Showing posts with label யோபு. Show all posts
Showing posts with label யோபு. Show all posts

Monday, September 12, 2016

Yoabu 42 | யோபு 42 | Job 42


அப்பொழுது  யோபு  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  (யோபு  42:1)

appozhuthu  yoabu  karththarukkup  pirathiyuththaramaaga:  (yoabu  42:1)

தேவரீர்  சகலத்தையும்  செய்ய  வல்லவர்;  நீர்  செய்ய  நினைத்தது  தடைபடாது  என்பதை  அறிந்திருக்கிறேன்.  (யோபு  42:2)

theavareer  sagalaththaiyum  seyya  vallavar;  neer  seyya  ninaiththathu  thadaipadaathu  enbathai  a’rinthirukki’rean.  (yoabu  42:2)

அறிவில்லாமல்  ஆலோசனையை  மறைக்கிற  இவன்  யார்?  ஆகையால்  நான்  எனக்குத்  தெரியாததையும்,  என்  புத்திக்கு  எட்டாததையும்,  நான்  அறியாததையும்  அலப்பினேன்  என்கிறேன்.  (யோபு  42:3)

a’rivillaamal  aaloasanaiyai  ma’raikki’ra  ivan  yaar?  aagaiyaal  naan  enakkuth  theriyaathathaiyum,  en  buththikku  ettaathathaiyum,  naan  a’riyaathathaiyum  alappinean  engi’rean.  (yoabu  42:3)

நீர்  எனக்குச்  செவிகொடும்,  அப்பொழுது  நான்  பேசுவேன்;  நான்  உம்மைக்  கேள்விகேட்பேன்,  நீர்  எனக்கு  உத்தரவு  சொல்லும்.  (யோபு  42:4)

neer  enakkuch  sevikodum,  appozhuthu  naan  peasuvean;  naan  ummaik  kea'lvikeadpean,  neer  enakku  uththaravu  sollum.  (yoabu  42:4)

என்  காதினால்  உம்மைக்குறித்துக்  கேள்விப்பட்டேன்;  இப்பொழுதோ  என்  கண்  உம்மைக்  காண்கிறது.  (யோபு  42:5)

en  kaathinaal  ummaikku’riththuk  kea'lvippattean;  ippozhuthoa  en  ka'n  ummaik  kaa'ngi’rathu.  (yoabu  42:5)

ஆகையால்  நான்  என்னை  அருவருத்து,  தூளிலும்  சாம்பலிலும்  இருந்து  மனஸ்தாபப்படுகிறேன்  என்றான்.  (யோபு  42:6)

aagaiyaal  naan  ennai  aruvaruththu,  thoo'lilum  saambalilum  irunthu  manasthaabappadugi’rean  en’raan.  (yoabu  42:6)

கர்த்தர்  இந்த  வார்த்தைகளை  யோபோடே  பேசினபின்,  கர்த்தர்  தேமானியனான  எலிப்பாசை  நோக்கி:  உன்மேலும்  உன்  இரண்டு  சிநேகிதர்மேலும்  எனக்குக்  கோபம்  மூளுகிறது;  என்  தாசனாகிய  யோபு  பேசினதுபோல்,  நீங்கள்  என்னைக்குறித்து  நிதானமாய்ப்  பேசவில்லை.  (யோபு  42:7)

karththar  intha  vaarththaiga'lai  yoaboadea  peasinapin,  karththar  theamaaniyanaana  elippaasai  noakki:  unmealum  un  ira'ndu  sineagitharmealum  enakkuk  koabam  moo'lugi’rathu;  en  thaasanaagiya  yoabu  peasinathupoal,  neengga'l  ennaikku’riththu  nithaanamaayp  peasavillai.  (yoabu  42:7)

ஆதலால்  நீங்கள்  ஏழு  காளைகளையும்,  ஏழு  ஆட்டுக்கடாக்களையும்  தெரிந்துகொண்டு,  என்  தாசனாகிய  யோபினிடத்தில்  போய்,  உங்களுக்காகச்  சர்வாங்க  தகனபலிகளை  இடுங்கள்;  என்  தாசனாகிய  யோபும்  உங்களுக்காக  வேண்டுதல்  செய்வான்;  நான்  அவன்  முகத்தைப்  பார்த்து,  உங்களை  உங்கள்  புத்தியீனத்துக்குத்  தக்கதாக  நடத்தாதிருப்பேன்;  என்  தாசனாகிய  யோபு  பேசினதுபோல்,  நீங்கள்  என்னைக்குறித்து  நிதானமாய்ப்  பேசவில்லை  என்றார்.  (யோபு  42:8)

aathalaal  neengga'l  eazhu  kaa'laiga'laiyum,  eazhu  aattukkadaakka'laiyum  therinthuko'ndu,  en  thaasanaagiya  yoabinidaththil  poay,  ungga'lukkaagach  sarvaangga  thaganabaliga'lai  idungga'l;  en  thaasanaagiya  yoabum  ungga'lukkaaga  vea'nduthal  seyvaan;  naan  avan  mugaththaip  paarththu,  ungga'lai  ungga'l  buththiyeenaththukkuth  thakkathaaga  nadaththaathiruppean;  en  thaasanaagiya  yoabu  peasinathupoal,  neengga'l  ennaikku’riththu  nithaanamaayp  peasavillai  en’raar.  (yoabu  42:8)

அப்பொழுது  தேமானியனான  எலிப்பாசும்  சூகியனான  பில்தாதும்  நாகமாத்தியனான  சோப்பாரும்  போய்,  கர்த்தர்  தங்களுக்குச்  சொன்னபடியே  செய்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்  யோபின்  முகத்தைப்  பார்த்தார்.  (யோபு  42:9)

appozhuthu  theamaaniyanaana  elippaasum  soogiyanaana  bilthaathum  naagamaaththiyanaana  soappaarum  poay,  karththar  thangga'lukkuch  sonnapadiyea  seythaarga'l;  appozhuthu  karththar  yoabin  mugaththaip  paarththaar.  (yoabu  42:9)

யோபு  தன்  சிநேகிதருக்காக  வேண்டுதல்  செய்தபோது,  கர்த்தர்  அவன்  சிறையிருப்பை  மாற்றினார்.  யோபுக்கு  முன்  இருந்த  எல்லாவற்றைப்பார்க்கிலும்  இரண்டத்தனையாய்க்  கர்த்தர்  அவனுக்குத்  தந்தருளினார்.  (யோபு  42:10)

yoabu  than  sineagitharukkaaga  vea'nduthal  seythapoathu,  karththar  avan  si’raiyiruppai  maat’rinaar.  yoabukku  mun  iruntha  ellaavat’raippaarkkilum  ira'ndaththanaiyaayk  karththar  avanukkuth  thantharu'linaar.  (yoabu  42:10)

அப்பொழுது  அவனுடைய  எல்லாச்  சகோதரரும்  சகோதரிகளும்,  முன்  அவனுக்கு  அறிமுகமான  அனைவரும்  அவனிடத்தில்  வந்து,  அவன்  வீட்டிலே  அவனோடே  போஜனம்பண்ணி,  கர்த்தர்  அவன்மேல்  வரப்பண்ணின  சகல  தீங்கினிமித்தம்  அவனுக்காக  அங்கலாய்த்து,  அவனுக்கு  ஆறுதல்  சொல்லி,  அவரவர்  ஒவ்வொரு  தங்கக்காசையும்,  அவரவர்  ஒவ்வொரு  பொன்  ஆபரணத்தையும்  அவனுக்குக்  கொடுத்தார்கள்.  (யோபு  42:11)

appozhuthu  avanudaiya  ellaach  sagoathararum  sagoathariga'lum,  mun  avanukku  a’rimugamaana  anaivarum  avanidaththil  vanthu,  avan  veettilea  avanoadea  poajanampa'n'ni,  karththar  avanmeal  varappa'n'nina  sagala  theengginimiththam  avanukkaaga  anggalaayththu,  avanukku  aa’ruthal  solli,  avaravar  ovvoru  thanggakkaasaiyum,  avaravar  ovvoru  pon  aabara'naththaiyum  avanukkuk  koduththaarga'l.  (yoabu  42:11)

கர்த்தர்  யோபின்  முன்னிலைமையைப்  பார்க்கிலும்  அவன்  பின்னிலைமையை  ஆசீர்வதித்தார்;  பதினாலாயிரம்  ஆடுகளும்,  ஆறாயிரம்  ஒட்டகங்களும்,  ஆயிரம்  ஏர்களும்,  ஆயிரம்  கழுதைகளும்  அவனுக்கு  உண்டாயின.  (யோபு  42:12)

karththar  yoabin  munnilaimaiyaip  paarkkilum  avan  pinnilaimaiyai  aaseervathiththaar;  pathinaalaayiram  aaduga'lum,  aa’raayiram  ottagangga'lum,  aayiram  earga'lum,  aayiram  kazhuthaiga'lum  avanukku  u'ndaayina.  (yoabu  42:12)

ஏழு  குமாரரும்,  மூன்று  குமாரத்திகளும்  அவனுக்குப்  பிறந்தார்கள்.  (யோபு  42:13)

eazhu  kumaararum,  moon’ru  kumaaraththiga'lum  avanukkup  pi’ranthaarga'l.  (yoabu  42:13)

மூத்த  மகளுக்கு  எமீமாள்  என்றும்,  இரண்டாம்  மகளுக்குக்  கெத்சீயாள்  என்றும்,  மூன்றாம்  மகளுக்குக்  கேரேனாப்புக்  என்றும்  பேரிட்டான்.  (யோபு  42:14)

mooththa  maga'lukku  emeemaa'l  en’rum,  ira'ndaam  maga'lukkuk  kethseeyaa'l  en’rum,  moon’raam  maga'lukkuk  keareanaappuk  en’rum  pearittaan.  (yoabu  42:14)

தேசத்தில்  எங்கும்  யோபின்  குமாரத்திகளைப்போல்  சௌந்தரியமான  பெண்கள்  காணப்படவில்லை;  அவர்கள்  தகப்பன்  அவர்கள்  சகோதரரின்  நடுவிலே  அவர்களுக்குச்  சுதந்தரம்  கொடுத்தான்.  (யோபு  42:15)

theasaththil  enggum  yoabin  kumaaraththiga'laippoal  saunthariyamaana  pe'nga'l  kaa'nappadavillai;  avarga'l  thagappan  avarga'l  sagoathararin  naduvilea  avarga'lukkuch  suthantharam  koduththaan.  (yoabu  42:15)

இதற்குப்பின்பு  யோபு  நூற்றுநாற்பது  வருஷம்  உயிரோடிருந்து,  நாலு  தலைமுறையாகத்  தன்  பிள்ளைகளையும்  தன்  பிள்ளைகளுடைய  பிள்ளைகளையும்  கண்டான்.  (யோபு  42:16)

itha’rkuppinbu  yoabu  noot’runaa’rpathu  varusham  uyiroadirunthu,  naalu  thalaimu’raiyaagath  than  pi'l'laiga'laiyum  than  pi'l'laiga'ludaiya  pi'l'laiga'laiyum  ka'ndaan.  (yoabu  42:16)

யோபு  நெடுநாளிருந்து,  பூரண  வயதுள்ளவனாய்  மரித்தான்.  (யோபு  42:17)

yoabu  nedunaa'lirunthu,  poora'na  vayathu'l'lavanaay  mariththaan.  (yoabu  42:17)


Yoabu 41 | யோபு 41 | Job 41

லிவியாதானை  தூண்டிலினால்  பிடிக்கக்கூடுமோ?  அதின்  நாக்கை  நீ  விடுகிற  கயிற்றினாலே  பிடிக்கக்கூடுமோ?  (யோபு  41:1)

liviyaathaanai  thoo'ndilinaal  pidikkakkoodumoa?  athin  naakkai  nee  vidugi’ra  kayit’rinaalea  pidikkakkoodumoa?  (yoabu  41:1)

அதின்  மூக்கை  நார்க்கயிறுபோட்டுக்  கட்டக்கூடுமோ?  குறட்டினால்  அதின்  தாடையை  உருவக்  குத்தக்கூடுமோ?  (யோபு  41:2)

athin  mookkai  naarkkayi’rupoattuk  kattakkoodumoa?  ku’rattinaal  athin  thaadaiyai  uruvak  kuththakkoodumoa?  (yoabu  41:2)

அது  உன்னைப்  பார்த்து  அநேக  விண்ணப்பஞ்  செய்யுமோ?  உன்னை  நோக்கி  இச்சகவார்த்தைகளைச்  சொல்லுமோ?  (யோபு  41:3)

athu  unnaip  paarththu  aneaga  vi'n'nappagn  seyyumoa?  unnai  noakki  ichchagavaarththaiga'laich  sollumoa?  (yoabu  41:3)

அது  உன்னோடே  உடன்படிக்கைபண்ணுமோ?  அதைச்  சதாகாலமும்  அடிமைகொள்வாயோ?  (யோபு  41:4)

athu  unnoadea  udanpadikkaipa'n'numoa?  athaich  sathaakaalamum  adimaiko'lvaayoa?  (yoabu  41:4)

ஒரு  குருவியோடே  விளையாடுகிறதுபோல்,  நீ  அதனோடே  விளையாடி,  அதை  நீ  உன்  பெண்மக்களண்டையிலே  கட்டிவைப்பாயோ?  (யோபு  41:5)

oru  kuruviyoadea  vi'laiyaadugi’rathupoal,  nee  athanoadea  vi'laiyaadi,  athai  nee  un  pe'nmakka'la'ndaiyilea  kattivaippaayoa?  (yoabu  41:5)

கூட்டாளிகள்  அதைப்  பிடிக்கப்  பிரயத்தனப்பட்டு,  அதை  வியாபாரிகளுக்குப்  பங்கிடுவார்களோ?  (யோபு  41:6)

koottaa'liga'l  athaip  pidikkap  pirayaththanappattu,  athai  viyaabaariga'lukkup  panggiduvaarga'loa?  (yoabu  41:6)

நீ  அதின்  தோலை  அநேக  அம்புகளினாலும்,  அதின்  தலையை  எறிவல்லையங்களினாலும்  எறிவாயோ?  (யோபு  41:7)

nee  athin  thoalai  aneaga  ambuga'linaalum,  athin  thalaiyai  e’rivallaiyangga'linaalum  e’rivaayoa?  (yoabu  41:7)

அதின்மேல்  உன்  கையைப்போடு,  யுத்தத்தை  நினைத்துக்கொள்;  இனி  அப்படிச்  செய்யத்  துணியமாட்டாய்.  (யோபு  41:8)

athinmeal  un  kaiyaippoadu,  yuththaththai  ninaiththukko'l;  ini  appadich  seyyath  thu'niyamaattaay.  (yoabu  41:8)

இதோ,  அதைப்  பிடிக்கலாம்  என்று  நம்பினவன்  மோசம்போய்,  அதைப்  பார்த்தவுடனே  விழுவான்  அல்லவோ?  (யோபு  41:9)

ithoa,  athaip  pidikkalaam  en’ru  nambinavan  moasampoay,  athaip  paarththavudanea  vizhuvaan  allavoa?  (yoabu  41:9)

அதை  எழுப்பத்தக்க  தைரியவான்  இல்லாதிருக்க,  எனக்கு  முன்பாக  நிற்பவன்  யார்?  (யோபு  41:10)

athai  ezhuppaththakka  thairiyavaan  illaathirukka,  enakku  munbaaga  ni’rpavan  yaar?  (yoabu  41:10)

தனக்குப்  பதில்கொடுக்கப்படும்படி,  முந்தி  எனக்குக்  கொடுத்தவன்  யார்?  வானத்தின்  கீழுள்ளவைகள்  எல்லாம்  என்னுடையவைகள்.  (யோபு  41:11)

thanakkup  bathilkodukkappadumpadi,  munthi  enakkuk  koduththavan  yaar?  vaanaththin  keezhu'l'lavaiga'l  ellaam  ennudaiyavaiga'l.  (yoabu  41:11)

அதின்  அங்கங்களும்,  அதின்  வீரியமும்,  அதின்  உடல்  இசைவின்  நேர்த்தியும்  இன்னதென்று  நான்  சொல்லாமல்  மறைக்கமாட்டேன்.  (யோபு  41:12)

athin  anggangga'lum,  athin  veeriyamum,  athin  udal  isaivin  nearththiyum  innathen’ru  naan  sollaamal  ma’raikkamaattean.  (yoabu  41:12)

அது  மூடியிருக்கிற  அதின்  போர்வையைக்  கிளப்பக்கூடியவன்  யார்?  அதின்  இரண்டு  தாடைகளின்  நடுவே  கடிவாளம்  போடத்தக்கவன்  யார்?  (யோபு  41:13)

athu  moodiyirukki’ra  athin  poarvaiyaik  ki'lappakkoodiyavan  yaar?  athin  ira'ndu  thaadaiga'lin  naduvea  kadivaa'lam  poadaththakkavan  yaar?  (yoabu  41:13)

அதின்  முகத்தின்  கதவைத்  திறக்கக்கூடியவன்  யார்?  சுற்றிலுமிருக்கிற  அதின்  பற்கள்  பயங்கரமானவைகள்.  (யோபு  41:14)

athin  mugaththin  kathavaith  thi’rakkakkoodiyavan  yaar?  sut’rilumirukki’ra  athin  pa’rka'l  bayanggaramaanavaiga'l.  (yoabu  41:14)

முத்திரைப்  பதிப்புப்போல  அழுத்தங்கொண்டு  அடர்த்தியாயிருக்கிற  அதின்  பரிசைகளின்  அரணிப்பு  மகா  சிறப்பாயிருக்கிறது.  (யோபு  41:15)

muththiraip  pathippuppoala  azhuththangko'ndu  adarththiyaayirukki’ra  athin  parisaiga'lin  ara'nippu  mahaa  si’rappaayirukki’rathu.  (yoabu  41:15)

அவைகள்  நடுவே  காற்றும்  புகமாட்டாத  நெருக்கமாய்  அவைகள்  ஒன்றோடொன்று  இணைக்கப்பட்டிருக்கிறது.  (யோபு  41:16)

avaiga'l  naduvea  kaat’rum  pugamaattaatha  nerukkamaay  avaiga'l  on’roadon’ru  i'naikkappattirukki’rathu.  (yoabu  41:16)

அவைகள்  ஒன்றோடொன்று  ஒட்டிக்கொண்டு  இணைபிரியாமல்  பிடித்துக்கொண்டிருக்கிறது.  (யோபு  41:17)

avaiga'l  on’roadon’ru  ottikko'ndu  i'naipiriyaamal  pidiththukko'ndirukki’rathu.  (yoabu  41:17)

அது  தும்முகையில்  ஒளி  வீசும்,  அதின்  கண்கள்  அருணோதயத்தின்  புருவங்களைப்போல்  இருக்கிறது.  (யோபு  41:18)

athu  thummugaiyil  o'li  veesum,  athin  ka'nga'l  aru'noathayaththin  puruvangga'laippoal  irukki’rathu.  (yoabu  41:18)

அதின்  வாயிலிருந்து  எரிகிற  பந்தங்கள்  புறப்பட்டு,  அக்கினிப்பொறிகள்  பறக்கும்.  (யோபு  41:19)

athin  vaayilirunthu  erigi’ra  panthangga'l  pu’rappattu,  akkinippo’riga'l  pa’rakkum.  (yoabu  41:19)

கொதிக்கிற  சட்டியிலும்  கொப்பரையிலும்  இருந்து  புறப்படுகிறதுபோல,  அதின்  நாசிகளிலிருந்து  புகை  புறப்படும்.  (யோபு  41:20)

kothikki’ra  sattiyilum  kopparaiyilum  irunthu  pu’rappadugi’rathupoala,  athin  naasiga'lilirunthu  pugai  pu’rappadum.  (yoabu  41:20)

அதின்  சுவாசம்  கரிகளைக்  கொளுத்தும்,  அதின்  வாயிலிருந்து  ஜுவாலை  புறப்படும்.  (யோபு  41:21)

athin  suvaasam  kariga'laik  ko'luththum,  athin  vaayilirunthu  juvaalai  pu’rappadum.  (yoabu  41:21)

அதின்  கழுத்திலே  பெலன்  குடிகொண்டிருக்கும்;  பயங்கரம்  அதற்குமுன்  கூத்தாடும்.  (யோபு  41:22)

athin  kazhuththilea  belan  kudiko'ndirukkum;  bayanggaram  atha’rkumun  kooththaadum.  (yoabu  41:22)

அதின்  உடற்கூறுகள்,  அசையாத  கெட்டியாய்  ஒன்றோடொன்று  ஒட்டிக்கொண்டிருக்கும்.  (யோபு  41:23)

athin  uda’rkoo’ruga'l,  asaiyaatha  kettiyaay  on’roadon’ru  ottikko'ndirukkum.  (yoabu  41:23)

அதின்  நெஞ்சு  கல்லைப்போலவும்,  ஏந்திரத்தின்  அடிக்கல்லைப்போலவும்  கெட்டியாயிருக்கும்.  (யோபு  41:24)

athin  negnchu  kallaippoalavum,  eanthiraththin  adikkallaippoalavum  kettiyaayirukkum.  (yoabu  41:24)

அது  எழும்பும்போது  பலசாலிகள்  அஞ்சி  பயத்தினால்  மயங்கித்  திகைப்பார்கள்.  (யோபு  41:25)

athu  ezhumbumpoathu  balasaaliga'l  agnchi  bayaththinaal  mayanggith  thigaippaarga'l.  (yoabu  41:25)

அதைத்  தாக்குகிறவனுடைய  பட்டயம்,  ஈட்டி,  வல்லையம்,  கவசம்,  ஒன்றும்  அதற்குமுன்  நிற்காது.  (யோபு  41:26)

athaith  thaakkugi’ravanudaiya  pattayam,  eetti,  vallaiyam,  kavasam,  on’rum  atha’rkumun  ni’rkaathu.  (yoabu  41:26)

அது  இரும்பை  வைக்கோலாகவும்,  வெண்கலத்தை  உளுத்த  மரமாகவும்  எண்ணும்.  (யோபு  41:27)

athu  irumbai  vaikkoalaagavum,  ve'ngalaththai  u'luththa  maramaagavum  e'n'num.  (yoabu  41:27)

அம்பு  அதைத்  துரத்தாது;  கவண்கற்கள்  அதற்குத்  துரும்பாகும்.  (யோபு  41:28)

ambu  athaith  thuraththaathu;  kava'nka’rka'l  atha’rkuth  thurumbaagum.  (yoabu  41:28)

அது  பெருந்தடிகளைத்  தாளடிகளாக  எண்ணி,  ஈட்டியின்  அசைவை  இகழும்.  (யோபு  41:29)

athu  perunthadiga'laith  thaa'ladiga'laaga  e'n'ni,  eettiyin  asaivai  igazhum.  (yoabu  41:29)

அதின்  கீழாகக்  கூர்மையான  கற்கள்  கிடந்தாலும்,  அது  சேற்றின்மேல்  ஓடுகிறதுபோலக்  கருக்கான  அவைகளின்மேலும்  ஓடும்.  (யோபு  41:30)

athin  keezhaagak  koormaiyaana  ka’rka'l  kidanthaalum,  athu  seat’rinmeal  oadugi’rathupoalak  karukkaana  avaiga'linmealum  oadum.  (yoabu  41:30)

அது  ஆழத்தை  உலைப்பானையைப்போல்  பொங்கப்பண்ணி,  கடலைத்  தைலம்போலக்  கலக்கிவிடும்.  (யோபு  41:31)

athu  aazhaththai  ulaippaanaiyaippoal  ponggappa'n'ni,  kadalaith  thailampoalak  kalakkividum.  (yoabu  41:31)

அது  தனக்குப்  பின்னாகப்  பாதையைத்  துலங்கப்பண்ணும்;  ஆழமானது  வெளுப்பான  நரையைப்போல்  விளங்கும்.  (யோபு  41:32)

athu  thanakkup  pinnaagap  paathaiyaith  thulanggappa'n'num;  aazhamaanathu  ve'luppaana  naraiyaippoal  vi'langgum.  (yoabu  41:32)

பூமியின்மேல்  அதற்கு  ஒப்பானது  ஒன்றுமில்லை;  அது  நிர்ப்பயமாயிருக்க  உண்டுபண்ணப்பட்டது.  (யோபு  41:33)

boomiyinmeal  atha’rku  oppaanathu  on’rumillai;  athu  nirpbayamaayirukka  u'ndupa'n'nappattathu.  (yoabu  41:33)

அது  மேட்டிமையானதையெல்லாம்  அற்பமாய்  எண்ணுகிறது;  அது  அகங்காரமுள்ள  ஜீவன்களுக்கெல்லாம்  ராஜாவாயிருக்கிறது  என்றார்.  (யோபு  41:34)

athu  meattimaiyaanathaiyellaam  a’rpamaay  e'n'nugi’rathu;  athu  aganggaaramu'l'la  jeevanga'lukkellaam  raajaavaayirukki’rathu  en’raar.  (yoabu  41:34)