நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து
தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள
மேலானவைகளைத் தேடுங்கள். (கொலோசெயர்
3:1)
neengga'l ki’risthuvudankooda
ezhunthathu'ndaanaal, ki’risthu theavanudaiya valathupaarisaththil veet’rirukkum idaththilu'l'la mealaanavaiga'laith theadungga'l. (koloaseyar
3:1)
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே
நாடுங்கள். (கொலோசெயர் 3:2)
boomiyilu'l'lavaiga'laiyalla, mealaanavaiga'laiyea naadungga'l. (koloaseyar
3:2)
ஏனென்றால், நீங்கள்
மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள்
மறைந்திருக்கிறது. (கொலோசெயர் 3:3)
eanen’raal, neengga'l mariththeerga'l, ungga'l jeevan ki’risthuvudanea theavanukku'l
ma’rainthirukki’rathu. (koloaseyar
3:3)
நம்முடைய ஜீவனாகிய
கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும்
அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோசெயர்
3:4)
nammudaiya jeevanaagiya ki’risthu ve'lippadumpoathu, neengga'lum avaroadeakooda magimaiyilea ve'lippaduveerga'l. (koloaseyar
3:4)
ஆகையால், விபசாரம்,
அசுத்தம், மோகம், துர்இச்சை,
விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில்
உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை
அழித்துப்போடுங்கள். (கொலோசெயர் 3:5)
aagaiyaal, vibasaaram, asuththam, moagam, thurichchai, vikkiragaaraathanaiyaana
poru'laasai aagiya ivaiga'laip boomiyil u'ndupa'n'nugi’ra ungga'l avayavangga'lai azhiththuppoadungga'l. (koloaseyar
3:5)
இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல்
தேவகோபாக்கினை வரும். (கொலோசெயர்
3:6)
ivaiga'linporuttea keezhppadiyaamaiyin pi'l'laiga'lmeal theavakoabaakkinai varum.
(koloaseyar 3:6)
நீங்களும் முற்காலத்தில்
அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச்
செய்துகொண்டுவந்தீர்கள். (கொலோசெயர் 3:7)
neengga'lum mu’rkaalaththil avarga'lukku'l'lea sagnchariththapoathu, avaiga'laich seythuko'nduvantheerga'l. (koloaseyar
3:7)
இப்பொழுதோ கோபமும்
மூர்க்கமும் பொறாமையும், உங்கள்
வாயில் பிறக்கலாகாத தூஷணமும்
வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். (கொலோசெயர்
3:8)
ippozhuthoa koabamum moorkkamum
po’raamaiyum, ungga'l vaayil
pi’rakkalaagaatha thoosha'namum
vambu
vaarththaiga'lumaagiya ivaiga'laiyellaam vittuvidungga'l. (koloaseyar
3:8)
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, (கொலோசெயர்
3:9)
oruvarukkoruvar poy sollaathirungga'l; pazhaiya
manushanaiyum avan seygaiga'laiyum ka'lainthupoattu, (koloaseyar 3:9)
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. (கொலோசெயர்
3:10)
thannaich sirushdiththavarudaiya
saayalukkoppaayp poora'na
a’rivadaiyumpadi puthithaakkappatta puthiya
manushanaith thariththukko'ndirukki’reerga'lea. (koloaseyar
3:10)
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும்
சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும்
எல்லாமுமாயிருக்கிறார். (கொலோசெயர் 3:11)
athilea kireakkanen’rum yoothanen’rumillai, viruththaseathanamu'l'lavanen’rum viruththaseathanamillaathavanen’rumillai, pu’rajaathiyaanen’rum pu’ratheasaththaanen’rumillai, adimaiyen’rum suyaatheenanen’rumillai; ki’risthuvea ellaarilum
ellaamumaayirukki’raar. (koloaseyar
3:11)
ஆகையால், நீங்கள்
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும்
பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும்,
மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; (கொலோசெயர்
3:12)
aagaiyaal, neengga'l theavanaal therinthuko'l'lappatta parisuththarum piriyarumaay,
urukkamaana irakkaththaiyum, thayavaiyum,
manaththaazhmaiyaiyum, saanthaththaiyum,
neediya po’rumaiyaiyum thariththukko'ndu; (koloaseyar
3:12)
ஒருவரையொருவர் தாங்கி,
ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு
உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு
மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
(கொலோசெயர் 3:13)
oruvaraiyoruvar thaanggi, oruvarpearil
oruvarukkuk ku’raipaadu u'ndaanaal, ki’risthu ungga'lukku manniththathupoala, oruvarukkoruvar manniyungga'l. (koloaseyar
3:13)
இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய
அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெயர்
3:14)
ivai ellaavat’rinmealum, poora'na
sa’rku'naththin kattaagiya anbaith thariththukko'l'lungga'l. (koloaseyar 3:14)
தேவசமாதானம் உங்கள்
இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே
நீங்கள் ஒரே சரீரமாக
அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். (கொலோசெயர்
3:15)
theavasamaathaanam ungga'l iruthayangga'lil aa'lakkadavathu, itha’rken’rea neengga'l orea sareeramaaga azhaikkappatteerga'l; nan’riya’rithalu'l'lavarga'laayumirungga'l. (koloaseyar 3:15)
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக
வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப்
புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே
கர்த்தரைப் பக்தியுடன் பாடி; (கொலோசெயர் 3:16)
ki’risthuvin vasanam ungga'lukku'l'lea sagala gnaanaththoadum paripoora'namaaga vaasamaayiruppathaaga; sanggeethangga'linaalum keerththanaiga'linaalum gnaanappaattuga'linaalum oruvarukkoruvar poathiththup
buththisollikko'ndu, ungga'l iruthayaththilea karththaraip
bakthiyudan paadi;
(koloaseyar 3:16)
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள்
எதைச் செய்தாலும், அதையெல்லாம்
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே
செய்து, அவர் முன்னிலையாகப்
பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். (கொலோசெயர்
3:17)
vaarththaiyinaalaavathu kiriyaiyinaalaavathu, neengga'l ethaich seythaalum, athaiyellaam
karththaraagiya iyeasuvin naamaththinaalea seythu, avar munnilaiyaagap pithaavaagiya theavanai sthoaththiriyungga'l. (koloaseyar
3:17)
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள்
புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். (கொலோசெயர்
3:18)
manaiviga'lea, karththarukkea’rkumpadi, ungga'l purusharukkuk keezhppadiyungga'l. (koloaseyar
3:18)
புருஷர்களே, உங்கள்
மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல்
கசந்துகொள்ளாதிருங்கள். (கொலோசெயர் 3:19)
purusharga'lea, ungga'l manaiviga'lil anbukoorungga'l, avarga'lmeal kasanthuko'l'laathirungga'l. (koloaseyar 3:19)
பிள்ளைகளே, உங்களைப்
பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
(கொலோசெயர் 3:20)
pi'l'laiga'lea, ungga'laip pet’raarukku ellaak kaariyaththileayum keezhppadiyungga'l; ithu karththarukkup piriyamaanathu. (koloaseyar
3:20)
பிதாக்களே, உங்கள்
பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக்
கோபமூட்டாதிருங்கள். (கொலோசெயர் 3:21)
pithaakka'lea, ungga'l pi'l'laiga'l thidanat’ruppoagaathapadi, avarga'lukkuk koabamoottaathirungga'l. (koloaseyar 3:21)
வேலைக்காரரே, சரீரத்தின்படி
உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்
காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள்
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு
ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத
இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். (கொலோசெயர்
3:22)
vealaikkaararea, sareeraththinpadi ungga'l ejamaanga'laayirukki’ravarga'lukku ellaak
kaariyaththileayum keezhppadinthu, neengga'l manusharukkup
piriyamaayirukka virumbugi’ravarga'laagap paarvaikku oozhiyagnseyyaamal, theavanukkup
bayappadugi’ravarga'laagak kabadamillaatha iruthayaththoadea oozhiyagnseyyungga'l. (koloaseyar 3:22)
நீங்கள் கர்த்தராகிய
கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய
பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
(கொலோசெயர் 3:23)
neengga'l karththaraagiya ki’risthuvaich seavikki’rathinaalea, suthantharamaagiya palanaik
karththaraalea pe’ruveerga'len’ru a’rinthu, (koloaseyar 3:23)
எதைச் செய்தாலும்,
அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல்,
கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
(கொலோசெயர் 3:24)
ethaich seythaalum, athai manusharga'lukken’ru seyyaamal, karththarukken’rea manappoorvamaaych seyyungga'l. (koloaseyar
3:24)
அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே
இல்லை. (கொலோசெயர் 3:25)
aniyaayagnseygi’ravan thaan seytha aniyaayaththukkeat’ra palanai adaivaan;
padchapaathamea illai.
(koloaseyar 3:25)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!