayth  thiraikkup  pu’rambaaga  vaiththu,  (yaaththiraagamam  40:22)

அதின்மேல்  கர்த்தருடைய  சமுகத்தில்  அப்பத்தை  வரிசையாக  அடுக்கி  வைத்தான்.  (யாத்திராகமம்  40:23)

athinmeal  karththarudaiya  samugaththil  appaththai  varisaiyaaga  adukki  vaiththaan.  (yaaththiraagamam  40:23)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  குத்துவிளக்கை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  மேஜைக்கு  எதிராக  வாசஸ்தலத்தின்  தென்புறத்திலே  வைத்து,  (யாத்திராகமம்  40:24)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  kuththuvi'lakkai  aasarippuk  koodaaraththil  meajaikku  ethiraaga  vaasasthalaththin  thenpu’raththilea  vaiththu,  (yaaththiraagamam  40:24)

கர்த்தருடைய  சந்நிதியில்  விளக்குகளை  ஏற்றினான்.  (யாத்திராகமம்  40:25)

karththarudaiya  sannithiyil  vi'lakkuga'lai  eat’rinaan.  (yaaththiraagamam  40:25)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  ஆசரிப்புக்  கூடாரத்தில்  திரைக்கு  முன்பாகப்  பொற்பீடத்தை  வைத்து,  (யாத்திராகமம்  40:26)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  aasarippuk  koodaaraththil  thiraikku  munbaagap  po’rpeedaththai  vaiththu,  (yaaththiraagamam  40:26)

அதின்மேல்  சுகந்தவர்க்கத்தினால்  தூபங்காட்டினான்.  (யாத்திராகமம்  40:27)

athinmeal  suganthavarkkaththinaal  thoobangkaattinaan.  (yaaththiraagamam  40:27)

பின்பு,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  வாசஸ்தலத்தின்  தொங்குதிரையைத்  தூக்கிவைத்து,  (யாத்திராகமம்  40:28)

pinbu,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  vaasasthalaththin  thongguthiraiyaith  thookkivaiththu,  (yaaththiraagamam  40:28)

தகனபலிபீடத்தை  ஆசரிப்புக்  கூடாரமான  வாசஸ்தலத்தின்  வாசலுக்கு  முன்பாக  வைத்து,  அதின்மேல்  சர்வாங்க  தகனபலியையும்  போஜனபலியையும்  செலுத்தினான்.  (யாத்திராகமம்  40:29)

thaganabalipeedaththai  aasarippuk  koodaaramaana  vaasasthalaththin  vaasalukku  munbaaga  vaiththu,  athinmeal  sarvaangga  thaganabaliyaiyum  poajanabaliyaiyum  seluththinaan.  (yaaththiraagamam  40:29)

அவன்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  தொட்டியை  வைத்து,  கழுவுகிறதற்கு  அதிலே  தண்ணீர்  வார்த்தான்.  (யாத்திராகமம்  40:30)

avan  aasarippuk  koodaaraththukkum  balipeedaththukkum  naduvea  thottiyai  vaiththu,  kazhuvugi’ratha’rku  athilea  tha'n'neer  vaarththaan.  (yaaththiraagamam  40:30)

அவ்விடத்திலே  மோசேயும்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளையும்  கால்களையும்  கழுவினார்கள்.  (யாத்திராகமம்  40:31)

avvidaththilea  moaseayum  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'laiyum  kaalga'laiyum  kazhuvinaarga'l.  (yaaththiraagamam  40:31)

கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்ளே  பிரவேசிக்கிறபோதும்,  பலிபீடத்தண்டையில்  சேருகிறபோதும்,  அவர்கள்  கழுவிக்கொள்ளுவார்கள்.  (யாத்திராகமம்  40:32)

karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  avarga'l  aasarippuk  koodaaraththukku'l'lea  piraveasikki’rapoathum,  balipeedaththa'ndaiyil  searugi’rapoathum,  avarga'l  kazhuvikko'l'luvaarga'l.  (yaaththiraagamam  40:32)

பின்பு,  அவன்  வாசஸ்தலத்தையும்  பலிபீடத்தையும்  சுற்றிப்  பிராகாரத்தை  நிறுத்தி,  பிராகாரத்தின்  தொங்குதிரையைத்  தொங்கவைத்தான்;  இவ்விதமாய்  மோசே  வேலையை  முடித்தான்.  (யாத்திராகமம்  40:33)

pinbu,  avan  vaasasthalaththaiyum  balipeedaththaiyum  sut’rip  piraagaaraththai  ni’ruththi,  piraagaaraththin  thongguthiraiyaith  thonggavaiththaan;  ivvithamaay  moasea  vealaiyai  mudiththaan.  (yaaththiraagamam  40:33)

அப்பொழுது  ஒரு  மேகம்  ஆசரிப்புக்  கூடாரத்தை  மூடினது;  கர்த்தருடைய  மகிமை  வாசஸ்தலத்தை  நிரப்பிற்று.  (யாத்திராகமம்  40:34)

appozhuthu  oru  meagam  aasarippuk  koodaaraththai  moodinathu;  karththarudaiya  magimai  vaasasthalaththai  nirappit’ru.  (yaaththiraagamam  40:34)

மேகம்  அதின்மேல்  தங்கி,  கர்த்தருடைய  மகிமை  வாசஸ்தலத்தை  நிரப்பினதினால்,  மோசே  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்  பிரவேசிக்கக்கூடாமல்  இருந்தது.  (யாத்திராகமம்  40:35)

meagam  athinmeal  thanggi,  karththarudaiya  magimai  vaasasthalaththai  nirappinathinaal,  moasea  aasarippuk  koodaaraththukku'l  piraveasikkakkoodaamal  irunthathu.  (yaaththiraagamam  40:35)

வாசஸ்தலத்திலிருந்து  மேகம்  மேலே  எழும்பும்போது,  இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணம்  பண்ணப்  புறப்படுவார்கள்.  (யாத்திராகமம்  40:36)

vaasasthalaththilirunthu  meagam  mealea  ezhumbumpoathu,  israveal  puththirar  pirayaa'nam  pa'n'nap  pu’rappaduvaarga'l.  (yaaththiraagamam  40:36)

மேகம்  எழும்பாதிருந்தால்,  அது  எழும்பும்  நாள்வரைக்கும்  பிரயாணம்  பண்ணாதிருப்பார்கள்.  (யாத்திராகமம்  40:37)

meagam  ezhumbaathirunthaal,  athu  ezhumbum  naa'lvaraikkum  pirayaa'nam  pa'n'naathiruppaarga'l.  (yaaththiraagamam  40:37)

இஸ்ரவேல்  வம்சத்தார்  பண்ணும்  எல்லாப்  பிரயாணங்களிலும்  அவர்களெல்லாருடைய  கண்களுக்கும்  பிரத்தியட்சமாகப்  பகலில்  கர்த்தருடைய  மேகமும்,  இரவில்  அக்கினியும்,  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருந்தது.  (யாத்திராகமம்  40:38)

israveal  vamsaththaar  pa'n'num  ellaap  pirayaa'nangga'lilum  avarga'lellaarudaiya  ka'nga'lukkum  piraththiyadchamaagap  pagalil  karththarudaiya  meagamum,  iravil  akkiniyum,  vaasasthalaththinmeal  thanggiyirunthathu.  (yaaththiraagamam  40:38)


Yaaththiraagamam 39 | யாத்திராகமம் 39 | Exodus 39


கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  அவர்கள்  இளநீலநூலாலும்  இரத்தாம்பரநூலாலும்  சிவப்புநூலாலும்  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆராதனை  செய்கிறதற்கு  வேண்டிய  வஸ்திரங்களையும்,  ஆரோனுக்குப்  பரிசுத்த  வஸ்திரங்களையும்  செய்தார்கள்.  (யாத்திராகமம்  39:1)

karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  avarga'l  i'laneelanoolaalum  iraththaambaranoolaalum  sivappunoolaalum  parisuththa  sthalaththil  aaraathanai  seygi’ratha’rku  vea'ndiya  vasthirangga'laiyum,  aaroanukkup  parisuththa  vasthirangga'laiyum  seythaarga'l.  (yaaththiraagamam  39:1)

ஏபோத்தைப்  பொன்னினாலும்  இளநீலநூலாலும்  இரத்தாம்பரநூலாலும்  சிவப்பு  நூலாலும்  திரித்த  மெல்லிய  பஞ்சுநூலாலும்  செய்தான்.  (யாத்திராகமம்  39:2)

eaboaththaip  ponninaalum  i'laneelanoolaalum  iraththaambaranoolaalum  sivappu  noolaalum  thiriththa  melliya  pagnchunoolaalum  seythaan.  (yaaththiraagamam  39:2)

அந்தப்  பொன்னை,  இளநீலநூலோடும்  இரத்தாம்பரநூலோடும்  சிவப்புநூலோடும்  மெல்லிய  பஞ்சுநூலோடும்  சேர்த்து  விசித்திரவேலையாய்  நெய்யும்படிக்கு,  மெல்லிய  தகடுகளாய்  அடித்து,  அவைகளைச்  சரிகைகளாகப்  பண்ணினார்கள்.  (யாத்திராகமம்  39:3)

anthap  ponnai,  i'laneelanooloadum  iraththaambaranooloadum  sivappunooloadum  melliya  pagnchunooloadum  searththu  visiththiravealaiyaay  neyyumpadikku,  melliya  thagaduga'laay  adiththu,  avaiga'laich  sarigaiga'laagap  pa'n'ninaarga'l.  (yaaththiraagamam  39:3)

இரண்டு  தோள்களின்மேலுள்ள  அதின்  இரண்டு  முனைகளையும்  சேர்த்தார்கள்;  அது  ஒன்றாய்  இணைக்கப்பட்டிருந்தது.  (யாத்திராகமம்  39:4)

ira'ndu  thoa'lga'linmealu'l'la  athin  ira'ndu  munaiga'laiyum  searththaarga'l;  athu  on’raay  i'naikkappattirunthathu.  (yaaththiraagamam  39:4)

அந்த  ஏபோத்தின்மேலிருக்கும்  விசித்திரமான  கச்சை,  அந்த  வேலைக்கு  ஒப்பாகவே  பொன்னினாலும்  இளநீலநூலாலும்  இரத்தாம்பரநூலாலும்  சிவப்புநூலாலும்,  திரித்த  மெல்லிய  பஞ்சுநூலாலும்,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  செய்யப்பட்டது.  (யாத்திராகமம்  39:5)

antha  eaboaththinmealirukkum  visiththiramaana  kachchai,  antha  vealaikku  oppaagavea  ponninaalum  i'laneelanoolaalum  iraththaambaranoolaalum  sivappunoolaalum,  thiriththa  melliya  pagnchunoolaalum,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  seyyappattathu.  (yaaththiraagamam  39:5)

இஸ்ரவேல்  புத்திரரின்  நாமங்களை  முத்திரை  வெட்டுவேலையாகக்  கோமேதகக்  கற்களில்  வெட்டி,  அவைகளைப்  பொன்  குவளைகளில்  பதித்தார்கள்.  (யாத்திராகமம்  39:6)

israveal  puththirarin  naamangga'lai  muththirai  vettuvealaiyaagak  koameathagak  ka’rka'lil  vetti,  avaiga'laip  pon  kuva'laiga'lil  pathiththaarga'l.  (yaaththiraagamam  39:6)

கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  அவைகள்  இஸ்ரவேல்  புத்திரரைக்குறித்து  ஞாபகக்குறிக்  கற்களாயிருக்கும்படி  ஏபோத்துத்  தோள்களின்மேல்  அவைகளை  வைத்தான்.  (யாத்திராகமம்  39:7)

karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  avaiga'l  israveal  puththiraraikku’riththu  gnaabagakku’rik  ka’rka'laayirukkumpadi  eaboaththuth  thoa'lga'linmeal  avaiga'lai  vaiththaan.  (yaaththiraagamam  39:7)

மார்ப்பதக்கத்தை  ஏபோத்தின்  வேலைக்கு  ஒத்த  விசித்திரவேலையாகப்  பொன்னினாலும்  இளநீலநூலாலும்  இரத்தாம்பரநூலாலும்  சிவப்புநூலாலும்  திரித்த  மெல்லிய  பஞ்சுநூலாலும்  செய்தான்.  (யாத்திராகமம்  39:8)

maarppathakkaththai  eaboaththin  vealaikku  oththa  visiththiravealaiyaagap  ponninaalum  i'laneelanoolaalum  iraththaambaranoolaalum  sivappunoolaalum  thiriththa  melliya  pagnchunoolaalum  seythaan.  (yaaththiraagamam  39:8)

அந்த  மார்ப்பதக்கத்தைச்  சதுரமும்  இரட்டையுமாய்ச்  செய்து,  ஒரு  ஜாண்  நீளமும்  ஒரு  ஜாண்  அகலமுமாக்கி,  (யாத்திராகமம்  39:9)

antha  maarppathakkaththaich  sathuramum  irattaiyumaaych  seythu,  oru  jaa'n  nee'lamum  oru  jaa'n  agalamumaakki,  (yaaththiraagamam  39:9)

அதிலே  நாலு  பத்தி  ரத்தினக்கற்களைப்  பதித்தார்கள்;  முதலாம்  பத்தி  பத்மராகமும்  புஷ்பராகமும்  மாணிக்கமும்,  (யாத்திராகமம்  39:10)

athilea  naalu  paththi  raththinakka’rka'laip  pathiththaarga'l;  muthalaam  paththi  pathmaraagamum  pushparaagamum  maa'nikkamum,  (yaaththiraagamam  39:10)

இரண்டாம்  பத்தி  மரகதமும்  இந்திரநீலமும்  வச்சிரமும்,  (யாத்திராகமம்  39:11)

ira'ndaam  paththi  maragathamum  inthiraneelamum  vachchiramum,  (yaaththiraagamam  39:11)

மூன்றாம்  பத்தி  கெம்பும்  வைடூரியமும்  சுகந்தியும்,  (யாத்திராகமம்  39:12)

moon’raam  paththi  kembum  vaidooriyamum  suganthiyum,  (yaaththiraagamam  39:12)

நாலாம்  பத்தி  படிகப்பச்சையும்  கோமேதகமும்  யஸ்பியுமானது.  அவைகள்  அந்தந்த  இடங்களிலே  பொன்  குவளைகளில்  பதிக்கப்பட்டிருந்தது.  (யாத்திராகமம்  39:13)

naalaam  paththi  padigappachchaiyum  koameathagamum  yaspiyumaanathu.  avaiga'l  anthantha  idangga'lilea  pon  kuva'laiga'lil  pathikkappattirunthathu.  (yaaththiraagamam  39:13)

இந்தக்  கற்கள்  இஸ்ரவேல்  புத்திரருடைய  நாமங்களின்படியே  பன்னிரண்டும்,  அவர்களுடைய  நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது;  பன்னிரண்டு  கோத்திரங்களில்  ஒவ்வொரு  கோத்திரத்தின்  நாமம்  ஒவ்வொன்றில்  முத்திரை  வெட்டாய்  வெட்டியிருந்தது.  (யாத்திராகமம்  39:14)

inthak  ka’rka'l  israveal  puththirarudaiya  naamangga'linpadiyea  pannira'ndum,  avarga'ludaiya  naamangga'lu'l'lavaiga'lumaayirunthathu;  pannira'ndu  koaththirangga'lil  ovvoru  koaththiraththin  naamam  ovvon’ril  muththirai  vettaay  vettiyirunthathu.  (yaaththiraagamam  39:14)

மார்ப்பதக்கத்துக்கு  அதின்  பக்கங்களிலே  பின்னல்  வேலையான  பசும்பொன்  சங்கிலிகளையும்  பண்ணி,  (யாத்திராகமம்  39:15)

maarppathakkaththukku  athin  pakkangga'lilea  pinnal  vealaiyaana  pasumpon  sanggiliga'laiyum  pa'n'ni,  (yaaththiraagamam  39:15)

இரண்டு  பொன்  குவளைகளையும்  இரண்டு  பொன்  வளையங்களையும்  செய்து,  அந்த  இரண்டு  வளையங்களை  மார்ப்பதக்கத்தின்  இரண்டு  பக்கத்திலும்  வைத்து,  (யாத்திராகமம்  39:16)

ira'ndu  pon  kuva'laiga'laiyum  ira'ndu  pon  va'laiyangga'laiyum  seythu,  antha  ira'ndu  va'laiyangga'lai  maarppathakkaththin  ira'ndu  pakkaththilum  vaiththu,  (yaaththiraagamam  39:16)

பொன்னினால்  செய்த  பின்னல்  வேலையான  அந்த  இரண்டு  சங்கிலிகளையும்  மார்ப்பதக்கத்தின்  பக்கங்களில்  இருக்கிற  இரண்டு  வளையங்களிலும்  மாட்டி,  (யாத்திராகமம்  39:17)

ponninaal  seytha  pinnal  vealaiyaana  antha  ira'ndu  sanggiliga'laiyum  maarppathakkaththin  pakkangga'lil  irukki’ra  ira'ndu  va'laiyangga'lilum  maatti,  (yaaththiraagamam  39:17)

பின்னல்  வேலையான  அவ்விரண்டு  சங்கிலிகளின்  இரண்டு  நுனிகளையும்  ஏபோத்தின்  தோள்புறத்துத்  துண்டுகள்மேல்  முன்புறத்தில்  இருக்கிற  இரண்டு  குவளைகளிலும்  மாட்டினார்கள்.  (யாத்திராகமம்  39:18)

pinnal  vealaiyaana  avvira'ndu  sanggiliga'lin  ira'ndu  nuniga'laiyum  eaboaththin  thoa'lpu’raththuth  thu'nduga'lmeal  munpu’raththil  irukki’ra  ira'ndu  kuva'laiga'lilum  maattinaarga'l.  (yaaththiraagamam  39:18)

பின்னும்  இரண்டு  வளையங்களைப்  பண்ணி,  அவைகளை  ஏபோத்தின்  கீழ்ப்புறத்திற்கு  எதிரான  மார்ப்பதக்கத்தின்  மற்ற  இரண்டு  பக்கங்களிலும்  அதின்  ஓரத்தில்  வைத்து,  (யாத்திராகமம்  39:19)

pinnum  ira'ndu  va'laiyangga'laip  pa'n'ni,  avaiga'lai  eaboaththin  keezhppu’raththi’rku  ethiraana  maarppathakkaththin  mat’ra  ira'ndu  pakkangga'lilum  athin  oaraththil  vaiththu,  (yaaththiraagamam  39:19)

வேறே  இரண்டு  பொன்  வளையங்களையும்  பண்ணி,  அவைகளை  ஏபோத்தின்  முன்புறத்தின்  இரண்டு  கீழ்ப்பக்கங்களில்  அதின்  இணைப்புக்கு  எதிராகவும்,  ஏபோத்தின்  விசித்திரமான  கச்சைக்கு  மேலாகவும்  வைத்து,  (யாத்திராகமம்  39:20)

vea’rea  ira'ndu  pon  va'laiyangga'laiyum  pa'n'ni,  avaiga'lai  eaboaththin  munpu’raththin  ira'ndu  keezhppakkangga'lil  athin  i'naippukku  ethiraagavum,  eaboaththin  visiththiramaana  kachchaikku  mealaagavum  vaiththu,  (yaaththiraagamam  39:20)

மார்ப்பதக்கம்  ஏபோத்தின்  விசித்திரமான  கச்சைக்கு  மேலாக  இருக்கும்படிக்கும்,  ஏபோத்திலிருந்து  நீங்கிப்போகாதபடிக்கும்,  அதை  அதின்  வளையங்களால்  ஏபோத்தின்  வளையங்களோடே  இளநீல  நாடாவினாலே,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  கட்டினார்கள்.  (யாத்திராகமம்  39:21)

maarppathakkam  eaboaththin  visiththiramaana  kachchaikku  mealaaga  irukkumpadikkum,  eaboaththilirunthu  neenggippoagaathapadikkum,  athai  athin  va'laiyangga'laal  eaboaththin  va'laiyangga'loadea  i'laneela  naadaavinaalea,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  kattinaarga'l.  (yaaththiraagamam  39:21)

ஏபோத்தின்  கீழ்  அங்கியை  முழுவதும்  இளநீலநூலால்  நெய்தான்.  (யாத்திராகமம்  39:22)

eaboaththin  keezh  anggiyai  muzhuvathum  i'laneelanoolaal  neythaan.  (yaaththiraagamam  39:22)

அங்கியின்  நடுவில்  மார்க்கவசத்  துவாரத்துக்கு  ஒப்பாக  ஒரு  துவாரமும்,  அது  கிழியாதபடி  அந்தத்  துவாரத்தைச்  சுற்றிலும்  ஒரு  நாடாவும்  தைத்திருந்தது.  (யாத்திராகமம்  39:23)

anggiyin  naduvil  maarkkavasath  thuvaaraththukku  oppaaga  oru  thuvaaramum,  athu  kizhiyaathapadi  anthath  thuvaaraththaich  sut’rilum  oru  naadaavum  thaiththirunthathu.  (yaaththiraagamam  39:23)

அங்கியின்  கீழ்  ஓரங்களில்  தொங்கத்தக்கதாகத்  திரித்த  இளநீலநூலும்  இரத்தாம்பரநூலும்  சிவப்புநூலுமான  வேலையாக  மாதளம்பழங்களைப்  பண்ணி,  (யாத்திராகமம்  39:24)

anggiyin  keezh  oarangga'lil  thonggaththakkathaagath  thiriththa  i'laneelanoolum  iraththaambaranoolum  sivappunoolumaana  vealaiyaaga  maatha'lampazhangga'laip  pa'n'ni,  (yaaththiraagamam  39:24)

பசும்பொன்னினால்  மணிகளையும்  பண்ணி,  அந்த  மணிகளை  அங்கியின்  ஓரங்களில்  சுற்றிலும்  மாதளம்பழங்களின்  இடைஇடையே  தொங்கவைத்தார்கள்.  (யாத்திராகமம்  39:25)

pasumponninaal  ma'niga'laiyum  pa'n'ni,  antha  ma'niga'lai  anggiyin  oarangga'lil  sut’rilum  maatha'lampazhangga'lin  idaiidaiyea  thonggavaiththaarga'l.  (yaaththiraagamam  39:25)

கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே  ஆராதனைக்குரிய  அங்கியின்  ஓரத்தைச்  சுற்றிலும்,  ஒரு  மணியும்  ஒரு  மாதளம்பழமும்,  ஒரு  மணியும்  ஒரு  மாதளம்பழமுமாய்  இருந்தது.  (யாத்திராகமம்  39:26)

karththar  moaseakkuk  ka’rpiththapadiyea  aaraathanaikkuriya  anggiyin  oaraththaich  sut’rilum,  oru  ma'niyum  oru  maatha'lampazhamum,  oru  ma'niyum  oru  maatha'lampazhamumaay  irunthathu.  (yaaththiraagamam  39:26)

ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  மெல்லிய  பஞ்சுநூலால்  நெசவுவேலையான  அங்கிகளையும்,  (யாத்திராகமம்  39:27)

aaroanukkum  avan  kumaararukkum  melliya  pagnchunoolaal  nesavuvealaiyaana  anggiga'laiyum,  (yaaththiraagamam  39:27)

மெல்லிய  பஞ்சுநூலால்  பாகையையும்,  அலங்காரமான  குல்லாக்களையும்,  திரித்த  மெல்லிய  சணல்நூலால்  சல்லடங்களையும்,  (யாத்திராகமம்  39:28)

melliya  pagnchunoolaal  paagaiyaiyum,  alanggaaramaana  kullaakka'laiyum,  thiriththa  melliya  sa'nalnoolaal  salladangga'laiyum,  (yaaththiraagamam  39:28)

திரித்த  மெல்லிய  பஞ்சுநூலாலும்  இளநீலநூலாலும்  இரத்தாம்பரநூலாலும்  சிவப்புநூலாலும்  சித்திரத்  தையல்வேலையான  இடைக்கச்சையையும்,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  செய்தார்கள்.  (யாத்திராகமம்  39:29)

thiriththa  melliya  pagnchunoolaalum  i'laneelanoolaalum  iraththaambaranoolaalum  sivappunoolaalum  siththirath  thaiyalvealaiyaana  idaikkachchaiyaiyum,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  seythaarga'l.  (yaaththiraagamam  39:29)

பரிசுத்த  கிரீடத்தின்  பட்டத்தையும்  பசும்பொன்னினாலே  பண்ணி,  கர்த்தருக்குப்  பரிசுத்தம்  என்னும்  எழுத்துக்களை  அதிலே  முத்திரை  வெட்டாக  வெட்டி,  (யாத்திராகமம்  39:30)

parisuththa  kireedaththin  pattaththaiyum  pasumponninaalea  pa'n'ni,  karththarukkup  parisuththam  ennum  ezhuththukka'lai  athilea  muththirai  vettaaga  vetti,  (yaaththiraagamam  39:30)

அதை  உயரப்  பாகையின்மேல்  கட்டும்படி,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியே,  இளநீல  நாடாவினால்  கட்டினார்கள்.  (யாத்திராகமம்  39:31)

athai  uyarap  paagaiyinmeal  kattumpadi,  karththar  moaseakkuk  ka’rpiththapadiyea,  i'laneela  naadaavinaal  kattinaarga'l.  (yaaththiraagamam  39:31)

இப்படியே  ஆசரிப்புக்  கூடாரமாகிய  வாசஸ்தலத்தின்  வேலையெல்லாம்  முடிந்தது;  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியெல்லாம்  இஸ்ரவேல்  புத்திரர்  செய்தார்கள்.  (யாத்திராகமம்  39:32)

ippadiyea  aasarippuk  koodaaramaagiya  vaasasthalaththin  vealaiyellaam  mudinthathu;  karththar  moaseakkuk  ka’rpiththapadiyellaam  israveal  puththirar  seythaarga'l.  (yaaththiraagamam  39:32)

பின்பு,  வாசஸ்தலத்தை  மோசேயினிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  கூடாரத்தையும்,  அதற்குரிய  எல்லாப்  பணிமுட்டுகளையும்,  அதின்  துறடுகளையும்,  அதின்  பலகைகளையும்,  அதின்  தாழ்ப்பாள்களையும்,  அதின்  தூண்களையும்,  அதின்  பாதங்களையும்,  (யாத்திராகமம்  39:33)

pinbu,  vaasasthalaththai  moaseayinidaththil  ko'nduvanthaarga'l;  koodaaraththaiyum,  atha’rkuriya  ellaap  pa'nimuttuga'laiyum,  athin  thu’raduga'laiyum,  athin  palagaiga'laiyum,  athin  thaazhppaa'lga'laiyum,  athin  thoo'nga'laiyum,  athin  paathangga'laiyum,  (yaaththiraagamam  39:33)

சிவப்புத்தீர்ந்த  ஆட்டுக்கடாத்தோல்  மூடியையும்,  தகசுத்தோல்  மூடியையும்,  மறைவின்  திரைச்சீலையையும்,  (யாத்திராகமம்  39:34)

sivappuththeerntha  aattukkadaaththoal  moodiyaiyum,  thagasuththoal  moodiyaiyum,  ma’raivin  thiraichseelaiyaiyum,  (yaaththiraagamam  39:34)

சாட்சிப்பெட்டியையும்,  அதின்  தண்டுகளையும்,  கிருபாசனத்தையும்,  (யாத்திராகமம்  39:35)

saadchippettiyaiyum,  athin  tha'nduga'laiyum,  kirubaasanaththaiyum,  (yaaththiraagamam  39:35)

மேஜையையும்,  அதின்  எல்லாப்  பணிமுட்டுகளையும்,  சமுகத்தப்பங்களையும்,  (யாத்திராகமம்  39:36)

meajaiyaiyum,  athin  ellaap  pa'nimuttuga'laiyum,  samugaththappangga'laiyum,  (yaaththiraagamam  39:36)

சுத்தமான  குத்துவிளக்கையும்,  வரிசையாய்  ஒழுங்குபடுத்தப்பட்ட  அதின்  அகல்களையும்,  அதின்  எல்லாப்  பணிமுட்டுகளையும்,  வெளிச்சத்திற்கு  எண்ணெயையும்,  (யாத்திராகமம்  39:37)

suththamaana  kuththuvi'lakkaiyum,  varisaiyaay  ozhunggupaduththappatta  athin  agalga'laiyum,  athin  ellaap  pa'nimuttuga'laiyum,  ve'lichchaththi’rku  e'n'neyaiyum,  (yaaththiraagamam  39:37)

பொற்பீடத்தையும்,  அபிஷேகதைலத்தையும்,  சுகந்த  தூபவர்க்கத்தையும்,  வாசஸ்தலத்தின்  வாசல்  தொங்குதிரையையும்,  (யாத்திராகமம்  39:38)

po’rpeedaththaiyum,  abisheagathailaththaiyum,  sugantha  thoobavarkkaththaiyum,  vaasasthalaththin  vaasal  thongguthiraiyaiyum,  (yaaththiraagamam  39:38)

வெண்கலப்  பலிபீடத்தையும்,  அதின்  வெண்கலச்  சல்லடையையும்,  அதின்  தண்டுகளையும்,  அதின்  சகல  பணிமுட்டுகளையும்,  தொட்டியையும்,  அதின்  பாதத்தையும்,  (யாத்திராகமம்  39:39)

ve'ngalap  balipeedaththaiyum,  athin  ve'ngalach  salladaiyaiyum,  athin  tha'nduga'laiyum,  athin  sagala  pa'nimuttuga'laiyum,  thottiyaiyum,  athin  paathaththaiyum,  (yaaththiraagamam  39:39)

பிராகாரத்தின்  தொங்குதிரைகளையும்,  அதின்  தூண்களையும்,  அதின்  பாதங்களையும்,  பிராகாரத்து  வாசல்  மறைவையும்,  அதின்  கயிறுகளையும்,  அதின்  முளைகளையும்,  ஆசரிப்புக்  கூடாரமான  வாசஸ்தலத்தின்  வேலைக்கடுத்த  சகல  பணிமுட்டுகளையும்,  (யாத்திராகமம்  39:40)

piraagaaraththin  thongguthiraiga'laiyum,  athin  thoo'nga'laiyum,  athin  paathangga'laiyum,  piraagaaraththu  vaasal  ma’raivaiyum,  athin  kayi’ruga'laiyum,  athin  mu'laiga'laiyum,  aasarippuk  koodaaramaana  vaasasthalaththin  vealaikkaduththa  sagala  pa'nimuttuga'laiyum,  (yaaththiraagamam  39:40)

பரிசுத்த  ஸ்தலத்திலே  செய்யும்  ஆராதனைக்கடுத்த  வஸ்திரங்களையும்,  ஆசாரிய  ஊழியஞ்செய்கிற  ஆரோனின்  பரிசுத்த  வஸ்திரங்களையும்,  அவன்  குமாரரின்  வஸ்திரங்களையும்  கொண்டுவந்தார்கள்.  (யாத்திராகமம்  39:41)

parisuththa  sthalaththilea  seyyum  aaraathanaikkaduththa  vasthirangga'laiyum,  aasaariya  oozhiyagnseygi’ra  aaroanin  parisuththa  vasthirangga'laiyum,  avan  kumaararin  vasthirangga'laiyum  ko'nduvanthaarga'l.  (yaaththiraagamam  39:41)

கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்தபடியெல்லாம்  இஸ்ரவேல்  புத்திரர்  சகல  வேலைகளையும்  செய்தார்கள்.  (யாத்திராகமம்  39:42)

karththar  moaseakkuk  ka’rpiththapadiyellaam  israveal  puththirar  sagala  vealaiga'laiyum  seythaarga'l.  (yaaththiraagamam  39:42)

மோசே  அந்த  வேலைகளையெல்லாம்  பார்த்தான்;  கர்த்தர்  கற்பித்தபடியே  அதைச்  செய்திருந்தார்கள்.  மோசே  அவர்களை  ஆசீர்வதித்தான்.  (யாத்திராகமம்  39:43)

moasea  antha  vealaiga'laiyellaam  paarththaan;  karththar  ka’rpiththapadiyea  athaich  seythirunthaarga'l.  moasea  avarga'lai  aaseervathiththaan.  (yaaththiraagamam  39:43)