இதோ, யூதாவுக்கும்
எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை
நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும், (யோவேல்
3:1)
ithoa, yoothaavukkum
erusaleamukkum u'ndaayirukki’ra
si’raiyiruppai naan thiruppum annaadka'lilum akkaalaththilum, (yoaveal
3:1)
நான் சகல ஜாதியாரையும் கூட்டி,
யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை
இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து
என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும், (யோவேல்
3:2)
naan sagala jaathiyaaraiyum kootti, yoasapaaththin pa'l'laththaakkilea avarga'lai i’ranggippoagappa'n'ni, avarga'l en janaththaiyum isravealennum
en suthantharaththaiyum pu’rajaathiga'lukku'l'lea sitha’radiththu en theasaththaip panggittukko'ndathinimiththamum, (yoaveal
3:2)
அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை
வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம்
பண்ணும்படி, பெண் குழந்தைகளைத்
திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
(யோவேல் 3:3)
avarga'l en janaththinpearil seettuppoattu, aa'nkuzhanthaiga'lai veasippa'naiyamaagak koduththu, mathubaanam pa'n'numpadi,
pe'n kuzhanthaiga'laith thiraadcharasaththukkuk kirayamaagak koduththathinimiththamum, anggea avarga'loadu vazhakkaaduvean. (yoaveal
3:3)
தீருவே, சீதோனே,
பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே,
உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச்
சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச்
சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி
அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள்
தலையின்மேல் திரும்பும்படி செய்வேன்.
(யோவேல் 3:4)
theeruvea, seethoanea, pelisthiyaavin sagala
ellaiga'lea, ungga'lukkum enakkum
enna? ippadi enakkuch sarikkattugi’reerga'loa? ippadi
enakkuch sarikkattuveerga'laagil, naan thaamathamin’ri athiseekkiramaay neengga'l sarikkattugi’rathai ungga'l thalaiyinmeal
thirumbumpadi seyvean. (yoaveal
3:4)
நீங்கள் என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்து,
இன்பமும் உச்சிதமுமான என் பொருள்களை உங்கள்
கோவில்களிலே கொண்டுபோய், (யோவேல்
3:5)
neengga'l en ve'l'liyaiyum
en ponnaiyum eduththu,
inbamum
uchchithamumaana en poru'lga'lai ungga'l koavilga'lilea ko'ndupoay, (yoaveal
3:5)
யூதாவின் குமாரரையும்
எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய
எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள். (யோவேல்
3:6)
yoothaavin kumaararaiyum
erusaleamin kumaararaiyum
avarga'ludaiya ellaiga'lukkuth thooramaakkumpadikku, kireakkaridaththil vit’ruppoatteerga'l. (yoaveal
3:6)
இதோ, நீங்கள்
அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரப்பண்ணி, நீங்கள்
சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல்
திரும்பும்படி செய்து, (யோவேல்
3:7)
ithoa, neengga'l avarga'lai vit’ruppoatta avvidaththilirunthu naan avarga'lai ezhumbivarappa'n'ni,
neengga'l sarikkattinathai ungga'l thalaiyinmeal
thirumbumpadi seythu,
(yoaveal 3:7)
உங்கள் குமாரரையும்
உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே
விற்பேன்; இவர்கள் அவர்களைத்
தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர்
இதைச் சொன்னார். (யோவேல்
3:8)
ungga'l kumaararaiyum ungga'l kumaaraththiga'laiyum yoothaa
puththirarin kaiyilea vi’rpean; ivarga'l avarga'laith thooratheasaththaaraagiya sabeayaridaththil vit’ruppoaduvaarga'l; karththar ithaich sonnaar. (yoaveal
3:8)
இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்;
யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்;
யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து
ஏறிவரக்கடவர்கள். (யோவேல் 3:9)
ithaip pu’rajaathiga'lukku'l'lea koo’rungga'l; yuththaththukku aayaththampa'n'nungga'l, baraakkiramasaaliga'lai ezhuppungga'l; yuththaveerar
ellaarum searnthu ea’rivarakkadavarga'l. (yoaveal 3:9)
உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள்
அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்;
பலவீனனும் தன்னைப் பலவான்
என்று சொல்வானாக. (யோவேல்
3:10)
ungga'l ma'nvettiga'laip pattayangga'laagavum, ungga'l arivaa'lga'lai eettiga'laagavum adiyungga'l; balaveenanum thannaip
balavaan
en’ru solvaanaaga. (yoaveal
3:10)
சகல ஜாதிகளே,
நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய்
வந்து கூடுங்கள்; கர்த்தாவே,
நீரும் அங்கே உம்முடைய
பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக. (யோவேல்
3:11)
sagala jaathiga'lea, neengga'l sut’rilumirunthu eagamaay vanthu
koodungga'l; karththaavea,
neerum anggea ummudaiya baraakkiramasaaliga'lai i’ranggappa'n'nuveeraaga. (yoaveal
3:11)
ஜாதிகள் எழும்பி
யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக;
சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன். (யோவேல்
3:12)
jaathiga'l ezhumbi yoasapaaththin pa'l'laththaakkukku varuvaarga'laaga; sut’rilumu'l'la jaathiga'lai niyaayantheerkka anggea naan veet’riruppean. (yoaveal 3:12)
பயிர் முதிர்ந்தது,
அரிவாளை நீட்டி அறுங்கள்,
வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின்
தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய
பாதகம் பெரியது. (யோவேல்
3:13)
payir muthirnthathu, arivaa'lai
neetti
a’rungga'l, vanthu
i’ranggungga'l; aalai nirambiyirukki’rathu, aalaiyin thottiga'l vazhinthoadugi’rathu; avarga'ludaiya paathagam periyathu.
(yoaveal 3:13)
நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள்
திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின்
நாள் சமீபமாயிருக்கிறது. (யோவேல்
3:14)
niyaayaththeerppin pa'l'laththaakkilea janangga'l thira'lthira'laay irukki’raarga'l; niyaayaththeerppin pa'l'laththaakkilea karththarin
naa'l sameebamaayirukki’rathu. (yoaveal
3:14)
சூரியனும் சந்திரனும்
இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.
(யோவேல் 3:15)
sooriyanum santhiranum iru'ndupoagum, nadchaththirangga'l o'limazhunggum. (yoaveal 3:15)
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து,
எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும்
பூமியும் அதிரும்; ஆனாலும்
கர்த்தர் தமது ஜனத்துக்கு
அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு
அரணான கோட்டையுமாயிருப்பார். (யோவேல்
3:16)
karththar seeyoanilirunthu kerchchiththu, erusaleamilirunthu
saththamiduvaar; vaanamum
boomiyum
athirum; aanaalum karththar
thamathu janaththukku adaikkalamum
israveal puththirarukku ara'naana
koattaiyumaayiruppaar. (yoaveal
3:16)
என் பரிசுத்த
பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர் என்று அப்பொழுது
அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம்
பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக் கடந்துபோவதில்லை. (யோவேல்
3:17)
en parisuththa parvathamaagiya
seeyoanilea vaasamaayirukki’ra naan ungga'l theavanaagiya karththar
en’ru
appozhuthu a’rinthuko'lveerga'l; appozhuthu
erusaleam
parisuththamaayirukkum; anniyar
ini athaik kadanthupoavathillai. (yoaveal
3:17)
அக்காலத்தில் பர்வதங்கள்
திராட்சரசத்தைப் பொழியும், மலைகள்
பாலாய் ஓடும், யூதாவின்
ஆறுகள் எல்லாம் பிரவாகித்து
ஓடும்; ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச்
சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை
நீர்ப்பாய்ச்சலாக்கும். (யோவேல் 3:18)
akkaalaththil parvathangga'l thiraadcharasaththaip pozhiyum, malaiga'l paalaay
oadum, yoothaavin aa’ruga'l ellaam
piravaagiththu oadum;
oru oot’ru karththarudaiya aalayaththilirunthu pu’rappattuch siththeem ennum pa'l'laththaakkai neerppaaychchalaakkum. (yoaveal
3:18)
யூதா புத்திரரின்
தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச்
சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து
பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்தரமாகும். (யோவேல்
3:19)
yoothaa puththirarin
theasaththilea kut’ramillaatha iraththaththaich
sinthi, avarga'lukkuch seytha
kodumaiyinimiththam egipthu paazhaayppoagum, eathoam paazhaana
vanaantharamaagum. (yoaveal
3:19)
ஆனால் யூதாவோ
சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை
தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும். (யோவேல்
3:20)
aanaal yoothaavoa sathaakaalamaagavum, erusaleam thalaimu’rai thalaimu’raiyaagavum kudiyeat’rappattirukkum. (yoaveal
3:20)
நான் தண்டியாமல்
விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல்
விடேன்; கர்த்தர் சீயோனிலே
வாசமாயிருக்கிறார். (யோவேல் 3:21)
naan tha'ndiyaamal
vittiruntha avarga'ludaiya iraththappazhiyaith tha'ndiyaamal
videan; karththar seeyoanilea vaasamaayirukki’raar. (yoaveal 3:21)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!