Friday, May 13, 2016

Yoavaan 20 | யோவான் 20 | John 20

வாரத்தின்  முதல்நாள்  காலையில்,  அதிக  இருட்டோடே,  மகதலேனா  மரியாள்  கல்லறையினிடத்திற்கு  வந்து  கல்லறையை  அடைத்திருந்த  கல்  எடுத்துப்  போட்டிருக்கக்கண்டாள்.  (யோவான்  20:1)

vaaraththin  muthalnaa'l  kaalaiyil,  athiga  iruttoadea,  magathaleanaa  mariyaa'l  kalla’raiyinidaththi’rku  vanthu  kalla’raiyai  adaiththiruntha  kal  eduththup  poattirukkakka'ndaa'l.  (yoavaan  20:1)

உடனே  அவள்  ஓடி,  சீமோன்பேதுருவினிடத்திலும்  இயேசுவுக்கு  அன்பாயிருந்த  மற்றச்  சீஷனிடத்திலும்  போய்:  கர்த்தரைக்  கல்லறையிலிருந்து  எடுத்துக்கொண்டு  போய்விட்டார்கள்,  அவரை  வைத்த  இடம்  எங்களுக்குத்  தெரியவில்லை  என்றாள்.  (யோவான்  20:2)

udanea  ava'l  oadi,  seemoanpeathuruvinidaththilum  iyeasuvukku  anbaayiruntha  mat’rach  seeshanidaththilum  poay:  karththaraik  kalla’raiyilirunthu  eduththukko'ndu  poayvittaarga'l,  avarai  vaiththa  idam  engga'lukkuth  theriyavillai  en’raa'l.  (yoavaan  20:2)

அப்பொழுது  பேதுருவும்  மற்றச்  சீஷனும்  கல்லறையினிடத்திற்குப்  போகும்படி  புறப்பட்டு,  இருவரும்  ஒருமித்து  ஓடினார்கள்.  (யோவான்  20:3)

appozhuthu  peathuruvum  mat’rach  seeshanum  kalla’raiyinidaththi’rkup  poagumpadi  pu’rappattu,  iruvarum  orumiththu  oadinaarga'l.  (yoavaan  20:3)

பேதுருவைப்பார்க்கிலும்  மற்றச்  சீஷன்  துரிதமாய்  ஓடி,  முந்திக்  கல்லறையினிடத்தில்  வந்து,  (யோவான்  20:4)

peathuruvaippaarkkilum  mat’rach  seeshan  thurithamaay  oadi,  munthik  kalla’raiyinidaththil  vanthu,  (yoavaan  20:4)

அதற்குள்ளே  குனிந்துபார்த்து,  சீலைகள்  கிடக்கிறதைக்  கண்டான்;  ஆனாலும்  அவன்  உள்ளே  போகவில்லை.  (யோவான்  20:5)

atha’rku'l'lea  kuninthupaarththu,  seelaiga'l  kidakki’rathaik  ka'ndaan;  aanaalum  avan  u'l'lea  poagavillai.  (yoavaan  20:5)

சீமோன்பேதுரு  அவனுக்குப்  பின்னே  வந்து,  கல்லறைக்குள்ளே  பிரவேசித்து,  (யோவான்  20:6)

seemoanpeathuru  avanukkup  pinnea  vanthu,  kalla’raikku'l'lea  piraveasiththu,  (yoavaan  20:6)

சீலைகள்  கிடக்கிறதையும்,  அவருடைய  தலையில்  சுற்றியிருந்த  சீலை  மற்றச்  சீலைகளுடனே  வைத்திராமல்  தனியே  ஒரு  இடத்திலே  சுருட்டி  வைத்திருக்கிறதையும்  கண்டான்.  (யோவான்  20:7)

seelaiga'l  kidakki’rathaiyum,  avarudaiya  thalaiyil  sut’riyiruntha  seelai  mat’rach  seelaiga'ludanea  vaiththiraamal  thaniyea  oru  idaththilea  surutti  vaiththirukki’rathaiyum  ka'ndaan.  (yoavaan  20:7)

முந்திக்  கல்லறையினிடத்திற்கு  வந்த  மற்றச்  சீஷனும்  அப்பொழுது  உள்ளே  பிரவேசித்து,  கண்டு  விசுவாசித்தான்.  (யோவான்  20:8)

munthik  kalla’raiyinidaththi’rku  vantha  mat’rach  seeshanum  appozhuthu  u'l'lea  piraveasiththu,  ka'ndu  visuvaasiththaan.  (yoavaan  20:8)

அவர்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கவேண்டும்  என்கிற  வேதவாக்கியத்தை  அவர்கள்  இன்னும்  அறியாதிருந்தார்கள்.  (யோவான்  20:9)

avar  mariththoarilirunthu  ezhunthirukkavea'ndum  engi’ra  veathavaakkiyaththai  avarga'l  innum  a’riyaathirunthaarga'l.  (yoavaan  20:9)

பின்பு  அந்தச்  சீஷர்கள்  தங்களுடைய  இடத்திற்குத்  திரும்பிப்போனார்கள்.  (யோவான்  20:10)

pinbu  anthach  seesharga'l  thangga'ludaiya  idaththi’rkuth  thirumbippoanaarga'l.  (yoavaan  20:10)

மரியாள்  கல்லறையினருகே  வெளியே  நின்று  அழுதுகொண்டிருந்தாள்;  அப்படி  அழுதுகொண்டிருக்கையில்  அவள்  குனிந்து  கல்லறைக்குள்ளே  பார்த்து,  (யோவான்  20:11)

mariyaa'l  kalla’raiyinarugea  ve'liyea  nin’ru  azhuthuko'ndirunthaa'l;  appadi  azhuthuko'ndirukkaiyil  ava'l  kuninthu  kalla’raikku'l'lea  paarththu,  (yoavaan  20:11)

இயேசுவின்  சரீரம்  வைக்கப்பட்டிருந்த  இடத்திலே  வெள்ளுடை  தரித்தவர்களாய்  இரண்டு  தூதர்கள்,  தலைமாட்டில்  ஒருவனும்  கால்மாட்டில்  ஒருவனுமாக,  உட்கார்ந்திருக்கிறதைக்  கண்டாள்.  (யோவான்  20:12)

iyeasuvin  sareeram  vaikkappattiruntha  idaththilea  ve'l'ludai  thariththavarga'laay  ira'ndu  thootharga'l,  thalaimaattil  oruvanum  kaalmaattil  oruvanumaaga,  udkaarnthirukki’rathaik  ka'ndaa'l.  (yoavaan  20:12)

அவர்கள்  அவளை  நோக்கி:  ஸ்திரீயே,  ஏன்  அழுகிறாய்  என்றார்கள்.  அதற்கு  அவள்:  என்  ஆண்டவரை  எடுத்துக்கொண்டு  போய்விட்டார்கள்,  அவரை  வைத்த  இடம்  எனக்குத்  தெரியவில்லை  என்றாள்.  (யோவான்  20:13)

avarga'l  ava'lai  noakki:  sthireeyea,  ean  azhugi’raay  en’raarga'l.  atha’rku  ava'l:  en  aa'ndavarai  eduththukko'ndu  poayvittaarga'l,  avarai  vaiththa  idam  enakkuth  theriyavillai  en’raa'l.  (yoavaan  20:13)

இவைகளைச்  சொல்லிப்  பின்னாகத்  திரும்பி,  இயேசு  நிற்கிறதைக்  கண்டாள்;  ஆனாலும்  அவரை  இயேசு  என்று  அறியாதிருந்தாள்.  (யோவான்  20:14)

ivaiga'laich  sollip  pinnaagath  thirumbi,  iyeasu  ni’rki’rathaik  ka'ndaa'l;  aanaalum  avarai  iyeasu  en’ru  a’riyaathirunthaa'l.  (yoavaan  20:14)

இயேசு  அவளைப்  பார்த்து:  ஸ்திரீயே,  ஏன்  அழுகிறாய்,  யாரைத்  தேடுகிறாய்  என்றார்.  அவள்,  அவரைத்  தோட்டக்காரனென்று  எண்ணி:  ஐயா,  நீர்  அவரை  எடுத்துக்கொண்டு  போனதுண்டானால்,  அவரை  வைத்த  இடத்தை  எனக்குச்  சொல்லும்,  நான்  போய்  அவரை  எடுத்துக்கொள்ளுவேன்  என்றாள்.  (யோவான்  20:15)

iyeasu  ava'laip  paarththu:  sthireeyea,  ean  azhugi’raay,  yaaraith  theadugi’raay  en’raar.  ava'l,  avaraith  thoattakkaaranen’ru  e'n'ni:  aiyaa,  neer  avarai  eduththukko'ndu  poanathu'ndaanaal,  avarai  vaiththa  idaththai  enakkuch  sollum,  naan  poay  avarai  eduththukko'l'luvean  en’raa'l.  (yoavaan  20:15)

இயேசு  அவளை  நோக்கி:  மரியாளே  என்றார்.  அவள்  திரும்பிப்  பார்த்து:  ரபூனி  என்றாள்;  அதற்குப்  போதகரே  என்று  அர்த்தமாம்.  (யோவான்  20:16)

iyeasu  ava'lai  noakki:  mariyaa'lea  en’raar.  ava'l  thirumbip  paarththu:  rabooni  en’raa'l;  atha’rkup  poathagarea  en’ru  arththamaam.  (yoavaan  20:16)

இயேசு  அவளை  நோக்கி:  என்னைத்  தொடாதே,  நான்  இன்னும்  என்  பிதாவினிடத்திற்கு  ஏறிப்போகவில்லை;  நீ  என்  சகோதரரிடத்திற்குப்  போய்,  நான்  என்  பிதாவினிடத்திற்கும்  உங்கள்  பிதாவினிடத்திற்கும்,  என்  தேவனிடத்திற்கும்  உங்கள்  தேவனிடத்திற்கும்  ஏறிப்போகிறேன்  என்று  அவர்களுக்குச்  சொல்லு  என்றார்.  (யோவான்  20:17)

iyeasu  ava'lai  noakki:  ennaith  thodaathea,  naan  innum  en  pithaavinidaththi’rku  ea’rippoagavillai;  nee  en  sagoathararidaththi’rkup  poay,  naan  en  pithaavinidaththi’rkum  ungga'l  pithaavinidaththi’rkum,  en  theavanidaththi’rkum  ungga'l  theavanidaththi’rkum  ea’rippoagi’rean  en’ru  avarga'lukkuch  sollu  en’raar.  (yoavaan  20:17)

மகதலேனா  மரியாள்  போய்,  தான்  கர்த்தரைக்  கண்டதையும்,  அவர்  தன்னுடனே  சொன்னவைகளையும்  சீஷருக்கு  அறிவித்தாள்.  (யோவான்  20:18)

magathaleanaa  mariyaa'l  poay,  thaan  karththaraik  ka'ndathaiyum,  avar  thannudanea  sonnavaiga'laiyum  seesharukku  a’riviththaa'l.  (yoavaan  20:18)

வாரத்தின்  முதல்நாளாகிய  அன்றையத்தினம்  சாயங்காலவேளையிலே,  சீஷர்கள்  கூடியிருந்த  இடத்தில்,  யூதர்களுக்குப்  பயந்ததினால்  கதவுகள்  பூட்டியிருக்கையில்,  இயேசு  வந்து  நடுவே  நின்று:  உங்களுக்குச்  சமாதானம்  என்றார்.  (யோவான்  20:19)

vaaraththin  muthalnaa'laagiya  an’raiyaththinam  saayanggaalavea'laiyilea,  seesharga'l  koodiyiruntha  idaththil,  yootharga'lukkup  bayanthathinaal  kathavuga'l  poottiyirukkaiyil,  iyeasu  vanthu  naduvea  nin’ru:  ungga'lukkuch  samaathaanam  en’raar.  (yoavaan  20:19)

அவர்  இப்படிச்  சொல்லித்  தம்முடைய  கைகளையும்  விலாவையும்  அவர்களுக்குக்  காண்பித்தார்.  சீஷர்கள்  கர்த்தரைக்கண்டு  சந்தோஷப்பட்டார்கள்.  (யோவான்  20:20)

avar  ippadich  sollith  thammudaiya  kaiga'laiyum  vilaavaiyum  avarga'lukkuk  kaa'nbiththaar.  seesharga'l  karththaraikka'ndu  santhoashappattaarga'l.  (yoavaan  20:20)

இயேசு  மறுபடியும்  அவர்களை  நோக்கி:  உங்களுக்குச்  சமாதானமுண்டாவதாக;  பிதா  என்னை  அனுப்பினதுபோல  நானும்  உங்களை  அனுப்புகிறேன்  என்று  சொல்லி,  (யோவான்  20:21)

iyeasu  ma’rupadiyum  avarga'lai  noakki:  ungga'lukkuch  samaathaanamu'ndaavathaaga;  pithaa  ennai  anuppinathupoala  naanum  ungga'lai  anuppugi’rean  en’ru  solli,  (yoavaan  20:21)

அவர்கள்மேல்  ஊதி:  பரிசுத்த  ஆவியைப்  பெற்றுக்கொள்ளுங்கள்;  (யோவான்  20:22)

avarga'lmeal  oothi:  parisuththa  aaviyaip  pet’rukko'l'lungga'l;  (yoavaan  20:22)

எவர்களுடைய  பாவங்களை  மன்னிக்கிறீர்களோ  அவைகள்  அவர்களுக்கு  மன்னிக்கப்படும்,  எவர்களுடைய  பாவங்களை  மன்னியாதிருக்கிறீர்களோ  அவைகள்  அவர்களுக்கு  மன்னிக்கப்படாதிருக்கும்  என்றார்.  (யோவான்  20:23)

evarga'ludaiya  paavangga'lai  mannikki’reerga'loa  avaiga'l  avarga'lukku  mannikkappadum,  evarga'ludaiya  paavangga'lai  manniyaathirukki’reerga'loa  avaiga'l  avarga'lukku  mannikkappadaathirukkum  en’raar.  (yoavaan  20:23)

இயேசு  வந்திருந்தபோது  பன்னிருவரில்  ஒருவனாகிய  திதிமு  என்னப்பட்ட  தோமா  என்பவன்  அவர்களுடனேகூட  இருக்கவில்லை.  (யோவான்  20:24)

iyeasu  vanthirunthapoathu  panniruvaril  oruvanaagiya  thithimu  ennappatta  thoamaa  enbavan  avarga'ludaneakooda  irukkavillai.  (yoavaan  20:24)

மற்றச்  சீஷர்கள்:  கர்த்தரைக்  கண்டோம்  என்று  அவனுடனே  சொன்னார்கள்.  அதற்கு  அவன்:  அவருடைய  கைகளில்  ஆணிகளினாலுண்டான  காயத்தை  நான்  கண்டு,  அந்தக்  காயத்திலே  என்  விரலையிட்டு,  என்  கையை  அவருடைய  விலாவிலே  போட்டாலொழிய  விசுவாசிக்கமாட்டேன்  என்றான்.  (யோவான்  20:25)

mat’rach  seesharga'l:  karththaraik  ka'ndoam  en’ru  avanudanea  sonnaarga'l.  atha’rku  avan:  avarudaiya  kaiga'lil  aa'niga'linaalu'ndaana  kaayaththai  naan  ka'ndu,  anthak  kaayaththilea  en  viralaiyittu,  en  kaiyai  avarudaiya  vilaavilea  poattaalozhiya  visuvaasikkamaattean  en’raan.  (yoavaan  20:25)

மறுபடியும்  எட்டுநாளைக்குப்பின்பு  அவருடைய  சீஷர்கள்  வீட்டுக்குள்ளே  இருந்தார்கள்;  தோமாவும்  அவர்களுடனேகூட  இருந்தான்;  கதவுகள்  பூட்டப்பட்டிருந்தது.  அப்பொழுது  இயேசு  வந்து  நடுவே  நின்று:  உங்களுக்குச்  சமாதானம்  என்றார்.  (யோவான்  20:26)

ma’rupadiyum  ettunaa'laikkuppinbu  avarudaiya  seesharga'l  veettukku'l'lea  irunthaarga'l;  thoamaavum  avarga'ludaneakooda  irunthaan;  kathavuga'l  poottappattirunthathu.  appozhuthu  iyeasu  vanthu  naduvea  nin’ru:  ungga'lukkuch  samaathaanam  en’raar.  (yoavaan  20:26)

பின்பு  அவர்  தோமாவை  நோக்கி:  நீ  உன்  விரலை  இங்கே  நீட்டி,  என்  கைகளைப்  பார்,  உன்  கையை  நீட்டி,  என்  விலாவிலே  போடு,  அவிசுவாசியாயிராமல்  விசுவாசியாயிரு  என்றார்.  (யோவான்  20:27)

pinbu  avar  thoamaavai  noakki:  nee  un  viralai  inggea  neetti,  en  kaiga'laip  paar,  un  kaiyai  neetti,  en  vilaavilea  poadu,  avisuvaasiyaayiraamal  visuvaasiyaayiru  en’raar.  (yoavaan  20:27)

தோமா  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  என்  ஆண்டவரே!  என்  தேவனே!  என்றான்.  (யோவான்  20:28)

thoamaa  avarukkup  pirathiyuththaramaaga:  en  aa'ndavarea!  en  theavanea!  en’raan.  (yoavaan  20:28)

அதற்கு  இயேசு:  தோமாவே,  நீ  என்னைக்  கண்டதினாலே  விசுவாசித்தாய்,  காணாதிருந்தும்  விசுவாசிக்கிறவர்கள்  பாக்கியவான்கள்  என்றார்.  (யோவான்  20:29)

atha’rku  iyeasu:  thoamaavea,  nee  ennaik  ka'ndathinaalea  visuvaasiththaay,  kaa'naathirunthum  visuvaasikki’ravarga'l  baakkiyavaanga'l  en’raar.  (yoavaan  20:29)

இந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிராத  வேறு  அநேக  அற்புதங்களையும்  இயேசு  தமது  சீஷருக்கு  முன்பாகச்  செய்தார்.  (யோவான்  20:30)

inthap  pusthagaththil  ezhuthiyiraatha  vea’ru  aneaga  a’rputhangga'laiyum  iyeasu  thamathu  seesharukku  munbaagach  seythaar.  (yoavaan  20:30)

இயேசு  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து  என்று  நீங்கள்  விசுவாசிக்கும்படியாகவும்,  விசுவாசித்து  அவருடைய  நாமத்தினாலே  நித்தியஜீவனை  அடையும்படியாகவும்,  இவைகள்  எழுதப்பட்டிருக்கிறது.  (யோவான்  20:31)

iyeasu  theavanudaiya  kumaaranaagiya  ki’risthu  en’ru  neengga'l  visuvaasikkumpadiyaagavum,  visuvaasiththu  avarudaiya  naamaththinaalea  niththiyajeevanai  adaiyumpadiyaagavum,  ivaiga'l  ezhuthappattirukki’rathu.  (yoavaan  20:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!