Friday, April 03, 2020

ஓசியா

யூதா<Judah>  தேசத்து  ராஜாக்களாகிய  உசியா<Uzziah>,  யோதாம்<Jotham>,  ஆகாஸ்<Ahaz>,  எசேக்கியா<Hezekiah>  என்பவர்களின்  நாட்களிலும்,  யோவாசின்<Joash>  குமாரனாகிய  யெஸ்ரயேலின்<Jezreel//Israel>  ராஜாவாகிய  யெரொபெயாம்<Jeroboam>  என்பவனின்  நாட்களிலும்,  பெயேரியின்<Beeri>  குமாரனாகிய  ஓசியாவுக்கு<Hosea>  உண்டான  கர்த்தருடைய  வசனம்.  {Hos  1:1}

 

கர்த்தர்  ஓசியாவைக்கொண்டு<Hosea>  உரைக்கத்தொடங்கினபோது,  கர்த்தர்  ஓசியாவை<Hosea>  நோக்கி:  நீ  போய்,  ஒரு  சோரஸ்திரீயையும்  சோரப்பிள்ளைகளையும்  உன்னிடமாகச்  சேர்த்துக்கொள்;  தேசம்  கர்த்தரை  விட்டு  விலகிச்  சோரம்போயிற்று  என்றார்.  {Hos  1:2}

 

அவன்  போய்,  திப்லாயிமின்<Diblaim>  குமாரத்தியாகிய  கோமேரைச்<Gomer>  சேர்த்துக்கொண்டான்;  அவள்  கர்ப்பந்தரித்து,  அவனுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  {Hos  1:3}

 

அப்பொழுது  கர்த்தர்  அவனை  நோக்கி:  இவனுக்கு  யெஸ்ரயேல்<Jezreel>  என்னும்  பேரிடு;  ஏனெனில்  இன்னும்  கொஞ்சக்காலத்திலே  நான்  ஏகூவின்<Jehu>  வம்சத்தாரிடத்திலே  யெஸ்ரயேலின்<Jezreel>  இரத்தப்பழியை  விசாரித்து,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  ராஜ்யபாரத்தை  ஒழியப்பண்ணுவேன்.  {Hos  1:4}

 

அந்நாளில்  யெஸ்ரயேலின்<Jezreel>  பள்ளத்தாக்கிலே  இஸ்ரவேலின்<Israel>  வில்லை  முறிப்பேன்  என்றார்.  {Hos  1:5}

 

அவள்  திரும்பக்  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரத்தியைப்  பெற்றாள்;  அப்பொழுது  அவர்  அவனை  நோக்கி:  இவளுக்கு  லோருகாமா<Loruhamah>  என்னும்  பேரிடு;  ஏனெனில்  நான்  இனி  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்கு  இரக்கஞ்செய்வதில்லை,  நான்  அவர்களை  முழுவதும்  அகற்றிவிடுவேன்.  {Hos  1:6}

 

யூதாவின்<Judah>  வம்சத்தாருக்கோ  நான்  இரக்கஞ்செய்வேன்;  வில்லினாலும்,  பட்டயத்தினாலும்,  யுத்தத்தினாலும்,  குதிரைகளினாலும்,  குதிரைவீரரினாலும்  நான்  அவர்களை  இரட்சியாமல்,  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தராலே  அவர்களை  இரட்சிப்பேன்  என்றார்.  {Hos  1:7}

 

அவள்  லோருகாமாவை<Loruhamah>  முலை  மறக்கப்பண்ணினபிற்பாடு,  கர்ப்பந்தரித்து  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  {Hos  1:8}

 

அப்பொழுது  அவர்:  இவனுக்கு  லோகம்மீ<Loammi>  என்னும்  பேரிடு;  ஏனெனில்  நீங்கள்  என்  ஜனமல்ல,  நான்  உங்கள்  தேவனாயிருப்பதில்லை.  {Hos  1:9}

 

என்றாலும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  தொகை  அளக்கவும்  எண்ணவுங்கூடாத  கடற்கரை  மணலைப்போலிருக்கும்;  நீங்கள்  என்  ஜனமல்ல  என்று  அவர்களுக்குச்  சொல்வதற்குப்  பதிலாக  நீங்கள்  ஜீவனுள்ள  தேவனுடைய  பிள்ளைகள்  என்று  அவர்களுக்குச்  சொல்லப்படும்.  {Hos  1:10}

 

அப்பொழுது  யூதா<Judah>  புத்திரரும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரும்  ஏகமாய்க்  கூட்டப்பட்டு,  தங்களுக்கு  ஒரே  அதிபதியை  ஏற்படுத்தி,  தேசத்திலிருந்து  புறப்பட்டு  வருவார்கள்;  யெஸ்ரயேலின்<Jezreel>  நாள்  பெரிதாயிருக்கும்.  {Hos  1:11}

 

உங்கள்  சகோதரரைப்பார்த்து  அம்மீ<Ammi>  என்றும்,  உங்கள்  சகோதரிகளைப்பார்த்து  ருகாமா<Ruhamah>  என்றும்  சொல்லுங்கள்.  {Hos  2:1}

 

உங்கள்  தாயோடே  வழக்காடுங்கள்;  அவள்  எனக்கு  மனைவியுமல்ல,  நான்  அவளுக்குப்  புருஷனுமல்ல;  அவள்  தன்  வேசித்தனங்களைத்  தன்  முகத்தினின்றும்,  தன்  விபசாரங்களைத்  தன்  ஸ்தனங்களின்  நடுவினின்றும்  விலக்கிப்போடக்கடவள்.  {Hos  2:2}

 

இல்லாவிட்டால்  நான்  அவளை  நிர்வாணமாக  உரிந்து,  அவள்  பிறந்தநாளில்  இருந்தவண்ணமாக  அவளை  நிறுத்தி,  அவளை  அந்தரவெளியைப்போலாக்கி,  அவளை  வறண்டபூமியைப்போல்  விட்டு,  அவளைத்  தாகத்தால்  சாகப்பண்ணுவேன்;  {Hos  2:3}

 

அவளுடைய  பிள்ளைகள்  சோரப்பிள்ளைகளாகையால்  அவர்களுக்கு  இரங்காதிருப்பேன்.  {Hos  2:4}

 

அவர்களுடைய  தாய்  சோரம்போனாள்,  அவர்களைக்  கர்ப்பந்தரித்தவள்  இலச்சையான  காரியங்களைச்  செய்தாள்;  அப்பத்தையும்,  தண்ணீரையும்,  ஆட்டுமயிரையும்,  பஞ்சையும்,  எண்ணெயையும்,  பானங்களையும்  கொடுத்துவருகிற  என்  நேசர்களைப்  பின்பற்றிப்போவேன்  என்றாள்.  {Hos  2:5}

 

ஆகையால்,  இதோ,  நான்  உன்  வழியை  முள்ளுகளினால்  அடைப்பேன்;  அவள்  தன்  பாதைகளைக்  கண்டுபிடிக்கக்  கூடாதபடிக்கு  மதிலை  எழுப்புவேன்.  {Hos  2:6}

 

அவள்  தன்  நேசர்களைப்  பின்தொடர்ந்தும்  அவர்களைச்  சேருவதில்லை,  அவர்களைத்  தேடியும்  கண்டுபிடிப்பதில்லை;  அப்பொழுது  அவள்:  நான்  என்  முந்தின  புருஷனிடத்துக்குத்  திரும்பிப்போவேன்;  இப்பொழுது  இருக்கிறதைப்பார்க்கிலும்  அப்பொழுது  எனக்கு  நன்மையாயிருந்தது  என்பாள்.  {Hos  2:7}

 

தனக்கு  நான்  தானியத்தையும்  திராட்சரசத்தையும்  எண்ணெயையும்  கொடுத்தவரென்றும்,  தனக்கு  நான்  வெள்ளியையும்  பொன்னையும்  பெருகப்பண்ணினவரென்றும்  அவள்  அறியாமற்போனாள்;  அவைகளை  அவர்கள்  பாகாலுடையதாக்கினார்கள்<Baal>.  {Hos  2:8}

 

ஆதலால்  நான்  என்  தானியத்தை  அதின்  காலத்திலும்,  என்  திராட்சரசத்தை  அதின்  காலத்திலும்  திரும்ப  எடுத்துக்கொண்டு,  அவளுடைய  நிர்வாணத்தை  மூடுகிறதற்கு  நான்  கொடுத்திருந்த  ஆட்டுமயிரையும்  சணலையும்  திரும்பப்  பிடுங்கிக்கொள்ளுவேன்.  {Hos  2:9}

 

இப்போதும்  அவளுடைய  நேசர்களின்  கண்களுக்கு  முன்பாக  அவளுடைய  அவலட்சணத்தை  வெளிப்படுத்துவேன்;  ஒருவரும்  அவளை  என்  கைக்கு  நீங்கலாக்கி  விடுவிப்பதில்லை.  {Hos  2:10}

 

அவளுடைய  எல்லா  மகிழ்ச்சியையும்,  அவளுடைய  பண்டிகைகளையும்,  அவளுடைய  மாதப்பிறப்புகளையும்,  அவளுடைய  ஓய்வுநாட்களையும்,  சபைகூடுகிற  அவளுடைய  எல்லா  ஆசரிப்புகளையும்  ஒழியப்பண்ணுவேன்.  {Hos  2:11}

 

என்  நேசர்கள்  எனக்குக்  கொடுத்த  பணையம்  என்று  அவள்  சொன்ன  அவளுடைய  திராட்சச்செடிகளையும்,  அவளுடைய  அத்திமரங்களையும்  நான்  பாழாக்கி,  அவைகளைக்  காடாய்ப்போகப்பண்ணுவேன்;  காட்டுமிருகங்கள்  அவைகளைத்  தின்னும்.  {Hos  2:12}

 

அவள்  பாகால்களுக்குத்<Baalim>  தூபங்காட்டி,  தன்  நெற்றிப்பட்டங்களினாலும்  தன்  ஆபரணங்களினாலும்  தன்னைச்  சிங்காரித்துக்கொண்டு,  தன்  நேசரைப்  பின்தொடர்ந்து,  என்னை  மறந்துபோன  நாட்களினிமித்தம்  அவளை  விசாரிப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hos  2:13}

 

ஆயினும்,  இதோ,  நான்  அவளுக்கு  நயங்காட்டி,  அவளை  வனாந்தரத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  அவளோடே  பட்சமாய்ப்  பேசி,  {Hos  2:14}

 

அவ்விடத்திலிருந்து  அவளுக்கு  அவளுடைய  திராட்சத்தோட்டங்களையும்,  நம்பிக்கையின்  வாசலாக  ஆகோரின்<Achor>  பள்ளத்தாக்கையும்  கொடுப்பேன்;  அப்பொழுது  அவள்  அங்கே,  தன்  இளவயதின்  நாட்களிலும்  தான்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வந்த  நாளிலும்  பாடினதுபோல்  பாடுவாள்.  {Hos  2:15}

 

அக்காலத்தில்  நீ  என்னை  இனி  பாகாலி<Baali>  என்று  சொல்லாமல்,  ஈஷி<Ishi>  என்று  சொல்லுவாய்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  {Hos  2:16}

 

பாகால்களுடைய<Baalim>  நாமங்களை  அவள்  வாயிலிருந்து  அற்றுப்போகப்பண்ணுவேன்;  இனி  அவைகளின்  பேரைச்சொல்லி,  அவைகளை  நினைக்கிற  நினைப்பும்  இல்லாமற்போகும்.  {Hos  2:17}

 

அக்காலத்தில்  நான்  அவர்களுக்காகக்  காட்டு  மிருகங்களோடும்,  ஆகாயத்துப்  பறவைகளோடும்,  பூமியிலே  ஊரும்  பிராணிகளோடும்,  ஒரு  உடன்படிக்கைபண்ணி,  வில்லையும்  பட்டயத்தையும்  யுத்தத்தையும்  தேசத்திலே  இராதபடிக்கு  முறித்து,  அவர்களைச்  சுகமாய்ப்  படுத்துக்  கொண்டிருக்கப்பண்ணுவேன்.  {Hos  2:18}

 

நித்திய  விவாகத்துக்கென்று  உன்னை  எனக்கு  நியமித்துக்கொள்ளுவேன்;  நீதியும்  நியாயமும்  கிருபையும்  உருக்க  இரக்கமுமாய்  உன்னை  எனக்கு  நியமித்துக்கொள்ளுவேன்.  {Hos  2:19}

 

உண்மையாய்  உன்னை  எனக்கு  நியமித்துக்கொள்ளுவேன்;  நீ  கர்த்தரை  அறிந்துகொள்ளுவாய்.  {Hos  2:20}

 

அக்காலத்தில்  நான்  மறுமொழி  கொடுப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  வானங்களுக்கு  மறுமொழி  கொடுப்பேன்,  அவைகள்  பூமிக்கு  மறுமொழி  கொடுக்கும்.  {Hos  2:21}

 

பூமி  தானியத்துக்கும்  திராட்சரசத்துக்கும்  எண்ணெய்க்கும்  மறுமொழி  கொடுக்கும்,  இவைகள்  யெஸ்ரயேலுக்கும்<Jezreel>  மறுமொழி  கொடுக்கும்.  {Hos  2:22}

 

நான்  அவளை  எனக்கென்று  பூமியிலே  விதைத்து,  இரக்கம்  பெறாதிருந்தவளுக்கு  இரங்குவேன்;  என்  ஜனமல்லாதிருந்தவர்களை  நோக்கி  நீ  என்  ஜனமென்று  சொல்லுவேன்;  அவர்கள்  என்  தேவனே  என்பார்கள்  என்றார்.  {Hos  2:23}

 

பின்பு  கர்த்தர்  என்னை  நோக்கி:  அந்நிய  தேவர்களை  மதித்து,  திராட்சரசமுள்ள  பாத்திரங்களை  விரும்புகிறவர்களான  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்பேரில்  கர்த்தர்  வைத்திருக்கிற  அன்புக்கு  ஒப்பாக  நீ  இன்னும்  போய்,  தன்  நேசரால்  நேசிக்கப்பட்டவளும்,  விபசாரியுமான  ஒரு  ஸ்திரீயை  நேசித்துக்கொள்  என்று  சொன்னார்.  {Hos  3:1}

 

அப்பொழுது  நான்  அவளை  எனக்குப்  பதினைந்து  வெள்ளிக்காசுக்கும்,  ஒன்றரைக்கலம்  வாற்கோதுமைக்கும்  கொண்டு,  {Hos  3:2}

 

அவளை  நோக்கி:  நீ  வேசித்தனம்பண்ணாமலும்,  ஒருவனையும்  சேராமலும்  அநேகநாள்  எனக்காகக்  காத்திரு;  உனக்காக  நானும்  காத்திருப்பேன்  என்றேன்.  {Hos  3:3}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அநேகநாள்  ராஜா  இல்லாமலும்,  அதிபதி  இல்லாமலும்,  பலி  இல்லாமலும்,  சிலை  இல்லாமலும்,  ஏபோத்<ephod>  வஸ்திரம்  இல்லாமலும்,  தேராபீம்<teraphim>  இல்லாமலும்  இருப்பார்கள்.  {Hos  3:4}

 

பின்பு  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  திரும்பி,  தங்கள்  தேவனாகிய  கர்த்தரையும்,  தங்கள்  ராஜாவாகிய  தாவீதையும்<David>  தேடி,  கடைசிநாட்களில்  கர்த்தரையும்,  அவருடைய  தயவையும்  நாடி  அஞ்சிக்கையாய்  வருவார்கள்.  {Hos  3:5}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  தேசத்துக்  குடிகளோடே  கர்த்தருக்கு  வழக்கு  இருக்கிறது;  அதேனென்றால்  தேசத்திலே  உண்மையும்  இல்லை,  இரக்கமும்  இல்லை;  தேவனைப்பற்றிய  அறிவும்  இல்லை.  {Hos  4:1}

 

பொய்யாணையிட்டு,  பொய்சொல்லி,  கொலைசெய்து,  திருடி,  விபசாரம்பண்ணி,  மிஞ்சி  மிஞ்சிப்போகிறார்கள்;  இரத்தப்பழிகளோடே  இரத்தப்பழிகள்  சேருகிறது.  {Hos  4:2}

 

இதினிமித்தம்  தேசம்  புலம்பும்;  அதில்  குடியிருக்கிற  அனைவரோடுங்கூட  மிருகஜீவன்களும்  ஆகாயத்துப்  பறவைகளும்  தொய்ந்துபோகும்;  கடலின்  மச்சங்களும்  வாரிக்கொள்ளப்படும்.  {Hos  4:3}

 

ஆகிலும்  ஒருவனும்  நியாயத்தைக்  காண்பிக்கவும்,  ஒருவனும்  அவர்களைக்  கடிந்துகொள்ளவும்  கூடாது;  உன்  ஜனங்கள்  ஆசாரியனோடே  வழக்காடுகிறவர்களைப்போல  இருக்கிறார்கள்.  {Hos  4:4}

 

ஆகையால்  நீ  பகலிலே  இடறிவிழுவாய்;  இரவிலே  உன்னோடேகூடத்  தீர்க்கதரிசியும்  இடறிவிழுவான்;  உன்  தாயை  நான்  சங்காரம்பண்ணுவேன்.  {Hos  4:5}

 

என்  ஜனங்கள்  அறிவில்லாமையினால்  சங்காரமாகிறார்கள்;  நீ  அறிவை  வெறுத்தாய்,  ஆகையால்  நீ  என்  ஆசாரியனாயிராதபடிக்கு  நானும்  உன்னை  வெறுத்துவிடுவேன்;  நீ  உன்  தேவனுடைய  வேதத்தை  மறந்தாய்,  ஆகையால்  நானும்  உன்  பிள்ளைகளை  மறந்துவிடுவேன்.  {Hos  4:6}

 

அவர்கள்  எவ்வளவாய்ப்  பெருகினார்களோ,  அவ்வளவாய்  எனக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தார்கள்;  அவர்களுடைய  மகிமையை  இலச்சையாக  மாறப்பண்ணுவேன்.  {Hos  4:7}

 

அவர்கள்  என்  ஜனத்தின்  பாவத்தைத்  தின்று,  அவர்களுடைய  அக்கிரமத்தின்பேரில்  பசிதாகமாயிருக்கிறார்கள்.  {Hos  4:8}

 

ஆதலால்  ஜனங்களுக்கு  எப்படியோ  ஆசாரியனுக்கும்  அப்படியே;  அவர்கள்  வழிகளின்படி  நான்  அவர்களை  விசாரித்து,  அவர்கள்  கிரியைகளின்படி  அவர்களுக்குப்  பலனளிப்பேன்.  {Hos  4:9}

 

அவர்கள்  கர்த்தரை  மதியாமலிருக்கிறபடியினால்  அவர்கள்  தின்றாலும்  திருப்தியடையாதிருப்பார்கள்;  அவர்கள்  வேசித்தனம்பண்ணினாலும்  பலுகாதிருப்பார்கள்.  {Hos  4:10}

 

வேசித்தனமும்  திராட்சரசமும்  மதுபானமும்  இருதயத்தை  மயக்கும்.  {Hos  4:11}

 

என்  ஜனங்கள்  கட்டையினிடத்தில்  ஆலோசனை  கேட்கிறார்கள்;  அவர்களுடைய  கோல்  அவர்களுக்குச்  செய்தியை  அறிவிக்குமென்றிருக்கிறார்கள்;  வேசித்தன  ஆவி  அவர்களை  வழிதப்பித்  திரியப்பண்ணிற்று;  அவர்கள்  தங்கள்  தேவனுக்குக்  கீழ்ப்பட்டிராமல்  சோரமார்க்கம்  போனார்கள்.  {Hos  4:12}

 

அவர்கள்  மலையுச்சியில்  பலியிட்டு,  மேடுகளிலே  கர்வாலிமரங்களின்  கீழும்,  புன்னைமரங்களின்  கீழும்,  அரசமரங்களின்  கீழும்,  அவைகளின்  நிழல்  நல்லதென்று,  தூபங்காட்டுகிறார்கள்;  இதினிமித்தம்  உங்கள்  குமாரத்திகள்  வேசித்தனமும்,  உங்கள்  மருமக்கள்மார்  விபசாரமும்  செய்கிறார்கள்.  {Hos  4:13}

 

உங்கள்  குமாரத்திகள்  வேசித்தனம்  செய்கிறதினிமித்தமும்,  உங்கள்  மருமக்கள்மார்  விபசாரம்  செய்கிறதினிமித்தமும்,  நான்  அவர்களைத்  தண்டியாமலிருப்பேனோ?  அவர்கள்  விலகி  வேசிகளோடே  கூடப்போய்த்  தாசிகளோடே  பலியிடுகிறார்கள்;  உணர்வில்லாத  ஜனங்கள்  அதினால்  சிக்குண்டு  விழுவார்கள்.  {Hos  4:14}

 

இஸ்ரவேலே<Israel>,  நீ  சோரம்போனாலும்,  யூதாவாகிலும்<Judah>  அந்தப்  பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக;  கில்காலுக்கு<Gilgal>  வராமலும்,  பெத்தாவேனுக்குப்<Bethaven>  போகாமலும்  கர்த்தருடைய  ஜீவனாணை  என்று  ஆணையிடாமலும்  இருப்பீர்களாக.  {Hos  4:15}

 

இஸ்ரவேல்<Israel>  அடங்காத  கிடாரியைப்போல்  அடங்காதிருக்கிறது;  இப்போது  கர்த்தர்  அவர்களை  விஸ்தாரமான  வெளியிலே  ஆட்டுக்குட்டியைப்போல்  மேய்ந்து  அலையப்பண்ணுவார்.  {Hos  4:16}

 

எப்பிராயீம்<Ephraim>  விக்கிரகங்களோடு  இணைந்திருக்கிறான்,  அவனைப்  போகவிடு.  {Hos  4:17}

 

அவர்களுடைய  மதுபானம்  புளித்தது,  அவர்கள்  எப்போதும்  சோரம்போகிறார்கள்;  அவர்களுடைய  அதிபதிகள்  தாருங்களென்று  இலச்சையானதை  நாடுகிறார்கள்.  {Hos  4:18}

 

காற்று  அவர்களைத்  தன்  செட்டைகளில்  இறுகப்  பிடிக்கும்;  அவர்கள்  தங்கள்  பலிகளால்  வெட்கப்படுவார்கள்.  {Hos  4:19}

 

ஆசாரியர்களே,  இதைக்  கேளுங்கள்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  கவனியுங்கள்;  ராஜாவின்  வீட்டாரே,  செவிகொடுங்கள்;  இந்த  நியாய  விசாரிப்பு  உங்கள்மேல்  செல்லும்;  நீங்கள்  மிஸ்பாவில்<Mizpah>  கண்ணியும்  தாபோரின்மேல்<Tabor>  விரிக்கப்பட்ட  வலையுமானீர்கள்.  {Hos  5:1}

 

நெறிதவறினவர்கள்  மிகுதியும்  வதை  செய்கிறார்கள்;  அவர்கள்  எல்லாரையும்  நான்  தண்டிப்பேன்.  {Hos  5:2}

 

எப்பிராயீமை<Ephraim>  நான்  அறிவேன்,  இஸ்ரவேல்<Israel>  எனக்கு  மறைவானதல்ல;  எப்பிராயீமே<Ephraim>,  இப்போது  நீ  சோரம்போனாயே,  இஸ்ரவேல்<Israel>  தீட்டுப்பட்டதே.  {Hos  5:3}

 

அவர்கள்  தங்கள்  தேவனிடத்துக்குத்  திரும்புவதற்குத்  தங்கள்  கிரியைகளைச்  சீர்திருத்தமாட்டார்கள்,  வேசித்தன  ஆவி  அவர்கள்  உள்ளத்தில்  இருக்கிறது;  கர்த்தரை  அறியார்கள்.  {Hos  5:4}

 

இஸ்ரவேலின்<Israel>  அகந்தை  அவர்கள்  முகத்துக்கு  முன்பாகச்  சாட்சியிடுகிறது;  ஆகையால்  இஸ்ரவேலும்<Israel>  எப்பிராயீமும்<Ephraim>  தங்கள்  அக்கிரமத்தினால்  இடறுண்டு  விழுவார்கள்;  அவர்களோடே  யூதாவும்<Judah>  இடறுண்டு  விழுவான்.  {Hos  5:5}

 

அவர்கள்  கர்த்தரைத்  தேடும்படி  தங்கள்  ஆடுகளோடும்  தங்கள்  மாடுகளோடும்  போவார்கள்;  அவரைக்  காணமாட்டார்கள்;  அவர்  அவர்களை  விட்டு  விலகினார்.  {Hos  5:6}

 

கர்த்தருக்கு  விரோதமாக  துரோகம்பண்ணினார்கள்;  அந்நியபிள்ளைகளைப்  பெற்றார்கள்;  இப்போதும்  ஒரு  மாதத்துக்குள்ளாக  அவர்கள்  தங்கள்  பங்குகளோடே  பட்சிக்கப்படுவார்கள்.  {Hos  5:7}

 

கிபியாவிலே<Gibeah>  எக்காளத்தையும்,  ராமாவிலே<Ramah>  பூரிகையையும்  ஊதுங்கள்;  பெத்தாவேனிலே<Bethaven>  கதறுங்கள்;  பென்யமீனே<Benjamin>  உன்னைப்  பின்தொடருகிறார்கள்.  {Hos  5:8}

 

தண்டிப்பின்  நாளிலே  எப்பிராயீம்<Ephraim>  பாழாவான்;  நிச்சயமாய்  வரப்போகிறதை  இஸ்ரவேலின்<Israel>  கோத்திரங்களுக்குள்ளே  அறிவிக்கிறேன்.  {Hos  5:9}

 

யூதாவின்<Judah>  பிரபுக்கள்  எல்லைகளை  ஒதுக்குகிறவர்களுக்கு  ஒப்பானார்கள்;  அவர்கள்மேல்  என்  உக்கிரகோபத்தைத்  தண்ணீரைப்போல  ஊற்றுவேன்.  {Hos  5:10}

 

எப்பிராயீம்<Ephraim>  தகாத  கற்பனையை  மனதாரப்  பின்பற்றிப்போனபடியால்  அவன்  ஒடுங்குண்டு,  நியாயவிசாரணையில்  நொறுக்கப்பட்டுப்போகிறான்.  {Hos  5:11}

 

நான்  எப்பிராயீமுக்குப்<Ephraim>  பொட்டரிப்பைப்போலவும்,  யூதாவின்<Judah>  வீட்டுக்கு  உளுப்பைப்போலவும்  இருப்பேன்.  {Hos  5:12}

 

எப்பிராயீம்<Ephraim>  தன்  வியாதியையும்,  யூதா<Judah>  தன்  காயத்தையும்  கண்டபோது,  எப்பிராயீம்<Ephraim>  அசீரியனண்டைக்குப்போய்<Assyrian>  யாரேப்<Jareb>  ராஜாவினிடத்தில்  ஆள்  அனுப்பினான்;  ஆனாலும்  உங்களைக்  குணமாக்கவும்  உங்களில்  இருக்கிற  காயத்தை  ஆற்றவும்  அவனால்  கூடாமற்போயிற்று.  {Hos  5:13}

 

நான்  எப்பிராயீமுக்குச்<Ephraim>  சிங்கம்போலவும்,  யூதாவின்<Judah>  வம்சத்தாருக்குப்  பாலசிங்கம்போலவும்  இருப்பேன்;  நான்  நானே  பீறிவிட்டுப்  போய்விடுவேன்;  தப்புவிப்பார்  இல்லாமல்  எடுத்துக்கொண்டுபோவேன்.  {Hos  5:14}

 

அவர்கள்  தங்கள்  குற்றங்களை  உணர்ந்து,  என்  முகத்தைத்  தேடுமட்டும்  நான்  என்  ஸ்தானத்துக்குத்  திரும்பிப்  போய்விடுவேன்;  தங்கள்  ஆபத்தில்  என்னைக்  கருத்தாய்த்  தேடுவார்கள்.  {Hos  5:15}

 

கர்த்தரிடத்தில்  திரும்புவோம்  வாருங்கள்;  நம்மைப்  பீறினார்,  அவரே  நம்மைக்  குணமாக்குவார்;  நம்மை  அடித்தார்,  அவரே  நம்முடைய  காயங்களைக்  கட்டுவார்.  {Hos  6:1}

 

இரண்டு  நாளுக்குப்பின்பு  அவர்  நம்மை  உயிர்ப்பிப்பார்;  மூன்றாம்  நாளில்  நம்மை  எழுப்புவார்;  அப்பொழுது  நாம்  அவருடைய  சமுகத்தில்  பிழைத்திருப்போம்.  {Hos  6:2}

 

அப்பொழுது  நாம்  அறிவடைந்து,  கர்த்தரை  அறியும்படி  தொடர்ந்து  போவோம்;  அவருடைய  புறப்படுதல்  அருணோதயம்போல  ஆயத்தமாயிருக்கிறது;  அவர்  மழையைப்போலவும்,  பூமியின்மேல்  பெய்யும்  முன்மாரி  பின்மாரியைப்போலவும்  நம்மிடத்தில்  வருவார்.  {Hos  6:3}

 

எப்பிராயீமே<Ephraim>,  உனக்கு  என்ன  செய்வேன்?  யூதாவே<Judah>,  உனக்கு  என்ன  செய்வேன்?  உங்கள்  பக்தி  காலையில்  காணும்  மேகத்தைப்போலவும்,  விடியற்காலையில்  தோன்றும்  பனியைப்போலவும்  ஒழிந்துபோகிறது.  {Hos  6:4}

 

ஆகையால்  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  அவர்களை  வெட்டினேன்;  என்  வாய்மொழிகளைக்கொண்டு  அவர்களை  அதம்பண்ணினேன்;  உன்மேல்  வரும்  தண்டனைகள்  வெளிச்சத்தைப்போல்  வெளிப்படும்.  {Hos  6:5}

 

பலியை  அல்ல  இரக்கத்தையும்,  தகனபலிகளைப்பார்க்கிலும்  தேவனை  அறிகிற  அறிவையும்,  விரும்புகிறேன்.  {Hos  6:6}

 

அவர்களோ  ஆதாமைப்போல்<Adam>  உடன்படிக்கையை  மீறி,  அங்கே  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணினார்கள்.  {Hos  6:7}

 

கீலேயாத்<Gilead>  அக்கிரமம்  செய்கிறவர்களின்  பட்டணம்;  அது  இரத்தக்காலடிகளால்  மிதிக்கப்பட்டிருக்கிறது.  {Hos  6:8}

 

பறிகாரரின்  கூட்டங்கள்  ஒருவனுக்குக்  காத்திருக்கிறதுபோல,  சீகேமுக்குப்<Shechem>  போகிற  வழியிலே  கொலைசெய்கிற  ஆசாரியரின்  கூட்டம்  காத்திருக்கிறது;  தோஷமான  காரியங்களையே  செய்கிறார்கள்.  {Hos  6:9}

 

பயங்கரமான  காரியத்தை  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரில்  கண்டேன்;  அங்கே  எப்பிராயீமின்<Ephraim>  வேசித்தனம்  உண்டு;  இஸ்ரவேல்<Israel>  தீட்டுப்பட்டுப்போயிற்று.  {Hos  6:10}

 

யூதாவே<Judah>,  உனக்கு  ஒரு  அறுப்புக்காலம்  நியமிக்கப்பட்டிருக்கிறது.  {Hos  6:11}

 

நான்  என்  ஜனத்தின்  சிறையிருப்பைத்  திருப்பும்போதும்,  நான்  இஸ்ரவேலை<Israel>  குணமாக்க  விரும்பும்போதும்,  எப்பிராயீமின்<Ephraim>  அக்கிரமமும்  சமாரியாவின்<Samaria>  பொல்லாப்புகளும்  வெளிப்படுத்தப்படும்;  அவர்கள்  வஞ்சனை  செய்கிறார்கள்;  திருடன்  உள்ளே  வருகிறான்;  வெளியே  பறிகாரரின்  கூட்டத்தார்  கொள்ளையிடுகிறார்கள்.  {Hos  7:1}

 

அவர்கள்  பொல்லாப்பையெல்லாம்  நான்  நினைவில்  வைத்திருக்கிறேன்  என்று  அவர்கள்  தங்கள்  இருதயத்தில்  சிந்திக்கிறதில்லை;  இப்போதும்  அவர்களுடைய  கிரியைகள்  அவர்களைச்  சூழ்ந்துகொண்டது;  அவைகள்  என்  முகத்துக்கு  முன்  இருக்கிறது.  {Hos  7:2}

 

ராஜாவைத்  தங்கள்  பொல்லாப்பினாலும்,  அதிபதிகளைத்  தங்கள்  பொய்களினாலும்  சந்தோஷப்படுத்துகிறார்கள்.  {Hos  7:3}

 

அவர்கள்  எல்லாரும்  விபசாரக்கள்ளர்;  அப்பஞ்சுடுகிறவன்  எரிக்கும்  அடுப்பைப்போல்  இருக்கிறார்கள்;  அவன்  மாவைப்  பிசைந்ததுமுதல்  அது  உப்பிப்போகுமட்டும்,  அனலை  மூட்டாமல்  ஓய்ந்திருக்கிறான்.  {Hos  7:4}

 

நம்முடைய  ராஜாவின்  நாளென்று  சொல்லி,  அதிபதிகள்  திராட்சரசத்  துருத்திகளால்  அவனுக்கு  வியாதியுண்டாக்குகிறார்கள்;  சரசக்காரரோடேகூட  அவன்  தன்  கையை  நீட்டுகிறான்.  {Hos  7:5}

 

அவர்கள்  பதிவிருக்கும்போது,  தங்கள்  இருதயத்தை  அடுப்பைப்போல்  ஆயத்தப்படுத்துகிறார்கள்;  அவர்களில்  அடுப்புமூட்டுகிறவன்  இராமுழுதும்  தூங்கினாலும்,  காலமேயோவென்றால்  அது  ஜுவாலிக்கிற  அக்கினியாய்  எரியும்.  {Hos  7:6}

 

அவர்கள்  எல்லாரும்  அடுப்பைப்போல  அனலாகி,  தங்கள்  நியாயாதிபதிகளைப்  பட்சித்தார்கள்;  அவர்களுடைய  ராஜாக்கள்  எல்லாரும்  விழுந்தார்கள்;  அவர்களில்  என்னை  நோக்கிக்  கூப்பிடுகிறவன்  ஒருவனும்  இல்லை.  {Hos  7:7}

 

எப்பிராயீம்<Ephraim>  அந்நியஜனங்களோடே  கலந்திருக்கிறான்;  எப்பிராயீம்<Ephraim>  திருப்பிப்போடாத  அப்பம்.  {Hos  7:8}

 

அந்நியர்  அவனுடைய  பலத்தைத்  தின்கிறார்கள்;  அவனோ  அதை  அறியான்;  நரைமயிரும்  அவனில்  தெளித்திருக்கிறது,  அவனோ  அதை  அறியாதிருக்கிறான்.  {Hos  7:9}

 

இஸ்ரவேலின்<Israel>  அகந்தை  அவர்கள்  முகத்துக்கு  முன்பாகச்  சாட்சியிட்டாலும்,  அவர்கள்  தங்கள்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  திரும்பாமலும்,  இவை  எல்லாவற்றிலும்  அவரைத்  தேடாமலும்  இருக்கிறார்கள்.  {Hos  7:10}

 

எப்பிராயீம்<Ephraim>  பேதையான  புறாவைப்போல்  இருக்கிறான்,  அவனுக்குப்  புத்தியில்லை;  எகிப்தியனைக்<Egypt>  கூப்பிடுகிறார்கள்;  அசீரியனிடத்துக்கும்<Assyria>  போகிறார்கள்.  {Hos  7:11}

 

அவர்கள்  போகும்போது,  என்  வலையை  அவர்கள்மேல்  வீசுவேன்;  அவர்களை  ஆகாயத்துப்  பறவைகளைப்போலக்  கீழே  விழப்பண்ணுவேன்;  அவர்களுடைய  சபையில்  கேள்வியானதின்படியே  அவர்களைத்  தண்டிப்பேன்.  {Hos  7:12}

 

அவர்கள்  என்னைவிட்டு  அலைந்து  திரிகிறபடியினால்  அவர்களுக்கு  ஐயோ!  அவர்களுக்குக்  கேடுவரும்;  எனக்கு  விரோதமாக  இரண்டகம்பண்ணினார்கள்;  நான்  அவர்களை  மீட்டிருந்தும்,  அவர்கள்  எனக்கு  விரோதமாகப்  பொய்பேசுகிறார்கள்.  {Hos  7:13}

 

அவர்கள்  தங்கள்  படுக்கைகளில்  அலறுகிறபோது,  தங்கள்  இருதயத்தில்  என்னை  நோக்கிக்  கூப்பிடுகிறதில்லை;  அவர்கள்  தானியத்துக்காகவும்  திராட்சரசத்துக்காகவும்  கூடுகிறார்கள்;  என்னை  வெறுத்து  விலகிப்போகிறார்கள்.  {Hos  7:14}

 

நான்  அவர்களைத்  தண்டித்தேன்;  அவர்களுடைய  புயங்கள்  திரும்பப்  பலப்படவும்பண்ணினேன்;  ஆகிலும்  எனக்கு  விரோதமாகப்  பொல்லாப்பு  நினைக்கிறார்கள்.  {Hos  7:15}

 

திரும்புகிறார்கள்,  ஆனாலும்  உன்னதமானவரிடத்திற்கு  அல்ல;  மோசம்போக்குகிற  வில்லைப்போலிருக்கிறார்கள்;  அவர்களுடைய  அதிபதிகள்  தங்கள்  நாவினுடைய  உக்கிரத்தினிமித்தம்  பட்டயத்தால்  விழுவார்கள்;  இதுவே  எகிப்துதேசத்தினிமித்தம்<Egypt>  அவர்களுக்கு  வரும்  நிந்தை.  {Hos  7:16}

 

உன்  வாயிலே  எக்காளத்தை  வை;  அவர்கள்  என்  உடன்படிக்கையை  மீறி,  என்  நியாயப்பிரமாணத்துக்கு  விரோதமாகத்  துரோகம்பண்ணினபடியினால்,  கர்த்தருடைய  வீட்டின்மேல்  சத்துரு  கழுகைப்போல்  பறந்துவருகிறான்.  {Hos  8:1}

 

எங்கள்  தேவனே,  உம்மை  அறிந்திருக்கிறோம்  என்று  சொல்லி  இஸ்ரவேலர்<Israel>  கூப்பிடுவார்கள்.  {Hos  8:2}

 

ஆனாலும்  இஸ்ரவேலர்<Israel>  நன்மையை  வெறுத்தார்கள்;  சத்துரு  அவர்களைத்  தொடருவான்.  {Hos  8:3}

 

அவர்கள்  ராஜாக்களை  ஏற்படுத்திக்கொண்டார்கள்,  ஆனாலும்  என்னாலே  அல்ல;  அதிபதிகளை  வைத்துக்கொண்டார்கள்,  ஆனாலும்  நான்  அறியேன்;  அவர்கள்  வேரறுப்புண்டு  போகும்படித்  தங்கள்  வெள்ளியினாலும்  தங்கள்  பொன்னினாலும்  தங்களுக்கு  விக்கிரகங்களைச்  செய்வித்தார்கள்.  {Hos  8:4}

 

சமாரியாவே<Samaria>,  உன்  கன்றுக்குட்டி  உன்னை  வெறுத்துவிடுகிறது;  என்  கோபம்  அவர்கள்மேல்  மூண்டது;  எதுவரைக்கும்  சுத்தாங்கம்  அடையமாட்டாதிருப்பார்கள்?  {Hos  8:5}

 

அதுவும்  இஸ்ரவேலருடைய<Israel>  செய்கையே;  தட்டான்  அதைச்  செய்தான்,  ஆதலால்  அது  தேவன்  அல்லவே,  சமாரியாவின்<Samaria>  கன்றுக்குட்டி  துண்டுதுண்டாய்ப்  போகும்.  {Hos  8:6}

 

அவர்கள்  காற்றை  விதைத்து,  சூறைக்காற்றை  அறுப்பார்கள்;  விளைச்சல்  அவர்களுக்கு  இல்லை;  கதிர்  மாவைக்  கொடுக்கமாட்டாது;  கொடுத்தாலும்  அந்நியர்  அதை  விழுங்குவார்கள்.  {Hos  8:7}

 

இஸ்ரவேலர்<Israel>  விழுங்கப்படுகிறார்கள்;  அவர்கள்  இனிப்  புறஜாதிகளுக்குள்ளே  விரும்பப்படாத  பாத்திரத்தைப்போல்  இருப்பார்கள்.  {Hos  8:8}

 

அவர்கள்  தனித்துத்  திரிகிற  காட்டுக்கழுதையைப்போல்  அசீரியரண்டைக்குப்<Assyria>  போனார்கள்;  எப்பிராயீமர்<Ephraim>  நேசரைக்  கூலிக்குப்  பொருத்திக்கொண்டார்கள்.  {Hos  8:9}

 

அவர்கள்  புறஜாதியாரைக்  கூலிக்குப்  பொருத்திக்கொண்டாலும்,  இப்பொழுது  நான்  அவர்களைக்  கூட்டுவேன்;  அதிபதிகளின்  ராஜா  சுமத்தும்  சுமையினால்  அவர்கள்  கொஞ்சக்காலத்துக்குள்ளே  அகப்படுவார்கள்.  {Hos  8:10}

 

எப்பிராயீமர்<Ephraim>  பாவஞ்செய்வதற்கேதுவாய்ப்  பலிபீடங்களைப்  பெருகப்பண்ணினார்கள்;  ஆதலால்  பலிபீடங்களே  அவர்கள்  பாவஞ்செய்வதற்கு  ஏதுவாகும்.  {Hos  8:11}

 

என்  வேதத்தின்  மகத்துவங்களை  அவர்களுக்கு  எழுதிக்கொடுத்தேன்;  அவைகளை  அந்நியகாரியமாக  எண்ணினார்கள்.  {Hos  8:12}

 

எனக்குச்  செலுத்தும்  பலிகளின்  மாம்சத்தை  அவர்கள்  பலியிட்டுப்  புசிக்கிறார்கள்;  கர்த்தர்  அவர்கள்மேல்  பிரியமாயிரார்;  அவர்களுடைய  அக்கிரமத்தை  அவர்  நினைத்து,  அவர்கள்  பாவத்தை  விசாரிக்கும்போதோவெனில்,  அவர்கள்  எகிப்துக்குத்<Egypt>  திரும்பிப்போவார்கள்.  {Hos  8:13}

 

இஸ்ரவேல்<Israel>  தன்னை  உண்டாக்கினவரை  மறந்து  கோவில்களைக்  கட்டுகிறான்;  யூதா<Judah>  அரணான  பட்டணங்களைப்  பெருகப்பண்ணுகிறான்;  ஆனாலும்  நான்  அதின்  நகரங்களில்  அக்கினியை  வரப்பண்ணுவேன்;  அது  அவைகளின்  கோவில்களைப்  பட்சிக்கும்.  {Hos  8:14}

 

இஸ்ரவேலே<Israel>,  மகிழ்ச்சியாயிராதே;  மற்ற  ஜனங்களைப்போல்  களிகூராதே;  உன்  தேவனைவிட்டு  நீ  சோரம்போனாய்;  தானியம்  போரடிக்கிற  சகல  களங்களிலும்  பணையத்தை  நாடுகிறாய்.  {Hos  9:1}

 

தானியக்களமும்  திராட்சத்தொட்டியும்  அவர்களைப்  பிழைப்பூட்டுவதில்லை;  அவர்களுக்குத்  திராட்சரசம்  ஒழிந்துபோகும்.  {Hos  9:2}

 

அவர்கள்  கர்த்தருடைய  தேசத்தில்  குடியிருப்பதில்லை;  எப்பிராயீமர்<Ephraim>  திரும்ப  எகிப்துக்குப்<Egypt>  போவார்கள்;  அசீரியாவில்<Assyria>  தீட்டுள்ளதைப்  புசிப்பார்கள்.  {Hos  9:3}

 

அவர்கள்  கர்த்தருக்குத்  திராட்சரசத்தின்  பானபலியை  வார்ப்பதுமில்லை,  அவருக்கு  அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை;  அவர்களுடைய  பலிகள்  அவர்களுக்குத்  துக்கங்கொண்டாடுகிறவர்களின்  அப்பத்தைபோல  இருக்கும்;  அதைப்  புசிக்கிற  யாவரும்  தீட்டுப்படுவார்கள்;  அவர்களுடைய  அப்பம்  அவர்களுக்கேயாகும்,  அது  கர்த்தருடைய  ஆலயத்தில்  வருவதில்லை.  {Hos  9:4}

 

ஆசரிப்புநாளிலும்,  கர்த்தருடைய  பண்டிகைநாளிலும்  என்னசெய்வீர்கள்?  {Hos  9:5}

 

இதோ,  அவர்கள்  பாழ்க்கடிப்புக்குத்  தப்பும்படி  போய்விட்டார்கள்;  எகிப்து<Egypt>  அவர்களைச்  சேர்த்துக்கொள்ளும்,  மோப்<Moab//Memphis>  பட்டணம்  அவர்களை  அடக்கம்பண்ணும்;  அவர்களுடைய  வெள்ளியிருந்த  விருப்பமான  இடங்கள்  காஞ்சொறிகளுக்குச்  சுதந்தரமாகும்;  அவர்களுடைய  வாசஸ்தலங்களில்  முட்செடிகள்  முளைக்கும்.  {Hos  9:6}

 

விசாரிப்பின்  நாட்கள்  வரும்,  நீதி  சரிக்கட்டும்  நாட்கள்  வரும்  என்பதை  இஸ்ரவேலர்<Israel>  அறிந்துகொள்வார்கள்;  உன்  மிகுதியான  அக்கிரமத்தினாலேயும்,  மிகுதியான  பகையினாலேயும்  தீர்க்கதரிசிகள்  மூடரும்,  ஆவியைப்  பெற்ற  மனுஷர்கள்  பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.  {Hos  9:7}

 

எப்பிராயீமின்<Ephraim>  காவற்காரர்  என்  தேவனோடு  எதிர்த்துநிற்கிறார்கள்;  தீர்க்கதரிசி  தன்  வழிகளிலெல்லாம்  குருவிபிடிக்கிறவனுடைய  கண்ணியாகவும்,  தன்  தேவனுடைய  ஆலயத்திலே  பகையாளியாகவும்  இருக்கிறான்.  {Hos  9:8}

 

கிபியாவின்<Gibeah>  நாட்களில்  நடந்ததுபோல,  அவர்கள்  தங்களை  மிகவும்  கெடுத்துக்கொண்டார்கள்;  அவர்களுடைய  அக்கிரமத்தை  அவர்  நினைப்பார்,  அவர்களுடைய  பாவங்களை  விசாரிப்பார்.  {Hos  9:9}

 

வனாந்தரத்தில்  திராட்சக்குலைகளைக்  கண்டுபிடிப்பதுபோல  இஸ்ரவேலைக்<Israel>  கண்டுபிடித்தேன்;  அத்திமரத்தில்  முதல்தரம்  பழுத்த  கனிகளைப்போல  உங்கள்  பிதாக்களைக்  கண்டுபிடித்தேன்;  ஆனாலும்  அவர்கள்  பாகால்பேயோர்<Baalpeor>  அண்டைக்குப்போய்,  இலச்சையானதற்குத்  தங்களை  ஒப்புவித்து,  தாங்கள்  நேசித்தவைகளைப்  போலத்  தாங்களும்  அருவருப்புள்ளவர்களானார்கள்.  {Hos  9:10}

 

எப்பிராயீமின்<Ephraim>  மகிமை  ஒரு  பறவையைப்போல்  பறந்துபோம்;  அது  பிறப்பதுமில்லை,  வயிற்றிலிருப்பதுமில்லை,  கர்ப்பந்தரிப்பதுமில்லை.  {Hos  9:11}

 

அவர்கள்  தங்கள்  பிள்ளைகளை  வளர்த்தாலும்,  அவர்களுக்கு  மனுஷர்  இராதபடிக்கு  அவர்களைப்  பிள்ளைகள்  அற்றவர்களாக்குவேன்;  நான்  அவர்களை  விட்டுப்போகையில்  அவர்களுக்கு  ஐயோ!  {Hos  9:12}

 

நான்  எப்பிராயீமைத்<Ephraim>  தீருவின்<Tyrus>  திசைமட்டும்  இருக்கிறதைப்  பார்க்கிறபோது,  அது  நல்ல  வசதியான  ஸ்தலத்திலே  நாட்டப்பட்டிருக்கிறது;  ஆனாலும்  எப்பிராயீமர்<Ephraim>  தங்கள்  குமாரரைக்  கொலைசெய்கிறவனிடத்தில்  வெளியே  கொண்டுபோய்  விடுவார்கள்.  {Hos  9:13}

 

கர்த்தாவே,  நீர்  அவர்களுக்குக்  கொடுப்பதைக்  கொடும்;  அவர்களுக்கு  விழுந்துபோகிற  கர்ப்பத்தையும்  பாலற்ற  முலைகளையும்  கொடும்.  {Hos  9:14}

 

அவர்களுடைய  பொல்லாப்பெல்லாம்  கில்காலிலே<Gilgal>  நடக்கும்;  அங்கே  நான்  அவர்களை  வெறுத்தேன்;  அவர்களுடைய  பொல்லாப்பினிமித்தம்  அவர்களை  நான்  என்  சமுகத்தைவிட்டுத்  துரத்துவேன்;  இனி  அவர்களை  நேசிக்கமாட்டேன்;  அவர்களுடைய  அதிபதிகள்  எல்லாரும்  துரோகிகள்.  {Hos  9:15}

 

எப்பிராயீமர்<Ephraim>  வெட்டுண்டுபோனார்கள்;  அவர்கள்  வேர்  உலர்ந்துபோயிற்று,  கனிகொடுக்கமாட்டார்கள்;  அவர்கள்  பிள்ளைகளைப்  பெற்றாலும்,  அவர்களுடைய  கர்ப்பத்தின்  பிரியமான  கனிகளை  அதம்பண்ணுவேன்.  {Hos  9:16}

 

அவர்கள்  அவருக்குச்  செவிகொடாமற்போனபடியால்  என்  தேவன்  அவர்களை  வெறுத்துவிடுவார்;  அவர்கள்  அந்நியஜாதிகளுக்குள்ளே  அலைந்து  திரிவார்கள்.  {Hos  9:17}

 

இஸ்ரவேல்<Israel>  பலனற்ற  திராட்சச்செடி,  அது  தனக்குத்தானே  கனிகொடுக்கிறது;  அவன்  தன்  கனியின்  திரளுக்குச்  சரியாய்ப்  பலிபீடங்களைத்  திரளாக்குகிறான்;  தங்கள்  தேசத்தின்  செழிப்புக்குச்  சரியாய்ச்  சிறப்பான  சிலைகளைச்  செய்கிறார்கள்.  {Hos  10:1}

 

அவர்கள்  இருதயம்  பிரிக்கப்பட்டிருக்கிறது;  இப்போதும்  குற்றஞ்சுமத்தப்படுவார்கள்;  அவர்கள்  பலிபீடங்களை  இடித்து,  அவர்கள்  சிலைகளை  நாசமாக்குவார்.  {Hos  10:2}

 

நாம்  கர்த்தருக்குப்  பயப்படாமற்போனபடியினால்  நமக்கு  ராஜா  இல்லை;  ராஜா  இருந்தாலும்  நமக்காக  என்ன  செய்வான்  என்று  இனிச்  சொல்லுவார்கள்.  {Hos  10:3}

 

பொய்யாணையிடுகிற  வார்த்தைகளைச்  சொல்லி,  உடன்படிக்கை  பண்ணிக்கொண்டார்கள்;  ஆகையால்  வயல்வெளியின்  படைச்சால்களில்  விஷப்பூண்டுகளைப்போல  நியாயத்தீர்ப்பு  முளைக்கும்.  {Hos  10:4}

 

சமாரியாவின்<Samaria>  குடிகள்  பெத்தாவேனிலுள்ள<Bethaven>  கன்றுக்குட்டியினிமித்தம்  பயம்  அடைவார்கள்;  அதற்காகக்  களிகூர்ந்த  அதின்  ஜனமும்,  அதின்  பூசாசாரிகளும்  அதின்  மகிமை  அதைவிட்டு  நீங்கிப்போயிற்றென்று  அதற்காகத்  துக்கங்கொண்டாடுவார்கள்.  {Hos  10:5}

 

அதுவும்  அசீரியாவிலே<Assyria>  யாரேப்<Jareb>  ராஜாவுக்குக்  காணிக்கையாகக்  கொண்டுபோகப்படும்;  எப்பிராயீம்<Ephraim>  இலச்சையடைவான்;  இஸ்ரவேல்<Israel>  தன்  ஆலோசனையினாலே  வெட்கப்படுவான்.  {Hos  10:6}

 

சமாரியாவின்<Samaria>  ராஜா  தண்ணீரின்மேல்  இருக்கிற  நுரையைப்போல்  அழிந்துபோவான்.  {Hos  10:7}

 

இஸ்ரவேலுடைய<Israel>  பாவமாகிய  ஆபேனின்<Aven>  மேடைகள்  அழிக்கப்படும்;  முட்செடிகளும்  முட்பூண்டுகளும்  அவர்கள்  பலிபீடங்களின்மேல்  முளைக்கும்;  பர்வதங்களைப்பார்த்து  எங்களை  மூடுங்கள்  என்றும்,  குன்றுகளைப்பார்த்து  எங்கள்மேல்  விழுங்கள்  என்றும்  சொல்லுவார்கள்.  {Hos  10:8}

 

இஸ்ரவேலே<Israel>,  நீ  கிபியாவின்<Gibeah>  நாட்கள்முதல்  பாவஞ்செய்துவந்தாய்;  கிபியாவிலே<Gibeah>  அக்கிரமக்காரர்மேல்  வந்த  யுத்தம்  தங்களைக்  கிட்டுவதில்லையென்று  அந்த  நிலையிலே  நிற்கிறார்கள்.  {Hos  10:9}

 

நான்  அவர்களைத்  தண்டிக்க  விரும்புகிறேன்;  அவர்கள்  செய்த  இரண்டுவித  பாவங்களினிமித்தம்  கட்டப்படும்போது,  ஜனங்கள்  அவர்களுக்கு  விரோதமாய்க்  கூடுவார்கள்.  {Hos  10:10}

 

எப்பிராயீம்<Ephraim>  நன்றாய்ப்  பழக்கப்பட்டுப்  போரடிக்க  விரும்புகிற  கடாரியாயிருக்கிறான்;  ஆனாலும்  நான்  அவன்  அழகான  கழுத்தின்மேல்  நுகத்தடியை  வைப்பேன்;  எப்பிராயீமை<Ephraim>  ஏர்  பூட்டி  ஓட்டுவேன்;  யூதா<Judah>  உழுவான்,  யாக்கோபு<Jacob>  அவனுக்குப்  பரம்படிப்பான்.  {Hos  10:11}

 

நீங்கள்  நீதிக்கென்று  விதைவிதையுங்கள்;  தயவுக்கொத்ததாய்  அறுப்பு  அறுங்கள்;  உங்கள்  தரிசுநிலத்தைப்  பண்படுத்துங்கள்;  கர்த்தர்  வந்து  உங்கள்மேல்  நீதியை  வருஷிக்கப்பண்ணுமட்டும்,  அவரைத்  தேடக்  காலமாயிருக்கிறது.  {Hos  10:12}

 

அநியாயத்தை  உழுதீர்கள்,  தீவினையை  அறுத்தீர்கள்;  பொய்யின்  கனிகளைப்  புசித்தீர்கள்;  உங்கள்  வழியையும்  உங்கள்  பராக்கிரமசாலிகளின்  திரளையும்  நம்பினீர்கள்.  {Hos  10:13}

 

ஆகையால்  உங்கள்  ஜனங்களுக்குள்  அமளி  எழும்பும்;  பிள்ளைகளின்மேல்  தாய்  மோதியடிக்கப்பட்ட  யுத்தநாளிலே  பெத்தார்பேலைச்<Betharbel>  சல்மான்<Shalman>  அழித்ததுபோல,  உங்கள்  எல்லா  அரண்களும்  அழிக்கப்படும்.  {Hos  10:14}

 

உங்கள்  கொடிய  பொல்லாப்பினால்  பெத்தேல்<Bethel>  இப்படிப்பட்டதை  உங்களுக்குச்  செய்யும்;  அதிகாலமே  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  முற்றிலும்  சங்கரிக்கப்படுவான்.  {Hos  10:15}

 

இஸ்ரவேல்<Israel>  இளைஞனாயிருந்தபோது  நான்  அவனை  நேசித்தேன்;  எகிப்திலிருந்து<Egypt>  என்னுடைய  குமாரனை  வரவழைத்தேன்.  {Hos  11:1}

 

அவர்கள்  தங்களை  அழைக்கிறவர்களின்  முகத்துக்கு  விலகிப்போய்விட்டார்கள்;  பாகால்களுக்குப்<Baalim>  பலியிட்டு,  விக்கிரகங்களுக்குத்  தூபங்காட்டினார்கள்.  {Hos  11:2}

 

நான்  எப்பிராயீமைக்<Ephraim>  கைபிடித்து  நடக்கப்  பழக்கினேன்;  ஆனாலும்  நான்  தங்களைக்  குணமாக்குகிறவரென்று  அறியாமற்போனார்கள்.  {Hos  11:3}

 

மனுஷரைக்  கட்டி  இழுக்கிற  அன்பின்  கயிறுகளால்  நான்  அவர்களை  இழுத்தேன்,  அவர்கள்  கழுத்துகளின்மேல்  இருந்த  நுகத்தடியை  எடுத்துப்  போடுகிறவரைப்போல்  இருந்து,  அவர்கள்  பட்சம்  சாய்ந்து,  அவர்களுக்கு  ஆகாரங்கொடுத்தேன்.  {Hos  11:4}

 

மனந்திரும்பமாட்டோமென்றதினால்  அவர்கள்  எகிப்துதேசத்துக்குத்<Egypt>  திரும்பிப்போவதில்லை;  அசீரியன்<Assyrian>  அவர்களுக்கு  ராஜா.  {Hos  11:5}

 

ஆகையால்  அவர்களுடைய  ஆலோசனைகளினிமித்தம்  பட்டயம்  அவர்கள்  பட்டணங்களுக்குள்  பாய்ந்து,  அவர்கள்  தாழ்ப்பாள்களை  நிர்மூலம்பண்ணி,  அவர்களைப்  பட்சிக்கும்.  {Hos  11:6}

 

என்  ஜனங்கள்  என்னைவிட்டு  விலகுகிற  மாறுபாட்டைப்  பற்றிக்கொண்டிருக்கிறார்கள்;  அவர்களை  உன்னதமானவரிடத்தில்  வரவழைத்தாலும்  ஒருவனும்  எழும்புகிறதில்லை.  {Hos  11:7}

 

எப்பிராயீமே<Ephraim>,  நான்  உன்னை  எப்படிக்  கைவிடுவேன்?  இஸ்ரவேலே<Israel>,  நான்  உன்னை  எப்படி  ஒப்புக்கொடுப்பேன்?  நான்  உன்னை  எப்படி  அத்மாவைப்போலாக்குவேன்<Admah>?  உன்னை  எப்படிச்  செபோயீமைப்போல<Zeboim>  வைப்பேன்?  என்  இருதயம்  எனக்குள்  குழம்புகிறது;  என்  பரிதாபங்கள்  ஏகமாய்ப்  பொங்குகிறது.  {Hos  11:8}

 

என்  உக்கிர  கோபத்தின்படியே  செய்யமாட்டேன்;  எப்பிராயீமை<Ephraim>  அழிக்கும்படித்  திரும்பமாட்டேன்;  ஏனென்றால்  நான்  மனுஷனல்ல,  தேவனாயிருக்கிறேன்;  நான்  உன்  நடுவிலுள்ள  பரிசுத்தர்;  ஆகையால்  பட்டணத்துக்கு  விரோதமாக  வரேன்.  {Hos  11:9}

 

அவர்கள்  கர்த்தரைப்  பின்பற்றுவார்கள்;  அவர்  சிங்கத்தைப்போல்  கெர்ச்சிப்பார்;  அவர்  கெர்ச்சிக்கும்போது  அவர்கள்  சந்ததியார்  மேற்குத்திசையிலிருந்து  நடுங்கி  வருவார்கள்.  {Hos  11:10}

 

எகிப்திலிருந்து<Egypt>  குருவிகளைப்போலவும்,  அசீரியா<Assyria>  தேசத்திலிருந்து  புறாக்களைப்போலவும்  பயந்து  வருவார்கள்;  அப்பொழுது  அவர்களை  அவர்கள்  வீடுகளில்  குடியிருக்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hos  11:11}

 

எப்பிராயீமர்<Ephraim>  பொய்களினாலும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  வஞ்சகத்தினாலும்  என்னைச்  சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்;  யூதாவோவெனில்<Judah>  இன்னும்  தேவனோடே  அரசாண்டு,  பரிசுத்தவான்களோடே  உண்மையாயிருக்கிறான்.  {Hos  11:12}

 

எப்பிராயீம்<Ephraim>  காற்றை  மேய்ந்து,  கொண்டற்காற்றைப்  பின்தொடருகிறான்;  அவன்  நாள்தோறும்  பொய்யையும்  கேட்டையும்  வர்த்திக்கப்பண்ணி,  அசீரியரோடே<Assyrians>  உடன்படிக்கைபண்ணுகிறான்;  எகிப்துக்கு<Egypt>  எண்ணெய்  கொண்டுபோகப்படுகிறது.  {Hos  12:1}

 

யூதாவோடும்<Judah>  கர்த்தருக்கு  வழக்கு  இருக்கிறது;  அவர்  யாக்கோபை<Jacob>  அவன்  வழிகளுக்குத்தக்கதாக  விசாரிக்கப்போகிறார்;  அவன்  கிரியைகளுக்குத்தக்கதாக  அவனுக்கு  நீதியைச்  சரிக்கட்டுவார்.  {Hos  12:2}

 

அவன்  தாயின்  கர்ப்பத்திலே  தன்  சகோதரனுடைய  குதிகாலைப்  பிடித்தான்;  தன்  பெலத்தினால்  தேவனோடே  போராடினான்.  {Hos  12:3}

 

அவன்  தூதனானவரோடே  போராடி  மேற்கொண்டான்,  அழுது  அவரை  நோக்கிக்  கெஞ்சினான்;  பெத்தேலிலே<Bethel>  அவர்  அவனைக்  கண்டு  சந்தித்து,  அவ்விடத்திலும்  நம்மோடே  பேசினார்.  {Hos  12:4}

 

கர்த்தராகிய  அவர்  சேனைகளின்  தேவன்;  யேகோவா<JEHOVAH//LORD>  என்பது  அவருடைய  நாமசங்கீர்த்தனம்.  {Hos  12:5}

 

இப்போதும்  நீ  உன்  தேவனிடத்தில்  திரும்பு;  தயவையும்  நியாயத்தையும்  கைக்கொண்டு,  இடைவிடாமல்  உன்  தேவனை  நம்பிக்கொண்டிரு.  {Hos  12:6}

 

அவன்  வியாபாரி,  கள்ளத்தராசு  அவன்  கையில்  இருக்கிறது;  அநியாயஞ்செய்ய  விரும்புகிறான்.  {Hos  12:7}

 

எப்பிராயீம்<Ephraim>:  நான்  ஐசுவரியவானானேன்;  நான்  பொருளைச்  சம்பாதித்தேன்;  நான்  பிரயாசப்பட்டுத்  தேடின  எல்லாவற்றிலும்  பாவமாகிய  அக்கிரமம்  என்னிடத்தில்  கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று  சொல்லுகிறான்.  {Hos  12:8}

 

உன்னை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  அழைத்துவந்தது  முதற்கொண்டு  உன்  தேவனாகிய  கர்த்தராயிருக்கிற  நான்,  பண்டிகை  நாட்களில்  செய்யப்படுகிறதுபோல்,  திரும்பவும்  உன்னைக்  கூடாரங்களில்  தாபரிக்கப்பண்ணுவேன்.  {Hos  12:9}

 

அப்படியே  தீர்க்கதரிசிகளோடே  சொன்னேன்;  நான்  அநேகம்  தரிசனங்களை  அருளினேன்;  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  உவமைகளால்  பேசினேன்.  {Hos  12:10}

 

கீலேயாத்<Gilead>  அக்கிரம  ஸ்தலமோ?  ஆம்,  அவர்கள்  அபத்தரானார்கள்;  கில்காலிலே<Gilgal>  காளைகளைப்  பலியிடுகிறார்கள்;  அவர்களுடைய  பீடங்கள்  வயல்வரப்புகளில்  இருக்கிற  கற்குவியல்களைப்போல்  இருக்கிறது.  {Hos  12:11}

 

யாக்கோபு<Jacob>  சீரியாதேசத்துக்கு<Syria>  ஓடிப்போய்,  இஸ்ரவேல்<Israel>  ஒரு  பெண்ணுக்காக  ஊழியஞ்செய்து,  ஒரு  பெண்ணுக்காக  ஆடு  மேய்த்தான்.  {Hos  12:12}

 

கர்த்தர்  ஒரு  தீர்க்கதரிசியைக்  கொண்டு  இஸ்ரவேலை<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினார்;  தீர்க்கதரிசியினால்  காக்கப்பட்டான்.  {Hos  12:13}

 

எப்பிராயீமோ<Ephraim>  அவரை  மிகவும்  கோபப்படுத்தினான்;  ஆகையால்  அவனுடைய  ஆண்டவர்  அவனுடைய  இரத்தப்பழிகளை  அவன்மேல்  சுமத்தி,  அவன்  செய்த  நிந்தையை  அவன்மேல்  திருப்புவார்.  {Hos  12:14}

 

எப்பிராயீம்<Ephraim>  பேசினபோது  நடுக்கமுண்டாயிற்று;  அவன்  இஸ்ரவேலிலே<Israel>  மேன்மைபெற்றான்;  அவன்  பாகால்<Baal>  விஷயத்தில்  குற்றஞ்செய்து  மடிந்துபோனான்.  {Hos  13:1}

 

இப்போதும்  அவர்கள்  அதிகமதிகமாய்ப்  பாவஞ்செய்து,  தங்கள்  வெள்ளியினால்  வார்ப்பித்த  சுரூபங்களையும்,  தங்கள்  புத்திக்கேற்க  விக்கிரகங்களையும்  தங்களுக்கு  உண்டுபண்ணுகிறார்கள்;  இவைகளெல்லாம்  தட்டாருடைய  வேலை;  மனுஷரில்  பலியிடுகிறவர்கள்  கன்றுக்குட்டிகளை  முத்தமிடலாமென்று  இவைகளைக்குறித்துச்  சொல்லுகிறார்கள்.  {Hos  13:2}

 

ஆகையால்  அவர்கள்  காலையில்  காணும்  மேகத்தைப்போலவும்,  விடியற்காலையில்  ஒழிந்துபோகிற  பனியைப்போலவும்,  பெருங்காற்று  களத்திலிருந்து  பறக்கடிக்கிற  பதரைப்போலவும்,  புகைக்கூண்டில்  ஏறிப்போகிற  புகையைப்போலவும்  இருப்பார்கள்.  {Hos  13:3}

 

நான்  உன்னை  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  அழைத்துவந்ததுமுதல்  உன்  தேவனாகிய  கர்த்தராயிருக்கிறேன்;  ஆகையால்  நீ  என்னையன்றி  வேறே  தேவனை  அறியவேண்டாம்;  என்னையன்றி  இரட்சகர்  ஒருவரும்  இல்லை.  {Hos  13:4}

 

நான்  உன்னை  மகா  வறட்சியான  தேசமாகிய  வனாந்தரத்திலே  அறிந்துகொண்டேன்.  {Hos  13:5}

 

தங்களுக்கு  இருந்த  மேய்ச்சலினால்  திருப்தியானார்கள்;  திருப்தியானபின்பு  அவர்கள்  இருதயம்  மேட்டிமையாயிற்று;  அதினால்  என்னை  மறந்தார்கள்.  {Hos  13:6}

 

ஆகையால்  நான்  அவர்களுக்குச்  சிங்கத்தைப்போல்  இருப்பேன்;  சிவிங்கியைப்போல்  வழியருகே  பதிவிருப்பேன்.  {Hos  13:7}

 

குட்டிகளைப்  பறிகொடுத்த  கரடியைப்போல  நான்  அவர்களை  எதிர்த்து,  அவர்கள்  ஈரற்குலையைக்  கிழித்து,  அவர்களை  அங்கே  சிங்கம்  பட்சிக்கிறதுபோல்  பட்சித்துப்போடுவேன்;  காட்டுமிருகங்கள்  அவர்களைப்  பீறிப்போடும்.  {Hos  13:8}

 

இஸ்ரவேலே<Israel>,  நீ  உனக்குக்  கேடுண்டாக்கிக்கொண்டாய்;  ஆனாலும்  என்னிடத்தில்  உனக்குச்  சகாயம்  உண்டு.  {Hos  13:9}

 

எனக்கு  ராஜாவையும்  அதிபதிகளையும்  ஏற்படுத்தவேண்டும்  என்றாயே;  இப்போதும்  உன்னுடைய  எல்லாப்  பட்டணங்களிலும்  உன்னை  இரட்சிக்கும்  ராஜா  எங்கே?  உன்  நியாயாதிபதிகள்  எங்கே?  {Hos  13:10}

 

நான்  கோபத்திலே  உனக்கு  ராஜாவைக்  கொடுத்தேன்;  என்  உக்கிரத்திலே  அவனை  எடுத்துக்கொண்டேன்.  {Hos  13:11}

 

எப்பிராயீமின்<Ephraim>  அக்கிரமம்  கட்டிவைத்திருக்கிறது;  அவன்  பாவம்  பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.  {Hos  13:12}

 

பிரசவஸ்திரீயின்  வேதனை  அவனுக்கு  வரும்;  அவன்  விவேகமில்லாத  பிள்ளை;  பேறுகாலமட்டும்  அவன்  நிற்கவில்லை.  {Hos  13:13}

 

அவர்களை  நான்  பாதாளத்தின்  வல்லமைக்கு  நீங்கலாக்கி  மீட்பேன்;  அவர்களை  மரணத்துக்கு  நீங்கலாக்கி  விடுவிப்பேன்;  மரணமே,  உன்  வாதைகள்  எங்கே?  பாதாளமே,  உன்  சங்காரம்  எங்கே?  மனமாறுதல்  என்  கண்களுக்கு  மறைவானதாயிருக்கும்.  {Hos  13:14}

 

இவன்  சகோதரருக்குள்ளே  ஜனம்பெருத்தவனாயிருந்தாலும்,  கர்த்தருடைய  காற்றாகிய  கீழ்க்காற்று  வனாந்தரத்திலிருந்து  எழும்பிவரும்;  அதனால்  அவனுடைய  ஊற்றுகள்  வற்றிப்போகும்;  அவனுடைய  துரவு  சுவறிப்போகும்;  அது  இச்சிக்கப்படத்தக்க  சகல  பதார்த்தங்களுள்ள  உத்தம  பதார்த்தங்களையும்  வாரிக்கொண்டுபோகும்.  {Hos  13:15}

 

சமாரியா<Samaria>  தன்  தேவனுக்கு  விரோதமாகக்  கலகம்பண்ணினபடியால்,  குற்றஞ்  சுமத்தப்பட்டதாயிருக்கும்;  அவர்கள்  பட்டயத்தால்  விழுவார்கள்;  அவர்களுடைய  குழந்தைகள்  மோதியடிக்கப்படும்;  அவர்களுடைய  கர்ப்பவதிகள்  கீறப்பட்டுப்போவார்கள்.  {Hos  13:16}

 

இஸ்ரவேலே<Israel>,  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  திரும்பு;  நீ  உன்  அக்கிரமத்தினால்  விழுந்தாய்.  {Hos  14:1}

 

வார்த்தைகளைக்கொண்டு  கர்த்தரிடத்தில்  திரும்புங்கள்;  அவரை  நோக்கி:  தேவரீர்  எல்லா  அக்கிரமத்தையும்  நீக்கி,  எங்களைத்  தயவாய்  அங்கீகரித்தருளும்;  அப்பொழுது  நாங்கள்  எங்கள்  உதடுகளின்  காளைகளைச்  செலுத்துவோம்.  {Hos  14:2}

 

அசீரியா<Assyria//Asshur>  எங்களை  இரட்சிப்பதில்லை;  நாங்கள்  குதிரைகளின்மேல்  ஏறமாட்டோம்;  எங்கள்  கைகளின்  கிரியையைப்பார்த்து:  நீங்கள்  எங்கள்  தேவர்கள்  என்று  இனிச்  சொல்லமாட்டோம்;  திக்கற்றவன்  உம்மிடத்தில்  இரக்கம்பெறுகிறான்  என்று  சொல்லுங்கள்.  {Hos  14:3}

 

நான்  அவர்கள்  சீர்கேட்டைக்  குணமாக்குவேன்;  அவர்களை  மனப்பூர்வமாய்ச்  சிநேகிப்பேன்;  என்  கோபம்  அவர்களைவிட்டு  நீங்கிற்று.  {Hos  14:4}

 

நான்  இஸ்ரவேலுக்குப்<Israel>  பனியைப்போலிருப்பேன்;  அவன்  லீலிப்  புஷ்பத்தைப்போல்  மலருவான்;  லீபனோனைப்போல்<Lebanon>  வேரூன்றி  நிற்பான்.  {Hos  14:5}

 

அவன்  கிளைகள்  ஓங்கிப்  படரும்,  அவன்  அலங்காரம்  ஒலிவமரத்தினுடைய  அலங்காரத்தைப்போலவும்,  அவனுடைய  வாசனை  லீபனோனுடைய<Lebanon>  வாசனையைப்போலவும்  இருக்கும்.  {Hos  14:6}

 

அவன்  நிழலில்  குடியிருக்கிறவர்கள்  திரும்புவார்கள்;  தானிய  விளைச்சலைப்போலச்  செழித்து,  திராட்சச்செடிகளைப்போலப்  படருவார்கள்;  அவன்  வாசனை  லீபனோனுடைய<Lebanon>  திராட்சரசத்தின்  வாசனையைப்போல  இருக்கும்.  {Hos  14:7}

 

இனி  எனக்கும்  விக்கிரகங்களுக்கும்  என்ன  என்று  எப்பிராயீம்<Ephraim>  சொல்லுவான்;  நான்  அவனுக்குச்  செவிகொடுத்து,  அவன்மேல்  நோக்கமாயிருந்தேன்;  நான்  பச்சையான  தேவதாரு  விருட்சம்போலிருக்கிறேன்;  என்னாலே  உன்  கனியுண்டாயிற்று  என்று  எப்பிராயீம்<Ephraim>  சொல்லுவான்.  {Hos  14:8}

 

இவைகளை  உணரத்தக்க  ஞானமுள்ளவன்  யார்?  இவைகளைக்  கிரகிக்கத்தக்க  புத்தியுள்ளவன்  யார்?  கர்த்தருடைய  வழிகள்  செம்மையானவைகள்,  நீதிமான்கள்  அவைகளில்  நடப்பார்கள்;  பாதகரோவென்றால்  அவைகளில்  இடறிவிழுவார்கள்.  {Hos  14:9}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!