பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 23:1)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 23:1)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து
பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள்
கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை
நாட்களாவன: (லேவியராகமம் 23:2)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: sabaikoodivanthu parisuththa naadka'laaga aasarikkumpadi, neengga'l koo’ravea'ndiya karththarudaiya pa'ndigai naadka'laavana: (leaviyaraagamam 23:2)
ஆறுநாளும்
வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள்
பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள்,
அதில் ஒரு வேலையும்
செய்யவேண்டாம்; அது உங்கள்
வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. (லேவியராகமம்
23:3)
aa’runaa'lum vealai
seyyavea'ndum; eazhaamnaa'l
parisuththa sabaikooduthalaana oayvunaa'l,
athil oru vealaiyum seyyavea'ndaam; athu ungga'l vaasasthalangga'lilellaam karththarukken’ru oaynthirukkum
naa'laayiruppathaaga. (leaviyaraagamam 23:3)
சபைகூடிவந்து
பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள்
குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின்
பண்டிகைகளாவன: (லேவியராகமம் 23:4)
sabaikoodivanthu parisuththamaay aasarikkumpadi, neengga'l ku’riththakaalaththil koo’ravea'ndiya karththarin
pa'ndigaiga'laavana: (leaviyaraagamam 23:4)
முதலாம்
மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே
கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
(லேவியராகமம் 23:5)
muthalaam maatham
pathinaalaam theathi anthinearamaagi’ra vea'laiyilea
karththarin paskaa pa'ndigaiyum, (leaviyaraagamam 23:5)
அந்த மாதம் பதினைந்தாம்
தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா
அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்;
ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப்
புசிக்கவேண்டும். (லேவியராகமம் 23:6)
antha maatham
pathinainthaam theathiyilea, karththarukkup pu'lippillaa
appap pa'ndigaiyumaay irukkum; eazhunaa'l
pu'lippillaa appangga'laip pusikkavea'ndum. (leaviyaraagamam 23:6)
முதலாம்
நாள் உங்களுக்குப் பரிசுத்தமான
சபைகூடுதல்; அதிலே சாதாரணமான
யாதொரு வேலையும் செய்யவேண்டாம். (லேவியராகமம்
23:7)
muthalaam naa'l ungga'lukkup parisuththamaana sabaikooduthal; athilea saathaara'namaana yaathoru
vealaiyum seyyavea'ndaam. (leaviyaraagamam 23:7)
ஏழுநாளும்
கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள்
பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
(லேவியராகமம் 23:8)
eazhunaa'lum karththarukkuth thaganabaliyidavea'ndum;
eazhaamnaa'l parisuththamaana sabaikooduthal; athil saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu en’ru sol en’raar. (leaviyaraagamam 23:8)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 23:9)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 23:9)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும்
தேசத்தில் நீங்கள் போய்ச்
சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை
அறுக்கும்போது, உங்கள் அறுப்பின்
முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை
ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். (லேவியராகமம்
23:10)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: naan ungga'lukkuk kodukkum theasaththil neengga'l poaych searnthu, athin ve'l'laa'nmaiyai a’rukkumpoathu, ungga'l a’ruppin mutha’rpalanaagiya oru kathirkkattai aasaariyanidaththil ko'nduvarakkadaveerga'l. (leaviyaraagamam 23:10)
உங்களுக்காக
அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன்
அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு
மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில்
அசைவாட்டவேண்டும். (லேவியராகமம் 23:11)
ungga'lukkaaga athu anggigarikkappadumpadi,
aasaariyan anthak
kathirkkattai oayvunaa'lukku ma’runaa'lil karththarudaiya sannithiyil asaivaattavea'ndum. (leaviyaraagamam 23:11)
நீங்கள்
அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும்
நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க
தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், (லேவியராகமம்
23:12)
neengga'l anthak kathirkkattai asaivaattum naa'lil karththarukkuch
sarvaangga thaganabaliyaaga, oru vayathaana
pazhuthat’ra oru aattukkuttiyaiyum, (leaviyaraagamam 23:12)
கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில்
இரண்டு பங்கானதும் எண்ணெயிலே
பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய
போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய
பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். (லேவியராகமம்
23:13)
karththarukkuch sugantha vaasanaiyaana thaganabaliyaaga oru marakkaalilea paththil
ira'ndu panggaanathum e'n'neyilea pisainthathumaana melliya
maavaagiya poajanabaliyaiyum, thiraadchappazharasaththilea kaa’rpadiyaagiya baanabaliyaiyum seluththakkadaveerga'l. (leaviyaraagamam 23:13)
உங்கள்
தேவனுக்குக் காணிக்கையை நீங்கள்
கொண்டுவரும் அந்நாள்மட்டும், அப்பமும்
வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக;
இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள்
தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய
கட்டளை. (லேவியராகமம் 23:14)
ungga'l theavanukkuk kaa'nikkaiyai
neengga'l
ko'nduvarum annaa'lmattum, appamum vaattiya kathirum
pachchaikkathirum pusiyeerga'laaga; ithu ungga'l vaasasthalangga'lilellaam ungga'l thalaimu’raithoa’rum sellavea'ndiya niththiya
katta'lai. (leaviyaraagamam 23:14)
நீங்கள்
அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும்
ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு
எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, (லேவியராகமம்
23:15)
neengga'l asaivaattum kathirkkattaik ko'nduvarum
oayvunaa'lukku ma’runaa'l mutha’rko'ndu e'n'naththuvakki, eazhuvaarangga'l ni’raivea’rinapinbu, (leaviyaraagamam 23:15)
ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய
ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி,
கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச்
செலுத்தக்கடவீர்கள். (லேவியராகமம் 23:16)
eazhaam oayvunaa'lukku ma’runaa'laagiya aimbathaam naa'lmattum e'n'ni, karththarukkup puthiya
poajanabaliyaich
seluththakkadaveerga'l. (leaviyaraagamam 23:16)
நீங்கள்
ஒரு மரக்காலிலே பத்தில்
இரண்டு பங்காகிய மெல்லிய
மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும்
காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை
உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக்
கொண்டுவந்து, (லேவியராகமம் 23:17)
neengga'l oru marakkaalilea
paththil ira'ndu panggaagiya melliya
maavilea pu'lippaagap paagampa'n'nappatta asaivaattum kaa'nikkaiyaayirukki’ra ira'ndu appangga'lai ungga'l vaasasthalangga'lilirunthu karththarukken’ru mutha’rpalanaagak ko'nduvanthu,
(leaviyaraagamam 23:17)
அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க
தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு
ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலியாக அவைகளுக்கு
அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும்
செலுத்தி, (லேவியராகமம் 23:18)
appaththoadeakoodak karththarukkuch
sarvaangga thaganabaliyaaga, oru vayathaana
pazhuthat’ra eazhu aattukkuttiga'laiyum, oru kaa'laiyaiyum, ira'ndu
aattukkadaakka'laiyum karththarukkuch
sugantha vaasanaiyaana thaganabaliyaaga avaiga'lukku aduththa
poajanabaliyaiyum, baanabaliga'laiyum seluththi, (leaviyaraagamam 23:18)
வெள்ளாடுகளில்
ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு வயதான இரண்டு
ஆட்டுக்குட்டிகளைச் சமாதான பலியாகவும்
இடக்கடவீர்கள். (லேவியராகமம் 23:19)
ve'l'laaduga'lil oru kadaavaip
paavanivaara'nabaliyaagavum, oru vayathaana
ira'ndu aattukkuttiga'laich samaathaana baliyaagavum idakkadaveerga'l. (leaviyaraagamam 23:19)
அவைகளை
ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும்
இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய
சந்நிதியில் அசைவாட்டும் பலியாக
அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய
அவைகள் ஆசாரியனுடையவைகளாகும். (லேவியராகமம்
23:20)
avaiga'lai aasaariyan mutha’rpalanaagiya appaththoadum
ira'ndu aattukkuttiga'loadungkoodak karththarudaiya sannithiyil asaivaattum baliyaaga asaivaattakkadavan; karththarukkup parisuththamaagiya avaiga'l aasaariyanudaiyavaiga'laagum. (leaviyaraagamam 23:20)
அந்த நாள் உங்களுக்குச்
சபை கூடும் பரிசுத்த
நாள் என்று கூறவேண்டும்;
அதிலே சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள்
தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய
கட்டளை. (லேவியராகமம் 23:21)
antha naa'l ungga'lukkuch sabai koodum
parisuththa naa'l en’ru koo’ravea'ndum; athilea
saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu; ithu ungga'l vaasasthalangga'lilellaam ungga'l thalaimu’raithoa’rum sellavea'ndiya niththiya
katta'lai. (leaviyaraagamam 23:21)
உங்கள்
தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள்
அறுக்கையில், வயலின் ஓரத்தில்
இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும்,
சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும்
பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர் என்று சொல் என்றார். (லேவியராகமம்
23:22)
ungga'l theasaththin ve'l'laa'nmaiyai neengga'l a’rukkaiyil, vayalin
oaraththil irukki’rathai mut’rilum a’rukkaamalum, sinthikkidakki’ra kathirga'laip po’rukkaamalum, e'liyavanukkum paratheasikkum avaiga'lai vittuvidavea'ndum; naan ungga'l theavanaagiya karththar en’ru sol en’raar. (leaviyaraagamam 23:22)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 23:23)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 23:23)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு
ஏழாம் மாதம் முதலாந்தேதி
எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற
பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த
ஓய்வுநாளாய் இருப்பதாக. (லேவியராகமம்
23:24)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: ungga'lukku eazhaam
maatham muthalaantheathi ekkaa'lach saththaththaal gnaabagakku’riyaagak ko'ndaadugi’ra pa'ndigai engi’ra sabai koodum
parisuththa oayvunaa'laay
iruppathaaga. (leaviyaraagamam 23:24)
அதிலே சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி
செலுத்தவேண்டும் என்று சொல் என்றார். (லேவியராகமம்
23:25)
athilea
saathaara'namaana yaathoru
vealaiyum seyyaamal, karththarukkuth thaganabali seluththavea'ndum en’ru sol en’raar. (leaviyaraagamam 23:25)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 23:26)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 23:26)
அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப்
பாவநிவிர்த்தி செய்யும் நாளும்
சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது
நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி
செலுத்தக்கடவீர்கள். (லேவியராகமம் 23:27)
antha eazhaam
maatham paththaantheathi ungga'lukkup paavanivirththi seyyum
naa'lum sabaikoodum parisuththanaa'lumaayiruppathaaga; appozhuthu neengga'l ungga'l aaththumaakka'laith thaazhmaippaduththi, karththarukkuth thaganabali seluththakkadaveerga'l. (leaviyaraagamam 23:27)
அந்த நாள் உங்கள்
தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில்
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்
பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும்
செய்யவேண்டாம். (லேவியராகமம் 23:28)
antha naa'l ungga'l theavanaagiya karththarudaiya
sannithiyil ungga'lukkaagap paavanivirththi
seyyappadum paavanivaara'na naa'laayirukki’rapadiyaal, athilea
yaathoru vealaiyum seyyavea'ndaam. (leaviyaraagamam 23:28)
அந்நாளிலே
தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு
அறுப்புண்டுபோவான். (லேவியராகமம் 23:29)
annaa'lilea thannaith
thaazhmaippaduththaatha entha aaththumaavum
than janaththil iraathapadikku a’ruppu'ndupoavaan. (leaviyaraagamam 23:29)
அந்நாளிலே
ஒரு ஆத்துமா யாதொரு
வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே
வைக்காமல் அழிப்பேன். (லேவியராகமம்
23:30)
annaa'lilea oru aaththumaa yaathoru
vealaiyaich seythaal, antha aaththumaavai avan janaththin naduvilea
vaikkaamal azhippean. (leaviyaraagamam 23:30)
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள்
வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும்
செல்லவேண்டிய நித்திய கட்டளை.
(லேவியராகமம் 23:31)
athil neengga'l entha vealaiyum
seyyaathiruppathu ungga'l vaasasthalangga'lilellaam ungga'l thalaimu’raithoa’rum sellavea'ndiya niththiya
katta'lai. (leaviyaraagamam 23:31)
அது உங்களுக்கு விசேஷித்த
ஓய்வுநாள்; அதில் உங்கள்
ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி
சாயங்காலம் துவக்கி, மறுநாள்
சாயங்காலமட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
(லேவியராகமம் 23:32)
athu ungga'lukku viseashiththa oayvunaa'l;
athil ungga'l aaththumaakka'laith thaazhmaippaduththavea'ndum; antha maathaththin onbathaantheathi
saayanggaalam thuvakki, ma’runaa'l saayanggaalamattum ungga'l oayvai
aasarikkakkadaveerga'l en’raar. (leaviyaraagamam 23:32)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 23:33)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 23:33)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும்
கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. (லேவியராகமம்
23:34)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: antha eazhaam maatham
pathinainthaantheathimuthal eazhunaa'la'lavum karththarukku
aasarikkum koodaarappa'ndigaiyaayiruppathaaga. (leaviyaraagamam 23:34)
முதலாம்
நாள் சபைகூடும் பரிசுத்த
நாள்; அதிலே சாதாரணமான
யாதொரு வேலையும் செய்யலாகாது.
(லேவியராகமம் 23:35)
muthalaam naa'l sabaikoodum parisuththa naa'l;
athilea saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu. (leaviyaraagamam 23:35)
ஏழுநாளும்
கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம்
நாள் உங்களுக்குச் சபைகூடும்
பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி
செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான
யாதொரு வேலையும் செய்யவேண்டாம். (லேவியராகமம்
23:36)
eazhunaa'lum karththarukkuth thaganabali seluththakkadaveerga'l; ettaam naa'l ungga'lukkuch sabaikoodum parisuththanaa'l; athilea
karththarukkuth thaganabali seluththakkadaveerga'l; athu aasarikkappadum naa'l;
athilea saathaara'namaana yaathoru
vealaiyum seyyavea'ndaam. (leaviyaraagamam 23:36)
நீங்கள்
கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும்
தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற
உங்கள் எல்லாக் காணிக்கைகளும்
பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, (லேவியராகமம் 23:37)
neengga'l karththarudaiya oayvunaadka'lil seluththuvathum thavira,
neengga'l
karththarukkup padaikki’ra ungga'l ellaak kaa'nikkaiga'lum poruththanaiga'lum u’rchaagabaliga'lum thavira, (leaviyaraagamam 23:37)
நீங்கள்
அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க
தகனபலி, போஜனபலி, இரத்தபலி,
பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி
சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக
நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய
பண்டிகைகள் இவைகளே. (லேவியராகமம்
23:38)
neengga'l anthantha naa'lukkuththakkathaayk karththarukkuch
sarvaangga thaganabali, poajanabali, iraththabali, baanabali muthalaanavaiga'laich seluththumpadi sabaikoodivanthu, parisuththamaay aasarippatha’rkaaga neengga'l koo’ravea'ndiya karththarudaiya pa'ndigaiga'l ivaiga'lea. (leaviyaraagamam 23:38)
நிலத்தின்
பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை
ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம்
நாளிலும் ஓய்வு; எட்டாம்
நாளிலும் ஓய்வு. (லேவியராகமம்
23:39)
nilaththin palanai
neengga'l searththuvaikkum eazhaam
maatham pathinainthaantheathimuthal karththarukkup pa'ndigaiyai eazhunaa'l
aasarikkakkadaveerga'l; muthalaam naa'lilum
oayvu; ettaam naa'lilum
oayvu. (leaviyaraagamam 23:39)
முதல் நாளிலே அலங்காரமான
விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின்
ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும்
ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள்
தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில்
ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள். (லேவியராகமம்
23:40)
muthal naa'lilea
alanggaaramaana virudchangga'lin kaniga'laiyum peareechchin oalaiga'laiyum thazhaiththirukki’ra virudchangga'lin ki'laiga'laiyum aat’ralariga'laiyum ko'nduvanthu, ungga'l theavanaagiya karththarudaiya sannithiyil eazhunaa'lum
magizhchchiyaayirungga'l. (leaviyaraagamam 23:40)
வருஷந்தோறும்
ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப்
பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும்
செல்லவேண்டிய நித்திய கட்டளை;
ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும். (லேவியராகமம்
23:41)
varushanthoa’rum eazhunaa'l karththarukku
inthap pa'ndigaiyai aasarikkakkadaveerga'l; ithu ungga'l thalaimu’raithoa’rum sellavea'ndiya niththiya
katta'lai; eazhaam
maathaththil athai aasarikkavea'ndum. (leaviyaraagamam 23:41)
நான் இஸ்ரவேல் புத்திரரை
எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக்
கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள்
சந்ததியார் அறியும்படிக்கு, (லேவியராகமம்
23:42)
naan israveal
puththirarai egipthu theasaththilirunthu
pu’rappadappa'n'ninapoathu, avarga'laik koodaarangga'lil kudiyirukkappa'n'ninathai ungga'l santhathiyaar a’riyumpadikku, (leaviyaraagamam 23:42)
ஏழுநாள்
கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில்
பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில்
வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள்
தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
(லேவியராகமம் 23:43)
eazhunaa'l koodaarangga'lil kudiyirukkakkadaveerga'l; isravealil
pi’ranthavarga'l ellaarum
koodaarangga'lil vaasampa'n'navea'ndum; naan ungga'l theavanaagiya karththar en’ru sol en’raar. (leaviyaraagamam 23:43)
அப்படியே
மோசே கர்த்தருடைய பண்டிகைகளை
இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
(லேவியராகமம் 23:44)
appadiyea moasea karththarudaiya pa'ndigaiga'lai israveal
puththirarukkuth theriviththaan. (leaviyaraagamam 23:44)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!