Showing posts with label 2 saamuveal. Show all posts
Showing posts with label 2 saamuveal. Show all posts

Monday, August 29, 2016

2 Saamuveal 24 | 2 சாமுவேல் 24 | 2 Samuel 24

கர்த்தருடைய  கோபம்  திரும்ப  இஸ்ரவேலின்மேல்  மூண்டது.  இஸ்ரவேல்  யூதா  என்பவர்களை  இலக்கம்  பார்  என்று  அவர்களுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறதற்கு  தாவீது  ஏவப்பட்டான்.  (2சாமுவேல்  24:1)

karththarudaiya  koabam  thirumba  isravealinmeal  moo'ndathu.  israveal  yoothaa  enbavarga'lai  ilakkam  paar  en’ru  avarga'lukku  viroathamaaych  sollugi’ratha’rku  thaaveethu  eavappattaan.  (2saamuveal  24:1)

அப்படியே  ராஜா  தன்னோடிருக்கிற  சேனாபதியாகிய  யோவாபைப்  பார்த்து:  ஜனங்களின்  இலக்கத்தை  நான்  அறியும்படிக்கு  நீ  தாண்முதல்  பெயெர்செபாமட்டுமுள்ள  இஸ்ரவேலரின்  கோத்திரமெங்கும்  சுற்றித்திரிந்து  ஜனங்களைத்  தொகையிடுங்கள்  என்றான்.  (2சாமுவேல்  24:2)

appadiyea  raajaa  thannoadirukki’ra  seanaabathiyaagiya  yoavaabaip  paarththu:  janangga'lin  ilakkaththai  naan  a’riyumpadikku  nee  thaa'nmuthal  beyersebaamattumu'l'la  isravealarin  koaththiramenggum  sut’riththirinthu  janangga'laith  thogaiyidungga'l  en’raan.  (2saamuveal  24:2)

அப்பொழுது  யோவாப்  ராஜாவைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  கண்கள்  காணும்படி  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஜனங்களை  இப்பொழுது  இருக்கிறதைப்பார்க்கிலும்,  நூறுமடங்கு  அதிகமாய்  வர்த்திக்கப்பண்ணுவாராக;  ஆனாலும்  என்  ஆண்டவனாகிய  ராஜா  இந்தக்  காரியத்தை  விரும்புகிறது  என்ன  என்றான்.  (2சாமுவேல்  24:3)

appozhuthu  yoavaab  raajaavaip  paarththu:  raajaavaagiya  en  aa'ndavanudaiya  ka'nga'l  kaa'numpadi  ummudaiya  theavanaagiya  karththar  janangga'lai  ippozhuthu  irukki’rathaippaarkkilum,  noo’rumadanggu  athigamaay  varththikkappa'n'nuvaaraaga;  aanaalum  en  aa'ndavanaagiya  raajaa  inthak  kaariyaththai  virumbugi’rathu  enna  en’raan.  (2saamuveal  24:3)

ஆகிலும்  யோவாபும்  இராணுவத்தலைவரும்  சொன்ன  வார்த்தை  செல்லாதபடிக்கு,  ராஜாவின்  வார்த்தை  பலத்தது;  அப்படியே  இஸ்ரவேல்  ஜனங்களைத்  தொகையிட,  யோவாபும்  இராணுவத்தலைவரும்  ராஜாவைவிட்டுப்  புறப்பட்டுப்போய்,  (2சாமுவேல்  24:4)

aagilum  yoavaabum  iraa'nuvaththalaivarum  sonna  vaarththai  sellaathapadikku,  raajaavin  vaarththai  balaththathu;  appadiyea  israveal  janangga'laith  thogaiyida,  yoavaabum  iraa'nuvaththalaivarum  raajaavaivittup  pu’rappattuppoay,  (2saamuveal  24:4)

யோர்தானைக்  கடந்து,  காத்  என்னும்  ஆறுகளின்  நடுவே  இருக்கிற  பட்டணத்திற்கு  வலதுபுறமான  ஆரோவேரிலும்  யாசேரிடத்திலும்  பாளயமிறங்கி,  (2சாமுவேல்  24:5)

yoarthaanaik  kadanthu,  kaath  ennum  aa’ruga'lin  naduvea  irukki’ra  patta'naththi’rku  valathupu’ramaana  aaroavearilum  yaasearidaththilum  paa'layami’ranggi,  (2saamuveal  24:5)

அங்கேயிருந்து  கீலேயாத்திற்கும்  தாதீம்ஒத்சிக்கும்  போய்,  அங்கேயிருந்து  தாண்யானுக்கும்,  சீதோனின்  சுற்றுப்புறங்களுக்கும்  போய்,  (2சாமுவேல்  24:6)

anggeayirunthu  keeleayaaththi’rkum  thaatheemothsikkum  poay,  anggeayirunthu  thaa'nyaanukkum,  seethoanin  sut’ruppu’rangga'lukkum  poay,  (2saamuveal  24:6)

பிற்பாடு  தீரு  என்னும்  கோட்டைக்கும்  ஏவியர்  கானானியருடைய  சகல  பட்டணங்களுக்கும்  போய்,  அங்கேயிருந்து  யூதாவின்  தென்புறமான  பெயெர்செபாவுக்குப்  போய்,  (2சாமுவேல்  24:7)

pi’rpaadu  theeru  ennum  koattaikkum  eaviyar  kaanaaniyarudaiya  sagala  patta'nangga'lukkum  poay,  anggeayirunthu  yoothaavin  thenpu’ramaana  beyersebaavukkup  poay,  (2saamuveal  24:7)

இப்படித்  தேசமெங்கும்  சுற்றித்திரிந்து,  ஒன்பது  மாதமும்  இருபது  நாளும்  ஆனபிற்பாடு  எருசலேமுக்கு  வந்தார்கள்.  (2சாமுவேல்  24:8)

ippadith  theasamenggum  sut’riththirinthu,  onbathu  maathamum  irubathu  naa'lum  aanapi’rpaadu  erusaleamukku  vanthaarga'l.  (2saamuveal  24:8)

யோவாப்  ஜனத்தை  இலக்கம்பார்த்த  தொகையை  ராஜாவுக்குக்  கொடுத்தான்;  இஸ்ரவேலிலே  பட்டயம்  உருவத்தக்க  யுத்த  சேவகர்  எட்டுலட்சம்பேர்  இருந்தார்கள்;  யூதா  மனுஷர்  ஐந்து  லட்சம்  பேர்  இருந்தார்கள்.  (2சாமுவேல்  24:9)

yoavaab  janaththai  ilakkampaarththa  thogaiyai  raajaavukkuk  koduththaan;  isravealilea  pattayam  uruvaththakka  yuththa  seavagar  ettuladchampear  irunthaarga'l;  yoothaa  manushar  ainthu  ladcham  pear  irunthaarga'l.  (2saamuveal  24:9)

இவ்விதமாய்  ஜனங்களை  எண்ணின  பின்பு,  ராஜாவின்  இருதயம்  அவனை  வாதித்தது;  அப்பொழுது  தாவீது  கர்த்தரை  நோக்கி:  நான்  இப்படிச்  செய்ததினாலே  பெரிய  பாவஞ்செய்தேன்;  இப்போதும்  ஆண்டவரே,  உமது  அடியானின்  அக்கிரமத்தை  நீக்கிவிடும்;  நான்  மகா  புத்தியீனமாய்ச்  செய்தேன்  என்றான்.  (2சாமுவேல்  24:10)

ivvithamaay  janangga'lai  e'n'nina  pinbu,  raajaavin  iruthayam  avanai  vaathiththathu;  appozhuthu  thaaveethu  karththarai  noakki:  naan  ippadich  seythathinaalea  periya  paavagnseythean;  ippoathum  aa'ndavarea,  umathu  adiyaanin  akkiramaththai  neekkividum;  naan  mahaa  buththiyeenamaaych  seythean  en’raan.  (2saamuveal  24:10)

தாவீது  காலமே  எழுந்திருந்தபோது,  தாவீதின்  ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத்  என்னும்  தீர்க்கதரிசிக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகிச்  சொன்னது:  (2சாமுவேல்  24:11)

thaaveethu  kaalamea  ezhunthirunthapoathu,  thaaveethin  gnaanathirushdikkaaranaagiya  kaath  ennum  theerkkatharisikkuk  karththarudaiya  vaarththai  u'ndaagich  sonnathu:  (2saamuveal  24:11)

நீ  தாவீதினிடத்தில்  போய்,  மூன்று  காரியங்களை  உனக்கு  முன்பாக  வைக்கிறேன்;  அவைகளில்  ஒரு  காரியத்தைத்  தெரிந்துகொள்,  அதை  நான்  உனக்குச்  செய்வேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (2சாமுவேல்  24:12)

nee  thaaveethinidaththil  poay,  moon’ru  kaariyangga'lai  unakku  munbaaga  vaikki’rean;  avaiga'lil  oru  kaariyaththaith  therinthuko'l,  athai  naan  unakkuch  seyvean  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (2saamuveal  24:12)

அப்படியே  காத்  தாவீதினிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  உம்முடைய  தேசத்திலே  ஏழு  வருஷம்  பஞ்சம்  வரவேண்டுமோ?  அல்லது  மூன்றுமாதம்  உம்முடைய  சத்துருக்கள்  உம்மைப்  பின்தொடர,  நீர்  அவர்களுக்கு  முன்பாக  ஓடிப்போகவேண்டுமோ?  அல்லது  உம்முடைய  தேசத்திலே  மூன்றுநாள்  கொள்ளைநோய்  உண்டாகவேண்டுமோ?  இப்போதும்  என்னை  அனுப்பினவருக்கு  நான்  என்ன  மறுஉத்தரவு  கொண்டுபோகவேண்டும்  என்பதை  நீர்  யோசித்துப்பாரும்  என்று  சொன்னான்.  (2சாமுவேல்  24:13)

appadiyea  kaath  thaaveethinidaththil  vanthu,  avanai  noakki:  ummudaiya  theasaththilea  eazhu  varusham  pagncham  varavea'ndumoa?  allathu  moon’rumaatham  ummudaiya  saththurukka'l  ummaip  pinthodara,  neer  avarga'lukku  munbaaga  oadippoagavea'ndumoa?  allathu  ummudaiya  theasaththilea  moon’runaa'l  ko'l'lainoay  u'ndaagavea'ndumoa?  ippoathum  ennai  anuppinavarukku  naan  enna  ma’ruuththaravu  ko'ndupoagavea'ndum  enbathai  neer  yoasiththuppaarum  en’ru  sonnaan.  (2saamuveal  24:13)

அப்பொழுது  தாவீது  காத்தை  நோக்கி:  கொடிய  இடுக்கணில்  அகப்பட்டிருக்கிறேன்;  இப்போது  நாம்  கர்த்தருடைய  கையிலே  விழுவோமாக;  அவருடைய  இரக்கங்கள்  மகா  பெரியது;  மனுஷர்  கையிலே  விழாதிருப்பேனாக  என்றான்.  (2சாமுவேல்  24:14)

appozhuthu  thaaveethu  kaaththai  noakki:  kodiya  idukka'nil  agappattirukki’rean;  ippoathu  naam  karththarudaiya  kaiyilea  vizhuvoamaaga;  avarudaiya  irakkangga'l  mahaa  periyathu;  manushar  kaiyilea  vizhaathiruppeanaaga  en’raan.  (2saamuveal  24:14)

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலிலே  அன்று  காலமே  தொடங்கிக்  குறித்தகாலம்வரைக்கும்  கொள்ளைநோயை  வரப்பண்ணினார்;  அதினால்  தாண்முதல்  பெயெர்செபாமட்டுமுள்ள  ஜனங்களில்  எழுபதினாயிரம்பேர்  செத்துப்போனார்கள்.  (2சாமுவேல்  24:15)

appozhuthu  karththar  isravealilea  an’ru  kaalamea  thodanggik  ku’riththakaalamvaraikkum  ko'l'lainoayai  varappa'n'ninaar;  athinaal  thaa'nmuthal  beyersebaamattumu'l'la  janangga'lil  ezhubathinaayirampear  seththuppoanaarga'l.  (2saamuveal  24:15)

தேவதூதன்  எருசலேமை  அழிக்கத்  தன்  கையை  அதின்மேல்  நீட்டினபோது,  கர்த்தர்  அந்தத்  தீங்குக்கு  மனஸ்தாபப்பட்டு,  ஜனங்களைச்  சங்கரிக்கிற  தூதனை  நோக்கி:  போதும்,  இப்போது  உன்  கையை  நிறுத்து  என்றார்;  அந்த  வேளையில்  கர்த்தருடைய  தூதன்  எபூசியனாகிய  அர்வனாவின்  போரடிக்கிற  களத்திற்கு  நேரே  இருந்தான்.  (2சாமுவேல்  24:16)

theavathoothan  erusaleamai  azhikkath  than  kaiyai  athinmeal  neettinapoathu,  karththar  anthath  theenggukku  manasthaabappattu,  janangga'laich  sanggarikki’ra  thoothanai  noakki:  poathum,  ippoathu  un  kaiyai  ni’ruththu  en’raar;  antha  vea'laiyil  karththarudaiya  thoothan  eboosiyanaagiya  arvanaavin  poaradikki’ra  ka'laththi’rku  nearea  irunthaan.  (2saamuveal  24:16)

ஜனத்தை  உபாதிக்கிற  தூதனை  தாவீது  கண்டபோது,  அவன்  கர்த்தரை  நோக்கி:  இதோ,  நான்தான்  பாவஞ்செய்தேன்;  நான்தான்  அக்கிரமம்பண்ணினேன்;  இந்த  ஆடுகள்  என்ன  செய்தது?  உம்முடைய  கை  எனக்கும்  என்  தகப்பன்  வீட்டுக்கும்  விரோதமாயிருப்பதாக  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  (2சாமுவேல்  24:17)

janaththai  ubaathikki’ra  thoothanai  thaaveethu  ka'ndapoathu,  avan  karththarai  noakki:  ithoa,  naanthaan  paavagnseythean;  naanthaan  akkiramampa'n'ninean;  intha  aaduga'l  enna  seythathu?  ummudaiya  kai  enakkum  en  thagappan  veettukkum  viroathamaayiruppathaaga  en’ru  vi'n'nappampa'n'ninaan.  (2saamuveal  24:17)

அன்றையதினம்  காத்  என்பவன்  தாவீதினிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  போய்,  எபூசியனாகிய  அர்வனாவின்  களத்திலே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கும்  என்றான்.  (2சாமுவேல்  24:18)

an’raiyathinam  kaath  enbavan  thaaveethinidaththil  vanthu,  avanai  noakki:  neer  poay,  eboosiyanaagiya  arvanaavin  ka'laththilea  karththarukku  oru  balipeedaththai  u'ndaakkum  en’raan.  (2saamuveal  24:18)

காத்துடைய  வார்த்தையின்படியே  தாவீது  கர்த்தர்  கற்பித்த  பிரகாரமாகப்  போனான்.  (2சாமுவேல்  24:19)

kaaththudaiya  vaarththaiyinpadiyea  thaaveethu  karththar  ka’rpiththa  piragaaramaagap  poanaan.  (2saamuveal  24:19)

அர்வனா  ஏறிட்டுப்பார்த்து:  ராஜாவும்  அவனுடைய  ஊழியக்காரரும்  தன்னிடத்தில்  வருகிறதைக்கண்டு,  அர்வனா  எதிர்கொண்டுபோய்த்  தரைமட்டும்  குனிந்து  ராஜாவை  வணங்கி,  (2சாமுவேல்  24:20)

arvanaa  ea’rittuppaarththu:  raajaavum  avanudaiya  oozhiyakkaararum  thannidaththil  varugi’rathaikka'ndu,  arvanaa  ethirko'ndupoayth  tharaimattum  kuninthu  raajaavai  va'nanggi,  (2saamuveal  24:20)

ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தமது  அடியானிடத்தில்  வருகிற  காரியம்  என்ன  என்று  கேட்டதற்கு,  தாவீது:  வாதை  ஜனத்தைவிட்டு  நிறுத்தப்படக்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டும்படிக்கு  இந்தக்  களத்தை  உன்  கையிலே  கொள்ள  வந்தேன்  என்றான்.  (2சாமுவேல்  24:21)

raajaavaagiya  en  aa'ndavan  thamathu  adiyaanidaththil  varugi’ra  kaariyam  enna  en’ru  keattatha’rku,  thaaveethu:  vaathai  janaththaivittu  ni’ruththappadak  karththarukku  oru  balipeedaththaik  kattumpadikku  inthak  ka'laththai  un  kaiyilea  ko'l'la  vanthean  en’raan.  (2saamuveal  24:21)

அர்வனா  தாவீதைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  இதை  வாங்கிக்கொண்டு,  தம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  பலியிடுவாராக;  இதோ,  தகனபலிக்கு  மாடுகளும்  விறகுக்குப்  போரடிக்கிற  உருளைகளும்  மாடுகளின்  நுகத்தடிகளும்  இங்கே  இருக்கிறது  என்று  சொல்லி,  (2சாமுவேல்  24:22)

arvanaa  thaaveethaip  paarththu:  raajaavaagiya  en  aa'ndavan  ithai  vaanggikko'ndu,  thammudaiya  paarvaikku  nalamaanapadi  baliyiduvaaraaga;  ithoa,  thaganabalikku  maaduga'lum  vi’ragukkup  poaradikki’ra  uru'laiga'lum  maaduga'lin  nugaththadiga'lum  inggea  irukki’rathu  en’ru  solli,  (2saamuveal  24:22)

அர்வனா  ராஜயோக்கியமாய்  அவை  எல்லாவற்றையும்  ராஜாவுக்குக்  கொடுத்தபின்பு,  அர்வனா  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உம்மிடத்தில்  கிருபையாயிருப்பாராக  என்றான்.  (2சாமுவேல்  24:23)

arvanaa  raajayoakkiyamaay  avai  ellaavat’raiyum  raajaavukkuk  koduththapinbu,  arvanaa  raajaavai  noakki:  ummudaiya  theavanaagiya  karththar  ummidaththil  kirubaiyaayiruppaaraaga  en’raan.  (2saamuveal  24:23)

ராஜா  அர்வனாவைப்  பார்த்து:  அப்படியல்ல;  நான்  இலவசமாய்  வாங்கி,  என்  தேவனாகிய  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தாமல்,  அதை  உன்  கையிலே  விலைக்கிரயமாய்  வாங்குவேன்  என்று  சொல்லி,  தாவீது  அந்தக்  களத்தையும்  மாடுகளையும்  ஐம்பது  சேக்கல்  நிறை  வெள்ளிக்குக்  கொண்டான்.  (2சாமுவேல்  24:24)

raajaa  arvanaavaip  paarththu:  appadiyalla;  naan  ilavasamaay  vaanggi,  en  theavanaagiya  karththarukkuch  sarvaangga  thaganabaliga'laich  seluththaamal,  athai  un  kaiyilea  vilaikkirayamaay  vaangguvean  en’ru  solli,  thaaveethu  anthak  ka'laththaiyum  maaduga'laiyum  aimbathu  seakkal  ni’rai  ve'l'likkuk  ko'ndaan.  (2saamuveal  24:24)

அங்கே  தாவீது  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தினான்;  அப்பொழுது  கர்த்தர்  தேசத்துக்காகச்  செய்யப்பட்ட  வேண்டுதலைக்  கேட்டருளினார்;  இஸ்ரவேலின்மேலிருந்த  அந்த  வாதை  நிறுத்தப்பட்டது.  (2சாமுவேல்  24:25)

anggea  thaaveethu  karththarukku  oru  balipeedaththaik  katti,  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  seluththinaan;  appozhuthu  karththar  theasaththukkaagach  seyyappatta  vea'nduthalaik  keattaru'linaar;  isravealinmealiruntha  antha  vaathai  ni’ruththappattathu.  (2saamuveal  24:25)


2 Saamuveal 23 | 2 சாமுவேல் 23 | 2 Samuel 23

தாவீதுடைய  கடைசி  வார்த்தைகள்:  மேன்மையாய்  உயர்த்தப்பட்டு,  யாக்கோபுடைய  தேவனால்  அபிஷேகம்  பெற்று,  இஸ்ரவேலின்  சங்கீதங்களை  இன்பமாய்ப்  பாடின  ஈசாயின்  குமாரனாகிய  தாவீது  என்னும்  புருஷன்  சொல்லுகிறது  என்னவென்றால்;  (2சாமுவேல்  23:1)

thaaveethudaiya  kadaisi  vaarththaiga'l:  meanmaiyaay  uyarththappattu,  yaakkoabudaiya  theavanaal  abisheagam  pet’ru,  isravealin  sanggeethangga'lai  inbamaayp  paadina  eesaayin  kumaaranaagiya  thaaveethu  ennum  purushan  sollugi’rathu  ennaven’raal;  (2saamuveal  23:1)

கர்த்தருடைய  ஆவியானவர்  என்னைக்கொண்டு  பேசினார்;  அவருடைய  வசனம்  என்னுடைய  நாவில்  இருந்தது.  (2சாமுவேல்  23:2)

karththarudaiya  aaviyaanavar  ennaikko'ndu  peasinaar;  avarudaiya  vasanam  ennudaiya  naavil  irunthathu.  (2saamuveal  23:2)

இஸ்ரவேலின்  தேவனும்  இஸ்ரவேலின்  கன்மலையுமானவர்  எனக்குச்  சொல்லி  உரைத்ததாவது:  நீதிபரராய்  மனுஷரை  ஆண்டு,  தெய்வபயமாய்த்  துரைத்தனம்பண்ணுகிறவர்  இருப்பார்.  (2சாமுவேல்  23:3)

isravealin  theavanum  isravealin  kanmalaiyumaanavar  enakkuch  solli  uraiththathaavathu:  neethipararaay  manusharai  aa'ndu,  theyvabayamaayth  thuraiththanampa'n'nugi’ravar  iruppaar.  (2saamuveal  23:3)

அவர்  காலையில்  மந்தாரமில்லாமல்  உதித்து,  மழைக்குப்பிற்பாடு  தன்  காந்தியினால்  புல்லைப்  பூமியிலிருந்து  முளைக்கப்பண்ணுகிற  சூரியனுடைய  விடியற்கால  வெளிச்சத்தைப்போல  இருப்பார்  என்றார்.  (2சாமுவேல்  23:4)

avar  kaalaiyil  manthaaramillaamal  uthiththu,  mazhaikkuppi’rpaadu  than  kaanthiyinaal  pullaip  boomiyilirunthu  mu'laikkappa'n'nugi’ra  sooriyanudaiya  vidiya’rkaala  ve'lichchaththaippoala  iruppaar  en’raar.  (2saamuveal  23:4)

என்னுடைய  வீடு  தேவனிடத்தில்  இப்படியிராதோ?  சகலமும்  திட்டம்பண்ணப்பட்டிருக்கிற  நிச்சயமான  நித்திய  உடன்படிக்கையை  என்னுடன்  அவர்  செய்திருக்கிறார்;  ஆதலால்  என்னுடைய  எல்லா  ரட்சிப்பும்  எல்லா  வாஞ்சையும்  வளர்ந்தோங்கச்  செய்யாரோ?  (2சாமுவேல்  23:5)

ennudaiya  veedu  theavanidaththil  ippadiyiraathoa?  sagalamum  thittampa'n'nappattirukki’ra  nichchayamaana  niththiya  udanpadikkaiyai  ennudan  avar  seythirukki’raar;  aathalaal  ennudaiya  ellaa  radchippum  ellaa  vaagnchaiyum  va'larnthoanggach  seyyaaroa?  (2saamuveal  23:5)

பேலியாளின்  மக்கள்  அனைவருமோ,  கையினால்  பிடிக்கப்படக்கூடாததாய்  எறிந்துபோடப்படவேண்டிய  முள்ளுக்குச்  சமானமானவர்கள்.  (2சாமுவேல்  23:6)

bealiyaa'lin  makka'l  anaivarumoa,  kaiyinaal  pidikkappadakkoodaathathaay  e’rinthupoadappadavea'ndiya  mu'l'lukkuch  samaanamaanavarga'l.  (2saamuveal  23:6)

அவைகளை  ஒருவன்  தொடப்போனால்,  இருப்பாயுதத்தையும்  ஈட்டித்தாங்கையும்  கெட்டியாய்ப்  பிடித்துக்கொள்ளவேண்டும்;  அவைகள்  இருக்கிற  இடத்தில்தானே  அக்கினியினால்  முற்றும்  சுட்டெரிக்கப்படும்  என்றான்.  (2சாமுவேல்  23:7)

avaiga'lai  oruvan  thodappoanaal,  iruppaayuthaththaiyum  eettiththaanggaiyum  kettiyaayp  pidiththukko'l'lavea'ndum;  avaiga'l  irukki’ra  idaththilthaanea  akkiniyinaal  mut’rum  sutterikkappadum  en’raan.  (2saamuveal  23:7)

தாவீதுக்கு  இருந்த  பராக்கிரமசாலிகளின்  நாமங்களாவன:  தக்கெமோனியின்  குமாரனாகிய  யோசேப்பாசெபெத்  என்பவன்  சேர்வைக்காரரின்  தலைவன்;  இவன்  எண்ணூறுபேர்களின்மேல்  விழுந்து,  அவர்களை  ஒருமிக்க  வெட்டிப்போட்ட  அதீனோஏஸ்னி  ஊரானானவன்.  (2சாமுவேல்  23:8)

thaaveethukku  iruntha  baraakkiramasaaliga'lin  naamangga'laavana:  thakkemoaniyin  kumaaranaagiya  yoaseabbaasebeth  enbavan  searvaikkaararin  thalaivan;  ivan  e'n'noo’rupearga'linmeal  vizhunthu,  avarga'lai  orumikka  vettippoatta  atheenoaeasni  ooraanaanavan.  (2saamuveal  23:8)

இவனுக்கு  இரண்டாவது,  அகோயின்  குமாரனாகிய  தோதோவின்  மகன்  எலெயாசார்  என்பவன்;  இவன்  பெலிஸ்தர்  யுத்தத்திற்குக்  கூடின  ஸ்தலத்திலே  இஸ்ரவேல்  மனுஷர்  போகையில்,  தாவீதோடே  இருந்து,  பெலிஸ்தரை  நிந்தித்த  மூன்று  பராக்கிரமசாலிகளில்  ஒருவனாயிருந்தான்.  (2சாமுவேல்  23:9)

ivanukku  ira'ndaavathu,  agoayin  kumaaranaagiya  thoathoavin  magan  eleyaasaar  enbavan;  ivan  pelisthar  yuththaththi’rkuk  koodina  sthalaththilea  israveal  manushar  poagaiyil,  thaaveethoadea  irunthu,  pelistharai  ninthiththa  moon’ru  baraakkiramasaaliga'lil  oruvanaayirunthaan.  (2saamuveal  23:9)

இவன்  எழும்பித்  தன்  கைசலித்து,  தன்  கை  பட்டயத்தோடு  ஒட்டிக்கொள்ளுமட்டும்  பெலிஸ்தரை  வெட்டினான்;  அன்றையதினம்  கர்த்தர்  பெரிய  ரட்சிப்பை  நடப்பித்தார்;  ஜனங்கள்  கொள்ளையிடமாத்திரம்  அவனைப்  பின்சென்றார்கள்.  (2சாமுவேல்  23:10)

ivan  ezhumbith  than  kaisaliththu,  than  kai  pattayaththoadu  ottikko'l'lumattum  pelistharai  vettinaan;  an’raiyathinam  karththar  periya  radchippai  nadappiththaar;  janangga'l  ko'l'laiyidamaaththiram  avanaip  pinsen’raarga'l.  (2saamuveal  23:10)

இவனுக்கு  மூன்றாவது,  ஆகேயின்  குமாரனாகிய  சம்மா  என்னும்  ஆராரியன்;  சிறுபயறு  நிறைந்த  வயலிருந்த  இடத்திலே  பெலிஸ்தர்  ஏராளமாய்க்  கூடி,  ஜனங்கள்  பெலிஸ்தரைக்  கண்டு  ஓடுகிறபோது,  (2சாமுவேல்  23:11)

ivanukku  moon’raavathu,  aakeayin  kumaaranaagiya  sammaa  ennum  aaraariyan;  si’rupaya’ru  ni’raintha  vayaliruntha  idaththilea  pelisthar  earaa'lamaayk  koodi,  janangga'l  pelistharaik  ka'ndu  oadugi’rapoathu,  (2saamuveal  23:11)

இவன்  அந்த  நிலத்தின்  நடுவிலே  நின்று  அதைக்  காப்பாற்றி,  பெலிஸ்தரை  மடங்கடித்துப்போட்டான்;  அதனால்  கர்த்தர்  பெரிய  ரட்சிப்பை  நடப்பித்தார்.  (2சாமுவேல்  23:12)

ivan  antha  nilaththin  naduvilea  nin’ru  athaik  kaappaat’ri,  pelistharai  madanggadiththuppoattaan;  athanaal  karththar  periya  radchippai  nadappiththaar.  (2saamuveal  23:12)

முப்பது  தலைவருக்குள்ளே  இந்த  மூன்றுபேரும்  அறுப்புநாளிலே  அதுல்லாம்  கெபியிலே  தாவீதிடத்தில்  போயிருந்தார்கள்;  பெலிஸ்தரின்  தண்டு  ரெப்பாயீம்  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கினபோது,  (2சாமுவேல்  23:13)

muppathu  thalaivarukku'l'lea  intha  moon’rupearum  a’ruppunaa'lilea  athullaam  kebiyilea  thaaveethidaththil  poayirunthaarga'l;  pelistharin  tha'ndu  reppaayeem  pa'l'laththaakkilea  paa'layami’rangginapoathu,  (2saamuveal  23:13)

தாவீது  அரணான  ஒரு  இடத்தில்  இருந்தான்;  அப்பொழுது  பெலிஸ்தரின்  தாணையம்  பெத்லெகேமிலே  இருந்தது.  (2சாமுவேல்  23:14)

thaaveethu  ara'naana  oru  idaththil  irunthaan;  appozhuthu  pelistharin  thaa'naiyam  bethleheamilea  irunthathu.  (2saamuveal  23:14)

தாவீது  பெத்லெகேமின்  ஒலிமுகவாசலில்  இருக்கிற  கிணற்றின்  தண்ணீரின்மேல்  ஆவல்கொண்டு:  என்  தாகத்திற்குக்  கொஞ்சந்  தண்ணீர்  கொண்டுவருகிறவன்  யார்  என்றான்.  (2சாமுவேல்  23:15)

thaaveethu  bethleheamin  olimugavaasalil  irukki’ra  ki'nat’rin  tha'n'neerinmeal  aavalko'ndu:  en  thaagaththi’rkuk  kognchan  tha'n'neer  ko'nduvarugi’ravan  yaar  en’raan.  (2saamuveal  23:15)

அப்பொழுது  இந்த  மூன்று  பராக்கிரமசாலிகளும்  பெலிஸ்தரின்  பாளயத்திலே  துணிந்து  புகுந்துபோய்,  பெத்லெகேமின்  ஒலிமுகவாசலில்  இருக்கிற  கிணற்றிலே  தண்ணீர்  மொண்டு,  தாவீதினிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  ஆனாலும்  அவன்  அதைக்  குடிக்க  மனதில்லாமல்  அதைக்  கர்த்தருக்கென்று  ஊற்றிப்போட்டு:  (2சாமுவேல்  23:16)

appozhuthu  intha  moon’ru  baraakkiramasaaliga'lum  pelistharin  paa'layaththilea  thu'ninthu  pugunthupoay,  bethleheamin  olimugavaasalil  irukki’ra  ki'nat’rilea  tha'n'neer  mo'ndu,  thaaveethinidaththil  ko'nduvanthaarga'l;  aanaalum  avan  athaik  kudikka  manathillaamal  athaik  karththarukken’ru  oot’rippoattu:  (2saamuveal  23:16)

கர்த்தாவே,  தங்கள்  பிராணனை  எண்ணாமல்  போய்வந்த  அந்த  மனுஷரின்  இரத்தத்தைக்  குடிக்கும்  இந்தச்செயல்  எனக்குத்  தூரமாயிருப்பதாக  என்று  சொல்லி,  அதைக்  குடிக்க  மனதில்லாதிருந்தான்;  இப்படி  இந்த  மூன்று  பராக்கிரமசாலிகளும்  செய்தார்கள்.  (2சாமுவேல்  23:17)

karththaavea,  thangga'l  piraa'nanai  e'n'naamal  poayvantha  antha  manusharin  iraththaththaik  kudikkum  inthachseyal  enakkuth  thooramaayiruppathaaga  en’ru  solli,  athaik  kudikka  manathillaathirunthaan;  ippadi  intha  moon’ru  baraakkiramasaaliga'lum  seythaarga'l.  (2saamuveal  23:17)

யோவாபின்  சகோதரனும்  செருயாவின்  குமாரனுமான  அபிசாய்  என்பவன்,  அந்த  மூன்றுபேரில்  பிரதானமானவன்;  அவன்  தன்  ஈட்டியை  ஓங்கி  முந்நூறுபேரை  மடங்கடித்ததினால்,  இந்த  மூன்றுபேர்களில்  பேர்பெற்றவனானான்.  (2சாமுவேல்  23:18)

yoavaabin  sagoatharanum  seruyaavin  kumaaranumaana  abisaay  enbavan,  antha  moon’rupearil  pirathaanamaanavan;  avan  than  eettiyai  oanggi  munnoo’rupearai  madanggadiththathinaal,  intha  moon’rupearga'lil  pearpet’ravanaanaan.  (2saamuveal  23:18)

இந்த  மூன்றுபேர்களில்  அவன்  மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ,  அவர்களில்  தலைவனானான்;  ஆனாலும்  அந்த  முந்தின  மூன்று  பேருக்கு  அவன்  சமமானவன்  அல்ல.  (2சாமுவேல்  23:19)

intha  moon’rupearga'lil  avan  meanmaiyu'l'lavanaayirunthathinaalallavoa,  avarga'lil  thalaivanaanaan;  aanaalum  antha  munthina  moon’ru  pearukku  avan  samamaanavan  alla.  (2saamuveal  23:19)

பராக்கிரமசாலியாகிய  யோய்தாவின்  குமாரனும்  கப்செயேல்  ஊரானுமாகிய  பெனாயாவும்  செய்கைகளில்  வல்லவனாயிருந்தான்;  அவன்  மோவாப்  தேசத்தின்  இரண்டு  வலுமையான  சிங்கங்களைக்  கொன்றதுமல்லாமல்,  உறைந்த  மழைகாலத்தில்  அவன்  இறங்கிப்போய்,  ஒரு  கெபிக்குள்  இருந்த  ஒரு  சிங்கத்தையும்  கொன்றுபோட்டான்.  (2சாமுவேல்  23:20)

baraakkiramasaaliyaagiya  yoaythaavin  kumaaranum  kabseyeal  ooraanumaagiya  benaayaavum  seygaiga'lil  vallavanaayirunthaan;  avan  moavaab  theasaththin  ira'ndu  valumaiyaana  singgangga'laik  kon’rathumallaamal,  u’raintha  mazhaikaalaththil  avan  i’ranggippoay,  oru  kebikku'l  iruntha  oru  singgaththaiyum  kon’rupoattaan.  (2saamuveal  23:20)

அவன்  பயங்கர  ரூபமான  ஒரு  எகிப்தியனையும்  கொன்றுபோட்டான்;  அந்த  எகிப்தியன்  கையில்  ஒரு  ஈட்டியிருக்கையில்,  இவன்  ஒரு  தடியைப்  பிடித்து,  அவனிடத்தில்  போய்,  அந்த  எகிப்தியன்  கையிலிருந்த  ஈட்டியைப்  பறித்து,  அவன்  ஈட்டியினாலே  அவனைக்  கொன்றுபோட்டான்.  (2சாமுவேல்  23:21)

avan  bayanggara  roobamaana  oru  egipthiyanaiyum  kon’rupoattaan;  antha  egipthiyan  kaiyil  oru  eettiyirukkaiyil,  ivan  oru  thadiyaip  pidiththu,  avanidaththil  poay,  antha  egipthiyan  kaiyiliruntha  eettiyaip  pa’riththu,  avan  eettiyinaalea  avanaik  kon’rupoattaan.  (2saamuveal  23:21)

இவைகளை  யோய்தாவின்  குமாரனாகிய  பெனாயா  செய்தபடியினால்,  மூன்று  பராக்கிரமசாலிகளுக்குள்ளே  பேர்பெற்றவனாயிருந்தான்.  (2சாமுவேல்  23:22)

ivaiga'lai  yoaythaavin  kumaaranaagiya  benaayaa  seythapadiyinaal,  moon’ru  baraakkiramasaaliga'lukku'l'lea  pearpet’ravanaayirunthaan.  (2saamuveal  23:22)

முப்பதுபேரிலும்  இவன்  மேன்மையுள்ளவன்;  ஆனாலும்  அந்த  முந்தின  மூன்று  பேருக்கும்  இவன்  சமானமானவன்  அல்ல;  இவனைத்  தாவீது  தன்  மெய்க்காவலருக்குத்  தலைவனாக  வைத்தான்.  (2சாமுவேல்  23:23)

muppathupearilum  ivan  meanmaiyu'l'lavan;  aanaalum  antha  munthina  moon’ru  pearukkum  ivan  samaanamaanavan  alla;  ivanaith  thaaveethu  than  meykkaavalarukkuth  thalaivanaaga  vaiththaan.  (2saamuveal  23:23)

யோவாபின்  தம்பி  ஆசகேல்  மற்ற  முப்பதுபேரில்  ஒருவன்;  அவர்கள்  யாரெனில்,  பெத்லெகேம்  ஊரானாகிய  தோதோவின்  குமாரன்  எல்க்கானான்,  (2சாமுவேல்  23:24)

yoavaabin  thambi  aasakeal  mat’ra  muppathupearil  oruvan;  avarga'l  yaarenil,  bethleheam  ooraanaagiya  thoathoavin  kumaaran  elkkaanaan,  (2saamuveal  23:24)

ஆரோதியனாகிய  சம்மா,  ஆரோதியனாகிய  எலிக்கா,  (2சாமுவேல்  23:25)

aaroathiyanaagiya  sammaa,  aaroathiyanaagiya  elikkaa,  (2saamuveal  23:25)

பல்தியனாகிய  ஏலெஸ்,  இக்கேசின்  குமாரனாகிய  ஈரா  என்னும்  தெக்கோவியன்.  (2சாமுவேல்  23:26)

palthiyanaagiya  eales,  ikkeasin  kumaaranaagiya  eeraa  ennum  thekkoaviyan.  (2saamuveal  23:26)

ஆனதோத்தியனாகிய  அபியேசர்,  ஊசாத்தியனாகிய  மெபுன்னாயி,  (2சாமுவேல்  23:27)

aanathoaththiyanaagiya  abiyeasar,  oosaaththiyanaagiya  mebunnaayi,  (2saamuveal  23:27)

அகோகியனாகிய  சல்மோன்,  நெத்தோபாத்தியனாகிய  மகராயி,  (2சாமுவேல்  23:28)

agoagiyanaagiya  salmoan,  neththoapaaththiyanaagiya  magaraayi,  (2saamuveal  23:28)

பானாவின்  குமாரனாகிய  ஏலேப்  என்னும்  நெத்தோபாத்தியன்,  பென்யமீன்  புத்திரரின்  கிபியா  ஊரானாகிய  ரிபாயின்  குமாரன்  இத்தாயி,  (2சாமுவேல்  23:29)

baanaavin  kumaaranaagiya  ealeab  ennum  neththoapaaththiyan,  benyameen  puththirarin  kibiyaa  ooraanaagiya  ribaayin  kumaaran  iththaayi,  (2saamuveal  23:29)

பிரத்தோனியனாகிய  பெனாயா,  காகாஸ்  நீரோடைகளின்  தேசத்தானாகிய  ஈத்தாயி,  (2சாமுவேல்  23:30)

piraththoaniyanaagiya  benaayaa,  kaagaas  neeroadaiga'lin  theasaththaanaagiya  eeththaayi,  (2saamuveal  23:30)

அர்பாத்தியனாகிய  அபிஅல்பொன்,  பருமியனாகிய  அஸ்மாவேத்,  (2சாமுவேல்  23:31)

arbaaththiyanaagiya  abialbon,  barumiyanaagiya  asmaaveath,  (2saamuveal  23:31)

சால்போனியனாகிய  எலியூபா,  யாசேனின்  குமாரரில்  யோனத்தான்  என்பவன்.  (2சாமுவேல்  23:32)

saalboaniyanaagiya  eliyoobaa,  yaaseanin  kumaararil  yoanaththaan  enbavan.  (2saamuveal  23:32)

ஆராரியனாகிய  சம்மா,  சாராரின்  குமாரனாகிய  அகியாம்  என்னும்  ஆராரியன்,  (2சாமுவேல்  23:33)

aaraariyanaagiya  sammaa,  saaraarin  kumaaranaagiya  agiyaam  ennum  aaraariyan,  (2saamuveal  23:33)

மாகாத்தியனின்  குமாரனாகிய  அகஸ்பாயிம்  மகன்  எலிப்பெலேத்,  கீலோனியனாகிய  அகித்தோப்பேலின்  குமாரன்  எலியாம்  என்பவன்.  (2சாமுவேல்  23:34)

maakaaththiyanin  kumaaranaagiya  agasbaayim  magan  elippeleath,  keeloaniyanaagiya  agiththoappealin  kumaaran  eliyaam  enbavan.  (2saamuveal  23:34)

கர்மேலியனாகிய  எஸ்ராயி,  அர்பியனாகிய  பாராயி,  (2சாமுவேல்  23:35)

karmealiyanaagiya  esraayi,  arbiyanaagiya  paaraayi,  (2saamuveal  23:35)

சோபா  ஊரானாகிய  நாத்தானின்  குமாரன்  ஈகால்,  காதியனாகிய  பானி,  (2சாமுவேல்  23:36)

soabaa  ooraanaagiya  naaththaanin  kumaaran  eekaal,  kaathiyanaagiya  baani,  (2saamuveal  23:36)

அம்மோனியனாகிய  சேலேக்,  செருயாவின்  குமாரனாகிய  யோவாபின்  ஆயுததாரியான  பெரோத்தியனாகிய  நகராய்,  (2சாமுவேல்  23:37)

ammoaniyanaagiya  sealeak,  seruyaavin  kumaaranaagiya  yoavaabin  aayuthathaariyaana  beroaththiyanaagiya  nagaraay,  (2saamuveal  23:37)

இத்ரியனாகிய  ஈரா,  இத்ரியனாகிய  காரேப்,  (2சாமுவேல்  23:38)

ithriyanaagiya  eeraa,  ithriyanaagiya  kaareab,  (2saamuveal  23:38)

ஏத்தியனாகிய  உரியா  என்பவர்களே;  ஆக  முப்பத்தேழுபேர்.  (2சாமுவேல்  23:39)

eaththiyanaagiya  uriyaa  enbavarga'lea;  aaga  muppaththeazhupear.  (2saamuveal  23:39)