Monday, April 27, 2020

உன்னதப்பாட்டு

சாலொமோன்<Solomon>  பாடின  உன்னதப்பாட்டு.  {Song  1:1}

 

அவர்  தமது  வாயின்  முத்தங்களால்  என்னை  முத்தமிடுவாராக:  உமது  நேசம்  திராட்சரசத்தைப்பார்க்கிலும்  இன்பமானது.  {Song  1:2}

 

உமது  பரிமளதைலங்கள்  இன்பமான  வாசனையுள்ளவைகள்;  உமது  நாமம்  ஊற்றுண்ட  பரிமளதைலமாயிருக்கிறது;  ஆகையால்  கன்னியர்கள்  உம்மை  நேசிக்கிறார்கள்.  {Song  1:3}

 

என்னை  இழுத்துக்கொள்ளும்,  உமக்குப்  பின்னே  ஓடிவருவோம்;  ராஜா  என்னைத்  தமது  அறைகளில்  அழைத்துக்கொண்டுவந்தார்;  நாங்கள்  உமக்குள்  களிகூர்ந்து  மகிழுவோம்;  திராட்சரசத்தைப்பார்க்கிலும்  உமது  நேசத்தை  நினைப்போம்;  உத்தமர்கள்  உம்மை  நேசிக்கிறார்கள்.  {Song  1:4}

 

எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே!  கேதாரின்<Kedar>  கூடாரங்களைப்போலவும்,  சாலொமோனின்<Solomon>  திரைகளைப்போலவும்  நான்  கறுப்பாயிருந்தாலும்,  அழகாயிருக்கிறேன்.  {Song  1:5}

 

நான்  கறுப்பாயிருக்கிறேன்  என்று  பாராதேயுங்கள்;  வெயில்  என்மேற்பட்டது;  என்  தாயின்  பிள்ளைகள்  என்மேல்  கோபமாயிருந்து,  என்னைத்  திராட்சத்தோட்டங்களுக்குக்  காவற்காரியாக  வைத்தார்கள்;  என்  சொந்தத்  திராட்சத்தோட்டத்தையோ  நான்  காக்கவில்லை.  {Song  1:6}

 

என்  ஆத்தும  நேசரே!  உமது  மந்தையை  எங்கே  மேய்த்து,  அதை  மத்தியானத்தில்  எங்கே  மடக்குகிறீர்?  எனக்குச்  சொல்லும்;  உமது  தோழரின்  மந்தைகள்  அருகே  அலைந்துதிரிகிறவளைப்போல  நான்  இருக்கவேண்டியதென்ன?  {Song  1:7}

 

ஸ்திரீகளில்  ரூபவதியே!  அதை  நீ  அறியாயாகில்,  மந்தையின்  காலடிகளைத்  தொடர்ந்துபோய்,  மேய்ப்பர்களுடைய  கூடாரங்களண்டையில்  உன்  ஆட்டுக்குட்டிகளை  மேயவிடு.  {Song  1:8}

 

என்  பிரியமே!  பார்வோனுடைய<Pharaoh>  இரதங்களில்  பூண்டிருக்கிற  பரிகள்  பவுஞ்சுக்கு  உன்னை  ஒப்பிடுகிறேன்.  {Song  1:9}

 

ஆபரணாதிகள்  பூண்ட  உன்  கன்னங்களும்,  ஆரங்கள்  பூண்ட  உன்  கழுத்தும்  அழகாயிருக்கிறது.  {Song  1:10}

 

வெள்ளிப்  பொட்டுகளுள்ள  பொன்  ஆபரணங்களை  உனக்குப்  பண்ணுவோம்.  {Song  1:11}

 

ராஜா  தமது  பந்தியிலிருக்குந்தனையும்  என்னுடைய  நளததைலம்  தன்  வாசனையை  வீசும்.  {Song  1:12}

 

என்  நேசர்  எனக்கு  என்  ஸ்தனங்களின்  நடுவில்  தங்கும்  வெள்ளைப்போளச்  செண்டு.  {Song  1:13}

 

என்  நேசர்  எனக்கு  எங்கேதி<Engedi>  ஊர்  திராட்சத்தோட்டங்களில்  முளைக்கும்  மருதோன்றிப்  பூங்கொத்து.  {Song  1:14}

 

என்  பிரியமே!  நீ  ரூபவதி;  நீ  ரூபவதி;  உன்  கண்கள்  புறாக்கண்கள்.  {Song  1:15}

 

நீர்  ரூபமுள்ளவர்;  என்  நேசரே!  நீர்  இன்பமானவர்;  நம்முடைய  மஞ்சம்  பசுமையானது.  {Song  1:16}

 

நம்முடைய  வீட்டின்  உத்திரங்கள்  கேதுருமரம்,  நம்முடைய  மச்சு  தேவதாருமரம்.  {Song  1:17}

 

நான்  சாரோனின்<Sharon>  ரோஜாவும்,  பள்ளத்தாக்குகளின்  லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.  {Song  2:1}

 

முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  குமாரத்திகளுக்குள்ளே  எனக்குப்  பிரியமானவளும்  இருக்கிறாள்.  {Song  2:2}

 

காட்டுமரங்களுக்குள்ளே  கிச்சிலிமரம்  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  குமாரருக்குள்ளே  என்  நேசர்  இருக்கிறார்;  அதின்  நிழலிலே  வாஞ்சையாய்  உட்காருகிறேன்,  அதின்  கனி  என்  வாய்க்கு  மதுரமாயிருக்கிறது.  {Song  2:3}

 

என்னை  விருந்துசாலைக்கு  அழைத்துக்கொண்டுபோனார்;  என்மேல்  பறந்த  அவருடைய  கொடி  நேசமே.  {Song  2:4}

 

திராட்சரசத்தால்  என்னைத்  தேற்றுங்கள்,  கிச்சிலிப்பழங்களால்  என்னை  ஆற்றுங்கள்;  நேசத்தால்  சோகமடைந்திருக்கிறேன்.  {Song  2:5}

 

அவர்  இடதுகை  என்  தலையின்கீழ்  இருக்கிறது;  அவர்  வலதுகை  என்னை  அணைத்துக்கொள்ளுகிறது.  {Song  2:6}

 

எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே!  எனக்குப்  பிரியமானவளுக்கு  மனதாகுமட்டும்,  நீங்கள்  அவளை  விழிக்கப்பண்ணாமலும்  எழுப்பாமலுமிருக்கும்படி  வெளிமான்கள்மேலும்  வெளியின்  மரைகள்மேலும்  உங்களை  ஆணையிடுகிறேன்.  {Song  2:7}

 

இது  என்  நேசருடைய  சத்தம்!  இதோ,  அவர்  மலைகள்மேல்  குதித்தும்  மேடுகள்மேல்  துள்ளியும்  வருகிறார்.  {Song  2:8}

 

என்  நேசர்  வெளிமானுக்கும்  மரைக்குட்டிக்கும்  ஒப்பாயிருக்கிறார்;  இதோ,  அவர்  எங்கள்  மதிலுக்குப்  புறம்பே  நின்று,  பலகணி  வழியாய்ப்  பார்த்து,  கிராதியின்  வழியாய்த்  தமது  மலர்ந்த  முகத்தைக்  காண்பிக்கிறார்.  {Song  2:9}

 

என்  நேசர்  என்னோடே  பேசி:  என்  பிரியமே!  என்  ரூபவதியே!  எழுந்துவா.  {Song  2:10}

 

இதோ,  மாரிகாலம்  சென்றது,  மழைபெய்து  ஒழிந்தது.  {Song  2:11}

 

பூமியிலே  புஷ்பங்கள்  காணப்படுகிறது;  குருவிகள்  பாடுங்காலம்  வந்தது,  காட்டுப்புறாவின்  சத்தம்  நமது  தேசத்தில்  கேட்கப்படுகிறது.  {Song  2:12}

 

அத்திமரம்  காய்காய்த்தது;  திராட்சக்கொடிகள்  பூப்பூத்து  வாசனையும்  பரிமளிக்கிறது;  என்  பிரியமே!  என்  ரூபவதியே!  நீ  எழுந்துவா.  {Song  2:13}

 

கன்மலையின்  வெடிப்புகளிலும்  சிகரங்களின்  மறைவிடங்களிலும்  தங்குகிற  என்  புறாவே!  உன்  முகரூபத்தை  எனக்குக்  காண்பி,  உன்  சத்தத்தை  நான்  கேட்கட்டும்;  உன்  சத்தம்  இன்பமும்,  உன்  முகரூபம்  அழகுமாயிருக்கிறது  என்றார்.  {Song  2:14}

 

திராட்சத்தோட்டங்களைக்  கெடுக்கிற  குழிநரிகளையும்  சிறுநரிகளையும்  நமக்குப்  பிடியுங்கள்;  நம்முடைய  திராட்சத்தோட்டங்கள்  பூவும்  பிஞ்சுமாயிருக்கிறதே.  {Song  2:15}

 

என்  நேசர்  என்னுடையவர்,  நான்  அவருடையவள்.  அவர்  லீலிபுஷ்பங்களுக்குள்ளே  மேய்கிறார்.  {Song  2:16}

 

என்  நேசரே!  பகல்  குளிர்ச்சியாகி,  நிழல்  சாய்ந்துபோகும்வரைக்கும்,  நீர்  திரும்பி,  குன்றும்  பிளப்புமான  கன்மலைகளில்  குதித்துவரும்  கலைமானுக்கும்  மரைகளின்  குட்டிக்கும்  சமானமாயிரும்.  {Song  2:17}

 

இராக்காலங்களில்  என்  படுக்கையிலே  என்  ஆத்தும  நேசரைத்  தேடினேன்;  தேடியும்  நான்  அவரைக்  காணவில்லை.  {Song  3:1}

 

நான்  எழுந்து  நகரத்தின்  வீதிகளிலும்  தெருக்களிலும்  திரிந்து,  என்  ஆத்தும  நேசரைத்  தேடுவேன்  என்றேன்;  தேடியும்  நான்  அவரைக்  காணவில்லை.  {Song  3:2}

 

நகரத்திலே  திரிகிற  காவலாளர்  என்னைக்  கண்டார்கள்:  என்  ஆத்தும  நேசரைக்  கண்டீர்களா  என்று  அவர்களைக்  கேட்டேன்.  {Song  3:3}

 

நான்  அவர்களை  விட்டுக்  கொஞ்சதூரம்  கடந்துபோனவுடனே,  என்  ஆத்தும  நேசரைக்  கண்டேன்;  அவரை  நான்  என்  தாயின்  வீட்டிலும்  என்னைப்  பெற்றவளின்  அறையிலும்  கொண்டுவந்து  விடுமட்டும்  விடாமல்  பற்றிக்கொண்டேன்.  {Song  3:4}

 

எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே!  எனக்குப்  பிரியமானவளுக்கு  மனதாகுமட்டும்  நீங்கள்  அவளை  விழிக்கப்பண்ணாமலும்  எழுப்பாமலுமிருக்கும்படி,  வெளிமான்கள்மேலும்  வெளியின்  மரைகள்மேலும்  உங்களை  ஆணையிடுகிறேன்.  {Song  3:5}

 

வெள்ளைப்போளத்தினாலும்  சாம்பிராணியினாலும்  வர்த்தகருடைய  சகலவித  கந்தப்பொடியினாலும்  உண்டாகிய  வாசனையை  வீசி,  தூபஸ்தம்பங்களைப்போல்  வனாந்தரத்திலிருந்து  வருகிற  இவர்  யார்?  {Song  3:6}

 

இதோ,  சாலொமோனுடைய<Solomon>  மஞ்சம்;  இஸ்ரவேலின்<Israel>  சவுரியவான்களில்  அறுபது  சவுரியவான்கள்  அதைச்  சுற்றி  நிற்கிறார்கள்.  {Song  3:7}

 

இவர்களெல்லாரும்  பட்டயம்  பிடித்து,  யுத்தத்துக்குப்  பழகினவர்களாயிருக்கிறார்கள்;  இராக்கால  பயத்தினிமித்தம்  அவனவனுடைய  பட்டயம்  அவனவன்  அரையிலிருக்கிறது.  {Song  3:8}

 

சாலொமோன்<Solomon>  ராஜா  தனக்கு  லீபனோனின்<Lebanon>  மரத்தினால்  ஒரு  இரதத்தைப்  பண்ணுவித்தார்.  {Song  3:9}

 

அதின்  தூண்களை  வெள்ளியினாலும்,  அதின்  தட்டைப்  பொன்னினாலும்,  அதின்  ஆசனத்தை  இரத்தாம்பரத்தினாலும்  பண்ணுவித்தார்;  அதின்  உட்புறத்திலே  எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளினிமித்தம்  நேசம்  என்னும்  சமுக்காளம்  விரித்திருந்தது.  {Song  3:10}

 

சீயோன்<Zion>  குமாரத்திகளே!  நீங்கள்  புறப்பட்டுப்போய்,  ராஜாவாகிய  சாலொமோனின்<Solomon>  கலியாணநாளிலும்,  மனமகிழ்ச்சியின்  நாளிலும்,  அவருடைய  தாயார்  அவருக்குச்  சூட்டின  முடியோடிருக்கிற  அவரைப்  பாருங்கள்.  {Song  3:11}

 

நீ  ரூபவதி,  என்  பிரியமே!  நீ  ரூபவதி;  உன்  முக்காட்டின்  நடுவே  உன்  கண்கள்  புறாக்கண்களாயிருக்கிறது;  உன்  கூந்தல்  கீலேயாத்<Gilead>  மலையில்  தழைமேயும்  வெள்ளாட்டு  மந்தையைப்போலிருக்கிறது.  {Song  4:1}

 

உன்  பற்கள்,  மயிர்  கத்தரிக்கப்பட்டபின்  குளிப்பாட்டப்பட்டுக்  கரையேறுகிறவைகளும்,  ஒன்றாகிலும்  மலடாயிராமல்  எல்லாம்  இரட்டைக்குட்டியீன்றவைகளுமான  ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.  {Song  4:2}

 

உன்  உதடுகள்  சிவப்புநூலுக்குச்  சமானமும்,  உன்  வாக்கு  இன்பமுமாயிருக்கிறது;  உன்  முக்காட்டின்  நடுவே  உன்  கன்னங்கள்  வெடித்த  மாதளம்பழம்போலிருக்கிறது.  {Song  4:3}

 

உன்  கழுத்து,  பராக்கிரமசாலிகளின்  கேடகங்களாகிய  ஆயிரம்  பரிசைகள்  தூக்கியிருக்கிற  ஆயுதசாலையாக்கப்பட்ட  தாவீதின்<David>  கோபுரம்போலிருக்கிறது.  {Song  4:4}

 

உன்  இரண்டு  ஸ்தனங்களும்  லீலிபுஷ்பங்களில்  மேயும்  வெளிமானின்  இரட்டைக்குட்டிகளுக்குச்  சமானம்.  {Song  4:5}

 

பகல்  குளிர்ச்சியாகி  நிழல்  சாய்ந்துபோகும்வரைக்கும்,  நான்  வெள்ளைப்போளமலையிலும்  சாம்பிராணிமலையிலும்  போயிருப்பேன்.  {Song  4:6}

 

என்  பிரியமே!  நீ  பூரண  ரூபவதி;  உன்னில்  பழுதொன்றுமில்லை.  {Song  4:7}

 

லீபனோனிலிருந்து<Lebanon>  என்னோடே  வா,  என்  மணவாளியே!  லீபனோனிலிருந்து<Lebanon>  என்னோடே  வா.  அமனாவின்<Amana>  கொடுமுடியிலிருந்தும்,  சேனீர்<Shenir>  எர்மோனின்<Hermon>  கொடுமுடியிலிருந்தும்,  சிங்கங்களின்  தாபரங்களிலிருந்தும்,  சிவிங்கிகளின்  மலைகளிலிருந்தும்  கீழே  பார்.  {Song  4:8}

 

என்  இருதயத்தைக்  கவர்ந்துகொண்டாய்;  என்  சகோதரியே!  என்  மணவாளியே!  உன்  கண்களிலொன்றினாலும்  உன்  கழுத்திலுள்ள  ஒரு  சரப்பணியினாலும்  என்  இருதயத்தைக்  கவர்ந்துகொண்டாய்.  {Song  4:9}

 

உன்  நேசம்  எவ்வளவு  இன்பமாயிருக்கிறது;  என்  சகோதரியே!  என்  மணவாளியே!  திராட்சரசத்தைப்பார்க்கிலும்  உன்  நேசம்  எவ்வளவு  மதுரமாயிருக்கிறது!  சகல  கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும்  உன்  பரிமளதைலங்கள்  எவ்வளவு  வாசனையாயிருக்கிறது!  {Song  4:10}

 

என்  மணவாளியே!  உன்  உதடுகளிலிருந்து  தேன்  ஒழுகுகிறது,  உன்  நாவின்கீழ்  தேனும்  பாலும்  இருக்கிறது,  உன்  வஸ்திரங்களின்  வாசனை  லீபனோனின்<Lebanon>  வாசனைக்கொப்பாயிருக்கிறது.  {Song  4:11}

 

என்  சகோதரியே!  என்  மணவாளியே!  நீ  அடைக்கப்பட்ட  தோட்டமும்,  மறைவு  கட்டப்பட்ட  நீரூற்றும்,  முத்திரிக்கப்பட்ட  கிணறுமாயிருக்கிறாய்.  {Song  4:12}

 

உன்  தோட்டம்  மாதளஞ்செடிகளும்,  அருமையான  கனிமரங்களும்,  மருதோன்றிச்  செடிகளும்,  நளதச்செடிகளும்,  {Song  4:13}

 

நளதமும்,  குங்குமமும்,  வசம்பும்,  லவங்கமும்,  சகலவித  தூபவர்க்க  மரங்களும்,  வெள்ளைப்போளச்செடிகளும்,  சந்தன  விருட்சங்களும்,  சகலவித  கந்தவர்க்கச்செடிகளுமுள்ள  சிங்காரவனமாயிருக்கிறது.  {Song  4:14}

 

தோட்டங்களுக்கு  நீரூற்றும்,  ஜீவத்தண்ணீரின்  துரவும்,  லீபனோனிலிருந்து<Lebanon>  ஓடிவரும்  வாய்க்கால்களும்  உண்டாயிருக்கிறது.  {Song  4:15}

 

வாடையே!  எழும்பு;  தென்றலே!  வா;  கந்தப்பிசின்கள்  வடிய  என்  தோட்டத்தில்  வீசு;  என்  நேசர்  தம்முடைய  தோட்டத்துக்கு  வந்து,  தமது  அருமையான  கனிகளைப்  புசிப்பாராக.  {Song  4:16}

 

என்  சகோதரியே!  என்  மணவாளியே!  நான்  என்  தோட்டத்தில்  வந்தேன்,  என்  வெள்ளைப்போளத்தையும்  என்  கந்தவர்க்கங்களையும்  சேர்த்தேன்;  என்  தேன்கூட்டை  என்  தேனோடு  புசித்தேன்;  என்  திராட்சரசத்தை  என்  பாலோடும்  குடித்தேன்.  சிநேகிதரே!  புசியுங்கள்;  பிரியமானவர்களே!  குடியுங்கள்,  பூர்த்தியாய்க்  குடியுங்கள்.  {Song  5:1}

 

நான்  நித்திரைபண்ணினேன்,  என்  இதயமோ  விழித்திருந்தது;  கதவைத்  தட்டுகிற  என்  நேசரின்  சத்தத்தைக்  கேட்டேன்:  என்  சகோதரியே!  என்  பிரியமே!  என்  புறாவே!  என்  உத்தமியே!  கதவைத்  திற;  என்  தலை  பனியினாலும்,  என்  தலைமயிர்  இரவில்  பெய்யும்  தூறலினாலும்  நனைந்திருக்கிறது  என்றார்.  {Song  5:2}

 

என்  வஸ்திரத்தைக்  கழற்றிப்  போட்டேன்;  நான்  எப்படி  அதைத்  திரும்பவும்  உடுப்பேன்,  என்  பாதங்களைக்  கழுவினேன்,  நான்  எப்படி  அவைகளைத்  திரும்பவும்  அழுக்காக்குவேன்  என்றேன்.  {Song  5:3}

 

என்  நேசர்  தமது  கையைக்  கதவுத்  துவாரத்தின்  வழியாய்  நீட்டினார்,  அப்பொழுது  என்  உள்ளம்  அவர்  நிமித்தம்  பொங்கினது.  {Song  5:4}

 

என்  நேசருக்குக்  கதவைத்திறக்க  நான்  எழுந்தேன்;  பூட்டின  கைப்பிடிகள்மேல்  என்  கைகளிலிருந்து  வெள்ளைப்போளமும்,  என்  விரல்களிலிருந்து  வாசனையுள்ள  வெள்ளைப்போளமும்  வடிந்தது.  {Song  5:5}

 

என்  நேசருக்குக்  கதவைத்  திறந்தேன்;  என்  நேசரோ  இல்லை,  போய்விட்டார்;  அவர்  சொன்ன  வார்த்தையால்,  என்  ஆத்துமா  சோர்ந்துபோயிற்று.  அவரைத்  தேடினேன்,  அவரைக்  காணவில்லை;  அவரைக்  கூப்பிட்டேன்,  அவர்  எனக்கு  மறுஉத்தரவு  கொடுக்கவில்லை.  {Song  5:6}

 

நகரத்தில்  திரிகிற  காவலாளர்  என்னைக்  கண்டு,  என்னை  அடித்து,  என்னைக்  காயப்படுத்தினார்கள்;  அலங்கத்தின்  காவற்காரர்  என்மேலிருந்த  என்  போர்வையை  எடுத்துக்கொண்டார்கள்.  {Song  5:7}

 

எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே!  என்  நேசரைக்  கண்டீர்களானால்,  நான்  நேசத்தால்  சோகமடைந்திருக்கிறேன்  என்று  அவருக்குச்  சொல்லும்படி  உங்களை  ஆணையிடுகிறேன்.  {Song  5:8}

 

ஸ்திரீகளுக்குள்  ரூபவதியே!  மற்ற  நேசரைப்பார்க்கிலும்  உன்  நேசர்  எதினால்  விசேஷித்தவர்?  நீ  இப்படி  எங்களை  ஆணையிட,  மற்ற  நேசரைப்பார்க்கிலும்  உன்  நேசர்  எதினால்  விசேஷித்தவர்?  {Song  5:9}

 

என்  நேசர்  வெண்மையும்  சிவப்புமானவர்;  பதினாயிரம்பேர்களில்  சிறந்தவர்.  {Song  5:10}

 

அவர்  தலை  தங்கமயமாயிருக்கிறது;  அவர்  தலைமயிர்  சுருள்  சுருளாயும்,  காகத்தைப்போல்  கருமையாயுமிருக்கிறது.  {Song  5:11}

 

அவருடைய  கண்கள்  தண்ணீர்  நிறைந்த  நதிகளின்  ஓரமாய்த்  தங்கும்  புறாக்கண்களுக்கு  ஒப்பானவைகளும்,  பாலில்  கழுவப்பட்டவைகளும்,  நேர்த்தியாய்ப்  பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.  {Song  5:12}

 

அவர்  கன்னங்கள்  கந்தவர்க்கப்  பாத்திகளைப்போலவும்,  வாசனையுள்ள  புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது;  அவர்  உதடுகள்  லீலிபுஷ்பங்களைப்  போன்றது,  வாசனையுள்ள  வெள்ளைப்போளம்  அதிலிருந்து  வடிகிறது.  {Song  5:13}

 

அவர்  கரங்கள்  படிகப்பச்சை  பதித்த  பொன்  வளையல்களைப்போலிருக்கிறது;  அவர்  அங்கம்  இந்திரநீல  இரத்தினங்கள்  இழைத்த  பிரகாசமான  யானைத்  தந்தத்தைப்போலிருக்கிறது.  {Song  5:14}

 

அவர்  கால்கள்  பசும்பொன்  ஆதாரங்களின்மேல்  நிற்கிற  வெள்ளைக்கல்  தூண்களைப்போலிருக்கிறது;  அவர்  ரூபம்  லீபனோனைப்போலவும்<Lebanon>  கேதுருக்களைப்போலவும்  சிறப்பாயிருக்கிறது.  {Song  5:15}

 

அவர்  வாய்  மிகவும்  மதுரமாயிருக்கிறது;  அவர்  முற்றிலும்  அழகுள்ளவர்.  இவரே  என்  நேசர்;  எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே!  இவரே  என்  சிநேகிதர்.  {Song  5:16}

 

உன்  நேசர்  எங்கே  போனார்?  ஸ்திரீகளில்  ரூபவதியே!  உன்  நேசர்  எவ்விடம்  போய்விட்டார்?  உன்னோடேகூட  நாங்களும்  அவரைத்  தேடுவோம்.  {Song  6:1}

 

தோட்டங்களில்  மேயவும்,  லீலிபுஷ்பங்களைக்  கொய்யவும்,  என்  நேசர்  தமது  தோட்டத்துக்கும்  கந்தவர்க்கப்  பாத்திகளுக்கும்  போனார்.  {Song  6:2}

 

நான்  என்  நேசருடையவள்,  என்  நேசர்  என்னுடையவர்;  அவர்  லீலிபுஷ்பங்களுக்குள்ளே  மேய்கிறார்.  {Song  6:3}

 

என்  பிரியமே!  நீ  திர்சாவைப்போல்<Tirzah>  சௌந்தரியமும்,  எருசலேமைப்போல்<Jerusalem>  வடிவமும்,  கொடிகள்  பறக்கும்  படையைப்போல்  கெடியுமானவள்.  {Song  6:4}

 

உன்  கண்களை  என்னைவிட்டுத்  திருப்பு,  அவைகள்  என்னை  வென்றது;  உன்  அளகபாரம்  கீலேயாத்<Gilead>  மலையிலே  தழைமேயும்  வெள்ளாட்டு  மந்தையைப்போலிருக்கிறது.  {Song  6:5}

 

உன்  பற்கள்  குளிப்பாட்டப்பட்டுக்  கரையேறுகிறவைகளும்,  ஒன்றானாலும்  மலடாயிராமல்  இரட்டைக்  குட்டியீன்றவைகளுமான  ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.  {Song  6:6}

 

உன்  முக்காட்டின்  நடுவே  உன்  கன்னங்கள்  வெடித்த  மாதளம்பழம்போலிருக்கிறது.  {Song  6:7}

 

ராஜஸ்திரீகள்  அறுபதுபேரும்,  மறுமனையாட்டிகள்  எண்பதுபேருமுண்டு;  கன்னியருக்குத்  தொகையில்லை.  {Song  6:8}

 

என்  புறாவோ,  என்  உத்தமியோ  ஒருத்தியே;  அவள்  தன்  தாய்க்கு  ஒரே  பிள்ளை;  அவள்  தன்னைப்  பெற்றவளுக்கு  அருமையானவள்;  குமாரத்திகள்  அவளைக்  கண்டு,  அவளை  வாழ்த்தினார்கள்;  ராஜஸ்திரீகளும்  மறுமனையாட்டிகளும்  அவளைப்  போற்றினார்கள்.  {Song  6:9}

 

சந்திரனைப்போல்  அழகும்,  சூரியனைப்போல்  பிரகாசமும்,  கொடிகள்  பறக்கும்  படையைப்போல்  கெடியுமுள்ளவளாய்,  அருணோதயம்போல்  உதிக்கிற  இவள்  யார்?  {Song  6:10}

 

பள்ளத்தாக்கிலே  பழுத்த  கனிகளைப்  பார்க்கவும்,  திராட்சச்செடிகள்  துளிர்விட்டு,  மாதளஞ்செடிகள்  பூத்ததா  என்று  அறியவும்,  வாதுமைத்  தோட்டத்துக்குப்  போனேன்.  {Song  6:11}

 

நினையாததுக்குமுன்னே  என்  ஆத்துமா  என்னை  அம்மினதாபின்<Amminadib>  இரதங்களுக்கு  ஒப்பாக்கிற்று.  {Song  6:12}

 

திரும்பிவா,  திரும்பிவா,  சூலமித்தியே<Shulamite>!  நாங்கள்  உன்னைப்  பார்க்கும்படிக்கு,  திரும்பிவா,  திரும்பிவா.  சூலமித்தியில்<Shulamite>  நீங்கள்  என்னத்தைப்  பார்க்கிறீர்கள்?  அவள்  இரண்டு  சேனையின்  கூட்டத்துக்குச்  சமானமானவள்.  {Song  6:13}

 

ராஜகுமாரத்தியே!  பாதரட்சைகளிட்ட  உன்  பாதங்கள்  மிகவும்  அழகாயிருக்கிறது;  உன்  இடுப்பின்  வடிவு  விசித்திரத்  தொழிற்காரரின்  வேலையாகிய  பூஷணம்போலிருக்கிறது.  {Song  7:1}

 

உன்  நாபி  திராட்சரசம்  நிறைந்த  வட்டக்கலசம்போலிருக்கிறது;  உன்  வயிறு  லீலிபுஷ்பங்கள்  சூழ்ந்த  கோதுமை  அம்பாரம்போலிருக்கிறது.  {Song  7:2}

 

உன்  இரண்டு  ஸ்தனங்களும்  வெளிமானின்  இரட்டைக்குட்டிகளுக்குச்  சமானமாயிருக்கிறது.  {Song  7:3}

 

உன்  கழுத்து  யானைத்தந்தத்தினால்  செய்த  கோபுரத்தைப்போலவும்,  உன்  கண்கள்  எஸ்போனிலே<Heshbon>  பத்ரபீம்<Bathrabbim>  வாசலண்டையிலிருக்கும்  குளங்களைப்போலவும்,  உன்  மூக்கு  தமஸ்குவின்<Damascus>  திசையை  நோக்கும்  லீபனோனின்<Lebanon>  கோபுரத்தைப்போலவும்  இருக்கிறது.  {Song  7:4}

 

உன்  சிரசு  கர்மேல்<Carmel>  மலையைப்போலிருக்கிறது;  உன்  தலைமயிர்  இரத்தாம்பரமயமாயிருக்கிறது;  ராஜா  நடைக்காவணங்களில்  மயங்கிநிற்கிறார்.  {Song  7:5}

 

மனமகிழ்ச்சியை  உண்டாக்கும்  என்  பிரியமே!  நீ  எவ்வளவு  ரூபவதி,  நீ  எவ்வளவு  இன்பமுள்ளவள்.  {Song  7:6}

 

உன்  உயரம்  பனைமரத்தொழுங்குபோலவும்,  உன்  ஸ்தனங்கள்  திராட்சக்குலைகள்போலவும்  இருக்கிறது.  {Song  7:7}

 

நான்  பனைமரத்திலேறி,  அதின்  மடல்களைப்  பிடிப்பேன்  என்றேன்;  இப்பொழுதும்  உன்  ஸ்தனங்கள்  திராட்சக்குலைகள்போலவும்,  உன்  மூக்கின்  வாசனை  கிச்சிலிப்பழங்கள்போலவும்  இருக்கிறது.  {Song  7:8}

 

உன்  தொண்டை,  என்  நேசர்  குடிக்கையில்  மெதுவாயிறங்குகிறதும்,  உறங்குகிறவர்களின்  உதடுகளைப்  பேசப்பண்ணுகிறதுமான,  நல்ல  திராட்சரசத்தைப்போலிருக்கிறது.  {Song  7:9}

 

நான்  என்  நேசருடையவள்,  அவர்  பிரியம்  என்மேலிருக்கிறது.  {Song  7:10}

 

வாரும்  என்  நேசரே!  வயல்வெளியில்  போய்,  கிராமங்களில்  தங்குவோம்.  {Song  7:11}

 

அதிகாலையிலே  திராட்சத்தோட்டங்களுக்குப்  போவோம்;  திராட்சக்கொடி  துளிர்த்து  அதின்  பூ  மலர்ந்ததோ  என்றும்,  மாதளஞ்செடிகள்  பூப்பூத்ததோ  என்றும்  பார்ப்போம்;  அங்கே  என்  நேசத்தின்  உச்சிதங்களை  உமக்குத்  தருவேன்.  {Song  7:12}

 

தூதாயீம்  பழம்  வாசனை  வீசும்;  நமது  வாசல்களண்டையிலே  புதியவைகளும்  பழையவைகளுமான  சகலவித  அருமையான  கனிகளுமுண்டு;  என்  நேசரே!  அவைகளை  உமக்கு  வைத்திருக்கிறேன்.  {Song  7:13}

 

,  நீர்  என்  தாயின்  பால்குடித்த  என்  சகோதரனைப்போலிருந்தீரானால்,  நான்  உம்மை  வெளியிலே  சந்தித்து  முத்தமிடுவேன்;  என்னை  நிந்திக்கவுமாட்டார்கள்.  {Song  8:1}

 

நான்  உம்மைக்  கூட்டிக்கொண்டு,  என்  தாயின்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டுபோவேன்;  நீர்  என்னைப்  போதிப்பீர்,  கந்தவர்க்கமிட்ட  திராட்சரசத்தையும்,  என்  மாதளம்பழரசத்தையும்  உமக்குக்  குடிக்கக்கொடுப்பேன்.  {Song  8:2}

 

அவர்  இடதுகை  என்  தலையின்  கீழிருக்கும்,  அவர்  வலதுகை  என்னை  அணைக்கும்.  {Song  8:3}

 

எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே!  எனக்குப்  பிரியமானவளுக்கு  மனதாகுமட்டும்  நீங்கள்  அவளை  விழிக்கப்பண்ணாமலும்  எழுப்பாமலும்  இருக்க  உங்களை  ஆணையிடுகிறேன்.  {Song  8:4}

 

தன்  நேசர்மேல்  சார்ந்துகொண்டு  வனாந்தரத்திலிருந்து  வருகிற  இவள்  யார்?  கிச்சிலிமரத்தின்கீழ்  உம்மை  எழுப்பினேன்;  அங்கே  உமது  தாய்  உம்மைப்  பெற்றாள்;  அங்கே  உம்மைப்  பெற்றவள்  வேதனைப்பட்டு  உம்மைப்  பெற்றாள்.  {Song  8:5}

 

நீர்  என்னை  உமது  இருதயத்தின்மேல்  முத்திரையைப்போலவும்,  உமது  புயத்தின்மேல்  முத்திரையைப்போலவும்  வைத்துக்கொள்ளும்;  நேசம்  மரணத்தைப்போல்  வலிது;  நேசவைராக்கியம்  பாதாளத்தைப்போல்  கொடிதாயிருக்கிறது;  அதின்  தழல்  அக்கினித்தழலும்  அதின்  ஜுவாலை  கடும்  ஜுவாலையுமாயிருக்கிறது.  {Song  8:6}

 

திரளான  தண்ணீர்கள்  நேசத்தை  அவிக்கமாட்டாது,  வெள்ளங்களும்  அதைத்  தணிக்கமாட்டாது;  ஒருவன்  தன்  வீட்டிலுள்ள  ஆஸ்திகளையெல்லாம்  நேசத்துக்காகக்  கொடுத்தாலும்,  அது  முற்றிலும்  அசட்டைபண்ணப்படும்.  {Song  8:7}

 

நமக்கு  ஒரு  சிறிய  சகோதரியுண்டு,  அவளுக்கு  ஸ்தனங்களில்லை;  நம்முடைய  சகோதரியைக்  கேட்கும்  நாளில்  அவளுக்காக  நாம்  என்ன  செய்வோம்?  {Song  8:8}

 

அவள்  ஒரு  மதிலானால்,  அதின்மேல்  வெள்ளிக்கோட்டையைக்  கட்டுவோம்;  அவள்  கதவானால்,  கேதுருப்பலகைகளை  அதற்கு  இணைப்போம்.  {Song  8:9}

 

நான்  மதில்தான்,  என்  ஸ்தனங்கள்  கோபுரங்கள்;  அவருடைய  கண்களில்  கடாட்சம்பெறலானேன்.  {Song  8:10}

 

பாகால்  ஆமோனிலே<Baalhamon>  சாலொமோனுக்கு<Solomon>  ஒரு  திராட்சத்தோட்டம்  உண்டாயிருந்தது,  அந்தத்  தோட்டத்தைக்  காவலாளிகள்  வசத்திலே  அதின்  பலனுக்காக,  ஒவ்வொருவன்  ஆயிரம்  வெள்ளிக்காசு  கொண்டுவரும்படி  விட்டார்.  {Song  8:11}

 

என்  திராட்சத்தோட்டம்  எனக்கு  முன்பாக  இருக்கிறது;  சாலொமோனே<Solomon>!  உமக்கு  அந்த  ஆயிரமும்,  அதின்  கனியைக்  காக்கிறவர்களுக்கு  இருநூறும்  சேரும்.  {Song  8:12}

 

தோட்டங்களில்  வாசம்பண்ணுகிறவளே!  தோழர்  உன்  சத்தத்தைக்  கேட்கிறார்கள்;  நானும்  அதைக்  கேட்கட்டும்.  {Song  8:13}

 

என்  நேசரே!  தீவிரியும்,  கந்தவர்க்கங்களின்  மலைகள்மேலுள்ள  வெளிமானுக்கும்  மரைகளின்  குட்டிக்கும்  சமானமாயிரும்.  {Song  8:14}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!