இந்த
மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்;
சகல காரியங்களும் இரண்டு
மூன்று சாட்சிகளுடைய வாக்கினால்
நிலைவரப்படும். (2கொரிந்தியர் 13:1)
intha moon’raantharam naan ungga'lidaththi’rku varugi’rean; sagala kaariyangga'lum ira'ndu moon’ru saadchiga'ludaiya vaakkinaal nilaivarappadum. (2korinthiyar
13:1)
நான்
இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல,
இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால்
தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து
எழுதுகிறேன். (2கொரிந்தியர் 13:2)
naan ira'ndaantharam ungga'lidaththilirunthapoathu sonnathupoala, ippozhuthu
thooramaayirunthum ungga'lidaththilirukki’ravanaaga, naan ma’rupadiyum vanthaal
thappavidamaatteanen’ru munbu paavagnseythavarga'lukkum mat’ra ellaarukkum
munna’riviththu ezhuthugi’rean. (2korinthiyar
13:2)
கிறிஸ்து எனக்குள்ளே
பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல,
உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார். (2கொரிந்தியர்
13:3)
ki’risthu enakku'l'lea
peasugi’raarenbatha’rku aththaadchi theadugi’reerga'lea; avar ungga'lidamaayp balaveenaralla,
ungga'lidaththil vallavaraayirukki’raar. (2korinthiyar
13:3)
ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில்
அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால்
பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும்
அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய்
விளங்கிய தேவனுடைய வல்லமையினால்
அவருடனேகூடப் பிழைத்திருப்போம். (2கொரிந்தியர்
13:4)
eanenil avar balaveenaththaal siluvaiyil a’raiyappattirunthum, theavanudaiya vallamaiyinaal pizhaiththirukki’raar; appadi
naangga'lum avarukku'l
balaveenaraayirunthum, ungga'lidamaay vi'langgiya theavanudaiya
vallamaiyinaal avarudaneakoodap pizhaiththiruppoam. (2korinthiyar
13:4)
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை
நீங்களே சோதித்து அறியுங்கள்;
உங்களை நீங்களே பரீட்சித்துப்
பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள்
இருக்கிறாரென்று உங்களை நீங்களே
அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு
நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். (2கொரிந்தியர்
13:5)
neengga'l visuvaasamu'l'lavarga'loaven’ru ungga'lai neengga'lea soathiththu a’riyungga'l; ungga'lai neengga'lea pareedchiththup paarungga'l. iyeasuki’risthu ungga'lukku'l irukki’raaren’ru ungga'lai neengga'lea a’riyeerga'laa? neengga'l pareedchaikku nillaathavarga'laayirunthaal
a’riyeerga'l. (2korinthiyar
13:5)
நாங்களோ பரீட்சைக்கு
நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
(2கொரிந்தியர் 13:6)
naangga'loa pareedchaikku nillaathavarga'lallavenbathai a’riveerga'len’ru nambugi’rean. (2korinthiyar 13:6)
மேலும்
நீங்கள் ஒரு பொல்லாங்கும்
செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி
விண்ணப்பம்பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு
நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள்
பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள்
நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம்பண்ணுகிறேன். (2கொரிந்தியர்
13:7)
mealum neengga'l oru pollaanggum seyyaathirukkumpadiyaaga, theavanai noakki
vi'n'nappampa'n'nugi’rean. naangga'l pareedchaikku nin’ravarga'len’ru kaa'nappadumporuttalla, naangga'l pareedchaikku nillaathavarga'lpoalirunthaalum, neengga'l nalamaanathaich seyyumporuttea vi'n'nappampa'n'nugi’rean. (2korinthiyar 13:7)
சத்தியத்திற்கு விரோதமாக
நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே
செய்யக்கூடும். (2கொரிந்தியர் 13:8)
saththiyaththi’rku viroathamaaga naangga'l on’rugnseyyakkoodaamal,
saththiyaththi’rku anukoolamaagavea seyyakkoodum. (2korinthiyar
13:8)
நாங்கள் பலவீனரும்
நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள்
நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம். (2கொரிந்தியர்
13:9)
naangga'l balaveenarum neengga'l balamu'l'lavarga'lumaayirukkaiyil,
santhoashappadugi’roam; neengga'l na’rseerporunthumpadikkum vi'n'nappampa'n'nugi’roam. (2korinthiyar
13:9)
ஆனதால்
இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே
கர்த்தர் எனக்குக் கொடுத்த
அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில்
வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை
எழுதுகிறேன். (2கொரிந்தியர் 13:10)
aanathaal idiththuppoadavalla, oon’rak kattavea karththar
enakkuk koduththa athigaaraththinpadi, naan ungga'lidaththil vanthirukkumpoathu, ka'ndithampa'n'naathapadikku, naan thooramaayirunthu ivaiga'lai ezhuthugi’rean. (2korinthiyar
13:10)
கடைசியாக, சகோதரரே,
சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது
அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய
தேவன் உங்களோடேகூட இருப்பார்.
(2கொரிந்தியர் 13:11)
kadaisiyaaga, sagoathararea, santhoashamaayirungga'l, na’rseer porunthungga'l, aa’ruthaladaiyungga'l; eagasinthaiyaayirungga'l, samaathaanamaayirungga'l, appozhuthu
anbukkum
samaathaanaththukkum kaara'naraagiya theavan
ungga'loadeakooda iruppaar.
(2korinthiyar 13:11)
ஒருவரையொருவர் பரிசுத்த
முத்தத்தோடு வாழ்த்துங்கள். (2கொரிந்தியர்
13:12)
oruvaraiyoruvar parisuththa muththaththoadu vaazhththungga'l. (2korinthiyar
13:12)
பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு
வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (2கொரிந்தியர்
13:13)
parisuththavaanga'lellaarum ungga'lukku vaazhththuthal sollugi’raarga'l. (2korinthiyar
13:13)
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும்,
தேவனுடைய அன்பும், பரிசுத்த
ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள்
அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
(2கொரிந்தியர் 13:14)
karththaraagiya iyeasuki’risthuvinudaiya
kirubaiyum, theavanudaiya
anbum,
parisuththa aaviyinudaiya
aikkiyamum, ungga'l anaivaroadungkooda iruppathaaga. aamen.
(2korinthiyar 13:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!