Showing posts with label John. Show all posts
Showing posts with label John. Show all posts

Friday, May 13, 2016

Yoavaan 21 | யோவான் 21 | John 21


இவைகளுக்குப்பின்பு  இயேசு  திபேரியா  கடற்கரையிலே  மறுபடியும்  சீஷருக்குத்  தம்மை  வெளிப்படுத்தினார்;  வெளிப்படுத்தின  விவரமாவது:  (யோவான்  21:1)

ivaiga'lukkuppinbu  iyeasu  thibeariyaa  kada’rkaraiyilea  ma’rupadiyum  seesharukkuth  thammai  ve'lippaduththinaar;  ve'lippaduththina  vivaramaavathu:  (yoavaan  21:1)

சீமோன்பேதுருவும்,  திதிமு  என்னப்பட்ட  தோமாவும்,  கலிலேயா  நாட்டிலுள்ள  கானா  ஊரானாகிய  நாத்தான்வேலும்,  செபெதேயுவின்  குமாரரும்,  அவருடைய  சீஷரில்  வேறு  இரண்டுபேரும்  கூடியிருக்கும்போது,  (யோவான்  21:2)

seemoanpeathuruvum,  thithimu  ennappatta  thoamaavum,  kalileayaa  naattilu'l'la  kaanaa  ooraanaagiya  naaththaanvealum,  sebetheayuvin  kumaararum,  avarudaiya  seesharil  vea’ru  ira'ndupearum  koodiyirukkumpoathu,  (yoavaan  21:2)

சீமோன்பேதுரு  மற்றவர்களை  நோக்கி:  மீன்பிடிக்கப்போகிறேன்  என்றான்.  அதற்கு  அவர்கள்:  நாங்களும்  உம்முடனேகூட  வருகிறோம்  என்றார்கள்.  அவர்கள்  புறப்பட்டுப்போய்,  உடனே  படவேறினார்கள்.  அந்த  இராத்திரியிலே  அவர்கள்  ஒன்றும்  பிடிக்கவில்லை.  (யோவான்  21:3)

seemoanpeathuru  mat’ravarga'lai  noakki:  meenpidikkappoagi’rean  en’raan.  atha’rku  avarga'l:  naangga'lum  ummudaneakooda  varugi’roam  en’raarga'l.  avarga'l  pu’rappattuppoay,  udanea  padavea’rinaarga'l.  antha  iraaththiriyilea  avarga'l  on’rum  pidikkavillai.  (yoavaan  21:3)

விடியற்காலமானபோது,  இயேசு  கரையிலே  நின்றார்;  அவரை  இயேசு  என்று  சீஷர்கள்  அறியாதிருந்தார்கள்.  (யோவான்  21:4)

vidiya’rkaalamaanapoathu,  iyeasu  karaiyilea  nin’raar;  avarai  iyeasu  en’ru  seesharga'l  a’riyaathirunthaarga'l.  (yoavaan  21:4)

இயேசு  அவர்களை  நோக்கி:  பிள்ளைகளே,  புசிக்கிறதற்கு  ஏதாகிலும்  உங்களிடத்தில்  உண்டா  என்றார்.  அதற்கு  அவர்கள்:  ஒன்றுமில்லை  என்றார்கள்.  (யோவான்  21:5)

iyeasu  avarga'lai  noakki:  pi'l'laiga'lea,  pusikki’ratha’rku  eathaagilum  ungga'lidaththil  u'ndaa  en’raar.  atha’rku  avarga'l:  on’rumillai  en’raarga'l.  (yoavaan  21:5)

அப்பொழுது  அவர்:  நீங்கள்  படவுக்கு  வலதுபுறமாக  வலையைப்  போடுங்கள்,  அப்பொழுது  உங்களுக்கு  அகப்படும்  என்றார்.  அப்படியே  அவர்கள்  போட்டு,  திரளான  மீன்கள்  அகப்பட்டதினால்,  அதை  இழுக்கமாட்டாதிருந்தார்கள்.  (யோவான்  21:6)

appozhuthu  avar:  neengga'l  padavukku  valathupu’ramaaga  valaiyaip  poadungga'l,  appozhuthu  ungga'lukku  agappadum  en’raar.  appadiyea  avarga'l  poattu,  thira'laana  meenga'l  agappattathinaal,  athai  izhukkamaattaathirunthaarga'l.  (yoavaan  21:6)

ஆதலால்  இயேசுவுக்கு  அன்பாயிருந்த  சீஷன்  பேதுருவைப்  பார்த்து:  அவர்  கர்த்தர்  என்றான்.  அவர்  கர்த்தர்  என்று  சீமோன்பேதுரு  கேட்டவுடனே,  தான்  வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால்,  தன்  மேற்சட்டையைக்  கட்டிக்கொண்டு  கடலிலே  குதித்தான்.  (யோவான்  21:7)

aathalaal  iyeasuvukku  anbaayiruntha  seeshan  peathuruvaip  paarththu:  avar  karththar  en’raan.  avar  karththar  en’ru  seemoanpeathuru  keattavudanea,  thaan  vasthiramillaathavanaayirunthapadiyinaal,  than  mea’rsattaiyaik  kattikko'ndu  kadalilea  kuthiththaan.  (yoavaan  21:7)

மற்றச்  சீஷர்கள்  கரைக்கு  ஏறக்குறைய  இருநூறுமுழத்  தூரத்தில்  இருந்தபடியினால்  படவிலிருந்து  கொண்டே  மீன்களுள்ள  வலையை  இழுத்துக்கொண்டு  வந்தார்கள்.  (யோவான்  21:8)

mat’rach  seesharga'l  karaikku  ea’rakku’raiya  irunoo’rumuzhath  thooraththil  irunthapadiyinaal  padavilirunthu  ko'ndea  meenga'lu'l'la  valaiyai  izhuththukko'ndu  vanthaarga'l.  (yoavaan  21:8)

அவர்கள்  கரையிலே  வந்திறங்கினபோது,  கரிநெருப்புப்  போட்டிருக்கிறதையும்,  அதின்மேல்  மீன்  வைத்திருக்கிறதையும்,  அப்பத்தையும்  கண்டார்கள்.  (யோவான்  21:9)

avarga'l  karaiyilea  vanthi’rangginapoathu,  karineruppup  poattirukki’rathaiyum,  athinmeal  meen  vaiththirukki’rathaiyum,  appaththaiyum  ka'ndaarga'l.  (yoavaan  21:9)

இயேசு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்பொழுது  பிடித்த  மீன்களில்  சிலவற்றைக்  கொண்டுவாருங்கள்  என்றார்.  (யோவான்  21:10)

iyeasu  avarga'lai  noakki:  neengga'l  ippozhuthu  pidiththa  meenga'lil  silavat’raik  ko'nduvaarungga'l  en’raar.  (yoavaan  21:10)

சீமோன்பேதுரு  படவில்  ஏறி,  நூற்றைம்பத்துமூன்று  பெரிய  மீன்களால்  நிறைந்த  வலையைக்  கரையில்  இழுத்தான்;  இத்தனை  மீன்கள்  இருந்தும்  வலை  கிழியவில்லை.  (யோவான்  21:11)

seemoanpeathuru  padavil  ea’ri,  noot’raimbaththumoon’ru  periya  meenga'laal  ni’raintha  valaiyaik  karaiyil  izhuththaan;  iththanai  meenga'l  irunthum  valai  kizhiyavillai.  (yoavaan  21:11)

இயேசு  அவர்களை  நோக்கி:  வாருங்கள்,  போஜனம்பண்ணுங்கள்  என்றார்.  அவரைக்  கர்த்தரென்று  சீஷர்கள்  அறிந்தபடியினால்  அவர்களில்  ஒருவனும்:  நீர்  யார்  என்று  கேட்கத்  துணியவில்லை.  (யோவான்  21:12)

iyeasu  avarga'lai  noakki:  vaarungga'l,  poajanampa'n'nungga'l  en’raar.  avaraik  karththaren’ru  seesharga'l  a’rinthapadiyinaal  avarga'lil  oruvanum:  neer  yaar  en’ru  keadkath  thu'niyavillai.  (yoavaan  21:12)

அப்பொழுது  இயேசு  வந்து,  அப்பத்தையும்  மீனையும்  எடுத்து,  அவர்களுக்குக்  கொடுத்தார்.  (யோவான்  21:13)

appozhuthu  iyeasu  vanthu,  appaththaiyum  meenaiyum  eduththu,  avarga'lukkuk  koduththaar.  (yoavaan  21:13)

இயேசு  மரித்தோரிலிருந்தெழுந்த  பின்பு  தம்முடைய  சீஷருக்கு  அருளின  தரிசனங்களில்  இது  மூன்றாவது  தரிசனம்.  (யோவான்  21:14)

iyeasu  mariththoarilirunthezhuntha  pinbu  thammudaiya  seesharukku  aru'lina  tharisanangga'lil  ithu  moon’raavathu  tharisanam.  (yoavaan  21:14)

அவர்கள்  போஜனம்பண்ணினபின்பு,  இயேசு  சீமோன்பேதுருவை  நோக்கி:  யோனாவின்  குமாரனாகிய  சீமோனே,  இவர்களிலும்  அதிகமாய்  நீ  என்னிடத்தில்  அன்பாயிருக்கிறாயா  என்றார்.  அதற்கு  அவன்:  ஆம்  ஆண்டவரே,  உம்மை  நேசிக்கிறேன்  என்பதை  நீர்  அறிவீர்  என்றான்.  அவர்:  என்  ஆட்டுக்குட்டிகளை  மேய்ப்பாயாக  என்றார்.  (யோவான்  21:15)

avarga'l  poajanampa'n'ninapinbu,  iyeasu  seemoanpeathuruvai  noakki:  yoanaavin  kumaaranaagiya  seemoanea,  ivarga'lilum  athigamaay  nee  ennidaththil  anbaayirukki’raayaa  en’raar.  atha’rku  avan:  aam  aa'ndavarea,  ummai  neasikki’rean  enbathai  neer  a’riveer  en’raan.  avar:  en  aattukkuttiga'lai  meayppaayaaga  en’raar.  (yoavaan  21:15)

இரண்டாந்தரம்  அவர்  அவனை  நோக்கி:  யோனாவின்  குமாரனாகிய  சீமோனே,  நீ  என்னிடத்தில்  அன்பாயிருக்கிறாயா  என்றார்.  அதற்கு  அவன்:  ஆம்  ஆண்டவரே,  உம்மை  நேசிக்கிறேன்  என்பதை  நீர்  அறிவீர்  என்றான்.  அவர்:  என்  ஆடுகளை  மேய்ப்பாயாக  என்றார்.  (யோவான்  21:16)

ira'ndaantharam  avar  avanai  noakki:  yoanaavin  kumaaranaagiya  seemoanea,  nee  ennidaththil  anbaayirukki’raayaa  en’raar.  atha’rku  avan:  aam  aa'ndavarea,  ummai  neasikki’rean  enbathai  neer  a’riveer  en’raan.  avar:  en  aaduga'lai  meayppaayaaga  en’raar.  (yoavaan  21:16)

மூன்றாந்தரம்  அவர்  அவனை  நோக்கி:  யோனாவின்  குமாரனாகிய  சீமோனே,  நீ  என்னை  நேசிக்கிறாயா  என்றார்.  என்னை  நேசிக்கிறாயா  என்று  அவர்  மூன்றாந்தரம்  தன்னைக்  கேட்டபடியினாலே,  பேதுரு  துக்கப்பட்டு:  ஆண்டவரே,  நீர்  எல்லாவற்றையும்  அறிந்திருக்கிறீர்,  நான்  உம்மை  நேசிக்கிறேன்  என்பதையும்  நீர்  அறிவீர்  என்றான்.  இயேசு:  என்  ஆடுகளை  மேய்ப்பாயாக  என்றார்.  (யோவான்  21:17)

moon’raantharam  avar  avanai  noakki:  yoanaavin  kumaaranaagiya  seemoanea,  nee  ennai  neasikki’raayaa  en’raar.  ennai  neasikki’raayaa  en’ru  avar  moon’raantharam  thannaik  keattapadiyinaalea,  peathuru  thukkappattu:  aa'ndavarea,  neer  ellaavat’raiyum  a’rinthirukki’reer,  naan  ummai  neasikki’rean  enbathaiyum  neer  a’riveer  en’raan.  iyeasu:  en  aaduga'lai  meayppaayaaga  en’raar.  (yoavaan  21:17)

நீ  இளவயதுள்ளவனாயிருந்தபோது  உன்னை  நீயே  அரைகட்டிக்கொண்டு,  உனக்கு  இஷ்டமான  இடங்களிலே  நடந்து  திரிந்தாய்;  நீ  முதிர்வயதுள்ளவனாகும்போது  உன்  கைகளை  நீட்டுவாய்;  வேறொருவன்  உன்  அரையைக்  கட்டி,  உனக்கு  இஷ்டமில்லாத  இடத்துக்கு  உன்னைக்  கொண்டுபோவான்  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (யோவான்  21:18)

nee  i'lavayathu'l'lavanaayirunthapoathu  unnai  neeyea  araikattikko'ndu,  unakku  ishdamaana  idangga'lilea  nadanthu  thirinthaay;  nee  muthirvayathu'l'lavanaagumpoathu  un  kaiga'lai  neettuvaay;  vea’roruvan  un  araiyaik  katti,  unakku  ishdamillaatha  idaththukku  unnaik  ko'ndupoavaan  en’ru  meyyaagavea  meyyaagavea  unakkuch  sollugi’rean  en’raar.  (yoavaan  21:18)

இன்னவிதமான  மரணத்தினாலே  அவன்  தேவனை  மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக்  குறிக்கும்படியாக  இப்படிச்  சொன்னார்.  அவர்  இதைச்  சொல்லியபின்பு,  அவனை  நோக்கி:  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  (யோவான்  21:19)

innavithamaana  mara'naththinaalea  avan  theavanai  magimaippaduththappoagi’raanenbathaik  ku’rikkumpadiyaaga  ippadich  sonnaar.  avar  ithaich  solliyapinbu,  avanai  noakki:  ennaip  pinpat’rivaa  en’raar.  (yoavaan  21:19)

பேதுரு  திரும்பிப்பார்த்து,  இயேசுவுக்கு  அன்பாயிருந்தவனும்,  இராப்போஜனம்பண்ணுகையில்  அவர்  மார்பிலே  சாய்ந்து:  ஆண்டவரே,  உம்மைக்  காட்டிக்கொடுக்கிறவன்  யார்  என்று  கேட்டவனுமாகிய  சீஷன்  பின்னே  வருகிறதைக்  கண்டான்.  (யோவான்  21:20)

peathuru  thirumbippaarththu,  iyeasuvukku  anbaayirunthavanum,  iraappoajanampa'n'nugaiyil  avar  maarbilea  saaynthu:  aa'ndavarea,  ummaik  kaattikkodukki’ravan  yaar  en’ru  keattavanumaagiya  seeshan  pinnea  varugi’rathaik  ka'ndaan.  (yoavaan  21:20)

அவனைக்  கண்டு,  பேதுரு  இயேசுவை  நோக்கி:  ஆண்டவரே,  இவன்  காரியம்  என்ன  என்றான்.  (யோவான்  21:21)

avanaik  ka'ndu,  peathuru  iyeasuvai  noakki:  aa'ndavarea,  ivan  kaariyam  enna  en’raan.  (yoavaan  21:21)

அதற்கு  இயேசு:  நான்  வருமளவும்  இவனிருக்க  எனக்குச்  சித்தமானால்,  உனக்கென்ன,  நீ  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  (யோவான்  21:22)

atha’rku  iyeasu:  naan  varuma'lavum  ivanirukka  enakkuch  siththamaanaal,  unakkenna,  nee  ennaip  pinpat’rivaa  en’raar.  (yoavaan  21:22)

ஆகையால்  அந்தச்  சீஷன்  மரிப்பதில்லையென்கிற  பேச்சு  சகோதரருக்குள்ளே  பரம்பிற்று.  ஆனாலும்,  அவன்  மரிப்பதில்லையென்று  இயேசு  சொல்லாமல்,  நான்  வருமளவும்  இவனிருக்க  எனக்குச்  சித்தமானால்  உனக்கென்னவென்று  சொன்னார்.  (யோவான்  21:23)

aagaiyaal  anthach  seeshan  marippathillaiyengi’ra  peachchu  sagoathararukku'l'lea  parambit’ru.  aanaalum,  avan  marippathillaiyen’ru  iyeasu  sollaamal,  naan  varuma'lavum  ivanirukka  enakkuch  siththamaanaal  unakkennaven’ru  sonnaar.  (yoavaan  21:23)

அந்தச்  சீஷனே  இவைகளைக்குறித்துச்  சாட்சிகொடுத்து  இவைகளை  எழுதினவன்;  அவனுடைய  சாட்சி  மெய்யென்று  அறிந்திருக்கிறோம்.  (யோவான்  21:24)

anthach  seeshanea  ivaiga'laikku’riththuch  saadchikoduththu  ivaiga'lai  ezhuthinavan;  avanudaiya  saadchi  meyyen’ru  a’rinthirukki’roam.  (yoavaan  21:24)

இயேசு  செய்த  வேறு  அநேக  காரியங்களுமுண்டு;  அவைகளை  ஒவ்வொன்றாக  எழுதினால்  எழுதப்படும்  புஸ்தகங்கள்  உலகம்  கொள்ளாதென்று  எண்ணுகிறேன்.  ஆமென்.  (யோவான்  21:25)

iyeasu  seytha  vea’ru  aneaga  kaariyangga'lumu'ndu;  avaiga'lai  ovvon’raaga  ezhuthinaal  ezhuthappadum  pusthagangga'l  ulagam  ko'l'laathen’ru  e'n'nugi’rean.  aamen.  (yoavaan  21:25)


Yoavaan 20 | யோவான் 20 | John 20

வாரத்தின்  முதல்நாள்  காலையில்,  அதிக  இருட்டோடே,  மகதலேனா  மரியாள்  கல்லறையினிடத்திற்கு  வந்து  கல்லறையை  அடைத்திருந்த  கல்  எடுத்துப்  போட்டிருக்கக்கண்டாள்.  (யோவான்  20:1)

vaaraththin  muthalnaa'l  kaalaiyil,  athiga  iruttoadea,  magathaleanaa  mariyaa'l  kalla’raiyinidaththi’rku  vanthu  kalla’raiyai  adaiththiruntha  kal  eduththup  poattirukkakka'ndaa'l.  (yoavaan  20:1)

உடனே  அவள்  ஓடி,  சீமோன்பேதுருவினிடத்திலும்  இயேசுவுக்கு  அன்பாயிருந்த  மற்றச்  சீஷனிடத்திலும்  போய்:  கர்த்தரைக்  கல்லறையிலிருந்து  எடுத்துக்கொண்டு  போய்விட்டார்கள்,  அவரை  வைத்த  இடம்  எங்களுக்குத்  தெரியவில்லை  என்றாள்.  (யோவான்  20:2)

udanea  ava'l  oadi,  seemoanpeathuruvinidaththilum  iyeasuvukku  anbaayiruntha  mat’rach  seeshanidaththilum  poay:  karththaraik  kalla’raiyilirunthu  eduththukko'ndu  poayvittaarga'l,  avarai  vaiththa  idam  engga'lukkuth  theriyavillai  en’raa'l.  (yoavaan  20:2)

அப்பொழுது  பேதுருவும்  மற்றச்  சீஷனும்  கல்லறையினிடத்திற்குப்  போகும்படி  புறப்பட்டு,  இருவரும்  ஒருமித்து  ஓடினார்கள்.  (யோவான்  20:3)

appozhuthu  peathuruvum  mat’rach  seeshanum  kalla’raiyinidaththi’rkup  poagumpadi  pu’rappattu,  iruvarum  orumiththu  oadinaarga'l.  (yoavaan  20:3)

பேதுருவைப்பார்க்கிலும்  மற்றச்  சீஷன்  துரிதமாய்  ஓடி,  முந்திக்  கல்லறையினிடத்தில்  வந்து,  (யோவான்  20:4)

peathuruvaippaarkkilum  mat’rach  seeshan  thurithamaay  oadi,  munthik  kalla’raiyinidaththil  vanthu,  (yoavaan  20:4)

அதற்குள்ளே  குனிந்துபார்த்து,  சீலைகள்  கிடக்கிறதைக்  கண்டான்;  ஆனாலும்  அவன்  உள்ளே  போகவில்லை.  (யோவான்  20:5)

atha’rku'l'lea  kuninthupaarththu,  seelaiga'l  kidakki’rathaik  ka'ndaan;  aanaalum  avan  u'l'lea  poagavillai.  (yoavaan  20:5)

சீமோன்பேதுரு  அவனுக்குப்  பின்னே  வந்து,  கல்லறைக்குள்ளே  பிரவேசித்து,  (யோவான்  20:6)

seemoanpeathuru  avanukkup  pinnea  vanthu,  kalla’raikku'l'lea  piraveasiththu,  (yoavaan  20:6)

சீலைகள்  கிடக்கிறதையும்,  அவருடைய  தலையில்  சுற்றியிருந்த  சீலை  மற்றச்  சீலைகளுடனே  வைத்திராமல்  தனியே  ஒரு  இடத்திலே  சுருட்டி  வைத்திருக்கிறதையும்  கண்டான்.  (யோவான்  20:7)

seelaiga'l  kidakki’rathaiyum,  avarudaiya  thalaiyil  sut’riyiruntha  seelai  mat’rach  seelaiga'ludanea  vaiththiraamal  thaniyea  oru  idaththilea  surutti  vaiththirukki’rathaiyum  ka'ndaan.  (yoavaan  20:7)

முந்திக்  கல்லறையினிடத்திற்கு  வந்த  மற்றச்  சீஷனும்  அப்பொழுது  உள்ளே  பிரவேசித்து,  கண்டு  விசுவாசித்தான்.  (யோவான்  20:8)

munthik  kalla’raiyinidaththi’rku  vantha  mat’rach  seeshanum  appozhuthu  u'l'lea  piraveasiththu,  ka'ndu  visuvaasiththaan.  (yoavaan  20:8)

அவர்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கவேண்டும்  என்கிற  வேதவாக்கியத்தை  அவர்கள்  இன்னும்  அறியாதிருந்தார்கள்.  (யோவான்  20:9)

avar  mariththoarilirunthu  ezhunthirukkavea'ndum  engi’ra  veathavaakkiyaththai  avarga'l  innum  a’riyaathirunthaarga'l.  (yoavaan  20:9)

பின்பு  அந்தச்  சீஷர்கள்  தங்களுடைய  இடத்திற்குத்  திரும்பிப்போனார்கள்.  (யோவான்  20:10)

pinbu  anthach  seesharga'l  thangga'ludaiya  idaththi’rkuth  thirumbippoanaarga'l.  (yoavaan  20:10)

மரியாள்  கல்லறையினருகே  வெளியே  நின்று  அழுதுகொண்டிருந்தாள்;  அப்படி  அழுதுகொண்டிருக்கையில்  அவள்  குனிந்து  கல்லறைக்குள்ளே  பார்த்து,  (யோவான்  20:11)

mariyaa'l  kalla’raiyinarugea  ve'liyea  nin’ru  azhuthuko'ndirunthaa'l;  appadi  azhuthuko'ndirukkaiyil  ava'l  kuninthu  kalla’raikku'l'lea  paarththu,  (yoavaan  20:11)

இயேசுவின்  சரீரம்  வைக்கப்பட்டிருந்த  இடத்திலே  வெள்ளுடை  தரித்தவர்களாய்  இரண்டு  தூதர்கள்,  தலைமாட்டில்  ஒருவனும்  கால்மாட்டில்  ஒருவனுமாக,  உட்கார்ந்திருக்கிறதைக்  கண்டாள்.  (யோவான்  20:12)

iyeasuvin  sareeram  vaikkappattiruntha  idaththilea  ve'l'ludai  thariththavarga'laay  ira'ndu  thootharga'l,  thalaimaattil  oruvanum  kaalmaattil  oruvanumaaga,  udkaarnthirukki’rathaik  ka'ndaa'l.  (yoavaan  20:12)

அவர்கள்  அவளை  நோக்கி:  ஸ்திரீயே,  ஏன்  அழுகிறாய்  என்றார்கள்.  அதற்கு  அவள்:  என்  ஆண்டவரை  எடுத்துக்கொண்டு  போய்விட்டார்கள்,  அவரை  வைத்த  இடம்  எனக்குத்  தெரியவில்லை  என்றாள்.  (யோவான்  20:13)

avarga'l  ava'lai  noakki:  sthireeyea,  ean  azhugi’raay  en’raarga'l.  atha’rku  ava'l:  en  aa'ndavarai  eduththukko'ndu  poayvittaarga'l,  avarai  vaiththa  idam  enakkuth  theriyavillai  en’raa'l.  (yoavaan  20:13)

இவைகளைச்  சொல்லிப்  பின்னாகத்  திரும்பி,  இயேசு  நிற்கிறதைக்  கண்டாள்;  ஆனாலும்  அவரை  இயேசு  என்று  அறியாதிருந்தாள்.  (யோவான்  20:14)

ivaiga'laich  sollip  pinnaagath  thirumbi,  iyeasu  ni’rki’rathaik  ka'ndaa'l;  aanaalum  avarai  iyeasu  en’ru  a’riyaathirunthaa'l.  (yoavaan  20:14)

இயேசு  அவளைப்  பார்த்து:  ஸ்திரீயே,  ஏன்  அழுகிறாய்,  யாரைத்  தேடுகிறாய்  என்றார்.  அவள்,  அவரைத்  தோட்டக்காரனென்று  எண்ணி:  ஐயா,  நீர்  அவரை  எடுத்துக்கொண்டு  போனதுண்டானால்,  அவரை  வைத்த  இடத்தை  எனக்குச்  சொல்லும்,  நான்  போய்  அவரை  எடுத்துக்கொள்ளுவேன்  என்றாள்.  (யோவான்  20:15)

iyeasu  ava'laip  paarththu:  sthireeyea,  ean  azhugi’raay,  yaaraith  theadugi’raay  en’raar.  ava'l,  avaraith  thoattakkaaranen’ru  e'n'ni:  aiyaa,  neer  avarai  eduththukko'ndu  poanathu'ndaanaal,  avarai  vaiththa  idaththai  enakkuch  sollum,  naan  poay  avarai  eduththukko'l'luvean  en’raa'l.  (yoavaan  20:15)

இயேசு  அவளை  நோக்கி:  மரியாளே  என்றார்.  அவள்  திரும்பிப்  பார்த்து:  ரபூனி  என்றாள்;  அதற்குப்  போதகரே  என்று  அர்த்தமாம்.  (யோவான்  20:16)

iyeasu  ava'lai  noakki:  mariyaa'lea  en’raar.  ava'l  thirumbip  paarththu:  rabooni  en’raa'l;  atha’rkup  poathagarea  en’ru  arththamaam.  (yoavaan  20:16)

இயேசு  அவளை  நோக்கி:  என்னைத்  தொடாதே,  நான்  இன்னும்  என்  பிதாவினிடத்திற்கு  ஏறிப்போகவில்லை;  நீ  என்  சகோதரரிடத்திற்குப்  போய்,  நான்  என்  பிதாவினிடத்திற்கும்  உங்கள்  பிதாவினிடத்திற்கும்,  என்  தேவனிடத்திற்கும்  உங்கள்  தேவனிடத்திற்கும்  ஏறிப்போகிறேன்  என்று  அவர்களுக்குச்  சொல்லு  என்றார்.  (யோவான்  20:17)

iyeasu  ava'lai  noakki:  ennaith  thodaathea,  naan  innum  en  pithaavinidaththi’rku  ea’rippoagavillai;  nee  en  sagoathararidaththi’rkup  poay,  naan  en  pithaavinidaththi’rkum  ungga'l  pithaavinidaththi’rkum,  en  theavanidaththi’rkum  ungga'l  theavanidaththi’rkum  ea’rippoagi’rean  en’ru  avarga'lukkuch  sollu  en’raar.  (yoavaan  20:17)

மகதலேனா  மரியாள்  போய்,  தான்  கர்த்தரைக்  கண்டதையும்,  அவர்  தன்னுடனே  சொன்னவைகளையும்  சீஷருக்கு  அறிவித்தாள்.  (யோவான்  20:18)

magathaleanaa  mariyaa'l  poay,  thaan  karththaraik  ka'ndathaiyum,  avar  thannudanea  sonnavaiga'laiyum  seesharukku  a’riviththaa'l.  (yoavaan  20:18)

வாரத்தின்  முதல்நாளாகிய  அன்றையத்தினம்  சாயங்காலவேளையிலே,  சீஷர்கள்  கூடியிருந்த  இடத்தில்,  யூதர்களுக்குப்  பயந்ததினால்  கதவுகள்  பூட்டியிருக்கையில்,  இயேசு  வந்து  நடுவே  நின்று:  உங்களுக்குச்  சமாதானம்  என்றார்.  (யோவான்  20:19)

vaaraththin  muthalnaa'laagiya  an’raiyaththinam  saayanggaalavea'laiyilea,  seesharga'l  koodiyiruntha  idaththil,  yootharga'lukkup  bayanthathinaal  kathavuga'l  poottiyirukkaiyil,  iyeasu  vanthu  naduvea  nin’ru:  ungga'lukkuch  samaathaanam  en’raar.  (yoavaan  20:19)

அவர்  இப்படிச்  சொல்லித்  தம்முடைய  கைகளையும்  விலாவையும்  அவர்களுக்குக்  காண்பித்தார்.  சீஷர்கள்  கர்த்தரைக்கண்டு  சந்தோஷப்பட்டார்கள்.  (யோவான்  20:20)

avar  ippadich  sollith  thammudaiya  kaiga'laiyum  vilaavaiyum  avarga'lukkuk  kaa'nbiththaar.  seesharga'l  karththaraikka'ndu  santhoashappattaarga'l.  (yoavaan  20:20)

இயேசு  மறுபடியும்  அவர்களை  நோக்கி:  உங்களுக்குச்  சமாதானமுண்டாவதாக;  பிதா  என்னை  அனுப்பினதுபோல  நானும்  உங்களை  அனுப்புகிறேன்  என்று  சொல்லி,  (யோவான்  20:21)

iyeasu  ma’rupadiyum  avarga'lai  noakki:  ungga'lukkuch  samaathaanamu'ndaavathaaga;  pithaa  ennai  anuppinathupoala  naanum  ungga'lai  anuppugi’rean  en’ru  solli,  (yoavaan  20:21)

அவர்கள்மேல்  ஊதி:  பரிசுத்த  ஆவியைப்  பெற்றுக்கொள்ளுங்கள்;  (யோவான்  20:22)

avarga'lmeal  oothi:  parisuththa  aaviyaip  pet’rukko'l'lungga'l;  (yoavaan  20:22)

எவர்களுடைய  பாவங்களை  மன்னிக்கிறீர்களோ  அவைகள்  அவர்களுக்கு  மன்னிக்கப்படும்,  எவர்களுடைய  பாவங்களை  மன்னியாதிருக்கிறீர்களோ  அவைகள்  அவர்களுக்கு  மன்னிக்கப்படாதிருக்கும்  என்றார்.  (யோவான்  20:23)

evarga'ludaiya  paavangga'lai  mannikki’reerga'loa  avaiga'l  avarga'lukku  mannikkappadum,  evarga'ludaiya  paavangga'lai  manniyaathirukki’reerga'loa  avaiga'l  avarga'lukku  mannikkappadaathirukkum  en’raar.  (yoavaan  20:23)

இயேசு  வந்திருந்தபோது  பன்னிருவரில்  ஒருவனாகிய  திதிமு  என்னப்பட்ட  தோமா  என்பவன்  அவர்களுடனேகூட  இருக்கவில்லை.  (யோவான்  20:24)

iyeasu  vanthirunthapoathu  panniruvaril  oruvanaagiya  thithimu  ennappatta  thoamaa  enbavan  avarga'ludaneakooda  irukkavillai.  (yoavaan  20:24)

மற்றச்  சீஷர்கள்:  கர்த்தரைக்  கண்டோம்  என்று  அவனுடனே  சொன்னார்கள்.  அதற்கு  அவன்:  அவருடைய  கைகளில்  ஆணிகளினாலுண்டான  காயத்தை  நான்  கண்டு,  அந்தக்  காயத்திலே  என்  விரலையிட்டு,  என்  கையை  அவருடைய  விலாவிலே  போட்டாலொழிய  விசுவாசிக்கமாட்டேன்  என்றான்.  (யோவான்  20:25)

mat’rach  seesharga'l:  karththaraik  ka'ndoam  en’ru  avanudanea  sonnaarga'l.  atha’rku  avan:  avarudaiya  kaiga'lil  aa'niga'linaalu'ndaana  kaayaththai  naan  ka'ndu,  anthak  kaayaththilea  en  viralaiyittu,  en  kaiyai  avarudaiya  vilaavilea  poattaalozhiya  visuvaasikkamaattean  en’raan.  (yoavaan  20:25)

மறுபடியும்  எட்டுநாளைக்குப்பின்பு  அவருடைய  சீஷர்கள்  வீட்டுக்குள்ளே  இருந்தார்கள்;  தோமாவும்  அவர்களுடனேகூட  இருந்தான்;  கதவுகள்  பூட்டப்பட்டிருந்தது.  அப்பொழுது  இயேசு  வந்து  நடுவே  நின்று:  உங்களுக்குச்  சமாதானம்  என்றார்.  (யோவான்  20:26)

ma’rupadiyum  ettunaa'laikkuppinbu  avarudaiya  seesharga'l  veettukku'l'lea  irunthaarga'l;  thoamaavum  avarga'ludaneakooda  irunthaan;  kathavuga'l  poottappattirunthathu.  appozhuthu  iyeasu  vanthu  naduvea  nin’ru:  ungga'lukkuch  samaathaanam  en’raar.  (yoavaan  20:26)

பின்பு  அவர்  தோமாவை  நோக்கி:  நீ  உன்  விரலை  இங்கே  நீட்டி,  என்  கைகளைப்  பார்,  உன்  கையை  நீட்டி,  என்  விலாவிலே  போடு,  அவிசுவாசியாயிராமல்  விசுவாசியாயிரு  என்றார்.  (யோவான்  20:27)

pinbu  avar  thoamaavai  noakki:  nee  un  viralai  inggea  neetti,  en  kaiga'laip  paar,  un  kaiyai  neetti,  en  vilaavilea  poadu,  avisuvaasiyaayiraamal  visuvaasiyaayiru  en’raar.  (yoavaan  20:27)

தோமா  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  என்  ஆண்டவரே!  என்  தேவனே!  என்றான்.  (யோவான்  20:28)

thoamaa  avarukkup  pirathiyuththaramaaga:  en  aa'ndavarea!  en  theavanea!  en’raan.  (yoavaan  20:28)

அதற்கு  இயேசு:  தோமாவே,  நீ  என்னைக்  கண்டதினாலே  விசுவாசித்தாய்,  காணாதிருந்தும்  விசுவாசிக்கிறவர்கள்  பாக்கியவான்கள்  என்றார்.  (யோவான்  20:29)

atha’rku  iyeasu:  thoamaavea,  nee  ennaik  ka'ndathinaalea  visuvaasiththaay,  kaa'naathirunthum  visuvaasikki’ravarga'l  baakkiyavaanga'l  en’raar.  (yoavaan  20:29)

இந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிராத  வேறு  அநேக  அற்புதங்களையும்  இயேசு  தமது  சீஷருக்கு  முன்பாகச்  செய்தார்.  (யோவான்  20:30)

inthap  pusthagaththil  ezhuthiyiraatha  vea’ru  aneaga  a’rputhangga'laiyum  iyeasu  thamathu  seesharukku  munbaagach  seythaar.  (yoavaan  20:30)

இயேசு  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து  என்று  நீங்கள்  விசுவாசிக்கும்படியாகவும்,  விசுவாசித்து  அவருடைய  நாமத்தினாலே  நித்தியஜீவனை  அடையும்படியாகவும்,  இவைகள்  எழுதப்பட்டிருக்கிறது.  (யோவான்  20:31)

iyeasu  theavanudaiya  kumaaranaagiya  ki’risthu  en’ru  neengga'l  visuvaasikkumpadiyaagavum,  visuvaasiththu  avarudaiya  naamaththinaalea  niththiyajeevanai  adaiyumpadiyaagavum,  ivaiga'l  ezhuthappattirukki’rathu.  (yoavaan  20:31)