Showing posts with label 1 சாமுவேல். Show all posts
Showing posts with label 1 சாமுவேல். Show all posts

Wednesday, August 24, 2016

1 Saamuveal 31 | 1 சாமுவேல் 31 | 1 Samuel 31

பெலிஸ்தர்  இஸ்ரவேலரோடே  யுத்தம்பண்ணினார்கள்;  இஸ்ரவேலர்  பெலிஸ்தருக்கு  முன்பாக  முறிந்தோடி,  கில்போவா  மலையிலே  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  (1சாமுவேல்  31:1)

pelisthar  isravealaroadea  yuththampa'n'ninaarga'l;  isravealar  pelistharukku  munbaaga  mu’rinthoadi,  kilboavaa  malaiyilea  vettu'ndu  vizhunthaarga'l.  (1saamuveal  31:1)

பெலிஸ்தர்  சவுலையும்  அவன்  குமாரரையும்  நெருங்கித்  தொடர்ந்து,  சவுலின்  குமாரராகிய  யோனத்தானையும்  அபினதாபையும்  மல்கிசூகாவையும்  வெட்டிப்போட்டார்கள்.  (1சாமுவேல்  31:2)

pelisthar  savulaiyum  avan  kumaararaiyum  nerunggith  thodarnthu,  savulin  kumaararaagiya  yoanaththaanaiyum  abinathaabaiyum  malkisoogaavaiyum  vettippoattaarga'l.  (1saamuveal  31:2)

சவுலுக்கு  விரோதமாய்  யுத்தம்  பலத்தது;  வில்வீரர்  அவனைக்  கண்டு  நெருங்கினார்கள்;  அப்பொழுது  சவுல்  வில்வீரரால்  மிகவும்  காயப்பட்டு,  (1சாமுவேல்  31:3)

savulukku  viroathamaay  yuththam  balaththathu;  vilveerar  avanaik  ka'ndu  nerungginaarga'l;  appozhuthu  savul  vilveeraraal  migavum  kaayappattu,  (1saamuveal  31:3)

தன்  ஆயுததாரியை  நோக்கி:  அந்த  விருத்தசேதனம்  இல்லாதவர்கள்  வந்து,  என்னைக்  குத்திப்போட்டு,  என்னை  அவமானப்படுத்தாதபடிக்கு,  நீ  உன்  பட்டயத்தை  உருவி,  என்னைக்  குத்திப்போடு  என்றான்;  அவனுடைய  ஆயுததாரி  மிகவும்  பயப்பட்டதினால்,  அப்படிச்  செய்யமாட்டேன்  என்றான்;  அப்பொழுது  சவுல்  பட்டயத்தை  நட்டு  அதின்மேல்  விழுந்தான்.  (1சாமுவேல்  31:4)

than  aayuthathaariyai  noakki:  antha  viruththaseathanam  illaathavarga'l  vanthu,  ennaik  kuththippoattu,  ennai  avamaanappaduththaathapadikku,  nee  un  pattayaththai  uruvi,  ennaik  kuththippoadu  en’raan;  avanudaiya  aayuthathaari  migavum  bayappattathinaal,  appadich  seyyamaattean  en’raan;  appozhuthu  savul  pattayaththai  nattu  athinmeal  vizhunthaan.  (1saamuveal  31:4)

சவுல்  செத்துப்போனதை  அவன்  ஆயுததாரி  கண்டபோது,  அவனும்  தன்  பட்டயத்தின்மேல்  விழுந்து,  அவனோடேகூடச்  செத்துப்போனான்.  (1சாமுவேல்  31:5)

savul  seththuppoanathai  avan  aayuthathaari  ka'ndapoathu,  avanum  than  pattayaththinmeal  vizhunthu,  avanoadeakoodach  seththuppoanaan.  (1saamuveal  31:5)

அப்படியே  அன்றையதினம்  சவுலும்,  அவன்  மூன்று  குமாரரும்,  அவன்  ஆயுததாரியும்,  அவனுடைய  எல்லா  மனுஷரும்  ஒருமிக்கச்  செத்துப்போனார்கள்.  (1சாமுவேல்  31:6)

appadiyea  an’raiyathinam  savulum,  avan  moon’ru  kumaararum,  avan  aayuthathaariyum,  avanudaiya  ellaa  manusharum  orumikkach  seththuppoanaarga'l.  (1saamuveal  31:6)

இஸ்ரவேலர்  முறிந்தோடினார்கள்  என்றும்,  சவுலும்  அவன்  குமாரரும்  செத்துப்  போனார்கள்  என்றும்,  பள்ளத்தாக்குக்கு  இப்பாலும்  யோர்தானுக்கு  இப்பாலும்  இருந்த  இஸ்ரவேலர்  கண்டபோது,  அவர்கள்  பட்டணங்களை  விட்டு  ஓடிப்போனார்கள்;  அப்பொழுது  பெலிஸ்தர்  வந்து,  அவைகளிலே  குடியிருந்தார்கள்.  (1சாமுவேல்  31:7)

isravealar  mu’rinthoadinaarga'l  en’rum,  savulum  avan  kumaararum  seththup  poanaarga'l  en’rum,  pa'l'laththaakkukku  ippaalum  yoarthaanukku  ippaalum  iruntha  isravealar  ka'ndapoathu,  avarga'l  patta'nangga'lai  vittu  oadippoanaarga'l;  appozhuthu  pelisthar  vanthu,  avaiga'lilea  kudiyirunthaarga'l.  (1saamuveal  31:7)

வெட்டுண்டவர்களை  உரிந்துகொள்ள,  பெலிஸ்தர்  மறுநாள்  வந்தபோது,  அவர்கள்,  சவுலும்  அவன்  மூன்று  குமாரரும்  கில்போவா  மலையிலே  விழுந்து  கிடக்கிறதைக்  கண்டு,  (1சாமுவேல்  31:8)

vettu'ndavarga'lai  urinthuko'l'la,  pelisthar  ma’runaa'l  vanthapoathu,  avarga'l,  savulum  avan  moon’ru  kumaararum  kilboavaa  malaiyilea  vizhunthu  kidakki’rathaik  ka'ndu,  (1saamuveal  31:8)

அவன்  தலையை  வெட்டி,  அவன்  ஆயுதங்களை  எடுத்துக்கொண்டு,  தங்கள்  விக்கிரகங்களின்  கோவில்களிலும்  ஜனங்களுக்குள்ளும்  செய்தியைப்  பிரசித்தப்படுத்தும்படி,  அவைகளைப்  பெலிஸ்தர்  தேசத்திலே  சுற்றிலும்  அனுப்பி,  (1சாமுவேல்  31:9)

avan  thalaiyai  vetti,  avan  aayuthangga'lai  eduththukko'ndu,  thangga'l  vikkiragangga'lin  koavilga'lilum  janangga'lukku'l'lum  seythiyaip  pirasiththappaduththumpadi,  avaiga'laip  pelisthar  theasaththilea  sut’rilum  anuppi,  (1saamuveal  31:9)

அவன்  ஆயுதங்களை  அஸ்தரோத்  தேவனுடைய  கோவிலிலே  வைத்து,  அவன்  உடலைப்  பெத்சானின்  அலங்கத்திலே  தூக்கிப்போட்டார்கள்.  (1சாமுவேல்  31:10)

avan  aayuthangga'lai  astharoath  theavanudaiya  koavililea  vaiththu,  avan  udalaip  bethsaanin  alanggaththilea  thookkippoattaarga'l.  (1saamuveal  31:10)

பெலிஸ்தர்  சவுலுக்குச்  செய்ததைக்  கீலேயாத்தேசத்து  யாபேஸ்  பட்டணத்தார்  கேட்டபோது,  (1சாமுவேல்  31:11)

pelisthar  savulukkuch  seythathaik  keeleayaaththeasaththu  yaabeas  patta'naththaar  keattapoathu,  (1saamuveal  31:11)

அவர்களிலே  பலசாலிகள்  எல்லாரும்  எழுந்து  இராமுழுதும்  நடந்துபோய்,  பெத்சானின்  அலங்கத்திலிருந்த  சவுலின்  உடலையும்  அவன்  குமாரரின்  உடல்களையும்  எடுத்து,  யாபேசுக்குக்  கொண்டுவந்து,  அவைகளை  அங்கே  தகனம்  பண்ணி,  (1சாமுவேல்  31:12)

avarga'lilea  balasaaliga'l  ellaarum  ezhunthu  iraamuzhuthum  nadanthupoay,  bethsaanin  alanggaththiliruntha  savulin  udalaiyum  avan  kumaararin  udalga'laiyum  eduththu,  yaabeasukkuk  ko'nduvanthu,  avaiga'lai  anggea  thaganam  pa'n'ni,  (1saamuveal  31:12)

அவர்களுடைய  எலும்புகளை  எடுத்து,  யாபேசிலிருக்கிற  தோப்பிலே  அடக்கம்பண்ணி,  ஏழுநாள்  உபவாசம்பண்ணினார்கள்.  (1சாமுவேல்  31:13)

avarga'ludaiya  elumbuga'lai  eduththu,  yaabeasilirukki’ra  thoappilea  adakkampa'n'ni,  eazhunaa'l  ubavaasampa'n'ninaarga'l.  (1saamuveal  31:13)


1 Saamuveal 30 | 1 சாமுவேல் 30 | 1 Samuel 30

தாவீதும்  அவன்  மனுஷரும்  மூன்றாம்  நாளிலே,  சிக்லாகுக்கு  வந்து  சேருகிறதற்குள்ளே,  அமலேக்கியர்  தென்புறத்துச்  சீமையின்மேலும்  சிக்லாகின்மேலும்  விழுந்து,  சிக்லாகைக்  கொள்ளையடித்து,  அதை  அக்கினியால்  சுட்டெரித்து,  (1சாமுவேல்  30:1)

thaaveethum  avan  manusharum  moon’raam  naa'lilea,  siklaagukku  vanthu  searugi’ratha’rku'l'lea,  amaleakkiyar  thenpu’raththuch  seemaiyinmealum  siklaakinmealum  vizhunthu,  siklaakaik  ko'l'laiyadiththu,  athai  akkiniyaal  sutteriththu,  (1saamuveal  30:1)

அதிலிருந்த  ஸ்திரீகளாகிய  சிறியவர்களையும்  பெரியவர்களையும்  சிறைபிடித்து,  ஒருவரையும்  கொன்றுபோடாமல்,  அவர்களைப்  பிடித்துக்கொண்டு,  தங்கள்  வழியே  போய்விட்டார்கள்.  (1சாமுவேல்  30:2)

athiliruntha  sthireega'laagiya  si’riyavarga'laiyum  periyavarga'laiyum  si’raipidiththu,  oruvaraiyum  kon’rupoadaamal,  avarga'laip  pidiththukko'ndu,  thangga'l  vazhiyea  poayvittaarga'l.  (1saamuveal  30:2)

தாவீதும்  அவன்  மனுஷரும்  அந்தப்  பட்டணத்திற்கு  வந்தபோது,  இதோ,  அது  அக்கினியினால்  சுட்டெரிக்கப்பட்டது  என்றும்,  தங்கள்  மனைவிகளும்  தங்கள்  குமாரரும்  தங்கள்  குமாரத்திகளும்  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்பட்டார்கள்  என்றும்  கண்டார்கள்.  (1சாமுவேல்  30:3)

thaaveethum  avan  manusharum  anthap  patta'naththi’rku  vanthapoathu,  ithoa,  athu  akkiniyinaal  sutterikkappattathu  en’rum,  thangga'l  manaiviga'lum  thangga'l  kumaararum  thangga'l  kumaaraththiga'lum  si’raipidiththuk  ko'ndupoagappattaarga'l  en’rum  ka'ndaarga'l.  (1saamuveal  30:3)

அப்பொழுது  தாவீதும்  அவனோடிருந்த  ஜனங்களும்  அழுகிறதற்குத்  தங்களில்  பெலனில்லாமல்  போகுமட்டும்  சத்தமிட்டு  அழுதார்கள்.  (1சாமுவேல்  30:4)

appozhuthu  thaaveethum  avanoadiruntha  janangga'lum  azhugi’ratha’rkuth  thangga'lil  belanillaamal  poagumattum  saththamittu  azhuthaarga'l.  (1saamuveal  30:4)

தாவீதின்  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்  ஊராளான  அகினோவாமும்,  கர்மேல்  ஊராளான  நாபாலின்  மனைவியாயிருந்த  அபிகாயிலும்,  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்பட்டார்கள்.  (1சாமுவேல்  30:5)

thaaveethin  ira'ndu  manaiviga'laagiya  yesrayeal  ooraa'laana  aginoavaamum,  karmeal  ooraa'laana  naabaalin  manaiviyaayiruntha  abikaayilum,  si’raipidiththuk  ko'ndupoagappattaarga'l.  (1saamuveal  30:5)

தாவீது  மிகவும்  நெருக்கப்பட்டான்;  சகல  ஜனங்களும்  தங்கள்  குமாரர்  குமாரத்திகளினிமித்தம்  மனக்கிலேசமானதினால்,  அவனைக்  கல்லெறியவேண்டும்  என்று  சொல்லிக்கொண்டார்கள்;  தாவீது  தன்  தேவனாகிய  கர்த்தருக்குள்ளே  தன்னைத்  திடப்படுத்திக்கொண்டான்.  (1சாமுவேல்  30:6)

thaaveethu  migavum  nerukkappattaan;  sagala  janangga'lum  thangga'l  kumaarar  kumaaraththiga'linimiththam  manakkileasamaanathinaal,  avanaik  kalle’riyavea'ndum  en’ru  sollikko'ndaarga'l;  thaaveethu  than  theavanaagiya  karththarukku'l'lea  thannaith  thidappaduththikko'ndaan.  (1saamuveal  30:6)

தாவீது  அகிமெலேக்கின்  குமாரனாகிய  அபியத்தார்  என்னும்  ஆசாரியனை  நோக்கி:  ஏபோத்தை  என்னிடத்தில்  கொண்டுவா  என்றான்;  அபியத்தார்  ஏபோத்தைத்  தாவீதினிடத்தில்  கொண்டுவந்தான்.  (1சாமுவேல்  30:7)

thaaveethu  agimeleakkin  kumaaranaagiya  abiyaththaar  ennum  aasaariyanai  noakki:  eaboaththai  ennidaththil  ko'nduvaa  en’raan;  abiyaththaar  eaboaththaith  thaaveethinidaththil  ko'nduvanthaan.  (1saamuveal  30:7)

தாவீது  கர்த்தரை  நோக்கி:  நான்  அந்தத்  தண்டைப்  பின்தொடரவேண்டுமா?  அதைப்  பிடிப்பேனா?  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்:  அதைப்  பின்தொடர்;  அதை  நீ  பிடித்து,  சகலத்தையும்  திருப்பிக்கொள்வாய்  என்றார்.  (1சாமுவேல்  30:8)

thaaveethu  karththarai  noakki:  naan  anthath  tha'ndaip  pinthodaravea'ndumaa?  athaip  pidippeanaa?  en’ru  keattaan.  atha’rku  avar:  athaip  pinthodar;  athai  nee  pidiththu,  sagalaththaiyum  thiruppikko'lvaay  en’raar.  (1saamuveal  30:8)

அப்பொழுது  தாவீதும்  அவனோடிருந்த  அறுநூறுபேரும்  போனார்கள்;  அவர்கள்  பேசோர்  ஆற்றண்டைக்கு  வந்தபோது  அங்கே  சிலர்  நின்றுபோனார்கள்.  (1சாமுவேல்  30:9)

appozhuthu  thaaveethum  avanoadiruntha  a’runoo’rupearum  poanaarga'l;  avarga'l  beasoar  aat’ra'ndaikku  vanthapoathu  anggea  silar  nin’rupoanaarga'l.  (1saamuveal  30:9)

தாவீதோ,  நானூறுபேரோடுங்கூடத்  தொடர்ந்துபோனான்;  இருநூறுபேர்  விடாய்த்துப்போனபடியினால்  பேசோர்  ஆற்றைக்  கடக்கமாட்டாமல்  நின்றுபோனார்கள்.  (1சாமுவேல்  30:10)

thaaveethoa,  naanoo’rupearoadungkoodath  thodarnthupoanaan;  irunoo’rupear  vidaayththuppoanapadiyinaal  beasoar  aat’raik  kadakkamaattaamal  nin’rupoanaarga'l.  (1saamuveal  30:10)

ஒரு  எகிப்தியனை  வெளியில்  அவர்கள்  கண்டு,  அவனைத்  தாவீதினிடத்தில்  கொண்டுவந்து,  புசிக்க  அவனுக்கு  அப்பமும்  குடிக்கத்  தண்ணீரும்  கொடுத்து,  (1சாமுவேல்  30:11)

oru  egipthiyanai  ve'liyil  avarga'l  ka'ndu,  avanaith  thaaveethinidaththil  ko'nduvanthu,  pusikka  avanukku  appamum  kudikkath  tha'n'neerum  koduththu,  (1saamuveal  30:11)

அத்திப்பழ  அடையின்  ஒரு  துண்டையும்,  வற்றலான  இரண்டு  திராட்சப்பழக்  குலைகளையும்  அவனுக்குக்  கொடுத்தார்கள்;  அதை  அவன்  சாப்பிட்ட  பின்பு,  அவனுடைய  உயிர்  திரும்ப  அவனுக்குள்  வந்தது.  அவன்  இராப்பகல்  மூன்றுநாளாய்  அப்பம்  சாப்பிடாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருந்தான்.  (1சாமுவேல்  30:12)

aththippazha  adaiyin  oru  thu'ndaiyum,  vat’ralaana  ira'ndu  thiraadchappazhak  kulaiga'laiyum  avanukkuk  koduththaarga'l;  athai  avan  saappitta  pinbu,  avanudaiya  uyir  thirumba  avanukku'l  vanthathu.  avan  iraappagal  moon’runaa'laay  appam  saappidaamalum  tha'n'neer  kudiyaamalum  irunthaan.  (1saamuveal  30:12)

தாவீது  அவனை  நோக்கி:  நீ  யாருடையவன்?  நீ  எவ்விடத்தான்  என்று  கேட்டதற்கு,  அவன்:  நான்  ஒரு  அமலேக்கியனுடைய  வேலைக்காரனாகிய  எகிப்துதேசத்துப்  பிள்ளையாண்டான்;  மூன்று  நாளைக்குமுன்  நான்  வியாதிப்பட்டபோது,  என்  எஜமான்  என்னைக்  கைவிட்டான்.  (1சாமுவேல்  30:13)

thaaveethu  avanai  noakki:  nee  yaarudaiyavan?  nee  evvidaththaan  en’ru  keattatha’rku,  avan:  naan  oru  amaleakkiyanudaiya  vealaikkaaranaagiya  egipthutheasaththup  pi'l'laiyaa'ndaan;  moon’ru  naa'laikkumun  naan  viyaathippattapoathu,  en  ejamaan  ennaik  kaivittaan.  (1saamuveal  30:13)

நாங்கள்  கிரேத்தியருடைய  தென்புறத்தின்மேலும்,  யூதாவுக்கடுத்த  எல்லையின்மேலும்,  காலேபுடைய  தென்புறத்தின்மேலும்,  படையெடுத்துப்போய்  சிக்லாகை  அக்கினியினால்  சுட்டெரித்துப்போட்டோம்  என்றான்.  (1சாமுவேல்  30:14)

naangga'l  kireaththiyarudaiya  thenpu’raththinmealum,  yoothaavukkaduththa  ellaiyinmealum,  kaaleabudaiya  thenpu’raththinmealum,  padaiyeduththuppoay  siklaakai  akkiniyinaal  sutteriththuppoattoam  en’raan.  (1saamuveal  30:14)

தாவீது  அவனை  நோக்கி:  நீ  என்னை  அந்தத்  தண்டினிடத்துக்குக்  கொண்டு  போவாயா  என்று  கேட்டதற்கு:  அவன்,  நீர்  என்னைக்  கொன்றுபோடுவதுமில்லை,  என்னை  என்  எஜமான்  கையில்  ஒப்புக்கொடுப்பதுமில்லை  என்று  தேவன்மேல்  ஆணையிடுவீரானால்,  உம்மை  அந்தத்  தண்டினிடத்துக்குக்  கூட்டிக்கொண்டுபோவேன்  என்றான்.  (1சாமுவேல்  30:15)

thaaveethu  avanai  noakki:  nee  ennai  anthath  tha'ndinidaththukkuk  ko'ndu  poavaayaa  en’ru  keattatha’rku:  avan,  neer  ennaik  kon’rupoaduvathumillai,  ennai  en  ejamaan  kaiyil  oppukkoduppathumillai  en’ru  theavanmeal  aa'naiyiduveeraanaal,  ummai  anthath  tha'ndinidaththukkuk  koottikko'ndupoavean  en’raan.  (1saamuveal  30:15)

இவன்  அவனைக்  கொண்டுபோய்  விட்டபோது,  இதோ,  அவர்கள்  வெளியெங்கும்  பரவி,  புசித்துக்  குடித்து,  தாங்கள்  பெலிஸ்தர்  தேசத்திலும்  யூதாதேசத்திலும்  கொள்ளையிட்டுவந்த  மகா  பெரிதான  அந்த  எல்லாக்  கொள்ளைக்காகவும்  ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.  (1சாமுவேல்  30:16)

ivan  avanaik  ko'ndupoay  vittapoathu,  ithoa,  avarga'l  ve'liyenggum  paravi,  pusiththuk  kudiththu,  thaangga'l  pelisthar  theasaththilum  yoothaatheasaththilum  ko'l'laiyittuvantha  mahaa  perithaana  antha  ellaak  ko'l'laikkaagavum  aadippaadikko'ndirunthaarga'l.  (1saamuveal  30:16)

அவர்களைத்  தாவீது  அன்று  சாயங்காலந்தொடங்கி  மறுநாள்  சாயங்காலமட்டும்  முறிய  அடித்தான்;  ஒட்டகங்கள்மேல்  ஏறி  ஓடிப்போன  நானூறு  வாலிபர்  தவிர,  அவர்களில்  வேறொருவரும்  தப்பவில்லை.  (1சாமுவேல்  30:17)

avarga'laith  thaaveethu  an’ru  saayanggaalanthodanggi  ma’runaa'l  saayanggaalamattum  mu’riya  adiththaan;  ottagangga'lmeal  ea’ri  oadippoana  naanoo’ru  vaalibar  thavira,  avarga'lil  vea’roruvarum  thappavillai.  (1saamuveal  30:17)

அமலேக்கியர்  பிடித்துக்கொண்டுபோன  எல்லாவற்றையும்,  தன்னுடைய  இரண்டு  மனைவிகளையும்,  தாவீது  விடுவித்தான்.  (1சாமுவேல்  30:18)

amaleakkiyar  pidiththukko'ndupoana  ellaavat’raiyum,  thannudaiya  ira'ndu  manaiviga'laiyum,  thaaveethu  viduviththaan.  (1saamuveal  30:18)

அவர்கள்  கொள்ளையாடிக்கொண்டுபோன  எல்லாவற்றிலும்,  சிறியதிலும்  பெரியதிலும்,  குமாரரிலும்,  குமாரத்திகளிலும்,  ஒன்றும்  குறைபடாமல்  எல்லாவற்றையும்  தாவீது  திருப்பிக்கொண்டான்.  (1சாமுவேல்  30:19)

avarga'l  ko'l'laiyaadikko'ndupoana  ellaavat’rilum,  si’riyathilum  periyathilum,  kumaararilum,  kumaaraththiga'lilum,  on’rum  ku’raipadaamal  ellaavat’raiyum  thaaveethu  thiruppikko'ndaan.  (1saamuveal  30:19)

எல்லா  ஆடுமாடுகளையும்  தாவீது  பிடித்துக்கொண்டான்;  அவைகளைத்  தங்கள்  மிருகஜீவன்களுக்கு  முன்னாலே  ஓட்டி,  இது  தாவீதின்  கொள்ளை  என்றார்கள்.  (1சாமுவேல்  30:20)

ellaa  aadumaaduga'laiyum  thaaveethu  pidiththukko'ndaan;  avaiga'laith  thangga'l  mirugajeevanga'lukku  munnaalea  oatti,  ithu  thaaveethin  ko'l'lai  en’raarga'l.  (1saamuveal  30:20)

விடாய்த்துப்போனதினாலே  தாவீதுக்குப்  பின்செல்லாமல்,  பேசோர்  ஆற்றண்டையிலே  தங்கியிருந்த  இருநூறுபேரிடத்துக்குத்  தாவீது  வருகிறபோது,  இவர்கள்  தாவீதுக்கும்  அவனோடிருந்த  ஜனத்திற்கும்  எதிர்கொண்டு  வந்தார்கள்;  தாவீது  அந்த  ஜனத்தினிடத்தில்  சேர்ந்து,  அவர்கள்  சுகசெய்தியை  விசாரித்தான்.  (1சாமுவேல்  30:21)

vidaayththuppoanathinaalea  thaaveethukkup  pinsellaamal,  beasoar  aat’ra'ndaiyilea  thanggiyiruntha  irunoo’rupearidaththukkuth  thaaveethu  varugi’rapoathu,  ivarga'l  thaaveethukkum  avanoadiruntha  janaththi’rkum  ethirko'ndu  vanthaarga'l;  thaaveethu  antha  janaththinidaththil  searnthu,  avarga'l  sugaseythiyai  visaariththaan.  (1saamuveal  30:21)

அப்பொழுது  தாவீதோடே  நடந்து  வந்த  மனுஷரில்  பொல்லாதவர்களும்  பேலியாளின்  மக்களுமான  எல்லாரும்:  அவர்கள்  எங்களோடே  வராதபடியினால்  நாங்கள்  திருப்பிக்கொண்ட  கொள்ளையுடைமைகளில்  அவர்களுக்கு  ஒன்றும்  கொடுப்பதில்லை;  அவர்களில்  ஒவ்வொருவனும்  தன்தன்  மனைவியையும்  தன்தன்  பிள்ளைகளையுமே  அழைத்துக்கொண்டு  போகட்டும்  என்றார்கள்.  (1சாமுவேல்  30:22)

appozhuthu  thaaveethoadea  nadanthu  vantha  manusharil  pollaathavarga'lum  bealiyaa'lin  makka'lumaana  ellaarum:  avarga'l  engga'loadea  varaathapadiyinaal  naangga'l  thiruppikko'nda  ko'l'laiyudaimaiga'lil  avarga'lukku  on’rum  koduppathillai;  avarga'lil  ovvoruvanum  thanthan  manaiviyaiyum  thanthan  pi'l'laiga'laiyumea  azhaiththukko'ndu  poagattum  en’raarga'l.  (1saamuveal  30:22)

அதற்குத்  தாவீது:  என்  சகோதரரே,  கர்த்தர்  நமக்குத்  தந்ததை  நீங்கள்  இப்படிச்  செய்யவேண்டாம்;  கர்த்தர்  நம்மைக்  காப்பாற்றி,  நமக்கு  விரோதமாய்  வந்திருந்த  அந்தத்  தண்டை  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  (1சாமுவேல்  30:23)

atha’rkuth  thaaveethu:  en  sagoathararea,  karththar  namakkuth  thanthathai  neengga'l  ippadich  seyyavea'ndaam;  karththar  nammaik  kaappaat’ri,  namakku  viroathamaay  vanthiruntha  anthath  tha'ndai  nammudaiya  kaiyil  oppukkoduththaar.  (1saamuveal  30:23)

இந்தக்  காரியத்தில்  உங்கள்  சொற்கேட்க  யார்  சம்மதிப்பான்?  யுத்தத்திற்குப்  போனவர்களின்  பங்கு  எவ்வளவோ,  அவ்வளவு  ரஸ்துக்களண்டையில்  இருந்தவர்களுக்கும்  பங்குவீதம்  கிடைக்கவேண்டும்;  சரிபங்காகப்  பங்கிடுவார்களாக  என்றான்.  (1சாமுவேல்  30:24)

inthak  kaariyaththil  ungga'l  so’rkeadka  yaar  sammathippaan?  yuththaththi’rkup  poanavarga'lin  panggu  evva'lavoa,  avva'lavu  rasthukka'la'ndaiyil  irunthavarga'lukkum  pangguveetham  kidaikkavea'ndum;  saripanggaagap  panggiduvaarga'laaga  en’raan.  (1saamuveal  30:24)

அப்படியே  அந்நாள்முதற்கொண்டு  நடந்துவருகிறது;  அதை  இஸ்ரவேலிலே  இந்நாள்வரைக்கும்  இருக்கும்  கட்டளையும்  பிரமாணமுமாக  ஏற்படுத்தினான்.  (1சாமுவேல்  30:25)

appadiyea  annaa'lmutha’rko'ndu  nadanthuvarugi’rathu;  athai  isravealilea  innaa'lvaraikkum  irukkum  katta'laiyum  piramaa'namumaaga  ea’rpaduththinaan.  (1saamuveal  30:25)

தாவீது  சிக்லாகுக்கு  வந்தபோது,  அவன்  கொள்ளையாடினவைகளிலே  தன்  சிநேகிதராகிய  யூதாவின்  மூப்பருக்குச்  சிலவற்றை  அனுப்பி:  இதோ,  கர்த்தருடைய  சத்துருக்களின்  கொள்ளையில்  உங்களுக்கு  உண்டாயிருக்கும்  ஆசீர்வாத  பாகம்  என்று  சொல்லச்சொன்னான்.  (1சாமுவேல்  30:26)

thaaveethu  siklaagukku  vanthapoathu,  avan  ko'l'laiyaadinavaiga'lilea  than  sineagitharaagiya  yoothaavin  moopparukkuch  silavat’rai  anuppi:  ithoa,  karththarudaiya  saththurukka'lin  ko'l'laiyil  ungga'lukku  u'ndaayirukkum  aaseervaatha  paagam  en’ru  sollachsonnaan.  (1saamuveal  30:26)

யார்யாருக்கு  அனுப்பினானென்றால்,  பெத்தேலில்  இருக்கிறவர்களுக்கும்,  தெற்கான  ராமோத்தில்  இருக்கிறவர்களுக்கும்,  யாத்தீரில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:27)

yaaryaarukku  anuppinaanen’raal,  beththealil  irukki’ravarga'lukkum,  the’rkaana  raamoaththil  irukki’ravarga'lukkum,  yaaththeeril  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:27)

ஆரோவேரில்  இருக்கிறவர்களுக்கும்,  சிப்மோத்தில்  இருக்கிறவர்களுக்கும்,  எஸ்தெமோவாவில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:28)

aaroavearil  irukki’ravarga'lukkum,  sipmoaththil  irukki’ravarga'lukkum,  esthemoavaavil  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:28)

ராக்காலில்  இருக்கிறவர்களுக்கும்,  யெராமியேலியரின்  பட்டணங்களில்  இருக்கிறவர்களுக்கும்,  கேனியரின்  பட்டணங்களில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:29)

raakkaalil  irukki’ravarga'lukkum,  yeraamiyealiyarin  patta'nangga'lil  irukki’ravarga'lukkum,  keaniyarin  patta'nangga'lil  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:29)

ஒர்மாவில்  இருக்கிறவர்களுக்கும்,  கொராசானில்  இருக்கிறவர்களுக்கும்,  ஆற்றாகில்  இருக்கிறவர்களுக்கும்,  (1சாமுவேல்  30:30)

ormaavil  irukki’ravarga'lukkum,  koraasaanil  irukki’ravarga'lukkum,  aat’raakil  irukki’ravarga'lukkum,  (1saamuveal  30:30)

எப்ரோனில்  இருக்கிறவர்களுக்கும்,  தாவீதும்  அவன்  மனுஷரும்  நடமாடின  எல்லா  இடங்களில்  இருக்கிறவர்களுக்கும்  அனுப்பினான்.  (1சாமுவேல்  30:31)

ebroanil  irukki’ravarga'lukkum,  thaaveethum  avan  manusharum  nadamaadina  ellaa  idangga'lil  irukki’ravarga'lukkum  anuppinaan.  (1saamuveal  30:31)