பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 24:1)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 24:1)
குத்துவிளக்கு
எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக
இடித்துப் பிழிந்த தெளிவான
ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல்
புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக்
கட்டளையிடு. (லேவியராகமம் 24:2)
kuththuvi'lakku eppozhuthum
erinthuko'ndirukkumpadi atha’rkaaga idiththup
pizhintha the'livaana oliva e'n'neyai israveal
puththirar unnidaththil ko'nduvarumpadi avarga'lukkuk katta'laiyidu. (leaviyaraagamam 24:2)
ஆசரிப்புக்
கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு
வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம்
தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய
சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்;
இது உங்கள் தலைமுறைதோறும்
செல்லவேண்டிய நித்திய கட்டளை.
(லேவியராகமம் 24:3)
aasarippuk koodaaraththil
saadchisannithiyin thiraikku ve'lippu’ramaaga aaroan athai eppozhuthum
saayanggaalam thodanggi vidiya’rkaalammattum karththarudaiya sannithiyil eriyumpadi
eat’rakkadavan; ithu ungga'l thalaimu’raithoa’rum sellavea'ndiya niththiya
katta'lai. (leaviyaraagamam 24:3)
அவன் எப்பொழுதும் கர்த்தருடைய
சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற
விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.
(லேவியராகமம் 24:4)
avan eppozhuthum
karththarudaiya sannithiyil parisuththamaana kuththuvi'lakkinmeal irukki’ra vi'lakkuga'lai eriya vaikkakkadavan. (leaviyaraagamam 24:4)
அன்றியும்
நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச்
சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம்
மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு
மாவினால் செய்யப்படவேண்டும். (லேவியராகமம்
24:5)
an’riyum nee melliya
maavai eduththu, athaip
pannira'ndu appangga'laagach suduvaayaaga; ovvoru appam marakkaalilea paththil
ira'ndupanggu maavinaal seyyappadavea'ndum. (leaviyaraagamam 24:5)
அவைகளை
நீ கர்த்தருடைய சந்நிதியில்
பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு
அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில்
அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,
(லேவியராகமம் 24:6)
avaiga'lai nee karththarudaiya sannithiyil parisuththamaana meajaiyinmeal
ira'ndu adukkaaga, ovvoru adukkil
avvaa’ru
appam irukkumpadiyaaga vaiththu, (leaviyaraagamam 24:6)
ஒவ்வொரு
அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம்
போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும். (லேவியராகமம்
24:7)
ovvoru adukkinidaththil suththamaana thoobavarkkam poadakkadavaay; athu appaththoadirunthu, gnaabagakku’riyaagak karththarukkeat’ra thaganabaliyaayirukkum.
(leaviyaraagamam 24:7)
அப்பத்தை
நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல்
புத்திரர் கையிலே வாங்கி,
ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில்
அடுக்கிவைக்கக்கடவன். (லேவியராகமம் 24:8)
appaththai niththiya
udanpadikkaiyaaga israveal
puththirar kaiyilea vaanggi, oayvunaa'lthoa’rum karththarudaiya sannithiyil adukkivaikkakkadavan. (leaviyaraagamam 24:8)
அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்;
அதைப் பரிசுத்த இடத்திலே
புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக்
கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில்
அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.
(லேவியராகமம் 24:9)
athu aaroanaiyum
avan kumaararaiyum searum; athaip
parisuththa idaththilea
pusikkakkadavarga'l; niththiya
katta'laiyaagak karththarukku
idappadum thaganabaliga'lil athu avanukku
mahaa
parisuththamaayirukkum en’raar. (leaviyaraagamam 24:9)
அக்காலத்திலே
இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும்
எகிப்திய புருஷனுக்கும் பிறந்த
புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல்
புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும்
இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும்
பாளயத்திலே சண்டைபண்ணினார்கள். (லேவியராகமம்
24:10)
akkaalaththilea israveal
jaathiyaana sthireekkum egipthiya purushanukkum
pi’rantha
puththiranaagiya oruvan
israveal puththiraroadeakoodap pu’rappattu vanthirunthaan; ivanum
isravealanaagiya oru manithanum paa'layaththilea sa'ndaipa'n'ninaarga'l. (leaviyaraagamam 24:10)
அப்பொழுது
இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை
நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின்
குமாரத்தி. (லேவியராகமம் 24:11)
appozhuthu israveal
jaathiyaana antha sthireeyin
magan
karththarin naamaththai ninthiththuth
thooshiththaan. avanai moaseayinidaththil ko'nduvanthaarga'l. avan thaayin pear seloamith; ava'l thaa'n koaththiraththaanaagiya thibriyin kumaaraththi.
(leaviyaraagamam 24:11)
கர்த்தரின்
வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு
வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள். (லேவியராகமம்
24:12)
karththarin vaakkinaalea
thangga'lukku uththaravu
varumattum, avanaik
kaavalpaduththinaarga'l. (leaviyaraagamam 24:12)
அப்பொழுது
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 24:13)
appozhuthu karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 24:13)
தூஷித்தவனைப்
பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ;
கேட்டவர்கள் எல்லாரும் தங்கள்
கைகளை அவன் தலையின்மேல்
வைப்பார்களாக; பின்பு சபையார்
எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள். (லேவியராகமம்
24:14)
thooshiththavanaip paa'layaththukkup pu’rambea ko'ndupoa; keattavarga'l ellaarum thangga'l kaiga'lai avan thalaiyinmeal vaippaarga'laaga; pinbu sabaiyaar ellaarum
avanaik kalle’riyakkadavarga'l. (leaviyaraagamam 24:14)
மேலும்
நீ இஸ்ரவேல் புத்திரரை
நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால்,
அவன் தன் பாவத்தைச்
சுமப்பான். (லேவியராகமம் 24:15)
mealum nee israveal puththirarai
noakki: evanaagilum than theavanaith
thooshiththaal, avan than paavaththaich sumappaan. (leaviyaraagamam 24:15)
கர்த்தருடைய
நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார்
எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின்
நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும். (லேவியராகமம்
24:16)
karththarudaiya naamaththai
ninthikki’ravan kolaiseyyappadavea'ndum;
sabaiyaar ellaarum
avanaik kalle’riyavea'ndum; paratheasiyaanaalum sutheasiyaanaalum karththarin
naamaththaith thooshikki’ravan kolaiseyyappadavea'ndum.
(leaviyaraagamam 24:16)
ஒரு மனிதனைக் கொல்லுகிறவன்
எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். (லேவியராகமம்
24:17)
oru manithanaik
kollugi’ravan evanoa
avan kolaiseyyappadavea'ndum. (leaviyaraagamam 24:17)
மிருகத்தைக்
கொன்றவன் மிருகத்துக்கு மிருகம்
கொடுக்கக்கடவன். (லேவியராகமம் 24:18)
mirugaththaik kon’ravan mirugaththukku mirugam kodukkakkadavan. (leaviyaraagamam 24:18)
ஒருவன்
பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும்
செய்யப்படக்கடவது. (லேவியராகமம் 24:19)
oruvan pi’ranai oonappaduththinaal, avan seythapadiyea avanukkum seyyappadakkadavathu. (leaviyaraagamam 24:19)
நொறுக்குதலுக்கு நொறுக்குதல்,
கண்ணுக்குக் கண், பல்லுக்குப்
பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும்
ஊனப்படுத்தப்படவேண்டும். (லேவியராகமம் 24:20)
no’rukkuthalukku no’rukkuthal, ka'n'nukkuk ka'n, pallukkup pal; avan oru manithanai oonappaduththinathupoala avanum
oonappaduththappadavea'ndum. (leaviyaraagamam 24:20)
மிருகத்தைக்
கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக்
கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன். (லேவியராகமம்
24:21)
mirugaththaik kon’ravan bathil kodukkavea'ndum; manithanaik
kon’ravanoa kolaiseyyappadakkadavan. (leaviyaraagamam 24:21)
உங்களில்
பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர் என்று சொல் என்றார். (லேவியராகமம்
24:22)
ungga'lil paratheasikkum sutheasikkum orea niyaayam irukkavea'ndum; naan ungga'l theavanaagiya karththar en’ru sol en’raar. (leaviyaraagamam 24:22)
அப்படியே,
தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே
கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே
சொன்னான்; கர்த்தர் மோசேக்குக்
கட்டளையிட்டபடியே செய்தார்கள். (லேவியராகமம்
24:23)
appadiyea, thooshiththavanaip paa'layaththukkup pu’rambea ko'ndupoay, avanaik
kalle’riyumpadi moasea israveal
puththiraroadea sonnaan; karththar
moaseakkuk katta'laiyittapadiyea seythaarga'l. (leaviyaraagamam 24:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!