உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில்
என் முகத்தைக் காணாதிருக்கிற
மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம்
எனக்கு உண்டென்று நீங்கள்
அறிய விரும்புகிறேன். (கொலோசெயர்
2:1)
ungga'lukkaagavum lavoathikkeayaavilirukki’ravarga'lukkaagavum, sareeraththil en mugaththaik kaa'naathirukki’ra mat’rellaarukkaagavum miguntha poaraattam enakku u'nden’ru neengga'l a’riya virumbugi’rean. (koloaseyar
2:1)
அவர்களுடைய இருதயங்கள்
தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால்
இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும்
கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை
அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி
விரும்புகிறேன். (கொலோசெயர் 2:2)
avarga'ludaiya iruthayangga'l theat’rappattu, avarga'l anbinaal i'naikkappattu, pithaavaagiya theavanukkum
ki’risthuvukkum uriya iragasiyaththai a’rinthuko'l'lugi’ra u'narvin
poora'na nichchayaththinudaiya
ellaa aisuvariyaththi’rkum uriyavarga'laagavea'ndumen’rea ippadi virumbugi’rean. (koloaseyar
2:2)
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய
பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர்
2:3)
avarukku'l gnaanam
a’rivu
enbavaiga'laagiya pokkishangga'lellaam adanggiyirukki’rathu. (koloaseyar
2:3)
ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை
வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
(கொலோசெயர் 2:4)
oruvanum nayavasanippinaalea ungga'lai vagnchiyaathapadikku ithaich sollugi’rean. (koloaseyar 2:4)
சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி
உங்களுடனேகூட இருந்து, உங்கள்
ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள்
விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச்
சந்தோஷப்படுகிறேன். (கொலோசெயர் 2:5)
sareeraththinpadi
naan thooramaayirunthum, aaviyinpadi
ungga'ludaneakooda irunthu,
ungga'l
ozhunggaiyum, ki’risthuvinmealu'l'la ungga'l visuvaasaththin u’ruthiyaiyum paarththuch santhoashappadugi’rean. (koloaseyar
2:5)
ஆகையால், நீங்கள்
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை
ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல்
கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
(கொலோசெயர் 2:6)
aagaiyaal, neengga'l karththaraagiya ki’risthu iyeasuvai eat’rukko'ndapadiyea,
avarukku'l vearko'ndavarga'laagavum, avarmeal
kattappattavarga'laagavum, avarukku'l
nadanthuko'ndu, (koloaseyar 2:6)
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில்
உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. (கொலோசெயர்
2:7)
neengga'l poathikkappattapadiyea, visuvaasaththil u’ruthippattu, sthoaththiraththoadea athilea
peruguveerga'laaga. (koloaseyar 2:7)
லௌகிக ஞானத்தினாலும், மாயமான
தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக்
கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய
நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்
பற்றினதல்ல. (கொலோசெயர் 2:8)
laugiga gnaanaththinaalum, maayamaana
thanthiraththinaalum, oruvanum ungga'laik ko'l'laiko'ndupoagaathapadikku echcharikkaiyaayirungga'l; athu manusharga'lin paarambariya niyaayaththaiyum ulagavazhipaaduga'laiyum pat’rinatheayallaamal
ki’risthuvaip pat’rinathalla. (koloaseyar
2:8)
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள்
வாசமாயிருக்கிறது. (கொலோசெயர் 2:9)
eanen’raal, theavaththuvaththin paripoora'namellaam sareerappiragaaramaaga avarukku'l
vaasamaayirukki’rathu. (koloaseyar
2:9)
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள்
நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர்
2:10)
mealum sagala thuraiththanangga'lukkum athigaaraththukkum thalaivaraayirukki’ra avarukku'l
neengga'l
paripoora'namu'l'lavarga'laayirukki’reerga'l. (koloaseyar
2:10)
அல்லாமலும், நீங்கள்
கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக்
களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத
விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
(கொலோசெயர் 2:11)
allaamalum, neengga'l ki’risthuvaippat’rum viruththaseathanaththinaalea
maamsaththukkuriya paavasareeraththaik ka'lainthuvittathinaal, kaiyaal
seyyappadaatha viruththaseathanaththai avarukku'l
pet’reerga'l. (koloaseyar
2:11)
ஞானஸ்நானத்திலே அவரோடேகூட
அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய
செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட
எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். (கொலோசெயர்
2:12)
gnaanasnaanaththilea avaroadeakooda adakkampa'n'nappattavarga'laagavum, athilea
avarai mariththoarilirunthezhuppina theavanudaiya
seyalinmealu'l'la visuvaasaththinaalea avaroadeakooda ezhunthavarga'laagavum irukki’reerga'l. (koloaseyar
2:12)
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள்
மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும்
அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு
மன்னித்து; (கொலோசெயர் 2:13)
ungga'l paavangga'linaaleayum,
ungga'l
maamsa
viruththaseathanamillaamaiyinaaleayum mariththavarga'laayiruntha ungga'laiyum avaroadeakooda uyirppiththu,
akkiramangga'lellaavat’raiyum ungga'lukku manniththu; (koloaseyar
2:13)
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால்
நமக்கு விரோதமாகவும் இருந்த
கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து,
சிலுவையின்மேல் ஆணியடித்து; (கொலோசெயர்
2:14)
namakku ethiridaiyaagavum katta'laiga'laal namakku viroathamaagavum iruntha
kaiyezhuththaik kulaiththu, athai naduviliraathapadikku eduththu,
siluvaiyinmeal aa'niyadiththu; (koloaseyar
2:14)
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான
கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே
வெற்றிசிறந்தார். (கொலோசெயர் 2:15)
thuraiththanangga'laiyum athigaarangga'laiyum urinthuko'ndu, ve'liyaranggamaana koalamaakki,
avaiga'linmeal siluvaiyilea vet’risi’ranthaar. (koloaseyar
2:15)
ஆகையால், போஜனத்தையும்
பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும்
உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. (கொலோசெயர்
2:16)
aagaiyaal, poajanaththaiyum baanaththaiyum ku’riththaavathu, pa'ndigainaa'laiyum maathappi’rappaiyum oayvunaadka'laiyungku’riththaavathu, oruvanum
ungga'laik kut’rappaduththaathiruppaanaaga. (koloaseyar 2:16)
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின்
பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. (கொலோசெயர்
2:17)
avaiga'l varungkaariyangga'lukku nizhalaayirukki’rathu; avaiga'lin poru'l ki’risthuvaippat’rinathu. (koloaseyar 2:17)
கணுக்களாலும் கட்டுகளாலும்
உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற
சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்
பற்றிக்கொள்ளாமல், (கொலோசெயர் 2:18)
ka'nukka'laalum kattuga'laalum uthavipet’ru i'naikkappattu, theavava'larchchiyaay va'larnthea’rugi’ra sareeramuzhuvathaiyum aatharikki’ra thalaiyaip
pat’rikko'l'laamal, (koloaseyar
2:18)
மாயமான தாழ்மையிலும்,
தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும்
விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய்
நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய்
இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள்
பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை
வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (கொலோசெயர் 2:19)
maayamaana thaazhmaiyilum, theavathootharga'lukkuch seyyum aaraathanaiyilum viruppamut’ru, kaa'naathavaiga'lilea thu'nivaay
nuzhainthu, than maamsasinthaiyinaalea vee'naay
i’rumaappukko'ndirukki’ra evanum ungga'l panthayapporu'lai neengga'l izhanthupoagumpadi ungga'lai vagnchiyaathirukkappaarungga'l. (koloaseyar 2:19)
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின்
வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும்
உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, (கொலோசெயர்
2:20)
neengga'l ki’risthuvudaneakooda
ulagaththin vazhipaaduga'lukku mariththathu'ndaanaal, innum ulaga vazhakkaththinpadi pizhaikki’ravarga'lpoala, (koloaseyar 2:20)
மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து:
தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே
என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? (கொலோசெயர்
2:21)
manusharudaiya ka’rpanaiga'linpadiyum poathanaiga'linpadiyum nadanthu: thodaathea,
rusipaaraathea, thee'ndaathea
engi’ra
katta'laiga'lukku udpadugi’rathenna? (koloaseyar
2:21)
இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. (கொலோசெயர்
2:22)
ivaiyellaam anubavikki’rathinaal azhinthupoagumea. (koloaseyar 2:22)
இப்படிப்பட்ட போதனைகள்
சுய இஷ்டமான ஆராதனையையும்,
மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற
பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப்
பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது. (கொலோசெயர்
2:23)
ippadippatta poathanaiga'l suya ishdamaana aaraathanaiyaiyum, maayamaana
thaazhmaiyaiyum, sareera odukkaththaiyumpat’ri gnaanamengi’ra pearko'ndirunthaalum, ivaiga'l maamsaththaip pea'nugi’ratha’rkea ozhiya mat’ron’ri’rkum pirayoajanappadaathu. (koloaseyar
2:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!