Friday, April 24, 2020

சங்கீதம்

துன்மார்க்கருடைய  ஆலோசனையில்  நடவாமலும்,  பாவிகளுடைய  வழியில்  நில்லாமலும்,  பரியாசக்காரர்  உட்காரும்  இடத்தில்  உட்காராமலும்,  {Ps  1:1}

 

கர்த்தருடைய  வேதத்தில்  பிரியமாயிருந்து,  இரவும்  பகலும்  அவருடைய  வேதத்தில்  தியானமாயிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  1:2}

 

அவன்  நீர்க்கால்களின்  ஓரமாய்  நடப்பட்டு,  தன்  காலத்தில்  தன்  கனியைத்  தந்து,  இலையுதிராதிருக்கிற  மரத்தைப்போலிருப்பான்;  அவன்  செய்வதெல்லாம்  வாய்க்கும்.  {Ps  1:3}

 

துன்மார்க்கரோ  அப்படியிராமல்,  காற்றுப்  பறக்கடிக்கும்  பதரைப்போல்  இருக்கிறார்கள்.  {Ps  1:4}

 

ஆகையால்  துன்மார்க்கர்  நியாயத்தீர்ப்பிலும்,  பாவிகள்  நீதிமான்களின்  சபையிலும்  நிலைநிற்பதில்லை.  {Ps  1:5}

 

கர்த்தர்  நீதிமான்களின்  வழியை  அறிந்திருக்கிறார்;  துன்மார்க்கரின்  வழியோ  அழியும்.  {Ps  1:6}

 

ஜாதிகள்  கொந்தளித்து,  ஜனங்கள்  விருதாக்காரியத்தைச்  சிந்திப்பானேன்?  {Ps  2:1}

 

கர்த்தருக்கு  விரோதமாகவும்,  அவர்  அபிஷேகம்பண்ணினவருக்கு  விரோதமாகவும்,  பூமியின்  ராஜாக்கள்  எழும்பிநின்று,  அதிகாரிகள்  ஏகமாய்  ஆலோசனைபண்ணி:  {Ps  2:2}

 

அவர்கள்  கட்டுகளை  அறுத்து,  அவர்கள்  கயிறுகளை  நம்மைவிட்டு  எறிந்துபோடுவோம்  என்கிறார்கள்.  {Ps  2:3}

 

பரலோகத்தில்  வீற்றிருக்கிறவர்  நகைப்பார்;  ஆண்டவர்  அவர்களை  இகழுவார்.  {Ps  2:4}

 

அப்பொழுது  அவர்  தமது  கோபத்திலே  அவர்களோடே  பேசி,  தமது  உக்கிரத்திலே  அவர்களைக்  கலங்கப்பண்ணுவார்.  {Ps  2:5}

 

நான்  என்னுடைய  பரிசுத்த  பர்வதமாகிய  சீயோன்மீதில்<Zion>  என்னுடைய  ராஜாவை  அபிஷேகம்பண்ணி  வைத்தேன்  என்றார்.  {Ps  2:6}

 

தீர்மானத்தின்  விவரம்  சொல்லுவேன்;  கர்த்தர்  என்னை  நோக்கி:  நீர்  என்னுடைய  குமாரன்,  இன்று  நான்  உம்மை  ஜெநிப்பித்தேன்;  {Ps  2:7}

 

என்னைக்  கேளும்,  அப்பொழுது  ஜாதிகளை  உமக்குச்  சுதந்தரமாகவும்,  பூமியின்  எல்லைகளை  உமக்குச்  சொந்தமாகவும்  கொடுப்பேன்;  {Ps  2:8}

 

இருப்புக்கோலால்  அவர்களை  நொறுக்கி,  குயக்கலத்தைப்போல்  அவர்களை  உடைத்துப்போடுவீர்  என்று  சொன்னார்.  {Ps  2:9}

 

இப்போதும்  ராஜாக்களே,  உணர்வடையுங்கள்,  பூமியின்  நியாயாதிபதிகளே,  எச்சரிக்கையாயிருங்கள்.  {Ps  2:10}

 

பயத்துடனே  கர்த்தரைச்  சேவியுங்கள்,  நடுக்கத்துடனே  களிகூருங்கள்.  {Ps  2:11}

 

குமாரன்  கோபங்கொள்ளாமலும்,  நீங்கள்  வழியிலே  அழியாமலும்  இருக்கும்படிக்கு,  அவரை  முத்தஞ்  செய்யுங்கள்;  கொஞ்சக்காலத்திலே  அவருடைய  கோபம்  பற்றியெரியும்;  அவரை  அண்டிக்கொள்ளுகிற  யாவரும்  பாக்கியவான்கள்.  {Ps  2:12}

 

கர்த்தாவே,  என்  சத்துருக்கள்  எவ்வளவாய்ப்  பெருகியிருக்கிறார்கள்!  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்  அநேகர்.  {Ps  3:1}

 

தேவனிடத்தில்  அவனுக்கு  இரட்சிப்பு  இல்லையென்று,  என்  ஆத்துமாவைக்  குறித்துச்  சொல்லுகிறவர்கள்  அநேகராயிருக்கிறார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  3:2}

 

ஆனாலும்  கர்த்தாவே,  நீர்  என்  கேடகமும்,  என்  மகிமையும்,  என்  தலையை  உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.  {Ps  3:3}

 

நான்  கர்த்தரை  நோக்கிச்  சத்தமிட்டுக்  கூப்பிட்டேன்;  அவர்  தமது  பரிசுத்த  பர்வதத்திலிருந்து  எனக்குச்  செவிகொடுத்தார்.  (சேலா<Selah>.)  {Ps  3:4}

 

நான்  படுத்து  நித்திரை  செய்தேன்;  விழித்துக்கொண்டேன்;  கர்த்தர்  என்னைத்  தாங்குகிறார்.  {Ps  3:5}

 

எனக்கு  விரோதமாகச்  சுற்றிலும்  படையெடுத்து  வருகிற  பதினாயிரம்பேருக்கும்  நான்  பயப்படேன்.  {Ps  3:6}

 

கர்த்தாவே,  எழுந்தருளும்;  என்  தேவனே,  என்னை  இரட்சியும்.  நீர்  என்  பகைஞர்  எல்லாரையும்  தாடையிலே  அடித்து,  துன்மார்க்கருடைய  பற்களைத்  தகர்த்துப்போட்டீர்.  {Ps  3:7}

 

இரட்சிப்பு  கர்த்தருடையது;  தேவரீருடைய  ஆசீர்வாதம்  உம்முடைய  ஜனத்தின்மேல்  இருப்பதாக.  (சேலா<Selah>.)  {Ps  3:8}

 

என்  நீதியின்  தேவனே,  நான்  கூப்பிடுகையில்  எனக்குச்  செவிகொடும்;  நெருக்கத்தில்  இருந்த  எனக்கு  விசாலமுண்டாக்கினீர்;  எனக்கு  இரங்கி,  என்  விண்ணப்பத்தைக்  கேட்டருளும்.  {Ps  4:1}

 

மனுபுத்திரரே,  எதுவரைக்கும்  என்  மகிமையை  அவமானப்படுத்தி,  வீணானதை  விரும்பி,  பொய்யை  நாடுவீர்கள்.  (சேலா<Selah>.)  {Ps  4:2}

 

பக்தியுள்ளவனைக்  கர்த்தர்  தமக்காகத்  தெரிந்துகொண்டாரென்று  அறியுங்கள்;  நான்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகையில்  அவர்  கேட்பார்.  {Ps  4:3}

 

நீங்கள்  கோபங்கொண்டாலும்,  பாவஞ்செய்யாதிருங்கள்;  உங்கள்  படுக்கையிலே  உங்கள்  இருதயத்தில்  பேசிக்கொண்டு  அமர்ந்திருங்கள்.  (சேலா<Selah>.)  {Ps  4:4}

 

நீதியின்  பலிகளைச்  செலுத்தி,  கர்த்தர்மேல்  நம்பிக்கையாயிருங்கள்.  {Ps  4:5}

 

எங்களுக்கு  நன்மை  காண்பிப்பவன்  யார்  என்று  சொல்லுகிறவர்கள்  அநேகர்;  கர்த்தாவே,  உம்முடைய  முகத்தின்  ஒளியை  எங்கள்மேல்  பிரகாசிக்கப்பண்ணும்.  {Ps  4:6}

 

அவர்களுக்குத்  தானியமும்  திராட்சரசமும்  பெருகியிருக்கிறகாலத்தின்  சந்தோஷத்தைப்பார்க்கிலும்,  அதிக  சந்தோஷத்தை  என்  இருதயத்தில்  தந்தீர்.  {Ps  4:7}

 

சமாதானத்தோடே  படுத்துக்கொண்டு  நித்திரைசெய்வேன்;  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  என்னைச்  சுகமாய்த்  தங்கப்பண்ணுகிறீர்.  {Ps  4:8}

 

கர்த்தாவே,  என்  வார்த்தைகளுக்குச்  செவிகொடும்,  என்  தியானத்தைக்  கவனியும்.  {Ps  5:1}

 

நான்  உம்மிடத்தில்  விண்ணப்பம்பண்ணுவேன்;  என்  ராஜாவே,  என்  தேவனே,  என்  வேண்டுதலின்  சத்தத்தைக்  கேட்டருளும்.  {Ps  5:2}

 

கர்த்தாவே,  காலையிலே  என்  சத்தத்தைக்  கேட்டருளுவீர்;  காலையிலே  உமக்கு  நேரே  வந்து  ஆயத்தமாகி,  காத்திருப்பேன்.  {Ps  5:3}

 

நீர்  துன்மார்க்கத்தில்  பிரியப்படுகிற  தேவன்  அல்ல;  தீமை  உம்மிடத்தில்  சேர்வதில்லை.  {Ps  5:4}

 

வீம்புக்காரர்  உம்முடைய  கண்களுக்கு  முன்பாக  நிலைநிற்கமாட்டார்கள்;  அக்கிரமக்காரர்  யாவரையும்  வெறுக்கிறீர்.  {Ps  5:5}

 

பொய்  பேசுகிறவர்களை  அழிப்பீர்;  இரத்தப்பிரியனையும்  சூதுள்ள  மனுஷனையும்  கர்த்தர்  அருவருக்கிறார்.  {Ps  5:6}

 

நானோ  உமது  மிகுந்த  கிருபையினாலே  உமது  ஆலயத்துக்குள்  பிரவேசித்து,  உமது  பரிசுத்த  சந்நிதிக்கு  நேரே  பயபக்தியுடன்  பணிந்துகொள்ளுவேன்.  {Ps  5:7}

 

கர்த்தாவே,  என்  சத்துருக்களினிமித்தம்  என்னை  உம்முடைய  நீதியிலே  நடத்தி,  எனக்குமுன்பாக  உம்முடைய  வழியைச்  செவ்வைப்படுத்தும்.  {Ps  5:8}

 

அவர்கள்  வாயில்  உண்மை  இல்லை,  அவர்கள்  உள்ளம்  கேடுபாடுள்ளது;  அவர்கள்  தொண்டை  திறக்கப்பட்ட  பிரேதக்குழி;  தங்கள்  நாவினால்  இச்சகம்  பேசுகிறார்கள்.  {Ps  5:9}

 

தேவனே,  அவர்களைக்  குற்றவாளிகளாகத்  தீரும்;  அவர்கள்  தங்கள்  ஆலோசனைகளாலேயே  விழும்படி  செய்யும்;  அவர்கள்  துரோகங்களினுடைய  திரட்சியினிமித்தம்  அவர்களைத்  தள்ளிவிடும்;  உமக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினார்களே.  {Ps  5:10}

 

உம்மை  நம்புகிறவர்கள்  யாவரும்  சந்தோஷித்து,  எந்நாளும்  கெம்பீரிப்பார்களாக;  நீர்  அவர்களைக்  காப்பாற்றுவீர்;  உம்முடைய  நாமத்தை  நேசிக்கிறவர்கள்  உம்மில்  களிகூருவார்களாக.  {Ps  5:11}

 

கர்த்தாவே,  நீர்  நீதிமானை  ஆசீர்வதித்து,  காருணியம்  என்னுங்  கேடகத்தினால்  அவனைச்  சூழ்ந்துகொள்ளுவீர்.  {Ps  5:12}

 

கர்த்தாவே,  உம்முடைய  கோபத்திலே  என்னைக்  கடிந்துகொள்ளாதேயும்,  உம்முடைய  உக்கிரத்திலே  என்னைத்  தண்டியாதேயும்.  {Ps  6:1}

 

என்மேல்  இரக்கமாயிரும்  கர்த்தாவே,  நான்  பெலனற்றுப்போனேன்;  என்னைக்  குணமாக்கும்  கர்த்தாவே,  என்  எலும்புகள்  நடுங்குகிறது.  {Ps  6:2}

 

என்  ஆத்துமா  மிகவும்  வியாகுலப்படுகிறது;  கர்த்தாவே,  எதுவரைக்கும்  இரங்காதிருப்பீர்.  {Ps  6:3}

 

திரும்பும்  கர்த்தாவே,  என்  ஆத்துமாவை  விடுவியும்;  உம்முடைய  கிருபையினிமித்தம்  என்னை  இரட்சியும்.  {Ps  6:4}

 

மரணத்தில்  உம்மை  நினைவுகூர்வதில்லை,  பாதாளத்தில்  உம்மைத்  துதிப்பவன்  யார்?  {Ps  6:5}

 

என்  பெருமூச்சினால்  இளைத்துப்போனேன்;  இராமுழுவதும்  என்  கண்ணீரால்  என்  படுக்கையை  மிகவும்  ஈரமாக்கி,  என்  கட்டிலை  நனைக்கிறேன்.  {Ps  6:6}

 

துயரத்தினால்  என்  கண்  குழி  விழுந்துபோயிற்று,  என்  சத்துருக்கள்  அனைவர்  நிமித்தமும்  மங்கிப்போயிற்று.  {Ps  6:7}

 

அக்கிரமக்காரரே,  நீங்கள்  எல்லாரும்  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்;  கர்த்தர்  என்  அழுகையின்  சத்தத்தைக்  கேட்டார்.  {Ps  6:8}

 

கர்த்தர்  என்  விண்ணப்பத்தைக்  கேட்டார்;  கர்த்தர்  என்  ஜெபத்தை  ஏற்றுக்கொள்ளுவார்.  {Ps  6:9}

 

என்  பகைஞர்  எல்லாரும்  வெட்கி  மிகவும்  கலங்கிப்போவார்கள்;  அவர்கள்  பின்னாகத்  திரும்பிச்  சடிதியிலே  வெட்கப்படுவார்கள்.  {Ps  6:10}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்கள்  எல்லாருக்கும்  என்னை  விலக்கி  இரட்சியும்.  {Ps  7:1}

 

சத்துரு  சிங்கம்போல்  என்  ஆத்துமாவைப்  பிடித்துக்கொண்டுபோய்,  விடுவிக்கிறவன்  இல்லாமையால்,  அதைப்பீறாதபடிக்கு  என்னைத்  தப்புவியும்.  {Ps  7:2}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நான்  இதைச்  செய்ததும்,  என்  கைகளில்  நியாயக்கேடிருக்கிறதும்,  {Ps  7:3}

 

என்னோடே  சமாதானமாயிருந்தவனுக்கு  நான்  தீமைசெய்ததும்,  காரணமில்லாமல்  எனக்குச்  சத்துருவானவனை  நான்  கொள்ளையிட்டதும்  உண்டானால்,  {Ps  7:4}

 

பகைஞன்  என்  ஆத்துமாவைத்  தொடர்ந்துபிடித்து,  என்  பிராணனைத்  தரையிலே  தள்ளி  மிதித்து,  என்  மகிமையைத்  தூளிலே  தாழ்த்தக்கடவன்.  (சேலா<Selah>.)  {Ps  7:5}

 

கர்த்தாவே,  நீர்  உம்முடைய  கோபத்தில்  எழுந்திருந்து,  என்  சத்துருக்களுடைய  மூர்க்கங்களினிமித்தம்  உம்மை  உயர்த்தி,  எனக்காக  விழித்துக்கொள்ளும்;  நியாயத்தீர்ப்பை  நியமித்திருக்கிறீரே.  {Ps  7:6}

 

ஜனக்கூட்டம்  உம்மைச்  சூழ்ந்துகொள்ளும்;  அவர்களுக்காகத்  திரும்பவும்  உன்னதத்திற்கு  எழுந்தருளும்.  {Ps  7:7}

 

கர்த்தர்  ஜனங்களுக்கு  நியாயஞ்  செய்வார்;  கர்த்தாவே,  என்  நீதியின்படியும்  என்னிலுள்ள  உண்மையின்படியும்  எனக்கு  நியாயஞ்செய்யும்.  {Ps  7:8}

 

துன்மார்க்கனுடைய  பொல்லாங்கை  ஒழியப்பண்ணும்;  நீதிமானை  ஸ்திரப்படுத்துவீராக;  நீதியுள்ளவராயிருக்கிற  தேவரீர்  இருதயங்களையும்  உள்ளிந்திரியங்களையும்  சோதித்தறிகிறவர்.  {Ps  7:9}

 

செம்மையான  இருதயமுள்ளவர்களை  இரட்சிக்கிற  தேவனிடத்தில்  என்  கேடகம்  இருக்கிறது.  {Ps  7:10}

 

தேவன்  நீதியுள்ள  நியாயாதிபதி;  அவர்  நாள்தோறும்  பாவியின்மேல்  சினங்கொள்ளுகிற  தேவன்.  {Ps  7:11}

 

அவன்  மனந்திரும்பாவிட்டால்  அவர்  தம்முடைய  பட்டயத்தைக்  கருக்காக்குவார்;  அவர்  தம்முடைய  வில்லை  நாணேற்றி,  அதை  ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.  {Ps  7:12}

 

அவனுக்கு  மரணாயுதங்களை  ஆயத்தம்பண்ணினார்;  தம்முடைய  அம்புகளை  அக்கினி  அம்புகளாக்கினார்.  {Ps  7:13}

 

இதோ,  அவன்  அக்கிரமத்தைப்  பெறக்  கர்ப்பவேதனைப்படுகிறான்;  தீவினையைக்  கர்ப்பந்தரித்து,  பொய்யைப்  பெறுகிறான்.  {Ps  7:14}

 

குழியை  வெட்டி,  அதை  ஆழமாக்கினான்;  தான்  வெட்டின  குழியில்  தானே  விழுந்தான்.  {Ps  7:15}

 

அவன்  தீவினை  அவன்  சிரசின்மேல்  திரும்பும்,  அவன்  கொடுமை  அவன்  உச்சந்தலையின்மேல்  இறங்கும்.  {Ps  7:16}

 

நான்  கர்த்தரை  அவருடைய  நீதியின்படி  துதித்து,  உன்னதமான  கர்த்தருடைய  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  7:17}

 

எங்கள்  ஆண்டவராகிய  கர்த்தாவே,  உம்முடைய  நாமம்  பூமியெங்கும்  எவ்வளவு  மேன்மையுள்ளதாயிருக்கிறது!  உம்முடைய  மகத்துவத்தை  வானங்களுக்கு  மேலாக  வைத்தீர்.  {Ps  8:1}

 

பகைஞனையும்  பழிகாரனையும்  அடக்கிப்போட,  தேவரீர்  உம்முடைய  சத்துருக்களினிமித்தம்  குழந்தைகள்  பாலகர்  வாயினால்  பெலன்  உண்டுபண்ணினீர்.  {Ps  8:2}

 

உமது  விரல்களின்  கிரியையாகிய  உம்முடைய  வானங்களையும்,  நீர்  ஸ்தாபித்த  சந்திரனையும்  நட்சத்திரங்களையும்  நான்  பார்க்கும்போது,  {Ps  8:3}

 

மனுஷனை  நீர்  நினைக்கிறதற்கும்,  மனுஷகுமாரனை  நீர்  விசாரிக்கிறதற்கும்  அவன்  எம்மாத்திரம்  என்கிறேன்.  {Ps  8:4}

 

நீர்  அவனைத்  தேவதூதரிலும்  சற்று  சிறியவனாக்கினீர்;  மகிமையினாலும்  கனத்தினாலும்  அவனை  முடிசூட்டினீர்.  {Ps  8:5}

 

உம்முடைய  கரத்தின்  கிரியைகளின்மேல்  நீர்  அவனுக்கு  ஆளுகை  தந்து,  சகலத்தையும்  அவனுடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்தினீர்.  {Ps  8:6}

 

ஆடுமாடுகளெல்லாவற்றையும்,  காட்டுமிருகங்களையும்,  {Ps  8:7}

 

ஆகாயத்துப்  பறவைகளையும்,  சமுத்திரத்து  மச்சங்களையும்,  கடல்களில்  சஞ்சரிக்கிறவைகளையும்  அவனுடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்தினீர்.  {Ps  8:8}

 

எங்கள்  ஆண்டவராகிய  கர்த்தாவே,  உம்முடைய  நாமம்  பூமியெங்கும்  எவ்வளவு  மேன்மையுள்ளதாயிருக்கிறது!  {Ps  8:9}

 

கர்த்தாவே,  என்  முழு  இருதயத்தோடும்  உம்மைத்  துதிப்பேன்;  உம்முடைய  அதிசயங்களையெல்லாம்  விவரிப்பேன்.  {Ps  9:1}

 

உம்மில்  மகிழ்ந்து  களிகூருவேன்;  உன்னதமானவரே,  உமது  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  9:2}

 

என்  சத்துருக்கள்  பின்னாகத்  திரும்பும்போது,  உமது  சமுகத்தில்  அவர்கள்  இடறுண்டு  அழிந்துபோவார்கள்.  {Ps  9:3}

 

நீர்  என்  நியாயத்தையும்  என்  வழக்கையும்  தீர்த்து,  நீதியுள்ள  நியாயாதிபதியாய்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறீர்.  {Ps  9:4}

 

ஜாதிகளைக்  கடிந்துகொண்டு,  துன்மார்க்கரை  அழித்து,  அவர்கள்  நாமத்தை  என்றென்றைக்கும்  இல்லாதபடி  குலைத்துப்போட்டீர்.  {Ps  9:5}

 

சத்துருக்கள்  என்றென்றைக்கும்  பாழாக்கப்பட்டார்கள்;  அவர்கள்  பட்டணங்களை  நிர்மூலமாக்கினீர்;  அவர்கள்  பேரும்  அவர்களோடேகூட  ஒழிந்துபோயிற்று.  {Ps  9:6}

 

கர்த்தரோ  என்றென்றைக்கும்  இருப்பார்;  தம்முடைய  சிங்காசனத்தை  நியாயத்தீர்ப்புக்கு  ஆயத்தம்பண்ணினார்.  {Ps  9:7}

 

அவர்  பூச்சக்கரத்தை  நீதியாய்  நியாயந்தீர்த்து,  சகல  ஜனங்களுக்கும்  செம்மையாய்  நீதிசெய்வார்.  {Ps  9:8}

 

சிறுமைப்பட்டவனுக்குக்  கர்த்தர்  அடைக்கலமானவர்;  நெருக்கப்படுகிற  காலங்களில்  அவரே  தஞ்சமானவர்.  {Ps  9:9}

 

கர்த்தாவே,  உம்மைத்  தேடுகிறவர்களை  நீர்  கைவிடுகிறதில்லை;  ஆதலால்,  உமது  நாமத்தை  அறிந்தவர்கள்  உம்மை  நம்பியிருப்பார்கள்.  {Ps  9:10}

 

சீயோனில்<Zion>  வாசமாயிருக்கிற  கர்த்தரைக்  கீர்த்தனம்பண்ணி,  அவர்  செய்கைகளை  ஜனங்களுக்குள்ளே  அறிவியுங்கள்.  {Ps  9:11}

 

இரத்தப்பழிகளைக்குறித்து  அவர்  விசாரணை  செய்யும்போது,  அவைகளை  நினைக்கிறார்;  சிறுமைப்பட்டவர்களுடைய  கூப்பிடுதலை  மறவார்.  {Ps  9:12}

 

மரணவாசல்களிலிருந்து  என்னைத்  தூக்கிவிடுகிற  கர்த்தாவே,  நான்  உம்முடைய  துதிகளையெல்லாம்  சீயோன்<Zion>  குமாரத்தியின்  வாசல்களில்  விவரித்து,  உம்முடைய  இரட்சிப்பினால்  களிகூரும்படிக்கு,  {Ps  9:13}

 

தேவரீர்  எனக்கு  இரங்கி,  என்னைப்  பகைக்கிறவர்களால்  எனக்கு  வரும்  துன்பத்தை  நோக்கிப்பாரும்.  {Ps  9:14}

 

ஜாதிகள்  தாங்கள்  வெட்டின  குழியில்  தாங்களே  விழுந்தார்கள்;  அவர்கள்  மறைவாய்  வைத்த  வலையில்  அவர்களுடைய  காலே  அகப்பட்டுக்கொண்டது.  {Ps  9:15}

 

கர்த்தர்  தாம்  செய்த  நியாயத்தினால்  அறியப்படுகிறார்;  துன்மார்க்கன்  தன்  கைகளின்  செய்கையிலே  சிக்கிக்கொண்டான்.  (இகாயோன்<Higgaion>,  சேலா<Selah>.)  {Ps  9:16}

 

துன்மார்க்கரும்,  தேவனை  மறக்கிற  எல்லா  ஜாதிகளும்,  நரகத்திலே  தள்ளப்படுவார்கள்.  {Ps  9:17}

 

எளியவன்  என்றைக்கும்  மறக்கப்படுவதில்லை;  சிறுமைப்பட்டவர்களுடைய  நம்பிக்கை  ஒருபோதும்  கெட்டுப்போவதில்லை.  {Ps  9:18}

 

எழுந்தருளும்  கர்த்தாவே,  மனுஷன்  பெலன்கொள்ளாதபடி  செய்யும்;  ஜாதிகள்  உம்முடைய  சமுகத்தில்  நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.  {Ps  9:19}

 

ஜாதிகள்  தங்களை  மனுஷரென்று  அறியும்படிக்கு,  அவர்களுக்குப்  பயமுண்டாக்கும்,  கர்த்தாவே.  (சேலா<Selah>.)  {Ps  9:20}

 

கர்த்தாவே,  ஏன்  தூரத்தில்  நிற்கிறீர்?  ஆபத்து  நேரிடுகிற  சமயங்களில்  நீர்  ஏன்  மறைந்திருக்கிறீர்?  {Ps  10:1}

 

துன்மார்க்கன்  தன்  பெருமையினால்  சிறுமைப்பட்டவனைக்  கடூரமாய்த்  துன்பப்படுத்துகிறான்;  அவர்கள்  நினைத்த  சதிமோசங்களில்  அவர்களே  அகப்படுவார்கள்.  {Ps  10:2}

 

துன்மார்க்கன்  தன்  உள்ளம்  இச்சித்ததைப்  பெற்றதினால்  பெருமைபாராட்டி,  பொருளை  அபகரித்துத்  தன்னைத்தான்  போற்றி,  கர்த்தரை  அசட்டைபண்ணுகிறான்.  {Ps  10:3}

 

துன்மார்க்கன்  தன்  கர்வத்தினால்  தேவனைத்  தேடான்;  அவன்  நினைவுகளெல்லாம்  தேவன்  இல்லையென்பதே.  {Ps  10:4}

 

அவன்  வழிகள்  எப்போதும்  கேடுள்ளவைகள்;  உம்முடைய  நியாயத்தீர்ப்புகள்  அவன்  பார்வைக்கு  எட்டாமல்  மிகவும்  உயரமாயிருக்கிறது;  தன்  எதிராளிகளெல்லார்மேலும்  சீறுகிறான்.  {Ps  10:5}

 

நான்  அசைக்கப்படுவதில்லை,  தலைமுறை  தலைமுறைதோறும்  தீங்கு  என்னை  அணுகுவதில்லையென்று  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்ளுகிறான்.  {Ps  10:6}

 

அவன்  வாய்  சபிப்பினாலும்  கபடத்தினாலும்  கொடுமையினாலும்  நிறைந்திருக்கிறது;  அவன்  நாவின்கீழ்  தீவினையும்  அக்கிரமமும்  உண்டு.  {Ps  10:7}

 

கிராமங்களின்  ஒளிப்பிடங்களிலே  பதிவிருந்து,  மறைவிடங்களிலே  குற்றமற்றவனைக்  கொல்லுகிறான்;  திக்கற்றவர்களைப்  பிடிக்க  அவன்  கண்கள்  நோக்கிக்கொண்டிருக்கிறது.  {Ps  10:8}

 

தன்  கெபியிலிருக்கிற  சிங்கத்தைப்போல  மறைவில்  பதிவிருக்கிறான்;  ஏழையைப்  பிடிக்கப்  பதிவிருந்து,  ஏழையைத்  தன்  வலைக்குள்  இழுத்துப்  பிடித்துக்கொள்ளுகிறான்.  {Ps  10:9}

 

திக்கற்றவர்கள்  தன்  பலவான்கள்  கையில்  விழும்படி  அவன்  பதுங்கிக்கிடக்கிறான்.  {Ps  10:10}

 

தேவன்  அதை  மறந்தார்  என்றும்,  அவர்  தம்முடைய  முகத்தை  மறைத்து,  ஒருக்காலும்  அதைக்  காணமாட்டார்  என்றும்,  தன்  இருதயத்திலே  சொல்லிக்கொள்ளுகிறான்.  {Ps  10:11}

 

கர்த்தாவே,  எழுந்தருளும்;  தேவனே,  உம்முடைய  கையை  உயர்த்தும்;  ஏழைகளை  மறவாதேயும்.  {Ps  10:12}

 

துன்மார்க்கன்  தேவனை  அசட்டைபண்ணி:  நீர்  கேட்டு  விசாரிப்பதில்லை  என்று  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்வானேன்?  {Ps  10:13}

 

அதைப்  பார்த்திருக்கிறீரே!  உபத்திரவத்தையும்  குரோதத்தையும்  கவனித்திருக்கிறீரே;  நீர்  பதிலளிப்பீர்;  ஏழையானவன்  தன்னை  உமக்கு  ஒப்புவிக்கிறான்;  திக்கற்ற  பிள்ளைகளுக்குச்  சகாயர்  நீரே.  {Ps  10:14}

 

துன்மார்க்கனும்  பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய  புயத்தை  முறித்துவிடும்;  அவனுடைய  ஆகாமியம்  காணாமற்போகுமட்டும்  அதைத்  தேடி  விசாரியும்.  {Ps  10:15}

 

கர்த்தர்  சதாகாலங்களுக்கும்  ராஜாவாயிருக்கிறார்;  புறஜாதியார்  அவருடைய  தேசத்திலிருந்து  அழிந்துபோவார்கள்.  {Ps  10:16}

 

கர்த்தாவே,  சிறுமைப்பட்டவர்களுடைய  வேண்டுதலைக்  கேட்டிருக்கிறீர்;  அவர்கள்  இருதயத்தை  ஸ்திரப்படுத்துவீர்.  {Ps  10:17}

 

மண்ணான  மனுஷன்  இனிப்  பலவந்தஞ்செய்யத்  தொடராதபடிக்கு,  தேவரீர்  திக்கற்ற  பிள்ளைகளுக்கும்  ஒடுக்கப்பட்டவர்களுக்கும்  நீதிசெய்ய  உம்முடைய  செவிகளைச்  சாய்த்துக்  கேட்டருளுவீர்.  {Ps  10:18}

 

நான்  கர்த்தரை  நம்பியிருக்கிறேன்;  பின்னை  ஏன்  நீங்கள்  என்  ஆத்துமாவை  நோக்கி:  பட்சியைப்போல  உன்  மலைக்குப்  பறந்துபோ  என்று  சொல்லுகிறீர்கள்.  {Ps  11:1}

 

இதோ,  துன்மார்க்கர்  வில்லை  வளைத்து,  செம்மையான  இருதயத்தார்மேல்  அந்தகாரத்தில்  எய்யும்படி  தங்கள்  அம்புகளை  நாணிலே  தொடுக்கிறார்கள்.  {Ps  11:2}

 

அஸ்திபாரங்களும்  நிர்மூலமாகிறதே,  நீதிமான்  என்னசெய்வான்?  {Ps  11:3}

 

கர்த்தர்  தம்முடைய  பரிசுத்த  ஆலயத்தில்  இருக்கிறார்;  கர்த்தருடைய  சிங்காசனம்  பரலோகத்தில்  இருக்கிறது;  அவருடைய  கண்கள்  மனுபுத்திரரைப்  பார்க்கிறது;  அவருடைய  இமைகள்  அவர்களைச்  சோதித்தறிகிறது.  {Ps  11:4}

 

கர்த்தர்  நீதிமானைச்  சோதித்தறிகிறார்;  துன்மார்க்கனையும்  கொடுமையில்  பிரியமுள்ளவனையும்  அவருடைய  உள்ளம்  வெறுக்கிறது.  {Ps  11:5}

 

துன்மார்க்கர்மேல்  கண்ணிகளை  வருஷிக்கப்பண்ணுவார்;  அக்கினியும்  கந்தகமும்  கடுங்கோடைக்  கொந்தளிப்பும்  அவர்கள்  குடிக்கும்  பாத்திரத்தின்  பங்கு.  {Ps  11:6}

 

கர்த்தர்  நீதியுள்ளவர்,  நீதியின்மேல்  பிரியப்படுவார்;  அவருடைய  முகம்  செம்மையானவனை  நோக்கியிருக்கிறது.  {Ps  11:7}

 

இரட்சியும்  கர்த்தாவே,  பக்தியுள்ளவன்  அற்றுப்போகிறான்;  உண்மையுள்ளவர்கள்  மனுபுத்திரரில்  குறைந்திருக்கிறார்கள்.  {Ps  12:1}

 

அவரவர்  தங்கள்  தோழரோடே  பொய்பேசுகிறார்கள்;  இச்சக  உதடுகளால்  இருமனதாய்ப்  பேசுகிறார்கள்.  {Ps  12:2}

 

இச்சகம்பேசுகிற  எல்லா  உதடுகளையும்,  பெருமைகளைப்  பேசுகிற  நாவையும்  கர்த்தர்  அறுத்துப்போடுவார்.  {Ps  12:3}

 

அவர்கள்:  எங்கள்  நாவுகளால்  மேற்கொள்ளுவோம்,  எங்கள்  உதடுகள்  எங்களுடையது;  யார்  எங்களுக்கு  ஆண்டவன்  என்று  சொல்லுகிறார்கள்.  {Ps  12:4}

 

ஏழைகள்  பாழாக்கப்பட்டதினிமித்தமும்,  எளியவர்கள்  விடும்  பெருமூச்சினிமித்தமும்,  நான்  இப்பொழுது  எழுந்து,  அவன்மேல்  சீறுகிறவர்களுக்கு  அவனைக்  காத்துச்  சுகமாயிருக்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Ps  12:5}

 

கர்த்தருடைய  சொற்கள்  மண்குகையில்  ஏழுதரம்  உருக்கி,  புடமிடப்பட்ட  வெள்ளிக்கொப்பான  சுத்த  சொற்களாயிருக்கிறது.  {Ps  12:6}

 

கர்த்தாவே,  நீர்  அவர்களைக்  காப்பாற்றி,  அவர்களை  என்றைக்கும்  இந்தச்  சந்ததிக்கு  விலக்கிக்  காத்துக்கொள்ளுவீர்.  {Ps  12:7}

 

மனுபுத்திரரில்  சண்டாளர்  உயர்ந்திருக்கும்போது,  துன்மார்க்கர்  எங்கும்  சுற்றித்திரிவார்கள்.  {Ps  12:8}

 

கர்த்தாவே,  எதுவரைக்கும்  என்னை  மறந்திருப்பீர்,  எதுவரைக்கும்  உம்முடைய  முகத்தை  எனக்கு  மறைப்பீர்?  {Ps  13:1}

 

என்  இருதயத்திலே  சஞ்சலத்தை  நித்தம்  நித்தம்  வைத்து,  எதுவரைக்கும்  என்  ஆத்துமாவிலே  ஆலோசனை  பண்ணிக்கொண்டிருப்பேன்?  எதுவரைக்கும்  என்  சத்துரு  என்மேல்  தன்னை  உயர்த்துவான்?  {Ps  13:2}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  நோக்கிப்பார்த்து,  எனக்குச்  செவிகொடுத்தருளும்;  நான்  மரணநித்திரை  அடையாதபடிக்கு  என்  கண்களைத்  தெளிவாக்கும்.  {Ps  13:3}

 

அவனை  மேற்கொண்டேன்  என்று  என்  பகைஞன்  சொல்லாதபடிக்கும்,  நான்  தள்ளாடுகிறதினால்  என்  சத்துருக்கள்  களிகூராதபடிக்கும்  இப்படிச்  செய்தருளும்.  {Ps  13:4}

 

நான்  உம்முடைய  கிருபையின்மேல்  நம்பிக்கையாயிருக்கிறேன்;  உம்முடைய  இரட்சிப்பினால்  என்  இருதயம்  களிகூரும்.  {Ps  13:5}

 

கர்த்தர்  எனக்கு  நன்மைசெய்தபடியால்  அவரைப்  பாடுவேன்.  {Ps  13:6}

 

தேவன்  இல்லை  என்று  மதிகெட்டவன்  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்ளுகிறான்.  அவர்கள்  தங்களைக்  கெடுத்து,  அருவருப்பான  கிரியைகளைச்  செய்துவருகிறார்கள்;  நன்மைசெய்கிறவன்  ஒருவனும்  இல்லை.  {Ps  14:1}

 

தேவனைத்  தேடுகிற  உணர்வுள்ளவன்  உண்டோ  என்று  பார்க்க,  கர்த்தர்  பரலோகத்திலிருந்து  மனுபுத்திரரைக்  கண்ணோக்கினார்.  {Ps  14:2}

 

எல்லாரும்  வழிவிலகி,  ஏகமாய்க்  கெட்டுப்போனார்கள்;  நன்மைசெய்கிறவன்  இல்லை,  ஒருவனாகிலும்  இல்லை.  {Ps  14:3}

 

அக்கிரமக்காரரில்  ஒருவனுக்கும்  அறிவுஇல்லையோ?  அப்பத்தைப்  பட்சிக்கிறதுபோல,  என்  ஜனத்தைப்  பட்சிக்கிறார்களே;  அவர்கள்  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுகிறதில்லை.  {Ps  14:4}

 

அங்கே  அவர்கள்  மிகவும்  பயந்தார்கள்;  தேவன்  நீதிமானுடைய  சந்ததியோடே  இருக்கிறாரே.  {Ps  14:5}

 

சிறுமைப்பட்டவனுக்குக்  கர்த்தர்  அடைக்கலமாயிருக்கிறார்  என்று  சொல்லி,  நீங்கள்  அவனுடைய  ஆலோசனையை  அலட்சியம்பண்ணினீர்கள்.  {Ps  14:6}

 

சீயோனிலிருந்து<Zion>  இஸ்ரவேலுக்கு<Israel>  இரட்சிப்பு  வருவதாக;  கர்த்தர்  தம்முடைய  ஜனத்தின்  சிறையிருப்பைத்  திருப்பும்போது,  யாக்கோபுக்குக்<Jacob>  களிப்பும்,  இஸ்ரவேலுக்கு<Israel>  மகிழ்ச்சியும்  உண்டாகும்.  {Ps  14:7}

 

கர்த்தாவே,  யார்  உம்முடைய  கூடாரத்தில்  தங்குவான்?  யார்  உம்முடைய  பரிசுத்த  பர்வதத்தில்  வாசம்பண்ணுவான்?  {Ps  15:1}

 

உத்தமனாய்  நடந்து,  நீதியை  நடப்பித்து,  மனதாரச்  சத்தியத்தைப்  பேசுகிறவன்தானே.  {Ps  15:2}

 

அவன்  தன்  நாவினால்  புறங்கூறாமலும்,  தன்  தோழனுக்குத்  தீங்குசெய்யாமலும்,  தன்  அயலான்மேல்  சொல்லப்படும்  நிந்தையான  பேச்சை  எடுக்காமலும்  இருக்கிறான்.  {Ps  15:3}

 

ஆகாதவன்  அவன்  பார்வைக்குத்  தீழ்ப்பானவன்;  கர்த்தருக்குப்  பயந்தவர்களையோ  கனம்பண்ணுகிறான்;  ஆணையிட்டதில்  தனக்கு  நஷ்டம்  வந்தாலும்  தவறாதிருக்கிறான்.  {Ps  15:4}

 

தன்  பணத்தை  வட்டிக்குக்கொடாமலும்,  குற்றமில்லாதவனுக்கு  விரோதமாய்ப்  பரிதானம்  வாங்காமலும்  இருக்கிறான்.  இப்படிச்  செய்கிறவன்  என்றென்றைக்கும்  அசைக்கப்படுவதில்லை.  {Ps  15:5}

 

தேவனே,  என்னைக்  காப்பாற்றும்,  உம்மை  நம்பியிருக்கிறேன்.  {Ps  16:1}

 

என்  நெஞ்சமே,  நீ  கர்த்தரை  நோக்கி:  தேவரீர்  என்  ஆண்டவராயிருக்கிறீர்,  என்  செல்வம்  உமக்கு  வேண்டியதாயிராமல்;  {Ps  16:2}

 

பூமியிலுள்ள  பரிசுத்தவான்களுக்கும்,  நான்  என்  முழுப்  பிரியத்தையும்  வைத்திருக்கிற  மகாத்துமாக்களுக்கும்,  அது  வேண்டியதாயிருக்கிறது  என்று  சொன்னாய்.  {Ps  16:3}

 

அந்நிய  தேவனை  நாடிப்  பின்பற்றுகிறவர்களுக்கு  வேதனைகள்  பெருகும்;  அவர்கள்  செலுத்துகிற  இரத்த  பானபலிகளை  நான்  செலுத்தமாட்டேன்,  அவர்கள்  நாமங்களை  என்  உதடுகளினால்  உச்சரிக்கவுமாட்டேன்.  {Ps  16:4}

 

கர்த்தர்  என்  சுதந்தரமும்  என்  பாத்திரத்தின்  பங்குமானவர்;  என்  சுதந்தரத்தை  தேவரீர்  காப்பாற்றுகிறீர்.  {Ps  16:5}

 

நேர்த்தியான  இடங்களில்  எனக்குப்  பங்கு  கிடைத்தது;  ஆம்,  சிறப்பான  சுதந்தரம்  எனக்கு  உண்டு.  {Ps  16:6}

 

எனக்கு  ஆலோசனை  தந்த  கர்த்தரைத்  துதிப்பேன்;  இராக்காலங்களிலும்  என்  உள்ளிந்திரியங்கள்  என்னை  உணர்த்தும்.  {Ps  16:7}

 

கர்த்தரை  எப்பொழுதும்  எனக்கு  முன்பாக  வைத்திருக்கிறேன்;  அவர்  என்  வலதுபாரிசத்தில்  இருக்கிறபடியால்  நான்  அசைக்கப்படுவதில்லை.  {Ps  16:8}

 

ஆகையால்  என்  இருதயம்  பூரித்தது,  என்  மகிமை  களிகூர்ந்தது;  என்  மாம்சமும்  நம்பிக்கையோடே  தங்கியிருக்கும்.  {Ps  16:9}

 

என்  ஆத்துமாவைப்  பாதாளத்தில்  விடீர்;  உம்முடைய  பரிசுத்தவானை  அழிவைக்  காணவொட்டீர்.  {Ps  16:10}

 

ஜீவமார்க்கத்தை  எனக்குத்  தெரியப்படுத்துவீர்;  உம்முடைய  சமுகத்தில்  பரிபூரண  ஆனந்தமும்,  உம்முடைய  வலதுபாரிசத்தில்  நித்திய  பேரின்பமும்  உண்டு.  {Ps  16:11}

 

கர்த்தாவே,  நியாயத்தைக்  கேட்டருளும்,  என்  கூப்பிடுதலைக்  கவனியும்;  கபடமில்லாத  உதடுகளினின்று  பிறக்கும்  என்  விண்ணப்பத்திற்குச்  செவிகொடும்.  {Ps  17:1}

 

உம்முடைய  சந்நிதியிலிருந்து  என்  நியாயம்  வெளிப்படுவதாக;  உம்முடைய  கண்கள்  நியாயமானவைகளை  நோக்குவதாக.  {Ps  17:2}

 

நீர்  என்  இருதயத்தைப்  பரிசோதித்து,  இராக்காலத்தில்  அதை  விசாரித்து,  என்னைப்  புடமிட்டுப்பார்த்தும்  ஒன்றும்  காணாதிருக்கிறீர்;  என்  வாய்  மீறாதபடிக்குத்  தீர்மானம்பண்ணினேன்.  {Ps  17:3}

 

மனுஷரின்  செய்கைகளைக்குறித்து,  நான்  உம்முடைய  உதடுகளின்  வாக்கினாலே  துஷ்டனுடைய  பாதைகளுக்கு  விலக்கமாய்  என்னைக்  காத்துக்  கொள்ளுகிறேன்.  {Ps  17:4}

 

என்  காலடிகள்  வழுவாதபடிக்கு,  என்  நடைகளை  உமது  வழிகளில்  ஸ்திரப்படுத்தும்.  {Ps  17:5}

 

தேவனே,  நான்  உம்மை  நோக்கிக்  கெஞ்சுகிறேன்,  எனக்குச்  செவிகொடுக்கிறீர்;  என்னிடத்தில்  உம்முடைய  செவியைச்  சாய்த்து,  என்  வார்த்தையைக்  கேட்டருளும்.  {Ps  17:6}

 

உம்மை  நம்புகிறவர்களை  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களினின்று  உமது  வலதுகரத்தினால்  தப்புவித்து  இரட்சிக்கிறவரே!  உம்முடைய  அதிசயமான  கிருபையை  விளங்கப்பண்ணும்.  {Ps  17:7}

 

கண்மணியைப்போல  என்னைக்  காத்தருளும்.  {Ps  17:8}

 

என்னை  ஒடுக்குகிற  துன்மார்க்கருக்கும்,  என்னைச்  சூழ்ந்துகொள்ளுகிற  என்  பிராணப்பகைஞருக்கும்  மறைவாக,  உம்முடைய  செட்டைகளின்  நிழலிலே  என்னைக்  காப்பாற்றும்.  {Ps  17:9}

 

அவர்கள்  நிணந்துன்னியிருக்கிறார்கள்,  தங்கள்  வாயினால்  வீம்பு  பேசுகிறார்கள்.  {Ps  17:10}

 

நாங்கள்  செல்லும்  பாதைகளில்  இப்பொழுது  எங்களை  வளைந்துகொண்டார்கள்;  எங்களைத்  தரையிலே  தள்ளும்படி  அவர்கள்  கண்கள்  எங்களை  நோக்கிக்கொண்டிருக்கிறது.  {Ps  17:11}

 

பீறுகிறதற்கு  ஆவலுள்ள  சிங்கத்துக்கும்,  மறைவிடங்களில்  பதிவிருக்கிற  பாலசிங்கத்துக்கும்  ஒப்பாயிருக்கிறார்கள்.  {Ps  17:12}

 

கர்த்தாவே,  நீர்  எழுந்திருந்து,  அவனுக்கு  எதிரிட்டு,  அவனை  மடங்கடியும்;  கர்த்தாவே,  என்  ஆத்துமாவைத்  துன்மார்க்கனுடைய  கைக்கு  உம்முடைய  பட்டயத்தினால்  தப்புவியும்.  {Ps  17:13}

 

மனுஷருடைய  கைக்கும்,  இம்மையில்  தங்கள்  பங்கைப்  பெற்றிருக்கிற  உலகமக்களின்  கைக்கும்  உம்முடைய  கரத்தினால்  என்னைத்  தப்புவியும்;  அவர்கள்  வயிற்றை  உமது  திரவியத்தினால்  நிரப்புகிறீர்;  அவர்கள்  புத்திரபாக்கியத்தினால்  திருப்தியடைந்து,  தங்களுக்கு  மீதியான  பொருளைத்  தங்கள்  குழந்தைகளுக்கு  வைக்கிறார்கள்.  {Ps  17:14}

 

நானோ  நீதியில்  உம்முடைய  முகத்தைத்  தரிசிப்பேன்;  நான்  விழிக்கும்போது  உமது  சாயலால்  திருப்தியாவேன்.  {Ps  17:15}

 

என்  பெலனாகிய  கர்த்தாவே,  உம்மில்  அன்புகூருவேன்.  {Ps  18:1}

 

கர்த்தர்  என்  கன்மலையும்,  என்  கோட்டையும்,  என்  இரட்சகரும்,  என்  தேவனும்,  நான்  நம்பியிருக்கிற  என்  துருகமும்,  என்  கேடகமும்,  என்  இரட்சணியக்  கொம்பும்,  என்  உயர்ந்த  அடைக்கலமுமாயிருக்கிறார்.  {Ps  18:2}

 

துதிக்குப்  பாத்திரராகிய  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  அதனால்  என்  சத்துருக்களுக்கு  நீங்கலாகி  இரட்சிக்கப்படுவேன்.  {Ps  18:3}

 

மரணக்கட்டுகள்  என்னைச்  சுற்றிக்கொண்டது;  துர்ச்சனப்பிரவாகம்  என்னைப்  பயப்படுத்தினது.  {Ps  18:4}

 

பாதாளக்கட்டுகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  மரணக்கண்ணிகள்  என்மேல்  விழுந்தது.  {Ps  18:5}

 

எனக்கு  உண்டான  நெருக்கத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு,  என்  தேவனை  நோக்கி  அபயமிட்டேன்;  தமது  ஆலயத்திலிருந்து  என்  சத்தத்தைக்  கேட்டார்,  என்  கூப்பிடுதல்  அவர்  சந்நிதியில்  போய்,  அவர்  செவிகளில்  ஏறிற்று.  {Ps  18:6}

 

அப்பொழுது  பூமி  அசைந்து  அதிர்ந்தது,  அவர்  கோபங்கொண்டபடியால்  பர்வதங்களின்  அஸ்திபாரங்கள்  குலுங்கி  அசைந்தது.  {Ps  18:7}

 

அவர்  நாசியிலிருந்து  புகை  எழும்பிற்று,  அவர்  வாயிலிருந்து  பட்சிக்கிற  அக்கினி  புறப்பட்டது;  அதனால்  தழல்  மூண்டது.  {Ps  18:8}

 

வானங்களைத்  தாழ்த்தி  இறங்கினார்;  அவர்  பாதங்களின்கீழ்  காரிருள்  இருந்தது.  {Ps  18:9}

 

கேருபீன்மேல்<cherub>  ஏறி  வேகமாய்ச்  சென்றார்;  காற்றின்  செட்டைகளைக்  கொண்டு  பறந்தார்.  {Ps  18:10}

 

இருளைத்  தமக்கு  மறைவிடமாக்கினார்;  கரும்புனல்களையும்,  ஆகாயத்துக்  கார்மேகங்களையும்  தம்மைச்  சூழக்  கூடாரமாக்கினார்.  {Ps  18:11}

 

அவருடைய  சந்நிதிப்  பிரகாசத்தினால்  அவருடைய  மேகங்கள்  பறந்து  விலகிற்று,  கல்மழையும்  நெருப்புத்தழலும்  விழுந்தது.  {Ps  18:12}

 

கர்த்தர்  வானங்களிலே  குமுறினார்,  உன்னதமானவர்  தமது  சத்தத்தைத்  தொனிக்கப்பண்ணினார்;  கல்மழையும்  நெருப்புத்தழலும்  விழுந்தது.  {Ps  18:13}

 

தம்முடைய  அம்புகளை  எய்து,  அவர்களைச்  சிதறடித்தார்;  மின்னல்களைப்  பிரயோகித்து,  அவர்களைக்  கலங்கப்பண்ணினார்.  {Ps  18:14}

 

அப்பொழுது  கர்த்தாவே,  உம்முடைய  கண்டிதத்தினாலும்  உம்முடைய  நாசியின்  சுவாசக்காற்றினாலும்  தண்ணீர்களின்  மதகுகள்  திறவுண்டு,  பூதலத்தின்  அஸ்திபாரங்கள்  காணப்பட்டது.  {Ps  18:15}

 

உயரத்திலிருந்து  அவர்  கை  நீட்டி,  என்னைப்  பிடித்து,  ஜலப்பிரவாகத்திலிருக்கிற  என்னைத்  தூக்கிவிட்டார்.  {Ps  18:16}

 

என்னிலும்  அதிக  பலவான்களாயிருந்த  என்  பலத்த  சத்துருவுக்கும்  என்னைப்  பகைக்கிறவர்களுக்கும்  என்னை  விடுவித்தார்.  {Ps  18:17}

 

என்  ஆபத்துநாளில்  எனக்கு  எதிரிட்டு  வந்தார்கள்;  கர்த்தரோ  எனக்கு  ஆதரவாயிருந்தார்.  {Ps  18:18}

 

அவர்  விசாலமான  இடத்திலே  என்னைக்  கொண்டுவந்து,  என்மேல்  பிரியமாயிருந்தபடியால்,  என்னைத்  தப்புவித்தார்.  {Ps  18:19}

 

கர்த்தர்  என்  நீதிக்குத்தக்கதாக  எனக்குப்  பதிலளித்தார்;  என்  கைகளின்  சுத்தத்திற்குத்தக்கதாக  எனக்குச்  சரிக்கட்டினார்.  {Ps  18:20}

 

கர்த்தருடைய  வழிகளைக்  கைக்கொண்டுவந்தேன்;  நான்  என்  தேவனுக்குத்  துரோகம்பண்ணினதில்லை.  {Ps  18:21}

 

அவருடைய  நியாயங்களையெல்லாம்  எனக்கு  முன்பாக  நிறுத்தினேன்;  அவருடைய  பிரமாணங்களை  நான்  தள்ளிப்போடவில்லை.  {Ps  18:22}

 

அவர்  முன்பாக  நான்  மனவுண்மையாயிருந்து,  என்  துர்க்குணத்துக்கு  என்னை  விலக்கிக்  காத்துக்கொண்டேன்.  {Ps  18:23}

 

ஆகையால்  கர்த்தர்  என்  நீதிக்கும்,  தம்முடைய  கண்களுக்கு  முன்னிருக்கிற  என்  கைகளின்  சுத்தத்திற்கும்  தக்கதாக  எனக்குப்  பலனளித்தார்.  {Ps  18:24}

 

தயவுள்ளவனுக்கு  நீர்  தயவுள்ளவராகவும்,  உத்தமனுக்கு  நீர்  உத்தமராகவும்;  {Ps  18:25}

 

புனிதனுக்கு  நீர்  புனிதராகவும்,  மாறுபாடுள்ளவனுக்கு  நீர்  மாறுபடுகிறவராகவும்  தோன்றுவீர்.  {Ps  18:26}

 

தேவரீர்  சிறுமைப்பட்ட  ஜனத்தை  இரட்சிப்பீர்;  மேட்டிமையான  கண்களைத்  தாழ்த்துவீர்.  {Ps  18:27}

 

தேவரீர்  என்  விளக்கை  ஏற்றுவீர்;  என்  தேவனாகிய  கர்த்தர்  என்  இருளை  வெளிச்சமாக்குவார்.  {Ps  18:28}

 

உம்மாலே  நான்  ஒரு  சேனைக்குள்  பாய்ந்துபோவேன்;  என்  தேவனாலே  ஒரு  மதிலைத்  தாண்டுவேன்.  {Ps  18:29}

 

தேவனுடைய  வழி  உத்தமமானது;  கர்த்தருடைய  வசனம்  புடமிடப்பட்டது;  தம்மை  நம்புகிற  அனைவருக்கும்  அவர்  கேடகமாயிருக்கிறார்.  {Ps  18:30}

 

கர்த்தரையல்லாமல்  தேவன்  யார்?  நம்முடைய  தேவனையன்றிக்  கன்மலையும்  யார்?  {Ps  18:31}

 

என்னைப்  பலத்தால்  இடைகட்டி,  என்  வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்  தேவனே.  {Ps  18:32}

 

அவர்  என்  கால்களை  மான்களுடைய  கால்களைப்போலாக்கி,  என்னுடைய  உயர்தலங்களில்  என்னை  நிறுத்துகிறார்.  {Ps  18:33}

 

வெண்கல  வில்லும்  என்  புயங்களால்  வளையும்படி,  என்  கைகளை  யுத்தத்திற்குப்  பழக்குவிக்கிறார்.  {Ps  18:34}

 

உம்முடைய  இரட்சிப்பின்  கேடகத்தையும்  எனக்குத்  தந்தீர்;  உம்முடைய  வலதுகரம்  என்னைத்  தாங்குகிறது;  உம்முடைய  காருணியம்  என்னைப்  பெரியவனாக்கும்.  {Ps  18:35}

 

என்  கால்கள்  வழுவாதபடிக்கு,  நான்  நடக்கிற  வழியை  அகலமாக்கினீர்.  {Ps  18:36}

 

என்  சத்துருக்களைப்  பின்தொடர்ந்து,  அவர்களைப்  பிடிப்பேன்;  அவர்களை  நிர்மூலமாக்கும்வரைக்கும்  திரும்பேன்.  {Ps  18:37}

 

அவர்கள்  எழுந்திருக்கமாட்டாதபடிக்கு,  என்  பாதங்களின்கீழ்  விழத்தக்கதாக  அவர்களை  வெட்டினேன்.  {Ps  18:38}

 

யுத்தத்திற்கு  நீர்  என்னைப்  பலத்தால்  இடைகட்டி,  என்மேல்  எழும்பினவர்களை  என்  கீழ்  மடங்கப்பண்ணினீர்.  {Ps  18:39}

 

நான்  என்  பகைஞரைச்  சங்கரிக்கும்படியாக,  என்  சத்துருக்களின்  பிடரியை  எனக்கு  ஒப்புக்கொடுத்தீர்.  {Ps  18:40}

 

அவர்கள்  கூப்பிடுகிறார்கள்,  அவர்களை  இரட்சிப்பார்  ஒருவருமில்லை;  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகிறார்கள்,  அவர்களுக்கு  அவர்  உத்தரவு  கொடுக்கிறதில்லை.  {Ps  18:41}

 

நான்  அவர்களைக்  காற்றுமுகத்திலே  பறக்கிற  தூளாக  இடித்து,  தெருக்களிலுள்ள  சேற்றைப்போல்  அவர்களை  எறிந்துபோடுகிறேன்.  {Ps  18:42}

 

ஜனங்களின்  சண்டைகளுக்கு  நீர்  என்னைத்  தப்புவித்து,  ஜாதிகளுக்கு  என்னைத்  தலைவனாக்குகிறீர்;  நான்  அறியாத  ஜனங்கள்  என்னைச்  சேவிக்கிறார்கள்.  {Ps  18:43}

 

அவர்கள்  என்  சத்தத்தைக்  கேட்டவுடனே  எனக்குக்  கீழ்ப்படிகிறார்கள்;  அந்நியரும்  எனக்கு  இச்சகம்பேசி  அடங்குகிறார்கள்.  {Ps  18:44}

 

அந்நியர்  முனைவிழுந்துபோய்,  தங்கள்  அரண்களிலிருந்து  தத்தளிப்பாய்ப்  புறப்படுகிறார்கள்.  {Ps  18:45}

 

கர்த்தர்  ஜீவனுள்ளவர்;  என்  கன்மலையானவர்  துதிக்கப்படுவாராக;  என்  இரட்சிப்பின்  தேவன்  உயர்ந்திருப்பாராக.  {Ps  18:46}

 

அவர்  எனக்காகப்  பழிக்குப்  பழிவாங்கி,  ஜனங்களை  எனக்குக்  கீழ்ப்படுத்துகிற  தேவனானவர்.  {Ps  18:47}

 

அவரே  என்  சத்துருக்களுக்கு  என்னை  விலக்கி  விடுவிக்கிறவர்;  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்மேல்  என்னை  நீர்  உயர்த்தி,  கொடுமையான  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவிக்கிறீர்.  {Ps  18:48}

 

இதினிமித்தம்  கர்த்தாவே,  ஜாதிகளுக்குள்ளே  உம்மைத்  துதித்து,  உம்முடைய  நாமத்திற்குச்  சங்கீதம்  பாடுவேன்.  {Ps  18:49}

 

தாம்  ஏற்படுத்தின  ராஜாவுக்கு  மகத்தான  இரட்சிப்பை  அளித்து,  தாம்  அபிஷேகம்பண்ணின  தாவீதுக்கும்<David>  அவன்  சந்ததிக்கும்  சதாகாலமும்  கிருபை  செய்கிறார்.  {Ps  18:50}

 

வானங்கள்  தேவனுடைய  மகிமையை  வெளிப்படுத்துகிறது,  ஆகாயவிரிவு  அவருடைய  கரங்களின்  கிரியையை  அறிவிக்கிறது.  {Ps  19:1}

 

பகலுக்குப்  பகல்  வார்த்தைகளைப்  பொழிகிறது,  இரவுக்கு  இரவு  அறிவைத்  தெரிவிக்கிறது.  {Ps  19:2}

 

அவைகளுக்குப்  பேச்சுமில்லை,  வார்த்தையுமில்லை,  அவைகளின்  சத்தம்  கேட்கப்படுவதுமில்லை.  {Ps  19:3}

 

ஆகிலும்  அவைகளின்  சத்தம்  பூமியெங்கும்,  அவைகளின்  வசனங்கள்  பூச்சக்கரத்துக்  கடைசிவரைக்கும்  செல்லுகிறது;  அவைகளில்  சூரியனுக்கு  ஒரு  கூடாரத்தை  ஸ்தாபித்தார்.  {Ps  19:4}

 

அது  தன்  மணவறையிலிருந்து  புறப்படுகிற  மணவாளனைப்போலிருந்து,  பராக்கிரமசாலியைப்போல்  தன்  பாதையில்  ஓட  மகிழ்ச்சியாயிருக்கிறது.  {Ps  19:5}

 

அது  வானங்களின்  ஒரு  முனையிலிருந்து  புறப்பட்டு,  அவைகளின்  மறுமுனைவரைக்கும்  சுற்றியோடுகிறது;  அதின்  காந்திக்கு  மறைவானது  ஒன்றுமில்லை.  {Ps  19:6}

 

கர்த்தருடைய  வேதம்  குறைவற்றதும்,  ஆத்துமாவை  உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;  கர்த்தருடைய  சாட்சி  சத்தியமும்,  பேதையை  ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.  {Ps  19:7}

 

கர்த்தருடைய  நியாயங்கள்  செம்மையும்,  இருதயத்தைச்  சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது;  கர்த்தருடைய  கற்பனை  தூய்மையும்,  கண்களைத்  தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.  {Ps  19:8}

 

கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயம்  சுத்தமும்,  என்றைக்கும்  நிலைக்கிறதுமாயிருக்கிறது;  கர்த்தருடைய  நியாயங்கள்  உண்மையும்,  அவைகள்  அனைத்தும்  நீதியுமாயிருக்கிறது.  {Ps  19:9}

 

அவைகள்  பொன்னிலும்,  மிகுந்த  பசும்பொன்னிலும்  விரும்பப்படத்தக்கதும்,  தேனிலும்  தேன்கூட்டிலிருந்து  ஒழுகும்  தெளிதேனிலும்  மதுரமுள்ளதுமாய்  இருக்கிறது.  {Ps  19:10}

 

அன்றியும்  அவைகளால்  உமது  அடியேன்  எச்சரிக்கப்படுகிறேன்;  அவைகளைக்  கைக்கொள்ளுகிறதினால்  மிகுந்த  பலன்  உண்டு.  {Ps  19:11}

 

தன்  பிழைகளை  உணருகிறவன்  யார்?  மறைவான  குற்றங்களுக்கு  என்னை  நீங்கலாக்கும்.  {Ps  19:12}

 

துணிகரமான  பாவங்களுக்கு  உமது  அடியேனை  விலக்கிக்காரும்,  அவைகள்  என்னை  ஆண்டுகொள்ள  ஒட்டாதிரும்;  அப்பொழுது  நான்  உத்தமனாகி,  பெரும்பாதகத்துக்கு  நீங்கலாயிருப்பேன்.  {Ps  19:13}

 

என்  கன்மலையும்  என்  மீட்பருமாகிய  கர்த்தாவே,  என்  வாயின்  வார்த்தைகளும்,  என்  இருதயத்தின்  தியானமும்,  உமது  சமுகத்தில்  பிரீதியாயிருப்பதாக.  {Ps  19:14}

 

ஆபத்துநாளிலே  கர்த்தர்  உமது  ஜெபத்தைக்  கேட்பாராக;  யாக்கோபின்<Jacob>  தேவனுடைய  நாமம்  உமக்கு  உயர்ந்த  அடைக்கலமாவதாக.  {Ps  20:1}

 

அவர்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  உமக்கு  ஒத்தாசையனுப்பி,  சீயோனிலிருந்து<Zion>  உம்மை  ஆதரிப்பாராக.  {Ps  20:2}

 

நீர்  செலுத்தும்  காணிக்கைகளையெல்லாம்  அவர்  நினைத்து,  உமது  சர்வாங்க  தகனபலியைப்  பிரியமாய்  ஏற்றுக்கொள்வாராக.  (சேலா<Selah>.)  {Ps  20:3}

 

அவர்  உமது  மனவிருப்பத்தின்படி  உமக்குத்  தந்தருளி,  உமது  ஆலோசனைகளையெல்லாம்  நிறைவேற்றுவாராக.  {Ps  20:4}

 

நாங்கள்  உமது  இரட்சிப்பினால்  மகிழ்ந்து,  எங்கள்  தேவனுடைய  நாமத்திலே  கொடியேற்றுவோம்;  உமது  வேண்டுதல்களையெல்லாம்  கர்த்தர்  நிறைவேற்றுவாராக.  {Ps  20:5}

 

கர்த்தர்  தாம்  அபிஷேகம்பண்ணினவரை  இரட்சிக்கிறார்  என்பதை  இப்பொழுது  அறிந்திருக்கிறேன்;  தமது  வலதுகரம்  செய்யும்  இரட்சிப்பின்  வல்லமைகளைக்  காண்பித்து,  தமது  பரிசுத்த  வானத்திலிருந்து  அவருடைய  ஜெபத்தைக்  கேட்பார்.  {Ps  20:6}

 

சிலர்  இரதங்களைக்குறித்தும்,  சிலர்  குதிரைகளைக்குறித்தும்  மேன்மைபாராட்டுகிறார்கள்;  நாங்களோ  எங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைக்குறித்தே  மேன்மைபாராட்டுவோம்.  {Ps  20:7}

 

அவர்கள்  முறிந்து  விழுந்தார்கள்;  நாங்களோ  எழுந்து  நிமிர்ந்து  நிற்கிறோம்.  {Ps  20:8}

 

கர்த்தாவே,  இரட்சியும்;  நாங்கள்  கூப்பிடுகிற  நாளிலே  ராஜா  எங்களுக்குச்  செவிகொடுப்பாராக.  {Ps  20:9}

 

கர்த்தாவே,  உம்முடைய  வல்லமையிலே  ராஜா  மகிழ்ச்சியாயிருக்கிறார்;  உம்முடைய  இரட்சிப்பிலே  எவ்வளவாய்க்  களிகூருகிறார்!  {Ps  21:1}

 

அவருடைய  மனவிருப்பத்தின்படி  நீர்  அவருக்குத்  தந்தருளி,  அவருடைய  உதடுகளின்  விண்ணப்பத்தைத்  தள்ளாதிருக்கிறீர்.  (சேலா<Selah>.)  {Ps  21:2}

 

உத்தம  ஆசீர்வாதங்களோடு  நீர்  அவருக்கு  எதிர்கொண்டுவந்து,  அவர்  சிரசில்  பொற்கிரீடம்  தரிப்பிக்கிறீர்.  {Ps  21:3}

 

அவர்  உம்மிடத்தில்  ஆயுசைக்கேட்டார்;  நீர்  அவருக்கு  என்றென்றைக்குமுள்ள  தீர்க்காயுசை  அளித்தீர்.  {Ps  21:4}

 

உமது  இரட்சிப்பினால்  அவர்  மகிமை  பெரிதாயிருக்கிறது;  மேன்மையையும்  மகத்துவத்தையும்  அவருக்கு  அருளினீர்.  {Ps  21:5}

 

அவரை  நித்திய  ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்;  அவரை  உம்முடைய  சமுகத்தின்  மகிழ்ச்சியினால்  பூரிப்பாக்குகிறீர்.  {Ps  21:6}

 

ராஜா  கர்த்தர்மேல்  நம்பிக்கையாயிருக்கிறார்;  உன்னதமானவருடைய  தயவினால்  அசைக்கப்படாதிருப்பார்.  {Ps  21:7}

 

உமது  கை  உமது  சத்துருக்களெல்லாரையும்  எட்டிப்பிடிக்கும்;  உமது  வலதுகரம்  உம்மைப்  பகைக்கிறவர்களைக்  கண்டுபிடிக்கும்.  {Ps  21:8}

 

உமது  கோபத்தின்  காலத்திலே  அவர்களை  அக்கினிச்  சூளையாக்கிப்  போடுவீர்;  கர்த்தர்  தமது  கோபத்திலே  அவர்களை  அழிப்பார்;  அக்கினி  அவர்களைப்  பட்சிக்கும்.  {Ps  21:9}

 

அவர்கள்  கனியை  பூமியிலிராதபடி  நீர்  அழித்து,  அவர்கள்  சந்ததியை  மனுபுத்திரரிலிராதபடி  ஒழியப்பண்ணுவீர்.  {Ps  21:10}

 

அவர்கள்  உமக்கு  விரோதமாய்ப்  பொல்லாங்கு  நினைத்தார்கள்;  தீவினையை  எத்தனம்பண்ணினார்கள்;  ஒன்றும்  வாய்க்காமற்போயிற்று.  {Ps  21:11}

 

அவர்களை  இலக்காக  வைத்து,  உம்முடைய  அம்புகளை  நாணேற்றி  அவர்கள்  முகத்திற்கு  நேரே  விடுகிறீர்.  {Ps  21:12}

 

கர்த்தாவே,  உம்முடைய  பலத்திலே  நீர்  எழுந்தருளும்;  அப்பொழுது  உம்முடைய  வல்லமையைப்  பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.  {Ps  21:13}

 

என்  தேவனே,  என்  தேவனே,  ஏன்  என்னைக்  கைவிட்டீர்?  எனக்கு  உதவி  செய்யாமலும்,  நான்  கதறிச்  சொல்லும்  வார்த்தைகளைக்  கேளாமலும்  ஏன்  தூரமாயிருக்கிறீர்?  {Ps  22:1}

 

என்  தேவனே,  நான்  பகலிலே  கூப்பிடுகிறேன்,  உத்தரவுகொடீர்;  இரவிலே  கூப்பிடுகிறேன்,  எனக்கு  அமைதலில்லை.  {Ps  22:2}

 

இஸ்ரவேலின்<Israel>  துதிகளுக்குள்  வாசமாயிருக்கிற  தேவரீரே  பரிசுத்தர்.  {Ps  22:3}

 

எங்கள்  பிதாக்கள்  உம்மிடத்தில்  நம்பிக்கைவைத்தார்கள்;  நம்பின  அவர்களை  நீர்  விடுவித்தீர்.  {Ps  22:4}

 

உம்மை  நோக்கிக்  கூப்பிட்டுத்  தப்பினார்கள்;  உம்மை  நம்பி  வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.  {Ps  22:5}

 

நானோ  ஒரு  புழு,  மனுஷனல்ல;  மனுஷரால்  நிந்திக்கப்பட்டும்,  ஜனங்களால்  அவமதிக்கப்பட்டும்  இருக்கிறேன்.  {Ps  22:6}

 

என்னைப்  பார்க்கிறவர்களெல்லாரும்  என்னைப்  பரியாசம்பண்ணி,  உதட்டைப்  பிதுக்கி,  தலையைத்  துலுக்கி:  {Ps  22:7}

 

கர்த்தர்மேல்  நம்பிக்கையாயிருந்தானே,  அவர்  இவனை  விடுவிக்கட்டும்;  இவன்மேல்  பிரியமாயிருக்கிறாரே,  இப்பொழுது  இவனை  மீட்டுவிடட்டும்  என்கிறார்கள்.  {Ps  22:8}

 

நீரே  என்னைக்  கர்ப்பத்திலிருந்து  எடுத்தவர்;  என்  தாயின்  முலைப்பாலை  நான்  உண்கையில்  என்னை  உம்முடையபேரில்  நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.  {Ps  22:9}

 

கர்ப்பத்திலிருந்து  வெளிப்பட்டபோதே  உமது  சார்பில்  விழுந்தேன்;  நான்  என்  தாயின்  வயிற்றில்  இருந்ததுமுதல்  நீர்  என்  தேவனாயிருக்கிறீர்.  {Ps  22:10}

 

என்னைவிட்டுத்  தூரமாகாதேயும்;  ஆபத்து  கிட்டியிருக்கிறது,  சகாயரும்  இல்லை.  {Ps  22:11}

 

அநேகம்  காளைகள்  என்னைச்  சூழ்ந்திருக்கிறது;  பாசான்<Bashan>  தேசத்துப்  பலத்த  எருதுகள்  என்னை  வளைந்துகொண்டது.  {Ps  22:12}

 

பீறி  கெர்ச்சிக்கிற  சிங்கத்தைப்போல்,  என்மேல்  தங்கள்  வாயைத்  திறக்கிறார்கள்.  {Ps  22:13}

 

தண்ணீரைப்போல  ஊற்றுண்டேன்;  என்  எலும்புகளெல்லாம்  கட்டுவிட்டது,  என்  இருதயம்  மெழுகுபோலாகி,  என்  குடல்களின்  நடுவே  உருகிற்று.  {Ps  22:14}

 

என்  பெலன்  ஓட்டைப்போல்  காய்ந்தது;  என்  நாவு  மேல்வாயோடே  ஒட்டிக்கொண்டது;  என்னை  மரணத்தூளிலே  போடுகிறீர்.  {Ps  22:15}

 

நாய்கள்  என்னைச்  சூழ்ந்திருக்கிறது;  பொல்லாதவர்களின்  கூட்டம்  என்னை  வளைந்துகொண்டது;  என்  கைகளையும்  என்  கால்களையும்  உருவக்  குத்தினார்கள்.  {Ps  22:16}

 

என்  எலும்புகளையெல்லாம்  நான்  எண்ணலாம்;  அவர்கள்  என்னை  நோக்கிப்  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  {Ps  22:17}

 

என்  வஸ்திரங்களைத்  தங்களுக்குள்ளே  பங்கிட்டு,  என்  உடையின்பேரில்  சீட்டுப்போடுகிறார்கள்.  {Ps  22:18}

 

ஆனாலும்  கர்த்தாவே,  நீர்  எனக்குத்  தூரமாகாதேயும்;  என்  பெலனே,  எனக்குச்  சகாயம்பண்ணத்  தீவிரித்துக்கொள்ளும்.  {Ps  22:19}

 

என்  ஆத்துமாவைப்  பட்டயத்திற்கும்,  எனக்கு  அருமையானதை  நாய்களின்  துஷ்டத்தனத்திற்கும்  தப்புவியும்.  {Ps  22:20}

 

என்னைச்  சிங்கத்தின்  வாயிலிருந்து  இரட்சியும்;  நான்  காண்டாமிருகத்தின்  கொம்புகளில்  இருக்கும்போது  எனக்குச்  செவிகொடுத்தருளினீர்.  {Ps  22:21}

 

உம்முடைய  நாமத்தை  என்  சகோதரருக்கு  அறிவித்து,  சபைநடுவில்  உம்மைத்  துதிப்பேன்.  {Ps  22:22}

 

கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்களே,  அவரைத்  துதியுங்கள்;  யாக்கோபின்<Jacob>  சந்ததியாரே,  நீங்கள்  எல்லாரும்  அவரைக்  கனம்பண்ணுங்கள்;  இஸ்ரவேலின்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  எல்லாரும்  அவர்பேரில்  பயபக்தியாயிருங்கள்.  {Ps  22:23}

 

உபத்திரவப்பட்டவனுடைய  உபத்திரவத்தை  அவர்  அற்பமாயெண்ணாமலும்  அருவருக்காமலும்,  தம்முடைய  முகத்தை  அவனுக்கு  மறைக்காமலுமிருந்து,  தம்மை  நோக்கி  அவன்  கூப்பிடுகையில்  அவனைக்  கேட்டருளினார்.  {Ps  22:24}

 

மகா  சபையிலே  நான்  உம்மைத்  துதிப்பேன்;  அவருக்குப்  பயப்படுகிறவர்களுக்கு  முன்பாக  என்  பொருத்தனைகளைச்  செலுத்துவேன்.  {Ps  22:25}

 

சாந்தகுணமுள்ளவர்கள்  புசித்துத்  திருப்தியடைவார்கள்;  கர்த்தரைத்  தேடுகிறவர்கள்  அவரைத்  துதிப்பார்கள்;  உங்கள்  இருதயம்  என்றென்றைக்கும்  வாழும்.  {Ps  22:26}

 

பூமியின்  எல்லைகளெல்லாம்  நினைவுகூர்ந்து  கர்த்தரிடத்தில்  திரும்பும்;  ஜாதிகளுடைய  சந்ததிகளெல்லாம்  உமது  சமுகத்தில்  தொழுதுகொள்ளும்.  {Ps  22:27}

 

ராஜ்யம்  கர்த்தருடையது;  அவர்  ஜாதிகளை  ஆளுகிறவர்.  {Ps  22:28}

 

பூமியின்  செல்வவான்கள்  யாவரும்  புசித்துப்  பணிந்துகொள்வார்கள்;  புழுதியில்  இறங்குகிறவர்கள்  யாவரும்  அவருக்கு  முன்பாக  வணங்குவார்கள்.  ஒருவனும்  தன்  ஆத்துமா  அழியாதபடி  அதைக்  காக்கக்கூடாதே.  {Ps  22:29}

 

ஒரு  சந்ததி  அவரைச்  சேவிக்கும்;  தலைமுறை  தலைமுறையாக  அது  ஆண்டவருடைய  சந்ததி  என்னப்படும்.  {Ps  22:30}

 

அவர்கள்  வந்து:  அவரே  இவைகளைச்  செய்தார்  என்று  பிறக்கப்போகிற  ஜனங்களுக்கு  அவருடைய  நீதியை  அறிவிப்பார்கள்.  {Ps  22:31}

 

கர்த்தர்  என்  மேய்ப்பராயிருக்கிறார்;  நான்  தாழ்ச்சியடையேன்.  {Ps  23:1}

 

அவர்  என்னைப்  புல்லுள்ள  இடங்களில்  மேய்த்து,  அமர்ந்த  தண்ணீர்கள்  அண்டையில்  என்னைக்  கொண்டுபோய்  விடுகிறார்.  {Ps  23:2}

 

அவர்  என்  ஆத்துமாவைத்  தேற்றி,  தம்முடைய  நாமத்தினிமித்தம்  என்னை  நீதியின்  பாதைகளில்  நடத்துகிறார்.  {Ps  23:3}

 

நான்  மரண  இருளின்  பள்ளத்தாக்கிலே  நடந்தாலும்  பொல்லாப்புக்குப்  பயப்படேன்;  தேவரீர்  என்னோடேகூட  இருக்கிறீர்;  உமது  கோலும்  உமது  தடியும்  என்னைத்  தேற்றும்.  {Ps  23:4}

 

என்  சத்துருக்களுக்கு  முன்பாக  நீர்  எனக்கு  ஒரு  பந்தியை  ஆயத்தப்படுத்தி,  என்  தலையை  எண்ணெயால்  அபிஷேகம்பண்ணுகிறீர்;  என்  பாத்திரம்  நிரம்பி  வழிகிறது.  {Ps  23:5}

 

என்  ஜீவனுள்ள  நாளெல்லாம்  நன்மையும்  கிருபையும்  என்னைத்  தொடரும்;  நான்  கர்த்தருடைய  வீட்டிலே  நீடித்த  நாட்களாய்  நிலைத்திருப்பேன்.  {Ps  23:6}

 

பூமியும்  அதின்  நிறைவும்,  உலகமும்  அதிலுள்ள  குடிகளும்  கர்த்தருடையது.  {Ps  24:1}

 

அவரே  அதைக்  கடல்களுக்கு  மேலாக  அஸ்திபாரப்படுத்தி,  அதை  நதிகளுக்கு  மேலாக  ஸ்தாபித்தார்.  {Ps  24:2}

 

யார்  கர்த்தருடைய  பர்வதத்தில்  ஏறுவான்?  யார்  அவருடைய  பரிசுத்த  ஸ்தலத்தில்  நிலைத்திருப்பான்?  {Ps  24:3}

 

கைகளில்  சுத்தமுள்ளவனும்  இருதயத்தில்  மாசில்லாதவனுமாயிருந்து,  தன்  ஆத்துமாவை  மாயைக்கு  ஒப்புக்கொடாமலும்,  கபடாய்  ஆணையிடாமலும்  இருக்கிறவனே.  {Ps  24:4}

 

அவன்  கர்த்தரால்  ஆசீர்வாதத்தையும்,  தன்  இரட்சிப்பின்  தேவனால்  நீதியையும்  பெறுவான்.  {Ps  24:5}

 

இதுவே  அவரைத்  தேடி  விசாரித்து,  அவருடைய  சமுகத்தை  நாடுகிற  யாக்கோபு<Jacob>  என்னும்  சந்ததி.  (சேலா<Selah>.)  {Ps  24:6}

 

வாசல்களே,  உங்கள்  தலைகளை  உயர்த்துங்கள்;  அநாதி  கதவுகளே,  உயருங்கள்;  மகிமையின்  ராஜா  உட்பிரவேசிப்பார்.  {Ps  24:7}

 

யார்  இந்த  மகிமையின்  ராஜா?  அவர்  வல்லமையும்  பராக்கிரமமுமுள்ள  கர்த்தர்;  அவர்  யுத்தத்தில்  பராக்கிரமமுள்ள  கர்த்தராமே.  {Ps  24:8}

 

வாசல்களே,  உங்கள்  தலைகளை  உயர்த்துங்கள்;  அநாதி  கதவுகளே,  உயருங்கள்,  மகிமையின்  ராஜா  உட்பிரவேசிப்பார்.  {Ps  24:9}

 

யார்  இந்த  மகிமையின்  ராஜா?  அவர்  சேனைகளின்  கர்த்தரானவர்;  அவரே  மகிமையின்  ராஜா.  (சேலா<Selah>.)  {Ps  24:10}

 

கர்த்தாவே,  உம்மிடத்தில்  என்  ஆத்துமாவை  உயர்த்துகிறேன்.  {Ps  25:1}

 

என்  தேவனே,  உம்மை  நம்பியிருக்கிறேன்,  நான்  வெட்கப்பட்டுப்போகாதபடி  செய்யும்;  என்  சத்துருக்கள்  என்னை  மேற்கொண்டு  மகிழவிடாதேயும்.  {Ps  25:2}

 

உம்மை  நோக்கிக்  காத்திருக்கிற  ஒருவரும்  வெட்கப்பட்டுப்  போகாதபடி  செய்யும்;  முகாந்தரமில்லாமல்  துரோகம்பண்ணுகிறவர்களே  வெட்கப்பட்டுப்  போவார்களாக.  {Ps  25:3}

 

கர்த்தாவே,  உம்முடைய  வழிகளை  எனக்குத்  தெரிவியும்;  உம்முடைய  பாதைகளை  எனக்குப்  போதித்தருளும்.  {Ps  25:4}

 

உம்முடைய  சத்தியத்திலே  என்னை  நடத்தி,  என்னைப்  போதித்தருளும்;  நீரே  என்  இரட்சிப்பின்  தேவன்,  உம்மை  நோக்கி  நாள்முழுதும்  காத்திருக்கிறேன்.  {Ps  25:5}

 

கர்த்தாவே,  உம்முடைய  இரக்கங்களையும்  உம்முடைய  காருணியங்களையும்  நினைத்தருளும்,  அவைகள்  அநாதிகாலமுதல்  இருக்கிறதே.  {Ps  25:6}

 

என்  இளவயதின்  பாவங்களையும்  என்  மீறுதல்களையும்  நினையாதிரும்;  கர்த்தாவே,  உம்முடைய  தயவினிமித்தம்  என்னை  உமது  கிருபையின்படியே  நினைத்தருளும்.  {Ps  25:7}

 

கர்த்தர்  நல்லவரும்  உத்தமருமாயிருக்கிறார்;  ஆகையால்  பாவிகளுக்கு  வழியைத்  தெரிவிக்கிறார்.  {Ps  25:8}

 

சாந்தகுணமுள்ளவர்களை  நியாயத்திலே  நடத்தி,  சாந்தகுணமுள்ளவர்களுக்குத்  தமது  வழியைப்  போதிக்கிறார்.  {Ps  25:9}

 

கர்த்தருடைய  உடன்படிக்கையையும்  அவருடைய  சாட்சிகளையும்  கைக்கொள்ளுகிறவர்களுக்கு,  அவருடைய  பாதைகளெல்லாம்  கிருபையும்  சத்தியமுமானவைகள்.  {Ps  25:10}

 

கர்த்தாவே,  என்  அக்கிரமம்  பெரிது;  உம்முடைய  நாமத்தினிமித்தம்  அதை  மன்னித்தருளும்.  {Ps  25:11}

 

கர்த்தருக்குப்  பயப்படுகிற  மனுஷன்  எவனோ  அவனுக்குத்  தாம்  தெரிந்துகொள்ளும்  வழியைப்  போதிப்பார்.  {Ps  25:12}

 

அவன்  ஆத்துமா  நன்மையில்  தங்கும்;  அவன்  சந்ததி  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்ளும்.  {Ps  25:13}

 

கர்த்தருடைய  இரகசியம்  அவருக்குப்  பயந்தவர்களிடத்தில்  இருக்கிறது;  அவர்களுக்குத்  தம்முடைய  உடன்படிக்கையைத்  தெரியப்படுத்துவார்.  {Ps  25:14}

 

என்  கண்கள்  எப்போதும்  கர்த்தரை  நோக்கிக்  கொண்டிருக்கிறது;  அவரே  என்  கால்களை  வலைக்கு  நீங்கலாக்கிவிடுவார்.  {Ps  25:15}

 

என்மேல்  நோக்கமாகி,  எனக்கு  இரங்கும்;  நான்  தனித்தவனும்  சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.  {Ps  25:16}

 

என்  இருதயத்தின்  வியாகுலங்கள்  பெருகியிருக்கிறது;  என்  இடுக்கண்களுக்கு  என்னை  நீங்கலாக்கிவிடும்.  {Ps  25:17}

 

என்  துன்பத்தையும்  என்  வருத்தத்தையும்  பார்த்து,  என்  பாவங்களையெல்லாம்  மன்னித்தருளும்.  {Ps  25:18}

 

என்  சத்துருக்களைப்  பாரும்;  அவர்கள்  பெருகியிருந்து,  உக்கிரபகையாய்  என்னைப்  பகைக்கிறார்கள்.  {Ps  25:19}

 

என்  ஆத்துமாவைக்  காப்பாற்றி  என்னை  விடுவியும்;  நான்  வெட்கப்பட்டுப்போகாதபடி  செய்யும்;  உம்மை  நம்பியிருக்கிறேன்.  {Ps  25:20}

 

உத்தமமும்  நேர்மையும்  என்னைக்  காக்கக்கடவது;  நான்  உமக்குக்  காத்திருக்கிறேன்.  {Ps  25:21}

 

தேவனே,  இஸ்ரவேலை<Israel>  அவனுடைய  எல்லா  இக்கட்டுகளுக்கும்  நீங்கலாக்கி  மீட்டுவிடும்.  {Ps  25:22}

 

கர்த்தாவே,  என்னை  நியாயம்  விசாரியும்,  நான்  என்  உத்தமத்திலே  நடக்கிறேன்;  நான்  கர்த்தரை  நம்பியிருக்கிறேன்,  ஆகையால்  நான்  தள்ளாடுவதில்லை.  {Ps  26:1}

 

கர்த்தாவே,  என்னைப்  பரீட்சித்து,  என்னைச்  சோதித்துப்பாரும்;  என்  உள்ளிந்திரியங்களையும்  என்  இருதயத்தையும்  புடமிட்டுப்பாரும்.  {Ps  26:2}

 

உம்முடைய  கிருபை  என்  கண்களுக்கு  முன்பாக  இருக்கிறது;  உம்முடைய  சத்தியத்திலே  நடந்துகொள்ளுகிறேன்.  {Ps  26:3}

 

வீணரோடே  நான்  உட்காரவில்லை,  வஞ்சகரிடத்தில்  நான்  சேருவதில்லை.  {Ps  26:4}

 

பொல்லாதவர்களின்  கூட்டத்தைப்  பகைக்கிறேன்;  துன்மார்க்கரோடே  உட்காரேன்.  {Ps  26:5}

 

கர்த்தாவே,  நான்  துதியின்  சத்தத்தைத்  தொனிக்கப்பண்ணி,  உம்முடைய  அதிசயங்களையெல்லாம்  விவரிப்பதற்காக,  {Ps  26:6}

 

நான்  குற்றமில்லாமையிலே  என்  கைகளைக்  கழுவி,  உம்முடைய  பீடத்தைச்  சுற்றிவருகிறேன்.  {Ps  26:7}

 

கர்த்தாவே,  உமது  ஆலயமாகிய  வாசஸ்தலத்தையும்,  உமது  மகிமை  தங்கிய  ஸ்தானத்தையும்  வாஞ்சிக்கிறேன்.  {Ps  26:8}

 

என்  ஆத்துமாவைப்  பாவிகளோடும்,  என்  ஜீவனை  இரத்தப்பிரியரோடுங்கூட  வாரிக்கொள்ளாதேயும்.  {Ps  26:9}

 

அவர்கள்  கைகளிலே  தீவினையிருக்கிறது;  அவர்கள்  வலதுகை  பரிதானங்களால்  நிறைந்திருக்கிறது.  {Ps  26:10}

 

நானோ  என்  உத்தமத்திலே  நடப்பேன்;  என்னை  மீட்டுக்கொண்டு  என்மேல்  இரக்கமாயிரும்.  {Ps  26:11}

 

என்  கால்  செம்மையான  இடத்திலே  நிற்கிறது;  சபைகளிலே  நான்  கர்த்தரைத்  துதிப்பேன்.  {Ps  26:12}

 

கர்த்தர்  என்  வெளிச்சமும்  என்  இரட்சிப்புமானவர்,  யாருக்குப்  பயப்படுவேன்?  கர்த்தர்  என்  ஜீவனின்  பெலனானவர்,  யாருக்கு  அஞ்சுவேன்?  {Ps  27:1}

 

என்  சத்துருக்களும்  என்  பகைஞருமாகிய  பொல்லாதவர்கள்  என்  மாம்சத்தைப்  பட்சிக்க,  என்னை  நெருக்குகையில்  அவர்களே  இடறிவிழுந்தார்கள்.  {Ps  27:2}

 

எனக்கு  விரோதமாக  ஒரு  பாளயமிறங்கினாலும்,  என்  இருதயம்  பயப்படாது;  என்மேல்  யுத்தம்  எழும்பினாலும்,  இதிலே  நான்  நம்பிக்கையாயிருப்பேன்.  {Ps  27:3}

 

கர்த்தரிடத்தில்  ஒன்றை  நான்  கேட்டேன்,  அதையே  நாடுவேன்;  நான்  கர்த்தருடைய  மகிமையைப்  பார்க்கும்படியாகவும்,  அவருடைய  ஆலயத்தில்  ஆராய்ச்சிசெய்யும்படியாகவும்,  நான்  என்  ஜீவனுள்ள  நாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்தில்  தங்கியிருப்பதையே  நாடுவேன்.  {Ps  27:4}

 

தீங்குநாளில்  அவர்  என்னைத்  தம்முடைய  கூடாரத்தில்  மறைத்து,  என்னைத்  தமது  கூடார  மறைவிலே  ஒளித்துவைத்து,  என்னைக்  கன்மலையின்மேல்  உயர்த்துவார்.  {Ps  27:5}

 

இப்பொழுது  என்  தலை  என்னைச்  சுற்றிலும்  இருக்கிற  என்  சத்துருக்களுக்கு  மேலாக  உயர்த்தப்படும்;  அதினிமித்தம்  அவருடைய  கூடாரத்திலே  நான்  ஆனந்த  பலிகளையிட்டு,  கர்த்தரைப்  பாடி,  அவரைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  27:6}

 

கர்த்தாவே,  நான்  கூப்பிடுகிற  சத்தத்தை  நீர்  கேட்டு,  எனக்கு  இரங்கி,  எனக்கு  உத்தரவு  அருளிச்செய்யும்.  {Ps  27:7}

 

என்  முகத்தைத்  தேடுங்கள்  என்று  சொன்னீரே,  உம்முடைய  முகத்தையே  தேடுவேன்  கர்த்தாவே,  என்று  என்  இருதயம்  உம்மிடத்தில்  சொல்லிற்று.  {Ps  27:8}

 

உமது  முகத்தை  எனக்கு  மறையாதேயும்;  நீர்  கோபத்துடன்  உமது  அடியேனை  விலக்கிப்போடாதேயும்;  நீரே  எனக்குச்  சகாயர்;  என்  இரட்சிப்பின்  தேவனே,  என்னை  நெகிழவிடாமலும்  என்னைக்  கைவிடாமலும்  இரும்.  {Ps  27:9}

 

என்  தகப்பனும்  என்  தாயும்  என்னைக்  கைவிட்டாலும்,  கர்த்தர்  என்னைச்  சேர்த்துக்கொள்ளுவார்.  {Ps  27:10}

 

கர்த்தாவே,  உமது  வழியை  எனக்குப்  போதித்து,  என்  எதிராளிகளினிமித்தம்  செவ்வையான  பாதையில்  என்னை  நடத்தும்.  {Ps  27:11}

 

என்  சத்துருக்களின்  இஷ்டத்துக்கு  என்னை  ஒப்புக்கொடாதேயும்;  பொய்ச்சாட்சிகளும்  ஆக்கிரமித்துச்  சீறுகிறவர்களும்  எனக்கு  விரோதமாய்  எழும்பியிருக்கிறார்கள்.  {Ps  27:12}

 

நானோ,  ஜீவனுள்ளோர்  தேசத்திலே  கர்த்தருடைய  நன்மையைக்  காண்பேன்  என்று  விசுவாசியாதிருந்தால்  கெட்டுப்போயிருப்பேன்.  {Ps  27:13}

 

கர்த்தருக்குக்  காத்திரு;  அவர்  உன்  இருதயத்தை  ஸ்திரப்படுத்துவார்;  திடமனதாயிருந்து,  கர்த்தருக்கே  காத்திரு.  {Ps  27:14}

 

என்  கன்மலையாகிய  கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  நீர்  கேளாதவர்போல  மவுனமாயிராதேயும்;  நீர்  மவுனமாயிருந்தால்  நான்  குழியில்  இறங்குகிறவர்களுக்கு  ஒப்பாவேன்.  {Ps  28:1}

 

நான்  உம்மை  நோக்கிச்  சத்தமிட்டு,  உம்முடைய  பரிசுத்த  சந்நிதிக்கு  நேராகக்  கையெடுக்கையில்,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கேட்டருளும்.  {Ps  28:2}

 

அயலானுக்குச்  சமாதான  வாழ்த்துதலைச்  சொல்லியும்,  தங்கள்  இருதயங்களில்  பொல்லாப்பை  வைத்திருக்கிற  துன்மார்க்கரோடும்  அக்கிரமக்காரரோடும்  என்னை  வாரிக்கொள்ளாதேயும்.  {Ps  28:3}

 

அவர்களுடைய  கிரியைகளுக்கும்  அவர்களுடைய  நடத்தைகளின்  பொல்லாங்குக்கும்  தக்கதாக  அவர்களுக்குச்  செய்யும்;  அவர்கள்  கைகளின்  செய்கைக்குத்தக்கதாக  அவர்களுக்கு  அளியும்,  அவர்களுக்குச்  சரிக்குச்  சரிக்கட்டும்.  {Ps  28:4}

 

அவர்கள்  கர்த்தருடைய  செய்கைகளையும்  அவர்  கரத்தின்  கிரியைகளையும்  கவனியாதபடியால்,  அவர்களை  இடித்துப்போடுவார்,  அவர்களைக்  கட்டமாட்டார்.  {Ps  28:5}

 

கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கேட்டார்.  {Ps  28:6}

 

கர்த்தர்  என்  பெலனும்  என்  கேடகமுமாயிருக்கிறார்;  என்  இருதயம்  அவரை  நம்பியிருந்தது;  நான்  சகாயம்  பெற்றேன்;  ஆகையால்  என்  இருதயம்  களிகூருகிறது;  என்  பாட்டினால்  அவரைத்  துதிப்பேன்.  {Ps  28:7}

 

கர்த்தர்  அவர்களுடைய  பெலன்;  அவரே  தாம்  அபிஷேகம்பண்ணினவனுக்கு  அரணான  அடைக்கலமானவர்.  {Ps  28:8}

 

தேவரீர்  உமது  ஜனத்தை  இரட்சித்து,  உமது  சுதந்தரத்தை  ஆசீர்வதியும்;  அவர்களைப்  போஷித்து,  அவர்களை  என்றென்றைக்கும்  உயர்த்தியருளும்.  {Ps  28:9}

 

பலவான்களின்  புத்திரரே,  கர்த்தருக்கு  மகிமையையும்  வல்லமையையும்  செலுத்துங்கள்;  கர்த்தருக்கே  அதைச்  செலுத்துங்கள்.  {Ps  29:1}

 

கர்த்தருடைய  நாமத்திற்குரிய  மகிமையை  அவருக்குச்  செலுத்துங்கள்;  பரிசுத்த  அலங்காரத்துடனே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுங்கள்.  {Ps  29:2}

 

கர்த்தருடைய  சத்தம்  தண்ணீர்களின்மேல்  தொனிக்கிறது;  மகிமையுள்ள  தேவன்  முழங்குகிறார்;  கர்த்தர்  திரளான  தண்ணீர்களின்மேல்  இருக்கிறார்.  {Ps  29:3}

 

கர்த்தருடைய  சத்தம்  வல்லமையுள்ளது;  கர்த்தருடைய  சத்தம்  மகத்துவமுள்ளது.  {Ps  29:4}

 

கர்த்தருடைய  சத்தம்  கேதுருமரங்களை  முறிக்கிறது;  கர்த்தர்  லீபனோனின்<Lebanon>  கேதுருமரங்களை  முறிக்கிறார்.  {Ps  29:5}

 

அவைகளைக்  கன்றுக்குட்டிகளைப்போலவும்,  லீபனோனையும்<Lebanon>  சீரியோனையும்<Sirion>  காண்டாமிருகக்  குட்டிகளைப்போலவும்  துள்ளப்பண்ணுகிறார்.  {Ps  29:6}

 

கர்த்தருடைய  சத்தம்  அக்கினிஜுவாலைகளைப்  பிளக்கும்.  {Ps  29:7}

 

கர்த்தருடைய  சத்தம்  வனாந்தரத்தை  அதிரப்பண்ணும்;  கர்த்தர்  காதேஸ்<Kadesh>  வனாந்தரத்தை  அதிரப்பண்ணுகிறார்.  {Ps  29:8}

 

கர்த்தருடைய  சத்தம்  பெண்மான்களை  ஈனும்படி  செய்து,  காடுகளை  வெளியாக்கும்;  அவருடைய  ஆலயத்திலுள்ள  யாவரும்  அவருடைய  மகிமையைப்  பிரஸ்தாபிக்கிறார்கள்.  {Ps  29:9}

 

கர்த்தர்  ஜலப்பிரவாகத்தின்மேல்  உட்கார்ந்திருக்கிறார்;  கர்த்தர்  என்றென்றைக்கும்  ராஜாவாக  வீற்றிருக்கிறார்.  {Ps  29:10}

 

கர்த்தர்  தமது  ஜனத்திற்குப்  பெலன்கொடுப்பார்;  கர்த்தர்  தமது  ஜனத்திற்குச்  சமாதானம்  அருளி,  அவர்களை  ஆசீர்வதிப்பார்.  {Ps  29:11}

 

கர்த்தாவே,  என்  சத்துருக்கள்  என்னை  மேற்கொண்டு  மகிழவொட்டாமல்,  நீர்  என்னைக்  கைதூக்கி  எடுத்தபடியினால்,  நான்  உம்மைப்  போற்றுவேன்.  {Ps  30:1}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்,  என்னை  நீர்  குணமாக்கினீர்.  {Ps  30:2}

 

கர்த்தாவே,  நீர்  என்  ஆத்துமாவைப்  பாதாளத்திலிருந்து  ஏறப்பண்ணி,  நான்  குழியில்  இறங்காதபடி  என்னை  உயிரோடே  காத்தீர்.  {Ps  30:3}

 

கர்த்தருடைய  பரிசுத்தவான்களே,  அவரைக்  கீர்த்தனம்பண்ணி,  அவருடைய  பரிசுத்தத்தின்  நினைவுகூருதலைக்  கொண்டாடுங்கள்.  {Ps  30:4}

 

அவருடைய  கோபம்  ஒரு  நிமிஷம்,  அவருடைய  தயவோ  நீடிய  வாழ்வு;  சாயங்காலத்தில்  அழுகை  தங்கும்,  விடியற்காலத்திலே  களிப்புண்டாகும்.  {Ps  30:5}

 

நான்  ஒருக்காலும்  அசைக்கப்படுவதில்லையென்று,  என்  வாழ்விலே  சொன்னேன்.  {Ps  30:6}

 

கர்த்தாவே,  உம்முடைய  தயவினால்  நீர்  என்  பர்வதத்தைத்  திடமாய்  நிற்கப்பண்ணியிருந்தீர்;  உமது  முகத்தை  நீர்  மறைத்துக்கொண்டபோதோ  நான்  கலங்கினவனானேன்.  {Ps  30:7}

 

நான்  குழியில்  இறங்குகையில்  என்  இரத்தத்தால்  என்ன  லாபமுண்டு?  புழுதி  உம்மைத்  துதித்து,  உமது  சத்தியத்தை  அறிவிக்குமோ?  {Ps  30:8}

 

கர்த்தாவே,  நீர்  எனக்குச்  செவிகொடுத்து  என்மேல்  இரக்கமாயிரும்;  கர்த்தாவே,  நீர்  எனக்குச்  சகாயராயிரும்  என்று  சொல்லி;  {Ps  30:9}

 

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  கர்த்தரை  நோக்கிக்  கெஞ்சினேன்.  {Ps  30:10}

 

என்  புலம்பலை  ஆனந்தக்  களிப்பாக  மாறப்பண்ணினீர்;  என்  மகிமை  அமர்ந்திராமல்  உம்மைக்  கீர்த்தனம்பண்ணும்படியாக  நீர்  என்  இரட்டைக்  களைந்துபோட்டு,  மகிழ்ச்சியென்னும்  கட்டினால்  என்னை  இடைகட்டினீர்.  {Ps  30:11}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மை  என்றென்றைக்கும்  துதிப்பேன்.  {Ps  30:12}

 

கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  நான்  ஒருக்காலும்  வெட்கமடையாதபடி  செய்யும்;  உமது  நீதியினிமித்தம்  என்னை  விடுவியும்.  {Ps  31:1}

 

உமது  செவியை  எனக்குச்  சாய்த்து,  சீக்கிரமாய்  என்னைத்  தப்புவியும்;  நீர்  எனக்குப்  பலத்த  துருகமும்,  எனக்கு  அடைக்கலமான  அரணுமாயிரும்.  {Ps  31:2}

 

என்  கன்மலையும்  என்  கோட்டையும்  நீரே;  உமது  நாமத்தினிமித்தம்  எனக்கு  வழிகாட்டி,  என்னை  நடத்தியருளும்.  {Ps  31:3}

 

அவர்கள்  எனக்கு  மறைவாய்  வைத்த  வலைக்கு  என்னை  நீங்கலாக்கிவிடும்;  தேவரீரே  எனக்கு  அரண்.  {Ps  31:4}

 

உமது  கையில்  என்  ஆவியை  ஒப்புவிக்கிறேன்;  சத்தியபரனாகிய  கர்த்தாவே,  நீர்  என்னை  மீட்டுக்கொண்டீர்.  {Ps  31:5}

 

வீண்மாயைகளைப்  பற்றிக்கொள்ளுகிறவர்களை  நான்  வெறுத்து,  கர்த்தரையே  நம்பியிருக்கிறேன்.  {Ps  31:6}

 

உமது  கிருபையிலே  களிகூர்ந்து  மகிழுவேன்;  நீர்  என்  உபத்திரவத்தைப்  பார்த்து,  என்  ஆத்துமவியாகுலங்களை  அறிந்திருக்கிறீர்.  {Ps  31:7}

 

சத்துருவின்  கையில்  என்னை  ஒப்புக்கொடாமல்,  என்  பாதங்களை  விசாலத்திலே  நிறுத்தினீர்.  {Ps  31:8}

 

எனக்கு  இரங்கும்  கர்த்தாவே,  நான்  நெருக்கப்படுகிறேன்;  துக்கத்தினால்  என்  கண்ணும்  என்  ஆத்துமாவும்  என்  வயிறுங்கூடக்  கருகிப்போயிற்று.  {Ps  31:9}

 

என்  பிராணன்  சஞ்சலத்தினாலும்,  என்  வருஷங்கள்  தவிப்பினாலும்  கழிந்து  போயிற்று;  என்  அக்கிரமத்தினாலே  என்  பெலன்  குறைந்து,  என்  எலும்புகள்  உலர்ந்துபோயிற்று.  {Ps  31:10}

 

என்  சத்துருக்களாகிய  யாவர்  நிமித்தமும்,  நான்  என்  அயலாருக்கு  நிந்தையும்,  எனக்கு  அறிமுகமானவர்களுக்கு  அருக்களிப்புமானேன்;  வீதியிலே  என்னைக்  கண்டவர்கள்  எனக்கு  விலகி  ஓடிப்போனார்கள்.  {Ps  31:11}

 

செத்தவனைப்போல  எல்லாராலும்  முழுவதும்  மறக்கப்பட்டேன்;  உடைந்த  பாத்திரத்தைப்போலானேன்.  {Ps  31:12}

 

அநேகர்  சொல்லும்  அவதூறைக்  கேட்டேன்;  எனக்கு  விரோதமாக  அவர்கள்  ஏகமாய்  ஆலோசனைபண்ணுகிறதினால்  திகில்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  என்  பிராணனை  வாங்கத்  தேடுகிறார்கள்.  {Ps  31:13}

 

நானோ,  கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  நீரே  என்  தேவன்  என்று  சொன்னேன்.  {Ps  31:14}

 

என்  காலங்கள்  உமது  கரத்திலிருக்கிறது;  என்  சத்துருக்களின்  கைக்கும்  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்களின்  கைக்கும்  என்னைத்  தப்புவியும்.  {Ps  31:15}

 

நீர்  உமது  முகத்தை  உமது  ஊழியக்காரன்மேல்  பிரகாசிக்கப்பண்ணி,  உமது  கிருபையினாலே  என்னை  இரட்சியும்.  {Ps  31:16}

 

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  நான்  வெட்கப்பட்டுப்  போகாதபடி  செய்யும்;  துன்மார்க்கர்  வெட்கப்பட்டுப்  பாதாளத்தில்  மவுனமாயிருக்கட்டும்.  {Ps  31:17}

 

நீதிமானுக்கு  விரோதமாய்ப்  பெருமையோடும்  இகழ்ச்சியோடும்  கடினமாய்ப்  பேசுகிற  பொய்  உதடுகள்  கட்டப்பட்டுப்போவதாக.  {Ps  31:18}

 

உமக்குப்  பயந்தவர்களுக்கும்,  மனுபுத்திரருக்கு  முன்பாக  உம்மை  நம்புகிறவர்களுக்கும்,  நீர்  உண்டு  பண்ணிவைத்திருக்கிற  உம்முடைய  நன்மை  எவ்வளவு  பெரிதாயிருக்கிறது!  {Ps  31:19}

 

மனுஷருடைய  அகங்காரத்துக்கு  அவர்களை  உமது  சமுகத்தின்  மறைவிலே  மறைத்து,  நாவுகளின்  சண்டைக்கு  அவர்களை  விலக்கி,  உமது  கூடாரத்திலே  ஒளித்துவைத்துக்  காப்பாற்றுகிறீர்.  {Ps  31:20}

 

கர்த்தர்  அரணான  நகரத்தில்  எனக்குத்  தமது  கிருபையை  அதிசயமாய்  விளங்கப்பண்ணினபடியால்,  அவருக்கு  ஸ்தோத்திரம்.  {Ps  31:21}

 

உம்முடைய  கண்களுக்கு  முன்பாக  இராதபடிக்கு  வெட்டுண்டேன்  என்று  நான்  என்  மனக்கலக்கத்திலே  சொன்னேன்;  ஆனாலும்  நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டபோது,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கேட்டீர்.  {Ps  31:22}

 

கர்த்தருடைய  பரிசுத்தவான்களே,  நீங்களெல்லாரும்  அவரில்  அன்புகூருங்கள்;  உண்மையானவனைக்  கர்த்தர்  தற்காத்து,  இடும்புசெய்கிறவனுக்குப்  பூரணமாய்ப்  பதிலளிப்பார்.  {Ps  31:23}

 

கர்த்தருக்குக்  காத்திருக்கிறவர்களே,  நீங்களெல்லாரும்  திடமனதாயிருங்கள்,  அவர்  உங்கள்  இருதயத்தை  ஸ்திரப்படுத்துவார்.  {Ps  31:24}

 

எவனுடைய  மீறுதல்  மன்னிக்கப்பட்டதோ,  எவனுடைய  பாவம்  மூடப்பட்டதோ,  அவன்  பாக்கியவான்.  {Ps  32:1}

 

எவனுடைய  அக்கிரமத்தைக்  கர்த்தர்  எண்ணாதிருக்கிறாரோ,  எவனுடைய  ஆவியில்  கபடமில்லாதிருக்கிறதோ,  அவன்  பாக்கியவான்.  {Ps  32:2}

 

நான்  அடக்கிவைத்தமட்டும்,  நித்தம்  என்  கதறுதலினாலே  என்  எலும்புகள்  உலர்ந்துபோயிற்று.  {Ps  32:3}

 

இரவும்  பகலும்  என்மேல்  உம்முடைய  கை  பாரமாயிருந்ததினால்,  என்  சாரம்  உஷ்ணகால  வறட்சிபோல  வறண்டுபோயிற்று.  (சேலா<Selah>.)  {Ps  32:4}

 

நான்  என்  அக்கிரமத்தை  மறைக்காமல்,  என்  பாவத்தை  உமக்கு  அறிவித்தேன்;  என்  மீறுதல்களைக்  கர்த்தருக்கு  அறிக்கையிடுவேன்  என்றேன்;  தேவரீர்  என்  பாவத்தின்  தோஷத்தை  மன்னித்தீர்.  (சேலா<Selah>.)  {Ps  32:5}

 

இதற்காகச்  சகாயங்கிடைக்குங்  காலத்தில்  பக்தியுள்ளவனெவனும்  உம்மை  நோக்கி  விண்ணப்பஞ்செய்வான்;  அப்பொழுது  மிகுந்த  ஜலப்பிரவாகம்  வந்தாலும்  அது  அவனை  அணுகாது.  {Ps  32:6}

 

நீர்  எனக்கு  மறைவிடமாயிருக்கிறீர்;  என்னை  நீர்  இக்கட்டுக்கு  விலக்கிக்காத்து,  இரட்சணியப்  பாடல்கள்  என்னைச்  சூழ்ந்துகொள்ளும்படி  செய்வீர்.  (சேலா<Selah>.)  {Ps  32:7}

 

நான்  உனக்குப்  போதித்து,  நீ  நடக்கவேண்டிய  வழியை  உனக்குக்  காட்டுவேன்;  உன்மேல்  என்  கண்ணை  வைத்து,  உனக்கு  ஆலோசனை  சொல்லுவேன்.  {Ps  32:8}

 

வாரினாலும்  கடிவாளத்தினாலும்  வாய்கட்டப்பட்டாலொழிய,  உன்  கிட்டச்  சேராத  புத்தியில்லாக்  குதிரையைப்போலவும்  கோவேறு  கழுதையைப்போலவும்  இருக்கவேண்டாம்.  {Ps  32:9}

 

துன்மார்க்கனுக்கு  அநேக  வேதனைகளுண்டு;  கர்த்தரை  நம்பியிருக்கிறவனையோ  கிருபை  சூழ்ந்துகொள்ளும்.  {Ps  32:10}

 

நீதிமான்களே,  கர்த்தருக்குள்  மகிழ்ந்து  களிகூருங்கள்;  செம்மையான  இருதயமுள்ளவர்களே,  நீங்கள்  எல்லாரும்  ஆனந்தமுழக்கமிடுங்கள்.  {Ps  32:11}

 

நீதிமான்களே,  கர்த்தருக்குள்  களிகூருங்கள்;  துதிசெய்வது  செம்மையானவர்களுக்குத்  தகும்.  {Ps  33:1}

 

சுரமண்டலத்தினால்  கர்த்தரைத்  துதித்து,  பத்து  நரம்பு  வீணையினாலும்  அவரைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்.  {Ps  33:2}

 

அவருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  ஆனந்தசத்தத்தோடே  வாத்தியங்களை  நேர்த்தியாய்  வாசியுங்கள்.  {Ps  33:3}

 

கர்த்தருடைய  வார்த்தை  உத்தமமும்,  அவருடைய  செய்கையெல்லாம்  சத்தியமுமாயிருக்கிறது.  {Ps  33:4}

 

அவர்  நீதியிலும்  நியாயத்திலும்  பிரியப்படுகிறார்;  பூமி  கர்த்தருடைய  காருணியத்தினால்  நிறைந்திருக்கிறது.  {Ps  33:5}

 

கர்த்தருடைய  வார்த்தையினால்  வானங்களும்,  அவருடைய  வாயின்  சுவாசத்தினால்  அவைகளின்  சர்வசேனையும்  உண்டாக்கப்பட்டது.  {Ps  33:6}

 

அவர்  சமுத்திர  ஜலங்களைக்  குவியலாகச்  சேர்த்து,  ஆழமான  ஜலங்களைப்  பொக்கிஷவைப்பாக  வைக்கிறார்.  {Ps  33:7}

 

பூமியெல்லாம்  கர்த்தருக்குப்  பயப்படுவதாக;  உலகத்திலுள்ள  குடிகளெல்லாம்  அவருக்கு  அஞ்சியிருப்பதாக.  {Ps  33:8}

 

அவர்  சொல்ல  ஆகும்,  அவர்  கட்டளையிட  நிற்கும்.  {Ps  33:9}

 

கர்த்தர்  ஜாதிகளின்  ஆலோசனையை  விருதாவாக்கி,  ஜனங்களுடைய  நினைவுகளை  அவமாக்குகிறார்.  {Ps  33:10}

 

கர்த்தருடைய  ஆலோசனை  நித்தியகாலமாகவும்,  அவருடைய  இருதயத்தின்  நினைவுகள்  தலைமுறை  தலைமுறையாகவும்  நிற்கும்.  {Ps  33:11}

 

கர்த்தரைத்  தங்களுக்குத்  தெய்வமாகக்கொண்ட  ஜாதியும்,  அவர்  தமக்குச்  சுதந்தரமாகத்  தெரிந்துகொண்ட  ஜனமும்  பாக்கியமுள்ளது.  {Ps  33:12}

 

கர்த்தர்  வானத்திலிருந்து  நோக்கிப்பார்த்து,  எல்லா  மனுபுத்திரரையும்  காண்கிறார்.  {Ps  33:13}

 

தாம்  வாசமாயிருக்கிற  ஸ்தானத்திலிருந்து  பூமியின்  குடிகள்  எல்லார்மேலும்  கண்ணோக்கமாயிருக்கிறார்.  {Ps  33:14}

 

அவர்களுடைய  இருதயங்களையெல்லாம்  அவர்  உருவாக்கி,  அவர்கள்  செய்கைகளையெல்லாம்  கவனித்திருக்கிறார்.  {Ps  33:15}

 

எந்த  ராஜாவும்  தன்  சேனையின்  மிகுதியால்  இரட்சிக்கப்படான்;  சவுரியவானும்  தன்  பலத்தின்  மிகுதியால்  தப்பான்.  {Ps  33:16}

 

இரட்சிக்கிறதற்குக்  குதிரை  விருதா;  அது  தன்  மிகுந்த  வீரியத்தால்  தப்புவியாது.  {Ps  33:17}

 

தமக்குப்  பயந்து,  தமது  கிருபைக்குக்  காத்திருக்கிறவர்களின்  ஆத்துமாக்களை  மரணத்திற்கு  விலக்கி  விடுவிக்கவும்;  {Ps  33:18}

 

பஞ்சத்தில்  அவர்களை  உயிரோடே  காக்கவும்,  கர்த்தருடைய  கண்  அவர்கள்மேல்  நோக்கமாயிருக்கிறது.  {Ps  33:19}

 

நம்முடைய  ஆத்துமா  கர்த்தருக்குக்  காத்திருக்கிறது;  அவரே  நமக்குத்  துணையும்  நமக்குக்  கேடகமுமானவர்.  {Ps  33:20}

 

அவருடைய  பரிசுத்த  நாமத்தை  நாம்  நம்பியிருக்கிறபடியால்,  நம்முடைய  இருதயம்  அவருக்குள்  களிகூரும்.  {Ps  33:21}

 

கர்த்தாவே,  நாங்கள்  உம்மை  நம்பியிருக்கிறபடியே  உமது  கிருபை  எங்கள்மேல்  இருப்பதாக.  {Ps  33:22}

 

கர்த்தரை  நான்  எக்காலத்திலும்  ஸ்தோத்திரிப்பேன்;  அவர்  துதி  எப்போதும்  என்  வாயிலிருக்கும்.  {Ps  34:1}

 

கர்த்தருக்குள்  என்  ஆத்துமா  மேன்மைபாராட்டும்;  சிறுமைப்பட்டவர்கள்  அதைக்கேட்டு  மகிழுவார்கள்.  {Ps  34:2}

 

என்னோடேகூடக்  கர்த்தரை  மகிமைப்படுத்துங்கள்;  நாம்  ஒருமித்து  அவர்  நாமத்தை  உயர்த்துவோமாக.  {Ps  34:3}

 

நான்  கர்த்தரைத்  தேடினேன்,  அவர்  எனக்குச்  செவிகொடுத்து,  என்னுடைய  எல்லாப்  பயத்துக்கும்  என்னை  நீங்கலாக்கிவிட்டார்.  {Ps  34:4}

 

அவர்கள்  அவரை  நோக்கிப்பார்த்துப்  பிரகாசமடைந்தார்கள்;  அவர்கள்  முகங்கள்  வெட்கப்படவில்லை.  {Ps  34:5}

 

இந்த  ஏழை  கூப்பிட்டான்,  கர்த்தர்  கேட்டு,  அவனை  அவன்  இடுக்கண்களுக்கெல்லாம்  நீங்கலாக்கி  இரட்சித்தார்.  {Ps  34:6}

 

கர்த்தருடைய  தூதன்  அவருக்குப்  பயந்தவர்களைச்  சூழப்  பாளயமிறங்கி  அவர்களை  விடுவிக்கிறார்.  {Ps  34:7}

 

கர்த்தர்  நல்லவர்  என்பதை  ருசித்துப்பாருங்கள்;  அவர்மேல்  நம்பிக்கையாயிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  34:8}

 

கர்த்தருடைய  பரிசுத்தவான்களே,  அவருக்குப்  பயந்திருங்கள்;  அவருக்குப்  பயந்தவர்களுக்குக்  குறைவில்லை.  {Ps  34:9}

 

சிங்கக்குட்டிகள்  தாழ்ச்சியடைந்து  பட்டினியாயிருக்கும்;  கர்த்தரைத்  தேடுகிறவர்களுக்கோ  ஒரு  நன்மையுங்  குறைவுபடாது.  {Ps  34:10}

 

பிள்ளைகளே,  வந்து  எனக்குச்  செவிகொடுங்கள்;  கர்த்தருக்குப்  பயப்படுதலை  உங்களுக்குப்  போதிப்பேன்.  {Ps  34:11}

 

நன்மையைக்  காணும்படி,  ஜீவனை  விரும்பி,  நீடித்த  நாட்களை  அபேட்சிக்கிற  மனுஷன்  யார்?  {Ps  34:12}

 

உன்  நாவைப்  பொல்லாப்புக்கும்,  உன்  உதடுகளைக்  கபட்டுவசனிப்புக்கும்  விலக்கிக்  காத்துக்கொள்.  {Ps  34:13}

 

தீமையை  விட்டு  விலகி,  நன்மைசெய்;  சமாதானத்தைத்  தேடி,  அதைத்  தொடர்ந்துகொள்.  {Ps  34:14}

 

கர்த்தருடைய  கண்கள்  நீதிமான்கள்மேல்  நோக்கமாயிருக்கிறது;  அவருடைய  செவிகள்  அவர்கள்  கூப்பிடுதலுக்குத்  திறந்திருக்கிறது.  {Ps  34:15}

 

தீமைசெய்கிறவர்களுடைய  பேரைப்  பூமியில்  இராமல்  அற்றுப்போகப்பண்ண,  கர்த்தருடைய  முகம்  அவர்களுக்கு  விரோதமாயிருக்கிறது.  {Ps  34:16}

 

நீதிமான்கள்  கூப்பிடும்போது  கர்த்தர்  கேட்டு,  அவர்களை  அவர்களுடைய  எல்லா  உபத்திரவங்களுக்கும்  நீங்கலாக்கிவிடுகிறார்.  {Ps  34:17}

 

நொறுங்குண்ட  இருதயமுள்ளவர்களுக்குக்  கர்த்தர்  சமீபமாயிருந்து,  நருங்குண்ட  ஆவியுள்ளவர்களை  இரட்சிக்கிறார்.  {Ps  34:18}

 

நீதிமானுக்கு  வரும்  துன்பங்கள்  அநேகமாயிருக்கும்,  கர்த்தர்  அவைகளெல்லாவற்றிலும்  நின்று  அவனை  விடுவிப்பார்.  {Ps  34:19}

 

அவனுடைய  எலும்புகளையெல்லாம்  காப்பாற்றுகிறார்;  அவைகளில்  ஒன்றும்  முறிக்கப்படுவதில்லை.  {Ps  34:20}

 

தீமை  துன்மார்க்கனைக்  கொல்லும்;  நீதிமானைப்  பகைக்கிறவர்கள்  குற்றவாளிகளாவார்கள்.  {Ps  34:21}

 

கர்த்தர்  தமது  ஊழியக்காரரின்  ஆத்துமாவை  மீட்டுக்கொள்ளுகிறார்;  அவரை  நம்புகிற  ஒருவன்மேலும்  குற்றஞ்சுமராது.  {Ps  34:22}

 

கர்த்தாவே,  நீர்  என்  வழக்காளிகளோடே  வழக்காடி,  என்னோடு  யுத்தம்பண்ணுகிறவர்களோடே  யுத்தம்பண்ணும்.  {Ps  35:1}

 

நீர்  கேடகத்தையும்  பரிசையையும்  பிடித்து,  எனக்கு  ஒத்தாசையாக  எழுந்துநில்லும்.  {Ps  35:2}

 

என்னைத்  துன்பப்படுத்துகிறவர்களோடு  எதிர்த்துநின்று,  ஈட்டியையோங்கி  அவர்களை  மறித்து:  நான்  உன்  இரட்சிப்பு  என்று  என்  ஆத்துமாவுக்குச்  சொல்லும்.  {Ps  35:3}

 

என்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்கள்  வெட்கப்பட்டுக்  கலங்குவார்களாக;  எனக்குத்  தீங்குசெய்ய  நினைக்கிறவர்கள்  நாணமடைவார்களாக.  {Ps  35:4}

 

அவர்கள்  காற்றுமுகத்தில்  பறக்கும்  பதரைப்போலாவார்களாக;  கர்த்தருடைய  தூதன்  அவர்களைத்  துரத்துவானாக.  {Ps  35:5}

 

அவர்களுடைய  வழி  இருளும்  சறுக்கலுமாயிருப்பதாக;  கர்த்தருடைய  தூதன்  அவர்களைப்  பின்தொடருவானாக.  {Ps  35:6}

 

முகாந்தரமில்லாமல்  எனக்காகத்  தங்கள்  வலையைக்  குழியில்  ஒளித்துவைத்தார்கள்;  முகாந்தரமில்லாமல்  என்  ஆத்துமாவுக்குப்  படுகுழி  வெட்டினார்கள்.  {Ps  35:7}

 

அவன்  நினையாத  அழிவு  அவனுக்கு  வரவும்,  அவன்  மறைவாய்  வைத்த  வலை  அவனையே  பிடிக்கவுங்கடவது;  அவனே  அந்தக்  குழியில்  விழுந்து  அழிவானாக.  {Ps  35:8}

 

என்  ஆத்துமா  கர்த்தரில்  களிகூர்ந்து,  அவருடைய  இரட்சிப்பில்  மகிழ்ந்திருக்கும்.  {Ps  35:9}

 

சிறுமைப்பட்டவனை  அவனிலும்  பலவானுடைய  கைக்கும்,  சிறுமையும்  எளிமையுமானவனைக்  கொள்ளையிடுகிறவனுடைய  கைக்கும்  தப்புவிக்கிற  உமக்கொப்பானவர்  யார்  கர்த்தாவே,  என்று  என்  எலும்புகளெல்லாம்  சொல்லும்.  {Ps  35:10}

 

கொடுமையான  சாட்சிகள்  எழும்பி,  நான்  அறியாததை  என்னிடத்தில்  கேட்கிறார்கள்.  {Ps  35:11}

 

நான்  செய்த  நன்மைக்குப்  பதிலாகத்  தீமைசெய்கிறார்கள்;  என்  ஆத்துமா  திக்கற்றுப்போகப்  பார்க்கிறார்கள்.  {Ps  35:12}

 

அவர்கள்  வியாதியாயிருந்தபோது  இரட்டு  என்  உடுப்பாயிருந்தது;  நான்  உபவாசத்தால்  என்  ஆத்துமாவை  உபத்திரப்படுத்தினேன்;  என்  ஜெபமும்  என்  மடியிலே  திரும்பவந்தது.  {Ps  35:13}

 

நான்  அவனை  என்  சிநேகிதனாகவும்  சகோதரனாகவும்  பாவித்து  நடந்துகொண்டேன்;  தாய்க்காகத்  துக்கிக்கிறவனைப்போல்  துக்கவஸ்திரம்  தரித்துத்  தலைகவிழ்ந்து  நடந்தேன்.  {Ps  35:14}

 

ஆனாலும்  எனக்கு  ஆபத்துண்டானபோது  அவர்கள்  சந்தோஷப்பட்டுக்  கூட்டங்கூடினார்கள்;  நீசரும்  நான்  அறியாதவர்களும்  எனக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடி,  ஓயாமல்  என்னை  நிந்தித்தார்கள்.  {Ps  35:15}

 

அப்பத்திற்காக  இச்சகம்பேசுகிற  பரியாசக்காரரோடே  சேர்ந்துகொண்டு  என்பேரில்  பற்கடிக்கிறார்கள்.  {Ps  35:16}

 

ஆண்டவரே,  எதுவரைக்கும்  இதைப்  பார்த்துக்கொண்டிருப்பீர்?  என்  ஆத்துமாவை  அழிவுக்கும்,  எனக்கு  அருமையானதைச்  சிங்கக்குட்டிகளுக்கும்  தப்புவியும்.  {Ps  35:17}

 

மகா  சபையிலே  உம்மைத்  துதிப்பேன்;  திரளான  ஜனங்களுக்குள்ளே  உம்மைப்  புகழுவேன்.  {Ps  35:18}

 

வீணாய்  எனக்குச்  சத்துருக்களானவர்கள்  என்னிமித்தம்  சந்தோஷியாமலும்,  முகாந்தரமில்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  கண்  சிமிட்டாமலும்  இருப்பார்களாக.  {Ps  35:19}

 

அவர்கள்  சமாதானமாய்ப்  பேசாமல்,  தேசத்திலே  அமைதலாயிருக்கிறவர்களுக்கு  விரோதமாய்  வஞ்சகமான  காரியங்களைக்  கருதுகிறார்கள்.  {Ps  35:20}

 

எனக்கு  விரோதமாகத்  தங்கள்  வாயை  விரிவாய்த்  திறந்து,    ,    ,  எங்கள்  கண்  கண்டது  என்கிறார்கள்.  {Ps  35:21}

 

கர்த்தாவே,  நீர்  இதைக்  கண்டீர்,  மவுனமாயிராதேயும்;  ஆண்டவரே,  எனக்குத்  தூரமாகாதேயும்.  {Ps  35:22}

 

என்  தேவனே,  என்  ஆண்டவரே,  எனக்கு  நியாயஞ்செய்யவும்  என்  வழக்கைத்  தீர்க்கவும்  விழித்துக்கொண்டு  எழுந்தருளும்.  {Ps  35:23}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்முடைய  நீதியின்படி  என்னை  நியாயம்  விசாரியும்,  என்னைக்குறித்து  அவர்களை  மகிழவொட்டாதிரும்.  {Ps  35:24}

 

அவர்கள்  தங்கள்  இருதயத்திலே:    ,  இதுவே  நாங்கள்  விரும்பினது  என்று  சொல்லாதபடிக்கும்,  அவனை  விழுங்கிவிட்டோம்  என்று  பேசாதபடிக்கும்  செய்யும்.  {Ps  35:25}

 

எனக்கு  நேரிட்ட  ஆபத்துக்காகச்  சந்தோஷிக்கிறவர்கள்  ஏகமாய்  வெட்கி  நாணி,  எனக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டுகிறவர்கள்  வெட்கத்தாலும்  இலச்சையாலும்  மூடப்படக்கடவர்கள்.  {Ps  35:26}

 

என்  நீதிவிளங்க  விரும்புகிறவர்கள்  கெம்பீரித்து  மகிழ்ந்து,  தமது  ஊழியக்காரனுடைய  சுகத்தை  விரும்புகிற  கர்த்தருக்கு  மகிமை  உண்டாவதாக  என்று  எப்போதும்  சொல்லக்கடவர்கள்.  {Ps  35:27}

 

என்  நாவு  உமது  நீதியையும்,  நாள்முழுதும்  உமது  துதியையும்  சொல்லிக்கொண்டிருக்கும்.  {Ps  35:28}

 

துன்மார்க்கனுடைய  துரோகப்பேச்சு  என்  உள்ளத்திற்குத்  தெரியும்;  அவன்  கண்களுக்குமுன்  தெய்வபயம்  இல்லை.  {Ps  36:1}

 

அவன்,  தன்  அக்கிரமம்  அருவருப்பானதென்று  காணப்படுமளவும்,  தன்  பார்வைக்கேற்றபடி  தனக்குத்தானே  இச்சகம்  பேசுகிறான்.  {Ps  36:2}

 

அவன்  வாயின்  வார்த்தைகள்  அக்கிரமமும்  வஞ்சகமுமுள்ளது;  புத்தியாய்  நடந்துகொள்வதையும்  நன்மைசெய்வதையும்  விட்டுவிட்டான்.  {Ps  36:3}

 

அவன்  தன்  படுக்கையின்மேல்  அக்கிரமத்தை  யோசித்து,  நல்லதல்லாத  வழியிலே  நிலைத்து,  பொல்லாப்பை  வெறுக்காதிருக்கிறான்.  {Ps  36:4}

 

கர்த்தாவே,  உமது  கிருபை  வானங்களில்  விளங்குகிறது;  உமது  சத்தியம்  மேகமண்டலங்கள்  பரியந்தம்  எட்டுகிறது.  {Ps  36:5}

 

உமது  நீதி  மகத்தான  பர்வதங்கள்போலவும்,  உமது  நியாயங்கள்  மகா  ஆழமாகவும்  இருக்கிறது;  கர்த்தாவே,  மனுஷரையும்  மிருகங்களையும்  காப்பாற்றுகிறீர்.  {Ps  36:6}

 

தேவனே,  உம்முடைய  கிருபை  எவ்வளவு  அருமையானது!  அதினால்  மனுபுத்திரர்  உமது  செட்டைகளின்  நிழலிலே  வந்தடைகிறார்கள்.  {Ps  36:7}

 

உமது  ஆலயத்திலுள்ள  சம்பூரணத்தினால்  திருப்தியடைவார்கள்;  உமது  பேரின்ப  நதியினால்  அவர்கள்  தாகத்தைத்  தீர்க்கிறீர்.  {Ps  36:8}

 

ஜீவஊற்று  உம்மிடத்தில்  இருக்கிறது;  உம்முடைய  வெளிச்சத்திலே  வெளிச்சம்  காண்கிறோம்.  {Ps  36:9}

 

உம்மை  அறிந்தவர்கள்மேல்  உமது  கிருபையையும்,  செம்மையான  இருதயமுள்ளவர்கள்மேல்  உமது  நீதியையும்  பாராட்டியருளும்.  {Ps  36:10}

 

பெருமைக்காரரின்  கால்  என்மேல்  வராமலும்,  துன்மார்க்கருடைய  கை  என்னைப்  பறக்கடியாமலும்  இருப்பதாக.  {Ps  36:11}

 

அதோ  அக்கிரமக்காரர்  விழுந்தார்கள்;  எழுந்திருக்கமாட்டாமல்  தள்ளுண்டுபோனார்கள்.  {Ps  36:12}

 

பொல்லாதவர்களைக்குறித்து  எரிச்சலடையாதே;  நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல்  பொறாமைகொள்ளாதே.  {Ps  37:1}

 

அவர்கள்  புல்லைப்போல்  சீக்கிரமாய்  அறுப்புண்டு,  பசும்பூண்டைப்போல்  வாடிப்போவார்கள்.  {Ps  37:2}

 

கர்த்தரை  நம்பி  நன்மைசெய்;  தேசத்தில்  குடியிருந்து  சத்தியத்தை  மேய்ந்துகொள்.  {Ps  37:3}

 

கர்த்தரிடத்தில்  மனமகிழ்ச்சியாயிரு;  அவர்  உன்  இருதயத்தின்  வேண்டுதல்களை  உனக்கு  அருள்செய்வார்.  {Ps  37:4}

 

உன்  வழியைக்  கர்த்தருக்கு  ஒப்புவித்து,  அவர்மேல்  நம்பிக்கையாயிரு;  அவரே  காரியத்தை  வாய்க்கப்பண்ணுவார்.  {Ps  37:5}

 

உன்  நீதியை  வெளிச்சத்தைப்போலவும்,  உன்  நியாயத்தைப்  பட்டப்பகலைப்போலவும்  விளங்கப்பண்ணுவார்.  {Ps  37:6}

 

கர்த்தரை  நோக்கி  அமர்ந்து,  அவருக்குக்  காத்திரு;  காரியசித்தியுள்ளவன்மேலும்  தீவினைகளைச்  செய்கிற  மனுஷன்மேலும்  எரிச்சலாகாதே.  {Ps  37:7}

 

கோபத்தை  நெகிழ்ந்து,  உக்கிரத்தை  விட்டுவிடு;  பொல்லாப்புச்செய்ய  ஏதுவான  எரிச்சல்  உனக்கு  வேண்டாம்.  {Ps  37:8}

 

பொல்லாதவர்கள்  அறுப்புண்டுபோவார்கள்;  கர்த்தருக்குக்  காத்திருக்கிறவர்களோ  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  {Ps  37:9}

 

இன்னுங்  கொஞ்சநேரந்தான்,  அப்போது  துன்மார்க்கன்  இரான்;  அவன்  ஸ்தானத்தை  உற்று  விசாரித்தாயானால்  அவன்  இல்லை.  {Ps  37:10}

 

சாந்தகுணமுள்ளவர்கள்  பூமியைச்  சுதந்தரித்து,  மிகுந்த  சமாதானத்தினால்  மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.  {Ps  37:11}

 

துன்மார்க்கன்  நீதிமானுக்கு  விரோதமாய்த்  தீங்கு  நினைத்து,  அவன்பேரில்  பற்கடிக்கிறான்.  {Ps  37:12}

 

ஆண்டவர்  அவனைப்பார்த்து  நகைக்கிறார்;  அவனுடைய  நாள்  வருகிறதென்று  காண்கிறார்.  {Ps  37:13}

 

சிறுமையும்  எளிமையுமானவனை  மடிவிக்கவும்,  செம்மை  மார்க்கத்தாரை  விழப்பண்ணவும்,  துன்மார்க்கர்  பட்டயத்தை  உருவி,  தங்கள்  வில்லை  நாணேற்றுகிறார்கள்.  {Ps  37:14}

 

ஆனாலும்  அவர்கள்  பட்டயம்  அவர்களுடைய  இருதயத்திற்குள்  உருவிப்போம்;  அவர்கள்  வில்லுகள்  முறியும்.  {Ps  37:15}

 

அநேக  துன்மார்க்கருக்குள்ள  செல்வத்திரட்சியைப்பார்க்கிலும்,  நீதிமானுக்குள்ள  கொஞ்சமே  நல்லது.  {Ps  37:16}

 

துன்மார்க்கருடைய  புயங்கள்  முறியும்;  நீதிமான்களையோ  கர்த்தர்  தாங்குகிறார்.  {Ps  37:17}

 

உத்தமர்களின்  நாட்களைக்  கர்த்தர்  அறிந்திருக்கிறார்;  அவர்கள்  சுதந்தரம்  என்றென்றைக்கும்  இருக்கும்.  {Ps  37:18}

 

அவர்கள்  ஆபத்துக்காலத்திலே  வெட்கப்பட்டுப்போகாதிருந்து,  பஞ்சகாலத்திலே  திருப்தியடைவார்கள்.  {Ps  37:19}

 

துன்மார்க்கரோ  அழிந்துபோவார்கள்,  கர்த்தருடைய  சத்துருக்கள்  ஆட்டுக்குட்டிகளின்  நிணத்தைப்போல்  புகைந்துபோவார்கள்,  அவர்கள்  புகையாய்ப்  புகைந்துபோவார்கள்.  {Ps  37:20}

 

துன்மார்க்கன்  கடன்வாங்கிச்  செலுத்தாமற்போகிறான்;  நீதிமானோ  இரங்கிக்கொடுக்கிறான்.  {Ps  37:21}

 

அவரால்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;  அவரால்  சபிக்கப்பட்டவர்களோ  அறுப்புண்டுபோவார்கள்.  {Ps  37:22}

 

நல்ல  மனுஷனுடைய  நடைகள்  கர்த்தரால்  உறுதிப்படும்,  அவனுடைய  வழியின்மேல்  அவர்  பிரியமாயிருக்கிறார்.  {Ps  37:23}

 

அவன்  விழுந்தாலும்  தள்ளுண்டு  போவதில்லை;  கர்த்தர்  தமது  கையினால்  அவனைத்  தாங்குகிறார்.  {Ps  37:24}

 

நான்  இளைஞனாயிருந்தேன்,  முதிர்வயதுள்ளவனுமானேன்;  ஆனாலும்  நீதிமான்  கைவிடப்பட்டதையும்,  அவன்  சந்ததி  அப்பத்துக்கு  இரந்துதிரிகிறதையும்  நான்  காணவில்லை.  {Ps  37:25}

 

அவன்  நித்தம்  இரங்கிக்  கடன்  கொடுக்கிறான்,  அவன்  சந்ததி  ஆசீர்வதிக்கப்படும்.  {Ps  37:26}

 

தீமையை  விட்டு  விலகி,  நன்மைசெய்;  என்றென்றைக்கும்  நிலைத்திருப்பாய்.  {Ps  37:27}

 

கர்த்தர்  நியாயத்தை  விரும்புகிறவர்;  அவர்  தமது  பரிசுத்தவான்களைக்  கைவிடுவதில்லை;  அவர்கள்  என்றைக்கும்  காக்கப்படுவார்கள்;  துன்மார்க்கருடைய  சந்ததியோ  அறுப்புண்டுபோம்.  {Ps  37:28}

 

நீதிமான்கள்  பூமியைச்  சுதந்தரித்துக்கொண்டு,  என்றைக்கும்  அதிலே  வாசமாயிருப்பார்கள்.  {Ps  37:29}

 

நீதிமானுடைய  வாய்  ஞானத்தை  உரைத்து,  அவனுடைய  நாவு  நியாயத்தைப்  பேசும்.  {Ps  37:30}

 

அவனுடைய  தேவன்  அருளிய  வேதம்  அவன்  இருதயத்தில்  இருக்கிறது;  அவன்  நடைகளில்  ஒன்றும்  பிசகுவதில்லை.  {Ps  37:31}

 

துன்மார்க்கன்  நீதிமான்மேல்  கண்வைத்து,  அவனைக்  கொல்ல  வகைதேடுகிறான்.  {Ps  37:32}

 

கர்த்தரோ  அவனை  இவன்  கையில்  விடுவதில்லை;  அவன்  நியாயம்  விசாரிக்கப்படுகையில்,  அவனை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்ப்பதுமில்லை.  {Ps  37:33}

 

நீ  கர்த்தருக்குக்  காத்திருந்து,  அவருடைய  வழியைக்  கைக்கொள்;  அப்பொழுது  நீ  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்வதற்கு  அவர்  உன்னை  உயர்த்துவார்;  துன்மார்க்கர்  அறுப்புண்டுபோவதை  நீ  காண்பாய்.  {Ps  37:34}

 

கொடிய  பலவந்தனான  ஒரு  துன்மார்க்கனைக்  கண்டேன்,  அவன்  தனக்கேற்ற  நிலத்தில்  முளைத்திருக்கிற  பச்சைமரத்தைப்போல்  தழைத்தவனாயிருந்தான்.  {Ps  37:35}

 

ஆனாலும்  அவன்  ஒழிந்துபோனான்;  பாருங்கள்,  அவன்  இல்லை;  அவனைத்  தேடினேன்,  அவன்  காணப்படவில்லை.  {Ps  37:36}

 

நீ  உத்தமனை  நோக்கி,  செம்மையானவனைப்  பார்த்திரு;  அந்த  மனுஷனுடைய  முடிவு  சமாதானம்.  {Ps  37:37}

 

அக்கிரமக்காரர்  ஏகமாய்  அழிக்கப்படுவார்கள்;  அறுப்புண்டுபோவதே  துன்மார்க்கரின்  முடிவு.  {Ps  37:38}

 

நீதிமான்களுடைய  இரட்சிப்பு  கர்த்தரால்  வரும்;  இக்கட்டுக்காலத்தில்  அவரே  அவர்கள்  அடைக்கலம்.  {Ps  37:39}

 

கர்த்தர்  அவர்களுக்கு  உதவிசெய்து,  அவர்களை  விடுவிப்பார்;  அவர்கள்  அவரை  நம்பியிருக்கிறபடியால்,  அவர்களைத்  துன்மார்க்கருடைய  கைக்குத்  தப்புவித்து  இரட்சிப்பார்.  {Ps  37:40}

 

கர்த்தாவே,  உம்முடைய  கோபத்தில்  என்னைக்  கடிந்துகொள்ளாதேயும்;  உம்முடைய  உக்கிரத்தில்  என்னைத்  தண்டியாதேயும்.  {Ps  38:1}

 

உம்முடைய  அம்புகள்  எனக்குள்ளே  தைத்திருக்கிறது;  உமது  கை  என்னை  இருத்துகிறது.  {Ps  38:2}

 

உமது  கோபத்தினால்  என்  மாம்சத்தில்  ஆரோக்கியமில்லை;  என்  பாவத்தினால்  என்  எலும்புகளில்  சவுக்கியமில்லை.  {Ps  38:3}

 

என்  அக்கிரமங்கள்  என்  தலைக்கு  மேலாகப்  பெருகிற்று,  அவைகள்  பாரச்சுமையைப்போல  என்னால்  தாங்கக்கூடாத  பாரமாயிற்று.  {Ps  38:4}

 

என்  மதிகேட்டினிமித்தம்  என்  புண்கள்  அழுகி  நாற்றமெடுத்தது.  {Ps  38:5}

 

நான்  வேதனைப்பட்டு  ஒடுங்கினேன்;  நாள்முழுதும்  துக்கப்பட்டுத்  திரிகிறேன்.  {Ps  38:6}

 

என்  குடல்கள்  எரிபந்தமாய்  எரிகிறது;  என்  மாம்சத்தில்  ஆரோக்கியம்  இல்லை.  {Ps  38:7}

 

நான்  பெலனற்றுப்போய்,  மிகவும்  நொறுக்கப்பட்டேன்;  என்  இருதயத்தின்  கொந்தளிப்பினால்  கதறுகிறேன்.  {Ps  38:8}

 

ஆண்டவரே,  என்  ஏங்கலெல்லாம்  உமக்கு  முன்பாக  இருக்கிறது;  என்  தவிப்பு  உமக்கு  மறைவாயிருக்கவில்லை.  {Ps  38:9}

 

என்  உள்ளம்  குழம்பி  அலைகிறது;  என்  பெலன்  என்னை  விட்டு  விலகி,  என்  கண்களின்  ஒளி  முதலாய்  இல்லாமற்போயிற்று.  {Ps  38:10}

 

என்  சிநேகிதரும்  என்  தோழரும்  என்  வாதையைக்  கண்டு  விலகுகிறார்கள்;  என்  இனத்தாரும்  தூரத்திலே  நிற்கிறார்கள்.  {Ps  38:11}

 

என்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்கள்  எனக்குக்  கண்ணிகளை  வைக்கிறார்கள்;  எனக்குப்  பொல்லாங்கு  தேடுகிறவர்கள்  கேடானவைகளைப்  பேசி,  நாள்முழுதும்  வஞ்சனைகளை  யோசிக்கிறார்கள்.  {Ps  38:12}

 

நானோ  செவிடனைப்போலக்  கேளாதவனாகவும்,  ஊமையனைப்போல  வாய்திறவாதவனாகவும்  இருக்கிறேன்.  {Ps  38:13}

 

காதுகேளாதவனும்,  தன்  வாயில்  மறுஉத்தரவுகள்  இல்லாதவனுமாயிருக்கிற  மனுஷனைப்போலானேன்.  {Ps  38:14}

 

கர்த்தாவே,  உமக்குக்  காத்திருக்கிறேன்;  என்  தேவனாகிய  ஆண்டவரே,  நீர்  மறுஉத்தரவு  கொடுப்பீர்.  {Ps  38:15}

 

அவர்கள்  என்னிமித்தம்  சந்தோஷப்படாதபடிக்கு  இப்படிச்  சொன்னேன்;  என்  கால்  தவறும்போது  என்மேல்  பெருமைபாராட்டுவார்களே.  {Ps  38:16}

 

நான்  தடுமாறி  விழ  ஏதுவாயிருக்கிறேன்;  என்  துக்கம்  எப்பொழுதும்  என்  முன்பாக  இருக்கிறது.  {Ps  38:17}

 

என்  அக்கிரமத்தை  நான்  அறிக்கையிட்டு,  என்  பாவத்தினிமித்தம்  விசாரப்படுகிறேன்.  {Ps  38:18}

 

என்  சத்துருக்கள்  வாழ்ந்து  பலத்திருக்கிறார்கள்;  முகாந்தரமில்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  பெருகியிருக்கிறார்கள்.  {Ps  38:19}

 

நான்  நன்மையைப்  பின்பற்றுகிறபடியால்,  நன்மைக்குத்  தீமை  செய்கிறவர்கள்  என்னை  விரோதிக்கிறார்கள்.  {Ps  38:20}

 

கர்த்தாவே,  என்னைக்  கைவிடாதேயும்;  என்  தேவனே,  எனக்குத்  தூரமாயிராதேயும்.  {Ps  38:21}

 

என்  இரட்சிப்பாகிய  ஆண்டவரே,  எனக்குச்  சகாயஞ்செய்யத்  தீவிரியும்.  {Ps  38:22}

 

என்  நாவினால்  பாவஞ்செய்யாதபடிக்கு  நான்  என்  வழிகளைக்  காத்து,  துன்மார்க்கன்  எனக்கு  முன்பாக  இருக்குமட்டும்  என்  வாயைக்  கடிவாளத்தால்  அடக்கிவைப்பேன்  என்றேன்.  {Ps  39:1}

 

நான்  மவுனமாகி,  ஊமையனாயிருந்தேன்,  நலமானதையும்  பேசாமல்  அமர்ந்திருந்தேன்;  ஆனாலும்  என்  துக்கம்  அதிகரித்தது;  {Ps  39:2}

 

என்  இருதயம்  எனக்குள்ளே  அனல்கொண்டது;  நான்  தியானிக்கையில்  அக்கினி  மூண்டது;  அப்பொழுது  என்  நாவினால்  விண்ணப்பம்  செய்தேன்.  {Ps  39:3}

 

கர்த்தாவே,  நான்  எவ்வளவாய்  நிலையற்றவன்  என்று  உணரும்படி  என்  முடிவையும்,  என்  நாட்களின்  அளவு  இவ்வளவு  என்பதையும்  எனக்குத்  தெரிவியும்.  {Ps  39:4}

 

இதோ,  என்  நாட்களை  நாலு  விரற்கடையளவாக்கினீர்;  என்  ஆயுசு  உமது  பார்வைக்கு  இல்லாததுபோலிருக்கிறது;  எந்த  மனுஷனும்  மாயையே  என்பது  நிச்சயம்.  (சேலா<Selah>.)  {Ps  39:5}

 

வேஷமாகவே  மனுஷன்  திரிகிறான்;  விருதாவாகவே  சஞ்சலப்படுகிறான்;  ஆஸ்தியைச்  சேர்க்கிறான்,  யார்  அதை  வாரிக்கொள்ளுவான்  என்று  அறியான்.  {Ps  39:6}

 

இப்போதும்  ஆண்டவரே,  நான்  எதற்கு  எதிர்பார்த்திருக்கிறேன்?  நீரே  என்  நம்பிக்கை.  {Ps  39:7}

 

என்  மீறுதல்கள்  எல்லாவற்றிலுமிருந்து  என்னை  விடுதலையாக்கும்,  மூடனுடைய  நிந்தனைக்கு  என்னை  ஒப்புக்கொடாதேயும்.  {Ps  39:8}

 

நீரே  இதைச்  செய்தீர்  என்று  நான்  என்  வாயைத்  திறவாமல்  மவுனமாயிருந்தேன்.  {Ps  39:9}

 

என்னிலிருந்து  உம்முடைய  வாதையை  எடுத்துப்போடும்;  உமது  கரத்தின்  அடிகளால்  நான்  சோர்ந்துபோனேன்.  {Ps  39:10}

 

அக்கிரமத்தினிமித்தம்  நீர்  மனுஷனைக்  கடிந்துகொண்டு  தண்டிக்கிறபோது,  அவன்  வடிவைப்  பொட்டரிப்பைப்போல்  அழியப்பண்ணுகிறீர்;  நிச்சயமாக  எந்த  மனுஷனும்  மாயையே.  (சேலா<Selah>.)  {Ps  39:11}

 

கர்த்தாவே,  என்  ஜெபத்தைக்கேட்டு,  என்  கூப்பிடுதலுக்குச்  செவிகொடும்;  என்  கண்ணீருக்கு  மவுனமாயிராதேயும்;  என்  பிதாக்களெல்லாரையும்போல  நானும்  உமக்கு  முன்பாக  அந்நியனும்  பரதேசியுமாயிருக்கிறேன்.  {Ps  39:12}

 

நான்  இனி  இராமற்போகுமுன்னே,  தேறுதலடையும்படி  என்னிடத்தில்  பொறுமையாயிரும்.  {Ps  39:13}

 

கர்த்தருக்காகப்  பொறுமையுடன்  காத்திருந்தேன்;  அவர்  என்னிடமாய்ச்  சாய்ந்து,  என்  கூப்பிடுதலைக்  கேட்டார்.  {Ps  40:1}

 

பயங்கரமான  குழியிலும்  உளையான  சேற்றிலுமிருந்து  என்னைத்  தூக்கியெடுத்து,  என்  கால்களைக்  கன்மலையின்மேல்  நிறுத்தி,  என்  அடிகளை  உறுதிப்படுத்தி,  {Ps  40:2}

 

நமது  தேவனைத்  துதிக்கும்  புதுப்பாட்டை  அவர்  என்  வாயிலே  கொடுத்தார்;  அநேகர்  அதைக்  கண்டு,  பயந்து,  கர்த்தரை  நம்புவார்கள்.  {Ps  40:3}

 

அகங்காரிகளையும்  பொய்யைச்  சார்ந்திருக்கிறவர்களையும்  நோக்காமல்,  கர்த்தரையே  தன்  நம்பிக்கையாக  வைக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  40:4}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  எங்கள்  நிமித்தஞ்செய்த  உம்முடைய  அதிசயங்களும்  உம்முடைய  யோசனைகளும்  அநேகமாயிருக்கிறது;  ஒருவரும்  அவைகளை  உமக்கு  விவரித்துச்  சொல்லிமுடியாது;  நான்  அவைகளைச்  சொல்லி  அறிவிக்கவேண்டுமானால்  அவைகள்  எண்ணிக்கைக்கு  மேலானவைகள்.  {Ps  40:5}

 

பலியையும்  காணிக்கையையும்  நீர்  விரும்பாமல்,  என்  செவிகளைத்  திறந்தீர்;  சர்வாங்க  தகனபலியையும்  பாவநிவாரணபலியையும்  நீர்  கேட்கவில்லை.  {Ps  40:6}

 

அப்பொழுது  நான்:  இதோ,  வருகிறேன்,  புஸ்தகச்சுருளில்  என்னைக்குறித்து  எழுதியிருக்கிறது;  {Ps  40:7}

 

என்  தேவனே,  உமக்குப்  பிரியமானதைச்  செய்ய  விரும்புகிறேன்;  உமது  நியாயப்பிரமாணம்  என்  உள்ளத்திற்குள்  இருக்கிறது  என்று  சொன்னேன்.  {Ps  40:8}

 

மகா  சபையிலே  நீதியைப்  பிரசங்கித்தேன்;  என்  உதடுகளை  மூடேன்,  கர்த்தாவே,  நீர்  அதை  அறிவீர்.  {Ps  40:9}

 

உம்முடைய  நீதியை  நான்  என்  இருதயத்திற்குள்  மறைத்துவைக்கவில்லை;  உமது  சத்தியத்தையும்  உமது  இரட்சிப்பையும்  சொல்லியிருக்கிறேன்;  உமது  கிருபையையும்  உமது  உண்மையையும்  மகா  சபைக்கு  அறிவியாதபடிக்கு  நான்  ஒளித்துவைக்கவில்லை.  {Ps  40:10}

 

கர்த்தாவே  நீர்  உம்முடைய  இரக்கங்களை  எனக்குக்  கிடையாமற்  போகப்பண்ணாதேயும்;  உமது  கிருபையும்  உமது  உண்மையும்  எப்பொழுதும்  என்னைக்  காக்கக்கடவது.  {Ps  40:11}

 

எண்ணிக்கைக்கு  அடங்காத  தீமைகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டது,  என்  அக்கிரமங்கள்  என்னைத்  தொடர்ந்துபிடித்தது,  நான்  நிமிர்ந்து  பார்க்கக்கூடாதிருக்கிறது,  அவைகள்  என்  தலைமயிரிலும்  அதிகமாயிருக்கிறது,  என்  இருதயம்  சோர்ந்துபோகிறது.  {Ps  40:12}

 

கர்த்தாவே,  என்னை  விடுவித்தருளும்;  கர்த்தாவே,  எனக்குச்  சகாயம்பண்ணத்  தீவிரியும்.  {Ps  40:13}

 

என்  பிராணனை  அழிக்கத்  தேடுகிறவர்கள்  ஏகமாய்  வெட்கி  நாணி,  எனக்குத்  தீங்குசெய்ய  விரும்புகிறவர்கள்  பின்னிட்டு  இலச்சையடைவார்களாக.  {Ps  40:14}

 

என்பேரில்    !    !  என்று  சொல்லுகிறவர்கள்,  தங்கள்  வெட்கத்தின்  பலனையடைந்து  கைவிடப்படுவார்களாக.  {Ps  40:15}

 

உம்மைத்  தேடுகிற  அனைவரும்  உமக்குள்  மகிழ்ந்து  சந்தோஷப்படுவார்களாக;  உம்முடைய  இரட்சிப்பை  விரும்புகிறவர்கள்  கர்த்தருக்கு  மகிமை  உண்டாவதாக  என்று  எப்பொழுதும்  சொல்வார்களாக.  {Ps  40:16}

 

நான்  சிறுமையும்  எளிமையுமானவன்,  கர்த்தரோ  என்மேல்  நினைவாயிருக்கிறார்;  தேவரீர்  என்  துணையும்  என்னை  விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்;  என்  தேவனே,  தாமதியாதேயும்.  {Ps  40:17}

 

சிறுமைப்பட்டவன்மேல்  சிந்தையுள்ளவன்  பாக்கியவான்;  தீங்குநாளில்  கர்த்தர்  அவனை  விடுவிப்பார்.  {Ps  41:1}

 

கர்த்தர்  அவனைப்  பாதுகாத்து  அவனை  உயிரோடே  வைப்பார்;  பூமியில்  அவன்  பாக்கியவானாயிருப்பான்;  அவன்  சத்துருக்களின்  இஷ்டத்திற்கு  நீர்  அவனை  ஒப்புக்கொடீர்.  {Ps  41:2}

 

படுக்கையின்மேல்  வியாதியாய்க்கிடக்கிற  அவனைக்  கர்த்தர்  தாங்குவார்;  அவனுடைய  வியாதியிலே  அவன்  படுக்கை  முழுவதையும்  மாற்றிப்போடுவீர்.  {Ps  41:3}

 

கர்த்தாவே,  என்மேல்  இரக்கமாயிரும்;  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தேன்,  என்  ஆத்துமாவைக்  குணமாக்கும்  என்று  நான்  சொன்னேன்.  {Ps  41:4}

 

அவன்  எப்பொழுது  சாவான்,  அவன்  பேர்  எப்பொழுது  அழியும்?  என்று  என்  சத்துருக்கள்  எனக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறார்கள்.  {Ps  41:5}

 

ஒருவன்  என்னைப்  பார்க்கவந்தால்  வஞ்சனையாய்ப்  பேசுகிறான்;  அவன்  தன்  இருதயத்தில்  அக்கிரமத்தைச்  சேகரித்துக்கொண்டு,  தெருவிலேபோய்,  அதைத்  தூற்றுகிறான்.  {Ps  41:6}

 

என்  பகைஞரெல்லாரும்  என்மேல்  ஏகமாய்  முணுமுணுத்து,  எனக்கு  விரோதமாயிருந்து,  எனக்குப்  பொல்லாங்கு  நினைத்து,  {Ps  41:7}

 

தீராவியாதி  அவனைப்  பிடித்துக்கொண்டது;  படுக்கையில்  கிடக்கிற  அவன்  இனி  எழுந்திருப்பதில்லை  என்கிறார்கள்.  {Ps  41:8}

 

என்  பிராணசிநேகிதனும்,  நான்  நம்பினவனும்,  என்  அப்பம்  புசித்தவனுமாகிய  மனுஷனும்,  என்மேல்  தன்  குதிகாலைத்  தூக்கினான்.  {Ps  41:9}

 

கர்த்தாவே,  நீர்  எனக்கு  இரங்கி,  நான்  அவர்களுக்குச்  சரிக்கட்ட  என்னை  எழுந்திருக்கப்பண்ணும்.  {Ps  41:10}

 

என்  சத்துரு  என்மேல்  ஜெயங்கொள்ளாததினால்,  நீர்  என்மேல்  பிரியமாயிருக்கிறீரென்று  அறிவேன்.  {Ps  41:11}

 

நீர்  என்  உத்தமத்திலே  என்னைத்தாங்கி,  என்றென்றைக்கும்  உம்முடைய  சமுகத்தில்  என்னை  நிலைநிறுத்துவீர்.  {Ps  41:12}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  அநாதியாய்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.  ஆமென்<Amen>,  ஆமென்<Amen>.  {Ps  41:13}

 

மானானது  நீரோடைகளை  வாஞ்சித்துக்  கதறுவதுபோல,  தேவனே,  என்  ஆத்துமா  உம்மை  வாஞ்சித்துக்  கதறுகிறது.  {Ps  42:1}

 

என்  ஆத்துமா  தேவன்மேல்,  ஜீவனுள்ள  தேவன்மேலேயே  தாகமாயிருக்கிறது;  நான்  எப்பொழுது  தேவனுடைய  சந்நிதியில்  வந்து  நிற்பேன்?  {Ps  42:2}

 

உன்  தேவன்  எங்கே  என்று  அவர்கள்  நாள்தோறும்  என்னிடத்தில்  சொல்லுகிறபடியால்,  இரவும்  பகலும்  என்  கண்ணீரே  எனக்கு  உணவாயிற்று.  {Ps  42:3}

 

முன்னே  நான்  பண்டிகையை  ஆசரிக்கிற  ஜனங்களோடே  கூட  நடந்து,  கூட்டத்தின்  களிப்பும்  துதியுமான  சத்தத்தோடே  தேவாலயத்திற்குப்  போய்வருவேனே;  இவைகளை  நான்  நினைக்கும்போது  என்  உள்ளம்  எனக்குள்ளே  உருகுகிறது.  {Ps  42:4}

 

என்  ஆத்துமாவே,  நீ  ஏன்  கலங்குகிறாய்?  ஏன்  எனக்குள்  தியங்குகிறாய்?  தேவனை  நோக்கிக்  காத்திரு;  அவர்  சமுகத்து  இரட்சிப்பினிமித்தம்  நான்  இன்னும்  அவரைத்  துதிப்பேன்.  {Ps  42:5}

 

என்  தேவனே,  என்  ஆத்துமா  எனக்குள்  கலங்குகிறது;  ஆகையால்  யோர்தான்<Jordan>  தேசத்திலும்  எர்மோன்<Hermonites>  மலைகளிலும்  சிறுமலையிலுமிருந்து  உம்மை  நினைக்கிறேன்.  {Ps  42:6}

 

உமது  மதகுகளின்  இரைச்சலால்  ஆழத்தை  ஆழம்  கூப்பிடுகிறது;  உமது  அலைகளும்  திரைகளும்  எல்லாம்  என்மேல்  புரண்டுபோகிறது.  {Ps  42:7}

 

ஆகிலும்  கர்த்தர்  பகற்காலத்திலே  தமது  கிருபையைக்  கட்டளையிடுகிறார்;  இராக்காலத்திலே  அவரைப்  பாடும்  பாட்டு  என்  வாயிலிருக்கிறது;  என்  ஜீவனுடைய  தேவனை  நோக்கி  விண்ணப்பஞ்செய்கிறேன்.  {Ps  42:8}

 

நான்  என்  கன்மலையாகிய  தேவனை  நோக்கி:  ஏன்  என்னை  மறந்தீர்?  சத்துருவினால்  ஒடுக்கப்பட்டு,  நான்  ஏன்  துக்கத்துடனே  திரியவேண்டும்  என்று  சொல்லுகிறேன்.  {Ps  42:9}

 

உன்  தேவன்  எங்கே  என்று  என்  சத்துருக்கள்  நாள்தோறும்  என்னோடே  சொல்லி,  என்னை  நிந்திப்பது  என்  எலும்புகளை  உருவக்குத்துகிறதுபோல்  இருக்கிறது.  {Ps  42:10}

 

என்  ஆத்துமாவே,  நீ  ஏன்  கலங்குகிறாய்?  ஏன்  எனக்குள்  தியங்குகிறாய்?  தேவனை  நோக்கிக்  காத்திரு;  என்  முகத்திற்கு  இரட்சிப்பும்  என்  தேவனுமாயிருக்கிறவரை  நான்  இன்னும்  துதிப்பேன்.  {Ps  42:11}

 

தேவனே,  நீர்  என்  நியாயத்தை  விசாரித்து,  பக்தியில்லாத  ஜாதியாரோடு  எனக்காக  வழக்காடி,  சூதும்  அநியாயமுமான  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவியும்.  {Ps  43:1}

 

என்  அரணாகிய  தேவன்  நீர்;  ஏன்  என்னைத்  தள்ளிவிடுகிறீர்?  சத்துருவினால்  ஒடுக்கப்பட்டு  நான்  ஏன்  துக்கத்துடனே  திரியவேண்டும்?  {Ps  43:2}

 

உமது  வெளிச்சத்தையும்  உமது  சத்தியத்தையும்  அனுப்பியருளும்;  அவைகள்  என்னை  நடத்தி,  உமது  பரிசுத்த  பர்வதத்திற்கும்  உமது  வாசஸ்தலங்களுக்கும்  என்னைக்  கொண்டுபோவதாக.  {Ps  43:3}

 

அப்பொழுது  நான்  தேவனுடைய  பீடத்தண்டைக்கும்,  எனக்கு  ஆனந்த  மகிழ்ச்சியாயிருக்கிற  தேவனிடத்திற்கும்  பிரவேசிப்பேன்.  தேவனே,  என்  தேவனே,  உம்மைச்  சுரமண்டலத்தால்  துதிப்பேன்.  {Ps  43:4}

 

என்  ஆத்துமாவே,  நீ  ஏன்  கலங்குகிறாய்?  ஏன்  எனக்குள்  தியங்குகிறாய்?  தேவனை  நோக்கிக்  காத்திரு;  என்  முகத்திற்கு  இரட்சிப்பும்  என்  தேவனுமாயிருக்கிறவரை  நான்  இன்னும்  துதிப்பேன்.  {Ps  43:5}

 

தேவனே,  எங்கள்  பிதாக்களுடைய  நாட்களாகிய  பூர்வநாட்களில்  நீர்  நடப்பித்த  கிரியைகளை  அவர்கள்  எங்களுக்கு  அறிவித்தார்கள்;  அவைகளை  எங்கள்  காதுகளால்  கேட்டோம்.  {Ps  44:1}

 

தேவரீர்  உம்முடைய  கையினாலே  ஜாதிகளைத்  துரத்தி,  இவர்களை  நாட்டி;  ஜனங்களைத்  துன்பப்படுத்தி,  இவர்களைப்  பரவப்பண்ணினீர்.  {Ps  44:2}

 

அவர்கள்  தங்கள்  பட்டயத்தால்  தேசத்தைக்  கட்டிக்கொள்ளவில்லை;  அவர்கள்  புயமும்  அவர்களை  இரட்சிக்கவில்லை;  நீர்  அவர்கள்மேல்  பிரியமாயிருந்தபடியால்,  உம்முடைய  வலதுகரமும்,  உம்முடைய  புயமும்,  உம்முடைய  முகத்தின்  பிரகாசமும்  அவர்களை  இரட்சித்தது.  {Ps  44:3}

 

தேவனே,  நீர்  என்  ராஜா;  யாக்கோபுக்கு<Jacob>  இரட்சிப்பைக்  கட்டளையிடும்.  {Ps  44:4}

 

உம்மாலே  எங்கள்  சத்துருக்களைக்  கீழே  விழத்தாக்கி,  எங்களுக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களை  உம்முடைய  நாமத்தினால்  மிதிப்போம்.  {Ps  44:5}

 

என்  வில்லை  நான்  நம்பேன்,  என்  பட்டயம்  என்னை  இரட்சிப்பதில்லை.  {Ps  44:6}

 

நீரே  எங்கள்  சத்துருக்களினின்று  எங்களை  இரட்சித்து,  எங்களைப்  பகைக்கிறவர்களை  வெட்கப்படுத்துகிறீர்.  {Ps  44:7}

 

தேவனுக்குள்  நித்தம்  மேன்மைபாராட்டுவோம்;  உமது  நாமத்தை  என்றென்றைக்கும்  துதிப்போம்.  (சேலா<Selah>.)  {Ps  44:8}

 

நீர்  எங்களைத்  தள்ளிவிட்டு,  நாணப்பண்ணுகிறீர்;  எங்கள்  சேனைகளுடனே  செல்லாதிருக்கிறீர்.  {Ps  44:9}

 

சத்துருவுக்கு  நாங்கள்  இடைந்து  பின்னிட்டுத்  திரும்பிப்போகப்  பண்ணுகிறீர்;  எங்கள்  பகைஞர்  தங்களுக்கென்று  எங்களைக்  கொள்ளையிடுகிறார்கள்.  {Ps  44:10}

 

நீர்  எங்களை  ஆடுகளைப்போல  இரையாக  ஒப்புக்கொடுத்து,  ஜாதிகளுக்குள்ளே  எங்களைச்  சிதறடிக்கிறீர்.  {Ps  44:11}

 

நீர்  உம்முடைய  ஜனங்களை  இலவசமாக  விற்கிறீர்;  அவர்கள்  கிரயத்தினால்  உமக்கு  லாபமில்லையே.  {Ps  44:12}

 

எங்கள்  அயலாருக்கு  எங்களை  நிந்தையாகவும்,  எங்கள்  சுற்றுப்புறத்தாருக்குப்  பரியாசமும்  சக்கந்தமுமாகவும்  வைக்கிறீர்.  {Ps  44:13}

 

நாங்கள்  ஜாதிகளுக்குள்ளே  பழமொழியாயிருக்கவும்,  ஜனங்கள்  எங்களைக்குறித்துத்  தலைதுலுக்கவும்  செய்கிறீர்.  {Ps  44:14}

 

நிந்தித்துத்  தூஷிக்கிறவனுடைய  சத்தத்தினிமித்தமும்,  சத்துருவினிமித்தமும்,  பழிவாங்குகிறவனிமித்தமும்,  {Ps  44:15}

 

என்  இலச்சை  நித்தம்  எனக்கு  முன்பாக  இருக்கிறது;  என்  முகத்தின்  வெட்கம்  என்னை  மூடுகிறது.  {Ps  44:16}

 

இவையெல்லாம்  எங்கள்மேல்  வந்திருந்தும்,  உம்மை  நாங்கள்  மறக்கவும்  இல்லை,  உம்முடைய  உடன்படிக்கைக்குத்  துரோகம்பண்ணவும்  இல்லை.  {Ps  44:17}

 

நீர்  எங்களை  வலுசர்ப்பங்களுள்ள  இடத்திலே  நொறுக்கி,  மரண  இருளினாலே  எங்களை  மூடியிருந்தும்,  {Ps  44:18}

 

எங்கள்  இருதயம்  பின்வாங்கவும்  இல்லை,  எங்கள்  காலடி  உம்முடைய  பாதையை  விட்டு  விலகவும்  இல்லை.  {Ps  44:19}

 

நாங்கள்  எங்கள்  தேவனுடைய  நாமத்தை  மறந்து,  அந்நிய  தேவனை  நோக்கிக்  கையெடுத்திருந்தோமானால்,  {Ps  44:20}

 

தேவன்  அதை  ஆராய்ந்து,  விசாரியாதிருப்பாரோ?  இருதயத்தின்  அந்தரங்கங்களை  அவர்  அறிந்திருக்கிறாரே.  {Ps  44:21}

 

உமது  நிமித்தம்  எந்நேரமும்  கொல்லப்படுகிறோம்;  அடிக்கப்படும்  ஆடுகளைப்போல  எண்ணப்படுகிறோம்.  {Ps  44:22}

 

ஆண்டவரே,  விழித்துக்கொள்ளும்;  ஏன்  நித்திரைபண்ணுகிறீர்?  எழுந்தருளும்,  எங்களை  என்றைக்கும்  தள்ளிவிடாதிரும்.  {Ps  44:23}

 

ஏன்  உம்முடைய  முகத்தை  மறைத்து,  எங்கள்  சிறுமையையும்  எங்கள்  நெருக்கத்தையும்  மறந்துவிடுகிறீர்?  {Ps  44:24}

 

எங்கள்  ஆத்துமா  புழுதிமட்டும்  தாழ்ந்திருக்கிறது;  எங்கள்  வயிறு  தரையோடு  ஒட்டியிருக்கிறது.  {Ps  44:25}

 

எங்களுக்கு  ஒத்தாசையாக  எழுந்தருளும்;  உம்முடைய  கிருபையினிமித்தம்  எங்களை  மீட்டுவிடும்.  {Ps  44:26}

 

என்  இருதயம்  நல்ல  விசேஷத்தினால்  பொங்குகிறது;  நான்  ராஜாவைக்குறித்துப்  பாடின  கவியைச்  சொல்லுகிறேன்;  என்  நாவு  விரைவாய்  எழுதுகிறவனுடைய  எழுத்தாணி.  {Ps  45:1}

 

எல்லா  மனுபுத்திரரிலும்  நீர்  மகா  சவுந்தரியமுள்ளவர்;  உம்முடைய  உதடுகளில்  அருள்  பொழிகிறது;  ஆகையால்  தேவன்  உம்மை  என்றென்றைக்கும்  ஆசீர்வதிக்கிறார்.  {Ps  45:2}

 

சவுரியவானே,  உமது  மகிமையும்  உமது  மகத்துவமுமாகிய  உம்முடைய  பட்டயத்தை  நீர்  உம்முடைய  அரையிலே  கட்டிக்கொண்டு,  {Ps  45:3}

 

சத்தியத்தினிமித்தமும்,  நீதியுடன்  கூடிய  சாந்தத்தினிமித்தமும்,  உமது  மகத்துவத்திலே  ஜெயமாக  ஏறிவாரும்;  உமது  வலதுகரம்  பயங்கரமானவைகளை  உமக்கு  விளங்கப்பண்ணும்.  {Ps  45:4}

 

உம்முடைய  அம்புகள்  கூர்மையானவைகள்,  அவைகள்  ராஜாவுடைய  சத்துருக்களின்  இருதயத்திற்குள்  பாயும்;  ஜனசதளங்கள்  உமக்குக்  கீழே  விழுவார்கள்.  {Ps  45:5}

 

தேவனே,  உமது  சிங்காசனம்  என்றென்றைக்குமுள்ளது,  உமது  ராஜ்யத்தின்  செங்கோல்  நீதியுள்ள  செங்கோலாயிருக்கிறது.  {Ps  45:6}

 

நீர்  நீதியை  விரும்பி,  அக்கிரமத்தை  வெறுக்கிறீர்;  ஆதலால்  தேவனே,  உம்முடைய  தேவன்  உமது  தோழரைப்பார்க்கிலும்  உம்மை  ஆனந்ததைலத்தினால்  அபிஷேகம்பண்ணினார்.  {Ps  45:7}

 

தந்தத்தினால்  செய்த  அரமனைகளிலிருந்து  புறப்படுகையில்,  நீர்  மகிழும்படி  உமது  வஸ்திரங்களெல்லாம்  வெள்ளைப்போளம்  சந்தனம்  லவங்கம்  இவைகளின்  வாசனை  பொருந்தியதாயிருக்கிறது.  {Ps  45:8}

 

உமது  நாயகிகளுக்குள்ளே  அரசரின்  குமாரத்திகளுண்டு,  ராஜஸ்திரீ  ஓப்பீரின்<Ophir>  தங்கம்  அணிந்தவளாய்  உமது  வலதுபாரிசத்தில்  நிற்கிறாள்.  {Ps  45:9}

 

குமாரத்தியே  கேள்,  நீ  உன்  செவியைச்  சாய்த்துச்  சிந்தித்துக்கொள்;  உன்  ஜனத்தையும்  உன்  தகப்பன்  வீட்டையும்  மறந்துவிடு.  {Ps  45:10}

 

அப்பொழுது  ராஜா  உன்  அழகில்  பிரியப்படுவார்;  அவர்  உன்  ஆண்டவர்,  ஆகையால்  அவரைப்  பணிந்துகொள்.  {Ps  45:11}

 

தீரு<Tyre>  குமாரத்தி  காணிக்கை  கொண்டுவருவாள்;  ஜனங்களில்  ஐசுவரியவான்களும்  உன்  தயவை  நாடி  வணங்குவார்கள்.  {Ps  45:12}

 

ராஜகுமாரத்தி  உள்ளாகப்  பூரண  மகிமையுள்ளவள்;  அவள்  உடை  பொற்சரிகையாயிருக்கிறது.  {Ps  45:13}

 

சித்திரத்தையலாடை  தரித்தவளாய்,  ராஜாவினிடத்தில்  அழைத்துக்கொண்டுவரப்படுவாள்;  அவள்  பின்னாலே  செல்லும்  அவளுடைய  தோழிகளாகிய  கன்னிகைகள்  உம்மிடத்தில்  கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.  {Ps  45:14}

 

அவர்கள்  மகிழ்ச்சியோடும்  களிப்போடும்  வந்து,  ராஜ  அரமனைக்குள்  பிரவேசிப்பார்கள்.  {Ps  45:15}

 

உமது  பிதாக்களுக்குப்  பதிலாக  உமது  குமாரர்  இருப்பார்கள்;  அவர்களைப்  பூமியெங்கும்  பிரபுக்களாக  வைப்பீர்.  {Ps  45:16}

 

உமது  நாமத்தை  எல்லாத்  தலைமுறைகளிலும்  பிரஸ்தாபப்படுத்துவேன்,  இதினிமித்தம்  ஜனங்கள்  உம்மை  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  துதிப்பார்கள்.  {Ps  45:17}

 

தேவன்  நமக்கு  அடைக்கலமும்  பெலனும்,  ஆபத்துக்காலத்தில்  அநுகூலமான  துணையுமானவர்.  {Ps  46:1}

 

ஆகையால்  பூமி  நிலைமாறினாலும்,  மலைகள்  நடுச்சமுத்திரத்தில்  சாய்ந்துபோனாலும்,  {Ps  46:2}

 

அதின்  ஜலங்கள்  கொந்தளித்துப்  பொங்கி,  அதின்  பெருக்கினால்  பர்வதங்கள்  அதிர்ந்தாலும்,  நாம்  பயப்படோம்.  (சேலா<Selah>.)  {Ps  46:3}

 

ஒரு  நதியுண்டு,  அதின்  நீர்க்கால்கள்  தேவனுடைய  நகரத்தையும்,  உன்னதமானவர்  வாசம்பண்ணும்  பரிசுத்த  ஸ்தலத்தையும்  சந்தோஷிப்பிக்கும்.  {Ps  46:4}

 

தேவன்  அதின்  நடுவில்  இருக்கிறார்,  அது  அசையாது;  அதிகாலையிலே  தேவன்  அதற்குச்  சகாயம்பண்ணுவார்.  {Ps  46:5}

 

ஜாதிகள்  கொந்தளித்தது,  ராஜ்யங்கள்  தத்தளித்தது;  அவர்  தமது  சத்தத்தை  முழங்கப்பண்ணினார்,  பூமி  உருகிப்போயிற்று.  {Ps  46:6}

 

சேனைகளின்  கர்த்தர்  நம்மோடிருக்கிறார்;  யாக்கோபின்<Jacob>  தேவன்  நமக்கு  உயர்ந்த  அடைக்கலமானவர்.  (சேலா<Selah>.)  {Ps  46:7}

 

பூமியிலே  பாழ்க்கடிப்புகளை  நடப்பிக்கிற  கர்த்தருடைய  செய்கைகளை  வந்து  பாருங்கள்.  {Ps  46:8}

 

அவர்  பூமியின்  கடைமுனைமட்டும்  யுத்தங்களை  ஓயப்பண்ணுகிறார்;  வில்லை  ஒடித்து,  ஈட்டியை  முறிக்கிறார்;  இரதங்களை  நெருப்பினால்  சுட்டெரிக்கிறார்.  {Ps  46:9}

 

நீங்கள்  அமர்ந்திருந்து,  நானே  தேவனென்று  அறிந்துகொள்ளுங்கள்;  ஜாதிகளுக்குள்ளே  உயர்ந்திருப்பேன்,  பூமியிலே  உயர்ந்திருப்பேன்.  {Ps  46:10}

 

சேனைகளின்  கர்த்தர்  நம்மோடிருக்கிறார்,  யாக்கோபின்<Jacob>  தேவன்  நமக்கு  உயர்ந்த  அடைக்கலமானவர்.  (சேலா<Selah>.)  {Ps  46:11}

 

சகல  ஜனங்களே,  கைகொட்டி,  தேவனுக்கு  முன்பாகக்  கெம்பீரசத்தமாய்  ஆர்ப்பரியுங்கள்.  {Ps  47:1}

 

உன்னதமானவராகிய  கர்த்தர்  பயங்கரமானவரும்,  பூமியின்மீதெங்கும்  மகத்துவமான  ராஜாவுமாயிருக்கிறார்.  {Ps  47:2}

 

ஜனங்களை  நமக்கு  வசப்படுத்தி,  ஜாதிகளை  நம்முடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்துவார்.  {Ps  47:3}

 

தமக்குப்  பிரியமான  யாக்கோபின்<Jacob>  சிறப்பான  தேசத்தை  நமக்குச்  சுதந்தரமாகத்  தெரிந்தளிப்பார்.  (சேலா<Selah>.)  {Ps  47:4}

 

தேவன்  ஆர்ப்பரிப்போடும்,  கர்த்தர்  எக்காள  சத்தத்தோடும்  உயர  எழுந்தருளினார்.  {Ps  47:5}

 

தேவனைப்  போற்றிப்  பாடுங்கள்,  பாடுங்கள்;  நம்முடைய  ராஜாவைப்  போற்றிப்  பாடுங்கள்,  பாடுங்கள்.  {Ps  47:6}

 

தேவன்  பூமியனைத்திற்கும்  ராஜா;  கருத்துடனே  அவரைப்  போற்றிப்  பாடுங்கள்.  {Ps  47:7}

 

தேவன்  ஜாதிகள்மேல்  அரசாளுகிறார்;  தேவன்  தமது  பரிசுத்த  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறார்.  {Ps  47:8}

 

ஜனங்களின்  பிரபுக்கள்  ஆபிரகாமின்<Abraham>  தேவனுடைய  ஜனங்களாகச்  சேர்க்கப்படுகிறார்கள்;  பூமியின்  கேடகங்கள்  தேவனுடையவைகள்;  அவர்  மகா  உன்னதமானவர்.  {Ps  47:9}

 

கர்த்தர்  பெரியவர்,  அவர்  நமது  தேவனுடைய  நகரத்திலும்,  தமது  பரிசுத்த  பர்வதத்திலும்  மிகவும்  துதிக்கப்படத்தக்கவர்.  {Ps  48:1}

 

வடதிசையிலுள்ள  சீயோன்<Zion>  பர்வதம்  வடிப்பமான  ஸ்தானமும்  சர்வபூமியின்  மகிழ்ச்சியுமாயிருக்கிறது,  அதுவே  மகாராஜாவின்  நகரம்.  {Ps  48:2}

 

அதின்  அரமனைகளில்  தேவன்  உயர்ந்த  அடைக்கலமாக  அறியப்பட்டிருக்கிறார்.  {Ps  48:3}

 

இதோ,  ராஜாக்கள்  கூடிக்கொண்டு,  ஏகமாய்க்  கடந்துவந்தார்கள்.  {Ps  48:4}

 

அவர்கள்  அதைக்  கண்டபோது  பிரமித்துக்  கலங்கி  விரைந்தோடினார்கள்.  {Ps  48:5}

 

அங்கே  நடுக்கங்கொண்டு,  பிரசவவேதனைப்படுகிற  ஸ்திரீயைப்போல  வேதனைப்பட்டார்கள்.  {Ps  48:6}

 

கீழ்க்காற்றினால்  தர்ஷீசின்<Tarshish>  கப்பல்களை  நீர்  உடைக்கிறீர்.  {Ps  48:7}

 

நாம்  கேள்விப்பட்டபடியே  நமது  தேவனுடைய  நகரமாகிய  சேனைகளுடைய  கர்த்தரின்  நகரத்திலே  கண்டோம்;  தேவன்  அதை  என்றென்றைக்கும்  ஸ்திரப்படுத்துவார்.  (சேலா<Selah>.)  {Ps  48:8}

 

தேவனே,  உமது  ஆலயத்தின்  நடுவிலே,  உமது  கிருபையைச்  சிந்தித்துக்  கொண்டிருக்கிறோம்.  {Ps  48:9}

 

தேவனே,  உமது  நாமம்  விளங்குகிறதுபோல  உமது  புகழ்ச்சியும்  பூமியின்  கடையாந்தரங்கள்  பரியந்தமும்  விளங்குகிறது;  உமது  வலதுகரம்  நீதியால்  நிறைந்திருக்கிறது.  {Ps  48:10}

 

உம்முடைய  நியாயத்தீர்ப்புகளினிமித்தம்  சீயோன்<Zion>  பர்வதம்  மகிழ்வதாக,  யூதாவின்<Judah>  குமாரத்திகள்  களிகூருவார்களாக.  {Ps  48:11}

 

சீயோனைச்<Zion>  சுற்றி  உலாவி,  அதின்  கொத்தளங்களை  எண்ணுங்கள்.  {Ps  48:12}

 

பின்வரும்  சந்ததிக்கு  நீங்கள்  விவரிப்பதற்காக,  அதின்  அலங்கத்தைக்  கவனித்து,  அதின்  அரமனைகளை  உற்றுப்பாருங்கள்.  {Ps  48:13}

 

இந்தத்  தேவன்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  நம்முடைய  தேவன்;  மரணபரியந்தம்  நம்மை  நடத்துவார்.  {Ps  48:14}

 

ஜனங்களே,  நீங்கள்  எல்லாரும்  இதைக்  கேளுங்கள்.  {Ps  49:1}

 

பூமியின்  குடிகளே,  சிறியோரும்  பெரியோரும்  ஐசுவரியவான்களும்  எளியவர்களுமாகிய  நீங்கள்  எல்லாரும்  ஏகமாய்ச்  செவிகொடுங்கள்.  {Ps  49:2}

 

என்  வாய்  ஞானத்தைப்  பேசும்;  என்  இருதயம்  உணர்வைத்  தியானிக்கும்.  {Ps  49:3}

 

என்  செவியை  உவமைமொழிக்குச்  சாய்த்து,  என்  மறைபொருளைச்  சுரமண்டலத்தின்மேல்  வெளிப்படுத்துவேன்.  {Ps  49:4}

 

என்னைத்  தொடருகிறவர்களுடைய  அக்கிரமம்  என்னைச்  சூழ்ந்துகொள்ளுந்  தீங்குநாட்களில்,  நான்  பயப்படவேண்டியதென்ன?  {Ps  49:5}

 

தங்கள்  செல்வத்தை  நம்பி  தங்கள்  திரளான  ஐசுவரியத்தினால்  பெருமைபாராட்டுகிற,  {Ps  49:6}

 

ஒருவனாவது,  தன்  சகோதரன்  அழிவைக்  காணாமல்  இனி  என்றைக்கும்  உயிரோடிருக்கும்படி,  {Ps  49:7}

 

எவ்விதத்தினாலாவது  அவனை  மீட்டுக்கொள்ளவும்,  அவனிமித்தம்  மீட்கும்பொருளை  தேவனுக்குக்  கொடுக்கவுங்கூடாதே.  {Ps  49:8}

 

அவர்கள்  ஆத்துமமீட்பு  மிகவும்  அருமையாயிருக்கிறது;  அது  ஒருபோதும்  முடியாது.  {Ps  49:9}

 

ஞானிகளும்  மரித்து,  அஞ்ஞானிகளும்  நிர்மூடரும்  ஏகமாய்  அழிந்து,  தங்கள்  ஆஸ்தியை  மற்றவர்களுக்கு  வைத்துப்போகிறதைக்  காண்கிறான்.  {Ps  49:10}

 

தங்கள்  வீடுகள்  நித்தியகாலமாகவும்,  தங்கள்  வாசஸ்தலங்கள்  தலைமுறை  தலைமுறையாகவும்  இருக்குமென்பது  அவர்கள்  உள்ளத்தின்  அபிப்பிராயம்;  அவர்கள்  தங்கள்  நாமங்களைத்  தங்கள்  நிலங்களுக்குத்  தரிக்கிறார்கள்.  {Ps  49:11}

 

ஆகிலும்  கனம்பொருந்தியவனாயிருக்கிற  மனுஷன்  நிலைத்திருக்கிறதில்லை;  அழிந்துபோகும்  மிருகங்களுக்கு  ஒப்பாயிருக்கிறான்.  {Ps  49:12}

 

இதுதான்  அவர்கள்  வழி,  இதுதான்  அவர்கள்  பைத்தியம்;  ஆகிலும்  அவர்கள்  சந்ததியார்  அவர்கள்  சொல்லை  மெச்சிக்கொள்ளுகிறார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  49:13}

 

ஆட்டுமந்தையைப்போலப்  பாதாளத்திலே  கிடத்தப்படுகிறார்கள்;  மரணம்  அவர்களை  மேய்ந்துபோடும்;  செம்மையானவர்கள்  அதிகாலையில்  அவர்களை  ஆண்டுகொள்வார்கள்;  அவர்கள்  தங்கள்  வாசஸ்தலத்தில்  நிலைத்திருக்கக்கூடாதபடி  அவர்களுடைய  ரூபத்தைப்  பாதாளம்  அழிக்கும்.  {Ps  49:14}

 

ஆனாலும்  தேவன்  என்  ஆத்துமாவைப்  பாதாளத்தின்  வல்லமைக்குத்  தப்புவித்து  மீட்பார்,  அவர்  என்னை  ஏற்றுக்கொள்வார்.  (சேலா<Selah>.)  {Ps  49:15}

 

ஒருவன்  ஐசுவரியவானாகி,  அவன்  வீட்டின்  மகிமை  பெருகும்போது,  நீ  பயப்படாதே.  {Ps  49:16}

 

அவன்  மரிக்கும்போது  ஒன்றும்  கொண்டுபோவதில்லை;  அவன்  மகிமை  அவனைப்  பின்பற்றிச்  செல்வதுமில்லை.  {Ps  49:17}

 

அவன்  உயிரோடிருக்கையில்  தன்  ஆத்துமாவை  வாழ்த்தினாலும்:  நீ  உனக்கு  நன்மையை  நாடினாய்  என்று  மனுஷர்  அவனைப்  புகழ்ந்தாலும்,  {Ps  49:18}

 

அவன்  என்றென்றைக்கும்  வெளிச்சத்தைக்  காணாத  தன்  பிதாக்களின்  சந்ததியைச்  சேருவான்.  {Ps  49:19}

 

கனம்  பொருந்தினவனாயிருந்தும்  அறிவில்லாத  மனுஷன்  அழிந்துபோகும்  மிருகங்களுக்கு  ஒப்பாயிருக்கிறான்.  {Ps  49:20}

 

வல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தர்  வசனித்து,  சூரியன்  உதிக்குந்  திசைதொடங்கி  அது  அஸ்தமிக்குந்  திசைவரைக்குமுள்ள  பூமியைக்  கூப்பிடுகிறார்.  {Ps  50:1}

 

பூரணவடிவுள்ள  சீயோனிலிருந்து<Zion>  தேவன்  பிரகாசிக்கிறார்.  {Ps  50:2}

 

நம்முடைய  தேவன்  வருவார்,  மவுனமாயிரார்;  அவருக்குமுன்  அக்கினி  பட்சிக்கும்;  அவரைச்  சுற்றிலும்  மகா  புசல்  கொந்தளிப்பாயிருக்கும்.  {Ps  50:3}

 

அவர்  தம்முடைய  ஜனத்தை  நியாயந்தீர்க்க  உயர  இருக்கும்  வானங்களையும்  பூமியையும்  கூப்பிடுவார்.  {Ps  50:4}

 

பலியினாலே  என்னோடே  உடன்படிக்கை  பண்ணின  என்னுடைய  பரிசுத்தவான்களை  என்னிடத்தில்  கூட்டுங்கள்  என்பார்.  {Ps  50:5}

 

வானங்கள்  அவருடைய  நீதியை  அறிவிக்கும்;  தேவனே  நியாயாதிபதி.  (சேலா<Selah>.)  {Ps  50:6}

 

என்  ஜனமே,  கேள்,  நான்  பேசுவேன்;  இஸ்ரவேலே<Israel>,  உனக்கு  விரோதமாய்ச்  சாட்சியிடுவேன்;  நானே  தேவன்,  உன்  தேவனாயிருக்கிறேன்.  {Ps  50:7}

 

உன்  பலிகளினிமித்தம்  உன்னைக்  கடிந்துகொள்ளேன்;  உன்  தகனபலிகள்  எப்போதும்  எனக்கு  முன்பாக  இருக்கிறது.  {Ps  50:8}

 

உன்  வீட்டிலிருந்து  காளைகளையும்,  உன்  தொழுவங்களிலிருந்து  ஆட்டுக்கடாக்களையும்  நான்  வாங்கிக்கொள்வதில்லை.  {Ps  50:9}

 

சகல  காட்டுஜீவன்களும்,  பர்வதங்களில்  ஆயிரமாயிரமாய்த்  திரிகிற  மிருகங்களும்  என்னுடையவைகள்.  {Ps  50:10}

 

மலைகளிலுள்ள  பறவைகளையெல்லாம்  அறிவேன்;  வெளியில்  நடமாடுகிறவைகளெல்லாம்  என்னுடையவைகள்.  {Ps  50:11}

 

நான்  பசியாயிருந்தால்  உனக்குச்  சொல்லேன்;  பூமியும்  அதின்  நிறைவும்  என்னுடையவைகளே.  {Ps  50:12}

 

நான்  எருதுகளின்  மாம்சம்  புசித்து,  ஆட்டுக்கடாக்களின்  இரத்தம்  குடிப்பேனோ?  {Ps  50:13}

 

நீ  தேவனுக்கு  ஸ்தோத்திரபலியிட்டு,  உன்னதமானவருக்கு  உன்  பொருத்தனைகளைச்  செலுத்தி;  {Ps  50:14}

 

ஆபத்துக்காலத்தில்  என்னை  நோக்கிக்  கூப்பிடு;  நான்  உன்னை  விடுவிப்பேன்,  நீ  என்னை  மகிமைப்படுத்துவாய்.  {Ps  50:15}

 

தேவன்  துன்மார்க்கனை  நோக்கி:  நீ  என்  பிரமாணங்களை  எடுத்துரைக்கவும்,  என்  உடன்படிக்கையை  உன்  வாயினால்  சொல்லவும்,  உனக்கு  என்ன  நியாயமுண்டு.  {Ps  50:16}

 

சிட்சையை  நீ  பகைத்து,  என்  வார்த்தைகளை  உனக்குப்  பின்னாக  எறிந்துபோடுகிறாய்.  {Ps  50:17}

 

நீ  திருடனைக்  காணும்போது  அவனோடு  ஒருமித்துப்போகிறாய்;  விபசாரரோடும்  உனக்குப்  பங்குண்டு.  {Ps  50:18}

 

உன்  வாயைப்  பொல்லாப்புக்குத்  திறக்கிறாய்,  உன்  நாவு  சற்பனையைப்  பிணைக்கிறது.  {Ps  50:19}

 

நீ  உட்கார்ந்து  உன்  சகோதரனுக்கு  விரோதமாய்ப்  பேசி,  உன்  தாயின்  மகனுக்கு  அவதூறு  உண்டாக்குகிறாய்.  {Ps  50:20}

 

இவைகளை  நீ  செய்யும்போது  நான்  மவுனமாயிருந்தேன்,  உன்னைப்போல்  நானும்  இருப்பேன்  என்று  நினைவு  கொண்டாய்;  ஆனாலும்  நான்  உன்னைக்  கடிந்துகொண்டு,  அவைகளை  உன்  கண்களுக்கு  முன்பாக  ஒவ்வொன்றாக  நிறுத்துவேன்.  {Ps  50:21}

 

தேவனை  மறக்கிறவர்களே,  இதைச்  சிந்தித்துக்கொள்ளுங்கள்;  இல்லாவிட்டால்  நான்  உங்களைப்  பீறிப்போடுவேன்,  ஒருவரும்  உங்களை  விடுவிப்பதில்லை.  {Ps  50:22}

 

ஸ்தோத்திர  பலியிடுகிறவன்  என்னை  மகிமைப்படுத்துகிறான்;  தன்  வழியைச்  செவ்வைப்படுத்துகிறவனுக்கு  தேவனுடைய  இரட்சிப்பை  வெளிப்படுத்துவேன்  என்று  சொல்லுகிறார்.  {Ps  50:23}

 

தேவனே,  உமது  கிருபையின்படி  எனக்கு  இரங்கும்,  உமது  மிகுந்த  இரக்கங்களின்படி  என்  மீறுதல்கள்  நீங்க  என்னைச்  சுத்திகரியும்.  {Ps  51:1}

 

என்  அக்கிரமம்  நீங்க  என்னை  முற்றிலும்  கழுவி,  என்  பாவமற  என்னைச்  சுத்திகரியும்.  {Ps  51:2}

 

என்  மீறுதல்களை  நான்  அறிந்திருக்கிறேன்;  என்  பாவம்  எப்பொழுதும்  எனக்கு  முன்பாக  நிற்கிறது.  {Ps  51:3}

 

தேவரீர்  ஒருவருக்கே  விரோதமாக  நான்  பாவஞ்செய்து,  உமது  கண்களுக்கு  முன்பாகப்  பொல்லாங்கானதை  நடப்பித்தேன்;  நீர்  பேசும்போது  உம்முடைய  நீதி  விளங்கவும்,  நீர்  நியாயந்தீர்க்கும்போது  உம்முடைய  பரிசுத்தம்  விளங்கவும்  இதை  அறிக்கையிடுகிறேன்.  {Ps  51:4}

 

இதோ,  நான்  துர்க்குணத்தில்  உருவானேன்;  என்  தாய்  என்னைப்  பாவத்தில்  கர்ப்பந்தரித்தாள்.  {Ps  51:5}

 

இதோ,  உள்ளத்தில்  உண்மையிருக்க  விரும்புகிறீர்;  அந்தக்கரணத்தில்  ஞானத்தை  எனக்குத்  தெரியப்படுத்துவீர்.  {Ps  51:6}

 

நீர்  என்னை  ஈசோப்பினால்  சுத்திகரியும்,  அப்பொழுது  நான்  சுத்தமாவேன்;  என்னைக்  கழுவியருளும்,  அப்பொழுது  நான்  உறைந்த  மழையிலும்  வெண்மையாவேன்.  {Ps  51:7}

 

நான்  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  கேட்கும்படி  செய்யும்,  அப்பொழுது  நீர்  நொறுக்கின  எலும்புகள்  களிகூரும்.  {Ps  51:8}

 

என்  பாவங்களைப்  பாராதபடிக்கு  நீர்  உமது  முகத்தை  மறைத்து,  என்  அக்கிரமங்களையெல்லாம்  நீக்கியருளும்.  {Ps  51:9}

 

தேவனே,  சுத்த  இருதயத்தை  என்னிலே  சிருஷ்டியும்,  நிலைவரமான  ஆவியை  என்  உள்ளத்திலே  புதுப்பியும்.  {Ps  51:10}

 

உமது  சமுகத்தை  விட்டு  என்னைத்  தள்ளாமலும்,  உமது  பரிசுத்த  ஆவியை  என்னிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளாமலும்  இரும்.  {Ps  51:11}

 

உமது  இரட்சணியத்தின்  சந்தோஷத்தைத்  திரும்பவும்  எனக்குத்  தந்து,  உற்சாகமான  ஆவி  என்னைத்  தாங்கும்படி  செய்யும்.  {Ps  51:12}

 

அப்பொழுது  பாதகருக்கு  உமது  வழிகளை  உபதேசிப்பேன்;  பாவிகள்  உம்மிடத்தில்  மனந்திரும்புவார்கள்.  {Ps  51:13}

 

தேவனே,  என்னை  இரட்சிக்குந்  தேவனே,  இரத்தப்பழிகளுக்கு  என்னை  நீங்கலாக்கிவிடும்;  அப்பொழுது  என்  நாவு  உம்முடைய  நீதியைக்  கெம்பீரமாய்ப்பாடும்.  {Ps  51:14}

 

ஆண்டவரே,  என்  உதடுகளைத்  திறந்தருளும்;  அப்பொழுது  என்  வாய்  உம்முடைய  புகழை  அறிவிக்கும்.  {Ps  51:15}

 

பலியை  நீர்  விரும்புகிறதில்லை,  விரும்பினால்  செலுத்துவேன்;  தகனபலியும்  உமக்குப்  பிரியமானதல்ல.  {Ps  51:16}

 

தேவனுக்கேற்கும்  பலிகள்  நொறுங்குண்ட  ஆவிதான்;  தேவனே,  நொறுங்குண்டதும்  நருங்குண்டதுமான  இருதயத்தை  நீர்  புறக்கணியீர்.  {Ps  51:17}

 

சீயோனுக்கு<Zion>  உமது  பிரியத்தின்படி  நன்மைசெய்யும்;  எருசலேமின்<Jerusalem>  மதில்களைக்  கட்டுவீராக.  {Ps  51:18}

 

அப்பொழுது  தகனபலியும்  சர்வாங்க  தகனபலியுமாகிய  நீதியின்  பலிகளில்  பிரியப்படுவீர்;  அப்பொழுது  உமது  பீடத்தின்மேல்  காளைகளைப்  பலியிடுவார்கள்.  {Ps  51:19}

 

பலவானே,  பொல்லாப்பில்  ஏன்  பெருமைபாராட்டுகிறாய்?  தேவனுடைய  கிருபை  எந்நாளுமுள்ளது.  {Ps  52:1}

 

நீ  கேடுகளைச்  செய்ய  எத்தனம்பண்ணுகிறாய்,  கபடுசெய்யும்  உன்  நாவு  தீட்டப்பட்ட  சவரகன்  கத்தியைப்போல்  இருக்கிறது.  {Ps  52:2}

 

நன்மையைப்பார்க்கிலும்  தீமையையும்,  யதார்த்தம்  பேசுகிறதைப்பார்க்கிலும்  பொய்யையும்  விரும்புகிறாய்.  (சேலா<Selah>.)  {Ps  52:3}

 

கபடமுள்ள  நாவே,  சங்கரிக்கும்  சகல  வார்த்தைகளையும்  நீ  விரும்புகிறாய்.  {Ps  52:4}

 

தேவன்  உன்னை  என்றென்றைக்கும்  இராதபடி  அழித்துப்போடுவார்;  அவர்  உன்னைப்  பிடித்து,  உன்  வாசஸ்தலத்திலிருந்து  பிடுங்கி,  நீ  ஜீவனுள்ளோர்  தேசத்தில்  இராதபடிக்கு  உன்னை  நிர்மூலமாக்குவார்.  (சேலா<Selah>.)  {Ps  52:5}

 

நீதிமான்கள்  அதைக்  கண்டு  பயந்து,  அவனைப்பார்த்து  நகைத்து:  {Ps  52:6}

 

இதோ,  தேவனைத்  தன்  பெலனாக  எண்ணாமல்,  தன்  செல்வப்பெருக்கத்தை  நம்பி,  தன்  தீவினையில்  பலத்துக்கொண்ட  மனுஷன்  இவன்தான்  என்பார்கள்.  {Ps  52:7}

 

நானோ  தேவனுடைய  ஆலயத்தில்  பச்சையான  ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன்,  தேவனுடைய  கிருபையை  என்றென்றைக்கும்  நம்பியிருக்கிறேன்.  {Ps  52:8}

 

நீரே  இதைச்  செய்தீர்  என்று  உம்மை  என்றென்றைக்கும்  துதித்து,  உமது  நாமத்திற்குக்  காத்திருப்பேன்;  உம்முடைய  பரிசுத்தவான்களுக்கு  முன்பாக  அது  நலமாயிருக்கிறது.  {Ps  52:9}

 

தேவன்  இல்லை  என்று  மதிகேடன்  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்ளுகிறான்;  அவர்கள்  தங்களைக்  கெடுத்து,  அருவருப்பான  அக்கிரமங்களைச்  செய்துவருகிறார்கள்;  நன்மைசெய்கிறவன்  ஒருவனும்  இல்லை.  {Ps  53:1}

 

தேவனைத்  தேடுகிற  உணர்வுள்ளவன்  உண்டோ  என்று  பார்க்க,  தேவன்  பரலோகத்திலிருந்து  மனுபுத்திரரைக்  கண்ணோக்கினார்.  {Ps  53:2}

 

அவர்கள்  எல்லாரும்  வழிவிலகி,  ஏகமாய்க்  கெட்டுப்போனார்கள்;  நன்மைசெய்கிறவன்  இல்லை,  ஒருவனாகிலும்  இல்லை.  {Ps  53:3}

 

அக்கிரமக்காரருக்கு  அறிவு  இல்லையா?  அப்பத்தைப்  பட்சிக்கிறதுபோல்  என்  ஜனத்தைப்  பட்சிக்கிறார்களே;  அவர்கள்  தேவனைத்  தொழுதுகொள்ளுகிறதில்லை.  {Ps  53:4}

 

உனக்கு  விரோதமாய்ப்  பாளயமிறங்கினவனுடைய  எலும்புகளைத்  தேவன்  சிதறப்பண்ணினபடியால்,  பயமில்லாத  இடத்தில்  மிகவும்  பயந்தார்கள்;  தேவன்  அவர்களை  வெறுத்தபடியினால்  நீ  அவர்களை  வெட்கப்படுத்தினாய்.  {Ps  53:5}

 

சீயோனிலிருந்து<Zion>  இஸ்ரவேலுக்கு<Israel>  இரட்சிப்பு  வருவதாக;  தேவன்  தம்முடைய  ஜனத்தின்  சிறையிருப்பைத்  திருப்பும்போது,  யாக்கோபுக்குக்<Jacob>  களிப்பும்  இஸ்ரவேலுக்கு<Israel>  மகிழ்ச்சியும்  உண்டாகும்.  {Ps  53:6}

 

தேவனே,  உமது  நாமத்தினிமித்தம்  என்னை  இரட்சித்து,  உமது  வல்லமையினால்  எனக்கு  நியாயஞ்செய்யும்.  {Ps  54:1}

 

தேவனே,  என்  விண்ணப்பத்தைக்கேட்டு,  என்  வாயின்  வார்த்தைகளுக்குச்  செவிகொடும்.  {Ps  54:2}

 

அந்நியர்  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறார்கள்;  கொடியர்  என்  பிராணனை  வாங்கத்  தேடுகிறார்கள்;  தேவனைத்  தங்களுக்கு  முன்பாக  நிறுத்தி  நோக்கார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  54:3}

 

இதோ,  தேவன்  எனக்குச்  சகாயர்;  ஆண்டவர்  என்  ஆத்துமாவை  ஆதரிக்கிறவர்களோடே  இருக்கிறார்.  {Ps  54:4}

 

அவர்  என்  சத்துருக்களுக்குத்  தீமைக்குத்  தீமையைச்  சரிக்கட்டுவார்,  உமது  சத்தியத்தினிமித்தம்  அவர்களை  நிர்மூலமாக்கும்.  {Ps  54:5}

 

உற்சாகத்துடன்  நான்  உமக்குப்  பலியிடுவேன்;  கர்த்தாவே,  உமது  நாமத்தைத்  துதிப்பேன்,  அது  நலமானது.  {Ps  54:6}

 

அவர்  எல்லா  நெருக்கத்தையும்  நீக்கி,  என்னை  விடுவித்தார்;  என்  கண்  என்  சத்துருக்களில்  நீதி  சரிக்கட்டுதலைக்  கண்டது.  {Ps  54:7}

 

தேவனே,  என்  ஜெபத்தைக்  கேட்டருளும்;  என்  விண்ணப்பத்திற்கு  மறைந்திராதேயும்.  {Ps  55:1}

 

எனக்குச்  செவிகொடுத்து,  உத்தரவு  அருளிச்செய்யும்;  சத்துருவினுடைய  கூக்குரலினிமித்தமும்,  துன்மார்க்கர்  செய்யும்  இடுக்கத்தினிமித்தமும்  என்  தியானத்தில்  முறையிடுகிறேன்.  {Ps  55:2}

 

அவர்கள்  என்மேல்  பழிசாட்டி,  குரோதங்கொண்டு,  என்னைப்  பகைக்கிறார்கள்.  {Ps  55:3}

 

என்  இருதயம்  எனக்குள்  வியாகுலப்படுகிறது;  மரணத்திகில்  என்மேல்  விழுந்தது.  {Ps  55:4}

 

பயமும்  நடுக்கமும்  என்னைப்  பிடித்தது;  அருக்களிப்பு  என்னை  மூடிற்று.  {Ps  55:5}

 

அப்பொழுது  நான்:  ,  எனக்குப்  புறாவைப்போல்  சிறகுகள்  இருந்தால்,  நான்  பறந்துபோய்  இளைப்பாறுவேன்.  {Ps  55:6}

 

நான்  தூரத்தில்  அலைந்து  திரிந்து  வனாந்தரத்தில்  தங்கியிருப்பேன்.  (சேலா<Selah>.)  {Ps  55:7}

 

பெருங்காற்றுக்கும்  புசலுக்கும்  தப்பத்  தீவிரித்துக்கொள்ளுவேன்  என்றேன்.  {Ps  55:8}

 

ஆண்டவரே,  அவர்களை  அழித்து,  அவர்கள்  பாஷையைப்  பிரிந்துபோகப்பண்ணும்;  கொடுமையையும்  சண்டையையும்  நகரத்திலே  கண்டேன்;  {Ps  55:9}

 

அவைகள்  இரவும்  பகலும்  அதின்  மதில்கள்மேல்  சுற்றித்திரிகிறது;  அக்கிரமமும்  வாதையும்  அதின்  நடுவில்  இருக்கிறது;  {Ps  55:10}

 

கேடுபாடுகள்  அதின்  நடுவில்  இருக்கிறது;  கொடுமையும்  கபடும்  அதின்  வீதியை  விட்டு  விலகிப்போகிறதில்லை.  {Ps  55:11}

 

என்னை  நிந்தித்தவன்  சத்துரு  அல்ல,  அப்படியிருந்தால்  சகிப்பேன்;  எனக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டினவன்  என்  பகைஞன்  அல்ல,  அப்படியிருந்தால்  அவனுக்கு  மறைந்திருப்பேன்.  {Ps  55:12}

 

எனக்குச்  சமமான  மனுஷனும்,  என்  வழிகாட்டியும்,  என்  தோழனுமாகிய  நீயே  அவன்.  {Ps  55:13}

 

நாம்  ஒருமித்து,  இன்பமான  ஆலோசனைபண்ணி,  கூட்டத்தோடே  தேவாலயத்துக்குப்  போனோம்.  {Ps  55:14}

 

மரணம்  அவர்களைத்  தொடர்ந்து  பிடிப்பதாக;  அவர்கள்  உயிரோடே  பாதாளத்தில்  இறங்குவார்களாக;  அவர்கள்  வாசஸ்தலங்களிலும்  அவர்கள்  உள்ளத்திலும்  பொல்லாங்கு  இருக்கிறது.  {Ps  55:15}

 

நானோ  தேவனை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  கர்த்தர்  என்னை  இரட்சிப்பார்.  {Ps  55:16}

 

அந்திசந்தி  மத்தியான  வேளைகளிலும்  நான்  தியானம்பண்ணி  முறையிடுவேன்;  அவர்  என்  சத்தத்தைக்  கேட்பார்.  {Ps  55:17}

 

திரளான  கூட்டமாய்க்  கூடி  என்னோடு  எதிர்த்தார்கள்;  அவரோ  எனக்கு  நேரிட்ட  போரை  நீக்கி,  என்  ஆத்துமாவைச்  சமாதானத்துடன்  மீட்டுவிட்டார்.  {Ps  55:18}

 

ஆதிமுதலாய்  வீற்றிருக்கிற  தேவன்  கேட்டு,  அவர்களுக்குப்  பதிலளிப்பார்;  அவர்களுக்கு  மாறுதல்கள்  நேரிடாததினால்,  அவர்கள்  தேவனுக்குப்  பயப்படாமற்போகிறார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  55:19}

 

அவன்  தன்னோடே  சமாதானமாயிருந்தவர்களுக்கு  விரோதமாய்  தன்  கையை  நீட்டி,  தன்  உடன்படிக்கையை  மீறி  நடந்தான்.  {Ps  55:20}

 

அவன்  வாயின்  சொற்கள்  வெண்ணெயைப்போல  மெதுவானவைகள்,  அவன்  இருதயமோ  யுத்தம்;  அவன்  வார்த்தைகள்  எண்ணெயிலும்  மிருதுவானவைகள்,  ஆனாலும்  அவைகள்  உருவின  பட்டயங்கள்.  {Ps  55:21}

 

கர்த்தர்மேல்  உன்  பாரத்தை  வைத்துவிடு,  அவர்  உன்னை  ஆதரிப்பார்;  நீதிமானை  ஒருபோதும்  தள்ளாடவொட்டார்.  {Ps  55:22}

 

தேவனே,  நீர்  அவர்களை  அழிவின்  குழியில்  இறங்கப்பண்ணுவீர்;  இரத்தப்பிரியரும்  சூதுள்ள  மனுஷரும்  தங்கள்  ஆயுளின்  நாட்களில்  பாதிவரையிலாகிலும்  பிழைத்திருக்கமாட்டார்கள்;  நானோ  உம்மை  நம்பியிருக்கிறேன்.  {Ps  55:23}

 

தேவனே,  எனக்கு  இரங்கும்;  மனுஷன்  என்னை  விழுங்கப்பார்க்கிறான்;  நாள்தோறும்  போர்செய்து,  என்னை  ஒடுக்குகிறான்.  {Ps  56:1}

 

என்  சத்துருக்கள்  நாள்தோறும்  என்னை  விழுங்கப்பார்க்கிறார்கள்;  உன்னதமானவரே,  எனக்கு  விரோதமாய்  அகங்கரித்துப்  போர்செய்கிறவர்கள்  அநேகர்.  {Ps  56:2}

 

நான்  பயப்படுகிற  நாளில்  உம்மை  நம்புவேன்.  {Ps  56:3}

 

தேவனை  முன்னிட்டு  அவருடைய  வார்த்தையைப்  புகழுவேன்;  தேவனை  நம்பியிருக்கிறேன்,  நான்  பயப்படேன்;  மாம்சமானவன்  எனக்கு  என்ன  செய்வான்?  {Ps  56:4}

 

நித்தமும்  என்  வார்த்தைகளைப்  புரட்டுகிறார்கள்;  எனக்குத்  தீங்குசெய்வதே  அவர்கள்  முழு  எண்ணமாயிருக்கிறது.  {Ps  56:5}

 

அவர்கள்  ஏகமாய்க்  கூடி,  பதிவிருக்கிறார்கள்;  என்  பிராணனை  வாங்க  விரும்பி,  என்  காலடிகளைத்  தொடர்ந்துவருகிறார்கள்.  {Ps  56:6}

 

அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தினால்  தப்புவார்களோ?  தேவனே,  கோபங்கொண்டு  ஜனங்களைக்  கீழே  தள்ளும்.  {Ps  56:7}

 

என்  அலைச்சல்களைத்  தேவரீர்  எண்ணியிருக்கிறீர்;  என்  கண்ணீரை  உம்முடைய  துருத்தியில்  வையும்;  அவைகள்  உம்முடைய  கணக்கில்  அல்லவோ  இருக்கிறது?  {Ps  56:8}

 

நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிடும்  நாளில்  என்  சத்துருக்கள்  பின்னிட்டுத்  திரும்புவார்கள்;  தேவன்  என்  பட்சத்தில்  இருக்கிறார்  என்பதை  அறிவேன்.  {Ps  56:9}

 

தேவனை  முன்னிட்டு  அவருடைய  வார்த்தையைப்  புகழுவேன்;  கர்த்தரை  முன்னிட்டு  அவருடைய  வார்த்தையைப்  புகழுவேன்.  {Ps  56:10}

 

தேவனை  நம்பியிருக்கிறேன்,  நான்  பயப்படேன்;  மனுஷன்  எனக்கு  என்னசெய்வான்?  {Ps  56:11}

 

தேவனே,  நான்  உமக்குப்  பண்ணின  பொருத்தனைகள்  என்மேல்  இருக்கிறது;  உமக்கு  ஸ்தோத்திரங்களைச்  செலுத்துவேன்.  {Ps  56:12}

 

நான்  தேவனுக்கு  முன்பாக  ஜீவனுள்ளோருடைய  வெளிச்சத்திலே  நடக்கும்படி,  நீர்  என்  ஆத்துமாவை  மரணத்துக்கும்  என்  கால்களை  இடறலுக்கும்  தப்புவியாதிருப்பீரோ?  {Ps  56:13}

 

எனக்கு  இரங்கும்,  தேவனே,  எனக்கு  இரங்கும்;  உம்மை  என்  ஆத்துமா  அண்டிக்கொள்ளுகிறது;  விக்கினங்கள்  கடந்துபோகுமட்டும்  உமது  செட்டைகளின்  நிழலிலே  வந்து  அடைவேன்.  {Ps  57:1}

 

எனக்காக  யாவையும்  செய்து  முடிக்கப்போகிற  தேவனாகிய  உன்னதமான  தேவனை  நோக்கிக்  கூப்பிடுவேன்.  {Ps  57:2}

 

என்னை  விழுங்கப்பார்க்கிறவன்  என்னை  நிந்திக்கையில்,  அவர்  பரலோகத்திலிருந்து  ஒத்தாசை  அனுப்பி,  என்னை  இரட்சிப்பார்:  (சேலா<Selah>.)  தேவன்  தமது  கிருபையையும்  தமது  சத்தியத்தையும்  அனுப்புவார்.  {Ps  57:3}

 

என்  ஆத்துமா  சிங்கங்களின்  நடுவிலிருக்கிறது;  தீயை  இறைக்கிற  மனுபுத்திரருக்குள்ளே  கிடக்கிறேன்;  அவர்கள்  பற்கள்  ஈட்டிகளும்  அம்புகளும்,  அவர்கள்  நாவு  கருக்கான  பட்டயமுமாயிருக்கிறது.  {Ps  57:4}

 

தேவனே,  வானங்களுக்கு  மேலாக  உயர்ந்தருளும்;  உமது  மகிமை  பூமியனைத்தின்மேலும்  உயர்ந்திருப்பதாக.  {Ps  57:5}

 

என்  கால்களுக்குக்  கண்ணியை  வைத்திருக்கிறார்கள்;  என்  ஆத்துமா  தொய்ந்துபோயிற்று;  எனக்கு  முன்பாகக்  குழியை  வெட்டி,  அதின்  நடுவிலே  விழுந்தார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  57:6}

 

என்  இருதயம்  ஆயத்தமாயிருக்கிறது,  தேவனே,  என்  இருதயம்  ஆயத்தமாயிருக்கிறது;  நான்  பாடிக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  57:7}

 

என்  மகிமையே,  விழி;  வீணையே,  சுரமண்டலமே,  விழியுங்கள்;  அதிகாலையில்  விழித்துக்கொள்வேன்.  {Ps  57:8}

 

ஆண்டவரே,  ஜனங்களுக்குள்ளே  உம்மைத்  துதிப்பேன்;  ஜாதிகளுக்குள்ளே  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  57:9}

 

உமது  கிருபை  வானபரியந்தமும்,  உமது  சத்தியம்  மேகமண்டலங்கள்பரியந்தமும்  எட்டுகிறது.  {Ps  57:10}

 

தேவனே,  வானங்களுக்குமேலாக  உயர்ந்தருளும்;  உமது  மகிமை  பூமியனைத்தின்மேலும்  உயர்ந்திருப்பதாக.  {Ps  57:11}

 

மவுனமாயிருக்கிறவர்களே,  நீங்கள்  மெய்யாய்  நீதியைப்  பேசுவீர்களோ?  மனுபுத்திரரே,  நியாயமாய்த்  தீர்ப்புசெய்வீர்களோ?  {Ps  58:1}

 

மனதார  நியாயக்கேடு  செய்கிறீர்கள்;  பூமியிலே  உங்கள்  கைகளின்  கொடுமையை  நிறுத்துக்  கொடுக்கிறீர்கள்.  {Ps  58:2}

 

துன்மார்க்கர்  கர்ப்பத்தில்  உற்பவித்ததுமுதல்  பேதலிக்கிறார்கள்;  தாயின்  வயிற்றிலிருந்து  பிறந்ததுமுதல்  பொய்  சொல்லி  வழிதப்பிப்  போகிறார்கள்.  {Ps  58:3}

 

சர்ப்பத்தின்  விஷத்திற்கு  ஒப்பான  விஷம்  அவர்களில்  இருக்கிறது.  {Ps  58:4}

 

பாம்பாட்டிகள்  விநோதமாய்  ஊதினாலும்  அவர்கள்  ஊதும்  சத்தத்திற்குச்  செவிகொடாதபடிக்குத்  தன்  காதை  அடைக்கிற  செவிட்டு  விரியனைப்போல்  இருக்கிறார்கள்.  {Ps  58:5}

 

தேவனே,  அவர்கள்  வாயிலுள்ள  பற்களைத்  தகர்த்துப்போடும்;  கர்த்தாவே,  பாலசிங்கங்களின்  கடைவாய்ப்பற்களை  நொறுக்கிப்போடும்.  {Ps  58:6}

 

கடந்தோடுகிற  தண்ணீரைப்போல்  அவர்கள்  கழிந்துபோகட்டும்;  அவன்  தன்  அம்புகளைத்  தொடுக்கும்போது  அவைகள்  சின்னபின்னமாய்ப்  போகக்கடவது.  {Ps  58:7}

 

கரைந்துபோகிற  நத்தையைப்போல்  ஒழிந்துபோவார்களாக;  ஸ்திரீயின்  முதிராப்  பிண்டத்தைப்போல்  சூரியனைக்  காணாதிருப்பார்களாக.  {Ps  58:8}

 

முள்  நெருப்பினால்  உங்கள்  பானைகளில்  சூடேறுமுன்னே  பச்சையானதையும்  எரிந்துபோனதையும்  அவர்  சுழல்காற்றினால்  அடித்துக்கொண்டுபோவார்.  {Ps  58:9}

 

பழிவாங்குதலை  நீதிமான்  காணும்போது  மகிழுவான்;  அவன்  தன்  பாதங்களைத்  துன்மார்க்கனுடைய  இரத்தத்திலே  கழுவுவான்.  {Ps  58:10}

 

அப்பொழுது,  மெய்யாய்  நீதிமானுக்குப்  பலன்  உண்டென்றும்,  மெய்யாய்  பூமியிலே  நியாயஞ்செய்கிற  தேவன்  உண்டென்றும்  மனுஷன்  சொல்லுவான்.  {Ps  58:11}

 

என்  தேவனே,  என்  சத்துருக்களுக்கு  என்னைத்  தப்புவியும்;  என்மேல்  எழும்புகிறவர்களுக்கு  என்னை  விலக்கி  உயர்ந்த  அடைக்கலத்திலே  வையும்.  {Ps  59:1}

 

அக்கிரமக்காரருக்கு  என்னைத்  தப்புவித்து,  இரத்தப்பிரியரான  மனுஷருக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்.  {Ps  59:2}

 

இதோ,  என்  பிராணனுக்குப்  பதிவிருக்கிறார்கள்;  கர்த்தாவே,  என்னிடத்தில்  மீறுதலும்  பாவமும்  இல்லாதிருந்தும்,  பலவான்கள்  எனக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடுகிறார்கள்.  {Ps  59:3}

 

என்னிடத்தில்  அக்கிரமம்  இல்லாதிருந்தும்,  ஓடித்திரிந்து  யுத்தத்துக்கு  ஆயத்தமாகிறார்கள்;  எனக்குத்  துணைசெய்ய  விழித்து  என்னை  நோக்கிப்பாரும்.  {Ps  59:4}

 

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  இஸ்ரவேலின்<Israel>  தேவனே,  நீர்  சகல  ஜாதிகளையும்  விசாரிக்க  விழித்தெழும்பும்;  வஞ்சகமாய்த்  துரோகஞ்செய்கிற  ஒருவருக்கும்  தயை  செய்யாதேயும்.  (சேலா<Selah>.)  {Ps  59:5}

 

அவர்கள்  சாயங்காலத்தில்  திரும்பிவந்து,  நாய்களைப்போல  ஊளையிட்டு,  ஊரைச்சுற்றித்  திரிகிறார்கள்.  {Ps  59:6}

 

இதோ,  தங்கள்  வார்த்தைகளைக்  கக்குகிறார்கள்;  அவர்கள்  உதடுகளில்  பட்டயங்கள்  இருக்கிறது,  கேட்கிறவன்  யார்  என்கிறார்கள்.  {Ps  59:7}

 

ஆனாலும்  கர்த்தாவே,  நீர்  அவர்களைப்  பார்த்து  நகைப்பீர்;  புறஜாதிகள்  யாவரையும்  இகழுவீர்.  {Ps  59:8}

 

அவன்  வல்லமையை  நான்  கண்டு,  உமக்குக்  காத்திருப்பேன்;  தேவனே  எனக்கு  உயர்ந்த  அடைக்கலம்.  {Ps  59:9}

 

என்  தேவன்  தம்முடைய  கிருபையினால்  என்னைச்  சந்திப்பார்;  தேவன்  என்  சத்துருக்களுக்குவரும்  நீதிசரிக்கட்டுதலை  நான்  காணும்படி  செய்வார்.  {Ps  59:10}

 

அவர்களைக்  கொன்றுபோடாதேயும்,  என்  ஜனங்கள்  மறந்துபோவார்களே;  எங்கள்  கேடகமாகிய  ஆண்டவரே,  உமது  வல்லமையினால்  அவர்களைச்  சிதறடித்து,  அவர்களைத்  தாழ்த்திப்போடும்.  {Ps  59:11}

 

அவர்கள்  உதடுகளின்  பேச்சு  அவர்கள்  வாயின்  பாவமாயிருக்கிறது;  அவர்கள்  இட்ட  சாபமும்  சொல்லிய  பொய்யும்  ஆகிய  இவைகளினிமித்தம்  தங்கள்  பெருமையில்  அகப்படுவார்களாக.  {Ps  59:12}

 

தேவன்  பூமியின்  எல்லைவரைக்கும்  யாக்கோபிலே<Jacob>  அரசாளுகிறவர்  என்று  அவர்கள்  அறியும்பொருட்டு,  அவர்களை  உம்முடைய  உக்கிரத்திலே  நிர்மூலமாக்கும்;  இனி  இராதபடிக்கு  அவர்களை  நிர்மூலமாக்கும்.  (சேலா<Selah>.)  {Ps  59:13}

 

அவர்கள்  சாயங்காலத்தில்  திரும்பிவந்து,  நாய்களைப்போல  ஊளையிட்டு,  ஊரைச்சுற்றித்  திரிகிறார்கள்.  {Ps  59:14}

 

அவர்கள்  உணவுக்காக  அலைந்து  திரிந்து  திருப்தியடையாமல்,  முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.  {Ps  59:15}

 

நானோ  உம்முடைய  வல்லமையைப்  பாடி,  காலையிலே  உம்முடைய  கிருபையை  மகிழ்ச்சியோடு  புகழுவேன்;  எனக்கு  நெருக்கமுண்டான  நாளிலே  நீர்  எனக்குத்  தஞ்சமும்  உயர்ந்த  அடைக்கலமுமானீர்.  {Ps  59:16}

 

என்  பெலனே,  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்;  தேவன்  எனக்கு  உயர்ந்த  அடைக்கலமும்,  கிருபையுள்ள  என்  தேவனுமாயிருக்கிறார்.  {Ps  59:17}

 

தேவனே,  நீர்  எங்களைக்  கைவிட்டீர்,  எங்களைச்  சிதறடித்தீர்,  எங்கள்மேல்  கோபமாயிருந்தீர்;  மறுபடியும்  எங்களிடமாய்த்  திரும்பியருளும்.  {Ps  60:1}

 

பூமியை  அதிரப்பண்ணி,  அதை  வெடிப்பாக்கினீர்;  அதின்  வெடிப்புகளைப்  பொருந்தப்பண்ணும்;  அது  அசைகின்றது.  {Ps  60:2}

 

உம்முடைய  ஜனங்களுக்குக்  கடினமான  காரியத்தைக்  காண்பித்தீர்;  தத்தளிப்பின்  மதுபானத்தை  எங்களுக்குக்  குடிக்கக்  கொடுத்தீர்.  {Ps  60:3}

 

சத்தியத்தினிமித்தம்  ஏற்றும்படியாக,  உமக்குப்  பயந்து  நடக்கிறவர்களுக்கு  ஒரு  கொடியைக்  கொடுத்தீர்.  (சேலா<Selah>.)  {Ps  60:4}

 

உமது  பிரியர்  விடுவிக்கப்படும்படி,  உமது  வலதுகரத்தினால்  இரட்சித்து,  எனக்குச்  செவிகொடுத்தருளும்.  {Ps  60:5}

 

தேவன்  தமது  பரிசுத்தத்தைக்கொண்டு  விளம்பினார்,  ஆகையால்  களிகூருவேன்;  சீகேமைப்<Shechem>  பங்கிட்டு,  சுக்கோத்தின்<Succoth>  பள்ளத்தாக்கை  அளந்துகொள்ளுவேன்.  {Ps  60:6}

 

கீலேயாத்<Gilead>  என்னுடையது,  மனாசேயும்<Manasseh>  என்னுடையது,  எப்பிராயீம்<Ephraim>  என்  தலையின்  பெலன்,  யூதா<Judah>  என்  நியாயப்பிரமாணிகன்.  {Ps  60:7}

 

மோவாப்<Moab>  என்  பாதபாத்திரம்,  ஏதோமின்மேல்<Edom>  என்  பாதரட்சையை  எறிந்துபோடுவேன்;  பெலிஸ்தியாவே<Philistia>,  என்னிமித்தம்  ஆர்ப்பரித்துக்கொள்.  {Ps  60:8}

 

அரணான  பட்டணத்திற்குள்  என்னை  நடத்திக்கொண்டுபோகிறவர்  யார்?  ஏதோம்மட்டும்<Edom>  எனக்கு  வழிகாட்டுகிறவர்  யார்?  {Ps  60:9}

 

எங்கள்  சேனைகளோடே  புறப்படாமலிருந்த  தேவரீர்  அல்லவோ?  எங்களைத்  தள்ளிவிட்டிருந்த  தேவரீர்  அல்லவோ?  {Ps  60:10}

 

இக்கட்டில்  எங்களுக்கு  உதவிசெய்யும்;  மனுஷனுடைய  உதவி  விருதா.  {Ps  60:11}

 

தேவனாலே  பராக்கிரமம்  செய்வோம்;  அவரே  எங்கள்  சத்துருக்களை  மிதித்துப்போடுவார்.  {Ps  60:12}

 

தேவனே,  என்  கூப்பிடுதலைக்  கேட்டு,  என்  விண்ணப்பத்தைக்  கவனியும்.  {Ps  61:1}

 

என்  இருதயம்  தொய்யும்போது  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  உம்மை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  எனக்கு  எட்டாத  உயரமான  கன்மலையில்  என்னைக்  கொண்டுபோய்விடும்.  {Ps  61:2}

 

நீர்  எனக்கு  அடைக்கலமும்,  சத்துருவுக்கு  எதிரே  பெலத்த  துருகமுமாயிருந்தீர்.  {Ps  61:3}

 

நான்  உம்முடைய  கூடாரத்தில்  சதாகாலமும்  தங்குவேன்;  உமது  செட்டைகளின்  மறைவிலே  வந்து  அடைவேன்.  (சேலா<Selah>.)  {Ps  61:4}

 

தேவனே,  நீர்  என்  பொருத்தனைகளைக்  கேட்டீர்;  உமது  நாமத்திற்குப்  பயப்படுகிறவர்களின்  சுதந்தரத்தை  எனக்குத்  தந்தீர்.  {Ps  61:5}

 

ராஜாவின்  நாட்களோடே  நாட்களைக்  கூட்டுவீர்;  அவர்  வருஷங்கள்  தலைமுறை  தலைமுறையாக  இருக்கும்.  {Ps  61:6}

 

அவர்  தேவனுக்கு  முன்பாக  என்றென்றைக்கும்  நிலைத்திருப்பார்;  தயையும்  உண்மையும்  அவரைக்  காக்கக்  கட்டளையிடும்.  {Ps  61:7}

 

இப்படியே  தினமும்  என்  பொருத்தனைகளை  நான்  செலுத்தும்படியாக,  உமது  நாமத்தை  என்றைக்கும்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  61:8}

 

தேவனையே  நோக்கி  என்  ஆத்துமா  அமர்ந்திருக்கிறது;  அவரால்  என்  இரட்சிப்பு  வரும்.  {Ps  62:1}

 

அவரே  என்  கன்மலையும்,  என்  இரட்சிப்பும்,  என்  உயர்ந்த  அடைக்கலமுமானவர்;  நான்  அதிகமாய்  அசைக்கப்படுவதில்லை.  {Ps  62:2}

 

நீங்கள்  எதுவரைக்கும்  ஒரு  மனுஷனுக்குத்  தீங்குசெய்ய  நினைப்பீர்கள்,  நீங்கள்  அனைவரும்  சங்கரிக்கப்படுவீர்கள்,  சாய்ந்தமதிலுக்கும்  இடிந்தசுவருக்கும்  ஒப்பாவீர்கள்.  {Ps  62:3}

 

அவனுடைய  மேன்மையிலிருந்து  அவனைத்  தள்ளும்படிக்கே  அவர்கள்  ஆலோசனைபண்ணி,  அபத்தம்பேச  விரும்புகிறார்கள்;  தங்கள்  வாயினால்  ஆசீர்வதித்து,  தங்கள்  உள்ளத்தில்  சபிக்கிறார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  62:4}

 

என்  ஆத்துமாவே,  தேவனையே  நோக்கி  அமர்ந்திரு;  நான்  நம்புகிறது  அவராலே  வரும்.  {Ps  62:5}

 

அவரே  என்  கன்மலையும்,  என்  இரட்சிப்பும்,  என்  உயர்ந்த  அடைக்கலமுமானவர்;  நான்  அசைக்கப்படுவதில்லை.  {Ps  62:6}

 

என்  இரட்சிப்பும்,  என்  மகிமையும்  தேவனிடத்தில்  இருக்கிறது;  பெலனான  என்  கன்மலையும்  என்  அடைக்கலமும்  தேவனுக்குள்  இருக்கிறது.  {Ps  62:7}

 

ஜனங்களே,  எக்காலத்திலும்  அவரை  நம்புங்கள்;  அவர்  சமுகத்தில்  உங்கள்  இருதயத்தை  ஊற்றிவிடுங்கள்;  தேவன்  நமக்கு  அடைக்கலமாயிருக்கிறார்.  (சேலா<Selah>.)  {Ps  62:8}

 

கீழ்மக்கள்  மாயையும்,  மேன்மக்கள்  பொய்யுமாமே;  தராசிலே  வைக்கப்பட்டால்  அவர்களெல்லாரும்  மாயையிலும்  லேசானவர்கள்.  {Ps  62:9}

 

கொடுமையை  நம்பாதிருங்கள்;  கொள்ளையினால்  பெருமைபாராட்டாதிருங்கள்;  ஐசுவரியம்  விருத்தியானால்  இருதயத்தை  அதின்மேல்  வைக்காதேயுங்கள்.  {Ps  62:10}

 

தேவன்  ஒருதரம்  விளம்பினார்,  இரண்டுதரம்  கேட்டிருக்கிறேன்;  வல்லமை  தேவனுடையது  என்பதே.  {Ps  62:11}

 

கிருபையும்  உம்முடையது,  ஆண்டவரே!  தேவரீர்  அவனவன்  செய்கைக்குத்  தக்கதாகப்  பலனளிக்கிறீர்.  {Ps  62:12}

 

தேவனே,  நீர்  என்னுடைய  தேவன்;  அதிகாலமே  உம்மைத்  தேடுகிறேன்;  வறண்டதும்  விடாய்த்ததும்  தண்ணீரற்றதுமான  நிலத்திலே  என்  ஆத்துமா  உம்மேல்  தாகமாயிருக்கிறது,  என்  மாம்சமானது  உம்மை  வாஞ்சிக்கிறது.  {Ps  63:1}

 

இப்படியே  பரிசுத்த  ஸ்தலத்தில்  உம்மைப்பார்க்க  ஆசையாயிருந்து,  உமது  வல்லமையையும்  உமது  மகிமையையும்  கண்டேன்.  {Ps  63:2}

 

ஜீவனைப்பார்க்கிலும்  உமது  கிருபை  நல்லது;  என்  உதடுகள்  உம்மைத்  துதிக்கும்.  {Ps  63:3}

 

என்  ஜீவனுள்ளமட்டும்  நான்  உம்மைத்  துதித்து,  உமது  நாமத்தைச்  சொல்லிக்  கையெடுப்பேன்.  {Ps  63:4}

 

நிணத்தையும்  கொழுப்பையும்  உண்டதுபோல  என்  ஆத்துமா  திருப்தியாகும்;  என்  வாய்  ஆனந்தக்களிப்புள்ள  உதடுகளால்  உம்மைப்  போற்றும்.  {Ps  63:5}

 

என்  படுக்கையின்மேல்  நான்  உம்மை  நினைக்கும்போது,  இராச்சாமங்களில்  உம்மைத்  தியானிக்கிறேன்.  {Ps  63:6}

 

நீர்  எனக்குத்  துணையாயிருந்ததினால்,  உமது  செட்டைகளின்  நிழலிலே  களிகூருகிறேன்.  {Ps  63:7}

 

என்  ஆத்துமா  உம்மைத்  தொடர்ந்து  பற்றிக்கொண்டிருக்கிறது;  உமது  வலதுகரம்  என்னைத்  தாங்குகிறது.  {Ps  63:8}

 

என்  பிராணனை  அழிக்கத்  தேடுகிறவர்களோ,  பூமியின்  தாழ்விடங்களில்  இறங்குவார்கள்.  {Ps  63:9}

 

அவர்கள்  பட்டயத்தால்  விழுவார்கள்;  நரிகளுக்கு  இரையாவார்கள்.  {Ps  63:10}

 

ராஜாவோ  தேவனில்  களிகூருவார்;  அவர்பேரில்  சத்தியம்பண்ணுகிறவர்கள்  யாவரும்  மேன்மைபாராட்டுவார்கள்;  பொய்  பேசுகிறவர்களின்  வாய்  அடைக்கப்படும்.  {Ps  63:11}

 

தேவனே,  என்  விண்ணப்பத்தில்  என்  சத்தத்தைக்  கேட்டருளும்;  சத்துருவால்  வரும்  பயத்தை  நீக்கி,  என்  பிராணனைக்  காத்தருளும்.  {Ps  64:1}

 

துன்மார்க்கர்  செய்யும்  இரகசிய  ஆலோசனைக்கும்,  அக்கிரமக்காரருடைய  கலகத்துக்கும்  என்னை  விலக்கி  மறைத்தருளும்.  {Ps  64:2}

 

அவர்கள்  தங்கள்  நாவைப்  பட்டயத்தைப்போல்  கூர்மையாக்கி,  {Ps  64:3}

 

மறைவுகளில்  உத்தமன்மேல்  எய்யும்பொருட்டுக்  கசப்பான  வார்த்தைகளாகிய  தங்கள்  அம்புகளை  நாணேற்றுகிறார்கள்;  சற்றும்  பயமின்றிச்  சடிதியில்  அவன்மேல்  எய்கிறார்கள்.  {Ps  64:4}

 

அவர்கள்  பொல்லாத  காரியத்தில்  தங்களை  உறுதிப்படுத்திக்கொண்டு,  மறைவான  கண்ணிகளை  வைக்க  ஆலோசனைபண்ணி,  அவைகளைக்  காண்பவன்  யார்  என்கிறார்கள்.  {Ps  64:5}

 

அவர்கள்  நியாயக்கேடுகளை  ஆய்ந்துதேடி,  தந்திரமான  யோசனை  நிறைவேறும்படி  பிரயத்தனம்பண்ணுகிறார்கள்;  அவர்களில்  ஒவ்வொருவனுடைய  உட்கருத்தும்  இருதயமும்  ஆழமாயிருக்கிறது.  {Ps  64:6}

 

ஆனாலும்  தேவன்  அவர்கள்மேல்  அம்புகளை  எய்வார்,  சடிதியாய்  அவர்கள்  காயப்படுவார்கள்.  {Ps  64:7}

 

அவர்கள்  தள்ளப்பட்டு,  கீழேவிழும்படி  அவர்கள்  நாவுகளே  அவர்களைக்  கெடுக்கும்;  அவர்களைக்  காண்கிற  யாவரும்  ஓடிப்போவார்கள்.  {Ps  64:8}

 

எல்லா  மனுஷரும்  பயந்து,  தேவனுடைய  செயலை  அறிவித்து,  அவர்  கிரியையை  உணர்ந்துகொள்வார்கள்.  {Ps  64:9}

 

நீதிமான்  கர்த்தருக்குள்  மகிழ்ந்து,  அவரை  நம்புவான்;  செம்மையான  இருதயமுள்ளவர்கள்  யாவரும்  மேன்மைபாராட்டுவார்கள்.  {Ps  64:10}

 

தேவனே,  சீயோனில்<Sion>  உமக்காகத்  துதியானது  அமைந்து  காத்திருக்கிறது;  பொருத்தனை  உமக்குச்  செலுத்தப்படும்.  {Ps  65:1}

 

ஜெபத்தைக்  கேட்கிறவரே,  மாம்சமான  யாவரும்  உம்மிடத்தில்  வருவார்கள்.  {Ps  65:2}

 

அக்கிரம  விஷயங்கள்  என்மேல்  மிஞ்சி  வல்லமைகொண்டது;  தேவரீரோ  எங்கள்  மீறுதல்களை  நிவிர்த்தியாக்குகிறீர்.  {Ps  65:3}

 

உம்முடைய  பிராகாரங்களில்  வாசமாயிருக்கும்படி  நீர்  தெரிந்துகொண்டு  சேர்த்துக்கொள்ளுகிறவன்  பாக்கியவான்;  உம்முடைய  பரிசுத்த  ஆலயமாகிய  உமது  வீட்டின்  நன்மையால்  திருப்தியாவோம்.  {Ps  65:4}

 

பூமியின்  கடையாந்தரங்களிலும்  தூரமான  சமுத்திரங்களிலுமுள்ளவர்கள்  எல்லாரும்  நம்பும்  நம்பிக்கையாயிருக்கிற  எங்கள்  இரட்சிப்பின்  தேவனே,  நீர்  பயங்கரமான  காரியங்களைச்  செய்கிறதினால்  எங்களுக்கு  நீதியுள்ள  உத்தரவு  அருளுகிறீர்.  {Ps  65:5}

 

வல்லமையை  இடைகட்டிக்கொண்டு,  உம்முடைய  பலத்தினால்  பர்வதங்களை  உறுதிப்படுத்தி,  {Ps  65:6}

 

சமுத்திரங்களின்  மும்முரத்தையும்  அவைகளுடைய  அலைகளின்  இரைச்சலையும்,  ஜனங்களின்  அமளியையும்  அமர்த்துகிறீர்.  {Ps  65:7}

 

கடையாந்தர  இடங்களில்  குடியிருக்கிறவர்களும்  உம்முடைய  அடையாளங்களினிமித்தம்  பயப்படுகிறார்கள்;  காலையையும்  மாலையையும்  களிகூரப்பண்ணுகிறீர்.  {Ps  65:8}

 

தேவரீர்  பூமியை  விசாரித்து  அதற்கு  நீர்ப்பாய்ச்சுகிறீர்;  தண்ணீர்  நிறைந்த  தேவநதியினால்  அதை  மிகவும்  செழிப்பாக்குகிறீர்;  இப்படி  நீர்  அதைத்  திருத்தி,  அவர்களுக்குத்  தானியத்தை  விளைவிக்கிறீர்.  {Ps  65:9}

 

அதின்  வரப்புகள்  தணியத்தக்கதாய்  அதின்  படைச்சால்களுக்குத்  தண்ணீர்  இறைத்து,  அதை  மழைகளால்  கரையப்பண்ணி,  அதின்  பயிரை  ஆசீர்வதிக்கிறீர்.  {Ps  65:10}

 

வருஷத்தை  உம்முடைய  நன்மையால்  முடிசூட்டுகிறீர்;  உமது  பாதைகள்  நெய்யாய்ப்  பொழிகிறது.  {Ps  65:11}

 

வனாந்தர  தாபரங்களிலும்  பொழிகிறது;  மேடுகள்  சுற்றிலும்  பூரிப்பாயிருக்கிறது.  {Ps  65:12}

 

மேய்ச்சலுள்ள  வெளிகளில்  ஆடுகள்  நிறைந்திருக்கிறது;  பள்ளத்தாக்குகள்  தானியத்தால்  மூடியிருக்கிறது;  அவைகள்  கெம்பீரித்துப்  பாடுகிறது.  {Ps  65:13}

 

பூமியின்  குடிகளே,  நீங்கள்  எல்லாரும்  தேவனுக்கு  முன்பாகக்  கெம்பீரமாய்ப்  பாடுங்கள்.  {Ps  66:1}

 

அவர்  நாமத்தின்  மகத்துவத்தைக்  கீர்த்தனம்பண்ணி,  அவருடைய  துதியின்  மகிமையைக்  கொண்டாடுங்கள்.  {Ps  66:2}

 

தேவனை  நோக்கி:  உமது  கிரியைகளில்  எவ்வளவு  பயங்கரமாயிருக்கிறீர்;  உமது  மகத்துவமான  வல்லமையினிமித்தம்  உம்முடைய  சத்துருக்கள்  உமக்கு  இச்சகம்பேசி  அடங்குவார்கள்.  {Ps  66:3}

 

பூமியின்மீதெங்கும்  உம்மைப்  பணிந்துகொண்டு  உம்மைத்  துதித்துப்  பாடுவார்கள்;  அவர்கள்  உம்முடைய  நாமத்தைத்  துதித்துப்  பாடுவார்கள்  என்று  சொல்லுங்கள்.  (சேலா<Selah>.)  {Ps  66:4}

 

தேவனுடைய  செய்கைகளை  வந்து  பாருங்கள்;  அவர்  மனுபுத்திரரிடத்தில்  நடப்பிக்குங்  கிரியையில்  பயங்கரமானவர்.  {Ps  66:5}

 

கடலை  உலர்ந்த  தரையாக  மாற்றினார்;  ஆற்றைக்  கால்நடையாய்க்  கடந்தார்கள்;  அங்கே  அவரில்  களிகூர்ந்தோம்.  {Ps  66:6}

 

அவர்  தம்முடைய  வல்லமையினால்  என்றென்றைக்கும்  அரசாளுகிறார்;  அவருடைய  கண்கள்  ஜாதிகள்மேல்  நோக்கமாயிருக்கிறது;  துரோகிகள்  தங்களை  உயர்த்தாதிருப்பார்களாக.  (சேலா<Selah>.)  {Ps  66:7}

 

ஜனங்களே,  நம்முடைய  தேவனை  ஸ்தோத்திரித்து,  அவரைத்  துதிக்குஞ்சத்தத்தைக்  கேட்கப்பண்ணுங்கள்.  {Ps  66:8}

 

அவர்  நம்முடைய  கால்களைத்  தள்ளாடவொட்டாமல்,  நம்முடைய  ஆத்துமாவை  உயிரோடே  வைக்கிறார்.  {Ps  66:9}

 

தேவனே,  எங்களைச்  சோதித்தீர்;  வெள்ளியைப்  புடமிடுகிறதுபோல  எங்களைப்  புடமிட்டீர்.  {Ps  66:10}

 

எங்களை  வலையில்  அகப்படுத்தி,  எங்கள்  இடுப்புகளின்மேல்  வருத்தமான  பாரத்தை  ஏற்றினீர்.  {Ps  66:11}

 

மனுஷரை  எங்கள்  தலையின்மேல்  ஏறிப்போகப்பண்ணினீர்;  தீயையும்  தண்ணீரையும்  கடந்துவந்தோம்;  செழிப்பான  இடத்தில்  எங்களைக்  கொண்டுவந்து  விட்டீர்.  {Ps  66:12}

 

சர்வாங்க  தகனபலிகளோடே  உமது  ஆலயத்திற்குள்  பிரவேசிப்பேன்;  {Ps  66:13}

 

என்  இக்கட்டில்  நான்  என்  உதடுகளைத்  திறந்து,  என்  வாயினால்  சொல்லிய  என்  பொருத்தனைகளை  உமக்குச்  செலுத்துவேன்.  {Ps  66:14}

 

ஆட்டுக்கடாக்களின்  நிணப்புகையுடனே  கொழுமையானவைகளை  உமக்குத்  தகனபலியாக  இடுவேன்;  காளைகளையும்  செம்மறியாட்டுக்  கடாக்களையும்  உமக்குப்  பலியிடுவேன்.  (சேலா<Selah>.)  {Ps  66:15}

 

தேவனுக்குப்  பயந்தவர்களே,  நீங்கள்  எல்லாரும்  வந்து  கேளுங்கள்;  அவர்  என்  ஆத்துமாவுக்குச்  செய்ததைச்  சொல்லுவேன்.  {Ps  66:16}

 

அவரை  நோக்கி  என்  வாயினால்  கூப்பிட்டேன்,  என்  நாவினால்  அவர்  புகழப்பட்டார்.  {Ps  66:17}

 

என்  இருதயத்தில்  அக்கிரமசிந்தை  கொண்டிருந்தேனானால்,  ஆண்டவர்  எனக்குச்  செவிகொடார்.  {Ps  66:18}

 

மெய்யாய்  தேவன்  எனக்குச்  செவிகொடுத்தார்,  என்  ஜெபத்தின்  சத்தத்தைக்  கேட்டார்.  {Ps  66:19}

 

என்  ஜெபத்தைத்  தள்ளாமலும்,  தமது  கிருபையை  என்னைவிட்டு  விலக்காமலும்  இருந்த  தேவனுக்கு  ஸ்தோத்திரமுண்டாவதாக.  {Ps  66:20}

 

தேவனே,  பூமியில்  உம்முடைய  வழியும்,  எல்லா  ஜாதிகளுக்குள்ளும்  உம்முடைய  இரட்சணியமும்  விளங்கும்படியாய்,  {Ps  67:1}

 

தேவரீர்  எங்களுக்கு  இரங்கி,  எங்களை  ஆசீர்வதித்து,  உம்முடைய  முகத்தை  எங்கள்மேல்  பிரகாசிக்கப்பண்ணும்.  (சேலா<Selah>.)  {Ps  67:2}

 

தேவனே,  ஜனங்கள்  உம்மைத்  துதிப்பார்களாக;  சகல  ஜனங்களும்  உம்மைத்  துதிப்பார்களாக.  {Ps  67:3}

 

தேவரீர்  ஜனங்களை  நிதானமாய்  நியாயந்தீர்த்து,  பூமியிலுள்ள  ஜாதிகளை  நடத்துவீர்;  ஆதலால்  ஜாதிகள்  சந்தோஷித்து,  கெம்பீரத்தோடே  மகிழக்கடவர்கள்.  (சேலா<Selah>.)  {Ps  67:4}

 

தேவனே,  ஜனங்கள்  உம்மைத்  துதிப்பார்களாக;  சகல  ஜனங்களும்  உம்மைத்  துதிப்பார்களாக.  {Ps  67:5}

 

பூமி  தன்  பலனைத்  தரும்,  தேவனாகிய  எங்கள்  தேவனே  எங்களை  ஆசீர்வதிப்பார்.  {Ps  67:6}

 

தேவன்  எங்களை  ஆசீர்வதிப்பார்;  பூமியின்  எல்லைகளெல்லாம்  அவருக்குப்  பயந்திருக்கும்.  {Ps  67:7}

 

தேவன்  எழுந்தருளுவார்,  அவருடைய  சத்துருக்கள்  சிதறுண்டு,  அவரைப்  பகைக்கிறவர்கள்  அவருக்கு  முன்பாக  ஓடிப்போவார்கள்.  {Ps  68:1}

 

புகை  பறக்கடிக்கப்படுவதுபோல  அவர்களைப்  பறக்கடிப்பீர்;  மெழுகு  அக்கினிக்குமுன்  உருகுவதுபோல  துன்மார்க்கர்  தேவனுக்குமுன்  அழிவார்கள்.  {Ps  68:2}

 

நீதிமான்களோ  தேவனுக்குமுன்பாக  மகிழ்ந்து  களிகூர்ந்து,  ஆனந்த  சந்தோஷமடைவார்கள்.  {Ps  68:3}

 

தேவனைப்  பாடி,  அவருடைய  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்;  வனாந்தரங்களில்  ஏறிவருகிறவருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்;  அவருடைய  நாமம்  யேகோவா<JEHOVAH//JAH>,  அவருக்கு  முன்பாகக்  களிகூருங்கள்.  {Ps  68:4}

 

தம்முடைய  பரிசுத்த  வாசஸ்தலத்திலிருக்கிற  தேவன்,  திக்கற்ற  பிள்ளைகளுக்குத்  தகப்பனும்,  விதவைகளுக்கு  நியாயம்  விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.  {Ps  68:5}

 

தேவன்  தனிமையானவர்களுக்கு  வீடுவாசல்  ஏற்படுத்தி,  கட்டுண்டவர்களை  விடுதலையாக்குகிறார்;  துரோகிகளோ  வறண்ட  பூமியில்  தங்குவார்கள்.  {Ps  68:6}

 

தேவனே,  நீர்  உம்முடைய  ஜனங்களுக்கு  முன்னே  சென்று,  அவாந்தரவெளியிலே  நடந்துவருகையில்,  (சேலா<Selah>.)  {Ps  68:7}

 

பூமி  அதிர்ந்தது;  தேவனாகிய  உமக்கு  முன்பாக  வானமும்  பொழிந்தது;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாயிருக்கிற  தேவனுக்கு  முன்பாகவே  இந்தச்  சீனாய்<Sinai>  மலையும்  அசைந்தது.  {Ps  68:8}

 

தேவனே,  சம்பூரண  மழையைப்  பெய்யப்பண்ணினீர்;  இளைத்துப்போன  உமது  சுதந்தரத்தைத்  திடப்படுத்தினீர்.  {Ps  68:9}

 

உம்முடைய  மந்தை  அதிலே  தங்கியிருந்தது;  தேவனே,  உம்முடைய  தயையினாலே  ஏழைகளைப்  பராமரிக்கிறீர்.  {Ps  68:10}

 

ஆண்டவர்  வசனம்  தந்தார்;  அதைப்  பிரசித்தப்படுத்துகிறவர்களின்  கூட்டம்  மிகுதி.  {Ps  68:11}

 

சேனைகளின்  ராஜாக்கள்  தத்தளித்து  ஓடினார்கள்;  வீட்டிலிருந்த  ஸ்திரீயானவள்  கொள்ளைப்பொருளைப்  பங்கிட்டாள்.  {Ps  68:12}

 

நீங்கள்  அடுப்பினடியில்  கிடந்தவர்களாயிருந்தாலும்,  வெள்ளியால்  அலங்கரிக்கப்பட்ட  புறாச்சிறகுகள்போலவும்,  பசும்பொன்  நிறமாகிய  அதின்  இறகுகளின்  சாயலாகவும்  இருப்பீர்கள்.  {Ps  68:13}

 

சர்வவல்லவர்  அதில்  ராஜாக்களைச்  சிதறடித்தபோது,  அது  சல்மோன்<Salmon>  மலையின்  உறைந்த  மழைபோல்  வெண்மையாயிற்று.  {Ps  68:14}

 

தேவபர்வதம்  பாசான்<Bashan>  பர்வதம்போலிருக்கிறது;  பாசான்<Bashan>  பர்வதம்  உயர்ந்த  சிகரங்களுள்ளது.  {Ps  68:15}

 

உயர்ந்த  சிகரமுள்ள  பர்வதங்களே,  ஏன்  துள்ளுகிறீர்கள்;  இந்தப்  பர்வதத்தில்  வாசமாயிருக்க  தேவன்  விரும்பினார்;  ஆம்,  கர்த்தர்  இதிலே  என்றென்றைக்கும்  வாசமாயிருப்பார்.  {Ps  68:16}

 

தேவனுடைய  இரதங்கள்  பதினாயிரங்களும்,  ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது;  ஆண்டவர்  பரிசுத்த  ஸ்தலமான  சீனாயிலிருந்தவண்ணமாய்<Sinai>  அவைகளுக்குள்  இருக்கிறார்.  {Ps  68:17}

 

தேவரீர்  உன்னதத்திற்கு  ஏறி,  சிறைப்பட்டவர்களைச்  சிறையாக்கிக்  கொண்டுபோனீர்;  தேவனாகிய  கர்த்தர்  மனுஷருக்குள்  வாசம்பண்ணும்  பொருட்டு,  துரோகிகளாகிய  மனுஷர்களுக்காகவும்  வரங்களைப்  பெற்றுக்கொண்டீர்.  {Ps  68:18}

 

எந்நாளும்  ஆண்டவருக்கு  ஸ்தோத்திரமுண்டாவதாக;  நம்மேல்  பாரஞ்சுமத்தினாலும்  நம்மை  இரட்சிக்கிற  தேவன்  அவரே.  (சேலா<Selah>.)  {Ps  68:19}

 

நம்முடைய  தேவன்  இரட்சிப்பை  அருளும்  தேவனாயிருக்கிறார்;  ஆண்டவராகிய  கர்த்தரால்  மரணத்திற்கு  நீங்கும்  வழிகளுண்டு.  {Ps  68:20}

 

மெய்யாகவே  தேவன்  தம்முடைய  சத்துருக்களின்  சிரசையும்,  தன்  அக்கிரமங்களில்  துணிந்து  நடக்கிறவனுடைய  மயிருள்ள  உச்சந்தலையையும்  உடைப்பார்.  {Ps  68:21}

 

உன்  கால்கள்  சத்துருக்களின்  இரத்தத்தில்  பதியும்படியாகவும்,  உன்  நாய்களின்  நாவு  அதை  நக்கும்படியாகவும்,  {Ps  68:22}

 

என்னுடைய  ஜனத்தைப்  பாசானிலிருந்து  திரும்ப<Bashan>  அழைத்துவருவேன்;  அதைச்  சமுத்திர  ஆழங்களிலிருந்தும்  திரும்ப  அழைத்துவருவேன்  என்று  ஆண்டவர்  சொன்னார்.  {Ps  68:23}

 

தேவனே,  உம்முடைய  நடைகளைக்  கண்டார்கள்;  என்  தேவனும்  என்  ராஜாவும்  பரிசுத்த  ஸ்தலத்திலே  நடந்துவருகிற  நடைகளையே  கண்டார்கள்.  {Ps  68:24}

 

முன்னாகப்  பாடுகிறவர்களும்,  பின்னாக  வீணைகளை  வாசிக்கிறவர்களும்,  சுற்றிலும்  தம்புரு  வாசிக்கிற  கன்னிகைகளும்  நடந்தார்கள்.  {Ps  68:25}

 

இஸ்ரவேலின்<Israel>  ஊற்றிலிருந்து  தோன்றினவர்களே,  சபைகளின்  நடுவே  ஆண்டவராகிய  தேவனை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  68:26}

 

அங்கே  அவர்களை  ஆளுகிற  சின்ன  பென்யமீனும்<Benjamin>,  யூதாவின்<Judah>  பிரபுக்களும்,  அவர்கள்  கூட்டமும்,  செபுலோனின்<Zebulun>  பிரபுக்களும்,  நப்தலியின்<Naphtali>  பிரபுக்களும்  உண்டு.  {Ps  68:27}

 

உன்  தேவன்  உனக்குப்  பலத்தைக்  கட்டளையிட்டார்;  தேவனே,  நீர்  எங்கள்நிமித்தம்  உண்டுபண்ணினதைத்  திடப்படுத்தும்.  {Ps  68:28}

 

எருசலேமிலுள்ள<Jerusalem>  உம்முடைய  ஆலயத்தினிமித்தம்,  ராஜாக்கள்  உமக்குக்  காணிக்கைகளைக்  கொண்டுவருவார்கள்.  {Ps  68:29}

 

நாணலிலுள்ள  மிருககூட்டத்தையும்,  ஜனங்களாகிய  கன்றுகளோடுகூட  ரிஷப  கூட்டத்தையும்  அதட்டும்;  ஒவ்வொருவனும்  வெள்ளிப்பணங்களைக்  கொண்டுவந்து  பணிந்துகொள்ளுவான்;  யுத்தங்களில்  பிரியப்படுகிற  ஜனங்களைச்  சிதறடிப்பார்.  {Ps  68:30}

 

பிரபுக்கள்  எகிப்திலிருந்து<Egypt>  வருவார்கள்;  எத்தியோப்பியா<Ethiopia>  தேவனை  நோக்கி  கையெடுக்கத்  தீவிரிக்கும்.  {Ps  68:31}

 

பூமியின்  ராஜ்யங்களே,  தேவனைப்  பாடி,  ஆண்டவரைக்  கீர்த்தனம்  பண்ணுங்கள்.  (சேலா<Selah>.)  {Ps  68:32}

 

ஆதிமுதலாயிருக்கிற  வானாதி  வானங்களின்மேல்  எழுந்தருளியிருக்கிறவரைப்  பாடுங்கள்;  இதோ,  தமது  சத்தத்தைப்  பலத்த  சத்தமாய்  முழங்கப்பண்ணுகிறார்.  {Ps  68:33}

 

தேவனுடைய  வல்லமையைப்  பிரசித்தப்படுத்துங்கள்;  அவருடைய  மகிமை  இஸ்ரவேலின்மேலும்<Israel>,  அவருடைய  வல்லமை  மேகமண்டலங்களிலும்  உள்ளது.  {Ps  68:34}

 

தேவனே,  உமது  பரிசுத்த  ஸ்தலங்களிலிருந்து  பயங்கரமாய்  விளங்குகிறீர்;  இஸ்ரவேலின்<Israel>  தேவன்  தம்முடைய  ஜனங்களுக்குப்  பெலனையும்  சத்துவத்தையும்  அருளுகிறவர்;  தேவனுக்கு  ஸ்தோத்திரமுண்டாவதாக.  {Ps  68:35}

 

தேவனே,  என்னை  இரட்சியும்;  வெள்ளங்கள்  என்  ஆத்துமாமட்டும்  பெருகிவருகிறது.  {Ps  69:1}

 

ஆழமான  உளையில்  அமிழ்ந்திருக்கிறேன்,  நிற்க  நிலையில்லை,  நிலையாத  ஜலத்தில்  ஆழ்ந்திருக்கிறேன்;  வெள்ளங்கள்  என்மேல்  புரண்டுபோகிறது.  {Ps  69:2}

 

நான்  கூப்பிடுகிறதினால்  இளைத்தேன்;  என்  தொண்டை  வறண்டுபோயிற்று;  என்  தேவனுக்கு  நான்  காத்திருக்கையால்,  என்  கண்கள்  பூத்துப்போயிற்று.  {Ps  69:3}

 

நிமித்தமில்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  என்  தலைமயிரிலும்  அதிகமாயிருக்கிறார்கள்;  வீணாக  எனக்குச்  சத்துருக்களாகி  என்னைச்  சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்;  நான்  எடுத்துக்கொள்ளாததை  நான்  கொடுக்க  வேண்டியதாயிற்று.  {Ps  69:4}

 

தேவனே,  நீர்  என்  புத்தியீனத்தை  அறிந்திருக்கிறீர்;  என்  குற்றங்கள்  உமக்கு  மறைந்திருக்கவில்லை.  {Ps  69:5}

 

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவரே,  உமக்காகக்  காத்திருக்கிறவர்கள்  என்னிமித்தம்  வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக;  இஸ்ரவேலின்<Israel>  தேவனே,  உம்மைத்  தேடுகிறவர்கள்  என்னிமித்தம்  நாணமடையாதிருப்பார்களாக.  {Ps  69:6}

 

உமதுநிமித்தம்  நிந்தையைச்  சகித்தேன்;  இலச்சை  என்  முகத்தை  மூடிற்று.  {Ps  69:7}

 

என்  சகோதரருக்கு  வேற்று  மனுஷனும்,  என்  தாயின்  பிள்ளைகளுக்கு  அந்நியனுமானேன்.  {Ps  69:8}

 

உம்முடைய  வீட்டைக்குறித்து  உண்டான  பக்திவைராக்கியம்  என்னைப்  பட்சித்தது;  உம்மை  நிந்திக்கிறவர்களுடைய  நிந்தனைகள்  என்மேல்  விழுந்தது.  {Ps  69:9}

 

என்  ஆத்துமா  வாடும்படி  உபவாசித்து  அழுதேன்;  அதுவும்  எனக்கு  நிந்தையாய்  முடிந்தது.  {Ps  69:10}

 

இரட்டை  என்  உடுப்பாக்கினேன்;  அப்பொழுதும்  அவர்களுக்குப்  பழமொழியானேன்.  {Ps  69:11}

 

வாசலில்  உட்கார்ந்திருக்கிறவர்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசுகிறார்கள்;  மதுபானம்பண்ணுகிறவர்களின்  பாடலானேன்.  {Ps  69:12}

 

ஆனாலும்  கர்த்தாவே,  அநுக்கிரககாலத்திலே  உம்மை  நோக்கி  விண்ணப்பஞ்  செய்கிறேன்;  தேவனே,  உமது  மிகுந்த  கிருபையினாலும்  உமது  இரட்சிப்பின்  சத்தியத்தினாலும்  எனக்குச்  செவிகொடுத்தருளும்.  {Ps  69:13}

 

நான்  அமிழ்ந்திப்போகாதபடிக்குச்  சேற்றினின்று  என்னைத்  தூக்கிவிடும்;  என்னைப்  பகைக்கிறவர்களினின்றும்  நிலையாத  ஜலத்தினின்றும்  நான்  நீங்கும்படி  செய்யும்.  {Ps  69:14}

 

ஜலப்பிரவாகங்கள்  என்மேல்  புரளாமலும்,  ஆழம்  என்னை  விழுங்காமலும்,  பாதாளம்  என்மேல்  தன்  வாயை  அடைத்துக்கொள்ளாமலும்  இருப்பதாக.  {Ps  69:15}

 

கர்த்தாவே,  என்  விண்ணப்பத்தைக்  கேட்டருளும்,  உம்முடைய  தயை  நலமாயிருக்கிறது;  உமது  உருக்கமான  இரக்கங்களின்படி  என்னைக்  கடாட்சித்தருளும்.  {Ps  69:16}

 

உமது  முகத்தை  உமது  அடியேனுக்கு  மறையாதேயும்;  நான்  வியாகுலப்படுகிறேன்,  எனக்குத்  தீவிரமாய்ச்  செவிகொடுத்தருளும்.  {Ps  69:17}

 

நீர்  என்  ஆத்துமாவினிடத்தில்  வந்து  அதை  விடுதலைபண்ணும்;  என்  சத்துருக்களினிமித்தம்  என்னை  மீட்டுவிடும்.  {Ps  69:18}

 

தேவரீர்  என்  நிந்தையையும்  என்  வெட்கத்தையும்  என்  அவமானத்தையும்  அறிந்திருக்கிறீர்;  என்  சத்துருக்கள்  எல்லாரும்  உமக்கு  முன்பாக  இருக்கிறார்கள்.  {Ps  69:19}

 

நிந்தை  என்  இருதயத்தைப்  பிளந்தது;  நான்  மிகவும்  வேதனைப்படுகிறேன்;  எனக்காக  பரிதபிக்கிறவனுண்டோ  என்று  காத்திருந்தேன்,  ஒருவனும்  இல்லை;  தேற்றுகிறவர்களுக்குக்  காத்திருந்தேன்,  ஒருவனையும்  காணேன்.  {Ps  69:20}

 

என்  ஆகாரத்தில்  கசப்புக்  கலந்து  கொடுத்தார்கள்,  என்  தாகத்துக்குக்  காடியைக்  குடிக்கக்கொடுத்தார்கள்.  {Ps  69:21}

 

அவர்களுடைய  பந்தி  அவர்களுக்குக்  கண்ணியும்,  அவர்களுடைய  செல்வம்  அவர்களுக்கு  வலையுமாயிருக்கக்கடவது.  {Ps  69:22}

 

அவர்களுடைய  கண்கள்  காணாதபடி  அந்தகாரப்படக்கடவது;  அவர்கள்  இடுப்புகளை  எப்போதும்  தள்ளாடப்பண்ணும்.  {Ps  69:23}

 

உம்முடைய  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றும்;  உம்முடைய  கோபாக்கினி  அவர்களைத்  தொடர்ந்து  பிடிப்பதாக.  {Ps  69:24}

 

அவர்கள்  வாசஸ்தலம்  பாழாகக்கடவது;  அவர்களுடைய  கூடாரங்களில்  குடியில்லாமற்போவதாக.  {Ps  69:25}

 

தேவரீர்  அடித்தவனை  அவர்கள்  துன்பப்படுத்தி,  நீர்  காயப்படுத்தினவர்களை  நோகப்  பேசுகிறார்களே.  {Ps  69:26}

 

அக்கிரமத்தின்மேல்  அக்கிரமத்தை  அவர்கள்மேல்  சுமத்தும்,  அவர்கள்  உமது  நீதிக்கு  வந்தெட்டாதிருப்பார்களாக.  {Ps  69:27}

 

ஜீவபுஸ்தகத்திலிருந்து  அவர்கள்பேர்  கிறுக்கப்பட்டுப்போவதாக;  நீதிமான்கள்  பேரோடே  அவர்கள்  பேர்  எழுதப்படாதிருப்பதாக.  {Ps  69:28}

 

நானோ  சிறுமையும்  துயரமுமுள்ளவன்;  தேவனே,  உம்முடைய  இரட்சிப்பு  எனக்கு  உயர்ந்த  அடைக்கலமாவதாக.  {Ps  69:29}

 

தேவனுடைய  நாமத்தைப்  பாட்டினால்  துதித்து,  அவரை  ஸ்தோத்திரத்தினால்  மகிமைப்படுத்துவேன்.  {Ps  69:30}

 

கொம்பும்  விரிகுளம்புமுள்ள  காளையெருதைப்பார்க்கிலும்,  இதுவே  கர்த்தருக்குப்  பிரியமாயிருக்கும்.  {Ps  69:31}

 

சாந்தகுணமுள்ளவர்கள்  இதைக்  கண்டு  சந்தோஷப்படுவார்கள்;  தேவனைத்  தேடுகிறவர்களே,  உங்கள்  இருதயம்  வாழும்.  {Ps  69:32}

 

கர்த்தர்  எளியவர்களின்  விண்ணப்பத்தைக்  கேட்கிறார்,  கட்டுண்ட  தம்முடையவர்களை  அவர்  புறக்கணியார்.  {Ps  69:33}

 

வானமும்  பூமியும்  சமுத்திரங்களும்  அவைகளில்  சஞ்சரிக்கிற  யாவும்  அவரைத்  துதிக்கக்கடவது.  {Ps  69:34}

 

தேவன்  சீயோனை<Zion>  இரட்சித்து,  யூதாவின்<Judah>  பட்டணங்களைக்  கட்டுவார்;  அப்பொழுது  அங்கே  குடியிருந்து  அதைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  {Ps  69:35}

 

அவருடைய  ஊழியக்காரரின்  சந்ததியார்  அதைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்;  அவருடைய  நாமத்தை  நேசிக்கிறவர்கள்  அதில்  வாசமாயிருப்பார்கள்.  {Ps  69:36}

 

தேவனே,  என்னை  விடுவியும்,  கர்த்தாவே,  எனக்குச்  சகாயஞ்செய்யத்  தீவிரியும்.  {Ps  70:1}

 

என்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்கள்  வெட்கி  நாணுவார்களாக;  எனக்குத்  தீங்குவரும்படி  விரும்புகிறவர்கள்  பின்னிட்டுத்  திரும்பி  இலச்சையடைவார்களாக.  {Ps  70:2}

 

  ,    ,  என்பவர்கள்  தாங்கள்  அடையும்  வெட்கத்தினால்  பின்னிட்டுப்போவார்களாக.  {Ps  70:3}

 

உம்மைத்  தேடுகிற  யாவரும்  உம்மில்  மகிழ்ந்து  சந்தோஷப்படுவார்களாக;  உமது  இரட்சிப்பில்  பிரியப்படுகிறவர்கள்  தேவனுக்கு  மகிமையுண்டாவதாக  என்று  எப்பொழுதும்  சொல்வார்களாக.  {Ps  70:4}

 

நானோ  சிறுமையும்  எளிமையுமானவன்;  தேவனே,  என்னிடத்தில்  தீவிரமாய்  வாரும்:  நீரே  என்  துணையும்  என்னை  விடுவிக்கிறவருமானவர்,  கர்த்தாவே,  தாமதியாதேயும்.  {Ps  70:5}

 

கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிறேன்;  நான்  ஒருபோதும்  வெட்கம்  அடையாதபடி  செய்யும்.  {Ps  71:1}

 

உமது  நீதியினிமித்தம்  என்னை  விடுவித்து,  என்னைக்  காத்தருளும்;  உமது  செவியை  எனக்குச்  சாய்த்து,  என்னை  இரட்சியும்.  {Ps  71:2}

 

நான்  எப்பொழுதும்  வந்தடையத்தக்கக்  கன்மலையாயிரும்;  என்னை  இரட்சிப்பதற்குக்  கட்டளையிட்டீரே;  நீரே  என்  கன்மலையும்  என்  கோட்டையுமாய்  இருக்கிறீர்.  {Ps  71:3}

 

என்  தேவனே,  துன்மார்க்கனுடைய  கைக்கும்,  நியாயக்கேடும்  கொடுமையுமுள்ளவனுடைய  கைக்கும்  என்னைத்  தப்புவியும்.  {Ps  71:4}

 

கர்த்தராகிய  ஆண்டவரே,  நீரே  என்  நோக்கமும்,  என்  சிறுவயதுதொடங்கி  என்  நம்பிக்கையுமாயிருக்கிறீர்.  {Ps  71:5}

 

நான்  கர்ப்பத்தில்  உற்பவித்ததுமுதல்  உம்மால்  ஆதரிக்கப்பட்டேன்;  என்  தாயின்  வயிற்றிலிருந்து  என்னை  எடுத்தவர்  நீரே;  உம்மையே  நான்  எப்பொழுதும்  துதிப்பேன்.  {Ps  71:6}

 

அநேகருக்கு  நான்  ஒரு  புதுமைப்போலானேன்;  நீரோ  எனக்குப்  பலத்த  அடைக்கலமாயிருக்கிறீர்.  {Ps  71:7}

 

என்  வாய்  உமது  துதியினாலும்,  நாள்தோறும்  உமது  மகத்துவத்தினாலும்  நிறைந்திருப்பதாக.  {Ps  71:8}

 

முதிர்ந்தவயதில்  என்னைத்  தள்ளிவிடாமலும்,  என்  பெலன்  ஒடுங்கும்போது  என்னைக்  கைவிடாமலும்  இரும்.  {Ps  71:9}

 

என்  சத்துருக்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசி,  என்  ஆத்துமாவுக்குக்  காத்திருக்கிறவர்கள்  ஏகமாய்  ஆலோசனைபண்ணி:  {Ps  71:10}

 

தேவன்  அவனைக்  கைவிட்டார்,  அவனைத்  தொடர்ந்துபிடியுங்கள்;  அவனை  விடுவிப்பார்  இல்லை  என்கிறார்கள்.  {Ps  71:11}

 

தேவனே,  எனக்குத்  தூரமாயிராதேயும்;  என்  தேவனே,  எனக்குச்  சகாயம்பண்ணத்  தீவிரியும்.  {Ps  71:12}

 

என்  ஆத்துமாவை  விரோதிக்கிறவர்கள்  வெட்கி  அழியவும்,  எனக்குப்  பொல்லாப்புத்  தேடுகிறவர்கள்  நிந்தையாலும்  இலச்சையாலும்  மூடப்படவுங்கடவர்கள்.  {Ps  71:13}

 

நானோ  எப்பொழுதும்  நம்பிக்கைகொண்டிருந்து,  மேன்மேலும்  உம்மைத்  துதிப்பேன்.  {Ps  71:14}

 

என்  வாய்  நாள்தோறும்  உமது  நீதியையும்  உமது  இரட்சிப்பையும்  சொல்லும்;  அவைகளின்  தொகையை  நான்  அறியேன்.  {Ps  71:15}

 

கர்த்தராகிய  ஆண்டவருடைய  வல்லமையை  முன்னிட்டு  நடப்பேன்;  உம்முடைய  நீதியைப்பற்றியே  மேன்மைபாராட்டுவேன்.  {Ps  71:16}

 

தேவனே,  என்  சிறுவயதுமுதல்  எனக்குப்  போதித்துவந்தீர்;  இதுவரைக்கும்  உம்முடைய  அதிசயங்களை  அறிவித்துவந்தேன்.  {Ps  71:17}

 

இப்பொழுதும்  தேவனே,  இந்தச்  சந்ததிக்கு  உமது  வல்லமையையும்,  வரப்போகிற  யாவருக்கும்  உமது  பராக்கிரமத்தையும்  நான்  அறிவிக்குமளவும்,  முதிர்வயதும்  நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும்  என்னைக்  கைவிடீராக.  {Ps  71:18}

 

தேவனே,  உம்முடைய  நீதி  உன்னதமானது,  பெரிதானவைகளை  நீர்  செய்தீர்;  தேவனே,  உமக்கு  நிகரானவர்  யார்?  {Ps  71:19}

 

அநேக  இக்கட்டுகளையும்  ஆபத்துகளையும்  காணும்படி  செய்த  என்னை  நீர்  திரும்பவும்  உயிர்ப்பித்து,  திரும்பவும்  என்னைப்  பூமியின்  பாதாளங்களிலிருந்து  ஏறப்பண்ணுவீர்.  {Ps  71:20}

 

என்  மேன்மையைப்  பெருகப்பண்ணி,  என்னை  மறுபடியும்  தேற்றுவீர்.  {Ps  71:21}

 

என்  தேவனே,  நான்  வீணையைக்கொண்டு  உம்மையும்  உம்முடைய  சத்தியத்தையும்  துதிப்பேன்;  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரே,  சுரமண்டலத்தைக்கொண்டு  உம்மைப்  பாடுவேன்.  {Ps  71:22}

 

நான்  பாடும்போது  என்  உதடுகளும்,  நீர்  மீட்டுக்கொண்ட  என்  ஆத்துமாவும்  கெம்பீரித்து  மகிழும்.  {Ps  71:23}

 

எனக்குப்  பொல்லாப்பைத்  தேடுகிறவர்கள்  வெட்கி  இலச்சையடைந்தபடியால்,  நாள்தோறும்  என்  நாவு  உமது  நீதியைக்  கொண்டாடும்.  {Ps  71:24}

 

தேவனே,  ராஜாவுக்கு  உம்முடைய  நியாயத்தீர்ப்புகளையும்,  ராஜாவின்  குமாரனுக்கு  உம்முடைய  நீதியையும்  கொடுத்தருளும்.  {Ps  72:1}

 

அவர்  உம்முடைய  ஜனங்களை  நீதியோடும்,  உம்முடைய  ஏழைகளை  நியாயத்தோடும்  விசாரிப்பார்.  {Ps  72:2}

 

பர்வதங்கள்  ஜனத்திற்குச்  சமாதானத்தைத்  தரும்,  மேடுகள்  நீதியின்  விளைவோடிருக்கும்.  {Ps  72:3}

 

ஜனத்தில்  சிறுமைப்படுகிறவர்களை  அவர்  நியாயம்  விசாரித்து,  ஏழையின்  பிள்ளைகளை  இரட்சித்து,  இடுக்கண்  செய்கிறவனை  நொறுக்குவார்.  {Ps  72:4}

 

சூரியனும்  சந்திரனுமுள்ளமட்டும்,  அவர்கள்  உமக்குத்  தலைமுறை  தலைமுறையாகப்  பயந்திருப்பார்கள்.  {Ps  72:5}

 

புல்லறுப்புண்ட  வெளியின்மேல்  பெய்யும்  மழையைப்போலவும்,  பூமியை  நனைக்கும்  தூறலைப்போலவும்  இறங்குவார்.  {Ps  72:6}

 

அவருடைய  நாட்களில்  நீதிமான்  செழிப்பான்;  சந்திரனுள்ளவரைக்கும்  மிகுந்த  சமாதானம்  இருக்கும்.  {Ps  72:7}

 

ஒரு  சமுத்திரந்தொடங்கி  மறுசமுத்திரம்வரைக்கும்,  நதிதொடங்கி  பூமியின்  எல்லைகள்வரைக்கும்  அவர்  அரசாளுவார்.  {Ps  72:8}

 

வனாந்தரத்தார்  அவருக்கு  முன்பாகக்  குனிந்து  வணங்குவார்கள்;  அவருடைய  சத்துருக்கள்  மண்ணை  நக்குவார்கள்.  {Ps  72:9}

 

தர்ஷீசின்<Tarshish>  ராஜாக்களும்  தீவுகளின்  ராஜாக்களும்  காணிக்கைகளைக்  கொண்டுவருவார்கள்;  ஷேபாவிலும்<Sheba>  சேபாவிலுமுள்ள<Seba>  ராஜாக்கள்  வெகுமானங்களைக்  கொண்டுவருவார்கள்.  {Ps  72:10}

 

சகல  ராஜாக்களும்  அவரைப்  பணிந்துகொள்வார்கள்;  சகல  ஜாதிகளும்  அவரைச்  சேவிப்பார்கள்.  {Ps  72:11}

 

கூப்பிடுகிற  எளியவனையும்,  உதவியற்ற  சிறுமையானவனையும்  அவர்  விடுவிப்பார்.  {Ps  72:12}

 

பலவீனனுக்கும்  எளியவனுக்கும்  அவர்  இரங்கி,  எளியவர்களின்  ஆத்துமாக்களை  இரட்சிப்பார்.  {Ps  72:13}

 

அவர்கள்  ஆத்துமாக்களை  வஞ்சகத்திற்கும்  கொடுமைக்கும்  தப்புவிப்பார்;  அவர்களுடைய  இரத்தம்  அவருடைய  பார்வைக்கு  அருமையாயிருக்கும்.  {Ps  72:14}

 

அவர்  பிழைத்திருப்பார்,  ஷேபாவின்<Sheba>  பொன்  அவருக்குக்  கொடுக்கப்படும்;  அவர்நிமித்தம்  இடைவிடாமல்  ஜெபம்பண்ணப்படும்,  எந்நாளும்  ஸ்தோத்திரிக்கப்படுவார்.  {Ps  72:15}

 

பூமியிலே  மலைகளின்  உச்சிகளில்  ஒரு  பிடி  தானியம்  விதைக்கப்பட்டிருக்கும்;  அதின்  விளைவு  லீபனோனைப்போல<Lebanon>  அசையும்;  பூமியின்  புல்லைப்போல  நகரத்தார்  செழித்தோங்குவார்கள்.  {Ps  72:16}

 

அவருடைய  நாமம்  என்றென்றைக்கும்  இருக்கும்;  சூரியனுள்ளமட்டும்  அவருடைய  நாமம்  சந்தான  பரம்பரையாய்  நிலைக்கும்;  மனுஷர்  அவருக்குள்  ஆசீர்வதிக்கப்படுவார்கள்,  எல்லா  ஜாதிகளும்  அவரைப்  பாக்கியமுடையவர்  என்று  வாழ்த்துவார்கள்.  {Ps  72:17}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாயிருக்கிற  கர்த்தராகிய  தேவனுக்கு  ஸ்தோத்திரமுண்டாவதாக;  அவரே  அதிசயங்களைச்  செய்கிறவர்.  {Ps  72:18}

 

அவருடைய  மகிமைபொருந்திய  நாமத்துக்கு  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரமுண்டாவதாக;  பூமி  முழுவதும்  அவருடைய  மகிமையால்  நிறைந்திருப்பதாக.  ஆமென்<Amen>,  ஆமென்<Amen>.  {Ps  72:19}

 

ஈசாயின்<Jesse>  புத்திரனாகிய  தாவீதின்<David>  விண்ணப்பங்கள்  முடிந்தது.  {Ps  72:20}

 

சுத்த  இருதயமுள்ளவர்களாகிய  இஸ்ரவேலருக்கு<Israel>  தேவன்  நல்லவராகவே  இருக்கிறார்.  {Ps  73:1}

 

ஆனாலும்  என்  கால்கள்  தள்ளாடுதலுக்கும்,  என்  அடிகள்  சறுக்குதலுக்கும்  சற்றே  தப்பிற்று.  {Ps  73:2}

 

துன்மார்க்கரின்  வாழ்வை  நான்  காண்கையில்,  வீம்புக்காரராகிய  அவர்கள்மேல்  பொறாமைகொண்டேன்.  {Ps  73:3}

 

மரணபரியந்தம்  அவர்களுக்கு  இடுக்கண்களில்லை;  அவர்களுடைய  பெலன்  உறுதியாயிருக்கிறது.  {Ps  73:4}

 

நரர்  படும்  வருத்தத்தில்  அகப்படார்கள்;  மனுஷர்  அடையும்  உபாதியை  அடையார்கள்.  {Ps  73:5}

 

ஆகையால்  பெருமை  சரப்பணியைப்போல்  அவர்களைச்  சுற்றிக்கொள்ளும்,  கொடுமை  ஆடையைப்போல்  அவர்களை  மூடிக்கொள்ளும்.  {Ps  73:6}

 

அவர்கள்  கண்கள்  கொழுப்பினால்  எடுப்பாய்ப்  பார்க்கிறது;  அவர்கள்  இருதயம்  விரும்புவதிலும்  அதிகமாய்  நடந்தேறுகிறது.  {Ps  73:7}

 

அவர்கள்  சீர்கெட்டுப்போய்,  அகந்தையாய்க்  கொடுமைபேசுகிறார்கள்;  இறுமாப்பாய்ப்  பேசுகிறார்கள்.  {Ps  73:8}

 

தங்கள்  வாய்  வானமட்டும்  எட்டப்பேசுகிறார்கள்;  அவர்கள்  நாவு  பூமியெங்கும்  உலாவுகிறது.  {Ps  73:9}

 

ஆகையால்  அவருடைய  ஜனங்கள்  இந்த  வழியாகவே  திரும்புகிறார்கள்;  தண்ணீர்கள்  அவர்களுக்குப்  பரிபூரணமாய்ச்  சுரந்துவரும்.  {Ps  73:10}

 

தேவனுக்கு  அது  எப்படித்  தெரியும்?  உன்னதமானவருக்கு  அதைப்பற்றி  அறிவு  உண்டோ?  என்று  சொல்லுகிறார்கள்.  {Ps  73:11}

 

இதோ,  இவர்கள்  துன்மார்க்கர்;  இவர்கள்  என்றும்  சுகஜீவிகளாயிருந்து,  ஆஸ்தியைப்  பெருகப்பண்ணுகிறார்கள்.  {Ps  73:12}

 

நான்  விருதாவாகவே  என்  இருதயத்தைச்  சுத்தம்பண்ணி,  குற்றமில்லாமையிலே  என்  கைகளைக்  கழுவினேன்.  {Ps  73:13}

 

நாள்தோறும்  நான்  வாதிக்கப்பட்டும்,  காலைதோறும்  தண்டிக்கப்பட்டும்  இருக்கிறேன்.  {Ps  73:14}

 

இவ்விதமாய்ப்  பேசுவேன்  என்று  நான்  சொன்னேனானால்,  இதோ,  உம்முடைய  பிள்ளைகளின்  சந்ததிக்குத்  துரோகியாவேன்.  {Ps  73:15}

 

இதை  அறியும்படிக்கு  யோசித்துப்பார்த்தேன்;  நான்  தேவனுடைய  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசித்து,  {Ps  73:16}

 

அவர்கள்  முடிவைக்  கவனித்து  உணருமளவும்,  அது  என்  பார்வைக்கு  விசனமாயிருந்தது.  {Ps  73:17}

 

நிச்சயமாகவே  நீர்  அவர்களைச்  சறுக்கலான  இடங்களில்  நிறுத்தி,  பாழான  இடங்களில்  விழப்பண்ணுகிறீர்.  {Ps  73:18}

 

அவர்கள்  ஒரு  நிமிஷத்தில்  எவ்வளவு  பாழாய்ப்போகிறார்கள்!  பயங்கரங்களால்  அழிந்து  நிர்மூலமாகிறார்கள்.  {Ps  73:19}

 

நித்திரை  தெளிந்தவுடனே  சொப்பனம்  ஒழிவதுபோல்,  ஆண்டவரே,  நீர்  விழிக்கும்போது,  அவர்கள்  வேஷத்தை  இகழுவீர்.  {Ps  73:20}

 

இப்படியாக  என்  மனம்  கசந்தது,  என்  உள்ளிந்திரியங்களிலே  குத்துண்டேன்.  {Ps  73:21}

 

நான்  காரியம்  அறியாத  மூடனானேன்;  உமக்கு  முன்பாக  மிருகம்போலிருந்தேன்.  {Ps  73:22}

 

ஆனாலும்  நான்  எப்பொழுதும்  உம்மோடிருக்கிறேன்;  என்  வலதுகையைப்  பிடித்துத்  தாங்குகிறீர்.  {Ps  73:23}

 

உம்முடைய  ஆலோசனையின்படி  நீர்  என்னை  நடத்தி,  முடிவிலே  என்னை  மகிமையில்  ஏற்றுக்கொள்வீர்.  {Ps  73:24}

 

பரலோகத்தில்  உம்மையல்லாமல்  எனக்கு  யார்  உண்டு?  பூலோகத்தில்  உம்மைத்  தவிர  எனக்கு  வேறே  விருப்பமில்லை.  {Ps  73:25}

 

என்  மாம்சமும்  என்  இருதயமும்  மாண்டுபோகிறது;  தேவன்  என்றென்றைக்கும்  என்  இருதயத்தின்  கன்மலையும்  என்  பங்குமாயிருக்கிறார்.  {Ps  73:26}

 

இதோ,  உம்மைவிட்டுத்  தூரமாய்ப்போகிறவர்கள்  நாசமடைவார்கள்;  உம்மைவிட்டுச்  சோரம்போகிற  அனைவரையும்  சங்கரிப்பீர்.  {Ps  73:27}

 

எனக்கோ,  தேவனை  அண்டிக்கொண்டிருப்பதே  நலம்;  நான்  உமது  கிரியைகளையெல்லாம்  சொல்லிவரும்படி  கர்த்தராகிய  ஆண்டவர்மேல்  என்  நம்பிக்கையை  வைத்திருக்கிறேன்.  {Ps  73:28}

 

தேவனே,  நீர்  எங்களை  என்றென்றைக்கும்  ஏன்  தள்ளிவிடுகிறீர்?  உமது  மேய்ச்சலின்  ஆடுகள்மேல்  உமது  கோபம்  ஏன்  புகைகிறது?  {Ps  74:1}

 

நீர்  பூர்வகாலத்தில்  சம்பாதித்த  உமது  சபையையும்,  நீர்  மீட்டுக்கொண்ட  உமது  சுதந்தரமான  கோத்திரத்தையும்,  நீர்  வாசமாயிருந்த  சீயோன்<Zion>  பர்வதத்தையும்  நினைத்தருளும்.  {Ps  74:2}

 

நெடுங்காலமாகப்  பாழாய்க்கிடக்கிற  ஸ்தலங்களில்  உம்முடைய  பாதங்களை  எழுந்தருளப்பண்ணும்;  பரிசுத்த  ஸ்தலத்திலே  சத்துரு  அனைத்தையும்  கெடுத்துப்போட்டான்.  {Ps  74:3}

 

உம்முடைய  சத்துருக்கள்  உம்முடைய  ஆலயங்களுக்குள்ளே  கெர்ச்சித்து,  தங்கள்  கொடிகளை  அடையாளங்களாக  நாட்டுகிறார்கள்.  {Ps  74:4}

 

கோடரிகளை  ஓங்கிச்  சோலையிலே  மரங்களை  வெட்டுகிறவன்  பேர்பெற்றவனானான்.  {Ps  74:5}

 

இப்பொழுதோ  அவர்கள்  அதின்  சித்திரவேலைகள்  முழுவதையும்  வாச்சிகளாலும்  சம்மட்டிகளாலும்  தகர்த்துப்  போடுகிறார்கள்.  {Ps  74:6}

 

உமது  பரிசுத்த  ஸ்தலத்தை  அக்கினிக்கு  இரையாக்கி,  உமது  நாமத்தின்  வாசஸ்தலத்தைத்  தரைமட்டும்  இடித்து,  அசுத்தப்படுத்தினார்கள்.  {Ps  74:7}

 

அவர்களை  ஏகமாய்  நிர்த்தூளியாக்குவோம்  என்று  தங்கள்  இருதயத்தில்  சொல்லி,  தேசத்திலுள்ள  ஆலயங்களையெல்லாம்  சுட்டெரித்துப்போட்டார்கள்.  {Ps  74:8}

 

எங்களுக்கு  இருந்த  அடையாளங்களைக்  காணோம்;  தீர்க்கதரிசியும்  இல்லை;  இது  எதுவரைக்கும்  என்று  அறிகிறவனும்  எங்களிடத்தில்  இல்லை.  {Ps  74:9}

 

தேவனே,  எதுவரைக்கும்  சத்துரு  நிந்திப்பான்?  பகைவன்  உமது  நாமத்தை  எப்பொழுதும்  தூஷிப்பானோ?  {Ps  74:10}

 

உமது  வலதுகரத்தை  ஏன்  முடக்கிக்கொள்ளுகிறீர்;  அதை  உமது  மடியிலிருந்து  எடுத்து  ஓங்கி  நிர்மூலமாக்கும்.  {Ps  74:11}

 

பூமியின்  நடுவில்  இரட்சிப்புகளைச்  செய்துவருகிற  தேவன்  பூர்வகாலமுதல்  என்னுடைய  ராஜா.  {Ps  74:12}

 

தேவரீர்  உமது  வல்லமையினால்  சமுத்திரத்தை  இரண்டாகப்  பிளந்து,  ஜலத்திலுள்ள  வலுசர்ப்பங்களின்  தலைகளை  உடைத்தீர்.  {Ps  74:13}

 

தேவரீர்  முதலைகளின்  தலைகளை  நருக்கிப்போட்டு,  அதை  வனாந்தரத்து  ஜனங்களுக்கு  உணவாகக்  கொடுத்தீர்.  {Ps  74:14}

 

ஊற்றையும்  ஆற்றையும்  பிளந்துவிட்டீர்;  மகா  நதிகளையும்  வற்றிப்போகப்பண்ணினீர்.  {Ps  74:15}

 

பகலும்  உம்முடையது,  இரவும்  உம்முடையது;  தேவரீர்  ஒளியையும்  சூரியனையும்  படைத்தீர்.  {Ps  74:16}

 

பூமியின்  எல்லைகளையெல்லாம்  திட்டம்பண்ணினீர்;  கோடைகாலத்தையும்  மாரிகாலத்தையும்  உண்டாக்கினீர்.  {Ps  74:17}

 

கர்த்தாவே,  சத்துரு  உம்மை  நிந்தித்ததையும்,  மதியீன  ஜனங்கள்  உமது  நாமத்தைத்  தூஷித்ததையும்  நினைத்துக்கொள்ளும்.  {Ps  74:18}

 

உமது  காட்டுப்புறாவின்  ஆத்துமாவைத்  துஷ்டருடைய  கூட்டத்திற்கு  ஒப்புக்கொடாதேயும்;  உமது  ஏழைகளின்  கூட்டத்தை  என்றைக்கும்  மறவாதேயும்.  {Ps  74:19}

 

உம்முடைய  உடன்படிக்கையை  நினைத்தருளும்;  பூமியின்  இருளான  இடங்கள்  கொடுமையுள்ள  குடியிருப்புகளால்  நிறைந்திருக்கிறதே.  {Ps  74:20}

 

துன்பப்பட்டவன்  வெட்கத்தோடே  திரும்பவிடாதிரும்;  சிறுமையும்  எளிமையுமானவன்  உமது  நாமத்தைத்  துதிக்கும்படி  செய்யும்.  {Ps  74:21}

 

தேவனே,  எழுந்தருளும்,  உமக்காக  நீரே  வழக்காடும்;  மதியீனனாலே  நாடோறும்  உமக்கு  வரும்  நிந்தையை  நினைத்துக்கொள்ளும்.  {Ps  74:22}

 

உம்முடைய  சத்துருக்களின்  ஆரவாரத்தை  மறவாதேயும்;  உமக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களின்  அமளி  எப்பொழுதும்  அதிகரிக்கிறது.  {Ps  74:23}

 

உம்மைத்  துதிக்கிறோம்,  தேவனே,  உம்மைத்  துதிக்கிறோம்;  உமது  நாமம்  சமீபமாயிருக்கிறதென்று  உமது  அதிசயமான  கிரியைகள்  அறிவிக்கிறது.  {Ps  75:1}

 

நியமிக்கப்பட்ட  காலத்திலே,  யதார்த்தமாய்  நியாயந்தீர்ப்பேன்.  {Ps  75:2}

 

பூமியானது  அதின்  எல்லாக்  குடிகளோடும்  கரைந்துபோகிறது;  அதின்  தூண்களை  நான்  நிலைநிறுத்துகிறேன்.  (சேலா<Selah>.)  {Ps  75:3}

 

வீம்புக்காரரை  நோக்கி,  வீம்பு  பேசாதேயுங்கள்  என்றும்;  துன்மார்க்கரை  நோக்கி,  கொம்பை  உயர்த்தாதிருங்கள்  என்றும்  சொன்னேன்.  {Ps  75:4}

 

உங்கள்  கொம்பை  உயரமாய்  உயர்த்தாதிருங்கள்;  இறுமாப்புள்ள  கழுத்துடையவர்களாய்ப்  பேசாதிருங்கள்.  {Ps  75:5}

 

கிழக்கிலும்  மேற்கிலும்  வனாந்தரதிசையிலுமிருந்து  ஜெயம்  வராது.  {Ps  75:6}

 

தேவனே  நியாயாதிபதி;  ஒருவனைத்  தாழ்த்தி,  ஒருவனை  உயர்த்துகிறார்.  {Ps  75:7}

 

கலங்கிப்  பொங்குகிற  மதுபானத்தினால்  நிறைந்த  பாத்திரம்  கர்த்தருடைய  கையிலிருக்கிறது,  அதிலிருந்து  வார்க்கிறார்;  பூமியிலுள்ள  துன்மார்க்கர்  யாவரும்  அதின்  வண்டல்களை  உறிஞ்சிக்  குடிப்பார்கள்.  {Ps  75:8}

 

நானோ  என்றென்றைக்கும்  இதை  அறிவித்து,  யாக்கோபின்<Jacob>  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  75:9}

 

துன்மார்க்கருடைய  கொம்புகளையெல்லாம்  வெட்டிப்போடுவேன்;  நீதிமானுடைய  கொம்புகளோ  உயர்த்தப்படும்.  {Ps  75:10}

 

யூதாவில்<Judah>  தேவன்  அறியப்பட்டவர்;  இஸ்ரவேலில்<Israel>  அவருடைய  நாமம்  பெரியது.  {Ps  76:1}

 

சாலேமில்<Salem>  அவருடைய  கூடாரமும்,  சீயோனில்<Zion>  அவருடைய  வாசஸ்தலமும்  இருக்கிறது.  {Ps  76:2}

 

அங்கேயிருந்து  வில்லின்  அம்புகளையும்,  கேடகத்தையும்,  பட்டயத்தையும்,  யுத்தத்தையும்  முறித்தார்.  (சேலா<Selah>.)  {Ps  76:3}

 

மகத்துவமுள்ளவரே,  கொள்ளையுள்ள  பர்வதங்களைப்பார்க்கிலும்  நீர்  பிரகாசமுள்ளவர்.  {Ps  76:4}

 

தைரிய  நெஞ்சுள்ளவர்கள்  கொள்ளையிடப்பட்டு,  நித்திரையடைந்து  அசர்ந்தார்கள்;  வல்லமையுள்ள  எல்லா  மனுஷருடைய  கைகளும்  அவர்களுக்கு  உதவாமற்போயிற்று.  {Ps  76:5}

 

யாக்கோபின்<Jacob>  தேவனே,  உம்முடைய  கண்டிதத்தினால்  இரதங்களும்  குதிரைகளும்  உறங்கி  விழுந்தது.  {Ps  76:6}

 

நீர்,  நீரே,  பயங்கரமானவர்;  உமது  கோபம்  மூளும்போது  உமக்கு  முன்பாக  நிற்பவன்  யார்?  {Ps  76:7}

 

நியாயம்  விசாரிக்கவும்  பூமியில்  சிறுமைப்பட்டவர்கள்  யாவரையும்  இரட்சிக்கவும்,  தேவரீர்  எழுந்தருளினபோது,  {Ps  76:8}

 

வானத்திலிருந்து  நியாயத்தீர்ப்புக்  கேட்கப்பண்ணினீர்;  பூமி  பயந்து  அமர்ந்தது.  (சேலா<Selah>.)  {Ps  76:9}

 

மனுஷனுடைய  கோபம்  உமது  மகிமையை  விளங்கப்பண்ணும்;  மிஞ்சுங்கோபத்தை  நீர்  அடக்குவீர்.  {Ps  76:10}

 

பொருத்தனைபண்ணி  அதை  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  நிறைவேற்றுங்கள்;  அவரைச்  சூழ்ந்திருக்கிற  அனைவரும்  பயங்கரமானவருக்குக்  காணிக்கைகளைக்  கொண்டுவரக்கடவர்கள்.  {Ps  76:11}

 

பிரபுக்களின்  ஆவியை  அடக்குவார்;  பூமியின்  ராஜாக்களுக்கு  அவர்  பயங்கரமானவர்.  {Ps  76:12}

 

நான்  தேவனை  நோக்கி  என்  சத்தத்தை  உயர்த்திக்  கெஞ்சினேன்,  என்  சத்தத்தை  தேவனிடத்தில்  உயர்த்தினேன்,  அவர்  எனக்குச்  செவிகொடுத்தார்.  {Ps  77:1}

 

என்  ஆபத்துநாளில்  ஆண்டவரைத்  தேடினேன்;  இரவிலும்  என்  கை  தளராமல்  விரிக்கப்பட்டிருந்தது;  என்  ஆத்துமா  ஆறுதலடையாமற்போயிற்று.  {Ps  77:2}

 

நான்  தேவனை  நினைத்தபோது  அலறினேன்;  நான்  தியானிக்கும்போது  என்  ஆவி  தொய்ந்துபோயிற்று.  (சேலா<Selah>.)  {Ps  77:3}

 

நான்  தூங்காதபடி  என்  கண்ணிமைகளைப்  பிடித்திருக்கிறீர்;  நான்  பேசமாட்டாதபடி  சஞ்சலப்படுகிறேன்.  {Ps  77:4}

 

பூர்வநாட்களையும்,  ஆதிகாலத்து  வருஷங்களையும்  சிந்திக்கிறேன்.  {Ps  77:5}

 

இராக்காலத்தில்  என்  சங்கீதத்தை  நான்  நினைத்து,  என்  இருதயத்தோடே  சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்;  என்  ஆவி  ஆராய்ச்சிசெய்தது.  {Ps  77:6}

 

ஆண்டவர்  நித்தியகாலமாய்த்  தள்ளிவிடுவாரோ?  இனி  ஒருபோதும்  தயைசெய்யாதிருப்பாரோ?  {Ps  77:7}

 

அவருடைய  கிருபை  முற்றிலும்  அற்றுப்போயிற்றோ?  வாக்குத்தத்தமானது  தலைமுறை  தலைமுறைக்கும்  ஒழிந்துபோயிற்றோ?  {Ps  77:8}

 

தேவன்  இரக்கஞ்செய்ய  மறந்தாரோ?  கோபத்தினாலே  தமது  உருக்கமான  இரக்கங்களை  அடைத்துக்கொண்டாரோ?  என்றேன்.  (சேலா<Selah>.)  {Ps  77:9}

 

அப்பொழுது  நான்:  இது  என்  பலவீனம்;  ஆனாலும்  உன்னதமானவருடைய  வலதுகரத்திலுள்ள  வருஷங்களை  நினைவுகூருவேன்.  {Ps  77:10}

 

கர்த்தருடைய  செயல்களை  நினைவுகூருவேன்,  உம்முடைய  பூர்வகாலத்து  அதிசயங்களையே  நினைவுகூருவேன்;  {Ps  77:11}

 

உம்முடைய  கிரியைகளையெல்லாம்  தியானித்து,  உம்முடைய  செயல்களை  யோசிப்பேன்  என்றேன்.  {Ps  77:12}

 

தேவனே,  உமது  வழி  பரிசுத்த  ஸ்தலத்திலுள்ளது;  நம்முடைய  தேவனைப்போலப்  பெரிய  தேவன்  யார்?  {Ps  77:13}

 

அதிசயங்களைச்  செய்கிற  தேவன்  நீரே;  ஜனங்களுக்குள்ளே  உம்முடைய  வல்லமையை  விளங்கப்பண்ணினீர்.  {Ps  77:14}

 

யாக்கோபு<Jacob>  யோசேப்பு<Joseph>  என்பவர்களின்  புத்திரராகிய  உம்முடைய  ஜனங்களை,  உமது  புயத்தினாலே  மீட்டுக்கொண்டீர்.  (சேலா<Selah>.)  {Ps  77:15}

 

ஜலங்கள்  உம்மைக்  கண்டது;  தேவனே,  ஜலங்கள்  உம்மைக்  கண்டு  தத்தளித்தது;  ஆழங்களும்  கலங்கினது.  {Ps  77:16}

 

மேகங்கள்  ஜலங்களைப்  பொழிந்தது;  ஆகாயமண்டலங்கள்  முழக்கமிட்டது;  உம்முடைய  அம்புகளும்  தெறிப்புண்டு  பறந்தது.  {Ps  77:17}

 

உம்முடைய  குமுறலின்  சத்தம்  சுழல்காற்றில்  முழங்கினது;  மின்னல்கள்  பூச்சக்கரத்தைப்  பிரகாசிப்பித்தது;  பூமி  குலுங்கி  அதிர்ந்தது.  {Ps  77:18}

 

உமது  வழி  கடலிலும்,  உமது  பாதைகள்  திரண்ட  தண்ணீர்களிலும்  இருந்தது;  உமது  காலடிகள்  தெரியப்படாமற்போயிற்று.  {Ps  77:19}

 

மோசே<Moses>  ஆரோன்<Aaron>  என்பவர்களின்  கையால்,  உமது  ஜனங்களை  ஒரு  ஆட்டுமந்தையைப்போல  வழிநடத்தினீர்.  {Ps  77:20}

 

என்  ஜனங்களே,  என்  உபதேசத்தைக்  கேளுங்கள்;  என்  வாயின்  வசனங்களுக்கு  உங்கள்  செவிகளைச்  சாயுங்கள்.  {Ps  78:1}

 

என்  வாயை  உவமைகளால்  திறப்பேன்;  பூர்வகாலத்து  மறைபொருள்களை  வெளிப்படுத்துவேன்.  {Ps  78:2}

 

அவைகளை  நாங்கள்  கேள்விப்பட்டு  அறிந்தோம்;  எங்கள்  பிதாக்கள்  அவைகளை  எங்களுக்குத்  தெரிவித்தார்கள்.  {Ps  78:3}

 

பின்வரும்  சந்ததியான  பிள்ளைகளுக்கு  நாங்கள்  அவைகளை  மறைக்காமல்,  கர்த்தரின்  துதிகளையும்  அவருடைய  பலத்தையும்,  அவர்  செய்த  அவருடைய  அதிசயங்களையும்  விவரிப்போம்.  {Ps  78:4}

 

அவர்  யாக்கோபிலே<Jacob>  சாட்சியை  ஏற்படுத்தி,  இஸ்ரவேலிலே<Israel>  வேதத்தை  ஸ்தாபித்து,  அவைகளைத்  தங்கள்  பிள்ளைகளுக்கு  அறிவிக்கும்படி  நம்முடைய  பிதாக்களுக்குக்  கட்டளையிட்டார்.  {Ps  78:5}

 

இனிப்  பிறக்கும்  பிள்ளைகளாகிய  பின்சந்ததியார்  அதை  அறிந்துகொண்டு,  அவர்கள்  எழும்பித்  தங்கள்  பிள்ளைகளுக்கு  அவைகளைச்  சொல்லும்படிக்கும்;  {Ps  78:6}

 

தேவன்மேல்  அவர்கள்  தங்கள்  நம்பிக்கையை  வைத்து,  தேவனுடைய  செயல்களை  மறவாமல்,  அவர்  கற்பனைகளைக்  கைக்கொள்ளும்படிக்கும்;  {Ps  78:7}

 

இருதயத்தைச்  செவ்வைப்படுத்தாமலும்,  தேவனை  உறுதியாய்ப்  பற்றிக்கொள்ளாமலும்  இருந்த  முரட்டாட்டமும்  கலகமுமுள்ள  சந்ததியாகிய  தங்கள்  பிதாக்களுக்கு  அவர்கள்  ஒப்பாகாதபடிக்கும்,  இவைகளைக்  கட்டளையிட்டார்.  {Ps  78:8}

 

ஆயுதமணிந்த  வில்வீரரான  எப்பிராயீம்<Ephraim>  புத்திரர்  யுத்தநாளிலே  முதுகுகாட்டினார்கள்.  {Ps  78:9}

 

அவர்கள்  தேவனுடைய  உடன்படிக்கையைக்  கைக்கொள்ளாமலும்,  அவருடைய  கட்டளைகளின்படி  நடக்கச்  சம்மதியாமலும்,  {Ps  78:10}

 

அவருடைய  செயல்களையும்,  அவர்  தங்களுக்குக்  காண்பித்த  அதிசயங்களையும்  மறந்தார்கள்.  {Ps  78:11}

 

அவர்களுடைய  பிதாக்களுக்குமுன்பாக,  எகிப்துதேசத்துச்<Egypt>  சோவான்<Zoan>  வெளியிலே,  அவர்  அதிசயமானவைகளைச்  செய்தார்.  {Ps  78:12}

 

கடலைப்  பிளந்து,  அவர்களைக்  கடக்கப்பண்ணி,  ஜலத்தைக்  குவியலாக  நிற்கும்படி  செய்தார்.  {Ps  78:13}

 

பகலிலே  மேகத்தினாலும்,  இராமுழுதும்  அக்கினி  வெளிச்சத்தினாலும்  அவர்களை  வழிநடத்தினார்.  {Ps  78:14}

 

வனாந்தரத்திலே  கன்மலைகளைப்  பிளந்து,  மகா  ஆழங்களிலிருந்து  தண்ணீரை  அவர்களுக்குக்  குடிக்கக்கொடுத்தார்.  {Ps  78:15}

 

கன்மலையிலிருந்து  நீரோட்டங்களைப்  புறப்படப்பண்ணி,  தண்ணீரை  நதிபோல  ஓடிவரும்படி  செய்தார்.  {Ps  78:16}

 

என்றாலும்,  அவர்கள்  பின்னும்  அவருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்து,  வறண்ட  வெளியிலே  உன்னதமானவருக்குக்  கோபம்  மூட்டினார்கள்.  {Ps  78:17}

 

தங்கள்  இச்சைக்கேற்ற  போஜனத்தைக்  கேட்டு,  தங்கள்  இருதயத்தில்  தேவனைப்  பரீட்சைபார்த்தார்கள்.  {Ps  78:18}

 

அவர்கள்  தேவனுக்கு  விரோதமாய்ப்  பேசி:  தேவன்  வனாந்தரத்திலே  போஜனபந்தியை  ஆயத்தப்படுத்தக்கூடுமோ?  {Ps  78:19}

 

இதோ  அவர்  கன்மலையை  அடித்ததினால்  தண்ணீர்  புறப்பட்டு,  நதிகளாய்ப்  புரண்டுவந்தது;  அவர்  அப்பத்தையும்  கொடுக்கக்கூடுமோ?  தம்முடைய  ஜனத்திற்கு  மாம்சத்தையும்  ஆயத்தப்படுத்துவாரோ?  என்றார்கள்.  {Ps  78:20}

 

ஆகையால்  கர்த்தர்  அதைக்  கேட்டுக்  கோபங்கொண்டார்;  அவர்கள்  தேவனை  விசுவாசியாமலும்,  அவருடைய  இரட்சிப்பை  நம்பாமலும்  போனதினால்,  {Ps  78:21}

 

யாக்கோபுக்கு<Jacob>  விரோதமாய்  அக்கினி  பற்றியெரிந்தது;  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாய்க்  கோபம்  மூண்டது.  {Ps  78:22}

 

அவர்  உயரத்திலுள்ள  மேகங்களுக்குக்  கட்டளையிட்டு,  வானத்தின்  கதவுகளைத்  திறந்து,  {Ps  78:23}

 

மன்னாவை<manna>  அவர்களுக்கு  ஆகாரமாக  வருஷிக்கப்பண்ணி,  வானத்தின்  தானியத்தை  அவர்களுக்குக்  கொடுத்தார்.  {Ps  78:24}

 

தூதர்களின்  அப்பத்தை  மனுஷன்  சாப்பிட்டான்;  அவர்களுக்கு  ஆகாரத்தைப்  பூரணமாய்  அனுப்பினார்.  {Ps  78:25}

 

ஆகாசத்திலே  கீழ்க்காற்றை  வரப்பண்ணி,  தம்முடைய  வல்லமையினால்  தென்றலையும்  வீசச்செய்து,  {Ps  78:26}

 

மாம்சத்தைத்  தூளத்தனையாயும்,  சிறகுள்ள  பறவைகளைக்  கடற்கரை  மணலத்தனையாயும்  வருஷிக்கப்பண்ணி,  {Ps  78:27}

 

அவைகளை  அவர்கள்  பாளயத்தின்  நடுவிலும்,  அவர்கள்  கூடாரங்களைச்  சுற்றிலும்  இறங்கப்பண்ணினார்.  {Ps  78:28}

 

அவர்கள்  புசித்துத்  திருப்தியடைந்தார்கள்;  அவர்கள்  இச்சித்ததை  அவர்களுக்குக்  கொடுத்தார்.  {Ps  78:29}

 

அவர்கள்  தங்கள்  இச்சையை  வெறுக்கவில்லை;  அவர்களுடைய  போஜனம்  அவர்கள்  வாயில்  இருக்கும்போதே,  {Ps  78:30}

 

தேவகோபம்  அவர்கள்மேல்  எழும்பி,  அவர்களில்  கொழுத்தவர்களைச்  சங்கரித்து,  இஸ்ரவேலில்<Israel>  விசேஷித்தவர்களை  மடியப்பண்ணிற்று.  {Ps  78:31}

 

இவையெல்லாம்  நடந்தும்,  அவர்  செய்த  அதிசயங்களை  அவர்கள்  நம்பாமல்,  பின்னும்  பாவஞ்செய்தார்கள்.  {Ps  78:32}

 

ஆதலால்  அவர்கள்  நாட்களை  விருதாவிலும்,  அவர்கள்  வருஷங்களைப்  பயங்கரத்திலும்  கழியப்பண்ணினார்.  {Ps  78:33}

 

அவர்களை  அவர்  கொல்லும்போது  அவரைக்குறித்து  விசாரித்து,  அவர்கள்  திரும்பிவந்து  தேவனை  அதிகாலமே  தேடி;  {Ps  78:34}

 

தேவன்  தங்கள்  கன்மலையென்றும்,  உன்னதமான  தேவன்  தங்கள்  மீட்பர்  என்றும்,  நினைவுகூர்ந்தார்கள்.  {Ps  78:35}

 

ஆனாலும்  அவர்கள்  தங்கள்  வாயினால்  அவருக்கு  இச்சகம்பேசி,  தங்கள்  நாவினால்  அவரிடத்தில்  பொய்சொன்னார்கள்.  {Ps  78:36}

 

அவர்கள்  இருதயம்  அவரிடத்தில்  நிலைவரப்படவில்லை;  அவருடைய  உடன்படிக்கையில்  அவர்கள்  உண்மையாயிருக்கவில்லை.  {Ps  78:37}

 

அவரோ  அவர்களை  அழிக்காமல்,  இரக்கமுள்ளவராய்  அவர்கள்  அக்கிரமத்தை  மன்னித்தார்;  அவர்  தமது  உக்கிரம்  முழுவதையும்  எழுப்பாமல்,  அநேகந்தரம்  தமது  கோபத்தை  விலக்கிவிட்டார்.  {Ps  78:38}

 

அவர்கள்  மாம்சமென்றும்,  திரும்பிவராமல்  அகலுகிற  காற்றென்றும்  நினைவுகூர்ந்தார்.  {Ps  78:39}

 

எத்தனைதரமோ  வனாந்தரத்திலே  அவருக்குக்  கோபம்  மூட்டி,  அவாந்தரவெளியிலே  அவரை  விசனப்படுத்தினார்கள்.  {Ps  78:40}

 

அவர்கள்  திரும்பி  தேவனைப்  பரீட்சைபார்த்து,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரை  மட்டுப்படுத்தினார்கள்.  {Ps  78:41}

 

அவருடைய  கரத்தையும்,  அவர்  தங்களைச்  சத்துருவுக்கு  விலக்கி  மீட்ட  நாளையும்  நினையாமற்போனார்கள்.  {Ps  78:42}

 

அவர்  எகிப்திலே<Egypt>  தம்முடைய  அடையாளங்களையும்,  சோவான்<Zoan>  வெளியிலே  தம்முடைய  அற்புதங்களையும்  செய்தார்.  {Ps  78:43}

 

அவர்களுடைய  நதிகளை  இரத்தமாக  மாற்றி,  அவர்களுடைய  ஆறுகளிலுள்ள  ஜலத்தைக்  குடிக்கக்கூடாதபடி  செய்தார்.  {Ps  78:44}

 

அவர்களை  அழிக்கும்படி  வண்டு  ஜாதிகளையும்,  அவர்களைக்  கெடுக்கும்படி  தவளைகளையும்  அவர்களுக்குள்ளே  அனுப்பினார்.  {Ps  78:45}

 

அவர்களுடைய  விளைச்சலைப்  புழுக்களுக்கும்,  அவர்களுடைய  பிரயாசத்தின்  பலனை  வெட்டுக்கிளிகளுக்கும்  கொடுத்தார்.  {Ps  78:46}

 

கல்மழையினால்  அவர்களுடைய  திராட்சச்செடிகளையும்,  ஆலாங்கட்டியினால்  அவர்களுடைய  அத்திமரங்களையும்  அழித்து,  {Ps  78:47}

 

அவர்களுடைய  மிருகஜீவன்களைக்  கல்மழைக்கும்,  அவர்களுடைய  ஆடுமாடுகளை  இடிகளுக்கும்  ஒப்புக்கொடுத்தார்.  {Ps  78:48}

 

தமது  உக்கிரமான  கோபத்தையும்,  மூர்க்கத்தையும்,  சினத்தையும்,  உபத்திரவத்தையும்,  தீங்குசெய்யும்  தூதர்களையும்  அவர்களுக்குள்ளே  அனுப்பினார்.  {Ps  78:49}

 

அவர்  தம்முடைய  கோபத்துக்கு  வழிதிறந்து,  அவர்கள்  ஆத்துமாவை  மரணத்துக்கு  விலக்கிக்  காவாமல்,  அவர்கள்  ஜீவனைக்  கொள்ளைநோய்க்கு  ஒப்புக்கொடுத்தார்.  {Ps  78:50}

 

எகிப்திலே<Egypt>  தலைச்சன்கள்  அனைத்தையும்,  காமின்<Ham>  கூடாரங்களிலே  அவர்களுடைய  பெலனில்  முதற்பலனான  யாவரையும்  அழித்து;  {Ps  78:51}

 

தம்முடைய  ஜனங்களை  ஆடுகளைப்போல்  புறப்படப்பண்ணி,  அவர்களை  வனாந்தரத்திலே  மந்தையைப்போல்  கூட்டிக்கொண்டுபோய்;  {Ps  78:52}

 

அவர்கள்  பயப்படாதபடிக்கு  அவர்களைப்  பத்திரமாய்  வழிநடத்தினார்;  அவர்கள்  சத்துருக்களைக்  கடல்  மூடிப்போட்டது.  {Ps  78:53}

 

அவர்களைத்  தமது  பரிசுத்த  ஸ்தலத்தின்  எல்லைவரைக்கும்,  தமது  வலதுகரம்  சம்பாதித்த  இந்தப்  பர்வதமட்டுக்கும்  அழைத்துக்கொண்டுவந்து,  {Ps  78:54}

 

அவர்கள்  முகத்திற்கு  முன்பாக  ஜாதிகளைத்  துரத்திவிட்டு,  தேசத்தை  நூல்போட்டுப்  பங்கிட்டு,  அவர்களுடைய  கூடாரங்களில்  இஸ்ரவேலின்<Israel>  கோத்திரங்களைக்  குடியேற்றினார்.  {Ps  78:55}

 

ஆனாலும்  அவர்கள்  உன்னதமான  தேவனைப்  பரீட்சைபார்த்து,  அவருக்குக்  கோபம்  மூட்டி,  அவருடைய  சாட்சிகளைக்  கைக்கொள்ளாமற்போய்,  {Ps  78:56}

 

தங்கள்  பிதாக்களைப்போல  வழிவிலகி,  துரோகம்பண்ணி,  மோசம்போக்கும்  வில்லைப்போல்  துவண்டு,  {Ps  78:57}

 

தங்கள்  மேடைகளினால்  அவருக்குக்  கோபம்  மூட்டி,  தங்கள்  விக்கிரகங்களினால்  எரிச்சல்  உண்டாக்கினார்கள்.  {Ps  78:58}

 

தேவன்  அதைக்  கேட்டு  உக்கிரமாகி,  இஸ்ரவேலை<Israel>  மிகவும்  வெறுத்து,  {Ps  78:59}

 

தாம்  மனுஷருக்குள்ளே  போட்ட  கூடாரமாகிய  சீலோவிலுள்ள<Shiloh>  வாசஸ்தலத்தை  விட்டுவிலகி,  {Ps  78:60}

 

தமது  பலத்தைச்  சிறையிருப்புக்கும்,  தமது  மகிமையைச்  சத்துருவின்  கைக்கும்  ஒப்புக்கொடுத்து,  {Ps  78:61}

 

தமது  ஜனத்தைப்  பட்டயத்துக்கு  இரையாக்கி,  தமது  சுதந்தரத்தின்மேல்  கோபங்கொண்டார்.  {Ps  78:62}

 

அவர்கள்  வாலிபரை  அக்கினி  பட்சித்தது,  அவர்கள்  கன்னியாஸ்திரீகள்  வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.  {Ps  78:63}

 

அவர்களுடைய  ஆசாரியர்கள்  பட்டயத்தால்  விழுந்தார்கள்,  அவர்களுடைய  விதவைகள்  அழவில்லை.  {Ps  78:64}

 

அப்பொழுது  ஆண்டவர்  நித்திரை  தெளிந்தவனைப்போலவும்,  திராட்சரசத்தால்  கெம்பீரிக்கிற  பராக்கிரமசாலியைப்போலவும்  விழித்து,  {Ps  78:65}

 

தம்முடைய  சத்துருக்களைப்  பின்புறமாக  அடித்து,  அவர்களுக்கு  நித்திய  நிந்தையை  வரப்பண்ணினார்.  {Ps  78:66}

 

அவர்  யோசேப்பின்<Joseph>  கூடாரத்தைப்  புறக்கணித்தார்;  எப்பிராயீம்<Ephraim>  கோத்திரத்தை  அவர்  தெரிந்துகொள்ளாமல்,  {Ps  78:67}

 

யூதா<Judah>  கோத்திரத்தையும்  தமக்குப்  பிரியமான  சீயோன்<Zion>  பர்வதத்தையும்  தெரிந்துகொண்டார்.  {Ps  78:68}

 

தம்முடைய  பரிசுத்த  ஸ்தலத்தை  மலைகளைப்போலவும்,  என்றைக்கும்  நிற்கும்படி  தாம்  அஸ்திபாரப்படுத்தின  பூமியைப்போலவும்  கட்டினார்.  {Ps  78:69}

 

தம்முடைய  தாசனாகிய  தாவீதைத்<David>  தெரிந்துகொண்டு,  ஆட்டுத்தொழுவங்களிலிருந்து  அவனை  எடுத்தார்.  {Ps  78:70}

 

கறவலாடுகளின்  பின்னாகத்  திரிந்த  அவனை,  தம்முடைய  ஜனமாகிய  யாக்கோபையும்<Jacob>  தம்முடைய  சுதந்தரமாகிய  இஸ்ரவேலையும்<Israel>  மேய்ப்பதற்காக,  அழைத்துக்கொண்டுவந்தார்.  {Ps  78:71}

 

இவன்  அவர்களைத்  தன்  இருதயத்தின்  உண்மையின்படியே  மேய்த்து,  தன்  கைகளின்  திறமையினால்  அவர்களை  நடத்தினான்.  {Ps  78:72}

 

தேவனே,  புறஜாதியார்  உமது  சுதந்தரத்தில்  வந்து,  உமது  பரிசுத்த  ஆலயத்தைத்  தீட்டுப்படுத்தி,  எருசலேமை<Jerusalem>  மண்மேடுகளாக்கினார்கள்.  {Ps  79:1}

 

உமது  ஊழியக்காரரின்  பிரேதங்களை  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்,  உமது  பரிசுத்தவான்களின்  மாம்சத்தைப்  பூமியின்  மிருகங்களுக்கும்  இரையாகக்  கொடுத்தார்கள்.  {Ps  79:2}

 

எருசலேமைச்<Jerusalem>  சுற்றிலும்  அவர்களுடைய  இரத்தத்தை  தண்ணீரைப்போலச்  சிந்தினார்கள்;  அவர்களை  அடக்கம்பண்ணுவாருமில்லை.  {Ps  79:3}

 

எங்கள்  அயலாருக்கு  நிந்தையும்,  எங்கள்  சுற்றுப்புறத்தாருக்குப்  பரியாசமும்  சக்கந்தமுமானோம்.  {Ps  79:4}

 

எதுவரைக்கும்  கர்த்தாவே!  நீர்  என்றைக்கும்  கோபமாயிருப்பீரோ?  உம்முடைய  எரிச்சல்  அக்கினியைப்போல்  எரியுமோ?  {Ps  79:5}

 

உம்மை  அறியாத  ஜாதிகள்மேலும்,  உமது  நாமத்தைத்  தொழுதுகொள்ளாத  ராஜ்யங்கள்மேலும்,  உம்முடைய  உக்கிரத்தை  ஊற்றிவிடும்.  {Ps  79:6}

 

அவர்கள்  யாக்கோபைப்<Jacob>  பட்சித்து,  அவன்  குடியிருப்பைப்  பாழாக்கினார்களே.  {Ps  79:7}

 

பூர்வகாலத்து  அக்கிரமங்களை  எங்களுக்கு  விரோதமாக  நினையாதேயும்;  உம்முடைய  இரக்கங்கள்  சீக்கிரமாய்  எங்களுக்கு  நேரிடுவதாக;  நாங்கள்  மிகவும்  தாழ்த்தப்பட்டுப்போனோம்.  {Ps  79:8}

 

எங்களை  இரட்சிக்கும்  தேவனே,  நீர்  உமது  நாமத்தின்  மகிமையினிமித்தம்  எங்களுக்கு  உதவிசெய்து,  உமது  நாமத்தினிமித்தம்  எங்களை  விடுவித்து,  எங்கள்  பாவங்களை  நிவிர்த்தியாக்கும்.  {Ps  79:9}

 

அவர்களுடைய  தேவன்  எங்கே  என்று  புறஜாதிகள்  சொல்வானேன்?  உமது  ஊழியக்காரருடைய  சிந்துண்ட  இரத்தத்தின்  பழிவாங்குதல்  ஜாதிகளுக்குள்ளே  எங்கள்  கண்களுக்கு  முன்பாக  விளங்கும்படி  செய்யும்.  {Ps  79:10}

 

கட்டுண்டவனுடைய  பெருமூச்சு  உமக்கு  முன்பாக  வரட்டும்;  கொலைக்கு  நியமிக்கப்பட்டவர்களை  உமது  புயபலத்தினால்  உயிரோடே  காத்தருளும்.  {Ps  79:11}

 

ஆண்டவரே,  எங்கள்  அயலார்  உம்மை  நிந்தித்த  நிந்தையை,  ஏழத்தனையாக  அவர்கள்  மடியிலே  திரும்பப்பண்ணும்.  {Ps  79:12}

 

அப்பொழுது,  உம்முடைய  ஜனங்களும்  உம்முடைய  மேய்ச்சலின்  ஆடுகளுமாகிய  நாங்கள்  உம்மை  என்றென்றைக்கும்  புகழுவோம்;  தலைமுறை  தலைமுறையாக  உமது  துதியைச்  சொல்லிவருவோம்.  {Ps  79:13}

 

இஸ்ரவேலின்<Israel>  மேய்ப்பரே,  யோசேப்பை<Joseph>  ஆட்டுமந்தையைப்போல்  நடத்துகிறவரே,  செவிகொடும்;  கேருபீன்கள்<cherubims>  மத்தியில்  வாசம்பண்ணுகிறவரே,  பிரகாசியும்.  {Ps  80:1}

 

எப்பிராயீம்<Ephraim>  பென்யமீன்<Benjamin>  மனாசே<Manasseh>  என்பவர்களுக்கு  முன்பாக,  நீர்  உமது  வல்லமையை  எழுப்பி,  எங்களை  இரட்சிக்க  வந்தருளும்.  {Ps  80:2}

 

தேவனே,  எங்களைத்  திருப்பிக்கொண்டுவாரும்,  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவோம்.  {Ps  80:3}

 

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  உமது  ஜனத்தின்  விண்ணப்பத்துக்கு  விரோதமாய்  நீர்  எதுவரைக்கும்  கோபங்கொள்வீர்.  {Ps  80:4}

 

கண்ணீராகிய  அப்பத்தை  அவர்களுக்கு  போஜனமாகவும்,  மிகுதியான  கண்ணீரையே  அவர்களுக்குப்  பானமாகவும்  கொடுத்தீர்.  {Ps  80:5}

 

எங்கள்  அயலாருக்கு  எங்களை  வழக்காக  வைக்கிறீர்;  எங்கள்  சத்துருக்கள்  எங்களைப்  பரியாசம்பண்ணுகிறார்கள்.  {Ps  80:6}

 

சேனைகளின்  தேவனே,  எங்களைத்  திருப்பிக்கொண்டுவாரும்,  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவோம்.  {Ps  80:7}

 

நீர்  எகிப்திலிருந்து<Egypt>  ஒரு  திராட்சக்கொடியைக்  கொண்டுவந்து,  ஜாதிகளைத்  துரத்திவிட்டு,  அதை  நாட்டினீர்.  {Ps  80:8}

 

அதற்கு  இடத்தை  ஆயத்தப்படுத்தினீர்;  அது  வேரூன்றி,  தேசமெங்கும்  படர்ந்தது.  {Ps  80:9}

 

அதின்  நிழலால்  மலைகளும்  அதின்  கிளைகளால்  திவ்வியமான  கேதுருக்களும்  மூடப்பட்டது.  {Ps  80:10}

 

அது  தன்  கொடிகளைச்  சமுத்திரமட்டாகவும்,  தன்  கிளைகளை  நதிமட்டாகவும்  படரவிட்டது.  {Ps  80:11}

 

இப்பொழுதோ  வழிநடக்கிற  யாவரும்  அதைப்  பறிக்கும்படியாக,  அதின்  அடைப்புகளை  ஏன்  தகர்த்துப்போட்டீர்?  {Ps  80:12}

 

காட்டுப்பன்றி  அதை  உழுதுபோடுகிறது,  வெளியின்  மிருகங்கள்  அதை  மேய்ந்துபோடுகிறது.  {Ps  80:13}

 

சேனைகளின்  தேவனே,  திரும்பிவாரும்,  வானத்திலிருந்து  கண்ணோக்கிப்பார்த்து,  இந்தத்  திராட்சச்செடியை  விசாரித்தருளும்;  {Ps  80:14}

 

உம்முடைய  வலதுகரம்  நாட்டின  கொடியையும்,  உமக்கு  நீர்  திடப்படுத்தின  கிளையையும்  கடாட்சித்தருளும்.  {Ps  80:15}

 

அது  அக்கினியால்  சுடப்பட்டும்  வெட்டுண்டும்  போயிற்று;  உம்முடைய  முகத்தின்  பயமுறுத்தலால்  அழிந்துபோகிறார்கள்.  {Ps  80:16}

 

உமது  கரம்  உமது  வலதுபாரிசத்துப்  புருஷன்மீதிலும்,  உமக்கு  நீர்  திடப்படுத்தின  மனுஷகுமாரன்மீதிலும்  இருப்பதாக.  {Ps  80:17}

 

அப்பொழுது  உம்மைவிட்டுப்  பின்வாங்கமாட்டோம்;  எங்களை  உயிர்ப்பியும்,  அப்பொழுது  உமது  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவோம்.  {Ps  80:18}

 

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  எங்களைத்  திருப்பிக்கொண்டு  வாரும்;  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவோம்.  {Ps  80:19}

 

நம்முடைய  பெலனாகிய  தேவனைக்  கெம்பீரமாய்ப்  பாடி,  யாக்கோபின்<Jacob>  தேவனைக்குறித்து  ஆர்ப்பரியுங்கள்.  {Ps  81:1}

 

தம்புரு  வாசித்து,  வீணையையும்  இனிய  ஓசையான  சுரமண்டலத்தையும்  எடுத்து,  சங்கீதம்  பாடுங்கள்.  {Ps  81:2}

 

மாதப்பிறப்பிலும்,  நியமித்தகாலத்திலும்,  நம்முடைய  பண்டிகைநாட்களிலும்,  எக்காளம்  ஊதுங்கள்.  {Ps  81:3}

 

இது  இஸ்ரவேலுக்குப்<Israel>  பிரமாணமும்,  யாக்கோபின்<Jacob>  தேவன்  விதித்த  நியாயமுமாயிருக்கிறது.  {Ps  81:4}

 

நாம்  அறியாத  பாஷையைக்  கேட்ட  எகிப்துதேசத்தைவிட்டுப்<Egypt>  புறப்படுகையில்,  இதை  யோசேப்பிலே<Joseph>  சாட்சியாக  ஏற்படுத்தினார்.  {Ps  81:5}

 

அவன்  தோளைச்  சுமைக்கு  விலக்கினேன்;  அவன்  கைகள்  கூடைக்கு  நீங்கலாக்கப்பட்டது.  {Ps  81:6}

 

நெருக்கத்திலே  நீ  கூப்பிட்டாய்,  நான்  உன்னைத்  தப்புவித்தேன்;  இடிமுழக்கம்  உண்டாகும்  மறைவிடத்திலிருந்து  உனக்கு  உத்தரவு  அருளினேன்;  மேரிபாவின்<Meribah>  தண்ணீர்களிடத்தில்  உன்னைச்  சோதித்து  அறிந்தேன்.  (சேலா<Selah>.)  {Ps  81:7}

 

என்  ஜனமே  கேள்,  உனக்குச்  சாட்சியிட்டுச்  சொல்லுவேன்;  இஸ்ரவேலே<Israel>,  நீ  எனக்குச்  செவிகொடுத்தால்  நலமாயிருக்கும்.  {Ps  81:8}

 

உனக்குள்  வேறு  தேவன்  உண்டாயிருக்கவேண்டாம்;  அந்நிய  தேவனை  நீ  நமஸ்கரிக்கவும்  வேண்டாம்.  {Ps  81:9}

 

உன்னை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணின  உன்  தேவனாகிய  கர்த்தர்  நானே;  உன்  வாயை  விரிவாய்த்  திற,  நான்  அதை  நிரப்புவேன்.  {Ps  81:10}

 

என்  ஜனமோ  என்  சத்தத்துக்குச்  செவிகொடுக்கவில்லை;  இஸ்ரவேல்<Israel>  என்னை  விரும்பவில்லை.  {Ps  81:11}

 

ஆகையால்  அவர்களை  அவர்கள்  இருதயத்தின்  கடினத்திற்கு  விட்டுவிட்டேன்;  தங்கள்  யோசனைகளின்படியே  நடந்தார்கள்.  {Ps  81:12}

 

,  என்  ஜனம்  எனக்குச்  செவிகொடுத்து,  இஸ்ரவேல்<Israel>  என்  வழிகளில்  நடந்தால்  நலமாயிருக்கும்!  {Ps  81:13}

 

நான்  சீக்கிரத்தில்  அவர்கள்  எதிராளிகளைத்  தாழ்த்தி,  என்  கையை  அவர்கள்  சத்துருக்களுக்கு  விரோதமாகத்  திருப்புவேன்.  {Ps  81:14}

 

அப்பொழுது  கர்த்தரைப்  பகைக்கிறவர்கள்  அவருக்கு  இச்சகம்  பேசி  அடங்குவார்கள்;  அவர்களுடைய  காலம்  என்றென்றைக்கும்  இருக்கும்.  {Ps  81:15}

 

உச்சிதமான  கோதுமையினால்  அவர்களைப்  போஷிப்பார்;  கன்மலையின்  தேனினால்  உன்னைத்  திருப்தியாக்குவேன்.  {Ps  81:16}

 

தேவசபையிலே  தேவன்  எழுந்தருளியிருக்கிறார்;  தேவர்களின்  நடுவிலே  அவர்  நியாயம்  விசாரிக்கிறார்.  {Ps  82:1}

 

எதுவரைக்கும்  நீங்கள்  அநியாயத்தீர்ப்புச்செய்து,  துன்மார்க்கருக்கு  முகதாட்சிணியம்  பண்ணுவீர்கள்.  (சேலா<Selah>.)  {Ps  82:2}

 

ஏழைக்கும்  திக்கற்ற  பிள்ளைக்கும்  நியாயஞ்செய்து,  சிறுமைப்பட்டவனுக்கும்  திக்கற்றவனுக்கும்  நீதி  செய்யுங்கள்.  {Ps  82:3}

 

பலவீனனையும்  எளியவனையும்  விடுவித்து,  துன்மார்க்கரின்  கைக்கு  அவர்களைத்  தப்புவியுங்கள்.  {Ps  82:4}

 

அறியாமலும்  உணராமலும்  இருக்கிறார்கள்,  அந்தகாரத்திலே  நடக்கிறார்கள்;  தேசத்தின்  அஸ்திபாரங்களெல்லாம்  அசைகிறது.  {Ps  82:5}

 

நீங்கள்  தேவர்கள்  என்றும்,  நீங்களெல்லாரும்  உன்னதமானவரின்  மக்கள்  என்றும்  நான்  சொல்லியிருந்தேன்.  {Ps  82:6}

 

ஆனாலும்  நீங்கள்  மனுஷரைப்போலச்  செத்து,  லோகப்பிரபுக்களில்  ஒருவனைப்போல  விழுந்துபோவீர்கள்.  {Ps  82:7}

 

தேவனே,  எழுந்தருளும்,  பூமிக்கு  நியாயத்தீர்ப்புச்  செய்யும்;  நீரே  சகல  ஜாதிகளையும்  சுதந்தரமாகக்  கொண்டிருப்பவர்.  {Ps  82:8}

 

தேவனே,  மவுனமாயிராதேயும்,  பேசாமலிராதேயும்;  தேவனே,  சும்மாயிராதேயும்.  {Ps  83:1}

 

இதோ,  உம்முடைய  சத்துருக்கள்  கொந்தளித்து,  உம்முடைய  பகைஞர்  தலையெடுக்கிறார்கள்.  {Ps  83:2}

 

உமது  ஜனத்துக்கு  விரோதமாக  உபாய  தந்திரங்களை  யோசித்து,  உமது  மறைவிலிருக்கிறவர்களுக்கு  விரோதமாக  ஆலோசனைபண்ணுகிறார்கள்.  {Ps  83:3}

 

அவர்கள்  இனி  ஒரு  ஜாதியாராயிராமலும்,  இஸ்ரவேலின்<Israel>  பேர்  இனி  நினைக்கப்படாமலும்  போவதற்காக,  அவர்களை  அதம்பண்ணுவோம்  வாருங்கள்  என்கிறார்கள்.  {Ps  83:4}

 

இப்படி,  ஏதோமின்<Edom>  கூடாரத்தாரும்,  இஸ்மவேலரும்<Ishmaelites>,  மோவாபியரும்<Moab>,  ஆகாரியரும்<Hagarenes>,  {Ps  83:5}

 

கேபாலரும்<Gebal>,  அம்மோனியரும்<Ammon>,  அமலேக்கியரும்<Amalek>,  தீருவின்<Tyre>  குடிகளோடு  கூடிய  பெலிஸ்தரும்<Philistines>,  {Ps  83:6}

 

ஏகமனநிர்ணயமாய்  ஆலோசனைசெய்து,  உமக்கு  விரோதமாய்  ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  {Ps  83:7}

 

அசீரியரும்<Assyria//Assur>  அவர்களோடேகூடக்  கலந்து,  லோத்தின்<Lot>  புத்திரருக்குப்  புயபலமானார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  83:8}

 

மீதியானியருக்குச்<Midianites>  செய்ததுபோலவும்,  கீசோன்<Kison>  என்னும்  ஆற்றண்டை  எந்தோரிலே<Endor>  அழிக்கப்பட்டு,  {Ps  83:9}

 

நிலத்துக்கு  எருவாய்ப்போன  சிசெரா<Sisera>,  யாபீன்<Jabin>  என்பவர்களுக்குச்  செய்ததுபோலவும்,  அவர்களுக்குச்  செய்யும்.  {Ps  83:10}

 

அவர்களையும்  அவர்கள்  அதிபதிகளையும்  ஓரேபுக்கும்<Oreb>  சேபுக்கும்<Zeeb>,  அவர்கள்  பிரபுக்களையெல்லாம்  சேபாவுக்கும்<Zebah>  சல்முனாவுக்கும்<Zalmunna>  சமமாக்கும்.  {Ps  83:11}

 

தேவனுடைய  வாசஸ்தலங்களை  எங்களுக்குச்  சுதந்தரமாக  நாங்கள்  கட்டிக்கொள்வோம்  என்று  சொல்லுகிறார்களே.  {Ps  83:12}

 

என்  தேவனே,  அவர்களைச்  சுழல்காற்றின்  புழுதிக்கும்,  காற்றுமுகத்தில்  பறக்கும்  துரும்புக்கும்  சமமாக்கும்.  {Ps  83:13}

 

நெருப்பு  காட்டைக்  கொளுத்துவதுபோலவும்,  அக்கினிஜுவாலைகள்  மலைகளை  எரிப்பதுபோலவும்,  {Ps  83:14}

 

நீர்  உமது  புசலினாலே  அவர்களைத்  தொடர்ந்து,  உமது  பெருங்காற்றினாலே  அவர்களைக்  கலங்கப்பண்ணும்.  {Ps  83:15}

 

கர்த்தாவே,  அவர்கள்  உமது  நாமத்தைத்  தேடும்படிக்கு,  அவர்கள்  முகங்களை  அவமானத்தாலே  மூடும்.  {Ps  83:16}

 

யேகோவா<JEHOVAH>  என்னும்  நாமத்தையுடைய  தேவரீர்  ஒருவரே  பூமியனைத்தின்மேலும்  உன்னதமானவர்  என்று  மனுஷர்  உணரும்படி,  {Ps  83:17}

 

அவர்கள்  என்றைக்கும்  வெட்கிக்கலங்கி,  நாணமடைந்து  அழிந்துபோவார்களாக.  {Ps  83:18}

 

சேனைகளின்  கர்த்தாவே,  உமது  வாசஸ்தலங்கள்  எவ்வளவு  இன்பமானவைகள்!  {Ps  84:1}

 

என்  ஆத்துமா  கர்த்தருடைய  ஆலயப்பிராகாரங்களின்மேல்  வாஞ்சையும்  தவனமுமாயிருக்கிறது;  என்  இருதயமும்  என்  மாம்சமும்  ஜீவனுள்ள  தேவனை  நோக்கிக்  கெம்பீர  சத்தமிடுகிறது.  {Ps  84:2}

 

என்  ராஜாவும்  என்  தேவனுமாகிய  சேனைகளின்  கர்த்தாவே,  உம்முடைய  பீடங்களண்டையில்  அடைக்கலான்  குருவிக்கு  வீடும்,  தகைவிலான்  குருவிக்குத்  தன்  குஞ்சுகளை  வைக்கும்  கூடும்  கிடைத்ததே.  {Ps  84:3}

 

உம்முடைய  வீட்டில்  வாசமாயிருக்கிறவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  எப்பொழுதும்  உம்மைத்  துதித்துக்கொண்டிருப்பார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  84:4}

 

உம்மிலே  பெலன்கொள்ளுகிற  மனுஷனும்,  தங்கள்  இருதயங்களில்  செவ்வையான  வழிகளைக்  கொண்டிருக்கிறவர்களும்  பாக்கியவான்கள்.  {Ps  84:5}

 

அழுகையின்  பள்ளத்தாக்கை  உருவ  நடந்து  அதை  நீரூற்றாக்கிக்  கொள்ளுகிறார்கள்;  மழையும்  குளங்களை  நிரப்பும்.  {Ps  84:6}

 

அவர்கள்  பலத்தின்மேல்  பலம்  அடைந்து,  சீயோனிலே<Zion>  தேவசந்நிதியில்  வந்து  காணப்படுவார்கள்.  {Ps  84:7}

 

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  என்  விண்ணப்பத்தை  கேளும்;  யாக்கோபின்<Jacob>  தேவனே,  செவிகொடும்.  (சேலா<Selah>.)  {Ps  84:8}

 

எங்கள்  கேடகமாகிய  தேவனே,  கண்ணோக்கமாயிரும்;  நீர்  அபிஷேகம்பண்ணினவரின்  முகத்தைப்  பாரும்.  {Ps  84:9}

 

ஆயிரம்  நாளைப்பார்க்கிலும்  உமது  பிராகாரங்களில்  செல்லும்  ஒரே  நாள்  நல்லது;  ஆகாமியக்  கூடாரங்களில்  வாசமாயிருப்பதைப்பார்க்கிலும்  என்  தேவனுடைய  ஆலயத்தின்  வாசற்படியில்  காத்திருப்பதையே  தெரிந்துகொள்ளுவேன்.  {Ps  84:10}

 

தேவனாகிய  கர்த்தர்  சூரியனும்  கேடகமுமானவர்;  கர்த்தர்  கிருபையையும்  மகிமையையும்  அருளுவார்;  உத்தமமாய்  நடக்கிறவர்களுக்கு  நன்மையை  வழங்காதிரார்.  {Ps  84:11}

 

சேனைகளின்  கர்த்தாவே,  உம்மை  நம்பியிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  84:12}

 

கர்த்தாவே,  உமது  தேசத்தின்மேல்  பிரியம்  வைத்து,  யாக்கோபின்<Jacob>  சிறையிருப்பைத்  திருப்பினீர்.  {Ps  85:1}

 

உமது  ஜனத்தின்  அக்கிரமத்தை  மன்னித்து,  அவர்கள்  பாவத்தையெல்லாம்  மூடினீர்.  (சேலா<Selah>.)  {Ps  85:2}

 

உமது  உக்கிரத்தையெல்லாம்  அடக்கிக்கொண்டு,  உமது  கோபத்தின்  எரிச்சலைவிட்டுத்  திரும்பினீர்.  {Ps  85:3}

 

எங்கள்  இரட்சிப்பின்  தேவனே,  நீர்  எங்களைத்  திருப்பிக்கொண்டுவாரும்,  எங்கள்மேலுள்ள  உமது  கோபத்தை  ஆறப்பண்ணும்.  {Ps  85:4}

 

என்றைக்கும்  எங்கள்மேல்  கோபமாயிருப்பீரோ?  தலைமுறை  தலைமுறையாக  உமது  கோபத்தை  நீடித்திருக்கப்பண்ணுவீரோ?  {Ps  85:5}

 

உமது  ஜனங்கள்  உம்மில்  மகிழ்ந்திருக்கும்படி  நீர்  எங்களைத்  திரும்ப  உயிர்ப்பிக்கமாட்டீரோ?  {Ps  85:6}

 

கர்த்தாவே,  உமது  கிருபையை  எங்களுக்குக்  காண்பித்து,  உமது  இரட்சிப்பை  எங்களுக்கு  அருளிச்செய்யும்.  {Ps  85:7}

 

கர்த்தராகிய  தேவன்  விளம்புவதைக்  கேட்பேன்;  அவர்  தம்முடைய  ஜனங்களுக்கும்  தம்முடைய  பரிசுத்தவான்களுக்கும்  சமாதானம்  கூறுவார்;  அவர்களோ  மதிகேட்டுக்குத்  திரும்பாதிருப்பார்களாக.  {Ps  85:8}

 

நம்முடைய  தேசத்தில்  மகிமை  வாசமாயிருக்கும்படி,  அவருடைய  இரட்சிப்பு  அவருக்குப்  பயந்தவர்களுக்குச்  சமீபமாயிருக்கிறது.  {Ps  85:9}

 

கிருபையும்  சத்தியமும்  ஒன்றையொன்று  சந்திக்கும்,  நீதியும்  சமாதானமும்  ஒன்றையொன்று  முத்தஞ்செய்யும்.  {Ps  85:10}

 

சத்தியம்  பூமியிலிருந்து  முளைக்கும்,  நீதி  வானத்திலிருந்து  தாழப்பார்க்கும்.  {Ps  85:11}

 

கர்த்தர்  நன்மையானதைத்  தருவார்;  நம்முடைய  தேசமும்  தன்  பலனைக்  கொடுக்கும்.  {Ps  85:12}

 

நீதி  அவருக்கு  முன்னாகச்  சென்று,  அவருடைய  அடிச்சுவடுகளின்  வழியிலே  நம்மை  நிறுத்தும்.  {Ps  85:13}

 

கர்த்தாவே,  உமது  செவியைச்  சாய்த்து,  என்  விண்ணப்பத்தைக்  கேட்டருளும்;  நான்  சிறுமையும்  எளிமையுமானவன்.  {Ps  86:1}

 

என்  ஆத்துமாவைக்  காத்தருளும்,  நான்  பக்தியுள்ளவன்;  என்  தேவனே,  உம்மை  நம்பியிருக்கிற  உமது  அடியேனை  நீர்  இரட்சியும்.  {Ps  86:2}

 

ஆண்டவரே,  எனக்கு  இரங்கும்,  நாடோறும்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்.  {Ps  86:3}

 

உமது  அடியேனுடைய  ஆத்துமாவை  மகிழ்ச்சியாக்கும்;  ஆண்டவரே,  உம்மிடத்தில்  என்  ஆத்துமாவை  உயர்த்துகிறேன்.  {Ps  86:4}

 

ஆண்டவரே,  நீர்  நல்லவரும்,  மன்னிக்கிறவரும்,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிற  யாவர்மேலும்  கிருபை  மிகுந்தவருமாயிருக்கிறீர்.  {Ps  86:5}

 

கர்த்தாவே,  என்  ஜெபத்திற்குச்  செவிகொடுத்து,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்தைக்  கவனியும்.  {Ps  86:6}

 

நான்  துயரப்படுகிற  நாளில்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  நீர்  என்னைக்  கேட்டருளுவீர்.  {Ps  86:7}

 

ஆண்டவரே,  தேவர்களுக்குள்ளே  உமக்கு  நிகருமில்லை;  உம்முடைய  கிரியைகளுக்கு  ஒப்புமில்லை.  {Ps  86:8}

 

ஆண்டவரே,  நீர்  உண்டாக்கின  எல்லா  ஜாதிகளும்  வந்து,  உமக்கு  முன்பாகப்  பணிந்து,  உமது  நாமத்தை  மகிமைப்படுத்துவார்கள்.  {Ps  86:9}

 

தேவரீர்  மகத்துவமுள்ளவரும்  அதிசயங்களைச்  செய்கிறவருமாயிருக்கிறீர்;  நீர்  ஒருவரே  தேவன்.  {Ps  86:10}

 

கர்த்தாவே,  உமது  வழியை  எனக்குப்  போதியும்,  நான்  உமது  சத்தியத்திலே  நடப்பேன்;  நான்  உமது  நாமத்திற்குப்  பயந்திருக்கும்படி  என்  இருதயத்தை  ஒருமுகப்படுத்தும்.  {Ps  86:11}

 

என்  தேவனாகிய  ஆண்டவரே  உம்மை  என்  முழு  இருதயத்தோடும்  துதித்து,  உமது  நாமத்தை  என்றென்றைக்கும்  மகிமைப்படுத்துவேன்.  {Ps  86:12}

 

நீர்  எனக்குப்  பாராட்டின  உமது  கிருபை  பெரியது;  என்  ஆத்துமாவைத்  தாழ்ந்த  பாதாளத்திற்குத்  தப்புவித்தீர்.  {Ps  86:13}

 

தேவனே,  அகங்காரிகள்  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறார்கள்,  கொடுமைக்காரராகிய  கூட்டத்தார்  என்  பிராணனை  வாங்கத்  தேடுகிறார்கள்,  உம்மைத்  தங்களுக்கு  முன்பாக  நிறுத்தி  நோக்காதிருக்கிறார்கள்.  {Ps  86:14}

 

ஆனாலும்  ஆண்டவரே,  நீர்  மனவுருக்கமும்,  இரக்கமும்,  நீடிய  பொறுமையும்,  பூரண  கிருபையும்,  சத்தியமுமுள்ள  தேவன்.  {Ps  86:15}

 

என்மேல்  நோக்கமாகி,  எனக்கு  இரங்கும்;  உமது  வல்லமையை  உமது  அடியானுக்கு  அருளி,  உமது  அடியாளின்  குமாரனை  இரட்சியும்.  {Ps  86:16}

 

கர்த்தாவே,  நீர்  எனக்குத்  துணைசெய்து  என்னைத்  தேற்றுகிறதை  என்  பகைஞர்  கண்டு  வெட்கப்படும்படிக்கு,  எனக்கு  அநுகூலமாக  ஒரு  அடையாளத்தைக்  காண்பித்தருளும்.  {Ps  86:17}

 

அவர்  அஸ்திபாரம்  பரிசுத்த  பர்வதங்களில்  இருக்கிறது.  {Ps  87:1}

 

கர்த்தர்  யாக்கோபின்<Jacob>  வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும்  சீயோனின்<Zion>  வாசல்களில்  பிரியமாயிருக்கிறார்.  {Ps  87:2}

 

தேவனுடைய  நகரமே!  உன்னைக்  குறித்து  மகிமையான  விசேஷங்கள்  வசனிக்கப்படும்.  (சேலா<Selah>.)  {Ps  87:3}

 

என்னை  அறிந்தவர்களுக்குள்ளே  ராகாபையும்<Rahab>  பாபிலோனையும்<Babylon>  குறித்துப்  பேசுவேன்;  இதோ,  பெலிஸ்தியரிலும்<Philistia>,  தீரியரிலும்<Tyre>,  எத்தியோப்பியரிலுங்கூட<Ethiopia>,  இன்னான்  அங்கே  பிறந்தான்  என்றும்;  {Ps  87:4}

 

சீயோனைக்குறித்து<Zion>,  இன்னான்  இன்னான்  அதிலே  பிறந்தானென்றும்  சொல்லப்படும்;  உன்னதமானவர்தாமே  அதை  ஸ்திரப்படுத்துவார்.  {Ps  87:5}

 

கர்த்தர்  ஜனங்களைப்  பேரெழுதும்போது,  இன்னான்  அதிலே  பிறந்தான்  என்று  அவர்களைத்  தொகையிடுவார்.  (சேலா<Selah>.)  {Ps  87:6}

 

எங்கள்  ஊற்றுகளெல்லாம்  உன்னில்  இருக்கிறது  என்று  பாடுவாரும்  ஆடுவாரும்  ஏகமாய்ச்  சொல்லுவார்கள்.  {Ps  87:7}

 

என்  இரட்சிப்பின்  தேவனாகிய  கர்த்தாவே,  இரவும்  பகலும்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்.  {Ps  88:1}

 

என்  விண்ணப்பம்  உமது  சமுகத்தில்  வருவதாக;  என்  கூப்பிடுதலுக்கு  உமது  செவியைச்  சாய்த்தருளும்.  {Ps  88:2}

 

என்  ஆத்துமா  துக்கத்தால்  நிறைந்திருக்கிறது;  என்  ஜீவன்  பாதாளத்திற்குச்  சமீபமாய்  வந்திருக்கிறது.  {Ps  88:3}

 

நான்  குழியில்  இறங்குகிறவர்களோடு  எண்ணப்பட்டு,  பெலனற்ற  மனுஷனைப்போலானேன்.  {Ps  88:4}

 

மரித்தவர்களில்  ஒருவனைப்போல்  நெகிழப்பட்டிருக்கிறேன்;  நீர்  இனி  ஒருபோதும்  நினையாதபடி,  உமது  கையால்  அறுப்புண்டுபோய்ப்  பிரேதக்குழிகளிலே  கிடக்கிறவர்களைப்போலானேன்.  {Ps  88:5}

 

என்னைப்  பாதாளக்குழியிலும்  இருளிலும்  ஆழங்களிலும்  வைத்தீர்.  {Ps  88:6}

 

உம்முடைய  கோபம்  என்னை  இருத்துகிறது;  உம்முடைய  அலைகள்  எல்லாவற்றினாலும்  என்னை  வருத்தப்படுத்துகிறீர்.  (சேலா<Selah>.)  {Ps  88:7}

 

எனக்கு  அறிமுகமானவர்களை  எனக்குத்  தூரமாக  விலக்கி,  அவர்களுக்கு  என்னை  அருவருப்பாக்கினீர்;  நான்  வெளியே  புறப்படக்கூடாதபடி  அடைபட்டிருக்கிறேன்.  {Ps  88:8}

 

துக்கத்தினால்  என்  கண்  தொய்ந்துபோயிற்று;  கர்த்தாவே,  அநுதினமும்  நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிட்டு,  உமக்கு  நேராக  என்  கைகளை  விரிக்கிறேன்.  {Ps  88:9}

 

மரித்தவர்களுக்கு  அதிசயங்களைச்  செய்வீரோ?  செத்துப்போன  வீரர்  எழுந்து  உம்மைத்  துதிப்பார்களோ?  (சேலா<Selah>.)  {Ps  88:10}

 

பிரேதக்குழியில்  உமது  கிருபையும்,  அழிவில்  உமது  உண்மையும்  விவரிக்கப்படுமோ?  {Ps  88:11}

 

இருளில்  உமது  அதிசயங்களும்,  மறதியின்  பூமியில்  உமது  நீதியும்  அறியப்படுமோ?  {Ps  88:12}

 

நானோ  கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  காலையிலே  என்  விண்ணப்பம்  உமக்கு  முன்பாக  வரும்.  {Ps  88:13}

 

கர்த்தாவே,  ஏன்  என்  ஆத்துமாவைத்  தள்ளிவிடுகிறீர்?  ஏன்  உமது  முகத்தை  எனக்கு  மறைக்கிறீர்?  {Ps  88:14}

 

சிறுவயதுமுதல்  நான்  சிறுமைப்பட்டவனும்  மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்;  உம்மால்  வரும்  திகில்கள்  என்மேல்  சுமந்திருக்கிறது,  நான்  மனங்கலங்குகிறேன்.  {Ps  88:15}

 

உம்முடைய  எரிச்சல்கள்  என்மேல்  புரண்டுபோகிறது;  உம்முடைய  பயங்கரங்கள்  என்னை  அதம்பண்ணுகிறது.  {Ps  88:16}

 

அவைகள்  நாடோறும்  தண்ணீரைப்போல்  என்னைச்  சூழ்ந்து,  ஏகமாய்  என்னை  வளைந்துகொள்ளுகிறது.  {Ps  88:17}

 

சிநேகிதனையும்  தோழனையும்  எனக்குத்  தூரமாக  விலக்கினீர்;  எனக்கு  அறிமுகமானவர்கள்  மறைந்துபோனார்கள்.  {Ps  88:18}

 

கர்த்தரின்  கிருபைகளை  என்றென்றைக்கும்  பாடுவேன்;  உமது  உண்மையைத்  தலைமுறை  தலைமுறையாக  என்  வாயினால்  அறிவிப்பேன்.  {Ps  89:1}

 

கிருபை  என்றென்றைக்கும்  ஸ்திரப்பட்டிருக்கும்;  உமது  உண்மையை  வானங்களிலே  ஸ்தாபிப்பீர்  என்றேன்.  {Ps  89:2}

 

என்னால்  தெரிந்துகொள்ளப்பட்டவனோடே  உடன்படிக்கைபண்ணி,  என்  தாசனாகிய  தாவீதை<David>  நோக்கி:  {Ps  89:3}

 

என்றென்றைக்கும்  உன்  சந்ததியை  நிலைப்படுத்தி,  தலைமுறை  தலைமுறையாக  உன்  சிங்காசனத்தை  ஸ்தாபிப்பேன்  என்று  ஆணையிட்டேன்  என்றீர்.  (சேலா<Selah>.)  {Ps  89:4}

 

கர்த்தாவே,  வானங்கள்  உம்முடைய  அதிசயங்களைத்  துதிக்கும்,  பரிசுத்தவான்களின்  சபையிலே  உம்முடைய  உண்மையும்  விளங்கும்.  {Ps  89:5}

 

ஆகாயமண்டலத்தில்  கர்த்தருக்கு  நிகரானவர்  யார்?  பலவான்களின்  புத்திரரில்  கர்த்தருக்கு  ஒப்பானவர்  யார்?  {Ps  89:6}

 

தேவன்  பரிசுத்தவான்களுடைய  ஆலோசனைச்  சபையில்  மிகவும்  பயப்படத்தக்கவர்,  தம்மைச்  சூழ்ந்திருக்கிற  அனைவராலும்  அஞ்சப்படத்தக்கவர்.  {Ps  89:7}

 

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மைப்போல்  வல்லமையுள்ள  கர்த்தர்  யார்?  உம்முடைய  உண்மை  உம்மைச்  சூழ்ந்திருக்கிறது.  {Ps  89:8}

 

தேவரீர்  சமுத்திரத்தின்  பெருமையை  ஆளுகிறவர்;  அதின்  அலைகள்  எழும்பும்போது  அவைகளை  அடங்கப்பண்ணுகிறீர்.  {Ps  89:9}

 

நீர்  ராகாபை<Rahab>  வெட்டுண்ட  ஒருவனைப்போல்  நொறுக்கினீர்;  உமது  வல்லமையான  புயத்தினால்  உம்முடைய  சத்துருக்களைச்  சிதறடித்தீர்.  {Ps  89:10}

 

வானங்கள்  உம்முடையது,  பூமியும்  உம்முடையது,  பூலோகத்தையும்  அதிலுள்ள  யாவையும்  நீரே  அஸ்திபாரப்படுத்தினீர்.  {Ps  89:11}

 

வடக்கையும்  தெற்கையும்  நீர்  உண்டாக்கினீர்;  தாபோரும்<Tabor>  எர்மோனும்<Hermon>  உம்முடைய  நாமம்  விளங்கக்  கெம்பீரிக்கும்.  {Ps  89:12}

 

உமக்கு  வல்லமையுள்ள  புயமிருக்கிறது;  உம்முடைய  கரம்  பராக்கிரமமுள்ளது;  உம்முடைய  வலதுகரம்  உன்னதமானது.  {Ps  89:13}

 

நீதியும்  நியாயமும்  உம்முடைய  சிங்காசனத்தின்  ஆதாரம்;  கிருபையும்  சத்தியமும்  உமக்கு  முன்பாக  நடக்கும்.  {Ps  89:14}

 

கெம்பீரசத்தத்தை  அறியும்  ஜனங்கள்  பாக்கியமுள்ளவர்கள்;  கர்த்தாவே,  அவர்கள்  உம்முடைய  முகத்தின்  வெளிச்சத்தில்  நடப்பார்கள்.  {Ps  89:15}

 

அவர்கள்  உம்முடைய  நாமத்தில்  நாடோறும்  களிகூர்ந்து,  உம்முடைய  நீதியால்  உயர்ந்திருப்பார்கள்.  {Ps  89:16}

 

நீரே  அவர்கள்  பலத்தின்  மகிமையாயிருக்கிறீர்;  உம்முடைய  தயவினால்  எங்கள்  கொம்பு  உயரும்.  {Ps  89:17}

 

கர்த்தரால்  எங்கள்  கேடகமும்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரால்  எங்களுடைய  ராஜாவும்  உண்டு.  {Ps  89:18}

 

அப்பொழுது  நீர்  உம்முடைய  பக்தனுக்குத்  தரிசனமாகி:  சகாயஞ்செய்யத்தக்க  சக்தியை  ஒரு  சவுரியவான்மேல்  வைத்து,  ஜனத்தில்  தெரிந்துகொள்ளப்பட்டவனை  உயர்த்தினேன்.  {Ps  89:19}

 

என்  தாசனாகிய  தாவீதைக்<David>  கண்டுபிடித்தேன்;  என்  பரிசுத்த  தைலத்தினால்  அவனை  அபிஷேகம்பண்ணினேன்.  {Ps  89:20}

 

என்  கை  அவனோடே  உறுதியாயிருக்கும்;  என்  புயம்  அவனைப்  பலப்படுத்தும்.  {Ps  89:21}

 

சத்துரு  அவனை  நெருக்குவதில்லை;  நியாயக்கேட்டின்  மகன்  அவனை  ஒடுக்குவதில்லை.  {Ps  89:22}

 

அவன்  சத்துருக்களை  அவனுக்குமுன்பாக  மடங்கடித்து,  அவனைப்  பகைக்கிறவர்களை  வெட்டுவேன்.  {Ps  89:23}

 

என்  உண்மையும்  என்  கிருபையும்  அவனோடிருக்கும்;  என்  நாமத்தினால்  அவன்  கொம்பு  உயரும்.  {Ps  89:24}

 

அவன்  கையைச்  சமுத்திரத்தின்மேலும்,  அவன்  வலதுகரத்தை  ஆறுகள்மேலும்  ஆளும்படி  வைப்பேன்.  {Ps  89:25}

 

அவன்  என்னை  நோக்கி:  நீர்  என்  பிதா,  என்  தேவன்,  என்  இரட்சிப்பின்  கன்மலையென்று  சொல்லுவான்.  {Ps  89:26}

 

நான்  அவனை  எனக்கு  முதற்பேறானவனும்,  பூமியின்  ராஜாக்களைப்பார்க்கிலும்  மகா  உயர்ந்தவனுமாக்குவேன்.  {Ps  89:27}

 

என்  கிருபையை  என்றென்றைக்கும்  அவனுக்காகக்  காப்பேன்;  என்  உடன்படிக்கை  அவனுக்காக  உறுதிப்படுத்தப்படும்.  {Ps  89:28}

 

அவன்  சந்ததி  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கவும்,  அவன்  ராஜாசனம்  வானங்களுள்ளமட்டும்  நிலைநிற்கவும்  செய்வேன்.  {Ps  89:29}

 

அவன்  பிள்ளைகள்  என்  நியாயங்களின்படி  நடவாமல்,  என்  வேதத்தை  விட்டு  விலகி;  {Ps  89:30}

 

என்  கட்டளைகளைக்  கைக்கொள்ளாமல்,  என்  நியமங்களை  மீறிநடந்தால்;  {Ps  89:31}

 

அவர்கள்  மீறுதலை  மிலாற்றினாலும்,  அவர்கள்  அக்கிரமத்தை  வாதைகளினாலும்  தண்டிப்பேன்.  {Ps  89:32}

 

ஆனாலும்  என்  கிருபையை  அவனை  விட்டு  விலக்காமலும்,  என்  உண்மையில்  பிசகாமலும்  இருப்பேன்.  {Ps  89:33}

 

என்  உடன்படிக்கையை  மீறாமலும்,  என்  உதடுகள்  விளம்பினதை  மாற்றாமலும்  இருப்பேன்.  {Ps  89:34}

 

ஒருவிசை  என்  பரிசுத்தத்தின்பேரில்  ஆணையிட்டேன்,  தாவீதுக்கு<David>  நான்  பொய்சொல்லேன்.  {Ps  89:35}

 

அவன்  சந்ததி  என்றென்றைக்கும்  இருக்கும்;  அவன்  சிங்காசனம்  சூரியனைப்போல  எனக்கு  முன்பாக  நிலைநிற்கும்.  {Ps  89:36}

 

சந்திரனைப்போல  அது  என்றென்றைக்கும்  உறுதியாயும்,  ஆகாயமண்டலத்துச்  சாட்சியைப்போல்  உண்மையாயும்  இருக்கும்  என்று  விளம்பினீர்.  (சேலா<Selah>.)  {Ps  89:37}

 

ஆனாலும்  நீர்  எங்களை  வெறுத்துத்  தள்ளிவிட்டீர்,  நீர்  அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல்  உக்கிரமானீர்.  {Ps  89:38}

 

உமது  அடியானுடன்  நீர்  பண்ணின  உடன்படிக்கையை  ஒழித்துவிட்டு,  அவன்  கிரீடத்தைத்  தரையிலே  தள்ளி  அவமானப்படுத்தினீர்.  {Ps  89:39}

 

அவன்  மதில்களையெல்லாம்  தகர்த்துப்போட்டு,  அவன்  அரணான  ஸ்தலங்களைப்  பாழாக்கினீர்.  {Ps  89:40}

 

வழிநடக்கிற  யாவரும்  அவனைக்  கொள்ளையிடுகிறார்கள்;  தன்  அயலாருக்கு  நிந்தையானான்.  {Ps  89:41}

 

அவன்  சத்துருக்களின்  வலதுகையை  நீர்  உயர்த்தி,  அவன்  விரோதிகள்  யாவரும்  சந்தோஷிக்கும்படி  செய்தீர்.  {Ps  89:42}

 

அவன்  பட்டயத்தின்  கருக்கை  மழுக்கிப்போட்டு,  அவனை  யுத்தத்தில்  நிற்காதபடி  செய்தீர்.  {Ps  89:43}

 

அவன்  மகிமையை  அற்றுப்போகப்பண்ணி,  அவன்  சிங்காசனத்தைத்  தரையிலே  தள்ளினீர்.  {Ps  89:44}

 

அவன்  வாலிபநாட்களைக்  குறுக்கி,  அவனை  வெட்கத்தால்  மூடினீர்.  (சேலா<Selah>.)  {Ps  89:45}

 

எதுவரைக்கும்,  கர்த்தாவே!  நீர்  என்றைக்கும்  மறைந்திருப்பீரோ?  உமது  கோபம்  அக்கினியைப்போல  எரியுமோ?  {Ps  89:46}

 

என்  ஜீவன்  எவ்வளவு  நிலையற்றது  என்பதை  நினைத்தருளும்;  மனுபுத்திரர்  யாவரையும்  வீணாகச்  சிருஷ்டிக்க  வேண்டியதென்ன?  {Ps  89:47}

 

மரணத்தைக்  காணாமல்  உயிரோடிருப்பவன்  யார்?  தன்  ஆத்துமாவைப்  பாதாள  வல்லடிக்கு  விலக்கிவிடுகிறவன்  யார்?  (சேலா<Selah>.)  {Ps  89:48}

 

ஆண்டவரே,  நீர்  தாவீதுக்கு<David>  உம்முடைய  உண்மையைக்கொண்டு  சத்தியம்பண்ணின  உமது  பூர்வ  கிருபைகள்  எங்கே?  {Ps  89:49}

 

ஆண்டவரே,  உம்முடைய  சத்துருக்கள்  உம்முடைய  ஊழியக்காரரையும்,  நீர்  அபிஷேகம்பண்ணினவனின்  காலடிகளையும்  நிந்திக்கிறபடியினால்,  {Ps  89:50}

 

கர்த்தாவே,  உமது  அடியார்  சுமக்கும்  நிந்தையையும்,  வலுமையான  ஜனங்களெல்லாராலும்  நான்  என்  மடியில்  சுமக்கும்  என்  நிந்தையையும்  நினைத்தருளும்.  {Ps  89:51}

 

கர்த்தருக்கு  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரமுண்டாவதாக.  ஆமென்<Amen>,  ஆமென்<Amen>.  {Ps  89:52}

 

ஆண்டவரே,  தேவரீர்  தலைமுறை  தலைமுறையாக  எங்களுக்கு  அடைக்கலமானவர்.  {Ps  90:1}

 

பர்வதங்கள்  தோன்றுமுன்னும்,  நீர்  பூமியையும்  உலகத்தையும்  உருவாக்குமுன்னும்,  நீரே  அநாதியாய்  என்றென்றைக்கும்  தேவனாயிருக்கிறீர்.  {Ps  90:2}

 

நீர்  மனுஷரை  நிர்த்தூளியாக்கி,  மனுபுத்திரரே,  திரும்புங்கள்  என்கிறீர்.  {Ps  90:3}

 

உமது  பார்வைக்கு  ஆயிரம்  வருஷம்  நேற்றுக்கழிந்த  நாள்போலவும்  இராச்சாமம்போலவும்  இருக்கிறது.  {Ps  90:4}

 

அவர்களை  வெள்ளம்போல்  வாரிக்கொண்டுபோகிறீர்;  நித்திரைக்கு  ஒத்திருக்கிறார்கள்;  காலையிலே  முளைக்கிற  புல்லுக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்.  {Ps  90:5}

 

அது  காலையிலே  முளைத்துப்  பூத்து,  மாலையிலே  அறுப்புண்டு  உலர்ந்துபோம்.  {Ps  90:6}

 

நாங்கள்  உமது  கோபத்தினால்  அழிந்து,  உமது  உக்கிரத்தினால்  கலங்கிப்போகிறோம்.  {Ps  90:7}

 

எங்கள்  அக்கிரமங்களை  உமக்கு  முன்பாகவும்,  எங்கள்  அந்தரங்க  பாவங்களை  உமது  முகத்தின்  வெளிச்சத்திலும்  நிறுத்தினீர்.  {Ps  90:8}

 

எங்கள்  நாட்களெல்லாம்  உமது  கோபத்தால்  போய்விட்டது;  ஒரு  கதையைப்போல்  எங்கள்  வருஷங்களைக்  கழித்துப்போட்டோம்.  {Ps  90:9}

 

எங்கள்  ஆயுசுநாட்கள்  எழுபது  வருஷம்,  பெலத்தின்  மிகுதியால்  எண்பது  வருஷமாயிருந்தாலும்,  அதின்  மேன்மையானது  வருத்தமும்  சஞ்சலமுமே;  அது  சீக்கிரமாய்க்  கடந்துபோகிறது,  நாங்களும்  பறந்துபோகிறோம்.  {Ps  90:10}

 

உமது  கோபத்தின்  வல்லமையையும்,  உமக்குப்  பயப்படத்தக்கவிதமாய்  உமது  உக்கிரத்தையும்  அறிந்துகொள்ளுகிறவன்  யார்?  {Ps  90:11}

 

நாங்கள்  ஞான  இருதயமுள்ளவர்களாகும்படி,  எங்கள்  நாட்களை  எண்ணும்  அறிவை  எங்களுக்குப்  போதித்தருளும்.  {Ps  90:12}

 

கர்த்தாவே,  திரும்பிவாரும்,  எதுவரைக்கும்  கோபமாயிருப்பீர்?  உமது  அடியாருக்காகப்  பரிதபியும்.  {Ps  90:13}

 

நாங்கள்  எங்கள்  வாழ்நாளெல்லாம்  களிகூர்ந்து  மகிழும்படி,  காலையிலே  எங்களை  உமது  கிருபையால்  திருப்தியாக்கும்.  {Ps  90:14}

 

தேவரீர்  எங்களைச்  சிறுமைப்படுத்தின  நாட்களுக்கும்,  நாங்கள்  துன்பத்தைக்  கண்ட  வருஷங்களுக்கும்  சரியாய்  எங்களை  மகிழ்ச்சியாக்கும்.  {Ps  90:15}

 

உமது  கிரியை  உமது  ஊழியக்காரருக்கும்,  உமது  மகிமை  அவர்கள்  பிள்ளைகளுக்கும்  விளங்குவதாக.  {Ps  90:16}

 

எங்கள்  தேவனாகிய  ஆண்டவரின்  பிரியம்  எங்கள்மேல்  இருப்பதாக;  எங்கள்  கைகளின்  கிரியையை  எங்களிடத்தில்  உறுதிப்படுத்தும்;  ஆம்,  எங்கள்  கைகளின்  கிரியையை  எங்களிடத்தில்  உறுதிப்படுத்தியருளும்.  {Ps  90:17}

 

உன்னதமானவரின்  மறைவிலிருக்கிறவன்  சர்வவல்லவருடைய  நிழலில்  தங்குவான்.  {Ps  91:1}

 

நான்  கர்த்தரை  நோக்கி:  நீர்  என்  அடைக்கலம்,  என்  கோட்டை,  என்  தேவன்,  நான்  நம்பியிருக்கிறவர்  என்று  சொல்லுவேன்.  {Ps  91:2}

 

அவர்  உன்னை  வேடனுடைய  கண்ணிக்கும்,  பாழாக்கும்  கொள்ளைநோய்க்கும்  தப்புவிப்பார்.  {Ps  91:3}

 

அவர்  தமது  சிறகுகளாலே  உன்னை  மூடுவார்;  அவர்  செட்டைகளின்  கீழே  அடைக்கலம்  புகுவாய்;  அவருடைய  சத்தியம்  உனக்குப்  பரிசையும்  கேடகமுமாகும்.  {Ps  91:4}

 

இரவில்  உண்டாகும்  பயங்கரத்துக்கும்,  பகலில்  பறக்கும்  அம்புக்கும்,  {Ps  91:5}

 

இருளில்  நடமாடும்  கொள்ளைநோய்க்கும்,  மத்தியானத்தில்  பாழாக்கும்  சங்காரத்துக்கும்  பயப்படாதிருப்பாய்.  {Ps  91:6}

 

உன்  பக்கத்தில்  ஆயிரம்பேரும்,  உன்  வலதுபுறத்தில்  பதினாயிரம்பேரும்  விழுந்தாலும்,  அது  உன்னை  அணுகாது.  {Ps  91:7}

 

உன்  கண்களால்  மாத்திரம்  நீ  அதைப்  பார்த்து,  துன்மார்க்கருக்கு  வரும்  பலனைக்  காண்பாய்.  {Ps  91:8}

 

எனக்கு  அடைக்கலமாயிருக்கிற  உன்னதமான  கர்த்தரை  உனக்குத்  தாபரமாகக்கொண்டாய்.  {Ps  91:9}

 

ஆகையால்  பொல்லாப்பு  உனக்கு  நேரிடாது,  வாதை  உன்  கூடாரத்தை  அணுகாது.  {Ps  91:10}

 

உன்  வழிகளிலெல்லாம்  உன்னைக்  காக்கும்படி,  உனக்காகத்  தம்முடைய  தூதர்களுக்குக்  கட்டளையிடுவார்.  {Ps  91:11}

 

உன்  பாதம்  கல்லில்  இடறாதபடிக்கு  அவர்கள்  உன்னைத்  தங்கள்  கைகளில்  ஏந்திக்கொண்டுபோவார்கள்.  {Ps  91:12}

 

சிங்கத்தின்மேலும்  விரியன்  பாம்பின்மேலும்  நீ  நடந்து,  பாலசிங்கத்தையும்  வலுசர்ப்பத்தையும்  மிதித்துப்போடுவாய்.  {Ps  91:13}

 

அவன்  என்னிடத்தில்  வாஞ்சையாயிருக்கிறபடியால்  அவனை  விடுவிப்பேன்;  என்  நாமத்தை  அவன்  அறிந்திருக்கிறபடியால்  அவனை  உயர்ந்த  அடைக்கலத்திலே  வைப்பேன்.  {Ps  91:14}

 

அவன்  என்னை  நோக்கிக்  கூப்பிடுவான்,  நான்  அவனுக்கு  மறுஉத்தரவு  அருளிச்செய்வேன்;  ஆபத்தில்  நானே  அவனோடிருந்து,  அவனைத்  தப்புவித்து,  அவனைக்  கனப்படுத்துவேன்.  {Ps  91:15}

 

நீடித்த  நாட்களால்  அவனைத்  திருப்தியாக்கி,  என்  இரட்சிப்பை  அவனுக்குக்  காண்பிப்பேன்.  {Ps  91:16}

 

கர்த்தரைத்  துதிப்பதும்,  உன்னதமானவரே,  உமது  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுவதும்,  {Ps  92:1}

 

பத்துநரம்பு  வீணையினாலும்,  தம்புருவினாலும்,  தியானத்தோடு  வாசிக்கும்  சுரமண்டலத்தினாலும்,  {Ps  92:2}

 

காலையிலே  உமது  கிருபையையும்,  இரவிலே  உமது  சத்தியத்தையும்  அறிவிப்பதும்  நலமாயிருக்கும்.  {Ps  92:3}

 

கர்த்தாவே,  உமது  செய்கைகளால்  என்னை  மகிழ்ச்சியாக்கினீர்,  உமது  கரத்தின்  கிரியைகளினிமித்தம்  ஆனந்தசத்தமிடுவேன்.  {Ps  92:4}

 

கர்த்தாவே,  உமது  கிரியைகள்  எவ்வளவு  மகத்துவமானவைகள்!  உமது  யோசனைகள்  மகா  ஆழமானவைகள்.  {Ps  92:5}

 

மிருககுணமுள்ள  மனுஷன்  அதை  அறியான்;  மூடன்  அதை  உணரான்.  {Ps  92:6}

 

துன்மார்க்கர்  புல்லைப்போலே  தழைத்து,  அக்கிரமக்காரர்  யாவரும்  செழிக்கும்போது,  அது  அவர்கள்  என்றென்றைக்கும்  அழிந்துபோவதற்கே  ஏதுவாகும்.  {Ps  92:7}

 

கர்த்தாவே,  நீர்  என்றென்றைக்கும்  உன்னதமானவராயிருக்கிறீர்.  {Ps  92:8}

 

கர்த்தாவே,  உமது  சத்துருக்கள்  அழிவார்கள்;  உமது  சத்துருக்கள்  அழிந்தேபோவார்கள்;  சகல  அக்கிரமக்காரரும்  சிதறுண்டுபோவார்கள்.  {Ps  92:9}

 

என்  கொம்பைக்  காண்டாமிருகத்தின்  கொம்பைப்போல  உயர்த்துவீர்;  புது  எண்ணெயால்  அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.  {Ps  92:10}

 

என்  சத்துருக்களுக்கு  நேரிடுவதை  என்  கண்  காணும்;  எனக்கு  விரோதமாய்  எழும்புகிற  துன்மார்க்கருக்கு  நேரிடுவதை  என்  காது  கேட்கும்.  {Ps  92:11}

 

நீதிமான்  பனையைப்போல்  செழித்து,  லீபனோனிலுள்ள<Lebanon>  கேதுருவைப்போல்  வளருவான்.  {Ps  92:12}

 

கர்த்தருடைய  ஆலயத்திலே  நாட்டப்பட்டவர்கள்  எங்கள்  தேவனுடைய  பிராகாரங்களில்  செழித்திருப்பார்கள்.  {Ps  92:13}

 

கர்த்தர்  உத்தமரென்றும்,  என்  கன்மலையாகிய  அவரிடத்தில்  அநீதியில்லையென்றும்,  விளங்கப்பண்ணும்படி,  {Ps  92:14}

 

அவர்கள்  முதிர்வயதிலும்  கனி  தந்து,  புஷ்டியும்  பசுமையுமாயிருப்பார்கள்.  {Ps  92:15}

 

கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்,  மகத்துவத்தை  அணிந்துகொண்டிருக்கிறார்;  கர்த்தர்  பராக்கிரமத்தை  அணிந்து,  அவர்  அதைக்  கச்சையாகக்  கட்டிக்கொண்டிருக்கிறார்;  ஆதலால்  பூச்சக்கரம்  அசையாதபடி  நிலைபெற்றிருக்கிறது.  {Ps  93:1}

 

உமது  சிங்காசனம்  பூர்வமுதல்  உறுதியானது;  நீர்  அநாதியாயிருக்கிறீர்.  {Ps  93:2}

 

கர்த்தாவே,  நதிகள்  எழும்பின;  நதிகள்  இரைச்சலிட்டு  எழும்பின;  நதிகள்  அலைதிரண்டு  எழும்பின.  {Ps  93:3}

 

திரளான  தண்ணீர்களின்  இரைச்சலைப்பார்க்கிலும்,  சமுத்திரத்தின்  வலுமையான  அலைகளைப்பார்க்கிலும்,  கர்த்தர்  உன்னதத்திலே  வல்லமையுள்ளவர்.  {Ps  93:4}

 

உமது  சாட்சிகள்  மிகவும்  உண்மையுள்ளவைகள்;  கர்த்தாவே,  பரிசுத்தமானது  நித்தியநாளாக  உமது  ஆலயத்தின்  அலங்காரமாயிருக்கிறது.  {Ps  93:5}

 

நீதியைச்  சரிக்கட்டுகிற  தேவனாகிய  கர்த்தாவே,  நீதியைச்  சரிக்கட்டுகிற  தேவனே,  பிரகாசியும்.  {Ps  94:1}

 

பூமியின்  நியாயாதிபதியே,  நீர்  எழுந்து,  பெருமைக்காரருக்குப்  பதிலளியும்.  {Ps  94:2}

 

கர்த்தாவே,  துன்மார்க்கர்  எதுவரைக்கும்  மகிழ்ந்து,  துன்மார்க்கர்  எதுவரைக்கும்  களிகூர்ந்திருப்பார்கள்?  {Ps  94:3}

 

எதுவரைக்கும்  அக்கிரமக்காரர்  யாவரும்  வாயாடி,  கடினமாய்ப்  பேசி,  பெருமைபாராட்டுவார்கள்?  {Ps  94:4}

 

கர்த்தாவே,  அவர்கள்  உமது  ஜனத்தை  நொறுக்கி,  உமது  சுதந்தரத்தை  ஒடுக்குகிறார்கள்.  {Ps  94:5}

 

விதவையையும்  பரதேசியையும்  கொன்று,  திக்கற்ற  பிள்ளைகளைக்  கொலைசெய்து:  {Ps  94:6}

 

கர்த்தர்  பாரார்,  யாக்கோபின்<Jacob>  தேவன்  கவனியார்  என்று  சொல்லுகிறார்கள்.  {Ps  94:7}

 

ஜனத்தில்  மிருககுணமுள்ளவர்களே,  உணர்வடையுங்கள்;  மூடரே,  எப்பொழுது  புத்திமான்களாவீர்கள்?  {Ps  94:8}

 

காதை  உண்டாக்கினவர்  கேளாரோ?  கண்ணை  உருவாக்கினவர்  காணாரோ?  {Ps  94:9}

 

ஜாதிகளை  தண்டிக்கிறவர்  கடிந்துகொள்ளாரோ?  மனுஷனுக்கு  அறிவைப்  போதிக்கிறவர்  அறியாரோ?  {Ps  94:10}

 

மனுஷனுடைய  யோசனைகள்  வீணென்று  கர்த்தர்  அறிந்திருக்கிறார்.  {Ps  94:11}

 

கர்த்தாவே,  துன்மார்க்கனுக்குக்  குழிவெட்டப்படும்வரைக்கும்,  நீர்  தீங்குநாட்களில்  அமர்ந்திருக்கப்பண்ணி,  {Ps  94:12}

 

சிட்சித்து,  உம்முடைய  வேதத்தைக்கொண்டு  போதிக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  94:13}

 

கர்த்தர்  தம்முடைய  ஜனத்தை  நெகிழவிடாமலும்,  தம்முடைய  சுதந்தரத்தைக்  கைவிடாமலும்  இருப்பார்.  {Ps  94:14}

 

நியாயம்  நீதியினிடமாகத்  திரும்பும்;  செம்மையான  இருதயத்தார்  யாவரும்  அதைப்  பின்பற்றுவார்கள்.  {Ps  94:15}

 

துன்மார்க்கருக்கு  விரோதமாய்  என்  பட்சத்தில்  எழும்புகிறவன்  யார்?  அக்கிரமக்காரருக்கு  விரோதமாய்  என்  பட்சத்தில்  நிற்பவன்  யார்?  {Ps  94:16}

 

கர்த்தர்  எனக்குத்  துணையாயிராவிட்டால்,  என்  ஆத்துமா  சீக்கிரமாய்  மவுனத்தில்  வாசம்பண்ணியிருக்கும்.  {Ps  94:17}

 

என்  கால்  சறுக்குகிறது  என்று  நான்  சொல்லும்போது,  கர்த்தாவே,  உமது  கிருபை  என்னைத்  தாங்குகிறது.  {Ps  94:18}

 

என்  உள்ளத்தில்  விசாரங்கள்  பெருகுகையில்,  உம்முடைய  ஆறுதல்கள்  என்  ஆத்துமாவைத்  தேற்றுகிறது.  {Ps  94:19}

 

தீமையைக்  கட்டளையினால்  பிறப்பிக்கிற  கொடுங்கோலாசனம்  உமக்கு  இசைந்திருக்குமோ?  {Ps  94:20}

 

அவர்கள்  நீதிமானுடைய  ஆத்துமாவுக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடி,  குற்றமில்லாத  இரத்தத்தைக்  குற்றப்படுத்துகிறார்கள்.  {Ps  94:21}

 

கர்த்தரோ  எனக்கு  அடைக்கலமும்,  என்  தேவன்  நான்  நம்பியிருக்கிற  கன்மலையுமாயிருக்கிறார்.  {Ps  94:22}

 

அவர்களுடைய  அக்கிரமத்தை  அவர்கள்மேல்  திருப்பி,  அவர்களுடைய  பொல்லாப்பினிமித்தம்  அவர்களைச்  சங்கரிப்பார்;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரே  அவர்களைச்  சங்கரிப்பார்.  {Ps  94:23}

 

கர்த்தரைக்  கெம்பீரமாய்ப்  பாடி,  நம்முடைய  இரட்சணியக்  கன்மலையைச்  சங்கீர்த்தனம்  பண்ணக்கடவோம்  வாருங்கள்.  {Ps  95:1}

 

துதித்தலுடனே  அவர்  சந்நிதிக்கு  முன்பாக  வந்து,  சங்கீதங்களால்  அவரை  ஆர்ப்பரித்துப்  பாடக்கடவோம்.  {Ps  95:2}

 

கர்த்தரே  மகா  தேவனும்,  எல்லா  தேவர்களுக்கும்  மகாராஜனுமாயிருக்கிறார்.  {Ps  95:3}

 

பூமியின்  ஆழங்கள்  அவர்  கையில்  இருக்கிறது;  பர்வதங்களின்  உயரங்களும்  அவருடையவைகள்.  {Ps  95:4}

 

சமுத்திரம்  அவருடையது,  அவரே  அதை  உண்டாக்கினார்;  வெட்டாந்தரையையும்  அவருடைய  கரம்  உருவாக்கிற்று.  {Ps  95:5}

 

நம்மை  உண்டாக்கின  கர்த்தருக்கு  முன்பாக  நாம்  பணிந்து  குனிந்து  முழங்காற்படியிடக்கடவோம்  வாருங்கள்.  {Ps  95:6}

 

அவர்  நம்முடைய  தேவன்;  நாம்  அவர்  மேய்ச்சலின்  ஜனங்களும்,  அவர்  கைக்குள்ளான  ஆடுகளுமாமே.  {Ps  95:7}

 

இன்று  அவருடைய  சத்தத்தைக்  கேட்பீர்களாகில்,  வனாந்தரத்தில்  கோபம்  மூட்டினபோதும்  சோதனைநாளிலும்  நடந்ததுபோல,  உங்கள்  இருதயத்தைக்  கடினப்படுத்தாதேயுங்கள்.  {Ps  95:8}

 

அங்கே  உங்கள்  பிதாக்கள்  என்னைச்  சோதித்து,  என்னைப்  பரீட்சைபார்த்து,  என்  கிரியையையும்  கண்டார்கள்.  {Ps  95:9}

 

நாற்பது  வருஷமாய்  நான்  அந்தச்  சந்ததியை  அரோசித்து,  அவர்கள்  வழுவிப்போகிற  இருதயமுள்ள  ஜனமென்றும்,  என்னுடைய  வழிகளை  அறியாதவர்களென்றும்  சொல்லி,  {Ps  95:10}

 

என்னுடைய  இளைப்பாறுதலில்  அவர்கள்  பிரவேசிப்பதில்லையென்று,  என்னுடைய  கோபத்திலே  ஆணையிட்டேன்.  {Ps  95:11}

 

கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  பூமியின்  குடிகளே,  எல்லாரும்  கர்த்தரைப்  பாடுங்கள்.  {Ps  96:1}

 

கர்த்தரைப்  பாடி,  அவருடைய  நாமத்தை  ஸ்தோத்திரித்து,  நாளுக்குநாள்  அவருடைய  இரட்சிப்பைச்  சுவிசேஷமாய்  அறிவியுங்கள்.  {Ps  96:2}

 

ஜாதிகளுக்குள்  அவருடைய  மகிமையையும்,  சகல  ஜனங்களுக்குள்ளும்  அவருடைய  அதிசயங்களையும்  விவரித்துச்  சொல்லுங்கள்.  {Ps  96:3}

 

கர்த்தர்  பெரியவரும்,  மிகவும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்;  எல்லா  தேவர்களிலும்  பயப்படத்தக்கவர்  அவரே.  {Ps  96:4}

 

சகல  ஜனங்களுடைய  தேவர்களும்  விக்கிரகங்கள்தானே;  கர்த்தரோ  வானங்களை  உண்டாக்கினவர்.  {Ps  96:5}

 

மகிமையும்  கனமும்  அவர்  சமுகத்தில்  இருக்கிறது,  வல்லமையும்  மகத்துவமும்  அவர்  பரிசுத்த  ஸ்தலத்திலுள்ளது.  {Ps  96:6}

 

ஜனங்களின்  வம்சங்களே,  கர்த்தருக்கு  மகிமையையும்  வல்லமையையும்  செலுத்துங்கள்,  கர்த்தருக்கே  அதைச்  செலுத்துங்கள்.  {Ps  96:7}

 

கர்த்தருக்கு  அவருடைய  நாமத்திற்குரிய  மகிமையைச்  செலுத்தி,  காணிக்கைகளைக்  கொண்டுவந்து,  அவருடைய  பிராகாரங்களில்  பிரவேசியுங்கள்.  {Ps  96:8}

 

பரிசுத்த  அலங்காரத்துடனே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுங்கள்;  பூலோகத்தாரே,  நீங்கள்  யாவரும்  அவருக்கு  முன்பாக  நடுங்குங்கள்.  {Ps  96:9}

 

கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்,  ஆகையால்  பூச்சக்கரம்  அசையாதபடி  உறுதிப்பட்டிருக்கும்;  அவர்  ஜனங்களை  நிதானமாய்  நியாயந்தீர்ப்பார்  என்று  ஜாதிகளுக்குள்ளே  சொல்லுங்கள்.  {Ps  96:10}

 

வானங்கள்  மகிழ்ந்து,  பூமி  பூரிப்பாகி,  சமுத்திரமும்  அதின்  நிறைவும்  முழங்குவதாக.  {Ps  96:11}

 

நாடும்  அதிலுள்ள  யாவும்  களிகூருவதாக;  அப்பொழுது  கர்த்தருக்கு  முன்பாக  காட்டுவிருட்சங்களெல்லாம்  கெம்பீரிக்கும்.  {Ps  96:12}

 

அவர்  வருகிறார்,  அவர்  பூமியை  நியாயந்தீர்க்க  வருகிறார்;  அவர்  பூலோகத்தை  நீதியோடும்,  ஜனங்களைச்  சத்தியத்தோடும்  நியாயந்தீர்ப்பார்.  {Ps  96:13}

 

கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்;  பூமி  பூரிப்பாகி,  திரளான  தீவுகள்  மகிழக்கடவது.  {Ps  97:1}

 

மேகமும்  மந்தாரமும்  அவரைச்  சூழ்ந்திருக்கிறது;  நீதியும்  நியாயமும்  அவருடைய  சிங்காசனத்தின்  ஆதாரம்.  {Ps  97:2}

 

அக்கினி  அவருக்கு  முன்சென்று,  சுற்றிலும்  இருக்கிற  அவருடைய  சத்துருக்களைச்  சுட்டெரிக்கிறது.  {Ps  97:3}

 

அவருடைய  மின்னல்கள்  பூச்சக்கரத்தைப்  பிரகாசிப்பித்தது;  பூமி  அதைக்  கண்டு  அதிர்ந்தது.  {Ps  97:4}

 

கர்த்தரின்  பிரசன்னத்தினால்  பர்வதங்கள்  மெழுகுபோல  உருகிற்று,  சர்வ  பூமியினுடைய  ஆண்டவரின்  பிரசன்னத்தினாலேயே  உருகிப்போயிற்று.  {Ps  97:5}

 

வானங்கள்  அவருடைய  நீதியை  வெளிப்படுத்துகிறது;  சகல  ஜனங்களும்  அவருடைய  மகிமையைக்  காண்கிறார்கள்.  {Ps  97:6}

 

சொரூபங்களை  வணங்கி,  விக்கிரகங்களைப்பற்றிப்  பெருமைபாராட்டுகிற  யாவரும்  வெட்கப்பட்டுப்  போவார்களாக;  தேவர்களே,  நீங்களெல்லாரும்  அவரைத்  தொழுதுகொள்ளுங்கள்.  {Ps  97:7}

 

சீயோன்<Zion>  கேட்டு  மகிழ்ந்தது;  கர்த்தாவே,  உம்முடைய  நியாயத்தீர்ப்புகளினிமித்தம்  யூதாவின்<Judah>  குமாரத்திகள்  களிகூர்ந்தார்கள்.  {Ps  97:8}

 

கர்த்தாவே,  பூமி  முழுவதுக்கும்  நீர்  உன்னதமானவர்;  எல்லா  தேவர்களிலும்  நீரே  மிகவும்  உயர்ந்தவர்.  {Ps  97:9}

 

கர்த்தரில்  அன்புகூருகிறவர்களே,  தீமையை  வெறுத்துவிடுங்கள்;  அவர்  தம்முடைய  பரிசுத்தவான்களின்  ஆத்துமாக்களைக்  காப்பாற்றி,  துன்மார்க்கரின்  கைக்கு  அவர்களைத்  தப்புவிக்கிறார்.  {Ps  97:10}

 

நீதிமானுக்காக  வெளிச்சமும்,  செம்மையான  இருதயத்தாருக்காக  மகிழ்ச்சியும்  விதைக்கப்பட்டிருக்கிறது.  {Ps  97:11}

 

நீதிமான்களே,  கர்த்தருக்குள்  மகிழ்ந்து,  அவருடைய  பரிசுத்தத்தின்  நினைவுகூருதலைக்  கொண்டாடுங்கள்.  {Ps  97:12}

 

கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  அவர்  அதிசயங்களைச்  செய்திருக்கிறார்;  அவருடைய  வலதுகரமும்,  அவருடைய  பரிசுத்த  புயமும்,  இரட்சிப்பை  உண்டாக்கினது.  {Ps  98:1}

 

கர்த்தர்  தமது  இரட்சிப்பைப்  பிரஸ்தாபமாக்கி,  தமது  நீதியை  ஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  விளங்கப்பண்ணினார்.  {Ps  98:2}

 

அவர்  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்துக்காகத்  தமது  கிருபையையும்  உண்மையையும்  நினைவுகூர்ந்தார்;  பூமியின்  எல்லைகளெல்லாம்  நமது  தேவனுடைய  இரட்சிப்பைக்  கண்டது.  {Ps  98:3}

 

பூமியின்  குடிகளே,  நீங்களெல்லாரும்  கர்த்தரை  நோக்கி  ஆனந்தமாய்  ஆர்ப்பரியுங்கள்;  முழக்கமிட்டுக்  கெம்பீரமாய்ப்  பாடுங்கள்.  {Ps  98:4}

 

சுரமண்டலத்தால்  கர்த்தரைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்,  சுரமண்டலத்தாலும்  கீதசத்தத்தாலும்  அவரைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்.  {Ps  98:5}

 

கர்த்தராகிய  ராஜாவின்  சமுகத்தில்  பூரிகைகளாலும்  எக்காள  சத்தத்தாலும்  ஆனந்தமாய்  ஆர்ப்பரியுங்கள்.  {Ps  98:6}

 

சமுத்திரமும்  அதின்  நிறைவும்,  பூச்சக்கரமும்  அதின்  குடிகளும்  முழங்குவதாக.  {Ps  98:7}

 

கர்த்தருக்கு  முன்பாக  ஆறுகள்  கைகொட்டி,  பர்வதங்கள்  ஏகமாய்க்  கெம்பீரித்துப்  பாடக்கடவது.  {Ps  98:8}

 

அவர்  பூமியை  நியாயந்தீர்க்க  வருகிறார்;  பூலோகத்தை  நீதியோடும்  ஜனங்களை  நிதானத்தோடும்  நியாயந்தீர்ப்பார்.  {Ps  98:9}

 

கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்,  ஜனங்கள்  தத்தளிப்பார்களாக;  அவர்  கேருபீன்களின்<cherubims>  மத்தியில்  வீற்றிருக்கிறார்,  பூமி  அசைவதாக.  {Ps  99:1}

 

கர்த்தர்  சீயோனில்<Zion>  பெரியவர்,  அவர்  எல்லா  ஜனங்கள்மேலும்  உயர்ந்தவர்.  {Ps  99:2}

 

மகத்துவமும்  பயங்கரமுமான  உமது  நாமத்தை  அவர்கள்  துதிப்பார்களாக;  அது  பரிசுத்தமுள்ளது.  {Ps  99:3}

 

ராஜாவின்  வல்லமை  நீதியில்  பிரியப்படுகிறது,  தேவரீர்  நியாயத்தை  நிலைநிறுத்துகிறீர்;  நீர்  யாக்கோபில்<Jacob>  நியாயமும்  நீதியும்  செய்கிறீர்.  {Ps  99:4}

 

நம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  உயர்த்தி,  அவர்  பாதபடியிலே  பணியுங்கள்;  அவர்  பரிசுத்தமுள்ளவர்.  {Ps  99:5}

 

அவருடைய  ஆசாரியரில்  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>,  அவர்  நாமத்தைப்பற்றிக்  கூப்பிடுகிறவர்களில்  சாமுவேலும்<Samuel>,  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டார்கள்;  அவர்  அவர்களுக்கு  மறுஉத்தரவு  அருளினார்.  {Ps  99:6}

 

மேகஸ்தம்பத்திலிருந்து  அவர்களோடே  பேசினார்;  அவர்கள்  அவருடைய  சாட்சிப்பிரமாணங்களையும்  அவர்  தங்களுக்குக்  கொடுத்த  கட்டளையையும்  கைக்கொண்டார்கள்.  {Ps  99:7}

 

எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  அவர்களுக்கு  உத்தரவு  அருளினீர்;  நீர்  அவர்கள்  கிரியைகளினிமித்தம்  நீதி  சரிக்கட்டினபோதிலும்,  அவர்களுக்கு  மன்னிக்கிற  தேவனாயிருந்தீர்.  {Ps  99:8}

 

நம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  உயர்த்தி,  அவருடைய  பரிசுத்த  பர்வதத்திற்கு  நேராகப்  பணியுங்கள்;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  பரிசுத்தமுள்ளவர்.  {Ps  99:9}

 

பூமியின்  குடிகளே,  எல்லாரும்  கர்த்தரைக்  கெம்பீரமாய்ப்  பாடுங்கள்.  {Ps  100:1}

 

மகிழ்ச்சியோடே  கர்த்தருக்கு  ஆராதனைசெய்து,  ஆனந்தசத்தத்தோடே  அவர்  சந்நிதிமுன்  வாருங்கள்.  {Ps  100:2}

 

கர்த்தரே  தேவனென்று  அறியுங்கள்;  நாம்  அல்ல,  அவரே  நம்மை  உண்டாக்கினார்;  நாம்  அவர்  ஜனங்களும்,  அவர்  மேய்ச்சலின்  ஆடுகளுமாயிருக்கிறோம்.  {Ps  100:3}

 

அவர்  வாசல்களில்  துதியோடும்,  அவர்  பிராகாரங்களில்  புகழ்ச்சியோடும்  பிரவேசித்து,  அவரைத்  துதித்து,  அவருடைய  நாமத்தை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  100:4}

 

கர்த்தர்  நல்லவர்,  அவருடைய  கிருபை  என்றென்றைக்கும்,  அவருடைய  உண்மை  தலைமுறை  தலைமுறைக்கும்  உள்ளது.  {Ps  100:5}

 

இரக்கத்தையும்  நியாயத்தையும்  குறித்துப்  பாடுவேன்;  கர்த்தாவே,  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  101:1}

 

உத்தமமான  வழியிலே  விவேகமாய்  நடப்பேன்;  எப்பொழுது  என்னிடத்தில்  வருவீர்!  என்  வீட்டிலே  உத்தம  இருதயத்தோடு  நடந்துகொள்ளுவேன்.  {Ps  101:2}

 

தீங்கான  காரியத்தை  என்  கண்முன்  வைக்கமாட்டேன்;  வழி  விலகுகிறவர்களின்  செய்கையை  வெறுக்கிறேன்;  அது  என்னைப்  பற்றாது.  {Ps  101:3}

 

மாறுபாடான  இருதயம்  என்னைவிட்டு  அகலவேண்டும்;  பொல்லாதவனை  அறியமாட்டேன்.  {Ps  101:4}

 

பிறனை  இரகசியமாய்  அவதூறுபண்ணுகிறவனைச்  சங்கரிப்பேன்;  மேட்டிமைக்  கண்ணனையும்  பெருநெஞ்சுள்ளவனையும்  பொறுக்கமாட்டேன்.  {Ps  101:5}

 

தேசத்தில்  உண்மையானவர்கள்  என்னோடே  வாசம்பண்ணும்படி  என்  கண்கள்  அவர்கள்மேல்  நோக்கமாயிருக்கும்;  உத்தமமான  வழியில்  நடக்கிறவன்  என்னைச்  சேவிப்பான்.  {Ps  101:6}

 

கபடுசெய்கிறவன்  என்  வீட்டுக்குள்  இருப்பதில்லை;  பொய்சொல்லுகிறவன்  என்  கண்முன்  நிலைப்பதில்லை.  {Ps  101:7}

 

அக்கிரமக்காரர்  ஒருவரும்  கர்த்தருடைய  நகரத்தில்  இராதபடி  வேர்  அறுப்புண்டுபோக,  தேசத்திலுள்ள  அக்கிரமக்காரர்  யாவரையும்  அதிகாலமே  சங்கரிப்பேன்.  {Ps  101:8}

 

கர்த்தாவே,  என்  விண்ணப்பத்தைக்  கேளும்;  என்  கூப்பிடுதல்  உம்மிடத்தில்  சேர்வதாக.  {Ps  102:1}

 

என்  ஆபத்துநாளிலே  உமது  முகத்தை  எனக்கு  மறையாதேயும்;  உமது  செவியை  என்னிடத்தில்  சாயும்;  நான்  கூப்பிடுகிற  நாளிலே  எனக்குத்  தீவிரமாய்  உத்தரவு  அருளிச்செய்யும்.  {Ps  102:2}

 

என்  நாட்கள்  புகையைப்போல்  ஒழிந்தது;  என்  எலும்புகள்  ஒரு  கொள்ளியைப்போல்  எரியுண்டது.  {Ps  102:3}

 

என்  இருதயம்  புல்லைப்போல்  வெட்டுண்டு  உலர்ந்தது;  என்  போஜனத்தைப்  புசிக்க  மறந்தேன்.  {Ps  102:4}

 

என்  பெருமூச்சின்  சத்தத்தினால்,  என்  எலும்புகள்  என்  மாம்சத்தோடு  ஒட்டிக்கொள்ளுகிறது.  {Ps  102:5}

 

வனாந்தர  நாரைக்கு  ஒப்பானேன்;  பாழான  இடங்களில்  தங்கும்  ஆந்தையைப்போலானேன்.  {Ps  102:6}

 

நான்  நித்திரையில்லாமல்  வீட்டின்மேல்  தனித்திருக்கும்  குருவியைப்போல்  இருக்கிறேன்.  {Ps  102:7}

 

நாடோறும்  என்  சத்துருக்கள்  என்னை  நிந்திக்கிறார்கள்;  என்மேல்  மூர்க்கவெறிகொண்டவர்கள்  எனக்கு  விரோதமாய்ச்  சாபம்  இடுகிறார்கள்.  {Ps  102:8}

 

நீர்  என்னை  உயரத்  தூக்கி,  தாழத்தள்ளினீர்,  உமது  சினத்திற்கும்  கடுங்கோபத்திற்கும்  உள்ளானேன்.  {Ps  102:9}

 

ஆதலால்  நான்  சாம்பலை  அப்பமாகப்  புசித்து,  என்  பானங்களைக்  கண்ணீரோடே  கலக்கிறேன்.  {Ps  102:10}

 

என்  நாட்கள்  சாய்ந்துபோகிற  நிழலைப்போலிருக்கிறது;  புல்லைப்போல்  உலர்ந்துபோகிறேன்.  {Ps  102:11}

 

கர்த்தராகிய  நீரோ  என்றென்றைக்கும்  இருக்கிறீர்;  உம்முடைய  பேர்  பிரஸ்தாபம்  தலைமுறை  தலைமுறையாக  நிற்கும்.  {Ps  102:12}

 

தேவரீர்  எழுந்தருளி  சீயோனுக்கு<Zion>  இரங்குவீர்;  அதற்குத்  தயைசெய்யுங்காலமும்,  அதற்காகக்  குறித்தநேரமும்  வந்தது.  {Ps  102:13}

 

உம்முடைய  ஊழியக்காரர்  அதின்  கல்லுகள்மேல்  வாஞ்சைவைத்து,  அதின்  மண்ணுக்குப்  பரிதபிக்கிறார்கள்.  {Ps  102:14}

 

கர்த்தர்  சீயோனைக்<Zion>  கட்டி,  தமது  மகிமையில்  வெளிப்படுவார்.  {Ps  102:15}

 

திக்கற்றவர்களுடைய  ஜெபத்தை  அலட்சியம்பண்ணாமல்,  அவர்கள்  விண்ணப்பத்தை  அங்கீகரிப்பார்.  {Ps  102:16}

 

அப்பொழுது  ஜாதிகள்  கர்த்தருடைய  நாமத்துக்கும்,  பூமியிலுள்ள  ராஜாக்களெல்லாரும்  உம்முடைய  மகிமைக்கும்  பயப்படுவார்கள்.  {Ps  102:17}

 

பின்சந்ததிக்காக  இது  எழுதப்படும்;  சிருஷ்டிக்கப்படும்  ஜனம்  கர்த்தரைத்  துதிக்கும்.  {Ps  102:18}

 

கர்த்தர்  கட்டுண்டவர்களின்  பெருமூச்சைக்  கேட்கவும்,  கொலைக்கு  நியமிக்கப்பட்டவர்களை  விடுதலையாக்கவும்,  {Ps  102:19}

 

தம்முடைய  உயர்ந்த  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  பார்த்து,  வானங்களிலிருந்து  பூமியின்மேல்  கண்ணோக்கமானார்.  {Ps  102:20}

 

கர்த்தருக்கு  ஆராதனைசெய்ய,  ஜனங்களும்  ராஜ்யங்களும்  ஏகமாய்க்  கூடிக்கொள்ளுகையில்,  {Ps  102:21}

 

சீயோனில்<Zion>  கர்த்தருடைய  நாமத்தையும்,  எருசலேமில்<Jerusalem>  அவருடைய  துதியையும்  பிரஸ்தாபப்படுத்துவார்கள்.  {Ps  102:22}

 

வழியிலே  என்  பெலனை  அவர்  ஒடுக்கி,  என்  நாட்களைக்  குறுகப்பண்ணினார்.  {Ps  102:23}

 

அப்பொழுது  நான்:  என்  தேவனே,  பாதி  வயதில்  என்னை  எடுத்துக்கொள்ளாதேயும்;  உம்முடைய  வருஷங்கள்  தலைமுறை  தலைமுறையாக  இருக்கும்.  {Ps  102:24}

 

நீர்  ஆதியிலே  பூமியை  அஸ்திபாரப்படுத்தினீர்;  வானங்கள்  உம்முடைய  கரத்தின்  கிரியையாயிருக்கிறது.  {Ps  102:25}

 

அவைகள்  அழிந்துபோம்,  நீரோ  நிலைத்திருப்பீர்;  அவைகளெல்லாம்  வஸ்திரம்போல்  பழமையாய்ப்போம்;  அவைகளை  ஒரு  சால்வையைப்போல்  மாற்றுவீர்,  அப்பொழுது  மாறிப்போம்.  {Ps  102:26}

 

நீரோ  மாறாதவராயிருக்கிறீர்;  உமது  ஆண்டுகள்  முடிந்துபோவதில்லை.  {Ps  102:27}

 

உமது  அடியாரின்  பிள்ளைகள்  தாபரித்திருப்பார்கள்;  அவர்கள்  சந்ததி  உமக்கு  முன்பாக  நிலைபெற்றிருக்கும்  என்று  சொன்னேன்.  {Ps  102:28}

 

என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி;  என்  முழு  உள்ளமே,  அவருடைய  பரிசுத்த  நாமத்தை  ஸ்தோத்திரி.  {Ps  103:1}

 

என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி;  அவர்  செய்த  சகல  உபகாரங்களையும்  மறவாதே.  {Ps  103:2}

 

அவர்  உன்  அக்கிரமங்களையெல்லாம்  மன்னித்து,  உன்  நோய்களையெல்லாம்  குணமாக்கி,  {Ps  103:3}

 

உன்  பிராணனை  அழிவுக்கு  விலக்கி  மீட்டு,  உன்னைக்  கிருபையினாலும்  இரக்கங்களினாலும்  முடிசூட்டி,  {Ps  103:4}

 

நன்மையினால்  உன்  வாயைத்  திருப்தியாக்குகிறார்;  கழுகுக்குச்  சமானமாய்  உன்  வயது  திரும்ப  வால  வயதுபோலாகிறது.  {Ps  103:5}

 

ஒடுக்கப்படுகிற  யாவருக்கும்,  கர்த்தர்  நீதியையும்  நியாயத்தையும்  செய்கிறார்.  {Ps  103:6}

 

அவர்  தமது  வழிகளை  மோசேக்கும்<Moses>,  தமது  கிரியைகளை  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  தெரியப்பண்ணினார்.  {Ps  103:7}

 

கர்த்தர்  உருக்கமும்,  இரக்கமும்,  நீடிய  சாந்தமும்,  மிகுந்த  கிருபையுமுள்ளவர்.  {Ps  103:8}

 

அவர்  எப்பொழுதும்  கடிந்துகொள்ளார்;  என்றைக்கும்  கோபங்கொண்டிரார்.  {Ps  103:9}

 

அவர்  நம்முடைய  பாவங்களுக்குத்தக்கதாக  நமக்குச்  செய்யாமலும்,  நம்முடைய  அக்கிரமங்களுக்குத்  தக்கதாக  நமக்குச்  சரிக்கட்டாமலும்  இருக்கிறார்.  {Ps  103:10}

 

பூமிக்கு  வானம்  எவ்வளவு  உயரமாயிருக்கிறதோ,  அவருக்குப்  பயப்படுகிறவர்கள்மேல்  அவருடைய  கிருபையும்  அவ்வளவு  பெரிதாயிருக்கிறது.  {Ps  103:11}

 

மேற்குக்கும்  கிழக்குக்கும்  எவ்வளவு  தூரமோ,  அவ்வளவு  தூரமாய்  அவர்  நம்முடைய  பாவங்களை  நம்மை  விட்டு  விலக்கினார்.  {Ps  103:12}

 

தகப்பன்  தன்  பிள்ளைகளுக்கு  இரங்குகிறதுபோல,  கர்த்தர்  தமக்குப்  பயந்தவர்களுக்கு  இரங்குகிறார்.  {Ps  103:13}

 

நம்முடைய  உருவம்  இன்னதென்று  அவர்  அறிவார்;  நாம்  மண்ணென்று  நினைவுகூருகிறார்.  {Ps  103:14}

 

மனுஷனுடைய  நாட்கள்  புல்லுக்கு  ஒப்பாயிருக்கிறது;  வெளியின்  புஷ்பத்தைப்போல்  பூக்கிறான்.  {Ps  103:15}

 

காற்று  அதின்மேல்  வீசினவுடனே  அது  இல்லாமற்போயிற்று;  அது  இருந்த  இடமும்  இனி  அதை  அறியாது.  {Ps  103:16}

 

கர்த்தருடைய  கிருபையோ  அவருக்குப்  பயந்தவர்கள்மேலும்,  அவருடைய  நீதி  அவர்கள்  பிள்ளைகளுடைய  பிள்ளைகள்மேலும்  அநாதியாய்  என்றென்றைக்கும்  உள்ளது.  {Ps  103:17}

 

அவருடைய  உடன்படிக்கையைக்  கைக்கொண்டு,  அவருடைய  கட்டளைகளின்படி  செய்ய  நினைக்கிறவர்கள்  மேலேயே  உள்ளது.  {Ps  103:18}

 

கர்த்தர்  வானங்களில்  தமது  சிங்காசனத்தை  ஸ்தாபித்திருக்கிறார்;  அவருடைய  ராஜரிகம்  சர்வத்தையும்  ஆளுகிறது.  {Ps  103:19}

 

கர்த்தருடைய  வார்த்தையைக்கேட்டு,  அவருடைய  வசனத்தின்படி  செய்கிற  பலத்த  சவுரியவான்களாகிய  அவருடைய  தூதர்களே,  அவரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  103:20}

 

கர்த்தருக்குப்  பிரியமானதைச்  செய்து,  அவர்  பணிவிடைக்காரராயிருக்கிற  அவருடைய  சர்வசேனைகளே,  அவரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  103:21}

 

கர்த்தர்  ஆளுகிற  எவ்விடங்களிலுமுள்ள  அவருடைய  சகல  கிரியைகளே,  அவரை  ஸ்தோத்திரியுங்கள்;  என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி.  {Ps  103:22}

 

என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி;  என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  மிகவும்  பெரியவராயிருக்கிறீர்;  மகிமையையும்  மகத்துவத்தையும்  அணிந்துகொண்டிருக்கிறீர்.  {Ps  104:1}

 

ஒளியை  வஸ்திரமாகத்  தரித்து,  வானங்களைத்  திரையைப்போல்  விரித்திருக்கிறீர்.  {Ps  104:2}

 

தமது  மேல்வீடுகளைத்  தண்ணீர்களால்  மச்சுப்பாவி,  மேகங்களைத்  தமது  இரதமாக்கி,  காற்றினுடைய  செட்டைகளின்மேல்  செல்லுகிறார்.  {Ps  104:3}

 

தம்முடைய  தூதர்களைக்  காற்றுகளாகவும்,  தம்முடைய  ஊழியக்காரரை  அக்கினிஜுவாலைகளாகவும்  செய்கிறார்.  {Ps  104:4}

 

பூமி  ஒருபோதும்  நிலைபேராதபடி  அதின்  ஆதாரங்கள்மேல்  அதை  ஸ்தாபித்தார்.  {Ps  104:5}

 

அதை  வஸ்திரத்தினால்  மூடுவதுபோல  ஆழத்தினால்  மூடினீர்;  பர்வதங்களின்மேல்  தண்ணீர்கள்  நின்றது.  {Ps  104:6}

 

அவைகள்  உமது  கண்டிதத்தால்  விலகியோடி,  உமது  குமுறலின்  சத்தத்தால்  விரைந்துபோயிற்று.  {Ps  104:7}

 

அவைகள்  மலைகளில்  ஏறி,  பள்ளத்தாக்குகளில்  இறங்கி,  நீர்  அவைகளுக்கு  ஏற்படுத்தின  இடத்தில்  சென்றது.  {Ps  104:8}

 

அவைகள்  திரும்பவும்  வந்து  பூமியை  மூடிக்கொள்ளாதபடி  கடவாதிருக்கும்  எல்லையை  அவைகளுக்கு  ஏற்படுத்தினீர்.  {Ps  104:9}

 

அவர்  பள்ளத்தாக்குகளில்  நீரூற்றுகளை  வரவிடுகிறார்;  அவைகள்  மலைகள்  நடுவே  ஓடுகிறது.  {Ps  104:10}

 

அவைகள்  வெளியின்  ஜீவன்களுக்கெல்லாம்  தண்ணீர்  கொடுக்கும்;  அங்கே  காட்டுக்கழுதைகள்  தங்கள்  தாகத்தைத்  தீர்த்துக்கொள்ளும்.  {Ps  104:11}

 

அவைகளின்  ஓரமாய்  ஆகாயத்துப்  பறவைகள்  சஞ்சரித்து,  கிளைகள்மேலிருந்து  பாடும்.  {Ps  104:12}

 

தம்முடைய  மேல்வீடுகளிலிருந்து  பர்வதங்களுக்குத்  தண்ணீர்  இறைக்கிறார்;  உமது  கிரியைகளின்  பலனாலே  பூமி  திருப்தியாயிருக்கிறது.  {Ps  104:13}

 

பூமியிலிருந்து  ஆகாரம்  உண்டாகும்படி,  அவர்  மிருகங்களுக்குப்  புல்லையும்,  மனுஷருக்கு  உபயோகமான  பயிர்வகைகளையும்  முளைப்பிக்கிறார்.  {Ps  104:14}

 

மனுஷனுடைய  இருதயத்தை  மகிழ்ச்சியாக்கும்  திராட்சரசத்தையும்,  அவனுக்கு  முகக்களையை  உண்டுபண்ணும்  எண்ணெயையும்,  மனுஷனுடைய  இருதயத்தை  ஆதரிக்கும்  ஆகாரத்தையும்  விளைவிக்கிறார்.  {Ps  104:15}

 

கர்த்தருடைய  விருட்சங்களும்,  அவர்  நாட்டின  லீபனோனின்<Lebanon>  கேதுருக்களும்  சாரத்தினால்  நிறைந்திருக்கும்.  {Ps  104:16}

 

அங்கே  குருவிகள்  கூடுகட்டும்;  தேவதாருவிருட்சங்கள்  கொக்குகளின்  குடியிருப்பு.  {Ps  104:17}

 

உயர்ந்த  பர்வதங்கள்  வரையாடுகளுக்கும்,  கன்மலைகள்  குழிமுசல்களுக்கும்  அடைக்கலம்.  {Ps  104:18}

 

சந்திரனைக்  காலக்குறிப்புகளுக்காகப்  படைத்தார்;  சூரியன்  தன்  அஸ்தமனத்தை  அறியும்.  {Ps  104:19}

 

நீர்  இருளைக்  கட்டளையிடுகிறீர்,  இராக்காலமாகும்;  அதிலே  சகல  காட்டு  ஜீவன்களும்  நடமாடும்.  {Ps  104:20}

 

பாலசிங்கங்கள்  இரைக்காக  கெர்ச்சித்து,  தேவனால்  தங்களுக்கு  ஆகாரம்  கிடைக்கும்படித்  தேடும்.  {Ps  104:21}

 

சூரியன்  உதிக்கையில்  அவைகள்  ஒதுங்கி,  தங்கள்  தாபரங்களில்  படுத்துக்கொள்ளும்.  {Ps  104:22}

 

அப்பொழுது  மனுஷன்  சாயங்காலமட்டும்  தன்  வேலைக்கும்,  தன்  பண்ணைக்கும்  புறப்படுகிறான்.  {Ps  104:23}

 

கர்த்தாவே,  உமது  கிரியைகள்  எவ்வளவு  திரளாயிருக்கிறது!  அவைகளையெல்லாம்  ஞானமாய்ப்  படைத்தீர்;  பூமி  உம்முடைய  பொருள்களினால்  நிறைந்திருக்கிறது.  {Ps  104:24}

 

பெரிதும்  விஸ்தாரமுமான  இந்தச்  சமுத்திரமும்  அப்படியே  நிறைந்திருக்கிறது;  அதிலே  சஞ்சரிக்கும்  சிறியவைகளும்  பெரியவைகளுமான  எண்ணிறந்த  ஜீவன்கள்  உண்டு.  {Ps  104:25}

 

அதிலே  கப்பல்கள்  ஓடும்;  அதிலே  விளையாடும்படி  நீர்  உண்டாக்கின  திமிங்கிலங்களும்  உண்டு.  {Ps  104:26}

 

ஏற்றவேளையில்  ஆகாரத்தைத்  தருவீர்  என்று  அவைகளெல்லாம்  உம்மை  நோக்கிக்  காத்திருக்கும்.  {Ps  104:27}

 

நீர்  கொடுக்க,  அவைகள்  வாங்கிக்கொள்ளும்;  நீர்  உம்முடைய  கையைத்திறக்க,  அவைகள்  நன்மையால்  திருப்தியாகும்.  {Ps  104:28}

 

நீர்  உமது  முகத்தை  மறைக்க,  திகைக்கும்;  நீர்  அவைகளின்  சுவாசத்தை  வாங்கிக்கொள்ள,  அவைகள்  மாண்டு,  தங்கள்  மண்ணுக்குத்  திரும்பும்.  {Ps  104:29}

 

நீர்  உம்முடைய  ஆவியை  அனுப்பும்போது,  அவைகள்  சிருஷ்டிக்கப்படும்;  நீர்  பூமியின்  ரூபத்தையும்  புதிதாக்குகிறீர்.  {Ps  104:30}

 

கர்த்தருடைய  மகிமை  என்றென்றைக்கும்  விளங்கும்;  கர்த்தர்  தம்முடைய  கிரியைகளிலே  மகிழுவார்.  {Ps  104:31}

 

அவர்  பூமியை  நோக்கிப்பார்க்க,  அது  அதிரும்;  அவர்  பர்வதங்களைத்  தொட,  அவைகள்  புகையும்.  {Ps  104:32}

 

நான்  உயிரோடிருக்குமட்டும்  என்  கர்த்தரைப்  பாடுவேன்;  நான்  உள்ளளவும்  என்  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  104:33}

 

நான்  அவரைத்  தியானிக்கும்  தியானம்  இனிதாயிருக்கும்;  நான்  கர்த்தருக்குள்  மகிழுவேன்.  {Ps  104:34}

 

பாவிகள்  பூமியிலிருந்து  நிர்மூலமாகி,  துன்மார்க்கர்  இனி  இராமற்போவார்கள்.  என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி,  அல்லேலூயா<Alleluia>.  {Ps  104:35}

 

கர்த்தரைத்  துதித்து,  அவருடைய  நாமத்தைப்  பிரஸ்தாபமாக்குங்கள்,  அவருடைய  செய்கைகளை  ஜனங்களுக்குள்ளே  பிரசித்தப்படுத்துங்கள்.  {Ps  105:1}

 

அவரைப்  பாடி,  அவரைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்;  அவருடைய  அதிசயங்களையெல்லாம்  தியானித்துப்  பேசுங்கள்.  {Ps  105:2}

 

அவருடைய  பரிசுத்த  நாமத்தைக்  குறித்து  மேன்மைபாராட்டுங்கள்;  கர்த்தரைத்  தேடுகிறவர்களின்  இருதயம்  மகிழ்வதாக.  {Ps  105:3}

 

கர்த்தரையும்  அவர்  வல்லமையையும்  நாடுங்கள்;  அவர்  சமுகத்தை  நித்தமும்  தேடுங்கள்.  {Ps  105:4}

 

அவருடைய  தாசனாகிய  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியே!  அவரால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய  யாக்கோபின்<Jacob>  புத்திரரே!  {Ps  105:5}

 

அவர்  செய்த  அதிசயங்களையும்,  அவருடைய  அற்புதங்களையும்,  அவர்  வாக்கின்  நியாயத்தீர்ப்புகளையும்  நினைவுகூருங்கள்.  {Ps  105:6}

 

அவரே  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்,  அவருடைய  நியாயத்தீர்ப்புகள்  பூமியெங்கும்  விளங்கும்.  {Ps  105:7}

 

ஆயிரந்தலைமுறைக்கென்று  அவர்  கட்டளையிட்ட  வாக்கையும்,  ஆபிரகாமோடே<Abraham>  அவர்  பண்ணின  உடன்படிக்கையையும்,  {Ps  105:8}

 

அவர்  ஈசாக்குக்கு<Isaac>  இட்ட  ஆணையையும்  என்றென்றைக்கும்  நினைத்திருக்கிறார்.  {Ps  105:9}

 

அதை  யாக்கோபுக்குப்<Jacob>  பிரமாணமாகவும்,  இஸ்ரவேலுக்கு<Israel>  நித்திய  உடன்படிக்கையாகவும்  உறுதிப்படுத்தி:  {Ps  105:10}

 

உங்கள்  சுதந்தரபாகமான  கானான்<Canaan>  தேசத்தை  உனக்குத்  தருவேன்  என்றார்.  {Ps  105:11}

 

அக்காலத்தில்  அவர்கள்  கொஞ்சத்  தொகைக்குட்பட்ட  சொற்ப  ஜனங்களும்  பரதேசிகளுமாயிருந்தார்கள்.  {Ps  105:12}

 

அவர்கள்  ஒரு  ஜனத்தைவிட்டு  மறு  ஜனத்தண்டைக்கும்,  ஒரு  ராஜ்யத்தைவிட்டு  மறு  தேசத்தாரண்டைக்கும்  போனார்கள்.  {Ps  105:13}

 

அவர்களை  ஒடுக்கும்படி  ஒருவருக்கும்  இடங்கொடாமல்,  அவர்கள்  நிமித்தம்  ராஜாக்களைக்  கடிந்து  கொண்டு:  {Ps  105:14}

 

நான்  அபிஷேகம்பண்ணினவர்களை  நீங்கள்  தொடாமலும்,  என்னுடைய  தீர்க்கதரிசிகளுக்குத்  தீங்கு  செய்யாமலும்  இருங்கள்  என்றார்.  {Ps  105:15}

 

அவர்  தேசத்திலே  பஞ்சத்தை  வருவித்து,  ஆகாரமென்னும்  ஆதரவுகோலை  முற்றிலும்  முறித்தார்.  {Ps  105:16}

 

அவர்களுக்கு  முன்னாலே  ஒரு  புருஷனை  அனுப்பினார்;  யோசேப்பு<Joseph>  சிறையாக  விற்கப்பட்டான்.  {Ps  105:17}

 

அவன்  கால்களை  விலங்குபோட்டு  ஒடுக்கினார்கள்;  அவன்  பிராணன்  இரும்பில்  அடைபட்டிருந்தது.  {Ps  105:18}

 

கர்த்தர்  சொன்ன  வார்த்தை  நிறைவேறுமளவும்  அவருடைய  வசனம்  அவனைப்  புடமிட்டது.  {Ps  105:19}

 

ராஜா  ஆள்  அனுப்பி,  அவனைக்  கட்டவிழ்க்கச்சொன்னான்;  ஜனங்களின்  அதிபதி  அவனை  விடுதலைபண்ணினான்.  {Ps  105:20}

 

தன்  பிரபுக்களை  அவன்  மனதின்படி  கட்டவும்,  தன்  மூப்பர்களை  ஞானிகளாக்கவும்,  {Ps  105:21}

 

அவனைத்  தன்  வீட்டுக்கு  ஆண்டவனும்,  தன்  ஆஸ்திக்கெல்லாம்  அதிபதியுமாக்கினான்.  {Ps  105:22}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  எகிப்திற்கு<Egypt>  வந்தான்;  யாக்கோபு<Jacob>  காமின்<Ham>  தேசத்திலே  பரதேசியாயிருந்தான்.  {Ps  105:23}

 

அவர்  தம்முடைய  ஜனங்களை  மிகவும்  பலுகப்பண்ணி,  அவர்களுடைய  சத்துருக்களைப்பார்க்கிலும்  அவர்களைப்  பலவான்களாக்கினார்.  {Ps  105:24}

 

தம்முடைய  ஜனங்களைப்  பகைக்கவும்,  தம்முடைய  ஊழியக்காரரை  வஞ்சனையாய்  நடத்தவும்,  அவர்களுடைய  இருதயத்தை  மாற்றினார்.  {Ps  105:25}

 

தம்முடைய  தாசனாகிய  மோசேயையும்<Moses>  தாம்  தெரிந்துகொண்ட  ஆரோனையும்<Aaron>  அனுப்பினார்.  {Ps  105:26}

 

இவர்கள்  அவர்களுக்குள்  அவருடைய  அடையாளங்களையும்,  காமின்<Ham>  தேசத்திலே  அற்புதங்களையும்  செய்தார்கள்.  {Ps  105:27}

 

அவர்  இருளை  அனுப்பி,  அந்தகாரத்தை  உண்டாக்கினார்;  அவருடைய  வார்த்தைகளை  எதிர்ப்பாரில்லை.  {Ps  105:28}

 

அவர்களுடைய  தண்ணீர்களை  இரத்தமாக  மாற்றி,  அவர்களுடைய  மச்சங்களைச்  சாகப்பண்ணினார்.  {Ps  105:29}

 

அவர்களுடைய  தேசம்  தவளைகளைத்  திரளாய்ப்  பிறப்பித்தது;  அவர்களுடைய  ராஜாக்களின்  அறைவீடுகளிலும்  அவைகள்  வந்தது.  {Ps  105:30}

 

அவர்  கட்டளையிட,  அவர்களுடைய  எல்லைகளிலெங்கும்  வண்டுகளும்  பேன்களும்  வந்தது.  {Ps  105:31}

 

அவர்களுடைய  மழைகளைக்  கல்மழையாக்கி,  அவர்களுடைய  தேசத்திலே  ஜுவாலிக்கிற  அக்கினியை  வரப்பண்ணினார்.  {Ps  105:32}

 

அவர்களுடைய  திராட்சச்  செடிகளையும்  அத்திமரங்களையும்  அழித்து,  அவர்களுடைய  எல்லைகளிலுள்ள  மரங்களையும்  முறித்தார்.  {Ps  105:33}

 

அவர்  கட்டளையிட,  எண்ணிமுடியாத  வெட்டுக்கிளிகளும்  பச்சைப்புழுக்களும்  வந்து,  {Ps  105:34}

 

அவர்களுடைய  தேசத்திலுள்ள  சகல  பூண்டுகளையும்  அரித்து,  அவர்களுடைய  நிலத்தின்  கனியைத்  தின்றுபோட்டது.  {Ps  105:35}

 

அவர்களுடைய  தேசத்திலே  தலைச்சன்கள்  அனைத்தையும்,  அவர்களுடைய  பெலனில்  முதற்பெலனான  யாவரையும்  சங்கரித்தார்.  {Ps  105:36}

 

அப்பொழுது  அவர்களை  வெள்ளியோடும்  பொன்னோடும்  புறப்படப்பண்ணினார்;  அவர்கள்  கோத்திரங்களில்  பலவீனப்பட்டவன்  ஒருவனும்  இருந்ததில்லை.  {Ps  105:37}

 

எகிப்தியர்<Egypt>  அவர்களுக்குப்  பயந்ததினால்,  அவர்கள்  புறப்பட்டபோது  மகிழ்ந்தார்கள்.  {Ps  105:38}

 

அவர்  மேகத்தை  மறைவுக்காக  விரித்து,  இரவை  வெளிச்சமாக்குகிறதற்காக  அக்கினியையும்  தந்தார்.  {Ps  105:39}

 

கேட்டார்கள்,  அவர்  காடைகளை  வரப்பண்ணினார்;  வான  அப்பத்தினாலும்  அவர்களைத்  திருப்தியாக்கினார்.  {Ps  105:40}

 

கன்மலையைத்  திறந்தார்,  தண்ணீர்கள்  புறப்பட்டு,  வறண்ட  வெளிகளில்  ஆறாய்  ஓடிற்று.  {Ps  105:41}

 

அவர்  தம்முடைய  பரிசுத்த  வாக்குத்தத்தத்தையும்,  தம்முடைய  தாசனாகிய  ஆபிரகாமையும்<Abraham>  நினைத்து,  {Ps  105:42}

 

தம்முடைய  ஜனத்தைக்  களிப்போடும்,  தாம்  தெரிந்துகொண்டவர்களைக்  கெம்பீர  சத்தத்தோடும்  புறப்படப்பண்ணி,  {Ps  105:43}

 

தமது  கட்டளைகளைக்  காத்து  நடக்கும்படிக்கும்,  தமது  நியாயப்பிரமாணங்களைக்  கைக்கொள்ளும்படிக்கும்,  {Ps  105:44}

 

அவர்களுக்குப்  புறஜாதிகளுடைய  தேசங்களைக்  கொடுத்தார்;  அந்நிய  ஜனங்களுடைய  பிரயாசத்தின்  பலனைச்  சுதந்தரித்துக்கொண்டார்கள்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  105:45}

 

அல்லேலூயா<Alleluia>,  கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  நல்லவர்,  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  106:1}

 

கர்த்தருடைய  வல்லமையான  செய்கைகளைச்  சொல்லி,  அவருடைய  துதியையெல்லாம்  பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன்  யார்?  {Ps  106:2}

 

நியாயத்தைக்  கைக்கொள்ளுகிறவர்களும்,  எக்காலத்திலும்  நீதியைச்செய்கிறவர்களும்  பாக்கியவான்கள்.  {Ps  106:3}

 

கர்த்தாவே,  நீர்  தெரிந்துகொண்டவர்களின்  நன்மையை  நான்  கண்டு,  உம்முடைய  ஜாதியின்  மகிழ்ச்சியால்  மகிழ்ந்து,  உம்முடைய  சுதந்தரத்தோடே  மேன்மைபாராட்டும்படிக்கு,  {Ps  106:4}

 

உம்முடைய  ஜனங்களுக்கு  நீர்  பாராட்டும்  கிருபையின்படி  என்னை  நினைத்து,  உம்முடைய  இரட்சிப்பினால்  என்னைச்  சந்தித்தருளும்.  {Ps  106:5}

 

எங்கள்  பிதாக்களோடுங்கூட  நாங்களும்  பாவஞ்செய்து,  அக்கிரமம்  நடப்பித்து,  ஆகாமியம்பண்ணினோம்.  {Ps  106:6}

 

எங்கள்  பிதாக்கள்  எகிப்திலே<Egypt>  உம்முடைய  அதிசயங்களை  உணராமலும்,  உம்முடைய  கிருபைகளின்  திரட்சியை  நினையாமலும்  போய்,  சிவந்த  சமுத்திர<Red  sea>  ஓரத்திலே  கலகம்பண்ணினார்கள்.  {Ps  106:7}

 

ஆனாலும்  அவர்  தமது  வல்லமையை  வெளிப்படுத்தும்படி,  தம்முடைய  நாமத்தினிமித்தம்  அவர்களை  இரட்சித்தார்.  {Ps  106:8}

 

அவர்  சிவந்த  சமுத்திரத்தை<Red  sea>  அதட்டினார்,  அது  வற்றிப்போயிற்று;  வெட்டாந்தரையில்  நடக்கிறதுபோல  அவர்களை  ஆழங்களில்  நடந்துபோகப்பண்ணினார்.  {Ps  106:9}

 

பகைஞன்  கைக்கு  அவர்களை  விலக்கி  இரட்சித்து,  சத்துருவின்  கைக்கு  அவர்களை  விலக்கி  மீட்டார்.  {Ps  106:10}

 

அவர்கள்  சத்துருக்களைத்  தண்ணீர்கள்  மூடிக்கொண்டது;  அவர்களில்  ஒருவனும்  மீந்திருக்கவில்லை.  {Ps  106:11}

 

அப்பொழுது  அவர்கள்  அவருடைய  வார்த்தைகளை  விசுவாசித்து,  அவருடைய  துதியைப்  பாடினார்கள்.  {Ps  106:12}

 

ஆனாலும்  சீக்கிரமாய்  அவருடைய  கிரியைகளை  மறந்தார்கள்;  அவருடைய  ஆலோசனைக்கு  அவர்கள்  காத்திராமல்,  {Ps  106:13}

 

வனாந்தரத்திலே  இச்சையுள்ளவர்களாகி,  அவாந்தரவெளியிலே  தேவனைப்  பரீட்சைபார்த்தார்கள்.  {Ps  106:14}

 

அப்பொழுது  அவர்கள்  கேட்டதை  அவர்களுக்குக்  கொடுத்தார்,  அவர்கள்  ஆத்துமாக்களிலோ  இளைப்பை  அனுப்பினார்.  {Ps  106:15}

 

பாளயத்தில்  அவர்கள்  மோசேயின்மேலும்<Moses>,  கர்த்தருடைய  பரிசுத்தனாகிய  ஆரோனின்மேலும்<Aaron>  பொறாமைகொண்டார்கள்.  {Ps  106:16}

 

பூமி  பிளந்து  தாத்தானை<Dathan>  விழுங்கி,  அபிராமின்<Abiram>  கூட்டத்தை  மூடிப்போட்டது.  {Ps  106:17}

 

அவர்கள்  கூட்டத்தில்  அக்கினி  பற்றியெரிந்தது;  அக்கினிஜுவாலை  துன்மார்க்கரை  எரித்துப்போட்டது.  {Ps  106:18}

 

அவர்கள்  ஓரேபிலே<Horeb>  ஒரு  கன்றுக்குட்டியையுண்டாக்கி,  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தை  நமஸ்கரித்தார்கள்.  {Ps  106:19}

 

தங்கள்  மகிமையைப்  புல்லைத்  தின்கிற  மாட்டின்  சாயலாக  மாற்றினார்கள்.  {Ps  106:20}

 

எகிப்திலே<Egypt>  பெரிய  கிரியைகளையும்,  காமின்<Ham>  தேசத்திலே  அதிசயங்களையும்,  சிவந்த  சமுத்திரத்தண்டையிலே<Red  sea>  பயங்கரமானவைகளையும்  செய்தவராகிய,  {Ps  106:21}

 

தங்கள்  இரட்சகரான  தேவனை  மறந்தார்கள்.  {Ps  106:22}

 

ஆகையால்,  அவர்களை  நாசம்பண்ணுவேன்  என்றார்;  அப்பொழுது  அவரால்  தெரிந்துகொள்ளப்பட்ட  மோசே<Moses>,  அவர்களை  அவர்  அழிக்காதபடிக்கு,  அவருடைய  உக்கிரத்தை  ஆற்றும்பொருட்டு,  அவருக்கு  முன்பாகத்  திறப்பின்  வாயிலே  நின்றான்.  {Ps  106:23}

 

அவருடைய  வார்த்தையை  விசுவாசியாமல்,  இச்சிக்கப்படத்தக்க  தேசத்தை  அசட்டைபண்ணினார்கள்.  {Ps  106:24}

 

கர்த்தருடைய  சத்தத்திற்குச்  செவிகொடாமல்,  தங்கள்  கூடாரங்களில்  முறுமுறுத்தார்கள்.  {Ps  106:25}

 

அப்பொழுது  அவர்கள்  வனாந்தரத்திலே  மடியவும்,  அவர்கள்  சந்ததி  ஜாதிகளுக்குள்ளே  அழியவும்,  {Ps  106:26}

 

அவர்கள்  பற்பல  தேசங்களிலே  சிதறடிக்கப்படவும்,  அவர்களுக்கு  விரோதமாகத்  தம்முடைய  கையை  எடுத்தார்.  {Ps  106:27}

 

அவர்கள்  பாகால்பேயோரைப்<Baalpeor>  பற்றிக்கொண்டு,  ஜீவனில்லாதவைகளுக்கு  இட்ட  பலிகளைப்  புசித்து,  {Ps  106:28}

 

தங்கள்  கிரியைகளினால்  அவருக்குக்  கோபம்  மூட்டினார்கள்;  ஆகையால்  வாதை  அவர்களுக்குள்  புகுந்தது.  {Ps  106:29}

 

அப்பொழுது  பினெகாஸ்<Phinehas>  எழுந்து  நின்று  நியாயஞ்செய்தான்;  அதினால்  வாதை  நிறுத்தப்பட்டது.  {Ps  106:30}

 

அது  தலைமுறை  தலைமுறையாக  என்றைக்கும்  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது.  {Ps  106:31}

 

மேரிபாவின்<Meribah>  தண்ணீர்களிடத்திலும்  அவருக்குக்  கடுங்கோபம்  மூட்டினார்கள்;  அவர்கள்  நிமித்தம்  மோசேக்கும்<Moses>  பொல்லாப்பு  வந்தது.  {Ps  106:32}

 

அவர்கள்  அவன்  ஆவியை  விசனப்படுத்தினதினாலே,  தன்  உதடுகளினால்  பதறிப்பேசினான்.  {Ps  106:33}

 

கர்த்தர்  தங்களுக்குச்  சொன்னபடி,  அவர்கள்  அந்த  ஜனங்களை  அழிக்கவில்லை.  {Ps  106:34}

 

ஜாதிகளுடனே  கலந்து,  அவர்கள்  கிரியைகளைக்  கற்று;  {Ps  106:35}

 

அவர்களுடைய  விக்கிரகங்களைச்  சேவித்தார்கள்;  அவைகள்  அவர்களுக்குக்  கண்ணியாயிற்று.  {Ps  106:36}

 

அவர்கள்  தங்கள்  குமாரரையும்  தங்கள்  குமாரத்திகளையும்  பிசாசுகளுக்குப்  பலியிட்டார்கள்.  {Ps  106:37}

 

அவர்கள்  கானான்தேசத்து<Canaan>  விக்கிரகங்களுக்குப்  பலியிட்டு,  தங்கள்  குமாரர்  குமாரத்திகளுடைய  குற்றமில்லாத  இரத்தத்தைச்  சிந்தினார்கள்;  தேசம்  இரத்தத்தால்  தீட்டுப்பட்டது.  {Ps  106:38}

 

அவர்கள்  தங்கள்  கிரியைகளினால்  அசுத்தமாகி,  தங்கள்  செய்கைகளினால்  சோரம்போனார்கள்.  {Ps  106:39}

 

அதினால்  கர்த்தருடைய  கோபம்  தமது  ஜனத்தின்மேல்  மூண்டது;  அவர்  தமது  சுதந்தரத்தை  அருவருத்தார்.  {Ps  106:40}

 

அவர்களை  ஜாதிகளுடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவர்களுடைய  பகைஞர்  அவர்களை  ஆண்டார்கள்.  {Ps  106:41}

 

அவர்களுடைய  சத்துருக்கள்  அவர்களை  ஒடுக்கினார்கள்;  அவர்களுடைய  கையின்கீழ்த்  தாழ்த்தப்பட்டார்கள்.  {Ps  106:42}

 

அநேகந்தரம்  அவர்களை  விடுவித்தார்;  அவர்களோ  தங்கள்  யோசனையினால்  அவருக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணி,  தங்களுடைய  அக்கிரமத்தினால்  சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.  {Ps  106:43}

 

அவர்கள்  கூப்பிடுதலை  அவர்  கேட்கும்போதோ,  அவர்களுக்கு  உண்டான  இடுக்கத்தை  அவர்  கண்ணோக்கி,  {Ps  106:44}

 

அவர்களுக்காகத்  தமது  உடன்படிக்கையை  நினைத்து,  தமது  மிகுந்த  கிருபையின்படி  மனஸ்தாபப்பட்டு,  {Ps  106:45}

 

அவர்களைச்  சிறைபிடித்த  யாவரும்  அவர்களுக்கு  இரங்கும்படி  செய்தார்.  {Ps  106:46}

 

எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நாங்கள்  உமது  பரிசுத்த  நாமத்தைப்போற்றி,  உம்மைத்  துதிக்கிறதில்  மேன்மைபாராட்டும்படி  எங்களை  இரட்சித்து,  எங்களை  ஜாதிகளிலிருந்து  சேர்த்தருளும்.  {Ps  106:47}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  அநாதியாய்  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.  ஜனங்களெல்லாரும்:  ஆமென்<Amen>,  அல்லேலூயா<Alleluia>,  என்பார்களாக.  {Ps  106:48}

 

கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  நல்லவர்,  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  107:1}

 

கர்த்தரால்  சத்துருவின்  கைக்கு  நீங்கலாக்கி  மீட்கப்பட்டு,  {Ps  107:2}

 

கிழக்கிலும்  மேற்கிலும்  வடக்கிலும்  தெற்கிலுமுள்ள  பல  தேசங்களிலுமிருந்து  சேர்க்கப்பட்டவர்கள்,  அப்படிச்  சொல்லக்கடவர்கள்.  {Ps  107:3}

 

அவர்கள்  தாபரிக்கும்  ஊரைக்  காணாமல்,  வனாந்தரத்திலே  அவாந்தரவழியாய்,  {Ps  107:4}

 

பசியாகவும்,  தாகமாகவும்,  ஆத்துமா  தொய்ந்ததாகவும்  அலைந்து  திரிந்தார்கள்.  {Ps  107:5}

 

தங்கள்  ஆபத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டார்கள்,  அவர்கள்  இக்கட்டுகளிலிருந்து  அவர்களை  விடுவித்தார்.  {Ps  107:6}

 

தாபரிக்கும்  ஊருக்குப்போய்ச்சேர,  அவர்களைச்  செவ்வையான  வழியிலே  நடத்தினார்.  {Ps  107:7}

 

தவனமுள்ள  ஆத்துமாவைக்  கர்த்தர்  திருப்தியாக்கி,  பசியுள்ள  ஆத்துமாவை  நன்மையினால்  நிரப்புகிறாரென்று,  {Ps  107:8}

 

அவருடைய  கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு  அவர்  செய்கிற  அதிசயங்களினிமித்தமும்  அவரைத்  துதிப்பார்களாக.  {Ps  107:9}

 

தேவனுடைய  வார்த்தைகளுக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணி,  உன்னதமானவருடைய  ஆலோசனையை  அசட்டைபண்ணினவர்கள்,  {Ps  107:10}

 

அந்தகாரத்திலும்  மரண  இருளிலும்  வைக்கப்பட்டிருந்து,  ஒடுக்கத்திலும்  இரும்பிலும்  கட்டுண்டு  கிடந்தார்கள்.  {Ps  107:11}

 

அவர்களுடைய  இருதயத்தை  அவர்  வருத்தத்தால்  தாழ்த்தினார்;  சகாயரில்லாமல்  விழுந்துபோனார்கள்.  {Ps  107:12}

 

தங்கள்  ஆபத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டார்கள்;  அவர்கள்  இக்கட்டுகளிலிருந்து  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்தார்.  {Ps  107:13}

 

அந்தகாரத்திலும்  மரண  இருளிலுமிருந்து  அவர்களை  வெளிப்படப்பண்ணி,  அவர்கள்  கட்டுகளை  அறுத்தார்.  {Ps  107:14}

 

கர்த்தர்  வெண்கலக்  கதவுகளை  உடைத்து,  இருப்புத்  தாழ்ப்பாள்களை  முறித்தாரென்று,  {Ps  107:15}

 

அவருடைய  கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு  அவர்  செய்கிற  அதிசயங்களினிமித்தமும்  அவரைத்  துதிப்பார்களாக.  {Ps  107:16}

 

நிர்மூடர்  தங்கள்  பாதகமார்க்கத்தாலும்  தங்கள்  அக்கிரமங்களாலும்  நோய்கொண்டு  ஒடுங்கிப்போகிறார்கள்.  {Ps  107:17}

 

அவர்கள்  ஆத்துமா  சகல  போஜனத்தையும்  அரோசிக்கிறது,  அவர்கள்  மரணவாசல்கள்  பரியந்தம்  சமீபிக்கிறார்கள்.  {Ps  107:18}

 

தங்கள்  ஆபத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகிறார்கள்;  அவர்கள்  இக்கட்டுகளுக்கு  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சிக்கிறார்.  {Ps  107:19}

 

அவர்  தமது  வசனத்தை  அனுப்பி  அவர்களைக்  குணமாக்கி,  அவர்களை  அழிவுக்குத்  தப்புவிக்கிறார்.  {Ps  107:20}

 

அவர்கள்  கர்த்தரை  அவருடைய  கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு  அவர்  செய்கிற  அதிசயங்களினிமித்தமும்  துதித்து,  {Ps  107:21}

 

ஸ்தோத்திரபலிகளைச்  செலுத்தி,  அவருடைய  கிரியைகளை  ஆனந்தசத்தத்தோடே  விவரிப்பார்களாக.  {Ps  107:22}

 

கப்பலேறி,  கடல்யாத்திரைபண்ணி,  திரளான  தண்ணீர்களிலே  தொழில்  செய்கிறார்களே,  {Ps  107:23}

 

அவர்கள்  கர்த்தருடைய  கிரியைகளையும்,  ஆழத்திலே  அவருடைய  அதிசயங்களையும்  காண்கிறார்கள்.  {Ps  107:24}

 

அவர்  கட்டளையிட  பெருங்காற்று  எழும்பி,  அதின்  அலைகளைக்  கொந்தளிக்கப்பண்ணும்.  {Ps  107:25}

 

அவர்கள்  ஆகாயத்தில்  ஏறி,  ஆழங்களில்  இறங்குகிறார்கள்,  அவர்கள்  ஆத்துமா  கிலேசத்தினால்  கரைந்துபோகிறது.  {Ps  107:26}

 

வெறித்தவனைப்போல்  அலைந்து  தடுமாறுகிறார்கள்;  அவர்களுடைய  ஞானமெல்லாம்  முழுகிப்போகிறது.  {Ps  107:27}

 

அப்பொழுது  தங்கள்  ஆபத்திலே  அவர்கள்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகிறார்கள்,  அவர்கள்  இக்கட்டுகளுக்கு  அவர்களை  நீங்கலாக்கி  விடுவிக்கிறார்.  {Ps  107:28}

 

கொந்தளிப்பை  அமர்த்துகிறார்,  அதின்  அலைகள்  அடங்குகின்றது.  {Ps  107:29}

 

அமைதலுண்டானதினிமித்தம்  அவர்கள்  சந்தோஷப்படுகிறார்கள்;  தாங்கள்  நாடின  துறைமுகத்தில்  அவர்களைக்  கொண்டுவந்து  சேர்க்கிறார்.  {Ps  107:30}

 

அவர்கள்  கர்த்தரை  அவருடைய  கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு  அவர்  செய்கிற  அதிசயங்களினிமித்தமும்  துதித்து,  {Ps  107:31}

 

ஜனங்களின்  சபையிலே  அவரை  உயர்த்தி,  மூப்பர்களின்  சங்கத்திலே  அவரைப்  போற்றுவார்களாக.  {Ps  107:32}

 

அவர்  ஆறுகளை  அவாந்தரவெளியாகவும்,  நீரூற்றுகளை  வறண்ட  ஸ்தலமாகவும்,  {Ps  107:33}

 

குடிகளுடைய  பொல்லாப்பினிமித்தம்  செழிப்பான  தேசத்தை  உவர்  நிலமாகவும்  மாற்றுகிறார்.  {Ps  107:34}

 

அவர்  அவாந்தரவெளியைத்  தண்ணீர்த்  தடாகமாகவும்,  வறண்ட  நிலத்தை  நீரூற்றுகளாகவும்  மாற்றி,  {Ps  107:35}

 

பசித்தவர்களை  அங்கே  குடியேற்றுகிறார்;  அங்கே  அவர்கள்  குடியிருக்கும்  நகரத்தைக்  கட்டி,  {Ps  107:36}

 

வயல்களை  உண்டாக்கி  விதைத்து,  திராட்சத்தோட்டங்களை  நாட்டுகிறார்கள்,  அவைகள்  வரத்துள்ள  பலனைத்  தரும்.  {Ps  107:37}

 

அவர்களை  ஆசீர்வதிக்கிறார்,  மிகுதியும்  பெருகுகிறார்கள்;  அவர்களுடைய  மிருகஜீவன்கள்  குறையாதிருக்கப்பண்ணுகிறார்.  {Ps  107:38}

 

பின்பு  அவர்கள்  இடுக்கத்தினாலும்,  ஆபத்தினாலும்,  துயரத்தினாலும்  குறைவுபட்டுத்  தாழ்வடைகிறார்கள்.  {Ps  107:39}

 

அவர்  பிரபுக்களின்மேல்  இகழ்ச்சி  வரப்பண்ணி,  வழியில்லாத  அவாந்தரவெளியிலே  அவர்களைத்  திரியச்செய்து,  {Ps  107:40}

 

எளியவனையோ  சிறுமையினின்று  எடுத்து,  உயர்ந்த  அடைக்கலத்திலே  வைத்து,  அவன்  வம்சங்களை  மந்தையைப்போலாக்குகிறார்.  {Ps  107:41}

 

உத்தமர்கள்  அதைக்கண்டு  மகிழுவார்கள்;  நியாயக்கேடெல்லாம்  தன்  வாயை  மூடும்.  {Ps  107:42}

 

எவன்  ஞானமுள்ளவனோ  அவன்  இவைகளைக்  கவனிக்கக்கடவன்;  ஞானவான்கள்  கர்த்தருடைய  கிருபைகளை  உணர்ந்துகொள்வார்கள்.  {Ps  107:43}

 

தேவனே,  என்  இருதயம்  ஆயத்தமாயிருக்கிறது;  நான்  பாடிக்  கீர்த்தனம்பண்ணுவேன்;  என்  மகிமையும்  பாடும்.  {Ps  108:1}

 

வீணையே,  சுரமண்டலமே,  விழியுங்கள்,  நான்  அதிகாலையில்  விழிப்பேன்.  {Ps  108:2}

 

கர்த்தாவே,  ஜனங்களுக்குள்ளே  உம்மைத்துதிப்பேன்;  ஜாதிகளுக்குள்ளே  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  108:3}

 

உமது  கிருபை  வானங்களுக்கு  மேலாகவும்,  உமது  சத்தியம்  மேகமண்டலங்கள்  பரியந்தமும்  எட்டுகிறது.  {Ps  108:4}

 

தேவனே,  வானங்களுக்கு  மேலாக  உயர்ந்திரும்;  உமது  மகிமை  பூமியனைத்தின்மேலும்  உயர்ந்திருப்பதாக.  {Ps  108:5}

 

உமது  பிரியர்  விடுவிக்கப்படும்பொருட்டு,  உமது  வலதுகரத்தினால்  இரட்சித்து,  எங்கள்  ஜெபத்தைக்  கேட்டருளும்.  {Ps  108:6}

 

தேவன்  தமது  பரிசுத்தத்தைக்கொண்டு  விளம்பினார்,  ஆகையால்  களிகூருவேன்;  சீகேமைப்<Shechem>  பங்கிட்டு,  சுக்கோத்தின்<Succoth>  பள்ளத்தாக்கை  அளந்துகொள்ளுவேன்.  {Ps  108:7}

 

கீலேயாத்<Gilead>  என்னுடையது,  மனாசேயும்<Manasseh>  என்னுடையது;  எப்பிராயீம்<Ephraim>  என்  தலையின்  பெலன்,  யூதா<Judah>  என்  நியாயப்பிரமாணிகன்.  {Ps  108:8}

 

மோவாப்<Moab>  என்  பாதபாத்திரம்;  ஏதோமின்மேல்<Edom>  என்  பாதரட்சையை  எறிவேன்;  பெலிஸ்தியாவின்<Philistia>  மேல்  ஆர்ப்பரிப்பேன்.  {Ps  108:9}

 

அரணான  பட்டணத்திற்குள்  என்னை  நடத்திக்கொண்டு  போகிறவன்  யார்?  ஏதோம்மட்டும்<Edom>  எனக்கு  வழிகாட்டுகிறவன்  யார்?  {Ps  108:10}

 

எங்கள்  சேனைகளோடே  புறப்படாமலிருந்த  தேவரீரல்லவா?  எங்களைத்  தள்ளிவிட்டிருந்த  தேவரீரல்லவா?  {Ps  108:11}

 

இக்கட்டில்  எங்களுக்கு  உதவிசெய்யும்;  மனுஷனுடைய  உதவி  விருதா.  {Ps  108:12}

 

தேவனாலே  பராக்கிரமஞ்செய்வோம்;  அவரே  எங்கள்  சத்துருக்களை  மிதித்துப்போடுவார்.  {Ps  108:13}

 

நான்  துதிக்கும்  தேவனே,  மவுனமாயிராதேயும்.  {Ps  109:1}

 

துன்மார்க்கனுடைய  வாயும்,  கபட்டுவாயும்,  எனக்கு  விரோதமாய்த்  திறந்திருக்கிறது;  கள்ளநாவினால்  என்னோடே  பேசுகிறார்கள்.  {Ps  109:2}

 

பகையுண்டாக்கும்  வார்த்தைகளால்  என்னைச்  சூழ்ந்துகொண்டு,  முகாந்தரமில்லாமல்  என்னோடே  போர்செய்கிறார்கள்.  {Ps  109:3}

 

என்  சிநேகத்துக்குப்  பதிலாக  என்னை  விரோதிக்கிறார்கள்,  நானோ  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.  {Ps  109:4}

 

நன்மைக்குப்  பதிலாக  எனக்குத்  தீமைசெய்கிறார்கள்,  என்  சிநேகத்துக்குப்  பதிலாக  என்னைப்  பகைக்கிறார்கள்.  {Ps  109:5}

 

அவனுக்கு  மேலாகத்  துஷ்டனை  ஏற்படுத்திவையும்,  சாத்தான்  அவன்  வலதுபக்கத்தில்  நிற்பானாக.  {Ps  109:6}

 

அவன்  நியாயம்  விசாரிக்கப்படும்போது  குற்றவாளியாகக்கடவன்;  அவன்  ஜெபம்  பாவமாகக்கடவது.  {Ps  109:7}

 

அவன்  நாட்கள்  கொஞ்சமாகக்கடவது;  அவன்  உத்தியோகத்தை  வேறொருவன்  பெறக்கடவன்.  {Ps  109:8}

 

அவன்  பிள்ளைகள்  திக்கற்றவர்களும்,  அவன்  மனைவி  விதவையுமாகக்கடவர்கள்.  {Ps  109:9}

 

அவன்  பிள்ளைகள்  அலைந்து  திரிந்து  பிச்சையெடுத்து,  தங்கள்  பாழான  வீடுகளிலிருந்து  இரந்துண்ணக்கடவர்கள்.  {Ps  109:10}

 

கடன்  கொடுத்தவன்  அவனுக்கு  உள்ளதெல்லாவற்றையும்  அபகரித்துக்கொள்வானாக;  அவன்  பிரயாசத்தின்  பலனை  அந்நியர்  பறித்துக்கொள்ளக்கடவர்கள்.  {Ps  109:11}

 

அவனுக்கு  ஒருவரும்  இரக்கங்  காண்பியாமலும்,  அவனுடைய  திக்கற்ற  பிள்ளைகளுக்குத்  தயவுசெய்யாமலும்  போவார்களாக.  {Ps  109:12}

 

அவன்  சந்ததியார்  நிர்மூலமாகக்கடவர்கள்;  இரண்டாந்தலைமுறையில்  அவர்கள்  பேர்  அற்றுப்போவதாக.  {Ps  109:13}

 

அவன்  பிதாக்களின்  அக்கிரமம்  கர்த்தருக்கு  முன்பாக  நினைக்கப்படக்கடவது,  அவன்  தாயின்  பாவம்  நீங்காமலிருப்பதாக.  {Ps  109:14}

 

அவைகள்  நித்தமும்  கர்த்தருக்கு  முன்பாக  இருக்கக்கடவது;  அவர்கள்  பேர்  பூமியிலிராமல்  நிர்மூலமாவதாக.  {Ps  109:15}

 

அவன்  தயைசெய்ய  நினையாமல்,  சிறுமையும்  எளிமையுமானவனைத்  துன்பப்படுத்தி,  மனமுறிவுள்ளவனைக்  கொலைசெய்யும்படி  தேடினானே.  {Ps  109:16}

 

சாபத்தை  விரும்பினான்,  அது  அவனுக்கு  வரும்;  அவன்  ஆசீர்வாதத்தை  விரும்பாமற்போனான்,  அது  அவனுக்குத்  தூரமாய்  விலகிப்போம்.  {Ps  109:17}

 

சாபத்தை  அவன்  தனக்கு  அங்கியாக  உடுத்திக்கொண்டான்;  அது  அவன்  உள்ளத்தில்  தண்ணீரைப்போலவும்,  அவன்  எலும்புகளில்  எண்ணெயைப்போலவும்  பாயும்.  {Ps  109:18}

 

அது  அவன்  மூடிக்கொள்ளுகிற  வஸ்திரமாகவும்,  நித்தமும்  கட்டிக்கொள்ளுகிற  கச்சையாகவும்  இருப்பதாக.  {Ps  109:19}

 

இதுதான்  என்னை  விரோதிக்கிறவர்களுக்கும்,  என்  ஆத்துமாவுக்கு  விரோதமாய்த்  தீங்கு  பேசுகிறவர்களுக்கும்  கர்த்தரால்  வரும்  பலன்.  {Ps  109:20}

 

ஆண்டவராகிய  கர்த்தாவே,  நீர்  உமது  நாமத்தினிமித்தம்  என்னை  ஆதரித்து,  உமது  கிருபை  நலமானதினால்,  என்னை  விடுவித்தருளும்.  {Ps  109:21}

 

நான்  சிறுமையும்  எளிமையுமானவன்,  என்  இருதயம்  எனக்குள்  குத்துண்டிருக்கிறது.  {Ps  109:22}

 

சாயும்  நிழலைப்போல்  அகன்று  போனேன்;  வெட்டுக்கிளியைப்போல்  பறக்கடிக்கப்படுகிறேன்.  {Ps  109:23}

 

உபவாசத்தினால்  என்  முழங்கால்கள்  தளர்ச்சியடைகிறது;  என்  மாம்சம்  புஷ்டியற்று  உலர்ந்து  போகிறது.  {Ps  109:24}

 

நான்  அவர்களுக்கு  நிந்தையானேன்;  அவர்கள்  என்னைப்  பார்த்து,  தங்கள்  தலையைத்  துலுக்குகிறார்கள்.  {Ps  109:25}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே  எனக்குச்  சகாயம்பண்ணும்;  உமது  கிருபையின்படி  என்னை  இரட்சியும்.  {Ps  109:26}

 

இது  உமது  கரம்  என்றும்,  கர்த்தாவே,  தேவரீர்  இதைச்  செய்தீர்  என்றும்,  அவர்கள்  அறிவார்களாக.  {Ps  109:27}

 

அவர்கள்  சபித்தாலும்,  நீர்  ஆசீர்வதியும்;  அவர்கள்  எழும்பினாலும்  வெட்கப்பட்டுப்போவார்களாக;  உமது  அடியானோ  மகிழக்கடவன்.  {Ps  109:28}

 

என்  விரோதிகள்  இலச்சையால்  மூடப்பட்டு,  தங்கள்  வெட்கத்தைச்  சால்வையைப்போல்  தரித்துக்கொள்ளக்கடவர்கள்.  {Ps  109:29}

 

கர்த்தரை  நான்  என்  வாயினால்  மிகவும்  துதித்து,  அநேகர்  நடுவிலே  அவரைப்  புகழுவேன்.  {Ps  109:30}

 

ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கிறவர்களினின்று  எளியவனுடைய  ஆத்துமாவை  இரட்சிக்கும்படி  அவர்  அவன்  வலதுபாரிசத்தில்  நிற்பார்.  {Ps  109:31}

 

கர்த்தர்  என்  ஆண்டவரை  நோக்கி:  நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்,  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்றார்.  {Ps  110:1}

 

கர்த்தர்  சீயோனிலிருந்து<Zion>  உமது  வல்லமையின்  செங்கோலை  அனுப்புவார்;  நீர்  உம்முடைய  சத்துருக்களின்  நடுவே  ஆளுகைசெய்யும்.  {Ps  110:2}

 

உமது  பராக்கிரமத்தின்  நாளிலே  உம்முடைய  ஜனங்கள்  மனப்பூர்வமும்  பரிசுத்த  அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்;  விடியற்காலத்துக்  கர்ப்பத்தில்  பிறக்கும்  பனிக்குச்  சமானமாய்  உம்முடைய  யௌவன  ஜனம்  உமக்குப்  பிறக்கும்.  {Ps  110:3}

 

நீர்  மெல்கிசேதேக்கின்<Melchizedek>  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  கர்த்தர்  ஆணையிட்டார்;  மனம்  மாறாமலுமிருப்பார்.  {Ps  110:4}

 

உம்முடைய  வலதுபாரிசத்திலிருக்கிற  ஆண்டவர்,  தமது  கோபத்தின்  நாளிலே  ராஜாக்களை  வெட்டுவார்.  {Ps  110:5}

 

அவர்  ஜாதிகளுக்குள்  நியாயந்தீர்ப்பார்;  எல்லா  இடங்களையும்  பிரேதங்களால்  நிரப்புவார்;  விஸ்தாரமான  தேசங்களின்மேல்  தலைவர்களாயிருக்கிறவர்களை  நொறுக்கிப்போடுவார்.  {Ps  110:6}

 

வழியிலே  அவர்  நதியில்  குடிப்பார்;  ஆகையால்  அவர்  தமது  தலையை  எடுப்பார்.  {Ps  110:7}

 

அல்லேலூயா<Alleluia>,  செம்மையானவர்களுடைய  சங்கத்திலும்  சபையிலும்  கர்த்தரை  முழு  இருதயத்தோடும்  துதிப்பேன்.  {Ps  111:1}

 

கர்த்தரின்  செய்கைகள்  பெரியவைகளும்,  அவைகளில்  பிரியப்படுகிற  எல்லாராலும்  ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.  {Ps  111:2}

 

அவருடைய  செயல்  மகிமையும்  மகத்துவமுமுள்ளது,  அவருடைய  நீதி  என்றென்றைக்கும்  நிற்கும்.  {Ps  111:3}

 

அவர்  தம்முடைய  அதிசயமான  செய்கைகளை  நினைவுகூரும்படி  செய்தார்,  கர்த்தர்  இரக்கமும்  மனஉருக்கமுமுள்ளவர்.  {Ps  111:4}

 

தமக்குப்  பயந்தவர்களுக்கு  ஆகாரம்  கொடுத்தார்;  தமது  உடன்படிக்கையை  என்றென்றைக்கும்  நினைப்பார்.  {Ps  111:5}

 

ஜாதிகளின்  சுதந்தரத்தைத்  தமது  ஜனங்களுக்குக்  கொடுத்ததினால்,  தமது  கிரியைகளின்  பெலத்தை  அவர்களுக்குத்  தெரியப்படுத்தினார்.  {Ps  111:6}

 

அவருடைய  கரத்தின்  கிரியைகள்  சத்தியமும்  நியாயமுமானவைகள்;  அவருடைய  கட்டளைகளெல்லாம்  உண்மையானவைகள்.  {Ps  111:7}

 

அவைகள்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களுக்கும்  உறுதியானவைகள்,  அவைகள்  உண்மையும்  செம்மையுமாய்ச்  செய்யப்பட்டவைகள்.  {Ps  111:8}

 

அவர்  தமது  ஜனத்திற்கு  மீட்பை  அனுப்பி,  தமது  உடன்படிக்கையை  நித்திய  உடன்படிக்கையாகக்  கட்டளையிட்டார்;  அவருடைய  நாமம்  பரிசுத்தமும்  பயங்கரமுமானது.  {Ps  111:9}

 

கர்த்தருக்குப்  பயப்படுதலே  ஞானத்தின்  ஆரம்பம்;  அவருடைய  கற்பனைகளின்படி  செய்கிற  யாவருக்கும்  நற்புத்தியுண்டு;  அவர்  புகழ்ச்சி  என்றைக்கும்  நிற்கும்.  {Ps  111:10}

 

அல்லேலூயா<Alleluia>,  கர்த்தருக்குப்  பயந்து,  அவருடைய  கட்டளைகளில்  மிகவும்  பிரியமாயிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  112:1}

 

அவன்  சந்ததி  பூமியில்  பலத்திருக்கும்,  செம்மையானவர்களின்  வம்சம்  ஆசீர்வதிக்கப்படும்.  {Ps  112:2}

 

ஆஸ்தியும்  ஐசுவரியமும்  அவன்  வீட்டிலிருக்கும்;  அவனுடைய  நீதி  என்றைக்கும்  நிற்கும்.  {Ps  112:3}

 

செம்மையானவர்களுக்கு  இருளிலே  வெளிச்சம்  உதிக்கும்;  அவன்  இரக்கமும்  மனஉருக்கமும்  நீதியுமுள்ளவன்.  {Ps  112:4}

 

இரங்கிக்  கடன்கொடுத்து,  தன்  காரியங்களை  நியாயமானபடி  நடப்பிக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  {Ps  112:5}

 

அவன்  என்றென்றைக்கும்  அசைக்கப்படாதிருப்பான்;  நீதிமான்  நித்திய  கீர்த்தியுள்ளவன்.  {Ps  112:6}

 

துர்ச்செய்தியைக்  கேட்கிறதினால்  பயப்படான்;  அவன்  இருதயம்  கர்த்தரை  நம்பித்  திடனாயிருக்கும்.  {Ps  112:7}

 

அவன்  இருதயம்  உறுதியாயிருக்கும்;  அவன்  தன்  சத்துருக்களில்  சரிக்கட்டுதலைக்  காணுமட்டும்  பயப்படாதிருப்பான்.  {Ps  112:8}

 

வாரியிறைத்தான்,  ஏழைகளுக்குக்  கொடுத்தான்,  அவனுடைய  நீதி  என்றென்றைக்கும்  நிற்கும்;  அவன்  கொம்பு  மகிமையாய்  உயர்த்தப்படும்.  {Ps  112:9}

 

துன்மார்க்கன்  அதைக்  கண்டு  மனமடிவாகி,  தன்  பற்களைக்  கடித்துக்  கரைந்துபோவான்;  துன்மார்க்கருடைய  ஆசை  அழியும்.  {Ps  112:10}

 

அல்லேலூயா<Alleluia>,  கர்த்தருடைய  ஊழியக்காரரே,  துதியுங்கள்;  கர்த்தருடைய  நாமத்தைத்  துதியுங்கள்.  {Ps  113:1}

 

இதுமுதல்  என்றென்றைக்கும்  கர்த்தருடைய  நாமம்  ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.  {Ps  113:2}

 

சூரியன்  உதிக்கும்  திசைதொடங்கி  அது  அஸ்தமிக்கும்  திசைமட்டும்  கர்த்தருடைய  நாமம்  துதிக்கப்படுவதாக.  {Ps  113:3}

 

கர்த்தர்  எல்லா  ஜாதிகள்மேலும்  உயர்ந்தவர்;  அவருடைய  மகிமை  வானங்களுக்கு  மேலானது.  {Ps  113:4}

 

உன்னதங்களில்  வாசம்பண்ணுகிற  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்குச்  சமானமானவர்  யார்?  {Ps  113:5}

 

அவர்  வானத்திலும்  பூமியிலுமுள்ளவைகளைப்  பார்க்கும்படி  தம்மைத்  தாழ்த்துகிறார்.  {Ps  113:6}

 

அவர்  சிறியவனைப்  புழுதியிலிருந்து  தூக்கிவிடுகிறார்;  எளியவனைக்  குப்பையிலிருந்து  உயர்த்துகிறார்.  {Ps  113:7}

 

அவனைப்  பிரபுக்களோடும்,  தமது  ஜனத்தின்  அதிபதிகளோடும்  உட்காரப்பண்ணுகிறார்.  {Ps  113:8}

 

மலடியைச்  சந்தோஷமான  பிள்ளைத்தாய்ச்சியாக்கி,  வீட்டிலே  குடியிருக்கப்பண்ணுகிறார்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  113:9}

 

இஸ்ரவேல்<Israel>  எகிப்திலும்<Egypt>,  யாக்கோபின்<Jacob>  குடும்பம்  அந்நிய  பாஷைக்காரரான  ஜனத்திலுமிருந்து  புறப்பட்டபோது,  {Ps  114:1}

 

யூதா<Judah>  அவருக்குப்  பரிசுத்த  ஸ்தானமும்,  இஸ்ரவேல்<Israel>  அவருக்கு  ராஜ்யமுமாயிற்று.  {Ps  114:2}

 

கடல்  கண்டு  விலகி  ஓடிற்று;  யோர்தான்<Jordan>  பின்னிட்டுத்  திரும்பினது.  {Ps  114:3}

 

மலைகள்  ஆட்டுக்கடாக்களைப்போலவும்,  குன்றுகள்  ஆட்டுக்குட்டிகளைப்போலவும்  துள்ளினது.  {Ps  114:4}

 

கடலே,  நீ  விலகியோடுகிறதற்கும்;  யோர்தானே<Jordan>,  நீ  பின்னிட்டுத்  திரும்புகிறதற்கும்;  {Ps  114:5}

 

மலைகளே,  நீங்கள்  ஆட்டுக்கடாக்களைப்போலவும்;  குன்றுகளே,  நீங்கள்  ஆட்டுக்குட்டிகளைப்போலவும்  துள்ளுகிறதற்கும்,  உங்களுக்கு  என்ன  வந்தது?  {Ps  114:6}

 

பூமியே,  நீ  ஆண்டவருக்கு  முன்பாகவும்,  யாக்கோபுடைய<Jacob>  தேவனுக்கு  முன்பாகவும்  அதிரு.  {Ps  114:7}

 

அவர்  கன்மலையைத்  தண்ணீர்த்  தடாகமாகவும்,  கற்பாறையை  நீரூற்றுகளாகவும்  மாற்றுகிறார்.  {Ps  114:8}

 

எங்களுக்கு  அல்ல,  கர்த்தாவே,  எங்களுக்கு  அல்ல,  உமது  கிருபையினிமித்தமும்,  உமது  சத்தியத்தினிமித்தமும்,  உம்முடைய  நாமத்திற்கே  மகிமை  வரப்பண்ணும்.  {Ps  115:1}

 

அவர்களுடைய  தேவன்  இப்பொழுது  எங்கே  என்று  புறஜாதிகள்  சொல்வானேன்?  {Ps  115:2}

 

நம்முடைய  தேவன்  பரலோகத்தில்  இருக்கிறார்;  தமக்குச்  சித்தமான  யாவையும்  செய்கிறார்.  {Ps  115:3}

 

அவர்களுடைய  விக்கிரகங்கள்  வெள்ளியும்  பொன்னும்,  மனுஷருடைய  கைவேலையுமாயிருக்கிறது.  {Ps  115:4}

 

அவைகளுக்கு  வாயிருந்தும்  பேசாது;  அவைகளுக்குக்  கண்களிருந்தும்  காணாது.  {Ps  115:5}

 

அவைகளுக்குக்  காதுகளிருந்தும்  கேளாது;  அவைகளுக்கு  மூக்கிருந்தும்  முகராது.  {Ps  115:6}

 

அவைகளுக்குக்  கைகளிருந்தும்  தொடாது;  அவைகளுக்குக்  கால்களிருந்தும்  நடவாது;  தங்கள்  தொண்டையால்  சத்தமிடவும்  மாட்டாது.  {Ps  115:7}

 

அவைகளைப்  பண்ணுகிறவர்களும்,  அவைகளை  நம்புகிறவர்கள்  யாவரும்,  அவைகளைப்போலவே  இருக்கிறார்கள்.  {Ps  115:8}

 

இஸ்ரவேலே<Israel>,  கர்த்தரை  நம்பு;  அவரே  அவர்களுக்குத்  துணையும்  அவர்களுக்குக்  கேடகமுமாயிருக்கிறார்.  {Ps  115:9}

 

ஆரோன்<Aaron>  குடும்பத்தாரே,  கர்த்தரை  நம்புங்கள்;  அவரே  அவர்களுக்குத்  துணையும்  அவர்களுக்குக்  கேடகமுமாயிருக்கிறார்.  {Ps  115:10}

 

கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்களே,  கர்த்தரை  நம்புங்கள்;  அவரே  அவர்களுக்குத்  துணையும்  அவர்களுக்குக்  கேடகமுமாயிருக்கிறார்.  {Ps  115:11}

 

கர்த்தர்  நம்மை  நினைத்திருக்கிறார்,  அவர்  ஆசீர்வதிப்பார்;  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தாரை  ஆசீர்வதிப்பார்,  அவர்  ஆரோன்<Aaron>  குடும்பத்தாரை  ஆசீர்வதிப்பார்.  {Ps  115:12}

 

கர்த்தருக்குப்  பயப்படுகிற  பெரியோரையும்  சிறியோரையும்  ஆசீர்வதிப்பார்.  {Ps  115:13}

 

கர்த்தர்  உங்களையும்  உங்கள்  பிள்ளைகளையும்  வர்த்திக்கப்பண்ணுவார்.  {Ps  115:14}

 

வானத்தையும்  பூமியையும்  படைத்த  கர்த்தராலே  நீங்கள்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  {Ps  115:15}

 

வானங்கள்  கர்த்தருடையவைகள்;  பூமியையோ  மனுபுத்திரருக்குக்  கொடுத்தார்.  {Ps  115:16}

 

மரித்தவர்களும்  மவுனத்தில்  இறங்குகிற  அனைவரும்  கர்த்தரைத்  துதியார்கள்.  {Ps  115:17}

 

நாமோ,  இதுமுதல்  என்றென்றைக்கும்  கர்த்தரை  ஸ்தோத்திரிப்போம்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  115:18}

 

கர்த்தர்  என்  சத்தத்தையும்  என்  விண்ணப்பத்தையும்  கேட்டதினால்,  அவரில்  அன்புகூருகிறேன்.  {Ps  116:1}

 

அவர்  தமது  செவியை  எனக்குச்  சாய்த்தபடியால்,  நான்  உயிரோடிருக்குமளவும்  அவரைத்  தொழுதுகொள்ளுவேன்.  {Ps  116:2}

 

மரணக்கட்டுகள்  என்னைச்  சுற்றிக்கொண்டது,  பாதாள  இடுக்கண்கள்  என்னைப்  பிடித்தது;  இக்கட்டையும்  சஞ்சலத்தையும்  அடைந்தேன்.  {Ps  116:3}

 

அப்பொழுது  நான்  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டு:  கர்த்தாவே,  என்  ஆத்துமாவை  விடுவியும்  என்று  கெஞ்சினேன்.  {Ps  116:4}

 

கர்த்தர்  கிருபையும்  நீதியுமுள்ளவர்,  நம்முடைய  தேவன்  மனஉருக்கமானவர்.  {Ps  116:5}

 

கர்த்தர்  கபடற்றவர்களைக்  காக்கிறார்;  நான்  மெலிந்துபோனேன்,  அவர்  என்னை  இரட்சித்தார்.  {Ps  116:6}

 

என்  ஆத்துமாவே,  கர்த்தர்  உனக்கு  நன்மை  செய்தபடியால்,  நீ  உன்  இளைப்பாறுதலுக்குத்  திரும்பு.  {Ps  116:7}

 

என்  ஆத்துமாவை  மரணத்துக்கும்,  என்  கண்ணைக்  கண்ணீருக்கும்,  என்  காலை  இடறுதலுக்கும்  தப்புவித்தீர்.  {Ps  116:8}

 

நான்  கர்த்தருக்கு  முன்பாக  ஜீவனுள்ளோர்  தேசத்திலே  நடப்பேன்.  {Ps  116:9}

 

விசுவாசித்தேன்,  ஆகையால்  பேசுகிறேன்;  நான்  மிகுதியும்  வருத்தப்பட்டேன்.  {Ps  116:10}

 

எந்த  மனுஷனும்  பொய்யன்  என்று  என்  மனக்கலக்கத்திலே  சொன்னேன்.  {Ps  116:11}

 

கர்த்தர்  எனக்குச்  செய்த  எல்லா  உபகாரங்களுக்காகவும்,  அவருக்கு  என்னத்தைச்  செலுத்துவேன்.  {Ps  116:12}

 

இரட்சிப்பின்  பாத்திரத்தை  எடுத்துக்கொண்டு,  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவேன்.  {Ps  116:13}

 

நான்  கர்த்தருக்குச்  செய்த  பொருத்தனைகளை  அவருடைய  ஜனங்களெல்லாருக்கு  முன்பாகவும்  செலுத்துவேன்.  {Ps  116:14}

 

கர்த்தருடைய  பரிசுத்தவான்களின்  மரணம்  அவர்  பார்வைக்கு  அருமையானது.  {Ps  116:15}

 

கர்த்தாவே,  நான்  உமது  அடியேன்;  நான்  உமது  அடியாளின்  புத்திரனும்,  உமது  ஊழியக்காரனுமாயிருக்கிறேன்;  என்  கட்டுகளை  அவிழ்த்துவிட்டீர்.  {Ps  116:16}

 

நான்  உமக்கு  ஸ்தோத்திரபலியைச்  செலுத்தி,  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவேன்.  {Ps  116:17}

 

நான்  கர்த்தருக்குச்  செய்த  பொருத்தனைகளை  அவருடைய  ஜனங்களெல்லாருக்கு  முன்பாகவும்,  {Ps  116:18}

 

கர்த்தருடைய  ஆலயத்தின்  பிராகாரங்களிலும்,  எருசலேமே<Jerusalem>  உன்  நடுவிலும்  நிறைவேற்றுவேன்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  116:19}

 

ஜாதிகளே,  எல்லாரும்  கர்த்தரைத்  துதியுங்கள்;  ஜனங்களே,  எல்லாரும்  அவரைப்  போற்றுங்கள்.  {Ps  117:1}

 

அவர்  நம்மேல்  வைத்த  கிருபை  பெரியது;  கர்த்தரின்  உண்மை  என்றென்றைக்குமுள்ளது.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  117:2}

 

கர்த்தரைத்  துதியுங்கள்,  அவர்  நல்லவர்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  118:1}

 

அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று  இஸ்ரவேல்<Israel>  சொல்வதாக.  {Ps  118:2}

 

அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று,  ஆரோனின்<Aaron>  குடும்பத்தார்  சொல்வார்களாக.  {Ps  118:3}

 

அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று,  கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்கள்  சொல்வார்களாக.  {Ps  118:4}

 

நெருக்கத்திலிருந்து  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டேன்,  கர்த்தர்  என்னைக்  கேட்டருளி  விசாலத்திலே  வைத்தார்.  {Ps  118:5}

 

கர்த்தர்  என்  பட்சத்தில்  இருக்கிறார்,  நான்  பயப்படேன்;  மனுஷன்  எனக்கு  என்னசெய்வான்?  {Ps  118:6}

 

எனக்கு  அநுகூலம்  பண்ணுகிறவர்கள்  நடுவில்  கர்த்தர்  என்  பட்சத்தில்  இருக்கிறார்;  என்  சத்துருக்களில்  சரிக்கட்டுதலைக்  காண்பேன்.  {Ps  118:7}

 

மனுஷனை  நம்புவதைப்பார்க்கிலும்,  கர்த்தர்  பேரில்  பற்றுதலாயிருப்பதே  நலம்.  {Ps  118:8}

 

பிரபுக்களை  நம்புவதைப்பார்க்கிலும்,  கர்த்தர்  பேரில்  பற்றுதலாயிருப்பதே  நலம்.  {Ps  118:9}

 

எல்லா  ஜாதியாரும்  என்னை  வளைந்துகொள்ளுகிறார்கள்;  கர்த்தருடைய  நாமத்தினால்  அவர்களைச்  சங்கரிப்பேன்.  {Ps  118:10}

 

என்னைச்  சுற்றிலும்  வளைந்துகொள்ளுகிறார்கள்;  கர்த்தருடைய  நாமத்தினால்  அவர்களைச்  சங்கரிப்பேன்.  {Ps  118:11}

 

தேனீக்களைப்போல  என்னை  வளைந்துகொள்ளுகிறார்கள்;  முள்ளில்  பற்றின  நெருப்பைப்போல  அணைந்து  போவார்கள்;  கர்த்தருடைய  நாமத்தினால்  அவர்களைச்  சங்கரிப்பேன்.  {Ps  118:12}

 

நான்  விழும்படி  நீ  என்னைத்  தள்ளினாய்;  கர்த்தரோ  எனக்கு  உதவிசெய்தார்.  {Ps  118:13}

 

கர்த்தர்  என்  பெலனும்,  என்  கீதமுமானவர்;  அவர்  எனக்கு  இரட்சிப்புமானார்.  {Ps  118:14}

 

நீதிமான்களுடைய  கூடாரங்களில்  இரட்சிப்பின்  கெம்பீரசத்தம்  உண்டு;  கர்த்தரின்  வலதுகரம்  பராக்கிரமஞ்செய்யும்.  {Ps  118:15}

 

கர்த்தரின்  வலதுகரம்  உயர்ந்திருக்கிறது;  கர்த்தரின்  வலதுகரம்  பராக்கிரமஞ்செய்யும்.  {Ps  118:16}

 

நான்  சாவாமல்,  பிழைத்திருந்து,  கர்த்தருடைய  செய்கைகளை  விவரிப்பேன்.  {Ps  118:17}

 

கர்த்தர்  என்னை  வெகுவாய்த்  தண்டித்தும்,  என்னைச்  சாவுக்கு  ஒப்புக்கொடுக்கவில்லை.  {Ps  118:18}

 

நீதியின்  வாசல்களைத்  திறவுங்கள்;  நான்  அவைகளுக்குள்  பிரவேசித்துக்  கர்த்தரைத்  துதிப்பேன்.  {Ps  118:19}

 

கர்த்தரின்  வாசல்  இதுவே;  நீதிமான்கள்  இதற்குள்  பிரவேசிப்பார்கள்.  {Ps  118:20}

 

நீர்  எனக்குச்  செவிகொடுத்து,  எனக்கு  இரட்சிப்பாயிருந்தபடியால்,  நான்  உம்மைத்  துதிப்பேன்.  {Ps  118:21}

 

வீடுகட்டுகிறவர்கள்  ஆகாதென்று  தள்ளின  கல்லே,  மூலைக்குத்  தலைக்கல்லாயிற்று.  {Ps  118:22}

 

அது  கர்த்தராலே  ஆயிற்று,  அது  நம்முடைய  கண்களுக்கு  ஆச்சரியமாயிருக்கிறது.  {Ps  118:23}

 

இது  கர்த்தர்  உண்டுபண்ணின  நாள்;  இதிலே  களிகூர்ந்து  மகிழக்கடவோம்.  {Ps  118:24}

 

கர்த்தாவே,  இரட்சியும்;  கர்த்தாவே,  காரியத்தை  வாய்க்கப்பண்ணும்.  {Ps  118:25}

 

கர்த்தருடைய  நாமத்தினாலே  வருகிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  உங்களை  ஆசீர்வதிக்கிறோம்.  {Ps  118:26}

 

கர்த்தர்  நம்மைப்  பிரகாசிப்பிக்கிற  தேவனாயிருக்கிறார்;  பண்டிகைப்பலியைக்  கொண்டுபோய்ப்  பலிபீடத்தின்  கொம்புகளில்  கயிறுகளால்  கட்டுங்கள்.  {Ps  118:27}

 

நீர்  என்  தேவன்,  நான்  உம்மைத்  துதிப்பேன்;  நீர்  என்  தேவன்,  நான்  உம்மை  உயர்த்துவேன்.  {Ps  118:28}

 

கர்த்தரைத்  துதியுங்கள்,  அவர்  நல்லவர்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  118:29}

 

(ஆலேப்<ALEPH>.)  கர்த்தருடைய  வேதத்தின்படி  நடக்கிற  உத்தம  மார்க்கத்தார்  பாக்கியவான்கள்.  {Ps  119:1}

 

அவருடைய  சாட்சிகளைக்  கைக்கொண்டு,  அவரை  முழு  இருதயத்தோடும்  தேடுகிறவர்கள்  பாக்கியவான்கள்.  {Ps  119:2}

 

அவர்கள்  அநியாயம்  செய்வதில்லை;  அவருடைய  வழிகளில்  நடக்கிறார்கள்.  {Ps  119:3}

 

உமது  கட்டளைகளை  நாங்கள்  கருத்தாய்க்  கைக்கொள்ளும்படி  நீர்  கற்பித்தீர்.  {Ps  119:4}

 

உமது  பிரமாணங்களைக்  கைக்கொள்ளும்படி,  என்  நடைகள்  ஸ்திரப்பட்டால்  நலமாயிருக்கும்.  {Ps  119:5}

 

நான்  உம்முடைய  கற்பனைகளையெல்லாம்  கண்ணோக்கும்போது,  வெட்கப்பட்டுப்போவதில்லை.  {Ps  119:6}

 

உம்முடைய  நீதிநியாயங்களை  நான்  கற்றுக்கொள்ளும்போது,  செம்மையான  இருதயத்தால்  உம்மைத்  துதிப்பேன்.  {Ps  119:7}

 

உமது  பிரமாணங்களைக்  கைக்கொள்ளுவேன்;  முற்றிலும்  என்னைக்  கைவிடாதேயும்.  {Ps  119:8}

 

(பேத்<BETH>.)  வாலிபன்  தன்  வழியை  எதினால்  சுத்தம்பண்ணுவான்?  உமது  வசனத்தின்படி  தன்னைக்  காத்துக்கொள்ளுகிறதினால்தானே.  {Ps  119:9}

 

என்  முழு  இருதயத்தோடும்  உம்மைத்  தேடுகிறேன்,  என்னை  உமது  கற்பனைகளைவிட்டு  வழிதப்பவிடாதேயும்.  {Ps  119:10}

 

நான்  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்யாதபடிக்கு,  உமது  வாக்கை  என்னிருதயத்தில்  வைத்து  வைத்தேன்.  {Ps  119:11}

 

கர்த்தாவே,  நீர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;  உம்முடைய  பிரமாணங்களை  எனக்குப்  போதியும்.  {Ps  119:12}

 

உம்முடைய  வாக்கின்  நியாயத்தீர்ப்புகளையெல்லாம்  என்  உதடுகளால்  விவரித்திருக்கிறேன்.  {Ps  119:13}

 

திரளான  செல்வத்தில்  களிகூருவதுபோல,  நான்  உமது  சாட்சிகளின்  வழியில்  களிகூருகிறேன்.  {Ps  119:14}

 

உமது  கட்டளைகளைத்  தியானித்து,  உமது  வழிகளைக்  கண்ணோக்குகிறேன்.  {Ps  119:15}

 

உமது  பிரமாணங்களில்  மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்;  உமது  வசனத்தை  மறவேன்.  {Ps  119:16}

 

(கிமெல்<GIMEL>.)  உமது  அடியேனுக்கு  அனுகூலமாயிரும்;  அப்பொழுது  நான்  பிழைத்து,  உமது  வசனத்தைக்  கைக்கொள்ளுவேன்.  {Ps  119:17}

 

உமது  வேதத்திலுள்ள  அதிசயங்களை  நான்  பார்க்கும்படிக்கு,  என்  கண்களைத்  திறந்தருளும்.  {Ps  119:18}

 

பூமியிலே  நான்  பரதேசி;  உமது  கற்பனைகளை  எனக்கு  மறையாதேயும்.  {Ps  119:19}

 

உமது  நியாயங்கள்மேல்  என்  ஆத்துமா  எக்காலமும்  வைத்திருக்கிற  வாஞ்சையினால்  தொய்ந்துபோகிறது.  {Ps  119:20}

 

உமது  கற்பனைகளை  விட்டு  வழிவிலகின  சபிக்கப்பட்ட  அகங்காரிகளை  நீர்  கடிந்துகொள்ளுகிறீர்.  {Ps  119:21}

 

நிந்தையையும்  அவமானத்தையும்  என்னை  விட்டகற்றும்;  நான்  உம்முடைய  சாட்சிகளைக்  கைக்கொள்ளுகிறேன்.  {Ps  119:22}

 

பிரபுக்களும்  உட்கார்ந்து  எனக்கு  விரோதமாய்ப்  பேசிக்கொள்ளுகிறார்கள்;  உமது  அடியேனோ,  உமது  பிரமாணங்களைத்  தியானிக்கிறேன்.  {Ps  119:23}

 

உம்முடைய  சாட்சிகள்  எனக்கு  இன்பமும்,  என்  ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.  {Ps  119:24}

 

(டாலெத்<DALETH>.)  என்  ஆத்துமா  மண்ணோடு  ஒட்டிக்கொண்டிருக்கிறது;  உமது  வசனத்தின்படி  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:25}

 

என்  வழிகளை  நான்  உமக்கு  விவரித்துக்  காட்டினபோது  எனக்குச்  செவிகொடுத்தீர்;  உமது  பிரமாணங்களை  எனக்குப்  போதியும்.  {Ps  119:26}

 

உமது  கட்டளைகளின்  வழியை  எனக்கு  உணர்த்தியருளும்;  அப்பொழுது  உமது  அதிசயங்களைத்  தியானிப்பேன்.  {Ps  119:27}

 

சஞ்சலத்தால்  என்  ஆத்துமா  கரைந்துபோகிறது;  உமது  வசனத்தின்படி  என்னை  எடுத்து  நிறுத்தும்.  {Ps  119:28}

 

பொய்வழியை  என்னைவிட்டு  விலக்கி,  உம்முடைய  வேதத்தை  எனக்கு  அருள்செய்யும்.  {Ps  119:29}

 

மெய்வழியை  நான்  தெரிந்துகொண்டு,  உம்முடைய  நியாயங்களை  எனக்கு  முன்பாக  நிறுத்தினேன்.  {Ps  119:30}

 

உமது  சாட்சிகள்மேல்  பற்றுதலாயிருக்கிறேன்;  கர்த்தாவே,  என்னை  வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.  {Ps  119:31}

 

நீர்  என்  இருதயத்தை  விசாலமாக்கும்போது,  நான்  உமது  கற்பனைகளின்  வழியாக  ஓடுவேன்.  {Ps  119:32}

 

(<HE>.)  கர்த்தாவே,  உமது  பிரமாணங்களின்  வழியை  எனக்குப்  போதியும்;  முடிவுபரியந்தம்  நான்  அதைக்  காத்துக்கொள்ளுவேன்.  {Ps  119:33}

 

எனக்கு  உணர்வைத்  தாரும்;  அப்பொழுது  நான்  உமது  வேதத்தைப்  பற்றிக்கொண்டு,  என்  முழு  இருதயத்தோடும்  அதைக்  கைக்கொள்ளுவேன்.  {Ps  119:34}

 

உமது  கற்பனைகளின்  பாதையில்  என்னை  நடத்தும்;  நான்  அதில்  பிரியமாயிருக்கிறேன்.  {Ps  119:35}

 

என்  இருதயம்  பொருளாசையைச்  சாராமல்,  உமது  சாட்சிகளைச்  சாரும்படி  செய்யும்.  {Ps  119:36}

 

மாயையைப்  பாராதபடி  நீர்  என்  கண்களை  விலக்கி,  உமது  வழிகளில்  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:37}

 

உமக்குப்  பயப்படுகிறதற்கு  ஏற்ற  உமது  வாக்கை  உமது  அடியேனுக்கு  உறுதிப்படுத்தும்.  {Ps  119:38}

 

நான்  அஞ்சுகிற  நிந்தையை  விலக்கியருளும்;  உம்முடைய  நியாயத்தீர்ப்புகள்  நல்லவைகள்.  {Ps  119:39}

 

இதோ,  உம்முடைய  கட்டளைகள்மேல்  வாஞ்சையாயிருக்கிறேன்;  உமது  நீதியால்  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:40}

 

(வௌ<VAU>.)  கர்த்தாவே,  உம்முடைய  வாக்கின்படி,  உமது  தயவும்  உமது  இரட்சிப்பும்  எனக்கு  வருவதாக.  {Ps  119:41}

 

அப்பொழுது  என்னை  நிந்திக்கிறவனுக்கு  உத்தரவு  சொல்லுவேன்;  உம்முடைய  வசனத்தை  நம்பியிருக்கிறேன்.  {Ps  119:42}

 

சத்திய  வசனம்  முற்றிலும்  என்  வாயினின்று  நீங்கவிடாதேயும்;  உம்முடைய  நியாயத்தீர்ப்புகளுக்குக்  காத்திருக்கிறேன்.  {Ps  119:43}

 

நான்  எப்பொழுதும்  என்றைக்கும்  உமது  வேதத்தைக்  காத்துக்கொள்ளுவேன்.  {Ps  119:44}

 

நான்  உம்முடைய  கட்டளைகளை  ஆராய்கிறபடியால்,  விசாலத்திலே  நடப்பேன்.  {Ps  119:45}

 

நான்  உம்முடைய  சாட்சிகளைக்குறித்து,  ராஜாக்களுக்கு  முன்பாகவும்  வெட்கப்படாமல்  பேசுவேன்.  {Ps  119:46}

 

நான்  பிரியப்படுகிற  உமது  கற்பனைகளின்பேரில்  மனமகிழ்ச்சியாயிருப்பேன்.  {Ps  119:47}

 

நான்  பிரியப்படுகிற  உமது  கற்பனைகளுக்குக்  கையெடுப்பேன்,  உமது  பிரமாணங்களைத்  தியானிப்பேன்.  {Ps  119:48}

 

(சாயீன்<ZAIN>.)  நீர்  என்னை  நம்பப்பண்ணின  வசனத்தை  உமது  அடியேனுக்காக  நினைத்தருளும்.  {Ps  119:49}

 

அதுவே  என்  சிறுமையில்  எனக்கு  ஆறுதல்,  உம்முடைய  வாக்கு  என்னை  உயிர்ப்பித்தது.  {Ps  119:50}

 

அகந்தைக்காரர்  என்னை  மிகவும்  பரியாசம்பண்ணியும்,  நான்  உமது  வேதத்தைவிட்டு  விலகினதில்லை.  {Ps  119:51}

 

கர்த்தாவே,  ஆதிமுதலான  உமது  நியாயத்தீர்ப்புகளை  நான்  நினைத்து  என்னைத்  தேற்றுகிறேன்.  {Ps  119:52}

 

உமது  வேதத்தை  விட்டு  விலகுகிற  துன்மார்க்கர்நிமித்தம்  நடுக்கம்  என்னைப்  பிடித்தது.  {Ps  119:53}

 

நான்  பரதேசியாய்த்  தங்கும்  வீட்டிலே  உமது  பிரமாணங்கள்  எனக்குக்  கீதங்களாயின.  {Ps  119:54}

 

கர்த்தாவே,  இராக்காலத்தில்  உமது  நாமத்தை  நினைத்து,  உமது  வேதத்தைக்  கைக்கொள்ளுகிறேன்.  {Ps  119:55}

 

நான்  உமது  கட்டளைகளைக்  கைக்கொண்டபடியினால்,  இது  எனக்குக்  கிடைத்தது.  {Ps  119:56}

 

(கேத்<CHETH>.)  கர்த்தாவே,  நீரே  என்  பங்கு;  நான்  உமது  வசனங்களைக்  கைக்கொள்ளுவேன்  என்றேன்.  {Ps  119:57}

 

முழு  இருதயத்தோடும்  உம்முடைய  தயவுக்காகக்  கெஞ்சுகிறேன்;  உமது  வாக்கின்படி  எனக்கு  இரங்கும்.  {Ps  119:58}

 

என்  வழிகளைச்  சிந்தித்துக்கொண்டு,  என்  கால்களை  உம்முடைய  சாட்சிகளுக்கு  நேராகத்  திருப்பினேன்.  {Ps  119:59}

 

உமது  கற்பனைகளைக்  கைக்கொள்ளும்படி,  நான்  தாமதியாமல்  தீவிரித்தேன்.  {Ps  119:60}

 

துன்மார்க்கரின்  கூட்டங்கள்  என்னைக்  கொள்ளையிட்டும்,  உம்முடைய  வேதத்தை  நான்  மறக்கவில்லை.  {Ps  119:61}

 

உமது  நீதியான  நியாயத்தீர்ப்புகளினிமித்தம்,  உம்மைத்  துதிக்கும்படி  பாதிராத்திரியில்  எழுந்திருப்பேன்.  {Ps  119:62}

 

உமக்குப்  பயந்து,  உமது  கட்டளைகளைக்  கைக்கொள்ளுகிற  அனைவருக்கும்  நான்  தோழன்.  {Ps  119:63}

 

கர்த்தாவே,  பூமி  உமது  கிருபையினால்  நிறைந்திருக்கிறது;  உமது  பிரமாணங்களை  எனக்குப்  போதியும்.  {Ps  119:64}

 

(தேத்<TETH>.)  கர்த்தாவே,  உமது  வசனத்தின்படி  உமது  அடியேனை  நன்றாய்  நடத்தினீர்.  {Ps  119:65}

 

உத்தம  நிதானிப்பையும்  அறிவையும்  எனக்குப்  போதித்தருளும்,  உம்முடைய  கற்பனைகளின்பேரில்  விசுவாசமாயிருக்கிறேன்.  {Ps  119:66}

 

நான்  உபத்திரவப்படுவதற்கு  முன்  வழிதப்பி  நடந்தேன்;  இப்பொழுதோ  உம்முடைய  வார்த்தையைக்  காத்து  நடக்கிறேன்.  {Ps  119:67}

 

தேவரீர்  நல்லவரும்,  நன்மை  செய்கிறவருமாயிருக்கிறீர்;  உமது  பிரமாணங்களை  எனக்குப்  போதியும்.  {Ps  119:68}

 

அகங்காரிகள்  எனக்கு  விரோதமாய்ப்  பொய்களைப்  பிணைக்கிறார்கள்;  நானோ,  முழு  இருதயத்தோடும்  உம்முடைய  கட்டளைகளைக்  கைக்கொள்ளுவேன்.  {Ps  119:69}

 

அவர்கள்  இருதயம்  நிணந்துன்னிக்  கொழுத்திருக்கிறது;  நானோ,  உம்முடைய  வேதத்தில்  மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.  {Ps  119:70}

 

நான்  உபத்திரவப்பட்டது  எனக்கு  நல்லது;  அதினால்  உமது  பிரமாணங்களைக்  கற்றுக்கொள்ளுகிறேன்.  {Ps  119:71}

 

அநேகமாயிரம்  பொன்  வெள்ளியைப்பார்க்கிலும்,  நீர்  விளம்பின  வேதமே  எனக்கு  நலம்.  {Ps  119:72}

 

(யோட்<JOD>.)  உம்முடைய  கரங்கள்  என்னை  உண்டாக்கி,  என்னை  உருவாக்கிற்று;  உம்முடைய  கற்பனைகளைக்  கற்றுக்கொள்ள  என்னை  உணர்வுள்ளவனாக்கும்.  {Ps  119:73}

 

நான்  உம்முடைய  வசனத்திற்குக்  காத்திருக்கிறபடியால்,  உமக்குப்  பயந்தவர்கள்  என்னைக்  கண்டு  சந்தோஷப்படுவார்கள்.  {Ps  119:74}

 

கர்த்தாவே,  உமது  நியாயத்தீர்ப்புகள்  நீதியுள்ளதென்றும்,  உண்மையின்படி  என்னை  உபத்திரவப்படுத்தினீரென்றும்  அறிவேன்.  {Ps  119:75}

 

நீர்  உமது  அடியேனுக்குக்  கொடுத்த  உமது  வாக்கின்படி,  உமது  கிருபை  என்னைத்  தேற்றுவதாக.  {Ps  119:76}

 

நான்  பிழைத்திருக்கும்படிக்கு  உமது  இரக்கங்கள்  எனக்குக்  கிடைப்பதாக;  உம்முடைய  வேதம்  என்  மனமகிழ்ச்சி.  {Ps  119:77}

 

அகங்காரிகள்  என்னைப்  பொய்களினால்  கெடுக்கப்  பார்த்தபடியால்  வெட்கப்பட்டுப்போவார்களாக;  நானோ  உமது  கட்டளைகளைத்  தியானிப்பேன்.  {Ps  119:78}

 

உமக்குப்  பயந்து,  உமது  சாட்சிகளை  அறிந்திருக்கிறவர்கள்  என்னண்டைக்குத்  திரும்புவார்களாக.  {Ps  119:79}

 

நான்  வெட்கப்பட்டுப்  போகாதபடிக்கு,  என்  இருதயம்  உமது  பிரமாணங்களில்  உத்தமமாயிருக்கக்கடவது.  {Ps  119:80}

 

(கப்<CAPH>.)  உம்முடைய  இரட்சிப்புக்கு  என்  ஆத்துமா  தவிக்கிறது;  உம்முடைய  வசனத்துக்குக்  காத்திருக்கிறேன்.  {Ps  119:81}

 

எப்பொழுது  என்னைத்  தேற்றுவீர்  என்று,  உம்முடைய  வாக்கின்மேல்  நோக்கமாய்  என்  கண்கள்  பூத்துப்போகிறது.  {Ps  119:82}

 

புகையிலுள்ள  துருத்தியைப்போலானேன்;  உமது  பிரமாணங்களையோ  மறவேன்.  {Ps  119:83}

 

உமது  அடியேனுடைய  நாட்கள்  எம்மாத்திரம்?  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்களுக்கு  நீர்  எப்பொழுது  நியாயத்தீர்ப்புச்  செய்வீர்?  {Ps  119:84}

 

உம்முடைய  வேதத்துக்கு  விரோதமாய்  அகங்காரிகள்  எனக்குக்  குழிகளை  வெட்டினார்கள்.  {Ps  119:85}

 

உம்முடைய  கற்பனைகளெல்லாம்  உண்மையாயிருக்கிறது;  அநியாயமாய்  என்னைத்  துன்பப்படுத்துகிறார்கள்;  நீர்  எனக்குச்  சகாயம்பண்ணும்.  {Ps  119:86}

 

அவர்கள்  என்னைப்  பூமியிலிராமல்  நீக்கிவிடச்  சற்றே  தப்பிற்று;  ஆனாலும்  நான்  உமது  கட்டளைகளை  விட்டுவிடவில்லை.  {Ps  119:87}

 

உமது  கிருபையின்படியே  என்னை  உயிர்ப்பியும்;  அப்பொழுது  நான்  உம்முடைய  வாக்கின்  சாட்சியைக்  காத்து  நடப்பேன்.  {Ps  119:88}

 

(லாமேட்<LAMED>.)  கர்த்தாவே,  உமது  வசனம்  என்றென்றைக்கும்  வானங்களில்  நிலைத்திருக்கிறது.  {Ps  119:89}

 

உம்முடைய  உண்மை  தலைமுறை  தலைமுறையாக  இருக்கும்;  பூமியை  உறுதிப்படுத்தினீர்,  அது  நிலைத்திருக்கிறது.  {Ps  119:90}

 

உம்முடைய  பிரமாணங்களை  நிறைவேற்றும்படி  அவைகள்  இந்நாள்வரைக்கும்  நிற்கிறது;  சமஸ்தமும்  உம்மைச்  சேவிக்கும்.  {Ps  119:91}

 

உமது  வேதம்  என்  மனமகிழ்ச்சியாயிராதிருந்தால்,  என்  துக்கத்திலே  அழிந்துபோயிருப்பேன்.  {Ps  119:92}

 

நான்  ஒருபோதும்  உம்முடைய  கட்டளைகளை  மறக்கமாட்டேன்;  அவைகளால்  நீர்  என்னை  உயிர்ப்பித்தீர்.  {Ps  119:93}

 

நான்  உம்முடையவன்,  என்னை  இரட்சியும்;  உம்முடைய  கட்டளைகளை  ஆராய்கிறேன்.  {Ps  119:94}

 

துன்மார்க்கர்  என்னை  அழிக்கக்  காத்திருக்கிறார்கள்;  நான்  உமது  சாட்சிகளைச்  சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.  {Ps  119:95}

 

சகல  சம்பூரணத்திற்கும்  எல்லையைக்  கண்டேன்;  உம்முடைய  கற்பனையோ  மகா  விஸ்தாரம்.  {Ps  119:96}

 

(மேம்<MEM>.)  உமது  வேதத்தில்  நான்  எவ்வளவு  பிரியமாயிருக்கிறேன்!  நாள்முழுதும்  அது  என்  தியானம்.  {Ps  119:97}

 

நீர்  உம்முடைய  கற்பனைகளைக்  கொண்டு  என்னை  என்  சத்துருக்களிலும்  அதிக  ஞானமுள்ளவனாக்குகிறீர்;  அவைகள்  என்றைக்கும்  என்னுடனே  இருக்கிறது.  {Ps  119:98}

 

உம்முடைய  சாட்சிகள்  என்  தியானமாயிருக்கிறபடியால்,  எனக்குப்  போதித்தவர்களெல்லாரிலும்  அறிவுள்ளவனாயிருக்கிறேன்.  {Ps  119:99}

 

உம்முடைய  கட்டளைகளை  நான்  கைக்கொண்டிருக்கிறபடியால்,  முதியோர்களைப்பார்க்கிலும்  ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.  {Ps  119:100}

 

உம்முடைய  வசனத்தை  நான்  காத்து  நடக்கும்படிக்கு,  சகல  பொல்லாத  வழிகளுக்கும்  என்  கால்களை  விலக்குகிறேன்.  {Ps  119:101}

 

நீர்  எனக்குப்  போதித்திருக்கிறபடியால்,  நான்  உம்முடைய  நியாயங்களை  விட்டு  விலகேன்.  {Ps  119:102}

 

உம்முடைய  வார்த்தைகள்  என்  நாவுக்கு  எவ்வளவு  இனிமையானவைகள்;  என்  வாய்க்கு  அவைகள்  தேனிலும்  மதுரமாயிருக்கும்.  {Ps  119:103}

 

உமது  கட்டளைகளால்  உணர்வடைந்தேன்,  ஆதலால்  எல்லாப்  பொய்வழிகளையும்  வெறுக்கிறேன்.  {Ps  119:104}

 

(நூன்<NUN>.)  உம்முடைய  வசனம்  என்  கால்களுக்குத்  தீபமும்,  என்  பாதைக்கு  வெளிச்சமுமாயிருக்கிறது.  {Ps  119:105}

 

உம்முடைய  நீதிநியாயங்களைக்  காத்து  நடப்பேன்  என்று  ஆணையிட்டேன்;  அதை  நிறைவேற்றுவேன்.  {Ps  119:106}

 

நான்  மிகவும்  உபத்திரவப்படுகிறேன்;  கர்த்தாவே,  உம்முடைய  வசனத்தின்படியே  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:107}

 

கர்த்தாவே,  என்  வாயின்  உற்சாகபலிகளை  நீர்  அங்கீகரித்து,  உமது  நியாயங்களை  எனக்குப்  போதித்தருளும்.  {Ps  119:108}

 

என்  பிராணன்  எப்பொழுதும்  என்  கையில்  இருக்கிறது;  ஆனாலும்  உம்முடைய  வேதத்தை  மறவேன்.  {Ps  119:109}

 

துன்மார்க்கர்  எனக்குக்  கண்ணிவைக்கிறார்கள்;  ஆனாலும்  நான்  உம்முடைய  கட்டளைகளை  விட்டு  வழி  தவறேன்.  {Ps  119:110}

 

உம்முடைய  சாட்சிகளை  நித்திய  சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன்,  அவைகளே  என்  இருதயத்தின்  மகிழ்ச்சி.  {Ps  119:111}

 

முடிவுபரியந்தம்  இடைவிடாமல்  உம்முடைய  பிரமாணங்களின்படி  செய்ய  என்  இருதயத்தைச்  சாய்த்தேன்.  {Ps  119:112}

 

(சாமெக்<SAMECH>.)  வீண்  சிந்தனைகளை  நான்  வெறுத்து,  உமது  வேதத்தில்  பிரியப்படுகிறேன்.  {Ps  119:113}

 

என்  மறைவிடமும்  என்  கேடகமும்  நீரே;  உம்முடைய  வசனத்துக்குக்  காத்திருக்கிறேன்.  {Ps  119:114}

 

பொல்லாதவர்களே,  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்;  என்  தேவனுடைய  கற்பனைகளை  நான்  கைக்கொள்ளுவேன்.  {Ps  119:115}

 

நான்  பிழைத்திருப்பதற்கு  உமது  வார்த்தையின்படி  என்னை  ஆதரித்தருளும்;  என்  நம்பிக்கை  விருதாவாய்ப்போக  என்னை  வெட்கத்திற்கு  உட்படுத்தாதேயும்.  {Ps  119:116}

 

என்னை  ஆதரித்தருளும்;  அப்பொழுது  நான்  இரட்சிக்கப்பட்டு,  எக்காலமும்  உம்முடைய  பிரமாணங்களின்பேரில்  நோக்கமாயிருப்பேன்.  {Ps  119:117}

 

உமது  பிரமாணங்களைவிட்டு  வழிவிலகுகிற  யாவரையும்  மிதித்துப்போடுகிறீர்;  அவர்களுடைய  உபாயம்  வெறும்  பொய்யே.  {Ps  119:118}

 

பூமியிலுள்ள  துன்மார்க்கர்  யாவரையும்  களிம்பைப்போல  அகற்றிவிடுகிறீர்;  ஆகையால்  உமது  சாட்சிகளில்  பிரியப்படுகிறேன்.  {Ps  119:119}

 

உமக்குப்  பயப்படும்  பயத்தால்  என்  உடம்பு  சிலிர்க்கிறது;  உமது  நியாயத்தீர்ப்புகளுக்குப்  பயப்படுகிறேன்.  {Ps  119:120}

 

(ஆயின்<AIN>.)  நியாயமும்  நீதியும்  செய்கிறேன்;  என்னை  ஒடுக்குகிறவர்களுக்கு  என்னை  ஒப்புக்கொடாதேயும்.  {Ps  119:121}

 

உமது  அடியேனுக்கு  நன்மையாகத்  துணைநில்லும்;  அகங்காரிகள்  என்னையொடுக்கவொட்டாதேயும்.  {Ps  119:122}

 

உமது  இரட்சிப்புக்கும்  உமது  நீதியின்  வார்த்தைக்கும்  காத்திருக்கிறதினால்  என்  கண்கள்  பூத்துப்போகிறது.  {Ps  119:123}

 

உமது  அடியேனை  உமது  கிருபையின்படியே  நடத்தி,  உமது  பிரமாணங்களை  எனக்குப்  போதியும்.  {Ps  119:124}

 

நான்  உமது  அடியேன்;  உம்முடைய  சாட்சிகளை  நான்  அறியும்படி  என்னை  உணர்வுள்ளவனாக்கும்.  {Ps  119:125}

 

நீதியைச்  செய்யக்  கர்த்தருக்கு  வேளைவந்தது;  அவர்கள்  உம்முடைய  நியாயப்பிரமாணத்தை  மீறினார்கள்.  {Ps  119:126}

 

ஆதலால்  நான்  பொன்னிலும்  பசும்பொன்னிலும்  அதிகமாய்  உமது  கற்பனைகளில்  பிரியப்படுகிறேன்.  {Ps  119:127}

 

எல்லாவற்றைப்பற்றியும்  நீர்  அருளின  எல்லாக்  கட்டளைகளும்  செம்மையென்று  எண்ணி,  சகல  பொய்வழிகளையும்  வெறுக்கிறேன்.  {Ps  119:128}

 

(பே<PE>.)  உம்முடைய  சாட்சிகள்  அதிசயமானவைகள்;  ஆகையால்  என்  ஆத்துமா  அவைகளைக்  கைக்கொள்ளும்.  {Ps  119:129}

 

உம்முடைய  வசனத்தின்  பிரசித்தம்  வெளிச்சம்  தந்து,  பேதைகளை  உணர்வுள்ளவர்களாக்கும்.  {Ps  119:130}

 

உம்முடைய  கற்பனைகளை  நான்  வாஞ்சிக்கிறபடியால்,  என்  வாயை  ஆவென்று  திறந்து  அவைகளுக்கு  ஏங்குகிறேன்.  {Ps  119:131}

 

உம்முடைய  நாமத்தை  நேசிக்கிறவர்களுக்கு  வழங்கும்  நியாயத்தின்படியே  என்னை  நோக்கிப்பார்த்து,  எனக்கு  இரங்கும்.  {Ps  119:132}

 

உம்முடைய  வார்த்தையிலே  என்  காலடிகளை  நிலைப்படுத்தி,  ஒரு  அநியாயமும்  என்னை  ஆளவொட்டாதேயும்.  {Ps  119:133}

 

மனுஷர்  செய்யும்  இடுக்கத்துக்கு  என்னை  விலக்கி  விடுவித்தருளும்;  அப்பொழுது  நான்  உம்முடைய  கட்டளைகளைக்  காத்துக்கொள்ளுவேன்.  {Ps  119:134}

 

உமது  அடியேன்மேல்  உமது  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணி,  உமது  பிரமாணங்களை  எனக்குப்  போதியும்.  {Ps  119:135}

 

உம்முடைய  வேதத்தை  மனுஷர்  காத்து  நடவாதபடியால்,  என்  கண்களிலிருந்து  நீர்த்தாரைகள்  ஓடுகிறது.  {Ps  119:136}

 

(த்சாடே<TZADDI>.)  கர்த்தாவே,  நீர்  நீதிபரர்,  உமது  நியாயத்தீர்ப்புகள்  செம்மையானவைகள்.  {Ps  119:137}

 

நீர்  கட்டளையிட்ட  சாட்சிகள்  நீதியும்,  மகா  உண்மையுமானவைகள்.  {Ps  119:138}

 

என்  சத்துருக்கள்  உம்முடைய  வசனங்களை  மறந்தபடியால்,  என்  பக்திவைராக்கியம்  என்னைப்  பட்சிக்கிறது.  {Ps  119:139}

 

உமது  வார்த்தை  மிகவும்  புடமிடப்பட்டது,  உமது  அடியேன்  அதில்  பிரியப்படுகிறேன்.  {Ps  119:140}

 

நான்  சிறியவனும்  அசட்டை  பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்;  ஆனாலும்  உமது  கட்டளைகளை  மறவேன்.  {Ps  119:141}

 

உம்முடைய  நீதி  நித்திய  நீதி,  உம்முடைய  வேதம்  சத்தியம்.  {Ps  119:142}

 

இக்கட்டும்  நெருக்கமும்  என்னைப்  பிடித்தது;  ஆனாலும்  உம்முடைய  கற்பனைகள்  என்  மனமகிழ்ச்சி.  {Ps  119:143}

 

உம்முடைய  சாட்சிகளின்  நீதி  என்றைக்கும்  நிற்கும்;  என்னை  உணர்வுள்ளவனாக்கும்,  அப்பொழுது  நான்  பிழைத்திருப்பேன்.  {Ps  119:144}

 

(கோப்<KOPH>.)  முழு  இருதயத்தோடும்  கூப்பிட்டேன்,  கர்த்தாவே,  என்  ஜெபத்தைக்  கேளும்;  உம்முடைய  பிரமாணங்களைக்  கைக்கொள்ளுவேன்.  {Ps  119:145}

 

உம்மை  நோக்கிக்  கூப்பிட்டேன்,  என்னை  இரட்சியும்;  அப்பொழுது  நான்  உம்முடைய  சாட்சிகளைக்  காத்துக்கொள்ளுவேன்.  {Ps  119:146}

 

அதிகாலையில்  நான்  எழுந்து  சத்தமிட்டேன்;  உம்முடைய  வசனத்துக்குக்  காத்திருக்கிறேன்.  {Ps  119:147}

 

உமது  வசனத்தைத்  தியானிக்கும்படி,  குறித்த  ஜாமங்களுக்கு  முன்னே  என்  கண்கள்  விழித்துக்கொள்ளும்.  {Ps  119:148}

 

உம்முடைய  கிருபையின்படி  என்  சத்தத்தைக்  கேளும்;  கர்த்தாவே,  உம்முடைய  நியாயத்தின்படி  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:149}

 

தீவினையைப்  பின்பற்றுகிறவர்கள்  சமீபிக்கிறார்கள்;  அவர்கள்  உம்முடைய  வேதத்துக்குத்  தூரமாயிருக்கிறார்கள்.  {Ps  119:150}

 

கர்த்தாவே,  நீர்  சமீபமாயிருக்கிறீர்;  உமது  கற்பனைகளெல்லாம்  உண்மை.  {Ps  119:151}

 

நீர்  உம்முடைய  சாட்சிகளை  என்றென்றைக்கும்  நிற்க  ஸ்தாபித்தீர்  என்பதை,  அவைகளால்  நான்  நெடுநாளாய்  அறிந்திருக்கிறேன்.  {Ps  119:152}

 

(ரேஷ்<RESH>.)  என்  உபத்திரவத்தைப்  பார்த்து,  என்னை  விடுவியும்;  உமது  வேதத்தை  மறவேன்.  {Ps  119:153}

 

எனக்காக  நீர்  வழக்காடி  என்னை  மீட்டுக்கொள்ளும்,  உம்முடைய  வார்த்தையின்படியே  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:154}

 

இரட்சிப்பு  துன்மார்க்கருக்குத்  தூரமாயிருக்கிறது,  அவர்கள்  உமது  பிரமாணங்களைத்  தேடார்கள்.  {Ps  119:155}

 

கர்த்தாவே,  உம்முடைய  இரக்கங்கள்  மிகுதியாயிருக்கிறது;  உமது  நியாயங்களின்படி  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:156}

 

என்னைத்  துன்பப்படுத்துகிறவர்களும்  என்னை  விரோதிக்கிறவர்களும்  அநேகர்;  ஆனாலும்  உம்முடைய  சாட்சிகளை  விட்டு  விலகேன்.  {Ps  119:157}

 

உமது  வசனத்தைக்  காத்துக்கொள்ளாத  துரோகிகளை  நான்  கண்டபோது,  எனக்கு  அருவருப்பாயிருந்தது.  {Ps  119:158}

 

இதோ,  உம்முடைய  கட்டளைகளை  நேசிக்கிறேன்;  கர்த்தாவே,  உமது  கிருபையின்படி  என்னை  உயிர்ப்பியும்.  {Ps  119:159}

 

உம்முடைய  வசனம்  சமூலமும்  சத்தியம்,  உம்முடைய  நீதி  நியாயமெல்லாம்  நித்தியம்.  {Ps  119:160}

 

(ஷீன்<SCHIN>.)  பிரபுக்கள்  காரணமில்லாமல்  என்னைத்  துன்பப்படுத்தினார்கள்,  ஆனாலும்  என்  இருதயம்  உமது  வசனத்திற்கே  பயப்படுகிறது.  {Ps  119:161}

 

மிகுந்த  கொள்ளையுடைமையைக்  கண்டுபிடிக்கிறவன்  மகிழுகிறதுபோல,  நான்  உமது  வார்த்தையின்பேரில்  மகிழுகிறேன்.  {Ps  119:162}

 

பொய்யைப்  பகைத்து  அருவருக்கிறேன்;  உம்முடைய  வேதத்தையோ  நேசிக்கிறேன்.  {Ps  119:163}

 

உமது  நீதிநியாயங்களினிமித்தம்,  ஒருநாளில்  ஏழுதரம்  உம்மைத்  துதிக்கிறேன்.  {Ps  119:164}

 

உம்முடைய  வேதத்தை  நேசிக்கிறவர்களுக்கு  மிகுந்த  சமாதானமுண்டு;  அவர்களுக்கு  இடறலில்லை.  {Ps  119:165}

 

கர்த்தாவே,  உம்முடைய  இரட்சிப்புக்கு  நான்  காத்திருந்து,  உம்முடைய  கற்பனைகளின்படி  செய்கிறேன்.  {Ps  119:166}

 

என்  ஆத்துமா  உமது  சாட்சிகளைக்  காக்கும்;  அவைகளை  நான்  மிகவும்  நேசிக்கிறேன்.  {Ps  119:167}

 

உமது  கட்டளைகளையும்  உமது  சாட்சிகளையும்  காத்து  நடக்கிறேன்;  என்  வழிகளெல்லாம்  உமக்கு  முன்பாக  இருக்கிறது.  {Ps  119:168}

 

(தௌ<TAU>.)  கர்த்தாவே,  என்  கூப்பிடுதல்  உமது  சந்நிதியில்  வருவதாக;  உமது  வசனத்தின்படியே  என்னை  உணர்வுள்ளவனாக்கும்.  {Ps  119:169}

 

என்  விண்ணப்பம்  உமது  சந்நிதியில்  வருவதாக;  உமது  வார்த்தையின்படி  என்னை  விடுவித்தருளும்.  {Ps  119:170}

 

உம்முடைய  பிரமாணங்களை  நீர்  எனக்குப்  போதிக்கும்போது,  என்  உதடுகள்  உமது  துதியைப்  பிரஸ்தாபப்படுத்தும்.  {Ps  119:171}

 

உமது  கற்பனைகளெல்லாம்  நீதியுள்ளவைகள்;  ஆதலால்,  என்  நாவு  உம்முடைய  வசனத்தை  விவரித்துச்சொல்லும்.  {Ps  119:172}

 

நான்  உம்முடைய  கட்டளைகளைத்  தெரிந்துகொண்டபடியால்,  உமது  கரம்  எனக்குத்  துணையாயிருப்பதாக.  {Ps  119:173}

 

கர்த்தாவே,  உம்முடைய  இரட்சிப்பின்மேல்  ஆவலாயிருக்கிறேன்;  உம்முடைய  வேதம்  என்  மனமகிழ்ச்சி.  {Ps  119:174}

 

என்  ஆத்துமா  பிழைத்திருந்து  உம்மைத்  துதிக்கக்கடவது;  உமது  நியாயத்தீர்ப்புகள்  எனக்கு  உதவியாயிருப்பதாக.  {Ps  119:175}

 

காணாமற்போன  ஆட்டைப்போல  வழிதப்பிப்போனேன்;  உமது  அடியேனைத்  தேடுவீராக;  உமது  கற்பனைகளை  நான்  மறவேன்.  {Ps  119:176}

 

என்  நெருக்கத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  அவர்  எனக்குச்  செவிகொடுத்தார்.  {Ps  120:1}

 

கர்த்தாவே,  பொய்  உதடுகளுக்கும்  கபடநாவுக்கும்  என்  ஆத்துமாவைத்  தப்புவியும்.  {Ps  120:2}

 

கபடநாவே,  உனக்கு  என்ன  கிடைக்கும்?  உனக்கு  என்ன  செய்யப்படும்?  {Ps  120:3}

 

பலவானுடைய  கூர்மையான  அம்புகளும்,  சூரைச்செடிகளை  எரிக்கும்  தழலுமே  கிடைக்கும்.  {Ps  120:4}

 

ஐயோ!  நான்  மேசேக்கிலே<Mesech>  சஞ்சரித்தது  போதும்,  கேதாரின்<Kedar>  கூடாரங்களண்டையிலே  குடியிருந்ததும்  போதும்!  {Ps  120:5}

 

சமாதானத்தைப்  பகைக்கிறவர்களிடத்தில்  என்  ஆத்துமா  குடியிருந்ததும்  போதும்!  {Ps  120:6}

 

நான்  சமாதானத்தை  நாடுகிறேன்;  அவர்களோ,  நான்  பேசும்போது  யுத்தத்துக்கு  எத்தனப்படுகிறார்கள்.  {Ps  120:7}

 

எனக்கு  ஒத்தாசை  வரும்  பர்வதங்களுக்கு  நேராக  என்  கண்களை  ஏறெடுக்கிறேன்.  {Ps  121:1}

 

வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  கர்த்தரிடத்திலிருந்து  எனக்கு  ஒத்தாசை  வரும்.  {Ps  121:2}

 

உன்  காலைத்  தள்ளாடவொட்டார்;  உன்னைக்  காக்கிறவர்  உறங்கார்.  {Ps  121:3}

 

இதோ,  இஸ்ரவேலைக்<Israel>  காக்கிறவர்  உறங்குவதுமில்லை  தூங்குகிறதுமில்லை.  {Ps  121:4}

 

கர்த்தர்  உன்னைக்  காக்கிறவர்;  கர்த்தர்  உன்  வலதுபக்கத்திலே  உனக்கு  நிழலாயிருக்கிறார்.  {Ps  121:5}

 

பகலிலே  வெயிலாகிலும்,  இரவிலே  நிலவாகிலும்  உன்னைச்  சேதப்படுத்துவதில்லை.  {Ps  121:6}

 

கர்த்தர்  உன்னை  எல்லாத்  தீங்குக்கும்  விலக்கிக்  காப்பார்;  அவர்  உன்  ஆத்துமாவைக்  காப்பார்.  {Ps  121:7}

 

கர்த்தர்  உன்  போக்கையும்  உன்  வரத்தையும்  இதுமுதற்கொண்டு  என்றைக்குங்  காப்பார்.  {Ps  121:8}

 

கர்த்தருடைய  ஆலயத்திற்குப்  போவோம்  வாருங்கள்  என்று  எனக்கு  அவர்கள்  சொன்னபோது  மகிழ்ச்சியாயிருந்தேன்.  {Ps  122:1}

 

எருசலேமே<Jerusalem>,  உன்  வாசல்களில்  எங்கள்  கால்கள்  நிற்கலாயிற்று.  {Ps  122:2}

 

எருசலேம்<Jerusalem>  இசைவிணைப்பான  நகரமாய்க்  கட்டப்பட்டிருக்கிறது.  {Ps  122:3}

 

அங்கே  இஸ்ரவேலுக்குச்<Israel>  சாட்சியாகக்  கர்த்தருடைய  ஜனங்களாகிய  கோத்திரங்கள்  கர்த்தரின்  நாமத்தை  ஸ்தோத்திரிப்பதற்குப்  போகும்.  {Ps  122:4}

 

அங்கே  தாவீதின்<David>  வம்சத்தாருடைய  சிங்காசனங்களாகிய  நியாயாசனங்கள்  வைக்கப்பட்டிருக்கிறது.  {Ps  122:5}

 

எருசலேமின்<Jerusalem>  சமாதானத்துக்காக  வேண்டிக்கொள்ளுங்கள்;  உன்னை  நேசிக்கிறவர்கள்  சுகித்திருப்பார்களாக.  {Ps  122:6}

 

உன்  அலங்கத்திற்குள்ளே  சமாதானமும்,  உன்  அரமனைகளுக்குள்ளே  சுகமும்  இருப்பதாக.  {Ps  122:7}

 

என்  சகோதரர்  நிமித்தமும்  என்  சிநேகிதர்  நிமித்தமும்,  உன்னில்  சமாதானம்  இருப்பதாக  என்பேன்.  {Ps  122:8}

 

எங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  ஆலயத்தினிமித்தம்  உனக்கு  நன்மையுண்டாகத்  தேடுவேன்.  {Ps  122:9}

 

பரலோகத்தில்  வாசமாயிருக்கிறவரே,  உம்மிடத்திற்கு  என்  கண்களை  ஏறெடுக்கிறேன்.  {Ps  123:1}

 

இதோ,  வேலைக்காரரின்  கண்கள்  தங்கள்  எஜமான்களின்  கையை  நோக்கியிருக்குமாப்போலவும்,  வேலைக்காரியின்  கண்கள்  தன்  எஜமாட்டியின்  கையை  நோக்கியிருக்குமாப்போலவும்,  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு  இரக்கஞ்செய்யும்வரைக்கும்,  எங்கள்  கண்கள்  அவரை  நோக்கியிருக்கிறது.  {Ps  123:2}

 

எங்களுக்கு  இரங்கும்  கர்த்தாவே,  எங்களுக்கு  இரங்கும்;  நிந்தனையினால்  மிகவும்  நிறைந்திருக்கிறோம்.  {Ps  123:3}

 

சுகஜீவிகளுடைய  நிந்தனையினாலும்,  அகங்காரிகளுடைய  இகழ்ச்சியினாலும்,  எங்கள்  ஆத்துமா  மிகவும்  நிறைந்திருக்கிறது.  {Ps  123:4}

 

மனுஷர்  நமக்கு  விரோதமாய்  எழும்பினபோது,  கர்த்தர்  நமது  பக்கத்திலிராவிட்டால்,  {Ps  124:1}

 

கர்த்தர்  தாமே  நமது  பக்கத்திலிராவிட்டால்,  {Ps  124:2}

 

அவர்கள்  கோபம்  நம்மேல்  எரிகையில்,  நம்மை  உயிரோடே  விழுங்கியிருப்பார்கள்.  {Ps  124:3}

 

அப்பொழுது  தண்ணீர்கள்  நம்மேல்  பாய்ந்து,  வெள்ளங்கள்  நமது  ஆத்துமாவின்மேல்  பெருகி,  {Ps  124:4}

 

கொந்தளிக்கும்  ஜலங்கள்  நமது  ஆத்துமாவின்மேல்  புரண்டுபோயிருக்கும்  என்று  இஸ்ரவேல்<Israel>  இப்பொழுது  சொல்வதாக.  {Ps  124:5}

 

நம்மை  அவர்களுடைய  பற்களுக்கு  இரையாக  ஒப்புக்கொடாதிருக்கிற  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  {Ps  124:6}

 

வேடருடைய  கண்ணிக்குத்  தப்பின  குருவியைப்போல  நம்முடைய  ஆத்துமா  தப்பிற்று,  கண்ணி  தெறித்தது,  நாம்  தப்பினோம்.  {Ps  124:7}

 

நம்முடைய  சகாயம்  வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  கர்த்தருடைய  நாமத்தில்  உள்ளது.  {Ps  124:8}

 

கர்த்தரை  நம்புகிறவர்கள்  என்றென்றைக்கும்  அசையாமல்  நிலைத்திருக்கும்  சீயோன்<Zion>  பர்வதத்தைப்போல்  இருப்பார்கள்.  {Ps  125:1}

 

பர்வதங்கள்  எருசலேமைச்<Jerusalem>  சுற்றிலும்  இருக்குமாப்போல்,  கர்த்தர்  இதுமுதல்  என்றென்றைக்கும்  தம்முடைய  ஜனத்தைச்  சுற்றிலும்  இருக்கிறார்.  {Ps  125:2}

 

நீதிமான்கள்  அநியாயத்திற்குத்  தங்கள்  கைகளை  நீட்டாதபடிக்கு,  ஆகாமியத்தின்  கொடுங்கோல்  நீதிமான்களுடைய  சுதந்தரத்தின்மேல்  நிலைத்திராது.  {Ps  125:3}

 

கர்த்தாவே,  நல்லவர்களுக்கும்  இருதயத்தில்  செம்மையானவர்களுக்கும்  நன்மைசெய்யும்.  {Ps  125:4}

 

தங்கள்  கோணலான  வழிகளுக்குச்  சாய்கிறவர்களைக்  கர்த்தர்  அக்கிரமக்காரரோடே  போகப்பண்ணுவார்.  இஸ்ரவேலுக்கோ<Israel>  சமாதானம்  உண்டு.  {Ps  125:5}

 

சீயோனின்<Zion>  சிறையிருப்பைக்  கர்த்தர்  திருப்பும்போது,  சொப்பனம்  காண்கிறவர்கள்போல்  இருந்தோம்.  {Ps  126:1}

 

அப்பொழுது  நம்முடைய  வாய்  நகைப்பினாலும்,  நம்முடைய  நாவு  ஆனந்தசத்தத்தினாலும்  நிறைந்திருந்தது;  அப்பொழுது:  கர்த்தர்  இவர்களுக்குப்  பெரிய  காரியங்களைச்  செய்தார்  என்று  புறஜாதிகளுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  {Ps  126:2}

 

கர்த்தர்  நமக்குப்  பெரிய  காரியங்களைச்  செய்தார்;  இதினிமித்தம்  நாம்  மகிழ்ந்திருக்கிறோம்.  {Ps  126:3}

 

கர்த்தாவே,  தெற்கத்தி  வெள்ளங்களைத்  திருப்புவதுபோல,  எங்கள்  சிறையிருப்பைத்  திருப்பும்.  {Ps  126:4}

 

கண்ணீரோடே  விதைக்கிறவர்கள்  கெம்பீரத்தோடே  அறுப்பார்கள்.  {Ps  126:5}

 

அள்ளித்தூவும்  விதையைச்  சுமக்கிறவன்  அழுதுகொண்டு  போகிறான்;  ஆனாலும்  தான்  அறுத்த  அரிகளைச்  சுமந்துகொண்டு  கெம்பீரத்தோடே  திரும்பிவருவான்.  {Ps  126:6}

 

கர்த்தர்  வீட்டைக்  கட்டாராகில்,  அதைக்  கட்டுகிறவர்களின்  பிரயாசம்  விருதா;  கர்த்தர்  நகரத்தைக்  காவாராகில்  காவலாளர்  விழித்திருக்கிறது  விருதா.  {Ps  127:1}

 

நீங்கள்  அதிகாலையில்  எழுந்து,  நேரப்பட  வேலையிலே  தரித்து,  வருத்தத்தின்  அப்பத்தைச்  சாப்பிடுகிறதும்  விருதா;  அவரே  தமக்குப்  பிரியமானவனுக்கு  நித்திரை  அளிக்கிறார்.  {Ps  127:2}

 

இதோ,  பிள்ளைகள்  கர்த்தரால்  வரும்  சுதந்தரம்,  கர்ப்பத்தின்  கனி  அவரால்  கிடைக்கும்  பலன்.  {Ps  127:3}

 

வாலவயதின்  குமாரர்  பலவான்  கையிலுள்ள  அம்புகளுக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்.  {Ps  127:4}

 

அவைகளால்  தன்  அம்பறாத்தூணியை  நிரப்பின  புருஷன்  பாக்கியவான்;  அவர்கள்  நாணமடையாமல்  ஒலிமுகவாசலில்  சத்துருக்களோடே  பேசுவார்கள்.  {Ps  127:5}

 

கர்த்தருக்குப்  பயந்து,  அவர்  வழிகளில்  நடக்கிறவன்  எவனோ,  அவன்  பாக்கியவான்.  {Ps  128:1}

 

உன்  கைகளின்  பிரயாசத்தை  நீ  சாப்பிடுவாய்;  உனக்குப்  பாக்கியமும்  நன்மையும்  உண்டாயிருக்கும்.  {Ps  128:2}

 

உன்  மனைவி  உன்  வீட்டோரங்களில்  கனிதரும்  திராட்சக்கொடியைப்போல்  இருப்பாள்;  உன்  பிள்ளைகள்  உன்  பந்தியைச்  சுற்றிலும்  ஒலிவமரக்  கன்றுகளைப்போல்  இருப்பார்கள்.  {Ps  128:3}

 

இதோ,  கர்த்தருக்குப்  பயப்படுகிற  மனுஷன்  இவ்விதமாய்  ஆசீர்வதிக்கப்படுவான்.  {Ps  128:4}

 

கர்த்தர்  சீயோனிலிருந்து<Zion>  உன்னை  ஆசீர்வதிப்பார்;  நீ  ஜீவனுள்ள  நாளெல்லாம்  எருசலேமின்<Jerusalem>  வாழ்வைக்  காண்பாய்.  {Ps  128:5}

 

நீ  உன்  பிள்ளைகளின்  பிள்ளைகளையும்,  இஸ்ரவேலுக்கு<Israel>  உண்டாகும்  சமாதானத்தையும்  காண்பாய்.  {Ps  128:6}

 

என்  சிறுவயது  தொடங்கி  அநேகந்தரம்  என்னை  நெருக்கினார்கள்.  {Ps  129:1}

 

என்  சிறுவயது  தொடங்கி  அநேகந்தரம்  என்னை  நெருக்கியும்,  என்னை  மேற்கொள்ளாமற்போனார்கள்.  {Ps  129:2}

 

உழுகிறவர்கள்  என்  முதுகின்மேல்  உழுது,  தங்கள்  படைச்சால்களை  நீளமாக்கினார்கள்.  {Ps  129:3}

 

கர்த்தரோ  நீதியுள்ளவர்;  துன்மார்க்கருடைய  கயிறுகளை  அவர்  அறுத்தார்  என்று,  இஸ்ரவேல்<Israel>  இப்பொழுது  சொல்வதாக.  {Ps  129:4}

 

சீயோனைப்<Zion>  பகைக்கிற  அனைவரும்  வெட்கிப்  பின்னிட்டுத்  திரும்பக்கடவர்கள்.  {Ps  129:5}

 

வீட்டின்மேல்  முளைக்கும்  புல்லுக்கு  அவர்கள்  ஒப்பாவார்களாக;  அது  வளருமுன்  உலர்ந்துபோம்.  {Ps  129:6}

 

அறுக்கிறவன்  அதினால்  தன்  கையையும்,  அரிகளைக்  கட்டுகிறவன்  தன்  மடியையும்  நிரப்புவதில்லை.  {Ps  129:7}

 

கர்த்தருடைய  ஆசீர்வாதம்  உங்களுக்கு  உண்டாவதாக;  கர்த்தரின்  நாமத்தினால்  உங்களை  ஆசீர்வதிக்கிறோம்  என்று  வழிப்போக்கர்  சொல்வதுமில்லை.  {Ps  129:8}

 

கர்த்தாவே,  ஆழங்களிலிருந்து  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்.  {Ps  130:1}

 

ஆண்டவரே,  என்  சத்தத்தைக்  கேளும்;  என்  விண்ணப்பங்களின்  சத்தத்திற்கு  உமது  செவிகள்  கவனித்திருப்பதாக.  {Ps  130:2}

 

கர்த்தாவே,  நீர்  அக்கிரமங்களைக்  கவனித்திருப்பீரானால்,  யார்  நிலைநிற்பான்,  ஆண்டவரே.  {Ps  130:3}

 

உமக்குப்  பயப்படும்படிக்கு  உம்மிடத்தில்  மன்னிப்பு  உண்டு.  {Ps  130:4}

 

கர்த்தருக்குக்  காத்திருக்கிறேன்;  என்  ஆத்துமா  காத்திருக்கிறது;  அவருடைய  வார்த்தையை  நம்பியிருக்கிறேன்.  {Ps  130:5}

 

எப்பொழுது  விடியும்  என்று  விடியற்காலத்துக்குக்  காத்திருக்கிற  ஜாமக்காரரைப்பார்க்கிலும்  அதிகமாய்  என்  ஆத்துமா  ஆண்டவருக்குக்  காத்திருக்கிறது.  {Ps  130:6}

 

இஸ்ரவேல்<Israel>  கர்த்தரை  நம்பியிருப்பதாக;  கர்த்தரிடத்தில்  கிருபையும்,  அவரிடத்தில்  திரளான  மீட்பும்  உண்டு.  {Ps  130:7}

 

அவர்  இஸ்ரவேலை<Israel>  அதின்  சகல  அக்கிரமங்களினின்றும்  மீட்டுக்கொள்வார்.  {Ps  130:8}

 

கர்த்தாவே,  என்  இருதயம்  இறுமாப்புள்ளதல்ல,  என்  கண்கள்  மேட்டிமையுள்ளவைகளுமல்ல;  பெரிய  காரியங்களிலும்,  எனக்கு  மிஞ்சின  கருமங்களிலும்  நான்  தலையிடுகிறதுமில்லை.  {Ps  131:1}

 

தாயின்  பால்மறந்த  குழந்தையைப்போல  நான்  என்  ஆத்துமாவை  அடக்கி  அமரப்பண்ணினேன்;  என்  ஆத்துமா  பால்மறந்த  குழந்தையைப்போல்  இருக்கிறது.  {Ps  131:2}

 

இதுமுதல்  என்றென்றைக்கும்  இஸ்ரவேல்<Israel>  கர்த்தரை  நம்பியிருப்பதாக.  {Ps  131:3}

 

கர்த்தாவே,  தாவீதையும்<David>  அவனுடைய  சகல  உபத்திரவத்தையும்  நினைத்தருளும்.  {Ps  132:1}

 

அவன்:  நான்  கர்த்தருக்கு  ஒரு  இடத்தையும்,  யாக்கோபின்<Jacob>  வல்லவருக்கு  ஒரு  வாசஸ்தலத்தையும்  காணுமட்டும்,  {Ps  132:2}

 

என்  வீடாகிய  கூடாரத்தில்  பிரவேசிப்பதுமில்லை,  என்  படுக்கையாகிய  கட்டிலின்மேல்  ஏறுவதுமில்லை;  {Ps  132:3}

 

என்  கண்களுக்கு  நித்திரையையும்,  என்  இமைகளுக்கு  உறக்கத்தையும்  வரவிடுவதுமில்லை  என்று,  {Ps  132:4}

 

கர்த்தருக்கு  ஆணையிட்டு,  யாக்கோபின்<Jacob>  வல்லவருக்குப்  பொருத்தனை  பண்ணினான்.  {Ps  132:5}

 

இதோ,  நாம்  எப்பிராத்தாவிலே<Ephratah>  அதின்  செய்தியைக்  கேட்டு,  வனத்தின்  வெளிகளில்  அதைக்  கண்டோம்.  {Ps  132:6}

 

அவருடைய  வாசஸ்தலங்களுக்குள்  பிரவேசித்து,  அவர்  பாதபடியில்  பணிவோம்.  {Ps  132:7}

 

கர்த்தாவே,  உமது  வல்லமை  விளங்கும்  பெட்டியுடன்  நீர்  உமது  தாபர  ஸ்தலத்திற்குள்  எழுந்தருளும்.  {Ps  132:8}

 

உம்முடைய  ஆசாரியர்கள்  நீதியைத்  தரித்து,  உம்முடைய  பரிசுத்தவான்கள்  கெம்பீரிப்பார்களாக.  {Ps  132:9}

 

நீர்  அபிஷேகம்பண்ணுவித்தவனின்  முகத்தை  உமது  தாசனாகிய  தாவீதினிமித்தம்<David>  புறக்கணியாதிரும்.  {Ps  132:10}

 

உன்  கர்ப்பத்தின்  கனியை  உன்  சிங்காசனத்தின்மேல்  வைப்பேன்  என்றும்,  {Ps  132:11}

 

உன்  குமாரர்  என்  உடன்படிக்கையையும்,  நான்  போதிக்கும்  என்  சாட்சிகளையும்  காத்து  நடந்தால்,  அவர்கள்  குமாரரும்  என்றென்றைக்கும்  உன்  சிங்காசனத்தில்  வீற்றிருப்பார்கள்  என்றும்,  கர்த்தர்  தாவீதுக்கு<David>  உண்மையாய்  ஆணையிட்டார்;  அவர்  தவறமாட்டார்.  {Ps  132:12}

 

கர்த்தர்  சீயோனைத்<Zion>  தெரிந்துகொண்டு,  அது  தமக்கு  வாசஸ்தலமாகும்படி  விரும்பினார்.  {Ps  132:13}

 

இது  என்றென்றைக்கும்  நான்  தங்கும்  இடம்;  இதை  நான்  விரும்பினபடியால்,  இங்கே  வாசம்பண்ணுவேன்.  {Ps  132:14}

 

அதின்  ஆகாரத்தை  நான்  ஆசீர்வதித்து  வருவேன்;  அதின்  ஏழைகளை  நான்  அப்பத்தினால்  திருப்தியாக்குவேன்.  {Ps  132:15}

 

அதின்  ஆசாரியர்களுக்கு  இரட்சிப்பை  உடுத்துவேன்;  அதிலுள்ள  பரிசுத்தவான்கள்  மிகவும்  கெம்பீரிப்பார்கள்.  {Ps  132:16}

 

அங்கே  தாவீதுக்காக<David>  ஒரு  கொம்பை  முளைக்கப்பண்ணுவேன்;  நான்  அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக  ஒரு  விளக்கை  ஆயத்தம்பண்ணினேன்.  {Ps  132:17}

 

அவன்  சத்துருக்களுக்கு  வெட்கத்தை  உடுத்துவேன்;  அவன்மீதிலோ  அவன்  கிரீடம்  பூக்கும்  என்றார்.  {Ps  132:18}

 

இதோ,  சகோதரர்  ஒருமித்து  வாசம்பண்ணுகிறது  எத்தனை  நன்மையும்  எத்தனை  இன்பமுமானது?  {Ps  133:1}

 

அது  ஆரோனுடைய<Aaron>  சிரசின்மேல்  ஊற்றப்பட்டு,  அவனுடைய  தாடியிலே  வடிகிறதும்,  அவனுடைய  அங்கிகளின்மேல்  இறங்குகிறதுமான  நல்ல  தைலத்துக்கும்,  {Ps  133:2}

 

எர்மோன்மேலும்<Hermon>,  சீயோன்<Zion>  பர்வதங்கள்மேலும்  இறங்கும்  பனிக்கும்  ஒப்பாயிருக்கிறது;  அங்கே  கர்த்தர்  என்றென்றைக்கும்  ஆசீர்வாதத்தையும்  ஜீவனையும்  கட்டளையிடுகிறார்.  {Ps  133:3}

 

இதோ,  இராக்காலங்களில்  கர்த்தருடைய  ஆலயத்தில்  நிற்கும்  கர்த்தரின்  ஊழியக்காரரே,  நீங்களெல்லாரும்  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  134:1}

 

உங்கள்  கைகளைப்  பரிசுத்த  ஸ்தலத்திற்கு  நேராக  எடுத்து,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  134:2}

 

வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  கர்த்தர்  சீயோனிலிருந்து<Zion>  உன்னை  ஆசீர்வதிப்பாராக.  {Ps  134:3}

 

அல்லேலூயா<Alleluia>,  கர்த்தருடைய  நாமத்தைத்  துதியுங்கள்;  கர்த்தரின்  ஊழியக்காரரே,  துதியுங்கள்.  {Ps  135:1}

 

கர்த்தருடைய  வீட்டிலும்,  நமது  தேவனுடைய  ஆலயப்பிராகாரங்களிலும்  நிற்கிறவர்களே,  கர்த்தரைத்  துதியுங்கள்.  {Ps  135:2}

 

கர்த்தர்  நல்லவர்;  அவருடைய  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்;  அது  இன்பமானது.  {Ps  135:3}

 

கர்த்தர்  யாக்கோபைத்<Jacob>  தமக்காகவும்,  இஸ்ரவேலைத்<Israel>  தமக்குச்  சொந்தமாகவும்  தெரிந்துகொண்டார்.  {Ps  135:4}

 

கர்த்தர்  பெரியவர்  என்றும்,  நம்முடைய  ஆண்டவர்  எல்லா  தேவர்களுக்கும்  மேலானவர்  என்றும்  நான்  அறிவேன்.  {Ps  135:5}

 

வானத்திலும்  பூமியிலும்,  சமுத்திரங்களிலும்,  எல்லா  ஆழங்களிலும்,  கர்த்தர்  தமக்குச்  சித்தமானதையெல்லாம்  செய்கிறார்.  {Ps  135:6}

 

அவர்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து  மேகங்களை  எழும்பப்பண்ணி,  மழையுடன்  மின்னலையும்  உண்டாக்கி,  காற்றைத்  தமது  பண்டசாலைகளிலிருந்து  புறப்படப்பண்ணுகிறார்.  {Ps  135:7}

 

அவர்  எகிப்திலே<Egypt>  மனுஷருடைய  தலைப்பிள்ளைகளையும்  மிருகத்தின்  தலையீற்றுகளையும்  அடித்தார்.  {Ps  135:8}

 

எகிப்துதேசமே<Egypt>,  உன்  நடுவில்  பார்வோன்மேலும்<Pharaoh>  அவனுடைய  எல்லா  ஊழியக்காரர்மேலும்  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  அனுப்பினார்.  {Ps  135:9}

 

அவர்  அநேகம்  ஜாதிகளை  அடித்து,  பலத்த  ராஜாக்களைக்  கொன்று;  {Ps  135:10}

 

எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனையும்<Sihon>,  பாசானின்<Bashan>  ராஜாவாகிய  ஓகையும்<Og>,  கானானின்<Canaan>  சகல  ராஜ்யங்களையும்  அழித்து,  {Ps  135:11}

 

அவர்கள்  தேசத்தைத்  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்குச்<Israel>  சுதந்தரமாகக்  கொடுத்தார்.  {Ps  135:12}

 

கர்த்தாவே,  உம்முடைய  நாமம்  என்றைக்குமுள்ளது;  கர்த்தாவே,  உம்முடைய  பிரஸ்தாபம்  தலைமுறை  தலைமுறைக்கும்  இருக்கும்.  {Ps  135:13}

 

கர்த்தர்  தம்முடைய  ஜனத்தின்  நியாயத்தை  விசாரித்து,  தம்முடைய  ஊழியக்காரர்மேல்  பரிதாபப்படுவார்.  {Ps  135:14}

 

அஞ்ஞானிகளுடைய  விக்கிரகங்கள்  வெள்ளியும்  பொன்னும்,  மனுஷருடைய  கைவேலையுமாயிருக்கிறது.  {Ps  135:15}

 

அவைகளுக்கு  வாயிருந்தும்  பேசாது,  அவைகளுக்குக்  கண்களிருந்தும்  காணாது.  {Ps  135:16}

 

அவைகளுக்குக்  காதுகளிருந்தும்  கேளாது,  அவைகளுடைய  வாயிலே  சுவாசமுமில்லை.  {Ps  135:17}

 

அவைகளைப்  பண்ணுகிறவர்களும்,  அவைகளை  நம்புகிறவர்கள்  யாவரும்,  அவைகளைப்போல்  இருக்கிறார்கள்.  {Ps  135:18}

 

இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தாரே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்;  ஆரோன்<Aaron>  குடும்பத்தாரே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  135:19}

 

லேவி<Levi>  குடும்பத்தாரே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்;  கர்த்தருக்குப்  பயந்தவர்களே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Ps  135:20}

 

எருசலேமில்<Jerusalem>  வாசம்பண்ணுகிற  கர்த்தருக்கு  சீயோனிலிருந்து<Zion>  ஸ்தோத்திரமுண்டாவதாக.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  135:21}

 

கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  நல்லவர்,  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:1}

 

தேவாதி  தேவனைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:2}

 

கர்த்தாதி  கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:3}

 

ஒருவராய்ப்  பெரிய  அதிசயங்களைச்  செய்கிறவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:4}

 

வானங்களை  ஞானமாய்  உண்டாக்கினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:5}

 

தண்ணீர்களுக்கு  மேலே  பூமியைப்  பரப்பினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:6}

 

பெரிய  சுடர்களை  உண்டாக்கினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது;  {Ps  136:7}

 

பகலில்  ஆளச்  சூரியனைப்  படைத்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:8}

 

இரவில்  ஆளச்  சந்திரனையும்  நட்சத்திரங்களையும்  படைத்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது;  {Ps  136:9}

 

எகிப்தியருடைய<Egypt>  தலைச்சன்களைச்  சங்கரித்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:10}

 

அவர்கள்  நடுவிலிருந்து  இஸ்ரவேலைப்<Israel>  புறப்படப்பண்ணினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:11}

 

பலத்த  கையினாலும்  ஓங்கிய  புயத்தினாலும்  அதைச்  செய்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:12}

 

சிவந்த  சமுத்திரத்தை<Red  sea>  இரண்டாகப்  பிரித்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:13}

 

அதின்  நடுவே  இஸ்ரவேலைக்<Israel>  கடந்துபோகப்பண்ணினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:14}

 

பார்வோனையும்<Pharaoh>  அவன்  சேனைகளையும்  சிவந்த  சமுத்திரத்தில்<Red  sea>  கவிழ்த்துப்போட்டவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:15}

 

தம்முடைய  ஜனங்களை  வனாந்தரத்தில்  நடத்தினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:16}

 

பெரிய  ராஜாக்களைச்  சங்கரித்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:17}

 

பிரபலமான  ராஜாக்களை  அழித்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:18}

 

எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனை<Sihon>  அழித்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:19}

 

பாசானின்<Bashan>  ராஜாவாகிய  ஓகை<Og>  அழித்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:20}

 

அவர்கள்  தேசத்தைச்  சுதந்தரமாகத்  தந்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:21}

 

அதைத்  தம்முடைய  தாசனாகிய  இஸ்ரவேலுக்குச்<Israel>  சுதந்தரமாகவே  தந்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:22}

 

நம்முடைய  தாழ்வில்  நம்மை  நினைத்தவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:23}

 

நம்முடைய  சத்துருக்களின்  கையிலிருந்து  நம்மை  விடுதலைபண்ணினவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:24}

 

மாம்சதேகமுள்ள  யாவுக்கும்  ஆகாரங்  கொடுக்கிறவரைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:25}

 

பரலோகத்தின்  தேவனைத்  துதியுங்கள்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  {Ps  136:26}

 

பாபிலோன்<Babylon>  ஆறுகள்  அருகே  நாங்கள்  உட்கார்ந்து,  அங்கே  சீயோனை<Zion>  நினைத்து  அழுதோம்.  {Ps  137:1}

 

அதின்  நடுவிலிருக்கும்  அலரிச்செடிகளின்மேல்  எங்கள்  கின்னரங்களைத்  தூக்கிவைத்தோம்.  {Ps  137:2}

 

எங்களைச்  சிறைபிடித்தவர்கள்  அங்கே  எங்கள்  பாடல்களையும்,  எங்களைப்  பாழாக்கினவர்கள்  மங்கள  கீதத்தையும்  விரும்பி:  சீயோனின்<Zion>  பாட்டுகளில்  சிலதை  எங்களுக்குப்  பாடுங்கள்  என்று  சொன்னார்கள்.  {Ps  137:3}

 

கர்த்தரின்  பாட்டை  அந்நியதேசத்தில்  நாங்கள்  பாடுவதெப்படி?  {Ps  137:4}

 

எருசலேமே<Jerusalem>,  நான்  உன்னை  மறந்தால்  என்  வலதுகை  தன்  தொழிலை  மறப்பதாக.  {Ps  137:5}

 

நான்  உன்னை  நினையாமலும்,  எருசலேமை<Jerusalem>  என்  முக்கியமான  மகிழ்ச்சியிலும்  அதிகமாக  எண்ணாமலும்போனால்,  என்  நாவு  என்  மேல்வாயோடு  ஒட்டிக்கொள்வதாக.  {Ps  137:6}

 

கர்த்தாவே,  எருசலேமின்<Jerusalem>  நாளில்  ஏதோமின்<Edom>  புத்திரரை  நினையும்;  அவர்கள்:  அதை  இடித்துப்போடுங்கள்,  அஸ்திபாரமட்டும்  இடித்துப்போடுங்கள்  என்று  சொன்னார்களே.  {Ps  137:7}

 

பாபிலோன்<Babylon>  குமாரத்தியே,  பாழாய்ப்போகிறவளே,  நீ  எங்களுக்குச்  செய்தபடி  உனக்குப்  பதில்  செய்கிறவன்  பாக்கியவான்.  {Ps  137:8}

 

உன்  குழந்தைகளைப்  பிடித்து,  கல்லின்மேல்  மோதியடிக்கிறவன்  பாக்கியவான்.  {Ps  137:9}

 

உம்மை  என்  முழு  இருதயத்தோடும்  துதிப்பேன்;  தேவர்களுக்கு  முன்பாக  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  138:1}

 

உமது  பரிசுத்த  ஆலயத்திற்கு  நேராக  நான்  பணிந்து,  உமது  கிருபையினிமித்தமும்  உமது  உண்மையினிமித்தமும்  உமது  நாமத்தைத்  துதிப்பேன்;  உமது  சகல  பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும்  உமது  வார்த்தையை  நீர்  மகிமைப்படுத்தியிருக்கிறீர்.  {Ps  138:2}

 

நான்  கூப்பிட்ட  நாளிலே  எனக்கு  மறுஉத்தரவு  அருளினீர்;  என்  ஆத்துமாவிலே  பெலன்தந்து  என்னைத்  தைரியப்படுத்தினீர்;  {Ps  138:3}

 

கர்த்தாவே,  பூமியின்  ராஜாக்களெல்லாரும்  உமது  வாயின்  வார்த்தைகளைக்  கேட்கும்போது  உம்மைத்  துதிப்பார்கள்.  {Ps  138:4}

 

கர்த்தரின்  மகிமை  பெரிதாயிருப்பதினால்,  அவர்கள்  கர்த்தரின்  வழிகளைப்  பாடுவார்கள்.  {Ps  138:5}

 

கர்த்தர்  உயர்ந்தவராயிருந்தும்,  தாழ்மையுள்ளவனை  நோக்கிப்  பார்க்கிறார்;  மேட்டிமையானவனையோ  தூரத்திலிருந்து  அறிகிறார்.  {Ps  138:6}

 

நான்  துன்பத்தின்  நடுவில்  நடந்தாலும்  நீர்  என்னை  உயிர்ப்பிப்பீர்;  என்  சத்துருக்களின்  கோபத்துக்கு  விரோதமாக  உமது  கையை  நீட்டுவீர்;  உமது  வலதுகரம்  என்னை  இரட்சிக்கும்.  {Ps  138:7}

 

கர்த்தர்  எனக்காக  யாவையும்  செய்து  முடிப்பார்;  கர்த்தாவே,  உமது  கிருபை  என்றுமுள்ளது;  உமது  கரத்தின்  கிரியைகளை  நெகிழவிடாதிருப்பீராக.  {Ps  138:8}

 

கர்த்தாவே,  நீர்  என்னை  ஆராய்ந்து,  அறிந்திருக்கிறீர்.  {Ps  139:1}

 

என்  உட்காருதலையும்  என்  எழுந்திருக்குதலையும்  நீர்  அறிந்திருக்கிறீர்;  என்  நினைவுகளைத்  தூரத்திலிருந்து  அறிகிறீர்.  {Ps  139:2}

 

நான்  நடந்தாலும்  படுத்திருந்தாலும்  என்னைச்  சூழ்ந்திருக்கிறீர்;  என்  வழிகளெல்லாம்  உமக்குத்  தெரியும்.  {Ps  139:3}

 

என்  நாவில்  சொல்  பிறவாததற்குமுன்னே,  இதோ,  கர்த்தாவே,  அதையெல்லாம்  நீர்  அறிந்திருக்கிறீர்.  {Ps  139:4}

 

முற்புறத்திலும்  பிற்புறத்திலும்  நீர்  என்னை  நெருக்கி,  உமது  கரத்தை  என்மேல்  வைக்கிறீர்.  {Ps  139:5}

 

இந்த  அறிவு  எனக்கு  மிகுந்த  ஆச்சரியமும்,  எனக்கு  எட்டாத  உயரமுமாயிருக்கிறது.  {Ps  139:6}

 

உம்முடைய  ஆவிக்கு  மறைவாக  எங்கே  போவேன்?  உம்முடைய  சமுகத்தைவிட்டு  எங்கே  ஓடுவேன்?  {Ps  139:7}

 

நான்  வானத்திற்கு  ஏறினாலும்,  நீர்  அங்கே  இருக்கிறீர்;  நான்  பாதாளத்தில்  படுக்கை  போட்டாலும்,  நீர்  அங்கேயும்  இருக்கிறீர்.  {Ps  139:8}

 

நான்  விடியற்காலத்துச்  செட்டைகளை  எடுத்து,  சமுத்திரத்தின்  கடையாந்தரங்களிலே  போய்த்  தங்கினாலும்,  {Ps  139:9}

 

அங்கேயும்  உமது  கை  என்னை  நடத்தும்,  உமது  வலதுகரம்  என்னைப்  பிடிக்கும்.  {Ps  139:10}

 

இருள்  என்னை  மூடிக்கொள்ளுமென்றாலும்,  இரவும்  என்னைச்  சுற்றி  வெளிச்சமாயிருக்கும்.  {Ps  139:11}

 

உமக்கு  மறைவாக  இருளும்  அந்தகாரப்படுத்தாது;  இரவும்  பகலைப்போல  வெளிச்சமாயிருக்கும்;  உமக்கு  இருளும்  வெளிச்சமும்  சரி.  {Ps  139:12}

 

நீர்  என்  உள்ளிந்திரியங்களைக்  கைக்கொண்டிருக்கிறீர்;  என்  தாயின்  கர்ப்பத்தில்  என்னைக்  காப்பாற்றினீர்.  {Ps  139:13}

 

நான்  பிரமிக்கத்தக்க  அதிசயமாய்  உண்டாக்கப்பட்டபடியால்,  உம்மைத்  துதிப்பேன்;  உமது  கிரியைகள்  அதிசயமானவைகள்,  அது  என்  ஆத்துமாவுக்கு  நன்றாய்த்  தெரியும்.  {Ps  139:14}

 

நான்  ஒளிப்பிடத்திலே  உண்டாக்கப்பட்டு,  பூமியின்  தாழ்விடங்களிலே  விசித்திர  விநோதமாய்  உருவாக்கப்பட்டபோது,  என்  எலும்புகள்  உமக்கு  மறைவாயிருக்கவில்லை.  {Ps  139:15}

 

என்  கருவை  உம்முடைய  கண்கள்  கண்டது;  என்  அவயவங்களில்  ஒன்றாகிலும்  இல்லாதபோதே  அவைகள்  அனைத்தும்,  அவைகள்  உருவேற்படும்  நாட்களும்,  உமது  புஸ்தகத்தில்  எழுதியிருந்தது.  {Ps  139:16}

 

தேவனே,  உமது  ஆலோசனைகள்  எனக்கு  எத்தனை  அருமையானவைகள்;  அவைகளின்  தொகை  எவ்வளவு  அதிகம்.  {Ps  139:17}

 

அவைகளை  நான்  எண்ணப்போனால்,  மணலைப்பார்க்கிலும்  அதிகமாம்;  நான்  விழிக்கும்போது  இன்னும்  உம்மண்டையில்  இருக்கிறேன்.  {Ps  139:18}

 

தேவனே,  நீர்  துன்மார்க்கனை  அழித்தீரானால்  நலமாயிருக்கும்;  இரத்தப்பிரியரே,  நீங்கள்  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்.  {Ps  139:19}

 

அவர்கள்  உம்மைக்  குறித்துத்  துன்மார்க்கமாய்ப்  பேசுகிறார்கள்;  உம்முடைய  சத்துருக்கள்  உமது  நாமத்தை  வீணாய்  வழங்குகிறார்கள்.  {Ps  139:20}

 

கர்த்தாவே,  உம்மைப்  பகைக்கிறவர்களை  நான்  பகையாமலும்,  உமக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களை  அருவருக்காமலும்  இருப்பேனோ?  {Ps  139:21}

 

முழுப்பகையாய்  அவர்களைப்  பகைக்கிறேன்;  அவர்களை  எனக்குப்  பகைஞராக  எண்ணுகிறேன்.  {Ps  139:22}

 

தேவனே,  என்னை  ஆராய்ந்து,  என்  இருதயத்தை  அறிந்துகொள்ளும்;  என்னைச்  சோதித்து,  என்  சிந்தனைகளை  அறிந்துகொள்ளும்.  {Ps  139:23}

 

வேதனை  உண்டாக்கும்  வழி  என்னிடத்தில்  உண்டோ  என்று  பார்த்து,  நித்திய  வழியிலே  என்னை  நடத்தும்.  {Ps  139:24}

 

கர்த்தாவே,  பொல்லாத  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவியும்;  கொடுமையுள்ளவனுக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்.  {Ps  140:1}

 

அவர்கள்  தங்கள்  இருதயத்தில்  பொல்லாப்புகளைச்  சிந்தித்து,  யுத்தஞ்செய்ய  நாள்தோறும்  கூட்டங்கூடுகிறார்கள்.  {Ps  140:2}

 

சர்ப்பத்தைப்போல்  தங்கள்  நாவைக்  கூர்மையாக்குகிறார்கள்;  அவர்கள்  உதடுகளின்கீழ்  விரியன்  பாம்பின்விஷம்  இருக்கிறது.  (சேலா<Selah>.)  {Ps  140:3}

 

கர்த்தாவே,  துன்மார்க்கனுடைய  கைகளுக்கு  என்னை  நீங்கலாக்கி,  கொடியவனுக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்;  அவர்கள்  என்  நடைகளைக்  கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.  {Ps  140:4}

 

அகங்காரிகள்  எனக்குக்  கண்ணியையும்  கயிறுகளையும்  மறைவாய்  வைக்கிறார்கள்;  வழியோரத்திலே  வலையை  விரித்து,  எனக்குச்  சுருக்குகளை  வைக்கிறார்கள்.  (சேலா<Selah>.)  {Ps  140:5}

 

நான்  கர்த்தரை  நோக்கி:  நீர்  என்  தேவன்  என்றேன்;  கர்த்தாவே,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்துக்குச்  செவிகொடும்.  {Ps  140:6}

 

ஆண்டவராகிய  கர்த்தாவே,  என்  இரட்சிப்பின்  பெலனே,  யுத்தநாளில்  என்  தலையை  மூடினீர்.  {Ps  140:7}

 

கர்த்தாவே,  துன்மார்க்கனுடைய  ஆசைகள்  சித்தியாதபடி  செய்யும்;  அவன்  தன்னை  உயர்த்தாதபடி  அவனுடைய  யோசனையை  நடந்தேறவொட்டாதேயும்.  (சேலா<Selah>.)  {Ps  140:8}

 

என்னை  வளைந்துகொள்ளுகிறவர்களுடைய  உதடுகளின்  தீவினைகள்  அவர்கள்  தலைகளையே  மூடுவதாக.  {Ps  140:9}

 

நெருப்புத்தழல்  அவர்கள்மேல்  விழுவதாக;  அக்கினியிலும்,  அவர்கள்  எழுந்திருக்கக்கூடாத  படுகுழிகளிலும்  தள்ளப்படுவார்களாக.  {Ps  140:10}

 

பொல்லாத  நாவுள்ளவன்  பூமியிலே  நிலைப்பதில்லை;  கொடுமையான  மனுஷனை  பறக்கடிக்கப்  பொல்லாப்பு  அவனை  வேட்டையாடும்.  {Ps  140:11}

 

சிறுமையானவனின்  வழக்கையும்,  எளியவர்களின்  நியாயத்தையும்  கர்த்தர்  விசாரிப்பாரென்று  அறிவேன்.  {Ps  140:12}

 

நீதிமான்கள்  உமது  நாமத்தைத்  துதிப்பார்கள்;  செம்மையானவர்கள்  உமது  சமுகத்தில்  வாசம்பண்ணுவார்கள்.  {Ps  140:13}

 

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்,  என்னிடத்திற்கு  வரத்தீவிரியும்;  நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகையில்,  என்  சத்தத்திற்குச்  செவிகொடும்.  {Ps  141:1}

 

என்  விண்ணப்பம்  உமக்கு  முன்பாகத்  தூபமாகவும்,  என்  கையெடுப்பு  அந்திப்பலியாகவும்  இருக்கக்கடவது.  {Ps  141:2}

 

கர்த்தாவே,  என்  வாய்க்குக்  காவல்  வையும்;  என்  உதடுகளின்  வாசலைக்  காத்துக்கொள்ளும்.  {Ps  141:3}

 

அக்கிரமஞ்செய்கிற  மனுஷரோடே  ஆகாமியக்  கிரியைகளை  நடப்பிக்கும்படி  என்  இருதயத்தைத்  துன்மார்க்கத்திற்கு  இணங்கவொட்டாதேயும்;  அவர்களுடைய  ருசியுள்ள  பதார்த்தங்களில்  ஒன்றையும்  நான்  சாப்பிடாமல்  இருப்பேனாக.  {Ps  141:4}

 

நீதிமான்  என்னைத்  தயவாய்க்குட்டி,  என்னைக்  கடிந்துகொள்ளட்டும்;  அது  என்  தலைக்கு  எண்ணெயைப்போலிருக்கும்;  என்  தலை  அதை  அல்லத்தட்டுவதில்லை;  அவர்கள்  இக்கட்டுகளில்  நான்  இன்னும்  ஜெபம்பண்ணுவேன்.  {Ps  141:5}

 

அவர்களுடைய  நியாயாதிபதிகள்  கன்மலைச்  சார்புகளிலிருந்து  தள்ளுண்டுபோகிறபோது,  என்  வார்த்தைகள்  இன்பமானவைகளென்று  கேட்பார்கள்.  {Ps  141:6}

 

பூமியின்மேல்  ஒருவன்  மரத்தை  வெட்டிப்  பிளக்கிறதுபோல,  எங்கள்  எலும்புகள்  பாதாளவாய்க்கு  நேராய்ச்  சிதறடிக்கப்பட்டிருக்கிறது.  {Ps  141:7}

 

ஆனாலும்  ஆண்டவராகிய  கர்த்தாவே,  என்  கண்கள்  உம்மை  நோக்கியிருக்கிறது;  உம்மை  நம்பியிருக்கிறேன்;  என்  ஆத்துமாவை  வெறுமையாக  விடாதேயும்.  {Ps  141:8}

 

அவர்கள்  எனக்கு  வைத்த  கண்ணியின்  சிக்குகளுக்கும்,  அக்கிரமக்காரரின்  சுருக்குகளுக்கும்  என்னை  விலக்கி  இரட்சியும்.  {Ps  141:9}

 

துன்மார்க்கர்  தங்கள்  வலைகளில்  அகப்படுவார்களாக;  நானோ  அதற்குத்  தப்பிக்  கடந்துபோவேன்.  {Ps  141:10}

 

கர்த்தரை  நோக்கிச்  சத்தமிட்டுக்  கூப்பிடுகிறேன்;  கர்த்தரை  நோக்கிச்  சத்தமிட்டுக்  கெஞ்சுகிறேன்.  {Ps  142:1}

 

அவருக்கு  முன்பாக  என்  சஞ்சலத்தை  ஊற்றுகிறேன்;  அவருக்கு  முன்பாக  என்  நெருக்கத்தை  அறிக்கையிடுகிறேன்.  {Ps  142:2}

 

என்  ஆவி  என்னில்  தியங்கும்போது,  நீர்  என்  பாதையை  அறிந்திருக்கிறீர்;  நான்  நடக்கிற  வழியில்  மறைவாக  எனக்குக்  கண்ணிவைத்தார்கள்.  {Ps  142:3}

 

வலதுபுறமாய்க்  கண்ணோக்கிப்பாரும்,  என்னை  அறிவார்  ஒருவரும்  இல்லை;  எனக்கு  அடைக்கலமில்லாமற்போயிற்று;  என்  ஆத்துமாவை  விசாரிப்பார்  ஒருவரும்  இல்லை.  {Ps  142:4}

 

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  நீரே  என்  அடைக்கலமும்,  ஜீவனுள்ளோர்  தேசத்திலே  என்  பங்குமாயிருக்கிறீர்  என்றேன்.  {Ps  142:5}

 

என்  கூக்குரலுக்குச்  செவிகொடும்,  நான்  மிகவும்  தாழ்த்தப்பட்டேன்;  என்னைப்  பின்தொடருகிறவர்களுக்கு  என்னைத்  தப்புவியும்,  அவர்கள்  என்னிலும்  பலவான்களாயிருக்கிறார்கள்.  {Ps  142:6}

 

உமது  நாமத்தை  நான்  துதிக்கும்படி,  என்  ஆத்துமாவைக்  காவலுக்கு  நீங்கலாக்கிவிடும்;  எனக்கு  நீர்  தயவுசெய்யும்போது  நீதிமான்கள்  என்னைச்  சூழ்ந்துகொள்ளுவார்கள்.  {Ps  142:7}

 

கர்த்தாவே,  என்  ஜெபத்தைக்  கேளும்,  என்  விண்ணப்பங்களுக்குச்  செவிகொடும்;  உமது  உண்மையின்படியும்  உமது  நீதியின்படியும்  எனக்கு  உத்தரவு  அருளிச்செய்யும்.  {Ps  143:1}

 

ஜீவனுள்ள  ஒருவனும்  உமக்கு  முன்பாக  நீதிமான்  அல்லாததினாலே,  அடியேனை  நியாயந்தீர்க்கப்  பிரவேசியாதேயும்.  {Ps  143:2}

 

சத்துரு  என்  ஆத்துமாவைத்  தொடர்ந்து,  என்  பிராணனைத்  தரையோடே  நசுக்கி,  வெகுகாலத்துக்குமுன்  மரித்தவர்கள்போல்  என்னை  இருளில்  இருக்கப்பண்ணுகிறான்.  {Ps  143:3}

 

என்  ஆவி  என்னில்  தியங்குகிறது;  என்  இருதயம்  எனக்குள்  சோர்ந்துபோகிறது.  {Ps  143:4}

 

பூர்வநாட்களை  நினைக்கிறேன்,  உமது  செய்கைகளையெல்லாம்  தியானிக்கிறேன்;  உமது  கரத்தின்  கிரியைகளை  யோசிக்கிறேன்.  {Ps  143:5}

 

என்  கைகளை  உமக்கு  நேராக  விரிக்கிறேன்;  வறண்ட  நிலத்தைப்போல்  என்  ஆத்துமா  உம்மேல்  தாகமாயிருக்கிறது.  (சேலா<Selah>.)  {Ps  143:6}

 

கர்த்தாவே,  சீக்கிரமாய்  எனக்குச்  செவிகொடும்,  என்  ஆவி  தொய்ந்துபோகிறது;  நான்  குழியில்  இறங்குகிறவர்களுக்கு  ஒப்பாகாதபடிக்கு,  உமது  முகத்தை  எனக்கு  மறையாதேயும்.  {Ps  143:7}

 

அதிகாலையில்  உமது  கிருபையைக்  கேட்கப்பண்ணும்,  உம்மை  நம்பியிருக்கிறேன்,  நான்  நடக்கவேண்டிய  வழியை  எனக்குக்  காண்பியும்;  உம்மிடத்தில்  என்  ஆத்துமாவை  உயர்த்துகிறேன்.  {Ps  143:8}

 

கர்த்தாவே,  என்  சத்துருக்களுக்கு  என்னைத்  தப்புவியும்;  உம்மைப்  புகலிடமாகக்  கொள்ளுகிறேன்.  {Ps  143:9}

 

உமக்குப்  பிரியமானதைச்  செய்ய  எனக்குப்  போதித்தருளும்,  நீரே  என்  தேவன்;  உம்முடைய  நல்ல  ஆவி  என்னைச்  செம்மையான  வழியிலே  நடத்துவாராக.  {Ps  143:10}

 

கர்த்தாவே,  உம்முடைய  நாமத்தினிமித்தம்  என்னை  உயிர்ப்பியும்;  உம்முடைய  நீதியின்படி  என்  ஆத்துமாவை  இடுக்கத்திற்கு  நீங்கலாக்கிவிடும்.  {Ps  143:11}

 

உம்முடைய  கிருபையின்படி  என்  சத்துருக்களை  அழித்து,  என்  ஆத்துமாவை  ஒடுக்குகிற  யாவரையும்  சங்காரம்பண்ணும்;  நான்  உமது  அடியேன்.  {Ps  143:12}

 

என்  கைகளைப்  போருக்கும்  என்  விரல்களை  யுத்தத்திற்கும்  படிப்பிக்கிற  என்  கன்மலையாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  {Ps  144:1}

 

அவர்  என்  தயாபரரும்,  என்  கோட்டையும்,  என்  உயர்ந்த  அடைக்கலமும்,  என்னை  விடுவிக்கிறவரும்,  என்  கேடகமும்,  நான்  நம்பினவரும்,  என்  ஜனங்களை  எனக்குக்  கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.  {Ps  144:2}

 

கர்த்தாவே,  மனுஷனை  நீர்  கவனிக்கிறதற்கும்,  மனுபுத்திரனை  நீர்  எண்ணுகிறதற்கும்,  அவன்  எம்மாத்திரம்?  {Ps  144:3}

 

மனுஷன்  மாயைக்கு  ஒப்பாயிருக்கிறான்;  அவன்  நாட்கள்  கடந்துபோகிற  நிழலுக்குச்  சமானம்.  {Ps  144:4}

 

கர்த்தாவே,  நீர்  உமது  வானங்களைத்  தாழ்த்தி  இறங்கி,  பர்வதங்கள்  புகையும்படி  அவைகளைத்  தொடும்.  {Ps  144:5}

 

மின்னல்களை  வரவிட்டுச்  சத்துருக்களைச்  சிதறடியும்,  உமது  அம்புகளை  எய்து  அவர்களைக்  கலங்கடியும்.  {Ps  144:6}

 

உயரத்திலிருந்து  உமது  கரத்தை  நீட்டி,  ஜலப்பிரவாகத்துக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்.  {Ps  144:7}

 

மாயையைப்  பேசும்  வாயும்,  கள்ளத்தனமான  வலதுகையும்  உடைய  அந்நிய  புத்திரரின்  கைக்கு  என்னை  விலக்கித்  தப்புவியும்.  {Ps  144:8}

 

கர்த்தாவே,  நான்  உமக்குப்  புதுப்பாட்டைப்  பாடுவேன்;  தம்புரினாலும்  பத்துநரம்பு  வீணையினாலும்  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  144:9}

 

நீரே  ராஜாக்களுக்கு  ஜெயத்தைத்  தந்து,  உமதடியானாகிய  தாவீதைப்<David>  பொல்லாத  பட்டயத்திற்குத்  தப்புவிக்கிறவர்.  {Ps  144:10}

 

மாயையைப்  பேசும்  வாயும்,  கள்ளத்தனமான  வலதுகையும்  உடைய  அந்நிய  புத்திரரின்  கைக்கு  என்னை  விலக்கித்  தப்புவியும்.  {Ps  144:11}

 

அப்பொழுது  எங்கள்  குமாரர்  இளமையில்  ஓங்கிவளருகிற  விருட்சக்கன்றுகளைப்போலவும்,  எங்கள்  குமாரத்திகள்  சித்திரந்தீர்ந்த  அரமனை  மூலைக்கற்களைப்போலவும்  இருப்பார்கள்.  {Ps  144:12}

 

எங்கள்  களஞ்சியங்கள்  சகலவித  வஸ்துக்களையும்  கொடுக்கத்தக்கதாய்  நிரம்பியிருக்கும்;  எங்கள்  கிராமங்களில்  எங்கள்  ஆடுகள்  ஆயிரம்  பதினாயிரமாய்ப்  பலுகும்.  {Ps  144:13}

 

எங்கள்  எருதுகள்  பலத்தவைகளாயிருக்கும்;  சத்துரு  உட்புகுதலும்  குடியோடிப்போகுதலும்  இராது;  எங்கள்  வீதிகளில்  கூக்குரலும்  உண்டாகாது.  {Ps  144:14}

 

இவ்விதமான  சீரைப்பெற்ற  ஜனம்  பாக்கியமுள்ளது;  கர்த்தரைத்  தெய்வமாகக்  கொண்டிருக்கிற  ஜனம்  பாக்கியமுள்ளது.  {Ps  144:15}

 

ராஜாவாகிய  என்  தேவனே,  உம்மை  உயர்த்தி,  உம்முடைய  நாமத்தை  எப்பொழுதும்  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிப்பேன்.  {Ps  145:1}

 

நாடோறும்  உம்மை  ஸ்தோத்திரித்து,  எப்பொழுதும்  என்றென்றைக்கும்  உம்முடைய  நாமத்தைத்  துதிப்பேன்.  {Ps  145:2}

 

கர்த்தர்  பெரியவரும்  மிகவும்  புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்;  அவருடைய  மகத்துவம்  ஆராய்ந்துமுடியாது.  {Ps  145:3}

 

தலைமுறை  தலைமுறையாக  உம்முடைய  கிரியைகளின்  புகழ்ச்சியைச்  சொல்லி,  உம்முடைய  வல்லமையுள்ள  செய்கைகளை  அறிவிப்பார்கள்.  {Ps  145:4}

 

உம்முடைய  சிறந்த  மகிமைப்பிரதாபத்தையும்,  உம்முடைய  அதிசயமான  கிரியைகளையுங்குறித்துப்  பேசுவேன்.  {Ps  145:5}

 

ஜனங்கள்  உம்முடைய  பயங்கரமான  கிரியைகளின்  வல்லமையைச்  சொல்லுவார்கள்;  உம்முடைய  மகத்துவத்தை  நான்  விவரிப்பேன்.  {Ps  145:6}

 

அவர்கள்  உமது  மிகுந்த  தயவை  நினைத்து  வெளிப்படுத்தி,  உமது  நீதியைக்  கெம்பீரித்துப்  பாடுவார்கள்.  {Ps  145:7}

 

கர்த்தர்  இரக்கமும்  மன  உருக்கமும்,  நீடிய  சாந்தமும்  மிகுந்த  கிருபையும்  உள்ளவர்.  {Ps  145:8}

 

கர்த்தர்  எல்லார்மேலும்  தயவுள்ளவர்;  அவர்  இரக்கங்கள்  அவருடைய  எல்லாக்  கிரியைகளின்மேலுமுள்ளது.  {Ps  145:9}

 

கர்த்தாவே,  உம்முடைய  கிரியைகளெல்லாம்  உம்மைத்  துதிக்கும்;  உம்முடைய  பரிசுத்தவான்கள்  உம்மை  ஸ்தோத்திரிப்பார்கள்.  {Ps  145:10}

 

மனுபுத்திரருக்கு  உமது  வல்லமையுள்ள  செய்கைகளையும்,  உமது  ராஜ்யத்தின்  சிறந்த  மகிமைப்பிரதாபத்தையும்  தெரிவிக்கும்படிக்கு;  {Ps  145:11}

 

உமது  ராஜ்யத்தின்  மகிமையை  அறிவித்து,  உமது  வல்லமையைக்  குறித்துப்  பேசுவார்கள்.  {Ps  145:12}

 

உம்முடைய  ராஜ்யம்  சதாகாலங்களிலுமுள்ள  ராஜ்யம்,  உம்முடைய  ஆளுகை  தலைமுறை  தலைமுறையாகவும்  உள்ளது.  {Ps  145:13}

 

கர்த்தர்  விழுகிற  யாவரையும்  தாங்கி,  மடங்கடிக்கப்பட்ட  யாவரையும்  தூக்கிவிடுகிறார்.  {Ps  145:14}

 

எல்லா  ஜீவன்களின்  கண்களும்  உம்மை  நோக்கிக்கொண்டிருக்கிறது;  ஏற்ற  வேளையிலே  நீர்  அவைகளுக்கு  ஆகாரங்கொடுக்கிறீர்.  {Ps  145:15}

 

நீர்  உமது  கையைத்  திறந்து,  சகல  பிராணிகளின்  வாஞ்சையையும்  திருப்தியாக்குகிறீர்.  {Ps  145:16}

 

கர்த்தர்  தமது  வழிகளிலெல்லாம்  நீதியுள்ளவரும்,  தமது  கிரியைகளிலெல்லாம்  கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.  {Ps  145:17}

 

தம்மை  நோக்கிக்  கூப்பிடுகிற  யாவருக்கும்,  உண்மையாய்த்  தம்மை  நோக்கிக்  கூப்பிடுகிற  யாவருக்கும்,  கர்த்தர்  சமீபமாயிருக்கிறார்.  {Ps  145:18}

 

அவர்  தமக்குப்  பயந்தவர்களுடைய  விருப்பத்தின்படி  செய்து,  அவர்கள்  கூப்பிடுதலைக்  கேட்டு,  அவர்களை  இரட்சிக்கிறார்.  {Ps  145:19}

 

கர்த்தர்  தம்மில்  அன்புகூருகிற  யாவரையும்  காப்பாற்றி,  துன்மார்க்கர்  யாவரையும்  அழிப்பார்.  {Ps  145:20}

 

என்  வாய்  கர்த்தரின்  துதியைச்  சொல்வதாக;  மாம்சதேகமுள்ள  யாவும்  அவருடைய  பரிசுத்த  நாமத்தை  எப்பொழுதும்  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கக்கடவது.  {Ps  145:21}

 

அல்லேலூயா<Alleluia>,  என்  ஆத்துமாவே,  கர்த்தரைத்  துதி.  {Ps  146:1}

 

நான்  உயிரோடிருக்குமட்டும்  கர்த்தரைத்  துதிப்பேன்;  நான்  உள்ளளவும்  என்  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Ps  146:2}

 

பிரபுக்களையும்,  இரட்சிக்கத்திராணியில்லாத  மனுபுத்திரனையும்  நம்பாதேயுங்கள்.  {Ps  146:3}

 

அவனுடைய  ஆவி  பிரியும்,  அவன்  தன்  மண்ணுக்குத்  திரும்புவான்;  அந்நாளிலே  அவன்  யோசனைகள்  அழிந்துபோம்.  {Ps  146:4}

 

யாக்கோபின்<Jacob>  தேவனைத்  தன்  துணையாகக்  கொண்டிருந்து,  தன்  தேவனாகிய  கர்த்தர்மேல்  நம்பிக்கையை  வைக்கிறவன்  பாக்கியவான்.  {Ps  146:5}

 

அவர்  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  அவைகளிலுள்ள  யாவையும்  உண்டாக்கினவர்;  அவர்  என்றென்றைக்கும்  உண்மையைக்  காக்கிறவர்.  {Ps  146:6}

 

அவர்  ஒடுக்கப்பட்டவர்களுக்கு  நியாயஞ்செய்கிறார்;  பசியாயிருக்கிறவர்களுக்கு  ஆகாரங்  கொடுக்கிறார்;  கட்டுண்டவர்களைக்  கர்த்தர்  விடுதலையாக்குகிறார்.  {Ps  146:7}

 

குருடரின்  கண்களைக்  கர்த்தர்  திறக்கிறார்;  மடங்கடிக்கப்பட்டவர்களைக்  கர்த்தர்  தூக்கிவிடுகிறார்;  நீதிமான்களைக்  கர்த்தர்  சிநேகிக்கிறார்.  {Ps  146:8}

 

பரதேசிகளைக்  கர்த்தர்  காப்பாற்றுகிறார்;  அவர்  திக்கற்ற  பிள்ளையையும்  விதவையையும்  ஆதரிக்கிறார்;  துன்மார்க்கரின்  வழியையோ  கவிழ்த்துப்போடுகிறார்.  {Ps  146:9}

 

கர்த்தர்  சதாகாலங்களிலும்  அரசாளுகிறார்;  சீயோனே<Zion>,  உன்  தேவன்  தலைமுறை  தலைமுறையாகவும்  ராஜரிகம்பண்ணுகிறார்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  146:10}

 

கர்த்தரைத்  துதியுங்கள்;  நம்முடைய  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுகிறது  நல்லது,  துதித்தலே  இன்பமும்  ஏற்றதுமாயிருக்கிறது.  {Ps  147:1}

 

கர்த்தர்  எருசலேமைக்<Jerusalem>  கட்டுகிறார்;  துரத்துண்ட  இஸ்ரவேலரைக்<Israel>  கூட்டிச்  சேர்க்கிறார்.  {Ps  147:2}

 

இருதயம்  நொறுங்குண்டவர்களைக்  குணமாக்குகிறார்,  அவர்களுடைய  காயங்களைக்  கட்டுகிறார்.  {Ps  147:3}

 

அவர்  நட்சத்திரங்களின்  இலக்கத்தை  எண்ணி,  அவைகளுக்கெல்லாம்  பேரிட்டு  அழைக்கிறார்.  {Ps  147:4}

 

நம்முடைய  ஆண்டவர்  பெரியவரும்  மகா  பெலமுள்ளவருமாயிருக்கிறார்;  அவருடைய  அறிவு  அளவில்லாதது.  {Ps  147:5}

 

கர்த்தர்  சாந்தகுணமுள்ளவர்களை  உயர்த்துகிறார்;  துன்மார்க்கரைத்  தரைமட்டும்  தாழ்த்துகிறார்.  {Ps  147:6}

 

கர்த்தரைத்  துதியுடன்  பாடிக்  கொண்டாடுங்கள்;  நம்முடைய  தேவனைச்  சுரமண்டலத்தால்  கீர்த்தனம்  பண்ணுங்கள்.  {Ps  147:7}

 

அவர்  வானத்தை  மேகங்களால்  மூடி,  பூமிக்கு  மழையை  ஆயத்தப்படுத்தி,  மலைகளில்  புல்லை  முளைப்பிக்கிறார்.  {Ps  147:8}

 

அவர்  மிருகஜீவன்களுக்கும்  கூப்பிடுகிற  காக்கைக்  குஞ்சுகளுக்கும்  ஆகாரங்கொடுக்கிறார்.  {Ps  147:9}

 

அவர்  குதிரையின்  பலத்தில்  விருப்பமாயிரார்;  வீரனுடைய  கால்களில்  பிரியப்படார்.  {Ps  147:10}

 

தமக்குப்  பயந்து,  தமது  கிருபைக்குக்  காத்திருக்கிறவர்கள்மேல்  கர்த்தர்  பிரியமாயிருக்கிறார்.  {Ps  147:11}

 

எருசலேமே<Jerusalem>,  கர்த்தரை  ஸ்தோத்திரி;  சீயோனே<Zion>,  உன்  தேவனைத்  துதி.  {Ps  147:12}

 

அவர்  உன்  வாசல்களின்  தாழ்ப்பாள்களைப்  பலப்படுத்தி,  உன்னிடத்திலுள்ள  உன்  பிள்ளைகளை  ஆசீர்வதிக்கிறார்.  {Ps  147:13}

 

அவர்  உன்  எல்லைகளைச்  சமாதானமுள்ளவைகளாக்கி,  உச்சிதமான  கோதுமையினால்  உன்னைத்  திருப்தியாக்குகிறார்.  {Ps  147:14}

 

அவர்  தமது  வார்த்தையைப்  பூமியிலே  அனுப்புகிறார்;  அவருடைய  சொல்  மகா  தீவிரமாய்ச்  செல்லுகிறது.  {Ps  147:15}

 

பஞ்சைப்போல்  உறைந்த  மழையைத்  தருகிறார்;  சாம்பலைப்போல  உறைந்த  பனியைத்  தூவுகிறார்.  {Ps  147:16}

 

அவர்  தமது  கல்மழையைத்  துணிக்கைகளாக  அனுப்புகிறார்;  அவருடைய  குளிருக்கு  முன்பாக  நிற்பவன்  யார்?  {Ps  147:17}

 

அவர்  தமது  வார்த்தையை  அனுப்பி,  அவைகளை  உருகப்பண்ணுகிறார்;  தமது  காற்றை  வீசும்படி  செய்ய,  தண்ணீர்கள்  ஓடும்.  {Ps  147:18}

 

யாக்கோபுக்குத்<Jacob>  தம்முடைய  வசனங்களையும்,  இஸ்ரவேலுக்குத்<Israel>  தமது  பிரமாணங்களையும்  தமது  நியாயங்களையும்  அறிவிக்கிறார்.  {Ps  147:19}

 

அவர்  வேறே  எந்த  ஜாதிக்கும்  இப்படிச்  செய்ததில்லை;  அவருடைய  நியாயங்களை  அறியாமற்போகிறார்கள்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  147:20}

 

அல்லேலூயா<Alleluia>,  வானங்களில்  உள்ளவைகளே,  கர்த்தரைத்  துதியுங்கள்;  உன்னதங்களில்  அவரைத்  துதியுங்கள்.  {Ps  148:1}

 

அவருடைய  தூதர்களே,  நீங்கள்  யாவரும்  அவரைத்  துதியுங்கள்;  அவருடைய  சேனைகளே,  நீங்கள்  யாவரும்  அவரைத்  துதியுங்கள்.  {Ps  148:2}

 

சூரிய  சந்திரரே,  அவரைத்  துதியுங்கள்;  பிரகாசமுள்ள  சகல  நட்சத்திரங்களே,  அவரைத்  துதியுங்கள்.  {Ps  148:3}

 

வானாதி  வானங்களே,  அவரைத்  துதியுங்கள்;  ஆகாயமண்டலத்தின்மேலுள்ள  தண்ணீர்களே,  அவரைத்  துதியுங்கள்.  {Ps  148:4}

 

அவைகள்  கர்த்தரின்  நாமத்தைத்  துதிக்கக்கடவது;  அவர்  கட்டளையிட  அவைகள்  சிருஷ்டிக்கப்பட்டது.  {Ps  148:5}

 

அவர்  அவைகளை  என்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  நிலைக்கும்படி  செய்தார்;  மாறாத  பிரமாணத்தை  அவைகளுக்கு  நியமித்தார்.  {Ps  148:6}

 

பூமியிலுள்ளவைகளே,  கர்த்தரைத்  துதியுங்கள்;  மகாமச்சங்களே,  சகல  ஆழங்களே,  {Ps  148:7}

 

அக்கினியே,  கல்மழையே,  உறைந்தமழையே,  மூடுபனியே,  அவர்  சொற்படி  செய்யும்  பெருங்காற்றே,  {Ps  148:8}

 

மலைகளே,  சகல  மேடுகளே,  கனிமரங்களே,  சகல  கேதுருக்களே,  {Ps  148:9}

 

காட்டுமிருகங்களே,  சகல  நாட்டு  மிருகங்களே,  ஊரும்  பிராணிகளே,  இறகுள்ள  பறவைகளே,  {Ps  148:10}

 

பூமியின்  ராஜாக்களே,  சகல  ஜனங்களே,  பிரபுக்களே,  பூமியிலுள்ள  சகல  நியாயாதிபதிகளே,  {Ps  148:11}

 

வாலிபரே,  கன்னிகைகளே,  முதிர்வயதுள்ளவர்களே,  பிள்ளைகளே,  கர்த்தரைத்  துதியுங்கள்.  {Ps  148:12}

 

அவர்கள்  கர்த்தரின்  நாமத்தைத்  துதிக்கக்கடவர்கள்;  அவருடைய  நாமம்  மாத்திரம்  உயர்ந்தது;  அவருடைய  மகிமை  பூமிக்கும்  வானத்திற்கும்  மேலானது.  {Ps  148:13}

 

அவர்  தம்முடைய  பரிசுத்தவான்கள்  யாவருக்கும்,  தம்மைச்  சேர்ந்த  ஜனமாகிய  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  கொண்டாட்டமாக,  தம்முடைய  ஜனத்திற்கு  ஒரு  கொம்பை  உயர்த்தினார்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  148:14}

 

அல்லேலூயா<Alleluia>,  கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  பரிசுத்தவான்களின்  சபையிலே  அவருடைய  துதி  விளங்குவதாக.  {Ps  149:1}

 

இஸ்ரவேல்<Israel>  தன்னை  உண்டாக்கினவரில்  மகிழவும்,  சீயோன்<Zion>  குமாரர்  தங்கள்  ராஜாவில்  களிகூரவுங்கடவர்கள்.  {Ps  149:2}

 

அவருடைய  நாமத்தை  நடனத்தோடே  துதித்து,  தம்புரினாலும்  கின்னரத்தினாலும்  அவரைக்  கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.  {Ps  149:3}

 

கர்த்தர்  தம்முடைய  ஜனத்தின்மேல்  பிரியம்  வைக்கிறார்;  சாந்தகுணமுள்ளவர்களை  இரட்சிப்பினால்  அலங்கரிப்பார்.  {Ps  149:4}

 

பரிசுத்தவான்கள்  மகிமையோடே  களிகூர்ந்து,  தங்கள்  படுக்கைகளின்மேல்  கெம்பீரிப்பார்கள்.  {Ps  149:5}

 

ஜாதிகளிடத்தில்  பழிவாங்கவும்,  ஜனங்களைத்  தண்டிக்கவும்,  {Ps  149:6}

 

அவர்களுடைய  ராஜாக்களைச்  சங்கிலிகளாலும்,  அவர்களுடைய  மேன்மக்களை  இருப்பு  விலங்குகளாலும்  கட்டவும்,  எழுதப்பட்ட  நியாயத்தீர்ப்பை  அவர்கள்பேரில்  செலுத்தவும்,  {Ps  149:7}

 

அவர்கள்  வாயில்  கர்த்தரை  உயர்த்தும்  துதியும்,  அவர்கள்  கையில்  இருபுறமும்  கருக்குள்ள  பட்டயமும்  இருக்கும்.  {Ps  149:8}

 

இந்தக்  கனம்  அவருடைய  பரிசுத்தவான்கள்  யாவருக்கும்  உண்டாகும்.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  149:9}

 

அல்லேலூயா<Alleluia>,  தேவனை  அவருடைய  பரிசுத்த  ஸ்தலத்தில்  துதியுங்கள்;  அவருடைய  வல்லமை  விளங்கும்  ஆகாய  விரிவைப்பார்த்து  அவரைத்  துதியுங்கள்.  {Ps  150:1}

 

அவருடைய  வல்லமையுள்ள  கிரியைகளுக்காக  அவரைத்  துதியுங்கள்;  மாட்சிமை  பொருந்திய  அவருடைய  மகத்துவத்திற்காக  அவரைத்  துதியுங்கள்.  {Ps  150:2}

 

எக்காள  தொனியோடே  அவரைத்  துதியுங்கள்;  வீணையோடும்  சுரமண்டலத்தோடும்  அவரைத்  துதியுங்கள்.  {Ps  150:3}

 

தம்புரோடும்  நடனத்தோடும்  அவரைத்  துதியுங்கள்;  யாழோடும்  தீங்குழலோடும்  அவரைத்  துதியுங்கள்.  {Ps  150:4}

 

ஓசையுள்ள  கைத்தாளங்களோடும்  அவரைத்  துதியுங்கள்;  பேரோசையுள்ள  கைத்தாளங்களோடும்  அவரைத்  துதியுங்கள்.  {Ps  150:5}

 

சுவாசமுள்ள  யாவும்  கர்த்தரைத்  துதிப்பதாக.  அல்லேலூயா<Alleluia>.  {Ps  150:6}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!