கர்த்தர்
சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 25:1)
karththar
seenaaymalaiyil moaseayai noakki:
(leaviyaraagamam 25:1)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும்
தேசத்திலே நீங்கள் போய்ச்
சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும். (லேவியராகமம்
25:2)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: naan ungga'lukkuk kodukkum theasaththilea neengga'l poaych searnthirukkumpoathu, theasam karththarukken’ru oayvu ko'ndaadavea'ndum. (leaviyaraagamam 25:2)
ஆறுவருஷம்
உன் வயலை விதைத்து,
உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து,
அதின் பலனைச் சேர்ப்பாயாக.
(லேவியராகமம் 25:3)
aa’ruvarusham un vayalai
vithaiththu, un thiraadchaththoattaththaik ki'laikazhiththu, athin palanaich searppaayaaga. (leaviyaraagamam 25:3)
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும், (லேவியராகமம்
25:4)
eazhaam varushaththiloa, karththarukken’ru oaynthirukkum
oayvu theasaththi’rku irukkavea'ndum; athil un vayalai
vithaikkaamalum, un thiraadchaththoattaththaik ki'laikazhikkaamalum, (leaviyaraagamam 25:4)
தானாய்
விளைந்து பயிரானதை அறுக்காமலும்,
கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச்
சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு
அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது. (லேவியராகமம்
25:5)
thaanaay vi'lainthu
payiraanathai a’rukkaamalum, ki'laikazhikkaathea vitta thiraadchachsediyin pazhangga'laich searkkaamalum iruppaayaaga; theasaththukku athu oayvu varushamaayirukkakkadavathu. (leaviyaraagamam 25:5)
தேசத்தின்
ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு
ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில்
தங்குகிற அந்நியனுக்கும், (லேவியராகமம்
25:6)
theasaththin oayvilea payiraagi’rathu ungga'lukku aagaaramaayiruppathaaga; un vealaikkaaranukkum, un vealaikkaarikkum, un koolikkaaranukkum, unnidaththil
thanggugi’ra anniyanukkum,
(leaviyaraagamam 25:6)
உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற
காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக. (லேவியராகமம்
25:7)
un naattu mirugaththukkum, un theasaththil irukki’ra kaattu mirugaththukkum athil vi'lainthiruppathellaam aagaaramaayiruppathaaga. (leaviyaraagamam 25:7)
அன்றியும்,
ஏழு ஓய்வு வருஷங்களுள்ள
ஏழு ஏழு வருஷங்களை
எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும்
நாற்பத்தொன்பது வருஷமாகும். (லேவியராகமம்
25:8)
an’riyum, eazhu oayvu varushangga'lu'l'la eazhu eazhu varushangga'lai e'n'nuvaayaaga; antha eazhu oayvu varushangga'lum naa’rpaththonbathu varushamaagum. (leaviyaraagamam 25:8)
அப்பொழுதும்
ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி
செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள்
தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி
செய்யவேண்டும். (லேவியராகமம் 25:9)
appozhuthum eazhaam
maatham paththaantheathiyil ekkaa'lachsaththam thonikkumpadi seyyavea'ndum; paavanivaara'nanaa'lil ungga'l theasamenggum ekkaa'lachsaththam thonikkumpadi
seyyavea'ndum. (leaviyaraagamam 25:9)
ஐம்பதாம்
வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும்
அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை
கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு
யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும்
தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப்
போகக்கடவன். (லேவியராகமம் 25:10)
aimbathaam varushaththaip parisuththamaakki, theasamenggum athin kudiga'lukkellaam viduthalai
koo’rakkadaveerga'l; athu ungga'lukku yoobili varusham; athilea
ungga'lil
ovvoruvanum than than kaa'niyaadchikkum than than kudumbaththukkum thirumbip poagakkadavan. (leaviyaraagamam 25:10)
அந்த ஐம்பதாம் வருஷம்
உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய்
விளைந்து பயிரானதை அறுக்காமலும்,
கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்
செடியின் பழங்களைச் சேர்க்காமலும்
இருப்பீர்களாக. (லேவியராகமம் 25:11)
antha aimbathaam varusham
ungga'lukku yoobili varushamaayiruppathaaga; athilea
vithaikkaamalum, thaanaay vi'lainthu
payiraanathai a’rukkaamalum, ki'laikazhikkaamal vidappatta thiraadchach sediyin pazhangga'laich searkkaamalum iruppeerga'laaga. (leaviyaraagamam 25:11)
அது யூபிலி வருஷம்;
அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில்
விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும். (லேவியராகமம்
25:12)
athu yoobili varusham;
athu ungga'lukkup parisuththamaayirukkavea'ndum; antha varushaththil vayalve'liyil
vi'lainthavaiga'lai neengga'l pusikkavea'ndum. (leaviyaraagamam 25:12)
அந்த யூபிலி வருஷத்தில்
உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். (லேவியராகமம்
25:13)
antha yoobili varushaththil
ungga'lil
avanavan than than kaa'niyaadchikkuth thirumbippoagakkadavan. (leaviyaraagamam 25:13)
ஆகையால்,
பிறனுக்கு எதையாவது விற்றாலும்,
அவனிடத்தில் எதையாவது கொண்டாலும்
ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. (லேவியராகமம்
25:14)
aagaiyaal, pi’ranukku ethaiyaavathu vit’raalum, avanidaththil
ethaiyaavathu ko'ndaalum oruvarukkoruvar aniyaayam seyyakkoodaathu. (leaviyaraagamam 25:14)
யூபிலி
வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின்
தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக;
பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க
அவன் உனக்கு விற்பானாக.
(லேவியராகமம் 25:15)
yoobili varushaththukkup pinvarum
varushangga'lin thogaikkea’rkap pi’ranidaththil ko'l'luvaayaaga; palanu'l'la varushangga'lin thogaikkea’rka avan unakku
vi’rpaanaaga. (leaviyaraagamam 25:15)
பலனுள்ள
வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து
அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின்
தொகை ஏறினால் விலையேறவும்,
வருஷங்களின் தொகை குறைந்தால்,
விலை குறையவும்வேண்டும். (லேவியராகமம்
25:16)
palanu'l'la varushangga'lin ilakkaththaip
paarththu avan unakku
vi’rki’rapadiyaal, varushangga'lin thogai ea’rinaal vilaiyea’ravum, varushangga'lin thogai ku’rainthaal, vilai ku’raiyavumvea'ndum.
(leaviyaraagamam 25:16)
உங்களில்
ஒருவனும் பிறனுக்கு அநியாயம்
செய்யக்கூடாது; உன் தேவனுக்குப்
பயப்படவேண்டும்; நான் உங்கள்
தேவனாகிய கர்த்தர். (லேவியராகமம்
25:17)
ungga'lil oruvanum pi’ranukku aniyaayam seyyakkoodaathu; un theavanukkup bayappadavea'ndum; naan ungga'l theavanaagiya karththar. (leaviyaraagamam 25:17)
என் கட்டளைகளின்படி செய்து,
என் நியாயங்களைக் கைக்கொண்டு
அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது
தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள். (லேவியராகமம்
25:18)
en katta'laiga'linpadi seythu,
en niyaayangga'laik kaikko'ndu avaiga'linpadi nadakkakkadaveerga'l; appozhuthu
theasaththilea sugamaayk kudiyiruppeerga'l. (leaviyaraagamam 25:18)
பூமி தன் கனியைத்
தரும்; நீங்கள் திருப்தியாகச்
சாப்பிட்டு, அதில் சுகமாய்க்
குடியிருப்பீர்கள். (லேவியராகமம் 25:19)
boomi than kaniyaith tharum;
neengga'l
thirupthiyaagach saappittu, athil sugamaayk kudiyiruppeerga'l. (leaviyaraagamam 25:19)
ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள்
விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும்
இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், (லேவியராகமம்
25:20)
eazhaam varushaththil
ethaip pusippoam? naangga'l vithaikkaamalum, vi'lainthathaich
searkkaamalum irukkavea'ndumea! en’ru solveerga'laanaal, (leaviyaraagamam 25:20)
நான் ஆறாம் வருஷத்தில்
உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று
வருஷத்தின் பலனைத் தரும்.
(லேவியராகமம் 25:21)
naan aa’raam varushaththil
ungga'lukku aaseervaathaththai anukkiragampa'n'nuvean; athu ungga'lukku moon’ru varushaththin palanaith
tharum. (leaviyaraagamam 25:21)
நீங்கள்
எட்டாம் வருஷத்திலே விதைத்து,
ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள். (லேவியராகமம்
25:22)
neengga'l ettaam varushaththilea vithaiththu,
onbathaam
varushammattum pazhaiya
palanilea saappiduveerga'l; athin palan vi'laiyumvaraikkum pazhaiya
palanaich saappiduveerga'l. (leaviyaraagamam 25:22)
தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள்
நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள்
பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள். (லேவியராகமம்
25:23)
theasam ennudaiyathaayirukki’rapadiyaal, neengga'l nilangga'lai a’ruthiyaay vi’rkavea'ndaam; neengga'l paratheasiga'lum ennidaththil pu’rakkudiga'lumaayirukki’reerga'l. (leaviyaraagamam 25:23)
உங்கள்
காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை
மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். (லேவியராகமம்
25:24)
ungga'l kaa'niyaadchiyaana theasamenggum nilangga'lai meettukko'l'la idangkodukkakkadaveerga'l. (leaviyaraagamam 25:24)
உங்கள்
சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன்
வந்து, தன் சகோதரன்
விற்றதை மீட்கக்கடவன். (லேவியராகமம்
25:25)
ungga'l sagoatharan thariththirappattu, than kaa'niyaadchiyilea silathai vit’raal, avan inaththaan oruvan
vanthu, than sagoatharan vit’rathai meedkakkadavan. (leaviyaraagamam 25:25)
அதை மீட்க ஒருவனும்
இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், (லேவியராகமம்
25:26)
athai meedka
oruvanum illaamal, thaanea
athai meedkaththakkavanaanaal, (leaviyaraagamam 25:26)
அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத்
தள்ளி, மீந்த தொகையை
ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து,
அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். (லேவியராகமம்
25:27)
athai vit’rapin sen’ra varushangga'lin thogaiyaith tha'l'li, meentha
thogaiyai
eat’ri,
ko'ndavanukkuk koduththu, avan than kaa'niyaadchikkuth thirumbippoagakkadavan. (leaviyaraagamam 25:27)
அப்படிக்
கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு
இல்லாவிட்டால், அவன் விற்றது
வாங்கினவன் கையிலே யூபிலி
வருஷம்மட்டும் இருந்து, யூபிலி
வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது
அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான். (லேவியராகமம்
25:28)
appadik koduppatha’rkaana nirvaagam avanukku
illaavittaal, avan vit’rathu vaangginavan kaiyilea yoobili varushammattum irunthu,
yoobili
varushaththilea athu viduthalaiyaagum; appozhuthu
avan than kaa'niyaadchikkuth thirumbappoavaan. (leaviyaraagamam 25:28)
ஒருவன்
மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை
விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். (லேவியராகமம்
25:29)
oruvan mathilsoozhntha patta'naththilu'l'la than vaasasthalamaagiya veettai vit’raal, athai vit’ra oru varushaththukku'l athai meettukko'l'lalaam;
oru varushaththukku'l'laagavea athai meettukko'l'lavea'ndum. (leaviyaraagamam 25:29)
ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த
பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்;
யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது. (லேவியராகமம்
25:30)
oru varushaththukku'l'lea athai meettukko'l'laathirunthaal, mathilsoozhntha patta'naththilu'l'la antha veedu thalaimu’raithoa’rum athai vaangginavanukkea uriyathaagum; yoobili varushaththilum athu viduthalaiyaagaathu. (leaviyaraagamam 25:30)
மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ,
தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்;
அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி
வருஷத்தில் அவைகள் விடுதலையாகும். (லேவியராகமம்
25:31)
mathilsoozhappadaatha
kiraamangga'lilu'l'la veeduga'loa, theasaththin nilangga'lpoalavea e'n'nappadum;
avaiga'l
meedkappadalaam; yoobili varushaththil avaiga'l viduthalaiyaagum. (leaviyaraagamam 25:31)
லேவியரின்
காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ
லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம். (லேவியராகமம்
25:32)
leaviyarin kaa'niyaadchiyaagiya patta'nangga'lilu'l'la veeduga'laiyoa leaviyar
ekkaalaththilum meettukko'l'lalaam.
(leaviyaraagamam 25:32)
இஸ்ரவேல்
புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள்
அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய
காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை
ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட
அந்த வீடு யூபிலி
வருஷத்தில் விடுதலையாகும். (லேவியராகமம்
25:33)
israveal puththirarukku'l'lea leaviyarudaiya patta'nangga'lilu'l'la veeduga'l avarga'lukkuriya kaa'niyaadchiyaanapadiyaal,
leaviyaridaththil avanudaiya kaa'niyaadchip patta'naththilu'l'la veettai oruvan
vaangginaal, vi’rkappatta antha veedu yoobili varushaththil viduthalaiyaagum. (leaviyaraagamam 25:33)
அவர்கள்
பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம்
விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு
நித்திய காணியாட்சியாயிருக்கும். (லேவியராகமம்
25:34)
avarga'l patta'nangga'laich soozhntha ve'linilam
vi’rkappadalaagaathu; athu avarga'lukku niththiya kaa'niyaadchiyaayirukkum. (leaviyaraagamam 25:34)
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
(லேவியராகமம் 25:35)
un
sagoatharan thariththirappattu, kaiyi'laiththuppoanavanaanaal, avanai
aatharikkavea'ndum; paratheasiyaippoalum thanggavanthavanaippoalum
avan unnoadea pizhaippaanaaga. (leaviyaraagamam 25:35)
நீ அவன் கையில்
வட்டியாவது பொலிசையாவது வாங்காமல்,
உன் தேவனுக்குப் பயந்து,
உன் சகோதரன் உன்னோடே
பிழைக்கும்படி செய்வாயாக. (லேவியராகமம்
25:36)
nee avan kaiyil vattiyaavathu polisaiyaavathu vaanggaamal, un theavanukkup bayanthu, un sagoatharan unnoadea
pizhaikkumpadi seyvaayaaga. (leaviyaraagamam 25:36)
அவனுக்கு
உன் பணத்தை வட்டிக்கும்,
உன் தானியத்தைப் பொலிசைக்கும்
கொடாயாக. (லேவியராகமம் 25:37)
avanukku un pa'naththai vattikkum, un thaaniyaththaip polisaikkum kodaayaaga. (leaviyaraagamam 25:37)
உங்களுக்குக்
கானான் தேசத்தைக் கொடுத்து,
உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை
எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள்
தேவனாகிய கர்த்தர் நானே. (லேவியராகமம் 25:38)
ungga'lukkuk kaanaan theasaththaik koduththu,
ungga'lukku theavanaayirukkumpadi, ungga'lai egipthutheasaththilirunthu
pu’rappadappa'n'nina ungga'l theavanaagiya karththar
naanea. (leaviyaraagamam 25:38)
உன் சகோதரன் தரித்திரனாகி,
உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய
நெருக்கவேண்டாம். (லேவியராகமம் 25:39)
un
sagoatharan thariththiranaagi, unakku
vilaippattuppoanaal, avanai
adimaiyaippoala oozhiyagnseyya nerukkavea'ndaam. (leaviyaraagamam 25:39)
அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே
இருந்து, யூபிலி வருஷம்மட்டும்
உன்னிடத்தில் சேவிக்கக்கடவன். (லேவியராகமம்
25:40)
avan koolikkaaranaippoalavum thanggavanthavanaippoalavum unnoadea
irunthu, yoobili varushammattum unnidaththil
seavikkakkadavan. (leaviyaraagamam 25:40)
பின்பு,
தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி,
தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன். (லேவியராகமம்
25:41)
pinbu, than pi'l'laiga'loadungkooda unnai vittu neenggalaagi, than kudumbaththaaridaththukkum
than pithaakka'lin kaa'niyaadchikkum thirumbippoagakkadavan. (leaviyaraagamam 25:41)
அவர்கள்
நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய
ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள்
அடிமைகளாக விற்கப்படலாகாது. (லேவியராகமம்
25:42)
avarga'l naan egipthutheasaththilirunthu
pu’rappadappa'n'nina ennudaiya
oozhiyakkaarar; aagaiyaal, avarga'l adimaiga'laaga vi’rkappadalaagaathu. (leaviyaraagamam 25:42)
நீ அவனைக் கொடூரமாய்
ஆளாமல், உன் தேவனுக்குப்
பயந்திரு. (லேவியராகமம் 25:43)
nee avanaik
kodooramaay aa'laamal, un theavanukkup bayanthiru. (leaviyaraagamam 25:43)
உனக்கு
இருக்கும் ஆண் அடிமையும்
பெண் அடிமையும் சுற்றிலும்
இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில்
நீ ஆண் அடிமையையும்
பெண் அடிமையையும் விலைக்கு
வாங்கலாம். (லேவியராகமம் 25:44)
unakku irukkum
aa'n adimaiyum pe'n adimaiyum
sut’rilum irukki’ra pu’rajaathiga'laayirukkavea'ndum;
avarga'lil nee aa'n adimaiyaiyum
pe'n adimaiyaiyum vilaikku
vaanggalaam. (leaviyaraagamam 25:44)
உங்களிடத்திலே
பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய
புத்திரரிலும், உங்கள் தேசத்தில்
உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய
குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு
அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச்
சுதந்தரமாக்கலாம். (லேவியராகமம் 25:45)
ungga'lidaththilea
paratheasiga'laayth thanggugi’ra anniya
puththirarilum, ungga'l theasaththil ungga'lidaththilea
pi’ranthirukki’ra avarga'ludaiya kudumbaththaarilum neengga'l ungga'lukku adimaiga'laikko'ndu, avarga'lai ungga'lukkuch suthantharamaakkalaam. (leaviyaraagamam 25:45)
அவர்களை
உங்களுக்குப் பின்வரும் உங்கள்
சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள்
அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும்
அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள்
சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ
ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.
(லேவியராகமம் 25:46)
avarga'lai ungga'lukkup pinvarum ungga'l santhathiyaarum
suthantharikkumpadi neengga'l avarga'laich suthantharamaakkikko'l'lalaam; en’raikkum avarga'l ungga'lukku adimaiga'laayirukkalaam; ungga'l sagoathararaagiya israveal puththiraroa
oruvaraiyoruvar kodooramaaga aa'lakkoodaathu. (leaviyaraagamam 25:46)
உன்னிடத்தில்
இருக்கிற பரதேசியும் அந்நியனும்
செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப்
பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின்
குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால், (லேவியராகமம்
25:47)
unnidaththil irukki’ra paratheasiyum anniyanum selvanaayirukka, avanidaththil
irukki’ra
un sagoatharan thariththirappattu, anthap
paratheasikkaavathu, anniyanukkaavathu, paratheasiyin kudumbaththaaril evanukkaavathu avan vilaippattuppoanaal, (leaviyaraagamam 25:47)
அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப
மீட்கப்படலாம்; அவன் சகோதரரில்
ஒருவன் அவனை மீட்கலாம்.
(லேவியராகமம் 25:48)
avan vilaippattuppoanapin thirumba meedkappadalaam; avan sagoathararil oruvan
avanai meedkalaam. (leaviyaraagamam 25:48)
அவனுடைய
பிதாவின் சகோதரனாவது, அந்தச்
சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச்
சேர்ந்த இனத்தாரில் எவனாவது
அவனை மீட்கலாம்; தன்னால்
கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம். (லேவியராகமம்
25:49)
avanudaiya pithaavin sagoatharanaavathu, anthach sagoatharanudaiya puththiranaavathu, avan kudumbaththilu'l'la avanaich searntha inaththaaril
evanaavathu avanai meedkalaam;
thannaal koodumaanaal, thannaiththaanea meettukko'l'lalaam. (leaviyaraagamam 25:49)
அவன் தான் விலைப்பட்ட
வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான
காலத்தைத் தன்னை விலைக்குக்
கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய
விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும். (லேவியராகமம்
25:50)
avan thaan vilaippatta varushanthodanggi, yoobili varushamvaraikkum u'ndaana
kaalaththaith thannai vilaikkuk
ko'ndavanudan ka'nakkuppaarkkakkadavan; avanudaiya
vilaikkirayam koolikkaaranudaiya kaalakka'nakkuppoala, varushaththogaikku oththuppaarkkavea'ndum. (leaviyaraagamam 25:50)
இன்னும்
அநேக வருஷங்கள் இருந்தால்,
அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத்
தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்
கொடுக்கக்கடவன். (லேவியராகமம் 25:51)
innum aneaga varushangga'l irunthaal,
avan than vilaikkirayaththilea avaiga'lukkuth thakkathaith
thannai meedkumporu'laagath thirumbak kodukkakkadavan. (leaviyaraagamam 25:51)
யூபிலி
வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள்
கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப்பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்
கொடுக்கவேண்டும். (லேவியராகமம் 25:52)
yoobili varushammattum meethiyaayirukki’ra varushangga'l kognchameayaanaal, avanoadea ka'nakkuppaarththu, than varushangga'lukkuththakkathai,
thannai meedkumporu'laagath thirumbak kodukkavea'ndum. (leaviyaraagamam 25:52)
இவன் வருஷத்திற்கு வருஷம்
கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில்
இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக்
கொடூரமாய் ஆளக்கூடாது. (லேவியராகமம்
25:53)
ivan varushaththi’rku varusham
kooliporunthikko'nda koolikkaaranaippoala, avanidaththil
irukkavea'ndum; avan ivanai
unakku munbaagak kodooramaay aa'lakkoodaathu. (leaviyaraagamam 25:53)
இப்படி
இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும்
இவனோடேகூட இவன் பிள்ளைகளும்
யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள். (லேவியராகமம்
25:54)
ippadi ivan meettukko'l'lappadaathirunthaal, ivanum
ivanoadeakooda ivan pi'l'laiga'lum yoobili varushaththil
viduthalaiyaavaarga'l. (leaviyaraagamam 25:54)
இஸ்ரவேல்
புத்திரர் என் ஊழியக்காரர்;
அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர். (லேவியராகமம் 25:55)
israveal puththirar
en oozhiyakkaarar; avarga'l naan egipthutheasaththilirunthu pu’rappadappa'n'nina en oozhiyakkaararea; naan ungga'l theavanaagiya karththar. (leaviyaraagamam 25:55)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!