கர்த்தருடைய தாசனாகிய மோசே<Moses> மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின்<Moses> ஊழியக்காரனான நூனின்<Nun> குமாரன் யோசுவாவை<Joshua> நோக்கி: {Josh 1:1}
என் தாசனாகிய மோசே<Moses> மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்<Jordan> கடந்து, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். {Josh 1:2}
நான் மோசேக்குச்<Moses> சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். {Josh 1:3}
வனாந்தரமும் இந்த லீபனோனும்<Lebanon> தொடங்கி ஐபிராத்து<Euphrates> நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின்<Hittites> தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். {Josh 1:4}
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே<Moses> இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. {Josh 1:5}
பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். {Josh 1:6}
என் தாசனாகிய மோசே<Moses> உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. {Josh 1:7}
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். {Josh 1:8}
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். {Josh 1:9}
அப்பொழுது யோசுவா<Joshua> ஜனங்களின் அதிபதிகளை நோக்கி: {Josh 1:10}
நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக்<Jordan> கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான். {Josh 1:11}
பின்பு யோசுவா<Joshua>: ரூபனியரையும்<Reubenites> காத்தியரையும்<Gadites> மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி: {Josh 1:12}
கர்த்தருடைய தாசனாகிய மோசே<Moses> உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே. {Josh 1:13}
உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே<Moses> உங்களுக்கு யோர்தானுக்கு<Jordan> இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய், {Josh 1:14}
கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே<Moses> உங்களுக்கு யோர்தானுக்கு<Jordan> இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான். {Josh 1:15}
அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப்<Joshua> பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். {Josh 1:16}
நாங்கள் மோசேக்குச்<Moses> செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே<Moses> இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. {Josh 1:17}
நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள். {Josh 1:18}
நூனின்<Nun> குமாரனாகிய யோசுவா<Joshua> சித்தீமிலிருந்து<Shittim> வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும்<Jericho> பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப்<Rahab> என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். {Josh 2:1}
தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல்<Israel> புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின்<Jericho> ராஜாவுக்குச் சொல்லப்பட்டது. {Josh 2:2}
அப்பொழுது எரிகோவின்<Jericho> ராஜா ராகாபண்டைக்கு<Rahab> ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். {Josh 2:3}
அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. {Josh 2:4}
வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். {Josh 2:5}
அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். {Josh 2:6}
அந்த மனுஷர் யோர்தானுக்குப்<Jordan> போகிற வழியில் துறைகள்மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. {Josh 2:7}
அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய், {Josh 2:8}
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். {Josh 2:9}
நீங்கள் எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின்<Red sea> தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு<Jordan> அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின்<Amorites> இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும்<Sihon> ஓகுக்கும்<Og> செய்ததையும் கேள்விப்பட்டோம். {Josh 2:10}
கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். {Josh 2:11}
இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு, {Josh 2:12}
நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள். {Josh 2:13}
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்குத் தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள். {Josh 2:14}
அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள். {Josh 2:15}
அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள். {Josh 2:16}
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள். {Josh 2:17}
இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம். {Josh 2:18}
எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடே வீட்டில் இருக்கிற எவன்மேலாகிலும் கைபோடப்பட்டதேயாகில், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும். {Josh 2:19}
நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள். {Josh 2:20}
அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள். {Josh 2:21}
அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்றுநாள் அங்கே தரித்திருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழியிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள். {Josh 2:22}
அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவினிடத்தில்<Joshua> வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து; {Josh 2:23}
கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள். {Josh 2:24}
And they said unto Joshua, Truly the LORD hath delivered into our hands all the land; for even all the inhabitants of the country do faint because of us. {Josh 2:24}
அதிகாலமே யோசுவா<Joshua> எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல்<Israel> புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து<Shittim> பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும்<Jordan> வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள். {Josh 3:1}
மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய், {Josh 3:2}
ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய<Levites> ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள். {Josh 3:3}
உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். {Josh 3:4}
யோசுவா<Joshua> ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். {Josh 3:5}
பின்பு யோசுவா<Joshua> ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள். {Josh 3:6}
கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: நான் மோசேயோடே<Moses> இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும்<Israel> அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். {Josh 3:7}
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான்<Jordan> தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில்<Jordan> நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். {Josh 3:8}
யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். {Josh 3:9}
பின்பு யோசுவா<Joshua>: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும்<Canaanites> ஏத்தியரையும்<Hittites> ஏவியரையும்<Hivites> பெரிசியரையும்<Perizzites> கிர்காசியரையும்<Girgashites> எமோரியரையும்<Amorites> எபூசியரையும்<Jebusites> உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: {Josh 3:10}
இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே<Jordan> போகிறது. {Josh 3:11}
இப்பொழுதும் இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். {Josh 3:12}
சம்பவிப்பது என்னவென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின்<Jordan> தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின்<Jordan> தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். {Josh 3:13}
ஜனங்கள் யோர்தானைக்<Jordan> கடந்துபோகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்மட்டும்<Jordan> வந்தார்கள். {Josh 3:14}
யோர்தான்<Jordan> அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, {Josh 3:15}
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த<Zaretan> ஆதாம்<Adam> ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல்<salt sea> என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு<Jericho> எதிரே கடந்துபோனார்கள். {Josh 3:16}
சகல ஜனங்களும் யோர்தானைக்<Jordan> கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின்<Jordan> நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும்<Israelites> தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள். {Josh 3:17}
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்<Jordan> கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: {Josh 4:1}
நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, {Josh 4:2}
இங்கே யோர்தானின்<Jordan> நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். {Josh 4:3}
அப்பொழுது யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, {Josh 4:4}
அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின்<Jordan> மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள். {Josh 4:5}
நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, {Josh 4:6}
நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின்<Jordan> தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக்<Jordan> கடந்துபோகிறபோது, யோர்தானின்<Jordan> தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். {Josh 4:7}
யோசுவா<Joshua> கட்டளையிட்டபடி இஸ்ரவேல்<Israel> புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே<Joshua> சொன்னபடியே, இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின்<Jordan> நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள். {Josh 4:8}
யோர்தானின்<Jordan> நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா<Joshua> பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது. {Josh 4:9}
மோசே<Moses> யோசுவாவுக்குக்<Joshua> கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக்<Joshua> கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின்<Jordan> நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள். {Josh 4:10}
ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள். {Josh 4:11}
ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரும் மோசே<Moses> தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். {Josh 4:12}
ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின்<Jericho> சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள். {Josh 4:13}
அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச்<Joshua> சகல இஸ்ரவேலரின்<Israel> கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப்<Moses> பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள். {Josh 4:14}
கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: {Josh 4:15}
சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து<Jordan> கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார். {Josh 4:16}
யோசுவா<Joshua>: யோர்தானிலிருந்து<Jordan> கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான். {Josh 4:17}
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான்<Jordan> நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின்<Jordan> தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது. {Josh 4:18}
இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து<Jordan> கரையேறி, எரிகோவுக்குக்<Jericho> கீழெல்லையான கில்காலிலே<Gilgal> பாளயமிறங்கினார்கள். {Josh 4:19}
அவர்கள் யோர்தானில்<Jordan> எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா<Joshua> கில்காலிலே<Gilgal> நாட்டி, {Josh 4:20}
இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, {Josh 4:21}
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்<Israel> வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக்<Jordan> கடந்துவந்தார்கள். {Josh 4:22}
பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும், {Josh 4:23}
உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின்<Red sea> தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினது போல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின்<Jordan> தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான். {Josh 4:24}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின்<Jordan> தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு<Jordan> மேல்கரையில் குடியிருந்த எமோரியரின்<Amorites> சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின்<Canaanites> சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். {Josh 5:1}
அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல்<Israel> புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். {Josh 5:2}
அப்பொழுது யோசுவா<Joshua> கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல்<Israel> புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான். {Josh 5:3}
யோசுவா<Joshua> இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள். {Josh 5:4}
எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்படாதிருந்தார்கள். {Josh 5:5}
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல்<Israel> புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். {Josh 5:6}
அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா<Joshua> விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம் பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள். {Josh 5:7}
ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள்தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள். {Josh 5:8}
கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: இன்று எகிப்தின்<Egypt> நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால்<Gilgal> என்னப்படுகிறது. {Josh 5:9}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கில்காலில்<Gilgal> பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின்<Jericho> சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள். {Josh 5:10}
பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். {Josh 5:11}
அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா<manna> பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு மன்னா<manna> இல்லாமற்போய், அவர்கள் கானான்<Canaan> தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள். {Josh 5:12}
பின்னும் யோசுவா<Joshua> எரிகோவின்<Jericho> வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா<Joshua> அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். {Josh 5:13}
அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா<Joshua> தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். {Josh 5:14}
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை<Joshua> நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா<Joshua> அப்படியே செய்தான். {Josh 5:15}
எரிகோ<Jericho> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. {Josh 6:1}
கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: இதோ, எரிகோவையும்<Jericho> அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். {Josh 6:2}
யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள். {Josh 6:3}
ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். {Josh 6:4}
அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காளசத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார். {Josh 6:5}
அந்தப்படியே நூனின்<Nun> குமாரனாகிய யோசுவா<Joshua> ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; {Josh 6:6}
ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான். {Josh 6:7}
யோசுவா<Joshua> ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது. {Josh 6:8}
எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்சென்றது. {Josh 6:9}
யோசுவா<Joshua> ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். {Josh 6:10}
அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள். {Josh 6:11}
யோசுவா<Joshua> அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். {Josh 6:12}
தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது. {Josh 6:13}
இரண்டாம்நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள். {Josh 6:14}
ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்; அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள். {Josh 6:15}
ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா<Joshua> ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். {Josh 6:16}
ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப்<Rahab> என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள். {Josh 6:17}
சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல்<Israel> பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். {Josh 6:18}
சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான். {Josh 6:19}
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து, {Josh 6:20}
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள். {Josh 6:21}
யோசுவா<Joshua>, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். {Josh 6:22}
அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும்<Rahab> அவள் தகப்பனையும் அவள் தாயையும் சகோதரர்களையும் அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல்<Israel> பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். {Josh 6:23}
பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். {Josh 6:24}
எரிகோவை<Jericho> வேவுபார்க்க யோசுவா<Joshua> அனுப்பின ஆட்களை ராகாப்<Rahab> என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா<Joshua> உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின்<Israel> நடுவிலே குடியிருக்கிறாள். {Josh 6:25}
அக்காலத்திலே யோசுவா<Joshua>: இந்த எரிகோ<Jericho> பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான். {Josh 6:26}
இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட<Joshua> இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. {Josh 6:27}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச்<Judah> சேராகுடைய<Zerah> குமாரனாகிய சப்தியின்<Zabdi> மகன் கர்மீக்குப்<Carmi> பிறந்த ஆகான்<Achan> என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல்<Israel> புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. {Josh 7:1}
யோசுவா<Joshua> எரிகோவிலிருந்து<Jericho> பெத்தேலுக்குக்<Bethel> கிழக்கிலுள்ள பெத்தாவேன்<Bethaven> சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப்<Ai> போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய், ஆயியை<Ai> வேவுபார்த்து, {Josh 7:2}
யோசுவாவினிடத்தில்<Joshua> திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை<Ai> முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். {Josh 7:3}
அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின்<Ai> மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். {Josh 7:4}
ஆயியின்<Ai> மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும்<Shebarim> அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று. {Josh 7:5}
அப்பொழுது யோசுவா<Joshua> தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின்<Israel> மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். {Josh 7:6}
யோசுவா<Joshua>: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்<Amorites> கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக்<Jordan> கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு<Jordan> அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும். {Josh 7:7}
ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்<Israel> தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். {Josh 7:8}
கானானியரும்<Canaanites> தேசத்துக் குடிகள் யாவரும் இதைக் கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான். {Josh 7:9}
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? {Josh 7:10}
இஸ்ரவேலர்<Israel> பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே. {Josh 7:11}
ஆதலால் இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன். {Josh 7:12}
எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே<Israel>, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். {Josh 7:13}
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். {Josh 7:14}
அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே<Israel> மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார். {Josh 7:15}
யோசுவா<Joshua> அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக்<Israel> கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின்<Judah> கோத்திரம் குறிக்கப்பட்டது. {Josh 7:16}
அவன் யூதாவின்<Judah> வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின்<Zarhites> வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின்<Zarhites> வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி<Zabdi> குறிக்கப்பட்டான். {Josh 7:17}
அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா<Judah> கோத்திரத்துச் சேராகின்<Zerah> குமாரனாகிய சப்திக்குப்<Zabdi> பிறந்த கர்மீயின்<Carmi> மகன் ஆகான்<Achan> குறிக்கப்பட்டான். {Josh 7:18}
அப்பொழுது யோசுவா<Joshua> ஆகானை<Achan> நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான். {Josh 7:19}
அப்பொழுது ஆகான்<Achan> யோசுவாவுக்குப்<Joshua> பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். {Josh 7:20}
கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய<Babylonish> சால்வையையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். {Josh 7:21}
உடனே யோசுவா<Joshua> ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது. {Josh 7:22}
அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும்<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள். {Josh 7:23}
அப்பொழுது யோசுவாவும்<Joshua> இஸ்ரவேலரெல்லாருங்கூடச்<Israel> சேராகின்<Zerah> புத்திரனாகிய ஆகானையும்<Achan>, அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர்<Achor> பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். {Josh 7:24}
அங்கே யோசுவா<Joshua>: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும்<Israel> அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; {Josh 7:25}
அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர்<Achor> பள்ளத்தாக்கு என்னப்படும். {Josh 7:26}
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல்<Ai> போ, இதோ, ஆயியின்<Ai> ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். {Josh 8:1}
நீ எரிகோவுக்கும்<Jericho> அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும்<Ai> அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார். {Josh 8:2}
அப்பொழுது ஆயியின்மேல்<Ai> போக, யோசுவாவும்<Joshua> சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா<Joshua> யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி, {Josh 8:3}
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள். {Josh 8:4}
நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். {Josh 8:5}
அப்பொழுது அவர்கள்: முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம். {Josh 8:6}
அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார். {Josh 8:7}
நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி, {Josh 8:8}
அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும்<Bethel> ஆயிக்கும்<Ai> நடுவே, ஆயிக்கு<Ai> மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா<Joshua> அன்றுராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான். {Josh 8:9}
அதிகாலமே யோசுவா<Joshua> எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின்<Israel> மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல்<Ai> போனான். {Josh 8:10}
அவனோடிருந்த யுத்தஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு<Ai> வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும்<Ai> நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. {Josh 8:11}
அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும்<Bethel> ஆயிக்கும்<Ai> நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான். {Josh 8:12}
பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம்பண்ணினபின்பு, யோசுவா<Joshua> அன்று ராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான். {Josh 8:13}
ஆயியின்<Ai> ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு<Israel> எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான். {Josh 8:14}
யோசுவாவும்<Joshua> இஸ்ரவேலர்<Israel> எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள். {Josh 8:15}
அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப்<Joshua> பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள். {Josh 8:16}
ஆயியிலும்<Ai> பெத்தேலிலும்<Bethel> இஸ்ரவேலரைப்<Israel> பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத்<Israel> துரத்திக்கொண்டு போனார்கள். {Josh 8:17}
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு<Ai> நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா<Joshua> தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான். {Josh 8:18}
அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள். {Josh 8:19}
ஆயியின்<Ai> மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த் திரும்பினார்கள். {Josh 8:20}
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும்<Joshua> இஸ்ரவேலரும்<Israel> பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின்<Ai> மனுஷரை முறிய அடித்தார்கள். {Josh 8:21}
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின்<Israel> நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு, {Josh 8:22}
ஆயியின்<Ai> ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில்<Joshua> கொண்டுவந்தார்கள். {Josh 8:23}
இஸ்ரவேலர்<Israel> வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின்<Ai> குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர்<Israelites> எல்லாரும் ஆயிக்குத்<Ai> திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள். {Josh 8:24}
அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின்<Ai> மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள். {Josh 8:25}
ஆயியின்<Ai> குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா<Joshua> ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை. {Josh 8:26}
கர்த்தர் யோசுவாவுக்குக்<Joshua> கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர்<Israel> எடுத்துக்கொண்டார்கள். {Josh 8:27}
யோசுவா<Joshua> ஆயியைச்<Ai> சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி, {Josh 8:28}
ஆயியின்<Ai> ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா<Joshua> அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள். {Josh 8:29}
அப்பொழுது யோசுவா<Joshua>: கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின்<Moses> நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால்<Ebal> பர்வதத்தில் இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். {Josh 8:30}
அதின்மேல் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள். {Josh 8:31}
இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாக மோசே<Moses> எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான். {Josh 8:32}
இஸ்ரவேல்<Israel> ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர்<Israel> எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில்<Israel> பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான<Levites> ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம்<Gerizim> மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால்<Ebal> மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள். {Josh 8:33}
அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். {Josh 8:34}
மோசே<Moses> கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா<Joshua>, இஸ்ரவேலின்<Israel> முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான். {Josh 8:35}
யோர்தானுக்கு<Jordan> இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு<Lebanon> எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும்<Hittite> எமோரியரும்<Amorite> கானானியரும்<Canaanite> பெரிசியரும்<Perizzite> ஏவியரும்<Hivite> எபூசியருமானவர்களுடைய<Jebusite> சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, {Josh 9:1}
அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும்<Joshua> இஸ்ரவேலரோடும்<Israel> யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள். {Josh 9:2}
எரிகோவுக்கும்<Jericho> ஆயிக்கும்<Ai> யோசுவா<Joshua> செய்ததைக் கிபியோனின்<Gibeon> குடிகள் கேள்விப்பட்டபோது, {Josh 9:3}
ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து, {Josh 9:4}
பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது. {Josh 9:5}
அவர்கள் கில்காலில்<Gilgal> இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில்<Joshua> போய், அவனையும் இஸ்ரவேல்<Israel> மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள். {Josh 9:6}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> மனுஷர் அந்த ஏவியரை<Hivites> நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கைபண்ணலாம் என்றார்கள். {Josh 9:7}
அவர்கள் யோசுவாவை<Joshua> நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா<Joshua>: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். {Josh 9:8}
அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே<Egypt> செய்த யாவையும், {Josh 9:9}
அவர் எஸ்போனின்<Heshbon> ராஜாவாகிய சீகோனும்<Sihon> அஸ்தரோத்திலிருந்த<Ashtaroth> பாசானின்<Bashan> ராஜாவாகிய ஓகும்<Og> என்கிற யோர்தானுக்கு<Jordan> அப்புறத்திலிருந்த எமோரியரின்<Amorites> இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். {Josh 9:10}
ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். {Josh 9:11}
உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. {Josh 9:12}
நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள். {Josh 9:13}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel>: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள். {Josh 9:14}
யோசுவா<Joshua> அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள். {Josh 9:15}
அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். {Josh 9:16}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன்<Gibeon>, கெபிரா<Chephirah>, பெயெரோத்<Beeroth>, கீரியாத்யெயாரீம்<Kirjathjearim> என்பவைகள். {Josh 9:17}
சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள். {Josh 9:18}
அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக்கூடாது. {Josh 9:19}
கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம். {Josh 9:20}
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள். {Josh 9:21}
பின்பு யோசுவா<Joshua> அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன? {Josh 9:22}
இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான். {Josh 9:23}
அவர்கள் யோசுவாவுக்குப்<Joshua> பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக்<Moses> கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம். {Josh 9:24}
இப்போதும், இதோ, உமது கையிலிருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள். {Josh 9:25}
அப்படியே யோசுவா<Joshua> அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான். {Josh 9:26}
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான். {Josh 9:27}
யோசுவா<Joshua> ஆயியைப்<Ai> பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும்<Jericho> அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும்<Ai> அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின்<Gibeon> குடிகள் இஸ்ரவேலோடே<Israel> சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின்<Jerusalem> ராஜாவாகிய அதோனிசேதேக்<Adonizedek> கேள்விப்பட்டபோது, {Josh 10:1}
கிபியோன்<Gibeon> ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும்<Ai> பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். {Josh 10:2}
ஆகையால், எருசலேமின்<Jerusalem> ராஜாவாகிய அதோனிசேதேக்<Adonizedek> எபிரோனின்<Hebron> ராஜாவாகிய ஓகாமுக்கும்<Hoham>, யர்மூத்தின்<Jarmuth> ராஜாவாகிய பீராமுக்கும்<Piram>, லாகீசின்<Lachish> ராஜாவாகிய யப்பியாவுக்கும்<Japhia>, எக்லோனின்<Eglon> ராஜாவாகிய தெபீருக்கும்<Debir> ஆள் அனுப்பி: {Josh 10:3}
நாங்கள் கிபியோனைச்<Gibeon> சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும்<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான். {Josh 10:4}
அப்படியே எருசலேமின்<Jerusalem> ராஜா, எபிரோனின்<Hebron> ராஜா, யர்மூத்தின்<Jarmuth> ராஜா, லாகீசின்<Lachish> ராஜா, எக்லோனின்<Eglon> ராஜா என்கிற எமோரியரின்<Amorites> ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு<Gibeon> முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள். {Josh 10:5}
அப்பொழுது கிபியோனின்<Gibeon> மனுஷர் கில்காலிலிருக்கிற<Gilgal> பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில்<Joshua> ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை ரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின்<Amorites> ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச்சொன்னார்கள். {Josh 10:6}
உடனே யோசுவாவும்<Joshua> அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து<Gilgal> போனார்கள். {Josh 10:7}
கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். {Josh 10:8}
யோசுவா<Joshua> கில்காலிலிருந்து<Gilgal> இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான். {Josh 10:9}
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே<Gibeon> மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப்<Bethhoron> போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும்<Azekah> மக்கெதாமட்டும்<Makkedah> முறிய அடித்தார்கள். {Josh 10:10}
அவர்கள் பெத்தொரோனிலிருந்து<Bethhoron> இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும்<Azekah> ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். {Josh 10:11}
கர்த்தர் எமோரியரை<Amorites> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா<Joshua> கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின்<Israel> கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும்<Gibeon>, சந்திரனே, நீ ஆயலோன்<Ajalon> பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான். {Josh 10:12}
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின்<Jasher> புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுதும் நடுவானத்தில் நின்றது. {Josh 10:13}
இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக<Israel> யுத்தம்பண்ணினார். {Josh 10:14}
பின்பு யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற<Gilgal> பாளயத்துக்குத் திரும்பினான். {Josh 10:15}
அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற<Makkedah> ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள். {Josh 10:16}
ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற<Makkedah> ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு<Joshua> அறிவிக்கப்பட்டது. {Josh 10:17}
அப்பொழுது யோசுவா<Joshua>: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள். {Josh 10:18}
நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான். {Josh 10:19}
யோசுவாவும்<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள். {Josh 10:20}
ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற<Makkedah> பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத்<Joshua> திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை. {Josh 10:21}
அப்பொழுது யோசுவா<Joshua>: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான். {Josh 10:22}
அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின்<Jerusalem> ராஜாவும், எபிரோனின்<Hebron> ராஜாவும், யர்மூத்தின்<Jarmuth> ராஜாவும், லாகீசின்<Lachish> ராஜாவும், எக்லோனின்<Eglon> ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள். {Josh 10:23}
அவர்களை யோசுவாவினிடத்திற்குக்<Joshua> கொண்டுவந்தபோது, யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்டவந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். {Josh 10:24}
அப்பொழுது யோசுவா<Joshua> அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான். {Josh 10:25}
அதற்குப்பின்பு யோசுவா<Joshua> அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள். {Josh 10:26}
சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா<Joshua> அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் கெபியின் வாயிலே அடைத்தார்கள். {Josh 10:27}
அந்நாளிலே யோசுவா<Joshua> மக்கெதாவைப்<Makkedah> பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின்<Jericho> ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின்<Makkedah> ராஜாவுக்கும் செய்தான். {Josh 10:28}
மக்கெதாவிலிருந்து<Makkedah> யோசுவா<Joshua> இஸ்ரவேலர்<Israel> அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப்<Libnah> புறப்பட்டு, லிப்னாவின்மேல்<Libnah> யுத்தம்பண்ணினான். {Josh 10:29}
கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின்<Israel> கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின்<Jericho> ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான். {Josh 10:30}
லிப்னாவிலிருந்து<Libnah> யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> அனைத்தோடுங்கூட லாகீசுக்குப்<Lachish> புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான். {Josh 10:31}
கர்த்தர் லாகீசை<Lachish> இஸ்ரவேலின்<Israel> கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச்<Libnah> செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான். {Josh 10:32}
அப்பொழுது கேசேரின்<Gezer> ராஜாவாகிய ஓராம்<Horam> லாகீசுக்குத்<Lachish> துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா<Joshua> அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான். {Josh 10:33}
லாகீசிலிருந்து<Lachish> யோசுவாவும்<Joshua> இஸ்ரவேலர்<Israel> அனைவரும் எக்லோனுக்குப்<Eglon> புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி, {Josh 10:34}
அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச்<Lachish> செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான். {Josh 10:35}
பின்பு எக்லோனிலிருந்து<Eglon> யோசுவாவும்<Joshua> இஸ்ரவேலர்<Israel> அனைவருமாய் எபிரோனுக்குப்<Hebron> புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி, {Josh 10:36}
அதைப் பிடித்து, எக்லோனுக்குச்<Eglon> செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான். {Josh 10:37}
பின்பு யோசுவா<Joshua> இஸ்ரவேலர்<Israel> அனைவரோடுங்கூடத் தெபீருக்குத்<Debir> திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, {Josh 10:38}
அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும்<Hebron> லிப்னாவுக்கும்<Libnah> அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும்<Debir> அதின் ராஜாவுக்கும் செய்தான். {Josh 10:39}
இப்படியே யோசுவா<Joshua> மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி, {Josh 10:40}
காதேஸ்பர்னேயாதுவக்கிக்<Kadeshbarnea> காத்சாமட்டும்<Gaza> இருக்கிறதையும் கிபியோன்மட்டும்<Gibeon> இருக்கிற கோசேன்<Goshen> தேசம் அனைத்தையும் அழித்தான். {Josh 10:41}
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா<Joshua> ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக<Israel> யுத்தம்பண்ணினார். {Josh 10:42}
பின்பு யோசுவா<Joshua> இஸ்ரவேலனைத்தோடும்கூடக்<Israel> கில்காலிலிருக்கிற<Gilgal> பாளயத்துக்குத் திரும்பினான். {Josh 10:43}
ஆத்சோரின்<Hazor> ராஜாவாகிய யாபீன்<Jabin> அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின்<Madon> ராஜாவாகிய யோபாபிடத்திற்கும்<Jobab>, சிம்ரோனின்<Shimron> ராஜாவிடத்திற்கும், அக்சாபின்<Achshaph> ராஜாவிடத்திற்கும், {Josh 11:1}
வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரோத்துக்குத்<Chinneroth> தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும்<Dor> இருக்கிற ராஜாக்களிடத்திற்கும், {Josh 11:2}
கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும்<Canaanite>, மலைகளிலிருக்கிற எமோரியர்<Amorite>, ஏத்தியர்<Hittite>, பெரிசியர்<Perizzite>, எபூசியரிடத்திற்கும்<Jebusite>, எர்மோன்<Hermon> மலையின் அடியிலே மிஸ்பா<Mizpeh> சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும்<Hivite> ஆள் அனுப்பினான். {Josh 11:3}
அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள். {Josh 11:4}
இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே<Israel> யுத்தம்பண்ணவந்து, மேரோம்<Merom> என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள். {Josh 11:5}
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார். {Josh 11:6}
யோசுவாவும்<Joshua>, அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம்<Merom> ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள். {Josh 11:7}
கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின்<Israel> கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும்<Zidon> மிஸ்ரபோத்மாயீம்மட்டும்<Misrephothmaim>, கிழக்கேயிருக்கிற மிஸ்பே<Mizpeh> பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள். {Josh 11:8}
யோசுவா<Joshua> கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான். {Josh 11:9}
அக்காலத்திலே யோசுவா<Joshua> திரும்பி, ஆத்சோரைப்<Hazor> பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர்<Hazor> முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது. {Josh 11:10}
அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ<Hazor> அக்கினியால் சுட்டெரித்தான். {Josh 11:11}
அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா<Joshua> பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே<Moses> கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான். {Josh 11:12}
ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்<Israel> சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம்<Hazor> யோசுவா<Joshua> சுட்டெரித்துப்போட்டான். {Josh 11:13}
அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருள்களையும் இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை. {Josh 11:14}
கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு<Moses> எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே<Moses> யோசுவாவுக்குக்<Joshua> கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா<Joshua> செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை. {Josh 11:15}
இந்தப்பிரகாரமாக யோசுவா<Joshua> சேயீருக்கு<Seir> ஏறிப்போகிற ஆலாக்<Halak> மலைதுவக்கி லீபனோனின்<Lebanon> பள்ளத்தாக்கில் எர்மோன்<Hermon> மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள<Baalgad> அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் யாவையும், கோசேன்<Goshen> தேசத்தையும், சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின்<Israel> மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு, {Josh 11:16}
அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்று போட்டான். {Josh 11:17}
யோசுவா<Joshua> நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான். {Josh 11:18}
கிபியோனின்<Gibeon> குடிகளாகிய ஏவியரைத்<Hivites> தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள். {Josh 11:19}
யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு<Israel> எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. {Josh 11:20}
அக்காலத்திலே யோசுவா<Joshua> போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும்<Hebron> தெபீரிலும்<Debir> ஆனாபிலும்<Anab> யூதாவின்<Judah> சகல மலைகளிலும் இஸ்ரவேலின்<Israel> சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை<Anakims> நிக்கிரகம்பண்ணி, அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான். {Josh 11:21}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர்<Anakims> ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும்<Gaza> காத்திலும்<Gath> அஸ்தோத்திலும்மாத்திரம்<Ashdod> சிலர் மீதியாயிருந்தார்கள். {Josh 11:22}
அப்படியே யோசுவா<Joshua>, கர்த்தர் மோசேயினிடத்தில்<Moses> சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு<Israel>, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது. {Josh 11:23}
யோர்தானுக்கு<Jordan> அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன்<Arnon> ஆறு துவக்கி எர்மோன்<Hermon> மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல்<Israel> புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். {Josh 12:1}
அந்த ராஜாக்களில், எஸ்போனில்<Heshbon> குடியிருந்த எமோரியரின்<Amorites> ராஜாவாகிய சீகோன்<Sihon>, அர்னோன்<Arnon> ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர்<Aroer> தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட<Gilead> அம்மோன்<Ammon> புத்திரரின் எல்லையான யாபோக்கு<Jabbok> ஆறுமட்டுமுள்ள தேசத்தையும், {Josh 12:2}
சமனான வெளி துவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத்<Chinneroth> கடல்மட்டும் பெத்யெசிமோத்<Bethjeshimoth> வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும்<salt sea> இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத்<Ashdothpisgah> தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான். {Josh 12:3}
இராட்சதரில் மீதியான பாசானின்<Bashan> ராஜாவாகிய ஓகின்<Og> எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும்<Ashtaroth> எத்ரேயிலும்<Edrei> வாசம்பண்ணி, {Josh 12:4}
எர்மோன்<Hermon> மலையையும் சல்காவையும்<Salcah>, கெசூரியர்<Geshurites>, மாகாத்தியர்<Maachathites> எல்லைமட்டும் எஸ்போனின்<Heshbon> ராஜாவாகிய சீகோனின்<Sihon> எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும்<Gilead> இருக்கும் பாசான்<Bashan> அனைத்தையும் ஆண்டான். {Josh 12:5}
அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும்<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> ரூபனியருக்கும்<Reubenites> காத்தியருக்கும்<Gadites> மனாசேயின்<Manasseh> பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான். {Josh 12:6}
யோர்தானுக்கு<Jordan> இப்புறத்திலே மேற்கே லீபனோனின்<Lebanon> பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு<Baalgad> சேயீருக்கு<Seir> ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும்<Halak>, மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும், {Josh 12:7}
யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்<Hittites>, எமோரியர்<Amorites>, கானானியர்<Canaanites>, பெரிசியர்<Perizzites>, ஏவியர்<Hivites>, எபூசியர்<Jebusites> என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும்<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்: {Josh 12:8}
எரிகோவின்<Jericho> ராஜா ஒன்று, பெத்தேலுக்கு<Bethel> அருகான ஆயியின்<Ai> ராஜா ஒன்று, {Josh 12:9}
எருசலேமின்<Jerusalem> ராஜா ஒன்று, எபிரோனின்<Hebron> ராஜா ஒன்று, {Josh 12:10}
யர்மூத்தின்<Jarmuth> ராஜா ஒன்று, லாகீசின்<Lachish> ராஜா ஒன்று, {Josh 12:11}
எக்லோனின்<Eglon> ராஜா ஒன்று, கேசேரின்<Gezer> ராஜா ஒன்று, {Josh 12:12}
தெபீரின்<Debir> ராஜா ஒன்று, கெதேரின்<Geder> ராஜா ஒன்று, {Josh 12:13}
ஒர்மாவின்<Hormah> ராஜா ஒன்று, ஆராதின்<Arad> ராஜா ஒன்று, {Josh 12:14}
லிப்னாவின்<Libnah> ராஜா ஒன்று, அதுல்லாமின்<Adullam> ராஜா ஒன்று, {Josh 12:15}
மக்கேதாவின்<Makkedah> ராஜா ஒன்று, பெத்தேலின்<Bethel> ராஜா ஒன்று, {Josh 12:16}
தப்புவாவின்<Tappuah> ராஜா ஒன்று, எப்பேரின்<Hepher> ராஜா ஒன்று, {Josh 12:17}
ஆப்பெக்கின்<Aphek> ராஜா ஒன்று, லசரோனின்<Lasharon> ராஜா ஒன்று, {Josh 12:18}
மாதோனின்<Madon> ராஜா ஒன்று, ஆத்சோரின்<Hazor> ராஜா ஒன்று, {Josh 12:19}
சிம்ரோன் மேரோனின்<Shimronmeron> ராஜா ஒன்று, அக்சாபின்<Achshaph> ராஜா ஒன்று, {Josh 12:20}
தானாகின்<Taanach> ராஜா ஒன்று, மெகிதோவின்<Megiddo> ராஜா ஒன்று, {Josh 12:21}
கேதேசின்<Kedesh> ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த<Carmel> யொக்னியாமின்<Jokneam> ராஜா ஒன்று, {Josh 12:22}
தோரின்<Dor> கரையைச் சேர்ந்த தோரின்<Dor> ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த<Gilgal> ஜாதிகளின் ராஜா ஒன்று, {Josh 12:23}
திர்சாவின்<Tirzah> ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள். {Josh 12:24}
யோசுவா<Joshua> வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது. {Josh 13:1}
மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு<Egypt> எதிரான சீகோர்<Sihor> ஆறுதுவக்கிக் கானானியரைச்<Canaanite> சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின்<Ekron> எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின்<Philistines> எல்லா எல்லைகளும், கெசூரிம்<Geshuri> முழுவதும், {Josh 13:2}
காசா<Gazathites>, அஸ்தோத்<Ashdothites>, அஸ்கலோன்<Eshkalonites>, காத்<Gittites>, எக்ரோன்<Ekronites> என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய<Philistines> ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின்<Avites> நாடும், {Josh 13:3}
தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும்<Aphek> எமோரியர்<Amorites> எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின்<Canaanites> சகல தேசமும், சீதோனியருக்கடுத்த<Sidonians> மெயாரா<Mearah> நாடும், {Josh 13:4}
கிப்லியரின்<Giblites> நாடும், சூரியோதயப் புறத்தில் எர்மோன்<Hermon> மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத்<Baalgad> முதற்கொண்டு ஆமாத்துக்குள்<Hamath> பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன்<Lebanon> முழுவதும், {Josh 13:5}
லீபனோன்<Lebanon> துவக்கி மிஸ்ரபோத்மாயீம்மட்டும்<Misrephothmaim> மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய<Sidonians> எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச்<Israelites> சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும். {Josh 13:6}
ஆதலால் இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின்<Manasseh> பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார். {Josh 13:7}
மனாசேயின்<Manasseh> பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும்<Reubenites> காத்தியரும்<Gadites> தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> யோர்தானுக்கு<Jordan> அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான். {Josh 13:8}
அர்னோன்<Arnon> ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும்<Aroer>, நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற<Dibon> மெதெபாவின்<Medeba> சமனான பூமி யாவையும், {Josh 13:9}
எஸ்போனிலிருந்து<Heshbon> அம்மோன்<Ammon> புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின்<Amorites> ராஜாவாகிய சீகோனுக்குரிய<Sihon> சகல பட்டணங்களையும், {Josh 13:10}
கீலேயாத்தையும்<Gilead>, கெசூரியர்<Geshurites> மாகாத்தியருடைய<Maachathites> எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன்<Hermon> மலை முழுவதையும், {Josh 13:11}
அஸ்தரோத்திலும்<Ashtaroth> எத்ரேயிலும்<Edrei> ஆண்டு, மோசே<Moses> முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின்<Bashan> ராஜாவாகிய ஓகுக்குச்<Og> சல்காமட்டுமிருந்த<Salcah> பாசான்<Bashan> முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான். {Josh 13:12}
இஸ்ரவேல்<Israel> புத்திரரோ கெசூரியரையும்<Geshurites> மாகாத்தியரையும்<Maachathites> துரத்திவிடவில்லை, கெசூரியரும்<Geshurites> மாகாத்தியரும்<Maachathites> இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின்<Israelites> நடுவே குடியிருக்கிறார்கள். {Josh 13:13}
லேவியரின்<Levi> கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம். {Josh 13:14}
மோசே<Moses> ரூபன்<Reuben> புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான். {Josh 13:15}
அர்னோன்<Arnon> ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும்<Aroer>, ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள<Medeba> சமபூமி முழுவதும், {Josh 13:16}
சமபூமியிலிருக்கிற எஸ்போனும்<Heshbon>, அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன்<Dibon>, பாமோத்பாகால்<Bamothbaal>, பெத்பாகால்மெயோன்<Bethbaalmeon>, {Josh 13:17}
யாகசா<Jahazah>, கெதெமோத்<Kedemoth>, மேபாகாத்<Mephaath>, {Josh 13:18}
கீரியாத்தாயீம்<Kirjathaim>, சிப்மா<Sibmah>, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்<Zarethshahar>, {Josh 13:19}
பெத்பேயோர்<Bethpeor>, அஸ்தோத்பிஸ்கா<Ashdothpisgah>, பெத்யெசிமோத்<Bethjeshimoth> முதலான {Josh 13:20}
சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில்<Heshbon> ஆண்டிருந்த சீகோன்<Sihon> என்னும் எமோரியருடைய<Amorites> ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும்<Sihon>, தேசத்திலே குடியிருந்து சீகோனின்<Sihon> அதிபதியாயிருந்த ஏவி<Evi>, ரெக்கேம்<Rekem>, சூர்<Zur>, ஊர்<Hur>, ரேபா<Reba> என்னும் மீதியானின்<Midian> பிரபுக்களையும் மோசே<Moses> வெட்டிப்போட்டான். {Josh 13:21}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின்<Beor> குமாரனாகிய பாலாம்<Balaam> என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். {Josh 13:22}
அப்படியே யோர்தானும்<Jordan> அதற்கடுத்ததும் ரூபன்<Reuben> புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன்<Reuben> புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம். {Josh 13:23}
காத்<Gad> புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே<Moses> அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்: {Josh 13:24}
யாசேரும்<Jazer>, கீலேயாத்தின்<Gilead> சகல பட்டணங்களும், ரபாவுக்கு<Rabbah> எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள<Aroer> அம்மோன்<Ammon> புத்திரரின் பாதித் தேசமும், {Josh 13:25}
எஸ்போன்<Heshbon> துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும்<Ramathmizpeh> பெத்தொனீம்வரைக்கும்<Betonim> இருக்கிறதும், மகனாயீம்<Mahanaim> துவக்கித் தெபீரின்<Debir> எல்லைமட்டும் இருக்கிறதும், {Josh 13:26}
எஸ்போனின்<Heshbon> ராஜாவாகிய சீகோனுடைய<Sihon> ராஜ்யத்தின் மற்றப் பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும்<Betharam>, பெத்நிம்ராவும்<Bethnimrah>, சுக்கோத்தும்<Succoth>, சாப்போனும்<Zaphon>, யோர்தான்மட்டும்<Jordan> இருக்கிறதும், கிழக்கே யோர்தானின்<Jordan> கரையோரமாய்க் கின்னரேத்<Chinnereth> கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. {Josh 13:27}
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத்<Gad> புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம். {Josh 13:28}
மனாசே<Manasseh> புத்திரரின் பாதிக் கோத்திரத்துக்கும் மோசே<Moses> அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான். {Josh 13:29}
And gave inheritance unto the half tribe of : and this was the possession of the half tribe of the children of Manasseh by their families. {Josh 13:29}
மகனாயீம்<Mahanaim> துவக்கி, பாசானின்<Bashan> ராஜாவாகிய ஓகின்<Og> முழு ராஜ்யமாயிருக்கிற பாசான்<Bashan> முழுவதும், பாசானிலுள்ள<Bashan> யாவீரின்<Jair> சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. {Josh 13:30}
பாதிக் கீலேயாத்தையும்<Gilead>, பாசானிலே<Bashan> அஸ்தரோத்<Ashtaroth>, எத்ரேயி<Edrei> என்னும் ஓகு<Og> ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீரின்<Machir> புத்திரர் பாதிபேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான். {Josh 13:31}
மோசே<Moses> கிழக்கே எரிகோவின்<Jericho> அருகே யோர்தானுக்கு<Jordan> அக்கரையிலிருக்கிற மோவாபின்<Moab> சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே. {Josh 13:32}
லேவி<Levi> கோத்திரத்திற்கு மோசே<Moses> சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம். {Josh 13:33}
கானான்<Canaan> தேசத்திலே இஸ்ரவேல்<Israel> புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar>, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவும்<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, {Josh 14:1}
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள். {Josh 14:2}
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே<Moses> யோர்தானுக்கு<Jordan> அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம்<Levites> அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை. {Josh 14:3}
மனாசே<Manasseh> எப்பிராயீம்<Ephraim> என்னும் யோசேப்பின்<Joseph> புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத்<Levites> தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள். {Josh 14:4}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடி இஸ்ரவேல்<Israel> புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள். {Josh 14:5}
அப்பொழுது யூதாவின்<Judah> புத்திரர் கில்காலிலே<Gilgal> யோசுவாவினிடத்தில்<Joshua> வந்தார்கள்; கேனாசியனான<Kenezite> எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேப்<Caleb> அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே<Kadeshbarnea> கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே<Moses> சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். {Josh 14:6}
தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து<Kadeshbarnea> அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன். {Josh 14:7}
ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். {Josh 14:8}
அந்நாளிலே மோசே<Moses>: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார். {Josh 14:9}
இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர்<Israel> வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே<Moses> சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். {Josh 14:10}
மோசே<Moses> என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. {Josh 14:11}
ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும்<Anakims>, அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். {Josh 14:12}
அப்பொழுது யோசுவா<Joshua>: எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபை<Caleb> ஆசீர்வதித்து, எபிரோனை<Hebron> அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். {Josh 14:13}
ஆதலால் கேனாசியனான<Kenezite> எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேப்<Caleb> இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன்<Hebron> அவனுக்குச் சுதந்தரமாயிற்று. {Josh 14:14}
முன்னே எபிரோனுக்குக்<Hebron> கீரியாத்அர்பா<Kirjatharba> என்று பேரிருந்தது; அர்பா<Arba> என்பவன் ஏனாக்கியருக்குள்ளே<Anakims> பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது. {Josh 14:15}
யூதா<Judah> புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின்<Edom> எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே<Zin> தென்புறத்தின் கடையெல்லை. {Josh 15:1}
தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின்<salt sea> கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி, {Josh 15:2}
தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின்<Maalehacrabbim> மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும்<Zin> போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு<Kadeshbarnea> ஏறி, எஸ்ரோனைக்<Hezron> கடந்து, ஆதாருக்கு<Adar> ஏறி, கர்க்காவைச்<Karkaa> சுற்றிப்போய், {Josh 15:3}
அஸ்மோனுக்கும்<Azmon>, அங்கேயிருந்து எகிப்தின்<Egypt> ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான். {Josh 15:4}
கீழ்ப்புறமான எல்லை, யோர்தான்<Jordan> முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல்<salt sea>. வடபுறமான எல்லை, யோர்தான்<Jordan> முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி, {Josh 15:5}
பெத்எக்லாவுக்கு<Bethhogla> ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக்<Betharabah> கடந்து, ரூபனின்<Reuben> குமாரனாகிய போகனின்<Bohan> கல்லுக்கு ஏறிப்போய், {Josh 15:6}
அப்புறம் ஆகோர்<Achor> பள்ளத்தாக்கை விட்டுத் தெபீருக்கு<Debir> ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின்<Adummim> மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு<Gilgal> நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின்<Enshemesh> தண்ணீரிடத்துக்கும் போய், என்ரோகேல்<Enrogel> என்னும் கிணற்றுக்குச் சென்று, {Josh 15:7}
அப்புறம் எபூசியர்<Jebusite> குடியிருக்கிற எருசலேமுக்குத்<Jerusalem> தென்புறமாய் இன்னோமுடைய<Hinnom> குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம்<Hinnom> பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய், {Josh 15:8}
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின்<Nephtoah> நீரூற்றுக்குப் போய், எப்பெரோன்<Ephron> மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய<Kirjathjearim> பாலாவுக்குப்<Baalah> போய், {Josh 15:9}
பாலாவிலிருந்து<Baalah> மேற்கே சேயீர்<Seir> மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய<Chesalon> யெயாரீம்<Jearim> மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு<Bethshemesh> இறங்கி, திம்னாவுக்குப்<Timnah> போய், {Josh 15:10}
அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப்<Ekron> பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு<Shicron> ஓடி, பாலாமலையைக்<Baalah> கடந்து, யாப்னியேலுக்குச்<Jabneel> சென்று, கடலிலே முடியும். {Josh 15:11}
மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா<Judah> புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை. {Josh 15:12}
எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபுக்கு<Caleb>, யோசுவா<Joshua>, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின்<Anak> தகப்பனாகிய அர்பாவின்<Arba> பட்டணமான எபிரோனை<Hebron>, யூதா<Judah> புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான். {Josh 15:13}
அங்கேயிருந்த சேசாய்<Sheshai>, அகீமான்<Ahiman>, தல்மாய்<Talmai> என்னும் ஏனாக்கின்<Anak> மூன்று குமாரரையும் காலேப்<Caleb> துரத்திவிட்டு, {Josh 15:14}
அங்கேயிருந்து தெபீரின்<Debir> குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின்<Debir> பேர் கீரியாத்செப்பேர்<Kirjathsepher>. {Josh 15:15}
கீரியாத்செப்பேரைச்<Kirjathsepher> சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை<Achsah> விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப்<Caleb> சொன்னான். {Josh 15:16}
அப்பொழுது காலேபின்<Caleb> சகோதரனாகிய கேனாசின்<Kenaz> மகன் ஒத்னியேல்<Othniel> அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை<Achsah> அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான். {Josh 15:17}
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப்<Caleb> பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான். {Josh 15:18}
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். {Josh 15:19}
யூதா<Judah> புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்: {Josh 15:20}
கடையாந்தரத் தென்புறமான ஏதோமின்<Edom> எல்லைக்கு நேராய், யூதா<Judah> புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல்<Kabzeel>, எதேர்<Eder>, யாகூர்<Jagur>, {Josh 15:21}
கீனா<Kinah>, திமோனா<Dimonah>, அதாதா<Adadah>, {Josh 15:22}
கேதேஸ்<Kedesh>, ஆத்சோர்<Hazor>, இத்னான்<Ithnan>, {Josh 15:23}
சீப்<Ziph>, தேலெம்<Telem>, பெயாலோத்<Bealoth>, {Josh 15:24}
ஆத்சோர்<Hazor>, அதாத்தா<Hadattah>, கீரியோத்<Kerioth>, எஸ்ரோன்<Hezron> என்னும் ஆத்சோர்<Hazor>, {Josh 15:25}
ஆமாம்<Amam>, சேமா<Shema>, மொலாதா<Moladah>, {Josh 15:26}
ஆத்சார்காதா<Hazargaddah>, எஸ்மோன்<Heshmon>, பெத்பாலேத்<Bethpalet>, {Josh 15:27}
ஆத்சார்சூகால்<Hazarshual>, பெயெர்செபா<Beersheba>, பிஸ்யோத்யா<Bizjothjah>, {Josh 15:28}
பாலா<Baalah>, ஈயிம்<Iim>, ஆத்சேம்<Azem>, {Josh 15:29}
எல்தோலாத்<Eltolad>, கெசீல்<Chesil>, ஒர்மா<Hormah>, {Josh 15:30}
சிக்லாக்<Ziklag>, மத்மன்னா<Madmannah>, சன்சன்னா<Sansannah>, {Josh 15:31}
லெபாயோத்<Lebaoth>, சில்லீம்<Shilhim>, ஆயின்<Ain>, ரிம்மோன்<Rimmon> என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது. {Josh 15:32}
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல்<Eshtaol>, சோரியா<Zoreah>, அஷ்னா<Ashnah>, {Josh 15:33}
சனோகா<Zanoah>, என்கன்னீம்<Engannim>, தப்புவா<Tappuah>, ஏனாம்<Enam>, {Josh 15:34}
யர்மூத்<Jarmuth>, அதுல்லாம்<Adullam>, சோக்கோ<Socoh>, அசேக்கா<Azekah>, {Josh 15:35}
சாராயீம்<Sharaim>, அதித்தாயீம்<Adithaim>, கெதேரா<Gederah>, கேதெரொத்தாயீம்<Gederothaim>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு. {Josh 15:36}
சேனான்<Zenan>, அதாஷா<Hadashah>, மிக்தால்காத்<Migdalgad>, {Josh 15:37}
திலியான்<Dilean>, மிஸ்பே<Mizpeh>, யோக்தெயேல்<Joktheel>, {Josh 15:38}
லாகீஸ்<Lachish>, போஸ்காத்<Bozkath>, எக்லோன்<Eglon>, {Josh 15:39}
காபோன்<Cabbon>, லகமாம்<Lahmam>, கித்லீஷ்<Kithlish>, {Josh 15:40}
கெதெரோத்<Gederoth>, பெத்டாகோன்<Bethdagon>, நாகமா<Naamah>, மக்கேதா<Makkedah>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு. {Josh 15:41}
லிப்னா<Libnah>, ஏத்தேர்<Ether>, ஆஷான்<Ashan>, {Josh 15:42}
இப்தா<Jiphtah>, அஸ்னா<Ashnah>, நெத்சீப்<Nezib>, {Josh 15:43}
கேகிலா<Keilah>, அக்சீப்<Achzib>, மரேஷா<Mareshah>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. {Josh 15:44}
எக்ரோனும்<Ekron> அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், {Josh 15:45}
எக்ரோன்<Ekron> துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின்<Ashdod> புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும், {Josh 15:46}
அஸ்தோத்தும்<Ashdod>, அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும்<Gaza> எகிப்தின்<Egypt> நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை. {Josh 15:47}
மலைகளில், சாமீர்<Shamir>, யாத்தீர்<Jattir>, சோக்கோ<Socoh>, {Josh 15:48}
தன்னா<Dannah>, தெபீர்<Debir> என்னப்பட்ட கீரியாத்சன்னா<Kirjathsannah>, {Josh 15:49}
ஆனாப்<Anab>, எஸ்தெமொ<Eshtemoh>, ஆனீம்<Anim>, {Josh 15:50}
கோசேன்<Goshen>, ஓலோன்<Holon>, கிலொ<Giloh>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று. {Josh 15:51}
அராப்<Arab>, தூமா<Dumah>, எஷியான்<Eshean>, {Josh 15:52}
யானூம்<Janum>, பெத்தப்புவா<Bethtappuah>, ஆப்பெக்கா<Aphekah>, {Josh 15:53}
உம்தா<Humtah>, எபிரோனாகிய<Hebron> கீரியாத்அர்பா<Kirjatharba>, சீயோர்<Zior>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. {Josh 15:54}
மாகோன்<Maon>, கர்மேல்<Carmel>, சீப்<Ziph>, யுத்தா<Juttah>, {Josh 15:55}
யெஸ்ரயேல்<Jezreel>, யொக்தெயாம்<Jokdeam>, சனோகா<Zanoah>, {Josh 15:56}
காயின்<Cain>, கிபியா<Gibeah>, திம்னா<Timnah>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து. {Josh 15:57}
அல்கூல்<Halhul>, பெத்சூர்<Bethzur>, கெதோர்<Gedor>, {Josh 15:58}
மகாராத்<Maarath>, பெதானோத்<Bethanoth>, எல்தெகோன்<Eltekon>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. {Josh 15:59}
கீரியாத்யெயாரீமாகிய<Kirjathjearim> கீரியாத்பாகால்<Kirjathbaal>, ரபா<Rabbah>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு. {Josh 15:60}
வனாந்தரத்தில், பெத்அரபா<Betharabah>, மித்தீன்<Middin>, செக்காக்கா<Secacah>, {Josh 15:61}
நிப்சான்<Nibshan>, உப்புப்பட்டணம்<city of Salt>, என்கேதி<Engedi>; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. {Josh 15:62}
எருசலேமிலே<Jerusalem> குடியிருந்த எபூசியரை<Jebusites> யூதா<Judah> புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர்<Jebusites> யூதா<Judah> புத்திரரோடே எருசலேமிலே<Jerusalem> குடியிருக்கிறார்கள். {Josh 15:63}
யோசேப்பின்<Joseph> புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின்<Jericho> அருகே இருக்கிற யோர்தானிலிருந்து<Jordan>, யோர்தானுக்குக்<Jordan> கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ<Jericho> துவக்கிப் பெத்தேலின்<Bethel> மலைகள் மட்டுமுள்ள வனாந்தரவழியாகவும் சென்று, {Josh 16:1}
பெத்தேலிலிருந்து<Bethel> லூசுக்குப்<Luz> போய், அர்கீயினுடைய<Archi> எல்லையாகிய அதரோத்தைக்<Ataroth> கடந்து, {Josh 16:2}
மேற்கே யப்லெத்தியரின்<Japhleti> எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன்<Bethhoron> காசேர்<Gezer> என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும். {Josh 16:3}
இதை யோசேப்பின்<Joseph> புத்திரராகிய மனாசேயும்<Manasseh> எப்பிராயீமும்<Ephraim> சுதந்தரித்தார்கள். {Josh 16:4}
எப்பிராயீம்<Ephraim> புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார்<Atarothaddar> துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும்<Bethhoron> போகிறது. {Josh 16:5}
மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு<Michmethah> வடக்காகச் சென்று, கிழக்கே தானாத் சீலோவுக்குத்<Taanathshiloh> திரும்பி, அதை யநோகாவுக்குக்<Janohah> கிழக்காகக் கடந்து, {Josh 16:6}
யநோகாவிலிருந்து<Janohah> அதரோத்திற்கும்<Ataroth> நாராத்திற்கும்<Naarath> இறங்கி, எரிகோவின்<Jericho> அருகே வந்து, யோர்தானுக்குச்<Jordan> செல்லும். {Josh 16:7}
தப்புவாவிலிருந்து<Tappuah> மேற்கு எல்லை, கானாநதிக்குப்<Kanah> போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம்<Ephraim> புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம். {Josh 16:8}
பின்னும் எப்பிராயீம்<Ephraim> புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே<Manasseh> புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது. {Josh 16:9}
அவர்கள் காசேரிலே<Gezer> குடியிருந்த கானானியரைத்<Canaanites> துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர்<Canaanites>, இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே<Ephraimites> குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள். {Josh 16:10}
மனாசே<Manasseh> கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு<Joseph> முதற்பேறானவன்; மனாசேயின்<Manasseh> மூத்தகுமாரனும் கிலெயாத்தின்<Gilead> தகப்பனுமான மாகீர்<Machir> யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும்<Gilead> பாசானும்<Bashan> அவனுக்குக் கிடைத்தது. {Josh 17:1}
அபியேசரின்<Abiezer> புத்திரரும், ஏலேக்கின்<Helek> புத்திரரும், அஸ்ரியேலின்<Asriel> புத்திரரும், செகேமின்<Shechem> புத்திரரும், எப்பேரின்<Hepher> புத்திரரும், செமீதாவின்<Shemida> புத்திரருமான மனாசேயினுடைய<Manasseh> மற்றக் குமாரரின் புத்திரராகிய அபியேசரின்<Abiezer> வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய<Joseph> குமாரனாகிய மனாசேயின்<Manasseh> ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள். {Josh 17:2}
மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீருக்குப்<Machir> பிறந்த கிலெயாத்தின்<Gilead> குமாரனாகிய எப்பேரின்<Hepher> மகன் செலொப்பியாத்துக்குக்<Zelophehad> குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை; அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள்<Mahlah>, நோவாள்<Noah>, ஒக்லாள்<Hoglah>, மில்காள்<Milcah>, திர்சாள்<Tirzah> என்பவைகள். {Josh 17:3}
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்<Eleazar> நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவுக்கும்<Joshua> பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான். {Josh 17:4}
யோர்தானுக்கு<Jordan> அப்புறத்திலே இருக்கிற கீலேயாத்<Gilead>, பாசான்<Bashan> என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச்<Manasseh> சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம். {Josh 17:5}
மனாசேயின்<Manasseh> குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின்<Manasseh> மற்றப் புத்திரருக்குக் கீலேயாத்<Gilead> தேசம் கிடைத்தது. {Josh 17:6}
மனாசேயின்<Manasseh> எல்லை, ஆசேர்<Asher> தொடங்கிச் சீகேமின்<Shechem> முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும்<Michmethah>, அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின்<Entappuah> குடிகளிடத்திற்கும் போகிறது. {Josh 17:7}
தப்புவாவின்<Tappuah> நிலம் மனாசேக்குக்<Manasseh> கிடைத்தது; மனாசேயின்<Manasseh> எல்லையோடிருக்கிற தப்புவாவோ<Tappuah>, எப்பிராயீம்<Ephraim> புத்திரரின் வசமாயிற்று. {Josh 17:8}
அப்புறம் அந்த எல்லை கானா<Kanah> என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய<Manasseh> பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்<Ephraim>; மனாசேயின்<Manasseh> எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும். {Josh 17:9}
தென்நாடு எப்பிராயீமுடையது<Ephraim>; வடநாடு மனாசேயினுடையது<Manasseh>; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும்<Asher>, கிழக்கே இசக்காரையும்<Issachar> தொடுகிறது. {Josh 17:10}
இசக்காரிலும்<Issachar> ஆசேரிலுமிருக்கிற<Asher> மூன்று நாடுகளாகிய பெத்செயானும்<Bethshean> அதின் ஊர்களும், இப்லெயாமும்<Ibleam> அதின் ஊர்களும், தோரின்<Dor> குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின்<Endor> குடிகளும் அதின் ஊர்களும், தானாகின்<Taanach> குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின்<Megiddo> குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்<Manasseh>. {Josh 17:11}
மனாசேயின்<Manasseh> புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர்<Canaanites> அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள். {Josh 17:12}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் பலத்தபோதும், கானானியரை<Canaanites> முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள். {Josh 17:13}
யோசேப்பின்<Joseph> புத்திரர் யோசுவாவை<Joshua> நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள். {Josh 17:14}
அதற்கு யோசுவா<Joshua>: நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம்<Ephraim> மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர்<Perizzites> ரெப்பாயீமியர்<Rephaims> குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான். {Josh 17:15}
அதற்கு யோசேப்பின்<Joseph> புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும்<Bethshean>, அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல்<Jezreel> பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும்<Canaanites> இருப்புரதங்கள் உண்டு என்றார்கள். {Josh 17:16}
யோசுவா<Joshua> யோசேப்பு<Joseph> வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும்<Ephraim> மனாசேயரையும்<Manasseh> நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும். {Josh 17:17}
அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு<Canaanites> இருப்புரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான். {Josh 17:18}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே<Shiloh> கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று. {Josh 18:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது. {Josh 18:2}
ஆகையால் யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள். {Josh 18:3}
கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன். {Josh 18:4}
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா<Judah> வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு<Joseph> வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும். {Josh 18:5}
நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். {Josh 18:6}
லேவியருக்கு<Levites> உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும்<Gad> ரூபனும்<Reuben> மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு<Jordan> அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான். {Josh 18:7}
அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா<Joshua> நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே<Shiloh> கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான். {Josh 18:8}
அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில்<Shiloh> இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில்<Joshua> வந்தார்கள். {Josh 18:9}
அப்பொழுது யோசுவா<Joshua> அவர்களுக்காகச் சீலோவிலே<Shiloh> கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான். {Josh 18:10}
பென்யமீன்<Benjamin> புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா<Judah> புத்திரருக்கும் யோசேப்புப்<Joseph> புத்திரருக்கும் நடுவே இருந்தது. {Josh 18:11}
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து<Jordan> வந்து, எரிகோவுக்கு<Jericho> வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன்<Bethaven> வனாந்தரத்தில் போய் முடியும். {Josh 18:12}
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய<Bethel> லூசுக்கு<Luz> வந்து, லூசுக்குத்<Luz> தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத்<Atarothadar> தாழ்வான பெத்தொரோனுக்குத்<Bethhoron> தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும். {Josh 18:13}
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தொரோனுக்கு<Bethhoron> எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால்<Kirjathbaal> என்னப்பட்ட யூதா<Judah> புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம்<Kirjathjearim> அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை. {Josh 18:14}
தென் எல்லை கீரியாத்யெயாரீமின்<Kirjathjearim> முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின்<Nephtoah> நீரூற்றிற்குச் சென்று, {Josh 18:15}
அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய<Hinnom> குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப்<Jebusi> பக்கமான இன்னோமின்<Hinnom> பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரோகேலுக்கும்<Enrogel> இறங்கிவந்து, {Josh 18:16}
வடக்கே போய், என்சேமேசுக்கும்<Enshemesh>, அங்கேயிருந்து அதும்மீம்<Adummim> மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும்<Geliloth>, அங்கேயிருந்து ரூபன்<Reuben> குமாரனாகிய போகனின்<Bohan> கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து, {Josh 18:17}
அராபாவுக்கு<Arabah> எதிரான வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு<Arabah> இறங்கும். {Josh 18:18}
அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு<Bethhoglah> வடபக்கமாய்ப் போய், யோர்தானின்<Jordan> முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின்<salt sea> வடமுனையிலே முடிந்துபோம்; இது தென் எல்லை. {Josh 18:19}
கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே<Jordan>; இது பென்யமீன்<Benjamin> புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம். {Josh 18:20}
பென்யமீன்<Benjamin> புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ<Jericho>, பெத்ஓக்லா<Bethhoglah>, கேசீஸ்<Keziz> பள்ளத்தாக்கு, {Josh 18:21}
பெத்அரபா<Betharabah>, செமராயிம்<Zemaraim>, பெத்தேல்<Bethel>, {Josh 18:22}
ஆவீம்<Avim>, பாரா<Parah>, ஓப்ரா<Ophrah>, {Josh 18:23}
கேப்பார்அமோனாய்<Chepharhaammonai>, ஒப்னி<Ophni>, காபா<Gaba> என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. {Josh 18:24}
கிபியோன்<Gibeon>, ராமா<Ramah>, பேரோத்<Beeroth>, {Josh 18:25}
மிஸ்பே<Mizpeh>, கெப்பிரா<Chephirah>, மோத்சா<Mozah>, {Josh 18:26}
ரெக்கேம்<Rekem>, இர்பெயேல்<Irpeel>, தாராலா<Taralah>, {Josh 18:27}
சேலா<Zelah>, ஏலேப்<Eleph>, எருசலேமாகிய<Jerusalem> எபூசி<Jebusi>, கீபெயாத்<Gibeath>, கீரேயாத்<Kirjath> என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன்<Benjamin> புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே. {Josh 18:28}
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு<Simeon> விழுந்தது; சிமியோன்<Simeon> புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா<Judah> புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது. {Josh 19:1}
அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா<Beersheba>, சேபா<Sheba>, மொலாதா<Moladah>, {Josh 19:2}
ஆத்சார்சூகால்<Hazarshual>, பாலா<Balah>, ஆத்சேம்<Azem>, {Josh 19:3}
எல்தோலாத்<Eltolad>, பெத்தூல்<Bethul>, ஒர்மா<Hormah>, {Josh 19:4}
சிக்லாக்<Ziklag>, பெத்மார்காபோத்<Bethmarcaboth>, ஆத்சார் சூசா<Hazarsusah>, {Josh 19:5}
பெத்லெபாவோத்<Bethlebaoth>, சருகேன்<Sharuhen> பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று. {Josh 19:6}
மேலும் ஆயின்<Ain>, ரிம்மோன்<Remmon>, எத்தேர்<Ether>, ஆசான்<Ashan> என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. {Josh 19:7}
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும்<Baalathbeer>, தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும்<Ramath> இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன்<Simeon> புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். {Josh 19:8}
சிமியோன்<Simeon> புத்திரருடைய சுதந்தரம் யூதா<Judah> புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா<Judah> புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன்<Simeon> புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள். {Josh 19:9}
மூன்றாம் சீட்டு செபுலோன்<Zebulun> புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது<Sarid>. {Josh 19:10}
அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு<Maralah> ஏறி, தாபசேத்துக்கு<Dabbasheth> வந்து, யொக்கினேயாமுக்கு<Jokneam> எதிரான ஆற்றுக்குப் போம். {Josh 19:11}
சாரீதிலிருந்து<Sarid> அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின்<Chislothtabor> எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச்<Daberath> சென்று, யப்பியாவுக்கு<Japhia> ஏறி, {Josh 19:12}
அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும்<Gittahhepher> இத்தாகாத்சீனையும்<Ittahkazin> கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும்<Remmonmethoar> நேயாவுக்கும்<Neah> போம். {Josh 19:13}
அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத்<Hannathon> திரும்பி, இப்தாவேலின்<Jiphthahel> பள்ளத்தாக்கிலே முடியும். {Josh 19:14}
காத்தாத்<Kattath>, நகலால்<Nahallal>, சிம்ரோன்<Shimron>, இதாலா<Idalah>, பெத்லெகேம்<Bethlehem> முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும், {Josh 19:15}
செபுலோன்<Zebulun> புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம். {Josh 19:16}
நாலாம் சீட்டு இசக்காருக்கு<Issachar> விழுந்தது. {Josh 19:17}
இசக்கார்<Issachar> புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல்<Jezreel>, கெசுல்லோத்<Chesulloth>, சூனேம்<Shunem>, {Josh 19:18}
அப்பிராயீம்<Hapharaim>, சீகோன்<Shion>, அனாகராத்<Anaharath>, {Josh 19:19}
ராப்பித்<Rabbith>, கிஷியோன்<Kishion>, அபெத்ஸ்<Abez>, {Josh 19:20}
ரெமேத்<Remeth>, என்கன்னீம்<Engannim>, என்காதா<Enhaddah>, பெத்பாத்செஸ்<Bethpazzez> இவைகளே. {Josh 19:21}
அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும்<Tabor>, சகசீமாவுக்கும்<Shahazimah>, பெத்ஷிமேசுக்கும்<Bethshemesh> வந்து யோர்தானிலே<Jordan> முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு. {Josh 19:22}
இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார்<Issachar> புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். {Josh 19:23}
ஐந்தாம் சீட்டு ஆசேர்<Asher> புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது. {Josh 19:24}
அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத்<Helkath>, ஆலி<Hali>, பேதேன்<Beten>, அக்சாப்<Achshaph>, {Josh 19:25}
அலம்மேலெக்<Alammelech>, ஆமாத்<Amad>, மிஷயால்<Misheal> இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும்<Carmel> சீகோர்லிப்னாத்திற்கும்<Shihorlibnath> சென்று, {Josh 19:26}
கிழக்கே பெத்தாகோனுக்குத்<Bethdagon> திரும்பி, செபுலோனுக்கு<Zebulun> வடக்கேயிருக்கிற இப்தாவேலின்<Jiphthahel> பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும்<Bethemek> நேகியெலுக்கும்<Neiel> வந்து, இடதுபுறமான காபூலுக்கும்<Cabul>, {Josh 19:27}
எபிரோனுக்கும்<Hebron>, ரேகோபுக்கும்<Rehob>, அம்மோனுக்கும்<Hammon>, கானாவுக்கும்<Kanah>, பெரிய சீதோன்மட்டும்<Zidon> போம். {Josh 19:28}
அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும்<Ramah> தீரு<Tyre> என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத்<Hosah> திரும்பி, அக்சீபின்<Achzib> எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும். {Josh 19:29}
உம்மாவும்<Ummah>, ஆப்பெக்கும்<Aphek>, ரேகோபும்<Rehob> அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு. {Josh 19:30}
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர்<Asher> புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம். {Josh 19:31}
ஆறாம் சீட்டு நப்தலி<Naphtali> புத்திரருக்கு விழுந்தது. {Josh 19:32}
நப்தலி<Naphtali> புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும்<Heleph>, சானானிமிலுள்ள<Zaanannim> அல்லோனிலுமிருந்து<Allon> வந்து, ஆதமி<Adami>, நெக்கேபின்மேலும்<Nekeb> யாப்னியேலின்மேலும்<Jabneel>, லக்கூம்மட்டும்<Lakum> போய், யோர்தானில்<Jordan> முடியும். {Josh 19:33}
அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத்<Aznothtabor> திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச்<Hukkok> சென்று, தெற்கே செபுலோனையும்<Zebulun>, மேற்கே ஆசேரையும்<Asher> சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே<Jordan> யூதாவையும்<Judah> சேர்ந்து வரும். {Josh 19:34}
அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம்<Ziddim>, சேர்<Zer>, அம்மாத்<Hammath>, ரக்காத்<Rakkath>, கின்னரேத்<Chinnereth>, {Josh 19:35}
ஆதமா<Adamah>, ராமா<Ramah>, ஆத்சோர்<Hazor>, {Josh 19:36}
கேதேஸ்<Kedesh>, எத்ரேயி<Edrei>, என்ஆத்சோர்<Enhazor>, {Josh 19:37}
ஈரோன்<Iron>, மிக்தாலேல்<Migdalel>, ஓரேம்<Horem>, பெதானாத்<Bethanath>, பெத்ஷிமேஸ்<Bethshemesh> முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது. {Josh 19:38}
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி<Naphtali> புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம். {Josh 19:39}
ஏழாம் சீட்டு தாண்<Dan> புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது. {Josh 19:40}
அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா<Zorah>, எஸ்தாவோல்<Eshtaol>, இர்சேமேஸ்<Irshemesh>, {Josh 19:41}
சாலாபீன்<Shaalabbin>, ஆயலோன்<Ajalon>, யெத்லா<Jethlah>, {Josh 19:42}
ஏலோன்<Elon>, திம்னாதா<Thimnathah>, எக்ரோன்<Ekron>, {Josh 19:43}
எல்தெக்கே<Eltekeh>, கிபெத்தோன்<Gibbethon>, பாலாத்<Baalath>, {Josh 19:44}
யேகூத்<Jehud>, பெனபெராக்<Beneberak>, காத்ரிம்மோன்<Gathrimmon>, {Josh 19:45}
மேயார்கோன்<Mejarkon>, ராக்கோன்<Rakkon> என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு<Japho> எதிரான எல்லையுமே. {Josh 19:46}
தாண்<Dan> புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல்<Leshem> யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத்<Leshem> தங்கள் தகப்பனாகிய தாணுடைய<Dan> நாமத்தின்படியே தாண்<Dan> என்று பேரிட்டார்கள். {Josh 19:47}
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண்<Dan> புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம். {Josh 19:48}
தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல்<Israel> புத்திரர் நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவுக்குத்<Joshua> தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள். {Josh 19:49}
எப்பிராயீமின்<Ephraim> மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா<Timnathserah> என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான். {Josh 19:50}
ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar>, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவும்<Joshua>, கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே<Shiloh> ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள். {Josh 19:51}
கர்த்தர் யோசுவாவை<Joshua> நோக்கி: {Josh 20:1}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு<Moses> உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். {Josh 20:2}
அவைகள் உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும். {Josh 20:3}
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள். {Josh 20:4}
பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும். {Josh 20:5}
நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார். {Josh 20:6}
அப்படியே அவர்கள் நப்தலியின்<Naphtali> மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள<Galilee> கேதேசையும்<Kedesh>, எப்பிராயீமின்<Ephraim> மலைத்தேசத்திலுள்ள சீகேமையும்<Shechem>, யூதாவின்<Judah> மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய<Hebron> கீரியாத் அர்பாவையும்<Kirjatharba> ஏற்படுத்தினார்கள். {Josh 20:7}
எரிகோவிலிருக்கும்<Jericho> யோர்தானுக்கு<Jordan> அக்கரையான கிழக்கிலே ரூபன்<Reuben> கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும்<Bezer>, காத்<Gad> கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள<Gilead> ராமோத்தையும்<Ramoth>, மனாசே<Manasseh> கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள<Bashan> கோலானையும்<Golan> குறித்துவைத்தார்கள். {Josh 20:8}
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல்<Israel> புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே. {Josh 20:9}
அப்பொழுது லேவியரின்<Levites> வம்சப் பிதாக்களின் தலைவர்; கானான்தேசத்திலிருக்கிற<Canaan> சீலோவிலே<Shiloh> ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும்<Eleazar>, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவினிடத்திலும்<Joshua>, இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்து வந்து: {Josh 21:1}
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளையிட்டாரே என்றார்கள். {Josh 21:2}
கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப்<Levites> பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். {Josh 21:3}
கோகாத்தியரின்<Kohathites> வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில்<Levites> ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரருக்கு யூதா<Judah> கோத்திரத்திலும், சிமியோன்<Simeon> கோத்திரத்திலும், பென்யமீன்<Benjamin> கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று. {Josh 21:4}
கோகாத்தின்<Kohath> மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம்<Ephraim> கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண்<Dan> கோத்திரத்திலும், மனாசேயின்<Manasseh> பாதிக்கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து. {Josh 21:5}
கெர்சோன்<Gershon> புத்திரருக்கு, இசக்கார்<Issachar> கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர்<Asher> கோத்திரத்திலும், நப்தலி<Naphtali> கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற<Bashan> மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று. {Josh 21:6}
மெராரி<Merari> புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன்<Reuben> கோத்திரத்திலும், காத்<Gad> கோத்திரத்திலும், செபுலோன்<Zebulun> கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு. {Josh 21:7}
இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல்<Israel> புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக்<Levites> கொடுத்தார்கள். {Josh 21:8}
லேவியின்<Levi> குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின்<Kohathites> வம்சங்களிலே இருக்கிற ஆரோனின்<Aaron> குமாரருக்கு, {Josh 21:9}
யூதா<Judah> புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன்<Simeon> புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன: {Josh 21:10}
யூதாவின்<Judah> மலைத்தேசத்தில் ஆனாக்கின்<Anak> தகப்பனாகிய அர்பாவின்<Arba> பட்டணமான எபிரோனையும்<Hebron> அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். {Josh 21:11}
பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபுக்குக்<Caleb> காணியாட்சியாகக் கொடுத்தார்கள். {Josh 21:12}
இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரருக்கு எபிரோனையும்<Hebron> அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும்<Libnah> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:13}
யாத்தீரையும்<Jattir> அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமோவாவையும்<Eshtemoa> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:14}
ஓலோனையும்<Holon> அதின் வெளிநிலங்களையும், தெபீரையும்<Debir> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:15}
ஆயினையும்<Ain> அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும்<Juttah> அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும்<Bethshemesh> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது. {Josh 21:16}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும்<Gibeon> அதின் வெளிநிலங்களையும் கேபாவையும்<Geba> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:17}
ஆனதோத்தையும்<Anathoth> அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும்<Almon> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:18}
ஆசாரியரான ஆரோனுடைய<Aaron> குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று. {Josh 21:19}
லேவியரான<Levites> கோகாத்தின்<Kohath> புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம்<Ephraim> கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன: {Josh 21:20}
And the families of the children of , the which remained of the children of Kohath, even they had the cities of their lot out of the tribe of . {Josh 21:20}
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின்<Ephraim> மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும்<Shechem> அதின் வெளிநிலங்களையும், கேசேரையும்<Gezer> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:21}
கிப்சாயீமையும்<Kibzaim> அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும்<Bethhoron> அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:22}
தாண்<Dan> கோத்திரத்திலே எல்தெக்கேயையும்<Eltekeh> அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும்<Gibbethon> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:23}
ஆயலோனையும்<Aijalon> அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும்<Gathrimmon> அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:24}
மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்திலே தானாகையும்<Tanach> அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும்<Gathrimmon> அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு. {Josh 21:25}
கோகாத்<Kohath> புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படப் பத்து. {Josh 21:26}
லேவியரின்<Levites> வம்சங்களிலே கெர்சோன்<Gershon> புத்திரருக்கு மனாசேயின்<Manasseh> பாதிக்கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள<Bashan> கோலானையும்<Golan> அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும்<Beeshterah> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு. {Josh 21:27}
இசக்காரின்<Issachar> கோத்திரத்திலே கீசோனையும்<Kishon> அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும்<Dabareh> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:28}
யர்மூத்தையும்<Jarmuth> அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும்<Engannim> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:29}
ஆசேரின்<Asher> கோத்திரத்திலே மிஷயாலையும்<Mishal> அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும்<Abdon> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:30}
எல்காத்தையும்<Helkath> அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும்<Rehob> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:31}
நப்தலி<Naphtali> கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக் கலிலேயாவிலுள்ள<Galilee> கேதேசையும்<Kedesh> அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும்<Hammothdor> அதின் வெளிநிலங்களையும், கர்தானையும்<Kartan> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று. {Josh 21:32}
கெர்சோனியருக்கு<Gershonites> அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படப் பதின்மூன்று. {Josh 21:33}
மற்ற லேவியராகிய<Levites> மெராரி<Merari> புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன்<Zebulun> கோத்திரத்திலே யொக்னியாமையும்<Jokneam> அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும்<Kartah> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:34}
திம்னாவையும்<Dimnah> அதின் வெளிநிலங்களையும், நகலாலையும்<Nahalal> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:35}
ரூபன்<Reuben> கோத்திரத்திலே பேசேரையும்<Bezer> அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும்<Jahazah> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:36}
கெதெமோத்தையும்<Kedemoth> அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும்<Mephaath> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:37}
காத்<Gad> கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள<Gilead> ராமோத்தையும்<Ramoth> அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும்<Mahanaim> அதின் வெளிநிலங்களையும், {Josh 21:38}
எஸ்போனையும்<Heshbon> அதின் வெளிநிலங்களையும், யாசேரையும்<Jazer> அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. {Josh 21:39}
இவைகளெல்லாம் லேவியரின்<Levites> மற்ற வம்சங்களாகிய மெராரி<Merari> புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள். {Josh 21:40}
இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின்<Levites> பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு. {Josh 21:41}
இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது. {Josh 21:42}
இந்தப்பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக்<Israel> கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள். {Josh 21:43}
கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். {Josh 21:44}
கர்த்தர் இஸ்ரவேல்<Israel> குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று. {Josh 21:45}
அப்பொழுது யோசுவா<Joshua> ரூபனியரையும்<Reubenites> காத்தியரையும்<Gadites> மனாசேயின்<Manasseh> பாதிக்கோத்திரத்தையும் அழைத்து, {Josh 22:1}
அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே<Moses> உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள். {Josh 22:2}
நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். {Josh 22:3}
இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> யோர்தானுக்கு<Jordan> அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள். {Josh 22:4}
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே<Moses> உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான். {Josh 22:5}
இவ்விதமாய் யோசுவா<Joshua> அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். {Josh 22:6}
மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்துக்கு மோசே<Moses> பாசானிலே<Bashan> சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா<Joshua> யோர்தானுக்கு<Jordan> இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா<Joshua> அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து: {Josh 22:7}
நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான். {Josh 22:8}
அப்பொழுது ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத்<Gilead> தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள<Canaan> சீலோவிலிருந்த<Shiloh> இஸ்ரவேல்<Israel> புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள். {Josh 22:9}
கானான்தேசத்தில்<Canaan> இருக்கிற யோர்தானின்<Jordan> எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின்<Jordan> ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள். {Josh 22:10}
ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரும் கானான்தேசத்துக்கு<Canaan> எதிரே இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு அடுத்த யோர்தானின்<Jordan> எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல்<Israel> புத்திரர் கேள்விப்பட்டார்கள். {Josh 22:11}
அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே<Shiloh> கூடி, {Josh 22:12}
கீலேயாத்<Gilead> தேசத்தில் இருக்கிற ரூபன்<Reuben> புத்திரரிடத்துக்கும் காத்<Gad> புத்திரரிடத்துக்கும் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய<Eleazar> குமாரனாகிய பினெகாசையும்<Phinehas>, {Josh 22:13}
அவனோடேகூட இஸ்ரவேலுடைய<Israel> எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின்<Israel> சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான். {Josh 22:14}
அவர்கள் கீலேயாத்<Gilead> தேசத்திலே ரூபன்<Reuben> புத்திரர் காத்<Gad> புத்திரர் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து: {Josh 22:15}
நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின்<Israel> தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன? {Josh 22:16}
பேயோரின்<Peor> அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே. {Josh 22:17}
நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல்<Israel> சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே. {Josh 22:18}
உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள். {Josh 22:19}
சேராவின்<Zerah> குமாரனாகிய ஆகான்<Achan> சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல்<Israel> சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள். {Josh 22:20}
அப்பொழுது ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின்<Israel> ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக: {Josh 22:21}
தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும்<Israel> அறிந்துகொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர். {Josh 22:22}
ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்க தகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக. {Josh 22:23}
நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன? {Josh 22:24}
ரூபன்<Reuben> புத்திரர் காத்<Gad> புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை<Jordan> எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்: {Josh 22:25}
சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்க தகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும், {Josh 22:26}
கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம். {Josh 22:27}
நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம். {Josh 22:28}
நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள். {Josh 22:29}
ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் மனாசே<Manasseh> புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும்<Phinehas>, அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய<Israel> ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது. {Josh 22:30}
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின்<Eleazar> குமாரனாகிய பினெகாஸ்<Phinehas> ரூபன்<Reuben> புத்திரரையும் காத்<Gad> புத்திரரையும் மனாசே<Manasseh> புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான். {Josh 22:31}
ஆசாரியனான எலெயாசாரின்<Eleazar> குமாரனாகிய பினெகாசும்<Phinehas>, பிரபுக்களும், கீலேயாத்<Gilead> தேசத்தில் இருக்கிற ரூபன்<Reuben> புத்திரரையும் காத்<Gad> புத்திரரையும் விட்டு, கானான்<Canaan> தேசத்திற்கு இஸ்ரவேல்<Israel> புத்திரரிடத்தில் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள். {Josh 22:32}
அந்தச் செய்தி இஸ்ரவேல்<Israel> புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல்<Israel> புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள். {Josh 22:33}
கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் அதற்கு ஏத்<Ed> என்று பேரிட்டார்கள். {Josh 22:34}
கர்த்தர் இஸ்ரவேலைச்<Israel> சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா<Joshua> வயதுசென்று முதிர்ந்தவனானபோது, {Josh 23:1}
யோசுவா<Joshua> இஸ்ரவேலின்<Israel> மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன். {Josh 23:2}
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார். {Josh 23:3}
பாருங்கள், யோர்தான்<Jordan> முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத்தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன். {Josh 23:4}
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத்துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார். {Josh 23:5}
ஆகையால், மோசேயின்<Moses> நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள். {Josh 23:6}
உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். {Josh 23:7}
இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள். {Josh 23:8}
கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. {Josh 23:9}
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். {Josh 23:10}
ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். {Josh 23:11}
நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால், {Josh 23:12}
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள். {Josh 23:13}
இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. {Josh 23:14}
இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்ளுங்காலத்தில், {Josh 23:15}
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான். {Josh 23:16}
பின்பு யோசுவா<Joshua> இஸ்ரவேலின்<Israel> கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே<Shechem> கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின்<Israel> மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள். {Josh 24:1}
அப்பொழுது யோசுவா<Joshua> சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும்<Abraham> நாகோருக்கும்<Nachor> தகப்பனான தேராகு<Terah> என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள். {Josh 24:2}
நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை<Abraham> அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும்<Canaan> சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக்<Isaac> கொடுத்தேன். {Josh 24:3}
ஈசாக்குக்கு<Isaac> யாக்கோபையும்<Jacob> ஏசாவையும்<Esau> கட்டளையிட்டு, ஏசாவுக்குச்<Esau> சேயீர்<Seir> மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும்<Jacob> அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப்<Egypt> போனார்கள். {Josh 24:4}
நான் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> அனுப்பி, எகிப்தியரை<Egypt> வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன். {Josh 24:5}
நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர்<Egyptians> இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும்<Red sea> பின்தொடர்ந்தார்கள். {Josh 24:6}
அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும்<Egyptians> நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே<Egypt> செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள். {Josh 24:7}
அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு<Jordan> அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின்<Amorites> தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன். {Josh 24:8}
அப்பொழுது சிப்போரின்<Zippor> குமாரன் பாலாக்<Balak> என்னும் மோவாபியரின்<Moab> ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு<Israel> யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின்<Beor> குமாரனாகிய பிலேயாமை<Balaam> அழைத்தனுப்பினான். {Josh 24:9}
பிலேயாமுக்குச்<Balaam> செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன். {Josh 24:10}
பின்பு யோர்தானைக்<Jordan> கடந்து எரிகோவுக்கு<Jericho> வந்தீர்கள்; எரிகோவின்<Jericho> குடிகளும், எமோரியரும்<Amorites>, பெரிசியரும்<Perizzites>, கானானியரும்<Canaanites>, ஏத்தியரும்<Hittites>, கிர்காசியரும்<Girgashites>, ஏவியரும்<Hivites>, எபூசியரும்<Jebusites>, உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன். {Josh 24:11}
எமோரியரின்<Amorites> இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது. {Josh 24:12}
அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார். {Josh 24:13}
ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும்<Egypt> சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். {Josh 24:14}
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின்<Amorites> தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். {Josh 24:15}
அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. {Josh 24:16}
நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து<Egypt> தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே. {Josh 24:17}
தேசத்திலே குடியிருந்த எமோரியர்<Amorites> முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள். {Josh 24:18}
யோசுவா<Joshua> ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார். {Josh 24:19}
கர்த்தர் உங்களுக்கு நன்மைசெய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான். {Josh 24:20}
ஜனங்கள் யோசுவாவை<Joshua> நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள். {Josh 24:21}
அப்பொழுது யோசுவா<Joshua> ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். {Josh 24:22}
அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான். {Josh 24:23}
அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை<Joshua> நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். {Josh 24:24}
அந்தப்படி யோசுவா<Joshua> அந்நாளில் சீகேமிலே<Shechem> ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். {Josh 24:25}
இந்த வார்த்தைகளை யோசுவா<Joshua> தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி, {Josh 24:26}
எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி, {Josh 24:27}
யோசுவா<Joshua> ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான். {Josh 24:28}
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவா<Joshua> என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். {Josh 24:29}
அவனை எப்பிராயீமின்<Ephraim> மலைத்தேசத்திலுள்ள காயாஸ்<Gaash> மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா<Timnathserah> என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள். {Josh 24:30}
யோசுவா<Joshua> உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச்<Israel> செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு<Joshua> வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர்<Israel> கர்த்தரைச் சேவித்தார்கள். {Josh 24:31}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் எகிப்திலேயிருந்து<Egypt> கொண்டுவந்த யோசேப்பின்<Joseph> எலும்புகளை, அவர்கள் சீகேமிலே<Shechem> யாக்கோபு<Jacob> சீகேமின்<Shechem> தகப்பனாகிய எமோரியருடைய<Hamor> புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின்<Joseph> புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று. {Josh 24:32}
ஆரோனின்<Aaron> குமாரனாகிய எலெயாசாரும்<Eleazar> மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு<Phinehas> எப்பிராயீமின்<Ephraim> மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். {Josh 24:3}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!