Showing posts with label கொலோசெயர். Show all posts
Showing posts with label கொலோசெயர். Show all posts

Saturday, June 04, 2016

Koloaseyar 4 | கொலோசெயர் 4 | Colossians 4

எஜமான்களே,  உங்களுக்கும்  பரலோகத்தில்  எஜமான்  இருக்கிறாரென்று  அறிந்து,  வேலைக்காரருக்கு  நீதியும்  செவ்வையுமானதைச்  செய்யுங்கள்.  (கொலோசெயர்  4:1)

ejamaanga'lea,  ungga'lukkum  paraloagaththil  ejamaan  irukki’raaren’ru  a’rinthu,  vealaikkaararukku  neethiyum  sevvaiyumaanathaich  seyyungga'l.  (koloaseyar  4:1)

இடைவிடாமல்  ஜெபம்பண்ணுங்கள்,  ஸ்தோத்திரத்துடன்  ஜெபத்தில்  விழித்திருங்கள்.  (கொலோசெயர்  4:2)

idaividaamal  jebampa'n'nungga'l,  sthoaththiraththudan  jebaththil  vizhiththirungga'l.  (koloaseyar  4:2)

கிறிஸ்துவினுடைய  இரகசியத்தினிமித்தம்  கட்டப்பட்டிருக்கிற  நான்  அந்த  இரகசியத்தைக்குறித்துப்  பேசவேண்டியபிரகாரமாய்ப்  பேசி,  அதை  வெளிப்படுத்துவதற்கு,  (கொலோசெயர்  4:3)

ki’risthuvinudaiya  iragasiyaththinimiththam  kattappattirukki’ra  naan  antha  iragasiyaththaikku’riththup  peasavea'ndiyapiragaaramaayp  peasi,  athai  ve'lippaduththuvatha’rku,  (koloaseyar  4:3)

திருவசனம்  செல்லும்படியான  வாசலைத்  தேவன்  திறந்தருளும்படி  எங்களுக்காகவும்  வேண்டிக்கொள்ளுங்கள்.  (கொலோசெயர்  4:4)

thiruvasanam  sellumpadiyaana  vaasalaith  theavan  thi’rantharu'lumpadi  engga'lukkaagavum  vea'ndikko'l'lungga'l.  (koloaseyar  4:4)

புறம்பேயிருக்கிறவர்களுக்கு  முன்பாக  ஞானமாய்  நடந்து,  காலத்தைப்  பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.  (கொலோசெயர்  4:5)

pu’rambeayirukki’ravarga'lukku  munbaaga  gnaanamaay  nadanthu,  kaalaththaip  pirayoajanappaduththikko'l'lungga'l.  (koloaseyar  4:5)

அவனவனுக்கு  இன்னின்னபடி  உத்தரவு  சொல்லவேண்டுமென்று  நீங்கள்  அறியும்படிக்கு,  உங்கள்  வசனம்  எப்பொழுதும்  கிருபை  பொருந்தினதாயும்  உப்பால்  சாரமேறினதாயுமிருப்பதாக.  (கொலோசெயர்  4:6)

avanavanukku  inninnapadi  uththaravu  sollavea'ndumen’ru  neengga'l  a’riyumpadikku,  ungga'l  vasanam  eppozhuthum  kirubai  porunthinathaayum  uppaal  saaramea’rinathaayumiruppathaaga.  (koloaseyar  4:6)

பிரியமான  சகோதரனும்,  உண்மையுள்ள  ஊழியக்காரனும்,  கர்த்தருக்குள்  எனக்கு  உடன்வேலையாளுமாயிருக்கிற  தீகிக்கு  என்பவன்  என்  செய்திகளையெல்லாம்  உங்களுக்கு  அறிவிப்பான்.  (கொலோசெயர்  4:7)

piriyamaana  sagoatharanum,  u'nmaiyu'l'la  oozhiyakkaaranum,  karththarukku'l  enakku  udanvealaiyaa'lumaayirukki’ra  theegikku  enbavan  en  seythiga'laiyellaam  ungga'lukku  a’rivippaan.  (koloaseyar  4:7)

உங்கள்  செய்திகளை  அறியவும்,  உங்கள்  இருதயங்களைத்  தேற்றவும்,  (கொலோசெயர்  4:8)

ungga'l  seythiga'lai  a’riyavum,  ungga'l  iruthayangga'laith  theat’ravum,  (koloaseyar  4:8)

அவனையும்,  உங்களிலொருவனாயிருக்கிற  உண்மையும்  பிரியமுமுள்ள  சகோதரனாகிய  ஒநேசிமு  என்பவனையும்,  உங்களிடத்தில்  அனுப்பியிருக்கிறேன்;  அவர்கள்  இவ்விடத்துச்  செய்திகளையெல்லாம்  உங்களுக்கு  அறிவிப்பார்கள்.  (கொலோசெயர்  4:9)

avanaiyum,  ungga'liloruvanaayirukki’ra  u'nmaiyum  piriyamumu'l'la  sagoatharanaagiya  oneasimu  enbavanaiyum,  ungga'lidaththil  anuppiyirukki’rean;  avarga'l  ivvidaththuch  seythiga'laiyellaam  ungga'lukku  a’rivippaarga'l.  (koloaseyar  4:9)

என்னோடேகூடக்  காவலிலிருக்கிற  அரிஸ்தர்க்கு  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறான்;  பர்னபாவுக்கு  இனத்தானாகிய  மாற்கும்  வாழ்த்துதல்  சொல்லுகிறான்,  இவனைக்குறித்துக்  கட்டளைபெற்றீர்களே;  இவன்  உங்களிடத்தில்  வந்தால்  இவனை  அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.  (கொலோசெயர்  4:10)

ennoadeakoodak  kaavalilirukki’ra  aristharkku  ungga'lukku  vaazhththuthal  sollugi’raan;  barnabaavukku  inaththaanaagiya  maa’rkum  vaazhththuthal  sollugi’raan,  ivanaikku’riththuk  katta'laipet’reerga'lea;  ivan  ungga'lidaththil  vanthaal  ivanai  anggigariththukko'l'lungga'l.  (koloaseyar  4:10)

யுஸ்து  என்னப்பட்ட  இயேசுவும்  வாழ்த்துதல்  சொல்லுகிறான்.  விருத்தசேதனமுள்ளவர்களில்  இவர்கள்மாத்திரம்  தேவனுடைய  ராஜ்யத்தின்பொருட்டு  என்  உடன்வேலையாட்களாயிருந்து,  எனக்கு  ஆறுதல்  செய்துவந்தவர்கள்.  (கொலோசெயர்  4:11)

yusthu  ennappatta  iyeasuvum  vaazhththuthal  sollugi’raan.  viruththaseathanamu'l'lavarga'lil  ivarga'lmaaththiram  theavanudaiya  raajyaththinporuttu  en  udanvealaiyaadka'laayirunthu,  enakku  aa’ruthal  seythuvanthavarga'l.  (koloaseyar  4:11)

எப்பாப்பிராவும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறான்;  உங்களைச்  சேர்ந்தவனும்  கிறிஸ்துவின்  ஊழியக்காரனுமாகிய  இவன்,  நீங்கள்  தேவனுக்குச்  சித்தமானவைகளெல்லாவற்றிலும்  தேறினவர்களாயும்  பூரண  நிச்சயமுள்ளவர்களாயும்  நிலைநிற்கவேண்டுமென்று,  தன்  ஜெபங்களில்  உங்களுக்காக  எப்பொழுதும்  போராடுகிறான்.  (கொலோசெயர்  4:12)

eppaappiraavum  ungga'lukku  vaazhththuthal  sollugi’raan;  ungga'laich  searnthavanum  ki’risthuvin  oozhiyakkaaranumaagiya  ivan,  neengga'l  theavanukkuch  siththamaanavaiga'lellaavat’rilum  thea’rinavarga'laayum  poora'na  nichchayamu'l'lavarga'laayum  nilaini’rkavea'ndumen’ru,  than  jebangga'lil  ungga'lukkaaga  eppozhuthum  poaraadugi’raan.  (koloaseyar  4:12)

இவன்  உங்களுக்காகவும்,  லவோதிக்கேயருக்காகவும்,  எராப்போலியருக்காகவும்,  மிகுந்த  ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு  நான்  சாட்சியாயிருக்கிறேன்.  (கொலோசெயர்  4:13)

ivan  ungga'lukkaagavum,  lavoathikkeayarukkaagavum,  eraappoaliyarukkaagavum,  miguntha  jaakkirathaiyu'l'lavanaayirukki’raanenbatha’rku  naan  saadchiyaayirukki’rean.  (koloaseyar  4:13)

பிரியமான  வைத்தியனாகிய  லூக்காவும்,  தேமாவும்,  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (கொலோசெயர்  4:14)

piriyamaana  vaiththiyanaagiya  lookkaavum,  theamaavum,  ungga'lukku  vaazhththuthal  sollugi’raarga'l.  (koloaseyar  4:14)

லவோதிக்கேயாவிலிருக்கிற  சகோதரரையும்,  நிம்பாவையும்,  அவன்  வீட்டில்  கூடுகிற  சபையையும்  வாழ்த்துங்கள்.  (கொலோசெயர்  4:15)

lavoathikkeayaavilirukki’ra  sagoathararaiyum,  nimpaavaiyum,  avan  veettil  koodugi’ra  sabaiyaiyum  vaazhththungga'l.  (koloaseyar  4:15)

இந்த  நிருபம்  உங்களிடத்தில்  வாசிக்கப்பட்டபின்பு  இது  லவோதிக்கேயா  சபையிலும்  வாசிக்கப்படும்படி  செய்யுங்கள்;  லவோதிக்கேயாவிலிருந்து  வரும்  நிருபத்தை  நீங்களும்  வாசியுங்கள்.  (கொலோசெயர்  4:16)

intha  nirubam  ungga'lidaththil  vaasikkappattapinbu  ithu  lavoathikkeayaa  sabaiyilum  vaasikkappadumpadi  seyyungga'l;  lavoathikkeayaavilirunthu  varum  nirubaththai  neengga'lum  vaasiyungga'l.  (koloaseyar  4:16)

அர்க்கிப்பைக்  கண்டு:  நீ  கர்த்தரிடத்தில்  பெற்ற  ஊழியத்தை  நிறைவேற்றும்படி  கவனமாயிருப்பாயாகவென்று  சொல்லுங்கள்.  (கொலோசெயர்  4:17)

arkkippaik  ka'ndu:  nee  karththaridaththil  pet’ra  oozhiyaththai  ni’raiveat’rumpadi  kavanamaayiruppaayaagaven’ru  sollungga'l.  (koloaseyar  4:17)

பவுலாகிய  நான்  என்  கையினால்  எழுதி,  உங்களை  வாழ்த்துகிறேன்.  நான்  கட்டப்பட்டிருக்கிறதை  நினைத்துக்கொள்ளுங்கள்.  கிருபை  உங்களோடிருப்பதாக.  ஆமென்.  (கொலோசெயர்  4:18)

pavulaagiya  naan  en  kaiyinaal  ezhuthi,  ungga'lai  vaazhththugi’rean.  naan  kattappattirukki’rathai  ninaiththukko'l'lungga'l.  kirubai  ungga'loadiruppathaaga.  aamen.  (koloaseyar  4:18)


Koloaseyar 3 | கொலோசெயர் 3 | Colossians 3

நீங்கள்  கிறிஸ்துவுடன்கூட  எழுந்ததுண்டானால்,  கிறிஸ்து  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  வீற்றிருக்கும்  இடத்திலுள்ள  மேலானவைகளைத்  தேடுங்கள்.  (கொலோசெயர்  3:1)

neengga'l  ki’risthuvudankooda  ezhunthathu'ndaanaal,  ki’risthu  theavanudaiya  valathupaarisaththil  veet’rirukkum  idaththilu'l'la  mealaanavaiga'laith  theadungga'l.  (koloaseyar  3:1)

பூமியிலுள்ளவைகளையல்ல,  மேலானவைகளையே  நாடுங்கள்.  (கொலோசெயர்  3:2)

boomiyilu'l'lavaiga'laiyalla,  mealaanavaiga'laiyea  naadungga'l.  (koloaseyar  3:2)

ஏனென்றால்,  நீங்கள்  மரித்தீர்கள்,  உங்கள்  ஜீவன்  கிறிஸ்துவுடனே  தேவனுக்குள்  மறைந்திருக்கிறது.  (கொலோசெயர்  3:3)

eanen’raal,  neengga'l  mariththeerga'l,  ungga'l  jeevan  ki’risthuvudanea  theavanukku'l  ma’rainthirukki’rathu.  (koloaseyar  3:3)

நம்முடைய  ஜீவனாகிய  கிறிஸ்து  வெளிப்படும்போது,  நீங்களும்  அவரோடேகூட  மகிமையிலே  வெளிப்படுவீர்கள்.  (கொலோசெயர்  3:4)

nammudaiya  jeevanaagiya  ki’risthu  ve'lippadumpoathu,  neengga'lum  avaroadeakooda  magimaiyilea  ve'lippaduveerga'l.  (koloaseyar  3:4)

ஆகையால்,  விபசாரம்,  அசுத்தம்,  மோகம்,  துர்இச்சை,  விக்கிரகாராதனையான  பொருளாசை  ஆகிய  இவைகளைப்  பூமியில்  உண்டுபண்ணுகிற  உங்கள்  அவயவங்களை  அழித்துப்போடுங்கள்.  (கொலோசெயர்  3:5)

aagaiyaal,  vibasaaram,  asuththam,  moagam,  thurichchai,  vikkiragaaraathanaiyaana  poru'laasai  aagiya  ivaiga'laip  boomiyil  u'ndupa'n'nugi’ra  ungga'l  avayavangga'lai  azhiththuppoadungga'l.  (koloaseyar  3:5)

இவைகளின்பொருட்டே  கீழ்ப்படியாமையின்  பிள்ளைகள்மேல்  தேவகோபாக்கினை  வரும்.  (கொலோசெயர்  3:6)

ivaiga'linporuttea  keezhppadiyaamaiyin  pi'l'laiga'lmeal  theavakoabaakkinai  varum.  (koloaseyar  3:6)

நீங்களும்  முற்காலத்தில்  அவர்களுக்குள்ளே  சஞ்சரித்தபோது,  அவைகளைச்  செய்துகொண்டுவந்தீர்கள்.  (கொலோசெயர்  3:7)

neengga'lum  mu’rkaalaththil  avarga'lukku'l'lea  sagnchariththapoathu,  avaiga'laich  seythuko'nduvantheerga'l.  (koloaseyar  3:7)

இப்பொழுதோ  கோபமும்  மூர்க்கமும்  பொறாமையும்,  உங்கள்  வாயில்  பிறக்கலாகாத  தூஷணமும்  வம்பு  வார்த்தைகளுமாகிய  இவைகளையெல்லாம்  விட்டுவிடுங்கள்.  (கொலோசெயர்  3:8)

ippozhuthoa  koabamum  moorkkamum  po’raamaiyum,  ungga'l  vaayil  pi’rakkalaagaatha  thoosha'namum  vambu  vaarththaiga'lumaagiya  ivaiga'laiyellaam  vittuvidungga'l.  (koloaseyar  3:8)

ஒருவருக்கொருவர்  பொய்  சொல்லாதிருங்கள்;  பழைய  மனுஷனையும்  அவன்  செய்கைகளையும்  களைந்துபோட்டு,  (கொலோசெயர்  3:9)

oruvarukkoruvar  poy  sollaathirungga'l;  pazhaiya  manushanaiyum  avan  seygaiga'laiyum  ka'lainthupoattu,  (koloaseyar  3:9)

தன்னைச்  சிருஷ்டித்தவருடைய  சாயலுக்கொப்பாய்ப்  பூரண  அறிவடையும்படி  புதிதாக்கப்பட்ட  புதிய  மனுஷனைத்  தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.  (கொலோசெயர்  3:10)

thannaich  sirushdiththavarudaiya  saayalukkoppaayp  poora'na  a’rivadaiyumpadi  puthithaakkappatta  puthiya  manushanaith  thariththukko'ndirukki’reerga'lea.  (koloaseyar  3:10)

அதிலே  கிரேக்கனென்றும்  யூதனென்றுமில்லை,  விருத்தசேதனமுள்ளவனென்றும்  விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை,  புறஜாதியானென்றும்  புறதேசத்தானென்றுமில்லை,  அடிமையென்றும்  சுயாதீனனென்றுமில்லை;  கிறிஸ்துவே  எல்லாரிலும்  எல்லாமுமாயிருக்கிறார்.  (கொலோசெயர்  3:11)

athilea  kireakkanen’rum  yoothanen’rumillai,  viruththaseathanamu'l'lavanen’rum  viruththaseathanamillaathavanen’rumillai,  pu’rajaathiyaanen’rum  pu’ratheasaththaanen’rumillai,  adimaiyen’rum  suyaatheenanen’rumillai;  ki’risthuvea  ellaarilum  ellaamumaayirukki’raar.  (koloaseyar  3:11)

ஆகையால்,  நீங்கள்  தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்ட  பரிசுத்தரும்  பிரியருமாய்,  உருக்கமான  இரக்கத்தையும்,  தயவையும்,  மனத்தாழ்மையையும்,  சாந்தத்தையும்,  நீடிய  பொறுமையையும்  தரித்துக்கொண்டு;  (கொலோசெயர்  3:12)

aagaiyaal,  neengga'l  theavanaal  therinthuko'l'lappatta  parisuththarum  piriyarumaay,  urukkamaana  irakkaththaiyum,  thayavaiyum,  manaththaazhmaiyaiyum,  saanthaththaiyum,  neediya  po’rumaiyaiyum  thariththukko'ndu;  (koloaseyar  3:12)

ஒருவரையொருவர்  தாங்கி,  ஒருவர்பேரில்  ஒருவருக்குக்  குறைபாடு  உண்டானால்,  கிறிஸ்து  உங்களுக்கு  மன்னித்ததுபோல,  ஒருவருக்கொருவர்  மன்னியுங்கள்.  (கொலோசெயர்  3:13)

oruvaraiyoruvar  thaanggi,  oruvarpearil  oruvarukkuk  ku’raipaadu  u'ndaanaal,  ki’risthu  ungga'lukku  manniththathupoala,  oruvarukkoruvar  manniyungga'l.  (koloaseyar  3:13)

இவை  எல்லாவற்றின்மேலும்,  பூரண  சற்குணத்தின்  கட்டாகிய  அன்பைத்  தரித்துக்கொள்ளுங்கள்.  (கொலோசெயர்  3:14)

ivai  ellaavat’rinmealum,  poora'na  sa’rku'naththin  kattaagiya  anbaith  thariththukko'l'lungga'l.  (koloaseyar  3:14)

தேவசமாதானம்  உங்கள்  இருதயங்களில்  ஆளக்கடவது,  இதற்கென்றே  நீங்கள்  ஒரே  சரீரமாக  அழைக்கப்பட்டீர்கள்;  நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.  (கொலோசெயர்  3:15)

theavasamaathaanam  ungga'l  iruthayangga'lil  aa'lakkadavathu,  itha’rken’rea  neengga'l  orea  sareeramaaga  azhaikkappatteerga'l;  nan’riya’rithalu'l'lavarga'laayumirungga'l.  (koloaseyar  3:15)

கிறிஸ்துவின்  வசனம்  உங்களுக்குள்ளே  சகல  ஞானத்தோடும்  பரிபூரணமாக  வாசமாயிருப்பதாக;  சங்கீதங்களினாலும்  கீர்த்தனைகளினாலும்  ஞானப்பாட்டுகளினாலும்  ஒருவருக்கொருவர்  போதித்துப்  புத்திசொல்லிக்கொண்டு,  உங்கள்  இருதயத்திலே  கர்த்தரைப்  பக்தியுடன்  பாடி;  (கொலோசெயர்  3:16)

ki’risthuvin  vasanam  ungga'lukku'l'lea  sagala  gnaanaththoadum  paripoora'namaaga  vaasamaayiruppathaaga;  sanggeethangga'linaalum  keerththanaiga'linaalum  gnaanappaattuga'linaalum  oruvarukkoruvar  poathiththup  buththisollikko'ndu,  ungga'l  iruthayaththilea  karththaraip  bakthiyudan  paadi;  (koloaseyar  3:16)

வார்த்தையினாலாவது  கிரியையினாலாவது,  நீங்கள்  எதைச்  செய்தாலும்,  அதையெல்லாம்  கர்த்தராகிய  இயேசுவின்  நாமத்தினாலே  செய்து,  அவர்  முன்னிலையாகப்  பிதாவாகிய  தேவனை  ஸ்தோத்திரியுங்கள்.  (கொலோசெயர்  3:17)

vaarththaiyinaalaavathu  kiriyaiyinaalaavathu,  neengga'l  ethaich  seythaalum,  athaiyellaam  karththaraagiya  iyeasuvin  naamaththinaalea  seythu,  avar  munnilaiyaagap  pithaavaagiya  theavanai  sthoaththiriyungga'l.  (koloaseyar  3:17)

மனைவிகளே,  கர்த்தருக்கேற்கும்படி,  உங்கள்  புருஷருக்குக்  கீழ்ப்படியுங்கள்.  (கொலோசெயர்  3:18)

manaiviga'lea,  karththarukkea’rkumpadi,  ungga'l  purusharukkuk  keezhppadiyungga'l.  (koloaseyar  3:18)

புருஷர்களே,  உங்கள்  மனைவிகளில்  அன்புகூருங்கள்,  அவர்கள்மேல்  கசந்துகொள்ளாதிருங்கள்.  (கொலோசெயர்  3:19)

purusharga'lea,  ungga'l  manaiviga'lil  anbukoorungga'l,  avarga'lmeal  kasanthuko'l'laathirungga'l.  (koloaseyar  3:19)

பிள்ளைகளே,  உங்களைப்  பெற்றாருக்கு  எல்லாக்  காரியத்திலேயும்  கீழ்ப்படியுங்கள்;  இது  கர்த்தருக்குப்  பிரியமானது.  (கொலோசெயர்  3:20)

pi'l'laiga'lea,  ungga'laip  pet’raarukku  ellaak  kaariyaththileayum  keezhppadiyungga'l;  ithu  karththarukkup  piriyamaanathu.  (koloaseyar  3:20)

பிதாக்களே,  உங்கள்  பிள்ளைகள்  திடனற்றுப்போகாதபடி,  அவர்களுக்குக்  கோபமூட்டாதிருங்கள்.  (கொலோசெயர்  3:21)

pithaakka'lea,  ungga'l  pi'l'laiga'l  thidanat’ruppoagaathapadi,  avarga'lukkuk  koabamoottaathirungga'l.  (koloaseyar  3:21)

வேலைக்காரரே,  சரீரத்தின்படி  உங்கள்  எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு  எல்லாக்  காரியத்திலேயும்  கீழ்ப்படிந்து,  நீங்கள்  மனுஷருக்குப்  பிரியமாயிருக்க  விரும்புகிறவர்களாகப்  பார்வைக்கு  ஊழியஞ்செய்யாமல்,  தேவனுக்குப்  பயப்படுகிறவர்களாகக்  கபடமில்லாத  இருதயத்தோடே  ஊழியஞ்செய்யுங்கள்.  (கொலோசெயர்  3:22)

vealaikkaararea,  sareeraththinpadi  ungga'l  ejamaanga'laayirukki’ravarga'lukku  ellaak  kaariyaththileayum  keezhppadinthu,  neengga'l  manusharukkup  piriyamaayirukka  virumbugi’ravarga'laagap  paarvaikku  oozhiyagnseyyaamal,  theavanukkup  bayappadugi’ravarga'laagak  kabadamillaatha  iruthayaththoadea  oozhiyagnseyyungga'l.  (koloaseyar  3:22)

நீங்கள்  கர்த்தராகிய  கிறிஸ்துவைச்  சேவிக்கிறதினாலே,  சுதந்தரமாகிய  பலனைக்  கர்த்தராலே  பெறுவீர்களென்று  அறிந்து,  (கொலோசெயர்  3:23)

neengga'l  karththaraagiya  ki’risthuvaich  seavikki’rathinaalea,  suthantharamaagiya  palanaik  karththaraalea  pe’ruveerga'len’ru  a’rinthu,  (koloaseyar  3:23)

எதைச்  செய்தாலும்,  அதை  மனுஷர்களுக்கென்று  செய்யாமல்,  கர்த்தருக்கென்றே  மனப்பூர்வமாய்ச்  செய்யுங்கள்.  (கொலோசெயர்  3:24)

ethaich  seythaalum,  athai  manusharga'lukken’ru  seyyaamal,  karththarukken’rea  manappoorvamaaych  seyyungga'l.  (koloaseyar  3:24)

அநியாயஞ்செய்கிறவன்  தான்  செய்த  அநியாயத்துக்கேற்ற  பலனை  அடைவான்;  பட்சபாதமே  இல்லை.  (கொலோசெயர்  3:25)

aniyaayagnseygi’ravan  thaan  seytha  aniyaayaththukkeat’ra  palanai  adaivaan;  padchapaathamea  illai.  (koloaseyar  3:25)