Tuesday, May 31, 2016

Kalaaththiyar 1 | கலாத்தியர் 1 | Galatians 1

மனுஷராலுமல்ல,  மனுஷன்  மூலமாயுமல்ல,  இயேசுகிறிஸ்துவினாலும்,  அவரை  மரித்தோரிலிருந்தெழுப்பின  பிதாவாகிய  தேவனாலும்,  அப்போஸ்தலனாயிருக்கிற  பவுலாகிய  நானும்,  (கலாத்தியர்  1:1)

manusharaalumalla,  manushan  moolamaayumalla,  iyeasuki’risthuvinaalum,  avarai  mariththoarilirunthezhuppina  pithaavaagiya  theavanaalum,  appoasthalanaayirukki’ra  pavulaagiya  naanum,  (kalaaththiyar  1:1)

என்னுடனேகூட  இருக்கிற  சகோதரரெல்லாரும்,  கலாத்தியா  நாட்டிலுள்ள  சபைகளுக்கு  எழுதுகிறதாவது:  (கலாத்தியர்  1:2)

ennudaneakooda  irukki’ra  sagoathararellaarum,  kalaaththiyaa  naattilu'l'la  sabaiga'lukku  ezhuthugi’rathaavathu:  (kalaaththiyar  1:2)

பிதாவாகிய  தேவனாலும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக;  (கலாத்தியர்  1:3)

pithaavaagiya  theavanaalum,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga;  (kalaaththiyar  1:3)

அவர்  நம்மை  இப்பொழுதிருக்கிற  பொல்லாத  பிரபஞ்சத்தினின்று  விடுவிக்கும்படி  நம்முடைய  பிதாவாகிய  தேவனுடைய  சித்தத்தின்படியே  நம்முடைய  பாவங்களுக்காகத்  தம்மைத்தாமே  ஒப்புக்கொடுத்தார்;  (கலாத்தியர்  1:4)

avar  nammai  ippozhuthirukki’ra  pollaatha  pirapagnchaththinin’ru  viduvikkumpadi  nammudaiya  pithaavaagiya  theavanudaiya  siththaththinpadiyea  nammudaiya  paavangga'lukkaagath  thammaiththaamea  oppukkoduththaar;  (kalaaththiyar  1:4)

அவருக்கு  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  (கலாத்தியர்  1:5)

avarukku  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lilum  magimai  u'ndaavathaaga.  aamen.  (kalaaththiyar  1:5)

உங்களைக்  கிறிஸ்துவின்  கிருபையினாலே  அழைத்தவரை  நீங்கள்  இவ்வளவு  சீக்கிரமாய்  விட்டு,  வேறொரு  சுவிசேஷத்திற்குத்  திரும்புகிறதைப்பற்றி  நான்  ஆச்சரியப்படுகிறேன்;  (கலாத்தியர்  1:6)

ungga'laik  ki’risthuvin  kirubaiyinaalea  azhaiththavarai  neengga'l  ivva'lavu  seekkiramaay  vittu,  vea’roru  suviseashaththi’rkuth  thirumbugi’rathaippat’ri  naan  aachchariyappadugi’rean;  (kalaaththiyar  1:6)

வேறொரு  சுவிசேஷம்  இல்லையே;  சிலர்  உங்களைக்  கலகப்படுத்தி,  கிறிஸ்துவினுடைய  சுவிசேஷத்தைப்  புரட்ட  மனதாயிருக்கிறார்களேயல்லாமல்  வேறல்ல.  (கலாத்தியர்  1:7)

vea’roru  suviseasham  illaiyea;  silar  ungga'laik  kalagappaduththi,  ki’risthuvinudaiya  suviseashaththaip  puratta  manathaayirukki’raarga'leayallaamal  vea’ralla.  (kalaaththiyar  1:7)

நாங்கள்  உங்களுக்குப்  பிரசங்கித்த  சுவிசேஷத்தையல்லாமல்,  நாங்களாவது,  வானத்திலிருந்து  வருகிற  ஒரு  தூதனாவது,  வேறொரு  சுவிசேஷத்தை  உங்களுக்குப்  பிரசங்கித்தால்,  அவன்  சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  (கலாத்தியர்  1:8)

naangga'l  ungga'lukkup  pirasanggiththa  suviseashaththaiyallaamal,  naangga'laavathu,  vaanaththilirunthu  varugi’ra  oru  thoothanaavathu,  vea’roru  suviseashaththai  ungga'lukkup  pirasanggiththaal,  avan  sabikkappattavanaayirukkakkadavan.  (kalaaththiyar  1:8)

முன்  சொன்னதுபோல  மறுபடியும்  சொல்லுகிறேன்;  நீங்கள்  ஏற்றுக்கொண்ட  சுவிசேஷத்தையல்லாமல்  வேறொரு  சுவிசேஷத்தை  ஒருவன்  உங்களுக்குப்  பிரசங்கித்தால்  அவன்  சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  (கலாத்தியர்  1:9)

mun  sonnathupoala  ma’rupadiyum  sollugi’rean;  neengga'l  eat’rukko'nda  suviseashaththaiyallaamal  vea’roru  suviseashaththai  oruvan  ungga'lukkup  pirasanggiththaal  avan  sabikkappattavanaayirukkakkadavan.  (kalaaththiyar  1:9)

இப்பொழுது  நான்  மனுஷரையா,  தேவனையா,  யாரை  நாடிப்  போதிக்கிறேன்?  மனுஷரையா  பிரியப்படுத்தப்  பார்க்கிறேன்?  நான்  இன்னும்  மனுஷரைப்  பிரியப்படுத்துகிறவனாயிருந்தால்  நான்  கிறிஸ்துவின்  ஊழியக்காரனல்லவே.  (கலாத்தியர்  1:10)

ippozhuthu  naan  manusharaiyaa,  theavanaiyaa,  yaarai  naadip  poathikki’rean?  manusharaiyaa  piriyappaduththap  paarkki’rean?  naan  innum  manusharaip  piriyappaduththugi’ravanaayirunthaal  naan  ki’risthuvin  oozhiyakkaaranallavea.  (kalaaththiyar  1:10)

மேலும்,  சகோதரரே,  என்னால்  பிரசங்கிக்கப்பட்ட  சுவிசேஷம்  மனுஷருடைய  யோசனையின்படியானதல்லவென்று  உங்களுக்குத்  தெரிவிக்கிறேன்.  (கலாத்தியர்  1:11)

mealum,  sagoathararea,  ennaal  pirasanggikkappatta  suviseasham  manusharudaiya  yoasanaiyinpadiyaanathallaven’ru  ungga'lukkuth  therivikki’rean.  (kalaaththiyar  1:11)

நான்  அதை  ஒரு  மனுஷனால்  பெற்றதுமில்லை,  மனுஷனால்  கற்றதுமில்லை,  இயேசுகிறிஸ்துவே  அதை  எனக்கு  வெளிப்படுத்தினார்.  (கலாத்தியர்  1:12)

naan  athai  oru  manushanaal  pet’rathumillai,  manushanaal  kat’rathumillai,  iyeasuki’risthuvea  athai  enakku  ve'lippaduththinaar.  (kalaaththiyar  1:12)

நான்  யூதமார்க்கத்திலிருந்தபோது  என்னுடைய  நடக்கையைக்குறித்துக்  கேள்விப்பட்டிருப்பீர்கள்;  தேவனுடைய  சபையை  நான்  மிகவும்  துன்பப்படுத்தி,  அதைப்  பாழாக்கி;  (கலாத்தியர்  1:13)

naan  yoothamaarkkaththilirunthapoathu  ennudaiya  nadakkaiyaikku’riththuk  kea'lvippattiruppeerga'l;  theavanudaiya  sabaiyai  naan  migavum  thunbappaduththi,  athaip  paazhaakki;  (kalaaththiyar  1:13)

என்  ஜனத்தாரில்  என்  வயதுள்ள  அநேகரைப்பார்க்கிலும்  யூதமார்க்கத்திலே  தேறினவனாய்,  என்  பிதாக்களுடைய  பாரம்பரிய  நியாயங்களுக்காக  மிகவும்  பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.  (கலாத்தியர்  1:14)

en  janaththaaril  en  vayathu'l'la  aneagaraippaarkkilum  yoothamaarkkaththilea  thea’rinavanaay,  en  pithaakka'ludaiya  paarambariya  niyaayangga'lukkaaga  migavum  bakthivairaakkiyamu'l'lavanaayirunthean.  (kalaaththiyar  1:14)

அப்படியிருந்தும்,  நான்  என்  தாயின்  வயிற்றிலிருந்ததுமுதல்,  என்னைப்  பிரித்தெடுத்து,  தம்முடைய  கிருபையினால்  அழைத்த  தேவன்,  (கலாத்தியர்  1:15)

appadiyirunthum,  naan  en  thaayin  vayit’rilirunthathumuthal,  ennaip  piriththeduththu,  thammudaiya  kirubaiyinaal  azhaiththa  theavan,  (kalaaththiyar  1:15)

தம்முடைய  குமாரனை  நான்  புறஜாதிகளிடத்தில்  சுவிசேஷமாய்  அறிவிக்கும்பொருட்டாக,  அவரை  எனக்குள்  வெளிப்படுத்தப்  பிரியமாயிருந்தபோது,  உடனே  நான்  மாம்சத்தோடும்  இரத்தத்தோடும்  யோசனைபண்ணாமலும்;  (கலாத்தியர்  1:16)

thammudaiya  kumaaranai  naan  pu’rajaathiga'lidaththil  suviseashamaay  a’rivikkumporuttaaga,  avarai  enakku'l  ve'lippaduththap  piriyamaayirunthapoathu,  udanea  naan  maamsaththoadum  iraththaththoadum  yoasanaipa'n'naamalum;  (kalaaththiyar  1:16)

எனக்கு  முன்னே  அப்போஸ்தலரானவர்களிடத்திலே  எருசலேமுக்குப்  போகாமலும்;  அரபிதேசத்திற்குப்  புறப்பட்டுப்போய்,  மறுபடியும்  தமஸ்கு  ஊருக்குத்  திரும்பிவந்தேன்.  (கலாத்தியர்  1:17)

enakku  munnea  appoasthalaraanavarga'lidaththilea  erusaleamukkup  poagaamalum;  arabitheasaththi’rkup  pu’rappattuppoay,  ma’rupadiyum  thamasku  oorukkuth  thirumbivanthean.  (kalaaththiyar  1:17)

மூன்று  வருஷம்  சென்றபின்பு,  பேதுருவைக்  கண்டுகொள்ளும்படி  நான்  எருசலேமுக்குப்  போய்,  அவனிடத்தில்  பதினைந்துநாள்  தங்கியிருந்தேன்.  (கலாத்தியர்  1:18)

moon’ru  varusham  sen’rapinbu,  peathuruvaik  ka'nduko'l'lumpadi  naan  erusaleamukkup  poay,  avanidaththil  pathinainthunaa'l  thanggiyirunthean.  (kalaaththiyar  1:18)

கர்த்தருடைய  சகோதரனாகிய  யாக்கோபைத்  தவிர,  அப்போஸ்தலரில்  வேறொருவரையும்  நான்  காணவில்லை.  (கலாத்தியர்  1:19)

karththarudaiya  sagoatharanaagiya  yaakkoabaith  thavira,  appoasthalaril  vea’roruvaraiyum  naan  kaa'navillai.  (kalaaththiyar  1:19)

நான்  உங்களுக்கு  எழுதுகிற  இவைகள்  பொய்யல்லவென்று  தேவனுக்குமுன்பாக  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்.  (கலாத்தியர்  1:20)

naan  ungga'lukku  ezhuthugi’ra  ivaiga'l  poyyallaven’ru  theavanukkumunbaaga  nichchayamaaych  sollugi’rean.  (kalaaththiyar  1:20)

பின்பு,  சீரியா  சிலிசியா  நாடுகளின்  புறங்களில்  வந்தேன்.  (கலாத்தியர்  1:21)

pinbu,  seeriyaa  silisiyaa  naaduga'lin  pu’rangga'lil  vanthean.  (kalaaththiyar  1:21)

மேலும்  யூதேயாதேசத்திலே  கிறிஸ்துவுக்குள்ளான  சபைகளுக்கு  முகமறியாதவனாயிருந்தேன்.  (கலாத்தியர்  1:22)

mealum  yootheayaatheasaththilea  ki’risthuvukku'l'laana  sabaiga'lukku  mugama’riyaathavanaayirunthean.  (kalaaththiyar  1:22)

முன்னே  நம்மைத்  துன்பப்படுத்தினவனே,  தான்  அழிக்கத்தேடின  விசுவாசத்தை  இப்பொழுது  பிரசங்கிக்கிறான்  என்பதைமாத்திரம்  அவர்கள்  கேள்விப்பட்டிருந்து,  (கலாத்தியர்  1:23)

munnea  nammaith  thunbappaduththinavanea,  thaan  azhikkaththeadina  visuvaasaththai  ippozhuthu  pirasanggikki’raan  enbathaimaaththiram  avarga'l  kea'lvippattirunthu,  (kalaaththiyar  1:23)

என்னைப்பற்றித்  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  (கலாத்தியர்  1:24)

ennaippat’rith  theavanai  magimaippaduththinaarga'l.  (kalaaththiyar  1:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!