Showing posts with label Habakkuk. Show all posts
Showing posts with label Habakkuk. Show all posts

Friday, July 08, 2016

Aabakook 3 | ஆபகூக் 3 | Habakkuk 3


ஆபகூக்  தீர்க்கதரிசி  சிகாயோனில்  பாடின  விண்ணப்பம்.  (ஆபகூக்  3:1)

aabakook  theerkkatharisi  sigaayoanil  paadina  vi'n'nappam.  (aabakook  3:1)

கர்த்தாவே,  நீர்  வெளிப்படுத்தினதை  நான்  கேட்டேன்,  எனக்குப்  பயமுண்டாயிற்று;  கர்த்தாவே,  வருஷங்களின்  நடுவிலே  உம்முடைய  கிரியையை  உயிர்ப்பியும்,  வருஷங்களின்  நடுவிலே  அதை  விளங்கப்பண்ணும்;  கோபித்தாலும்  இரக்கத்தை  நினைத்தருளும்.  (ஆபகூக்  3:2)

karththaavea,  neer  ve'lippaduththinathai  naan  keattean,  enakkup  bayamu'ndaayit’ru;  karththaavea,  varushangga'lin  naduvilea  ummudaiya  kiriyaiyai  uyirppiyum,  varushangga'lin  naduvilea  athai  vi'langgappa'n'num;  koabiththaalum  irakkaththai  ninaiththaru'lum.  (aabakook  3:2)

தேவன்  தேமானிலிருந்தும்,  பரிசுத்தர்  பாரான்  பர்வதத்திலிருந்தும்  வந்தார்;  (சேலா.)  அவருடைய  மகிமை  வானங்களை  மூடிக்கொண்டது;  அவர்  துதியினால்  பூமி  நிறைந்தது.  (ஆபகூக்  3:3)

theavan  theamaanilirunthum,  parisuththar  paaraan  parvathaththilirunthum  vanthaar;  (sealaa.)  avarudaiya  magimai  vaanangga'lai  moodikko'ndathu;  avar  thuthiyinaal  boomi  ni’rainthathu.  (aabakook  3:3)

அவருடைய  பிரகாசம்  சூரியனைப்போலிருந்தது;  அவருடைய  கரத்திலிருந்து  கிரணங்கள்  வீசின;  அங்கே  அவருடைய  பராக்கிரமம்  மறைந்திருந்தது.  (ஆபகூக்  3:4)

avarudaiya  piragaasam  sooriyanaippoalirunthathu;  avarudaiya  karaththilirunthu  kira'nangga'l  veesina;  anggea  avarudaiya  baraakkiramam  ma’rainthirunthathu.  (aabakook  3:4)

அவருக்கு  முன்பாகக்  கொள்ளைநோய்  சென்றது;  அவர்  அடிகளிலிருந்து  எரிபந்தமான  காய்ச்சல்  புறப்பட்டது.  (ஆபகூக்  3:5)

avarukku  munbaagak  ko'l'lainoay  sen’rathu;  avar  adiga'lilirunthu  eripanthamaana  kaaychchal  pu’rappattathu.  (aabakook  3:5)

அவர்  நின்று  பூமியை  அளந்தார்;  அவர்  பார்த்துப்  புறஜாதிகளைக்  கரையப்பண்ணினார்;  பூர்வ  பர்வதங்கள்  சிதறடிக்கப்பட்டது,  என்றுமுள்ள  மலைகள்  தாழ்ந்தது;  அவருடைய  நடைகள்  நித்திய  நடைகளாயிருந்தது.  (ஆபகூக்  3:6)

avar  nin’ru  boomiyai  a'lanthaar;  avar  paarththup  pu’rajaathiga'laik  karaiyappa'n'ninaar;  poorva  parvathangga'l  sitha’radikkappattathu,  en’rumu'l'la  malaiga'l  thaazhnthathu;  avarudaiya  nadaiga'l  niththiya  nadaiga'laayirunthathu.  (aabakook  3:6)

கூஷானின்  கூடாரங்கள்  வருத்தத்தில்  அகப்பட்டிருக்கக்கண்டேன்;  மீதியான்  தேசத்தின்  திரைகள்  நடுங்கின.  (ஆபகூக்  3:7)

kooshaanin  koodaarangga'l  varuththaththil  agappattirukkakka'ndean;  meethiyaan  theasaththin  thiraiga'l  nadunggina.  (aabakook  3:7)

கர்த்தர்  நதிகளின்மேல்  கோபமாயிருந்தாரோ?  தேவரீர்  உம்முடைய  குதிரைகளின்மேலும்  இரட்சிப்புண்டாக்குகிற  உம்முடைய  இரதங்களின்மேலும்  ஏறிவருகிறபோது,  உமது  கோபம்  நதிகளுக்கும்  உமது  சினம்  சமுத்திரத்திற்கும்  விரோதமாயிருந்ததோ?  (ஆபகூக்  3:8)

karththar  nathiga'linmeal  koabamaayirunthaaroa?  theavareer  ummudaiya  kuthiraiga'linmealum  iradchippu'ndaakkugi’ra  ummudaiya  irathangga'linmealum  ea’rivarugi’rapoathu,  umathu  koabam  nathiga'lukkum  umathu  sinam  samuththiraththi’rkum  viroathamaayirunthathoa?  (aabakook  3:8)

கோத்திரங்களுக்கு  ஆணையிட்டுக்  கொடுத்த  வாக்கின்படியே  உம்முடைய  வில்  நாணேற்றப்பட்டதாக  விளங்கினது;  (சேலா.)  நீர்  பூமியைப்  பிளந்து  ஆறுகளை  உண்டாக்கினீர்.  (ஆபகூக்  3:9)

koaththirangga'lukku  aa'naiyittuk  koduththa  vaakkinpadiyea  ummudaiya  vil  naa'neat’rappattathaaga  vi'langginathu;  (sealaa.)  neer  boomiyaip  pi'lanthu  aa’ruga'lai  u'ndaakkineer.  (aabakook  3:9)

பர்வதங்கள்  உம்மைக்  கண்டு  நடுங்கின;  ஜலம்  பிரவாகித்துக்  கடந்துபோயிற்று;  ஆழி  இரைந்தது,  அதின்  கைகளை  உயர  எடுத்தது.  (ஆபகூக்  3:10)

parvathangga'l  ummaik  ka'ndu  nadunggina;  jalam  piravaagiththuk  kadanthupoayit’ru;  aazhi  irainthathu,  athin  kaiga'lai  uyara  eduththathu.  (aabakook  3:10)

சந்திரனும்  சூரியனும்  தன்தன்  மண்டலத்தில்  நின்றன;  உமது  அம்புகளின்  ஜோதியிலும்,  உமது  ஈட்டியினுடைய  மின்னல்  பிரகாசத்திலும்  நடந்தன.  (ஆபகூக்  3:11)

santhiranum  sooriyanum  thanthan  ma'ndalaththil  nin’rana;  umathu  ambuga'lin  joathiyilum,  umathu  eettiyinudaiya  minnal  piragaasaththilum  nadanthana.  (aabakook  3:11)

நீர்  கோபத்தோடே  பூமியில்  நடந்தீர்,  உக்கிரத்தோடே  ஜாதிகளைப்  போரடித்தீர்.  (ஆபகூக்  3:12)

neer  koabaththoadea  boomiyil  nadantheer,  ukkiraththoadea  jaathiga'laip  poaradiththeer.  (aabakook  3:12)

உமது  ஜனத்தின்  இரட்சிப்புக்காகவும்  நீர்  அபிஷேகம்  பண்ணுவித்தவனின்  இரட்சிப்புக்காகவுமே  நீர்  புறப்பட்டீர்;  கழுத்தளவாக  அஸ்திபாரத்தைத்  திறப்பாக்கி,  துஷ்டனுடைய  வீட்டிலிருந்த  தலைவனை  வெட்டினீர்;  சேலா.  (ஆபகூக்  3:13)

umathu  janaththin  iradchippukkaagavum  neer  abisheagam  pa'n'nuviththavanin  iradchippukkaagavumea  neer  pu’rappatteer;  kazhuththa'lavaaga  asthibaaraththaith  thi’rappaakki,  thushdanudaiya  veettiliruntha  thalaivanai  vettineer;  sealaa.  (aabakook  3:13)

என்னைச்  சிதறடிப்பதற்குப்  பெருங்காற்றைப்போல்  வந்தார்கள்;  சிறுமையானவனை  மறைவிடத்திலே  பட்சிப்பது  அவர்களுக்குச்  சந்தோஷமாயிருந்தது;  நீர்  அவனுடைய  ஈட்டிகளினாலேயே  அவனுடைய  கிராமத்து  அதிபதிகளை  உருவக்  குத்தினீர்.  (ஆபகூக்  3:14)

ennaich  sitha’radippatha’rkup  perungkaat’raippoal  vanthaarga'l;  si’rumaiyaanavanai  ma’raividaththilea  padchippathu  avarga'lukkuch  santhoashamaayirunthathu;  neer  avanudaiya  eettiga'linaaleayea  avanudaiya  kiraamaththu  athibathiga'lai  uruvak  kuththineer.  (aabakook  3:14)

திரளான  தண்ணீர்  குவியலாகிய  சமுத்திரத்துக்குள்  உமது  குதிரைகளோடே  நடந்துபோனீர்.  (ஆபகூக்  3:15)

thira'laana  tha'n'neer  kuviyalaagiya  samuththiraththukku'l  umathu  kuthiraiga'loadea  nadanthupoaneer.  (aabakook  3:15)

நான்  கேட்டபொழுது  என்  குடல்  குழம்பிற்று;  அந்தச்  சத்தத்துக்கு  என்  உதடுகள்  துடித்தது;  என்  எலும்புகளில்  உக்கல்  உண்டாயிற்று;  என்  நிலையிலே  நடுங்கினேன்;  ஆனாலும்  எங்களோடே  எதிர்க்கும்  ஜனங்கள்  வரும்போது,  இக்கட்டுநாளிலே  நான்  இளைப்பாறுதல்  அடைவேன்.  (ஆபகூக்  3:16)

naan  keattapozhuthu  en  kudal  kuzhambit’ru;  anthach  saththaththukku  en  uthaduga'l  thudiththathu;  en  elumbuga'lil  ukkal  u'ndaayit’ru;  en  nilaiyilea  nadungginean;  aanaalum  engga'loadea  ethirkkum  janangga'l  varumpoathu,  ikkattunaa'lilea  naan  i'laippaa’ruthal  adaivean.  (aabakook  3:16)

அத்திமரம்  துளிர்விடாமற்போனாலும்,  திராட்சச்செடிகளில்  பழம்  உண்டாகாமற்போனாலும்,  ஒலிவமரத்தின்  பலன்  அற்றுப்போனாலும்,  வயல்கள்  தானியத்தை  விளைவியாமற்போனாலும்,  கிடையில்  ஆட்டுமந்தைகள்  முதலற்றுப்போனாலும்,  தொழுவத்திலே  மாடு  இல்லாமற்போனாலும்,  (ஆபகூக்  3:17)

aththimaram  thu'lirvidaama’rpoanaalum,  thiraadchachsediga'lil  pazham  u'ndaagaama’rpoanaalum,  olivamaraththin  palan  at’ruppoanaalum,  vayalga'l  thaaniyaththai  vi'laiviyaama’rpoanaalum,  kidaiyil  aattumanthaiga'l  muthalat’ruppoanaalum,  thozhuvaththilea  maadu  illaama’rpoanaalum,  (aabakook  3:17)

நான்  கர்த்தருக்குள்  மகிழ்ச்சியாயிருப்பேன்,  என்  இரட்சிப்பின்  தேவனுக்குள்  களிகூருவேன்.  (ஆபகூக்  3:18)

naan  karththarukku'l  magizhchchiyaayiruppean,  en  iradchippin  theavanukku'l  ka'likooruvean.  (aabakook  3:18)

ஆண்டவராகிய  கர்த்தர்  என்  பெலன்;  அவர்  என்  கால்களை  மான்கால்களைப்போலாக்கி,  உயரமான  ஸ்தலங்களில்  என்னை  நடக்கப்பண்ணுவார்.  இது  நெகிநோத்  என்னும்  வாத்தியத்தில்  வாசிக்க  இராகத்தலைவனுக்கு  ஒப்புவிக்கப்பட்ட  சங்கீதம்.  (ஆபகூக்  3:19)

aa'ndavaraagiya  karththar  en  belan;  avar  en  kaalga'lai  maankaalga'laippoalaakki,  uyaramaana  sthalangga'lil  ennai  nadakkappa'n'nuvaar.  ithu  neginoath  ennum  vaaththiyaththil  vaasikka  iraagaththalaivanukku  oppuvikkappatta  sanggeetham.  (aabakook  3:19)


Aabakook 2 | ஆபகூக் 2 | Habakkuk 2


நான்  என்  காவலிலே  தரித்து,  அரணிலே  நிலைகொண்டிருந்து,  அவர்  எனக்கு  என்ன  சொல்லுவாரென்றும்,  அவர்  என்னைக்  கண்டிக்கும்போது  நான்  என்ன  உத்தரவு  சொல்லுவேனென்றும்  கவனித்துப்  பார்ப்பேன்  என்றேன்.  (ஆபகூக்  2:1)

naan  en  kaavalilea  thariththu,  ara'nilea  nilaiko'ndirunthu,  avar  enakku  enna  solluvaaren’rum,  avar  ennaik  ka'ndikkumpoathu  naan  enna  uththaravu  solluveanen’rum  kavaniththup  paarppean  en’rean.  (aabakook  2:1)

அப்பொழுது  கர்த்தர்  எனக்குப்  பிரதியுத்தரமாக:  நீ  தரிசனத்தை  எழுதி,  அதைக்  கடந்தோடுகிறவன்  வாசிக்கும்படிப்  பலகைகளிலே  தீர்க்கமாக  வரை.  (ஆபகூக்  2:2)

appozhuthu  karththar  enakkup  pirathiyuththaramaaga:  nee  tharisanaththai  ezhuthi,  athaik  kadanthoadugi’ravan  vaasikkumpadip  palagaiga'lilea  theerkkamaaga  varai.  (aabakook  2:2)

குறித்தகாலத்துக்குத்  தரிசனம்  இன்னும்  வைக்கப்பட்டிருக்கிறது;  முடிவிலே  அது  விளங்கும்,  அது  பொய்  சொல்லாது;  அது  தாமதித்தாலும்  அதற்குக்  காத்திரு;  அது  நிச்சயமாய்  வரும்,  அது  தாமதிப்பதில்லை.  (ஆபகூக்  2:3)

ku’riththakaalaththukkuth  tharisanam  innum  vaikkappattirukki’rathu;  mudivilea  athu  vi'langgum,  athu  poy  sollaathu;  athu  thaamathiththaalum  atha’rkuk  kaaththiru;  athu  nichchayamaay  varum,  athu  thaamathippathillai.  (aabakook  2:3)

இதோ,  அகங்காரியாயிருக்கிறானே,  அவனுடைய  ஆத்துமா  அவனுக்குள்  செம்மையானதல்ல;  தன்  விசுவாசத்தினாலே  நீதிமான்  பிழைப்பான்.  (ஆபகூக்  2:4)

ithoa,  aganggaariyaayirukki’raanea,  avanudaiya  aaththumaa  avanukku'l  semmaiyaanathalla;  than  visuvaasaththinaalea  neethimaan  pizhaippaan.  (aabakook  2:4)

அவன்  மதுபானத்தினால்  அக்கிரமஞ்செய்து  அகங்காரியாகி,  வீட்டிலே  தரியாமல்,  அவன்  தன்  ஆத்துமாவைப்  பாதாளத்தைப்போல  விரிவாக்கித்  திருப்தியாகாமல்,  மரணத்துக்குச்  சமானமாய்ச்  சகல  ஜாதிகளையும்  தன்  வசமாகச்  சேர்த்து,  சகல  ஜனங்களையும்  தன்னிடமாகக்  கூட்டிக்கொண்டாலும்,  (ஆபகூக்  2:5)

avan  mathubaanaththinaal  akkiramagnseythu  aganggaariyaagi,  veettilea  thariyaamal,  avan  than  aaththumaavaip  paathaa'laththaippoala  virivaakkith  thirupthiyaagaamal,  mara'naththukkuch  samaanamaaych  sagala  jaathiga'laiyum  than  vasamaagach  searththu,  sagala  janangga'laiyum  thannidamaagak  koottikko'ndaalum,  (aabakook  2:5)

இவர்களெல்லாரும்  அவன்பேரில்  ஒரு  பழமொழியையும்,  அவனுக்கு  விரோதமான  வசைச்சொல்லையும்  வசனித்து,  தன்னுடையதல்லாததைத்  தனக்காகச்  சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு  ஐயோ  என்றும்,  அது  எந்தமட்டும்  நிற்கும்  என்றும்,  அவன்  தன்மேல்  களிமண்  சுமையையல்லவா  சுமத்திக்கொள்ளுகிறான்  என்றும்  சொல்லுவார்கள்.  (ஆபகூக்  2:6)

ivarga'lellaarum  avanpearil  oru  pazhamozhiyaiyum,  avanukku  viroathamaana  vasaichsollaiyum  vasaniththu,  thannudaiyathallaathathaith  thanakkaagach  searththukko'l'lugi’ravanukku  aiyoa  en’rum,  athu  enthamattum  ni’rkum  en’rum,  avan  thanmeal  ka'lima'n  sumaiyaiyallavaa  sumaththikko'l'lugi’raan  en’rum  solluvaarga'l.  (aabakook  2:6)

உன்னைக்  கடிப்பவர்கள்  சடிதியாய்  எழும்புவதும்,  உன்னை  அலைக்கழிப்பவர்கள்  விழிப்பதுமில்லையோ?  நீ  அவர்களுக்குச்  சூறையாகாயோ?  (ஆபகூக்  2:7)

unnaik  kadippavarga'l  sadithiyaay  ezhumbuvathum,  unnai  alaikkazhippavarga'l  vizhippathumillaiyoa?  nee  avarga'lukkuch  soo’raiyaagaayoa?  (aabakook  2:7)

நீ  அநேகம்  ஜாதிகளைக்  கொள்ளையிட்டபடியினால்  ஜனங்களில்  மீதியான  யாவரும்  நீ  சிந்தின  மனுஷரத்தத்தினிமித்தமும்  நீ  செய்த  கொடுமையினிமித்தமும்  உன்னைக்  கொள்ளையிடுவார்கள்.  (ஆபகூக்  2:8)

nee  aneagam  jaathiga'laik  ko'l'laiyittapadiyinaal  janangga'lil  meethiyaana  yaavarum  nee  sinthina  manusharaththaththinimiththamum  nee  seytha  kodumaiyinimiththamum  unnaik  ko'l'laiyiduvaarga'l.  (aabakook  2:8)

தீமையின்  வல்லமைக்குத்  தப்பவேண்டுமென்று  தன்  கூட்டை  உயரத்திலே  வைக்கும்படிக்கு,  தன்  வீட்டுக்குப்  பொல்லாத  ஆதாயத்தைத்  தேடுகிறவனுக்கு  ஐயோ!  (ஆபகூக்  2:9)

theemaiyin  vallamaikkuth  thappavea'ndumen’ru  than  koottai  uyaraththilea  vaikkumpadikku,  than  veettukkup  pollaatha  aathaayaththaith  theadugi’ravanukku  aiyoa!  (aabakook  2:9)

அநேக  ஜனங்களை  வெட்டிப்போட்டதினால்  உன்  வீட்டுக்கு  வெட்கமுண்டாக  ஆலோசனைபண்ணினாய்;  உன்  ஆத்துமாவுக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தாய்.  (ஆபகூக்  2:10)

aneaga  janangga'lai  vettippoattathinaal  un  veettukku  vedkamu'ndaaga  aaloasanaipa'n'ninaay;  un  aaththumaavukku  viroathamaayp  paavagnseythaay.  (aabakook  2:10)

கல்லு  சுவரிலிருந்து  கூப்பிடும்,  உத்திரம்  மச்சிலிருந்து  சாட்சியிடும்.  (ஆபகூக்  2:11)

kallu  suvarilirunthu  kooppidum,  uththiram  machchilirunthu  saadchiyidum.  (aabakook  2:11)

இரத்தப்பழிகளாலே  பட்டணத்தைக்  கட்டி,  அநியாயத்தினாலே  நகரத்தைப்  பலப்படுத்துகிறவனுக்கு  ஐயோ!  (ஆபகூக்  2:12)

iraththappazhiga'laalea  patta'naththaik  katti,  aniyaayaththinaalea  nagaraththaip  balappaduththugi’ravanukku  aiyoa!  (aabakook  2:12)

இதோ,  ஜனங்கள்  அக்கினிக்கு  இரையாக  உழைத்து,  ஜனங்கள்  விருதாவாக  இளைத்துப்போகிறது  கர்த்தருடைய  செயல்  அல்லவோ?  (ஆபகூக்  2:13)

ithoa,  janangga'l  akkinikku  iraiyaaga  uzhaiththu,  janangga'l  viruthaavaaga  i'laiththuppoagi’rathu  karththarudaiya  seyal  allavoa?  (aabakook  2:13)

சமுத்திரம்  ஜலத்தினால்  நிறைந்திருக்கிறதுபோல்,  பூமி  கர்த்தருடைய  மகிமையை  அறிகிற  அறிவினால்  நிறைந்திருக்கும்.  (ஆபகூக்  2:14)

samuththiram  jalaththinaal  ni’rainthirukki’rathupoal,  boomi  karththarudaiya  magimaiyai  a’rigi’ra  a’rivinaal  ni’rainthirukkum.  (aabakook  2:14)

தன்  தோழருக்குக்  குடிக்கக்கொடுத்துத்  தன்  துருத்தியை  அவர்களண்டையிலே  வைத்து,  அவர்களுடைய  நிர்வாணங்களைப்  பார்க்கும்படிக்கு,  அவர்களை  வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு  ஐயோ!  (ஆபகூக்  2:15)

than  thoazharukkuk  kudikkakkoduththuth  than  thuruththiyai  avarga'la'ndaiyilea  vaiththu,  avarga'ludaiya  nirvaa'nangga'laip  paarkkumpadikku,  avarga'lai  ve’rikkappa'n'nugi’ravanukku  aiyoa!  (aabakook  2:15)

நீ  மகிமையினால்  அல்ல,  இலச்சையினால்  நிரப்பப்படுவாய்;  நீயும்  குடித்து  விருத்தசேதனமில்லாதவன்  என்று  விளங்கு;  கர்த்தருடைய  வலதுகையில்  இருக்கிற  பாத்திரம்  உன்னிடத்திற்குத்  திரும்பும்;  உன்  மகிமையின்மேல்  இலச்சையான  வாந்திபண்ணுவாய்.  (ஆபகூக்  2:16)

nee  magimaiyinaal  alla,  ilachchaiyinaal  nirappappaduvaay;  neeyum  kudiththu  viruththaseathanamillaathavan  en’ru  vi'langgu;  karththarudaiya  valathukaiyil  irukki’ra  paaththiram  unnidaththi’rkuth  thirumbum;  un  magimaiyinmeal  ilachchaiyaana  vaanthipa'n'nuvaay.  (aabakook  2:16)

லீபனோனுக்குச்  செய்த  கொடுமை  உன்னை  மூடும்;  சிந்தின  மனுஷரத்தத்தினிமித்தமும்  தேசத்திற்கும்  பட்டணத்திற்கும்  அதின்  குடிகள்  எல்லாருக்கும்  செய்த  கொடுமையினிமித்தமும்  மிருகங்கள்  செய்யும்  பாழ்க்கடிப்பு  உன்னைக்  கலங்கப்பண்ணும்.  (ஆபகூக்  2:17)

leebanoanukkuch  seytha  kodumai  unnai  moodum;  sinthina  manusharaththaththinimiththamum  theasaththi’rkum  patta'naththi’rkum  athin  kudiga'l  ellaarukkum  seytha  kodumaiyinimiththamum  mirugangga'l  seyyum  paazhkkadippu  unnaik  kalanggappa'n'num.  (aabakook  2:17)

சித்திரக்காரனுக்கு  அவன்  செய்த  சுரூபமும்,  ஊமையான  தெய்வங்களை  உண்டுபண்ணித்  தான்  உருவாக்கின  சுரூபத்தை  நம்பினவனுக்கு  வார்க்கப்பட்டதும்  பொய்ப்போதகம்  பண்ணுகிறதுமான  விக்கிரகமும்  என்னத்துக்கு  உதவும்?  (ஆபகூக்  2:18)

siththirakkaaranukku  avan  seytha  suroobamum,  oomaiyaana  theyvangga'lai  u'ndupa'n'nith  thaan  uruvaakkina  suroobaththai  nambinavanukku  vaarkkappattathum  poyppoathagam  pa'n'nugi’rathumaana  vikkiragamum  ennaththukku  uthavum?  (aabakook  2:18)

மரத்தைப்பார்த்து  விழியென்றும்,  ஊமையான  கல்லைப்பார்த்து  எழும்பு  என்றும்  சொல்லுகிறவனுக்கு  ஐயோ!  அது  போதிக்குமோ?  இதோ,  அது  பொன்னும்  வெள்ளியுமான  தகட்டால்  மூடப்பட்டிருக்கிறது;  அதற்குள்ளே  சுவாசம்  இல்லையே?  (ஆபகூக்  2:19)

maraththaippaarththu  vizhiyen’rum,  oomaiyaana  kallaippaarththu  ezhumbu  en’rum  sollugi’ravanukku  aiyoa!  athu  poathikkumoa?  ithoa,  athu  ponnum  ve'l'liyumaana  thagattaal  moodappattirukki’rathu;  atha’rku'l'lea  suvaasam  illaiyea?  (aabakook  2:19)

கர்த்தரோவென்றால்,  தமது  பரிசுத்த  ஆலயத்தில்  இருக்கிறார்;  பூமியெல்லாம்  அவருக்கு  முன்பாக  மௌனமாயிருக்கக்கடவது.  (ஆபகூக்  2:20)

karththaroaven’raal,  thamathu  parisuththa  aalayaththil  irukki’raar;  boomiyellaam  avarukku  munbaaga  maunamaayirukkakkadavathu.  (aabakook  2:20)