Showing posts with label naagoom. Show all posts
Showing posts with label naagoom. Show all posts

Sunday, July 10, 2016

Naagoom 3 | நாகூம் 3 | Nahum 3


இரத்தப்பழிகளின்  நகரத்திற்கு  ஐயோ!  அது  வஞ்சகத்தினாலும்  கொடுமையினாலும்  நிறைந்திருக்கிறது;  கொள்ளை  ஓயாமல்  நடக்கிறது.  (நாகூம்  3:1)

iraththappazhiga'lin  nagaraththi’rku  aiyoa!  athu  vagnchagaththinaalum  kodumaiyinaalum  ni’rainthirukki’rathu;  ko'l'lai  oayaamal  nadakki’rathu.  (naagoom  3:1)

சவுக்குகளின்  ஓசையும்,  உருளைகளின்  அதிர்ச்சியும்,  குதிரைகளின்  பாய்ச்சலும்,  இரதங்கள்  கடகடவென்று  ஓடுகிற  சத்தமும்,  (நாகூம்  3:2)

savukkuga'lin  oasaiyum,  uru'laiga'lin  athirchchiyum,  kuthiraiga'lin  paaychchalum,  irathangga'l  kadakadaven’ru  oadugi’ra  saththamum,  (naagoom  3:2)

வீரர்  குதிரை  ஏறுகிறதும்,  பட்டயங்கள்  துலங்குகிறதும்,  ஈட்டிகள்  மின்னுகிறதும்,  வெட்டுண்டவர்களின்  திரளும்,  பிரேதங்களின்  ஏராளமும்  அங்கே  உண்டாயிருக்கும்;  பிணங்களுக்குத்  தொகையில்லை;  அவர்கள்  பிணங்களில்  இடறிவிழுகிறார்கள்.  (நாகூம்  3:3)

veerar  kuthirai  ea’rugi’rathum,  pattayangga'l  thulanggugi’rathum,  eettiga'l  minnugi’rathum,  vettu'ndavarga'lin  thira'lum,  pireathangga'lin  earaa'lamum  anggea  u'ndaayirukkum;  pi'nangga'lukkuth  thogaiyillai;  avarga'l  pi'nangga'lil  ida’rivizhugi’raarga'l.  (naagoom  3:3)

தன்  வேசித்தனங்களினால்  ஜாதிகளையும்,  தன்  சூனியங்களினால்  வம்சங்களையும்  விற்கிற  மகா  சூனியக்காரியும்  ரூபவதியுமாயிருக்கிற  வேசியினுடைய  திரளான  வேசித்தனங்களினிமித்தம்,  (நாகூம்  3:4)

than  veasiththanangga'linaal  jaathiga'laiyum,  than  sooniyangga'linaal  vamsangga'laiyum  vi’rki’ra  mahaa  sooniyakkaariyum  roobavathiyumaayirukki’ra  veasiyinudaiya  thira'laana  veasiththanangga'linimiththam,  (naagoom  3:4)

இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து  உன்  வஸ்திரத்து  ஓரங்களை  உன்  முகமட்டும்  தூக்கியெடுத்து,  ஜாதிகளுக்கு  உன்  நிர்வாணத்தையும்,  ராஜ்யங்களுக்கு  உன்  மானத்தையும்  தெரியப்பண்ணி,  (நாகூம்  3:5)

ithoa,  naan  unakku  viroathamaaga  vanthu  un  vasthiraththu  oarangga'lai  un  mugamattum  thookkiyeduththu,  jaathiga'lukku  un  nirvaa'naththaiyum,  raajyangga'lukku  un  maanaththaiyum  theriyappa'n'ni,  (naagoom  3:5)

உன்மேல்  தீட்டானவைகளை  எறிந்து,  உன்னைக்  கனவீனப்படுத்தி,  உன்னை  வேடிக்கையாக்கிப்போடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (நாகூம்  3:6)

unmeal  theettaanavaiga'lai  e’rinthu,  unnaik  kanaveenappaduththi,  unnai  veadikkaiyaakkippoaduvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (naagoom  3:6)

அப்பொழுது  உன்னைக்  காண்கிறவனெல்லாம்  நினிவே  பாழாய்ப்போயிற்று,  அதற்காகப்  புலம்புகிறவர்  யார்?  ஆறுதல்  சொல்லுகிறவர்களை  உனக்கு  எங்கே  தேடுவேனென்று  சொல்லி,  உன்னைவிட்டோடிப்  போவான்.  (நாகூம்  3:7)

appozhuthu  unnaik  kaa'ngi’ravanellaam  ninivea  paazhaayppoayit’ru,  atha’rkaagap  pulambugi’ravar  yaar?  aa’ruthal  sollugi’ravarga'lai  unakku  enggea  theaduveanen’ru  solli,  unnaivittoadip  poavaan.  (naagoom  3:7)

நதிகள்  மத்தியிலிருந்த  நோ  அம்மோனைப்பார்க்கிலும்  நீ  சிரேஷ்டமோ?  அதைச்  சுற்றிலும்  தண்ணீர்  இருந்தது;  சமுத்திரம்  அதின்  அரணும்,  சமுத்திரக்கால்  அதின்  மதிலுமாயிருந்தது.  (நாகூம்  3:8)

nathiga'l  maththiyiliruntha  noa  ammoanaippaarkkilum  nee  sireashdamoa?  athaich  sut’rilum  tha'n'neer  irunthathu;  samuththiram  athin  ara'num,  samuththirakkaal  athin  mathilumaayirunthathu.  (naagoom  3:8)

எத்தியோப்பியாவும்  எகிப்தும்  எண்ணிறந்த  சேனையால்  அதற்குப்  பெலனாக  இருந்தது;  பூத்தும்  லூபீமும்  அதற்குச்  சகாயமாயிருந்தது.  (நாகூம்  3:9)

eththiyoappiyaavum  egipthum  e'n'ni’rantha  seanaiyaal  atha’rkup  belanaaga  irunthathu;  pooththum  loobeemum  atha’rkuch  sagaayamaayirunthathu.  (naagoom  3:9)

ஆயினும்  அவள்  குடிவிலக்கப்பட்டுச்  சிறையிருப்பிலே  கொண்டுபோகப்பட்டாள்;  அவள்  குழந்தைகள்  எல்லா  வீதிகளின்  முகனைகளிலும்  மோதியடிக்கப்பட்டார்கள்;  அவளுடைய  கனவான்கள்பேரில்  சீட்டுப்  போட்டார்கள்;  அவளுடைய  பெரியவர்கள்  எல்லாரும்  சங்கிலிகளால்  கட்டப்பட்டார்கள்.  (நாகூம்  3:10)

aayinum  ava'l  kudivilakkappattuch  si’raiyiruppilea  ko'ndupoagappattaa'l;  ava'l  kuzhanthaiga'l  ellaa  veethiga'lin  muganaiga'lilum  moathiyadikkappattaarga'l;  ava'ludaiya  kanavaanga'lpearil  seettup  poattaarga'l;  ava'ludaiya  periyavarga'l  ellaarum  sanggiliga'laal  kattappattaarga'l.  (naagoom  3:10)

நீயும்  வெறிகொண்டு  ஒளித்துக்கொள்வாய்;  நீயும்  உன்  சத்துருவுக்குத்  தப்ப  அரணான  கோட்டையைத்  தேடுவாய்.  (நாகூம்  3:11)

neeyum  ve’riko'ndu  o'liththukko'lvaay;  neeyum  un  saththuruvukkuth  thappa  ara'naana  koattaiyaith  theaduvaay.  (naagoom  3:11)

உன்  அரண்களெல்லாம்  முதல்  பழுக்கும்  பழங்களுள்ள  அத்திமரங்களைப்போல்  இருக்கும்;  அவைகள்  குலுக்கப்பட்டால்  அவைகளின்  பழம்  தின்கிறவன்  வாயிலே  விழும்.  (நாகூம்  3:12)

un  ara'nga'lellaam  muthal  pazhukkum  pazhangga'lu'l'la  aththimarangga'laippoal  irukkum;  avaiga'l  kulukkappattaal  avaiga'lin  pazham  thingi’ravan  vaayilea  vizhum.  (naagoom  3:12)

இதோ,  உன்  நடுவில்  இருக்கிற  ஜனங்கள்  பேடிகள்;  உன்  தேசத்தின்  வாசல்கள்  உன்  சத்துருவுக்குமுன்  திறவுண்டுபோகும்;  அக்கினி  உன்  தாழ்ப்பாள்களைப்  பட்சிக்கும்.  (நாகூம்  3:13)

ithoa,  un  naduvil  irukki’ra  janangga'l  peadiga'l;  un  theasaththin  vaasalga'l  un  saththuruvukkumun  thi’ravu'ndupoagum;  akkini  un  thaazhppaa'lga'laip  padchikkum.  (naagoom  3:13)

முற்றிகைக்குத்  தண்ணீர்  மொண்டு  வை,  உன்  அரண்களைப்  பலப்படுத்து;  சேற்றிலே  போய்க்  களிமண்ணை  மிதி,  சூளையைக்  கெட்டிப்படுத்து.  (நாகூம்  3:14)

mut’rigaikkuth  tha'n'neer  mo'ndu  vai,  un  ara'nga'laip  balappaduththu;  seat’rilea  poayk  ka'lima'n'nai  mithi,  soo'laiyaik  kettippaduththu.  (naagoom  3:14)

அங்கே  அக்கினி  உன்னைப்  பட்சிக்கும்,  பட்டயம்  உன்னைச்  சங்கரிக்கும்;  அது  பச்சைக்கிளிகளைப்போல்  உன்னைப்  பட்சித்துப்போடும்;  உன்னைப்  பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள்,  உன்னை  வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.  (நாகூம்  3:15)

anggea  akkini  unnaip  padchikkum,  pattayam  unnaich  sanggarikkum;  athu  pachchaikki'liga'laippoal  unnaip  padchiththuppoadum;  unnaip  pachchaikki'liga'laththanaiyaakkikko'l,  unnai  vettukki'liga'laththanaiyaakkikko'l.  (naagoom  3:15)

உன்  வர்த்தகரை  வானத்து  நட்சத்திரங்களிலும்  அதிகமாக்கினாய்;  இந்தப்  பச்சைக்கிளிகள்  பரவிப்  பறந்துபோகும்.  (நாகூம்  3:16)

un  varththagarai  vaanaththu  nadchaththirangga'lilum  athigamaakkinaay;  inthap  pachchaikki'liga'l  paravip  pa’ranthupoagum.  (naagoom  3:16)

உன்  மகுடவர்த்தனர்  வெட்டுக்கிளிகளுக்கும்,  உன்  தளகர்த்தர்  பெருங்கிளிகளுக்கும்  சமானமாயிருக்கிறார்கள்;  அவைகள்  குளிர்ச்சியான  நாளில்  வேலிகளில்  பாளையமிறங்கி,  சூரியன்  உதித்தமாத்திரத்தில்  பறந்துபோம்;  பின்பு  அவைகள்  இருக்கும்  இடம்  இன்னதென்று  தெரியாது.  (நாகூம்  3:17)

un  magudavarththanar  vettukki'liga'lukkum,  un  tha'lakarththar  perungki'liga'lukkum  samaanamaayirukki’raarga'l;  avaiga'l  ku'lirchchiyaana  naa'lil  vealiga'lil  paa'laiyami’ranggi,  sooriyan  uthiththamaaththiraththil  pa’ranthupoam;  pinbu  avaiga'l  irukkum  idam  innathen’ru  theriyaathu.  (naagoom  3:17)

அசீரியா  ராஜாவே,  உன்  மேய்ப்பர்கள்  உறங்குவார்கள்;  உன்  பிரபலஸ்தர்  படுத்திருப்பார்கள்;  உன்  ஜனங்கள்  பர்வதங்களின்மேல்  சிதறியிருக்கிறார்கள்,  அவைகளைக்  கூட்டிச்  சேர்ப்பவன்  இல்லை.  (நாகூம்  3:18)

aseeriyaa  raajaavea,  un  meaypparga'l  u’rangguvaarga'l;  un  pirabalasthar  paduththiruppaarga'l;  un  janangga'l  parvathangga'linmeal  sitha’riyirukki’raarga'l,  avaiga'laik  koottich  searppavan  illai.  (naagoom  3:18)

உன்  நொறுங்குதலுக்குப்  பரிகாரம்  இல்லை;  உன்  காயம்  கொடியது;  உன்  செய்தியைக்  கேட்பவர்  யாவரும்  உன்பேரில்  கைகொட்டுவார்கள்;  உன்  பொல்லாப்பு  எந்நேரமும்  யார்பேரிலேதான்  பாயாமற்போயிற்று?  (நாகூம்  3:19)

un  no’rungguthalukkup  parigaaram  illai;  un  kaayam  kodiyathu;  un  seythiyaik  keadpavar  yaavarum  unpearil  kaikottuvaarga'l;  un  pollaappu  ennearamum  yaarpearileathaan  paayaama’rpoayit’ru?  (naagoom  3:19)


Naagoom 2 | நாகூம் 2 | Nahum 2


சிதறடிக்கிறவன்  உன்  முகத்துக்கு  முன்பாக  வருகிறான்;  அரணைக்  காத்துக்கொள்,  வழியைக்  காவல்பண்ணு,  அரையைக்  கெட்டியாய்க்  கட்டிக்கொள்,  உன்  பெலனை  மிகவும்  ஸ்திரப்படுத்து.  (நாகூம்  2:1)

sitha’radikki’ravan  un  mugaththukku  munbaaga  varugi’raan;  ara'naik  kaaththukko'l,  vazhiyaik  kaavalpa'n'nu,  araiyaik  kettiyaayk  kattikko'l,  un  belanai  migavum  sthirappaduththu.  (naagoom  2:1)

வெறுமையாக்குகிறவர்கள்  அவர்களை  வெறுமையாக்கி,  அவர்களுடைய  திராட்சக்கொடிகளைக்  கெடுத்துப்போட்டாலும்,  கர்த்தர்  யாக்கோபின்  மகிமையைத்  திரும்பிவரப்பண்ணுவது  போல்,  இஸ்ரவேலின்  மகிமையையும்  திரும்பிவரப்பண்ணுவார்.  (நாகூம்  2:2)

ve’rumaiyaakkugi’ravarga'l  avarga'lai  ve’rumaiyaakki,  avarga'ludaiya  thiraadchakkodiga'laik  keduththuppoattaalum,  karththar  yaakkoabin  magimaiyaith  thirumbivarappa'n'nuvathu  poal,  isravealin  magimaiyaiyum  thirumbivarappa'n'nuvaar.  (naagoom  2:2)

அவனுடைய  பராக்கிரமசாலிகளின்  கேடகம்  இரத்தமயமாகும்;  அவனுடைய  யுத்தவீரர்  இரத்தாம்பரந்  தரித்துக்கொண்டிருக்கிறார்கள்;  அவன்  தன்னை  ஆயத்தம்பண்ணும்  நாளிலே  இரதங்கள்  ஜுவாலிக்கிற  கட்கங்களை  உடையதாயிருக்கும்;  ஈட்டிகள்  குலுங்கும்.  (நாகூம்  2:3)

avanudaiya  baraakkiramasaaliga'lin  keadagam  iraththamayamaagum;  avanudaiya  yuththaveerar  iraththaambaran  thariththukko'ndirukki’raarga'l;  avan  thannai  aayaththampa'n'num  naa'lilea  irathangga'l  juvaalikki’ra  kadkangga'lai  udaiyathaayirukkum;  eettiga'l  kulunggum.  (naagoom  2:3)

இரதங்கள்  தெருக்களில்  கடகடவென்றோடி,  வீதிகளில்  இடசாரி  வலசாரி  வரும்;  அவைகள்  தீவட்டிகளைப்போல  விளங்கி,  மின்னல்களைப்போல  வேகமாய்ப்  பறக்கும்.  (நாகூம்  2:4)

irathangga'l  therukka'lil  kadakadaven’roadi,  veethiga'lil  idasaari  valasaari  varum;  avaiga'l  theevattiga'laippoala  vi'langgi,  minnalga'laippoala  veagamaayp  pa’rakkum.  (naagoom  2:4)

அவன்  தன்  பிரபலஸ்தரை  நினைவுகூருவான்;  அவர்கள்  தங்கள்  நடைகளில்  இடறி,  அலங்கத்துக்கு  விரைந்து  ஓடுவார்கள்;  மறைவிடம்  ஆயத்தப்படுத்தப்படும்.  (நாகூம்  2:5)

avan  than  pirabalastharai  ninaivukooruvaan;  avarga'l  thangga'l  nadaiga'lil  ida’ri,  alanggaththukku  virainthu  oaduvaarga'l;  ma’raividam  aayaththappaduththappadum.  (naagoom  2:5)

ஆறுகளின்  மதகுகள்  திறக்கப்படும்,  அரமனை  கரைந்துபோம்.  (நாகூம்  2:6)

aa’ruga'lin  mathaguga'l  thi’rakkappadum,  aramanai  karainthupoam.  (naagoom  2:6)

அவன்  சிறைப்பட்டுப்போகத்  தீர்மானமாயிற்று;  அவளுடைய  தாதிமார்கள்  தங்கள்  மார்பிலே  அடித்துக்கொண்டு,  புறாக்களைப்போலச்  சத்தமிட்டுக்  கூடப்போவார்கள்.  (நாகூம்  2:7)

avan  si’raippattuppoagath  theermaanamaayit’ru;  ava'ludaiya  thaathimaarga'l  thangga'l  maarbilea  adiththukko'ndu,  pu’raakka'laippoalach  saththamittuk  koodappoavaarga'l.  (naagoom  2:7)

நினிவே  பூர்வகாலமுதல்  தண்ணீர்த்  தடாகம்போல்  இருந்தது;  இப்போதோ  அவர்கள்  ஓடிப்போகிறார்கள்;  நில்லுங்கள்  நில்லுங்கள்  என்றாலும்,  திரும்பிப்பார்க்கிறவன்  இல்லை.  (நாகூம்  2:8)

ninivea  poorvakaalamuthal  tha'n'neerth  thadaagampoal  irunthathu;  ippoathoa  avarga'l  oadippoagi’raarga'l;  nillungga'l  nillungga'l  en’raalum,  thirumbippaarkki’ravan  illai.  (naagoom  2:8)

வெள்ளியைக்  கொள்ளையிடுங்கள்,  பொன்னையும்  கொள்ளையிடுங்கள்;  சம்பத்துக்கு  முடிவில்லை;  இச்சிக்கப்படத்தக்க  சகலவித  பொருள்களும்  இருக்கிறது.  (நாகூம்  2:9)

ve'l'liyaik  ko'l'laiyidungga'l,  ponnaiyum  ko'l'laiyidungga'l;  sambaththukku  mudivillai;  ichchikkappadaththakka  sagalavitha  poru'lga'lum  irukki’rathu.  (naagoom  2:9)

அவள்  வெறுமையும்  வெளியும்  பாழுமாவாள்;  மனம்  கரைந்துபோகிறது;  முழங்கால்கள்  தள்ளாடுகிறது;  எல்லா  இடுப்புகளிலும்  மிகுந்த  வேதனை  உண்டு;  எல்லாருடைய  முகங்களும்  கருகிப்போகிறது.  (நாகூம்  2:10)

ava'l  ve’rumaiyum  ve'liyum  paazhumaavaa'l;  manam  karainthupoagi’rathu;  muzhangkaalga'l  tha'l'laadugi’rathu;  ellaa  iduppuga'lilum  miguntha  veathanai  u'ndu;  ellaarudaiya  mugangga'lum  karugippoagi’rathu.  (naagoom  2:10)

சிங்கங்களின்  வாசஸ்தலம்  எங்கே?  பாலசிங்கம்  இரைதின்கிற  இடம்  எங்கே?  கிழச்சிங்கமாகிய  சிங்கமும்,  சிங்கக்குட்டிகளும்  பயப்படுத்துவாரில்லாமல்  சஞ்சரிக்கிற  ஸ்தானம்  எங்கே?  (நாகூம்  2:11)

singgangga'lin  vaasasthalam  enggea?  baalasinggam  iraithingi’ra  idam  enggea?  kizhachsinggamaagiya  singgamum,  singgakkuttiga'lum  bayappaduththuvaarillaamal  sagncharikki’ra  sthaanam  enggea?  (naagoom  2:11)

சிங்கம்  தன்  குட்டிகளுக்குத்  தேவையானதைப்  பீறி,  தன்  பெண்  சிங்கங்களுக்கு  வேண்டியதைத்  தொண்டையைப்  பிடித்துக்  கொன்று,  இரைகளினால்  தன்  கெபிகளையும்,  பீறிப்போட்டவைகளினால்  தன்  தாபரங்களையும்  நிரப்பிற்று.  (நாகூம்  2:12)

singgam  than  kuttiga'lukkuth  theavaiyaanathaip  pee’ri,  than  pe'n  singgangga'lukku  vea'ndiyathaith  tho'ndaiyaip  pidiththuk  kon’ru,  iraiga'linaal  than  kebiga'laiyum,  pee’rippoattavaiga'linaal  than  thaabarangga'laiyum  nirappit’ru.  (naagoom  2:12)

இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  இரதங்களைப்  புகையெழும்ப  எரித்துப்போடுவேன்;  பட்டயம்  உன்  பாலசிங்கங்களைப்  பட்சிக்கும்;  நீ  இரைக்காகப்  பிடிக்கும்  வேட்டையைத்  தேசத்தில்  அற்றுப்போகப்பண்ணுவேன்;  உன்  ஸ்தானாபதிகளின்  சத்தம்  இனிக்  கேட்கப்படுவதில்லை  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (நாகூம்  2:13)

ithoa,  naan  unakku  viroathamaaga  vanthu,  irathangga'laip  pugaiyezhumba  eriththuppoaduvean;  pattayam  un  baalasinggangga'laip  padchikkum;  nee  iraikkaagap  pidikkum  veattaiyaith  theasaththil  at’ruppoagappa'n'nuvean;  un  sthaanaabathiga'lin  saththam  inik  keadkappaduvathillai  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (naagoom  2:13)