Showing posts with label Zefanya. Show all posts
Showing posts with label Zefanya. Show all posts

Tuesday, July 12, 2016

Seppaniyaa 3 | செப்பனியா 3 | Zephaniah 3

இடுக்கண்  செய்து,  ஊத்தையும்  அழுக்குமாயிருக்கிற  நகரத்துக்கு  ஐயோ!  (செப்பனியா  3:1)

idukka'n  seythu,  ooththaiyum  azhukkumaayirukki’ra  nagaraththukku  aiyoa!  (seppaniyaa  3:1)

அது  சத்தத்துக்குச்  செவிகொடுக்கவில்லை;  அது  கடிந்துகொள்ளுதலை  ஏற்றுக்கொள்ளவில்லை;  அது  கர்த்தரை  நம்பவில்லை;  அது  தன்  தேவனிடத்தில்  சேரவில்லை.  (செப்பனியா  3:2)

athu  saththaththukkuch  sevikodukkavillai;  athu  kadinthuko'l'luthalai  eat’rukko'l'lavillai;  athu  karththarai  nambavillai;  athu  than  theavanidaththil  searavillai.  (seppaniyaa  3:2)

அதற்குள்ளே  இருக்கிற  அதின்  அதிபதிகள்  கெர்ச்சிக்கிற  சிங்கங்கள்;  அதின்  நியாயாதிபதிகள்  சாயங்காலத்தில்  புறப்படுகிறதும்  விடியற்காலமட்டும்  ஒரு  எலும்பையும்  மீதியாக  வைக்காததுமான  ஓநாய்கள்.  (செப்பனியா  3:3)

atha’rku'l'lea  irukki’ra  athin  athibathiga'l  kerchchikki’ra  singgangga'l;  athin  niyaayaathibathiga'l  saayanggaalaththil  pu’rappadugi’rathum  vidiya’rkaalamattum  oru  elumbaiyum  meethiyaaga  vaikkaathathumaana  oanaayga'l.  (seppaniyaa  3:3)

அதின்  தீர்க்கதரிசிகள்  வீண்பெருமையும்  வஞ்சகமுமுள்ளவர்கள்;  அதின்  ஆசாரியர்கள்  பரிசுத்த  ஸ்தலத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  வேதத்துக்கு  அநியாயஞ்செய்தார்கள்.  (செப்பனியா  3:4)

athin  theerkkatharisiga'l  vee'nperumaiyum  vagnchagamumu'l'lavarga'l;  athin  aasaariyarga'l  parisuththa  sthalaththaip  parisuththakkulaichchalaakki,  veathaththukku  aniyaayagnseythaarga'l.  (seppaniyaa  3:4)

அதற்குள்  இருக்கிற  கர்த்தர்  நீதியுள்ளவர்;  அவர்  அநியாயஞ்செய்வதில்லை;  அவர்  குறைவில்லாமல்  காலைதோறும்  தம்முடைய  நியாயத்தை  விளங்கப்பண்ணுகிறார்;  அநியாயக்காரனோ  வெட்கம்  அறியான்.  (செப்பனியா  3:5)

atha’rku'l  irukki’ra  karththar  neethiyu'l'lavar;  avar  aniyaayagnseyvathillai;  avar  ku’raivillaamal  kaalaithoa’rum  thammudaiya  niyaayaththai  vi'langgappa'n'nugi’raar;  aniyaayakkaaranoa  vedkam  a’riyaan.  (seppaniyaa  3:5)

ஜாதிகளைச்  சங்கரித்தேன்;  அவர்கள்  துருகங்கள்  பாழாயின;  அவர்களுடைய  வீதிகளை  ஒருவரும்  கடந்துபோகாதபடிக்குப்  பாழாக்கினேன்;  அவர்களுடைய  பட்டணங்கள்  மனுஷர்  இல்லாதபடிக்கும்  குடியில்லாதபடிக்கும்  அவாந்தரையாயின.  (செப்பனியா  3:6)

jaathiga'laich  sanggariththean;  avarga'l  thurugangga'l  paazhaayina;  avarga'ludaiya  veethiga'lai  oruvarum  kadanthupoagaathapadikkup  paazhaakkinean;  avarga'ludaiya  patta'nangga'l  manushar  illaathapadikkum  kudiyillaathapadikkum  avaantharaiyaayina.  (seppaniyaa  3:6)

உன்  வாசஸ்தலம்  நிர்மூலமாகாதபடிக்கு  நீ  எனக்குப்  பயந்து,  கடிந்துகொள்ளுதலை  ஏற்றுக்கொள்  என்றேன்;  நான்  அவர்களை  எப்படித்  தண்டித்தாலும்,  அவர்கள்  அதிகாலையில்  எழுந்து  தங்கள்  கிரியைகளையெல்லாம்  கேடாக்கினார்கள்.  (செப்பனியா  3:7)

un  vaasasthalam  nirmoolamaagaathapadikku  nee  enakkup  bayanthu,  kadinthuko'l'luthalai  eat’rukko'l  en’rean;  naan  avarga'lai  eppadith  tha'ndiththaalum,  avarga'l  athikaalaiyil  ezhunthu  thangga'l  kiriyaiga'laiyellaam  keadaakkinaarga'l.  (seppaniyaa  3:7)

ஆகையால்  நான்  கொள்ளையாட  எழும்பும்  நாள்மட்டும்  எனக்குக்  காத்திருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  என்  சினமாகிய  உக்கிர  கோபத்தையெல்லாம்  அவர்கள்மேல்  சொரியும்படி  ஜாதிகளைச்  சேர்க்கவும்,  ராஜ்யங்களைக்  கூட்டவும்  நான்  தீர்மானம்பண்ணினேன்;  பூமியெல்லாம்  என்  எரிச்சலின்  அக்கினியினால்  அழியும்.  (செப்பனியா  3:8)

aagaiyaal  naan  ko'l'laiyaada  ezhumbum  naa'lmattum  enakkuk  kaaththirungga'l  en’ru  karththar  sollugi’raar;  en  sinamaagiya  ukkira  koabaththaiyellaam  avarga'lmeal  soriyumpadi  jaathiga'laich  searkkavum,  raajyangga'laik  koottavum  naan  theermaanampa'n'ninean;  boomiyellaam  en  erichchalin  akkiniyinaal  azhiyum.  (seppaniyaa  3:8)

அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டு,  ஒருமனப்பட்டு  அவருக்கு  ஆராதனை  செய்யும்படிக்கு,  நான்  அவர்கள்  பாஷையைச்  சுத்தமான  பாஷையாக  மாறப்பண்ணுவேன்.  (செப்பனியா  3:9)

appozhuthu  janangga'lellaarum  karththarudaiya  naamaththaith  thozhuthuko'ndu,  orumanappattu  avarukku  aaraathanai  seyyumpadikku,  naan  avarga'l  baashaiyaich  suththamaana  baashaiyaaga  maa’rappa'n'nuvean.  (seppaniyaa  3:9)

எத்தியோப்பியாவின்  நதிகளுக்கு  அக்கரையிலிருந்து  என்னிடத்தில்  விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய  சிதறடிக்கப்பட்டவர்களின்  குமாரத்தியானவள்  எனக்குக்  காணிக்கை  கொண்டுவருவாள்.  (செப்பனியா  3:10)

eththiyoappiyaavin  nathiga'lukku  akkaraiyilirunthu  ennidaththil  vi'n'nappampa'n'nugi’ravarga'laagiya  sitha’radikkappattavarga'lin  kumaaraththiyaanava'l  enakkuk  kaa'nikkai  ko'nduvaruvaa'l.  (seppaniyaa  3:10)

எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணி,  நீ  செய்த  உன்  எல்லாக்  கிரியைகளினிமித்தமும்  அந்நாளிலே  வெட்கப்படாதிருப்பாய்;  அப்பொழுது  நான்  உன்  பெருமையைக்குறித்துக்  களிகூர்ந்தவர்களை  உன்  நடுவிலிருந்து  விலக்கிவிடுவேன்;  நீ  இனி  என்  பரிசுத்த  பர்வதத்தில்  அகங்காரங்கொள்ளமாட்டாய்.  (செப்பனியா  3:11)

enakku  viroathamaayth  thuroagampa'n'ni,  nee  seytha  un  ellaak  kiriyaiga'linimiththamum  annaa'lilea  vedkappadaathiruppaay;  appozhuthu  naan  un  perumaiyaikku’riththuk  ka'likoornthavarga'lai  un  naduvilirunthu  vilakkividuvean;  nee  ini  en  parisuththa  parvathaththil  aganggaarangko'l'lamaattaay.  (seppaniyaa  3:11)

உன்  நடுவில்  சிறுமையும்  எளிமையுமான  ஜனத்தை  மீதியாக  வைப்பேன்;  அவர்கள்  கர்த்தருடைய  நாமத்தின்மேல்  நம்பிக்கையாயிருப்பார்கள்.  (செப்பனியா  3:12)

un  naduvil  si’rumaiyum  e'limaiyumaana  janaththai  meethiyaaga  vaippean;  avarga'l  karththarudaiya  naamaththinmeal  nambikkaiyaayiruppaarga'l.  (seppaniyaa  3:12)

இஸ்ரவேலில்  மீதியானவர்கள்  அநியாயஞ்செய்வதில்லை;  அவர்கள்  பொய்  பேசுவதுமில்லை;  வஞ்சகநாவு  அவர்கள்  வாயில்  கண்டுபிடிக்கப்படுவதுமில்லை;  அவர்கள்  தங்களைப்  பயப்படுத்துவாரில்லாமல்  புசித்துப்  படுத்துக்கொள்வார்கள்.  (செப்பனியா  3:13)

isravealil  meethiyaanavarga'l  aniyaayagnseyvathillai;  avarga'l  poy  peasuvathumillai;  vagnchaganaavu  avarga'l  vaayil  ka'ndupidikkappaduvathumillai;  avarga'l  thangga'laip  bayappaduththuvaarillaamal  pusiththup  paduththukko'lvaarga'l.  (seppaniyaa  3:13)

சீயோன்  குமாரத்தியே,  கெம்பீரித்துப்பாடு;  இஸ்ரவேலரே,  ஆர்ப்பரியுங்கள்;  எருசலேம்  குமாரத்தியே,  நீ  முழு  இருதயத்தோடும்  மகிழ்ந்து  களிகூரு.  (செப்பனியா  3:14)

seeyoan  kumaaraththiyea,  kembeeriththuppaadu;  isravealarea,  aarppariyungga'l;  erusaleam  kumaaraththiyea,  nee  muzhu  iruthayaththoadum  magizhnthu  ka'likooru.  (seppaniyaa  3:14)

கர்த்தர்  உன்  ஆக்கினைகளை  அகற்றி,  உன்  சத்துருக்களை  விலக்கினார்;  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  கர்த்தர்  உன்  நடுவிலே  இருக்கிறார்;  இனித்  தீங்கைக்  காணாதிருப்பாய்.  (செப்பனியா  3:15)

karththar  un  aakkinaiga'lai  agat’ri,  un  saththurukka'lai  vilakkinaar;  isravealin  raajaavaagiya  karththar  un  naduvilea  irukki’raar;  inith  theenggaik  kaa'naathiruppaay.  (seppaniyaa  3:15)

அந்நாளிலே  எருசலேமைப்  பார்த்து,  பயப்படாதே  என்றும்,  சீயோனைப்  பார்த்து,  உன்  கைகளைத்  தளரவிடாதே  என்றும்  சொல்லப்படும்.  (செப்பனியா  3:16)

annaa'lilea  erusaleamaip  paarththu,  bayappadaathea  en’rum,  seeyoanaip  paarththu,  un  kaiga'laith  tha'laravidaathea  en’rum  sollappadum.  (seppaniyaa  3:16)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்  நடுவில்  இருக்கிறார்;  அவர்  வல்லமையுள்ளவர்,  அவர்  இரட்சிப்பார்;  அவர்  உன்பேரில்  சந்தோஷமாய்  மகிழ்ந்து,  தம்முடைய  அன்பினிமித்தம்  அமர்ந்திருப்பார்;  அவர்  உன்பேரில்  கெம்பீரமாய்க்  களிகூருவார்.  (செப்பனியா  3:17)

un  theavanaagiya  karththar  un  naduvil  irukki’raar;  avar  vallamaiyu'l'lavar,  avar  iradchippaar;  avar  unpearil  santhoashamaay  magizhnthu,  thammudaiya  anbinimiththam  amarnthiruppaar;  avar  unpearil  kembeeramaayk  ka'likooruvaar.  (seppaniyaa  3:17)

உன்  சபையின்  மனுஷராயிருந்து,  பண்டிகை  ஆசரிப்பில்லாமையால்  உண்டான  நிந்தையினிமித்தம்  சஞ்சலப்பட்டவர்களை  நான்  ஏகமாய்க்  கூட்டிக்கொள்ளுவேன்.  (செப்பனியா  3:18)

un  sabaiyin  manusharaayirunthu,  pa'ndigai  aasarippillaamaiyaal  u'ndaana  ninthaiyinimiththam  sagnchalappattavarga'lai  naan  eagamaayk  koottikko'l'luvean.  (seppaniyaa  3:18)

இதோ,  அக்காலத்திலே  உன்னைச்  சிறுமைப்படுத்தின  யாவரையும்  தண்டிப்பேன்;  நொண்டியானவனை  இரட்சித்து,  தள்ளுண்டவனைச்  சேர்த்துக்கொள்ளுவேன்;  அவர்கள்  வெட்கம்  அநுபவித்த  சகல  தேசங்களிலும்  அவர்களுக்குப்  புகழ்ச்சியும்  கீர்த்தியும்  உண்டாகச்  செய்வேன்.  (செப்பனியா  3:19)

ithoa,  akkaalaththilea  unnaich  si’rumaippaduththina  yaavaraiyum  tha'ndippean;  no'ndiyaanavanai  iradchiththu,  tha'l'lu'ndavanaich  searththukko'l'luvean;  avarga'l  vedkam  anubaviththa  sagala  theasangga'lilum  avarga'lukkup  pugazhchchiyum  keerththiyum  u'ndaagach  seyvean.  (seppaniyaa  3:19)

அக்காலத்திலே  உங்களைக்  கூட்டிக்கொண்டுவருவேன்;  அக்காலத்திலே  உங்களைச்  சேர்த்துக்கொள்ளுவேன்;  உங்கள்  கண்காண  நான்  உங்கள்  சிறையிருப்பைத்  திருப்பும்போது,  பூமியிலுள்ள  சகல  ஜனங்களுக்குள்ளும்  நான்  உங்களைக்  கீர்த்தியும்  புகழ்ச்சியுமாக  வைப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (செப்பனியா  3:20)

akkaalaththilea  ungga'laik  koottikko'nduvaruvean;  akkaalaththilea  ungga'laich  searththukko'l'luvean;  ungga'l  ka'nkaa'na  naan  ungga'l  si’raiyiruppaith  thiruppumpoathu,  boomiyilu'l'la  sagala  janangga'lukku'l'lum  naan  ungga'laik  keerththiyum  pugazhchchiyumaaga  vaippean  en’ru  karththar  sollugi’raar.  (seppaniyaa  3:20)


Seppaniyaa 2 | செப்பனியா 2 | Zephaniah 2

விரும்பப்படாத  ஜாதியே,  கட்டளை  பிறக்குமுன்னும்,  பதரைப்போல  நாள்  பறந்துபோகுமுன்னும்  கர்த்தருடைய  உக்கிரகோபம்  உங்கள்மேல்  இறங்குமுன்னும்,  கர்த்தருடைய  கோபத்தின்  நாள்  உங்கள்மேல்  வருமுன்னும்,  (செப்பனியா  2:1)

virumbappadaatha  jaathiyea,  katta'lai  pi’rakkumunnum,  patharaippoala  naa'l  pa’ranthupoagumunnum  karththarudaiya  ukkirakoabam  ungga'lmeal  i’ranggumunnum,  karththarudaiya  koabaththin  naa'l  ungga'lmeal  varumunnum,  (seppaniyaa  2:1)

நீங்கள்  உங்களை  உய்த்து  ஆராய்ந்து  சோதியுங்கள்.  (செப்பனியா  2:2)

neengga'l  ungga'lai  uyththu  aaraaynthu  soathiyungga'l.  (seppaniyaa  2:2)

தேசத்திலுள்ள  எல்லாச்  சிறுமையானவர்களே,  கர்த்தருடைய  நியாயத்தை  நடப்பிக்கிறவர்களே,  அவரைத்  தேடுங்கள்;  நீதியைத்  தேடுங்கள்,  மனத்தாழ்மையைத்  தேடுங்கள்;  அப்பொழுது  ஒருவேளை  கர்த்தருடைய  கோபத்தின்நாளிலே  மறைக்கப்படுவீர்கள்.  (செப்பனியா  2:3)

theasaththilu'l'la  ellaach  si’rumaiyaanavarga'lea,  karththarudaiya  niyaayaththai  nadappikki’ravarga'lea,  avaraith  theadungga'l;  neethiyaith  theadungga'l,  manaththaazhmaiyaith  theadungga'l;  appozhuthu  oruvea'lai  karththarudaiya  koabaththinnaa'lilea  ma’raikkappaduveerga'l.  (seppaniyaa  2:3)

காத்சா  குடியற்று,  அஸ்கலோன்  பாழாகும்;  அஸ்தோத்தைப்  பட்டப்பகலிலே  பறக்கடிப்பார்கள்;  எக்ரோன்  வேரோடே  பிடுங்கப்படும்.  (செப்பனியா  2:4)

kaathsaa  kudiyat’ru,  askaloan  paazhaagum;  asthoaththaip  pattappagalilea  pa’rakkadippaarga'l;  ekroan  vearoadea  pidunggappadum.  (seppaniyaa  2:4)

சமுத்திரக்கரை  குடிகளாகிய  கிரேத்தியருக்கு  ஐயோ!  பெலிஸ்தரின்  தேசமாகிய  கானானே,  கர்த்தருடைய  வார்த்தை  உனக்கு  விரோதமாயிருக்கிறது;  இனி  உன்னில்  குடியில்லாதபடிக்கு  உன்னை  அழிப்பேன்.  (செப்பனியா  2:5)

samuththirakkarai  kudiga'laagiya  kireaththiyarukku  aiyoa!  pelistharin  theasamaagiya  kaanaanea,  karththarudaiya  vaarththai  unakku  viroathamaayirukki’rathu;  ini  unnil  kudiyillaathapadikku  unnai  azhippean.  (seppaniyaa  2:5)

சமுத்திரக்கரை  தேசம்  மேய்ப்பர்  தங்கும்  குடில்களும்  ஆட்டுத்தோழங்களுமாகும்.  (செப்பனியா  2:6)

samuththirakkarai  theasam  meayppar  thanggum  kudilga'lum  aattuththoazhangga'lumaagum.  (seppaniyaa  2:6)

அந்தத்  தேசம்  யூதா  வம்சத்தாரில்  மீதியானவர்களின்  வசமாகும்;  அவர்கள்  அவ்விடங்களில்  மந்தை  மேய்ப்பார்கள்;  அஸ்கலோனின்  வீடுகளிலே  சாயங்காலத்திலே  படுத்துக்கொள்வார்கள்;  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  விசாரித்து,  அவர்கள்  சிறையிருப்பைத்  திருப்புவார்.  (செப்பனியா  2:7)

anthath  theasam  yoothaa  vamsaththaaril  meethiyaanavarga'lin  vasamaagum;  avarga'l  avvidangga'lil  manthai  meayppaarga'l;  askaloanin  veeduga'lilea  saayanggaalaththilea  paduththukko'lvaarga'l;  avarga'ludaiya  theavanaagiya  karththar  avarga'lai  visaariththu,  avarga'l  si’raiyiruppaith  thiruppuvaar.  (seppaniyaa  2:7)

மோவாப்  செய்த  நிந்தனையையும்,  அம்மோன்  புத்திரர்  என்  ஜனத்தை  நிந்தித்து,  அவர்கள்  எல்லையைக்  கடந்து  பெருமைபாராட்டிச்  சொன்ன  தூஷணங்களையும்  கேட்டேன்.  (செப்பனியா  2:8)

moavaab  seytha  ninthanaiyaiyum,  ammoan  puththirar  en  janaththai  ninthiththu,  avarga'l  ellaiyaik  kadanthu  perumaipaaraattich  sonna  thoosha'nangga'laiyum  keattean.  (seppaniyaa  2:8)

ஆகையால்  மோவாப்  சோதோமைப்போலும்,  அம்மோன்  புத்திரரின்  தேசம்  கொமோராவைப்போலுமாகி,  காஞ்சொறி  படரும்  இடமும்,  உப்புப்பள்ளமும்,  நித்திய  பாழுமாயிருக்கும்;  என்  ஜனத்தில்  மீந்தவர்கள்  அவர்களைக்  கொள்ளையிட்டு,  என்  ஜாதியில்  மீதியானவர்கள்  அவர்களைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்  என்பதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்.  (செப்பனியா  2:9)

aagaiyaal  moavaab  soathoamaippoalum,  ammoan  puththirarin  theasam  komoaraavaippoalumaagi,  kaagncho’ri  padarum  idamum,  uppuppa'l'lamum,  niththiya  paazhumaayirukkum;  en  janaththil  meenthavarga'l  avarga'laik  ko'l'laiyittu,  en  jaathiyil  meethiyaanavarga'l  avarga'laich  suthanthariththukko'lvaarga'l  enbathai  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  uraikki’raar.  (seppaniyaa  2:9)

அவர்கள்  சேனைகளுடைய  கர்த்தரின்  ஜனத்துக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டி  அவர்களை  நிந்தித்தபடியினால்,  இது  அவர்கள்  அகங்காரத்துக்குப்  பதிலாக  அவர்களுக்குக்  கிடைக்கும்.  (செப்பனியா  2:10)

avarga'l  seanaiga'ludaiya  karththarin  janaththukku  viroathamaayp  perumaipaaraatti  avarga'lai  ninthiththapadiyinaal,  ithu  avarga'l  aganggaaraththukkup  bathilaaga  avarga'lukkuk  kidaikkum.  (seppaniyaa  2:10)

கர்த்தர்  அவர்கள்மேல்  கெடியாயிருப்பார்;  பூமியிலுள்ள  தேவர்களையெல்லாம்  மெலிந்துபோகப்பண்ணுவார்;  அப்பொழுது  தீவுகளிலுள்ள  சகல  புறஜாதிகளும்  அவரவர்  தங்கள்  தங்கள்  ஸ்தானத்திலிருந்து  அவரைப்  பணிந்துகொள்வார்கள்.  (செப்பனியா  2:11)

karththar  avarga'lmeal  kediyaayiruppaar;  boomiyilu'l'la  theavarga'laiyellaam  melinthupoagappa'n'nuvaar;  appozhuthu  theevuga'lilu'l'la  sagala  pu’rajaathiga'lum  avaravar  thangga'l  thangga'l  sthaanaththilirunthu  avaraip  pa'ninthuko'lvaarga'l.  (seppaniyaa  2:11)

எத்தியோப்பியராகிய  நீங்களும்  என்  பட்டயத்தினால்  கொலைசெய்யப்படுவீர்கள்.  (செப்பனியா  2:12)

eththiyoappiyaraagiya  neengga'lum  en  pattayaththinaal  kolaiseyyappaduveerga'l.  (seppaniyaa  2:12)

அவர்  தமது  கையை  வடதேசத்துக்கு  விரோதமாய்  நீட்டி,  அசீரியாவை  அழித்து,  நினிவேயைப்  பாழும்  வனாந்தரத்துக்கொத்த  வறட்சியுமான  ஸ்தலமாக்குவார்.  (செப்பனியா  2:13)

avar  thamathu  kaiyai  vadatheasaththukku  viroathamaay  neetti,  aseeriyaavai  azhiththu,  niniveayaip  paazhum  vanaantharaththukkoththa  va’radchiyumaana  sthalamaakkuvaar.  (seppaniyaa  2:13)

அதின்  நடுவில்  மந்தைகளும்  ஜாதிஜாதியான  சகல  மிருகங்களும்  படுத்துக்கொள்ளும்;  அதினுடைய  சிகரங்களின்மேல்  நாரையும்  கோட்டானும்  இராத்தங்கும்;  பலகணிகளில்  கூவுகிற  சத்தம்  பிறக்கும்;  வாசற்படிகளில்  பாழ்க்கடிப்பு  இருக்கும்;  கேதுருமரங்களின்  மச்சைத்  திறப்பாக்கிப்போடுவார்.  (செப்பனியா  2:14)

athin  naduvil  manthaiga'lum  jaathijaathiyaana  sagala  mirugangga'lum  paduththukko'l'lum;  athinudaiya  sigarangga'linmeal  naaraiyum  koattaanum  iraaththanggum;  palaga'niga'lil  koovugi’ra  saththam  pi’rakkum;  vaasa’rpadiga'lil  paazhkkadippu  irukkum;  keathurumarangga'lin  machchaith  thi’rappaakkippoaduvaar.  (seppaniyaa  2:14)

நான்தான்,  என்னைத்தவிர  வேறொருவரும்  இல்லை  என்று  தன்  இருதயத்தில்  சொல்லி,  நிர்விசாரமாய்  வாழ்ந்து  களிகூர்ந்திருந்த  நகரம்  இதுவே;  இது  பாழும்  மிருகஜீவன்களின்  தாபரமுமாய்ப்போய்விட்டதே!  அதின்  வழியாய்ப்போகிறவன்  எவனும்  ஈசல்  போட்டுத்  தன்  கையைக்  கொட்டுவான்.  (செப்பனியா  2:15)

naanthaan,  ennaiththavira  vea’roruvarum  illai  en’ru  than  iruthayaththil  solli,  nirvisaaramaay  vaazhnthu  ka'likoornthiruntha  nagaram  ithuvea;  ithu  paazhum  mirugajeevanga'lin  thaabaramumaayppoayvittathea!  athin  vazhiyaayppoagi’ravan  evanum  eesal  poattuth  than  kaiyaik  kottuvaan.  (seppaniyaa  2:15)