Tuesday, April 07, 2020

ரூத்

நியாயாதிபதிகள்  நியாயம்  விசாரித்துவரும்  நாட்களில்,  தேசத்திலே  பஞ்சம்  உண்டாயிற்று;  அப்பொழுது  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊரானாகிய  ஒரு  மனுஷன்  தன்  மனைவியோடும்  இரண்டு  குமாரரோடுங்கூட  மோவாப்<Moab>  தேசத்திலே  போய்ச்  சஞ்சரித்தான்.  {Ruth  1:1}

 

அந்த  மனுஷனுடைய  பேர்  எலிமெலேக்கு<Elimelech>,  அவன்  மனைவியின்  பேர்  நகோமி<Naomi>,  அவனுடைய  இரண்டு  குமாரரில்  ஒருவன்  பேர்  மக்லோன்<Mahlon>,  மற்றொருவன்  பேர்  கிலியோன்<Chilion>;  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊராகிய  எப்பிராத்தியராகிய<Ephrathites>  அவர்கள்  மோவாப்தேசத்திற்குப்<Moab>  போய்,  அங்கே  இருந்துவிட்டார்கள்.  {Ruth  1:2}

 

நகோமியின்<Naomi>  புருஷனாகிய  எலிமெலேக்கு<Elimelech>  இறந்துபோனான்;  அவளும்  அவளுடைய  இரண்டு  குமாரரும்மாத்திரம்  இருந்தார்கள்.  {Ruth  1:3}

 

இவர்கள்  மோவாபியரில்<Moab>  பெண்கொண்டார்கள்;  அவர்களில்  ஒருத்தி  பேர்  ஒர்பாள்<Orpah>,  மற்றவள்  பேர்  ரூத்<Ruth>;  அங்கே  ஏறக்குறையப்  பத்துவருஷம்  வாசம்பண்ணினார்கள்.  {Ruth  1:4}

 

பின்பு  மக்லோன்<Mahlon>  கிலியோன்<Chilion>  என்னும்  அவர்கள்  இருவரும்  இறந்துபோனார்கள்;  அந்த  ஸ்திரீ  தன்  குமாரர்  இருவரையும்  தன்  புருஷனையும்  இழந்து  தனித்தவளானாள்.  {Ruth  1:5}

 

கர்த்தர்  தம்முடைய  ஜனங்களைச்  சந்தித்து,  அவர்களுக்கு  ஆகாரம்  அருளினார்  என்று  அவள்  மோவாப்தேசத்திலே<Moab>  கேள்விப்பட்டு,  தன்  மருமக்களோடேகூட  மோவாப்<Moab>  தேசத்திலிருந்து  திரும்பிவரும்படி  எழுந்து,  {Ruth  1:6}

 

தன்  இரண்டு  மருமக்களோடுங்கூடத்  தானிருந்த  ஸ்தலத்தை  விட்டுப்  புறப்பட்டாள்.  யூதா<Judah>  தேசத்திற்குத்  திரும்பிப்போக,  அவர்கள்  வழிநடக்கையில்,  {Ruth  1:7}

 

நகோமி<Naomi>  தன்  இரண்டு  மருமக்களையும்  நோக்கி:  நீங்கள்  இருவரும்  உங்கள்  தாய்வீட்டுக்குத்  திரும்பிப்போங்கள்;  மரித்துப்போனவர்களுக்கும்  எனக்கும்  நீங்கள்  தயைசெய்ததுபோல,  கர்த்தர்  உங்களுக்கும்  தயைசெய்வாராக.  {Ruth  1:8}

 

கர்த்தர்  உங்கள்  இருவருக்கும்  வாய்க்கும்  புருஷனுடைய  வீட்டிலே  நீங்கள்  சுகமாய்  வாழ்ந்திருக்கச்  செய்வாராக  என்று  சொல்லி,  அவர்களை  முத்தமிட்டாள்.  அப்பொழுது  அவர்கள்  சத்தமிட்டு  அழுது,  அவளைப்  பார்த்து:  {Ruth  1:9}

 

உம்முடைய  ஜனத்தண்டைக்கே  உம்முடன்கூட  வருவோம்  என்றார்கள்.  {Ruth  1:10}

 

அதற்கு  நகோமி<Naomi>:  என்  மக்களே,  நீங்கள்  திரும்பிப்போங்கள்;  என்னோடே  ஏன்  வருகிறீர்கள்?  உங்களுக்குப்  புருஷராகும்படிக்கு,  இனிமேல்  என்  கர்ப்பத்திலே  எனக்குப்  பிள்ளைகள்  உண்டாகுமோ?  {Ruth  1:11}

 

என்  மக்களே,  திரும்பிப்போங்கள்;  நான்  வயதுசென்றவள்;  ஒரு  புருஷனுடன்  வாழத்தக்கவளல்ல;  அப்படிப்பட்ட  நம்பிக்கை  எனக்கு  உண்டாயிருந்து,  நான்  இன்று  இரவில்  ஒரு  புருஷனுக்கு  வாழ்க்கைப்பட்டு,  பிள்ளைகளைப்  பெற்றாலும்,  {Ruth  1:12}

 

அவர்கள்  பெரியவர்களாகுமட்டும்,  புருஷருக்கு  வாழ்க்கைப்படாதபடிக்கு  நீங்கள்  பொறுத்திருப்பீர்களோ?  அது  கூடாது;  என்  மக்களே,  கர்த்தருடைய  கை  எனக்கு  விரோதமாயிருக்கிறதினால்,  உங்கள்நிமித்தம்  எனக்கு  மிகுந்த  விசனம்  இருக்கிறது  என்றாள்.  {Ruth  1:13}

 

அப்பொழுது  அவர்கள்  சத்தமிட்டு  அதிகமாய்  அழுதார்கள்;  ஒர்பாள்<Orpah>  தன்  மாமியை  முத்தமிட்டுப்போனாள்;  ரூத்தோ<Ruth>  அவளை  விடாமல்  பற்றிக்கொண்டாள்.  {Ruth  1:14}

 

அப்பொழுது  அவள்:  இதோ,  உன்  சகோதரி  தன்  ஜனங்களிடத்துக்கும்  தன்  தேவர்களிடத்துக்கும்  திரும்பிப்  போய்விட்டாளே;  நீயும்  உன்  சகோதரியின்  பிறகே  திரும்பிப்போ  என்றாள்.  {Ruth  1:15}

 

அதற்கு  ரூத்<Ruth>:  நான்  உம்மைப்  பின்பற்றாமல்  உம்மைவிட்டுத்  திரும்பிப்போவதைக்குறித்து,  என்னோடே  பேசவேண்டாம்;  நீர்  போகும்  இடத்திற்கு  நானும்  வருவேன்;  நீர்  தங்கும்  இடத்திலே  நானும்  தங்குவேன்;  உம்முடைய  ஜனம்  என்னுடைய  ஜனம்;  உம்முடைய  தேவன்  என்னுடைய  தேவன்.  {Ruth  1:16}

 

நீர்  மரணமடையும்  இடத்தில்  நானும்  மரணமடைந்து,  அங்கே  அடக்கம்பண்ணப்படுவேன்;  மரணமேயல்லாமல்  வேறொன்றும்  உம்மை  விட்டு  என்னைப்  பிரித்தால்,  கர்த்தர்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்  என்றாள்.  {Ruth  1:17}

 

அவள்  தன்னோடேகூட  வர  மனஉறுதியாயிருக்கிறதைக்  கண்டு,  அப்புறம்  அதைக்குறித்து  அவளோடே  ஒன்றும்  பேசவில்லை.  {Ruth  1:18}

 

அப்படியே  இருவரும்  பெத்லெகேம்மட்டும்<Bethlehem>  நடந்துபோனார்கள்;  அவர்கள்  பெத்லெகேமுக்கு<Bethlehem>  வந்தபோது,  ஊரார்  எல்லாரும்  அவர்களைக்குறித்து  ஆச்சரியப்பட்டு,  இவள்  நகோமியோ<Naomi>  என்று  பேசிக்கொண்டார்கள்.  {Ruth  1:19}

 

அதற்கு  அவள்:  நீங்கள்  என்னை  நகோமி<Naomi>  என்று  சொல்லாமல்,  மாராள்<Mara>  என்று  சொல்லுங்கள்;  சர்வவல்லவர்  எனக்கு  மிகுந்த  கசப்பைக்  கட்டளையிட்டார்.  {Ruth  1:20}

 

நான்  நிறைவுள்ளவளாய்ப்  போனேன்;  கர்த்தர்  என்னை  வெறுமையாய்த்  திரும்பிவரப்பண்ணினார்;  கர்த்தர்  என்னைச்  சிறுமைப்படுத்தி,  சர்வவல்லவர்  என்னைக்  கிலேசப்படுத்தியிருக்கையில்,  நீங்கள்  என்னை  நகோமி<Naomi>  என்பானேன்  என்றாள்.  {Ruth  1:21}

 

இப்படி  நகோமி<Naomi>  மோவாபிய<Moabitess>  ஸ்திரீயான  தன்  மருமகள்  ரூத்தோடுங்கூட<Ruth>  மோவாப்<Moab>  தேசத்திலிருந்து  திரும்பிவந்தாள்;  வாற்கோதுமை  அறுப்பின்  துவக்கத்தில்  அவர்கள்  பெத்லெகேமுக்கு<Bethlehem>  வந்தார்கள்.  {Ruth  1:22}

 

நகோமிக்கு<Naomi>  அவளுடைய  புருஷனாகிய  எலிமெலேக்கின்<Elimelech>  உறவின்முறையில்  போவாஸ்<Boaz>  என்னும்  பேருள்ள  மிகுந்த  ஆஸ்திக்காரனாகிய  இனத்தான்  ஒருவன்  இருந்தான்.  {Ruth  2:1}

 

மோவாபிய<Moabitess>  ஸ்திரீயான  ரூத்<Ruth>  என்பவள்  நகோமியைப்<Naomi>  பார்த்து:  நான்  வயல்வெளிக்குப்  போய்,  யாருடைய  கண்களில்  எனக்குத்  தயைகிடைக்குமோ,  அவர்  பிறகே  கதிர்களைப்  பொறுக்கிக்கொண்டுவருகிறேன்  என்றாள்;  அதற்கு  இவள்:  என்  மகளே,  போ  என்றாள்.  {Ruth  2:2}

 

அவள்  போய்,  வயல்வெளியில்  அறுக்கிறவர்கள்  பிறகே  பொறுக்கினாள்;  தற்செயலாய்  அவளுக்கு  நேரிட்ட  அந்த  வயல்நிலம்  எலிமெலேக்கின்<Elimelech>  வம்சத்தானாகிய  போவாசுடையதாயிருந்தது<Boaz>.  {Ruth  2:3}

 

அப்பொழுது  போவாஸ்<Boaz>  பெத்லெகேமிலிருந்து<Bethlehem>  வந்து,  அறுக்கிறவர்களைப்  பார்த்து:  கர்த்தர்  உங்களோடே  இருப்பாராக  என்றான்;  அதற்கு  அவர்கள்:  கர்த்தர்  உம்மை  ஆசீர்வதிப்பாராக  என்றார்கள்.  {Ruth  2:4}

 

பின்பு  போவாஸ்<Boaz>  அறுக்கிறவர்கள்மேல்  கண்காணியாக  வைக்கப்பட்ட  தன்  வேலைக்காரனை  நோக்கி:  இந்தப்  பெண்பிள்ளை  யாருடையவள்  என்று  கேட்டான்.  {Ruth  2:5}

 

அறுக்கிறவர்கள்மேல்  கண்காணியாக  வைக்கப்பட்ட  அந்த  வேலைக்காரன்  பிரதியுத்தரமாக:  இவள்  மோவாப்<Moab>  தேசத்திலிருந்து  நகோமியோடேகூடவந்த<Naomi>  மோவாபிய<Moabitish>  பெண்பிள்ளை.  {Ruth  2:6}

 

அறுக்கிறவர்கள்  பிறகே  அரிக்கட்டுகளிலிருந்து  சிந்தினதைப்  பொறுக்கிக்கொள்ளுகிறேன்  என்று  அவள்  என்னிடத்தில்  கேட்டுக்கொண்டாள்;  காலமே  துவக்கி  இதுவரைக்கும்  இங்கே  இருக்கிறாள்;  இப்பொழுது  அவள்  குடிசைக்கு  வந்து  கொஞ்சநேரந்தான்  ஆயிற்று  என்றான்.  {Ruth  2:7}

 

அப்பொழுது  போவாஸ்<Boaz>  ரூத்தைப்பார்த்து<Ruth>:  மகளே,  கேள்;  பொறுக்கிக்கொள்ள  வேறே  வயலில்  போகாமலும்,  இவ்விடத்தைவிட்டுப்  போகாமலும்,  இங்கே  என்  ஊழியக்காரப்  பெண்களோடுகூடவே  இரு.  {Ruth  2:8}

 

அவர்கள்  அறுப்பறுக்கும்  வயலை  நீ  பார்த்து,  அவர்கள்  பிறகே  போ;  ஒருவரும்  உன்னைத்  தொடாதபடிக்கு,  வேலைக்காரருக்குக்  கட்டளையிட்டிருக்கிறேன்;  உனக்குத்  தாகம்  எடுத்தால்,  தண்ணீர்க்குடங்களண்டைக்குப்  போய்,  வேலைக்காரர்  மொண்டுகொண்டு  வருகிறதிலே  குடிக்கலாம்  என்றான்.  {Ruth  2:9}

 

அப்பொழுது  அவள்  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கி:  நான்  அந்நியதேசத்தாளாயிருக்க,  நீர்  என்னை  விசாரிக்கும்படி  எனக்கு  எதினாலே  உம்முடைய  கண்களில்  தயைகிடைத்தது  என்றாள்.  {Ruth  2:10}

 

அதற்குப்  போவாஸ்<Boaz>  பிரதியுத்தரமாக:  உன்  புருஷன்  மரணமடைந்த  பின்பு,  நீ  உன்  மாமியாருக்காகச்  செய்ததும்,  நீ  உன்  தகப்பனையும்  உன்  தாயையும்,  உன்  ஜந்மதேசத்தையும்  விட்டு,  முன்னே  நீ  அறியாத  ஜனங்களிடத்தில்  வந்ததும்  எல்லாம்  எனக்கு  விவரமாய்த்  தெரிவிக்கப்பட்டது.  {Ruth  2:11}

 

உன்  செய்கைக்குத்தக்க  பலனைக்  கர்த்தர்  உனக்குக்  கட்டளையிடுவாராக;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருடைய  செட்டைகளின்கீழ்  அடைக்கலமாய்  வந்த  உனக்கு  அவராலே  நிறைவான  பலன்  கிடைப்பதாக  என்றான்.  {Ruth  2:12}

 

அதற்கு  அவள்:  என்  ஆண்டவனே,  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயைகிடைக்கவேண்டும்;  நான்  உம்முடைய  வேலைக்காரிகளில்  ஒருத்திக்கும்  சமானமாயிராவிட்டாலும்,  நீர்  எனக்கு  ஆறுதல்  சொல்லி  உம்முடைய  அடியாளோடே  பட்சமாய்ப்  பேசினீரே  என்றாள்.  {Ruth  2:13}

 

பின்னும்  போவாஸ்<Boaz>  சாப்பாட்டு  வேளையில்  அவளைப்  பார்த்து:  நீ  இங்கே  வந்து,  இந்த  அப்பத்திலே  புசித்து,  காடியிலே  உன்  துணிக்கையைத்  தோய்த்துக்கொள்  என்றான்.  அப்படியே  அவள்  அறுப்பறுக்கிறவர்கள்  அருகே  உட்கார்ந்தாள்;  அவளுக்கு  வறுத்த  கோதுமையைக்  கொடுத்தான்;  அவள்  சாப்பிட்டு,  திர்ப்தியடைந்து,  மீந்ததை  வைத்துக்கொண்டாள்.  {Ruth  2:14}

 

அவள்  கதிர்  பொறுக்கிக்கொள்ள  எழுந்தபோது,  போவாஸ்<Boaz>  தன்  வேலைக்காரரை  நோக்கி:  அவள்  அரிக்கட்டுகள்  நடுவே  பொறுக்கிக்கொள்ளட்டும்;  அவளை  ஈனம்பண்ணவேண்டாம்.  {Ruth  2:15}

 

அவள்  பொறுக்கிக்கொள்ளும்படிக்கு  அவளுக்காக  அரிகளிலே  சிலதைச்  சிந்தவிடுங்கள்,  அவளை  அதட்டாதிருங்கள்  என்று  கட்டளையிட்டான்.  {Ruth  2:16}

 

அப்படியே  அவள்  சாயங்காலமட்டும்  வயலிலே  கதிர்  பொறுக்கினாள்;  பொறுக்கினதை  அவள்  தட்டி  அடித்துத்  தீர்ந்தபோது,  அது  ஏறக்குறைய  ஒரு  மரக்கால்  வாற்கோதுமை  கண்டது.  {Ruth  2:17}

 

அவள்  அதை  எடுத்துக்கொண்டு,  ஊருக்குள்  வந்தாள்;  அவள்  பொறுக்கினதை  அவளுடைய  மாமி  பார்த்தாள்;  தான்  திருப்தியாய்ச்  சாப்பிட்டு  மீதியாக  வைத்ததையும்  எடுத்து  அவளுக்குக்  கொடுத்தாள்.  {Ruth  2:18}

 

அப்பொழுது  அவளுடைய  மாமி:  இன்று  எங்கே  கதிர்பொறுக்கினாய்,  எவ்விடத்தில்  வேலைசெய்தாய்  என்று  அவளிடத்தில்  கேட்டு;  உன்னை  விசாரித்தவன்  ஆசீர்வதிக்கப்படுவானாக  என்றாள்;  அப்பொழுது  அவள்:  இன்னாரிடத்திலே  வேலைசெய்தேன்  என்று  தன்  மாமிக்கு  அறிவித்து:  நான்  இன்று  வேலை  செய்த  வயல்காரன்  பேர்  போவாஸ்<Boaz>  என்றாள்.  {Ruth  2:19}

 

அப்பொழுது  நகோமி<Naomi>  தன்  மருமகளைப்  பார்த்து:  உயிரோடிருக்கிறவர்களுக்கும்  மரித்தவர்களுக்கும்  தயவுசெய்கிற  கர்த்தராலே  அவன்  ஆசீர்வதிக்கப்படுவானாக  என்றாள்;  பின்னும்  நகோமி<Naomi>  அவளைப்  பார்த்து:  அந்த  மனுஷன்  நமக்கு  நெருங்கின  உறவின்  முறையானும்  நம்மை  ஆதரிக்கிற  சுதந்தரவாளிகளில்  ஒருவனுமாய்  இருக்கிறான்  என்றாள்.  {Ruth  2:20}

 

பின்னும்  மோவாபிய<Moabitess>  ஸ்திரீயான  ரூத்<Ruth>:  அவர்  என்னை  நோக்கி,  என்  அறுப்பெல்லாம்  அறுத்துத்  தீருமட்டும்,  நீ  என்  வேலைக்காரிகளோடே  கூடவே  இரு  என்று  சொன்னார்  என்றாள்.  {Ruth  2:21}

 

அப்பொழுது  நகோமி<Naomi>  தன்  மருமகளாகிய  ரூத்தைப்<Ruth>  பார்த்து:  என்  மகளே,  வேறொரு  வயலிலே  மனுஷர்  உன்னை  எதிர்க்காதபடிக்கு  நீ  அவன்  வேலைக்காரிகளோடே  போகிறது  நல்லது  என்றாள்.  {Ruth  2:22}

 

அப்படியே  கோதுமை  அறுப்பும்  வாற்கோதுமை  அறுப்பும்  தீருமட்டும்  அவள்  கதிர்  பொறுக்கும்படிக்கு,  போவாசுடைய<Boaz>  வேலைக்காரிகளோடே  கூடியிருந்து,  தன்  மாமியினிடத்தில்  தங்கினாள்.  {Ruth  2:23}

 

பின்பு  அவள்  மாமியாகிய  நகோமி<Naomi>  அவளை  நோக்கி:  என்  மகளே,  நீ  சுகமாய்  வாழ்ந்திருக்கும்படி  நான்  உனக்குச்  சவுக்கியத்தைத்  தேடாதிருப்பேனோ?  {Ruth  3:1}

 

நீ  போவாசின்<Boaz>  வேலைக்காரிகளோடே  கூடியிருந்தாயே,  அவன்  நம்முடைய  உறவின்முறையான்  அல்லவா?  இதோ,  அவன்  இன்று  இராத்திரி  களத்திலே  வாற்கோதுமை  தூற்றுவான்.  {Ruth  3:2}

 

நீ  குளித்து,  எண்ணெய்  பூசி,  உன்  வஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  அந்தக்  களத்திற்குப்  போ;  அந்த  மனுஷன்  புசித்துக்  குடித்துத்  தீருமட்டும்  அவன்  கண்ணுக்கு  எதிர்ப்படாமலிரு.  {Ruth  3:3}

 

அவன்  படுத்துக்கொண்டபோது,  அவன்  படுத்திருக்கும்  இடத்தை  நீ  பார்த்திருந்து  போய்,  அவன்  கால்களின்மேல்  மூடியிருக்கிற  போர்வையை  ஒதுக்கி  நீ  படுத்துக்கொள்;  அப்பொழுது  நீ  செய்யவேண்டியது  இன்னதென்று  அவன்  உனக்குச்  சொல்லுவான்  என்றாள்.  {Ruth  3:4}

 

அதற்கு  அவள்:  நீர்  எனக்குச்  சொன்னபடியெல்லாம்  செய்வேன்  என்றாள்.  {Ruth  3:5}

 

அவள்  களத்திற்குப்போய்,  தன்  மாமி  தனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  செய்தாள்.  {Ruth  3:6}

 

போவாஸ்<Boaz>  புசித்துக்  குடித்து,  மகிழ்ச்சியாயிருந்து,  ஒரு  அம்பாரத்து  அடியிலே  வந்து  படுத்துக்கொண்டான்.  அப்பொழுது  அவள்:  மெள்ளப்போய்,  அவன்  கால்களின்மேல்  மூடியிருக்கிற  போர்வையை  ஒதுக்கிப்  படுத்துக்கொண்டாள்.  {Ruth  3:7}

 

பாதிராத்திரியிலே,  அந்த  மனுஷன்  அருண்டு,  திரும்பி,  ஒரு  ஸ்திரீ  தன்  பாதத்தண்டையிலே  படுத்திருக்கிறதைக்  கண்டு,  {Ruth  3:8}

 

நீ  யார்  என்று  கேட்டான்;  அவள்,  நான்  உம்முடைய  அடியாளாகிய  ரூத்<Ruth>;  நீர்  உம்முடைய  அடியாள்மேல்  உம்முடைய  போர்வையை  விரியும்;  நீர்  சுதந்தரவாளி  என்றாள்.  {Ruth  3:9}

 

அதற்கு  அவன்:  மகளே,  நீ  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படுவாயாக;  நீ  தரித்திரரும்  ஐசுவரியவான்களுமான  வாலிபர்களின்  பிறகே  போகாததினால்,  உன்  முந்தின  நற்குணத்தைப்பார்க்கிலும்  உன்  பிந்தின  நற்குணம்  உத்தமமாயிருக்கிறது.  {Ruth  3:10}

 

இப்போதும்  மகளே,  நீ  பயப்படாதே;  உனக்கு  வேண்டியபடியெல்லாம்  செய்வேன்;  நீ  குணசாலி  என்பதை  என்  ஜனமாகிய  ஊராரெல்லாரும்  அறிவார்கள்.  {Ruth  3:11}

 

நான்  சுதந்தரவாளி  என்பது  மெய்தான்;  ஆனாலும்  என்னிலும்  கிட்டின  சுதந்தரவாளி  ஒருவன்  இருக்கிறான்.  {Ruth  3:12}

 

இராத்திரிக்குத்  தங்கியிரு;  நாளைக்கு  அவன்  உன்னைச்  சுதந்தரமுறையாய்  விவாகம்பண்ணச்  சம்மதித்தால்  நல்லது,  அவன்  விவாகம்பண்ணட்டும்;  அவன்  உன்னை  விவாகம்பண்ண  மனதில்லாதிருந்தானேயாகில்,  நான்  உன்னைச்  சுதந்தரமுறையாய்  விவாகம்பண்ணுவேன்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிடுகிறேன்;  விடியற்காலமட்டும்  படுத்துக்கொண்டிரு  என்றான்.  {Ruth  3:13}

 

அவள்  விடியற்காலமட்டும்  அவன்  பாதத்தண்டையில்  படுத்திருந்து,  களத்திலே  ஒரு  ஸ்திரீ  வந்ததாக  ஒருவருக்கும்  தெரிவிக்கவேண்டாம்  என்று  அவன்  சொல்லியிருந்தபடியால்,  ஒருவர்  முகம்  ஒருவருக்குத்  தெரியாததற்கு  முன்னே  எழுந்திருந்தாள்.  {Ruth  3:14}

 

அவன்  அவளை  நோக்கி:  நீ  போர்த்துக்கொண்டிருக்கிற  போர்வையை  விரித்துப்பிடி  என்றான்;  அவள்  அதைப்  பிடித்தபோது,  அவன்  அதிலே  ஆறுபடி  வாற்கோதுமையை  அளந்துபோட்டு,  அவள்மேல்  தூக்கிவிட்டு,  பட்டணத்திற்குப்  புறப்பட்டுவந்தான்.  {Ruth  3:15}

 

அவள்  தன்  மாமியினிடத்தில்  வந்தபோது,  அவள்:  என்  மகளே,  உன்  செய்தி  என்ன  என்று  கேட்டாள்;  அப்பொழுது  அவள்:  அந்த  மனுஷன்  தனக்குச்  செய்ததையெல்லாம்  அவளுக்கு  விவரித்தாள்.  {Ruth  3:16}

 

மேலும்  அவர்,  நீ  உன்  மாமியாரண்டைக்கு  வெறுமையாய்ப்  போகவேண்டாம்  என்று  சொல்லி,  இந்த  ஆறுபடி  வாற்கோதுமையை  எனக்குக்  கொடுத்தார்  என்றாள்.  {Ruth  3:17}

 

அப்பொழுது  அவள்:  என்  மகளே,  இந்தக்  காரியம்  என்னமாய்  முடியும்  என்று  நீ  அறியுமட்டும்  பொறுத்திரு;  அந்த  மனுஷன்  இன்றைக்கு  இந்தக்  காரியத்தை  முடிக்குமுன்  இளைப்பாறமாட்டான்  என்றாள்.  {Ruth  3:18}

 

போவாஸ்<Boaz>  பட்டணவாசலில்  போய்,  உட்கார்ந்துகொண்டிருந்தான்;  அப்பொழுது  போவாஸ்<Boaz>  சொல்லியிருந்த  அந்தச்  சுதந்தரவாளி  அந்த  வழியே  வந்தான்;  அவனை  நோக்கி:  ஓய்,  என்று  பேர்  சொல்லிக்  கூப்பிட்டு,  இங்கே  வந்து  சற்று  உட்காரும்  என்றான்;  அவன்  வந்து  உட்கார்ந்தான்.  {Ruth  4:1}

 

அப்பொழுது  அவன்  பட்டணத்து  மூப்பரானவர்களில்  பத்துப்பேரை  அழைத்து,  இங்கே  உட்காருங்கள்  என்றான்;  அவர்களும்  உட்கார்ந்தார்கள்.  {Ruth  4:2}

 

அப்பொழுது  அவன்  அந்தச்  சுதந்தரவாளியை  நோக்கி:  எலிமெலேக்<Elimelech>  என்னும்  நம்முடைய  சகோதரனுக்கு  இருந்த  வயல்நிலத்தின்  பங்கை,  மோவாப்<Moab>  தேசத்திலிருந்து  திரும்பிவந்த  நகோமி<Naomi>  விற்கப்போகிறாள்.  {Ruth  4:3}

 

ஆகையால்  நீர்  அதை  ஊராருக்கு  முன்பாகவும்,  என்  ஜனத்தின்  மூப்பருக்கு  முன்பாகவும்  வாங்கிக்கொள்ளும்படி  உமக்கு  அறியப்பண்ணவேண்டும்  என்றிருந்தேன்;  நீர்  அதைச்  சுதந்தரமுறையாக  மீட்டுக்கொள்ள  மனதிருந்தால்,  மீட்டுக்கொள்ளும்;  அதை  மீட்டுக்கொள்ள  மனதில்லாதிருந்தால்,  நான்  அதை  அறியும்படிக்கு  எனக்குச்  சொல்லும்;  உம்மையும்  உமக்குப்பின்பு  என்னையும்  தவிர,  அதை  மீட்கத்தக்கவன்  வேறொருவனும்  இல்லை  என்றான்;  அதற்கு  அவன்:  நான்  அதை  மீட்டுக்கொள்ளுகிறேன்  என்றான்.  {Ruth  4:4}

 

அப்பொழுது  போவாஸ்<Boaz>:  நீர்  நகோமியின்<Naomi>  கையிலே  அந்த  வயல்நிலத்தை  வாங்குகிற  நாளிலே  மரித்தவனுடைய  சுதந்தரத்தில்  அவன்  பேரை  நிலைநிற்கப்பண்ணும்படிக்கு,  அதை  மரித்தவன்  மனைவியாகிய  மோவாபிய<Moabitess>  ஸ்திரீயான  ரூத்<Ruth>  கையிலும்  வாங்கவேண்டியது  என்றான்.  {Ruth  4:5}

 

அப்பொழுது  அந்தச்  சுதந்தரவாளி:  நான்  என்  சுதந்தரத்தைக்  கெடுக்காதபடிக்கு,  நான்  அதை  மீட்டுக்கொள்ளமாட்டேன்;  நான்  மீட்கத்தக்கதை  நீர்  மீட்டுக்கொள்ளும்;  நான்  அதை  மீட்டுக்கொள்ளமாட்டேன்  என்றான்.  {Ruth  4:6}

 

மீட்கிறதிலும்  மாற்றுகிறதிலும்  சகல  காரியத்தையும்  உறுதிப்படுத்தும்படிக்கு,  இஸ்ரவேலிலே<Israel>  பூர்வகால  வழக்கம்  என்னவென்றால்,  ஒருவன்  தன்  பாதரட்சையைக்  கழற்றி,  மற்றவனுக்குக்  கொடுப்பான்,  இது  இஸ்ரவேலிலே<Israel>  வழங்கின  உறுதிப்பாடு.  {Ruth  4:7}

 

அப்படியே  அந்தச்  சுதந்தரவாளி  போவாசை<Boaz>  நோக்கி:  நீர்  அதை  வாங்கிக்கொள்ளும்  என்று  சொல்லி,  தன்  பாதரட்சையைக்  கழற்றிப்  போட்டான்.  {Ruth  4:8}

 

அப்பொழுது  போவாஸ்<Boaz>  மூப்பரையும்  சகல  ஜனங்களையும்  நோக்கி:  எலிமெலேக்குக்கு<Elimelech>  இருந்த  எல்லாவற்றையும்  கிலியோனுக்கும்<Chilion>  மக்லோனுக்கும்<Mahlon>  இருந்த  எல்லாவற்றையும்  நகோமியின்<Naomi>  கையிலே  வாங்கிக்கொண்டேன்  என்பதற்கு  இன்றையதினம்  நீங்கள்  சாட்சி.  {Ruth  4:9}

 

இதுவுமல்லாமல்,  மரித்தவனுடைய  சகோதரருக்குள்ளும்,  ஊராருக்குள்ளும்,  அவனுடைய  பேர்  அற்றுப்போகாமல்,  மரித்தவனுடைய  சுதந்தரத்திலே  அவன்  பேரை  நிலைநிறுத்த,  நான்  மக்லோனின்<Mahlon>  மனைவியாயிருந்த  மோவாபிய<Moabitess>  ஸ்திரீயான  ரூத்தை<Ruth>  எனக்கு  மனைவியாகக்  கொண்டேன்;  அதற்கும்  இன்றையதினம்  நீங்கள்  சாட்சி  என்றான்.  {Ruth  4:10}

 

அப்பொழுது  ஒலிமுகவாசலில்  இருக்கிற  சகல  ஜனங்களும்  மூப்பரானவர்களும்  அவனை  நோக்கி:  நாங்கள்  சாட்சிதான்;  உன்  வீட்டிலே  வருகிற  மனைவியைக்  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  வீட்டைக்  கட்டுவித்த  இரண்டுபேராகிய  ராகேலைப்போலவும்<Rachel>  லேயாளைப்போலவும்<Leah>  வாழ்ந்திருக்கச்  செய்வாராக;  நீ  எப்பிராத்தாவிலே<Ephratah>  பாக்கியவானாயிருந்து,  பெத்லெகேமிலே<Bethlehem>  புகழ்பெற்றிருக்கக்கடவாய்.  {Ruth  4:11}

 

இந்தப்  பெண்ணிடத்திலே  கர்த்தர்  உனக்கு  அருளிச்செய்யப்போகிற  சந்தானத்தினாலே,  உன்  வீடு  தாமார்<Tamar>  யூதாவுக்குப்<Judah>  பெற்ற  பேரேசின்<Pharez>  வீட்டைப்போல  ஆகக்கடவது  என்றார்கள்.  {Ruth  4:12}

 

போவாஸ்<Boaz>  ரூத்தை<Ruth>  விவாகம்பண்ணினான்;  அவள்  அவனுக்கு  மனைவியானாள்;  அவன்  அவளிடத்தில்  பிரவேசித்தபோது,  அவள்  கர்ப்பந்தரித்து,  ஒரு  ஆண்பிள்ளையைப்  பெறக்  கர்த்தர்  அநுக்கிரகம்பண்ணினார்.  {Ruth  4:13}

 

அப்பொழுது  ஸ்திரீகள்  நகோமியைப்<Naomi>  பார்த்து:  சுதந்தரவாளி  அற்றுப்போகாதபடிக்கு  இன்று  உனக்குத்  தயைசெய்த  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவன்  பேர்  இஸ்ரவேலிலே<Israel>  பிரபலமாகக்கடவது.  {Ruth  4:14}

 

அவன்  உன்  ஆத்துமாவுக்கு  ஆறுதல்  செய்கிறவனும்,  உன்  முதிர்வயதிலே  உன்னை  ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்;  உன்னைச்  சிநேகித்து,  ஏழு  குமாரரைப்பார்க்கிலும்  உனக்கு  அருமையாயிருக்கிற  உன்  மருமகள்  அவனைப்  பெற்றாளே  என்றார்கள்.  {Ruth  4:15}

 

நகோமி<Naomi>  அந்தப்  பிள்ளையை  எடுத்து,  தன்  மடியிலே  வைத்து,  அதை  வளர்க்கிற  தாயானாள்.  {Ruth  4:16}

 

அயல்வீட்டுக்காரிகள்  நகோமிக்கு<Naomi>  ஒரு  ஆண்பிள்ளை  பிறந்தது  என்று  வாழ்த்தி,  அதற்கு  ஓபேத்<Obed>  என்று  பேரிட்டார்கள்;  அவன்  தாவீதின்<David>  தகப்பனாகிய  ஈசாயின்<Jesse>  தகப்பன்.  {Ruth  4:17}

 

பேரேசுடைய<Pharez>  சந்ததியின்  வரலாறு:  பேரேஸ்<Pharez>  எஸ்ரோனைப்<Hezron>  பெற்றான்.  {Ruth  4:18}

 

எஸ்ரோன்<Hezron>  ராமைப்<Ram>  பெற்றான்;  ராம்<Ram>  அம்மினதாபைப்<Amminadab>  பெற்றான்.  {Ruth  4:19}

 

அம்மினதாப்<Amminadab>  நகசோனைப்<Nahshon>  பெற்றான்;  நகசோன்<Nahshon>  சல்மோனைப்<Salmon>  பெற்றான்.  {Ruth  4:20}

 

சல்மோன்<Salmon>  போவாசைப்<Boaz>  பெற்றான்;  போவாஸ்<Boaz>  ஓபேதைப்<Obed>  பெற்றான்.  {Ruth  4:21}

 

ஓபேத்<Obed>  ஈசாயைப்<Jesse>  பெற்றான்;  ஈசாய்<Jesse>  தாவீதைப்<David>  பெற்றான்.  {Ruth  4:22}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!