பதினாலு வருஷம்
சென்றபின்பு, நான் தீத்துவைக்
கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும்
எருசலேமுக்குப் போனேன். (கலாத்தியர்
2:1)
pathinaalu varusham
sen’rapinbu, naan theeththuvaik
koottikko'ndu barnabaavudaneakooda
ma’rupadiyum erusaleamukkup poanean.
(kalaaththiyar 2:1)
நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை
அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்;
ஆயினும் நான் ஓடுகிறதும்,
ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய்
விவரித்துக் காண்பித்தேன். (கலாத்தியர்
2:2)
naan theava
a’rivippinaalea poay, pu’rajaathiga'lidaththil naan pirasanggikki’ra suviseashaththai avarga'lukku vivariththuk
kaa'nbiththean; aayinum
naan oadugi’rathum, oadinathum
vee'naagaathapadikku e'n'nikkaiyu'l'lavarga'lukkea thanimaiyaay
vivariththuk kaa'nbiththean. (kalaaththiyar 2:2)
ஆனாலும் என்னுடனேகூட
இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை. (கலாத்தியர்
2:3)
aanaalum ennudaneakooda iruntha
theeththu kireakkanaayirunthum viruththaseathanampa'n'nikko'l'lumpadikkuk kattaayampa'n'nappadavillai. (kalaaththiyar 2:3)
கிறிஸ்து இயேசுவுக்குள்
நமக்கு உண்டான சுயாதீனத்தை
உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய்
நுழைந்த கள்ளச் சகோதரர்
நிமித்தம் அப்படியாயிற்று. (கலாத்தியர்
2:4)
ki’risthu iyeasuvukku'l namakku u'ndaana
suyaatheenaththai u'lavupaarththu nammai
niyaayappiramaa'naththi’rku adimaiga'laakkumporuttaagap pakkavazhiyaay nuzhaintha
ka'l'lach
sagoatharar nimiththam
appadiyaayit’ru. (kalaaththiyar 2:4)
சுவிசேஷத்தின் சத்தியம்
உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள்
ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக்
கீழ்ப்படிந்து இணங்கவில்லை. (கலாத்தியர்
2:5)
suviseashaththin saththiyam ungga'lidaththilea nilaiththirukkumpadi, naangga'l oru naazhigaiyaagilum avarga'lukkuk keezhppadinthu i'nanggavillai. (kalaaththiyar 2:5)
அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு
ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள்
எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை,
தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே. (கலாத்தியர்
2:6)
allaamalum e'n'nikkaiyu'l'lavarga'laayirunthavarga'l enakku on’rum poathikkavillai; avarga'l eppadippattavarga'laayirunthaalum
enakkuk kavalaiyillai, theavan
manusharidaththil padchapaathamu'l'lavarallavea. (kalaaththiyar 2:6)
அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப்
பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும்
பலப்படுத்தினபடியால், (கலாத்தியர் 2:7)
athuvumallaamal, viruththaseathanamu'l'lavarga'lukku appoasthalanaayirukkumpadi peathuruvaip
balappaduththinavar pu’rajaathiga'lukku appoasthalanaayirukkumpadi ennaiyum
balappaduththinapadiyaal, (kalaaththiyar 2:7)
விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப்
பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம்
இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள்
கண்டு; (கலாத்தியர் 2:8)
viruththaseathanamu'l'lavarga'lukkuch suviseashaththaip pirasanggikkumpadi peathuruvukkuk kaiya'likkappattathupoala, viruththaseathanam illaathavarga'lukkup pirasanggikkumpadi athu enakkum
kaiya'likkappattathen’ru avarga'l ka'ndu; (kalaaththiyar 2:8)
எனக்கு அளிக்கப்பட்ட
கிருபையை அறிந்தபோது, தூண்களாக
எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும்,
யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள்
புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய
ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும்
பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
(கலாத்தியர் 2:9)
enakku a'likkappatta kirubaiyai a’rinthapoathu, thoo'nga'laaga e'n'nappatta yaakkoabum, keapaavum, yoavaanum,
thaangga'l viruththaseathanamu'l'lavarga'lukkum, naangga'l pu’rajaathiga'lukkum pirasanggikkumpadi, anniyoanniya aikkiyaththi’rku adaiyaa'lamaaga enakkum
barnabaavukkum valathukai
koduththu, (kalaaththiyar 2:9)
தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்;
அப்படிச் செய்யும்படி அதற்கு
முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன். (கலாத்தியர்
2:10)
thariththirarai ninaiththukko'l'lumpadikkumaaththiram sonnaarga'l; appadich seyyumpadi atha’rku munnamea naanum
karuththu'l'lavanaayirunthean. (kalaaththiyar 2:10)
மேலும், பேதுரு
அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல்
குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே
எதிர்த்தேன். (கலாத்தியர் 2:11)
mealum, peathuru
anthiyoakiyaavukku vanthapoathu,
avanmeal kut’ragn sumanthathinaal,
naan mugamugamaay avanoadea ethirththean.
(kalaaththiyar 2:11)
எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்;
அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து,
விலகிப் பிரிந்தான். (கலாத்தியர்
2:12)
eppadiyenil, yaakkoabinidaththilirunthu silar varugi’ratha’rkumunnea avan pu’rajaathiyaarudanea saappittaan; avarga'l vanthapoathoa, viruththaseathanamu'l'lavarga'lukkup bayanthu, vilagip pirinthaan. (kalaaththiyar 2:12)
மற்ற யூதரும்
அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய
மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். (கலாத்தியர்
2:13)
mat’ra yootharum avanudaneakooda maayampa'n'ninaarga'l; avarga'ludaiya maayaththinaalea barnabaavum izhuppu'ndaan. (kalaaththiyar 2:13)
இப்படி அவர்கள்
சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய்
நடவாததை நான் கண்டபோது,
எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்
சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக
நடவாமல், புறஜாதியார் முறைமையாக
நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி
நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? (கலாத்தியர்
2:14)
ippadi avarga'l suviseashaththin saththiyaththi’rkeat’rapadi sariyaay nadavaathathai naan ka'ndapoathu, ellaarukkum
munbaaga
naan peathuruvai noakkich sonnathu ennaven’raal: yoothanaayirukki’ra neer yoothar mu’raimaiyaaga nadavaamal, pu’rajaathiyaar mu’raimaiyaaga nadanthuko'ndirukka, pu’rajaathiyaarai yoothar
mu’raimaiyaaga nadakkumpadi
neer eppadik kattaayampa'n'nalaam? (kalaaththiyar 2:14)
புறஜாதியாரில் பிறந்த
பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும்
இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே
மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து,
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து
இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர்
2:15)
pu’rajaathiyaaril
pi’rantha
paaviga'laayiraamal, subaavaththinpadi yootharaayirukki’ra naamum
iyeasuki’risthuvaippat’rum visuvaasaththinaaleayan’ri, niyaayappiramaa'naththin kiriyaiga'linaalea manushan
neethimaanaakkappaduvathillaiyen’ru a’rinthu, niyaayappiramaa'naththin kiriyaiga'linaalalla, ki’risthuvaippat’rum visuvaasaththinaalea neethimaanga'laakkappadumpadikkuk ki’risthu iyeasuvinmeal visuvaasiga'laanoam. (kalaaththiyar 2:15)
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே
எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. (கலாத்தியர்
2:16)
niyaayappiramaa'naththin kiriyaiga'linaalea entha manushanum neethimaanaakkappaduvathillaiyea. (kalaaththiyar 2:16)
கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற
நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து
பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
(கலாத்தியர் 2:17)
ki’risthuvukku'l neethimaanga'laakkappadumpadi
naadugi’ra naamum
paaviga'laagak kaa'nappaduvoamaanaal, ki’risthu paavaththi’rkuk kaara'naroa?
allavea. (kalaaththiyar 2:17)
நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால்,
பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
(கலாத்தியர் 2:18)
naan idiththuppoattavaiga'laiyea naan ma’rupadiyum kattinaal, piramaa'naththai mee’rugi’ravanen’ru kaa'nappaduvean. (kalaaththiyar 2:18)
தேவனுக்கென்று பிழைக்கும்படி
நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
(கலாத்தியர் 2:19)
theavanukken’ru pizhaikkumpadi naan niyaayappiramaa'naththinaalea niyaayappiramaa'naththi’rku mariththeanea. (kalaaththiyar 2:19)
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும்,
பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே
எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில்
பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து
எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த
தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். (கலாத்தியர்
2:20)
ki’risthuvudaneakoodach siluvaiyila’raiyappattean; aayinum,
pizhaiththirukki’rean; ini naan alla, ki’risthuvea enakku'l pizhaiththirukki’raar; naan ippozhuthu maamsaththil pizhaiththirukki’rathoa, ennil anbukoornthu enakkaagath thammaiththaamea oppukkoduththa theavanudaiya
kumaaranaippat’rum visuvaasaththinaalea pizhaiththirukki’rean. (kalaaththiyar 2:20)
நான் தேவனுடைய
கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது
நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து
மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர்
2:21)
naan theavanudaiya
kirubaiyai viruthaavaakkugi’rathillai; neethiyaanathu niyaayappiramaa'naththinaalea varumaanaal,
ki’risthu
mariththathu vee'naayirukkumea. (kalaaththiyar 2:21)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!