Showing posts with label yaakkoabu. Show all posts
Showing posts with label yaakkoabu. Show all posts

Friday, June 10, 2016

Yaakkoabu 5 | யாக்கோபு 5 | James 5

ஐசுவரியவான்களே,  கேளுங்கள்,  உங்கள்மேல்  வரும்  நிர்ப்பந்தங்களினிமித்தம்  அலறி  அழுங்கள்.  (யாக்கோபு  5:1)

aisuvariyavaanga'lea,  kea'lungga'l,  ungga'lmeal  varum  nirppanthangga'linimiththam  ala’ri  azhungga'l.  (yaakkoabu  5:1)

உங்கள்  ஐசுவரியம்  அழிந்து,  உங்கள்  வஸ்திரங்கள்  பொட்டரித்துப்போயின.  (யாக்கோபு  5:2)

ungga'l  aisuvariyam  azhinthu,  ungga'l  vasthirangga'l  pottariththuppoayina.  (yaakkoabu  5:2)

உங்கள்  பொன்னும்  வெள்ளியும்  துருப்பிடித்தது;  அவைகளிலுள்ள  துரு  உங்களுக்கு  விரோதமாகச்  சாட்சியாயிருந்து,  அக்கினியைப்போல  உங்கள்  மாம்சத்தைத்  தின்னும்.  கடைசிநாட்களிலே  பொக்கிஷத்தைச்  சேர்த்தீர்கள்.  (யாக்கோபு  5:3)

ungga'l  ponnum  ve'l'liyum  thuruppidiththathu;  avaiga'lilu'l'la  thuru  ungga'lukku  viroathamaagach  saadchiyaayirunthu,  akkiniyaippoala  ungga'l  maamsaththaith  thinnum.  kadaisinaadka'lilea  pokkishaththaich  searththeerga'l.  (yaakkoabu  5:3)

இதோ,  உங்கள்  வயல்களை  அறுத்த  வேலைக்காரருடைய  கூலி  உங்களால்  அநியாயமாய்ப்  பிடிக்கப்பட்டுக்  கூக்குரலிடுகிறது;  அறுத்தவர்களுடைய  கூக்குரல்  சேனைகளுடைய  கர்த்தரின்  செவிகளில்  பட்டது.  (யாக்கோபு  5:4)

ithoa,  ungga'l  vayalga'lai  a’ruththa  vealaikkaararudaiya  kooli  ungga'laal  aniyaayamaayp  pidikkappattuk  kookkuralidugi’rathu;  a’ruththavarga'ludaiya  kookkural  seanaiga'ludaiya  karththarin  seviga'lil  pattathu.  (yaakkoabu  5:4)

பூமியிலே  நீங்கள்  சம்பிரமமாய்  வாழ்ந்து,  சுகபோகத்தில்  உழன்றீர்கள்;  கொழுத்தவைகளை  அடிக்கும்  நாளில்  நடக்கிறதுபோல  உங்கள்  இருதயங்களைப்  போஷித்தீர்கள்.  (யாக்கோபு  5:5)

boomiyilea  neengga'l  sambiramamaay  vaazhnthu,  sugaboagaththil  uzhan’reerga'l;  kozhuththavaiga'lai  adikkum  naa'lil  nadakki’rathupoala  ungga'l  iruthayangga'laip  poashiththeerga'l.  (yaakkoabu  5:5)

நீதிமானை  நீங்கள்  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்துக்  கொலைசெய்தீர்கள்;  அவன்  உங்களோடே  எதிர்த்துநிற்கவில்லை.  (யாக்கோபு  5:6)

neethimaanai  neengga'l  aakkinaikku'l'laagath  theerththuk  kolaiseytheerga'l;  avan  ungga'loadea  ethirththuni’rkavillai.  (yaakkoabu  5:6)

இப்படியிருக்க,  சகோதரரே,  கர்த்தர்  வருமளவும்  நீடிய  பொறுமையாயிருங்கள்.  இதோ,  பயிரிடுகிறவன்  பூமியின்  நற்பலனை  அடையவேண்டுமென்று,  முன்மாரியும்  பின்மாரியும்  வருமளவும்,  நீடிய  பொறுமையோடே  காத்திருக்கிறான்.  (யாக்கோபு  5:7)

ippadiyirukka,  sagoathararea,  karththar  varuma'lavum  neediya  po’rumaiyaayirungga'l.  ithoa,  payiridugi’ravan  boomiyin  na’rpalanai  adaiyavea'ndumen’ru,  munmaariyum  pinmaariyum  varuma'lavum,  neediya  po’rumaiyoadea  kaaththirukki’raan.  (yaakkoabu  5:7)

நீங்களும்  நீடிய  பொறுமையோடிருந்து,  உங்கள்  இருதயங்களை  ஸ்திரப்படுத்துங்கள்;  கர்த்தரின்  வருகை  சமீபமாயிருக்கிறதே.  (யாக்கோபு  5:8)

neengga'lum  neediya  po’rumaiyoadirunthu,  ungga'l  iruthayangga'lai  sthirappaduththungga'l;  karththarin  varugai  sameebamaayirukki’rathea.  (yaakkoabu  5:8)

சகோதரரே,  நீங்கள்  நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு  ஒருவருக்கொருவர்  விரோதமாய்  முறையிடாதிருங்கள்;  இதோ,  நியாயாதிபதி  வாசற்படியில்  நிற்கிறார்.  (யாக்கோபு  5:9)

sagoathararea,  neengga'l  niyaayantheerkkappadaathapadikku  oruvarukkoruvar  viroathamaay  mu’raiyidaathirungga'l;  ithoa,  niyaayaathibathi  vaasa’rpadiyil  ni’rki’raar.  (yaakkoabu  5:9)

என்  சகோதரரே,  கர்த்தருடைய  நாமத்தினாலே  பேசின  தீர்க்கதரிசிகளைத்  துன்பப்படுதலுக்கும்  நீடிய  பொறுமைக்கும்  திருஷ்டாந்தமாக  வைத்துக்கொள்ளுங்கள்.  (யாக்கோபு  5:10)

en  sagoathararea,  karththarudaiya  naamaththinaalea  peasina  theerkkatharisiga'laith  thunbappaduthalukkum  neediya  po’rumaikkum  thirushdaanthamaaga  vaiththukko'l'lungga'l.  (yaakkoabu  5:10)

இதோ,  பொறுமையாயிருக்கிறவர்களைப்  பாக்கியவான்களென்கிறோமே!  யோபின்  பொறுமையைக்குறித்துக்  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்;  கர்த்தருடைய  செயலின்  முடிவையும்  கண்டிருக்கிறீர்கள்;  கர்த்தர்  மிகுந்த  உருக்கமும்  இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.  (யாக்கோபு  5:11)

ithoa,  po’rumaiyaayirukki’ravarga'laip  baakkiyavaanga'lengi’roamea!  yoabin  po’rumaiyaikku’riththuk  kea'lvippattirukki’reerga'l;  karththarudaiya  seyalin  mudivaiyum  ka'ndirukki’reerga'l;  karththar  miguntha  urukkamum  irakkamumu'l'lavaraayirukki’raarea.  (yaakkoabu  5:11)

விசேஷமாய்,  என்  சகோதரரே,  வானத்தின்பேரிலாவது,  பூமியின்பேரிலாவது,  வேறெந்த  ஆணையினாலாவது  சத்தியம்பண்ணாதிருங்கள்;  நீங்கள்  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படாதபடிக்கு  உள்ளதை  உள்ளதென்றும்,  இல்லதை  இல்லதென்றும்  சொல்லக்கடவீர்கள்.  (யாக்கோபு  5:12)

viseashamaay,  en  sagoathararea,  vaanaththinpearilaavathu,  boomiyinpearilaavathu,  vea’rentha  aa'naiyinaalaavathu  saththiyampa'n'naathirungga'l;  neengga'l  aakkinaikku'l'laagath  theerkkappadaathapadikku  u'l'lathai  u'l'lathen’rum,  illathai  illathen’rum  sollakkadaveerga'l.  (yaakkoabu  5:12)

உங்களில்  ஒருவன்  துன்பப்பட்டால்  ஜெபம்பண்ணக்கடவன்;  ஒருவன்  மகிழ்ச்சியாயிருந்தால்  சங்கீதம்  பாடக்கடவன்.  (யாக்கோபு  5:13)

ungga'lil  oruvan  thunbappattaal  jebampa'n'nakkadavan;  oruvan  magizhchchiyaayirunthaal  sanggeetham  paadakkadavan.  (yaakkoabu  5:13)

உங்களில்  ஒருவன்  வியாதிப்பட்டால்,  அவன்  சபையின்  மூப்பர்களை  வரவழைப்பானாக;  அவர்கள்  கர்த்தருடைய  நாமத்தினாலே  அவனுக்கு  எண்ணெய்பூசி,  அவனுக்காக  ஜெபம்பண்ணக்கடவர்கள்.  (யாக்கோபு  5:14)

ungga'lil  oruvan  viyaathippattaal,  avan  sabaiyin  moopparga'lai  varavazhaippaanaaga;  avarga'l  karththarudaiya  naamaththinaalea  avanukku  e'n'neypoosi,  avanukkaaga  jebampa'n'nakkadavarga'l.  (yaakkoabu  5:14)

அப்பொழுது  விசுவாசமுள்ள  ஜெபம்  பிணியாளியை  இரட்சிக்கும்;  கர்த்தர்  அவனை  எழுப்புவார்;  அவன்  பாவஞ்செய்தவனானால்  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (யாக்கோபு  5:15)

appozhuthu  visuvaasamu'l'la  jebam  pi'niyaa'liyai  iradchikkum;  karththar  avanai  ezhuppuvaar;  avan  paavagnseythavanaanaal  athu  avanukku  mannikkappadum.  (yaakkoabu  5:15)

நீங்கள்  சொஸ்தமடையும்படிக்கு,  உங்கள்  குற்றங்களை  ஒருவருக்கொருவர்  அறிக்கையிட்டு,  ஒருவருக்காக  ஒருவர்  ஜெபம்பண்ணுங்கள்.  நீதிமான்  செய்யும்  ஊக்கமான  வேண்டுதல்  மிகவும்  பெலனுள்ளதாயிருக்கிறது.  (யாக்கோபு  5:16)

neengga'l  sosthamadaiyumpadikku,  ungga'l  kut’rangga'lai  oruvarukkoruvar  a’rikkaiyittu,  oruvarukkaaga  oruvar  jebampa'n'nungga'l.  neethimaan  seyyum  ookkamaana  vea'nduthal  migavum  belanu'l'lathaayirukki’rathu.  (yaakkoabu  5:16)

எலியா  என்பவன்  நம்மைப்போலப்பாடுள்ள  மனுஷனாயிருந்தும்,  மழைபெய்யாதபடிக்குக்  கருத்தாய்  ஜெபம்பண்ணினான்,  அப்பொழுது  மூன்றுவருஷமும்  ஆறுமாதமும்  பூமியின்மேல்  மழை  பெய்யவில்லை.  (யாக்கோபு  5:17)

eliyaa  enbavan  nammaippoalappaadu'l'la  manushanaayirunthum,  mazhaipeyyaathapadikkuk  karuththaay  jebampa'n'ninaan,  appozhuthu  moon’ruvarushamum  aa’rumaathamum  boomiyinmeal  mazhai  peyyavillai.  (yaakkoabu  5:17)

மறுபடியும்  ஜெபம்பண்ணினான்,  அப்பொழுது  வானம்  மழையைப்  பொழிந்தது,  பூமி  தன்  பலனைத்  தந்தது.  (யாக்கோபு  5:18)

ma’rupadiyum  jebampa'n'ninaan,  appozhuthu  vaanam  mazhaiyaip  pozhinthathu,  boomi  than  palanaith  thanthathu.  (yaakkoabu  5:18)

சகோதரரே,  உங்களில்  ஒருவன்  சத்தியத்தைவிட்டு  விலகி  மோசம்போகும்போது,  மற்றொருவன்  அவனைத்  திருப்பினால்,  (யாக்கோபு  5:19)

sagoathararea,  ungga'lil  oruvan  saththiyaththaivittu  vilagi  moasampoagumpoathu,  mat’roruvan  avanaith  thiruppinaal,  (yaakkoabu  5:19)

தப்பிப்போன  மார்க்கத்தினின்று  பாவியைத்  திருப்புகிறவன்  ஒரு  ஆத்துமாவை  மரணத்தினின்று  இரட்சித்து,  திரளான  பாவங்களை  மூடுவானென்று  அறியக்கடவன்.  (யாக்கோபு  5:20)

thappippoana  maarkkaththinin’ru  paaviyaith  thiruppugi’ravan  oru  aaththumaavai  mara'naththinin’ru  iradchiththu,  thira'laana  paavangga'lai  mooduvaanen’ru  a’riyakkadavan.  (yaakkoabu  5:20)


Yaakkoabu 4 | யாக்கோபு 4 | James 4

உங்களுக்குள்ளே  யுத்தங்களும்  சண்டைகளும்  எதினாலே  வருகிறது;  உங்கள்  அவயவங்களில்  போர்செய்கிற  இச்சைகளினாலல்லவா?  (யாக்கோபு  4:1)

ungga'lukku'l'lea  yuththangga'lum  sa'ndaiga'lum  ethinaalea  varugi’rathu;  ungga'l  avayavangga'lil  poarseygi’ra  ichchaiga'linaalallavaa?  (yaakkoabu  4:1)

நீங்கள்  இச்சித்தும்  உங்களுக்குக்  கிடைக்கவில்லை;  நீங்கள்  கொலைசெய்தும்,  பொறாமையுள்ளவர்களாயிருந்தும்,  அடையக்கூடாமற்போகிறீர்கள்;  நீங்கள்  சண்டையும்  யுத்தமும்பண்ணியும்,  நீங்கள்  விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே,  உங்களுக்குச்  சித்திக்கிறதில்லை.  (யாக்கோபு  4:2)

neengga'l  ichchiththum  ungga'lukkuk  kidaikkavillai;  neengga'l  kolaiseythum,  po’raamaiyu'l'lavarga'laayirunthum,  adaiyakkoodaama’rpoagi’reerga'l;  neengga'l  sa'ndaiyum  yuththamumpa'n'niyum,  neengga'l  vi'n'nappampa'n'naamalirukki’rathinaalea,  ungga'lukkuch  siththikki’rathillai.  (yaakkoabu  4:2)

நீங்கள்  விண்ணப்பம்பண்ணியும்,  உங்கள்  இச்சைகளை  நிறைவேற்றும்படி  செலவழிக்கவேண்டுமென்று  தகாதவிதமாய்  விண்ணப்பம்பண்ணுகிறபடியினால்,  பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.  (யாக்கோபு  4:3)

neengga'l  vi'n'nappampa'n'niyum,  ungga'l  ichchaiga'lai  ni’raiveat’rumpadi  selavazhikkavea'ndumen’ru  thagaathavithamaay  vi'n'nappampa'n'nugi’rapadiyinaal,  pet’rukko'l'laamalirukki’reerga'l.  (yaakkoabu  4:3)

விபசாரரே,  விபசாரிகளே,  உலக  சிநேகம்  தேவனுக்கு  விரோதமான  பகையென்று  அறியீர்களா?  ஆகையால்  உலகத்துக்குச்  சிநேகிதனாயிருக்க  விரும்புகிறவன்  தேவனுக்குப்  பகைஞனாகிறான்.  (யாக்கோபு  4:4)

vibasaararea,  vibasaariga'lea,  ulaga  sineagam  theavanukku  viroathamaana  pagaiyen’ru  a’riyeerga'laa?  aagaiyaal  ulagaththukkuch  sineagithanaayirukka  virumbugi’ravan  theavanukkup  pagaignanaagi’raan.  (yaakkoabu  4:4)

நம்மில்  வாசமாயிருக்கிற  ஆவியானவர்  நம்மிடத்தில்  வைராக்கிய  வாஞ்சையாயிருக்கிறாரென்று  வேதவாக்கியம்  வீணாய்ச்  சொல்லுகிறதென்று  நினைக்கிறீர்களா?  (யாக்கோபு  4:5)

nammil  vaasamaayirukki’ra  aaviyaanavar  nammidaththil  vairaakkiya  vaagnchaiyaayirukki’raaren’ru  veathavaakkiyam  vee'naaych  sollugi’rathen’ru  ninaikki’reerga'laa?  (yaakkoabu  4:5)

அவர்  அதிகமான  கிருபையை  அளிக்கிறாரே.  ஆதலால்  தேவன்  பெருமையுள்ளவர்களுக்கு  எதிர்த்து  நிற்கிறார்,  தாழ்மையுள்ளவர்களுக்கோ  கிருபை  அளிக்கிறாரென்று  சொல்லியிருக்கிறது.  (யாக்கோபு  4:6)

avar  athigamaana  kirubaiyai  a'likki’raarea.  aathalaal  theavan  perumaiyu'l'lavarga'lukku  ethirththu  ni’rki’raar,  thaazhmaiyu'l'lavarga'lukkoa  kirubai  a'likki’raaren’ru  solliyirukki’rathu.  (yaakkoabu  4:6)

ஆகையால்,  தேவனுக்குக்  கீழ்ப்படிந்திருங்கள்;  பிசாசுக்கு  எதிர்த்து  நில்லுங்கள்,  அப்பொழுது  அவன்  உங்களைவிட்டு  ஓடிப்போவான்.  (யாக்கோபு  4:7)

aagaiyaal,  theavanukkuk  keezhppadinthirungga'l;  pisaasukku  ethirththu  nillungga'l,  appozhuthu  avan  ungga'laivittu  oadippoavaan.  (yaakkoabu  4:7)

தேவனிடத்தில்  சேருங்கள்,  அப்பொழுது  அவர்  உங்களிடத்தில்  சேருவார்.  பாவிகளே,  உங்கள்  கைகளைச்  சுத்திகரியுங்கள்;  இருமனமுள்ளவர்களே,  உங்கள்  இருதயங்களைப்  பரிசுத்தமாக்குங்கள்.  (யாக்கோபு  4:8)

theavanidaththil  searungga'l,  appozhuthu  avar  ungga'lidaththil  searuvaar.  paaviga'lea,  ungga'l  kaiga'laich  suththigariyungga'l;  irumanamu'l'lavarga'lea,  ungga'l  iruthayangga'laip  parisuththamaakkungga'l.  (yaakkoabu  4:8)

நீங்கள்  துயரப்பட்டுத்  துக்கித்து  அழுங்கள்;  உங்கள்  நகைப்பு  துக்கிப்பாகவும்,  உங்கள்  சந்தோஷம்  சஞ்சலமாகவும்  மாறக்கடவது.  (யாக்கோபு  4:9)

neengga'l  thuyarappattuth  thukkiththu  azhungga'l;  ungga'l  nagaippu  thukkippaagavum,  ungga'l  santhoasham  sagnchalamaagavum  maa’rakkadavathu.  (yaakkoabu  4:9)

கர்த்தருக்கு  முன்பாகத்  தாழ்மைப்படுங்கள்,  அப்பொழுது  அவர்  உங்களை  உயர்த்துவார்.  (யாக்கோபு  4:10)

karththarukku  munbaagath  thaazhmaippadungga'l,  appozhuthu  avar  ungga'lai  uyarththuvaar.  (yaakkoabu  4:10)

சகோதரரே,  ஒருவருக்கொருவர்  விரோதமாய்ப்  பேசாதிருங்கள்;  சகோதரனுக்கு  விரோதமாய்ப்  பேசி,  தன்  சகோதரனைக்  குற்றப்படுத்துகிறவன்  நியாயப்பிரமாணத்திற்கு  விரோதமாய்ப்பேசி  நியாயப்பிரமாணத்தைக்  குற்றப்படுத்துகிறான்;  நியாயப்பிரமாணத்தைக்  குற்றப்படுத்துவாயானால்,  நீ  நியாயப்பிரமாணத்தின்படி  செய்கிறவனாயிராமல்,  அதற்கு  நியாயாதிபதியாயிருப்பாய்.  (யாக்கோபு  4:11)

sagoathararea,  oruvarukkoruvar  viroathamaayp  peasaathirungga'l;  sagoatharanukku  viroathamaayp  peasi,  than  sagoatharanaik  kut’rappaduththugi’ravan  niyaayappiramaa'naththi’rku  viroathamaayppeasi  niyaayappiramaa'naththaik  kut’rappaduththugi’raan;  niyaayappiramaa'naththaik  kut’rappaduththuvaayaanaal,  nee  niyaayappiramaa'naththinpadi  seygi’ravanaayiraamal,  atha’rku  niyaayaathibathiyaayiruppaay.  (yaakkoabu  4:11)

நியாயப்பிரமாணத்தைக்  கட்டளையிடுகிறவர்  ஒருவரே,  அவரே  இரட்சிக்கவும்  அழிக்கவும்  வல்லவர்;  மற்றவனைக்  குற்றப்படுத்துகிறதற்கு  நீ  யார்?  (யாக்கோபு  4:12)

niyaayappiramaa'naththaik  katta'laiyidugi’ravar  oruvarea,  avarea  iradchikkavum  azhikkavum  vallavar;  mat’ravanaik  kut’rappaduththugi’ratha’rku  nee  yaar?  (yaakkoabu  4:12)

மேலும்,  நாங்கள்  இன்றைக்கு  அல்லது  நாளைக்கு  இன்ன  பட்டணத்திற்குப்  போய்,  அங்கே  ஒருவருஷம்  தங்கி,  வியாபாரஞ்செய்து,  சம்பாத்தியம்  பண்ணுவோமென்கிறவர்களே,  கேளுங்கள்.  (யாக்கோபு  4:13)

mealum,  naangga'l  in’raikku  allathu  naa'laikku  inna  patta'naththi’rkup  poay,  anggea  oruvarusham  thanggi,  viyaabaaragnseythu,  sambaaththiyam  pa'n'nuvoamengi’ravarga'lea,  kea'lungga'l.  (yaakkoabu  4:13)

நாளைக்கு  நடப்பது  உங்களுக்குத்  தெரியாதே.  உங்கள்  ஜீவன்  எப்படிப்பட்டது?  கொஞ்சக்காலந்தோன்றிப்  பின்பு  தோன்றாமற்போகிற  புகையைப்போலிருக்கிறதே.  (யாக்கோபு  4:14)

naa'laikku  nadappathu  ungga'lukkuth  theriyaathea.  ungga'l  jeevan  eppadippattathu?  kognchakkaalanthoan’rip  pinbu  thoan’raama’rpoagi’ra  pugaiyaippoalirukki’rathea.  (yaakkoabu  4:14)

ஆதலால்:  ஆண்டவருக்குச்  சித்தமானால்,  நாங்களும்  உயிரோடிருந்தால்,  இன்னின்னதைச்  செய்வோம்  என்று  சொல்லவேண்டும்.  (யாக்கோபு  4:15)

aathalaal:  aa'ndavarukkuch  siththamaanaal,  naangga'lum  uyiroadirunthaal,  inninnathaich  seyvoam  en’ru  sollavea'ndum.  (yaakkoabu  4:15)

இப்பொழுது  உங்கள்  வீம்புகளில்  மேன்மைபாராட்டுகிறீர்கள்;  இப்படிப்பட்ட  மேன்மைபாராட்டல்  யாவும்  பொல்லாங்காயிருக்கிறது.  (யாக்கோபு  4:16)

ippozhuthu  ungga'l  veembuga'lil  meanmaipaaraattugi’reerga'l;  ippadippatta  meanmaipaaraattal  yaavum  pollaanggaayirukki’rathu.  (yaakkoabu  4:16)

ஆதலால்,  ஒருவன்  நன்மைசெய்ய  அறிந்தவனாயிருந்தும்,  அதைச்  செய்யாமற்போனால்,  அது  அவனுக்குப்  பாவமாயிருக்கும்.  (யாக்கோபு  4:17)

aathalaal,  oruvan  nanmaiseyya  a’rinthavanaayirunthum,  athaich  seyyaama’rpoanaal,  athu  avanukkup  paavamaayirukkum.  (yaakkoabu  4:17)