ஆபகூக் தீர்க்கதரிசி
சிகாயோனில் பாடின விண்ணப்பம்.
(ஆபகூக் 3:1)
aabakook theerkkatharisi sigaayoanil paadina
vi'n'nappam. (aabakook 3:1)
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப்
பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின்
நடுவிலே உம்முடைய கிரியையை
உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே
அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும்
இரக்கத்தை நினைத்தருளும். (ஆபகூக்
3:2)
karththaavea, neer ve'lippaduththinathai naan keattean, enakkup bayamu'ndaayit’ru; karththaavea, varushangga'lin naduvilea
ummudaiya kiriyaiyai uyirppiyum,
varushangga'lin naduvilea
athai vi'langgappa'n'num; koabiththaalum irakkaththai ninaiththaru'lum. (aabakook
3:2)
தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர்
பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்;
(சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. (ஆபகூக்
3:3)
theavan theamaanilirunthum, parisuththar paaraan
parvathaththilirunthum vanthaar; (sealaa.) avarudaiya
magimai
vaanangga'lai moodikko'ndathu; avar thuthiyinaal boomi ni’rainthathu. (aabakook
3:3)
அவருடைய பிரகாசம்
சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள்
வீசின; அங்கே அவருடைய
பராக்கிரமம் மறைந்திருந்தது. (ஆபகூக்
3:4)
avarudaiya piragaasam sooriyanaippoalirunthathu; avarudaiya
karaththilirunthu kira'nangga'l veesina; anggea avarudaiya baraakkiramam ma’rainthirunthathu. (aabakook
3:4)
அவருக்கு முன்பாகக்
கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான
காய்ச்சல் புறப்பட்டது. (ஆபகூக்
3:5)
avarukku munbaagak ko'l'lainoay sen’rathu; avar adiga'lilirunthu eripanthamaana kaaychchal pu’rappattathu. (aabakook 3:5)
அவர் நின்று
பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக்
கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள்
சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள்
தாழ்ந்தது; அவருடைய நடைகள்
நித்திய நடைகளாயிருந்தது. (ஆபகூக்
3:6)
avar nin’ru boomiyai a'lanthaar;
avar paarththup pu’rajaathiga'laik karaiyappa'n'ninaar; poorva
parvathangga'l sitha’radikkappattathu, en’rumu'l'la malaiga'l thaazhnthathu; avarudaiya
nadaiga'l
niththiya nadaiga'laayirunthathu.
(aabakook 3:6)
கூஷானின் கூடாரங்கள்
வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான்
தேசத்தின் திரைகள் நடுங்கின.
(ஆபகூக் 3:7)
kooshaanin koodaarangga'l varuththaththil agappattirukkakka'ndean;
meethiyaan theasaththin thiraiga'l nadunggina. (aabakook 3:7)
கர்த்தர் நதிகளின்மேல்
கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய
குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய
இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும்
உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? (ஆபகூக்
3:8)
karththar nathiga'linmeal koabamaayirunthaaroa? theavareer
ummudaiya kuthiraiga'linmealum iradchippu'ndaakkugi’ra ummudaiya
irathangga'linmealum ea’rivarugi’rapoathu, umathu koabam nathiga'lukkum umathu sinam samuththiraththi’rkum viroathamaayirunthathoa? (aabakook
3:8)
கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்
கொடுத்த வாக்கின்படியே உம்முடைய
வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது;
(சேலா.) நீர் பூமியைப்
பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர். (ஆபகூக்
3:9)
koaththirangga'lukku aa'naiyittuk koduththa vaakkinpadiyea ummudaiya
vil naa'neat’rappattathaaga vi'langginathu; (sealaa.) neer boomiyaip pi'lanthu
aa’ruga'lai u'ndaakkineer. (aabakook
3:9)
பர்வதங்கள் உம்மைக்
கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று; ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது. (ஆபகூக்
3:10)
parvathangga'l ummaik ka'ndu
nadunggina; jalam piravaagiththuk kadanthupoayit’ru; aazhi irainthathu,
athin kaiga'lai uyara eduththathu. (aabakook
3:10)
சந்திரனும் சூரியனும்
தன்தன் மண்டலத்தில் நின்றன;
உமது அம்புகளின் ஜோதியிலும்,
உமது ஈட்டியினுடைய மின்னல்
பிரகாசத்திலும் நடந்தன. (ஆபகூக்
3:11)
santhiranum sooriyanum thanthan
ma'ndalaththil nin’rana; umathu ambuga'lin joathiyilum,
umathu eettiyinudaiya minnal
piragaasaththilum nadanthana.
(aabakook 3:11)
நீர் கோபத்தோடே
பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே
ஜாதிகளைப் போரடித்தீர். (ஆபகூக்
3:12)
neer koabaththoadea boomiyil nadantheer,
ukkiraththoadea jaathiga'laip poaradiththeer. (aabakook
3:12)
உமது ஜனத்தின்
இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்
பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக
அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய
வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்;
சேலா. (ஆபகூக் 3:13)
umathu janaththin
iradchippukkaagavum neer abisheagam pa'n'nuviththavanin iradchippukkaagavumea neer pu’rappatteer; kazhuththa'lavaaga asthibaaraththaith thi’rappaakki, thushdanudaiya veettiliruntha thalaivanai
vettineer; sealaa.
(aabakook 3:13)
என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்;
சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது
அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய
கிராமத்து அதிபதிகளை உருவக்
குத்தினீர். (ஆபகூக் 3:14)
ennaich sitha’radippatha’rkup perungkaat’raippoal vanthaarga'l; si’rumaiyaanavanai ma’raividaththilea padchippathu avarga'lukkuch santhoashamaayirunthathu; neer avanudaiya eettiga'linaaleayea avanudaiya
kiraamaththu athibathiga'lai uruvak
kuththineer. (aabakook 3:14)
திரளான தண்ணீர்
குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.
(ஆபகூக் 3:15)
thira'laana tha'n'neer
kuviyalaagiya samuththiraththukku'l umathu
kuthiraiga'loadea nadanthupoaneer. (aabakook
3:15)
நான் கேட்டபொழுது
என் குடல் குழம்பிற்று;
அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது;
என் எலும்புகளில் உக்கல்
உண்டாயிற்று; என் நிலையிலே
நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே
எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது,
இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல்
அடைவேன். (ஆபகூக் 3:16)
naan keattapozhuthu en kudal kuzhambit’ru; anthach saththaththukku en uthaduga'l thudiththathu; en elumbuga'lil ukkal u'ndaayit’ru; en nilaiyilea nadungginean; aanaalum
engga'loadea ethirkkum
janangga'l varumpoathu,
ikkattunaa'lilea naan i'laippaa’ruthal adaivean. (aabakook
3:16)
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்
பலன் அற்றுப்போனாலும், வயல்கள்
தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில்
ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே
மாடு இல்லாமற்போனாலும், (ஆபகூக்
3:17)
aththimaram thu'lirvidaama’rpoanaalum, thiraadchachsediga'lil pazham u'ndaagaama’rpoanaalum, olivamaraththin palan at’ruppoanaalum,
vayalga'l
thaaniyaththai vi'laiviyaama’rpoanaalum, kidaiyil aattumanthaiga'l muthalat’ruppoanaalum,
thozhuvaththilea maadu illaama’rpoanaalum, (aabakook
3:17)
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள்
களிகூருவேன். (ஆபகூக் 3:18)
naan karththarukku'l magizhchchiyaayiruppean,
en iradchippin theavanukku'l
ka'likooruvean. (aabakook 3:18)
ஆண்டவராகிய கர்த்தர்
என் பெலன்; அவர் என் கால்களை
மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில்
என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும்
வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
(ஆபகூக் 3:19)
aa'ndavaraagiya karththar en belan; avar en kaalga'lai maankaalga'laippoalaakki,
uyaramaana sthalangga'lil ennai nadakkappa'n'nuvaar. ithu neginoath ennum vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta
sanggeetham. (aabakook 3:19)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!