Sunday, April 05, 2020

யோவேல்

பெத்துவேலின்<Pethuel>  குமாரனாகிய  யோவேலுக்கு<Joel>  உண்டான  கர்த்தருடைய  வசனம்.  {Joel  1:1}

 

முதியோரே,  இதைக்  கேளுங்கள்;  தேசத்தின்  சகல  குடிகளே,  செவிகொடுங்கள்;  உங்கள்  நாட்களிலாவது  உங்கள்  பிதாக்களின்  நாட்களிலாவது  இப்படிப்பட்டது  சம்பவித்ததுண்டா?  {Joel  1:2}

 

இதின்  செய்தியை  உங்கள்  பிள்ளைகளுக்குத்  தெரிவியுங்கள்;  இதை  உங்கள்  பிள்ளைகள்  தங்கள்  பிள்ளைகளுக்கும்,  அவர்கள்  தங்கள்  பிள்ளைகளுக்கும்  சந்ததியாருக்கும்  தெரிவிக்கக்கடவர்கள்.  {Joel  1:3}

 

பச்சைப்புழு  விட்டதை  வெட்டுக்கிளி  தின்றது;  வெட்டுக்கிளி  விட்டதைப்  பச்சைக்கிளி  தின்றது;  பச்சைக்கிளி  விட்டதை  முசுக்கட்டைப்பூச்சி  தின்றது.  {Joel  1:4}

 

வெறியரே,  விழித்து  அழுங்கள்;  திராட்சரசம்  குடிக்கிற  சகல  ஜனங்களே,  புது  திராட்சரசத்தினிமித்தம்  அலறுங்கள்;  அது  உங்கள்  வாயினின்று  விலக்கப்பட்டது.  {Joel  1:5}

 

எண்ணிமுடியாத  ஒரு  பலத்த  ஜாதி  என்  தேசத்தின்மேல்  வருகிறது;  அதின்  பற்கள்  சிங்கத்தின்  பற்கள்;  துஷ்ட  சிங்கத்தின்  கடைவாய்ப்பற்கள்  அதற்கு  உண்டு.  {Joel  1:6}

 

அது  என்  திராட்சச்செடியை  அழித்து,  என்  அத்திமரத்தை  உரித்து,  அதின்  பட்டையை  முற்றிலும்  தின்றுபோட்டது;  அதின்  கிளைகள்  வெண்மையாயிற்று.  {Joel  1:7}

 

தன்  பாலியவயதின்  புருஷனுக்காக  இரட்டுடுத்தியிருக்கிற  பெண்ணைப்போலப்  புலம்பு.  {Joel  1:8}

 

போஜனபலியும்  பானபலியும்  கர்த்தருடைய  ஆலயத்தை  விட்டு  அற்றுப்போயின;  கர்த்தரின்  ஊழியக்காரராகிய  ஆசாரியர்கள்  துக்கிக்கிறார்கள்.  {Joel  1:9}

 

வயல்வெளி  பாழாயிற்று,  பூமி  துக்கங்கொண்டாடுகிறது;  விளைச்சல்  அழிக்கப்பட்டது;  புது  திராட்சரசம்  வற்றிப்போயிற்று;  எண்ணெய்  மாண்டுபோயிற்று.  {Joel  1:10}

 

பயிரிடுங்  குடிகளே,  வெட்கப்படுங்கள்;  கோதுமையும்  வாற்கோதுமையும்  இல்லாமற்போயிற்று;  திராட்சத்தோட்டக்காரரே,  அலறுங்கள்;  வயல்வெளியின்  அறுப்பு  அழிந்துபோயிற்று.  {Joel  1:11}

 

திராட்சச்செடி  வதங்கி,  அத்திமரம்  சாரமற்றுப்போகிறது;  மாதளை,  பேரீச்சம்,  கிச்சிலி  முதலிய  வெளியின்  செடிகள்  எல்லாம்  வாடிப்போயின;  சந்தோஷம்  மனுபுத்திரரைவிட்டு  ஒழிந்துபோயிற்று.  {Joel  1:12}

 

ஆசாரியர்களே,  இரட்டுடுத்திப்  புலம்புங்கள்;  பலிபீடத்தின்  பணிவிடைக்காரரே,  அலறுங்கள்;  என்  தேவனுடைய  தொண்டரே,  நீங்கள்  உள்ளே  பிரவேசித்து  இரட்டுடுத்தவர்களாய்  இராத்தங்குங்கள்.  உங்கள்  தேவனுடைய  ஆலயத்தில்  போஜனபலியும்  பானபலியும்  செலுத்தப்படாமல்  நிறுத்தப்பட்டது.  {Joel  1:13}

 

பரிசுத்த  உபவாசநாளை  நியமியுங்கள்;  விசேஷித்த  ஆசரிப்பைக்  கூறுங்கள்;  மூப்பரையும்  தேசத்தின்  எல்லாக்  குடிகளையும்,  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  ஆலயத்திலே  கூடிவரச்செய்து  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுங்கள்.  {Joel  1:14}

 

அந்த  நாளினிமித்தம்  ஐயோ!  கர்த்தருடைய  நாள்  சமீபமாயிருக்கிறது;  அது  சங்காரம்போலச்  சர்வவல்லவரிடத்திலிருந்து  வருகிறது.  {Joel  1:15}

 

நம்முடைய  கண்களைவிட்டு  ஆகாரமும்,  நம்முடைய  தேவனின்  ஆலயத்தைவிட்டுச்  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  நீக்கப்படவில்லையோ?  {Joel  1:16}

 

விதையானது  மண்கட்டிகளின்கீழ்  மக்கிப்போயிற்று;  பயிர்  தீய்ந்துபோகிறதினால்  பண்டசாலைகள்  பாழாகிக்  களஞ்சியங்கள்  இடிந்துபோயின.  {Joel  1:17}

 

மிருகங்கள்  எவ்வளவாய்த்  தவிக்கிறது;  மாட்டுமந்தைகள்  தங்களுக்கு  மேய்ச்சல்  இல்லாததினால்  கலங்குகிறது;  ஆட்டுமந்தைகளும்  சேதமாய்ப்போயிற்று.  {Joel  1:18}

 

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  அக்கினி  வனாந்தரத்தின்  மேய்ச்சல்களைப்  பட்சித்து,  ஜுவாலை  வெளியின்  விருட்சங்களையெல்லாம்  எரித்துப்போடுகிறது.  {Joel  1:19}

 

வெளியின்  மிருகங்களும்  உம்மை  நோக்கிக்  கதறுகிறது;  நதிகளில்  தண்ணீரெல்லாம்  வற்றிப்போயிற்று;  அக்கினி  வனாந்தரத்தின்  மேய்ச்சல்களைப்  பட்சித்துப்போட்டது.  {Joel  1:20}

 

சீயோனிலே<Zion>  எக்காளம்  ஊதுங்கள்,  என்  பரிசுத்த  பர்வதத்திலே  எச்சரிப்பின்  சத்தமிடுங்கள்;  தேசத்தின்  குடிகள்  எல்லாம்  தத்தளிக்கக்கடவர்கள்;  ஏனெனில்  கர்த்தருடைய  நாள்  வருகிறது,  அது  சமீபமாயிருக்கிறது.  {Joel  2:1}

 

அது  இருளும்  அந்தகாரமுமான  நாள்;  அது  மப்பும்  மந்தாரமுமான  நாள்;  விடியற்கால  வெளுப்பு  பர்வதங்களின்மேல்  பரவுகிறதுபோல  ஏராளமான  பலத்த  ஒரு  ஜாதி  தீவிரமாக  வந்து  பரவும்;  அப்படிப்பட்டது  முன்  ஒரு  காலத்திலும்  உண்டானதுமில்லை,  இனித்  தலைமுறை  தலைமுறையாக  வரும்  வருஷங்களிலும்  உண்டாவதுமில்லை.  {Joel  2:2}

 

அவைகளுக்கு  முன்னாக  அக்கினி  பட்சிக்கும்,  அவைகளுக்குப்  பின்னாக  ஜுவாலை  எரிக்கும்;  அவைகளுக்கு  முன்னாகத்  தேசம்  ஏதேன்<Eden>  தோட்டத்தைப்போலவும்,  அவைகளுக்குப்  பின்னாகப்  பாழான  வனாந்தரத்தைப்போலவும்  இருக்கும்;  அவைகளுக்கு  ஒன்றும்  தப்பிப்போவதில்லை.  {Joel  2:3}

 

அவைகளின்  சாயல்  குதிரைகளின்  சாயலை  ஒத்தது;  அவைகள்  குதிரை  வீரரைப்போல  ஓடும்.  {Joel  2:4}

 

அவைகள்  ஓடுகிற  இரதங்களின்  இரைச்சல்போலவும்,  செத்தைகளை  எரிக்கிற  அக்கினிஜுவாலையின்  இரைச்சல்போலவும்,  யுத்தத்துக்கு  ஆயத்தப்பட்ட  பலத்த  ஜனத்தின்  இரைச்சல்போலவும்,  பர்வதங்களுடைய  சிகரங்களின்மேல்  குதிக்கும்.  {Joel  2:5}

 

அவைகளுக்கு  முன்பாக  ஜனங்கள்  நடுங்குவார்கள்;  எல்லா  முகங்களும்  கருகிப்போகும்.  {Joel  2:6}

 

அவைகள்  பராக்கிரமசாலிகளைப்போல  ஓடும்;  யுத்தவீரரைப்போல  மதிலேறும்;  வரிசைகள்  பிசகாமல்,  ஒவ்வொன்றும்  தன்  தன்  அணியிலே  செல்லும்.  {Joel  2:7}

 

ஒன்றை  ஒன்று  நெருக்காது;  ஒவ்வொன்றும்  தன்  தன்  பாதையிலே  செல்லும்;  அவைகள்  ஆயுதங்களுக்குள்  விழுந்தாலும்  காயம்படாமற்போகும்.  {Joel  2:8}

 

அவைகள்  பட்டணம்  எங்கும்  செல்லும்;  மதிலின்மேல்  ஓடும்,  வீடுகளின்மேல்  ஏறும்;  பலகணிவழியாய்த்  திருடனைப்போல  உள்ளே  நுழையும்.  {Joel  2:9}

 

அவைகளுக்கு  முன்பாகப்  பூமி  அதிரும்;  வானங்கள்  அசையும்;  சூரியனும்  சந்திரனும்  இருண்டுபோகும்;  நட்சத்திரங்கள்  ஒளி  மழுங்கும்.  {Joel  2:10}

 

கர்த்தர்  தமது  சேனைக்குமுன்  சத்தமிடுவார்;  அவருடைய  பாளயம்  மகா  பெரிது,  அவருடைய  வார்த்தையின்படி  செய்கிறதற்கு  வல்லமையுள்ளது;  கர்த்தருடைய  நாள்  பெரிதும்  மகா  பயங்கரமுமாயிருக்கும்;  அதைச்  சகிக்கிறவன்  யார்?  {Joel  2:11}

 

ஆதலால்  நீங்கள்  இப்பொழுதே  உபவாசத்தோடும்  அழுகையோடும்  புலம்பலோடும்  உங்கள்  முழு  இருதயத்தோடும்  என்னிடத்தில்  திரும்புங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Joel  2:12}

 

நீங்கள்  உங்கள்  வஸ்திரங்களையல்ல,  உங்கள்  இருதயங்களைக்  கிழித்து,  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  இடத்தில்  திரும்புங்கள்;  அவர்  இரக்கமும்,  மன  உருக்கமும்,  நீடிய  சாந்தமும்,  மிகுந்த  கிருபையுமுள்ளவர்;  அவர்  தீங்குக்கு  மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.  {Joel  2:13}

 

ஒருவேளை  அவர்  திரும்பி  மனஸ்தாபப்பட்டு,  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  போஜனபலிகளையும்  பானபலிகளையும்  செலுத்துகிறதற்கான  ஆசீர்வாதத்தைத்  தந்தருளுவார்.  {Joel  2:14}

 

சீயோனிலே<Zion>  எக்காளம்  ஊதுங்கள்,  பரிசுத்த  உபவாசநாளை  நியமியுங்கள்,  விசேஷித்த  ஆசரிப்பைக்  கூறுங்கள்.  {Joel  2:15}

 

ஜனத்தைக்  கூட்டுங்கள்,  சபையைப்  பரிசுத்தப்படுத்துங்கள்;  முதியோரைச்  சேருங்கள்,  பிள்ளைகளையும்  பாலுண்கிற  குழந்தைகளையும்  கூட்டுங்கள்;  மணவாளன்  தன்  அறையையும்,  மணவாட்டி  தன்  மறைவையும்  விட்டுப்  புறப்படுவார்களாக.  {Joel  2:16}

 

கர்த்தரின்  பணிவிடைக்காரராகிய  ஆசாரியர்கள்  மண்டபத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  அழுது:  கர்த்தாவே,  நீர்  உமது  ஜனத்தைத்  தப்பவிட்டுப்  புறஜாதிகள்  அவர்களைப்  பழிக்கும்  நிந்தைக்கு  உமது  சுதந்தரத்தை  ஒப்புக்கொடாதிரும்;  உங்கள்  தேவன்  எங்கே  என்று  புறஜாதிகளுக்குள்ளே  சொல்லப்படுவானேன்  என்பார்களாக.  {Joel  2:17}

 

அப்பொழுது  கர்த்தர்  தமது  தேசத்துக்காக  வைராக்கியங்கொண்டு,  தமது  ஜனத்தைக்  கடாட்சிப்பார்.  {Joel  2:18}

 

கர்த்தர்  மறுமொழி  கொடுத்து,  தமது  ஜனத்தை  நோக்கி:  இதோ,  நான்  உங்களை  இனிப்  புறஜாதிகளுக்குள்ளே  நிந்தையாக  வைக்காமல்,  உங்களுக்குத்  தானியத்தையும்  திராட்சரசத்தையும்  எண்ணெயையும்  கொடுத்தேன்,  நீங்கள்  அதினால்  திருப்தியாவீர்கள்.  {Joel  2:19}

 

வடதிசைச்சேனையை  உங்களுக்குத்  தூரமாக  விலக்கி,  அதின்  முன்தண்டு  கீழ்க்கடலுக்கும்,  அதின்  பின்தண்டு  மேற்கடலுக்கும்  நேராக  அதை  வறட்சியும்  பாழுமான  தேசத்துக்குத்  துரத்திவிடுவேன்;  அங்கே  அதின்  நாற்றம்  எழும்பி,  அதின்  துர்க்கந்தம்  வீசும்;  அது  பெரிய  காரியங்களைச்  செய்தது.  {Joel  2:20}

 

தேசமே,  பயப்படாதே,  மகிழ்ந்து  களிகூரு;  கர்த்தர்  பெரிய  காரியங்களைச்  செய்வார்.  {Joel  2:21}

 

வெளியின்  மிருகங்களே,  பயப்படாதேயுங்கள்;  வனாந்தரத்திலே  மேய்ச்சல்கள்  உண்டாகும்;  விருட்சங்கள்  காய்களைக்  காய்க்கும்;  அத்திமரமும்  திராட்சச்செடியும்  பலனைத்  தரும்.  {Joel  2:22}

 

சீயோன்<Zion>  குமாரரே,  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குள்  மகிழ்ந்து  களிகூருங்கள்;  அவர்  தக்கபடி  உங்களுக்கு  முன்மாரியைக்  கொடுத்து,  உங்களுக்கு  முன்மாரியையும்  பின்மாரியையும்  ஏற்கனவே  வருஷிக்கப்பண்ணுவார்.  {Joel  2:23}

 

களங்கள்  தானியத்தினால்  நிரம்பும்;  ஆலைகளில்  திராட்சரசமும்  எண்ணெயும்  வழிந்தோடும்.  {Joel  2:24}

 

நான்  உங்களிடத்தில்  அனுப்பின  என்  பெரிய  சேனையாகிய  வெட்டுக்கிளிகளும்,  பச்சைக்கிளிகளும்,  முசுக்கட்டைப்  பூச்சிகளும்,  பச்சைப்  புழுக்களும்  பட்சித்த  வருஷங்களின்  விளைவை  உங்களுக்குத்  திரும்ப  அளிப்பேன்.  {Joel  2:25}

 

நீங்கள்  சம்பூரணமாகச்  சாப்பிட்டு,  திருப்தியடைந்து,  உங்களை  அதிசயமாய்  நடத்திவந்த  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைத்  துதிப்பீர்கள்;  என்  ஜனங்கள்  ஒருபோதும்  வெட்கப்பட்டுப்போவதில்லை.  {Joel  2:26}

 

நான்  இஸ்ரவேலின்<Israel>  நடுவில்  இருக்கிறவரென்றும்,  நானே  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்,  வேறொருவர்  இல்லையென்றும்  அறிந்துகொள்வீர்கள்;  என்  ஜனங்கள்  ஒருபோதும்  வெட்கப்பட்டுப்போவதில்லை.  {Joel  2:27}

 

அதற்குப்  பின்பு  நான்  மாம்சமான  யாவர்மேலும்  என்  ஆவியை  ஊற்றுவேன்;  அப்பொழுது  உங்கள்  குமாரரும்  உங்கள்  குமாரத்திகளும்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுவார்கள்;  உங்கள்  மூப்பர்  சொப்பனங்களையும்,  உங்கள்  வாலிபர்  தரிசனங்களையும்  காண்பார்கள்.  {Joel  2:28}

 

ஊழியக்காரர்மேலும்  ஊழியக்காரிகள்மேலும்,  அந்நாட்களிலே  என்  ஆவியை  ஊற்றுவேன்.  {Joel  2:29}

 

வானத்திலும்  பூமியிலும்  இரத்தம்  அக்கினி  புகைஸ்தம்பங்களாகிய  அதிசயங்களைக்  காட்டுவேன்.  {Joel  2:30}

 

கர்த்தருடைய  பெரிதும்  பயங்கரமுமான  நாள்  வருமுன்னே  சூரியன்  இருளாகவும்,  சந்திரன்  இரத்தமாகவும்  மாறும்.  {Joel  2:31}

 

அப்பொழுது  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிறவனெவனோ  அவன்  இரட்சிக்கப்படுவான்;  கர்த்தர்  சொன்னபடி,  சீயோன்<Zion>  பர்வதத்திலும்  எருசலேமிலும்<Jerusalem>  கர்த்தர்  வரவழைக்கும்  மீதியாயிருப்பவர்களிடத்திலும்  இரட்சிப்பு  உண்டாயிருக்கும்.  {Joel  2:32}

 

இதோ,  யூதாவுக்கும்<Judah>  எருசலேமுக்கும்<Jerusalem>  உண்டாயிருக்கிற  சிறையிருப்பை  நான்  திருப்பும்  அந்நாட்களிலும்  அக்காலத்திலும்,  {Joel  3:1}

 

நான்  சகல  ஜாதியாரையும்  கூட்டி,  யோசபாத்தின்<Jehoshaphat>  பள்ளத்தாக்கிலே  அவர்களை  இறங்கிப்போகப்பண்ணி,  அவர்கள்  என்  ஜனத்தையும்  இஸ்ரவேலென்னும்<Israel>  என்  சுதந்தரத்தையும்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து  என்  தேசத்தைப்  பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,  {Joel  3:2}

 

அவர்கள்  என்  ஜனத்தின்பேரில்  சீட்டுப்போட்டு,  ஆண்குழந்தைகளை  வேசிப்பணையமாகக்  கொடுத்து,  மதுபானம்  பண்ணும்படி,  பெண்  குழந்தைகளைத்  திராட்சரசத்துக்குக்  கிரயமாகக்  கொடுத்ததினிமித்தமும்,  அங்கே  அவர்களோடு  வழக்காடுவேன்.  {Joel  3:3}

 

தீருவே<Tyre>,  சீதோனே<Zidon>,  பெலிஸ்தியாவின்<Palestine>  சகல  எல்லைகளே,  உங்களுக்கும்  எனக்கும்  என்ன?  இப்படி  எனக்குச்  சரிக்கட்டுகிறீர்களோ?  இப்படி  எனக்குச்  சரிக்கட்டுவீர்களாகில்,  நான்  தாமதமின்றி  அதிசீக்கிரமாய்  நீங்கள்  சரிக்கட்டுகிறதை  உங்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்வேன்.  {Joel  3:4}

 

நீங்கள்  என்  வெள்ளியையும்  என்  பொன்னையும்  எடுத்து,  இன்பமும்  உச்சிதமுமான  என்  பொருள்களை  உங்கள்  கோவில்களிலே  கொண்டுபோய்,  {Joel  3:5}

 

யூதாவின்<Judah>  குமாரரையும்  எருசலேமின்<Jerusalem>  குமாரரையும்  அவர்களுடைய  எல்லைகளுக்குத்  தூரமாக்கும்படிக்கு,  கிரேக்கரிடத்தில்<Grecians>  விற்றுப்போட்டீர்கள்.  {Joel  3:6}

 

இதோ,  நீங்கள்  அவர்களை  விற்றுப்போட்ட  அவ்விடத்திலிருந்து  நான்  அவர்களை  எழும்பிவரப்பண்ணி,  நீங்கள்  சரிக்கட்டினதை  உங்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்து,  {Joel  3:7}

 

உங்கள்  குமாரரையும்  உங்கள்  குமாரத்திகளையும்  யூதா<Judah>  புத்திரரின்  கையிலே  விற்பேன்;  இவர்கள்  அவர்களைத்  தூரதேசத்தாராகிய  சபேயரிடத்தில்<Sabeans>  விற்றுப்போடுவார்கள்;  கர்த்தர்  இதைச்  சொன்னார்.  {Joel  3:8}

 

இதைப்  புறஜாதிகளுக்குள்ளே  கூறுங்கள்;  யுத்தத்துக்கு  ஆயத்தம்பண்ணுங்கள்,  பராக்கிரமசாலிகளை  எழுப்புங்கள்;  யுத்தவீரர்  எல்லாரும்  சேர்ந்து  ஏறிவரக்கடவர்கள்.  {Joel  3:9}

 

உங்கள்  மண்வெட்டிகளைப்  பட்டயங்களாகவும்,  உங்கள்  அரிவாள்களை  ஈட்டிகளாகவும்  அடியுங்கள்;  பலவீனனும்  தன்னைப்  பலவான்  என்று  சொல்வானாக.  {Joel  3:10}

 

சகல  ஜாதிகளே,  நீங்கள்  சுற்றிலுமிருந்து  ஏகமாய்  வந்து  கூடுங்கள்;  கர்த்தாவே,  நீரும்  அங்கே  உம்முடைய  பராக்கிரமசாலிகளை  இறங்கப்பண்ணுவீராக.  {Joel  3:11}

 

ஜாதிகள்  எழும்பி  யோசபாத்தின்<Jehoshaphat>  பள்ளத்தாக்குக்கு  வருவார்களாக;  சுற்றிலுமுள்ள  ஜாதிகளை  நியாயந்தீர்க்க  அங்கே  நான்  வீற்றிருப்பேன்.  {Joel  3:12}

 

பயிர்  முதிர்ந்தது,  அரிவாளை  நீட்டி  அறுங்கள்,  வந்து  இறங்குங்கள்;  ஆலை  நிரம்பியிருக்கிறது,  ஆலையின்  தொட்டிகள்  வழிந்தோடுகிறது;  அவர்களுடைய  பாதகம்  பெரியது.  {Joel  3:13}

 

நியாயத்தீர்ப்பின்  பள்ளத்தாக்கிலே  ஜனங்கள்  திரள்திரளாய்  இருக்கிறார்கள்;  நியாயத்தீர்ப்பின்  பள்ளத்தாக்கிலே  கர்த்தரின்  நாள்  சமீபமாயிருக்கிறது.  {Joel  3:14}

 

சூரியனும்  சந்திரனும்  இருண்டுபோகும்,  நட்சத்திரங்கள்  ஒளிமழுங்கும்.  {Joel  3:15}

 

கர்த்தர்  சீயோனிலிருந்து<Zion>  கெர்ச்சித்து,  எருசலேமிலிருந்து<Jerusalem>  சத்தமிடுவார்;  வானமும்  பூமியும்  அதிரும்;  ஆனாலும்  கர்த்தர்  தமது  ஜனத்துக்கு  அடைக்கலமும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  அரணான  கோட்டையுமாயிருப்பார்.  {Joel  3:16}

 

என்  பரிசுத்த  பர்வதமாகிய  சீயோனிலே<Zion>  வாசமாயிருக்கிற  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வீர்கள்;  அப்பொழுது  எருசலேம்<Jerusalem>  பரிசுத்தமாயிருக்கும்;  அந்நியர்  இனி  அதைக்  கடந்துபோவதில்லை.  {Joel  3:17}

 

அக்காலத்தில்  பர்வதங்கள்  திராட்சரசத்தைப்  பொழியும்,  மலைகள்  பாலாய்  ஓடும்,  யூதாவின்<Judah>  ஆறுகள்  எல்லாம்  பிரவாகித்து  ஓடும்;  ஒரு  ஊற்று  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  புறப்பட்டுச்  சித்தீம்<Shittim>  என்னும்  பள்ளத்தாக்கை  நீர்ப்பாய்ச்சலாக்கும்.  {Joel  3:18}

 

யூதா<Judah>  புத்திரரின்  தேசத்திலே  குற்றமில்லாத  இரத்தத்தைச்  சிந்தி,  அவர்களுக்குச்  செய்த  கொடுமையினிமித்தம்  எகிப்து<Egypt>  பாழாய்ப்போகும்,  ஏதோம்<Edom>  பாழான  வனாந்தரமாகும்.  {Joel  3:19}

 

ஆனால்  யூதாவோ<Judah>  சதாகாலமாகவும்,  எருசலேம்<Jerusalem>  தலைமுறை  தலைமுறையாகவும்  குடியேற்றப்பட்டிருக்கும்.  {Joel  3:20}

 

நான்  தண்டியாமல்  விட்டிருந்த  அவர்களுடைய  இரத்தப்பழியைத்  தண்டியாமல்  விடேன்;  கர்த்தர்  சீயோனிலே<Zion>  வாசமாயிருக்கிறார்.  {Joel  3:21}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!