Showing posts with label நீதிமொழிகள். Show all posts
Showing posts with label நீதிமொழிகள். Show all posts

Monday, July 04, 2016

Neethimozhiga'l 30 | நீதிமொழிகள் 30 | Proverbs 30

யாக்கேயின்  குமாரனாகிய  ஆகூர்  என்னும்  புருஷன்  ஈத்தியேலுக்கு  வசனித்து,  ஈத்தியேலுக்கும்  ஊகாலுக்கும்  உரைத்த  உபதேச  வாக்கியங்களாவன:  (நீதிமொழிகள்  30:1)

yaakkeayin  kumaaranaagiya  aakoor  ennum  purushan  eeththiyealukku  vasaniththu,  eeththiyealukkum  ookaalukkum  uraiththa  ubatheasa  vaakkiyangga'laavana:  (neethimozhiga’l  30:1)

மனுஷரெல்லாரிலும்  நான்  மூடன்;  மனுஷருக்கேற்ற  புத்தி  எனக்கு  இல்லை.  (நீதிமொழிகள்  30:2)

manusharellaarilum  naan  moodan;  manusharukkeat’ra  buththi  enakku  illai.  (neethimozhiga’l  30:2)

நான்  ஞானத்தைக்  கற்கவும்  இல்லை,  பரிசுத்தரின்  அறிவை  அறிந்துகொள்ளவும்  இல்லை.  (நீதிமொழிகள்  30:3)

naan  gnaanaththaik  ka’rkavum  illai,  parisuththarin  a’rivai  a’rinthuko'l'lavum  illai.  (neethimozhiga’l  30:3)

வானத்துக்கு  ஏறியிறங்கினவர்  யார்?  காற்றைத்  தமது  கைப்பிடிகளில்  அடக்கினவர்  யார்?  தண்ணீர்களை  வஸ்திரத்திலே  கட்டினவர்  யார்?  பூமியின்  எல்லைகளையெல்லாம்  ஸ்தாபித்தவர்  யார்?  அவருடைய  நாமம்  என்ன?  அவர்  குமாரனுடைய  நாமம்  என்ன?  அதை  அறிவாயோ?  (நீதிமொழிகள்  30:4)

vaanaththukku  ea’riyi’rangginavar  yaar?  kaat’raith  thamathu  kaippidiga'lil  adakkinavar  yaar?  tha'n'neerga'lai  vasthiraththilea  kattinavar  yaar?  boomiyin  ellaiga'laiyellaam  sthaabiththavar  yaar?  avarudaiya  naamam  enna?  avar  kumaaranudaiya  naamam  enna?  athai  a’rivaayoa?  (neethimozhiga’l  30:4)

தேவனுடைய  வசனமெல்லாம்  புடமிடப்பட்டவைகள்;  தம்மை  அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு  அவர்  கேடகமானவர்.  (நீதிமொழிகள்  30:5)

theavanudaiya  vasanamellaam  pudamidappattavaiga'l;  thammai  a'ndikko'l'lugi’ravarga'lukku  avar  keadagamaanavar.  (neethimozhiga’l  30:5)

அவருடைய  வசனங்களோடு  ஒன்றையும்  கூட்டாதே,  கூட்டினால்  அவர்  உன்னைக்  கடிந்துகொள்வார்,  நீ  பொய்யனாவாய்.  (நீதிமொழிகள்  30:6)

avarudaiya  vasanangga'loadu  on’raiyum  koottaathea,  koottinaal  avar  unnaik  kadinthuko'lvaar,  nee  poyyanaavaay.  (neethimozhiga’l  30:6)

இரண்டு  மனு  உம்மிடத்தில்  கேட்கிறேன்;  நான்  மரிக்கும்பரியந்தமும்  அவைகளை  எனக்கு  மறுக்காமல்  தாரும்.  (நீதிமொழிகள்  30:7)

ira'ndu  manu  ummidaththil  keadki’rean;  naan  marikkumpariyanthamum  avaiga'lai  enakku  ma’rukkaamal  thaarum.  (neethimozhiga’l  30:7)

மாயையையும்  பொய்வசனிப்பையும்  எனக்குத்  தூரப்படுத்தும்;  தரித்திரத்தையும்  ஐசுவரியத்தையும்  எனக்குக்  கொடாதிருப்பீராக.  (நீதிமொழிகள்  30:8)

maayaiyaiyum  poyvasanippaiyum  enakkuth  thoorappaduththum;  thariththiraththaiyum  aisuvariyaththaiyum  enakkuk  kodaathiruppeeraaga.  (neethimozhiga’l  30:8)

நான்  பரிபூரணம்  அடைகிறதினால்  மறுதலித்து,  கர்த்தர்  யார்  என்று  சொல்லாதபடிக்கும்;  தரித்திரப்படுகிறதினால்  திருடி,  என்  தேவனுடைய  நாமத்தை  வீணிலே  வழங்காதபடிக்கும்,  என்  படியை  எனக்கு  அளந்து  என்னைப்  போஷித்தருளும்.  (நீதிமொழிகள்  30:9)

naan  paripoora'nam  adaigi’rathinaal  ma’ruthaliththu,  karththar  yaar  en’ru  sollaathapadikkum;  thariththirappadugi’rathinaal  thirudi,  en  theavanudaiya  naamaththai  vee'nilea  vazhanggaathapadikkum,  en  padiyai  enakku  a'lanthu  ennaip  poashiththaru'lum.  (neethimozhiga’l  30:9)

எஜமானிடத்தில்  அவனுடைய  வேலைக்காரன்மேல்  குற்றஞ்சுமத்தாதே;  அவன்  உன்னைச்  சபிப்பான்,  நீ  குற்றவாளியாகக்  காணப்படுவாய்.  (நீதிமொழிகள்  30:10)

ejamaanidaththil  avanudaiya  vealaikkaaranmeal  kut’ragnsumaththaathea;  avan  unnaich  sabippaan,  nee  kut’ravaa'liyaagak  kaa'nappaduvaay.  (neethimozhiga’l  30:10)

தங்கள்  தகப்பனைச்  சபித்தும்,  தங்கள்  தாயை  ஆசீர்வதியாமலும்  இருக்கிற  சந்ததியாருமுண்டு.  (நீதிமொழிகள்  30:11)

thangga'l  thagappanaich  sabiththum,  thangga'l  thaayai  aaseervathiyaamalum  irukki’ra  santhathiyaarumu'ndu.  (neethimozhiga’l  30:11)

தாங்கள்  அழுக்கறக்  கழுவப்படாமலிருந்தும்,  தங்கள்  பார்வைக்குச்  சுத்தமாகத்  தோன்றுகிற  சந்ததியாருமுண்டு.  (நீதிமொழிகள்  30:12)

thaangga'l  azhukka’rak  kazhuvappadaamalirunthum,  thangga'l  paarvaikkuch  suththamaagath  thoan’rugi’ra  santhathiyaarumu'ndu.  (neethimozhiga’l  30:12)

வேறொரு  சந்ததியாருமுண்டு;  அவர்கள்  கண்கள்  எத்தனை  மேட்டிமையும்  அவர்கள்  இமைகள்  எத்தனை  நெறிப்புமானவைகள்.  (நீதிமொழிகள்  30:13)

vea’roru  santhathiyaarumu'ndu;  avarga'l  ka'nga'l  eththanai  meattimaiyum  avarga'l  imaiga'l  eththanai  ne’rippumaanavaiga'l.  (neethimozhiga’l  30:13)

தேசத்தில்  சிறுமையானவர்களையும்  மனுஷரில்  எளிமையானவர்களையும்  பட்சிப்பதற்குக்  கட்கங்களையொத்த  பற்களையும்  கத்திகளையொத்த  கடைவாய்ப்பற்களையுமுடைய  சந்ததியாருமுண்டு.  (நீதிமொழிகள்  30:14)

theasaththil  si’rumaiyaanavarga'laiyum  manusharil  e'limaiyaanavarga'laiyum  padchippatha’rkuk  kadkangga'laiyoththa  pa’rka'laiyum  kaththiga'laiyoththa  kadaivaayppa’rka'laiyumudaiya  santhathiyaarumu'ndu.  (neethimozhiga’l  30:14)

தா,  தா,  என்கிற  இரண்டு  குமாரத்திகள்  அட்டைக்கு  உண்டு.  திருப்தியடையாத  மூன்றுண்டு,  போதும்  என்று  சொல்லாத  நான்குமுண்டு.  (நீதிமொழிகள்  30:15)

thaa,  thaa,  engi’ra  ira'ndu  kumaaraththiga'l  attaikku  u'ndu.  thirupthiyadaiyaatha  moon’ru'ndu,  poathum  en’ru  sollaatha  naangumu'ndu.  (neethimozhiga’l  30:15)

அவையாவன:  பாதாளமும்,  மலட்டுக்  கர்ப்பமும்,  தண்ணீரால்  திருப்தியடையாத  நிலமும்,  போதுமென்று  சொல்லாத  அக்கினியுமே.  (நீதிமொழிகள்  30:16)

avaiyaavana:  paathaa'lamum,  malattuk  karppamum,  tha'n'neeraal  thirupthiyadaiyaatha  nilamum,  poathumen’ru  sollaatha  akkiniyumea.  (neethimozhiga’l  30:16)

தகப்பனைப்  பரியாசம்பண்ணி,  தாயின்  கட்டளையை  அசட்டைபண்ணுகிற  கண்ணை  நதியின்  காகங்கள்  பிடுங்கும்,  கழுகின்  குஞ்சுகள்  தின்னும்.  (நீதிமொழிகள்  30:17)

thagappanaip  pariyaasampa'n'ni,  thaayin  katta'laiyai  asattaipa'n'nugi’ra  ka'n'nai  nathiyin  kaagangga'l  pidunggum,  kazhugin  kugnchuga'l  thinnum.  (neethimozhiga’l  30:17)

எனக்கு  மிகவும்  ஆச்சரியமானவைகள்  மூன்றுண்டு,  என்  புத்திக்கெட்டாதவைகள்  நான்குமுண்டு.  (நீதிமொழிகள்  30:18)

enakku  migavum  aachchariyamaanavaiga'l  moon’ru'ndu,  en  buththikkettaathavaiga'l  naangumu'ndu.  (neethimozhiga’l  30:18)

அவையாவன:  ஆகாயத்தில்  கழுகினுடைய  வழியும்,  கன்மலையின்மேல்  பாம்பினுடைய  வழியும்,  நடுக்கடலில்  கப்பலினுடைய  வழியும்,  ஒரு  கன்னிகையை  நாடிய  மனுஷனுடைய  வழியுமே.  (நீதிமொழிகள்  30:19)

avaiyaavana:  aagaayaththil  kazhuginudaiya  vazhiyum,  kanmalaiyinmeal  paambinudaiya  vazhiyum,  nadukkadalil  kappalinudaiya  vazhiyum,  oru  kannigaiyai  naadiya  manushanudaiya  vazhiyumea.  (neethimozhiga’l  30:19)

அப்படியே  விபசாரஸ்திரீயினுடைய  வழியும்  இருக்கிறது;  அவள்  தின்று,  தன்  வாயைத்  துடைத்து:  நான்  ஒரு  பாவமும்  செய்யவில்லை  என்பாள்.  (நீதிமொழிகள்  30:20)

appadiyea  vibasaarasthireeyinudaiya  vazhiyum  irukki’rathu;  ava'l  thin’ru,  than  vaayaith  thudaiththu:  naan  oru  paavamum  seyyavillai  enbaa'l.  (neethimozhiga’l  30:20)

மூன்றினிமித்தம்  பூமி  சஞ்சலப்படுகிறது,  நான்கையும்  அது  தாங்கமாட்டாது.  (நீதிமொழிகள்  30:21)

moon’rinimiththam  boomi  sagnchalappadugi’rathu,  naangaiyum  athu  thaanggamaattaathu.  (neethimozhiga’l  30:21)

அரசாளுகிற  அடிமையினிமித்தமும்,  போஜனத்தால்  திருப்தியான  மூடனினிமித்தமும்,  (நீதிமொழிகள்  30:22)

arasaa'lugi’ra  adimaiyinimiththamum,  poajanaththaal  thirupthiyaana  moodaninimiththamum,  (neethimozhiga’l  30:22)

பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும்,  புருஷனுக்கு  வாழ்க்கைப்பட்ட  ஸ்திரீயினிமித்தமும்,  தன்  நாச்சியாருக்குப்  பதிலாக  இல்லாளாகும்  அடிமைப்பெண்ணினிமித்தமுமே.  (நீதிமொழிகள்  30:23)

pagaikkappadaththakkava'laayirunthum,  purushanukku  vaazhkkaippatta  sthireeyinimiththamum,  than  naachchiyaarukkup  bathilaaga  illaa'laagum  adimaippe'n'ninimiththamumea.  (neethimozhiga’l  30:23)

பூமியில்  சிறியவைகளாயிருந்தும்,  மகா  ஞானமுள்ளவைகள்  நான்குண்டு.  (நீதிமொழிகள்  30:24)

boomiyil  si’riyavaiga'laayirunthum,  mahaa  gnaanamu'l'lavaiga'l  naangu'ndu.  (neethimozhiga’l  30:24)

அவையாவன:  அற்பமான  ஜெந்துவாயிருந்தும்,  கோடைகாலத்திலே  தங்கள்  ஆகாரத்தைச்  சம்பாதிக்கிற  எறும்பும்,  (நீதிமொழிகள்  30:25)

avaiyaavana:  a’rpamaana  jenthuvaayirunthum,  koadaikaalaththilea  thangga'l  aagaaraththaich  sambaathikki’ra  e’rumbum,  (neethimozhiga’l  30:25)

சத்துவமற்ற  ஜெந்துவாயிருந்தும்,  தங்கள்  வீட்டைக்  கன்மலையிலே  தோண்டிவைக்கும்  குழிமுசல்களும்,  (நீதிமொழிகள்  30:26)

saththuvamat’ra  jenthuvaayirunthum,  thangga'l  veettaik  kanmalaiyilea  thoa'ndivaikkum  kuzhimusalga'lum,  (neethimozhiga’l  30:26)

ராஜா  இல்லாதிருந்தும்,  பவுஞ்சு  பவுஞ்சாய்ப்  புறப்படுகிற  வெட்டுக்கிளிகளும்,  (நீதிமொழிகள்  30:27)

raajaa  illaathirunthum,  pavugnchu  pavugnchaayp  pu’rappadugi’ra  vettukki'liga'lum,  (neethimozhiga’l  30:27)

தன்  கைகளினால்  வலையைப்  பின்னி,  அரசர்  அரமனைகளிலிருக்கிற  சிலந்திப்  பூச்சியுமே.  (நீதிமொழிகள்  30:28)

than  kaiga'linaal  valaiyaip  pinni,  arasar  aramanaiga'lilirukki’ra  silanthip  poochchiyumea.  (neethimozhiga’l  30:28)

விநோதமாய்  அடிவைத்து  நடக்கிறவைகள்  மூன்றுண்டு;  விநோத  நடையுள்ளவைகள்  நாலுமுண்டு.  (நீதிமொழிகள்  30:29)

vinoathamaay  adivaiththu  nadakki’ravaiga'l  moon’ru'ndu;  vinoatha  nadaiyu'l'lavaiga'l  naalumu'ndu.  (neethimozhiga’l  30:29)

அவையாவன:  மிருகங்களில்  சவுரியமானதும்  ஒன்றுக்கும்  பின்னிடையாததுமாகிய  சிங்கமும்,  (நீதிமொழிகள்  30:30)

avaiyaavana:  mirugangga'lil  savuriyamaanathum  on’rukkum  pinnidaiyaathathumaagiya  singgamum,  (neethimozhiga’l  30:30)

போர்க்குதிரையும்,  வெள்ளாட்டுக்கடாவும்,  ஒருவரும்  எதிர்க்கக்கூடாத  ராஜாவுமே.  (நீதிமொழிகள்  30:31)

poarkkuthiraiyum,  ve'l'laattukkadaavum,  oruvarum  ethirkkakkoodaatha  raajaavumea.  (neethimozhiga’l  30:31)

நீ  மேட்டிமையானதினால்  பைத்தியமாய்  நடந்து,  துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால்,  கையினால்  வாயை  மூடு.  (நீதிமொழிகள்  30:32)

nee  meattimaiyaanathinaal  paiththiyamaay  nadanthu,  thurchsinthanaiyu'l'lavanaayirunthaayaanaal,  kaiyinaal  vaayai  moodu.  (neethimozhiga’l  30:32)

பாலைக்  கடைதல்  வெண்ணெயைப்  பிறப்பிக்கும்;  மூக்கைப்  பிசைதல்  இரத்தத்தைப்  பிறப்பிக்கும்;  அப்படியே  கோபத்தைக்  கிண்டிவிடுதல்  சண்டையைப்  பிறப்பிக்கும்.  (நீதிமொழிகள்  30:33)

paalaik  kadaithal  ve'n'neyaip  pi’rappikkum;  mookkaip  pisaithal  iraththaththaip  pi’rappikkum;  appadiyea  koabaththaik  ki'ndividuthal  sa'ndaiyaip  pi’rappikkum.  (neethimozhiga’l  30:33)


Neethimozhiga'l 29 | நீதிமொழிகள் 29 | Proverbs 29

அடிக்கடி  கடிந்துகொள்ளப்பட்டும்  தன்  பிடரியைக்  கடினப்படுத்துகிறவன்  சகாயமின்றிச்  சடிதியில்  நாசமடைவான்.  (நீதிமொழிகள்  29:1)

adikkadi  kadinthuko'l'lappattum  than  pidariyaik  kadinappaduththugi’ravan  sagaayamin’rich  sadithiyil  naasamadaivaan.  (neethimozhiga’l  29:1)

நீதிமான்கள்  பெருகினால்  ஜனங்கள்  மகிழுவார்கள்;  துன்மார்க்கர்  ஆளும்போதோ  ஜனங்கள்  தவிப்பார்கள்.  (நீதிமொழிகள்  29:2)

neethimaanga'l  peruginaal  janangga'l  magizhuvaarga'l;  thunmaarkkar  aa'lumpoathoa  janangga'l  thavippaarga'l.  (neethimozhiga’l  29:2)

ஞானத்தில்  பிரியப்படுகிறவன்  தன்  தகப்பனை  மகிழப்பண்ணுகிறான்;  வேசிகளோடே  தொந்திப்பானவனோ  ஆஸ்தியை  அழிக்கிறான்.  (நீதிமொழிகள்  29:3)

gnaanaththil  piriyappadugi’ravan  than  thagappanai  magizhappa'n'nugi’raan;  veasiga'loadea  thonthippaanavanoa  aasthiyai  azhikki’raan.  (neethimozhiga’l  29:3)

நியாயத்தினால்  ராஜா  தேசத்தை  நிலைநிறுத்துகிறான்;  பரிதானப்பிரியனோ  அதைக்  கவிழ்க்கிறான்.  (நீதிமொழிகள்  29:4)

niyaayaththinaal  raajaa  theasaththai  nilaini’ruththugi’raan;  parithaanappiriyanoa  athaik  kavizhkki’raan.  (neethimozhiga’l  29:4)

பிறனை  முகஸ்துதி  செய்கிறவன்,  அவன்  கால்களுக்கு  வலையை  விரிக்கிறான்.  (நீதிமொழிகள்  29:5)

pi’ranai  mugasthuthi  seygi’ravan,  avan  kaalga'lukku  valaiyai  virikki’raan.  (neethimozhiga’l  29:5)

துஷ்டனுடைய  துரோகத்திலே  கண்ணியிருக்கிறது;  நீதிமானோ  பாடி  மகிழுகிறான்.  (நீதிமொழிகள்  29:6)

thushdanudaiya  thuroagaththilea  ka'n'niyirukki’rathu;  neethimaanoa  paadi  magizhugi’raan.  (neethimozhiga’l  29:6)

நீதிமான்  ஏழைகளின்  நியாயத்தைக்  கவனித்தறிகிறான்;  துன்மார்க்கனோ  அதை  அறிய  விரும்பான்.  (நீதிமொழிகள்  29:7)

neethimaan  eazhaiga'lin  niyaayaththaik  kavaniththa’rigi’raan;  thunmaarkkanoa  athai  a’riya  virumbaan.  (neethimozhiga’l  29:7)

பரியாசக்காரர்  பட்டணத்தில்  தீக்கொளுத்திவிடுகிறார்கள்;  ஞானிகளோ  குரோதத்தை  விலக்குகிறார்கள்.  (நீதிமொழிகள்  29:8)

pariyaasakkaarar  patta'naththil  theekko'luththividugi’raarga'l;  gnaaniga'loa  kuroathaththai  vilakkugi’raarga'l.  (neethimozhiga’l  29:8)

ஞானி  மூடனுடன்  வழக்காடுகையில்,  சினந்தாலும்  சிரித்தாலும்  அமைதியில்லை.  (நீதிமொழிகள்  29:9)

gnaani  moodanudan  vazhakkaadugaiyil,  sinanthaalum  siriththaalum  amaithiyillai.  (neethimozhiga’l  29:9)

இரத்தப்பிரியர்  உத்தமனைப்  பகைக்கிறார்கள்;  செம்மையானவர்களோ  அவனுடைய  பிராணனைக்  காப்பாற்றுகிறார்கள்.  (நீதிமொழிகள்  29:10)

iraththappiriyar  uththamanaip  pagaikki’raarga'l;  semmaiyaanavarga'loa  avanudaiya  piraa'nanaik  kaappaat’rugi’raarga'l.  (neethimozhiga’l  29:10)

மூடன்  தன்  உள்ளத்தையெல்லாம்  வெளிப்படுத்துகிறான்;  ஞானியோ  அதைப்  பின்னுக்கு  அடக்கிவைக்கிறான்.  (நீதிமொழிகள்  29:11)

moodan  than  u'l'laththaiyellaam  ve'lippaduththugi’raan;  gnaaniyoa  athaip  pinnukku  adakkivaikki’raan.  (neethimozhiga’l  29:11)

அதிபதியானவன்  பொய்களுக்குச்  செவிகொடுத்தால்,  அவன்  ஊழியக்காரர்  யாவரும்  துன்மார்க்கராவார்கள்.  (நீதிமொழிகள்  29:12)

athibathiyaanavan  poyga'lukkuch  sevikoduththaal,  avan  oozhiyakkaarar  yaavarum  thunmaarkkaraavaarga'l.  (neethimozhiga’l  29:12)

தரித்திரனும்  கொடுமைக்காரனும்  ஒருவரையொருவர்  சந்திக்கிறார்கள்;  அவ்விருவருடைய  கண்களுக்கும்  கர்த்தர்  வெளிச்சங்  கொடுக்கிறார்.  (நீதிமொழிகள்  29:13)

thariththiranum  kodumaikkaaranum  oruvaraiyoruvar  santhikki’raarga'l;  avviruvarudaiya  ka'nga'lukkum  karththar  ve'lichchang  kodukki’raar.  (neethimozhiga’l  29:13)

ஏழைகளுடைய  நியாயத்தை  உண்மையாய்  விசாரிக்கிற  ராஜாவின்  சிங்காசனம்  என்றும்  நிலைபெற்றிருக்கும்.  (நீதிமொழிகள்  29:14)

eazhaiga'ludaiya  niyaayaththai  u'nmaiyaay  visaarikki’ra  raajaavin  singgaasanam  en’rum  nilaipet’rirukkum.  (neethimozhiga’l  29:14)

பிரம்பும்  கடிந்துகொள்ளுதலும்  ஞானத்தைக்  கொடுக்கும்;  தன்  இஷ்டத்திற்கு  விடப்பட்ட  பிள்ளையோ  தன்  தாய்க்கு  வெட்கத்தை  உண்டுபண்ணுகிறான்.  (நீதிமொழிகள்  29:15)

pirambum  kadinthuko'l'luthalum  gnaanaththaik  kodukkum;  than  ishdaththi’rku  vidappatta  pi'l'laiyoa  than  thaaykku  vedkaththai  u'ndupa'n'nugi’raan.  (neethimozhiga’l  29:15)

துன்மார்க்கர்  பெருகினால்  பாவமும்  பெருகும்;  நீதிமான்களோ  அவர்கள்  விழுவதைக்  காண்பார்கள்.  (நீதிமொழிகள்  29:16)

thunmaarkkar  peruginaal  paavamum  perugum;  neethimaanga'loa  avarga'l  vizhuvathaik  kaa'nbaarga'l.  (neethimozhiga’l  29:16)

உன்  மகனைச்  சிட்சைசெய்,  அவன்  உனக்கு  ஆறுதல்செய்வான்,  உன்  ஆத்துமாவுக்கு  ஆனந்தத்தையும்  உண்டாக்குவான்.  (நீதிமொழிகள்  29:17)

un  maganaich  sidchaisey,  avan  unakku  aa’ruthalseyvaan,  un  aaththumaavukku  aananthaththaiyum  u'ndaakkuvaan.  (neethimozhiga’l  29:17)

தீர்க்கதரிசனமில்லாத  இடத்தில்  ஜனங்கள்  சீர்கெட்டுப்போவார்கள்;  வேதத்தைக்  காக்கிறவனோ  பாக்கியவான்.  (நீதிமொழிகள்  29:18)

theerkkatharisanamillaatha  idaththil  janangga'l  seerkettuppoavaarga'l;  veathaththaik  kaakki’ravanoa  baakkiyavaan.  (neethimozhiga’l  29:18)

அடிமையானவன்  வார்த்தைகளினாலே  அடங்கான்;  அவைகளை  அவன்  அறிந்தாலும்  உத்தரவுகொடான்.  (நீதிமொழிகள்  29:19)

adimaiyaanavan  vaarththaiga'linaalea  adanggaan;  avaiga'lai  avan  a’rinthaalum  uththaravukodaan.  (neethimozhiga’l  29:19)

தன்  வார்த்தைகளில்  பதறுகிற  மனுஷனைக்  கண்டாயானால்,  அவனை  நம்புவதைப்பார்க்கிலும்  மூடனை  நம்பலாம்.  (நீதிமொழிகள்  29:20)

than  vaarththaiga'lil  patha’rugi’ra  manushanaik  ka'ndaayaanaal,  avanai  nambuvathaippaarkkilum  moodanai  nambalaam.  (neethimozhiga’l  29:20)

ஒருவன்  தன்  அடிமையைச்  சிறுபிராயமுதல்  இளக்காரமாக  வளர்த்தால்,  முடிவிலே  அவன்  தன்னைப்  புத்திரனாகப்  பாராட்டுவான்.  (நீதிமொழிகள்  29:21)

oruvan  than  adimaiyaich  si’rupiraayamuthal  i'lakkaaramaaga  va'larththaal,  mudivilea  avan  thannaip  puththiranaagap  paaraattuvaan.  (neethimozhiga’l  29:21)

கோபக்காரன்  வழக்கைக்  கொளுவுகிறான்;  மூர்க்கன்  பெரும்பாதகன்.  (நீதிமொழிகள்  29:22)

koabakkaaran  vazhakkaik  ko'luvugi’raan;  moorkkan  perumpaathagan.  (neethimozhiga’l  29:22)

மனுஷனுடைய  அகந்தை  அவனைத்  தாழ்த்தும்;  மனத்தாழ்மையுள்ளவனோ  கனமடைவான்.  (நீதிமொழிகள்  29:23)

manushanudaiya  aganthai  avanaith  thaazhththum;  manaththaazhmaiyu'l'lavanoa  kanamadaivaan.  (neethimozhiga’l  29:23)

திருடனோடே  பங்கிட்டுக்கொள்ளுகிறவன்  தன்  ஆத்துமாவைப்  பகைக்கிறான்;  சாபத்தை  அவன்  கேட்டாலும்  காரியத்தை  வெளிப்படுத்தமாட்டான்.  (நீதிமொழிகள்  29:24)

thirudanoadea  panggittukko'l'lugi’ravan  than  aaththumaavaip  pagaikki’raan;  saabaththai  avan  keattaalum  kaariyaththai  ve'lippaduththamaattaan.  (neethimozhiga’l  29:24)

மனுஷனுக்குப்  பயப்படும்  பயம்  கண்ணியை  வருவிக்கும்;  கர்த்தரை  நம்புகிறவனோ  உயர்ந்த  அடைக்கலத்திலே  வைக்கப்படுவான்.  (நீதிமொழிகள்  29:25)

manushanukkup  bayappadum  bayam  ka'n'niyai  varuvikkum;  karththarai  nambugi’ravanoa  uyarntha  adaikkalaththilea  vaikkappaduvaan.  (neethimozhiga’l  29:25)

ஆளுகைசெய்கிறவனுடைய  முகதரிசனத்தைத்  தேடுகிறவர்கள்  அநேகர்;  ஆனாலும்  அவனவனுடைய  நியாயம்  கர்த்தராலே  தீரும்.  (நீதிமொழிகள்  29:26)

aa'lugaiseygi’ravanudaiya  mugatharisanaththaith  theadugi’ravarga'l  aneagar;  aanaalum  avanavanudaiya  niyaayam  karththaraalea  theerum.  (neethimozhiga’l  29:26)

நீதிமானுக்கு  அநியாயக்காரன்  அருவருப்பானவன்;  சன்மார்க்கனும்  துன்மார்க்கனுக்கு  அருவருப்பானவன்.  (நீதிமொழிகள்  29:27)

neethimaanukku  aniyaayakkaaran  aruvaruppaanavan;  sanmaarkkanum  thunmaarkkanukku  aruvaruppaanavan.  (neethimozhiga’l  29:27)